மா ஆனந்தமயி! – 2 (Post No.12,551)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,551

Date uploaded in London –  4 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மகான்கள் வாழ்வில் …

மா ஆனந்தமயி! – 2

ச.நாகராஜன்

இந்த ஆசிரமம் அமைந்த விதமே ஒரு அற்புதமான விஷயத்தைச் சுட்டிக் காட்டியது.

ஒரு நாள் ஒன்றரை கிலோ அளவில் பயறு தானியத்தை சுத்தம் செய்த நிர்மலா தேவி என்னும் ஆனந்தமயி மா போலாநாத்திடம், “வாருங்கள் சித்தேஸ்வரியிடம் செல்வோம்” என்றார். அங்கு சென்று அதைச் சமைத்து சித்தேஸ்வரிக்கு நிவேதனம் செய்தார் மா.

பிறகு அவர் போலாநாத்திடம், “நான் இங்கேயே இருக்கிறேன். காளி கோவிலுக்கு அருகில் இருக்கும் சிறிய அறையிலேயே தங்குவேன்” என்றார்.

அப்படியே ஆனது.

சிறுகச் சிறுக ஒரு பெரிய ஆசிரமம் உருவாக ஆரம்பித்தது.

அந்த ஆசிரமம் உருவான இடத்தில் குங்கும நிறத்தில் வெதுவெதுப்பான நீர் பீறிட்டு எழுந்தது. அனைவரும் அதிசயித்தனர்.

பல அற்புதங்கள் அங்கு நடக்க ஆரம்பித்தன.

31ஆம் வயதில் ஆனந்தமயி மா டாக்காவை விட்டுக் கிளம்பி பெரும் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்.

1928ஆம் ஆண்டு வாரணாசியில் முதல் கூட்டம் கூடியது. அங்கு பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் அளித்தார்.

நூற்றுக் கணக்கில் வர ஆரம்பித்த பக்தர்களின் எண்ணிக்கை நாளடைவில் ஆயிரக் கணக்கில் பெருகியது.

பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மனைவியான கமலா தேவி மாவின் பக்தையாக ஆனார்.

இதனால் ஜவஹர்லால் நேருவும் மாவின் தரிசனத்தைப் பெற்றார்.

பின்னர் மஹாத்மா காந்திஜியும் ஆனந்தமயி மாவினால் ஈர்க்கப்பட்டார்.

இதனுடைய தாக்கமாக பின்னால் பாரதத்தின் பிரதமராகத் திகழ்ந்த இந்திரா காந்தி அம்மையார் மாவின் தீவிர பக்தையாக ஆனார்.

மா தனது பெரிய ஆசிரமத்தை 1936ஆம் ஆண்டு டாக்காவில் கிஷன்பூரில் அமைத்தார்.

அத்துடன் இன்னும் மூன்று ஆசிரமங்களையும் டேராடூனில் அமைத்தார்.

பின்னர் இன்னும் பல ஆசிரமங்களை அல்மோரா மற்றும் ஸோலன் ஆகிய இடங்களில் அமைத்தார்.

போலாநாத்தின் உற்சாகத்தினாலும் ஊக்கத்தினாலும் இன்னொரு ஆசிரமம் உத்தரகாசியில் அமைக்கப்பட்டது.

1982ஆம் ஆண்டு தனது 86ஆம் வயதில் ஹரித்வாருக்கு அருகில் இருந்த கங்கல் என்ற இடத்திலிருந்து கிளம்பி கல்கத்தா வரை வந்து பின்னர் அவர் கங்கல் திரும்பினார்.

அதே ஆண்டு ஜூலை மாதம் சிருங்கேரி ஜகத்குரு அங்கு வருகை புரிந்தார்.

அவருக்கு உடல்நலம் சற்று குன்றியிருந்தது போல அனைவரும் உணர்ந்தனர்.

ஆனால் அவரோ, “ இந்த உடலுக்கு ஒரு நோயும் இல்லை.” என்றார்.

சில நாட்கள் கழித்து பிரதம மந்திரி இந்திரா காந்தி தனது புதல்வர் ராஜீவ் காந்தியுடனும் மருமகள் சோனியா காந்தியுடனும் பேரக் குழந்தைகளுடனும் அவரை தரிசிக்க வந்தார்.

மா சற்று நேரம் உட்கார்ந்தார். இதுவே அவர் பக்தர்களுக்கு அளிக்கும் கடைசி சந்திப்பாக அமைந்தது.

பௌர்ணமி வந்தது. அதுவே அவர் பக்தர்களுக்கு அளித்த கடைசி தரிசனமாக அமைந்தது.

அவர் கூறினார்: “இதே நாளில் தான் (1922 ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி) இந்த உடல் தீக்ஷை அளித்துக் கொண்டது” என்றார் அவர்.

ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி அவரைக் கவனித்துக் கொண்டிருந்த பணிபுரியும் பெண்கள் அவர் நாராயண ஹரி என்று முணுமுணுத்துக் கொண்டே இருப்பதைக் கவனித்தனர். இதுவே அவரது கடைசி உச்சரிப்பாக அமைந்தது.

அன்று மதியம் தனது கண்களைத் திறந்து பார்த்த மா ஒரு நிமிடம் அனைத்தையும் உற்றுப் பார்த்தார்.

1982 ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி.

இரவு 7.45 மணி அளவில் தனது கண்களைத் திறந்த அவர் மேலே பார்த்தார். சில நிமிடங்களில் அவரது சுவாசம் அடங்கியது.

