ராமாயணத்தில் சாபங்கள் (23) பரதன் கைகேயியை நிந்தித்தது (Post No.13,330)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.330

Date uploaded in London – 12 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 ராமாயணத்தில் சாபங்கள் (23)

ராமாயணத்தில் சாபங்கள் (23) பரதன் கைகேயியை நிந்தித்தது!

ச.நாகராஜன் 

அயோத்யா காண்டத்தில் 74-வது ஸர்க்கமாக அமைவது ‘கைகேயி நிந்தை’.

இந்த ஸர்க்கத்தில் பரதன் தன் தாயான கைகேயியை நிந்திக்கிறான்.

மகத்தான பாப காரியத்தைச் செய்து விட்டாயே என்று கடிந்து கொள்கிறான்.

ப்ரூணஹத்யாமஸி ப்ராப்தா குலஸ்யாஸ்ய விநாஷநாத் |

கைகேயி நரகம் கச்ச மா ச பர்து: சலோகதாம்!!

கைகேயி – கைகேயி

அஸ்ய குலஸ்ய – இந்த குலத்திற்கு

விநாஷநாத் – கேடு விளைவித்தால்

ப்ரூணஹத்யாம் – கர்ப்பச் சிதைவு பாவத்தை

ப்ராப்தா அஸி – (நீ) அடைந்தவளாகின்றனை

நரகம் கச்ச – நரகத்தை அடை

பர்து: – கணவருடன்

சலோகதாம் – இருத்தலை

மா ச – அடைய மாட்டாய்

–    அயோத்யா காண்டம் 74-ம் ஸர்க்கம் 4-ம் ஸ்லோகம்

“கொடியவளே உன்னால் மன்னர் தசரதன் இறந்து விட்டார். தர்மவானான ராமர் காட்டுக்குச் சென்று விட்டார். நீ ராஜ்யத்தை விட்டு ஓடி விடு” என்று கூறிய பரதன் காமதேனுவின் கதையையும் கைகேயிக்கு உரைக்கிறான்.

காமதேனு தனது இரு காளைக் கன்றுகளை பூமியில் பாரம் சுமப்பவையாகக் கண்டு வருந்தியது. களைப்படைந்த அந்த காளைகளைக் கண்டு கண்ணீர் சொரிந்தது. அந்த வாசனையுடைய கண்ணீர்த் துளிகள் கீழே சென்று கொண்டிருந்த தேவேந்திரன் உச்சியில் விழுந்தன. இந்திரன் உடனே காமதேனுவிடம் அது வருந்துவதற்கான காரணத்தைக் கேட்க காமதேனு தன் இரு குழந்தைகளைப் பற்றி வருந்துவதாகக் கூறியது. இதைக் கண்ட இந்திரன் புத்திரனைக் காட்டிலும் மேலானது ஒன்று இல்லை என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டான்.

காமதேனுவின் கதையைக் கூறிய பரதன் உடனே கீழ்க்கண்ட வார்த்தைகளைக் கூறுகிறான்:

அப்போது அருகே உள்ள கோசலையைச் சுட்டிக் காட்டிச் சொல்வது இது:-

ஏகபுத்ரா ச சாத்வீ ச விவத்ஸேயம் த்வயா க்ருதா |

தஸ்மாத் த்வம் சததம் துக்கே ப்ரேத்ய சேஹ ச லப்யஸே ||

–    அயோத்யா காண்டம் 74-ம் ஸர்க்கம் 29-ம் ஸ்லோகம்

ஏகபுத்ரா  ச – ஒரே புதலைவனைப் பெற்றவளும்

சாத்வீ ச – புண்ணியச் செயல் உடையவளுமான

இயம் த்வயா – இவள் (கோசலை தேவியாகிய இவள்) உன்னால்

விவத்ஸா – புத்திரனைப் பிரிந்தவளாய்

க்ருதா – செய்யப்பட்டாள்

தஸ்மாத் – அந்தக் காரணத்தினால்

த்வே இஹ ச – நீ இங்கும்

ப்ரேத்ய ச – இறந்தும்

சததம் துக்கம் – சதா துக்கத்தை

லப்யஸே – அனுபவிக்கப் போகிறாய்.

இவ்வாறு பரதன் கூறுகின்ற வார்த்தைகளில் சாபம் தருகின்ற பாங்கு இல்லை. என்றாலும் சாபத்தைப் போன்ற வார்த்தைகளே வந்துள்ளதைக் காணலாம். பரதனுக்குச் சாபம் கொடுக்கும் சக்தி உண்டா என்பதும் எப்படி வந்தது என்பதும் இங்கு தரப்படவில்லை.

அயோத்யா காண்டத்தில் உள்ள ஐந்து சாபங்களில் இது ஐந்தாவது சாபமாக அமைகிறது.

இத்துடன் அயோத்யா காண்டத்தில் உள்ள சாபங்களின் விவரம் முடிகிறது.

**

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்- 4 (Post.13,329)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,329

Date uploaded in London – 11 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆதி சங்கரர் அவருடைய விஷ்ணு சஹஸ்ரநாம (வி.ச.)பாஷ்யத்தில் மேலும் பல அற்புத மேற்கோள்களை அளிக்கிறார்.

குந்த – வி.ச. நாமம் 809

குந்த மலர் / மல்லிகைப்பூப்  போல மென்மையான அங்கங்களை உடையவர். அல்லது தூய்மையில் பளிங்கு போல சுத்தமானவர்.அல்லது ‘கு’ என்னும் பூமியை காஸ்யப ரிஷிக்கு அளித்தவர் .

ஹரிவம்சம் (மகாபாரதத்தின் பிற்சேர்க்கை) சொல்கிறது

சர்வ பாப விசுத்யர்த்தம் வாஜி-மேதேன சேஸ்தவான்

தஸ்மின் யக்ஞே மஹா  தானே தக்ஷிணாம் ப்ருகு நந்தனஹ

மாரீசாய ததெளபிரிதஹ கஸ்யபாய வசுந்தராம்

பொருள்

    பிருகுவின் மகனாகிய பரசுராமன் பாவங்களிலிருந்து விடுபடுவதற்காக அஸ்வமேத யாகம் செய்தார் அந்த யக்ஞத்தில் பெரிய பரிசுகள் தரப்பட்டன. மரிசியின் புதல்வனான காஸ்யபருக்கு பரசுராமர் தான் வென்ற பூமி (நாடுகள்) அனைத்தையும் தானமாக அளித்தார்.

XXXX

ஸப்த ஜிஹ்வா – நாம எண் 827

இறைவன் அக்கினி ரூபத்தில் தோன்றியபோது அவருடைய சுவாலையில் ஏழு நாக்குகள் /  பிழம்புகள் இருந்தன.

முண்டகோபநிஷத் 1-2-4 சொல்கிறது,

காலீ கராலீ ச மனோஜவா ச ஸு லோ ஹிதாயா ச தூம்ரவர்ணா

ஸ்புலிங்கிநீ  விஸ்வருசீ  ச தேவி லோலாயமானா இதி ஸப்த ஜிஹ்வா.

