அந்திம நேரத்தில் விஷ்ணுவை தியானிக்க வேண்டும்! (Post No.15,578)

Pictures taken by London Swaminathan at Uppiliappan Temple, Tamil Nadu.

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,578

Date uploaded in London – 5 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுபாஷிதச் செல்வம் 

அந்திம நேரத்தில் விஷ்ணுவை தியானிக்க வேண்டும்! 

ச. நாகராஜன் 

கடந்ததை நினைத்துக் கவலைப் படாதே! 

அதிக்ராந்தம் து ய: கார்யம் பச்சாச்சிந்தயதே நர: |

தச்சாஸ்ய ந பவேத் கார்யம் சிந்தயா து வினஷ்யதி ||

கடந்த காலத்தில் கடந்து போன விஷயங்களைப் பற்றி எவன் ஒருவன் நினைத்து ஏங்குகிறானோ அவன் அவற்றின் விளைவுகளை மட்டும் இழப்பதில்லை, கவலையினால் அழிந்தும் படுகிறான்.

நிகழ்கால இன்பம் எனும் மாயை ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒன்றே தான்! 

அதிக்ராந்தம் அதிக்ராந்தம் அநாகதமநாகதம் |

வர்தமானசுகக்ராந்திர் நவா போகிதரித்ரயோ: || 

கடந்த காலத்தில் நடந்தது நடந்து போனது தான். எதிர்காலம் என்பது இனிமேல் தான் வரப் போகிறது.  ஆகவே ஏழைக்கும் பணக்காரனுக்கும்  இன்றைய காலத்தில் கிடைக்கும் இன்பங்கள் எனப்படும் மாயை ஒன்றே தான்!

 அர்த்தம் இல்லாத கவிதை நாய் வாலைப் போலத்தான்! 

அத்யர்தவக்ரத்வமனர்தகம் யா சூன்யாபி சர்வான்யகுணைவ்யர்னக்தி |

அஸ்ப்ருஷ்யதாதூஷிதயா தயா கிம் துச்சஸ்வபுச்சஸ்சடமேவ வாசா ||

 எந்த ஒரு கவிதையில் அதிகப்படியான மறைமுகமான அர்த்தங்கள் உள்ளனவோ, ஆழ்ந்த அர்த்தம் இல்லையோ, இன்னும் இன்ன பிற விசேஷ குணங்கள் இல்லையோ அது தொடக்கூட முடியாத குறைபாடுள்ளதாகும். அது வளைந்த நாய் வால் போல மதிப்பில்லாத ஒன்றாகும். அதனால் என்ன பயன்?

 உயர்ந்த யோகி யார்? 

அதீதானாகதானர்தானி விப்ரக்ருஷ்டதிதோஹிதான் |

விஜானாதி யதா யோகீ ததா சம்க்திதி ஸ்ம்ருதா ||

 எப்போது ஒரு யோகியானவர் கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் நன்கு அறிகிறாரோ, பார்வைக்குட்படாத தொலைதூரத்தில் உள்ளதையும் பார்க்க வல்லவரோ அந்த யோகி உயர்ந்த ஞானம் உள்ளவராக பிரகடனம் செய்யப்பட்டவராவர். 

அந்திம நேரத்தில் விஷ்ணுவை தியானிக்க வேண்டும்! 

அந்தே சந்தோவதம் விஷ்ணும் ஸ்மரேத் ஹந்தாரமாபதாம் |

சரதல்பகதோ பீஷ்ம: தஸ்மார் கருடத்வஜம் || 

ஒருவனுடைய வாழ்க்கையில் கடைசித் தருணங்களில் எல்லா ஆபத்துக்களையும் விலக்கும் விஷ்ணுவைப் பற்றி நினைக்க வேண்டும். சரதல்பத்தில் படுத்திருந்த பீஷ்மர் விஷ்ணுவையே தியானித்திருந்தார்.

 ** :

Leave a comment

Leave a comment