தூக்கம் – எவ்வளவு உங்களுக்குத் தேவை? (Post No.14,346)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,346

Date uploaded in London – –5 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

12-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

தூக்கம் – எவ்வளவு உங்களுக்குத் தேவை? 

ச. நாகராஜன் 

உலகில் இன்று பல லட்சம் பேர்கள் தூக்கமின்றித் தவிக்கின்றனர்.

நடைப்பயிற்சி, விளையாட்டுகள், உடல் பயிற்சி ஆகிய எல்லாவற்றையும் விட உடலுக்குத் தேவையானது நல்ல தூக்கமே. 

தூக்கம் அப்படி என்ன உடலுக்கு நன்மை செய்கிறது? 

லோபரோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தூக்க ஆய்வு மைய இயக்குநரான டாக்டர் ஜிம் ஹார்ன் ஒரு ஆய்வை மேற்கொண்டார்.

(Dr. Jim Horne, Director of the Sleep Research Laboratory, Loughborough University).

உடலில் மூளையைத் தவிர இதர எல்லா அங்கங்களும் தூக்கமின்றி எட்டு முதல் பதினோரு நாட்கள் வரை இயங்க முடியும் என்பதை அவர் கண்டுபிடித்தார்.

நல்ல ஓய்வுசரியான உணவு ஆகியவற்றால் அந்த அங்கங்கள் பழைய ஆற்றலைத் திருப்பிப் பெற முடியும் என்றது அவரது ஆய்வு.

ஆனால் மூளையோ சரியான ஓய்வை எடுக்கவில்லை என்றால் மனிதனின் நடத்தையே மாறி விடும். மாயாஜாலத் தோற்றங்கள் உருவாக ஆரம்பிக்கும். உடல் சித்திரவதைக்கு உள்ளாவது போல பாதிக்கப்படும்.

ஒரே ஒரு நாள் நல்ல தூக்கத்தை இழந்தால் கூட அது நமது அன்றாட வாழ்வில் பல தவறுகளை ஏற்படுத்தி விடும். மூளையின் மேல் பகுதியான செரிப்ரல் கார்டெக்ஸ் என்னும் மூளையின் படைப்பாற்றல் பகுதியானது மட்டும் போதுமான ஊக்கம் (மோடிவேஷன்) மற்றும் நாளங்களில் போதுமான அளவு அட்ரினலின் இருந்தால் இன்னும் இயங்கும்.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் தேவை.?

நமது வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் கழிகிறது என்பது பெரும்பாலானோரால் சொல்லப்படும் ஒரு கூற்று.

பொதுவாக ஏழு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை ஒருவருக்குத் தூக்கம் தேவை.

ஆனால் சிலருக்கு 5 முதல் 7 மணி நேரம் வரை தூக்கம் போதுமானதாக இருக்கிறது.

மிகச் சிலருக்கே ஐந்து மணி நேர உறக்கம் போதுமானதாக இருக்கிறது.

தூக்கம் இல்லையே என்று புலம்புவதும் வருந்துவதுமே இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை வியாதியை ஊக்குவிக்கிறது என்கிறது ஆய்வின் முடிவு.

இது வந்து விட்டால் மனத்தளர்ச்சி, சோர்வு கூடவே சேர்ந்து வரும்.

தூக்கத்தில் முதல் பகுதி மிகவும் முக்கியமானது. இது துரித கண் இயக்கம் அல்லது ராபிட் ஐ மூவ்மெண்ட் (ரெம் ஸ்லீப்) (Rapid Eye Movement – REM Sleep) என்று கூறப்படுகிறது.

இது ஆழ்ந்த உறக்கத்தைக் குறிக்கிறது.

சுழற்சி முறையில் ஆழ்ந்த உறக்கத்தையும் லேசான உறக்கத்தையும் நமது இயல்பான தூக்கம் மாறி மாறிக் கொள்கிறது.

மதியத்தில் நேரம் இருந்தால் ஒரு சிறிய நேப் எனப்படும் குட்டித் தூக்கம் போடலாம்.

இது 30 நிமிட நேரம் மட்டும் இருந்தால் போதும்.

சரி, நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான வழிகள் என்ன?

நல்ல தூக்கத்தைப் பெற முதலில் தூக்க நேரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து கொள்ளப் பழக வேண்டும்.

இந்த ஸ்லீப் ரொடீனானது, ஸ்லீப் ஹைஜீன் (sleep hygiene)

எனப்படுகிறது.

தேவையற்ற எண்ணங்களை அகற்றுதல், தியானத்தை மேற்கொள்ளல் நல்ல தூக்கத்தைத் தரும்.

மைண்ட்புல்நெஸ் என்பதை மேற்கொள்ளலாம்.

உறங்குவதற்கான நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளல் முக்கியம்.

நல்ல உணவுத் திட்டம், நல்ல உடல்பயிற்சி ஆகியவை நல்ல தூக்கத்தைத் தரும்.

முயன்றால் முடியாதது ஒன்று இல்லை!

***

காஞ்சீபுரத்தில் திவ்ய தரிசனம்- Part 2 (Post.14,345)

Written by London Swaminathan

Post No. 14,345

Date uploaded in London –  4 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

POSTERS ON THE WALL OF KANCHI SHANKARACHARYA MUTT DEPICTING THE LIFE OF ADI SHANKARA, THE GREASTEST PHILOSOPHER THE WORLD HAS EVER SEEN. I TOOK THESE PICTURES ON 15-3-2025

காஞ்சி சங்கராச்சாரியார் மடத்துக்குச் சென்றோம். மடத்திற்குள் எப்போதும் பூட்டிக்கிடக்கும் பெரியவரின் — காஞ்சீ மஹாசுவாமிகளின் (1894-1994) – பிருந்தாவனம் (சமாதி) – திறந்து இருந்தது; ஆனால் அவரது மற்றும் இளையவரது பிருந்தாவனங்களில் அபிஷேகம் நட ந்து கொண்டிருந்தது; சுமார் நூறு பேர் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்களும் தரிசனம் செய்தோம்; 

மடத்தின் புஸ்தகக் கடைகளில் நிறைய புதிய புஸ்தகங்கள் வந்துள்ளன. மடத்தின் சுவர்களில் ஏராளமான நல்ல விஷயங்களை பொறித்துள்ளார்கள்; பயனுள்ள முயற்சி .

சுவரில் சங்கரர் வரலாறு, கோவில்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.

