வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் –இலங்கை  ஆலயங்கள்  – 20 (Post.12,561)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,561

Date uploaded in London – –  –  7 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 PICTURES ARE FROM WIKIPEDIA

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 20 

40.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவில் , யாழ்ப்பாணம்

VAITHEESWARAN KOVIL, VANNARPANNAI, JAFFNA

யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள இந்த சிவன் கோவிலுக்கு செட்டியார் கோவில் என்ற பெயரும் உண்டு; காரணம், வைத்திலிங்க செட்டியார் என்பவர் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோவில் இது . இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் இலங்கையில் இந்துமதம் தழைக்க வித்தூன்றிய ஆறுமுக நாவலர்,  முதலில் சமயச் சொற்பொழிவு ஆற்றிய கோவில் இதுதான்

இந்தியாவிலிருந்து வந்த கோபால செட்டியார்  வணிகம் மூலம் பெரும் பொருளை ஈட்டினார். இதனால் அப்போது ஆட்சி செய்துவந்த ஹாலந்து நாட்டு டச்சுக்காரர்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது  அவருடைய மகன்தான் வைத்திலிங்க செட்டியார். அவரும் முத்துக்குளித்தல் முதலிய தொழில்கள் மூலம் பெரும் பொருள் ஈட்டினார். மேலும் தனது செல்வத்தை தர்மப்பணியில் செலவிட்டார். கூழங்கைத் தம்பிரான் கூறியபடி சிவன் கோவிலை   எடுப்பித்தார். அங்கே வைத்தியநாதனையும் தையல் நாயகியையும் பிரதிஷ்டை செய்தார்.

சோழ  நாட்டில்  மிகவும் பிரசித்தமான கோவில் மாயூரம் / சீர்காழிக்கு அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோவில் ஆகும். அந்த வட்டார மக்களுக்கு வைத்திய நாதனே குல தெய்வம் என்பதும் குறிப்பிடத்தக்கது

வண்ணார்பண்ணை கோவில் உருவான வரலாறு சுவையான வரலாறு. போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவ வெறியர்கள் இலங்கையிலுள்ள 4000 கோவில்களில் பெரும்பாலானவற்றை தரை மட்டமாக்கி அந்தக் கற்களைக் கொண்டு சர்ச்சுகளையும் கோட்டைகளையும் கட்டினார்கள். நெதர்லாந்து/ ஹாலந்து நாட்டிலுள்ள கிறிஸ்தவர்ளுக்கு மதவெறி கொஞ்சம்  குறைவு . ஆகையால் இந்துக்  கோவில்களைக் கட்டுவதற்கு அனுமதித்தார்கள். ஆனால் அதற்கும் பணம் வசூலித்துவிடுவார்கள் ; வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்காரர்கள் அல்லவா !

பனங்காமம் நல்ல மாப்பாண வன்னியனை தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் பிடித்து சிறையில் அடைத்தனர் டச்சுக்காரர்கள் . வைத்திலிங்க செட்டியார் தனது செல்வாவாக்கைப் பயன்படுத்தி விடுதலை செய்தார். அதற்கு நன்றி பாராட்டும் முகத்தான்,  அவர் 20,000 பனை மரங்களை கோவில் கட்டுவதற்கான வேலைகளுக்கு அளித்தார் . அவரை விடுதலை செய்ய, செட்டியார் கொடுத்த தொகை 1200 டாலர். அது அக்காலத்தில் பெரும் தொகை . டச்சுக்காரர்கள் எவ்வளவு கில்லாடிகள் என்பதை அறிய இது உதவும் .

மாப்பாண வன்னியன் பனை மர நன்கொடையோடு நிற்கவில்லை. வைத்திய நாத சுவாமி- தையல் நாயகி அம்மனின் நித்திய பூஜைக்காக துணுக்கை வட்டாரத்திலுள்ள ஒரு கிராமத்தையும் கோவிலுக்கு தானம் செய்தார் அதன் நெல்வயல்களும் குளமும் கோவிலுக்குச் சொந்தமாயின.

1791-ம் ஆண்டில் கோவில் கட்டப்பட்டது. நித்திய பூஜைகளோடு ஆண்டுதோறும் விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டன. பிற்காலத்தில் வசந்த மண்டபம், ராஜகோபுரம் எழுப்பப்பட்டன.

மார்ச் மாதம்வரும் பெளர்ணமியில் 20 நாள் சிவ பெருமான் உற்சவம் நிறைவு பெறுகிறது . ஜுலை மாத அமாவாசையில் அம்பாளின் தீர்த்த உற்சவத்தோடு தேவியின் திருவிழா முடிவடையும் .

ஏ . முத்துத் தம்பி பிள்ளை எழுதிய யாழ்ப்பாண வரலாற்றில் மேல் விவரம் கிடைக்கும் JAFFNA HISTORY, A. MOOTOOTAMBY PILLAY.

XXXX

41.நல்லூர் சட்டநாதர் கோவில்  , யாழ்ப்பாணம் Saddanathar Sivan Kovil

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட முதல் ஆரியச் சக்கரவர்த்தி கூழங்கை சிங்கை ஆரியன்,  நல்லூர் நகரை அமைத்து ,  நான்கு திசைகளில் 4 கோவில்களையும் கட்டினார் ; வட  திசைக்குக்  காவலாக எழுப்பப்பட்டது சட்டநாதேசுவரர் கோவில் ஆகும் .

அவரை அடுத்து ஆட்சி செய்த ஆரிய சக்ரவர்த்திகளும் கோவில்களை நன்கு பராமரித்தனர் குறிப்பாக கனக சூரியன் சிங்கை ஆரியன் (14401478), இந்து தர்மத்தைப் போற்றினார் .

அதற்குப்பின்னர் கிறிஸ்தவ வெறியர்கள் போர்ச்சிகீசிய கவர்னர் பிலிப் தெ ஒலிவீர  PHILIP DE OLIVEIRA உத்தரவில் கோவிலை தரை மட்டம் ஆக்கினர்.  அதற்கு முன்னர், கோவில் குருக்கள்கள் , விக்கிரகங்களை குளத்தில் போட்டு மறைத்து வைத்தனர்.

தென்னாட்டுக் கோவில்களை மாலிக்காபூர் என்னும் மத வெறியன் கொள்ளை அடித்த போது , அர்ச்சகர்கள் கையாண்ட இதே தந்திரத்தை யாழ்ப்பாணத் தமிழர்களும் கையாண்டனர்.

1621-ம் ஆண்ட்டில் தரை மட்டமான இந்துக்கோவில், பீனிக்ஸ் PHOENIX  பறவை போல, 1815-ம் ஆண்டில் புத்துயிர் பெற்றது . தம்பையா பிள்ளை , தெய்வீக ஆற்றல் பெற்று, குளத்தில் கிடந்த பல விக்கிரகங்களை மீட்டார்.

