ஹனுமனைப் பற்றி இராமன் : துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்   –ஓர் ஆய்வு – 10 (Post.15,602)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,602

Date uploaded in London –   10 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(ஆர், சேஷாத்ரிநாதன்)

PART TEN

ஹனுமனைப் பற்றி இராமன்

ஹனுமனின் வீரத்தைக் கண்ட இராமன் ஹனுமனைப் புகழ்ந்து இலக்ஷ்மணனிடம் பேசுகிறான்.

HANUMAN IN BATU CAVES, MALAYSIA; PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN.

हाथिन सों हाथी मारेघोरेसों सँघारे घोरे,

रथनि सों रथ बिदरनि बलवानकी।।

चंचल चपेटचोट चरन चकोट चाहें,

हहरानी फौजें भहरानी जातुधानकी।।

बारबार सेवकसराहना करत रामु,

तुलसी’ सराहै रीति साहेब सुजानकी।

लाँबी लूम लसतलपेटि पटकत भट,

देखौ देखौ लखनहनुमानकी।40.

“இலங்கையின் போர்க்களம் முழுவதிலும் அவர் பார்க்கும் ஒரே ஒரு வீரன் மட்டுமே இருந்தான்.அவன்  அரக்கக் காளையின் கொம்புகளைப் பிடித்து இழுத்தான், அந்த வீரன் வேறு யாருமல்ல, ஹனுமன்தான். அவனது வாலைப் பார். அந்த அழகான வாலில்  அரக்கர்களை சுருட்டி தரையில் ஓங்கி அடிக்கிறான். யானைகள், குதிரைகளுடன் மோதுகிறான்.” இது கோஸ்வாமி துளசிதாசரின் கவிதாவளி ராமாயணத்தில், லங்கா காண்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது,.   

இது மட்டுமல்லாமல், இராமன் ஹனுமன் மீது தனது பாசத்தை பகிரங்கமாகக் காட்டினான்.அவர் ஹனுமனை  அன்புடன் கட்டிப்பிடித்து, என்றென்றும் கடமைப்பட்டிருப்பதாக அறிவித்தான் .இது சுந்தர காண்டத்தில் வருகிறது

सुनु कपि तोहि समान उपकारी। नहिं कोउ सुर नर मुनि तनुधारी॥

प्रति उपकार करौं का तोरा। सनमुख होइ  सकत मन मोरा॥3

सुनु सुत तोहि उरिन मैं नाहीं। देखेउँ करि बिचार मन माहीं॥

இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு கிஷ்கிந்தை வந்து இராமனிடம் சீதையைப் பார்த்த விவரங்களையும் சீதை படும் துன்பங்களையும் ஹனுமன் இராமனிடம் தெரிவிக்கிறான். இராமனின் கண்களில் கண்ணீர் துளிர்கிறது. ஹனுமன் இராமனைச் சமாதானப்படுத்தி. “அங்குள்ள அரக்கர்கள் உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. தாங்கள் அவர்களை  எல்லாம் வென்று வருவீர்கள்” என்று சொல்கிறான். அதைக் கேட்ட இராமன் “ஹனுமனே! உன்னைப் போல் எனக்கு உதவி செய்தவர் தேவரோ, மனிதனோ, முனிவரோ, உடல் பெற்ற ஒருவர் கூட இல்லை. நான் உனக்கு பதில் உதவி என்ன செய்து விட முடியும்? என் மனது கூட உனது எதிரில் நிற்க முடியாது. உனது கடனைத் தீர்ப்பது முடியாத காரியம்”  என்று கூறுகிறான்.

புராணங்களில் ஹனுமனின் வரலாறு

புராணங்களின் (புராண வரலாறுகள்) படி, ஹனுமனின்  தாயாரின் பெயர் அஞ்சனா. அவள் குரங்கு மன்னன் கேசரியின் மனைவி. ஹனுமன் கடவுளின் அருளாகப் பிறந்தான்.காற்றுக் கடவுள், மருத் என்றும் அழைக்கப்படுகிறார். எனவே, அனுமன் ‘ஆஞ்சநேயர்’ அல்லது ‘மாருதி’. இருப்பினும், அவரது மிகவும் பொதுவான பெயர் ‘ஹனுமன்’ என்பது. ஒரு முறை அவர் தேவர்களின் அரசனான இந்திரனின் கடுமையான ஆயுதமான ‘வஜ்ரத்தால்’ தாக்கப்பட்டார்.. அதன் காரணம் என்ன?

