WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,596
Date uploaded in London – 9 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (49) ஶ்ரீ ராமருக்கு பரத்வாஜர் வரம் அளித்தது!
ச. நாகராஜன்
யுத்தகாண்டத்தில் ‘பரத்வாஜ ஆசிரமத்தை அடைவது’ என்ற 127வது ஸர்க்கத்தில் ஶ்ரீ ராமருக்கு பரத்வாஜ மஹரிஷி வரம் அளிப்பது பற்றிய செய்தி காணப்படுகிறது. பரத்வாஜரை தரிசித்த ஶ்ரீ ராமர் அவர் தவத்தின் மூலமாக அயோத்யா நிலைமை பற்றி அறிய விரும்புகிறார்.
பரத்வாஜர், பரதன் பாதுகைகளை வைத்து பூஜை செய்வதையும் அதுவரை நடந்துள்ள அனைத்தையும் தான் அறிந்ததையும் ராமருக்கு எடுத்துக் கூறுகிறார்.
பின்னர் ரிஷி கூறுகிறார்:
அஹமப்யன்ன தே தத்தி வரம் சஸ்த்ரப்ருதாம் வர |
யுத்தகாண்டம், 127ம் அத்தியாயம், ஸ்லோக எண் 18
சஸ்த்ரப்ருதாம் வர – சஸ்திரதாரிகளும் சிறந்தவரே! அத்ர – இப்பொழுது அஹம் பி – நானும் தே – உனக்கு வரம் – வரமொன்றை தத்தி – அளிக்கிறேன்
இதைக் கேட்ட ராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தான் விரும்பியதைக் கேட்கிறார்.
அகாலே பலினோ வ்ருக்ஷா: சர்வே சாபி மதுஸ்த்ரவா: | பலான்யம்ருதகல்பானி பஹூனி விவிதானி || பவந்து மார்கோ பகவன்னயோத்யாம் ப்ரதிகச்சத: ||
யுத்தகாண்டம், 127ம் அத்தியாயம், ஸ்லோக எண் 21
பகவான் – பகவானே அயோத்யாம் – அயோத்திக்கு ப்ரதிகச்சத: – திரும்பிச் செல்லும் எனது மார்கே – வழியில் வ்ருக்ஷா: – மரங்கள் சர்வ ச – எல்லாமும் அகாலே அபி – காலமில்லாத காலத்திலும் பலின: – பழங்கள் செறிந்தனவும் மதுஸ்த்ரவா – தேனைப் பெருக்குவனவாவுமானவைகளாய் விவிதானி – பல்வகை பஹூனி – கணக்கற்ற அம்ருதகல்பானி – அமிர்தத்திற்கொப்பான பலானி ச – பழங்களும் பவந்து – இருக்க வேண்டும்.
“அயோத்திக்குத் திரும்பிச் செல்லும் எனது வழியில் காலமில்லாத காலத்திலும் கூட மரங்கள் அனைத்தும் பழங்கள் செறிந்தனவாகவும், தேனைப் பெருக்குபவையாகவும் அமிர்தத்திற்கு ஒப்பான பழங்களுடன் இருக்க வேண்டும்” என்று ராமர் வேண்ட, “ததா இதி” அப்படியே ஆகட்டும் என பரத்வாஜ மஹரிஷி வரத்தைத் தந்து அருள்கிறார்.
இப்படி ராமர் பரத்வாஜ மஹரிஷியிடம் பெற்ற இந்த வரம் இங்கு குறிப்பிடப்படுகிறது.
**