பகவத் கீதையில் சுவையான சொற்கள் – ‘முத்து மாலை’ (Post No.10,712)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,712

Date uploaded in London – –    4 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதையில் சுவையான சொற்கள் – ‘முத்து மாலை’

பகவத் கீதையின் சொல் நயத்தை ரசித்துப் படித்தால் , கிருஷ்ண பரமாத்மா சொல்லும் கருத்துக்களை நினைவு வைத்துக் கொள்வதும் எளிதாக இருக்கும். கீதையின்(7-7) ஏழாவது அத்யாய  ஏழாவது ஸ்லோகம் சுவையான விஷயத்தை முத்து மாலை உவமையுடன் சொல்கிறது

ஸூத்ரே மணிக³ணா

मत्तः परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय।
मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव॥७॥

மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சித³ஸ்தி த⁴நஞ்ஜய|
மயி ஸர்வமித³ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக³ணா இவ ||7-7||

த⁴நஞ்ஜய = தனஞ்ஜயா
மத்த: அந்யத் கிஞ்சித் = என்னைக் காட்டிலும் வேறு ஒன்றும்
பரதரம் ந அஸ்தி = உயர்ந்த பொருள் இல்லை
இத³ம் ஸர்வம் = இவ்வையகமெல்லாம்
ஸூத்ரே மணிக³ணா இவ = நூலில் மணிகளைப் போல்
மயி ப்ரோதம் = என் மீது கோக்கப்பட்டது

தனஞ்ஜயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது கோக்கப்பட்டது.

ஒரு நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்களைப் போல (ரத்ன மணிகளைப் போல) இந்த அண்ட சராசரங்கள் அனைத்தும் என்னுள்ளே உள்ளன என்பது பொருள்.

xxxxxx

இதில் பல சுவையான விஷயங்கள் உள்ளன. இது பாஷா (Basha)  எழுதிய நாடகத்திலும் திருக்குறளிலும் உளது. காளி தாசனும் புறநானூற்றுப் புலவனும் இதை ‘தோரண மாலை’ என்னும் உவமையால் விளக்குவார்கள்.

1.முதலில் சூத்ரம்= நூல் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதற்கு தமிழ், சம்ஸ்க்ருத மொழிகள் இரண்டில் மட்டும் ஒரே பொருள்; காரணம் இவை இரண்டும் ஒரே மூலத்தில் பிறந்த மொழிகள். கால்ட்வெல் கும்பல், மாக்ஸ்முல்லர் கும்பல் கதைப்பது போல ஆரிய- திராவிட மொழிக் குடும்பம் வேறு வேறு அல்ல.

சூத்ரம் = புஸ்தகம்  = நூல்

சூத்ரம் =  நூல் = துணி தைக்கும் நூல்

தொல்காப்பியத்தில்  சூத்திரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் உளது.

2.இரண்டாவது சுவையான விஷயம் மணி என்பதை வியாக்கியான கர்த்தர்கள் முத்து (Pearl)  என்றோ உருண்டையான மணி (gem beads) என்றோ விளக்கி அதை நூலில் கோர்த்த மாலை என்கின்றனர். 2300 ஆண்டு பழமையான புத்தமத சிற்பங்களிலும் (Barhut, Sanchi, Saranath, Amaravati) அதைக் காண்கிறோம். அதாவது பூமி முதலிய கிரகங்கள் உருண்டையானவை. (Globe) கோள வடிவில் ஆனவை. இதை குப்தர் கால வராஹ அவதார சிலைகளிலும் காண்கிறோம் . ஆக அந்த சராசரங்கள் கோள வடிவு கொண்டவை என்பதைக் கண்டுபிடித்ததும் நாம்தான்.

Xxx

குறள் 1273

திருக்குறளிலும் முத்து மாலை உவமை இருக்கிறது

“( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.”

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு– குறள் 1273

பொருள்
மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

Xxx

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹமிஹிரர் என்னும் வானசாஸ்திரி, ஜோதிட நிபுணர் எழுதிய இரண்டு நூல்களில் ஒன்றான பிருஹத் சம்ஹிதையில் (13-1-6) சப்தரிஷி மண்டல நட்சத்திரக் கூட்டத்தை  முத்து மாலை என்றும் தாமரை மாலை என்றும் வருணிக்கிறார்.

அவருக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய பாஷாவும் (ஸ்வப்ன வாசவ தத்தம் 4-2) , அவரை ஒட்டி வந்த காளிதாஸ மஹா கவியும் இதே போல பற வைக் கூட்டத்தை தோரண மாலை, முத்து மாலை என்று வருணிக்கின்றனர். அதை சங்க காலப் புலவர்களும் அப்படியே எழுதியுள்ளனர் (பறவைகள் குடியேற்றம் பற்றிய கட்டுரையில் முன்னரே கொடுத்துள்ளேன் )

இவர்கள் எல்லோருக்கும் ஊற்றுணர்ச்சி கொடுத்தது பகவத் கீதை ஸ்லோகமே.

இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை என்பதற்கு பாஷா 2200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நாடகங்களை எடுத்துக் காட்டலாம். சம்ஸ்க்ருத மொழியில் தோன்றிய முதல் நாடகங்கள் இவை. பாஷா எழுதிய ஸ்வப்ன வாசவ தத்தம் என்னும் அவருடைய நாடகம்,  காளிதாசனின் சாகுந்தலத்துக்கு இணையானது.

Xxx

My Old articles

பறவைகள் குடியேற்றம்

Bird Migration in Kalidasa and Tamil Literature

https://tamilandvedas.com › 2012/02/05 › bird-migratio…

5 Feb 2012 — Bird Migration in Kalidasa and Tamil Literature … Migration of birds is one of nature’s mysteries and wonders. Birds migrate to warmer places …


Bird Migration in Kalidasa and Tamil Literature – South Indian …

http://www.sisnambalava.org.uk › articles › others › bir…

8 Aug 2012 — Migration of birds is one of nature’s mysteries and wonders. Birds migrate to warmer places from cold countries for food and breeding.

ஒத்து | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஒ…

·

28 Sept 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … பகவத் கீதை யில் கண்ணனும் ‘ சூத்ர மணி கணா‘ இவ (7-7 ) …


pearl | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › pearl

·

4 Jan 2017 — … சர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ … சம்ஸ்கிருதத்தில் உள்ள சூத்ரம் என்ற …

Kalidasa’s references of swan, cranes and Himalayan geese: Mega. 11,23, 59, 70,81.

Vikra. IV 2,3,4,6,20;31,32,33,3441,54

BIRD MIGRATION :Vikra IV 14 to 17

Kumara. 1-30 (Hamsa mala)

Ragu. IV 19,VIII 59, XIII-33, XVI 33, 56, XVII-75

Malavika.II-2

Rv 1-41

–SUBHAM–

TAGS— பகவத் கீதை, சுவையான சொற்கள் ,முத்து மாலை

வேதங்களின் மஹிமை : ஶ்ரீ சத்யசாயி பாபா அருளுரை! (Post.10,711)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,711
Date uploaded in London – – 4 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதங்களின் மஹிமை : ஶ்ரீ சத்யசாயி பாபா அருளுரை!
ச.நாகராஜன்
வேதங்களின் மஹிமை பற்றி ஶ்ரீ சத்யசாயி பாபா 3-10-1989 அன்று பிரசாந்தி நிலையத்தில் ஒரு விளக்கவுரையை நிகழ்த்தினார்.
அதன் மொத்த சாரம் வேதங்களை அலட்சியப்படுத்தினால் ஆன்மீகச் சீரழிவு ஏற்படும் என்பது தான்!
அவர் உரையின் ஒரு பகுதியைக் கீழே காணலாம்:
வேதங்கள்
வேதங்கள் நான்கு.
ஒவ்வொர் வேதத்திலும் பல சாகைகள் (கிளைகள்) உண்டு. உபசாகைகளும் உண்டு. (உள் கிளைகள்).
ரிக் வேதத்தில் 20 சாகைகளும் 21 உபசாகைகளும் உள்ளன. அவற்றில் இன்று நம்மிடம் இருப்பது மூன்று மட்டுமே.
அதே போல யஜூர் வேதத்தில் 96 சாகைகள் உண்டு. அவற்றில் இன்று நம்மிடம் காலவெள்ளத்தை எதிர்த்து இருப்பது இரண்டு மட்டுமே.
அடுத்து சாம வேதத்தில் 1000 சாகைகள் உண்டு. இன்று நம்மிடம் இருப்பது மூன்று மட்டுமே.
இப்போது நம்மிடம் இருக்கின்றவற்றிலேயே அத்துணை ஆன்மீகச் செல்வம் இருக்கிறது என்றால் வேதம் அனைத்தும் அப்படியே நம்மிடம் இன்று இருந்தால் பாரதீயர்களின் ஆன்மீகப் பாரம்பரியம் எவ்வளவு இருந்திருக்கும்!
வேதங்களை அலட்சியப்படுத்தியதாலேயே பாரதீயர்களின் ஆன்மீக மற்றும் அறிவியல் அறிவு படிப்படியாக குறைந்து விட்டது.