இதோ அந்த விஷயங்கள்

My OLD ARTICLES in this blog 

6 நாட்களில் 30 கோவில்கள்! சூறாவளி சுற்றுப் பயணம்! புதிய உண்மைகள்! (Post No.6224)


MORE TAMIL TEMPLE WONDERS (Post no. 6223)

14 IMPORTANT VISHNU TEMPLES IN KANCHIPURAM! (Post No.6226)

108-ல் பதினான்கு காஞ்சியில்! கோவிலில் தங்க மழை! (Post No.6228)

பள்ளிகொண்டானும் பல்லிகொண்டானும் (Post No.6231)

Next Post
LIZARD WORSHIP IN TAMIL NADU AND ROME (Post No.6232)

வரதராஜப் பெருமாள் கோவில் அதிசயங்கள்! (Post No.6235)

AURANG ZEB, ROBERT CLIVE AND VARADARAJA SWAMI TEMPLE (Post No.6236)

காஞ்சி காமாட்சி கோவிலுக்குள் வைணவத் …

Tamil and Vedas

https://tamilandvedas.com › கா…

·Translate this page

13 Mar 2023 — கோவிலுக்குள் மேலும் ஒரு அதிசயம்! காமாட்சி கோவில் கர்ப்பக்கிரகத்தில் அரூபலட்சுமி. காமாட்சி சந்நிதி 24 தூண்கள் உள்ள காயத்ரீ மண்டபத்தில் அமைந்துள்ளதையும் காயத்ரீ மந்திரம் 24 அக்ஷரங்களால் அமைக்கப்பட்டுள்ளதையும் அனைவரும் அறிவர்.

QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 1 (Post No.12940)

Tamil and Vedas

https://tamilandvedas.com › quiz-…

·Translate this page

6. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை அறியாதோர் இல்லை ; அங்கு அன்னைக்கு எத்தனை கரங்கள்? அவற்றில் என்னென்ன இருக்கின்றன ? Xxxx. 7. காமாட்சி …

ஓரிக்கை மணி மண்டப தரிசனமும், உண்மைச் …

Tamil and Vedas

https://tamilandvedas.com › ஓர…

·Translate this page

2 Apr 2023 — காஞ்சிபுரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஓரிக்கை மணி மண்டபத்ததைத் தரிசிக்கும் பாக்கியம் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டில்தான் கிடைத்தது. எத்தனையோ முறை காஞ்சிபுரம் சென்றாலும் மணிமண் டபத்தைக் கடக்கும் நேரம் அது மூடப்பட்ட …

A blog exploring themes in Tamil and vedic literature | Page 471

Tamil and Vedas

https://tamilandvedas.com › page

·Translate this page

tamilandvedas.com, swamiindology.blogspot.com … காஞ்சி காமாட்சி கோவிலுக்குள் வைணவத் தலம், லெட்சுமி சிலை! … காமாட்சி சந்நிதி 24 தூண்கள் …

காஞ்சீபுரம் கோவில்கள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › கா…

·Translate this page

14 Apr 2013 — காசி விசுவநாதர் கோவில் 23.காஞ்சி காமாட்சி … சந்நிதி ஆஞ்சநேயர் கோவில் 65.வளத்தீஸ்வரர் கோவில் 66.வியாச …

–subham—

Tags –,காஞ்சி சங்கராச்சாரியார்,  மடம், சுவரில் ,சங்கரர் வரலாறு, கோவில்கள் பற்றிய விவரங்கள் ,

திருக்குறளில் மேலும் ஒரு ஸம்ஸ்க்ருதச் சொல் கண்டுபிடிப்பு ! (Post No.14,344)

 Written by London Swaminathan

Post No. 14,344

Date uploaded in London –  4 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருக்குறளில் ஐம்பது சதவிகித குறள்களுக்கு மேல் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் காணப்படுகின்றன. ஆகையால் யாராவது ஒருவர் தனித்தமிழ் எம்று சொன்னால் சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் மூட்டை கட்டி வைத்துவிடலாம்.

சுமார் அறு நூறு குறளகளில் ஸம்ஸ்க்ருத்க் சொற்கள் இருப்பதை நான் ஹைலைட்டர் பேனாவைத்து வர்ணம் பூசியுள்ளேன். காமம், மனது, காலம், லோகம் போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை வள்ளுவர் தாராளமாமகப் பயன்படுத்தியுள்ளார் .

வடமொழிச் சொற்பட்டியல்

வள்ளுவர் பயன்படுத்திய வடமொழிச் சொற்கள் பட்டியலை தமிழ் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை அளிக்கிறார். அத்தோடு வள்ளுவர்  பயன்படுத்தும் புதிய தமிழ் இலக்கண அமைப்புகளும் அவர் எக்காலத்தவர் என்பதை காட்டிவிடுகிறது. வள்ளுவர் 137 வட மொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு சொல்லையும் பலமுறை பயன்படுத்தும் போது இது பன்மடங்கு அதிகரிக்கும்.:

அகரம், அச்சு, அதி, அவி, அந்தம், அமிர்தம், அங்கணம், அரங்கு, அமர், அமரர், அமைச்சு, அரங்கு, அரண், அரசர், அவம்,அவலம், அவை, ஆசை, ஆகுலம், ஆசாரம், ஆதி, ஆணி, ஆயிரம், ஆயம், இசை, இந்திரன், இமை, இரா, இலக்கம்,உரு, உருவு, உலகு, உல்கு, உவமை, உறு, ஏமம், ஏர், கஃசு, கருமம், கணம், கணிச்சி, கதம்,காந்து, கலுழும், கவரி, கவுள், கழகம், களம், களன், கனம், காரிகை,கானம், காமம், காரணம், காமன், காலம், குணம், குடங்கர், குலம், குவளை, கூர், கூகை, கொக்கு, கோடி, கோட்டி, கோட்டம், சலம், சமன்,சிவிகை,சுதை,சூது,சூதர் , தகர், தண்டம், தவம், தானம், தாமரை, திண்மை, திரு, துகில், துலை,தூது, தெய்வம், தேயம், தேவர்,தொடி, தோட்டி, தோணி, தோள், நத்தம், நயம், நாகம், நாவாய், நாகரிகம், நாமம், நிச்சம், நீர், நுதுப்பேம்,பகவன், பக்கம், பகுதி, படாம், படிவத்தர், பதம், பயன், பரத்தன், பண்டம்,பளிங்கு, பள்ளி, பாக்கியம்,பாகம், பாவம்,பாவி, பூரியர்,பூசனை. புருவம், பூதம், பீழிக்கும் ,பீழை, புருவம், பூசனை, பூதங்கள் பேடி, பேய், மங்கலம், மடமை, மதலை, மயிர், மயில், மனம், மந்திரி, மணி, மதி, மா, மாடு, மாதர், மாத்திரை, மாயம், மானம், மீன், முகம், யாமம், வஞ்சம், வண்ணம்,வளை, வாணிகம், வித்தகர்

*****

கலம் தமிழ்ச் சொல்லா ?

கலம் செய் கோவே! கலம் செய் கோவே!  என்ற முதல் வரிகளுடன் துவங்கும் இரண்டு பாடல்கள் புறநானூற்றில் (228, 256) உள்ளன.

