பகவத்கீதை சொற்கள் Index 2 ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம்! (Post No.10,217

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,217

Date uploaded in London – 16 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

அக்ஷய: (அக்ஷயஹ) – 10-33 முடிவற்ற

அக்ஷர ஸமுத்பவம் -3-15 அழிவற்ற பரம்பொருளில் தோன்றியது

அக்ஷர: (அக்ஷரஹ) – 8-21 அழியாதது ; பழுதுபடாதது

அக்ஷராணாம் – 10-33  எழுத்துக்களுள்

அக்ஷராத் – 15-18 அழியக்கூடியதற்கும்

அகிலம் – 4-33 எல்லா

அகதா ஸூன் -2-11 உயிர் இழக்காதவர்கள்

அக்னி : (அக்நிஹி ) -4-37

அக்னெள – 15-12 அக்னியில் ; தீயில்

அக்ரே – 18-37- முதலில் , ஆரம்பத்தில்

அகம் – 3-13- பாவம்

அகாயு : (அகாயுஹு )-3-16 பாவத்தில் ஆ யுளைக் கழிப்பவன் )

அங்கானி -2-58 அங்கங்களை ; உடல் உறுப்புகளை

அசரம் -13-15 அசையாத (பொருள் )

அசலப்பிரதிஷ்டம் -2-70 – நிலை குலையாதது

அசலம் -6-13  அசையாமல்

அசல: (அசலஹ )- 2-24  அசைவில்லாதது

அசலா – 2-53-  அசைவற்று

அசலாம் -7-21 அசையாததாக

அசலேன- 8-10 அசையாத

அசாபலம் -16-2 மனவுறுதி

அசிந்த்யரூபம் -8-9 சிந்தித்தற்கரிய உருவம் (உடையவனும்)

அசிந்த்யம் – 12-3  மனதுக்கெட்டாததும்

அசிந்த்ய:  (அசிந்த்யஹ )- 2-25 மனதுக்கெட்டாதது

அசி ரேன -4-39 தாமதமின்றி

அசேதஸ: (அசேதஸஹ )- 3-32 அவிவேகிகள்; விவேகமற்றவர்கள்

அச்சேத்ய : (அச்சேத்யஹ)- 2-24 வெட்ட முடியாதது

அச்யுத – 1-21-கிருஷ்ணன், விஷ்ணு (தன்னுடைய உயர்ந்த  நிலையிலிருந்து இறங்காதவர்

28 words in index part 2 ( I will give Sanskrit / Devanagari words in the next part)

To be continued………………………………..

tag s- Gita word Index 2, Tamil , 

RARE PICTURES OF INDIAN AND SRI LANKAN SCHOLARS FROM M D CONWAY BOOK- 2 (Post.10,216)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,216

Date uploaded in London – 16 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Following are he pictures from the book ‘MY PILGRIMAGE TO THE WISEMEN OF THE EAST’ BY Moncure Daniel  CONWAY.

Year of publication 1906, Boston and New York

(Book available at SOAS, University of London Library)

Images of Madame Blavatsky, Rama Bhai, Keshub Chunder Sen, P Ramanathan of Sri Lanka, Budddhist Monks of Sri Lanka, Kandy Temple, Devil Dancers, M D Conway,  William Hunter, Amir Ali, Jain Picture and Pandava Castle

Part two

ramabai
pandava castle
K C SEN
JAIN PICTURE
–sybham-

tags- rare pictures, M D Conway, Blavatsky, Kesava Chandra Sen, Rama bhai

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 63 (Post No.10,215)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,215

Date uploaded in London – 16 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 63

பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள் : T.N. இராமச்சந்திரன்

      சேக்கிழார் அடிப்பொடி திரு தி.ந.இராமச்சந்திரன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அறக்கட்டளையின் சார்பில் 7-3-2002 அன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை கழகச் சார்பில் ‘பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற தலைப்பில் ஒரு உரையை நிகழ்த்தினார். உரை நிகழ்த்திய அன்றே இந்த உரை நூல் வடிவில் வெளியிடப்பட்டது.

48 பக்கங்கள் கொண்ட இந்த அருமையான நூல் மூன்று அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. பாரதி ஆய்வுகள் – இதுவரை, பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள், பாரதி வாழ்க்கை பற்றிய எதிர்கால ஆய்வுகள் ஆகிய மூன்று அத்தியாயங்களில் சிந்தனையைத் தூண்டி விடும் விஷயங்கள் அடுக்கடுக்காகத்த் தரப் படுகின்றன.

முதல் அத்தியாயம் மிக விரிவாக பாரதியார் பற்றிய ஏராளமான நூல்களைப் பற்றிய விவரங்களைத் தருகிறது.

‘பாரதியார் ஒரு விராட் புருஷர்; அவரை உங்கள் சிறு விரலால் அளந்து காட்டத் துணியாதீர்கள்’ என்ற இந்த நூலாசிரியரின் எச்சரிக்கை முற்றிலும் உண்மையானது.

பாரதியாரைப் பற்றிய பல விவரங்கள் பிழைபடப் பல நூல்களிலும் தரப்பட்டுள்ளன. (சில விவரங்களை தமிழ் உலகம் அறியவே இல்லை.)

இவற்றைக் களைய வேண்டும் என்பதே நூலாசிரியரின் உள்ளார்ந்த ஆதங்கம்.

பாரதியின் நூல்களுக்குப் பர்மா அரசாங்கம் தடை விதித்தது. அதையொட்டித் தமிழ் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டது. தடை விதித்தவர் பின்னாளில் காங்கிரல் அமைச்சராக விளங்கிய பி. சுப்பராயன் அவர்கள். இதைக் க்ண்டு

கொதித்தெழுந்தார் சத்தியமூர்த்தி. அவரது கிடுகிடுக்க வைக்கும் ஆங்கிலப் பேச்சுக்கள் பொன் எழுத்தில் பொறிக்கத் தக்கன.

பாரதியார் நண்பர்கள் பற்றி வந்துள்ள விவரங்களில் கபாலி சாஸ்திரியார் இடம் பெறாததை சுட்டிக் காட்டும் நூலாசிரியர் அது பற்றிய விவரங்களைத் தருகிறார்.

பாரதியாரைப் பற்றி வெளிவந்த பல ஆய்வு நூல்களைப் பட்டியலிட்டுத் தருகிறார் திரு இராமச்சந்திரன்.

இதுவரை வந்த ஆய்வுகளை முதல் அத்தியாயத்தில் சித்தரிக்கும் அவர், இரண்டாவது அத்தியாயமான ‘பாரதி படைப்புகள் பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற அத்தியாயத்தில் இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பெரும் முயற்சிகளை விவரிக்கிறார்.

திரு சீனி விசுவநாதன் தொகுத்து வெளியிட்டுள்ள கால வரிசைப்படியான பாரதியார் எழுத்துக்கள் என்ற நூலில் 263 தலைப்புகளில்  24-1-1897 தொடங்கி 29-12-1906 வரையிலான எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன.

பாரதியாரின் வடமொழி அறிவு பற்றித் தனி ஒரு நூல் வேண்டும் என்ற நூலாசிரியரின் கூற்றை அனைவரும் ஆமோதிப்பர். 

சூரத் காங்கிரஸ் கூட்டத்தை வருணித்து மகாகவி மூன்று மொழிகளைக் கலந்து  காங்கிரஸ் கீதை என்று ஒரு பனுவல் படைத்தார்.

யாரும் அறியாத செய்தி இது. இதில் உள்ள ஒரு சுலோகத்தை – தேவி வஸந்தானந்தா தந்ததை – இந்த நூலில் காண முடிகிறது:

“தர்ம க்ஷேத்ரே சூரத் க்ஷேத்ரே ஸமவேத யுயுத்ஸவஹ

மாமகாகஹ எக்ஸ்ட்ரீமிஸ்ட் மாடரேட்ஸ் சைவ கிமகுர்வத ஸஞ்சயா”

பாரதியின் பல கவிதைகளில் உள்ள சொற்களுக்குத் தவறான பொருள் கண்டு அதை விவரிப்பதை நூலாசிரியர் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகிறார்.

