வாரங்கல் ஆயிரம்கால் (தூண்) கோவில்; ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 27
,ஹைதராபாத்தை அடுத்து தெலுங்கானாவின் இரண்டாவது பெரிய நகரம் வாரங்கல் . இந்த நகரம் ஒரு காலத்தில் காகதீய வம்சத்தின் தலைநகராக இருந்தது. ஆயிரம் தூண் கோயில் மற்றும் பிரதாபருத்ரா கோட்டை முக்கிய இடங்கள்.
ஹைதராபாத்திலிருந்து வாரங்கலுக்கு 160 கிலோமீட்டர் தூரம் .
xxx
தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் ஹனமகொண்டா என்ற ஊரில் ஆயிரம் தூண்களின் கோவில் உள்ளது வாரங்கல் ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவுதான் .காசிப்பேட்டையிலிருந்து 10 கி.மீ. இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால் திரிமூர்த்திகள், அதாவது, சூரியன், விஷ்ணு மற்றும் சிவன் சந்நிதிகள் இருப்பதாகும்.
இதை ருத்ரேஸ்வர ஸ்வாமி கோவில், என்றும் அழைப்பர். இங்கு சிவன், விஷ்ணு, சூரியன் ஆகிய மூவருக்கும் கோவில் இருக்கிறது. சாளுக்கிய கலை அம்சங்கள் நிறைந்தது.
இந்து கட்டிடக்கலைக்கு ஒரு அழகிய உதாரணம், 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இது . இந்த கோவிலில் ஆயிரம் தூண்கள் உள்ளன, ஒவ்வொன்றும் நுணுக்கமான வடிவமைப்புகளுடன் செதுக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஒரு பெரிய விஷ்ணு சிலை உள்ளது. கோவிலைக் கட்டுவதற்கு 72 ஆண்டுகள் ஆயிற்றாம் .1175 – 1324 க்கு இடையில் புகழ்பெற்ற காகதீய வம்சத்தின் மன்னர் ருத்ர தேவாவின் உத்தரவின் பேரில் இது கட்டப்பட்டது.
இந்த கோவிலில் நுண்ணிய சின்னங்கள், துளையிடப்பட்ட திரைகள், பாறையில் வெட்டப்பட்ட யானைகள் மற்றும் ஒரே கல்லிலான நந்தி ஆகியவை உள்ளன. இங்குள்ள தூண்கள் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கின்றன,
கட்டிடக் கலைஞர்கள் கோயிலின் அஸ்திவாரங்களை வலுப்படுத்த மணல் பெட்டி அமைப்பைப் பயன்படுத்தினர். ஆழமான பள்ளம் தோண்டி மணல் மற்றும் பாறைக் கற்றைகளால் நிரப்பினர்.
2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்திய தொல்லியல் துறை இந்த பழமையான தலைசிறந்த படைப்பை இப்போது நிர்வகிக்கிறது.
திரிகூடாலயம் என்று அழைக்கப்படும், சிவன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது, மற்ற இரண்டு சன்னதிகள் தெற்கு மற்றும் மேற்கு நோக்கி உள்ளன. காகதீய ஆட்சியாளர்கள் சிவனின் சிறந்த பக்தர்களாக இருந்தனர், மேலும் அவர்கள் அதிகாலையில் சூரியனின் கதிர்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மீது பட வேண்டும் என்று விரும்பினர். விஷ்ணு மற்றும் சூரியனின் சன்னதிகள் ஒரு சதுர வடிவ மண்டபத்தின் வழியாக சிவனுடன் இணைகின்றன.
நான்காவது பக்கத்தில் ஒரு மேடையில் சிவனின் புனிதமான வாகனமான அழகிய ஒற்றைக்கல் ஆறு அடிகள் உயர நந்தி உள்ளது. கோவிலின் முழு அமைப்பும் நட்சத்திர வடிவில் உள்ளது. கல்வெட்டுகள் நிறைய உள்ளன.
கோவிலுக்குள் நுழையும் போது, நுழைவாயிலின் இருபுறமும் யானைகளின் அழகிய சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன. சுற்றியுள்ள தோட்டங்களில் சிறிய சிவலிங்கங்கள் உள்ளன. துக்ளக் வம்ச முஸ்லீம் அரசர்கள் கோவிலை நாசம் செய்தனர். பின்னர் மீண்டும் சீரமைக்கப் பட்டது.
திருவிழாக்கள்
கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மகா சிவராத்திரி, குங்கும பூஜை, நகுல சவிதி, கார்த்திகை பௌர்ணமி, யுகாதி, விநாயகர் திருவிழா, போனலு திருவிழா மற்றும் பதுகம்மா திருவிழா ஆகியவை அடங்கும். சாரலம்மா யாத்திரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா.
வாரங்கல்லில் காகதீய மன்னன் கஜபதியும் அவனது புதல்வி ருத்ரம்மாவும் கட்டிய கோட்டை முக்கிய சுற்றுலாத் தலம்; அது சாஞ்சி ஸ்தூபி போல 4 அலங்கார வாசல்களை உடையது.
xxxxx
இவை தவிர பத்மாக்ஷி கோவில், பத்ரகாளி கோவில், வீர நாராயண ஆலயம், சமணர்களின் கோவில் ஆகியனவும் வாரங்கல்லில் இருப்பதால் பக்தர்கள் ஒன்றிரண்டு நாட்களை செலவிடவேண்டும் .
ஸ்ரீ வீரநாராயண ஆலயம். நகர மையத்தில் இருந்து சுமார் நான்கு கிமீ ; கோவில் வளாகம் பெரியது ; பல கோவில்கள் , ஒரு பெரிய குளம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
பத்மாக்ஷி கோவில் வாரங்கலில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். நகரின் மையத்தில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. . வாரங்கலின் காவல் தெய்வம் பத்மாக்ஷி தேவி. கோவில் வளாகத்தில் நான்கு கோவில்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்தின் வெவ்வேறு வடிவங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
ராயபர்த்தி சிவன் கோவில், சுயம்பு கோவில் ஆகிய இரண்டும் சிவன் கோவில்கள்.. சிவன் கோவில் கட்டிடக்கலை.அழகுமிக்கது . இது நகர மையத்தில் இருப்பதால் எளிதில் அடையலாம்; ஏனைய கோவில்களுக்கு பஸ் அல்லது ஆட்டோவில் செல்லலாம்
சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் சுயம்பு கோவில் இருக்கிறது 1,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்த கோவில் வாரங்கலின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அறிய சிறந்த இடமாகும். கோவில் வளாகத்தில் பல சந்நிதிகள் உள்ளன, எல்லா கோவில்களும் பமையான வரலாறும், சிறந்த கட்டிடக்கலை, சிற்பங்களும் ஊட்டிய ஆகையால் வரலாற்றுப் பிரியர்களுக்கு வாரங்கள் ஒரு சொர்க்க பூமி.