சங்க இலக்கியப் பாடல்களில் மேலும் நிறைய இடங்களில் வருகிறது திருவள்ளுவரும் இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார் .

இதற்கு முன்னர், உலகின் மிகப்பழைய நூல் என்று பேரறிஞர்கள் ஒப்புக்கொண்ட ரிக்வேதத்தில் கலசம் என்ற சொல்பல இடங்களில் வருகிறது. கலம்கலசம், கலயம் ஆகியன ஒரே பொருளில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது  மட்கலம் என்ற சொல்லையும் எல்லோரும் அறிவார்கள்; பானை, குடம் என்பதே இதன் முதல் பொருள். மேலும் ஆபரணம், கப்பல், படகு என்ற பொருளிலும் தமிழில் கையாளப்படுகிறது

ரிக்வேதத்தில் வரும் கலசம் என்பதற்கும் தமிழில் வரும் கலம் என்பதற்கும் ஒரே எழுத்துதான் வித்தியாசம்

கலசம் (ரிக் வேதம் = கலம் தமிழ் வேதம்

திருக்குறளில் கலம் வரும் இடங்கள் :

1000, 660, 60,575, 1262, 605

திருக்குறளுக்கும் ரிக்வேதத்துக்கும் உள்ள கால இடைவெளி  3500 ஆண்டுகள்!

சம்ஸ்க்ருதத்தில் ச/S ஒலியும் தமிழில் /L  ஒலியும் சிறப்பான சப்தங்கள்; காலப்போக்கில் தமிழானது ச ஒலியை இழந்திருக்கலாம் .  எழுத்துக்கு தொல்காப்பியர் விதித்த தடையை நாம் எல்லோரும் அறிவோம்.

என்னுடைய முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தமிழும் சம்ஸ்கிருதமும் மட்டுமே உலகின் பழைய மொழிகள்; இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்பதையும் காட்டியுள்ளேன். ஆகையால் கலம்கலசம் ஆகியன ஒரே மூலத்திலிருந்து வந்தும் இருக்கலாம்

ரிக் வேதத்தில் கலசம் வரும் இடங்கள் :

RV. 3-32-15;  10-32-9; 9-62-19;  9-86-11

அதர்வண வேதத்தில் கலசம் வரும் இடங்கள் :

AV.20-8-3; 19-53-3

பால் அல்லது தண்ணீர் அல்லது சோம ரசத்தை வைக்கும் பாண்டமாக ரிக் வேதம் இதைப் பயன்படுத்துகிறது ; முழுவதும் சோம ரசம் பற்றிப் பாடும் ஒன்பதாவது மண்டலத்தில் கலசம் என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது .

ஆக கலசமே கலமாகச் சுருங்கியது என்பதே என் துணிபு

ஆதாரம் இல்லாமல் நானெதையும் சொல்வதில்லை . ஒரு சில ஆங்கிலச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் எடுத்துக் கொள்வோம்

கார்களுக்குப் பெட்ரோல் போடுவோருக்கு Gallon காலன் என்ற சொல் தெரியும்; இப்போது லிட்டர் வந்துவிட்டது  இது ஒரு குறிப்பிட்ட அளவு திரவம் என்பதன் அளவு ; அதாவது அப்படி ஒரு கலம் (Vessel) இருந்திருக்க வேண்டும்.

இதைவிட நேரடி ஆதாரத்தைப் பார்ப்போம்.

பாரசீகம், கிரேக்கம், லத்தீன் ஆகியன பழைய மொழிகள்; சொல்லப்போனால் தமிழுக்கும் முன்னரே இலக்கியம் படைத்த மொழிகள் அவை .

அதிலுள்ள சொல் goldan (PAARASEEKAM; Persian)

Cauldron =calidarium ‘cooking-pot’ (English)

galleon– ship

கால்ட்ரன் , கோல்டான், காலிடேரியம் எல்லாம் பானை / பாண்டம் என்றே பொருள்படும் இவை ஆங்கில, பாரசீக, லத்தீன் மொழிச் சொற்கள் அதாவது தமிழுக்கு ஸ்நானப்ராப்தி இல்லாத சொற்கள் என்பது கால்டுவெல் கும்பலின் வாதம் !

இன்னும் ஒரு சொல் கல்லியன்; இதற்கு ஸ்பானிய மொழியில் கப்பல் என்று பொருள்; திருவள்ளுவரும் கலன்= கப்பல்  என்ற பொருளில் பயன்படுத்துகிறார். ஒரு சொல் ஐரோப்பிய மொழியில் இருந்தால் அதற்கும் தமிழுக்கும் தொடர்பே இருக்க முடியாது என்பது கால்டுவெல் கும்பலின் வாதம் !

ஆனால் காலன் , கால்ட்ரன், கல்லியன் , காலிடேரியம் எல்லாம் குழிவான கப்பல் போன்ற இடத்தை, பாத்திரத்தை, பாண்டத்தைக் குறிப்பதைக் காண்கிறோம்.

ஆகவே வில்லியம் ஜோன்ஸ் போன்ற சம்ஸ்க்ருத ஆதரவுக் கும்பல், கால்டுவெல் போன்ற திராவிட மொழிக்குடும்ப ஆதரவுக் கும்பல்களின்  வாதங்களை ஒதுக்கிவிட்டு தமிழ்- சம்ஸ்க்ருத மூல மொழிக் கொளகையை ஏற்றால் கலம்= கலசம் என்பது சகோதரச் சொற்கள் (Cognate Words) என்பது விளங்கும் இது எனது கொள்கை மட்டுமல்ல. சிவா ஞான முனிவர், பரஞ்சோதி முனிவர், பாரதியார் பாடல்களிலும் உள்ள உண்மை

முந்தைய ஆராய்சசிக் கட்டுரைகளில் நேவி= நாவ =படகு என்பதையும் ஸ்கிப் = ஷிப்= கப்பல் என்பதையும் கண்டுள்ளோம். ஆகவே உலகில் கப்பல் ஓட்டுதலைக் கண்டுபிடித்ததும் இந்துக்களே என்பதை இந்தச் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன.

Skip= ship = kappal –

Navy= naava= boat= pataku

 –சுபம்—

Tags- கலம், கலசம்,திருக்குறள், சம்ஸ்கிருதத் சொற்கள், ரிக் வேதம்

ரோஸ் ஐஸ் ஷெல்ப்! (Ross Ice Shelf) (Post No.14,343)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,343

Date uploaded in London – –4 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

13-3-2025 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

உலகின் அதிசய இடங்கள்!

ரோஸ் ஐஸ் ஷெல்ப்! (Ross Ice Shelf) 

                                ச. நாகராஜன்                                                    

உலகின் மிகப்பெரிய பனிப்படி அடுக்கு!

