நகுஷ மஹாராஜாவின் புத்திரராய் யயாதி என்ற ஒரு மன்னர் இருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு. விருஷபர்வன் என்ற அசுர ராஜனது பெண்ணான சர்மிஷ்டை என்ற பெயர் உடைய பெண் ஒருத்தி. இன்னொரு மனைவி சுக்கிராச்சாரியாரது பெண். தேவயானி என்ற பெயர் பூண்டவள்.
இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. சர்மிஷ்டை பூரு என்பவனையும் தேவயானி யது என்பவனையும் பெற்றாள்.
பூரு மன்னரது அன்பிற்குப் பாத்திரமானான். ஆனால் யதுவோ துக்கம் மேலிட தன் தாயிடம், “சுக்கிராச்சாரியாரது குலத்தில் பிறந்த நீ அவமானமாகிற கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறாய். நாம் இருவரும் தீயில் விழுந்து இறப்போம்” என்றான்.
உடனே தேவயானி தன் தந்தையை நினைத்தாள். சுக்ராச்சாரியார் தேவயானியிடம் வந்து அவள் உற்சாகமின்றி இருப்பதைப் பார்த்து, “காரணம் என்ன?” என்று வினவினார்.
“என்னை அலட்சியப்படுத்தி மன்னர் யயாதி மதிக்காமல் இருக்கிறார்” என்று கூறினாள்.
இதைக் கேட்ட சுக்ராச்சாரியார் மிகுந்த கோபம் அடைந்தார். உடனே நகுஷனின் புதல்வனான யயாதியை இப்படி சபித்தார்:
யஸ்மான்மாமவஜானிஷே நாஹுஷ த்வம் துராத்மவான் |
ஜரயா பரயா ஜீர்ண: ஷைதில்யமுபயாஸ்யஸி ||
நாஹுஷ – அடே, நகுஷ புத்திரா!
த்வம் – நீ
துராத்மவான் – கெட்ட புத்தியை உடையவனாகி
மாம் – என்னை
அவஜானிஷே – அலட்சியம் செய்கிறாய்
யஸ்மாத் – ஆகவே
பரயா – மிக்க
ஜரயா – ஜராவஸ்தை கொண்டு
ஜீர்ண: – முதுமையை அடைந்து
ஷைதில்யம் – துர்பலத்தை
உபயாஸ்யஸி – அடையக் கடவாய்.
– உத்தர காண்டம, 58-வது ஸர்க்கம், ஸ்லோக எண் 22
இப்படி சுக்ராச்சாரியார் யயாதியை சபித்து விட்டு தனது புதல்வியை சமாதானப்படுத்தி விட்டு தன் இருப்பிடம் மீண்டார்.
யயாதி இந்த சாபத்தினால் ஜராவஸ்தையை அடைந்து மிகுந்த வருத்தமுற்றார்.
Who is Your Wife? Who is Your Son? Exceedingly wonderful indeed is this empirical process. Of whom are you? From where have you come? O Brother! Think of that truth here.
The same question is asked again by Aadi Sankara in Viveka Chudamani (VC) as well
In the pilgrimage from birth to death, in the travel from life to death, at certain junction each met with the other, and thereafter travelled together, no doubt, serving each other–as all good- hearted travellers always do. The companionship parts when destination is reached.
In another verse of Bhaja Govindam Sankara discuss the same subject
O crazy one! Why worry about wife, wealth etc? Is there not for you the one who commands? In the three worlds, it is only the association with good people that can serve as the boat to cross the sea of birth
xxxx
Now let us look at VC and compare them with Tamil poems
81. Know that death quickly overtakes the stupid man who walks along the dreadful ways of sense-pleasure; whereas one who walks in accordance with the instructions of a well-wishing and worthy Guru, as also with his own reasoning, achieves his end – know this to be true.
Swami Vivekananda says
Death is better than a vegetating ignorant life; it is better to die on the battle field than to live a life of defeat
82. If indeed thou hast a craving for Liberation, shun sense-objects from a good distance as thou wouldst do poison, and always cultivate carefully the nectar-like virtues of contentment, compassion, forgiveness, straight-forwardness, calmness and self-control.
Ramakrishna paramahamsa gives some examples of god intoxicated aspirants:
1.What is the state which a Siddha (perfect man ) attains? As a potato or brinjal becomes soft and pulpy when it is well cooked, so a man becomes a Siddha , is seen to be all humility and tenderness
2.What are the indications of God’s advent into the human heart? As the glow of dawn heralds the rising sun so unselfishness, purity, righteousness announce the advent of the Lord.
83. Whoever leaves aside what should always be attempted, viz. emancipation from the bondage of Ignorance without beginning, and passionately seeks to nourish this body, which is an object for others to enjoy, commits suicide thereby.
Notes:
[For others to enjoy: to be eaten perchance by dogs -and jackals after death.]
moha eva mahāmṛtyurmumukṣorvapurādiṣu | moho vinirjito yena sa muktipadamarhati || 85 ||
85. So for a seeker after Liberation the infatuation over things like the body is a dire death. He who has thoroughly conquered this deserves the state of Freedom.
Notes:
[Infatuation.—That I am the body or that the body etc. are mine. ]
86. Conquer the dire death of infatuation over thy body, wife, children etc., — conquering which the sages reaches that Supreme State of Vishnu.
Notes:
[Supreme State of Vishnu.—From Rig-Veda, I. xxii. 20-21. ]
The above quoted Bhaja Govindam verses (8 and 13) echo the same message.
Actually Lord Krishna inspired Sankara to say this
असक्तिरनभिष्वङ्ग: पुत्रदारगृहादिषु |
नित्यं च समचित्तत्वमिष्टानिष्टोपपत्तिषु || 13-10||
asaktir anabhiṣhvaṅgaḥ putra-dāra-gṛihādiṣhu
nityaṁ cha sama-chittatvam iṣhṭāniṣhṭopapattiṣhu
Absence of attachment to son, wife, home and wealth etc, absence of possessiveness, and forgetting Ishtvaadita i.e. the attainment and non-attainment of the venerable god and the other non-venerable god, constant equanimity of mind.
xxxx
Tamil Saint Appar alias Tiru Navukkarasar (600 CE) says,
தந்தை யார்? தாய் யார்? உடன்பிறந்தார், தாரம், ஆர்? புத்திரர் ஆர் அதாம்தாம் ஆரே? வந்த ஆறு எங்க னே? போம் ஆறு ஏதோ? மாயம் ஆம்; இதற்கு ஏதும் மகிழ் வேண்டா! சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்; திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி எந்தையார் திரு நாமம் “நமச்சிவாய” என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே. ——918, ஆறாம் திருமுறை
Probably Appar has read Viveka Chudamani. He repeated Jaya Sankara in one of his Tamil verses.
Meaning
Who is father ? Who indeed is mother? Who are our
Co – siblings ? Who is wife ? Who are sons ? Who indeed
Are we ourselves ? How did we come into being ?
How do we depart this is sheer gramarye (magic )
Feel not happy; Oh ye think on these ; listen to what
I say He sports in His crown the lovely crescent
And the bright serpent; He is our Father; His holy name is
Namasivaya. They that chant this name
When they rise up will abide in the Empyrean—APPAR
XXXX
Tamil Saint Pattinathar says
கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன் வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால் கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால் எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே (2, திருவேகம்பமாலை)
Like the wood cutter felling a tree, if time should
Fell the body, the women that had hugged it in the past
And the children also will bewail vociferously;
They will come as far as the crematory;
Will they take a step beyond it
Oh Lord Kachi Ekampa ?
XXXXXXX
மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ? தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம் தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே (12,பொது)
Wife, children, happiness of domestic life
Stop at the doors, the kinsfolk at the crematory.
What may be the help on your way?
Should your tapas in the past, though it be
The size of a mere millet or sesame , possess you
You will gain the celestial world;
I affirm this is the truth – Saint Pattinathar
xxxxxx
FAMOUS FILM SONG BY KANNADASAN IN TAMIL
திரைப்படம்: பாதகாணிக்கை இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன? கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன? வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா?
Most of his philosophical songs are based on famous quotations in Hindu Scriptures.
–subham—
Tags- Who is wife, Who is son? Adi Sankara, Appar, Pattinathar, Viveka Chudamani Part 22
தமிழ் இலக்கியத்தில் வர்ணங்கள் பற்றி நிறைய குறிப்புகள் உண்டு; தஞ்சையில் நடந்த உலகத்த தமிழ் மகாநாட்டில் சங்க இலக்கியத்தில் வர்ணங்கள் , சங்க இலக்கியத்தில் எண்கள் என்று இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தேன்.