–subham—
Tags- வாரங்கல் ஆயிரம் தூண் கோவில்; ஆந்திர கோவில்கள் – Part 27
ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 12 (last part)
ஹனுமான் சாலீசாவின் கடைசி மூன்று கன்னிகளைப்ப பார்ப்போம்
38. ஜோ சத பார் பாட கர கோயீ । சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ
39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா
40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா
கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா
****
(தோ³ஹா)
பவன தனய ஸங்கட ஹரன மங்கள மூரத்தி ரூப்
ராம லகன ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப்
****
(வாழ்த்து கோஷங்கள்)
ஸியாவர ராமசந்த்ரகீ ஜய் ! பவனஸுத ஹனுமான்கீ ஜய்!
போலோ பாயீ ஸப ஸந்தனகீ ஜய்!
XXXXX
38. யார் ஒருவர் இந்த ஹனுமான் சாலீசாவை நூறு தடவை படிக்கிறார்களோ அவர் ஆசை எனும் பாச வலையிலிருந்து விடுபடுவார்; பேரானந்த நிலையை அடைவார் .
39. இந்த ஹனுமான் சாலீசாவைப் படிப்பவருக்கு நிச்சய வெற்றி கிடைக்கும் என்பதற்கு கெளரி சங்கரரான பரமேஸ்வரனே சாட்சி.
40. துளஸி தாஸர் சொல்கிறார் :ஹே அனுமனே ! நான் என்றும் ராமாபிரானையே புகலிடமாகக் கொண்டுள்ளேன்; சீதா ராம லெட்சுமணர்களுடன் தங்கள் என் என்னுடைய இருதயத்தில் என்றும் இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
இத்துடன் 40= சாலீஸா முடிந்துவிட்டது.
****
பின்னர் முத்தாய்ப்பாக வரும் தோஹா :
பவன குமாரனே! தேவர்களுக்குத் தலைவனே; சங்கடங்களைத் தீர்ப்பவனே; மங்களங்களை அருள்பவனே !சீதா ராம லெட்சுமணர்களுடன் என்னுடைய இருதயத்தில் என்றும் வசிப்பீர்களாகுக !
XXX
எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ஹனுமான் சாலீஸா மற்றும் ரத்தன் மோஹன் சர்மா பாடிய ஹனுமான் சாலீஸா ஆகியவை கேட்பதற்கு இனிமையானவை; சுமார் 11 நிமிடங்கள் பிடிக்கும் . யூ ட்யூபில் தினமும் கேட்கலாம்.
தமிழில் ஹனுமான் சாலீஸா:
வீரா என்பதை பீரா என்றும் சிலர் உச்சரிப்பர்; உலகம் முழுதும் ப=வ மாற்றத்தைக் காணலாம் அதே போல ‘ப்’, ‘ய்’ என்று மெய் எழுத்துக்களில் முடிவதை ப , ய என்ற உயிர் மெய் எழுத்துகளாகவும் சிலர் சொல்வர் ; வித்யா என்பதை பித்யா என்பர்; துளசிதாஸர் , தான் வாழ்ந்த பகுதியில் பேசிய வட்டார ஹிந்தி மொழியில் (அவதி) எழுதினார்.
38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ
39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா
40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா
பவன தன்ய ஸங்கட ஹரன மங்கள மூரத்தி ரூப்
ராம லகன ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப்
*****
ஸியாவர ராமசந்த்ரகீ ஜய் பவனஸுத ஹனுமான்கீ ஜய்
போலோ பாயீ ஸப ஸந்தனகீ ஜய்
xxx
வேகமாக ஹனுமான் சாலீசாவைப் படித்தால் ஐந்து அல்லது ஆறு நிமிடங்கள் போதும். 100 தடவை படித்தால் 500 நிமிடங்கள் ; அதாவது சுமார் ஒன்பது மணி நேரம்; இதைத் தனியாகச் செய்வது கடினம்; இதற்காக பெரிய கோவில்கள், மண்டபங்களில் 100 தடவை படிக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ( நானே லண்ட னில் மூன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்; ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பேசவும் அழைத்திருந்தார்கள்; நான் ஹனுமனை சூப்பர்மேன் பேட் மேன் ஸ்பைடர் மேன் சித்திரப் படக்கதைகளுடன் ஒப்பிட்டுப் பேசினேன் ; என் பேச்சு எடுபடவில்லை ; ஏனேனில் அவர்கள் ஹநுமானை சர்வ சக்தி வாய்ந்த கடவுளாகப் பார்க்கிறார்கள் ; நானும் அதை நம்பினாலும், அங்குள்ள இளைஞர்களைக் கவர்வதற்காக அந்த எடுத்துக் காட்டினைச் சொன்னேன்; லண்டனில் ஸ்ரீ ராம் பாபா நடத்தும் 100 முறை ஹனுமான் சாலீஸா பாராயணம் அடிக்கடி நடந்து வந்தது..
இறுதியாக, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்துசொல்ல வேண்டும் என்ற திருவாசக சிவபுராண வரிகளை நினைவிற்கொள்ள வேண்டும் ; அதற்கும் மேலாக த்ரி கரண சுத்தியுடன் – மனம் மொழி, உடல் தூய்மையுடன் சொல்லவேண்டும்; அதற்கும் மேலாக தனக்கு மட்டுமின்றி சமுதாயத்துக்காக சொல்லுவது அதிக பலன் தரும் ; எங்கெங்கெல்லாம் சாது, சந்யாசிகள், நால்வர் , ஆழ்வார்கள் , நாயன்மார்கள் அற்புதங்களை நடத்தினார்களோ , அங்கெங்கெல்லாம் அவை எல்லாம் பிறருக்காக , சமுதாயத்திற்காக செய்யப்பட்டிருப்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். .
இத்துடன் ஹனுமான் சாலீஸா நிறைவு பெறுகிறது ; ஹனுமான் பற்றிய அதிசய விஷயங்கள் , உலகெங்கிலும் உள்ள கோவில்கள் , பல நாட்டு ராமாயணங்களில் ஹனுமானின் வருணனை முதலியவற்றைத் தனித்தனியாகக் காண்போம்.
கம்போடியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ள கோவில் சுவர்களில் பல நூற்றுக் கணக்கில் ஹனுமான் சிற்பங்களும் ஓவியங்களும் உள்ளன; பெரும்பாலானவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை ; உப்புக் காற்றினாலும்; ஈரப்பதத்தினாலும் பொலிவு குன்றிவருகின்றன ; அரசாங்கம் எல்லாவற்றையும் பாதுகாக்க முடியாது; ஆர்வமுள்ளோர் அவைகளைப் புகைப்படம் எடுத்து வெளியிடுவதோடு வண்ண ஓவியங்களாகத் தீட்ட வேண்டும் . ஹனுமான் கதைகளை மதத்தின் நோக்கம் அழியாதபடி கார்ட்டூன்களாக, வீடியோ கேம்களாக எடுத்துக் குழந்தைகளிடம் பரப்பவேண்டும். ஸ்லோகங்களையும் கம் ப ராமாயணப் பாடல்களையும் பரப்பவேண்டும் ..
ஜெய் ஹனுமான் !