காணி (நிலம் வேண்டும் என்ற பாடல்) அம்பு (அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் என்ற பாடல்) ஆகிய சொற்களுக்கு உண்மையான அர்த்தத்தை விவரிக்கிறார்.

சீனி.விசுவநாதன் வெளியிட்டுள்ள பாரதி நூற்பெயர்க்கோவை என்ற தொகுப்பு நூலில் சுமார் 370 நூல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. இதில் 275 நூல்கள் விவரங்களுடன் இடம் பெற்றுள்ளன.

ஆங்கிலக் கவிஞரான ஷேக்ஸ்பியர் பற்றி 1982  முடிய 1,50,000 நூல்கள் வெளியாகி இருப்பதையும் வருடத்திற்கு சுமார் 3000 நூல்கள் ஷேக்ஸ்பியர் பற்றி வெளியாகி வருவதையும் சுட்டிக் காட்டுகிறார் திரு இராமச்சந்திரன். ஷேக்ஸ்பியர் பற்றிய வினா விடை நூல்கள் நிறைய உள்ளன. அது போல பாரதியார் பற்றியும் வினா- விடை நூல்கள் வேண்டும். 1000 கேள்விகள் கொண்ட நூறு நூல்களை வெளியிட வேண்டும் என்பது இவரது ஆசை. அவ்வளவுக்கு விஷயங்கள் உள்ளன.

மூன்றாம் அத்தியாயமான, ‘பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற அத்தியாயத்தில் பாரதியாருடன் நெருங்கிப் பழகியவர்கள் பற்றிய குறிப்புகள் வேண்டும், பாரதியார் போற்றிய நம் நாட்டு, வெளி நாட்டு அறிஞர்கள், கவிஞர்கள் பற்றிய குறிப்பு வரையப்பட வேண்டும். உலக அளவில் பாரதியார் என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற முத்து முத்தான யோசனைகளை எதிர்கால ஆய்வாளருக்குத் தருகிறார் நூலாசிரியர்.

பல பிழையான தகவல்களை அடியோடு களைந்து அதிகாரபூர்வமான பாரதியார் வாழ்க்கை பற்றிய நூல் ஒன்று வேண்டும் என்பதைச் சொல்வதோடு இனி பிழையான கருத்துக்களைச் சொல்லவும் கூடாது என்ற நிலை ஏற்பட வேண்டும் என்று கூறுகிறார் இவர்.

நூலின் இணைப்பாக மாதிரிப் புதிர் வினா- விடை ஒன்றும் தரப்பட்டுள்ளது.

மொத்தத்தில் பாரதியார் பற்றிய கடந்த கால, நிகழ்கால, எதிர்கால ஆய்வுகளை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கும் சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் நல்லவொரு அரிய சேவையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் மூலம்.

பாரதி அன்பர்களும் ஆய்வாளர்களும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.

***

சேக்கிழார் அடிப்பொடி திரு T.N. இராமச்சந்திரன் பாரதியாரின் ஒவ்வொரு எழுத்தையும் கரைத்துக் குடித்தவர். வழக்கறிஞராக இருந்தவர் தமிழ் இலக்கியத்தின் பால் தீராக் காதல் கொண்டு இலக்கியத்தின் பக்கம் திரும்பினார்; சுமார் 50000 நூல்களை தனி ஒருவராகத் தனக்காகச் சேகரித்து வைத்த பெரும் மேதை. 18-8-1934இல் பிறந்த அவர் சமீபத்தில் 6-4-2021 அன்று மறைந்தார்.

tags- பாரதி , எதிர்கால ஆய்வுகள் , T.N. இராமச்சந்திரன், 

RARE PICTURES OF INDIAN AND SRI LANKAN SCHOLARS FROM M D CONWAY BOOK- 1 (Post.10,214)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,214

Date uploaded in London – 15 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Following are he pictures from the book ‘MY PILGRIMAGE TO THE WISEMEN OF THE EAST’ BY Moncure Daniel  CONWAY.

Year of publication 1906, Boston and New York

(Book available at SOAS, University of London Library)

Images of Madame Blavatsky, Rama Bhai, Keshub Chunder Sen, P Ramanathan of Sri Lanka, Budddhist Monks of Sri Lanka, Kandy Temple, Devil Dancers, M D Conway,  William Hunter, Amir Ali, Jain Picture and Pandava Castle.

tags– M D Conway, My Pilgrimage, Wisemen of the East, Indian, Sri Lankan, Scholars

பகவத்கீதை சொற்கள் Index 1 ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம்! (Post No.10,213)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,213

Date uploaded in London – 15 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

அகர்த்தாரம் – 4-13 செயலில் இறங்காதவர்

அகர்ம  – 4-16 செயலின்மை , கர்மம் என்று கருதப்படாதது

அகர்ம க்ருத் -3-5 ஒரு கர்மத்திலும்   ஈடுபடாமல்

அகர்மண: – 3-8 செயலின்மை  (: இரண்டு புள்ளிகள் விசர்க்கம் எனப்படும்; இதை  முன் உள்ள எழுத்துக்குத் தக உச்சரிக்க வேண்டும்; இங்கே ஹ என்ற ஒலி = அக்கர்மணஹ ) கர்மம் செய்யாமை

அகர்மணி -2-47 செயலின்மையில் 

அகல்மஷம் – 6-27 மாசு மருவற்ற; குற்றமில்லாத ; பாவமற்றவன்

அகார : -10-33  அ – காரம் ; அகர முதலஎழுத்தெல்லாம் (குறள் 1)

அகார்யம் – 18-31 செய்யக் கூடாத செயல்

அகீர்த்திகரம் – 2-2 புகழ் தராத செயல் ; பழிக்கிடமானது

அகீர்த்திம்  -2-34 அவமானமான ; பழியை

அகீர்த்தி:  -2-34 அவமான  ( இங்கே : விசர்க்கத்தை ஹி என்று உச்சரிக்கவும்;அகீர்த்திஹி ); பழிச் சொல்

அகுர்வத -1-1 செய்தார்கள்

அகுசலம் -18-10 தகுதியற்ற, தானம் தவம் அற்ற

அக்ருத புத்தித்தவாத் – 18-16 திருந்தாத புத்தியால் ; புத்தி தெளிவின்மையால் ;அறிவின்மையால்

அக்ருத ஆத்மன:(அக்ருதாத்மனஹ )-15-11 செய்கையால் திருந்தாத ;சுய கட்டுப்பாடின்மை

அக்ருதேன – 3-18 கர்மம் / செயல் செய்யாததால்

அக்ருஸ்த்னவித : 3-29 தெளிவற்ற/  குறைந்த அறிவுடன்

அக்ரிய:-6-1 கர்மம் செய்யாதவன்

அக்ரோத: 16-2 கோபத்தை கட்டுப்படுத்தல் ;சினமின்மை

அக்லேத்ய: 2-24 நனைக்க முடியாதது

அக்ஷய்யம் -5-21 அழியாத ; இறவாத     21 WORDS COVERED IN INDEX 1

TO BE CONTINUED…………………………..

tags — BHAGAVAD GITA, TAMIL WORD INDEX 1

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!-Part 4 (Post No.10,212)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,212

Date uploaded in London – 15 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத  பேய்கள், தேவதைகள்!- Part 4

நதிகள் துதி 10-75-5

இதுதான் ரிக் வேதத்தின் புகழ்பெற்ற நதிகள் துதி. இதில் கங்கை நதியில் துவங்கி வரிசைக் கிரமத்தில் யமுனை ,சரஸ்வதி,சுதுத்ரி, பருஷ்ணி என்று மேற்கு நோக்கிச் செல்கின்றனர். இதனால்  இந்து நாகரீகம் கங்கையில் துவங்கியது உறுதியாகிறது. அதை 2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழரின் 2500 பாடல்களும் உறுதி செய்கின்றன. ஏனெனில் தமிழர்களுக்கு கங்கை, யமுனை தெரியும், இமயம், முனிவர்கள் தெரியும்; அமிர்தம், இந்திரன் தெரியும்; அருந்ததி, சப்தரிஷிகள் தெரியும். இவை அனைத்தும் புறநானூறு அகநாநூறு முதலிய நூல்களில் வருகின்றன. ஆனால் சிந்து, சரஸ்வதி, சோம ரசம் பற்றிய குறிப்புகளே இல்லை; ஆகவே கங்கைதான் முதலில் வந்தது என்பது புலனாகிறது

இதை   ஒத்துக் கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிடினும் ஆப்கானிஸ்தான் முதல் டில்லி, மேற்கு வங்கம் வரை ஓடும் நதிகளைக் குறிப்பிடுவதால், இந்து மகா சாம்ராஜ்யத்தை வேதங்கள் குறிப்பிடுவதால் வேத கால பூகோள எல்லையும் விளங்கும் .

இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் இந்த நதிகள் பட்டியலில் உள்ள  சில நதிகளைக்  கூட நாம் அடையாளம் காண இயலவில்லை; வேதங்கள் அவ்வளவு பழமை உடைத்து .

ஆர்ஜீகீ, சுஸோமா , என்பன விபாஸா , சிந்து நதிகள் என்று யாஸ்கர் கூறுவதை வெள்ளைக்காரர்கள் சாத்தியமற்றது என்கின்றனர்.

எட்டாவது மந்திரத்தில் சிலாமாவதி ஊர்ணாவதி என்பன நதிகள் என்று சொல்லும் சாயனர் அவை சிந்து நதியின் காரணப் பெயர்கள் என்கிறார் . சிலாமா செடிகள் வளர்ந்து இருப்பதாலும் கம்பளி கிடைப்பதாலும் இப்படிப் பெயர்கள் என்கிறார். அவைகளுக்கும் ஆதாரம் இப்போது கிடைக்கவில்லை.

நதிகள் பற்றிய துதியிலும் கிரிப்பித் GRIFFITH விஷமம் நன்றாக புலப்படும்; கங்கை என்பது தொலைதூர நதி என்பதால் அதை முதலில் சொன்னார் என்று சொல்லிவிட்டு மேலும் அது ஒரு பெண்ணின் பெயர் என்றும் சொல்கிறார். உண்மையில் அதில் உள்ள எல்லா நதிகளின் பெயர்களையும்  இன்றுவரை பெண்கள் சூட்டி வருகின்றனர் . தமிழ்ப் பெண்கள் கூட கோமதி, சிந்து, கங்கா, ஜமுனா என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர்

Xxx

கல்யாண மந்திரங்கள் 10-85-6 ரைபி, நாராஸம்சீ, காதா

இன்றும் கூட பிராமணர் வீட்டுக் கல்யாணங்களிலும் , சம்பிரதாய முறைக் கல்யாணங்களிலும் ரிக்வேத கல்யாண மந்திரத்தின் பெரும்பகுதி பயன்படுகிறது. ஆயினும் இவைகளில் உள்ள சில சொற்களின் பொருள் விவாதத்துக்கு உரியனவாக இருக்கின்றன. அதாவது உறுதியான பொருள் எவருக்கும் தெரியவில்லை. வேத காலத்துக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சாயனாரின் உரையை ஓரளவு நம்பலாம் ; ஆயினும் அவர் சம்பிரதாயத்தை உடைத்து வேதத்துக்குப் பொருள் கண்டதால் பழ மைவாதிகள் அதை ஏற்பதில்லை.

“ரைபீ ,  அவளுடைய (கல்யாணப் பெண்ணின் ) தோழி; நாராசம்சீ அவளுடைய தாசீ; சூரியையுடைய அழகான ஆடை ‘காதை’யால் அலங்கரிக்கப்பட்டிருந்தது”- 10-85-6

 இவை பெண்களின் பெயர்கள் ; இவைகளை உருவக வருணனை என்று கருதுகின்றனர்.  ஏன் இந்தப் பெயர்கள்?  விளங்கவில்லை. இவை விளங்காததால், இவைகளை வேதத்துக்குப் புறம்பானவை என்றும் எழுதிவிட்டனர்!!!

‘தனக்குப் புரியாவிட்டால் அது எல்லாம் திராவிட செல்வாக்கு! என்பன அடி முட்டாள்களின், விஷமிகளின் வாதம்’

xxxx

கோசம் 10-85-7

இது மணப் பெண்ணின் பெட்டியா, ஆடையா, தேரின் பாகமா என்று பல்வேறு கருத்துக்கள்!! என்ன வினோதம் !

“அவளுடைய மஞ்சனையில் எண்ணமே தலையணை; அவள் காணும் காட்சியே கண்ணுக்கு மை ; அவள் கணவனிடம் சென்றபோது வானமும் பூமியும் அவள் பொக்கிஷம் /கோசம்” — இது மந்திரம்

Xxxx

10-85-28 கிருத்யை

ஒரு பெண் தேவதை அல்லது பேய்    அல்லது துஷ்ட  தேவதை

XXX

10-85-35 ஆசசனம், விசசனம் , அதிவிகர்த்தனம்

இவை பல வகை ஆடைகளாக இருக்கலாம் என்பது ஒரு விளக்கம் ; ஆ னால் அகராதியில் காணும் பொருள்:– கொல்லுதல் , வெட்டுதல், துண்டு போடுதல்; இந்த அகராதியே சர்ச்சைக்குரியது ; கோல்ட்ஸ்டக்கர் GOLDSTUCKER இதை கிழி , கிழி என்று கிழித்து விடுகிறார். பசுக்கொலை செய்து தினமும் பிளேட்டில் பரிமாறுவோர் செய்த St Petersburg Dictionary செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அகராதி அது. மேலும் இந்துக்கள் கோவில்களிலோ, கல்யாண விருந்துகளிலோ இன்று வரை மாமிசம் படைக்க மாட்டார்கள் ; சீக்கியர்கள் கூட இதைப் பின்பற்றுகின்றனர்.

பேராசிரியர் வில்சன் இவைகளை ‘சுற்றி அணியும் துணி’, ‘தலையில் அணியும் துணி’, ‘பிரிவுகள் உள்ள பாவாடை’ என்கிறார்.

xxxx

சிறைச் சாலையில் நான்

ஒரு சுவையான செய்தியைச் சொல்லிவிட்டுக் கட்டுரையை முடிக்கிறேன். பிரிட்டிஷ் சிறைச் சாலைகளில் உள்ள இந்துக் கைதிகளைக் கண்டு  அவர்களுக்குப் பிரார்த்தனை முதலியவற்றை வழங்கும் பணியையும் பகுதி நேர வேலையாகச் (Part Time Prison Chaplain) செய்துவந்தேன். மிகக் குறைவான இந்துக்களே சிறையில் அடைக்கப்படுகின்றனர் ஆனால் முஸ்லிம்களோ 25 சதவிகிதத்துக்கு மேல் ! அதாவது அவர்களுடைய ஜனத் தொகை விகிதாசாரத்தைவிட மிக மிக அதிகம்.

ஒரு சிறையில், இந்துக் கைதிகள், விசாரணைக் கைதிகள், என்னைக் கண்டவுடன் ஒடி ஒளிந்தனர். பெரும்பாலும் மாமிசம் சாப்பிடும் இலங்கைத் தமிழர்கள்; ஏனப்பா இப்படி எல்லோரும் மறைந்து மறைத்து போகிறார்கள் என்று ஒருவரைப் பிடித்து விசாரித்தேன். அவர் உண்மையைக் கக்கிவிட்டார். “ஐயா நாங்கள் எல்லோரும் இன்று லஞ்ச் Non Vegetarian Lunch  நேரத்தில் மாமிசம் சாப்பிட்டுவிட்டோம். ‘அது’ சாப்பிட்டுவிட்டால் பிரார்த்தனை செய்யக்கூடாது; சுத்தம் இல்லையே என்றார் .

“அடப் பாவி மகன்களா ! இதை வாய் திறந்து முன்னமே சொல்லி இருந்தால், நான் வரும் தினத்தை அல்லது நேரத்தை மாற்றி இருப்பேனே” என்றேன். பின்னர் இதை அதிகாரிகளுடன் விவாதித்து நேரத்தை மாற்றிக்கொண்டேன் . மாமிசம் சாப்பிட்டால் சீக்கியர்கள் கூட பிரார்த்தனைக்கு வரமாட்டார்களாம். லண்டனில் மாமிசம் சாப்பிடும் சீக்கியர்கள், குருத்வராவில் கல்யாணம், பிரார்த்தனை வைத்துக்கொண்டாலும் அங்கே மாமிச விருந்து தர மாட்டார்கள். இதே போல சம்பிரதாய முறையில் கல்யாணம் செய்யும் எந்த ஜாதியினரும் மாமிச விருந்து கொடுப்பதில்லை. இப்போது காலம் கெட்டுவிட்டது எப்படி நடக்கிறதோ யாம் அறியோம் பராபரமே.