அவரது பூதவுடல் ஆசிரமத்தின் வாரந்தாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

செய்தி பரவியது. மக்கள் வெள்ளம் ரயில், கார், விமானம் மூலமாக வந்து கூடியது.

கிஷன்பூர் ஆசிரமத்திலிருந்து அவரது உடல் ஒரு வாகனத்தில் வைக்கப்பட்டு கங்கல் ஆசிரமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அவர் தனது உடலை என்ன செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பையும் தரவில்லை. அவர் சந்யாச ஆஸ்ரமம் மேற்கொள்ளவில்லை என்றாலும் அனைவரின் விருப்பத்திற்கிணங்க அப்படிப்பட்ட மத சடங்குகள் செய்யப்பட்டன.  சமாதியில் அவரது உடல் வைக்கப்பட்டது.

பிரதம மந்திரி இந்திரா காந்தி முன்னிலை வகித்தார்.

*

கேள்விகளுக்கான அவரது பதில்கள் சுவாரஸ்யமானவை.

ஒருவர் கேட்டார் : தினமும் வரும் இந்த புதிய பக்தர்களின் வரவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : யாருமே புதிதல்ல. அவர்கள் அனைவருமே எனக்குத் தெரிந்தவர்கள் தான். நீயும் நானும் இரண்டு பேர்கள் தான் என்றாலும் நீயும் நானும் ஒருவரே. இரட்டை என்ற பேச்சுக்கே இடமில்லை. பற்றும் வெறுப்பும் இந்த இரட்டை (த்வைதம்) என்ற எண்ணத்தினால் உருவாவதேயாகும்.

அவரது போதனை : உனது எண்ணத்தை மிக உயரிய மட்டத்தில் வைத்துக் கொள்!

ஜெய் மாதா ஆனந்தமயி மா!

***

Foreigners attracted towards Indian spirituality

Hollywood Celebrites in India

From Deccan Chronicle Dated 3-10-2023

Hyderabad: Deccan Chronicle.| Sanjay Samuel Paul

India being an epicenter of spirituality. The number foreigners thronging to this sub continent in search of inner peace, mediation and spirituality.
Twelve years ago as Marcus walking down the streets of Seattle in USA, a flayer (pamphlet) flew and struck his face, what attracted him is about the inner peace. it was 12 years ago, Marcus, his wife Tia and 6 years old Daniel they are here at Kollam ashram each year they visit this place, Marcus said, ” the best part I enjoy the most is Bhajan’s. After know about Amma”
He added, “meditation which brought peace into my life and family’s.” He said.

Drawing foreigners towards india and its spirituality one such center is in Kollam in kerala. Around 100 kilometers from Trivandrum. Ashram of Mata Amritanandamaya. Thousands of devotees from Spain, France, Austria, Italy, Switzerland, Ireland, Germany, Slovakia, England, Portugal, Hungary, Greece, Icelan, wales, Cyprus, Sweden, coming to African countries Ghana, Cameron, Nigeria, Egypt, senegal, Algeria, Morocco, Kenya, Somalia, Burkina Faso, Libya, toward South America Brazil, Argentina, Colombia, Uruguay, Paraguay, Peru and many more .
From Asian China, Japan, Philippians, Sri Lanka. Thousand them from 193 countries were present here to take part in the 70 birthday celebration of Amma. Tuesday here at this ashram these foreigner’s took part in bhajan’s performed traditional dances, in Indian attire they look amazing. Most of them are communicating with the signs. This ashram is filled with the foreigners throughout the year . They cook here in the kitchen, cutting vegetables and tying the flowers and making garlands. This campus can be a tagline as ‘Bringing world to India.”

Adwaith from France, in his early 20’s “I am here into spirituality because of my father, he was attracted to spirituality two decades ago, through him is was able to know the true purpose .”

A groups of Japanese with a help of translators explained this Newspaper, there is so much peace in this when you embrace Amma and most beautiful about this place is giving and giving to the humanity.”
Cilea, a French lady in her mid 20’ explained, “my life and my mind was chaotic. After know Amma and about spirituality and meditation which changed my life. I have focused life now.”

Marta Garcia, now known as Sukriti from Spain , lives in Germany from past 15 years, in 2007 I came across Amma, where I learnt and embraced spirituality. I learnt about detachment from this worldly pleasure. I was working for a Multinational cosmetic country. I gave up my career now myself and partner take care of German ashram.” She said

Sugandhi Brindlali, a Spanish lady, while narrating she broke out in tears “I was going thorough life’s tough times, there were families issues. I embraced amma and that changed my live, I come each year to India and take part in Bhajans and meditation.” She said

—subham—

Tags–Foreigners, attraction, Indian spirituality, Hindu

மருதடி பிள்ளையார்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 16 (Post.12,550)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,550

Date uploaded in London – –  –  3 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 16

29.மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவில்

MARUTHADY PILLAIYAR TEMPLE, MANIPAY, JAFFNA

மருத மரங்கள் நிறைந்த மானிப்பாயில் இருக்கும் பிள்ளையாரை  யாழ்ப்பாண பக்தர்கள் மருதடி பிள்ளையார் என்று வழிபடுகின்றனர் . இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் கிழக்கிலும், மேற்கிலும் வாசல்கள் இருப்பதாகும் . சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உலகை நிர்வகிக்கும் கடவுள்.

மூலஸ்தானம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

பல கோவில்களைப் போலவே தோற்றம் பற்றிய வரலாறு கிடைக்கவில்லை. ஆயினும் போர்ச்சிகீசிய கிறிஸ்தவ அரக்கர்கள் தரை மட்டம் ஆக்கிய 500 க்கும் மேற்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்று என்பதை 1925ம் ஆண்டில் வெளியான ஆலய மான்மியம் குறிப்பிடுறது . இந்தியாவிலிருந்து வந்த ஒரு மஹான் இங்கு தங்கிய பின்னர் இது புகழ்பெற்றது. இது வாய்மொழி வரலாற்றில் கிடைத்த செய்தி.