சம்ஸ்க்ருதத்தில் நிறைய கலர் குறிப்புகள் உண்டு. விஷ்ணுவை வர்ணிப்பதானால் மஞ்சள் துண்டு நீலவர்ணன் என்றும் பலராமனை வர்ணிப்பதானால் நீலத் துண்டு வெள்ளைக்காரன் என்றும் வருணிப்பார்கள். சிவனை வருணிக்கும்போது நீல கண்டன் என்பார்கள். இதை எல்லாம் விட வியப்பான விஷயம் இந்துக்கள் ஒவ்வொரு திசைக்கும் வர்ணம் கற்பித்தார்கள்; அதை பெளத்தர்கள் திருடினார்கள்; அது எப்படியோ தென் அமெரிக்காவிலுள்ள மாயன் / மாயா நாகரீகம் வரை சென்று விட்டது. இவற்றைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் முன்னர் தந்தேன்
சூரியனுக்கு ஏழு குதிரைகள் என்று இந்துக்கள் சொன்னது வானவில்லில் உள்ள 7 வர்ணங்கள் என்பதெல்லாம், இப்பொழுது பள் ளிச் சிறுவர்களுக்கு முப்பட்டைக் கண்ணாடி வழியே சூரிய ஓளியை நுழையவிட்டு , “பாருங்கள் ஒளிக்கற்றையில் 7 வர்ணங்கள்”- என்று சொல்கிறார்கள். இதை இந்து மத வேதங்கள் என்றோ சொல்லிவிட்டன.
இப்பொழுது திரு மூலர் எழுதிய திருமந்திரத்திலுள்ள கலர்க் குறிப்புகளைக் காண்போம் :
பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. 7
2193 Lord is the Cow-Herd (Pasupati); Jiva the Cow (Pasu)
Many the color of cows,
But one the color of milk;
And of peerless hue
Is Lord, the cowherd;
When the cowherd
Who tends the cows
His guiding staff shows,
The cows will not their Master leave.
xxxxx
பாரதியுடன் ஒப்பிடலாம்
வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள்
வீட்டில் வளருதுகண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை;-அவை
பேருக் கொருநிற மாகும்.
சாம்பல் நிறமொரு குட்டி;-கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி,-வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.
எந்த நிறமிருந் தாலும்-அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும்-இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!
-பாரதி
xxxxx
ராமகிருஷ்ண பரமஹம்சர்
மனிதர்கள் தலையணையைப் போன்றவர்கள் ஒன்று சிவப்பாயும் , மற் றொன்று நீலமாயும் வேறொன்று கரு ப்பாயும் இருந்த போதிலும் அவைகளுக்குள் இருக்கும் பஞ்சு ஒன்றுதான் . அது போலத்தான் மனிதனும்; ஒருவன் பார்வைக்கு அழகாயிருக்கிறான் ; இன்னொருவன் கருப்பாயிருக்கிறான் .இன்னொருவன் பரிசுத்தனாக இருக்கிறான்; வேறொருவன் கெட்டவனாக இருக்கிறான் ; என்றாலும் ஈஸ்வரன் அவர்கள் எல்லோருக்குள்ளும் வாசம் செய்கிறான்
XXXX
பக்ஷணங்களின்/ கொழுக்கட்டை மேல் கூடு அரிசிமாவினால் செய்யப்பட்டிருக்கும் . அவைகளின் உள்ளே வைக்கப்படும் பூரணம்/ பண்டங்கள் வேறு வேறு விதமானவையாக இருக்கும். உள்ளேயிருக்கும் பொருட்களுக்கு ஏற்ப நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கும். அது போல மானிட சரீரங்கள் எல்லாம் ஒரே பொருளால் ஆக்கப்பட்டஇருப்பினும் ஹிருதய சுத்திக்கு ஏற்றபடி மனிதர்கள் வித்தியாசப்படுவர்— ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
xxxx
கடவுளும் கலர்க் கண்ணாடியும்
குழந்தைகளுக்கு திருவிழாக் காலங்களில் விற்கும் கலர் கண்ணாடிகளை வாங்கித் தருகிறோம்.அவை வழியாகப் பொருட்களை பார்க்கும் குழந்தைகள் ஆனந்தமடைகின்றன. இது போல ஒவ்வொரு இறைவனையும் ஒரு வண்ணக் கண்ணாடி மூலம் பார்த்து அப்படியே வருணிக்கின்றனர். அவனோ இவைக க்கு எல்லாம் அப்பாற்பட்டவன்
1520. செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்
எய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை
மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே. 7
1520: Lord is Soul’s Redeemer
He is the Red One (Destroyer)
The Dark One (Preserver)
The White One (Creator)
The Green One (Redeemer)
They who know Him thus, free of doubt
Of a certain shall seek Him;
Remember this;
His are the sinewy arms
That skinned the dark massive elephant
And donned it for a vesture;
Do therefore, seek Him and adore Him.
Xxxx
ராமகிருஷ்ண பரமஹம்சரும் பச்சோந்தி பற்றிய ஒரு கதை சொல்கிறார்
பரமஹம்சர் சொன்ன ‘பச்சோந்தி’க் கதை
விவேகாநந்தர் சொன்ன தவளைக் கதையை ‘பாம்பின் வாய் தேரை போல’ – என்ற கட்டுரையில் கொடுத்துவிட்டேன். இதோ ராமகிருஷ்ண பரமஹம்சர் இது தொடர்பாக கூறும் பச்சோந்தி கதையைக் கேளுங்கள்:
“இரண்டு பேரிடையே பச்சோந்தியின் நிறம் பற்றிக் காரசார வாக்குவாதம் நடந்தது. ஒருவன் பனைமரத்தின் மீதிருந்த பச்சோந்தியின் நிறம் சிவப்பு என்றான். மற்றவனோ, இல்லை பச்சோந்தியின் நிறம் நீலம் என்றான். இருவரும் மரத்தடியிலேயே வசிக்கும் ஒருவனிடம் சென்று சந்தேகத்தைத் தெளிய கேள்வி கேட்டனர். முதலாமவன் ‘’பச்சோந்தி சிவப்பு நிறம் உடைய பிராணிதானே’’ என்று கேட்டவுடன் ‘’ஆமாம், சிவப்புதான்’’ என்றான். இரண்டாமவன் அதை மறுத்து ‘’இல்லை நீல நிறம்தானே’’ என்றவுடன் ‘’ஆமாம், நீல நிறம்தான்’’ என்றான். ஓந்தியானது அடிக்கடி நிறம் மாறும் என்பது அவனுக்குத் தெரியும். சச்சிதானந்த ஸ்வரூபியான இறைவனும் அநேகம் உருவமுடையவன். ஒரே உருவத்தை மட்டும் கண்டவர்கள் இறைவன் அந்த உருவம் உடையவன் என்பர். இறைவன் உடைய பல்வேறு உருவங்களையும் கண்டவனுக்கே அவை எல்லாம் ஒரே ஈஸ்வரனுடைய பல வடிவங்கள் என்பது தெரியும். கடவுள் உருவம் உடையவன், உருவமே இல்லாதவன். அவனுடைய அத்தனை உருவங்களையும் பார்க்க இயலாது”.
யானையும் ஆறு அந்தகர்களும் என்ற கதை எல்லோருக்கும் தெரிந்த கதை. இந்தக் கதையை புத்த மதம், சமண மதம், சூஃபி முஸ்லீம்கள், ஆங்கிலக் கவிஞன் ஆகியோர் பயன்படுத்தினர். ஆனால் இது திருமூலர் பாடிய திருமந்திரத்தில் இருந்து பல இடங்களுக்குப் பரவியது பலருக்கும் தெரியாது.
திருமூலர் பாடுகிறார்:
முதலொன்றாமான் ஆனை முதுகுடன் வாலும் இதமுறு கொம்பு செவி துதிக்கை கான் மதியுடன் அந்தகர் வகை வகை பார்த்தே அதுகூறல் ஒக்கும் ஆறு சமயமே (திருமந்திரம்– 1507)
பொருள்: உறுப்பு, உறுப்பைத் தாங்கி இருக்கும் யானை முதல் ஒன்றாகும். அந்த யானையின் மலை போன்ற முதுகையும் துடைப்பம் போன்ற வாலையும், தண்டு போலும் உறுதியான தந்தத்தையும், முறம் போன்ற காதையும், உலக்கை போன்ற துதிக்கையையும், உரல் போன்ற காலினையும் கண்ணில்லாத அந்தகர் பலர் ஒவ்வொரு உறுப்பினையும் மட்டும் தடவிப் பார்த்துவிட்டு யானை என்பது மலையே, துடைப்பமே, தண்டே, முறமே, உலக்கையே, உரலே என்று கூறி அவர்களுக்குள் வாக்குவாதம் செய்தனர். இது போலத்தான் ஆறு சமயத்தவர்களும் தத்தம் சமயமே பெரிதென்று கூறி வாதிடுதல்.