“அடடா! இதை விட பெரிய பனிப்படி அடுக்கு ஒன்றை இனிமேல் பார்க்கவே முடியாது” என்று 1841ம் ஆண்டு ரோஸ் பனிப்படி அடுக்கைப் (Ross Ice Shelf)  பார்த்த ஜேம்ஸ் க்ளார்க் ரோஸ் (Captain James Clark) Ross வியந்தார்.

அவர் பெயராலேயே உலகின் ஆகப் பெரும் பனிப்படி அடுக்கு பின்னால் அழைக்கப்படலாயிற்று!

பிரிட்டிஷ் அரசால் தென் துருவப் பகுதியை ஆராயப் பணிக்கப்பட்டார் ஜேம்ஸ் க்ளார்க் ரோஸ்.

குறிப்பாக தெற்கில் உள்ள காந்த துருவத்தை (South Magnetic Pole) ஆராய வேண்டும் என்பது அவரது லட்சியம்.

1773ல் ஜேம்ஸ் குக் அட்லாண்டிக் பகுதியை முதன் முதலில் ஆராய்ந்தார். தொடர்ந்து 1823ல் ஜேம்ஸ் வெடல் என்பவர் ஆராய்ந்தார்.

1840 நவம்பரில் சிறிய ஆனால் வலிமை மிக்க கப்பல்களான டெர்ரர் மற்றும் எர்பஸ் (Terror and Erebus) ஆகிய இரண்டும் அந்த பனிப்படி அடுக்குப் பகுதிகளுக்குச் சென்றன. மெதுவாக ஆனால் கவனமாக அந்த படுபயங்கரமான பகுதிக்குள் சென்று கொண்டிருந்தார் ரோஸ். திடீரென்று அவரது பணியாளர்களுள் ஒருவன் ‘ஆஹா’ என்று கத்தினான்.

உடனே டெலஸ்கோப் மூலம் அந்தக் பகுதியைப் பார்த்த ரோஸ் வியந்தார். அந்தப் பகுதிக்குள் கப்பலில் செல்வது சாத்தியம் தானா?

முன்னே சென்ற போது தான் அந்தப் பனிப்படி அடுக்கை நெருங்கிப் பார்க்க முடிந்தது.

இந்தப் பனிப்படி அடுக்கைத் தாண்டி, இனி தென் காந்த துருவத்திற்குச் செல்வதற்கு வழியே இல்லை என்று அவர் உணர்ந்தார். இரண்டு வருடம் அந்தப் பகுதியில் சுற்றி ஆராய்ந்த ரோஸ் ஏராளமான குறிப்புகளை எடுத்தார்.

மிதக்கின்ற உலகின் மிகப் பெரும் பனிப்படி அடுக்கு என்ற ரோஸ் ஐஸ் ஷெல்ப் 500 மைல் நீளம் உள்ளது.

அது கடலிலிருந்து தென் துருவத்திற்கு உள்ளே 600 மைல் பரந்து விரிந்திருந்தது. அதன் மேல் பரப்பு மட்டும் இரண்டு லட்சம் சதுர மைல் என்ற பிரம்மாண்ட பரப்பைக் கொண்டிருந்தது. ஒரு கன்வேயர் பெல்ட் போல 25 மைல் நீளத்திற்கு உயர்ந்தும் சரிந்தும் இருந்த அது கண்கொள்ளாக் காட்சியைத் தந்தது!

தென்பகுதியில் இந்த ஐஸ்கட்டியின் கனம் 2400 அடியாகவும் வடக்கில் இதில் பாதியாகவும் இருந்தது.

மிகத் தொலைவில் இருந்த ட்ரான்ஸாண்டார்டிக் மலைகளிலிருந்து வந்த க்ளேஸியர் எனப்படும் பிரமாண்டமான பனிப்பாறைகள் இந்தப் பனிப்படி அடுக்கின் பின்னால் வந்து சேர்ந்தன. இந்தப் பனிப்பாறைகளுள் மிகப் பெரியதான பியர்ட்மோர் பனிப்பாறை உள்ளிட்டவை அடங்கியிருந்தன.

அடுக்கு அடுக்காக இவை சேரவே ரோஸ் பனிப்படி அடுக்கு மிக பிரம்மாண்டமாக ஆனது!

ஆனால் இந்த பனிப்படி அடுக்கின் மேல் பரப்பு வியக்கத் தக்க அளவில் சம பரப்பைக் கொண்டிருக்கவே பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் இங்கு முகாம் அமைத்து ஆராய ஆரம்பித்தனர்.

1908ல் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளரான எர்னஸ்ட் ஷாக்கில்டன் (Ernent Shackleton) இதன் மேற்குப் பகுதியில் தனது முகாமை அமைத்து தென் துருவத்தை அடைந்தே ஆவது என்று கங்கணம் கட்டிக் கொண்டார்.

அவரது மூன்று பணியாளர்கள் தென்காந்த துருவத்தை அடைந்து சாதனையைப் படைத்தனர்.

1908, அக்டோபர் 29ம் தேதியன்று நான்கு மட்டக்குதிரைகள் பூட்டிய பனிச்சறுக்கு வண்டிகளில் ஏறி முதன்முதலாக பியர்ட்மோர் க்ளேஸியர் மீது ஏறினார் ஷாக்கில்டன்.

துருவத்தின் உச்சி இன்னும் 100  மைல் இருக்கும் போது குதிரைகள் இறந்தன. உணவும் தீர்ந்து விட்டது. வேறு வழியின்றி அவர் குழு கீழே இறங்க வேண்டியதாயிற்று.

1911 ஜனவரியில் இன்னொறு ஆய்வாளரான காப்டன் ராபர்ட் ஸ்காட் ஷாக்கில்டன் இறங்கிய பகுதியை அடைந்தார். அதே சமயம் நார்வேயிலிருந்த வந்த இன்னொரு ஆய்வாளரான ரோல்ட் அமுண்ட்சென் என்பவர் கிழக்குப் பகுதியில் இறங்கினார். இருவருக்கும் இடையே போட்டி – முதலில் யார் சிகரத்தை அடைவது என்று!

வெயில் அதிகமாக இருந்த சமயம் பார்த்து அமுண்ட்சென் தொடர்ந்து முன்னேறி 1911 டிசம்பர் 14ம் தேதியன்று துருவத்தை அடைந்தார். அடுத்த மாதம் தான் ராபர்ட் ஸ்காட் அங்கு சென்றார்.

திரும்பும் போது ஸ்காட்டின் மிருகங்கள் இறக்கவே அவர் படாத பாடு பட்டார். பலர் இறந்தனர்.

கடைசியில் ஒருவழியாக குழுவினரில் உயிர் பிழைத்தவர்களில் மீதிப் பேர் தரைப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

ஸ்காட் தனது டயரில் இப்படி எழுதினார்:

“அட, கடவுளே! இது ஒரு மோசமான பகுதி தான்!”