பொருள்

தீக்கு ஏழு நாக்குகள்; அவை- காலீ , கராலீ, மனோஜவா ,  சுலோஹிதா,  ஸு தூம்ரவர்ணா , ஸ்புலிங்கினீ, விஸ்வருசீ ஆகியவை .

XXXX

கதிதஹ – நாம எண் 848

பரம்பொருள் என்று மறைகளால் போற்றப்பட்டவர் நம்முடைய சமய நூல் சொல்வதாவது ,

வேதே ராமாயணே புண்யே  பாரதே பரதர் ஷப

ஆதெள மத்யே ததாசந்தே விஷ்ணுஹூ  ஸர்வத்ர கீயதே

பொருள்

வேதம், ராமாயணம்,மஹாபாரதம் முதலியவற்றின் துவக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் அவ்வாறே புராணங்களிலும் விஷ்ணுவே போற்றப்படுகிறார்.

பாகவதம் சொல்கிறது

வாஸூ தேவ பராவேதா வாஸூ தேவ பரா மகாஹா 

வாஸூ தேவ பராயோகா வாஸூ தேவ பராக்ரியாஹா

வாஸூ தேவ பரம் ஞானம் வாஸூ தேவ பரம் தபஹ

வாஸூ தேவ பரோ தர்மஹ  வாஸூ தேவ பரா கதிஹி

பாகவதம் 1-2-28/29

கடோபநிஷத் 3-11சொல்வதாவது

புருஷான்ன பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ஸா

XXXX

ப்ரியார்ஹ — நாம எண் 872

பிரியமான வஸ்துக்களை அர்ப்பணம் செய்தற்குரியவர்.

ஸ்ம்ருதி சொல்கிறது,

யத்யதிஷ்டதமாம் லோகே யச்சாஸ்ய தயிதம் க்ருஹே

தத்தத் குணவதே தேயம் ததோ வாக்ஷய -மிச்சதா

பொருள்

வாழ்க்கையில் எது முக்கியனானதென்று ஒருவர் கருதுகிறாரோ, வீட்டில் எது பிரியமானது என்று கருதுகிறாரோ, அதைப்பாதுக்காகவும் வளர்க்கவும் அதை பாத்திரம் அறிந்து தானம் செய்யவேண்டும்.

.பகவத் கீதையில் 7-17 பகவான் சொல்கிறார்-  நான் ஞானிகளுக்குப் பிரியமானவன் ;ஞானியம் எனக்குப் பிரியமானவன்.

தமிழிலும் ஒரு பழமொழி உண்டு :

தனக்கு மிஞ்சியதே தான தர்மம் .

தனக்கு பயன்படுத்தியது போக  மிஞ்சி இருப்பதை தானம் செய்ய வேண்டும் என்று பலரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். உண்மையில் இதன் பொருள் தன் சக்திக்கும் அதிகமாகக் கொடுப்பதே தானதர்மம் ஆகும். ஒரு கோடீஸ்வரன் ஒரு பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் கொடுத்தால் அது பெரிய தருமம் இல்லை. சில கோடீஸ்வரர்கள் தனக்கு வருவதை எல்லாம் ஏழைகளுக்கு ஒதுக்குவது அவரது சக்திக்கு   மிஞ்சியது ஆகும் .

இதை நிரூபிக்க இந்துக்களின் இன்னுமொரு வழக்கத்தைக் குறிப்பிடலாம். காசிக்குப் போய் கங்கையில் குளித்தால் மிகவும் பிரியமான ஒரு உணவுப்பொருளைக் கைவிட வேண்டும் என்பது இந்துக்களின் சம்பிரதாயம். ஏற்கனவே பிடிக்காத காய், பழத்தை விடுவது தியாகம் இல்லை ; தனக்கு மிகவும் பிரியமானதை விடவேண்டும் இதுதான் தனக்கும் மிஞ்சியது தானதர்மம் என்பதை நன்றாக விளக்கும்.

XXXX

ஸ்வஸ்தி தக்ஷிணா — நாம எண் 905

விரைவாக மங்களம் தருபவர் .

பிரம்மாண்ட புராணம் 83-17 சொல்கிறது,

ஸ்ம்ருதே ஸகல கல்யாண பாஜனம் யத்ர ஜாயதே

புருஷஸ் தம் அஜம் நித்யம் வ்ரஜாமி சரணம் ஹரிம்

பொருள்

நான் பிறப்பற்ற, என்றுமுள்ள ஹரியைச் சரண் அடைகிறேன் .யார் ஒருவரை நினைத்த மாத்திரத்தில் எல்லா

மங்களங்களையும் தருகிறாரரோ அப்படிப்பட்ட ஹரியைச் சரண் அடைகிறேன்.

இன்னுமொரு சுபாஷிதமும் உளது .

ஸ்மாரணாத் ஏவ க்ருஷ்ணஸ்ய பாப சங்காத பஞ்சரம்

சததா பேதம் ஆயாதி கிரிர் வஜ்ர அதோ யதா

பொருள்

வஜ்ராயுதத்தினால் தாக்கப்பட்ட மலை பிளந்தது போல கிருஷ்ணரை நினைத்த மாத்திரத்தில் குவித்து வைக்கப்பட்ட பாவங்கள் அனைத்தும் பொடிப்பொடியாகின்றன.

xxxxx

சக்ரி – நாம எண் 908

மனஸ் தத்துவமாகியசுதர்சனம் என்னும் சக்கரத்தைத் தரிப்பவர்.

ஸமஸ்த லோக ரக்ஷ்ஆர்த்தம்  மனஸ் தத்வாத்தமகம்

சுதர்சனாக்யம் சக்ரம் தத்த இதை சக்ரீ 

சக்ர ஸ்வரூபம் அத்யந்தம் ஜவேனாந்தரிதா நிலம் நயந்த

சக்ர ஸ்வரூபம் ச ஹத்தே விஷ்ணுஹு கரஸ்திதம்

பொருள்

மஹா விஷ்ணுவானவர் மனது என்னும் சக்கரத்தைக் கையில் வைத்திருக்கிறார். அது காற்றினும் கடுக்கிச் செல்ல வல்லது .

தொடரும் …………………….

Tags- தானம், தனக்கு மிஞ்சி, விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள்ரகசியங்கள்மேற்கோள்கள்– 4

Tamil Veda Tirukkural in Vishnu Sahasranama -6 (Post No.13,328)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,328

Date uploaded in London – 11 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Braahmanah- Word Number 667 in the VS

There are three words which look similar: Brahmaa, Brahman and Braahmana.

Brahmaa is one of the trinity who is in charge of creation.

Brahman is God. It is a genderless word

Braahmanah – One who teaches and recites Veda. He has six tasks. In English nowadays it is written as Brahmin (caste).

But the common factor is God and his work.

Not many people know the difference. When I worked in the BBC, the next room Nepali colleagues called me ‘Brahman’.  I used to smile at them and tell “You are right; I am God. Because my name Swami also means God”. Tamils call God as Swami. My name in the BBC world service was Swami.

My Sri Lankan woman colleague won’t use that name because in Tamil films and old Tamil novels husbands are addressed “Swami! Naathaa!” So she used my full name Swaminathan.