இதன் காரணமாக அவர்களிடையே ஒரு குறுகிய மனப்பான்மை வந்து விட்டது.

பரந்த பார்வை என்பதை கிரகணம் பிடித்து விட்டது.
இன்று வேதங்களின் பால் பற்றும் மதிப்பும் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பிராமணர்களிடையே கூட வேதத்தின் மீதுள்ள அக்கறையும் ஆர்வமும் குறைந்து விட்டது.

பிராமணர்கள்

பிராமணர்கள் யார்? பிராமணர் என்றால் மந்திரத்தின் மறு உருவம். பிரம்மத்தைக் குறிக்கும் மந்திரங்களை சீராக ஓதுபவர்களே பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
இன்று பிராமணர்கள் தங்கள் மந்திரத்தை மறந்து விட்டார்கள்.
நவீனக் கல்வி முறை, பணத்தின் மீது கொண்ட பேராசை, குறுகிய மனப்பான்மையுள்ள் விஷயங்களின் மீதான ஆர்வம் ஆகிய இவற்றால் அவர்கள் தங்களது உள்ளார்ந்த தெய்வீகத்தை மறந்து விட்டார்கள்.
அதன் விளைவாக, அமைதியும் பாதுகாப்பும் பலியாகி விட்டன.
வேதம் என்றால் என்ன? ஒரு அர்த்தம் விழிப்புணர்ச்சி என்பதாகும்.
இன்னொரு அர்த்தம் புத்திகூர்மை என்பதாகும். இன்னொரு அர்த்தம் விவேகம் என்பதாகும்.
விவேகத்தை வளர்க்க விரும்புவோர்கள் வேதத்தின் மீது அளவற்ற ஆர்வத்தைக் கொள்ள வேண்டும்.
இன்று புத்திகூர்மை அதிகார பதவிகள் மற்றும் உடைமைகளை பெறவும் வசதிகளையும் சுகங்களையும் பெறவும் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. நல்ல குணங்களை வளர்த்து இறைவனை அடையும் நோக்கத்துடன் நல்ல மனிதராக ஆவதில் அது பயன்படுத்தப்படாமல் போய் விட்டது. எல்லா புத்திகூர்மையும் சிறிய நோக்கங்களுக்காகவே துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

பரந்து விரிந்த பார்வையைத் தரும் வேதங்கள்

மனித குணாதிசயங்களைக் கொண்டு அதன்படி வாழ்ந்து நல்ல வாழ்க்கையை வாழ்ந்தாலேயே மனிதன் நிஜமான மனிதன் என்று கூறப்படுவான் என்று வேதங்கள் வலியுறுத்துகின்றன.
இன்று வேதங்களை ஓதுபவர்களில் பலரும் அதன் உண்மையான நோக்கத்தை அறிய சிரமப்படுகிறார்கள்.
அவற்றின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து அவற்றை அவர்கள் ஓதத் தொடங்கினால் எல்லையற்ற சந்தோஷத்தை அடைவார்கள்.
அப்போது மட்டுமே அவர்கள் வேதங்களின் உள்ளார்ந்த தெய்வீகத்தையும் ஆற்றலையும் அறிவர்.
வேதங்கள் எதெல்லாம் சிறந்தவையோ எதெல்லாம் உன்னதமானவையோ அவற்றைத் தழுவி உலகளாவிய பரந்த பார்வையைக் கொண்டுள்ளவை.
அனைத்திலும் சமத்வம் என்னும் கொள்கையை அவை கற்பிக்கின்றன.
ஏகம் என்ற ஒருமையை அவை பறை சாற்றுகின்றன.
துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாகப் பாவிக்குமாறு அவை கற்பிக்கின்றன.
இன்று மந்திரங்களை ஓதுபவர்கள் அந்த உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொள்ளவில்லை.
ஒரே ஒரு மந்திரத்தின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டால் கூட, அதுவே போதும்!
ஒவ்வொரு நாளும் சாந்தி மந்திரம் ஓதப் படுகிறது.
ஓம் சஹனாவவது|
சஹனௌ புனக்து|
சஹவீர்யம் கரவாவஹை|
இது எதைக் குறிக்கிறது?
நாம் அனைவரும் ஒன்றாக இணைவோம்.
நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் ஒருங்கிணைந்த லயத்துடன் இருப்போம்.
என்ன ஒரு பிரமாதமான பரந்த ஒரு பார்வையை இந்த மந்திரம் தருகிறது!

இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மையைச் சுட்டிக் காட்டும் மந்திரங்கள் கூட குறுகிய உணர்வில் இன்று தவறாகச் சித்தரிக்கப்படுகிறது.
ஆகவே தான் அந்தக் காலத்தில் இருந்த சமத்துவத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இன்றைய நாளில் நம்மால் காண்பதற்கு முடியவில்லை.
ஏனெனில் மனிதனின் அணுகுமுறைகளும் உணர்வுகளும் மனித அளவிலிருந்து கீழிறங்கி பிளவு சக்திகள் உட்புகுந்து விட்டதால் தான்!

மேற்கூறிய உரையில் பகவான் பாபா இன்னும் அதிக விளக்கங்களைத் தருவதோடு, வேதங்களையும் உபநிடதங்களையும் உள்ளபடி உணர்ந்து கொண்டால் தான் உண்மையான அத்வைதத்தை உணர முடியும் என்கிறார்.
இந்த உரை வேதங்களின் பெருமையை விளக்கும் அற்புதமான ஒரு உரையாகும்.

இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் ‘Sathya Sai Speaks’ தொகுதி 22இல் 29வது அத்தியாயமான ‘Message of the Vedas’ -இல் படித்து மகிழலாம்;
வேதங்கள் வாழி! பாரதம் வாழி வாழி!!


tags- பிராமணர்கள்,சத்யசாயி பாபா, வேதங்கள்,

KALKI AVATAR IN SRI LANKA? – Part 1 (Post No.10,710)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,710

Date uploaded in London – –    3 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I came across an interesting Tamil book in the library. It is hundred-year-old book titled Kalki Purana. It is a translation of Sanskrit book by one Mr Desikacharya. It is available in the British Library in London.

It entered the library in 1903 according to the entry rubber stamp.

The first 4 pages make interesting reading with 20 Sanskrit slokas saying in bullet points what is going to happen in the Kali Yuga. Even 2020 Chinese Virus (Covid 19) is predicted.

Before going into them, let me summarise the personal details of Lord Kalki, the Tenth Incarnation of Lord Vishnu. He is coming here again to destroy the evil and reestablish the Golden Age on earth.

The fourth and last age is called Kali Yuga (Black Age) and the Golden age is called Krita Yuga.

The book says Lord Vishnu/ Kalki will be born as a son of  Vishnu Yasas and his wife Sumathi . Kalki will be born with four brothers. He will marry one Miss Padmavathy, daughter of Brhadratha of the same island/ Simhala Island.

The most interesting point is that they are all from Simhala Island according to the book. In Hindu geography only two islands are linked with Lion/ Simha. They are Singapore (Simhapuri) and Sri Lanka. The language the majority of Sri Lankans speak today is Simhalese (Sinhalese).

In the beginning of the book, Vishnu promised the good saints that he will destroy evil Kaliyuga and establish Golden Krtayuga.

Xxx

What will happen in the Iron Age called Kaliyuga?

1.30 feet tall humans will become 3 inches tall.

2.People will be selling foods, women will be selling their honour and Brahmins will be selling their Mantras.

(My interpretation:- People will be reduced in size morally by one tenth. More restaurants will be there; housewives will cook less and buy more from restaurants. Brahmins will be money oriented than Mantra oriented)

3.Brahmins will be teaching Vedas to low caste people. Brahmin women will be selling milk and curd/yogurt. Business community will be selling meat.

4.Brahmins, Kshatrias and Vaisyas will be more into sex and eating. Shurdas will become good people with spotless character

(My Views: The meaning is everything will become topsy turvy. Even the government will implement reservation policy in religious schools and low caste people will be taught Vedas and appointed as priests; it has already happened in Tamil Nadu and Kerala.)

5. Women will give birth to children at the age of eight. No rules will be followed for sex.

6.Women will give birth like pigs. Everyone will be using both hands on their heads because of itching.

(My view:- Teen age pregnancy is already a big issue in Western countries. Probably it will spread to India. Women giving birth to lot of children is very common in Muslim countries. In Somalia 12 to 16 children in a family is very common. When the Muslim population crosses 50 % on earth, there will be more problems- the phrase used is ‘Itching on head which require both hands’.)