நவாலி பைரவர் கோவிலில் மிருகங்கள் பலியிடப்படுவதை வெறுத்த தியாகராஜ சைவ குருக்கள், அங்கிருந்த விநாயகரை இங்கே கொண்டுவந்தார்.  திருக்குளத்தின் கரையில் மருத மரத் தோப்பில் விநாயகர் அமர்ந்தவுடன், பக்தர்கள் மருத  மரத்துக்கு அடியில் அமர்ந்து தியானம் செய்யத்துவங்கினர். பின்னர் நிலையான கட்டிடம் தேவை என்பதை உணர்ந்த மானிப்பாய் கிராம மக்கள், 1856–ம் ஆண்டில் அரசாங்கத்திடமிருந்து நிலத்தை வாங்கினர் . சுவாமிநாத முதலியார் இப்பணியில் முன்னணியில் நின்றார். எதிர்ப்புறம் கிறிஸ்தவ சர்ச் இருந்ததால் பிள்ளையார் அந்தப் புரம் நோக்காமல் அமர்த்தப்பட்டார்.. அப்போது முதல் இன்று வரை பக்தர்கள்  கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக புத்தாண்டு தினத்தன்று நடைபெறும் தேர்த் திருவிழாவிற்கு பெரும் கூட்டம் சேரும்.

விக்கிபீடியா தரும் தகவல் இதோ :-

பறங்கியர் சைவசமய மணம் கொஞ்சமுமில்லாது, பிராமணரையும் தம்முடைய மதத்தைத் தழுவும்படி செய்துவந்த நாட்களில், அவர்கள் தண்டத்திற்கஞ்சி அகத்தே சைவராகவும் புறத்தே கிறிஸ்தவர்களாகவும் நடித்த பலர் மருதமரத்தின்கீழ் இராக்காலங்களிலும் பறங்கியர் கண்களுக்கு புலப்படாத நேரங்களிலும் பொங்கலிட்டுக் கற்புரமெரித்து விநாயகரை வழிபட்டு வந்தார்கள். இப்பொழுதும் மூலஸ்தானத்திற்கு அருகாமையிலுள்ள மருதமரத்திலும் வெளிவீதிகளில் நிற்கின்ற மருதமரங்களின் கீழும் சனங்கள் உற்சவகாலங்களிலே கற்புரமெரித்து மருதத்  த ளிரைப்பறித்துக் கண்ணில்ஒற்றிக் காதில் அல்லது தலையில் அணிந்துகொள்வதை காணலாம்.

யாழ்ப்பாணத்தில் எந்தப்பாகங்களில் இருப்பவர்களும் முதலில் எடுக்கும் நெற் தானியத்தை ”மருதடிப்பிள்ளையாருக்கு” என்று சொல்லி எடுத்து வைப்பது வழக்கம்

XXXX

30. காசதுறை பிள்ளையார் கோவில்

காங்கேசன்துறையில் பெட்ரோல் ஸ்டேஷன் எதிர்ப்புறம் அமைந்திருக்கும்  ஆனந்த பிள்ளையார் கோவில் பல நூற்றாண்டுகள் பழமை உடையது . அந்தக் காலத்தில் இந்த ஊருக்கு கயா துறை என்ற பெயர் இருந்தது இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் உள்ள  கயா நகருக்குச் செல்லும் பக்தர்கள் இந்தத் துறைமுகம் வழியே சென்றதால் இப்பெயர் . கந்தனின் மறு பெயர் காங்கேயன். முருகன் சிலை இவ்வழியாக வந்ததால் காங்கேசன் துறை ஆயிற்று.

இந்த ஊரில் பவானந்த முனிவர் ஒரு சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் . கப்பலில் யாத்திரை செய்வது , உயிருக்கு ஆபத்தாக இருந்த காலம் அது. விக்கினங்களை நீக்கும் விநாயகரை வழிபட்டால் வினைகள் நீங்கும் என்று பிள்ளையாரை நிறுவி வழிபடத்துவங்கினர். . கடற்பயணத்தை இனிதே நிறைவேற்றியதால் யாத்திரைப் பிள்ளையார் என்று அழைக்கப்பட்டார்.

ஆனந்த கணபதி என்ற தமிழ் நூலில் இந்தச் செய்தி உள்ளது .

XXX

31.பறாளை விநாயகர் ஆலயம், சுழிபுரம் , யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தின் வட மேற்கு வட்டாரத்தில் தொல் புரம் , சுழி புரம் என்று இரண்டு ஊர்கள் உள . தொல் புரம்  என்றால் தொன்மையான இடம்; சுழி புரம்  என்றால் சோழர்கள் தங்கிய இடம்.

தொல் புரத்துக்கு பெருமை சேர்ப்பது பொன்னாலயம்  விஷ்ணு கோவில்; சுழி புரத்துக்குப் பெருமை கொணர்வது பறாளை விநாயகர் ஆலயம்.

பறாளை பிள்ளையையாருக்கு கண்ணைக் கொத்தி காத்த பிள்ளையார் என்ற பெயரும் உண்டு. இது பற்றிய கர்ண பரம்பரைக்கு கதை என்னவென்றால், போர்ச்சுகீசிய இந்து விரோத அரக்கர் படை, கோவிலைத் தரை மட்டம் ஆக்க வந்தபோது, ஒரு பெரிய காக்கைப் பட்டாளம் அவர்கள் கண்களைக் கொத்தி விரட்டியதாம்.

பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இந்து மறுமலர்ச்சி ஏற்பட்டபோது, நன்னித்தம்பி முருகேசு என்பவர் இந்த ஆலயத்தை சீரமைத்தார்.  இன்று பெரிய மண்டபங்களையும் தூண்களையும் காணமுடிகிறது. இப்போது முறையான பூஜைகளும் திரு விழாக்களும் நடத்தப்படுகின்றன.

இவ்வாலயத்தில் இந்தியாவிலிருந்து வந்த வேதாரணிய சைவக்குருமார்களால் வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. தற்பொழுதும் சைவக்குருமார்களின் பரம்பரையினராலேயே நித்திய நைமித்திய வழிபாடுகள் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றன.

அருகில் உள்ள கடலில் புனித நீராடுதல், அஸ்தி  கரைத்தல் முதலியன நடைபெறுகின்றன . மஹா விஷ்ணுவின் பாதம் பட்ட திரு அடி தீர்த்தமும் அருகிலேயே உள.

இந்தத் தீர்த்தம் கடல் வரைக்கும், பூமிக்கு அடியில் செல்லுவதை புவிகர்ப்ப வியல் GEOLOGISTS அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பார்வதி அம்பாளின் சிலை கரை ஒதுங்கிய மாதா கல் என்னும் இடமும் அருகில் உள்ளது .

நல்லூர் சின்னத் தம்பி புலவர் , டச்சுக்காரர் ஆட்சிக்கு காலத்தில் வாழ்ந்தவர். அவர் எழுதிய பறாளை விநாயகர் பள்ளு இந்தக் கோவிலின் புகழ் பாடுகிறது 1889-ம் ஆண்ட்டில் சிவப்பிரகாச பண்டிதர் அதை முதலில் வெளியிட்டார்.

—-SUBHAM—-

TAGS – பறாளை விநாயகர், சுழிபுரம், காசதுறை,  பிள்ளையார், மானிப்பாய்,  மருதடி

 மா ஆனந்தமயி! – 1 (Post No.12,549)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,549

Date uploaded in London –  3 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

மகான்கள் வாழ்வில் …

மா ஆனந்தமயி! – 1

ச.நாகராஜன் 

மிகவும் புகழ்பெற்ற மா ஆனந்தமயி சரிதம் அற்புதமான ஒன்று.

இன்று பங்களாதேஷில் இருக்கும் வங்காள மாநிலத்தில் திரிபுரா மாவட்டத்தில் கேரா என்ற குக்கிராமத்தில் அந்தண குலத்தில் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் 1896ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி அவதரித்தார் ஆனந்தமயி மா!

குழந்தைக்கு நிர்மலா சுந்தரி தேவி என்று பெயர் சூட்டப்பட்டது.

நிர்மல சுந்தரியின் தந்தை பிபின் பிஹாரி பட்டாசாரியா ஒரு வைணவ பக்தர். இசையில் வல்லவர். குழந்தைக்குப் பல தெய்வீகப் பாடல்களைச் சொல்லிக் கொடுத்தார்.

நிர்மலாவின் தாயாரான மோக்ஷதா சுந்தரி தேவி ஒரு சிறந்த பக்தை; பின்னால் சந்யாசம் மேற்கொண்டு ஸ்வாமி முக்தானந்த கிரி என்ற சந்யாச ஆஸ்ரம பெயரை மேற்கொண்டு தனது மகளுடன் பயணம் செய்தார்.

நிர்மலா சுந்தரி பிறந்தவுடன் அவரை காலை நேரத்தில் ஒரு துளஸி செடியின் கீழ் வைத்தார் தாயார். இந்தப் பழக்கம் 18 மாதங்கள் தொடர்ந்து நீடித்தது.

1909ம் ஆண்டு நிர்மலாவின் 13ஆம் வயதில் அந்தக் கால வழக்கப்படி அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ரமணி மோஹன் சக்ரவர்த்தி என்பவரை மணந்தார் அவர். போலீஸ் பிரிவில் வேலை பார்த்து வந்தார் ரமணி மோஹன்.

17ஆம் வயதில் ரமணி மோஹனுடன் சேர்ந்து தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பித்தார் நிர்மலா. இந்தச் சமயத்தில் தான் அவருக்கு அண்டை வீட்டுக்காரரான ஹரகுமார் அவரை ‘மா’ என்று அழைக்க ஆரம்பித்தார்.

அதுவே பின்னால் நிலைத்து விட்டது.

“அம்மா, நான் உன்னை மா என்று அழைக்கிறேன். ஆனால் உலகமே உன்னை மா என்று அழைக்கப் போகிறது பார்” என்றார். அது பலித்தே விட்டது.

ரமணிமோஹனை அனைவரும் போலாநாத் என்றே அழைத்தனர்.

நிர்மலாதேவிக்கு தாம்பத்யத்தில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாததைக் கண்டார் போலாநாத். அவரது வீட்டாருக்கோ இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. போலாநாத்தை இன்னொரு திருமணம் செய்து கொள்ளத் தூண்டினர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

1918 முதல் 1924 முடிய பஜித்பூர் என்ற நகரில் தம்பதி வாழ்ந்து வந்தனர்.

அப்போது நிர்மல சுந்தரிக்கு ஏராளமான ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டன.