இதனால்தான் நம் சம்பிரதாயங்களை அறியாத, பின்பற்றாத, நம்பாத வெளியார்கள் எழுதும் வியாக்கியானங்களை நம்பக் கூடாது.இந்துவான எனக்கே சிறைக் கைதிகள் நழுவிச் சென்றபோதுதான் ஒரு ‘பாடம்’ lesson கிடைத்தது!

பத்தாவது மண்டலத்தில்  (துதிகள் 1 முதல் 85 வரை) நான் கண்ட புரியாத சொற்களைத் தந்தேன் மேலும் பின்னர் காண்போம்.

–சுபம் —

Tags-  ரிக் வேதத்தில் ,பேய்கள், தேவதைகள்,

ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்! – 2 (Post No.10,211)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,211

Date uploaded in London – 15 OCTOBER  2021       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

            ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்! – 2

இவர் வாழ்க்கையில் ஏராளமான அற்புத சம்பங்கள் உண்டு. அவற்றில் ஒன்று இவரது இசை ஈடுபாட்டைக் குறிக்கும் ஒன்றாகும்.

ஒருமுறை தஞ்சை ராஜா இவரது இசை ஈடுபாட்டை பரீட்சிக்க விரும்பியபோது இவர் தன்னை ஒரு கருங்கல் சுவருக்குள் அடைத்துக் கொண்டார். தம்புராவை மீட்டிக் கொண்டு ஆனந்தமாகப் பாட ஆரம்பித்தார். பத்து நாட்கள் நீரும் ஆகாரமும் இன்றி அங்கேயே இருந்து பததாம் நாள் மன்னன் கருங்கல் சுவரைத் திறந்து பார்த்த போது முதல் நாள் பார்த்தது போலவே ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தாராம். மன்னரும் மற்றவரும் பிரமித்துப் போயினர். இவர் இசை மேல் கொண்டிருந்த ஈடுபாட்டை அனைவரும் நன்கு உணர்ந்தனர்.

இவரது  ஒவ்வொரு கீர்த்தனையும் காமாக்ஷி அம்மனிடம் இவர் கொண்டுள்ள அபார பக்தியை விளக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

தனது அளப்பரிய சங்கீத ஞானத்தைக் கொண்டு பங்காரு காமாக்ஷி தேவியைப் பற்றி பல ஸ்தோத்திரப் பாடல்களை இவர் பாடலானார்.

இசைத் துறையில் தாள வகைகளில் பல புதிய சாதனைகளைப் படைத்தார் சியாமா சாஸ்திரிகள்.

சம்ஸ்கிருதத்திலும் தெலுங்கிலுமாக சுமார் 300 கீர்த்தனைகளை அவர் இயற்றியுள்ளார். தமிழில் மிகக் குறைந்த அளவு கீர்த்தனைகளே அவரால் இயற்றப்பட்டன. தருணமிதம்மா என்ற கீர்த்தனையும் என்னேரமும் என்ற கீர்த்தனையும் அவரது பிரபலமான தமிழ்க் கீர்த்தனைகள் ஆகும். சியாமகிருஷ்ண என்ற தனது முத்திரையை அவர் பாடல்களில் பதிப்பது வழக்கம்.

மாஞ்சி, சிந்தாமணி, கல்கடா (பார்வதி நினு என்ற கீர்த்தனை)  உள்ளிட்ட பல அபூர்வ ராகங்களை அவர் கையாண்ட விதம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. சிந்தாமணி ராகத்தில் முதன் முதல் கீர்த்தனை இயற்றியவர் அவரே. ஆனந்த பைரவி, சாவேரி, கல்யாணி ஆகிய ராகங்கள் அவரை மிகவும் கவர்ந்த ராகங்களாகும்.

ஒருமுறை யாத்திரையை மேற்கொண்டு அவர் புதுக்கோட்டை சென்ற போது அன்பர் ஒருவர் மதுரை சென்று மீனாக்ஷியம்மன் மீது கீர்த்தனை இயற்றலாமே என்று கூறினர். உடனே மதுரை சென்ற சியாமா சாஸ்திரிகள் அங்கு நவரத்தினமாலிகை என்னும் பிரபலமான ஒன்பது கீர்த்தனைகளை இயற்றிப் பாடினார். ஆஹிரி ராகத்தில் மாயம்மா என்ற கீர்த்தனையில் நம்மிதி நம்மிதி நம்மிதினி உன்னை நம்பினேன் நம்பினேன், நம்பினேனே என்று அவர் உள்ளமுருக்கும் வகையில் பாடி இருக்கிறார்.

ஆலயத்தில் அவரை யார் என்று யாரும் உணராத நிலையில் அங்கிருந்த அர்ச்சகர் மீது ஆவேசம் வந்து அவருக்கு உரிய மரியாதைகளைச் செய்து கௌரவிக்க வேண்டும் என்று அருள் வாக்கு பிறக்க, உடனே அவர் அங்கு வெகுவாக கௌரவிக்கப்பட்டார்.

ஸரோஜ தள நேத்ரி – சங்கராபரணம்

தேவி மீன நேத்ரி – சங்கராபரணம்

மரிவேறே கதி – ஆனந்தபைரவி

நன்னுப்ரோவு லலிதே – லலிதா

தேவி நீ பதராஸ காம்போதி

மீனலோசன ப்ரோவ – தன்யாசி உள்ளிட்ட கீர்த்தனைகளையும் மத்யமாவதி ராகத்தில் உள்ள பாலிஞ்சு காமாக்ஷி, புன்னாகவராளி ராகத்தில் உள்ள கனக ஷைல விஹாரி உள்ளிட்ட ஏராளமான கீர்த்தனைகளையும் அனைவரும் இணையதளத்தில் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.

ஸ்வரஜதியில் அவரது நிபுணத்வம் எல்லையற்றது. பைரவி, தோடி, யதுகுல காம்போதி ஆகிய ராகங்களில் அவரது ஸ்வரஜதிகள் குறிப்பிடத் தகுந்தவையாகும். தேர்ந்த நிபுணர்களும், சாமானியர்களும் வியக்கும் வண்ணம் உள்ள அவரது கீர்த்தனைகள் காலத்தை வென்றவை. சங்கீத கணிதத்தில் அவர் ஆற்றியுள்ள சேவையை அவர் தன் கைப்பட எழுதியுள்ள 79 அக்ஷர தாள பிரஸ்தார வரைபடங்களில் கண்டு மகிழ முடியும்; வியக்க முடியும்!

சங்கீத மும்மூர்த்திகளைப் பற்றி சங்கீத விற்பன்னர்கள் கூறுகையில், “தியாகராஜரின் கீர்த்தனைகள் திராக்ஷா பாகம் என்றும் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் நாரிகேள பாகம் என்றும் அதாவது தேங்காயை நாரை உரித்து ஒட்டை உடைத்துச் சாப்பிடுவது போல என்றும் சியாமா சாஸ்திரிகளின் இசையை கதலீ பாகம் என்றும் அதாவது எளிதாக வாழைப்பழத்தை உரித்துச் சாப்பிடுவது போல என்றும் கூறுவர்.