–subham—
Tags- ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள், Part 12 , (last part)
பிரிட்டனில் 2031-ம் ஆண்டு வாக்கில் திருமணம் என்ற புனிதச் சடங்கை நாடுவோரது எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடும் என்ற சமீபத்திய ஆய்வு அந்த நாட்டின் ஆண் பெண்களை வெகுவாகக் கலக்கமடையச் செய்திருக்கிறது. பெரும்பாலான ஆண்களும் பெண்களும் தனித்தனியே தான் வாழ்வார்களாம். இனக் கவர்ச்சியினால் ஈர்க்கப்பட்ட ஆணும் பெண்ணும் கூடி வாழ்வார்களாம். இதை கோ-ஹாபிடட் என்று கூறிக் கொள்வார்கள். சேர்ந்து வாழ்ந்து சலித்து விட்டால் அடுத்த துணையை நாட இருவருமே ஆயத்தமாவார்கள்!
மேலை நாட்டுத் தாக்கத்தால் மாறி வரும் நமது உறவுமுறைகள் நம்மையும் சற்றுக் கலக்குகிறது. ஆணும் பெண்ணும் சம்பாதிப்பதால் பணம் இருக்கிறது என்ற நிலையில் சிறு சிறு விஷயங்களில் கூட விட்டுக் கொடுக்காத பிடிவாத அணுகுமுறை விவாகரத்து வரை கொண்டு விடுகிறது.
“மதூ… நீ செய்வது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை” என்று நடுத்தர வயதான பெண்மணி தன் டீன் – ஏஜ் மகளிடம் சொல்லும் போது, “நான் எது செய்தாலும் உனக்குப் பிடிக்காது என்பது எனக்கு எப்பவோ தெரியும்” என்று வெடுக்கென்று பதில் வருகிறது. தாய் விதிர்விதிர்த்துப் போகிறாள்.
அலுவலகத்தில், தொழிற்சாலைகளில் பிரமாதமாக வேலை செய்பவர்கள் வாழ்வில் தோற்றுத் தனியே ஏக்கம் பிடித்து வாழ்வதைப் பார்க்கலாம். அறிவு அவர்களுக்குத் துணை கொடுக்கவில்லையா? புத்திசாலித்தனம் 20 சதவிகிதம் மட்டுமே இருந்து 80 சதவிகிதம் உணர்ச்சிபூர்வமாக வாழ்பவர்கள் நிம்மதியான வாழ்வு வாழ்கிறார்கள்.
உணர்ச்சி அறிவுதான் உறவுகளின் வாழும் வகையைக் காட்டும் அறிவு. மகளின் உணர்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டிய மதுவின் அம்மா “உன்னுடைய அந்தச் செயலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தயவுசெய்து எனக்குக் கொஞ்சம் புரியும்படி விளக்கேன்” என்றால் மகளின் பிடிவாதப் போக்கு மாறி சரியாக சிந்திக்கும் பக்குவம் வரும்.
பணம் மட்டுமே வாழ்வு இல்லை என்பதை மண முறிவு வாங்கிய ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ளும் போது, காலம் கடந்து விடுகிறது.
‘அகாடமிக்’ அறிவோடு வாழ்வதை விட ‘எமோஷனல்’ அறிவோடு நடப்பவர் சீக்கிரமே அனைவருக்கும் தலைவராக ஆவதோடு செல்வத்துடனும் உறவுச் செழிப்புடனும் சமுதாயத்தில் கௌரவம் மிக்க உயர் நிலையை அடைகின்றனர்.
ஜாக் மேயர், பீட்டர் சலொவி என்ற இரண்டு அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சி மூலமாக வாழ்க்கையை மேம்படுத்த உணர்ச்சி அறிவு பெரிதும் பயன்படும் என்று அறிவித்தனர்.
டேனியல் கோல்மேன் என்பவர் உணர்ச்சிகளை ஆராய ஆரம்பித்தார். ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ என்ற இவரது நூலைப் பற்றி பிரபல டைம் பத்திரிகை எழுதியவுடன் அது பிரமாதமாக விற்பனையானது. பிறகு தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றி அவர் இது பற்றி விளக்க ஆரம்பித்தார். “என் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை” என்று பாதிக்கப்பட்டவர் சொல்லும் போது அந்த உடைந்த உறவை ஏற்படுத்தியவர், சுமார் மூவாயிரம் சொற்களில் பேசிய பிறகு,, அது போலச் சொல்லி இருக்கிறார் என்று அர்த்தமாகிறது.
சொல்ல வருவதை மற்றவர் மனம் உடையாமல் வேறுவிதமாக மாற்றிச் சொல்வது ஒரு கலை. இதை சுலபமாகக் கற்கலாம்.
உணர்வு அறிவை மேம்படுத்த எளிய பத்து வழிகள் உள்ளன. சிறிது சிரமப்பட்டால் அவற்றைக் கற்று மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் வாழ்வதோடு நம் மனம் புண்படாமல் வாழவும் முடியும்.
1.உணர்ச்சிகள் பற்றிப் புரிந்து கொள்ளுங்கள். நிகழ்ச்சிகளுக்கும், உங்களுடன் பழகுபவருக்கும் பட்டப் பெயர் சூட்டாதீர்கள்.
2. எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள்.
3. உங்கள் உணர்ச்சிகளுக்கு நீங்களே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். (நீ பொறாமைப்பட வைக்கிறாய் என்பது தவறு. நான் உன்னைப் பார்த்து பொறாமைப்படுகிறேன் என்பதே சரி.)
4. நல்ல முடிவுகளை எடுக்க உங்கள் உணர்ச்சிகளை உதவுமாறு செய்யுங்கள்.
5. மற்றவர்களின் உணர்ச்சிகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
6. ஆற்றல்மிக்கவராக ஆகுங்கள். கோபப்படாதீர்கள்.
7. மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு பரிவு காட்டுங்கள்.
8. உணர்ச்சிகள் உங்களை மேம்படுத்துகிறதா என்று பாருங்கள். ஆக்க பூர்வமானதாக அவற்றை ஆக்குங்கள்.
9. யாருக்கும் புத்திமதி தர வேண்டாம். யாரையும் அதிகாரம் செலுத்த வேண்டாம்; கட்டுப்படுத்த வேண்டாம். விமர்சிக்க வேண்டாம். தவறாக எடை போட வேண்டாம்.
10. உங்களை மதிக்காதவர்களைத் தவித்து விடுங்கள்
உணர்வுபூர்வமான அறிவு கூடுவதன் மூலம் உறவுகளை செழிக்கச் செய்யலாம்! அலுவலகம், இல்லம், ஏன் நீங்கள் இருக்குமிடம் எல்லாம் இன்பம் பெருகும்.
சினேகிதி மாத இதழில் 2005, டிசம்பர் மாதம் வெளியான கட்டுரை.
Oh! damsel of flowing tresses and slender forehead!
Hear you a miracle this!