1922 ஆகஸ்ட் மாதம் பௌர்ணமி நாள். நிர்மல சுந்தரி நள்ளிரவில் தனக்குத் தானே தீக்ஷை அளித்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 26 தான். அடுத்த ஐந்து மாதங்கள் ஓம் மந்திரத்தை உச்சரித்தவாறே அவர் சாதனை தீவிரமடைந்தது.

செய்தி அனைவருக்கும் பரவ அவரது மாமா வந்தார். போலாநாத்தைப் பார்த்து, “இங்கு என்ன நடக்கிறது?” என்று கேட்டார்.

அவரைப் பார்த்த நிர்மலா தீவிரமாக, “இப்படிக் கேட்பதற்கு என்ன அர்த்தம்?” என்றார்.

“நீ யார், சொல்” என்றார் மாமா.

நிர்மலாவின் வாயிலிருந்து வார்த்தைகள் வெடித்தன:

“பூர்ண ப்ரஹ்ம நாராயணீ”.

ஒரு நாள் போலோநாத் அலுவலகம் சென்றிருந்த போது அவரை உடனே வரச் சொன்னார் நிர்மலா.

அவர் வந்தவுடன் அவரைக் குளிக்கச் சொல்லி தன் எதிரில் அமரச் சொன்னார்.

பின்னர் மந்திரங்களைச் சொல்லி அவருக்கு ஆன்மீக உபதேசத்தைச் செய்தார்.

இப்படியாக அவரது கணவரே அவரது முதல் சிஷ்யராக ஆனார்.

1922 நவம்பரிலிருந்து மூன்று வருடங்கள் நிர்மலா மௌனவிரதம் அனுஷ்டித்தார். பல நாட்கள் குடிதண்ணீர் கூட இல்லாமல் வாழ்ந்தார்.

1926லிருந்து அவரால் மற்றவர் போல உணவை உண்ண முடியவில்லை.

வாயில் உணவை வைத்தாலும் அது விழுந்தது. ஆகவே தினமும் பகலில் ஒரு முறையும் இரவில் ஒரு முறையும் அவரது இரண்டு விரல்கள் ஏற்கும் வகையில் அவருக்கு உணவு அளிக்கப்பட்டது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சிறிது நீரும் அவர் அருந்த ஆரம்பித்தார்.

1924ஆம் ஆண்டு போலாநாத்திற்கு டாக்காவில் மானேஜராக ஒரு வேலை கிடைத்தது.  அங்கு ஒரு பழைய காளி கோவில் இருந்தது.

அங்கு இருந்த ஒரு அரச மரத்தின் அருகில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் வசிக்க ஆரம்பித்தனர்.

அந்த சித்தேஸ்வரி கோவில் சக்தி சாதனைக்கான இடம்.  இந்த இடம் ஆதி சங்கரருடன் தொடர்பு கொண்ட இடம். போலாநாத்தும் சென்ற ஜென்மத்தில் இங்கு தவம் புரிந்திருந்தாராம்.

நிர்மலா தேவி தனது முதலாவது ஆசிரமத்தை இங்கு ஆரம்பித்தார்.                           ***                   தொடரும்

Tagged with Anandamayee Ma

Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › anandamayee-ma

1 Jun 2017 — “Shri Anandamayee Ma is one of the most outstanding (1896-1982) religious figures of modern times and was the last great representative of the …

Anandamayee ma- part2 | Tamil and …

Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › anandamayee-ma-pa…

2 Jun 2017 — BENGALI MYSTIC SHRI ANANDAMAYEE MA- PART 2 (Post No. 3965) · Written by London Swaminathan · Date: 2 June 2017 · Time uploaded in London- 14-59.

Find Out Yama’s 14 Names in the Square (Post No.12,548)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,548

Date uploaded in London – –  –  2 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Yama is God of Death in Hinduism; in other cultures, people may be even scared of talking about death. But millions of Hindu Brahmins worship him three times every day. They say a Mantra facing south in the dawn, mid day and evening before sunset.  Greatest Tamil Poet Tiru Valluvar also says South is the Direction of dead people. Only three long words are split here.

DHARMARAJA
CGSARVAKVR
HU DTCBSRA
IP HYHHHKE
TT AUIUAON
RAMD TTYDI
AA N RAAHT
YKPARAMESH
VAIVASVATA
 LANTAKA  
 ANEELAYA 
OUDHUMBARA

ANSWERS……………. please go to swamiindology.blogspot.com

QUIZ பிரம்மா பத்து QUIZ  (Post No.12,547)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,547

Date uploaded in London – –  –  2 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Serial No.77

1.பிரம்மாவுக்கு உள்ள முக்கியக் கோவில் எதுஅது எங்குள்ளது?

xxx

2.பிரம்மாவுக்கு ஆதிகாலத்தில் எத்தனை தலைகள் ?

xxx

3.பிரம்மாவுக்கு 29 பெயர்களை அமர கோஷம் என்னும் நிகண்டு தருகிறது. அதில் 2 பெயர்கள்பிரம்மாவை முட்டையிலிருந்து வந்ததாகச் சொல்லும் . என்ன பெயர்கள் ?

xxx

4.பிரம்மாவை  தாதா  என்றும் விதாதா என்றும் அழைப்பது ஏன்?

xxx

5.பிரம்மாவின் வாஹனம் எதுஅதைக்குறிக்கும் பெயர் என்ன?

xxx

6.தாமரைக்கும் பிரம்மாவுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் பெயர்கள் யாவை ?

xxx

7. பிரம்மாயாரிடம் ஏன் குட்டுப் பட்டார் ?

xxx

8.பிரம்மாவை  நான்முகன்  என்று  தமிழில்  சொல்கிறோம் சம்ஸ்க்ருதத்தில் என்ன பெயர்?