சாஸ்திரிகளின் 64 வயது நடந்து கொண்டிருந்த போது அவர் மனைவி மறைந்தார். மிகுந்த துக்கம் அடைந்த அவர் “அவ சாக அஞ்சு நாள், செத்து ஆறு நாள் என்று கூறினார். அருகிலிருந்தோர் அவர் மனைவி இறப்பதற்கு அஞ்சுவதாக அவர் ‘அஞ்சினாள் என்று கூறுவதாக நினைத்தனர். ஆனால் அவர் மனைவி இறந்து ஐந்து நாட்கள் கழிந்தன. ஆறாம் நாள் அவர் காமாக்ஷியுடன் கலந்தார்; முக்தி அடைந்தார். அப்போது தான் அனைவருக்கும் அவர் தன் இறுதியை, மனைவி மறைந்த ஐந்து நாள்கள் கழித்த ஆறாம் நாள் தான் மறையப் போவதாகக் கூறியதை உணர்ந்தனர். அவர் 1827ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி – விபவ வருஷம் தை  மாதம், 26ஆம் நாள் சுக்ல நவமி திதி தினத்தன்று தன் மகனின் மடி மீது தலை வைத்தவாறே ‘சிவே பாஹி காமாக்ஷி பரதேவதே என்று கூறியபடியே இறைவனுடன் கலந்தார். சியாமா சாஸ்திரிகளின் நினைவைப் போற்றும் வகையில் இந்திய அரசு 1985 டிசம்பர் 21ஆம் தேதியன்று ஒரு ரூபாய் மதிப்பிலான தபால் தலையை வெளியிட்டது.

சங்கீதத்தில் ஒரு புதிய பார்வையுடன் கம்பீரமான நடை போட்டு அனைவரையும் வியக்க வைத்த சியாமா சாஸ்திரிகளின் நினைவைப் போற்றுவோம்; பங்காரு காமாக்ஷியின் அருளைப் பெறுவோம்; உயர்வோமாக!

நன்றி வணக்கம்!

            ***           

முற்றும்

tags- சியாமா சாஸ்திரிகள் 2

September 2021 London Swaminathan Articles, Index-106 (Post No.10,210)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,210

Date uploaded in London – 14 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10,000 PLUS POSTS.

xxx

SEPTEMBER 2021 INDEX 106

My Visit to an old British War Ship , 10043;September 1, 2021

My Visit to a Windmill and a Fort, 10047, 2/9

My Visit to Portsmouth and Hovercraft;10051;3/9

Soma Plant – A Hallucinatory Drug or An Elixir to Human Beings? 10098; 15/9

Einstein is 50 % Right Darwin is 100% Right;Rig Veda throws more light; 10101, 16/9

Soma ! We are Your Friends; You are Indra’s Friend! 10,104; 17/9

Max Muller gang and Marxist gang exposed by a

Woman Poet;100,63; 6/9

Curses 5000 years Ago! Strange Curses in Rig Veda-1;

10071; 8/9

Curses 5000 years Ago! Strange Curses in Rig Veda-2;

10074; 9/9

Q & A Samskrita, Karam, Kavasam hymns in Tamil,Krishna Names in Bhagavad Gita;10082; 11/9

Bharati Day in London 11-09-2021;10084; 12/9

I am a Poet, My Dad is a Doctor and Mother a Corn Grinder- Rig Vedic Poet; 10117; 20/9

Rigvedic Poet’s Unique Dialogue with Rivers-1; 10123;22/9

Rigvedic Poet’s Unique Dialogue with Rivers-2;Griffith Gang Exposed; 10127; 23/9

Rigvedic Poet’s Unique Dialogue with Rivers-3;10,13124/9

River Yamuna baffled Ma Muller Gang and Marxist Gang; -1;10139; 26/9

River Yamuna baffled Ma Muller Gang and Marxist Gang; -2;10145; 27/9

Lord Agni; We are here to Pray for Our Friends (RV 4th Mandala) October 2021 Calendar ; 10,153; 29/9

Suo motu Case Please!Save our Antiques; 30 September 2021; 10156

Tamil & English Word 2700 Years Ago- 62; 10052; 3/9

Tamil & English Word 2700 Years Ago- 63; 10094; 14/9

Tamil & English Word 2700 Years Ago- 64; 10120; 21/9

Tamil & English Word 2700 Years Ago- 65; 10158; 30/9/2021

Index 95, October 2020, 10055, 4/9

Index 96; November 2020, 10078; 10/9

Index 97; December 2020; 10097;15/9

Index 98; January 2021; 10007; 18/9

Index 99; February 2021;10,126; 23/9

Index 100; March 2021; 10,138; 26/9

Index 1001; April 2021; 10157; 30/9

World Hindu News Roundup in English 5-9-2021;10058

World Hindu News Roundup in English 12-9-2021;10086

World Hindu News Roundup in English 19-9-2021;10,110

World Hindu News Roundup in English 26-9-2021

London Calling (Thamil Muzakkam) 5-9-2021;10067

London Calling (Thamil Muzakkam) 12-9-2021;10090

London Calling (Thamil Muzakkam) 19-9-2021;10115

London Calling (Thamil Muzakkam) 26-9-2021;10,148

London Calling (Gnanamayam) 6-9-2021;10068

London Calling (Gnanamayam) 13-9-2021;10091

London Calling (Gnanamayam) 20-9-2021;10116

London Calling (Gnanamayam) 27-9-2021;10149

xxx

செப்டம்பர் 2021 கட்டுரைகள்

ரிக் வேதத்தில் என்ன அதிசயம் இருக்கிறது ?-1 10,042; செப்டம்பர் 1, 2021

ரிக் வேதத்தில் என்ன அதிசயம் இருக்கிறது ?-2; 10,045; 2/9

ரிக் வேதத்தில் என்ன அதிசயம் இருக்கிறது ?-3;10,049;3/9

மயிரும் பயிரும்- ஒரு பெண் புலவர் பாரா ட்டு ;10,054; 4/9

INDEX 95 – இண்டெக்ஸ் 95;அக்டோபர் 2020, 10055; 4/9

ஐரிஷ் நாடக ஆசிரியர் ஆலிவர் கோல்ட்ஸ்மித்;10057;5/9

கணவர் மீது 44 காதல் கவிதைகள் இயற்றிய எலிசபெத் பிரவுனிங்; 10070; 8/9

நியோடைமியம் பற்றிய சுவையான தகவல்;10073;9/9

 ஏழை விவசாயி புலவரான கதை -ராபர்ட் பர்ன்ஸ்; 10076; 10/9

புற்றுநோயைக் கண்டுபிடிக்க உதவும் உலோகம் ரூபீடியம் ;10080;11/9

பாரதி பாட்டில் ரிக்வேத வரிகள்; 10081; 11/9

டார்ஜான் கதைகளைப் படைத்த அமெரிக்க கதாசிரியர் எட்கர் ரைஸ் பர்ரோஸ் ;10089;13/9

பிரெஞ்சு நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் தூமா (ஸ்);10093;14/9

வெளிநாட்டில் தமிழ் கற்பது தேவையா?; 10096; 15/9

சோமரசம் பற்றி அபூர்வ தகவல்கள் ; 10,100; 16/9

ஐன்ஸ்டைன் சொன்னது பாதி சரி; டார்வின் சொன்னது 100% சரி ;

சோமரசம் பற்றி அபூர்வ தகவல்கள்-2; 10103;17/9

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு ;சோமரசம் பற்றி

அபூர்வ தகவல்கள் -3; 10006; 18/9

நாங்கள் ரிஷிகள் ஆக வேண்டும்- ரிக் வேதத்தில் கோரிக்கை; 10109;19/9

டாக்டருக்கு நோயாளி, அய்யருக்கு பக்தன், தட்டானுக்குத் தங்கம் வேண்டும்; 10,114

14 குழந்தைகள்! ஆங்கிலக் கவிஞர், நாடக ஆசிரியர் ஜான் ட்ரைடன்;10119; 21/9

அழியாத மா கவிதை; ரிக் வேதத்தில் அற்புதக் கவிதை; 10122; 22/9

கிரிப்பித் முகத்திரை கிழிந்தது அழியாத மா கவிதை;