Many people don’t know the difference between Psychologist, Psychiatrist and a Psycho. But the common factor is Psyche (Mind)

In this background, we must look at the word Braahmana in the VS. In Tamil they are called ANTHANAR. Valluvar used this word to mean God as well as Brahmins (caste)

Adi Shankara in his commentary says,

One who, in the form of Braahmana instructs the whole world, saying ‘It is commanded so and so in the Veda’.

Another commentator says,

God incarnated Himself as Dattatreya, son of  Atri maharishi.

The wonder in the VS is that ten words with ‘brahma’ comes together.

In Sanskrit Brahmin caste people are called ‘Bhu surar ‘(bhuusurar) meaning Devas/deities on earth. Anthanar in Tamil also has the similar meaning. It means who is always looking inward; looking for Brahman/God.

This is also applicable to anyone (irrespective of caste) looking for God/seeking God.

But Tiru Valluvar used other words for Brahmins as well: Aru Thozilor= Men with Six Tasks, Paarppaan= Seers.

In Sangam Tamil Literature both used together; Aru Thozil Anthanar meaning Brahmins with six tasks.

Now look at Anthanar/Brahmin in Kural

Aru Thozilor- Kural 560

Anthanar- Kurals 8, 30, 543,

Paarppaan – 134

Most of the ancient commentators agreed that Anthanar is a synonym of Brahmin. It is evident from 2000 year old Sangam Tamil books.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.–Kural 8

“Except those who have found the feet of Him

None can hope to cross the rest of the seas”- Kural 8 

****

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். .–Kural 30

“Those who are merciful are really the men of virtue

Because they have compassion for all living creatures”-Kural 30

****

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். Kural 543

“As the ultimate base of the Vedas of the sages and the Dharma of wisemen

Stands the straight sceptre of the king”- Kural 543

The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.

****

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.—Kural 560

Couplet 560:

“Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans’ sacred lore will all forgotten lie”.


Couplet Explanation:

If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the Vedas.

In the above Kural couplets we see the link between Seeking God, Compassion to living beings, Six Tasks of Brahmins and Vedas.

xxx

What are the Six Tasks/Duties of Brahmins?

अध्यापनमध्ययनं यजनं याजनं तथा ।
दानं प्रतिग्रहश्चैव षट् कर्माण्यग्रजन्मनः ॥ ७५ ॥

adhyāpanamadhyayanaṃ yajanaṃ yājanaṃ tathā |
dānaṃ pratigrahaścaiva ṣaṭ karmāṇyagrajanmanaḥ || 1-75 ||

Teaching, studying, sacrificing for oneself, sacrificing for others, giving and receiving gifts are the six functions for the ‘first born’.—(75)

 –subham—

Tags- Brahmin, Anthanar, Paarppan, Six Tasks, Brahmana, Tirukkural, Vishnu Sahasranama, Manu, Six Duties

வியட்நாமில் புதிய சிவலிங்கம் கண்டுபிடிப்பு (Post No.13,327)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,327

Date uploaded in London – 11 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

வியட்நாமில் புதிய சிவலிங்கம் கண்டுபிடிப்பு

வியட்நாம் என்னும் நாட்டுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பா என்று பெயர். அங்குதான் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பழைய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு கிடைத்தது. அதிலுள்ள ஸ்ரீ மாறன் என்ற பெயர்   திருமாறன் என்ற பாண்டியனாக இருக்கலாம். வியட்நாமில் பல இந்தக் கடவுளர்கள் வழிபடப்பட்டனர். இப்பொழுது அதை நிரூபிக்கும் வகையில் மேலும் ஒரு சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .

ஹோசிமின் நகரிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கேடியன் என்னுமிடத்தில் அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தில் இந்த சிவலிங்கம் கிடைத்தது. 1985-ம் ஆண்டு முதல்,  கட்டம் கட்டமாக  இங்கே ஆய்வுப்பணிகள்  நடந்து வருகிறது. நாலாம்  நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு  வரை சுமார் 600 ஆண்டுகளுக்கு இங்கு இந்து நாகரீகம் செழித்து வளர்ந்தது; அதை ஆராயவே இந்தப் பணிகள் துவங்கின.

இங்கு கிடைத்த சிவலிங்கம் நல்ல உயரமானது. 2-27 மீட்டர் உயரம். சுமார் 8 அடி உயரம். இந்த வட்டார மக்கள் இதை பிராமண பூமி என்று அழைத்துவந்தார்கள்

2012ம் ஆண்டு முதல் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்படும் இடம் இது. இதுவரை ஆயிரக் கணக்கான தங்கம் வெள்ளி,  வெண் கலம், இரும்புப் பொருட்களும் , ரத்தினைக் கற்களும் , கற்சிலைகளும் கிடைத்ததுள்ளன .

 XXXXX

2020ஆம் ஆண்டு கண்டுபிடிப்பு

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் கி.பி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒரு ஒற்றை மணற்கல் சிவலிங்கத்தைக் கண்டுபிடித்துள்ளது.

வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள சாம் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டட பணியின்போது சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிவலிங்கத்தை கொண்ட கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகவும் திகழ்கிறது.

அந்த கோயில் கெமர் பேரரசின் இரண்டாம் மன்னர் இந்திரவர்மன் ஆட்சியின் போது கட்டப்பட்டது எனவும் கூறப்படுகிறது. மேலும், இதற்கு முன்பு, இக்கோயில் வளாகத்தில் ஆறு சிவலிங்கங்கள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்த சிவலிங்கமானது மிகவும் அற்புதமானது என்று நம்பப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

xxxx

ஹரியானாவில் மஹாவீரர் சிலை கண்டெடுப்பு

ஹரியானா- ராஜஸ்தான் மாநில எல்லையில் தில்கி  கிராமம்  உள்ளது. அங்கு நடத்திய அகழ்வாராய்ச்சியி; எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் கற்சிலை கிடைத்தது  கிராமத்தில் நிலத்தை சீர்படுத்தும்போது சிலையை கண்டனர். இந்த வட்டாரம் சமண  மத மக்கள் வசித்த இடம் ஆகும்.

நிலத்தை டிராக்டர் கொண்டு சமப்படுத்துகையில் ஒரு பெரிய கல்லில் மோதிய சப்தம் கேட்டது. டிராக்டரை  நிறுத்திய  டிரைவர் சிறிதும் பெரிதுமாக இரண்டு சிலைகளைக் கண்டார் .

கிராம மக்கள் மேலும் சில தகவல்களை அளித்தனர் . 15 ஆண்டுகளுக்கு முன்னர் செங்கல் சுவருடன் கூடிய ஒரு கிணறும் நிறைய பானைகளும் கிடைத்தன. சமண மத தீர்த்தங்கரர் வர்த்தமான மஹாவீரர் மார்பில் பொறிக்கப்பட்ட முத்திரையை வைத்து இது எட்டாம் நூற்றாண்டுச் சிலை என்று அறிந்தோம் என்று தொல்பொருட் துறை அதிகாரி சொன்னார். இந்த வட்டார கிராமங்களில் சமண மதச் சின்னங்கள் நிறைய கிடைத்து வருகின்றன என்றார் .