ஒவ்வொரு உறுப்பை மட்டும் தடவிப் பார்க்கும் ஒவ்வொரு அந்தகனும்
மலை போன்ற முதுகு
முறம் போன்ற காது
துடைப்பம் போன்ற வால்
உரல் போன்ற கால்
உலக்கை போன்ற துதிக்கை
தண்டு போன்ற கொம்பு/தந்தம்
என்றனர். இவைகளை கையால் தடவி உணர்ந்த கண் பார்வையற்றோர் அந்தந்த உறுப்பு போன்றதே முழு யானையும் என்று நினைத்தனர்.
அரைகுறை உண்மை முழு சித்திரத்தைக் காட்டாது. வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து முடிவுக்கு வரக்கூடாது. உண்மை என்பது மிகப் பெரியது. நாம் காண்பதெல்லாம் ஒரு சிறு பகுதியே. இதையே கடவுளுக்கும், சமயங்களுக்கும் பலர் உதாரணமாக, உவமையாகப் பயன்படுத்தினர்.
இதையே ஆங்கிலப் புலவன் ஜான் காட்ப்ரி சாக்ஸும் பாடி வைத்தான்:-
English poet John Godfrey Saxe (1816-1887) composed the following poem about this story:
It was six men of Indostan, to learning much inclined, who went to see the elephant (Though all of them were blind), that each by observation, might satisfy his mind.
The first approached the elephant, and, happening to fall, against his broad and sturdy side, at once began to bawl: ‘God bless me! but the elephant, is nothing but a wall!’
The second feeling of the tusk, cried: ‘Ho! what have we here, so very round and smooth and sharp? To me tis mighty clear, this wonder of an elephant, is very like a spear!’
The third approached the animal, and, happening to take, the squirming trunk within his hands, ‘I see,’ quoth he, the elephant is very like a snake!’
The fourth reached out his eager hand, and felt about the knee: ‘What most this wondrous beast is like, is mighty plain,’ quoth he; ‘Tis clear enough the elephant is very like a tree.’
The fifth, who chanced to touch the ear, Said; ‘E’en the blindest man can tell what this resembles most; Deny the fact who can, This marvel of an elephant, is very like a fan!’
The sixth no sooner had begun, about the beast to grope, than, seizing on the swinging tail, that fell within his scope, ‘I see,’ quothe he, ‘the elephant is very like a rope!’
And so these men of Indostan, disputed loud and long, each in his own opinion, exceeding stiff and strong, Though each was partly in the right, and all were in the wrong!
So, oft in theologic wars, the disputants, I ween, tread on in utter ignorance, of what each other mean, and prate about the elephant, not one of them has seen!
xxxxx
ஜேம்ஸ் மெர்ரிக் (1720-1769) என்பவர் ஒரு சிறந்த ஆங்கிலக் கவிஞர்; ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கற்று ட்ரினிட்டி கல்லூரியில் பணியாற்றினார். கிறிஸ்தவ மத போதகராக மாறியும் கடும் தலைவலி காரணமாக அந்தப் பணியை ஆற்ற முடியவில்லை. ஆனால் இவர் எழுதிய பச்சோந்தி என்னும் கவிதை மிகவும் கருத்தாழம் மிக்கது. அந்தக் கவிதையை அவர் கிரேக்க மொழியில் இருந்து மொழி பெயர்த்தார். இவரது கவிதைகள் ஆக்ஸ்போர்டின் சமயக் கவிதைகள் தொகுப்பில் வெளியாகியுள்ளன.
ஆங்கிலக் கவிதையை மதுரை பண்டிதர் கோபால கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்து 1915ம் ஆண்டில் புஸ்தகமாக வெளியிட்டார்.
தமிழில் ஜேம்ஸ் மெர்ரிக் கவிதை
தேச சஞ்சாரம் செய்பவர் இருவர்
சரசமாகச் சல்லாபிக்கையில்
ஓரொரு சமயம் ஓரொரு செய்தியைப்
பற்றிப் பேசினர் ; மற்றவற்றிடைப் பச்
சோந்தியின் இயல்பையும் உருவையும் குறித்து
சற்று நேரம் சம்பாஷித்தனர் —
இதனினும் விநோதமானச் செந்தெ துவும் என்றென் றுமே
சூரியன் ஒளிபடும் பாரிடந் தன்னிலே
இருந்ததில்லை என்பது திண்ணம்
பல்லியின் நீண்ட மெல்லிய உடலும்
மச்சத் தலையும் கட்செவி நாக்கும்
இதற்கிருக்கின்றன இதனதுபாதமோ
முக்கவர் முன்நகம் ஆகி கொண்டது
எத்துனை நீள வால் இதன் பின்னம் புறம்
அன்றியும் இதன் நிறம் ஆ ஆ இதைப் போல்
நேர்த்தியான நீல நிறத்தினை
யாரே பார்த்துளர் என்றனன் ஒருவன்
அத்துடன் நிறுத்தும் அதன் நிறம் பச்சையே
சின்னாழி க்கைக்குமுன் திறந்த வாயுடன் அது
கதிரவன் ஒளியில் காய்ந்து கொண்டிருக்கையில்
எனதில் விழிகளால் யான் அதைப்பார்த்தேன்
அநாசமாய் அது தன் உடம்பைக்
கிடத்தி நீட்டிப் படுத்திருக்குங்கால்
அதனை நோக்கினேன் அஃ தப்பொழுது
காற்றை உண்ணக் கண்டேன் என்று
மற்றவன் விரைவில் மறுமொழி அளித்தனன்
அளித்தலும் முன்னவன் ஐயா யானும்
நும்மைப்போலவே நோக்கியுள்ளேனானால்
அதன் நிறம் நீலமே ஆம் என உறுதியாக்
கூறத்துணிவேன் குளிர்ச்சியாயுள்ள
நிழலிலே அது நீட்டிக்கிடக்கையில்
சாவகாசமா அதை பார்த்தேன்
என்றனன் ; என்றலும் பின்னவன் ஐயா
பச்சையே அன்னது பச்சையே அன்னது
நிச்சயமாக நிகழ்த்துவேன் என்றனன்
முன்னவன் கோபமூ ண்டவனாகி
ஐயா, பச்சையா ? அழகிது ! யான் இரு
கண்ணுமிலான் எண்ணிணீர் கொல்லோ
என்னலும் அவனைப் பின்னவன் நோக்கி
இந்தப்படியே இந்தச் சமயமும்
உம்முடைய விழிகள் உதவிடுமாயின்
அவை பயன் அற்றவாகவே இருக்க
ஆதலின் கண்ணில்லாமையால்
அதிக நஷ்டம் ஆய்விடா” தென்றனன் .
இவ்வாறு இருவரும் இயைந்து வராமையால்
வாக்குவாதம் வரவர முற்றி
அடிபிடி சண்டையாந் தறுவாயில்
அதிர்ஷ்டவசமா ஆங்கே மூன்றாம்
மனிதன் ஒருவன் வந்தனன், அவனிடம்
வாத விஷயம் ஈதெனக்கூறி
அதன் நிறம் பச்சை அல்லது நீலம் என்
றவன் அறிந்திருப்பாயின் தங்கட்
கியம்புமா றவனை இரந்தனர் இருவரும்
அப்பொழுது மனிதன் “ஐயன்மீரே !
சச்சரவொழிமின் , இச்செந்தூவினுடைய
நிறம் பச்சையுமிலை , நீலமுமில்லை
ஏனெனில் நேற்றிரா இப்பிராணியைப் பிடித்த
தோர் விளக்கொளி முன் உற்றுப்பார்த்தேன்
நன்றாய் அதனை நான் கவனித்தேன்
அது கன்னங்கரேல் ஆகவேஇருந்தது
வெறித்துப் பார்ப்பதன் விவரம் யாதோ?
ஐயன்மீர் ! நான் ஆராய்வதை நம்ப
இசையீராயின் , இன்னும் அச்செந்து
என் கைவசம் இருப்பதால் அதனை
எடுத்துக்காட்ட என்னால் ஆம் ” எனச்
சாற்றினன். சாற்றலும் “தயை செய்து ஐயா!
அவ்வாறே செய்யும் . அதன் நிறம் நீலமே
ஆம் என்பதற்குஎன் ஆருயிர் பந்தயம்
என்ன ஒருவன் இயம்பினன்..
iஇதை நீர் பார்க்குங்கால் அது பச்சை நிறத்தது
தான் நீரே சாற்றுவீர்; சத்தியம் “
என மொழிந்திட்டான் இரண்டாம் பிரயாணி.