Antarctic Region எனப்படும் தென் துருவப் பகுதியில் மட்டுமே காணப்படும் எம்ப்ரர் பெங்குயின் இந்தப் பனிப்படி அடுக்கில் ஆயிரக் கணக்கில் உள்ளன என்பது அதிசயமான செய்தி தான்!

இங்குள்ள பெண் பெங்குயின் முட்டை இடும்போது ஆண் பெங்குயின் அதன் மீது இருந்து முட்டைக்கு உஷ்ணத்தைக் கொடுத்து குஞ்சு வெளி வரும் வரை காக்கிறது!

இப்படி பல அதிசயங்கள் இந்த தென் துருவப் பகுதியில் உள்ளன!

***

RAM NAVAMI GNANAMAYAM BROADCAST PROGRAMME FOR SUNDAY 6-4 -2025

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

6-4-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

***

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London and Gomathy Karthikeyan from Chennai

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  Vaduvur Sri Kothandaramaswamy Temple

***

Bengaluru S Nagarajan speaks on Greatness of Sri Rama.

****

Special Ram Navami Songs by

Sathyarthi Chandrasekaran (Senior NRPSI Tamil Interpreter (12904); Japanese>English Translator;

Online Tutor (Tamil; Japanese; English; South-Indian Classical Music)

AND

Other Singers.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் மற்றும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர்

திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு –வடுவூர்  ஸ்ரீ  கோதண்டராமஸ்வாமி  கோவில்

*****

பெங்களூர் எஸ். நாகராஜன்

ராமரின் பெருமை- பற்றி உரையாற்றுவார்

****

இன்றைய ராம நவமி சிறப்பு நிகழ்ச்சி:

ஸ்ரீ ராமர் மீதான பாடல்கள், கீர்த்தனைகள், கிருதிகள்

பாடுவோர்- சத்யார்த்தி சந்திரசேகரன் ( ஜப்பானிய- தமிழ் – ஆங்கில  மொழிபெயர்ப்பாளர், ஆன் லைன் சங்கீத ஆசிரியர்) மற்றும் பலர்.

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,6-4-2025, Ram Navami BROADCAST PROGRAMME

காஞ்சீபுரத்தில் திவ்ய தரிசனம் (Post.14342)

Written by London Swaminathan

Post No. 14,342

Date uploaded in London –  3 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பிராங்பர்ட் வழியாகச் சென்னையில் தரை இறங்கியவுடன் ஒரு நாள் ஓய்வு. மறுநாள், அதாவது மார்ச் 15 ஆம் நாள் (15-3-2025) , முதலில் காஞ்சி காமாட்சியைத் தரிசித்தோம்; பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்துக்குச் சென்றோம். கோவிலில் நல்ல கூட்டம்;காரணம் மாசி மகம் உற்சவம். பொறுமையாக வரிசையில் நின்று காமாட்சியைத் தரிசித்தோம். முன்னரே பலமுறை அம்மனைத் தரிசனம் செய்ததால் விரிவாக எழுதத் தேவையில்லை . பழைய கட்டுரைகளில் விவரங்கள் உள்ள. போகும் வழியில் உலகளந்த பெருமாள் கோவில் கச்சபேஸ்வரர் கோவில் ஆகியவற்றை படம் எடுத்தேன்.

மடத்திற்குள் எப்போதும் பூட்டிக்கிடக்கும் பெரியவரின் — காஞ்சீ மஹாசுவாமிகளின் (1894-1994) – பிருந்தாவனம் (சமாதி) – திறந்து இருந்தது; ஆனால் அவரது மற்றும் இளையவரது பிருந்தாவனங்களில் அபிஷேகம் நட ந்து கொண்டிருந்தது; சுமார் நூறு பேர் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்களும் தரிசனம் செய்தோம்;  இளையவரது சமாதியில் யாரோ ஒரு சந்நியாசி நின்று கொண்டு அவ்வப்போது கூட்டத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கீழேயே பக்தர்களுடன் அமர்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . பிருந்தாவனத்தில் நிற்க அனுமதித்து இருக்கக்கூடாது.

பின்னர் சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி பூஜை நடைபெறப்போகும் சந்திர மெளளிஸ்வர பூஜை மண்டபத்துக்கு வந்தோம்; சுவாமிகள் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள் என்று அதிகாரிகள் சொன்னார்கள்; அந்த கொஞ்ச நேரம், 15 நிமிடங்களுக்கு வராததால் மதிய உணவினை ஒரு வெஜிட்டேரியன் உணவுவிடுதியில் முடித்துக் கொண்டு வைத்தீஸ்வரன்கோவிலை நோக்கி விரைந்தோம்

மடங்களில் பூஜை நேரங்களை எழுதிப்போடுவது நல்லது; ஸ்வாமிகள் வரும் நேரத்தினை முறையாக, சரியாக அறிவிப்பதும் காலத்துக்கு ஏற்ற உத்திகளாகும்; ஏனெனில் எங்களைப் போல பலரும் வெளியே  சென்றதையும் பார்த்ததால் இதை எழுதுகிறேன். மடத்து அதிகாரிகள் இதைக் கவனிப்பார்களாக

மடத்தின் புஸ்தகக் கடைகளில் நிறைய புதிய புஸ்தகங்கள் வந்துள்ளன. மடத்தின் சுவர்களில் ஏராளமான நல்ல விஷயங்களை பொறித்துள்ளார்கள்; பயனுள்ள முயற்சி .

Kanchi Kamakshi Temple Lion

Ulakalantha Perumal Temple

TO BE CONTINUED>>>>>>>>>>>>>>>>>>>>..

OLD ARTICLES

6 நாட்களில் 30 கோவில்கள்! சூறாவளி சுற்றுப் பயணம்! புதிய உண்மைகள்! (Post No.6224)


MORE TAMIL TEMPLE WONDERS (Post no. 6223)

14 IMPORTANT VISHNU TEMPLES IN KANCHIPURAM! (Post No.6226)

108-ல் பதினான்கு காஞ்சியில்! கோவிலில் தங்க மழை! (Post No.6228)

பள்ளிகொண்டானும் பல்லிகொண்டானும் (Post No.6231)

Next Post
LIZARD WORSHIP IN TAMIL NADU AND ROME (Post No.6232)

வரதராஜப் பெருமாள் கோவில் அதிசயங்கள்! (Post No.6235)

AURANG ZEB, ROBERT CLIVE AND VARADARAJA SWAMI TEMPLE (Post No.6236)

காஞ்சி காமாட்சி கோவிலுக்குள் வைணவத் …

Tamil and Vedas

https://tamilandvedas.com › கா…

·Translate this page

13 Mar 2023 — கோவிலுக்குள் மேலும் ஒரு அதிசயம்! காமாட்சி கோவில் கர்ப்பக்கிரகத்தில் அரூபலட்சுமி. காமாட்சி சந்நிதி 24 தூண்கள் உள்ள காயத்ரீ மண்டபத்தில் அமைந்துள்ளதையும் காயத்ரீ மந்திரம் 24 அக்ஷரங்களால் அமைக்கப்பட்டுள்ளதையும் அனைவரும் அறிவர்.

QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 1 (Post No.12940)

Tamil and Vedas

https://tamilandvedas.com › quiz-…

·Translate this page

6. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை அறியாதோர் இல்லை ; அங்கு அன்னைக்கு எத்தனை கரங்கள்? அவற்றில் என்னென்ன இருக்கின்றன ? Xxxx. 7. காமாட்சி …

ஓரிக்கை மணி மண்டப தரிசனமும், உண்மைச் …

Tamil and Vedas

https://tamilandvedas.com › ஓர…

·Translate this page

2 Apr 2023 — காஞ்சிபுரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஓரிக்கை மணி மண்டபத்ததைத் தரிசிக்கும் பாக்கியம் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டில்தான் கிடைத்தது. எத்தனையோ முறை காஞ்சிபுரம் சென்றாலும் மணிமண் டபத்தைக் கடக்கும் நேரம் அது மூடப்பட்ட …

A blog exploring themes in Tamil and vedic literature | Page 471

Tamil and Vedas

https://tamilandvedas.com › page

·Translate this page

tamilandvedas.com, swamiindology.blogspot.com … காஞ்சி காமாட்சி கோவிலுக்குள் வைணவத் தலம், லெட்சுமி சிலை! … காமாட்சி சந்நிதி 24 தூண்கள் …

காஞ்சீபுரம் கோவில்கள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › கா…

·Translate this page

14 Apr 2013 — காசி விசுவநாதர் கோவில் 23.காஞ்சி காமாட்சி … சந்நிதி ஆஞ்சநேயர் கோவில் 65.வளத்தீஸ்வரர் கோவில் 66.வியாச …

–subham—

Tags –, திவ்ய தரிசனம்,  காஞ்சி சங்கராச்சாரியார்,  மடம், மஹாசுவாமிகளின் (1894-1994) , பிருந்தாவனம் (சமாதி) Part 1

London Swaminathan’s New book -Greatest Tamil Book!

London Swaminathan’s New book -Greatest Tamil Book!

London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in

Enjoy reading them.. Two Tamil books are printed in two separate volumes.

Here is one of my latest books

 Foreword

This book Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit! contains over thirty articles on Tirukkural of Tiruvalluvar, the greatest poet of Tamil speaking world and the oldest language Sanskrit.  These articles appeared in my two blogs over the period of 13 years.  Apart from Tirukkural, there are articles touching Bharati, the greatest Tamil poet of modern age and Bhartruhari, author of Nitia Sataka.

Sanskrit and Prakrit have lot of interesting books such as NitiSataka of Bhartuhari and Gatha Sapta Sati.  Since this is the third book dealing with Tamil and Sanskrit matters inside India, I have included the contents of my previous two books at the end. If you look at the contents of all the three books you will get a full picture of the marvellous productions in these two languages.

Outside India, we see Sanskrit Inscriptions in Turkey (Bogazkoi) dated around 1400 BCE and Dasaratha Letters in Egypt. And we have over 850 Sanskrit inscriptions in South East Asian countries. All these things are covered by me in my previous books. Those who are interested in these topics may go through the book list available with Pustaka.co.in

I thank all those who have supported me in my production of over 130 books in Tamil and English. Please go through this book and read the other two books to get a full picture.

Londo Swaminathan

October 2024

Swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

 *****

 CONTENTS

Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit! (book title)

1.Why do Tamil Poets praise Tirukkural as ‘Tamil Veda’?

2.Hindu Gods in Tirukkural

3.Vedic God Indra and Amrit in Tirukkural

4.Vishnu Avatars in Tamil Veda Tirukkural  

5.Brahma and Lakshmi in Tamil Veda Tirukkural

6.Vedic God Yama in Tamil Veda Tirukkural!

7.Dharma, Artha, Kama, Moksha in Tamil Veda Tirukkural

8.Brahmins and Yagas in Tamil Veda Tirukkural

9.Why did Tiru Valluvar use 500 +++Sanskrit words?

10.Why did Tamil Poets praise Tirukkural as Tamil Veda? –

11.Tamil or Sanskrit: Which is Older?

12.Q & A Origin of Shiva

13.Humility of Indian poets! Varahamihira, Kalidasa,

Kamban & Purandaradasa

14.Etymology 3000 years ago!

15.‘Sanskrit is Male, Prakrit is Female; Prakrit is Sweeter than Sanskrit

16.Juggernaut and Lord Jagannath!

17.Bhartruhari, Tulsidas and Thiruvalluvar

18.Lyrics in Sanskrit- Talk by IPS officer 

 19.How many Letters are in Sanskrit Alphabet?

20.Numbers in Sanskrit

21.Gold Treasures discovered in Sri Lanka with Sanskrit Inscription

22.Conspiracy of Foreign Scholars!

23.Pancha Sila of Buddha copied from Manu Smriti

24.World’s Largest Publisher of Religious Books

25.Cows are of different Colours, but Milk is White!

26.Glory of Womanhood: Bharati in English

27.Tamil Grammar Mistakes in Bharati’s poems!

28.Story on Counterfeit Coins

29.Story behind ‘Bhaja Govindam’ Hymn

30.Are you a Square or a Zero ?

31.Contents of my previous book: Linguistic and Language Wonders in India-  Old Theories Binned

32. Contents of my previous book:Valluvar, Einstein and Shakespeare

********

BOOK COVER: Tiru Valluvar image and Nepal coin with Sanskrit script are on the book wrapper.

 *****

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title-  Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit!

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- English

Published  – October 2024

Subject – Culture and Language

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and 137+2 Tamil and English Books

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

–Subham—

இந்திரன் நரியாக மாறியது ஏன்? நாஸ்தீகர்களுக்கு எச்சரிக்கை! (Post.14,341)

Written by London Swaminathan

Post No. 14,341

Date uploaded in London –  3 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மஹாபாரதம் சாந்தி பர்வத்தில் ஒரு சம்பவம் வருகிறது. இது நாஸ்தீகவாதிகளுக்கும் சமயச் சடங்குகளைக் கிண்டல் செய்வோருக்கும் நல்ல எச்சரிக்கை ஆகும்.

வேதங்களை முதல் மூன்று வருணத்தினர் மட்டுமே கற்கவேண்டும் என்பது பழங்கால விதி; (இது பற்றி யாரும் கவலைப் படவேண்டாம்; இப்போது பிராமணர்களும் கற்பதில்லை!)