ரிக் வேதத்தில் அற்புதக் கவிதை-2;10 125; 23/9

அழியாத மா கவிதை; ரிக் வேதத்தில் அற்புதக் கவிதை-3; 10 130; 24/9

தோள் கண்டார் தோளே கண்டார் – கம்பனுக்குப் போட்டி ;10134;25/9

தமிழ் தெரியுமா? வா – வந்தான்; போ- போந்தான்?10,137

இந்து விரோத கும்பல் மீது யமுனை நதி கொடுத்த செமை அடி-1; 10,150, 28/9

இந்து விரோத கும்பல் மீது யமுனை நதி கொடுத்த செமை அடி-1; 10,152, 29/9

வள்ளலார் போன் மொழிகள், அக் டோபர் 2021 காலண்டர்; ;10,154

திராவிடர்களை எதிர்த்து வழக்குப் போடுங்கள் 10,156; 30 செப்டம்பர்; 2021

உலக இந்து சமய செய்தி மடல்  5-9-2021; 10059

உலக இந்து சமய செய்தி மடல்  12-9-2021;1087

உலக இந்து சமய செய்தி மடல்  19-9-2021; 10,111

உலக இந்து சமய செய்தி மடல்  26-9-2021; 10,141

XXX

(பாரதி மீது நாராயணன் கவிதைகள் ;10066; 7/9

எங்குமுள்ள பிள்ளை யார்? 10077;10/9)

sharing facebook pictures from Balaji Temple Hills, Tirupati

–subham–

tags- Index 106, September 2021 Index, 

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!- Part 3 (Post No.10,209)

Jungle babblers , mostly fly in a group of Seven

Research article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,209

Date uploaded in London – 14 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ம்ருகய  10-49-5

காற்றில் வசிக்கும் ஒரு அரக்கன்

4-16-13 மந்திரத்திலும், 8-3-19 மந்திரத்திலும் இச் சொல் வருகிறது

நாலாவது மண்டலத்தில் பிப்ரு என்னும் மற் றொரு அரக்கனுடன் சேர்த்துப் படுகின்றனர் ரிஷிகள்; அதே மந்திரத்தில் 50,000 கருப்பு அரக்கர்களை அழித்தான் என்பதில் வெளிநாட்டார் விஷம் கலந்து எழுதுகின்றனர். அவர்களை பூர்வ குடி மக்கள் என்று வருணிக்கின்றனர். உலகில் மனிதர்கள் தோன்றியது முதல் போர்கள் நடந்து வருகின்றன. வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியாகும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகில் எப்போதும் குறைந்தது 50 இடங்களில் போர்கள் அல்லது மோதல்கள் நடப்பதைக் காட்டுகின்றன. அவர்களுக்கு ஆயுதங்களை விற்பதில்தான் மேலை நாடுகள் உயிர் வாழ்கின்றன. எந்த சண்டையிலும் ஒருவர் எதிரி என்னும் பெயரில் இருப்பர். ரிக் வேதத்தில் வரும் எதிரிகள் அனைவரையும் பூர்வ குடி மக்கள் , கறுப்பர் என்று வெளிநாட்டினர் முத்திரை குத்திவிடுகின்றனர்!!

நல்ல வேளை ! வெள்ளைக்காரன் முதலில் தமிழைப் படிக்கவில்லை. கால்டுவெல்கள் முதலிய பேர்வழிகள் மதத்தைப் பரப்ப மட்டுமே படித்தனர் . நம் தமிழ் இலக்கியத்தில் சேர, சோழர் ,பாண்டியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதும் பல்லாயிரம் பேரைக் கொன்றதையும் புலவர்கள் பாடி வைத்துள்ளனர். அவர்களையும் ஒரு பகுதி ஆரியர் மற்றோரு தரப்பு திராவிடர் என்று முத்திரை குத்தி இருப்பார்கள்!! 1400 ஆண்டுகளுக்கு தமிழர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு செத்தார்கள்; உலகில் ஒரே இனத்தில் இப்படி ஒரு பூசலை வேறு எங்கும் காண முடியாது ! மேலும் எப்போதும் எதிரியையோ , தீமை யையோ ‘கருப்பு’ என்று வருணிப்பது இந்திய இலக்கிய மரபு. தீமையை இருளுக்கு ஒப்பிட்டு தீபாவளி கொண்டாடுவர். மெய்ப்பொருள் நாயனாரைக் கொல்ல வந்த தமிழனை- முத்தநாதனை – ‘மனதினுள் கருப்பு வைத்து’ என்றே சேக்கிழார் பெருமான் படுகிறார். ஆக கருப்பு (கிருஷ்ண) என்று இம்மந்திரத்தில் சொல்லப்படுவது கறுப்பர் அல்லர்; தீயோர் என்றே பொருள் கொள்ள வேண்டும் .

Xxx

கவி 10-49-3

உசன கவியின் தந்தை ; இது கோத்திரப் பெயர்; ஆதலால் சுக்ராச்சார்யார் வரை இதே பெயர் பலருக்கும் உண்டு .  மேல் விவரம் உசனன் என்ற தலைப்பில் முன்னரே கொடுத்துள்ளேன்.

Xxx

ஸ்ருத வர்ணன் , பட்கிரிபி  10-49-5

ஸ்ருத வர்ணன் என்பவனை வாரி வழங்கும் மன்னன் என்று சொல்லிவிட்டு பட்கிரிபி என்பவன் ஏ தோ ஒரு அரக்கனாக இருக்கலாம் என்று சொல்லி முடித்து விடுகின்றனர். அந்தப் பெயர் வேறு எங்கும் வரவில்லை. இவ்வாறு பல புதிர்கள், புரியாத விஷயங்கள் ரிக் வேதம் நெடுகிலும் உளது !

xxxx

10-56-2 வாஜினன்

இந்தச் சொல்லுக்கு பொதுவாக குதிரை  என்று பொருள்.ஆனால் இங்கே  கவி பாடிய புலவரின்  மகனான வாஜிநன் என்பவனாக இருக்கலாம் என்று எழுதுகின்றனர்

xxx

அசு நீதி, அனுமதி, உசீனராணி 10-59-5, 10-59-10

இவை எல்லாம் ஈமச் சடங்கு விஷயங்களில் வரும் பெயர்கள். மரணச் சடங்குகள் பற்றிய எல்லாம் புதிராகவே உள்ளன . எதற்கெடுத்தாலும் ஐரோப்பாவில் உள்ள சம்பந்தமில்லாத விஷயங்களைத் தொடர்புபடுத்தி ஆரியர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு உண்டு என்று கதைக்கும் வெள்ளைத் தோல்கள் , நூற்றுக் கணக்கான விஷயங்களில் ஒன்றையும் காட்ட முடிவதில்லை. குறிப்பாக சோம ரசம் பற்றி சுமார் ஆயிரம் இடங்களில் வேதம் பேசுகிறது ; மரணம் , கல்யாணம் பற்றி பல விஷயங்களைச் சொல்கிறது; அவற்றைப்பற்றி எதையுமே ஐரோப்பாவுடன் தொடர்பு படுத்தமுடிவதில்லை.

அசுநீதி என்பவர் யமனா அல்லது மரணச்  சடங்குகளின் அதி தேவதையா என்று கேள்வி எழுப்புகின்றனர்.. ஆனால் இந்துக்களின் ‘மரணச்  சடங்கு தேவதை’ என்பது உறுதி. வாழ்க்கைக்கான வழி , வாழ்க்கைக்கான வழிகாட்டி என்பது இதன் பொருள். இது போல எகிப்தின் மரணச் சடங்குகளிலும் உண்டு.

அனுமதி என்பதை தமிழில்கூட நாம் இப்போது permission பெர்மிஷன் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். ‘அவி’ (Havis) களை விருப்பத்துடன் ஏற்று கடவுளுக்கு அனுமதிக்கும் தேவதை இது. கருணை மிக்க தேவதை என்பது இதன் பொருள். வெள்ளைக்காரர்கள் இவ்விருவரையும் தேவதைகளாக காணாமல் (personification) உருவகம் என்று நினைக்கின்றனர். இதே துதியின் முதல் மந்திரத்திலேயே மரண தேவதை நிர்ருதியின் பெயர் வந்துவிடுகிறது. அதை அவர்கள் கவனிக்கத்  வறிவிட்டனர்

உசீனராணியை உசீரநா என்பவனின் மனைவியாக்கி அவர்கள் இப்போதும் மத்திய தேசத்தில் வாழ்வதாக அடிக்குறிப்பில் எழுதுகின்றனர். அத்தோடு இது புரியாத மந்திரம் என்ற வழக்கமான பல்லவியையும் சேர்த்துவிட்டனர்! உண்மையில் சொல்லப்போன்னால் அர்த்தம் தெரியாத ஆராய்ச்சிக்குரிய சொல் இது . பிற்காலத்தில் மத்திய தேச மக்களுக்கு இந்தச் சொல் இருப்பதாக எழுதுவது எப்படி ரிக்வேத காலத்துடன் பொருந்தும்?