அப்பொழுது மனிதன் அவர்களை நோக்கி
ஆனால் சரி நும் ஐயம் தீர
வெளியில் எடுத்து விடுகிறேன் அதனை
உங்கள் கண்முன் உய்த்திடும் போதது
கருமையாயிருக்கக் காணீரேல் அதைத்
தின்றே விடுகிறேன் என்றே மொழிந்தனன்
மொழிந்ததும் , அவர்கண் முன்னே அதனை
எடுத்து விட்டனன். என்ன ஆச்சரியம்!
வெண்ணிறத்துடன் அது வெளியில் வந்தது.
இருவரும் திடுக்கிட்டேங்கினர் . அப்போது
மனிதனும் மிக அவமான முற்றனனே.
((உடனே அப்பச்சோந்தி முதல் முதல்
பேசுந்திறனைப் பெற்றதாகி))
அடியில் வருமாறு அறையலு ற்றதுவே
நேச மக்காள் ! நீங்கள் அனைவரும்
பொய்யும் புகன்றிலீர் ; மெய்யும் புகன்றிலீர்;
இனிமேல் நீவீர் எப்போதாயினும்
பார்த்திடும் ஒன்றைப் பற்றிப் பேசுழி
மற்றையோரும் உற்று நும் போலவே
காண்கிறார் என்பதைக் கருத்தினில் இருத்தும்
அன்றியும் யாவராயினும் உங்கள்
கட்புலனிலும் தங்கள் கட்புலன்களையே
மாண்பின தாக்கொளக் காண் பீராயின்
அதன் பொருட் ததிசயம் அடையாதீர் ” என.
********
The Chameleon
by James Merrick
Two travelers of such a cast,
As o’er Arabia’s wilds they passed,
And on their way in friendly chat,
Now talked of this, and then of that,
Discoursed awhile, ‘mongst other matter,
Of the chameleon’s form and nature.
” A stranger animal, ” cries one,
” Sure never lived beneath the sun.
A lizard’s body, lean and long,
A fish’s head, a serpent’s tongue,
Its foot with triple claw disjoined;
And what a length of tail behind!
How slow its pace; and then its hue —
Who ever saw so fine a blue? “
” Hold, there, ” the other quick replies,
” ‘Tis green , — I saw it with these eyes,
As late with open mouth it lay,
And warmed it in the sunny ray:
Stretched at its ease, the beast I viewed
And saw it eat the air for food. “
” I’ve seen it, sir, as well as you,
And must again affirm it blue;
At leisure I the beast surveyed,
Extended in the cooling shade. “
” ‘Tis green, ’tis green, sir, I assure ye! “
” Green! ” cries the other in a fury —
” Why, sir! — d’ye think I’ve lost my eyes? “
” ‘Twere no great loss, ” the friend replies,
” For, if they always serve you thus,
You’ll find them of but little use. “
So high at last the contest rose,
From words they almost came to blows:
When luckily came by a third —
To him the question they referred,
And begged he’d tell ‘mdash, if he knew,
Whether the thing was green or blue.
” Sirs, ” cries the umpire, ” cease your pother!
The creature’s neither one or t’other.
I caught the animal last night,
And viewed it o’er by candlelight:
I marked it well — ‘t was black as jet —
You stare — but, sirs, I’ve got it yet,
And can produce it. ” ” Pray, sir, do
I’ll lay my life the thing is blue. “
” And I’ll be sworn, that when you’ve seen
The reptile, you’ll pronounce him green. “
” Well, then, at once to ease the doubt, “
Replies the man, ” I’ll turn him out:
And when before your eyes I’ve set him,
If you don’t find him black, I’ll eat him. “
He said: then full before their sight
Produced the beast, and lo! — ’twas white.
Both stared, the man looked wondrous wise —
” My children, ” the chameleon cries,
(Then first the creature found a tongue),
” You all are right, and all are wrong:
When next you talk of what you view,
Think others see as well as you:
Nor wonder, if you find that none
Prefers your eyesight to his own. “
Xxxx
TO BE CONTINUED………………………….
TAGS-James Merrick, John Godfrey Saxe, பாரதி, திருமூலர், பரமஹம்சர், திருமந்திர ஆராய்ச்சி, கட்டுரை எண்- 40, பசுக்கள், நிறம், பூனைகள் வர்ணம், பச்சோந்தி, வாக்குவாதம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (52)
ராமாயணத்தில் சாபங்கள் (52) மித்திர தேவன் ஊர்வசிக்குக் கொடுத்த சாபம்!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் ஐம்பத்தி ஆறாவது ஸர்க்கமாக அமைவது, “ஊர்வசி சாபம்’ என்ற ஸர்க்கம்.
ஶ்ரீ ராமர், லக்ஷ்மணனுக்கு நிமியின் சாபம் பற்றி விளக்கியதைத் தொடர்ந்து ஊர்வசி பெற்ற சாபத்தைப் பற்றியும் கூறலானார்.
மித்திரன் என்னும் ஒரு தேவன் வருணனது தோழன் ஆவான். அவன் க்ஷீர சமுத்திரத்தில் இருந்து கொண்டு வருணனது அதிகாரத்தைச் செலுத்தி வந்தான்.
அதே சமயத்தில் அப்ஸர ஸ்த்ரீகளில் முதன்மையானவளானா ஊர்வசி தன் தோழிகளுடன் வருணாலயத்தில் உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்த வருணனுக்கு ஆசை உண்டாயிற்று. அவளைத் தன்னுடம் சம்போகத்திற்கு வருணன் அழைத்தான்.
ஆனால் ஊர்வசி, “நான் மித்திரனால் வரிக்கப்பட்டு ஏற்றுக் கொண்டவளாகி விட்டேன்” என்றாள்.
வருணன் உடனே, “தெய்வ சிருஷ்டியாகிய இந்த வீர்யத்தை இதோ இந்த கும்பத்தில் வைக்கிறேன். நீ சம்மதிக்கவில்லை. ஆகவே இப்படி ஸ்கலிதமாக்கி விட்டு எனது ஆசையைத் தீர்த்துக் கொண்டவனாக ஆகிறேன்” என்றான்.
ஊர்வசி அதற்குச் சம்மதித்தாள். வருணன் கும்பத்தில் தன் வீர்யத்தை வைத்தான்.
பின்னர் ஊர்வசி மித்திரனிடம் சென்று சேர்ந்தாள்.
மித்திரன் நடந்ததைத் தெரிது கொண்டு ஊர்வசியைப் பார்த்துக் இப்படிக் கூறினார்:
Sankara is down to earth. He used eight animals to make his point. A layman reading it would easily remember his points. He used five animals, insects and fish to say how five senses trap a man. And then he used shark to say that people with less Vairagya (dispassion) will be devoured by Sharks in the Samsaara Saaagara (Ocean of family life).
The crocodile image is very interesting. He himself became a saint cum philosopher only because of a crocodile. As a boy he accompanied his mother to the river to take morning bath in his home town Kaladi (kaaladi) in Kerala. When a crocodile caught his leg he and his mother cried then he told his mother “allow me to become a Sanyaasi (ascetic); the the crocodile will leave, because this birth is over for me. If I become a Sanyasi, it means second birth. A mother would wish her son to live wherever he is. So she said Yes. Knowing crocodile well, in VC he gives us an interesting analogy. It is like holding a crocodile to cross the river. Crocodiles are like ice bergs. It hides its body and only the back will be visible in the river water. Anyone would mistake it for a floating log.
Again he used cobra poison which are like five senses to warn us about the evil effects uncontrolled senses. Using cobras or snakes is very common among saints. Sri Ramakrishna Paramahamsa uses snakes again and again.
Like Tamil Saint Tirumular who lived 1200 years before our time, Sankara describes the body anatomy. Earlier I pointed out Sri Aadi Sankara was from Kerala, land of Aayur Vedaa and thick forests and sea with full of shrks and rivers with full of crocodiles. More over hundreds of Crocodile episodes are from Mahabharata to Tamil Saint Sundarar who did the miracle of bringing back a boy alive who was devoured by a crocodile years ago.
Here are interesting animal analogies.
Sloka 71
यद्बोद्धव्यं तवेदानीमात्मानात्मविवेचनम् । तदुच्यते मया सम्यक्श्रुत्वात्मन्यवधारय ॥ ७१ ॥
71. Now I am going to tell thee fully about what you ought to know – the discrimination between the Self and the non-Self. Listen to it and decide about it in your mind.
72. Composed of the seven ingredients, viz. marrow, bones, fat, flesh, blood, skin and cuticle, and consisting of the following limbs and their parts – legs, thighs, the chest, arms, the back and the head:
87. This gross body is to be deprecated, for it consists of the skin, flesh, blood, arteries and veins, fat, marrow and bones, and is full of other offensive things.