கிடைத்த விக்கிரகங்களில் நல்லை நாயகி அம்மன் விக்கிரகம் மட்டும் புதுக்கருக்கு அழியாமல், முழு வடிவில் கிடைக்கவே , கோவில் கட்டி அதை பிரதிட்டை செய்தார். அதே நேரத்தில் மூலஸ்தானத்தில் சிவலிங்கமும் நிறுவப்பட்டது.ஏனைய விக்கிரகங்கள் யாழ்ப்பாண மியூசியத்துக்கு வழங்கப்பட்டன. கஜ லெட்சுமி, வள்ளி தெய்வானை, தட்சிணா மூர்த்தி , சனைச்சரன் (சனீஸ்வரர்), ஒற்றைக் கல்லிலான மயில் மேலமர்ந்த சுப்பிரமணியர் ஆகியனவும் குளத்திலிருந்து மீட்கப்பட்ட சிலைகள் ஆகும். இவை அனைத்தும் விஜய நகர சாம்ராஜ்ய காலத்தவை..

தம்பையா பிள்ளை வம்சத்தில் வந்துதித்த  சிவப்பிரகாச பிள்ளை , தம்பையா பிள்ளை ஆகியோர் பரிவார மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து, மணிக்கூண்டு கோபுரத்தை எழுப்பினர். நர்மதை நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஐந்து ஸ்வயம்பூ லிங்கங்களை டாக்டர் டி . நல்லைநாதன் நிறுவி புண்ணியம் சம்பாதித்துக் கொண்டார்.

நர்மதா நதிக்கரைகளில் இயற்கையில் கிடைக்கும் லிங்க வடிவக் கற்களை இந்தியா முழுதும் காணலாம் . நல்லை நாதன் பிரதிஷ்டை செய்த பஞ்ச லிங்கங்களில் சக்கரக் குறியீடுகள் இருப்பது கூடுதல் சிறப்புடைத்து .

நல்லை நாயகி சமேத நல்லை நாத லிங்க மூர்த்திக்கு , எல்லா சிவாலயங்களிலும் நடத்தப்படும் அனைத்து ஆராதனைகளும் சீரும் சிறப்புடனும் நடத்தப்பட்டு வருகின்றன .

TO BE CONTINUED………………………………………………

Tags-  நல்லூர் ,சட்டநாதர் கோவில்  , யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, வைத்தீஸ்வரன் கோவில் , செட்டியார் , டச்சுக்காரர், மாப்பாண வன்னியன்

ஶ்ரீ கௌடபாதர் – 2 (Post No.12,561)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,561

Date uploaded in London – –  –  7 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மகான்களின் வாழ்வில் ..

ஶ்ரீ கௌடபாதர் – 2

ச.நாகராஜன்

அரசமரத்தில் அமர்ந்த பிரம்மராக்ஷஸர்

ஶ்ரீ கௌடபாதர் வங்காளத்தைச் சேர்ந்தவர்.

வங்காளத்தின் இன்னொரு பெயர் கௌடம்.

ப்ரம்மராக்ஷஸனாக ஆனவுடன் அவர் வானில் பறக்க ஆரம்பித்தார்.

ஒரு நாள் நர்மதா நதிக்கரையோரம் இருந்த அரச மரம் ஒன்றில் அவர் உட்கார்ந்து இளைப்பாறினார்.

அந்த அரசமரத்தைக் கடந்து பல பிராமண பண்டிதர்கள் சென்று கொண்டே இருந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரிடமும் ப்ரம்மராக்ஷஸரான கௌடபாதர், ‘பச்’ என்பதுடன் ‘க்ட’ என்பதைச் சேர்த்தால் என்ன வரும் என்று கேட்டார்.

எந்த ஒருவர் சரியான விடையைச் சொல்கிறாரோ அவர் போக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் எவர் ஒருவர் சரியான விடையைச் சொல்லவில்லையோ அவர் ப்ரம்மராக்ஷஸருக்கு ஆகாரம் ஆனார்.

‘பச்’ என்ற வேர் பாணினி சூத்திரத்தின் படி (8/2/52) பக்கா என்பதாகும்.பக்தா என்றால் அது தவறாகும்.

சந்த்ர சர்மா

ஒரு நாள் ஒரு அழகிய பிராமணப் பையன் பதஞ்சலி மஹாபாஷ்யத்தைக் கற்பதற்காக சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

அவன் நர்மதை நதிக்கரையில் இருந்த அந்த அரசமரத்தின் வழியே சென்று கொண்டிருந்தான்.

வழக்கம் போல ப்ரம்மராக்ஷஸர் தனது வழக்கமான கேள்வியைக் கேட்டார்.

உடனடியாக அவருக்குச் சரியான விடை தந்தது.

ப்ரம்மராக்ஷஸருக்குத் தான் விடுதலையாகும் தருணம் வந்து விட்டது என்பது புரிந்தது.

இந்தப் பையன் வடிவத்தில் தனக்கு விடுதலை கிடைக்கப் போகிறது என்பதை அவர் புரிந்து கொண்டார்.

அந்தப் பையனை மரத்தின் மீது ஏறுமாறு கூறினார். மஹாபாஷ்யத்தின் அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொள்ளுமாறு கூறினார்.

ஆனால் அந்தப் பையனுக்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

மஹாபாஷ்யத்தின் அனைத்துப் பாடங்களும் கற்று முடியும் வரையில் அந்தப் பையன் அந்த மரத்திலேயே இருக்க வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை.

மஹாபாஷ்ய விளக்கவுரை மரத்தின் மீது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

அந்தப் பையன் தன் தொடையை அறுத்து அங்கிருந்து பீறிட்டு வரும் இரத்தத்தால் மரத்தின் மீதிருந்த இலைகளில் எல்லாப் பாடங்களையும் எழுதி வரலானான்.

ஒரு விதக் குறுக்கீடுமின்றி ஒன்பது நாட்கள் இந்த விளக்கவுரை தொடர்ந்தது.

ஒன்பது நாட்கள் கழிந்த பின்னர் பத்தாம் நாள் இருவரும் மரத்திலிருந்து இறங்கினர்.

அந்த இலைகளில் எழுதிய மஹாபாஷ்யமே இன்று நமக்குக் கிடைத்திருக்கும் மஹாபாஷ்யம் ஆகும்.

அதனுடைய பெயர் பாணிபாஷ்யம் ஆகும்.

அந்தப் பையனின் பெயர் சந்த்ர சர்மா.

கௌடபாதர் விடுதலை அடைவது என்பது முடியவே முடியாது என்று பதஞ்சலி மஹரிஷி உணர்ந்து கொண்டதால், தானே சந்த்ர சர்மாவாக உருவெடுத்தார்.

ப்ரம்மராக்ஷஸரான கௌடபாதரும் விடுதலை அடைந்தார்.