To be continued……………….

TAGS- Kalki, Tenth, Avatar, Kalki Purana, Simhala island, Sri Lanka

பிள்ளை (Fils-Son- Pillai) தமிழ் சொல் இல்லை? (Post No.10,709)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,709

Date uploaded in London – –    3 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(FOR PICTURES GO TO MY OTHER BLOG swamiindology.blogspot.com)

பிரெஞ்சு மொழியில் எப்படி பிள்ளை Fils (Filius in Latin) வந்தது ? என்பதே என் கேள்வி

பிள்ளை என்றால் பொதுவாக மகன் என்ற பொருளில் இன்று பயன்படுத்துகிறோம். ஆயினும் பிள்ளை எதனுடைய குட்டியாகவோ, குஞ்சாகவோ இருக்க முடியும். மேலும் இது ஆண் , பெண் இரண்டுக்கும் பயன்படும்

ஆண்  பிள்ளை, பெண் பிள்ளை, அணில் பிள்ளை etc.

1935 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதி தரும் பொருள்-

அணில், அன்றிற்  குஞ்சு, இளமையோன், கரிக்குருவி, காகம், கிளி, கீரி தெங்கு, கமுகு இவற்றின் கன்று, மகன், குட்டி, குழந்தை, இளைஞன், மரப்பாவை , ஒரு பட்டப் பெயர், சாதி, இளமை, சிறுமை என்று அடுக்குகிறது.

இதுதவிர பிள்ளைப்பேறு முதலிய சொற்களும் தொடர்ந்து வருகின்றன.

xxxxxx

ஒரு மனிதன் அல்லது மிருகம் அல்லது பறவை அல்லது தாவரத்தின் இளம் நிலை (Young, Little ones)  என்பது தெளிவாகிறது

பிள்ளை என்பதன் ஸம்ஸ்க்ருத அர்த்தம் ‘புத்ர (Putra in Sanskrit) ’. இது வேத காலம் முதல் வழங்கும் சொல்.

இதன் தமிழ் வடிவம் ‘புதல்வன் (Putra= Puthalva in Tamil)’.

சங்க இலக்கியத்தில் ‘மகன்’ என்று சொல்ல வரும் இடங்களில் புதல்வ – என்ற சொல்லே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

xxxx

பிள்ளை :– இதோ புள்ளி விவரம்–

தொல்காப்பிய பொருள் அதிகாரத்தில் குறைந்தது 8 இடங்கள்

நற்றிணை – 91, 181, 367, 385,

குறுந்தொகை – 46, 92, 139

அகநானூறு – 193, 257, 290, 297

புற நானூறு- 117, 342, 380, 389

ஐங்குறு நூறு 24, 151, 160

‘பிள்ளை’, வேறு வேறு பொருள்களில் பயன்படுகிறது.

xxx xxxxxxxxxxxx

புதல்வன் (Puthalva in Sangam Literature)  புள்ளி விவரம்:–

தொல்காப்பிய பொருள் அதிகாரத்தில் குறைந்தது 7 இடங்களில் வருகிறது

சங்க இலக்கியத்தில் சுமார் 70 இடங்களில் வருகிறது.

அதாவது பிள்ளை – என்பதைவிட சுமார் 4 மடங்கு சம்ஸ்க்ருத சொல் அதிகம்.

Xxxxx

Fils in French

பிரெஞ்சு மொழியில் F ஈல்ஸ் FILS  என்ற சொல் மகன் என்பதைக் குறிக்கும். இது லத்தீன் (Filius in Latin)  மொழியில் இருந்து வந்தது. லத்தீன் மொழி ஸம்ஸ்க்ருதத்துக்கு மிகவும் நெருக்கமானது. அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழ் மொழியோ இதிலிருந்து வேறுபட்ட திராவிடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது  மொழி இயல் வல்லுநர் கூறும் விஷயம். ஆனால் நிறைய தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதை பல கட்டுரைகளில் நான் காட்டிவிட்டேன். இந்த ‘பிள்ளை’ PILLAY என்பதும் அது போல ஒன்று என்பது என் வாதம்.

எனது மொழிக் கொள்கை — உலக மொழிகளுக்கு எல்லாம் மூல மொழிகள் தமிழும் ஸம்ஸ்க்ருதமும் என்பதே. எந்த பழைய சொல்லையும் இதன் ஒரு மூலத்துடன் இணைத்து விடலாம். மூலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு வேர் (Mula= Root)  என்று பொருள். ஆகவே தமிழும் ஸம்ஸ்க்ருதமுமே வேர் – உலகின் பழைய மொழிகளின் வேர் என்பது எனது துணிபு.

ஒரு சொல்லை மட்டும் நான் இதை எழுதவில்லை. இந்த பிளாக்கில் உள்ள 100க்கும் மேலான என் கட்டுரைகளைப்ப படித்தால் இது தனியானது அல்ல என்பது விளங்கும் . இதோ பிரெஞ்சு மொழியின் மூலம் – அதாவது சொற் பிறப்பியல் (Etymology of Pillai/ Fils/Son)

SON (Pillai in Tamil)

French- Fils ;

Galician – Fillo

Hungarian – Fiu

Italian- Figlio 

Portuguese – Filho

Latin- Filius

Xxxx

Daughter

French- Fille

Latin- Filia

Latin is the older than French and Italain. So linguists say it is derived from Latin

Xxx

My  Etymology

Puthra in Sanskrit = Puthalva in Tamil = Fils in French; Filius in Latin

R=L change is universal.

Where did Latin get it from?

Filius= Priya in Sanskrit meaning; Darling.

xxx

Homo/ Man = Mahan/Son in Tamil

Mirror image of Homo is Moho(n)= Mahan in Tamil= Son

If you read it in reverse, it becomes Moho/n

Xxx

Conclusion

Though we use Makan and Pillai for Son in Tamil today, Pillai is a foreign word in Tamil. That is why Pillai is used less than Puthalva in 2000 year old Sangam Tamil Literature.

–subham—

Tags- பிள்ளை, பிரெஞ்சு , புத்ர, புதல்வன், சம்ஸ்க்ருதம், லத்தீன் , தமிழ் சொல்

ஜீமுதவாஹனனின் தியாகம்! (Post No.10,708)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,708
Date uploaded in London – – 3 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜீமுதவாஹனனின் தியாகம்!
ச.நாகராஜன்

ஜீமுதவாஹனன் என்பவன் ஒரு வித்யாதர அரசன். ஜீமுதகேது என்ற சக்ரவர்த்தியின் புதல்வன். கருணையே வடிவானவன் அவன்.

ஒரு நாள் வழக்கம் போல வானத்தில் பறந்து கொண்டிருந்த அவன் பிரம்மாண்டமான கடலில் பளபளக்கும் ஒரு ஒளிக்குவியலைப் பார்த்தான். ரமணகதீபம் என்னும் நாகர்கள் வசிக்கும் இடத்தில் அந்த கடல் பகுதி இருந்தது.
இது போல ஒரு ஒளிக்குவியலை இதுவரை பார்த்ததே இல்லையே என்று நினைத்த அவன் அது ஒரு தீவோ என்று நினைத்து அதன் அருகில் இறங்கினான்.

அப்போது அருகில் ஒரு குட்டி நாகம் இருந்ததைப் பார்த்த அவன், “இது என்ன குவியல்?” என்று கேட்டான்.
‘ஓ’ என்று அலறிய அந்த நாகம், “அது பற்றி மட்டும் என்னைக் கேட்காதே!” என்று அழுது புலம்பியவாறே அங்கிருந்து ஓடி விட்டது.

குவியலைப் பார்த்தால் அது எலும்புக் கூடுகள்.
ஜீமுதவாஹனன் திகைத்துப் போனான்.
பின்னர் அங்கு ஒரு கிழட்டு நாகம் அருகில் இருப்பதைப் பார்த்து அதன் அருகில் சென்று, “ஓ! நாகமே! இது என்ன ஒரு எலும்புக்கூடு குவியலை நான் பார்க்கிறேன்!” இதன் விஷயம் என்ன?” என்று கேட்டான்.

கிழட்டு நாகம் பதில் சொல்ல ஆரம்பித்தது. “ஓ! வித்யாதரா! இது ஒரு பழைய காலக் கதை. கத்ருவுக்கும் வினதாவிற்கு இடையே இருந்த பகை உனக்குத் தெரியும் அல்லவா? அதையொட்டி கருடன் நினைத்தபோதெல்லாம் இங்கு வந்து நாகங்களைக் கொன்று பழி தீர்த்து வந்தது.