My Comments
If we look at medical books that are hundreds of years old, their approach was similar to Sankara’s; every year the books are updated with newer and newer knowledge. What we have to appreciate is their study of body an medicines .
146: Skeleton Two pillars support this roof and one single beam, Thirty and two the rafters extend side ways, But as the roof above decays and breaks, Back to its mansion the breath of life fails its way to trace.
Death Comes Sudden/ Heart Attack The rich repast was laid and he dined and joyed, With damsels sweet in amorous dalliance toyed; “A little little pain–on the left” he moaned (Angina Described.) And laid himself to rest to be gathered to dust.
73. This body, reputed to be the abode of the delusion of ‘I and mine’, is designated by sages as the gross body. The sky, air, fire, water and earth are subtle elements. They –
Notes:
[The sky, air etc.—These are the materials out of which the gross body has been formed. They have got two states, one subtle and the other gross.]
74. Being united with parts of one another and becoming gross, (they) form the gross body. And their subtle essences form sense-objects – the group of five such as sound, which conduce to the happiness of the experiencer, the individual soul.
Notes:
[Being united &c.—The process is as follows: Each of the five elements is divided into two parts, one of the two halves is further divided into four parts. Then each gross element is formed by the union of one-half of itself with one-eighth of each of the other four.
Subtle essences—Tanmatrás.
Form sense-objects—by being received by the sense-organs.
Sound and the rest—sound, touch, smell, taste and sight.
Happiness &c.—Happiness includes its opposite,—misery also.]
75. Those fools who are tied to these sense-objects by the stout cord of attachment, so very difficult to snap, come and depart, up and down, carried again by the powerful emissary of their past action.
Notes:
[Come and depart &c.—Become sabject to birth and death and assume various bodies from those of angels to those of brutes, according te the merits of their work.
76. The deer, the elephant, the moth, the fish and the honey bee—these five are annihilated because of their slavery to one or the other of the snses sych as sound etc., through their own attachment. What then is the condition of a man who is attached to all these five?
Deer – hunters make sounds to attract and hunt deer- sound is the enemy/ear
Elephants – female elephants are used to catch other big male elephants- sense of touch/skin; hunters kill them just for their valuable tusks
Artha sastra of Kautilya and Tirukkural of Tiru Valluvar spoke about the weakness of elephants
77. Sense-objects are even more virulent in their evil effects than the poison of the cobra. Poison kills one who takes it, but those others kill one who even looks at them through the eyes.
Notes:
[Looks at them…… eyes.—The mention of the eyes here is only typical, and implies the other sense-organs also; contact with the external world by any organ, is intended. ]
viṣayāśāmahāpāśādyo vimuktaḥ sudustyajāt | sa eva kalpate muktyai nānyaḥ ṣaṭśāstravedyapi || 78 ||
78. He who is free from the terrible fetters of the hankering for the sense-objects, so very difficult to get rid of, is alone fit for Liberation, and none else – even though he be versed in all the six Śastras.
Notes:
[Six Shastras.—The six schools of Indian philosophy are meant. Mere book-learning without the heart’s yearning for emancipation will not produce any effect.]
Sri Ramakrishna Paramahamsa says
Fish
Seeing the gleaming water passes through the valve of the bamboo trap placed in rice fields, small fish enter with great glee. But having once entered, they cannot come out. Similarly foolish men enter the meshes of the world, lured by its false glitter; but it is much easier to enter than to escape; and they are caught like little fish.
About Books
The Granthas/books are sometimes Granthis/knots. They are good only when they lead to the higher knowledge. Para-vidya i.e. the higher knowledge, is that by which we know God. All else, scriptures, philosophy , logic, grammar etc, only burden and puzzle the mind.
79. Those seekers after liberation who have got only an apparent dispassion (Vairāgya) and are trying to cross the ocean of Samsāra (relative existence), the shark of hankering catches by the throat and violently snatching away drowns them half-way.
80. He who has killed the shark known as sense-object with the sword of mature dispassion, crosses the ocean of Samsara, free from all obstacles.
[Dispassion—Vairagya. ]
XXXXX
CROCODILE
शरीरपोषणार्थी सन् य आत्मानं दिदृक्षति । ग्राहं दारुधिया धृत्वा नदि तर्तुं स गच्छति ॥ ८४ ॥
śarīrapoṣaṇārthī san ya ātmānaṃ didṛkṣati | grāhaṃ dārudhiyā dhṛtvā nadi tartuṃ sa gacchati || 84 ||
84. Whoever seeks to realise the Self by devoting himself to the nourishment of the body, proceeds to cross a river by catching hold of a crocodile, mistaking it for a log.
—subham—
Tags- human anatomy, 8 animals, Saknkara, Viveka Chudamani,
போகத்தை விரும்புவோருக்கும் மோக்ஷத்தை விரும்புவோருக்கும் யாவருக்கும் அவரவர் அதிகாரத்துக்குரிய நன்மைகளை செய்பவர் என்பது இன்னும் ஒரு உரையாசிரியர் கருத்து.
என் கருத்து
பொதுவான அர்த்தம் — சிவன் என்றால் மங்களத்தை அருள்பவர். சிவனுடைய பல பெயர்கள் புரந்தரன், பரமேஸ்வரன் முதலியன வி.ச.வில் இருப்பது அதன் பழமையைக் காட்டுகிறது .
மேலும் சிவ என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மன்னர்களின் பெயர்களில் இருப்பதை இலங்கை, சாதகர்ணி, பல்லவ மன்னர்கள் பட்டியல்கள் காட்டுகின்றன. .
xxxx
ஸ்ரீர் விஜய — இது பல சுருதியில் வரும் சொல்
.வி.ச.வைப் பாராயணம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று ஒவ்வொருவராகச் சொல்லும் போ து சஞ்சயன் சொல்கிறார் :
எங்கு யோகத்திற்கு ஈஸ்வரனான கிருஷ்ண பகவான் இருக்கிறாரோ எங்கு வில்லேந்திய அர்ஜுனன் இருக்கிறானோ அங்கு மங்களமும் வெற்றியும் பெருமையும் நிச்சயமான நீதியும் உள்ளது என்பது என் கொள்கை .
என் கருத்து
தென் கிழக்காசியாவில் இப்போதுள்ள எட்டு நாடுகளில் 1500 ஆண்டுகளுக்கு இந்து மதமும் புத்த மதமும் கொடி கட்டிப்பறந்தது . அதில் சுமத்ரா தீவிலிருந்து (இப்போது இந்தோனேஷியாவின் பகுதி) 400 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்த ஸ்ரீ விஜயப் பேரரசு தென் கிழக்காசியா முழுதும் செல்வாக்கு பெற்று விளங்கியது. அவர்களுடைய கடல் படையும் கடல் வாணிகமும் ஒப்பற்றதாகத் திகழ்ந்தது அதன் வெற்றிக்கு இந்த வி.ச சொல்லும் காரணமாக இருக்கலாம் .
xxxxx
சூர்யா சந்திர வம்சங்கள்
சூர்யஹ – நாம எண் 883–
சூரியன் , சந்திரன் குறித்த நிறைய சொற்கள் வி.ச.வில் உள்ளன. புராணங்களில சூரிய சந்திர வம்ச மன்னர் களின் பட்டியல் 140 க்கும் மேலான மன்னர் பெயர்களுடன் உள்ளன. சோழர்கள் தங்களை சூரிய குல மன்னர்கள் என்று சொல்லி சிபி- புறா கதையை எல்லா இடங்களிலும் குறிப்பிடுகின்றனர். புறநானூற்றுப் பாடல் முதல் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் வரைச் சோழர்கள் இதை பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றனர்.
பாண்டியர் வம்ச கல்வெட்டுகள் அகஸ்தியர் முதலியோரை வம்ச முன்னோர்களாகச் சொல்லிப் பெருமைப்படுகின்றன. இந்திய இலக்கியங்களிலேயே முதல் குறிப்பு 2200 ஆண்டுகளுக்கு முந்தைய காளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் கிடைக்கிறது. ஆக சங்க காலத்துக்கு முன்னரே அகத்தியர்- பாண்டியர் தொடர்பைக் காண்கிறோம் ; பிற்காலக் கல்வெட்டுகளிலும் இது வருகிறது .
மூவகைத் தாபங்கள் — பொருள் ரீதியில், மன ரீதியில் , ஆன்மீக வழியில் ஏற்படும் கஷ்டங்கள் ஆகும்.
சிசிர என்றால் பனி குளிர்.