கோவிந்த பகவத்பாதர்

சந்த்ர சர்மா சந்யாச தீக்ஷை பெற்றார்.

கோவிந்த பகவத்பாதர் என்ற புதிய நாமதேயத்தையும் (பெயரையும்)

பெற்றார்.

அவரே ஆதிசங்கரரின் குருவாகவும் ஆனார்.

இறைவனின் தெய்வீகத் திருவிளையாடலில் பதஞ்சலி முனிவர், ஶ்ரீகௌடபாதர், கோவிந்தபகவத்பாதர், ஶ்ரீ சங்கரர் ஆகியோர் முக்கியமான அற்புத பாத்திரங்கள். அதாவது இறைவனின் அம்சங்கள்!

**

Find out Indra’s 26 Names (Post No.12,559)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,559

Date uploaded in London – –  –  6 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Find out Indra’s 26 Names (Post No.12,559)

Just to help you, I have italicized the initial letters and shown them Bold:

AKHANDALADIVA
JJVASAVARMPLS
IBIDOJA CAUEP
K  PULUKAGRKA
R  UA   SHAHT
TSVRITRAHANAI
 UAU  I  VDSU
 RJHGOVIDAARG
MARUTMAN NRAR
 PATSVARANAVA
 APAKASASANAD
ITASASIPATI H
SUNASIRASIRVA
  IBALARATI N
SATAMANYU NAV

 Answers 

Amarakosa, Sanskrit thesaurus, gives 35 names for Indra.

Please go to ANWERS in swamiindology.blogspot.com

சண்டிலிப்பாய் கல்வளை பிள்ளையார்- இலங்கைத் தீவின் ஆலயங்கள்—19 (Post No.12,558)

Urumpirai Temple Picture  from Wikipedia

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,558

Date uploaded in London – –  –  6 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxx 

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 19 

36.யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் கல்வளை பிள்ளையார் கோயில்

யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாய் கல்வளையிலிருக்கும் பிள்ளையார் கோயில், இன்னும் ஒரு புகழ்பெற்ற விநாயகர் ஆவார் . இவருடைய சிறப்பு என்னவென்றால் 200 ஆண்டுகளுக்கு முன்னரே அந்தாதிப் பாடல் பெற்றதாகும். யாழ்ப்பாணத்தை  ஹாலந்து  நாட்டு டச்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில் சின்னத் தம்பி புலவர் வாழ்ந்து வந்தார். அவர் இந்தப் பிள்ளையார் மீது அந்தாதி இயற்றியுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் மத்தியில் கல்வளை நடுவக்குறிச்சி  என்று இரண்டு கிராமங்கள் உள்ளன. கல்வளையில் பிள்ளையார் வடிவக் கல் கிடைத்தவுடன் அதை கணபதியாக வழிபடத் துவங்கினார்கள்.

நல்லூரில் கல்வியாலும், வாரி வழங்கும் வள்ளல்தன்மையாலும் கீர்த்திபெற்று விளங்கியவர் வில்லவராய முதலியார் ஆவார் . அவருடைய புதல்வர்தான் சின்னத் தம்பிப் புலவர் யாழ்ப்பாணத் தமிழர்களின் சம்பிரதாயம், சட்ட திட்டங்களைக் கூறும் நூல் “தேச வழமை” எனப்படும்; அந்த நூலை காலத்துக்கு ஏற்றபடி எழுதித்தர டச்சு அரசாங்கம் 12 பேரை நியமித்தது. அதற்குத் தலைமை தாங்கியவர் வில்லவராய முதலியார் .  1707-ம் ஆண்டில் நூல் முழுமை பெற்றது அவரது வீட்டில் இரவு நேரத்தில் கூழங்கைத் தம்பிரான் சமயச் சொற் பொழிவு  ஆற்றிவந்தார். அதைகேட்டுக் கேட்டு  கவிகள் புனையும் ஆற்றலைப் பெற்றார் சின்னத்தம்பி;  அவர் இந்தியாவில் உள்ள சைவத்திருத் தலங்களையும் தரிசித்தார். இறைவன் மீதும், வள்ளல்கள் மீதும் கவி பாடினார் அவர் இயற்றிய நூல்கள் –மறைசையந்தாதி , கல்வளையந்தாதி , பறாளை விநாயகர் பள்ளு (சுழிபுரம், பறாளை) , நாலு மந்திரி கும்மி, கரவை வேலன் கோவை (கரவெட்டி).

கல்வளை அந்தாதியை 1934-ம் ஆண்டில் சைவ பரிபாலன சபை வெளியிட்டது ; இதில் அவர் பிள்ளையார் பெருமைகளைக் கூறி, என்ன  பலன் கிடைக்கும் என்றும் பாடியுள்ளார்.

தற்காலத்தில் கற்பக விநாயகர் மட்டுமின்றி பைரவர் கோவிலும்  உள்ளது .

இந்த வட்டாரத்தில் இப்போது பல கோவில்கள் பிரபலமாகிவிட்டன . அவை —

சீரணி நாகபூசணி அம்மன் கோவில்

சண்டிலிப்பாய் விசுவநாதீசுவரர் கோவில்

சண்டிலிப்பாய் ஐயனார் கோவில்

இரட்டைப்புலம் வைரவர் கோவில்

முருகமூர்த்தி கோவில்

ராஜராஜேசுவரி கோவில்,

பத்திரகாளி அம்மன் கோவில்

XXXXX

37. ஓமந்தை பிள்ளையார் கோவில்,  வவுனியா, Omanthai Pillaiyar Kovil

இந்தப் பிள்ளையார் கோவில் ஓமந்தை, கொந்தக்காரன்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

வவுனியாவுக்கு பத்து மைல் தொலைவில் , யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் வழியில், ஓமந்தை கிராமம் இருக்கிறது. கோ மந்தை – மாடுகள் மேயும் இடம் — என்பது ஓமந்தையாக மருவி இருக்கலாம் .

பிள்ளையார் கோவில் மூலமாக இப்போது இது பிரசித்தமானாலும் ஒரு காலத்தில் வன்னி தளபதிகள் இங்கே வசித்தனர். ஊருக்கு அருகில் பாழடைந்த சிவன் கோவில் இருப்பது இதன் பழமையைக் காட்டுகிறது. இந்தத் தகவல்களை புராதன யாழ்ப்பாணம் என்ற ஆங்கில நூலில்  ராஜநாயகம் கூறுகிறார். அந்தக் காலத்தில் ஜம்புகோவலத்தில்  இறங்கிய அரச மரம் ஊர்வலமாக அனுராதபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது , ஓமந்தையில் தங்கிச் சென்றதாம்.