Xxxx

9.மும் மூர்த்திகளில் பிரம்மாவின் தொழில் படைத்தல் அவரைத்  திருவள்ளுவர் எப்படித் திட்டுகிறார்?

Xxx

10. பிரம்மா, தாமாகவே தோன்றியவர் என்று பொருள்படும் இரண்டு சொற்கள் அமரகோஷத்தில் இருக்கின்றன. அவை யாவை ?

xxx

விடைகள் please go to swamiindology.blogspot.com

கருணாகர பிள்ளையார் -இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 15 (Post.12,546)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,546

Date uploaded in London – –  –  2 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 15

28.கருணாகர பிள்ளையார் உரும்பிராய்யாழ்ப்பாணம்

தமிழ் நாட்டின் கருணாகரத் தொண்டைமான் பெயரால் அழைக்கப்படும்  பிள்ளையார் இவர். மேலும் கோவில் சம்பந்தமான கல்வெட்டு உடைய ஒரே கோவிலும் இதுதான் .

இந்தக் கோவிலின் இன்னும் ஒரு புதுமை, கோவிலின் ஒரு பகுதி இணுவில் கிராமத்திலும் மற்றும் ஒரு பகுதி உரும்பிராய் கிராமத்திலும் அமைந்திருப்பதாகும்.

தமிழ் நாட்டில் குலோத்துங்க சோழனிடம் (1070-1118) படைத்தளபதியாக பணியாற்றியவர்  கருணாகரத் தொண்டைமான். அவரை உப்பு வாங்கி வருவதற்காக சோழ மன்னன் அனுப்பினான். அவர் அத்தோடு நிற்காமல் பல நற்பணிகளையும் செய்தார். தொண்டைமான் ஆறு என்ற பெயரால் அழைக்கப்படும்  கால்வாயை வெட்டியவரும் அவரே. கடலுடன் இணைக்கும் இக்கால்வாய் உள்நாட்டுப் பொருட்களை நேரடியாக கப்பலில் ஏற்ற உதவியது . அவர் இணுவில் கிராமத்தில் தங்கிய காலத்தில் ஏற்கனவே இருந்த பிள்ளையார் கோவிலை மேம்படுத்தி கட்டிடம் எழுப்பினார். அதற்குப்பின்னர் கூழங்கை ஆரிய சக்ரவர்த்தி எல்லாக் கோவில்களுக்கும் திருப்பணி செய்தது போலவே இக்கோவிலுக்கும் திருப்பணி செய்தார். இந்தத்  தகவல் எல்லாம் யாழ்ப்பாண வைபவ மாலை, மற்றும் ராஜநாயகம் இயற்றிய பழங்கால சிலோன் என்ற நூல்களிலிருந்து நமக்குக் கிடைக்கினறன.

.

கோவில் தொடர்பான கல்வெட்டுகள் உள்ள ஒரே இடம் இதுதான் என்றாலும் அவை மிகவும் அழி   ந்த நிலையில் உள்ளன. ஆயினும் வாக்கியங்கள், அதிலுள்ள விஷயங்கள், எழுத்தமைதி ஆகியன பல செய்திகளைத் தருகின்றன. கோவிலுக்கு வழங்கப்பட்ட தானம் பற்றிப் பேசும் இக்கல்வெட்டு, சோழர் காலத்துக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த கல்வெட்டுதான்.

நயினாத் தீவு நாகபூஷணி அம்மன் கோவிலில, மேலும் ஒரு கல்வெட்டு இருக்கிறது. ஆயினும் அது கோவில் தொடர்பான கல்வெட்டு அல்ல.

போர்ச்சுகீசியர்களின் மதவெறி அட்டூழியங்களிலிருந்து இந்தக் கோவிலும் தப்பவில்லை. கோவில்களை இடிப்பதே அந்த கலியுக அரக்கர்களின் தொழிலாக இருந்தது. அவர்கள் கஜினி முகமது, மாலிக்காபூர் போல தங்க வெறி படைத்த கயவர்கள்; கோவிலுக்குள் தங்கத்தினால் ஆன விக்கிரகங்களும், நகைகளும் இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியவே யாழ்ப்பாணத்தில் இருந்த நூற்றுக்கு கணக்கான கோவில்களைத் தரை மட்டம் ஆக்கினார்கள். ஆனால் புத்திசாலியான குருக்கள்களும் பக்தர்களும் அவர்கள் வரும் முன்னரே விக்கிரகங்களைக் குளத்திற்குள்ளும் கிணற்றுக்குள்ளும் மறைத்து வைத்தனர்.  இன்று அவை  புத்துயிர் பெற்றுவிட்டன

பிற்காலத்தில் இக்கோவிலுக்கு புத்துயிர் ஊட்டியவர் பெயரும் கருணாகரன்தான். கருணாகர ஐயர் என்பவர் முறையான கோவிலை நிறுவி, பூஜை புனஸ்காரங்களைக் கொணர்ந்தார். இன்று வரை அவர்தம் பரம்பரை ஆகம விதிகளின் படி நித்திய பூஜைகளை நடத்தி வருகின்றனர்.

கோவிலுக்குள் நடராஜர் , சுப்பிரமணிய சுவாமி விக்கிரகங்களும் வழிபடப்படுகின்றன .