இதுவும் ஈமச் சடங்கு தொடர்பானது என்றே நான் கருதுகிறேன்; காரணம் முதல் மந்திரமும் மரணம் தொடர்பான தேவதை. இந்தக் கடைசி மந்திரமும் மரணம் தொடர்பானது. இடையிலும் மரண விஷயங்களையே பேசுகின்றனர்

Xxxx

அசமாதி , பஜேரத வம்சம் ,10-60-2

பஜேரத என்பது இளவரசன் பெயரா, நாட்டின் பெயரா என்றே தெரியவில்லை என்று அடிக்குறிப்பில் எழுதிவிட்டனர்!!!!

அசமாதி என்பவரை அரசர் என்கிறார் சாயனர். ஆனால் இதன் பொருள் ‘சமம் இல்லாத’ என்பதாகும். ஆக இங்கும் வெள்ளைக்காரன் கணக்குப் படி பொருள் தெரியவில்லை! ஆனால் பெயர்களில் இப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. சாயனர் சொல்லுவது அக்காலத்தில் கிடைத்த, நமக்கு இப்போது கிடைக்காத, ஆதாரத்தை வைத்து எழுந்ததே. ஒரு பிரபல ரிஷியின் பெயர் ‘மான் கொம்பன்’= ரிஷ்ய ச்ருங்கன் = கலைக்கோட்டு முனிவன் என்பது கம்ப ராமாயண  மொழிபெயர்ப்பு.

இன்னொரு முனிவரின் பெயர் எட்டு கோணல் = அஷ்டாவக்ரன் ; அப்பா, தப்பாக வேதத்தை உச்சரித்ததால் கர்ப்பப்பையிலேயே உடலை சுருக்கி கோணல் மாணலாகப் பிறந்த ரிஷி . (இதுபற்றி ஏற்கனவே வேத ஒலிகளின் சக்தி பற்றிய கட்டுரையில் எழுதி இருக்கிறேன்)

Xxx

SEVEN BIRDS, SEVEN SISTERS, JUNGLE BABBLERS.

10-67-7 காட்டுப் பன்றி BOAR- 10-67-7

உஷ்ணத்தினால் வியர்த்து, பிருஹஸ்பதி, வலிமையும் வீரமும் உள்ள காட்டுப் பன்றிகளுடன் ஏராளமான செல்வத்தைக் கைப்பற்றினான் .

இந்த மந்திரத்தில் காட்டுப் பன்றிகள் என்பன பலம் வாய்ந்த மருத் தேவர்கள் அல்லது நல்ல நீரைக் கொண்டு வருபவர்கள் என்று அடிக்குறிப்பு கூறுகிறது. சாயனர் ‘நல்ல நீரைக் கொண்டு வருவோர்’ என்றே எழுதுகிறார். ஏன் காட்டுப் பன்றி உவமை என்று வினவத் தோன்றுகிறது .

Xxxx

ஏழு பறவைப் பாடகர்கள் 10-71-3

இங்கு 7 பறவைகள் பாடகர்கள் என்ற குறிப்புக்கு பறவை இயல் வல்லுநர் Mr Dave தவே இது வங்காளத்தில் உள்ள ஏழு சகோதரிகள் என்ற பாடும் பறவை வகை என்கிறார். மர்றவர்கள் காயத்ரி முதலான 7 யாப்பிலக்கண சந்தங்கள் என்பர்.

இந்தப் பாட்டே  வினோதமானது  ‘ஞானம்’ என்ற தலைப்பில் அமைந்த ஒரே துதி இதுதான். இதை பிரம்ம ஞானம் என்று சாயனர் கூறுகிறார் . அவ்வகையில் பார்த்தாலும் ஞானிகளை பரம ஹம்சத்துடன் (அன்னம் என்னும் பறவை) ஒப்பிடுவதால் பறவை என்பதே சரி என்று துணியலாம்.

Xxx

To be continued………………………..

TAGS – பேய்கள், தேவதைகள், PART 3

ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்! – 1 (Pot No.10,208)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,208

Date uploaded in London – 14 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 11-10-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

சங்கீத மும்மூர்த்திகளுள் தாளத்திற்குப் பிரதானமாகப் புகழ் பெற்றவர் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள். இவருடைய சரித்திரம் அற்புதமான ஒன்று.

இவருடைய முன்னோர்கள் விஜயநகரத்தில் வசித்து வந்தனர். 1566ஆம் ஆண்டு விஜயநகரம் வீழ்ந்த பின்னர் அவர்கள் காஞ்சிபுரம் வந்து அங்கு குடியேறி பரம்பரை பரம்பரையாக வசித்து வரலாயினர். இவர்கள் வடம வகுப்பைச் சேர்ந்தவர்கள். பங்காரு காமாக்ஷி அம்மனை பூஜை செய்து வந்தவர்கள். பின்னர் காலகிரமத்தில் இவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து பங்காரு காமாக்ஷி அம்மன் விக்ரஹத்துடன் செஞ்சி சென்றனர். அங்கு அபோது ஆட்சி புரிந்து வந்த சந்தான  மஹாராஜா இந்தக் குடும்பத்தை ஆதரித்து வந்தான். பதினைந்து ஆண்டுகள் அங்கு இருந்த பின்னர் குடும்பத்தினர் உடையார் பாளையம் வந்தனர். எழுபது ஆண்டுகள் அங்கு இவர்கள் வாழ்ந்தனர். பிறகு அணைக்குடியில் பதினைந்து ஆண்டுகள் கழித்த பின்னர், விஜயபுரம், நாகூர், மடப்புரம், சிக்கல் என பல ஊர்களில் வாழ்ந்து விட்டு கடைசியாக திருவாரூருக்கு வந்து தங்கினர். சில காலம் அங்கு தங்கி இருந்து விட்டுப் பின்னர் தஞ்சாவூருக்கு வந்து குடியேறினர்.

திருவாரூரில் இந்தப் பரம்பரையில் வந்த குடும்பத்தினர் இருந்த போது குடும்பத் தலைவரின் பெயர் விசுவநாத ஐயர். காமாக்ஷியிடம் மிகுந்த பக்தி கொண்டவர் இவர். ஒரு நாள் அவர்கள் குடியிருந்த தெருவில் வேங்கடாஜலபதி சமாராதனை ஒன்று நடைபெற்றது. அதில் தம்பதியினர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஆவேசம் பெற்ற ஒருவர் எழுந்து விசுவநாதர் தம்பதியினரைப் பார்த்து, “அடுத்த ஆண்டு சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத் திருநாளில் உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும் என்று அருள் வாக்குக் கூறினார். அப்படியே நடந்தது.

     1762ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி, சித்ரபானு வருடம், சித்திரை மாதம் 17ஆம் தேதி கிருத்திகா நக்ஷத்திரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்ததால் குழந்தைக்கு வெங்கட சுப்ரமண்யன் என்று பெயரிடப்பட்டது. அவருக்கு சியாம கிருஷ்ணா என்ற செல்லப் பெயரும் இடப்பட்டது. இவரே பிற்காலத்தில் அனைவரும் போற்றப்படும் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆவார்.

1781ஆம் ஆண்டு ஹைதர் அலியினால் ஒரு கலவரம் ஏற்பட சியாமா சாஸ்திரிகளின் குடும்பம் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்தது. தஞ்சையை அப்போது ஆண்டுவந்த துளஜா ராஜா விசுவநாதையரை ஆதரிக்கலானார்.