இங்குள்ள பிள்ளையார் கோவில் , சாலை ஓரமாக ஒரு கொட்டகையில் இருந்தது . பிற்காலத்தில் கல் கட்டிடமாக மாறியது. சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர், ரயில் பாதை அமைக்க சர்வே எடுக்க வந்தவர்கள் , பொங்கல் வைத்து 100 கொழுக்கட்டை செய்து வழிபட்டனர் . ரயில் பாதையும் எளிதில் அமைந்தது . எல்லாம் பிள்ளையார் அருள் என்று பக்தர்கள் மகிழ்ந்தனர்.

XXX

38.அரியாலை பிள்ளையார் கோவில்

அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளையார்  கோவில்களில் பழமையானதும்……………………………. PLEASE CONTINUE READING IN

swamiindology.blogspot.com

ஶ்ரீ கௌடபாதர் – 1 (Post No.12,557)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,557

Date uploaded in London –  6 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மகான்களின் வாழ்வில் .. 

ஶ்ரீ கௌடபாதர் – 1

ச.நாகராஜன் 

பதஞ்சலி முனிவர்

சம்ஸ்கிருத இலக்கியம் அகன்றது. ஆழ்ந்தது. அதில் உள்ள கோடிக்கணக்கான நூல்களை முற்றும் கற்றவர் இல்லை. வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கலாம், அனைத்து சாஸ்திரங்கள் மற்றும் கலைகள் பற்றிய அவ்வளவு அபூர்வமான நூல்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. 

சம்ஸ்கிருத இலக்கணத்தை யாத்தவர் மாமுனிவரான பாணினி. ஆனால் அவரது இலக்கணத்தை சாமானியனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதை சுலபமாகப் படிக்கும் வகையில் பதஞ்சலி முனிவர் அதற்கு மஹாபாஷ்யம் – விரிவுரை – ஒன்றை எழுதினார். இந்த விரிவுரையே ஒரு அபூர்வமான பொக்கிஷம்.

காத்யாயன மஹரிஷி பாணினி இலக்கணத்திற்கு ஒரு உரையை – கார்திக் – எழுதினார்.

பாற்கடலில் லக்ஷ்மி பள்ளி கொண்ட நாராயணன் சேஷசயனத்தில் பள்ளி கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிவோம். நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் ஆதி சேஷனே அத்ரி மஹரிஷியின் புத்திரராக அவதரித்தார். பதஞ்சலி என்ற பெயரைக் கொண்டார். ஆதிசேஷனின் இதர அவதாரங்கள் : வாசுகி, த்ரேதா யுகத்தில் லக்ஷ்மணன், த்வாபர யுகத்தில் பலராமர், கலியுகத்தில் பதஞ்சலி.

மூன்று நூல்கள்

மனித குலம் உய்வதற்காக பதஞ்சலி முனிவர் மூன்று உயரிய அரிய நூல்களை யாத்தார்.

1) பதஞ்சலி யோகசூத்ரம்

2) மஹாபாஷ்யம்

3) சரக சம்ஹிதா.

பதஞ்சலி முனிவரின் இன்னொரு பெயர் சரகர்.

ஆயிரம் சீடர்கள்

பதஞ்சலியின் உயரிய ஞானத்தைக் கண்டு ஏராளமானோர் அவரை அண்டி அவரது சிஷ்யர்களாக ஆயினர்.

இப்படி ஓராயிரம் சிஷ்யர்கள் அவரிடம் சேர்ந்தனர். அவரைக் குருவாகக் கொண்டனர்.

இவர்களில் ஒருவரே ஶ்ரீ கௌடபாதர்.

இவரே பதஞ்சலி முனிவரின் அரிய ஞானத்தை உலகிற்கு அளித்துப் பரப்பியவர் எனலாம்.

பதஞ்சலி முனிவர் வாழ்க்கையிலும் கௌடபாதர் வாழ்க்கையிலும் ஏராளமான அற்புத நிகழ்ச்சிகள் உண்டு.

ஒரு சமயம் பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் ஆயிரம்கால் மண்டபத்தில் தங்கி இருந்தார்.

இந்த மண்டபத்தில் ஆயிரம் சிஷ்யர்களும் குழுமி தங்களுக்குத் தோன்றிய சந்தேகங்களை ஒரே சமயத்தில் எழுந்து கேட்பது வழக்கம்.

அந்த ஆயிரம் பேருடைய சந்தேகங்களையும் ஒரே சமயத்தில் அவர்கள் கேட்டாலும் அதை அப்படியெ நினைவிலிருத்தி ஒவ்வொருவருக்கும் தக்க பதிலை அளித்து சந்தேகங்களைத் தீர்ப்பது அவரது வழக்கம்.

அப்படிப்பட்ட ஞானமும் நினைவாற்றலும் கொண்ட மஹா யோகி அவர்.

சிஷ்யர்கள் கேள்விகளைக் கேட்கும் போது அவர் சேஷ உருவத்தை எடுத்துக் கொள்வார். ஒரு திரைக்குப் பின்னாலிருந்து பதிலைச் சொல்வார்.

அவர் இந்த சபையில் கூடும் அனைவருக்கும் இரு நிபந்தனைகளை விதித்திருந்தார்.

1) ஒருபோதும் திரையை விலக்கிப் பார்க்காதீர்கள். அது பெரும் தீமையை விளைவிக்கும்.

2) ஒரு போதும் பாதியில் சபையை விட்டுப் போகாதீர்கள். அப்படிச் செல்பவர்கள் பிரம்ம ராக்ஷஸர்களாக ஆவார்கள்.

ஶ்ரீ கௌடபாதர்

ஒரு நாள் சிஷ்யர் ஒருவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. எப்படி இவரால் ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் கேட்கும் கேள்விகளை நினைவில் இருத்தி தக்கபடி விடைகளை அளிக்க முடிகிறது என்பதே அந்த சந்தேகம்.

ஒரு நாள் ஆர்வம் உந்த அவர் திரையை விலக்கினார். ஆதி சேஷனின் விஷம் அவர் மீது பாய்ந்தது. எங்கும் பரவியது. அங்கிருந்தோர் இறந்தனர்.

ஒரே ஒரு சிஷ்யர் பதஞ்சலி முனிவரின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் அவரது அனுமதியின்றி சபையை விட்டு வெளியேறினார்.

அவர் மட்டுமே உயிருடன் இருக்க முடிந்தது. அவர் பதஞ்சலி முனிவரின் அதே உருவத்தை அடைந்தார்.

அவரை அழைத்த பதஞ்சலி முனிவர், “நீ என்னிடமுள்ள அனைத்து ஞானத்தையும் பெறுவாய். ஆனால் என் சொல்லை மீறி அனுமதியின்றி வெளியே சென்றதால் நீ ஒரு ப்ரம்மராக்ஷஸனாக ஆவாய். எப்போது உனது ஞானம் அனைத்தையும் எதிர்காலத்தில் வரும் எனது சிஷ்யர்களுக்கு அளிக்கிறாயோ அப்போது அந்த பிரம்மராக்ஷஸ உருவம் நீங்கும்” என்றார்.

