Brahma in Kumbakonam and Punjai
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,600
Date uploaded in London – 10 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (50) ப்ரம்மா வைஸ்ரவணனுக்கு வரம் அளித்தது!
ச. நாகராஜன்
இதுவரை யுத்தகாண்டத்தில் அளிக்கப்பட்ட வரம் பற்றிய விவரங்களைப் பார்த்தோம். இனி உத்தரகாண்டத்தில் வரும் வரம் பற்றிய விவரங்களைக் காண்போம்.
உத்தரகாண்டத்தில் 110 ஸர்க்கங்களில் 3276 ஸ்லோகங்கள் உள்ளன.
உத்தரகாண்டத்தில் 32 வரங்களைப் பற்றிய விவரங்களை வால்மீகி முனிவர் தந்துள்ளார்.
மூன்றாவது ஸர்க்கமான, “குபேரனது உத்பத்தியும் லங்கை முதலியனவற்றை அடைவதும்’ என்ற ஸர்க்கத்தில் வைஸ்ரவணனின் தவத்தை மெச்சி பிரம்மா கொடுத்த வரம் பற்றிய விவரங்களைக் காண்கிறோம்.
புலஸ்திய மஹரிஷியினுடைய புத்திரரான விச்ரவஸ் என்பருக்கு பரத்வாஜ மஹரிஷி தனது புத்திரியை விவாகம் செய்து வைத்தார். அந்த தம்பதியருக்கு வைஸ்ரவணன் என்ற மகன் பிறந்தான். வைஸ்ரவணன் இளமையிலிருந்தே தவம் புரிவதில் ஆர்வம் கொண்டிருந்தான்.
ஆயிரம் வருடங்கள் ஜலத்தை மட்டும் ஆகாரமாகவும் பின்னர் காற்றை மட்டும் ஆகாரமாகவும் பின்னர் ஆகாரமே இல்லாமலும் கடும் தவத்தைப் புரிந்தார் வைஸ்ரவணன். பிரம்மா இதனால் மகிழ்ச்சியுற்று வைஸ்ரவணன் முன் தோன்றி, “நீ வரம் பெற உரியவனாகி விட்டாய். உனக்கு வேண்டியதைக் கேள்” என்று அருள்கிறார்.
பரிதுஷ்டோஸ்மி தே வத்ஸ கர்மாணேன சுவ்ரத | வரம் வ்ருணீச்வ பத்ரம் தே வரார்ஹஸ்த்வம் மஹாமதே ||
உத்தரகாண்டம் மூன்றாம் ஸர்க்கம் ஸ்லோக எண் 14
மஹாமதே – மஹாபுத்திமானாய் சுவ்ரத – உத்தம விரதங்களை அனுஷ்டித்து முடித்த வத்ஸ – என் செல்வனே! தே – உனது அனேன – இப்படிப்பட்ட கர்மணா – ஆசரணத்தால் பரிதுஷ்ட: – பூரண திருப்தி அடைந்தவனாக அஸ்மி – ஆகிவிட்டேன் தே – உனக்கு பத்ரம் – க்ஷேமம் உண்டாகட்டும் த்வம் – நீ வரார்ஹ – கேட்கும் வரங்களைப் பெற உரியவனாகி விட்டாய் வரே – வேண்டுவது எதுவோ வ்ருணீஸ்வ – அதை வேண்டுக
இவ்வாறு பிரம்மா கூற வைஸ்ரவணன் தான் லோகபாலகர்களுள் ஒருவனாக இருக்க வரத்தை வேண்டுகிறார்.
பகவன்லோகபாலத்வமிச்சேயம் வித்தரக்ஷணம் |
உத்தரகாண்டம் மூன்றாம் ஸர்க்கம் ஸ்லோக எண் 15
பகவன் – பகவானே வித்தரக்ஷணம் – தனாதிபத்தியத்தையும் லோகபாலத்வம் – லோகபாலகர்களுள் ஒருவனாய் இருத்தலையும் இச்சேயம் – வரமாய் வேண்டுகிறேன்.