–SUBHAM–

TAGS- வியட்நாம், சிவலிங்கம், ஹரியானா, மஹாவீரர் சிலைகள், அகழ்வாராய்ச்சி,

ராமாயணத்தில் சாபங்கள் (22) தசரதனை முனிவர் சபித்தது! (Post.13,326)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.326

Date uploaded in London – 11 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (22)

ராமாயணத்தில் சாபங்கள் (22) தசரதனை முனிவர் சபித்தது!

ச.நாகராஜன்

அயோத்யா காண்டத்தில் 64-வது ஸர்க்கமாக அமைவது ‘’தசரதனது மரணம்’.

இந்த ஸர்க்கத்தில் தசரதன் தான் முன்னொரு சமயம் முனிகுமாரன் ஒருவனைத் தவறுதலாகக் கொன்றதையும் முனிகுமாரனது கண்ணில்லாத தந்தை தன்னை சபித்ததையும் கோசலையிடம் கூறுவதைக் காண்கிறோம்.

கண்ணில்லாத முனிவர் தசரதன் தன் மகனை அம்பால் அடித்து (தவறுதலாக) கொன்றதைக் கேள்விப்பட்டு புலம்பலானார்.

தன் மகனின் உடல் இருக்கும் இடத்திற்கு தன்னையும் தன் மனைவியையும் கொண்டு செல்ல அவர் வேண்டினார்.

அப்படியே தசரதன் அவர்களை அழைத்துச் செல்ல, தன் குமாரனின் உடலைத் தடவியவாறே அவர் பலவாறு புலம்பி வருந்தினார்.

பின்னர் தசரதனை நோக்கிப் பின்வருமாறு சபித்தார்:

த்வதா து விஞ்ஞானான்னிஹதோ மே சுத: சுசி: |

தேன த்வாமபிசப்ஸ்யாமி சுது:கமதிதாருணம் ||

த்வயா மே – உம்மால் எனது

சுசி: – நிரபராதியாகிய

சுத: – எனது புதல்வன்

அவிஞானாந்த் து – அறியாமையால் என்றாலும்

யத் – எவ்விதத்திலும்

நிஹத: – கொல்லப்பட்டவனே

தேன – அக்காரணத்தால்

த்வாம் – உம்மை

சுது:கம் – மிகக் கஷ்டமாயும்

அதிதாருணம் – அதிகக் கொடுமையாயும்

அபிசப்ஸ்யாமி – பின்வருமாறு சபிக்கிறேன்

புத்ரவ்யசனஜம் து:கம் யதேதன்மம சாம்ப்ரதம் |

ஏவம் புத்ரசோகேன ராஜன்காலம் கமிஷ்யஸி ||

ராஜன் – அரசே

மாம சாம்ப்ரர்தம் – எனக்கு இப்போது

ஏதத் துக்கம் – இந்த கஷ்டம்

புத்ரவ்யசனஜம் – புதல்வனது பிரிவால் உண்டானது

யத் – அக்காரணத்தால்

ஏவ த்வம் – இவ்வண்ணமே நீ

புத்ரசோகேன – புத்திர சோகத்தால்

காலம் – யமனை

கமிஷ்யஸி – அடைவாயாக

அஞானத்து ஹதோ யஸ்மாத்க்ஷத்ரியேண த்வயா முனி: |

தஸ்மாத்த்வாம் நாவிஷத்யாஷு ப்ரஹ்மஹத்யா நராதிப ||

நராதிப – அரசே

க்ஷத்ரியேண – க்ஷத்திரியனாகிய

த்வயா முனி: – உன்னால் தவசி (முனிகுமாரன்)

அஞானாத் – அறியாமையால்

ஆஷு – ஆலோசனையின்றி

ஹத: – கொல்லப்பட்டான்

யஸ்மான் தஸ்மாத் – அக்காரணத்தால்

து – இவ்விஷயத்தில்

த்வாம் – உன்னை

ப்ரஹ்ம ஹத்யா – பிரம்மஹத்தி தோஷமானது

அவிஷதி ச – அணுகாது

த்வாமப்யேதாத்யஷோ பாவ: க்ஷிப்ரமேவ கமிஷ்யதி |

ஜீவிதாந்தகரோ கோரோ தாதாரமிவ தக்ஷிணா ||

ஜீவதாந்தகர: – உயிரை மாய்க்கிற

கோர: – கொடிய

ஏதாதஷ: – இப்படிப்பட்ட

பாவ: – நிலைமை

தக்ஷிணா – தக்ஷிணையின் பலன்

தாதாரம் – கொடுப்பவனை

இவ – எவ்வண்ணமோ அவ்வண்ணமே

த்வாம் அபி – உன்னையும்

க்ஷிப்ரம் ஏவ – சீக்கிரத்திலேயே

கமிஷ்யதி – அடையும்

ஏவம் சாபம் மயி ந்யஸ விலப்ய கருணம் பஹு

சிதாமாரோப்ய தேஹம் தன்மிதுனம் ஸ்வர்கம்ப்யயாத் ||

ஏவன் – இவ்விதமாக

மயி  – என் பேரில்

சாபம் ந்யஸ்ய – சாபத்தை வைத்து

கருணம் – பரிதாபமாக

பஹு விலப்ய – பலவாறாகப் புலம்பியவாறே

தேஹம் – உடலை

சிதாம் ஆரோப்ய – சிதையில் ஏற்றி

தத் மிதுனம் – அவ்விருவரும்

ஸ்வர்கம் – பரலோகத்திற்கு

அப்யயாத் – சென்றனர்.

-அயோத்யா காண்டம் 64-ம்ஸர்க்கம், ஸ்லோகங்கள் 54 முதல் 57 முடிய

இவ்வாறாக நடந்த சம்பவத்தையும் தனக்குக் கிடைத்த சாபத்தையும் கோசலைக்கு தசரதன் கூறுகிறார்.

தசரதன் ராமனைப் பிரிந்து புத்திரசோகத்திற்கு ஆளாகி உயிரையும் துறப்பதற்கு மூல காரணமாக விளங்கும் சம்பவத்தை இங்கு நாம் அறிகிறோம்.

**

Tamil Veda Tirukkural in Vishnu Sahasranama -5 (Post No.13,325)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,325

Date uploaded in London – 10 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Mahatapah (mahaatapaahaa)- Word No.122 in the VS-

Yasya jnaanamayam tapah-Mundakopanishad 1-1-9

Tapas is nature of knowledge.

Or The austerity connected with creation which is nature of knowledge is of great potency.

We may compare it with Tirukkural

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின் -குறள்  19

Alms to the needy and penance for spiritual uplift cannot be sustained

If the heavens will not give of  their bounty

Or

Unless the heavens grant their gifts, neither the giver’s generosity Nor the ascetic’s aloofness will grace this wide world.

There are two points:

1.Tiru Valluvar was a great Sanskrit scholar who never hesitated to use the Sanskrit pair DHAANAM and TAVAM. This pair is found throughout Vedic scripture; also Bhagavad Gita.