எண்ணிக்கையற்ற அளவில் நடக்கும் இந்த கொலைபாதகத்தைப் பொறுக்க முடியாமல் நாங்கள் கருடனை வேண்டிக் கொண்டு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டோம். அதன் படி தினம்தோறும் விருந்துடன் ஒரு நாகத்தைத் தருவதாக ஒப்பந்தம் முடிந்தது”

இதைக் கேட்ட ஜீமுதவாஹனன் மிக்க இரக்கம் கொண்டான்.
அப்போது தூரத்தில் ஒரு அழுகுரலும் பலத்த விவாதத்தில் ஏற்பட்ட குரலோசையையும் கேட்டான்.
அங்கு சென்று பார்த்தால் ஒரு குடும்பம் விவாதத்தில் ஈடுபட்டிருந்தது.

அங்கு முதிய நாகம், “நான் தான் போவேன். எனக்கு வயதாகி விட்டதே” என்று கூற அந்த நாகத்தின் மனைவி ‘நான் போகிறேன்’ என்று சொல்ல, குடும்பத்தின் ஒரு உறுப்பினர், “வயதான நீங்கள் யாரும் போக வேண்டாம், நானே போகிறேன்” என்று கூறியது.

உடனே இளம் வயது நாகம், “நான் தான் போவேன்” என்றது.
இதைப் பார்த்த ஜீமுதவாஹனனுக்கு விஷயம் என்ன என்று புரிந்து விட்டது.

அன்றைய விருந்துப் படையலைக் கொண்டு போக வேண்டிய முறை இன்று அந்தக் குடும்பத்தைச் சார்ந்து விட்டது.
யார் விருந்தைக் கொண்டு கொடுத்து, தானும் உணவாக பலி ஆவது என்பதைப் பற்றிய சோகமான விவாதம் தான் அது.
ஜீமுதவாஹனன் அவர்கள் அருகே சென்று, “விருந்துப் படையலை என்னிடம் கொடுங்கள். நான் போகிறேன். நீங்கள் யாரும் போக வேண்டாம்” என்றான்.

இதைக் கேட்ட அனைவரும் வாயடைத்துத் திகைத்துப் போய், “விருந்தாளி, நீங்கள் இப்படிப் பேசலாமா?” எங்களில் ஒருவரே போகிறோம்” என்றனர்.

ஆனால் ஜீமுதவாஹனன் வற்புறுத்தி விருந்தை வாங்கிக் கொண்டு உரிய இடத்தில் போய் குப்புறப் படுத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் பெருத்த ஓசையுடன் கருடன் அங்கு வந்தது. விருந்தை உண்டது. குப்புறப்படுத்திருந்த ஜீமுதவாஹனனையும் முழுங்கியது.

ஆனால் உடனே அது தளர்வடைந்து தான் உண்டதை எல்லாம் வாந்தி எடுத்தது.

ஜீமுதவாஹனனைப் பார்த்து, “ நீ யார்? வேதம் ஓதும் ஒரு உன்னதமான பிராமணனோ அல்லது விஷ்ணு பகதனோ தான் எனக்கு இந்த மயக்கத்தையும் தளர்வையும் ஏற்படுத்த முடியும். உண்மையைச் சொல்” என்று கேட்டது கருடன்.
ஜீமுதவாஹனன் நடந்தைச் சொன்னான். தான் வித்யாதரன் என்பதையும் கருணையினால் தன்னைத் தானே அர்ப்பணிக்க முன் வந்ததாகவும் கூறினான்.

இதனால் வியப்படைந்த கருடன், “உனது உன்னதமான தியாகத்தைப் போற்றுகிறேன். உனக்கு ஒரு வரம் தருகிறேன். இஷ்டமானதைக் கேள்” என்றது.

உடனே ஜீமுதவாஹனன், “ நானும் உனது பக்தனே! இனிமேல் இப்படி தினம் தோறும் நாக குடும்பத்தைப் பழி வாங்குதலை நிறுத்த வேண்டும். இந்த வரமே நான் வேண்டுவது” என்றான்.
கருடன் வித்யாதரனின் தன்னலமற்ற இந்த வரத்தைக் கேட்டு பிரமித்து அவனைப் பலவாறாகப் புகழ்ந்தது.

.நீ கேட்ட வரத்தைத் தந்தேன். இன்றோடு இங்கு வருவதை நிறுத்தி விடுகிறேன்” என்றது.

இதைக் கேட்ட நாக குலம் சந்தோஷத்தினால் ஆரவாரித்து ஜீமுதவாஹனனைப் போற்றி கொண்டாடியது.

அருமையான இந்தக் கதை சோமதேவர் இயற்றிய கதாசரித் சாகரத்திலும் க்ஷேமேந்திரர் இயற்றிய ப்ருஹத் கதா மஞ்சரியிலும் சொல்லப்படுகிறது. இது பதினோராம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும்.

ஜீமுதவாஹனனைப் பற்றிய சுபாஷித ஸ்லோகம் ஒன்றும் உண்டு.

கர்ண்ஸ்த்வசம் ஷிபிமார்ஸம் ஜீவம் ஜீமுதவாஹன: |
ததௌ ததீசிரஸ்தீனி நாஸ்த்யதேயம் மஹாத்மனாம் ||

சூரியன் எச்சரித்தையும் கேளாமல், கர்ணன் தனது கவசத்தை பிராமண வடிவத்தில் வந்த இந்திரனுக்குக் கொடுத்தான்.
சிபிச் சக்ரவர்த்தி பசியுடன் வந்த பருந்துக்கு (அதாவது இந்திரனுக்கு) தனது சதையை அரிந்து கொடுத்தான்.
இரக்கமே உருவெடுத்த ஜீமுதவாஹனன் தன்னையே நாக குலத்திற்காகத் தந்தான்.
ததீசி முனிவரோ வ்ருத்தாசுரனை வதம் செய்ய தனது எலும்புகளை வஜ்ராயுதம் தயாரிக்க தேவர்களுக்கு அளித்தார்.
மஹாத்மாக்களுக்கு எதுவுமே கொடுக்க முடியாதது என்பதில்லை.

இந்த சுபாஷித ஸ்லோகம், சுபாஷித ரத்னபாண்டாகாரத்தில் உதார ப்ரசாம்ஸத்தில் 11வது ஸ்லோகமாக அமைகிறது.

குறிப்பு : மஹரிஷி ததீசி பற்றிய வரலாறு கீழ்க்கண்ட கட்டுரைகள் வாயிலாக ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
கட்டுரை எண் 10633 வெளியான தேதி :- 6/2/2022
10637 வெளியான தேதி :- 7/2/2022


tags- ஜீமுதவாஹனன்

MYSTERY OF TWO KALI YUGAS EXPLAINED (Post No.10,707)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,707

Date uploaded in London – –    2 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Most of the Hindu Panchangas (almanacks) show the beginning of Kaliyuga as 3102 BCE. We have at least two inscriptions to show this date is correct. But the famous astronomer Varaha Mihira and his follower Kalhana of Kashmir used a later date. There is nearly a difference of about 700 years. Why?

Varahamihira (505 -587 CE) was the author of Brhat Samhita and Brhat Jataka. Astronomers and astrologers use both the books. They are like encyclopedias with lot of information. Kalhana (around 1150 CE) was a  Kashmiri Brahmin and author of Raja Tarangini (River of Kings). Foreigners consider him as the first Indian historian (I think they are wrong).

Xxx

TWO KALIYUGAS

John E.Mitchiner, explains the reason for this Two Kaliyuga calculation in his book ‘Traditions of the Seven Rsis’.

Now we begin the list of 27 stars with Asvini. Previously they begin the list with the star Krittika . Surya Siddhanta (4th Century CE)  was the first book to give us Asvini as first star.  It was accepted by all after 5th century CE. So we have been following this for about 1500 years. In between there was another calculation starting with Dhanista (Sravishata Nakhatra).

The confusion or the difference arose out of using 27 and 28 Nakshatras/stars. We say moon (Chandra) has 27 wives meaning that it goes around that path of 27 stars. But one more Nakshatra called Abhijit was introduced in some calculations.

Another confusion arose out of Sapta Rishi Mandala, the Seven Stars in the northern sky called Ursa Major (Great Bear) by the Greeks.

Children play with Tops. It revolves very fast and falls on the ground when it finishes. At that time of finishing, it slowly revolves. If you put a nail on its top and watches, it makes a circle. Our earth also has a pole which revolves like a top, but very slowly. It takes 27,000 years to make one circle. Hindus knew this from Vedic times. They used it for calculating time. They used it for calculation with regard to 27 stars.

There are some remarks in the Mahabharata about the Sapta Rishi stars and the 27 stars.

We see Sapta Rishi Era in Puranas. Kashmiris use it until this day.

They say Seven Rishis remain “in” one of the 27 stars. That means it is conjoined with one of the 27 stars. It changes every 100 years. One cycle takes 27,000 years.