In this Water hidden in the body
Mix pepper, amla, turmeric, and neem
Soft will your body be;
And dark thine hair on head.
xxxx
Hasthamalakar Miracle
Adi Shankara, the giant among the Indian philosophers travelled through the length and breadth of India. He went to Mahabaleswar Temple at Gokarna and did Bilvarchana to Shiva on a Shivratri day. Then he went to Mukambika and to Srivali. He was lecturing about Advaita every day. Prabhakara Bhattar was the most reputed scholar in the town. But his son was dumb. His parents were very much worried about the future of the handsome teenager. They took him to Shankara. The dumb youth fell at his feet and did not get up. When Shankara lifted his head and asked who he was, he started talking high philosophy: “ I am not a human being, I am not a Deva; neither I am a Brahmin nor a Kshatriaya, Vaisya or a Shudra. Neithr I am a Brahmachari (bachelor) nor a Grahastha (house holder), nor a Sanyasi (ascetic). I am Brahmam”.
Hearing this Shankara told him that you have explained what you are ‘like a goose berry in the hand’ (Hastha Amalaka உள்ளங்கை நெல்லிக்கனி போல). This is a phrase in Tamil and Sanskrit used to express extreme clarity of a thing or subject. From that day he was known as Hasthamalaka and he became one of the main disciples of Shankara.
21 Apr 2023 — Phyllanthus emblica, also known as emblic,emblic myrobalan, myrobalan, Indian gooseberry, Malacca tree,or amla,from the Sanskrit आमलकी ( …
—subham—
Tags- Hasthamalaka Story, Amla fruit, Proverb, Tirumanthiram, Learn, Part 3, Nelllikkay in Tamil, Indian Gooseberry, உள்ளங்கை நெல்லிக்கனி போல
‘ஹனுமான் சாலீஸா’ பற்றி எழுதத் துவங்கியவுடன் லண்டன் யுனிவர்சிட்டி SOAS லைப்ரரிக்குச் சென்று அனுமன் பற்றிய புஸ்தகங்களைத் தேடினேன்; இரண்டு மூன்று புஸ்தகங்கள் இருந்தன.ஆ னால் இதுவரை பார்த்திராத ஏ 4 சைசுள்ள இரண்டு பெரிய வால்யூம்களைப் பார்த்து எடுத்துக்கொண்டு, அனுமதி பெறும் ‘டெஸ்க்’குக்கு வந்தேன்.அங்கு புஸ்தகங்களின் பார்கோட் – ஐ ஸ்கேன் செய்வதற்கு முன்னர் எதற்கு ஒரே புஸ்தகத்தை இரண்டு காப்பி எடுக்கிறீர்கள்? என்று கேட்டார்; அவை இரண்டும் ஒரே அட்டைப்படத்துடன் இருந்தாலும் வால்யூம் 1, 2 என்றேன். அவரது தயக்கத்துக்குப் பின்னர்தான் கா ரணம் புரிந்தது. அவருக்கும் அந்தப் புஸ்தகத்தைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது போலும் ! மெதுவாக என்னிம் ட பேச்சுக் கொடுத்தார் . நீங்கள் ஹநுமானை பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்களா? என்று கேட்டார். ஆமாம், ஹனுமான் சாலீஸாவுக்கு எனது தமிழ் மொழியில், மொழிபெயர்ப்பு உண்டு; ஆனால் ஆங்கிலத்தில் இருப்பது போல வியாக்கியானங்கள் இல்லை; நான் அந்த வழியில் விளக்கவுரை எழுதுகிறேன் என்றேன். அப்படியா ! நானும் தினமும் ஹனுமான் சாலீஸா படிக்கிறேன் என்றார் ; எனக்கு உடனே மகிழ்ச்சி.
அட, எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள்? என்றேன்; நேபாளத்திலிருந்து வருவதாகச் சொன்னார். சென்ற முறை நேபாளம் சென்றபோது இதைப் படித்தால் நல்லது என்று பலர் சொன்னார்களாம் ; நானும் சொன்னேன் . உண்மை தான் ; குறிப்பாக ஜாதகத்தில் புதன், சனி கிரகம் மூலம் தொல்லை வரும் காலத்தில் படிப்பது நல்லது. நான் தினமும் யூ ட்யூபில் கேட்பேன்; வாரம் ஒரு முறை லண் டன் நார்த்விக் பார்க் ஆஸ்பத்திரியில் எல்லோரும் சேர்ந்து கூட்டுப் பிராத்தனை செய்கையில் நானும் அதைப் படிப்பேன் என்றேன். பின்னர் நன்றி சொல்லி விடைபெற்றேன் நான் கால் நூற்றா ண்டாக லண்டன் பல்கலைக்கழக நூலகத்துக்குப் போனபோதும் அவரை சந்த்தித்தது முதல் தடவை. அனுமன் புஸ்தகம் எடுத்திராவிடில் அந்த நண்பர் கிடைத்திருக்க மாட்டார். வாழ்க அனுமான் ; ஜெய் ஹனுமான் ; நிற்க .
xxxx
ஹனுமான் சாலீஸா— விலிருந்து மேலும் ஐந்து கண்ணிகளை பார்ப்போம்:
இந்த கடைசி கண்ணியை பலரும் மூன்று முறை , கூப்பிய கைகளுடன் சொல்வார்கள்; சிலர் கைகளை தலைக்கு மேலே உயர்த்திய வாறு சொல்லுவார்கள்.
xxxx
இன்னும் மூன்று கண்ணிகளும், ‘முடிவுரை’-யும்தான் உள .
துளசிதாஸ் சொல்லாத விஷயங்கள் : கடலைத்தாண்டும் பொழுது ஏற்பட்ட தடைகள் மற்றும் சீதையைச் சந்தித்த காட்சிகளை இதில் காணவில்லை. துளசி ராமாயணத்தில் செப்பிவிட்டதால் இங்கு சொல்லாமல் விட்டார் போலும்.
xxxx
அசீரியாவில், ஹீப்ருமொழியில் அனுமான்
நான் லண்டன் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்த 2 வால்யூம் புஸ்தகத்தை எழுதியவர் சாந்திலால் நகர் ஆவார் ; இரண்டு தொகுதிகளும் சேர்த்து 600 பக்கங்கள் அவர் சில சுவையான செய்திகளை சொல்கிறார்;
ரிக்வேதத்தில் வ்ருஷா கபி என்ற குரங்கு வருகிறது; இது அனுமானாக இருக்கலாம் என்பது ஒரு கருத்து; இன்னும் ஒரு விஷயம் இந்திரனை கபீ ந்திர — குரங்கின் தலைவன் — என்பதாகும் ; இந்திராணிக்கும் வ்ருஷா கபிக்கும் ஏற்பட்ட சண்டை பற்றிய கவிதைக்கு மேல் அதிக தகவல் வேதத்தில் இல்லை; ஆயினும் வ்ருஷா என்ற சொல்லுக்கே பலம், வீர்யம் என்று பொருள் வேதம் முழுதும் பல இடங்களில் வருகிறது. இது தவிர யஜுர் வேத சம்ஹிதைகளில் மயு என்ற குரங்கு பற்றியும் வருகிறது.