கல்வெட்டுகள்  தரும் தகவல்

பேராசிரியர் இந்திரபால இந்தக் கல்வெட்டுகளை ஆராய்ந்து 1973-ம் ஆண்டு கும்பாபிஷேக மலரில் தான் கண்ட விஷயங்களைத் தொகுத்து அளித்திருக்கிறார் . வைத்தீஸ்வர குருக்கள் காலம் வரை கோவிலுக்கு வெளியே கேட்பாரற்றுக் கிடந்த கல்வெட்டைக் கோவிலுக்குள் அவர் கொண்டு வந்தபின்னர்தான் அதன் மதிப்பு தெரிந்தது.. 1928ம் ஆண்டில் ANCIENT JAFFNA ஏன்ஷியண்ட் ஜாப்னா  நூல் எழுதிய முதலியார் சி. ராசநாயகம் கல்வெட்டின் காலம் 1567ம் ஆண்டு என்று கணித்தார் . பின்னர் பேராசிரியர் இந்திரபால இரண்டு கல்வெட்டுகளையும் நுணுகி ஆராய்ந்தார் .

முதல் கல்வெட்டில் 11 வரிகள் உள்ளன. தமிழ் நாட்டுக் கல்வெட்டுகளைப் போலவே ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற சம்ஸ்க்ருத வாழ்த்துடன் துவங்கி இறுதியில் கல்வெட்டு சொல்லும் விஷ்யங்களை மீறுவோருக்கு சாபங்களும் இடப்பட்டுள்ளன. கல்வெட்டில் பிரபவசித்திரை என்ற சொற்கள் உள்ளதாலும் அதன் எழுத்து எந்தக் கால வடிவம் உடையவை என்பது தெரிவதாலும் 1567 CE என்று கணிக்கப்பட்டது . வைரவ சூலக் குறியும் கல்வெட்டில் உள்ளது. கோவிலுக்கு விடப்பட்ட நில தானம் பற்றிய கல்வெட்டு என்றும் ஊகிக்கப்படுகிறது .

இரண்டாவது கல்வெட்டு

முதல் கல்வெட்டுக்கு மேல் இது இருக்கிறது காலத்தில் பிந்தியது; அதாவது 16ம் நூற்றாண்டு.

ஐந்தே வரிகள்தான் இருக்கின்றன. கோவில் பண்டாரத்துக்கு 5 பணம் தானம் அளிக்கப்பட செய்தி இதில் கிடைக்கிற்றது .

வருங்காலத்தில்  வரப்போகின்ற ஆபத்துக்களை எண்ணித்தான் இவைகளைக் கற்களில் வடித்தனர் போலும். கோவிலுக்கு ஊரு செய்வோர் கங்க நதிக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்களாக என்ற சாபம் கல்வெட்டில் இருக்கிறது. போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்கள் மீது இடப்பட்ட சாபம் இது

வரலாற்றை உற்று நோக்குகையில் யாழ்ப்பாணக் கோவில்கள் எப்படி அழிக்கப்பட்டன என்பது தெரிகிறது

1544 – மன்னார் மீது போர்ச்சுகீசியர் தாக்குதல்

1560- யாழ்ப்பாணம் மீது போர்ச்சுகீசியர் தாக்குதல்

1565 – இந்து மத பாதுகாவலன் சங்கிலி மரணம்

1575- முன்னேஸ்வரம் கோவிலை மத வெறியர்கள் தரை மட்டம் ஆக்கினார்கள்.

1589- திருக்கேதீஸ்வரத்தில் பூஜைகள் நிறுத்தம்

அதிசயத்திலும் அதிசயம்

இந்துக்களை யாராலும் ஒழிக்க முடியாது; ஒழிக்கப் புறப்பட்டவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது இந்து மதம் சனாதன தர்மம். அதாவது என்றுமே அழிக்க முடியாதது.

புத்தர், சமணர் பெயரில் சில கும்பல்கள் செய்த அட்டூழியங்களை  ஆதி சங்கரர் அழித்தார் ;

தமிழ் நாட்டில் சில கடவுள் விரோதக் கும்பல்கள் செய்த அட்டூழியங்களை  சம்பந்தரும் மாணிக்கவாசகரும்  அழித்தார்கள்  ;

முஸ்லீம் மதவெறியர்கள் அழித்த கோவில்களை விஜய நகரப் பேரரசும், நாயக்க மன்னர்களும்  மீண்டும் உண்டாக்கி  அவுரங்க சீப் கும்பல்களை அழித்தார்கள் .

இலங்கையில் நடந்த அழிவு வேலைகளுக்கு, ஆறுமுக நாவலர் முற்றுப்புள்ளி வைத்து, இந்து மறுமலர்ச்சியை உண்டாக்கினார்.

உரும்பிராய் வட்டாரத்தில் 1959-ம் ஆண்டில் கோவில் பாதுகாப்பு சபை தோன்றியது . 1965-ம் ஆண்டில் தேர்களை பாதுகாக்க அமைப்புகள் கட்டப்பட்டன

ஆவணி சதுர்த்தியில் துவங்கும் வருடாந்திர விழா பத்து நாட்களுக்கு நடை பெறும். தேர்த் திருவிழா நாளில் யாழ்ப்பாண பக்த்ர்கள் இங்கே குவிகின்றனர். அப்போது கருணாகர விநாயக மூர்த்தி கருணை மழை பொழிகிறார் .

கோவில் பற்றிய முழு விவரம் உள்ள பதிப்பு ,

1973ம் ஆண்டில் கோவில் வெளியிட்ட கும்பாபிஷேக மலர்.