பிறந்த சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தை ஹனுமனுக்கு அதிகமான பசி எடுத்தது/, சூரியன் உதிப்பதைப் பார்த்தான், அது ஏதோ பழுத்த சிவப்புப் பழம் வானத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்தான். உடனே ஒரே பாய்ச்சலாக அதைப் பிடிக்க ஆகாயத்திற்குத் தாவினான்.  தற்செயலாக, அது சூரிய கிரகணத்தின் நேரம். புராணங்களின்படி,  இராகு  சூரியனை விழுங்கச் சென்று கொண்டிருந்தான். ஹனுமன் விரைந்து வருவதைக் கண்டான்.. ஹனுமன் ஏதோ போட்டியாளன் என்று நினைத்துப் பயந்து ஓடிவிட்டான்.. உடனே  இராகு தேவர்களின் ராஜாவான இந்திரனிடம் தனது வழக்கமான உணவு மறுக்கப்படுகிறது என்று புகார் செய்தான். உடனே இந்திரன் இந்த விஷயத்தில் தலையிட எண்ணி தனது ஐராவதம் என்ற வெள்ளை நிற கம்பீரமான யானையின் மீது ஏறி விரைந்தான் .

உடனே ஹனுமன் அந்த அந்த யானையை ஏதோ வெள்ளைப் பழம் என்று நினைத்து சூரியனை விட்டு விட்டு அந்த யானையின் மீது குதித்தான். இந்திரன் அதிர்ச்சி அடைந்து ஹனுமனைத் தடுக்க வலிமை மிகுந்த தனது வஜ்ரா என்ற ஆயுதத்தை ஹனுமன் மீது ஏறிய அது அவனது கன்னத்தைத் தாக்கியது. அதனால் ஹனுமனது தாடை வீங்கியது. ஹனு என்றால் கீழ் தாடை என்ற பொருள் மான் என்றால் அடிப்பது என்று பொருள். இதன் காரணமாகவே ஹனுமன் என்ற பெயர் வந்தது.

ஆனால் வாயு பகவன் தனது அருளால் பிறந்த   ஹனுமனுக்கு  நிகழ்ந்ததைக் கண்டு கோபமுற்றான். உடனே தனது இயக்கத்தை நிறுத்தினான். இந்த பிரபஞ்சமே மூச்சு விடமுடியாமல் திணறியது. அனைத்து கடவுள்களும் மூச்சுத் தினறலின் விளிம்பில் இருந்தனர். அவர்களும் ஹனுமானுக்கு பல வரங்கள் அளித்து ஹனுமனை யாராலும் வெல்ல முடியாத நிலையை உருவாக்கி வாயு பகவானை சமாதானப்படுத்தினர்.

ஹனுமனின் முகம் சிகப்பாக இருப்பதைப் பற்றி இரண்டு கதைகள் உண்டு. ஒன்று அவர் குழந்தையாய் இருக்கும் சமயம் சூரிய வெப்பத்தினால் அவரது முகம் சிவந்து போயிற்று என்று சொல்வர். இரண்டாவது  அன்னை சீதை அவரது வகிட்டில் சிந்தூரம் அணிந்து கொள்வாள். அது அவரது சிவந்த முகத்திற்கு இன்னும் அழகைக் கூட்டிற்று. ஹனுமான் அந்த சிந்தூரம் அணிவதற்கான காரணத்தைக் கேட்டபோது அது ஒரு மங்கலமான குறி என்றும் சீதை என்றென்றும் இராமனின் மனைவி என்பதைக் கட்டுவதற்காகவும் சீதையை இராமனிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது என்பதைக் காட்டுவதையும் சொல்லப்பட்டது. வகிட்டில் உள்ள சிறிய போட்டு போன்ற சிந்தூரம் சீதையை இராமனுக்கு அதி ப்ரியமானவளாக செய்யுமானால் முகம் முழுவதும் அந்த சின்தூரத்தைப் பூசிக்கொண்டால் நாம் இராமனுக்கு எவ்வளவு பிரியமானவனாக ஆவோம் என்று நினைத்து முகம் முழுவதும் சிந்தூரம் பூசிக்கொண்டதாக ஒரு கதையும் உண்டு.

சிறிய வயதில் ஹனுமன் மிகவும் குறும்புக்காரனாக இருந்தான். முனிவர்களின் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள மரங்களை உடைத்தும், இலைகளை உதிர்த்தும், மரங்களின் பழங்களைத் தின்றும் கொட்டமடித்து அந்த இடங்களையே குப்பை மேடக்கினான்.  அதனால்  யாராவது ஒருவர் நினைவூட்டும் வரை அவன் தனது சக்தியை மறந்து விடுவான் என்று முனிவர்கள் சபித்தனர். சீதையைத் தேட இலங்கை செல்வதற்காக வானரங்களும் கரடிகளும் கடற்கரையை அடைந்த போது எல்லோருமே அந்தக் கடலைத் தாண்டும் சக்தி தங்களுக்கில்லை என்று சொன்னபோது முதியவரான ஜாம்பவான் ஹனுமனுக்கு அவனது சக்திகளை நினைவூட்டி கடலைத் தாண்டிச் செல்லும் சக்தி அவனுக்கு உள்ளது என்ற நம்பிக்கை அளித்தார். அதனால் ஹனுமான் கடலைத் தாண்டிச் சென்று சீதையைக் கண்டதுமல்லாமல் இலங்கையையும் தீக்கிரையாக்கினார்.