xxx
அசீரியாவில், ஹீப்ருமொழியில் அனுமான்
காடக சம்ஹிதையில் லுசா கபி என்ற குரங்கினைக் காணலாம். ; அசீரியாவில் உள்ள கல்வெட்டில் இந்தச் சொல் இருக்கிறது. மேலும் எபிரேய மொழியில் குரங்குக்கு கோப் என்று பெயர். அதுவும் கபி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் பிறந்ததே. கபி , மற்கடம் என்ற சொற்க ள் வேத இலக்கியம் முழுதும் பரவலாகக் காணப்படுகிறது இது பற்றி பர்ஜிட்டர் , கெல்ட்னர் போன்றோர் நீண்ட ஆராய்ச்சி செய்துள்ளனர் அவர்கள் ஆராய்ச்சி முடிவுகளை ஏற்காவிடிலும் குரங்குகள் பற்றி — வேதத்தின் தெய்வீக துதிகளில் வருவதால் அப்போதிலிருந்தே அவை வணங்கப்பட்டது தெரிகிறது .
xxx
எனது ஆராய்ச்சி- கபி என்பது எபிரேயத்தில் இருப்பது போல , தமிழ்ச் சொல்லான மந்தி ஆங்கிலத்தில் MONKEY ‘மங்கி’ ஆனதோ என்றும் ஆராய வேண்டும்!
கபி என்ற சம்ஸ்க்ருத சொல், தமிழில் கவி என்று மருவியுள்ளது (ப=வ என்பது உலகில் பல மொழிகளில் இருக்கிறது)
“மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்” என்று திரிகூடப்பக் கவிராயர் குற்றாலக் குறவஞ்சியில் பாடுகிறார்.
கபி என்ற சொல்லில் முதல் ‘க்’ ஒலி குறைந்து ‘ஏப்’ APE என்ற சொல் ஐரோப்பா முழுதும் பரவியுள்ளது.
குரங்கு வெப்ப மண்டலப் பிராணி; குளிர் மிகுந்த ஐரோப்பாவில் கிடையாது. இந்துக்கள் குரங்கு, மயில் ஆகியவற்றை பாபிலோனியாவுக்குக் கொண்டு சென்று வித்தைகளைக் காட்டினார்கள்; அந்த நாட்டு மன்னர்கள் அவைகளைக் கண்டு மயங்கிப் போய் விலைக்கும் வாங்கினார்கள் ; அங்கிருந்து அவை ஐரோப்பிய நாடுகளில் நுழைந்தன ; உலகின் மிகப்பழைய புஸ்தகமான ரிக்வேதத்தில்தான் முதலில் குரங்கினைக் காண்கிறோம்.
–subham—
Tags- ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள் – Part 11, அனுமார் , நண்பர் அசீரியாவில், ஹீப்ருமொழியில், அனுமான், கவி, கபி , வ்ருஷா கபி, லுசா கபி
The mind is highly powerful. Once the powers of the mind are understood, the nature of the whole world can be comprehended. –Sathya Sai Baba
xxx
September 2 Monday
Only when the mind is subdued, can man become sublime. –Sathya Sai Baba
xxx
September 3 Tuesday
• The highest men are calm, silent and unknown. They are the men who really know the power of thoughts; they are sure that, even if they go into a cave and close the door and simply think five true thoughts and then pass away, these five thoughts of theirs will live through eternity. Indeed such thoughts will penetrate through the mountains, cross the oceans, and travel through the world. Swami Vivekananda
xxx
September 4 Wednesday
Mind is like a lake, and every thought is like a wave upon that lake. Just as in the lake waves rise, and then fall down and disappear, so these thought-waves are continually rising in the mind-stuff, and then disappearing, but they do not disappear for ever. They become finer and finer, but they are all there, ready to start up at another time, when called upon to do so. Swami Vivekananda
xxx
September 5 Thursday
There is no need to broaden it. Only a broad mind is needed to recognise the vastness of the spiritual heart. Narrow-mindedness should go. Narrow ideas of “me” and “mine” should be totally given up in all forms. –Sathya Sai Baba
xxxx
September 6 Friday We are heirs to all the good thoughts of the universe, if we open ourselves to them. Swami Vivekananda
xxxx
September7 Saturday
The mind proclaims its astonishing uniqueness to the world by its capacity to express feelings, recognise forms, appreciate the beauty of colour, enjoy different smells, as well as its power of thought. As the world is permeated by these qualities of the mind, these five qualities are all pervasive. –Sathya Sai Baba
xxx
September 8 Sunday
Broaden your mind and your vision
People often recommend that one should enlarge his heart. But enlargement of the heart will compel you to go to a cardiologist! What you have to do is to broaden your mind, your vision. The heart, meaning not the physical heart but the spiritual heart, is inherently broad. It is one with cosmic consciousness. –Sathya Sai Baba
xxxx
September 9 Monday
Take up one idea. Make that one idea your life; think of it; dream of it; live on that idea. Let the brain, muscles, nerves, every part of your body be full of that idea, and just leave every other idea alone. This is the way to success, and this is the way great spiritual giants are produced. Swami Vivekananda
xxxx
September 10 Tuesday
We are what our thoughts have made us; so take care of what you think.
Swami Vivekananda
xxx
September 11 Wednesday
Every vicious though will rebound, every thought of hatred which you have thought, in a cave even, is stored up, and will one day come back to you with tremendous power in the form of some misery here. If you project hatred and jealousy, they will rebound on you with compound interest. No power can avert them; when once you have put them in motion you will have to bear them. Remembering this will prevent you from doing wicked things. Swami Vivekananda
xxxx
September 12 Thursday Every thought is a little hammer blow on the lump of iron which our bodies are, manufacturing out of it what we want to be. Swami Vivekananda
xxxx
September 13 Friday
All knowledge that the world has ever received comes from the mind; the infinite library of the universe is in our own mind. Swami Vivekananda
xxxx
September 14 Saturday It is thought which is the propelling force in us. Fill the mind with the highest thoughts, hear them day after day, think them month after month. Swami Vivekananda
xxx
September 15 Sunday
The mind has no independent identity of its own. It is a conglomeration of the desires that sprout from the impulses. A cloth is essentially a bundle of threads. Threads, in their turn are basically cotton. Similarly, desires arise from basic impulses and the mind is constituted of these desires. Just as a piece of cloth disintegrates if threads in it are pulled apart, the mind too can be destroyed by the eradication of desires. –Sathya Sai Baba
xxxx
September 16 Monday
All minds are the same, different parts of one Mind. He who knows one lump of clay has known all the clay in the universe. He who knows and controls his own mind knows the secret of every mind and has power over every mind Swami Vivekananda
xxx
September 17 Tuesday
The heart can be compared to the sky, the mind, to the moon, and the intellect, to the sun. The thoughts that are generated in the mind are like the clouds that pass away. The cause for one’s happiness and misery or pleasure and pain lies in his thoughts. However, these twin ideas of happiness and misery or pleasure and pain obtain relevance only in the world of dualities. Just as the camera gives photographic impressions of the objects upon which it is focused, the mind absorbs the impressions of the objects it is directed at. The more it is directed towards the world of sensory pleasures, the farther it takes man away from God–Sathya Sai Baba
xxxx
September 18 Wednesday
All these senses, external and internal, must be under the disciple’s control. By hard practice he has to arrive at the stage where he can assert his mind against the senses, against the commands of nature. He should be able to say to his mind, “You are mine; I order you, do not see or hear anything”, and the mind will not see or hear anything — no form or sound will react on the mind. Swami Vivekananda
xxxx
September 19 Thursday
All things in nature work according to law. Nothing is excepted. The mind as well as everything in external nature is governed and controlled by law. Swami Vivekananda
xxxx
September 20 Friday
All that we see, we project out of our own minds. Swami Vivekananda
xxx
September 21 Saturday
PEACE THROUGH SENSE AND MIND CONTROL
You can experience Bliss only when you have learnt to control the Mind. To control the Mind, you have to engage in good deeds. As you go on performing good deeds, you will develop good thoughts and feelings; and when you have good thoughts, you will acquire true understanding of the Real. –Sathya Sai Baba
xxx
September 22 Sunday
Always keep your mind joyful; if melancholy thoughts come, kick them out.
