HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 51; இந்து மத கலைச்சொல் அகராதி-51 (Post.15,612)

Kurukshetra

Written by London Swaminathan

Post No. 15,612

Date uploaded in London –12 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ENGLISH VERSION POSTED YESTERDAY; HERE IS THE TAMIL VERSION.

****

குருக்ஷேத்ரம்

மஹாபாரதப் போர் நடந்த புண்யபூமி; தற்போது ஹரியானா மாநிலத்திலுள்ளது . குரு KURU வம்சத்தினரின் மன்னர்கள் ஆண்ட இடம் ; இந்துக்களின் மிகப்புனித நூலான பகவத் கீதை தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரே …என்று துவங்குகிறது அதில் இந்தப் புண்ய தலம், தர்ம க்ஷேத்ரம் என்று சொல்லப்படுகிறது ; அங்கு நடந்த யுத்தம் மூலம் தர்மம் நிலை நாட்டப்பட்டது .

***

குவலயாபீடம்

கிருஷ்ணர் மற்றும் அவரது அண்ணன் பலராமனால் கொல்லப்பட்ட யானையின் பெயர் இது. Kuvalayāpīḍa (कुवलयापीड).— கிருஷ்ணர் ரையும் பலராமனையும் மல்யுத்தத்துக்கு அழைத்த கம்சன், ஒரு மதம் ஏற்றப்பட்ட யானையை நிறுத்தி, உள்ளே வருவதற்கு முன்னரே அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்திருந்தான் . ஆனால் இருவரும் சேர்ந்து அந்த யானையைக் கொன்றுவிட்டுப் பின்னர் மல்யுத்தவீரர்களுடன் சண்டையிட்டு அவர்களையும் வீழ்த்தினார்கள்.

***

குபேரன்

யக்ஷர்களின் தலைவர் ;ராவணனின் ஒன்றுவிட்ட சகோதரர்,  நவ  நிதி என்னும்  ஒன்பது வகையான நிதிகளை வைத்திருப்பவர்; கயிலாயத்தில்  வசிப்பவர் ; சிவபெருமானுடைடய  நெருங்கிய நண்பர் என்பதால் சிவசகா – சிவனுடைய தோழர்– என்ற பெயரும், விஸ்ரவஸ்-இடாவிடா தம்பதியருக்குப் பிறந்ததால் வைஸ்ராவண என்ற பெயரும் இருக்கிறது; புஷ்பக விமானத்தை இவரிடமிருந்து ராவணன் பறித்துக் கொண்டான் ;  ; நவநிதிகளில் சங்க நிதி, பதும நிதி நாம் எல்லோரும் அறிந்தவை; அரண்மனைகளிலும் பெரிய வீடுகளின் கதவுகளிலும் சங்கும் தாமரையும் பொறிக்கப்பட்ட திலிருந்தும் அப்பர் தேவாரத்திலிருந்தும் நாம் அறியும் விஷயம் இது.

***

குந்தி

 Kuntī (कुन्ती).— மஹாபாரதத்தில் பாண்டவர்களில் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகியோரின் தாய் ; பாண்டு மன்னனின் மனைவி .முதலில் கர்ணனைப் பெற்று , பின்னர்  ஆற்றில் விடவே அவனை   அதிரதன் என்ற தேரோட்டி வளர்த்தான். இளமையில் துர்வாச முனிவருக்கு சேவை செய்ததால் ஒவ்வொரு மந்திரத்தைச் சொல்லி ஒரு தேவரை அழைத்து குழந்தை பெற்றுக்கொள்ளும் வரம்  கிடைத்தது ; அதைப்  பயன்படுத்தி அவள் சூரியன், இந்திரன், யமன், வாயு   ஆகியோரை வரவழைத்து பாண்டவர்களையும் கர்ணனையும் பெற்றாள்; பின்னர் அந்த மந்திரத்தை பாண்டுவின் இரண்டாவது மனைவி மாதரிக்குச் சொல்லிக்கொடுத்து நகுல சகாதேவனை அடைந்தாள். இவள் கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் ஸகோதரி; இயற்பெயர் பிருதா;   யாதவ குலா மன்னன் சூரசேனனின் மகள். குந்திபோஜன் என்ற மண்ணுக்குள் குழந்தைகள் இல்லாததால் அவனுக்கு தத்து கொடுக்கப்பட்டதால் குந்தி என்ற பெயர் ஏற்பட்டது ;மஹாபாரத யுத்தத்துக்குப் பின்னர், வயதான காலத்தில் கானகத்துக்குக் சென்று வாழ்ந்தபோது காட்டுத்த்தீ யில் கருகி இறந்தாள்.