Era of the Seven Rishis (Saptarishi) commenced with Krittika in 6676 BCE. The people who calculated this way said Kali Yuga began in 3102 BCE. Greek and Roman writers also mentioned it indirectly.

Vrddha garga was an astronomer mentioned in the book of Varahamihira.

Vrddha garga said that the Saptarishis were in Magha nakhsatra when the Kali Yuga began

But two group of people have different dates for this.

In John Mitchiner’s words-

“It would seem clear that there are two originally quite separate traditions-

One which places the Seven Rishis in Magha in 3102 BCE, the other placing it in 2448 corresponding to the different start of the Kali Yuga. We see a difference of 653 years.

The tradition says Kaliyuga began 35 years after the Mahabharata war. But Varahamihira says that the Mahabharata war happened Dwapara Yuga but the Kaliyuga started 653 years after that.

Who is right and who is wrong must be decided by scholars?

There is lot of confusion regarding other points as well. Linking Parasurama with Mahabharata character Karna also brings Rama and Krishna too close. Parsurama lived in Rama’s period; he cant be teaching archery to Karna. Vasistha and Visvamitra are seen in different periods too. So it is not one individual who lived in different Yugas. Same name was used by several people, probably Gotra name. One would understand it if they read History books. We see scores of Popes with the name John; we see 13 Ramesses in Egypt, we see scores of Shankaracharyas holding posts in 4 or 5 different Shankara Mutts.

Scholars must sit together to sort out these issues.

–subham—

Tags – Vrddha Garga, Varaha Mihira, Kali yuga, Kalhana

இலங்கையில் கல்கி அவதாரம்: கல்கி புராணம் கூறும் அதிசய விஷயம்- Part 2 (Post No.10,706)

FOR PICTURES AND ATTACHMENTS, GO TO swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,706

Date uploaded in London – –    2 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இலங்கையில் கல்கி அவதாரம்: கல்கி புராணம் கூறும் அதிசய விஷயம்- Part 2

கட்டுரையின் முதல் பகுதி நேற்று (1-3-2022) இங்கு வெளியானது. படங்களும் இணைப்புகளும் தெரியாவிட்டால் என்னுடைய மற்ற பிளாக்கிற்குச் swamiindology.blogspot.com  செல்லவும்

Continued from No.6

7.ஓ புத்திமானே , மாதர்கள் புருஷனை வஞ்சனை செய்து, புருஷனுக்கு முன் உண்ணுதலும் , உறங்குதலும் செய்யப்போகிறார்கள்

(என் கருத்து – இப்போதே இது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. பெண்கள் வேலைக்குச் செல்லத் துவங்கியவுடன் குல தர்மங்கள் மாறிவிட்டன. இப்பொழுது எல்லோரும் திருக்குறளில் உள்ள கருத்துக்களையும் சங்க இலக்கியத்தில் காணும் “கணவனே  கண்கண்ட தெய்வம்” என்ற கருத்தையும் எள்ளி நகை ஆடுகின்றனர் . ‘தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள்’ என்ற குறளை பெண்களுக்கு நடுவில் வோட்டுக்கு விட்டால், 100க்கு 90 சதவிகிதம் எதிர் வோட்டுப் போடுவார்கள். சங்க இலக்கியத்தில் கணவன் தெய்வம் என்று சொல்லி இருக்கிறதே என்றால், அப்போது எங்களையும் தெய்வம் என்று எழுதச் சொல்லுங்கள் அப்போது எங்கள் நிலையை எடுத்துரைப்போம் என்று விதண்டாவாதம் செய்வார்கள். அதாவது பழைய கருத்துக்களை நிராகரிப்பர். இதை 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் எழுதி இருப்பது அதிசயமே.)

கம்பியூட்டர், கால் சென்டர் தொழில்களில் பெண்கள் புகுந்தவுடன், தர்மம், தலை கீழாக மாறிவிட்டது.

8.பூமிகள் எல்லாம் சாரம் இல்லாமல் சுவல்ப பலனாய் (அதிக செழிப்பு இல்லாமல் ) பலிக்கப்போகிறது; பயிர்கள் யாவும் செழிப்பாக வளரமாட்டா .

9.ஜனங்களை பிணிகள் பீடிக்கப் போகிறதுகள் .விதவைகள் ஒரு புருஷனை மணந்து சந்ததிகளை யுண்டு பண்ணியும் , சுமங்கலி ஸ்த்ரீகள் புருஷனுட சண்டையிட்டு விதவைகளைப் போல ஆவார்கள்.

( என் கருத்து :– இது முற்றிலும் உண்மை ஆகிவிட்டது. மேலை நாடுகளில் இது முன்னரே நிகழ்ந்துவிட்டது. இந்தியாவில் பெரிய நகரங்களில் ஆண்டுக்கு 8000 (8000 divorce cases in every big city in India )டைவர்ஸ் கேசுகளுக்கு மேல் அதிகரித்துவிட்டன. மேலை நாடுகளில் single mothers சிங்கிள் மதர்களுக்கு சலுகைகள் அதிகம்; ஆகையால் பழைய கணவர்களை சட்ட ரீதியாக விவாக ரத்து (Divorce) செய்துவிட்டு அவருடன் நண்பன் போல வாழ்வது. அல்லது மற்ற ஆண்களுடன் சகஜமாக பழகுவது சர்வ சாதாரணம் .இப்படி வாழ்வதால் எல்லா ஆண்களையும் எப்போதும் அவர்கள் கவர முடிகிறது. இந்தியாவில் நடிகர், நடிகையிடம் காணப்படும் இவ்வழக்கம் பொது வாழ்விலும்  பெருகும் என்பது இந்த வாக்கியத்தின் பொருள் )

சீன வைரஸ் Chinse Virus  உலகைத் தாக்குவதற்கு முன்னர் இதைப் படித்திருந்தால் நமக்கே பொருள் தெரிந்து இருக்காது. சீன வைரஸ் பல லட்சம் உயிர்களைக் காவு கொண்ட பின்னர், ஒரு டாக்டர் கூட இனிமேல் நோய்கள் பற்றி ஆரூடம் கூற முடியாது. நாளை என்பது நம் கையிலா, நமன் கையிலா என்பது டாக்டர்களுக்கே தெரியாது. 100 ஆண்டுகளுக்கு முன்னரே இதை ஒருவர் எழுதி வைத்தது அதிசயமே.)

10.கலியுகத்தில் ஈவதில் விருப்பமுள்ளவன் தரித்திரனாகியும் , கிருபணன் (Miser) தனிகனாகியும், , பாபியானவன் தீர்க்க வயதுள்ளவனாகியும் , அல்ப ஜாதியில் பிறந்தவன் மஹாராஜாவாகியும், உத்தம குலத்தில் பிறந்தோர்களால் சேவிக்கவும் படுவான்

(என் கருத்து:– இதை இந்தியாவின் பல மாநிலங்களில் காண்கிறோம். 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நந்த வம்சத்து  சூத்திரர்கள் மற்ற மூன்று வர்ணத்தாரையும் கொடுமைப்படுத்தவே, சாணக்கியன் என்னும் உச்சுக் குடுமி பார்ப்பான், மயில் வளர்க்கும் வைஸ்யனை மெளரிய மன்னன் ஆக்கி, அலெக் சாண்டரையே திரும்ப ஓடும்படி செய்தான். அதற்குப் பின்னர் ஆண்ட வைஸ்யர்களான குப்தர்கள் ஆட்சி, இந்தியாவின் பொற்காலம் எனப்படுகிறது அதற்கு முன்னர் இந்தியாவை ஆண்ட 154 மன்னர்களும் க்ஷத்ரியர்கள் . அவர்கள் 6000 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டதாக கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி வைத்துள்ளனர்.)

11.கலியுகத்தில் மேகங்கள் பெருங்காற்றில் அடிபட, சுவல்ப  (கொஞ்சம்) மழை வருஷிக்கும். பூமி முழுதும் க்ஷஆமம் நிறைந்திருக்கும்

12.கலியுகத்தில் எல்லா ஜனங்களும் வேதாந்தம் பேசுவார்கள் ; ஒருவரும் தத்துவத்தை அறியார்கள். அந்தணர்கள் வெகு வாதங்களைப் பண்ணிக்கொண்டு வேஷத்தால் மாத்திரம் பிராமணத் தன்மையை அடைவார்கள்

(என் கருத்து:– இது 100 சதவிகிதம் உண்மை. சங்க கால இலக்கியங்கள் முத்தீ அந்தணர் என்று போற்றுகின்றன. நான் மறை அந்தணர் என்று வாழ்த்துகின்றன. இப்போது மூன்று தீயை தினமும் வழிபடும் அந்தணன் இல்லவே இல்லை. நான் மறைகளில் ஒரு வேதத்தை முழுக்கப் படித்து , அதன் படி வாழ்க்கை நடத்துவோரும் குறைவே .சூரிய உதயத்துக்கு முன்னர் எழுந்து குளித்துவிட்டு, வழிபடும் பிராமணர்கள், சம்பந்தர் காலத்துடன் போய்விட்டார்கள். ஆனால் அத்தனை பயல்களும் பூணுலை மட்டும் மாட்டிக்கொண்டு “நான் ஐயர் ஆகையால் எப்போதும் HIGHER ஹையர் / உயர்வானவன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

கண்டவன் எல்லாம், பிளாக் BLOG எழுதி வேதாந்தத்தையும் கோவில் பற்றியும் விளக்குகிறான்.