இந்த சிஷ்யர் தான் ஶ்ரீ கௌடபாதர்!

**

Find out the 17 Names of Kubera in the Square (Post No.12,556)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,556

Date uploaded in London – –  –  5 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

The initial letter of Kubera’s names are coloured and shown Bold ; only three long words are split.

DYM  YTPGPDEK
VAAD ARAUUIKI
AKNHJKAUHNNAN
ISUAASYLYYEPN
SHSRDHAAAASIA
RAHMAAMSK WNR
ARYAV BTE AGE
VAAVI AYS RAS
ATNAD KAW A W
N AHARAJARAJA
A RA  S R   R
  AN DANDIPA
KUBERAKAHDIRS

ANSWERS……………… Please go to swamiindology.blogspot.com

முழங்காவில், மாமாங்க ஈஸ்வர பிள்ளையார் ஆலயங்கள்-Part 18 (Post No.12,555)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,555

Date uploaded in London – –  –  5 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 18

33.முழங்காவில் பிள்ளையார் கோவில்

MULANGAVIL PILLAIYAR TEMPLE

இருப்பிடம் – கிளிநொச்சி மாவட்டம், பூ நகரி வட்டாரம்

எங்கெங்கு எல்லாம் அதிசயங்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம்  இறைவனைக் காண்பார்கள் இந்துக்கள். அல்லது இறைவன் இருக்கும் இடமெல்லாம் அதிசயங்கள் நடைபெறும் ; அப்போது பக்தி வலுப்படும்; நம் பிக்கை அதிகரிக்கும் என்றும் சொல்லலாம் .

முழங்காவில் கிராமத்தில் இப்படி ஒரு அதிசயம் நடந்தது; ஒரு பிள்ளையார் வடிவம் இல்லாத கல்லை பிள்ளையார் என்று பூஜித்து வந்தனர். அருகில் ஒரு கிணறு இருந்தது. அபிஷேகத்துக்கு போதுமான அளவு நீர் ஊறாத கிணறு அது. அர்ச்சகரும் மனம் வெதும்பி ஆண்டவனை வேண்டினார். ஒரு நாள் இடி ஓசை கேட்டது; வானத்தில் மேகமும் இல்லை; இடிக்கு முன்னர் வரும் மின்னலும் இல்லை. கிணற்றின் மீது இடி விழுந்தது. அங்கே தண்ணீர் ஊற்று பொங்கி எழுந்தது ; இந்த அதிசயம்  கல்லுப்பிள்ளையார் மீது மேலும் நம்பிக்கையை வளர்த்தது; பின்னர் முறையான விநாயகரை இந்தியாவிலிரிருந்து வடித்து எடுத்து பிரதிஷ்டை செய்தனர் .

முழங்காவில் கிராமம் , யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்கும் இடையே, கடலோர சாலையில் பாதி தூரத்தில் உள்ளது . வில்லு என்பது பள்ளம் போன்ற பகுதி. ; சுண்ணாம்பபுக் கல்லால் ஆன குகை போன்ற பகுதிகள் இருந்து, அவை இடிந்தபோது ஊற்று வெளியே தெரிந்திருக்கலாம் என்பது விஞ்ஞான பூர்வ விளக்கம். அது இடிந்தபோது எழுந்த ஓசையே இடி போல ஒலித்திருக்கலாம் . ஆயினும் அது நிகழவும் ஒரு காரணம் வேண்டும் அல்லவா? அதுவே  இறைவனின் திருவிளையாடல் .

யாழ்ப்பாண – மன்னார் வழிப்பயணிகளுக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் இந்த வில்லு.

திருக்கீதீஸ்வரத்தின் புகழ் பரவிய காலத்தில் 1951ம் ஆண்டில் வி. கே. செல்லப்பா சுவாமி என்பவர் தற்காலிக கூரை அமைத்தார். 1964 ஜூன் 24ம் தேதி  பூமி பூஜை, அஸ்திவாரக் கல் நாட்டு விழா நடந்தது  1965-ம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பிள்ளையார் நிறுவப்பட்டார்  அப்போது அங்கு GROUP PHOTO குரூப் போட்டோவுக்கு POSE கொடுத்தோர் படத்தை ( 16 சிறுவர்கள் உள்பட) திரு ஷண்முகம் ஆறுமுகம் எழுதிய ஆங்கிலப் புஸ்தகத்தில் காணலாம்.

FOR PICTURES GO TO PAGE 46, 47 IN HUNDRED HINDU TEMPLES OF SRI LANKA, SANMUGAM ARUMUGAM, 2014

மின்னாமல் முழங்காமல் இடி விழுந்ததால் நன்னீர் ஊற்றாக மாறி இன்றுவரை வற்றாத புனித தீர்த்தமாக இருந்து வருகின்றது. மின்னாமல் முழங்காமல் இடி விழுந்தமையாலே முழங்காவில் எனவும் அழைக்கப்பட்டது.. திருக்கேதீஸ்வரம் செல்லும் அடியவர்களின் முதல் வணக்கத்தலம் என்பதுடன் திருக்கேதீஸ்வரம் சென்று திரும்பி வரும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் ஓர் ஆலயமாகவும் விளங்குகின்றது.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பஸ் பயணிகளுக்கு உதவும் பிள்ளையார் முழங்காவில் பிள்ளையார்.

XXXX

34.ஆத்திமோட்டை காத்தான் குளம் பிள்ளையார் கோவில்

மன்னார்- பூ நகரி சாலையில் ஆத்திமோட்டை பிள்ளையார் கோவில்  அமைந்துள்ளது. ஒருகாலத்தில் நல்ல செழிப்புள்ள இடமாக இருந்த இடம் காலப்போக்கில் நீர்வளம் குறைந்ததால் மக்கள் வெளியேறிய ஊர் ஆத்திமோட்டை. அங்குள்ள பழங்கால செங்கற் கட்டிடங்களும் பாழடைந்த கிணறுகளும் இதற்குச் சான்று .

இங்குள்ள பிள்ளையார் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது பரங்கி ஆற்றை அணை போட்டுத் தடுத்துக் கட்டப்பட்ட பெருங்குளம், உடைப்பெடுத்து , பாசனத்துக்கு இருந்த குளங்களுக்குத் தண்ணீர் வராமல் தடுத்தது . 1965ம் ஆண்டில் அது செப்பனிடப்பட்டது ஊர் மக்களும் திரும்பி வந்து பிள்ளையாரை ஆராதிக்கத் தொடங்கினர்.

35.மாமாங்க ஈஸ்வர பிள்ளையார் கோவில் , மட்டக்களப்பு

இருப்பிடம் – மாமாங்க பிள்ளையார் கோவில், அமிர்தகழி, மட்டக்களப்பு மாவட்டம்.