***

கூனி

இவளுடைய பெயர் மந்தரா. ராமாயணத்தில் வரும் கூன் முதுகு சேவகி ; கேகய நாட்டிலிருந்தே  கைகேயிக்குச் சேவகம் செய்தவள் ; தசரதனின் இளைய மனைவி கைகேயிக்கு துர்போதனை செய்து மனத்தை மாற்றியவள்; சின்ன வயதில் ராமபிரான் விளையாட்டுக்கு இவள் மீது அம்பு எய்து ரசித்ததால் கோபம் கொண்டு பழி வாங்கினாள்; கைகேயிக்குத் தசரதன் கொடுத்த இரண்டு வரங்களைப்  பயன்படுத்தி பரதன் அரசாளவும் ராமனைக்  காட்டுக்கு அனுப்பவும் யோஜனை சொன்னாள்; இவை இரண்டையும் கைகேயி கேட்கவே தசரதன் மாரடைப்பில் இறந்தான்; ராமன் 14 ஆண்டுகள் காட்டிலிருந்து இறுதியில் ராவணனை வதம் செய்தார் 

கூர்ம  அவதாரம் /கூர்ம புராணம்


Kūrmāvatāra (कूर्मावतार) விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் இரண்டாவதாகத்  தோன்றிய  அவதாரம். அமிர்தம் எடுக்க , பாற்கடலைத் தேவரும் அசுரர்களும் கடைந்தபோது விஷ்ணு எடுத்த ஆமை அவதாரம்; கூர்ம என்றால் ஆமை என்று பொருள்; இந்த சம்பவத்தை விளக்கமாகக் கூறுவது கூர்ம புராணம் . சமுத்திர மந்தனத்தின் போது , விஷ்ணு, ஆமை வடிவில் வந்து, மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கி நின்றார். 

***

கும்ப  மேளா

உலகின் மிகப்பெரிய விழா; கங்கை சரஸ்வதி யமுனை என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் த்ரிவேணிசங்கமத்த்தில் 12 ஆண்டுக்கொரு முறை நடைபெறும் விழா இது; இப்போது இந்த இடத்தின் பெயர் பிரயாகை ; உத்தர பிரதேசத்தில் இருக்கிறது ; 45 நாட்களுக்கு நடைபெறும் விழாக்காலத்தில் கோடிக் கணக்கான இந்துக்கள் குளித்துவிட்டு இறைவனை  வணங்குவார்கள்; இப்படிகங்கையில் ஸ்நானம் செய்வது புண்ணியத்தையும் முக்தியையும் தரும். இது தவிர நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹரித்வார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய இடங்களில் குட்டி/ மினி/ கும்ப மேளா நடக்கும் சிம்ம ராசியில் குரு  கிரகம் பிரவேசிக்கையில் இந்த விழா நடக்கிறது . கடைசியாக 2025 ஜனவரி- பிப்ரவரியில் நடந்த கும்பமேளாவில் நான் கு கோடி இந்துக்கள் புண்ய ஸ்நானம் செய்தார்கள். அது 144 ஆண்டுக்கொருமுறை வரும் மஹா கும்ப மேளா ஆகும் .  இமய மலையிலிருந்து நிர்வாணமாக வரும் நாகா சாதுக்கள்  முதல் நாளன்று குளிக்கும் பரம்பரை உரிமை இருக்கிறது ; அது காண்பதற்குக் கண்கொள்ளாக்காட்சி.

***

கும்பகோணம் /Kumbakonam

தமிழ் நாட்டிலுள்ள கோவில் நகரம் ; இங்கும் ஊரைச் சுற்றியும் நூற்றுக்கணக்கான கோவில்கள், மடங்கள், சத்திரங்கள், தொல் பொருட் துறைச் சின்னங்கள் ஆகியன உள்ளன ; குறிப்பக நவக்கிரக கோயில் ஸ்தலங்கள் இருக்கின்றன ;கும்பகோணத்தில் பழமையான கும்பேஸ்வர சிவன் கோயிலும் சக்ரபாணி , சாரங்க பாணி விஷ்ணு கோயில்களும் பலவித சிறப்புகளை  உடைத்து;  தாராசுரம், அருகிலுள்ள தொல் பொருட்துறைச் சின்னம்; சோழ மன்னர்களின் கலைச் சிறப்புகளையும் சிற்பங்களையும் எங்கும் காணலாம் .

வெற்றிலைக்கும்,  டிகிரி காப்பிக்கும், திருபுவனம் பட்டுச் சேலைகளுக்கும்,  சீவலுக்கும் பெயர்பெற்ற ஊர் இது.

***

கூறைப் புடவை

உயர் ஜாதி இந்துக்கள் கல்யாணத்தில் தாலி கட்டும் நேரத்தில் அணியும் சிவப்பு நிறப்புடவை இது. சிவப்பு நிறம் மங்களத்தைக் குறிக்கும்  ; இந்துக்கள் குங்குமமும் இதே நிறம். பிராமணர் கல்யாணங்களில் இன்றும் இதைக் காணலாம்

 இவை தமிழ்நாட்டின் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கூறைநாடு/ கொறநாடு  என்னும் பகுதியில் பாரம்பரியமாக நெய்யப்படும் பட்டுப் புடவைகள் ஆகும் ; தற்காலத்தில் இவை புது வணிக உருவங்கள் எடுத்துள்ளன !

–subham—

Tags- HINDU DICTIONARY, ENGLISH AND TAMIL 51, இந்து மத கலைச்சொல் அகராதி-51, குருக்ஷேத்திரம் , கும்பமேளா , கும்பகோணம் ,கூறைப்  புடவை  .

Leave a comment

Leave a comment