WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,583
Date uploaded in London – 6 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்
யாருக்கு முக்தி உடனே கிடைக்கும்?
ச. நாகராஜன்
பலஹீனர்களால் சாதிக்க முடியாது!
வினா வீர்யம் வினோத்ஸாஹம் வினா சாஹஸமுத்கடம் |
நைவ சித்யேத் மஹத் வஸ்து துர்லபம் துர்பலாத்மனாம் ||
வீர்யம் (மகத்தான வலிமை) இல்லாமல், உற்சாகமில்லாமல்,, வெல்லுகின்ற சாஹஸமில்லாமல் எந்த ஒரு பெரும் காரியமும் துர்பலமுள்ள பலஹீனர்களால் அடையப்பட முடியாது.
கெட்டவனின் வாயில் வரும் இனிய சொற்கள்!
அமதி பவதி சலஜ்ஜா க்ஷாரம் நீரம் ச ஷீதலம் பவதி |
தம்போ பவதி விவேகி ப்ரியவக்தா பவதி துர்ஜன: ||
ஒழுக்கமற்ற ஒரு பெண்ணானவள் வெட்கமின்றி நிற்கிறாள். உப்பு கலக்கப்பட்ட நீரானது இன்னும் சற்று குளுமையை அடைகிறது. முட்டாளானானவன் விவேகி போல நடிக்கிறான் அதே போல துர்ஜனன் வாயில் இனிய வார்த்தைகள் எழுகின்றன.
நெருங்கிய நட்பில் சம்பிரதாய நடமுறைக்கு இடமில்லை!
உபசார: கர்தவ்யோ யாவத்நுத்பன்னசௌஹ்ரதா புருஷா: |
உத்பன்ன சௌஹ்ருதாநாமுபசார: கைதவம் பவதி ||
இதயத்தோடு இதயம் கலக்காமல் நெருங்கிய நட்பானது இருவருக்கிடையே உருவாகாத வரை, சம்பிரதாயமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். எப்போது நெருங்கிய நட்பு இருக்கிறதோ அப்போது சம்பிரதாயமான நடைமுறைகள் தேவையிருக்காது.
பண்டிதனின் தொடர்பால் விகசிக்கும் அறிவு!
ய: படதி லிகதி பஷ்யதி பரிப்ருச்சதி பண்டிதாமுபாஸ்ரயதே |
தஸ்ய திவாகரகிரணைர்நளினிதலமிவ விகாஸ்யதே புத்தி: ||
சூரியனுடைய உயிர் கொடுக்கும் ஒளிக்கிரணங்களானவை பட்டவுடன் எப்படி ஒரு மலரானது மலர்கின்றதோ அதே போல, எழுதப் படிக்கத் தெரிந்ததாலும், கூர்ந்த கவனத்தைக் கொண்டிருப்பதாலும் ஒரு பண்டிதனுடைய நெருங்கிய தொடர்பாலும் ஒருவனுடைய அறிவு கூர்மை விகசிக்கிறது.
யாருக்கு முக்தி உடனே கிடைக்கும்?
யஸ்ய சித்தம் நிர்விஷயம் ஹ்ருதயம் யஸ்ய சீதளம் |
தஸ்ய மித் ரம் ஜகத்சர்வம் தஸ்ய முக்தி: கரஸ்திதா ||
எவன் ஒருவனுடைய மனம் விஷயங்களில் பற்றற்று இருக்கிறதோ, எவன் ஒருவனுடைய இதயம் குளுமையாக (கோபம் போன்றவற்றை விட்டு விட்டு) இருக்கிறதோ அவனுக்கு அனைத்து உயிர்களுமே நண்பர்கள் தாம். அவனுக்கு அவன் கையிலேயே முக்தி இருக்கிறது.
**