13. கலியுகத்தில் மனிதர் பொய்யை  சத்தியமாகவும் மெய்யை அசத்தியமாகவும் செய்து, வேத மார்க்க கர்மங்களை தூஷித்து, நீதியை யனுசரிக்க மாட்டார்கள்

(என் கருத்து:– இது பெரும்பாலும் சரியே; வக்கீல் தொழில் புரிவோரும், கோர்ட் ஜட்ஜ்மென்டுகளை படிப்போரும் இது முற்றிலும் உண்மை என்பர். பொய்யை மெய்யாகக் காட்டத்  துடிப்பவர்கள் வழக்கறிஞர்கள் . பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், நீதித் துறையில் இருந்தவர்கள் இப்படி நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்

14.கலியுகத்தில் குருக்கள்,  சீஷனென்று சிலரை சேர்த்துக் கொண்டு கட்டுக்கதைகளை சொல்லி பணத்தைப் பறிப்பார்கள் . மோக்ஷ மந்திரங்களை தாங்கள் அனுஷ்டிக்காமல் உபதேசம் பண்ண வருவார்கள்

( சிறையில் உள்ள பாபாக்கள் , வழக்கில் சிக்கிய சாமியார்களின் எண்ணிக்கை இதை சரி என்று நிரூபிக்கிறது)

15.கலியுகத்தில் சில குருமார்கள் நித்திய கருமங்களை இழந்து , இதரர்களுக்கு மாத்திரம் தியானத்தைப் போதித்து குலிங்க பக்ஷிகள் போல சஞ்சரிப்பார்கள்.

16.கலியுகத்தில் பிராம்மணாதி வருணங்கள் நித்திய கர்மாக்களை இழந்து  அதர்மங்களைச் செய்து, சாராயம், மாம்ஸம், கள் முதலான தாமஸ பதார்த்தங்களை புஜித்து உலகத்து ஜனங்களை நிந்திக்கப் போகிறரர்கள்

மூன்று வர்ணத்தாரும் அவரவர் செய்ய வேண்டிய நித்திய வழிபாடுகளை இழந்தது உண்மையே. மது பானம் , மாமிசம் சாப்பிடும் உயர்சாதியினரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது . வீட்டில் Liquor Bottles பாட்டில் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

17.கலியுகத்தில் வித்தியா குரு வென்றும், மந்திர உபதேச குருவென்றும் சிஷ்யன் என்றும் பேதமில்லாம, நாம வாசத்தால் மட்டும் பேதத்தையடைந்து ஆச்சாரிய பத்கினியை, சீஷனும் சிஷ்ய பத்தினியை குருவும் அனுபவிக்கப் போகிறார்கள்.

18. கலியுகத்தில் எவன் தனிகனோ  அவன் நல்ல  குலத்தில் பிறந்தவன் ஆகிறான். நல்ல குலத்தில் பிறந்து தரித்தரன் ஆனபின்னர், அவன் துஷ்க்ருதன் ஆகிறான் . சிலவிடங்களில் ஜாதி,பேதமில்லாமல் இருக்கும்.

19.கலியுகத்தில், மிருகம் முதலான ஜந்துக்கள் வயிற்றில் விசித்திர கர்மமும், கலியின் முடிவில் மனுஷ யோனியில் அல்ப மிருகங்களும் உண்டாக்கப் போகிறது

20.யோகிகளுள் சிறந்தவரான சூத புராணிகர், கலியுக தர்மங்கள் யாவற்றையும் ரிஷிகளுள் சிறந்தவரான வியாச முனியிடத்தில் நின்று  கேட்டு பரம ஆச்சர்யத்தை அடைந்து, மறுபடியும் கிருத யுக தர்மத்தை கேட்டார்கள் .

சம்பூர்ணம்

–subham–

tags-  tags- இலங்கை, கல்கி அவதாரம்-2, கல்கி புராணம்-2, 

மனிதப் பிறவியின் மகத்துவம் : புத்தரின் அருளுரை! (Post.10,705)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,705
Date uploaded in London – – 2 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனிதப் பிறவியின் மகத்துவம் : புத்தரின் அருளுரை!
ச.நாகராஜன்

மனிதப் பிறவியின் மகத்துவம்!

மனிதப் பிறவியின் மகத்துவத்தைப் பற்றி மஹரிஷிகள் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
புத்தபிரானும் இதை தன் சீடர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

ஒரு முறை சீடர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் சில மணல்துளிகளை எடுத்து அவர், தன் நகத்தில் பரப்பினார்.

பின்னர் சீடர்களை நோக்கிக் கேட்டார் : “ என் நகத்தில் பரப்பப்பட்டுள்ள மணல்களின் எண்ணிக்கை அதிகமா அல்லது பூமியெங்கும் உள்ள மணல்களின் எண்ணிக்கை அதிகமா?”

அனைவரும் உடனே, “ பூமியெங்கும் உள்ள மணலே மிக மிக அதிகம்” என்று ஒருமித்த குரலில் கூறினர்.

உடனே புத்தர் கூறலானார் ; “ உண்மை! பூமியெங்கும் உள்ள மணலே மிக மிக அதிகம்! இது போலத்தான் மனிதராகப் பிறவி எடுத்தோர் என் நகத்தில் பரப்பப்பட்டிருக்கும் மணலின் எண்ணிக்கை போல மிக மிகக் குறைவானவர்கள். ஆனால் பூமியில் உள்ள மற்ற உயிரினங்களோ எண்ணிக்கையில் மிக மிக அதிகம்”

இந்த உரையினால் மனிதப் பிறவியின் மகத்துவத்தை அனைவரும் உணர்ந்தனர்.

இது போலச் சிறு சிறு செயல்களால் பெரிய உண்மைகளைச் சொல்வது புத்தரின் வழக்கம்.

பொய் சொல்பவனுக்கு புண்ணியம் இல்லை!

ஒரு முறை ராகுலனைப் பார்க்கச் சென்றார் புத்தர்.

அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்ற ராகுலன் ஓடோடிச் சென்று அவர் பாதங்களை அலம்ப நீரைக் கொண்டு வந்தார்.

உயர்ந்த ஆசனத்தில் புத்தர் அமர்ந்திருக்க ராகுலன் ஒரு கலசத்தில் நீரைக் கொண்டு வர அதை எடுத்துக் கொண்டார் புத்தர்.
ஒரு சிறிய பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். கலசத்திலிருந்து, அந்தச் சிறிய பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொண்டு தனது பாதங்களில் விட்டுக் கொண்டார். சிறிது சிறிதாக நீரை விட்டுத் தன் பாதங்களைக் கழுவிக் கொண்ட புத்தர் பின்னர் கலசத்தைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்தார்.

பின்ன ராகுலனை நோக்கி புத்தர், “ இந்தப் பாத்திரத்தில் இப்போது சிறிதளவேனும் நீர் இருக்கிறதா?” என்று கேட்டார்.

ராகுலன் உடனே, “ இல்லை ஐயனே! தலை கீழாகத் திருப்பி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் ஒரு சிறிதளவேனும் நீர் இல்லை” என்றார்.

உடனே புத்தர் கூறினார் : “ராகுலா! தலைகீழாகத் திருப்பிக் கவிழ்க்கப்பட்ட பாத்திரத்தில் எப்படி ஒரு சிறிதளவேனும் நீர் இல்லையோ அதே போலத் தான் பொய்களைச் சொல்லும் மனிதனிடம் ஒரு சிறிதும் புண்ணியம் இருக்காது. தெரிந்து கொள்”

யாராலும் தவிர்க்க முடியாத ஐந்து விஷயங்கள்!
ஒரு முறை கோசல மன்னன் ஜேடவாணன் புத்தரை தரிசிக்க அவரது மடாலயத்திற்கு வருகை புரிந்தான்.
அப்போது அவசரம் அவசரமாக வந்த ஒரு தூதன் மன்னன் காதில் ஒரு துயரச் செய்தியைக் கூறினான்.
ராணி மல்லிகா மரணம் அடைந்து விட்டதாக அவன் கூறியதைக் கேட்ட மன்னன் ஆறாத் துயரத்துடன் தரையில் விழுந்து புரண்டான்.
புத்தரை நோக்கி அரற்றிப் புலம்பினான்.
புத்தர் அவனை நோக்கி மிக்க அமைதியாகக் கூறினார்: ‘
“ஓ! என் அருமை மன்னனே! இந்த உலகில் யாராலும் தவிர்க்க முடியாதவை ஐந்து விஷயங்கள். எவ்வளவு பெரியவராக இருந்தாலும் சரி, இவற்றை யாராலும் தவிர்க்க முடியாது.