2.Second point is connection of Tavam/Tapas with rain. This already in Bhagavad Gita:

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव|
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञकर्मसमुद्भव|| 14||

annād bhavanti bhūtāni parjanyād anna-sambhavaḥ
yajñād bhavati parjanyo yajñaḥ karma-samudbhavaḥ

BG 3.14: All living beings subsist on food, and food is produced by rains. Rains come from the performance of sacrifice, and sacrifice is produced by the performance of prescribed duties.

Tiruvalluvar mentioned also the potency of Tapas. If the ascetics become angry even the governments will be thrown out.

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்.-899

If principled  men of lofty spirituality and penance are angered

Even a king will be ruined and destroyed – Kural 899

In chapter 90 titled Not offending the Great, Valluvar explains the power of ascetics in ten couplets.

We know how a poor Brahmin Chanakya brought down the mighty Nanda Empire.

It is interesting to see that great Sanskrit scholar valluvar used Tavam (tapas=penance) in19,  261, 262, 263, 264, 265, 266, 274, 295 and Dhaanam in 19, 295

As I mentioned earlier there is no Tirukkural chapter without a Sanskrit word; Sanskrit words are found in more than 600 Kurals.

xxxx

Kaamah, Kaamakrt , Kaamah , Kaamapradah – Word No. 294 to 298

VS has four words together on Kama(kaama) that is desire. Tiru Valluvar has ten couplets on desire in chapter 37 titled Elimination of Desire .

VS says Vishnu is the one who destroys desire in seekers of liberation. Another meaning is one who fulfils the desires of devotees.

The similarity lies in the principle that desire is the root cause of evil, that is the cycle of birth and death. So those who seek liberation must give up all desires.

The chapter by Valluvar on the ‘Elimination of Desire’ is the gist of Hindusim . Valluvar speaks about the Karma Rebirth and Moksha.

I used to tell my friends that even if all the Vedas,Puranas, Itihasas and Tamil Thevaram and Divya Prabandham by anti Hindu elements, 130 Kural couplets are enough to teach Hinduism. All that is said in the ancient scriptures is summarised here.

About desire and elimination following four couplets are important:

அவாவறுத்தல்‘Elimination of Desire’

அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்

தவாஅப் பிறப்பீனும் வித்து.     361

***

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்.  362

***

அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை

தான்வேண்ட மாற்றான் வரும். 367

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற் றவாஅது மேன்மேல் வரும்.      368

இன்ப மிடைறா தீண்டு மவாவென்னுந்

துன்பத்துள் துன்பங் கெடின்.    369

Desire is for all beings the seed out of which,

Is born the endless cycle of birth and death

Or

Desire is the seed which, for all lives,

unfailingly, leads to an endless cycle of birth.            361

xxxx

there is nothing worthier to be desired than release from births

and this comes only out of the absence of all desires

or

If you desire, desire for freedom from birth;

desiring not to desire, too, leads to that freedom.   362

xxxx

if one roots out all desire fully , the soul’s ultimate earning

for a good and spotlesslife, will be realised easily

or

One can do flawless deeds the way one wants to do,

when desire is destroyed completely.  367

xxxx

if the sorrow of all sorrows, which is desire,  is destroyed

continuous happiness will ensure even in this life .

or

When desire, the misery of miseries, is decimated,

unending joy abounds.     369

xxx

it is needless to say that the Bhagavad Gita mentioned desire lessness in umpteen places as control of senses.

Manu Smriti puts it beautifully,

न जातु कामः कामानामुपभोगेन शाम्यति ।
हविषा कृष्णवर्त्मैव भूय एवाभिवर्धते ॥ ९४ ॥

na jātu kāmaḥ kāmānāmupabhogena śāmyati |
haviṣā kṛṣṇavartmaiva bhūya evābhivardhate || 2-94 ||

Never is desire appeased by the enjoyment of desires; it only waxes stronger, like fire by clarified butter.— Manu-2-94.

xxx

श्रुत्वा स्पृष्ट्वा च दृष्ट्वा च भुक्त्वा घ्रात्वा च यो नरः ।
न हृष्यति ग्लायति वा स विज्ञेयो जितैन्द्रियः ॥ ९८ ॥

śrutvā spṛṣṭvā ca dṛṣṭvā ca bhuktvā ghrātvā ca yo naraḥ |
na hṛṣyati glāyati vā sa vijñeyo jitaindriyaḥ || 2-98 ||

That man is to be known as having subjugated his sense-organs, who, on having heard, or touched, or seen, or tasted, or smelt, anything, neither rejoices nor grieves.—Manu-2-98

To be continued…………………………

Tags- Manu Smrti, Desire, elimination, rebirth, root cause, misery, grief, Valluvar, Tirukkural , Vishnu Sahasranama

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-3 (Post No.13,324)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,324

Date uploaded in London – 10 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

அனந்தஹ – 659

அளவிடப்படாதவர் – வியாபித்து இருப்பதாலும் எக்காலத்திலும் அழியாது  இருப்பதாலும், எல்லாவற்றி ற்கும் ஆத்மாவாய்  இருப்பதாலும்இடம் பொருள் காலம் மூன்றிலும் அளவுபடாதவர் .

தைத்ரீய உபநிஷத் சொல்கிறது ,

ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்ம .

பிரம்மமே சத்யம் அறிவுஎல்லையற்றது

, விஷ்ணு புராணமும் சொல்கிறது 2-5-24

கந்தர்வா’ப்’ சராஸஹ சித்தாஹா கின்னரோ’ராரக  சாரணஹா

நான்தான் குணானாம் கச்சந்தி தேன அனந்தோ யாம் அவ்யயஹ

பொருள்

கடவுள் அனந்தன் ;ஏனென்றால் கந்தர்வர்கள், அப்சரஸ்கள், சித்தர்கள், கின்னரர்கள் சர்ப்பங்கள் , சாரணர் ஆகியோர் இறைவனின் எல்லையைக் காணமுடியாது

பாகவதம் 12-13-1 சொல்கிறது ,

யஸ் யாந்தம் ந விதுஹு ஸுரா – ஸுரகணா தேவாய தஸ்மை  நமஹ.

xxxx

பிரம்ம -664

பிரம்மம் எனப்படும் பரம்பொருளாகியவர்.

ப்ருஹத்வாத் ப்ருஹ்மணத்வாத் ஸத்யாதி லக்ஷணம் ப்ரஹ்ம

ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம இதி ஸ்ருதே – பிரம்மமே சத்யம் அறிவுஎல்லையற்றது

ப்ரத்யஸ்தமித- பேதம் யத்  ஸத்தா மாத்ர – மகோ சரம்

வசஸா – மாத்மஸம் – வேத்யம் தஜ் ஜானம் ப்ரஹ்ம ஸம்ஞிதம்

— விஷ்ணு புராணம் 6-7-53

பொருள்

வேறுபாடில்லாத, , பெரிய, விரிவடையும் ஸத்யமானது பிரம்மம் ஆகும்.

வார்த்தைகளின் வருணனைக்கு அப்பாற்பட்ட தானே அறியவல்லதே பிரம்மம் (பரம்பொருள் ).

xxxx

வசுரேதஹ – 692

பொன்மயமான வீரியத்தை உடையவர்.