உடனே பிரம்மா வைஸ்ரவணனுக்கு வரத்தை அருள்கிறார் இப்படி:-
அதாவ்ரவீத்தைஸ்ரவணம் பரிதுஷ்டேன சேதஸா | ப்ரஹ்மா சுரகணை: சார்தம் பாஹமித்தேவ ஹஷ்டவத் அஹம் வை லோகபாலானாம் சதுர்தம் ஸ்ருஷ்டமுத்யத: ||
யமேந்த்ர வருணானாம் ச பதம் யத்தவ சேப்சிதம் | தத்கச்ச த்வம் ஹி தர்மக்ஞ நிதீஷ்த்வவ்ப்னுஹி || சக்ராம்புபதாமானாம் ச சதுர்தஸ்த்வம் பவிஷ்யஸி ||
ஏதச்ச புஷ்பகம் நாம விமானம் சூர்யசன்னிபம் | ப்ரதிக்ரூஹ்ஸ்வ யானார்தம் த்ரிதஷை: சமதாம் வ்ரஜ || ஸ்வஸ்தி தேஸ்து கமிஷ்யாம: சர்வ ஏவ யயாகதம் | க்ருதக்ருத்யா வயம் தாத தத்வா தவ வரத்வயம் ||
உத்தரகாண்டம் மூன்றாம் ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 16 முதல் 20 முடிய
பரிதுஷ்டேன – உவப்புற்ற சேதஸா -மனத்தால் ப்ரஹ்ம – பிரம்மதேவர் சார்த ஏவ – கூடவே வைஸ்ரவணம் – வைஸ்ரவணனைப் பார்த்து அத இதி – இப்படி ஹஷ்டவத் – மிக சந்தோஷமாய் அப்ரவீத் – வாக்களித்தார் பாடம் – அப்படியே தர்மக்ஞ – தர்மம் அறிந்தவனே அஹம் வை – நானும் லோகபாலானாம் – லோகபாலகர்களில் சதுர்தம் – நான்காமவனை ஸ்ருஷ்டம் – சிருஷ்டிக்க உத்தத: – எண்ணியிருக்கிறேன் யமேந்த்ரவருணானாம் – யமன், இந்திரன், வருணன் ஆகியவர்களுடைய பதம் – ஸ்தானம் யத் ச – எதுவோ அதாகிறதும் தவ – உன்னுடைய இப்சிதம் ச – பிரார்த்தனையுமாய் இருக்கின்ற நிதீஷத்வம் – நிதீசன் பதவியை த்வம் – நீ அவாப்னுஹி – அடைவாய் சக்ராம்புப யமானாம் ஹி – இந்திரன், வருணன், யமன் இவர்களுடனேயே சதுர்தம் ச – நான்காவதாகவும் த்வம் – நீ பவிஷ்யஸி – விளங்கக் கடவாயாக சூர்யசன்னிபம் – சூரியனுக்கு நிகராக ஏதத் – இந்த புஷ்பகம் – புஷ்பகம் நாம – என்ற பெயரை உடைய விமானம் ச – விமானத்தையும் யானார்தம் – வாஹனத்திற்காக ப்ரதிக்ருஹீஸ்வ – பெற்றுக்கொள் . த்ரிதஷை: – தேவர்களுடன் சமதாம் – சமமாக இருக்கும் பதவியை வ்ரஜ – அடைவாயாக தே – உனக்கு ஸ்வஸ்தி – மங்களம் அஸ்து – உண்டாகுக தாத – மிகுந்த நட்புக்குரியவனே தவ – உனக்கு வரத்வயம் – வரம் இரண்டையும் தத்வா – தந்து க்ருதக்ருத்யா – கிருதகிருத்தியர்களாகி வயம் – நாங்கள் சர்வே – அனைவரும் யதாகதம் ஏவ – வந்தபடியே கமிஷ்யாம: – செல்லுகின்றோம் தத் – ஆதலால் கச்ச – நீயும் போ
இவ்வாறு கூறிவிட்டு பிரம்மா தேவர்களுடன் தனது இருப்பிடம் சென்றார்.
ஆக இந்த ஸர்க்கத்தில் இரு வரங்கள் பற்றிய விவரங்களை நாம் அறிகிறோம்.
**