நான்கு  வேதங்களை வகையாகத் தொகுத்து நான்கு சீடர்களிடம் பரப்புரை செய்யும் பொறுப்பினை வழங்கிய வியாசரை வேத வியாசர் என்கிறோம். அதே வியாசர்தான் மஹாபாரதம் என்னும் உலகத்தின் மிக நீண்ட நூலை எழுதினார். அந்த மஹாபாரதத்துக்கு ஐந்தாவது வேதம் என்று பெயர் .

பிராமணர்களே ஆனாலும் கடுமையான விரத, ஒழுக்க விதிகளை பின்பற்றுவோர் மட்டுமே  சுமார் இருபது ஆண்டுகளுக்கு வேதங்களைப் பயில முடியும். ஆ னால் மஹாபாரதம் என்னும் ஐந்தாவது வேதத்தை யாரும் எப்போதும் படிக்கலாம்; கற்கலாம். அதில் பதினெட்டு பருவங்களில் ஒன்றான சாந்தி  பர்வம் சொல்லும் செய்தி இதோ:

கடவுளையும் வேதங்களையும் நம்பாதவர்களை நாஸ்தீகர் என்கிறோம். ந + அஸ்தி= இருப்பது உண்மை இல்லை என்று அவர்கள் சொல்லுவார்கள் ; அதாவது க டவுள் இருப்பது உண்மை இல்லை என்பது அவர்களின் வாதம். அவர்களுக்கு வாய்ச்சாலம் அதிகம்; இதனால்தான் மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் நாஸ்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர் என்று விளாசுகிறார் 

ஆறு கோடி மாயா சக்திகள்

வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்

சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்

பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்

விரதமே பரம் ஆக வேதியரும் “–

என்பது மாணிக்கவாசகர் பாடிய திருவாசகப் பாடல் ஆகும்

வால்மீகி ராமாயணம், பாலகாண்டம், ஆறாம் சர்கத்தில் அயோத்தி என்னும் நகரின் பெருமையினைச் சொல்லும் வால்மீகி முனிவர் அங்கு பொய்யர்களும் நாத்தீகர்களும் இல்லை என்கிறார்.

ந நாஸ்திகோ நாந்ருதகோ ந கஸ்சித பஹுஸ்ருத:

நாஸ்தீகன் இல்லை—கொஞ்சமாவது பொய் பேசும் வகை கூட இல்லை- படிக்காதவன் இல்லை- பொறாமை உள்ளவன், முட்டாள்கள் கிடையாது.

மஹாபாரத காலத்தில் நாஸ்தீகர்களுக்கு கடும் தண்டனையையும் கொடுத்தனர். அவர்கள் கைகளைக் கட்டி காட்டுக்கு அனுப்பினர்.

இதுபற்றி பீஷ்மர் சொல்லும் தகவல் முக்கியமானது; வேத நிந்தனை செய்த இந்திரன் ஒரு பிறப்பில் நரியாகப் பிறந்தான் என்கிறார். அவன் வேதங்களை குறைகூறியதோடு பிராமணர்களிடமும் எதிர்வாதம் புரிந்தான் என்று மஹாபாரதம் செப்பும்.

இதோ அந்த ஸ்லோகங்கள்:

அஹமாஸம்  பண்டிதகோ ஹைதுகோ  வேத நிந்தகஹ

ஆன்வீக்ஷிகீம்   தர்க்க வித்யாமனுரக்தோ நிரர்த்தகான்

நாஸ்தீகஹ சர்வசங்கீ  ச மூர்க்கஹ  பண்டித மாநிகஹ

தஸ்யேயம் பலநிர் விருத்திஹி ச்ருகாலத்தவம் மம த்விஜஹ 

  • शृगाल (śṛgāla): This is a common and widely used Sanskrit word for “fox”.

மேலும் சொல்கிறார் –

Fox in 10 Downing Street, P M House in London.

வேதங்களை நிந்திப்பதால் எவருக்கும் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை ; ஆகையால் சாஸ்திரங்கள் சொல்லும் விதிகளை மீறுவோர் தமக்குத் தாமே அழிவினைத் தேடிக்கொள்கிறார்கள் .

அப்ராமண்யம் ச வேதானாம் சாஸ்த்ராணாம் வாபிலங்கனம்

அவ்யவஸ்தா ச ஸர்வத்ர தத் வை நாசமாத்மனஹ  

****

வேதத்தின் முக்கியத்தை உணர்த்த வந்த வியாசர், சப்த ரிஷிகளும் மனுவும் வேதம் கறறார்கள் என்று மஹாபாரத சாந்தி பர்வத்தில் விளம்புகிறார் :

இந்த ஏழு ரிஷிகளையும் பிரம்மா படைத்தார் ; அவர்களை சித்ரசிகண்டீ என்றும் சாந்தி பர்வம் அழைக்கிறது

மரீசி, அங்கீரஸ், அத்ரி, புலஸ்திய, புலஹ, க்ரது, வசிஷ்ட என்ற ஏழு ரிஷிகள் ஆவர் வேறு ஒரு ஸ்லோகத்தில் மனுவினையும் சேர்த்து இந்த எட்டுப் பேர்கள் தான் பிரபஞ்சத்தை உருவாக்கினர் என்கிறது

இன்னும் ஒரு இடத்தில் அசித்த, தேவல, நாரத, பர்வத, ஆக்ஷன், பரசுராம, வசிஷ்ட ஜமதக்கினி, விச்வாமித்ர, பரத்வாஜ, ஹரிசமசுரு, குந்ததார   ஆகிய முனிவர்களும் வேதங்களைக் கறறார்கள் என்று தெரிவிக்கிறது .

Source : Avenues in Sanskrit Literature Edite by  R K Panda; Delhi; Year 2007

— SUBHAM—

Tags- இந்திரன் நரி, மாறியது, ஏன்? , நாஸ்தீகர்,  எச்சரிக்கை

கடவுளுக்குக் கடிதம் ! (Post.14,340)

Written by London Swaminathan

Post No. 14,340

Date uploaded in London –  3 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

பிரான்சில் ‘டெட் லெட்டர் ஆபிஸ்’ Dead Letter Office (முகவரி சரியில்லாமல் வரும் கடிதங்களைப் பரிசீலனை செய்யும் அலுவலகம்) குமாஸ்தா ஒருவர் பல கடிதங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சொர்க்கத்திலிருக்கும் கடவுள் பெயருக்கு ஒரு உருக்கமான கடிதம் வந்திருந்தது  அதில் ” கருணையுள்ள கடவுளே! எனக்கு விரைவில் ஐந்து பவுன்கள் பணம் அனுப்பி வையுங்கள்; இல்லாவிட்டால் என்னை வீட்டைவிட்டு வெளியே விரட்டி விடுவார்கள்” என்று ஒரு கிழட்டு அம்மாள் எழுதியிருந்தார்.