தேவஹ பூர்வ-மபஹ ஸ்ருஷ்ட்வா தாஸு வீர்ய- மபாஸ்ருஜத்

ததண்ட  மபவத் -தைமம்  ப்ராஹ்மணக காரணம் பரம்

பொருள்

இறைவன் முதலில் தண்ணீரைப் படைத்தான் ; அதில் தனது வீரியத்தை விட்டான்.  அது போன் முட்டையாக மாறியது . அதிலிருந்து பிரம்மா உருவானார் .

(குறிப்பு – பிரம்மம் என்பது பரம்பொருள்;பிரம்மா என்பவர் த்ரி மூர்த்திகளின் ஒருவர்; பிராஹ்மண என்பது நான்கு  வர்ணங்களில் முதல் வர்ணம்; பிராஹ்மணம் என்பது ஆரண்யகம், உபநிஷத் ஆகியவற்றுக்கு முந்திய நூல் ).

xxxx

நைக ச்ருங்கஹ – 763

அநேக கொம்புகளை உடையவர்.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பவை கொம்புகள்

அ ல்லது நான்கு வேதங்களைக் கொம்பாக உடையவர்.

தைரிய ஆரண்யகம் 1-10-17 சொல்கிறது,

சத்வாரி ச்ருங்கா த்ரயோஸ்ய பாதா

த்வே சீர்ஸே சப்த ஹஸ்தாஸோஸ்ய

த் ரிதா பத்தோ வ்ருஷபோ ரோரவீதி

மகாதேவோ மார்த்யான் ஆவிவேச

பொருள்

காளை வடிவத்திலுள்ள மகாதேவனுக்கு நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள், இரண்டு தலைகள், ஏழு கைகள் மூன்று இடங்களில் கட்டப்பட்டுள்ளது ; அது மனிதர்களில் நுழைந்து சப்தத்தை உண்டாக்குகிறது

(இது சிந்து வெளியிலுள்ள பசுபதி முத்திரையைக் குறிக்கிறது என்று ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன். இந்த வருணனை ரிக்வேதத்திலும் உளது RV 4-58-3)

xxxx

துரதிக்ரமஹ – 776

எவரும் தம் கட்டளையைத் தாண்ட முடியாதபடி இருப்பவர்.

பயாதஸ்யாக்னிஸ் தபதி பயாத் தபதி சூர்யஹ

பயாத் இந்த்ரஸ் ச வாயுஸ் ச  ம்ருத்யுர்  தாவதி பஞ்சமஹ

கடோபநிஷத் 6-3

பொருள்

அவனுக்கு பயந்தே தீ எரிகிறது; சூரியன் ஒளி தருகிறான்;  அவனுக்குப் பயந்துதான் இந்திரன், வாயு, மரண தேவன் ஆகியோர் செயல்படுகின்றனர் என்று கடோபநிஷத் 6-3 கூறுகிறது.

கடோபநிஷத் 2-3-2 லும்

மஹத் பயம் வஜ்ரம் உத்யதம் — பயங்கரத்தை உண்டாக்கும் வஜ்ராயுதம் உயரே நிற்கிறது

xxxx

துர்லபஹ — 777

பக்தியாலன்றி அடைவதற்கு அரியவர் .

பக்தி ஒன்றினால்தான் அவனை அடைய முடியும் என்பது வியாசரின் வாக்கு.

ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபிஹி

நராணாம்  க்ஷிண பாபானாம் கிருஷ்ணே பக்திஹி ப்ரஜாயதே .

பொருள்

ஆயிரம் ஜன்மங்களில் செய்த தவம், ஞானம், சமாதி மூலமே மனிதர்களின் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. அதற்குப்பின்னர்தான் அவர்களுக்கு கிருஷ்ணன் மீது பக்தி ஏற்படுகிறது.

பகவத் கீதையிலும் கண்ணன் இதைச் சொல்கிறான்

பு1ருஷ: ஸ ப1ர: பா1ர்த1 ப4க்1த்1யா லப்4யஸ்த்1வனன்யயா |

யஸ்யான்த1:ஸ்தா2னி பூ4தா1னி யேன ஸர்வமித3ம் த11ம் ||8-22||

ஒப்புயர்வற்ற எல்லோரிலும் மேலான தெய்வீக புருஷர் இருப்பில் உள்ள அனைத்தையும் விட மேலானவர். அவர் எங்கும் நிறைந்திருந்தாலும், எல்லா உயிர்களும் அவரில் அமைந்திருந்தாலும், பக்தியின் மூலம் மட்டுமே அவரை அறிய முடியும்.

தொடரும்……….

—subham—

 tags-விஷ்ணு சஹஸ்ரநாம,அதிசயங்கள்,  ரகசியங்கள், மேற்கோள்கள்-3

திருமந்திரத்தில் வானிலை இயல் புவியியல்- ஆராய்ச்சிக் கட்டுரை-21 (Post No.13, 323)-

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,323

Date uploaded in London – 10 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமந்திரத்தில் வானிலை இயல் புவியியல்- திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 21

 ஏழு கடல், ஏழு மலை, ஏழு தீவு  என்பன எல்லாம் சிறுவர் கதை புஸ்தகங்களிலும், புராணங்களில் வரும் பூகோள வருணனைகளிலும் படித்த விஷயமாகும். இவைகள் அனைத்தும் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள். ஏழு, மூன்று ஆகிய இரண்டும் இந்து மத சமய நூல்களில் அடிக்கடி வரும் எண்களாகும் . ஹரப்பன்- சிந்துவெளி நாகரீகத்திலும் இந்த இரண்டு எண்கள் உடைய முத்திரைகள்தான் அதிகம் கிடைத்துள்ளன. ஏனெனில் அது இந்து நாகாரீகம் புழங்கிய  இடம். ஆனால் இந்த சொற்களை ஆன்மீக கருத்துக்களை விளக்கவே திருமூலர் பயன்படுத்துகிறார்.

ஏழு வகை மேகங்கள் மற்றும் காற்று மண்டலத்திலுள்ள அடுக்குகள் ஆகியன  பற்றி கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் மேலை  நாடுகள் அறியும்.திருமூலரோ 1200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் சொல்லிவிட்டார். அதற்கு முன்னரே ஸம்ஸ்க்ருதக் கவிஞர்கள் பாடிவிட்டனர்

மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழுந்

தேகங்கள் ஏழுஞ் சிவபாற் கரன்ஏழுந்

தாகங்கள் ஏழுடன் சாந்திகள் தாம்ஏழும்

ஆகின்ற நந்தி யடிக்கீழ் அடங்குமே.

எழுவகை மேகங்களும், எழுவகைத் தீவுகளும், எழுவகை யுடல்களும், சிவ ஞாயிறு ஏழும், ஏழுநாவினையுடைய தீயும், சாந்தியாகிய எழுவகை அடக்கங்களும் சிவபெருமான் திருவடிக்கீழ் அடங்கும்.

********

எழுவகை மேகங்கள் ஆவன: ‘சம்வர்த்த மாவர்த்தம் புட்கலாவர்த்தஞ், சங்காரித்தந் துரோணம் காளமுகி, நீலவருணமேழ் மேகப் பெயரே’ (பிங்கலம் – 71.) என்பனவாம்.