–SUBHAM—

Tags- கருணாகர பிள்ளையார் , உரும்பிராய், யாழ்ப்பாணம் , சோழ,

S Nagarajan Article Index- September 2023 (Post No.12,545)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,545

Date uploaded in London –  2 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

SNR Article Index : SEPTEMBER  2023

SEPTEMBER  2023

16-9-23 12490  பாரதியின் பன்முகத் திறன் – (பகுதி 1) 10-9-2023 அன்று மாலைமலரில் வெளியான கட்டுரை                                                                                   17-9-23 12492  பாரதியின் பன்முகத் திறன் – (பகுதி 2) 10-9-2023 அன்று மாலைமலரில் வெளியான கட்டுரை                                                                                        18-9-23 12495 S Nagarajan Article Index August 2023                                                                   19-9-23 12499 ஓஸோன் மண்டலத்தைப் பாதுகாப்போம்! (முதல் பகுதி) மாலைமலர்  14-9-23 இதழில் வெளிவந்தது.                          20-9-23 12503 ஓஸோன் மண்டலத்தைப் பாதுகாப்போம்! (இரண்டாம் பகுதி) மாலைமலர்  14-9-23 இதழில் வெளிவந்தது.                     21-9-23 12506 72000 நாடிகளும் ஆரோக்கியம் தரும் ஆசனங்களும்! ஹெல்த்கேர் செப்டம்பர் 2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.                 22-9-23 12509 திண்டுக்கல் யாகத்தில் பர்மாக்காரருக்கு கிடைத்த தரிசனம்! (குழந்தையானந்த ஸ்வாமிகளின் அற்புதம்)                 23-9-23 12517 கலெக்டரை விரட்டிய நாகப் பாம்பு! (குழந்தையானந்த ஸ்வாமிகளின் அற்புதம்)                                           24-9-23 12519 தகுதி உள்ளவர்களுக்கே தரிசனம் கிடைக்கும்! – ஷீர்டி  சாயி பாபாவின் அற்புதம்!                                                                                                             25-9-23 12522 பிச்சைக்காரர் மீது கோபம் கொள்ளாதே! – ஷீர்டி சாயி பாபாவின் அற்புதம்!                                                                                                                  26-9-23 12526 ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்‌ஷா                      27-9-23 12529 வாழ்வுக்கு ஆதாரமான நதி வளம் காப்போம்! – உலக நதிகள் தினம்! (பகுதி 1). செப்டம்பர் 23, 2023 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை.                                                                                                                  28-9-23 12532 வாழ்வுக்கு ஆதாரமான நதி வளம் காப்போம்! – உலக நதிகள் தினம்! (பகுதி 2). செப்டம்பர் 23, 2023 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை.                                                                                                                29-9-23 12534நடுங்கும் சீனா! வளரும் பாரதம்!!                                                    30-9-23 12537மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா – கதாம்ருதம் அளித்த மகான்!

***

Find the 22 Names of Brahma in the Square (Post.12,544)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,544

Date uploaded in London – –  –  1 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 only three words are split; others are given in full.

B CHATURANANA
LRDRUHINAH PT
OSATMABHUH AA
KU H TH  I RH
ER VMHAS RJAD
SAPITAMAHAHMI
AJRRVNSTYNKEV
HYAIADAYOYASE
PEJNHABANAMHD
USACAJJKIGATA
RHPHNAAAHALIS
VTAIAH H RA A
AATSWAYAMBUHN
HIHDIV  A  A

ANSWERS

1.Brahma = Big, Supreme, creator; To breathe is also another meaning. We can see him as the life breath of every creature or one who crated all that breathes.
2.Atmabhu = self existent
3.Surajyeshta = elder of the Devas/Deities
4.Parameshti = Giver of supreme desire, Moksha; he who stays in the lotus of heart; also who is worshipped with Yajnas (ishti).
5.Pitamahah = Grandfather
6.Hiranyagarba = Golden Egg
7.Lokesah = Lord of the world
8.Swayambhu = self existent (originated)
9.Chaturanana = Four faced
10.Datha = exalted; leader
11.Abjayonih= Lotus born
12.Druhinah= creator of the world
13.Kamalasanah = Lotus seated
14.Prajapatih = Lord of all creatures
15.Veda = Vedas come from him
16.Vidhata = Exalted in heaven (leader)
17.Vidhih = Lord of Vedas; one who is in charge of Vidhi/fate
18.Andajah = Egg born
19.Purvah = First
20.Satyakah = Truthful
21.Hamsavahanah = one who has swan as vehicle
22.Virinchi = Creator

XXXXX

TAGS – Names , Brahma, Square

DURGA SAPTA SATI WORK SHOP FOR FOUR DAYS IN LONDON (Post No.12,543)

London Swaminathan and London Kalyanji with the foreign delegates on 1-10-2023

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,543

Date uploaded in London – –  –  1 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Foreigners from different countries attended the Durga Sapta Sati Purvanga  workshop for four days in Wembley, London. They recited Durga Suktam, Devi Mahatmyam, Ratri Suktam, Kilaka Stotram etc for four days. I attended the concluding function along with the priest London Kalyanji. Sai devotees made good arrangement for the foreign delegates. Food was served all the four days for over 25 delegates. I gave my English books to the foreign delegates.

DURGA SAPTA SATI WORK SHOP IN LONDON WITH DEVOTEES FROM USA, GERMANY, CZECH, CROATIA, SINAGAPORE, UK, AND MANY OTHER COUNTRIES WAS HELD FOR FOUR DAYS AND IT CONCLUDED TODAY AT WEMBLEY 1-10-2013. LONDON KALYANJI DID THE PUJA FOR FOREIGNERS. LONDON SWAMINATHAN ATTENDED IT AND TOOK PICTURES.

–subham—

Tags —Durga Sapta Sati, London Workshop, Foreign delegates, London swaminathan