என் கருத்து
ரோமானிய தத்துவ வித்தகரின் பெயர் சிசிரோ . மார்கஸ் துலியஸ் சிசிரோ Cicero (106–43 BCE) 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவர் அரசியலிலும் ஈடுபட்டார். அவர் நிறைய நூல்களை எழுதினார் அவற்றில் சுமார் 12 புஸ்தகங்கள் நமக்கு கிடைத்துள்ளன . சிசிர ருது என்று நாம் பஞ்சாங்கத்தில் படிக்கிறோம். ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கும் , விஷ்ணுவின் பெயருக்கும் ரோமானிய தத்துவ ஞானிக்கும் உள்ள தொடர்பை ஆராய வேண்டும் .
xxxx
சூரசேனஹ – நாம எண் 704–
ஹனுமான் முதலிய சூரர்களை சேனனையில் கொண்டவர்
என் கருத்து
வீர, தீர, சூர என்ற சொற்களைத் தமிழர்களும் பயன்படுத்துகின்றனர்
சூரசேன வம்சம் இந்தியாவின் பழங்கால வம்சங்களில் ஒன்று. புத்தர் காலத்திலேயே வட இந்தியா 16 மஹா ஜனபதங்களைப் பிரிந்திருந்தன.. அந்த 16 நாடுகளில் ஒன்று சூரசேன நாடு.. யமுனை நதியின் கரைதியில் அமர்ந்த மதுராதான் அதன் தலை நகர். வட மதுரைக் கண்ணனையும் தொழுனை/ யமுனா நதி கோபியர் லீலைகளையும் சங்க இலக்கியம் பாடியிருக்கிறது. இதனால் சூர சேனாரின் பழமையும் சிறப்பும் தெரிகிறது . கிரேக்கர்களும் இந்த மதுராவையும் ‘சூர சோனோய் ‘ யையும் குறிப்பிட்டுள்ளனர்.
மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியன் சூரசேன மன்னனின் மகளான காஞ்சன மாலாவை மணந்துகொண்டு மீனாட்சி தேவியைப் பெற்றெடுத்ததாக பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
xxxxx
அபு— நாம எண் 437-
பிறப்பிலி; பிறப்பற்றவர்
என் கருத்து
அத்புத மலை என்பது ராஜஸ்தானில் இருக்கிறது. தற்போது அதை அபு என்கிறார்கள்.
அபு என்று கொண்டால் , அங்குள்ள தேவி கோவில்களும் கலையழகு மிக்க சமணர் கோவில்களும் நினைவுக்கு வரும் .
புராண காலத்திலிருந்து சிறப்பு பெற்ற புனிதத்தலம் இது.
xxxx
மானதஹ — நாமம் எண் — 748
தம்முடைய மாயையால் எல்லார்க்கும் அனாத்ம வஸ்துக்களில் அபிமானத்தைக் கொடுப்பவர். அல்லது
பக்தர்களுக்குக் கெளரம் அளிப்பவர். பக்தி இல்லாத வர்களின் கர்வத்தைக் கண்டிப்பவர்.
என் கருத்து
சிசிரோ போன்ற வெளிநாட்டுப் பிரமுகர்களின் பெயர் போல மற்றோரு வெளிநாட்டினர் பெயர். மனித்தோ Manetho . அவர் எகிப்தியர்.; அவருடைய எகிப்திய, பாபிலோனிய வரலாறுகள் மன்னர்களின் வரிசைக்கிரமம் பற்றி அறிய உதவுகிறது.
xxxx
சமிதிஞ்சிய –நாம எண் 362 —
யுத்தங்களில் ஜெயிப்பவர் ; எல்லா யுத்தங்களிலும் ஜெயிப்பவர் பகவானே.
ஓ பிரம்மஹ தேவேப்யோ விஜிக்யே தஸ்யஹ பிராம்மநோ விஜயே தேவா அமஹீ யந்த.
பிரம்மம் தேவர்களுக்காக ஜெயித்தது . அந்த வெற்றியில் தேவர்கள் பெருமிதம் எய்தினர்.
என் கருத்து
ஆங்கிலத்தில் கமிட்டி என்று சொல்வதன் உச்சரிப்பு சமிதி – ரிக்வேதத்தில் உள்ள சொல். அங்கு இதன் பொருள் அசெம்பிளி; அதாவது மக்கள் சபை; அதே போல சபை என்ற சொல்லும் ரிக் வேதத்தில் உள்ளது. இந்தியா முழுதும் சபையும் சமிதியும் இன்றுமுளது.
xxxx
புரந்தரஹ — நாம எண் 335–
அசுரர்களின் புரங்களைப் பிளந்தவர்
என் கருத்து
இது விஷ்ணுவுக்கு உள்ளதைப் போல சிவனுக்கும் இந்திரனுக்கும் பொருந்தும். வேதத்தில் கோட்டையைப்பிளந்த இந்திரனுக்கே இந்த அடை மொழி கொடுக்கப்பட்டது. ஆரிய- திராவிட வாதம் பேசிய மூன்று அயோக்கியர்கள் சிந்து- சமவெளி நாகரீகத்ததை ஆரிய இந்திரன் அழித்ததாக புரளி கிளப்பினர். ஆனால் சிந்து- சரஸ்வதி மக்கள் சிவனை வணங்கினர் என்றும் அவர் வேறு, வேதத்தில் உள்ள ருத்ரன் வேறு என்றும் கதை கட்டி இந்துமதத்தில் குழப்பத்தை உண்டாக்கினர். ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகள் அவர்களுடைய பொய்மை வாதத்தைத் தவிடு பொடியாக்கிவிட்டது.
xxxx
மனுஹூ –நாம எண் 51,
ஸ்வயம்புவ- நாம எண்37-
51–க்கு சங்கரர் தரும் வியாக்கியானம்- எல்லாவற்றையும் நினைப்பவர் அல்லது மந்திர வடிவினர்.
அவரைக்காட்டிலும் வேறாக நினைப்பவர் இல்லை (கேனோபநிஷத், பிருஹதாரண்யக உபநிஷத்)
37–க்குப் பொருள் – தாகவே உண்டாகியவர் .
ரிக் வேதத்தில் மனு என்ற பெயர் பல இடங்களில் வருகிறது . பல மனுக்களில் மனு ஸ்ம்ருதி நூலை இயற்றிய மனுவும் ஒருவர்
யுக புருஷர்களாகிய மனுக்கள் வேறாக இருக்கலாம். அதே பெயரைப் பிற்காலத்தில் அவர்கள் பயன்படுத்தியுமிருக்கலாம் . இது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
—சுபம்—
tags- விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், Part 23
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (51)
ராமாயணத்தில் சாபங்கள் (51) ராஜரிஷி நிமி மஹரிஷி வசிஷ்டருக்குக் கொடுத்த சாபம்!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் ஐம்பத்து ஐந்தாவது ஸர்க்கமாக அமைவது, “நிமியும் வசிஷ்டரும் ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கொள்வது’ என்ற ஸர்க்கம். இதே ஸர்க்கத்தில் தொடர்ச்சியாக ராஜரிஷி நிமி மஹரிஷி வசிஷ்டருக்குக் கொடுத்த சாபமும் இடம் பெறுகிறது.
தூங்கி எழுந்திருந்த நிமி வசிஷ்டர் இட்ட சாபத்தைப் பற்றி அறிந்தார். கோபத்தால் மெய்மறந்தவரானார்.
உடனே பிரம்மபுத்திரரான வசிஷ்டருக்கு இப்படி சாபமிட்டார்:
அஜானத: ஷயானஸ்ய க்ரோதேன கலுஷிக்ருத: |
முக்தவான்மயி சாபாக்னிம் யமதண்ட மிவாபரம் |\
அஜானத: – உடம்பு தெரியாமல்
ஷயானஸ்ய – துயிலுமளவில்
க்ரோதேன் – கோபத்தினால்
கலுஷிக்ருத: – அபசாரத்துக்குள்ளாகி
மயி – என்னுடைய
யமதண்டம் – யமதண்டத்தை
இவ – போன்றதும்
அபரம் – முடிவானதுமான
சாபாக்னிம் – சாபத் தீயை
முக்தவான் – விடுத்தீர்
தஸ்மாத்தவாபி ப்ரமஹ்மருஷே சேதனேன வினாக்ருத: |
தேஹ: சுருசிரப்ரக்யோ பவிஷ்யதி ந சம்ஷய: |\
ப்ரஹ்மருஷே – ஓ பிரம்ம ரிஷியே
தஸ்மாத் – ஆகையால்
தவ – உம்முடைய
சுருசிரப்ரக்ய: – தேஜோமயமாய் விளங்கும்
தேஹ: அபி – உடலும்
சேதனேன – உயிரை
வினாக்ருத: – விட்டு நீங்கியதாய்
பவிஷ்யதி – ஆகக் கடவது
ந சம்ஷய: – இதில் சந்தேகமில்லை.