எழுவகைத் தீவுகளான: நாவலந் தீவு, சாகத்தீவு, குசத்தீவு, கிரௌஞ்சத்தீவு, சன்மலித்தீவு, கோமேதகத் தீவு, புட்கரத் தீவு என்பனவாம்.

ஏழுவகை யுடல்கள்: நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, நாற்காலின, நிலைத்திணையன, மக்கள், தேவர் என்பனவாம்.

சிவஞாயிறு ஏழு. செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு, மனம், இறுப்பு (புத்தி) என்னும் அறிதற்கருவி ஏழுமாகும். சிவபாற்சுரன் சிவசூரியன். எழுவகையடக்கம் மேற்கூறிய பொறிகள் ஐந்து, மனம், இறுப்பு ஆகிய ஏழும் அடங்குதல். இறுப்பு: புத்தி.

தேகங்கள் ஏழு – எழுவகைத் தோற்றங்கள்.

சிவபாற்கரன் ஏழும் – சிவசூரியன் என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மனமும் புத்தியம் ஆக ஏழு.

தாகங்கள் ஏழு – எழுநா. அக்கினி

சாந்திகள் ஏழு – ஐம் பொறிகளையும் மனம், புத்தி இவைகளையும் அடக்கி இருக்கும் நிலை.

The clouds seven, the sea-girt continents seven,

The bodies seven, the Siva-Suns seven,

The appetites seven, the alleviations (Santis) seven,

All these contained are,

At the Feet of (Dancing) Nandi.

xxxx

ஏழு வளைகடல் எட்டுக் குலவரை

யாழும் விசும்பினில் அங்கி மழைவளி

தாழு மிருநிலந் தன்மை யதுகண்டு

வாழ நினைக்கில தாலய மாமே.     2866

7 கடல், 8 மலை முதலானவற்றுக்கு இடையே இருக்கும் நிலம் ஆலயம்.

Reach the Holy Temple of Sahasrathala

Seven the circling Seas, eight the Mountain ranges

In the depths of Space is Fire, Rain and Wind

And the Land expansive;

Visioning it, if you dwell in it

That verily a Holy Temple is ganges

xxxxx

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி

அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி

ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்

குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.410

மேகங்கள் மலைக்கண் தங்குதலால் நிலத்தில் இறங்கிய நீராகிய குலமகள் உலகத்தில் தங்கியும், கடலாகியும் நின்று இனிய உணவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறைவன் `நாதம்` என்னும் குண்டத்தில் நெருப்பை வளர்த்துவிட்டான். அஃதாவது, `அழித்தல் தொழிலை மேற்கொண்டான்` என்பதாம்.

xxxxx

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்

உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்

குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச

விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.-409

பல உயிர்கட்கு இடம் அளிக்கின்ற அகன்ற நிலமும், குளிர்ந்த எட்டு உயர்மலைகளும், நீரை மிகத் தருகின்ற எழுகடல் நீர்ப்பரப்பும் முதலாக அனைத்துப் பொருள்களையும் சிவபெருமான் தனது நினைவு மாத்திரத்தால் காய்தலைச் செய்யும் நெருப்பை வைத்து அழித்து உருவில்லனவாகச் செய்துவிடுவான். இதில் வியப்பில்லை.

423: The Fire Spreads*

The earth on which we tread

The snow-clad mountains eight.

The seven seas whose ebbing tides roar,

Over all these and else

The Fire that resides in Muladhara spreads;

And the spreading conflagration turned

Earth and sky seem alike;

–This the truth, imagination none.

xxxxx

2016ம் ஆண்டில் நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதி

Following is from my old article published in 2016

நாங்கள் எல்லோரும் சிறுவர்களாக இருந்தபோது,  பல பாலர் பத்திரிக்கைகளில் வரும் மந்திரவாதி, மாயா ஜாலக் கதைககளைப் படிப்போம். அதில் பல கதைகளில் 7 மலை, 7 கடல் தாண்டி ஒரு குகையில்…………………..!! என்று படிப்போம். நம்மாழ்வாரும் 7 மலை, 7 கடல்  பாடி இருக்கிறார்:–

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து

பேரேன் என்றுஎன் நெஞ்சு நிறையப் புகுந்தான்

கார் ஏழ்கடல் ஏழ்மலை ஏழ்உலகு உண்டும்

ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே

பாடல் 3969, நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பொருள்:-

“திருப்பேர் நகரில் உள்ள பெருமான் இன்று வந்து நின்று என் உள்ளத்தில் புகுந்து  இதைவிட்டுப் போகேன் என்று உறைகின்றான்.

ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் உள்ள இந்தப் பூமியை அப்படியே உண்டும்,  வயிறு நிறையாத, வயிற்றை உடைய அப்பெருமானை நான் உள்ளத்தில் சிறைப் படுத்தி விட்டேன்.”

இதில் அதிசய விஷயம் மேகம்/ மழை/ காற்று மண்டலம் பற்றியதுதான். இது பற்றி நம்மாழ்வாரும், காளிதாசரும் பாடியிருப்பது இந்துக்களின் கால நிலை பற்றிய அறிவைக் காட்டும்

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.

முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது  புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே –  நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.

 ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும்  சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான்.  அங்கே இயங்கும் காற்று பரவாஹ.

இதற்கு ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகம்:–

ஆவஹோ நிவஹஸ்சைவ உத்வஹ: சம்வஹஸ்ததா

விவஹ: ப்ரவஸ்சைவ பரிவாஹஸ்ததைவ ச

(ஒவ்வொரு மழைக்கும் உலகில் நடந்த அதிசய நிகழ்ச்சிகள் மூலம் பழைய கட்டுரையில்விளக்கியுள்ளேன்.)

 *******

ஏழுவகை மழைகள்:-

சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)

ஆவர்த்தம்- நீர் மழை

புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை

சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)

துரோணம் – மண் மழை

காளமுகி- கல் மழை

நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)

 ஏழு மலைகள்

இமயம்/கயிலை, மந்த்ரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம்

 ஏழு கடல்கள்

உவர் நீர், தேன்/மது, நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச் சாறு

 உப்புதேன்மதுஒண் தயிர்பால்கரும்பு,

அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்

துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்,

தப்பிற்று அவ் உரைஇன்று ஓர் தனுவினால்.

To be continued……………………………………………………..

—–subham—-

வானிலை இயல்,  புவியியல்,  திருமந்திர,  ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 21,  ஏழு கடல், ஏழு மலை, ஏழு தீவு 

ராமாயணத்தில் சாபங்கள் (21) அம்பால் அடிக்கப்பட்ட முனிகுமாரன் தசரதனை நோக்கிக் கூறியது! (Post.13,322)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.322

Date uploaded in London – 10 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (21) 

ராமாயணத்தில் சாபங்கள் (21) அம்பால் அடிக்கப்பட்ட முனிகுமாரன் தசரதனை நோக்கிக் கூறியது! 

ச.நாகராஜன்

 அயோத்யா காண்டத்தில் 63-வது ஸர்க்கமாக அமைவது ‘தசரதன் தான் முனிகுமாரனைக் கொன்றதைச் சொல்வது.