சிவலிங்கம் முக்கிய இடம்பெற்ற இந்தக் கோவில் பிள்ளையார் பெயராலே  அழைக்கப்படுகிறது . சிவலிங்கத்தின் மீது வெள்ளிப் பிள்ளையார் உருவம் உள்ளது ; மட்டக்கிளப்பிலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது

மாமாங்க தீர்த்தம், அமிர்தகழி தீர்த்தம், ஹனுமான் தீர்த்தம், ஆகியன இங்குள்ள புகழ் பெற்ற புனித நீர்நிலைகள் ஆகும் .

ராம பிரான், அனுமன், ராவணன் ஆகியோருடன் தொடர்பு உள்ளதால் இதிஹாச காலம் முதல் சம்பந்தம்     இருக்கிறது.

ராவணன், திருக்கோணேஸ்வரம் செல்லும்போதெல்லாம் இங்குள்ள சிவ லிங்கத்தை வழிபட்டான். அனுமனோ இலங்கை நகரைத் தீயிட்டு எரித்த பின்னர் தன்னுடைய  வால் பகுதி தீயை இங்குள்ள குளத்தில் மூழ்கி அணைத்தான்

ராமபிரான்,  இலங்கைப் போரில் கொல்லப்பட்ட அனைவர்க்கும் இங்கு இறுதிக்கடன் களைச் செய்தான்.

ஒரு ரிஷி முனிவர், புனித கங்கை நீரைக் கொணர்ந்து குளங்களில் கொட்டியதால் அவை அமிர்த கழி ஆயிற்று.

இந்த தீர்த்தத்தில் மருத்துவ குணம் இருப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.

இந்தியாவில் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா மகம் தீர்த்தத் திருவிழாவன்று இங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அவர் மாமாங்கேஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார்.. காட்டில் கிடைத்த லிங்க வடிவக் கல்லை இங்கே பிரதிஷ்டை செய்தனர் 

இதே போல வெட்டர் இனச் சிறுவன்,  காட்டில் கண்டுபிடித்த ஒரு லிங்கமும் குமாரத்தான் கோவிலில் வழிபடப்படுகிறது இயற்கைச் சூழலில் அமைந்த இந்தக் கோவில், அனைவர்க்கும் மன நிம்மதியைத் தருகிறது. சிவபெருமான், குரு  வடிவாகி ,  ஒரு குருந்த மரத்தின் கீழ், மாணிக்க வாசகருக்கு அருள் மழை பொழிந்ததை நாம் அறிவோம். அந்தக் குருந்த மரங்கள் இங்கே செழிப்பாக வளருகின்றன .

கர்ப்பக்கிருகத்தோடு அந்தராளம், அர்த்த மண்டபம், மகா மண்டபம்,  கொடித்தம்பம், வசந்த மண்டபம், முன் மண்டபம் என்பவற்றோடு நவக்கிரகங்களுக்கு தனியான கோயிலுடன் கம்பீரமாக இவ்வாலயம் காட்சியளிக்கிறது.

ஆடி அமாவாசை உற்சவத்தின்  பொழுது  இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர் .

TO BE CONTINUED…………………….

TAGS- அமிர்தகழி, மாமாங்க , பிள்ளையார், முழங்காவில், ஆடி அமாவாசை

தெய்வீக மாயக் கண்ணாடி! (Post No.12554)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,554

Date uploaded in London –  5 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 தெய்வீக மாயக் கண்ணாடி!

ச.நாகராஜன் 

முன்னொரு காலத்தில் ஒரு குக்கிராமத்தில் ராமப்ரபன்னன் என்ற ஏழை அந்தணன் ஒருவன் வாழ்ந்து வந்தான். வெறும் காய் கனிகளே அவனுக்கு உணவாக இருந்தது. அவ்வளவு ஏழ்மை!

தினமும் இறை தியானத்திலேயே இருந்த அவன், ஒரு நாள் பகவானை நோக்கி, “இவ்வளவு கஷ்டப்படுகிறேனே, எனக்கு ஏதாவது ஒரு வழி காட்டக் கூடாதா?” என்று வேண்டினான்.

பகவான் அவன் முன் உடனே தோன்றினார்.

“அன்பனே! கவலைப்படாதே! இதோ இந்தக் கண்ணாடியை அணிந்து கொள்; ஒரு மனிதனைப் பார்; அவன் உனக்கு உதவி செய்வான்” என்று கூறி மறைந்தார்.

பரம சந்தோஷம் அடைந்த ராமப்ரபன்னன் அந்தக் கண்ணாடியை கண்ணில் அணிந்து கொண்டான்.

என்ன ஆச்சரியம்! எந்த மனிதனைப் பார்த்தாலும் அவன் புலியாகவோ, கரடியாகவோ, நரியாகவோ, கழுதையாகவோ அல்லது ஏதோ ஒரு மிருகமாகவோ தான் தென்பட்டான்.

மனிதனையே காணோம்!

அவன் மனிதனைத் தேடி அலைய ஆரம்பித்தான்.

ஒரு நாள் செருப்புத் தைத்துக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தான்.

என்ன ஆச்சரியம்! அவன் மனிதனாகவே தோன்றினான்.

மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவன் அந்த செருப்புத் தைக்கும் ஏழை தொழிலாளியை அணுகி, தன் ஏழ்மை நிலையைச் சொல்லி உதவி செய்யுமாறு வேண்டினான்.

அந்த ஏழைக்கோ ஒரே ஆச்சரியம்!

ஏராளமான பிரபுக்களும் அரசனும் நாட்டில் இருக்கும் போது தன்னிடம் உதவி கேட்க ஒரு ஆளா?

அவன் வியப்புடன் ராமப்ரபன்னனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டான்.

ராமப்ரபன்னனும் நடந்தை விவரித்து பகவான் தந்த கண்ணாடியையும் காண்பித்து தான் பார்த்ததில் அவன் ஒருவனே மனிதனாகத் தோன்றுகிறான் என்று கூறினான்.

இதை நம்பாத அந்தத் தொழிலாளி அந்தக் கண்ணாடியை வாங்கி தான் அணிந்து பார்த்தான்.

உண்மை, யாருமே மனிதர்களாகத் தோற்றமளிக்கவில்லை – ராமப்ரபன்னனைத் தவிர.

அப்போது அரசவையிலிருந்த வந்த சேவகன் ஒருவன், மன்னர் அணிய வேண்டிய செருப்பைத் தைத்தாயிற்றா என்று அந்தத் தொழிலாளியைக் கேட்டான்.

“தயாராக இருக்கிறது” என்ற பதிலைக் கேட்ட அவன் அதை வாங்கிப் புறப்படத் தயாரானான்.

ஆனால் உடனே தொழிலாளி அவனைத் தடுத்து நிறுத்தி தானே மன்னரிடம் வந்து தருவதாகக் கூறி அதை வாங்கிக் கொண்டான்.