சிரஞ்சீவி ஹனுமன்

ஹனுமன் இராமனுக்கு மிகப் பிரியமானவன். ன் நெருக்கமானவன்.  இந்த உலகை விட்டுச் செல்லும்போது ஹனுமனும் இராமனுடன் வர விரும்பினான். ஆனால் இராமன் ஹனுமனை இந்த உலகிலே தங்கச் செய்து தனது மகிமை மங்காமல் பார்த்துக் கொள்ளும்படி கூறினான். மேலும் இராம நாமத்தை விடாமல   ஜபிப்பவர்களைப் பதுகாக்கும்படியும் கூறினான். ஆத்யாத்ம இராமயணத்தின் உத்திர காண்டம் ஒன்பதாவது சர்கத்தில் இதைப் பற்றி குறிப்பு உள்ளது.

 र्कर्ञ्चदुत्तरों वायों त्वया मत्कृ तकारणात् 

एवों र्वभीषणों तूक्त्वा नूमन्तमथाब्रवीत्  ३४॥

मारते त्वों र्चरञ्जीव ममाज्ञाों मा मृषा कृ थाः 

जाम्बवन्तमथ प्रा र्तष्ठ त्वों िापरान्तरे  ३५॥

இராமன் விபீஷணனிடம் “விபீஷணா! உன்னை இந்தப் பூமி உள்ளளவும் இராஜ்ய பரிபாலனம் செய்யும்படி முன்பே வாக்களித்துள்ளேன். நீயும் அதற்கு உடன்பட்டிருக்கிறாய். ஆதலால் உன் நகரத்திலேயே இருந்து ஆட்சி செய் என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த ஹனுமனை நோக்கி “ஓ ஆஞ்சநேய! நீ என்றும் சிரஞ்சீவி என்று வரமளித்தோம். ஆகையால் நீயும் உனது விருப்பமான இடத்தில் இருக்கலாம்? என்றான்.

வால்மீகி இராமாயணம் உத்தர காண்டத்திலும் இந்தப் பகுதி 108 வது சர்கத்தில் வருகிறது.

तथेति प्रतिजग्राह रामवाक्यं विभीषणः  राजा रा्तसय्ख्यानां राघवाज्ञामनुखरय्‌  २३२  तमेवुक्त्वा काकरख्यो हनूमन्तमथात्रवीत्‌  जीविते कृतवुद्विस््वं मा अ्रतिज्ञां विरोपय ।॥ ३२३  मत्कथाः भरचरिष्यन्ति यावछोके इरीश्वर  वैषद्रमख सुप्रीतो मदाक्यमदुपारुयन्‌  ३४  एषयुक्तस्तु हलमान्राववेण महात्मना  वाक्यं निज्ञोपयामास परं हर्षमवाप्य   

இராமன் பூமியில் தனது கடமைகளை முடித்துவிட்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு விடை பெறுகிறான். முதலில் விபீஷணனிடம் வந்து “விபீஷணா! எவ்வளவு காலம் இப் பூமியில் ஜனங்கள் வாழ்கின்றனரோ அவ்வளவு காலம் நீயும் இலங்காபுரியில் உயர்வு பெற்று வாழ்வாய். சந்திர சூரியர்கள் எவ்வளவு காலம் ப்ரகாசிக்கின்றனரோ. இப் பூமி யெவ்வளவு காலம் அழியாதிருக்கின்றதோ, என்னுடைய கதை இப் பூமியில் எவ்வளவு காலம் மேன்மை பெற்று விளங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ அழியாது அரசு செலுத்தி வருக. விபீஷணா! இந்த்ராதி சகல தேவதைகளாலும் எப்பொழுதும் ஆராதிக்கப் படுகின்றவரான இக்ஷ்வாகு குலதேவதையான ஸ்ரீஜகந்நாதனை ஆராதித்து வரக்கடவது’ என்று சொல்ல, விபீஷணனும் திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கின்றேன், என ஒப்புக் கொண்டான்.

பிறகு ராமன் மாருதியைப் பார்த்து ஆஞ்சநேயா!! நீ சிரஞ்சீவி யாயிருக்க ஆசை கொண்டவன். இவ்வுலகத்தில் எனது காதை எவ்வளவு காலம் வழங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ இப்பூமியில் புகழுடன் வாழ்க” என்று சொல்ல, வாயுகுமாரன் உள்ளம் மகிழ்ந்து சுவாமி திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கிறேன் என்றான்.

                   **                         தொடரும்

Leave a comment

Leave a comment