இயல்பாகவே சியாமகிருஷ்ணருக்கு இளமையிலேயே சங்கீதத்தின் மீது அளவற்ற ஆர்வம் இருந்தது. ஆரம்பத்தில் இவர் இரகசியமாகவே தகப்பனார் அறியாமல் சங்கீதப் பயிற்சி பெற்று வந்தார். இவரது மாமா இவருக்கு சங்கீதம் கற்பிக்க ஆரம்பித்தார். ஆனால் இவரது சங்கீத ஞானம் இவரது பிறப்பிலேயே அளப்பரிய தன்மையுடன் இருந்ததை மாமாவால் பொறுக்க முடியவில்லை. பொறாமை கொண்டார். ‘சங்கீதத்திலேயே இருக்காதே; ஏதாவது வேலையையும் செய்’ என்று அடிக்கடி கடிந்து கொள்வார்.  ஆனால் காமாக்ஷி அம்மன் மீது அவர் கோவிலில் பாட ஆரம்பித்தவுடன் அவரைச் சூழ்ந்து பக்தர்கள் குழுமி நின்று கொள்வர். அற்புதமான அவரது இசையைக் கேட்டு அனைவரும் மெய்மறந்து சிலிர்ப்பர்.  ஒரு நாள் ஒரு பெரியவர் இவரது இசையால் உருகி தனது சால்வையை எடுத்து இவர்  மீது போர்த்தி, “ நீ இப்படியே இசையை வளர்ப்பாயாக’ என்று ஆசீர்வதித்தார்.

இந்தச் சம்பவத்தை கோவில் குருக்கள் அவர் மாமாவிடம் சொல்லி ஆனந்தப்பட அவரோ கடும் கோபம் கொண்டார். சியாமா சாஸ்திரிகளைப் பார்த்து, “உனக்கா இது? என்று ஆத்திரத்துடன் கூச்சலிட்டு அந்த சால்வையைப் பிடுங்கி எறிந்து அவர் பாட்டுப் புத்தகத்தையும் கிழிந்து எறிந்தார்.  “இனி நீ பாடக் கூடாது என்ற கட்டளையையும் இட்டார். தான் பாட்டுச் சொல்லித் தருவதையும் நிறுத்தி விட்டார்.

இச்சமயம் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு சந்யாசி காசியில் வசித்து வந்தார். அவர் காசியிலிருந்து இராமேஸ்வர யாத்திரையாக வந்தவர் தஞ்சாவூருக்கு வந்தார். அவர் பெயர் சங்கீத சுவாமிகள். சாதுர்மாஸ்ய விரத காலம் ஆனதால் அவர் அந்தக் காலம் முடிய தஞ்சாவூரில் தங்கினார். ஒரு நாள் விஸ்வநாத ஐயர் சங்கீத சுவாமிகளை தனது வீட்டில் விருந்துக்கு அழைத்தார். அவர் வீட்டுக்கு வந்த சந்யாசி சியாம கிருஷ்ணனைப் பார்த்தார்; அவர் இசையைக் கேட்டார். தன்னிடமுள்ள நாட்டியம், சங்கீதம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் பெற வல்ல தகுந்த பாத்திரம் இவரே என்று உணர்ந்து கொண்டார். இவரது தகப்பனாரிடம் சொல்லி இவரைத் தன் சீடனாக ஆக்கிக் கொண்டார்; அவருக்கு சங்கீத சாஸ்திரத்தையும், இதர கலைகளையும்  கற்பிக்கலானார். சங்கீதம் ஒரு உயர்ந்த கலை அல்ல; வேத சாஸ்திரமே உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டிருந்த விசுவநாதையர் தன் மனதை அம்பாளின் அருளினால் மாற்றிக் கொண்டார். சாதுர்மாஸ்யம் விரதம் முடியவே இராமேஸ்வர யாத்திரைக்கு ஆயத்தமானார் சங்கீத சுவாமிகள். சியாம கிருஷ்ணனை அழைத்து தனது கையில் இருந்த அனைத்து இசைச் சுவடிகளையும் அவரிடம் அளித்தார்.

அப்போது தஞ்சை அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்த பச்சிமிரியம் ஆதியப்பையா என்பவரின் இசையைத் தொடர்ந்து கவனிக்குமாறு கூறினார். கேள்வி ஞானம் சிறந்தது என்றார் அவர்.

குருவின் கட்டளைப்படியே சியாம கிருஷ்ணர் ஆதியப்பையாவை அணுகினார். அவருக்கும் சியாம கிருஷ்ணன் மேல் அளவற்ற பாசம் ஏற்பட்டது. சியாம கிருஷ்ணரின் அறிவையும் பக்தியையும் நன்கு அறிந்த அவர் சியாம கிருஷ்ணரை காமாக்ஷி என்றே அழைக்கலானார்.

சியாமா சாஸ்திரிகளின் சங்கீதக் கலை வெகு வேகமாக உயர்ந்த நிலையை அடைந்தது.

தனது அளப்பரிய சங்கீத ஞானத்தைக் கொண்டு பங்காரு காமாக்ஷி தேவியைப் பற்றி பல ஸ்தோத்திரப் பாடல்களை அவர் பாடலானார்.

அப்போது அவரது சங்கீத மேன்மையைக் கண்ட  பொப்பிலி கேசவய்யா என்ற வித்வான் தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார். தஞ்சையில் தன் பெயரை நிலை நாட்டி விட்டால் தானே தரணியில் சிறந்தவன் என்னும் பெயர் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்த அவர் அப்போது தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னனை அணுகினார். தன்னுடன் போட்டி போடத் தக்க வித்வானை அழைக்க வேண்டும் என்று அவர் வேண்டினார். சரபோஜி மன்னனுக்குக் கவலை வந்து விட்டது. தஞ்சையின் மானம் காப்பாற்றப்பட வேண்டுமே என்று எண்ணிய அவன் பலவிதமாக யோசித்தான். இசையே ஒரு வடிவமாக உருவெடுத்த சியாமா சாஸ்திரிகளையே அவன் நினைத்தான். அவரை அழைத்து வரச் செய்து விஷயத்தைக் கூறினான். சியாமா சாஸ்திரிகள் தஞ்சையின் மானத்தைக் காக்க இசைந்தார்.

பொப்பிலி கேசவையா சிம்ஹநந்தன தாளத்தில் ஒரு பல்லவியைப் பாடினார்.

தன் மேதாவிலாசத்தை முழுவதுமாக அவர் வெளிப்படுத்த அனைவரும் பயந்து போனார்கள். ஆனால் காமாக்ஷியை மனதில் துதித்த சியாமா சாஸ்திரிகள், அவரை நோக்கி ‘இந்த தானா, இங்க உன்னதா – ‘இவ்வளவு தானா, இன்னும் உள்ளதா என்று கேட்டார். ‘தீனிகி பைன பாடகலரா? – இதற்கு மேலும் பாட முடியுமா உங்களால் – என்று செருக்குடன் கேட்டார் பொப்பிலி கேசவையா.

தான் கேட்டதை அப்படியே பாடி முடித்த சியாமா சாஸ்திரிகள், தொடர்ந்து சரபந்தன தாளம் என்ற ஒரு புதிய மிகக் கடினமான தாளத்தில் சிம்ஹநந்தன தாள பல்லவிக்கு எதிராகப் பாடினார். அனைவரும் ஆரவாரித்தனர். சியாமா சாஸ்திரிகள் போட்டியில் வெற்றி பெற்றார். மன்னன் மிகவும் மகிழ்ந்தான். சியாமா சாஸ்திரிகளுக்கு வெற்றி மாலையை அணிவித்தான். விருதுகள் பலவும் கொடுத்துச் சிறப்பித்தான். ஆனால் சியாமா சாஸ்திரிகளோ அனைத்துப் பரிசுப் பொருள்களையும் காமாக்ஷிக்கே அர்ப்பணித்து விட்டார்.

இதே போல நாகப்பட்டினம் அப்புக்குட்டி என்ற வித்வானும் இவரிடம் போட்டி போட வந்தார். அவரையும் இவர் ஜெயித்து அரசனின் ஆதரவைப் பெற்றார்.

அப்புக்குட்டி மைசூரை அடைந்து மைசூர் மன்னரிடம் பெருந்தன்மையாக இவரைப் பற்றிப் புகழ்ந்து கூற, மன்னர் இவரை அழைத்தாராம். ஆனால் சியாமா சாஸ்திரிகளோ காமாக்ஷி அருளைத் தவிர பெயர், புகழ், செல்வம் விரும்பாதவர் என்பதால் அங்கு செல்ல மறுத்து விட்டார்.

 *          தொடரும்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

tags- சியாமா சாஸ்திரிகள்