மன்னனிடம் வந்த அவன் ராமப்ரபன்னனை மன்னரிடம் காட்டி அவனுக்கு உதவுமாறு வேண்டினான்.

மன்னனுக்கு இது விநோதமாகப் பட்டது.

ராமப்ரபன்னன் தன்னை நேரடியாக வந்து அணுகாமல் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் எதற்குச் செல்ல வேண்டும்?

இதை அவன் கேட்கவே தொழிலாளி நடந்ததைச் சொன்னான்.

வியப்புற்ற மன்னன், ராமப்ரபன்னனிடம் “அரசவையில் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டான்.

ஒரே மிருகங்களைப் பார்ப்பதாகப் பதில் அளித்தான் ராமப்ரபன்னன்.

உடனே தன்னைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது? தனது மந்திரியைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான்.

“மன்னரே! நான் சொல்லி விடுவேன் பதிலை. ஆனால் எனக்குத் தண்டனை அளிக்கக் கூடாது” என்று வேண்டினான் ராமப்ரபன்னன்.

மன்னன் தண்டனை அளிக்க மாட்டேன் என்று உறுதி கூறினான்.

உடனே ராமப்ரபன்னன், “அரசே! நீங்கள் கர்ஜிக்கும் சிங்கம் போல காணப்படுகிறீர்கள். மந்திரியோ கழுதையாகத் தோற்றமளிக்கிறார்” என்றான்.

உடனே மன்னன் அந்தக் கண்ணாடியை வாங்கித் தன் கண்ணில் அணிந்து பார்த்தான்.

அந்த அரசவையில் அவன் ராமப்ரபன்னனையும் அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியையும் மட்டுமே மனிதர்களாகக் கண்டான்.

வியப்படைந்த அவன் தன்னலமற்ற இடைவிடாது இருக்கும் பக்தியே அவர்களை மனிதர்களாகக் காட்டுகிறது என்றும் சுய நலம் நோக்கம் கொண்ட வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களை அவர்களது நிலைக்கு ஏற்ப அந்தந்த மிருகங்களாக கண்ணாடி காட்டுகிறது என்றும் தன் அறிவினால் ஆய்ந்து அறிந்தான்.

ராமப்ரபன்னனுக்கு உரிய உதவிகளைச் செய்த அவன் இறை தியானத்தில் மூழ்கி சுயநலமற்று அரசாள ஆரம்பித்தான். தனக்கு இப்படி ஒரு நல்வாய்ப்பளித்த தொழிலாளியை அவன் போற்றி கௌரவித்தான்.

இந்தச் சம்பவத்தால் நாட்டில் உள்ள மக்களும் பக்தியில் ஊன்றி இறைவனை தியானிக்க ஆரம்பித்தனர். நாடே தெய்வீக நாடாக மாறியது!

***

திக் தேவதைகள் / திக் பாலகர்  எட்டுப் பேர் யார் ? கண்டுபிடியுங்கள்(Post No.12,553)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,553

Date uploaded in London – –  –  4 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Across குறுக்கே

1.தென்கிழக்கு திசையின் தேவதை; எதையும் எரிக்க வல்லவர்.

2. செல்வத்துக்கெல்லாம் அதி தேவதை; திசை -வடக்கு

6.எருமை வாகனம்; கருமை நிறம் ; திசை-தெற்கு

Down கீழே/ மேலே

2.தொல்காப்பியம் இவரை இந்துக்களின் கடல் தெய்வம் என்கிறது; திசை- மேற்கு;

3.தென்மேற்கு திசையின் தேவதை

4. வேகமாக வீசினால் அம்மி கூடப் பறக்கும்; திசை-வடமேற்கு

6.கிழக்கு திசையின் தேவதை; தொல்காப்பியம் வேந்தன் என்று புகழும்.

7.வடகிழக்கு திசைக்கு அதிபதி

விடைகள்

Across குறுக்கே

1.அங்கி; 5.குபேரன்; 6.இயமன்

Down கீழே/ மேலே

 2.வருணன்; 3.நிருதி  ;4 வாயு; 6.இந்திரன் ;7.ஈசானன்

—subham—

Tags- திக் தேவதைகள், எட்டுப் பேர்,  திக் பாலகர்

முறிகண்டி பிள்ளையார்- இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 17 (Post No.12,552)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,552

Date uploaded in London – –  –  4 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 17

31.முறிகண்டி பிள்ளையார் கோவில் Murikandi Pillaiyar Temple,

எல்லோரும் வழிபட சாலையில் காத்திருக்கும் பிள்ளையார் கோவில்  முறிகண்டியில் உள்ளது . யாழ்ப்பாணம் – கண்டி சாலையில் உள்ள இந்தக் கோவிலை யாரும் பார்க்காமல், கும்பிடாமல் இருக்க முடியாது. கிளிநொச்சிக்கு அருகில் கோவில் இருக்கிறது . எல்லா வாகனங்களும்  இங்கே நிற்கும். பிள்ளையாருக்கு ஒரு கும்பிட்டு போட்டுவிட்டு நகரும்.

முறிகண்டி கிராமம் உள்ளே தள்ளி இருப்பதால், சாலையில் மரத்துக்கு அடியில் இருக்கும் இவரை  தெரு முறிகண்டி பிள்ளையார் என்றும் அழைப்பார்கள். வழித்துணை பிள்ளையார் என்றும் கொண்டாடுவர்.

பழைய முறிகண்டி சாமியார்கல்  வழிபாடு

பழைய முறிகண்டி ஆலயம்  பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது  யாழ்ப்பாணம்- கண்டி சாலை அமைக்கப்பட்ட காலத்தில் பருத்தித்துறை என்ஜினீயர் ஒருவரும் சாலை போடும் பணியில் இருந்தார். பொறியியல் வேலைகளுக்கு தண்ணீர் கிடைப்பது அரிதாக இருந்தது .சதுப்பு நிலம் ஆதலால் வண்டிகளில் தண்ணீர் கொண்டு வருவதும் சிரமம்தான். என்ஜினீயருக்கோ தூங்குவது கூட கஷ்டம் ஆகிவிட்டது. ஒரு நாள் கனவில், அருகில் இறந்து கிடக்கும் சந்நியாசிக்கு ஈமக் கிரியைகளை செய்தால் பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று கனவு சொல்லியது . அக்காலத்தில் நிறைய சாது சந்யாசிகள் மக்களுடன் மக்களாகக் கலந்து யாத்திரை போகும் வழி  இது . முறிகண்டிக்கு அடிக்கடி வரும் ஒரு சாது தனது கக்கத்தில் துணியால் சுற்றிய ஒரு கல்லையும் கொண்டுவருவது வழக்கம்.