Both matter and mind exist in a third, a unity which divides itself into the two. Swami Vivekananda
xxx
September 23 Monday
Every ounce of pleasure brings its pound of pain. It is the same energy that at one time manifests itself as pleasure, at another time as pain. As soon as one set of sensations stops, another begins. But in some cases, in more advanced persons, one may have two, yea, even a hundred different thoughts entering into active operation at the same time. Swami Vivekananda
xxx
September 24 Tuesday
All knowledge that we have, either of the external or internal world, is obtained through only one method — by the concentration of the mind. No knowledge can be had of any science unless we can concentrate our minds upon the subject. The astronomer concentrates his mind through the telescope… and so on. Swami Vivekananda
xxxx
September 25 Wednesday
If you want to study your own mind, it will be the same process. You will have to concentrate your mind and turn it back upon itself. The difference in this world between mind and mind is simply the fact of concentration. One, more concentrated than the other, gets more knowledge.–Swami Vivekananda
xxxx
September 26 Thursday
Excessive hilarity is quite as objectionable as too much of sad seriousness, and all religious realisation is possible only when the mind is in a steady, peaceful condition of harmonious equilibrium. Swami Vivekananda
xxx
September 27 Friday
Excessive mirth should be avoided. Excessive mirth makes us unfit for serious thought. It also fritters away the energies of the mind in vain. Swami Vivekananda
xxxx
September 28 Saturday
Get hold of the mind. The mind is like a lake, and every stone that drops into it raises waves. These waves do not let us see what we are.–Swami Vivekananda
xxxx
September 29 Sunday
Give up all desire for enjoyment in earth or heaven. Control the organs of the senses and control the mind. Bear every misery without even knowing that you are miserable. Think of nothing but spiritual freedom.–Swami Vivekananda
xxxx
September 30 Monday
“If I know one lump of clay, I know the whole mass of clay.” The universe is all built on the same plan. The individual is only a part, like the lump of clay. If we know the human soul—which is one atom—its beginning and general history, we know the whole of nature. Birth, growth, development, decay, death—this is the sequence in all nature and is the same in the plant and the man. The difference is only in time. The whole cycle may be completed in one case in a day, in the other in three score years and ten; the methods are the same. The only way– Swami Vivekananda
(Delivered at Los Angeles, California, January 8, 1900)
பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்; விஞ்ஞானிகள் அறியாத மனம் –PART 3, LAST PART
(இனி வரும் பகுதிகள் சுருக்கித் தரப்படுகின்றன ).
மனிதனை மனிதனாக உருவாக்கும் குறிக்கோள் உடையது கல்வி; ஆனால் நாமோ வெளியே பளபளப்பாக்குகிறோம் ஏனையோர் மீது செல்வாக்கு உண்டாக்கும் மனிதன் ஒரு டைனமோ- DYNAMO சக்திக் கேந்திரம்.
இந்த பெர்சனாலிட்டிPERSONALITYயை இரசாயன, பெளதீக முறையில் பகுத்துச் சொல்ல முடியுமா? எவ்வளவு ஆக்சிஜன், ஹைட்ரஜன் மூலக்கூறுகள் என்று ? பெரிய பெரிய தத்துவ ஞானிகள் புஸ்தகங்களை எழுதித் தள்ளினார்கள்; ஆனால் உலகில் தோன்றிய மஹான்கள் தேசங்களையே மாற்றிவிட்டார்கள்; தத்துவ ஞானிகள் அதைச் செய்யவில்லை. காரணம் மகா புருஷர்களின் பெர்சனாலிட்டிPERSONALITY. தனித்துவ ஆளுமை.
யோகம் என்னும் விஞ்ஞானம் மனிதனை / பெர்சனாலிட்டியை / உருவாக்குவதற்கான விதி களைக் கண்டுபிடித்துவிட்டது அந்த விதிகளை முறையாகப் பயின்று பின்பற்றுவோர் தங்களுடைய ஆளுமையை வலுப்படுத்தலாம்.இது அனைவருக்கும் கிடைக்கும்; ஏழை , பணக்காரர் என்ற வேறுபாடு இல்லை இல்லறத்தாருக்கும் கிடைக்கும்.
உடல், மனம், ஆன்மீக உலகங்கள் வெவ்வேறு அல்ல; அவை ஒன்றே; போகப் போக சுருங்கிக் கண்டே போகிறது மிகவும் நேர்த்தியான பகுதியை ஆவி என்றும் பெரிய பகுதியை உடல் என்றும் சொல்கிறோம். பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும் உளது நேர்த்தியாக, ஆக அது கடவுள் நிலையை அடைகிறது.
ஒரே மனதுதான் எங்குமுளது; தன்னுடைய மனதை கட்டுப்படுத்த அறிந்தவன் மற்றவர்கள் மனதையும் கட்டுப்படுத்த முடியும். தூய்மையும் அறநெறிகளைப் பின்பற்றும் குணமும் தேவை என்று மதம் வலியுறுத்துகிறது ஒரே களிமண்ணால் தான் இந்தப் பிரபஞ்சம் உண்டாக்கப்பட்டுள்ளது . இதை அறிவதன் மூலம் கவலைகளைத் தூக்கி எறியலாம் ;தொல்லைகளைத் தவிர்க்கலாம். அதையும் விட உயர்ந்த பலனும் கிடைக்கும்.
ஒரு முடிவான விஷயத்தைச் சொல்கிறேன்; பல ஆயிரம் ஆண்டுகள் வளர்ந்து முதிர்ந்து இந்த நிலைக்கு ஒவ்வொரு இனமும் வந்துள்ளது; ஆனால் இன்று பிறக்கும் குழந்தைகள் அந்த அனுபவத்தை சில ஆண்டுகளில் பெற்றுவிடுகிறது இதே போல சிலர் நீண்ட காலம் காத்திராமல் குறுகிய காலத்தில் பூரணத்தை அடையும் வழியைக் கண்டுபிடித்துள்ளார்கள் அவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து வளரவேண்டிய அவசியம் இல்லை; நாம் காணும் சமயத் தலைவர்கள், மகான்கள் இப்படி ஒரே பிறப்பில் முழுதான பக்குவத்தை/ பரிபூரண நிலையை அடைந்தவர்கள் ஆவர்.