நாள் ஆக ஆக மூப்பு அடையாமல் இருப்பது, எந்த வித நோயும் அடையாமல் வாழ்நாளில் இருப்பது, வருடங்கள் செல்லச் செல்ல காலத்தை இழக்காமல் இருப்பது, மரணமடையாமல் இருப்பது, மாறுதல் அடையாமல் இருப்பது – இந்த ஐந்தும் முடியாத விஷயங்கள். தெரிந்து கொள்” என்றார் புத்தர்.

புத்தரின் இந்த உபதேசத்தைக் கேட்டு மன்னன் அமைதியடைந்தான்.

நாள்தோறும் புத்தர் இப்படி அருளிய உபதேசங்கள் ஏராளம்; அவை அனைத்தும் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.


tags-  மனிதப் பிறவி, மகத்துவம், 

காற்று, மழை பற்றிய 31 பழமொழிகள் – மார்ச் 2022 காலண்டர் (Post10,704)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,704

Date uploaded in London – –    1 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

பண்டிகை நாட்கள் :–

மார்ச் 1 சிவராத்திரி ;14 காரடையான் நோன்பு; 17 காம தகனம்/ஹோலி; 18- ஹோலி; 18 பங்குனி உத்திரம்;

சுப முகூர்த்த தினங்கள் – 4,13,14, 16, 21, 23, 27, 28, 30

ஏகாதசி விரத நாட்கள் – 14, 28; அமாவாசை 2, 31; பெளர்ணமி 17

Xxxx

காற்று, மழை பற்றிய 31 பழமொழிகள் – மார்ச் 2022 நற்சிந்தனை காலண்டர்

மார்ச்  1 செவ்வாய்க் கிழமை

எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை பெய்யும்

xxx

மார்ச்  2 புதன் கிழமை

மழை விட்டும் தூவானம் விடவில்லை

xxx

மார்ச்  3 வியாழக் கிழமை

கடுங் காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை காட்டும்

xxxx

மார்ச்  4 வெள்ளிக் கிழமை

பல நாளை வெயில் ஒறுத்தாலும் ஒரு நாளை மழை ஒறுக்காது

xxx

மார்ச்  5 சனிக் கிழமை

மழைக்குக் குடையா இடிக்குக் குடையா?

xxx

மார்ச்  6 ஞாயிற்றுக் கிழமை

 மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்கியிருக்கமாட்டான்

xxx

மார்ச் 7 திங்கட் கிழமை

மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் யார் ?

xxx

மார்ச் 8 செவ்வாய்க் கிழமை

கார்த்திகை மாதத்தில் கடுமழை பெய்தால் , கல்லின் கீழ் இருக்கிற புல்லும் கதிர்விடும்

xxx

மார்ச்  9 புதன் கிழமை

மழை முகம் காணாத பயிரும் தாய் முகம் காணாத பிள்ளையும்

xxx

மார்ச்  10 வியாழக் கிழமை

மழையும் பிள்ளைப்பேறும் மகாதேவர்க்கும் தெரியாது

xxxx

மார்ச்  11 வெள்ளிக் கிழமை

நினைத்த நேரம் நெடு மழை பெய்யுமா ?

xxx

மார்ச்  12 சனிக் கிழமை

மழைக் கால் இருட்டானாலும் மந்தி கொம்பு இழந்து பாயுமா?

xxx

மார்ச்  13 ஞாயிற்றுக் கிழமை

மழைக்கு ஒதுங்கி வந்த  பிடாரி மனைக்கு சதுக்கம் போட்டதாம்

xxx

மார்ச்  14  திங்கட் கிழமை

மழைக்கோ படல் இடிக்கோ படல்

xxx

மார்ச்  15 செவ்வாய்க் கிழமை

மழையிலே போட்டாலும் நனைகிறதில்லை , வெயிலிலே  போட்டாலும் காய்கிறதில்லை

xxx

மார்ச்  16 புதன் கிழமை

மழை விழுந்தால் தாங்கலாம் , வானம் விழுந்தால் தாங்கலாமா?

xxxx

மார்ச்  17 வியாழக் கிழமை

கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப் பின்பு கொடையும் இல்லை

xxx

மார்ச்  18 வெள்ளிக் கிழமை

.ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை  இல்லாவிட்டால் அண்ணனுக்கும் சரி, தம்பிக்கும் சரி

xxx

மார்ச்  19 சனிக் கிழமை

ஐப்பசி  மாதம் அழுகைத் தூற்றல், கார்த்திகை மாதம் கனத்த மழை

xxx

மார்ச்  20 ஞாயிற்றுக் கிழமை

ஐப்பசி, கார்த்திகை அடைமழைக் காலம்

xxx

மார்ச்  21  திங்கட் கிழமை

காலத்தில் பெய்த மழை போல

xxxx

மார்ச்  22 செவ்வாய்க் கிழமை

காற்றும் மழையும் கலந்தடித்தாற் போல

xxxx

மார்ச்  23 புதன் கிழமை

காற்றிலே அகப்பட்ட கப்பல் போல அலைகிறது மனம்

xxx

மார்ச்  24 வியாழக் கிழமை

காற்றிலே கருப்பிலே கண்டதில்லை

xxx

மார்ச்  25 வெள்ளிக் கிழமை

காற்றுக்கு எதிரில் துப்பினால் முகத்தில் விழும்

xxx

மார்ச்  26 சனிக் கிழமை

காற்றுக்குத் தோணி எதிர்த்து ஓடாது

xxxx

மார்ச்  27 ஞாயிற்றுக் கிழமை

காற்றைப் பிடித்து கரகத்தில் அடைக்கலாமா

xxx

மார்ச்  28  திங்கட் கிழமை

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

xxx

மார்ச்  29 செவ்வாய்க் கிழமை

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

xxx

மார்ச்  30 புதன் கிழமை

காற்றில்லாமல் தூசி பறக்குமா ?

xxxx

மார்ச்  31 வியாழக் கிழமை

சண்ட மாருதத்திற்கு எதிர்ப்பட்ட சருகு போல

xxx

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

tags- காற்று, மழை, பழமொழிகள் ,மார்ச் 2022,  நற்சிந்தனை, காலண்டர்,

இலங்கையில் கல்கி அவதாரம்: கல்கி புராணம் கூறும் அதிசய விஷயம்- Part 1 (Post.10,703)

IF YOU DONT SEE THE PICTURES HERE, PLEASE GO TO swamiindology.blogspot.com

இலங்கையில் கல்கி அவதாரம்: கல்கி புராணம் கூறும் அதிசய விஷயம்- Part 1 (Post.10,703)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,703

Date uploaded in London – –    1 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான  கல்கி புராணத்தில் பல அதிசய விஷயங்கள் இருக்கின்றன.இந்தப் புஸ்தகம் லண்டனில் பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ளது. ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள மூல நூலை தமிழில் க. தேசிகாச்சாரியார் மொழி பெயர்த்துள்ளார். விலை 12 அணா .

இந்த நூல் பிரிட்டிஷ் லைப்ரரியில் 1903ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி சேர்க்கப்பட்ட முத்திரை உள்ளது. அப்போது  பிரிட்டிஷ் மியூசியத்தில் இந்தப் பழைய புஸ்தகங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன

நைமிசாரண்யத்தில் செளநகாதி மகரிஷிகள் சூத புராணிகரைப் பார்த்து வினவிய கேள்விக்கு அவர் பதில் சொல்லும் வகையில் அமைந்துள்ளது நூல்.

பிரம்மா முறையிட்டதன் பேரில் விஷ்ணு பதில் சொல்கிறார் :

“ஒய் கமலாசனே ! நான் சம்பளம் என்னும் சிம்மளத் தீவில் பரம பாகவத சிரோன் மணியான விஷ்ணு யசஸின்  பாரியையான ஸுமதியின் இஷ்டத்தைப் பூரணம் செய்ய பிராதாக்கள் நால் வருடன் ஆவிர்பாகம் பண்ணி, கலியை நாசம் செய்கிறேன்.

அதே சிம்மளத் தீவில் பிருஹத்ரதன் மகளாக பத்மாவதி பிறக்கப் போகிறாள். அவள் என்றும் என்னைவிட்டுப் பிரியாத லெட்சுமி ஆவாள். அவளை திருமணம் செய்துகொள்வேன். பின்னர் கலியுகத்தை நாசம் செய்து, கிருத யுகத்தை ஸ்தாபித்து ஸ்ரீ வைகுண்டத்துக்குத் திரும்புவேன்.” இதைக் கேட்ட ரிஷி முனிவர்கள் பரம சந்தோசம் அடைந்தனர்.