அவர் அந்தக் கல்லை சுத்தமான இடத்தில் வைத்து அபிஷேக ஆராதனைகள் செய்வதுண்டு. அதை அவர் கணபதியாகவே உருவகித்து பூஜித்து வந்தார். முறிகண்டிக்கு வரும்போதெல்லாம், மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் இரவில் தங்கி வந்தார்.  அவர் அங்கயே இறந்துவிட்டார். சாலைப் பணிக்கு வந்த என்ஜினீயரும் தொழிலாள ர்களும் சடலத்தை அடக்கம் செய்துவிட்டு அவர் ஆராதித்து வந்த கல்லுக்கு — கடவுளுக்கு — ஒரு கொட்டகையும் எழுப்பினர்.  பின்னர் சிறிது தொலை வில்  மீண்டும் கிணறு வெட்டும் பணியில் இறங்கினர். அப்போது அதிசயம் நிகழ்ந்தது. தண்ணீரே இல்லாத பிரதேசத்தில் தண்ணீர் பீறிட்டு, பொங்கி வெளியே வந்தது.  இன்றுவரை அது வற்றாத  கிணறாக, போகும் வரும் யாத்ரீகர்களுக்குத்  தண்ணீர் வழங்குகிறது .அந்தக் கல்லும் பழைய முறிகண்டியில் தொடர்ந்து வழிபட்டு வருகிறது . பின்னர்  அவர் நினைவாக, தண்ணீர் கிணறு கண்டு பிடிக்கப்பட்டதன் நினைவாக , தெருப்பிள்ளையார் நிறுவப்பட்டார்.

இதற்கிடையில் இன்னும் ஒரு சம்பவமும் நடந்தது  பிள்ளையார் கோவிலுக்கு அருகில் டீக்கடை  வைத்திருந்த ஆறுமுகம் என்பவருக்கும் கோவில் நிர்வாகிகளுக்கும் இடையே  மனத்தாங்கல் ஏற்பட்ட து. ஆறுமுகம் கனவில் இன்னும் ஒரு பிள்ளையார் வருவார் என்று தோன்றவே  சுமார் 500 அடி தொலைவில் ஒரு மரத்தின் பட்டைகளே  யானை முகம்போலக் காட்சி தந்தது.  அவர் அங்கு பூஜைகளைத் துவங்கியவுடன் பக்தர் கூட்டம் இரண்டு பிள்ளையர்களையும் வழிபட்டு வந்தனர்  காலப்போக்கில் சாலை ஒர வழிபாட்டுத் தலங்களை  அகற்றும் திட்டத்தின் கீழ்  யானை முக மரமும் அகற்றப்பட்டது . ஆயினும் பிள்ளையார் வழிபாடு நீடிக்கவும், வற்றாத நீர்வளம் கண்டுபிடிக்கவும் பிள்ளையார் உதவியதை பக்தர்கள் நன்றிப் பெருக்கோடு நினைவு கூறுகின்ற்னர் .

XXX

இவ்வாலயத்தில் வழிபாடு செய்பவர்கள் வெறும் வாயோடு செல்ல மாட்டார்கள் பயணத்தில் சுவையாக சாப்பிட இங்க கச்சான் வாங்கி செல்வார்கள்; அது என்ன கச்சான் என்று கேட்கிறீர்களா ?

இந்த வட்டாரத்திலேயே மிகவும் சுவையான நிலக்கடலை  இங்குதான் கிடைக்கும். கச்சான் (நிலக்கடலை) க்கு பிரசித்தி பெற்ற இடம்  முறிகண்டி ஆகும்,

xxxx

பம்பாயிலும் மகாலெட்சுமி, தனக்கு கோவில் கட்ட  இதே தந்திரத்தைக் கையாண்டார்

இதோ நான் முன்னர் இதே பிளாக்கில் எழுதிய விஷயம்

மும்பை மகாலெட்சுமி கோவில்

மும்பை நகருக்குச் செல்லுவோர் சித்தி விநாயகர் கோவிலையும் மஹா லக்ஷ்மி கோவிலையும் தரிசிக்காமல் வர மாட்டார்கள். உலகின் செல்வச் செழிப்பு மிக்க நகர்களில் பம்பாயும் ஒன்று. இதற்குக் காரணம் மஹாலெட்சுமியும் மும்பா தேவியும் என்பது மக்களின் நம்பிக்கை ; இந்து சமய வணிகர் தாக்ஜி தாதாஜி  இந்தக் கோவிலை 1831ம் ஆண்டில் கட்டினார் இங்கு மூன்று தேவிகள் காட்சி தருகின்றனர். மகாலெட்சுமியானவள் கைகளில் தாமரை மலர்களை ஏந்தி நிற்கிறாள்; மஹா காளியும் மஹா ஸரஸ்வதியும் இருபுறங்களில் நிற்கிறார்கள் . மூவரும் தங்க வளையல்கள், மூக்குத்திகள், இரத்தின மாலைகளுடன் ஜொலிக்கின்றனர்  வசந்த காலத்தில் வரும் நவராத்திரியும் ஆஸ்வீன மாத பெரிய நவராத்ரியும் (தமிழக கணக்குப்படி புரட்டாசி நவராத்ரி) மிகப்பெரிய பண்டிகைகள் . கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் மின்விளக்குக்களால் அலங்கரிக்கப்படுகிறது.

இந்தக்கோவில் பற்றி செவி வழிக் கதைகளும் உலவுகின்றன. பிரிட்டிஷ் கவர்னர் ஹார்ன்பி என்பவர் வோர்லி, மலபார் என்னும் இரண்டு இடங்களை இணைக்க ஒரு கடற் பாலம் கட்டுவதற்குத் திட்டமிட்டு அந்தப் பணியை ராம்ஜி ஷிவ்ஜி பிரபு என்ற தலைமை என்ஜினீயரிடம் ஒப்படைத்தார். ஆனால் பாலம் கட்ட முடியாதபடி பல இடையூறுகள் தலையெடுத்த வண்ணமிருந்தன. ஒரு நாள் ராம்ஜியின் கனவில் மகாலெட்சுமி தோன்றி,  தான் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடப்பதைத் தெரிவித்தாள். முஸ்லீம் படை எடுப்பாளர்களால் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டிருந்த சிலைகளை ராம்ஜி மீட்டு, கோவில் கட்ட வழிவகை செய்தார் . பின்னர் பாலம் கட்டும் பணி  இனிதே நிறைவேறியது . ஒரு குன்றின் மீது அமைந்த இந்தக்கோவில்,  இன்று ஏராளமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

XXXX

32.. கிளிநொச்சி அக்கராயன்குளம் விக்ன  விநாயகர் கோவில்

வன்னி  பகுதியை ஆண்ட சிற்றரசர்கள் பல்லவராயன், கனகராயன் அக்கராயன்  ஆவர்.

அக்கராயன் என்பவர் இலங்கையின் யாழ்ப்பாண அரசின் தெற்கு பகுதியாக……………… PLEASE CONTINUE IN……………. swamiindology.blogspot.com