இந்த அறிவியலின் பலன் என்ன? நீங்கள் கடலில் அலைக்கழிக்கப்படும் மரக்கட்டை போல தவிக்க வேண்டியதில்லை; பயிற்சி மூலம் இதைப்பெறலாம். இந்த அறையில் உள்ளவர் மனதில் நினைப்பதை அறிய முடியுமானால் அடுத்த அறையில் தொலைவில் உள்ளவர் மனதையும் அறியலாம். எல்லைதான் உண்டா? நாம் அறியோம். ஒரு மனிதன் பெறக்கூடிய சக்திக்கு எல்லையே இல்லை; இந்தியர்களின் மனம் எப்படிப்பட்டதென்றால் ஒன்றில் இறங்கினால் அதில் ஆழ அமிழ்ந்துவிடுவார்கள்; எத்தனை வகையான அறிவியல் இந்தியாவில் தோன்றியது என்பதை நீங்கள் அறிவீர்களா? கணிதம் இங்கேதான் உதயமானது. இன்று நீங்கள் எண்ணும் 1,2,3, 0 எல்லாம் இங்கே தோன்றியதுதான்; நியூட்டன் பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஈர்ப்பு விசை பற்றியும் அறிந்து இருந்தார்கள்
இந்திய யோகிகளும் இதில் பல ஆராய்சசிகளைச் செய்தார்கள் . எந்த கலர் உடையை அணிவது, எந்த வகை உணவினைச் சாப்பிடுவது என்றெல்லாம்; பூரண நிலையை அறிவதைக் கண்டார்கள். எனக்கு அதிக விஞ்ஞானம் தெரியாது; இந்தக் கலை பற்றி 6 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன்; அதை அறிய 30 ஆண்டுகள் கஷ்டப்பட்டேன். இது ஒரு நல்ல துறை என்று அறிந்தவுடன் இந்தத் துறையில் மோசடிக்காரர்கள் , மந்திரவாதிகள், ஏமாற்றுப் பேர்வழிகள் , ஜாலவித்தைக்கார்கள் ஆகியோரும் நுழைந்தனர் .
மிகப்பெரிய உடையின் ஒரு நூல் இழையை மட்டுமே தொட்டேன். ஆயினும் பரந்த அற்புதமான இடம் இருப்பதை அறிந்தேன். உங்களில் எவருக்கேனும் இதை மேலுமறிய ஆவல் இருந்தால் சொற்பொழிவுகளைக் கேட்பது மட்டும் போதாது நான் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன்- என்று கூறி சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவினை முடித்தார்.
XXXX
என் கருத்து
நீண்ட சொற்பொழிவின் சுருக்கம்தான் என்ன ? அற்புதங்களை , பிறர் எண்ணங்களை அறியும் சக்தியை எவரும் பெறலாம்; இவைகளுக்கும் இறைவனை அடைவதற்கும் தொடர்பு இல்லை; கடுமையான, முறையான ராஜ யோகப் பயிற்சி மூலம் சித்திகளை அடையலாம்; விஞ்ஞான விதிகளைப்போல இவைகளும் , சில விதிகளுக்கு ட்பட்டே செயல்படுகின்றன . ஒவ்வொருவர் மனமும் தனிப்பட்டதல்ல; பிரபஞ்சம் முழுதும் பரந்த ஒரே மனத்தின் பகுதிதான் நம்முள்ளும் உளது; இதை அறிந்துவிட்டால் நீங்களும் பிறர் எண்ணுவதைச் சொல்லலாம்; அவர்கள் மனதிலும் நுழையலாம் ;
சுவாமி விவேகானந்தர் எழுதிய ராஜ யோக நூலில் மேல் விவரங்கள் உள்ளன; மிக முக்கியமான விஷயம்; அற்புத சக்திகள் வந்தவுடன் பெண்கள், பண விஷயத்தில் தப்புத் தண்டா செய்யும் எண்ணங்களும் வரும். அந்தக் குழிகளில் விழுந்தால் விமோசனம் இல்லை என்பது மட்டுமல்ல; சிறைச் சாலையும் உண்டு!
–சுபம் —
TAGS- சுவாமி விவேகானந்தர் , ராஜ யோக நூல், பாபா செய்த அற்புதங்கள் விவேகானந்தர் விளக்கம்; விஞ்ஞானிகள் அறியாத மனம்- PART 3, LAST PART
‘உங்கள் வீட்டில் ஐன்ஸ்டீனா’ என்று கண்களை அகல விரிக்கும் இளம் கர்ப்பிணியாகவோ அல்லது கல்யாணமாக இருக்கும் அழகிய யுவதியாகவோ நீங்கள் இருந்தாலும் சரி, தங்க விக்ரஹம் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்த இளம் தாயாக இருந்தாலும் சரி, நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்!
நவீன அறிவியல் தனது ஆராய்ச்சிகள் மூலம் தரும் ஒரு அபூர்வமான தகவல் :-
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையுமே ஒரு பிறவி மேதை தான்! ஆனால் அதை நாம் வளர்க்கும் விதம் தான் சோகமயமானது! “எல்லாக் குழந்தைகளுமே பிறவி மேதைகள் தான்! அவர்களுடைய முதல் ஆறு வருட வாழ்க்கைக்குள்ளாகவே அந்த மேதைத் தன்மையை நாம் நீக்குகிறோம்” என்கிறார் ஒரு உளவியல் மேதை!
கல்யாணமானவுடனேயே ஐன்ஸ்டீன் ஜீனியஸை எதிர்கொள்ள நீங்கள் தயாராக வேண்டியது தான் என்று நவீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆரோக்கியமான வாலிபனும் யுவதியும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மணம் புரிந்ததோடு நின்று விடாது ஆரோக்கியமான விஷயங்களை நினைப்பவர்களாக ஆரம்பத்திலிருந்தே இருக்க வேண்டும் என்பது அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்பு!
அழுமைமயமான சீரியல்களைப் பார்க்கும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் அழுகைமயமாகவே தான் இருக்கும்.
கர்ப்ப காலத்தில் வயிற்றில் உள்ள குழந்தையுடன் நல்ல விஷயங்களை அடிக்கடி பேசுங்கள். உன்னதமான இசையைக் கேட்க விடுங்கள். நல்ல தோத்திரங்கள், ஶ்ரீ ஸூக்தம், மேதா ஸூக்தம் போன்ற மேதைத் தன்மையைத் தூண்டும் உணர்வு மற்றும் அறிவு நலங்களைத் தருபவனவற்றைக் கேட்கப் பழக்கப்படுத்துங்கள்!
ஒரு அபூர்வ குழந்தையின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? அந்தக் குழந்தை மூன்று வயது வரை பேசவில்லை. பேச முயன்றபோது வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க மிகவும் சிரமப்பட்டது. அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கோபப்படும் அந்தக் குழந்தையின் கோபம் சற்று கடுமையானதாகக் கூட இருந்தது. பள்ளியிலோ பரிதாபமாக விழித்தது. பள்ளி ஆசிரியர்களும், ‘இது உருப்படாது’ என்று ‘தண்ணீர் தெளித்து’ விட்டு விட்டார்கள்.