 சோகத்தால் புண்பட்ட மனதுடன் கவலையில் மூழ்கி இருந்த தசரதர் சிறிது கண் விழித்தார்.

அருகில் இருந்த கோசலையை நோக்கி முன்னர் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலானார்.

‘”சப்தத்தைக் கொண்டே இலக்கை வீழ்த்துவார்’ என்று என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லப்பட்டது.

ஒரு சமயம் விலங்குகள் நீர் அருந்த வரும் சரயு நதியின் துறையில் எழுந்த ஒரு சப்தத்தைக் கேட்டேன். அது யானையுடையது என்று நினைத்து என் அம்பை விடுத்தேன். ஆனால் ‘ஹா, ஹா’ என்று நீரில் விழும் ஒரு மனிதன் எழுப்பும் சப்தத்தைக் கேட்டு அங்கு விரைந்தேன்.

அங்கு ஒரு ரிஷி குமாரன் என் அம்பால் அடிபட்டு ரத்த,ம் ஒழுக வீழ்ந்திருந்ததைக் கண்டேன்.

அவன் புலம்பியவாறே தன் தந்தை, தாய் இருக்குமிடத்தைச் செல்லும் வழியைக் காட்டி அவர்களிடம் நடந்ததைக் கூறுமாறு சொன்னான்.”

இயமேகபதி ராஜன்யதோ பிதுராஸ்ரம: |

தம் ப்ரஸாதய கத்வா த்வம் ந த்வாம் சங்குபித சபேத் ||

அயோத்யா காண்டம் 63-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 45

ராஜன் – அரசே!

மே – எனது

பிது: – தந்தையாருடைய

ஆஸ்ரம: – ஆசிரமமானது

யத: – எவ்விடத்தில் இருக்கிறதோ அதற்கு

இயம் – இதோ இருக்கும்

ஏகபதீ – ஒற்றையடிப்பாதை தான் வழி.

த்வம் – நீர்

தம் கத்வா – அங்கு சென்று

ப்ரஸாதய – அவரைச் சமாதானப்படுத்துவீராக.

சங்குபித: – பூரண கோபம் கொண்டவராய

த்வாம் – உம்மை

சபேத் ந – சபியாது இருப்பார்.

தன் தந்தையிடம் நடந்ததைச் சொன்னால் அவர் சபிக்காமல் இருப்பார் என்று முனி குமாரன் கூறுகிறான்.

சாபம் தரப்படவில்லை என்றாலும் சாபம் தரப்படக் கூடும் என்ற சந்தர்ப்பத்தை இந்த இடம் விளக்குகிறது.

செய்வதறியாது திகைத்த தசரதன் அவனது தந்தையைச் சந்தித்தான்.

முனி குமாரன் ஊகித்தபடி வருத்தப்பட்ட அவனது தந்தையார் சாபம் கொடுக்கத்தான் செய்தார்.

அதை அடுத்துப் பார்க்கலாம்.

**

Tamil Veda Tirukkural in Vishnu Sahasranama -4 (Post.13,321)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,321

Date uploaded in London – 9 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Sarvaadihi – Word No.99 in the VS

One who is the first cause of all elements.

The very first couplet/ Kural of Thiru Valluvar also says this,

Kural Verse 1 “A” is the first and source of all the letters. Even so is God Primordial the first and source of all the world.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.– Kural 1

Bhavad Gita 10-8 also says this,

अहं सर्वस्य प्रभवो मत्तसर्वं प्रवर्तते |
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विता||10- 8||

ahaṁ sarvasya prabhavo mattaḥ sarvaṁ pravartate
iti matvā bhajante māṁ budhā bhāva-samanvitāḥ

BG 10.8: I am the origin of all creation. Everything proceeds from Me. The wise who know this perfectly worship Me with great faith and devotion.

xxxx

Bhagavaan – Word Number 558

Lordliness, prowess, fame, beauty, knowledge, non-attachment- the combination of all these six attributes is Bhaga. One who possesses these six attributes is Bhagavaan– Vishnu Purana 6-5-74

This very word Bhagavan is in the very first couplet/Kural Aadhi Bhgavan

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.- 1

Aadhi Bhagavan is a pure Sanskrit word. Valluvar uses a lot of Sanskrit words. Over 600 out of 1330 Tamil couplets have Sanskrit words. More over neither Aadhi nor Bhavan is in one lakh words of Sangam Books. Some half baked anti Sanskrit gangs said that is the name of Valluvar’s parents. Even if one agrees with it, the words are not found in Sangam literature.

Vishnu Sahasranama has another word Aadhi deva-334. That also has the same meaning and it is found in later Divya Prabandham.

Linguists agree that Valluvar and his Tirukkural belong to fifth or sixth century CE. All Adhikaaras in the book has the Sanskrit word ADHIKAARA/chapter.

xxxxx

Sarva yoga -vinihsrtah -Word No.103 in the VS-

One who stands aside from all bondage.

Brhad Aaranyaka  Upanishad 4-3-15 says,

Asango hi ayam purusha- this purusah is without any attachment/

Tiru Valluvar uses the exact word /without any attachment/ stands aside from all bondage:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு. — குறள் 350

The only attachment that will help to sever all other bonds and attachments, is the attachment to the Lord who is without any attachment.

Cling to the one who clings to nothing; And so clinging, cease to cling.

xxxx

Satya sandHah-510; Satyadharmaa-529; Satayah-212; Sataya paraakramah-213

Truth is God according to Hinduism. God is Truth and Truth is God. Word Satya/Trueth is attributed to God in 4 or 4 places . let us take one place.

Satyah (Word 212):

One who is embodied  as virtue of Truth.

Shankara quotes several scriptures to link God and Truth.

Tiru Valluvar has allocated one full chapter for Truth. In other chapters also he praised the virtue of Truth.

Valluvan was a great Sanskrit scholar. He has translated or adapted over 200 Sanskrit verses from various Hindu books .His use of DHAANAM and TAVAM together in many Kurals shoe he has mastered Bhagavad Gita.

When he praised Truth he used the words:

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்
செய் வாரின் தலை-295

If one is truthful in word and thought

It is better than doing penance/TAVAM and charity/DHAANAM—Kural 295.

****

He goes one step up than other sanskrit poets and says,

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று–297

If one speaks the Truth and only the Truth

He need not practise other rituals – Kural 297

****

He confirms it in another couplet,

Lamps do not give the light that holy men desire

It is in the light of Truth that illuminates their path- 299

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு- 299

This couplet equates Truth with God like the words in the VS.

More Translations of the above three couplets:

One who tells the truth, with all his heart, is ahead of those

who do  penance and charity-295

XXX

Not lying, not lying, if practiced, makes it acceptable

not to do, not to do other righteous deeds.   297

Not lying, if practiced unfailingly, makes it worthwhile

to refrain from not doing the righteous deeds.

XXX

All light is not light; for noble scholars,

truthfulness is the true light of enlightenment.-299

TO BE CONTINUED…………

 tags- Tamil Veda, Tirukkural,  Vishnu Sahasranama 4, satya, truth, Kural 1, Bhagavan, without attachment