குமாஸ்தாவுக்கு இரக்கம் மேலிட்டது; நண்பர்களிடம் காட்டினான்; கிழவிக்கு உதவி செய்ய பணம் வசூலித்தான்.   பணம் சேர்ந்தது; அதை அப்படியே பாரீஸ் நகர கிறிஸ்தவ சர்ச் மூலம் கிழவியின்  முகவரியைக் கண்டுபிடித்து அனுப்பிவைத்தான்.

கொஞ்ச நாள் கழித்து சொர்க்கத்திலுள்ள கடவுளுக்கு என்ற பெயரில் அதே கிழவியிடமிருந்து இன்னும் ஒரு கடிதம் வந்தது ; குமாஸ்தா ஆவலோடு கடிதத்தைப்  பிரித்துப் பார்த்தான்

அதில், “கருணையுள்ள கடவுளே ! நீங்கள் எனக்கு அனுப்பிய பணம் வந்து சேர்ந்தது; மிக்க நன்றி. ஆனால் ஒரு கோரிக்கை; இனிமேல் அனுப்பும் பணத்தை ‘சர்ச்’ மூலமாக அனுப்ப வேண்டாம். அவர்கள் கொஞ்சம்  கமிஷன் எடுத்துக் கொண்டு மிச்ச பணத்தை மட்டுமே அனுப்பி இருந்தார்கள் !

****

ஜோமோ கென்யாட்டா

கென்யாவின் தலைவரானா ஜோமோ கென்யாட்டா ஒரு முறை இப்படிக் கூறினார் : “ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர்கள் வந்த போது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது. எங்களிடம் நிலம் இருந்தது. சீக்கிரமே இது தலைகீழாக மாறிவிட்டது. எங்கள் கைகளில் பைபிளும் அவர்கள் கைகளில் எங்கள் நிலங்களும் உள்ளன.”

(Kenyan leader Jomo Kenyatta had ruefully observed, “When the Europeans landed in Africa they had Bible in their hands and we had our lands. Soon it got reversed and now we have the bible and they have our lands.”)

—Subham—

Tags – கடவுளுக்குக் கடிதம் ! ஜோமோ கென்யாட்டா

S Nagarajan Article Index for March 2025 (Post.14,339)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,339

Date uploaded in London – –3 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

S Nagarajan Article Index March 2025

1-3-25 14254 மூன்று வில்களின் தோற்றம்! – மஹாபாரதத் துளிகள்!

2-3-25 14258  S Nagarajan Article Index February 2025

3-3-25 14262 கில்ஜியை அடித்து விரட்டிக் காமரூபத்தைக் காத்த

           வீரமன்னன் பிருது!.(Kalkionline 26-2-25 கட்டுரை)

3-3-25 14265 திருவாரூர் கமலாலயம் (ஞானமயம் 2-3-25 உரை)

4-3-25 14266 காற்றா, மணியா எது அடிக்கிறது? ஜாஜென் தியானம்

                             சொல்வது என்ன? – ஜென் தியானம் (Kalkionline 27-2-25

                          கட்டுரை)

5-3-2514271 உலக மர்மங்களை விளக்கும் ஒரே நூல் எது?

6-3-25 14274 நாரத புராணம் விவரிக்கும் ஒன்பது பக்திகள்Kalkionline 13-2-25          

                            கட்டுரை)

7-3-25 14277 கல்கி வார இதழும் பரமாசார்யாளும்! Kalkionline 1-3-25          

                            கட்டுரை)

8-3-25 14280  மவுண்ட் வெசுவியஸ்! (MOUNT VESUVIUS) உலகின்

           அதிபயங்கர எரிமலை! ( Kalkionline 2-3-25   கட்டுரை)

9-3-25 14283 கடவுளே நீ இருக்கயா? ( Kalkionline 28-2-25   சிறுகதை)

9-3-25 14285 யுதிஷ்டிரரா, கர்ணனா, யார் சிறந்த கொடையாளி? (28-2-25

           கல்கிஆன்லைன் கட்டுரை)

10-3-25 14286 திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம் (ஞானமயம் 9-3-

           25 உரை)

11-3-25 14289 வில்லிப்புத்தூரார்! – 1 (ஞானமயம் 9-3-25 உரை)

12-3-25 14292 வில்லிப்புத்தூரார்! – 2  (ஞானமயம் 9-3-25 உரை)

13-3-25 to 203-25 விடுமுறை

21-3-25 14294 நல்ல ஆரோக்கியம் என்றால் என்ன?

                             (ஹெல்த்கேர் மார்ச் 2025 இதழில் வெளியாகியுள்ள             

                           கட்டுரை)

22-3-25 14296 சித்தராஜ ஜெயசிம்மன் நீக்கிய யாத்ரீகர் வரி! 

                                     Kalkionline 3-3-25   கட்டுரை)

23-3-25 14299 வெற்றிக்கு பெங்சுயி வழியைக் காட்டும் லில்லியன் டூ!                                  

                                  (Kalkionline 4-3-25   கட்டுரை)

24-3-25 14303 மலர் மருத்துவம் தரும் 38 மலர் மருந்துகள்!                                  

             (Kalkionline 6-3-25   கட்டுரை)

24-3-25 14304 ஜெய்பூர் காலே ஹனுமான் ஜி மந்திர் (ஞானமயம் 23-3-25

            ஒளிபரப்பு)

25-3-25 14308 மகிழ்ச்சி அலைகள் வீசும் கோவா கடற்கரைகள்! (மாலை 

            மலர் 22-3-25 கட்டுரை)

26-3-25 14311 உங்களுக்கு எத்தனை போபியாக்கள்  உண்டுங்க?

              (Kalkionline 7-3-25   கட்டுரை)

27-3-25 14315 காங்கோ படுகை  (Kalkionline 7-3-25   கட்டுரை)

28-3-25 14317 சாயி-கியாட்ரி என்பது என்ன? ஒரு சைக்கியாட்ரிஸ்டின்

                                அனுபவமும் விளக்கமும்! (Kalkionline 7-3-25   கட்டுரை)

29-3-25 14323 கலிதோஷம் போக்கும் கந்தபுராணம் (பாராயண நூல்)

30-3-25 14325 நெக்லஸைக் காணோம்! (Kalkionline 9-3-25   சிறுகதை)

31-3-25 14328 ரேகை சாஸ்திரம் பற்றி பிரபல விஞ்ஞானி சத்யேந்திரநாத்

            போஸ் கூறிய சம்பவம்! (Kalkionline 12-3-25  கட்டுரை)

31-3-25 14329 ஆலயம் அறிவோம்! த்வாரகா ருக்மிணி தேவி கோவில்

            (ஞானமயம் 30-3-25 உரை)

***