ஆனால் சீட்டுக்கட்டுகளை வைத்து கட்டிடங்களை அமைக்கச் சொன்ன போது அந்தக் குழந்தைக்கு உற்சாகம் பிடிபடவில்லை. ஜிக்- ஸா புதிர்கள், புதிய கட்டிடங்கள் அமைப்பது இவற்றில் அந்தக் குழந்தைக்கு ஆர்வம் அதிகமானது. பார்ப்பது, பார்த்த விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பது, அதை அப்படியே மனதில் உருவகப்படுத்துவது என்று இருந்த குழந்தை சீட்டுக்கட்டில் பதினான்கு மாடிக் கட்டிடம் கட்டி மற்றவர்களை அதிசயிக்க வைத்தது. அந்தக் குழந்தை வேறு யாருமில்லை, ஐன்ஸ்டீன் தான்!
உலகின் சிந்தனைப் போக்கையே தனது ஒப்புமை -ரிலேடிவிட் தத்துவத்தால் மாற்றிய பிரபல மேதையின் இளமைப் பருவம் பற்றித்தான் முந்திய பாராவில் நீங்கள் படித்தது.
மேலை நாடுகளில் ஒன்று, இரண்டு, ஏ, பி,சி, இவற்றையெல்லாம் கார்டுகளில் அடித்து அவற்றை வகுப்புகளில் ஃப்ளாஷ் செய்கிறார்கள். இவற்றிக்கு ‘ஃப்ளாஷ் கார்டுகள்’ என்று பெயர்.
இப்படிப்பட்ட ‘ஃப்ளாஷ் கார்டுகள்’ எதுவும் ஐன்ஸ்டீன்கள் உருவாகத் தேவை இல்லை. குழந்தை தன்னைச் சுற்றிப் பார்த்து ஒவ்வொன்றையும் ஆவலுடன் அறியத் துடிக்கும் அந்தத் தருணம் தான் மேதை அரும்பும் தருணம்! அதை அடக்குவதன் மூலமாகவோ அல்லது அலட்சியப்படுத்துவதன் மூலமாகவோ முளையிலேயே மேதைத்தன்மையைக் கிள்ளி எறிந்து விடலாம். இதைத்தான் பெரும்பாலான தாய்மார்கள் செய்கின்றனர். (குழந்தை சற்று நேரம் இருக்கட்டும்; சீரியல் போனால் வருமா?)
மாறாக குழந்தை கற்க விரும்புவதை சுதந்திரமாக கற்க விடுவதோடு அதற்கு உற்ற துணையாக தாய் இருக்க வேண்டும். குழந்தையோடு தாயும் பாடம் படித்து விளக்குவதை குழந்தைகள் பெரிதும் விரும்புகின்றன. அறிவியல் பெரிதும் இதை ஆமோதிக்கிறது!
‘ரிச் சென்ஸரி எக்ஸ்பீரியன்ஸஸ்” எனப்படும் பார்ப்பது, கேட்பது, தொடுவது, முகர்வது, சுவைப்பது என்ற புலன் வழி அனுபவங்களை இளம் தாய் தான் தன் குழந்தைக்குத் தர முடியும்!
உத்வேகமூட்டும் சுற்றுப்புறங்களை – கடல், ஆறு, மலை, குட்டை, ஏரி இவற்றில் அடங்கியுள்ள விஞ்ஞான விஷயங்களை விவரித்தல், டைனோஸர், சிங்கம், புலி, யானை ஆகியவற்றோடு பறவைகளைப் பற்றி விளக்குதல், அழகிய மலரிலிருந்து காணக்கூடிய இயற்கைக் காட்சிகளைப் பார்த்து அனுபவிக்க விடுதல் இவை ஒரு ‘ஐன்ஸ்டீனின் தாய்’ செய்ய வேண்டியவை!
ஒரு குழந்தை விளையாடுவதன் மூலமாகவே உடல்ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் வளர்கிறது. ஆகவே பொம்மையிலிருந்து வெளி உலகம் வரை குழந்தைக்கு விளையாட்டு தேவை! “குழந்தை தனது முதல் மூன்று வருடங்கள் பொம்மைகளை சுருட்டி தேய்த்து, முகர்ந்து பார்த்து, வாயில் வைத்துப் பார்த்து கற்க முயல்கிறது” என்கிறார் மற்றொரு உளவியல் அறிஞர். முதல் மூன்று மாதங்களில் பார்வையின் முழுப் பரிமாணமும் குழந்தைகளுக்கு வந்து விடாது. ரிச்சர்ட் எம். ரெஸ்டோக் தனது ‘தி இன்ஃபண்ட் மைண்ட்’ என்ற நூலில், “ஹார்ட்வேரும் சாஃப்ட் வேரும் ஒருங்கே இணையாத வரை குழந்தைகள் பார்ப்பதில்லை” என்கிறார். ஆனால் முதல் மற்றும் இரண்டாம் மாதங்களில் அது பார்க்க ஆரம்பிக்கிறது. இந்த மாதங்களில் நல்ல இசையை ஒலிக்கச் செய்யுங்கள்” என்பது அவரது அறிவுரை!
“சூப்பர் ஸ்டார்ட்” என்று பார்ப்பதை எல்லாம், குழந்தைகளிடம் திணிக்க முயலாமல் “உங்கள் ஐன்ஸ்டீன்களிடம்” உள்ள திறமையைக் கண்டுபிடிக்க முயலுங்கள்!
“முறையாக ஊக்கி விட்டால் எல்லா மொழிகளையும், இசை, நடனம் ஆகிய எல்லாவற்றையும் குழந்தைகள் கற்று விடும் என்று இந்த வெறி பிடித்த பெற்றோர்கள் நினைக்கின்றனர். பேபிகளை ப்ரஷர் கொடுத்து மேதைகளாக்க முடியாது” என்கிறார் டாக்டர் டயமண்ட்.
‘ப்ரஷர் செய்யாதீர்கள், புஷ் செய்யாதீர்கள், ஆனால் பே அட்டென்ஷன், வாட்ச், ட்யூன் இன் – கவனியுங்கள், கருத்தூன்றிப் பாருங்கள், லயத்துடன் சேர்த்து விடுங்கள்” – இதுவே மேதைத் தன்மையை ஊக்கி வெளிக் கொணர்ந்து விடும்!
உங்கள் வீட்டு ஐன்ஸ்டீன்கள் உருவாக வேண்டுமென்று சொல்ல வேண்டாம்; அதற்கும் மேலான ஒருவரும் உருவாகக் கூடும்! கூடவே இருந்து பாருங்கள், பழகுங்கள், திறமைகளை ஊக்கி விடுங்கள்! உங்கள் குழந்தை யார் என்பது புரிந்து விடும்!
**
சினேகிதி மாத இதழில் 2006, ஜனவரி மாதம் வெளியான கட்டுரை.