உத்தரகாண்டம், 55வது ஸர்க்கம், ஸ்லோக எண்கள் 19 & 20
இப்படியாக வசிஷ்டர் நிமிக்கு சாபம் இட,, நிமியும் பதிலுக்கு உடனே வசிஷ்டருக்கு சாபமிட்டார்.
இருவரும் ஒருவருக்கொருவர் சாபமிட்டதால் உடல்களை நீத்து வாயு வடிவம் கொண்டவர்களாய் ஆனார்கள்.
வாயு வடிவத்தில் இருந்த வசிஷ்டர் தன் தந்தையான பிரம்மதேவரை அணுகி அவரிடம் தான் வேறொரு சரீரத்தில் உயிர் புகுமாறு அனுக்ரஹம் செய்ய வேண்டுமென வேண்டினார்.
பிரம்மதேவர் உடனே வசிஷ்டரை மித்திரன் வருணன் என்னும் தேவர்களால் ஏற்பட்ட வீரியத்தில் பிரவேசிக்குமாறு அருளினார்..
Adam blamed God for giving him Eve and said that she was the one who deceived him. Eve in turn blamed the serpent. God then cursed the serpent to crawl on his belly for the rest of his days and to have a hateful relationship between himself and women. (Genesis 3:14-15).Bible
Slokas 60 to 70 of Viveka Chudamani (VC) have more similes, metaphors and analogies.
61. For one who has been bitten by the serpent of Ignorance, the only remedy is the knowledge of Brahman. Of what avail are the Vedas and Scriptures, Mantras and medicines to such a one?
Sloka 61 has Snake of Ignorance reminding us of Biblical Story. The Biblical serpent, the embodiment of Satan in the Garden of Eden, later becomes the serpent of brass put upon a pole by Moses. Aaron’s rod was transformed into a snake which was capable of pharaoh’s sorcerers.
In Hinduism it is used with positive and negative connotations. It represented Kundalini power in Yogic jargon. All Hindu Gods have snake as belt or umbrella or necklace. It shows absolute control over five senses. In other places it represented falsehood and evil similar to Bible
Tamil poet Bhartiyar sings
பயமென்னும் பேய்தனை அடித்து பொய்மைப் பாம்புயிரைக் குடித்து
Where snake represents falsehood.
Rama Krishna Paramahamsa also used snakes to illustrate dangers of worldly life,
“Snakes are venomous reptiles. If you try to catch them, you are sure to be bitten. But to the man who has learnt the art of snake charming by the use of magnetised dust, it is not very difficult to catch them. He can even play with seven of them twisted together and coiled around his neck. Similarly a man of realisation is immune to the dangers of worldly life”.
“As the snake is separate from its slough , even so is the spirit separate from the body”.
Siddhas like Tirumular used it to illustrate latent Kundalini power.
Tamil Poet Thiruvalluvar used Snakes at lease three times in his Kura/couplets
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று–திருக்குறள் 1146
I saw him but one single day: rumour spreads soon As darkness, when the snake seizes on the moon.-1146
***
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று. –; 890
Domestic life with those who don’t agree, Is dwelling in a shed with snake for company.-890
****
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். (குறள் எண் 763)
Though, like the sea, the angry mice send forth their battle cry; What then? The snake breathes upon them, and they die! 763
There are innumerable snake similes in Tamil literature. Since India is a tropical country with millions of snakes, these similes are easily understood by the readers.
62. A disease does not leave off if one simply utter the name of the medicine, without taking it; (similarly) without direct realisation one cannot be liberated by the mere utterance of the word Brahman
Sankara said about the necessity of medicine and diet in Sloka 53 as well.
It is interesting to see that he gives useful tips about medicine and diet while teaching Brahma Jnaan.
āptoktiṃ khananaṃ tathopariśilādyutkarṣaṇaṃ svīkṛtiṃ nikṣepaḥ samapekṣate nahi bahiḥ śabdaistu nirgacchati | tadvadbrahmavidopadeśamananadhyānādibhirlabhyate māyākāryatirohitaṃ svamamalaṃ tattvaṃ na duryuktibhiḥ || 65 ||
65. As a treasure hidden underground requires (for its extraction) competent instruction, excavation, the removal of stones and other such things lying above it and (finally) grasping, but never comes out by being (merely) called out by name, so the transparent Truth of the self, which is hidden by Maya and its effects, is to be attained through the instructions of a knower of Brahman, followed by reflection, meditation and so forth, but not through perverted arguments.
To illustrate his points, Sankara used even interesting treasure hunting. Once you say all will listen to him with pin drop silence.
In the previous two slokas he talks about kingship and mere talking. Only when a king kills his enemies and occupy a vast area, he can claim that he is an emperor. Here Sankara talks about war and capturing territories. Before that he says mere utterance of Braman wont help.
He guides a student to do hard work; practical work.
Swami Vivekananda also says
One ounce of practice is worth thousand pounds of theory
xxxx
Interesting Story told by R K Paramahamsa
The great Shankaracharya has a foolish disciple who used to imitate his Master (Guru) in all matters. Sankara uttered Sivoham – I am shiva; the disciple also repeated Sivoham. To correct his disciple’s folly, Sankara one day while passing by a smithy . took a potful of molten iron and asked the disciple also to do the same. Of course, the disciple could not imitate this act of his master and thenceforward he left off saying Sivoham. Base imitation is always bad, but an attempt to correct one’s own self by the noble examples of the great ones is always good.
xxx
Tamil Siddha Tirumular said in his Tirumanthiram
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர் தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே. 5
Ruler’s Duty to Impart Wisdom to Erring Brahmins The senseless fools donning sacred thread and matted locks, And with chanting phrases pretend to wisdom unpossessed, Them, the ruler of state shall, with wise men’s help, take and test, And, for the country’s good, impart words in wisdom drest.
xxxx
.நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே. 7
230: Tuft and Thread Alone do not Make a Brahmin Do thread and tuft alone prove the Brahmin state? The thread, then, only a dark bond, the fine tuft, only tresses long; The true thread Vedantam is, the sacred tuft wisdom proves These the Brahmnins truly see, these virtues to them belong.
—subham—
Tags- Sankara, Brahmam, Sivoham story, Paramahmasa, Treasure hunting, snake, in literature, Research Notes on VC, Part 20, disease, medicine
காளஹஸ்தி சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் PART- 12
சிறப்புகள் என்ன ?
சம்பந்தரால் படப்பெற்றதால் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள கோவில் . அப்பர், சுந்தரர் ஆகிய நாயன்மார்களும் காளப்ப நாதனைத் தொழுது பாடியுள்ளனர் . ஆகவே மூவர் பாடிய தலம் இது.
63 நாயன்மார்களில் கண்ணப்ப நாயனாருடன் தொடர்புடைய தலம்
பஞ்ச பூதஸ்தலங்களில் இது வாயு ஸ்தலம் ; அதாவது இங்கே சிவ பெருமான் வாயு உருவில் அருள் புரிகிறார்
இது ராகு- கேது பரிகார தலமும் ஆகும் .
எங்கே உள்ளது?
ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது .சென்னையிலிருந்து 125 கி.மீ. சுமார் இரண்டரை மணி நேரத்தில் கோவிலை அடையலாம்.
திருப்பதியிலிருந்து சுமார் 40 கி.மீ
திருத்தணியிலிருந்து 85 கி.மீ சுமார் இரண்டு மணி நேரத்தில் கோவிலை அடையலாம்.
திருப்பதி, சென்னை, காஞ்சீபுரம் , ரேணி குண்டா ஆகிய இடங்களி லிருந்து பஸ்ஸில் செல்வது எளிது. ரயிலிலும் செல்லலாம். காளாஸ்தித்ரி என்று வட்டார மக்கள் சொல்லுவார்கள். அதையே பஸ் ஓட்டுநர்களும் சொல்லுவர். திருத்தணி, திருப்பதி ஆகிய புண்ய ஸ்தலங்களுக்குச் செல்வோர் காளஹஸ்தி செல்வதும் வழக்கமாக இருக்கிறது .
காளஹஸ்தி என்றால் என்ன அர்த்தம் ?
சிலந்தி, பாம்பு, யானை ஆகியன சிவ பெருமானை பூஜித்ததால் காளஹஸ்தி என்ற பெயர் ஏற்பட்டது.
ஸ்ரீ = சிலந்தி, காளம்= பாம்பு, அத்தி = யானை ஆகிய மூன்றும் வழிபட்டு சிவனடி சேர்ந்த திருத்தலம்.
ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் இப்போது காணப்படும் கோவிலை எழுப்பினான்
பொன்முகரி என்னும் ஆறு அருகிலேயே ஓடுகிறது .
ராஜேந்திர சோழன் முதல் விஜய நகரப் பேரரசர் கிருஷ்ணதேவ ராயர் வரை பலரும் திருப்பணி செய்த இந்தக் கோவிலில் அவர்களுடைய கல்வெட்டுகளும் உள்ளன . தமிழ் மொழியிலும் சம்ஸ்க்ருதத்திலும் காளத்தி நாதர் மேல் பல புராணங்களை பெரியோர்கள் இயற்றியுள்ளனர்.
கோவில் வரலாறு
63 நாயன்மார்களில் சம்பந்தருக்கும் முந்தியவர் கண்ணப்ப நாயனார் . அவருடைய கதை தமிழர்கள் அனைவரும் அறிந்ததே; வேடுவர் குலத்தில் பிறந்த அவர் பொன்முகலி ஆற்றைக் கடந்து வந்து ஒரு காட்டுப் பன்றியைத் துரத்தி வந்தபோது, அவருக்கு ஒரு அற்புத உணர்வு,– ஆனந்த உணர்வு –ஏற்படட்டது . மலை மீது ஏறிச் சென்றபோது பூக்களால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கத்தைக் கண்டு பேரானந்தம் அடைந்தார். கல்வி கற்காதவர் ஆதலால் வாயில் ஜலம் கொண்டு வந்து அதனால் அபிஷேகம் செய்து, தான் கொன்ற காட்டுப்பன்றி மாமிசத்தை நைவேத்தியம் செய்தார். வழக்கமாகப் பூ ஜை செய்யும் சிவகோசரியார் என்ற பிராமணர் இதையெல்லாம் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் கொண்டார். சிவ பெருமானே அவர் கனவில் வந்து மறுநாள் காலையில் நடக்கப்போகும் ஒரு காட்சியைக் காண வருமாறு கோவில் குருக்களைப் பணித்தார் . அவர் மறைந்திருந்து பார்த்தபோது வேட்டுவன் கண்ணப்பன் தன்னுடைய பாணியில் அர்ச்சனயைச் செய்தான். அப்போது சிவனின்– லிங்கத்தின்– ஒரு கண்ணிலிருந்து ரத்தம் கொட்டவே கண்ணப்பன் அதை அகற்றி தன் கண்ணையே எடுத்து சிவலிங்க கண்ணை அடைத்தான் ; அதற்குள் மறுகண்ணிலிருந்து ரத்தம் வரவே தன்னுடைய செருப்புக்காலை சிவலிங்கத்தின் மீது அடையாளத்துக்கு வைத்துக் கொண்டு இரண்டாவது கண்ணையும் பிடுங்கி சிவன் மீது அப்பினான். அப்போது சிவனே காட்சி தந்து அவனது கண்கள் மீண்டும் பார்வை அடையுமாறு அருள்புரிந்தார்.. இதற்குப் பின்னர் ஆதிசங்கரர் முதல் பல சிவ பக்தர்கள் கண்ணப்பனைப் புகழந்து பாடினர். கண்களையே தானம் செய்ததால் அவர் பெயர் கண்ணப்பர் ஆனது. அவர் பூஜித்த சிவன் என்பதால் இந்த இடத்தின் புகழ் பரவியது.
மஹாசிவராத்ரி விழா இங்கு மிகப்பெரிய விழா ஆகும்
தேவாரத் தலம் பற்றிய புஸ்தகங்களில் தொண்டை மண்டல தல வரிசையில் இது இடம்பெறும்; இந்த ஊர் ஒரு காலத்தில் தொண்டைமான் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
கிருஷ்ண தேவராயர் 1516ம் ஆண்டில் கட்டிய கம்பீரமான ஏழு நிலைக் கோபுரத்துடன் இப்போது கோவில் காட்சி தருகிறது . அவருக்கு முன்னர் சிற்றரசர்கள் எழுப்பிய மண்டபங்களும் உள .
கோவிலுக்குள் விநாயகர், சுப்பிரமணியர், பால ஞானாம்பிகை , பஞ்சமுகேஸ்வரர், அம்பாள் சந்நிதிகள் இருக்கின்றன.
கோவிலின் ஒரு சிறப்பு 35 அடி ஆழத்தில் உள்ள பாதாள விநாயகன் சந்நிதி; அகத்தியர் இதை நிறுவினார் ஒரு காலத்தில் பொன்முகலி ஆறு கோவிலுக்குப் பக்கத்தில் ஓடியதாம்; அப்போது அடர்ந்த காடுகள் இருந்த இடம் ; ஊர்ப் பெயரில் அமைந்துள்ள பாம்பு, யானை முதலியவற்றினைப் பார்க்கும்போதே காடு சூழ்ந்த இடம் என்பது புரிபடும்.
இரண்டு கால்களுள்ள மண்டபம் ஒன்றும் இருப்பதால் , யாராவது காளத்தி சென்று வந்தேன் என்று சொன்னால் இரண்டு கால் மண்டபம் பார்த்தாயா? என்று கேட்பார்கள்
கோவிலுக்குத் திருப்பணி செய்து புண்ணியம் சேர்த்துக்கொண்ட நகரத்தார் தேவகோட்டை இராமநாதன் செட்டியார் சிலையும் ஆற்றங்கரைக்குச் செல்லும் படிக்கட்டில் இருக்கிறது
கோவிலின் இரண்டு கொடி மரங்களில் ஒன்று ஒரே கல்லால் ஆனது 60 அடி உயரம் . இதுவும் ஒரு அதிசயம் ஆகும்
கோவிலுக்குள் கண்ணப்பர் உள்பட ஏராளமான திருமேனிகள், சந்நிதிகள் இருக்கின்றன
கோவில் பற்றிய விவரம்
இறைவன் பெயர் – ஸ்ரீ காள ஹஸ்தீஸ்வர சுவாமி, காளாத்ரி நாதர், குடுமித்தேவர்
இறைவி – ஞானப் பிரசன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை
தலமரம் – மகிழம்
தீர்த்தம் – பொன்முகலி ஆறு, ஸ்வர்ணமுகி
மூலவர் – சுயம்பு லிங்கம்
சுவாமி மீது போர்த்தப்பட்ட தங்கக் கவசத்தில் 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
சிவலிங்கம் உயரமானது அடிப்பாகத்தில் சிலந்தி, மத்தியில் யானையின் 2 தந்தங்கள், மேற்பாகத்தில் ஐந்து தலை நாகமும் உள்ளன இவைதான் ஊரின் பெயருக்கே காரணம் .
மேற்கு நோக்கிய சந்நிதி; சதுர வடிவ ஆவுடையார் சந்நிதியில் மூலவர் பக்கத்தில் மனோன்மணி தேவியின் உருவம் உள்ளது.
கோவிலில் திருநீறு வழங்கும் மரபு இல்லை. தீர்த்தம் மட்டுமே தருவார்கள். நாம் திருநீறு பொட்டலம் கொண்டுபோனால் சுவாமியின் பாதத்தில் வைத்துத் தருகிறார்கள் .
வில் ஏந்திய கண்ணப்பர் உருவத்தைத் தரிசிக்க மறந்துவிடக்கூடாது ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கமும் குறிப்பிட்டது தக்கது.
இறுதியாக காளத்தி மலை பற்றிய சுவையான விஷயம்
கைலாச கிரி என்று அழைக்கப்படும் இம்மலை 25 சதுர கி.மீ பரப்புடையது; மலையில் காடுகளுக்கு இடையே சிவ லிங்கங்களும் தீர்த்தங்களும் உள்ளன. பரத்வாஜ ரிஷியின் சிலையும் தீர்த்தமும் உள்ளது; மலை அடிவாரத்தில் நீலகண்டேஸ்வரரைத் தரிசிக்கலாம் 16 கிமீ தொலைவில் ஸஹஸ்ர ராம லிங்கம் கோவில் உளது . ஒரு வருடத்தில் இரண்டு முறை சுவாமி, இந்த மலையை வலம் வருகிறார். ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமியுடன் செல்கிறார்கள்.
அருணகிரி நாதரும் திருப்புகழில் காளத்தி நாதரைத் துதிபாடுகிறார். தெலுங்குக் கவிஞர் தூர்ஜாட்டி என்பவரும் இறைவன் பெயரில் மகாத்மியம் ஒன்றை இயற்றியுள்ளார்.
காளத்தி நாதன் புகழையும் கைலைகிரி புகழையும் முழுவதும் சொல்ல எவராலும் இயலாது
–சுபம்–
Tags- காளஹஸ்தி சிவன் கோவில்,, ஆந்திர மாநில, புகழ்பெற்ற 108 கோவில்கள், PART- 12