ஒவ்வொரு அத்தியாயமும் சுருக்கமாகவே உள்ளது. 20 ஆவது அத்தியாயத்தில் கங்கை நதியின் பெருமையும் 21 ஆவது அத்தியாயத்தில் புராணச் சுருக்கமும் உளது

xxx

கங்கையின் 8 பெயர்கள்

கங்கையின் பெருமை கூறுமிடத்து , கங்கை நதிக்கரையில் நின்று கொண்டு,

ஓ கங்கா மாதாவே , லோகபாவனி , சுர சுந்தரி, ஹரி பதாப்ஜ ஸம்பூதே , – திரிபதகே , ஜான்னவி, வைஷ்ணவி – சகர வம்ஸ மோக்ஷப்ரதே என்று எட்டு திருநாமங்களை உச்சரிப்பானால் அவனை ஸமஸ்த ரோகங்களும் மனோ வியாதிகளும் தரி த்திரங்களும் அணுகாது .

(இத்துடன் உள்ள இணைப்புகளையும் காண்க)

XXXX

என் கருத்து

சிம்மளத் தீவு என்ற பெயர் இலங்கைத் தீவையே குறிக்கிறது என்பது என் கருத்து. சிங்கத்துடன் தொடர்புள்ள ஸம்க்ருதப் பெயர் உடைய தீவுகள் இரண்டுதான் – 1. சிம்ஹ புரி என்று அழைக்கப்படும் சிங்கப்பூர்;  2.சிலோன், ஸ்ரீ லங்கா என்று அழைக்கப்படும் சிம்ஹள / சிங்கள தேசம்..

அங்கே விஷ்ணுயஸஸ் – சுமதியின் புத்திரராக 4 சகோதர ர்களுடன் , கல்கி அவதாரம் செய்வார். அவர் பிருஹத் ரதன் புதல்வியான பத்மாவதியை கல்யாணம் செய்துகொண்டு கலியுகத்தை நாசம் செய்து கிருத யுகத்தை நிறுவுவார்.

XXXX

புஸ்தகத்தில் முதல் 4 பக்கங்களில் ‘கலியுக தர்மம்’ என்ற தலைப்பில் பல அதிசய நிகழ்ச்சிகள் பட்டியல் இடப்பட்டு இருக்கின்றன.

இதை கற்பனை என்று கருதினாலும், ஒருவர் 100 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருதத்தில் வெளியிட்டு, அதை ஒருவர் தமிழில் மொழி பெயர்த்து, 12 அணா விலையில் விற்றிருப்பது அக்கால மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது.

12 அணா என்பது இப்போதைய மதிப்பில்  120 அல்லது 1200 ரூபாய் கூ ட ஆகி இருக்கும் ஏநெனில் பணத்தின் மதிப்பு ஒவ்வொரு 5 ஆண்டிலும் இரு மடங்கு  ஆகி விடும் (12-24-48-96-192-…..)

xxx

இனி முதல் 4 பக்கத்தில் உள்ள அதிசய நிகழ்வுகளைக் காண்போம். சம்ஸ்க்ருத ஸ்லோ ககங்கள்,  கிரந்த எழுத்தில், கொடுக்கப்பட்டுள்ளன.

கலியுகத்தில் நடக்கப்போகிற அக்கிரமங்களை வியாச பகவான் சூத முனிவருக்கு உபதேசிக்கின்றார்.

1.ஓ சூத முனிவரே , கலியுகம் வரும்போது மனிதர்கள் (30) முப்பதடிப் பிராமண முள்ளவர்களாயிருந்து முடிவில் (3) மூன்றங்குலப் பிரமாணம் முள்ளவர்களாய் ஆகப்போகிறார்கள்.

2.கலியுகத்தில் ஜனங்கள் எல்லோரும் அன்ன விக்கிரயம் (selling food)  பண்ணப் போகிறார்கள் . அந்தணர்கள் மந்திரங்களை விற்கப் போகிறார்கள் . ஸ்திரீகள் யாவரும் பதிவிரதா தர்மத்தை விற்கப்போகிறார்கள்

( என் கருத்து- மக்கள் பத்தில் ஒரு பங்கு உயரம் குறையும் ; பெரும்பாலோர் வீட்டில் சமைக்காமல் ஹோட்டல், மெஸ் என்ற இடத்தில் சாப்பிடுவார்கள். பிட்ஸா, பர்கர், இட்லி , தோசை கடைகள் பெருகும். பெண்களிடத்தில் ஒழுக்கம் குறையும்; பிராமணர்கள், பணக்கார மக்களுக்கு  மட்டும் பூஜை, புனஸ்காரங்களைச் செய்து அவர்களை மட்டும் உபசரிப்பார்கள் . உண்மையான பக்தர்களை ‘அம்போ’ என்று விட்டுவிடுவார்கள் )

3.பிராமணர்கள், வேதங்களை கீழ்ப்பட்ட ஜாதியாருக்குச் சொல்லிப் பிழைக்கப்போகிறர்கள் .. பிராமண ஸ்த்ரீகள் மோர், தயிர்- பால் – முதலானதுகளை விற்கப் போகிறார்கள் .வைஸ்யர்கள்  எல்லோரும் மாம்சத்தை விற்கப்போகிறார்கள் .

4.கலியுகத்தில் பிராமணாதி மூன்று வருணத்தாரும்  ஸ்வ (சுயமான தொழில்) கர்மத்தை இழந்து வயிறு நிறைப்பதிலும் மாதர்களைப் புணர்வதிலும் ஆசை உள்ளவர்களாய் இருப்பார்கள். சூத்திரர்கள் நற்செய்கை, நல்லொழுக்கம் உடையவர்களாய் இருப்பார்கள்.

( என் கருத்து :- அரசாங்கமே கீழ்ஜாதியினர்க்கு கோவில் பூஜைகளில் இட ஒதுக்கீடு முறையை அமல் படுத்தி , அதிகம் பேரை அதில் ஈடுபடுத்துவர். அப்போது பிராமணர்கள் அவர்களுக்கு கற்பிக்கும் கட்டாயம் ஏற்படும்.. பிராமனாப் பெண்களும்  பால் பிஸினஸ் (Dairy ) முதலி யவற்றைச் செய்வார்கள்; வைசியர்கள் திரைகடல் ஓடித் திரவியம் தேடாமல் மாமிசம் வெட்டும் தொழிலில் இறங்கிவிடுவார்கள்; நாலாவது வருணத்தார் மட்டும் கடவுள் பக்தி ஒழுக்கத்துடன் வாழ்வர்; அதாவது தலைகீழ் மாற்றம் ஏற்படும் என்பதை  இப்படி விளக்கினார். )

5.ஸ்திரீகள் எல்லோரும் எட்டாவது வயதில் புத்திரர்களை பிரசவிப்பார்கள் . நியாயம் அநியாயம் இல்லாமல் புருஷனைப் புணருவார்கள்

6.மாதர்கள் எல்லோரும் பன்றிகளைப் போல பத்து எட்டு குழவிகளைப் பெறுவார்கள் . இரு கரத்தாலும் சிரத்தைச் சொரியப்போகிறார்கள் .

( என் கருத்து – இப்போதே இதை முஸ்லீம் நாடுகளிலும் மேலை நாடுகளிலும் காண்கிறோம். அதாவது TEEN AGE PREGNANCY ‘டீன் ஏஜ் பிரெக்னன்சி’ என்பது மேலை நாடுகளில் ஒரு பெரிய பிரச்சனை.. இளம் வயதில் குழந்தைகளைப் பெற்றுவிட்டு முதல் கணவரைப் பிரிந்து வாழ்வது அதிகரிக்கிறது . சோமாலி முஸ்லீம்கள் குடும்பங்களில் 8 முதல் 12 குழந்தைகளை பார்க்கலாம். 4 குழந்தைகளுக்கு குறைந்த முஸ்லீம் குடும்பங்களைப் பார்ப்பது அரிது. இதே வேகத்தில் போனால் அவர்கள் தொகை அதிகரிக்கும் என்று சொல்லத் தேவை இலலை . இரு கரத்தால் தலையை சொரிவார்கள் என்பதன் பொருள் – பிரச்சனை அதிகரிப்பதால் தலை மயிரைப் பிய்த்துக் கொள்வார்கள் என்று அறியலாம்

தொடரும் …………….

XXXXXXXXXX SUBHAM XXXXXXXXXXXXXXX

TAGS- இலங்கை, கல்கி அவதாரம்:, கல்கி புராணம் ,  Part சிம்மளத் தீவு, விஷ்ணுயசஸ்  1 ,