Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தேவர்களே கவிஞர்களாகப் புவியில் இறங்குகின்றனர்!
ச.நாகராஜன்
அற்புதமான சுபாஷிதங்கள் கவிதைகளைப் பற்றியும் கவிஞர்களைப் பற்றியும் நூற்றுக் கணக்கில் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. கவிதையின் மதிப்பையும் சுவையையும் அறியும் கவிதா ரஸிகர்களே இப்படிப்பட்ட சுபாஷிதங்களைத் தர முடியும். அவற்றில் நான்கு சுபாஷிதங்கள் இங்கு தரப்படுகின்றன.
1
கவி கரோதி பத்யானி லாலயத்யுத்தமோ ஜன: |
தரு: ப்ரசூதே புஷ்பாணி மருத் வஹதி சௌரபம் ||
கவிஞன் கவிதைகளை இயற்றுகிறான். ஆனால் உத்தம மனிதர்களே அவர்களை ஆதரிக்கின்றனர். மரமானது பூக்களைப் புஷ்பிக்கிறது. ஆனால் தென்றலே மணத்தைப் பரப்புகிறது.
The poet composes the verses, but the best of men patronises them; the tree puts forth flowers, but the breeze spread the fragrance (K.V. Sarma)
2
கவி சூயதி காவ்யானி ஹ்ருதா வததி சஜ்ஜனா: |
சூதே முக்தாள் பயோ ராஷிர் வஹந்தி தருணீஸ்தனா: ||
கவிஞன் (நல்ல) கவிதைகளை இயற்றுகிறான். ஆனால் அவை நல்ல மனிதர்களால் அவர்கள் இதயத்தில் போற்றப்படுகிறது. கடலானது முத்துக்களைத் தருகிறது. ஆனால் அவற்றை பேரழகிகள் மார்பகத்தில் அணிந்து கொள்கிறார்கள்.
A poet composes (good) poems but they are appreciated by good people in their hearts: the sea gives birth to pearls, but they are worn on the bosoms of young women. (A.A.R.)
3
கவி கரோதி காவ்யானி ஸ்வாது ஜானாதி பண்டித: |
சுந்தர்யா அபி லாவண்யம் பதிர்ஜானாதி நோ பிதா ||
கவிஞன் கவிதைகளை இயற்றுகிறான்.ஆனால் அதன் சுவையை அறிஞன் ஒருவனே அறிகிறான். ஒரு பேரழகியின் லாவண்யத்தை அவன் கணவனே அறிவான். அவளது தந்தை அறிய மாட்டான்.
The poet composes poems, but the wise man knows its taste: the charms of the damsel is known to the husband, not to the father. (K.V.Sarma)
மனிதர்களின் புண்ணியத்தால் சுவர்க்கத்திலிருந்து கவிதா சக்தி புவிக்கு அமிர்த மழையாக இறங்கியுள்ளது. தேவர்களே கவிஞர்கள் போல தங்களது உடைமைகளை மீட்டெடுக்க வந்துள்ளார்கள் என்பது போலத் தோன்றுகிறது.
Poetic power has descended down to the earth from the heavens as a nectarine shower on accout of man’s meritorious deeds. And it would seem that the gods too have come down in the guise of poets, keen to retrieve their possession. (K.V. Sarma)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
THIS IS THE THIRD AND LAST PART OF RIG VEDIC POET’S UNIQUE DIALOGUE WITH TWO RIVERS.
We saw in the past two days a unique conversation between the seer Visvamitra and two rivers Vipas and Sutudri. They are identified with modern day rivers Beas and Sutlej.
Here is my commentary on the last five mantras of 3-33
3-33-9
Visvamitra addresses the rivers as Sisters! In the third mantra/stanza we saw the rivers as Mother. Hindus are the only people in the world who worship rivers as Goddesses. All the rivers have feminine names and each one has a legend. The poet requests the rivers to flow below the axle of the wagon and car.
3-33-10
Here the rivers speak. They use two beautiful similes. Yes ; we would lower our level ‘like a nursing mother and yield like a maiden to her lover.
These types of similes are seen throughout the Rig Veda. We see well-knit family connections with love and affection between the relatives. Similes of husband and wife coming together, children running into the garments of mother, son getting the warmth of his father, lover and lady love hugging together etc are found in Vedas. Very often cow and calf are compared to mother and child.
3-33-11
Here we read about the poet and his clan the Bharatas crossing the river. The poet urges the rivers to flow rapidly (after their crossing). Indra’s help in feeding the rivers (through rain) is also mentioned. Poet’s words “ I crave your favour who deserve our worship” are to be noted. In the eighth stanza we saw rivers saying NAMASTE. Even today this greeting is used by all Indians. Here Visvamitra says they/the rivers deserve worship.
Today Hindus worship not only rivers but also water. Hindu brahmins sprinkle water on their head thrice a day praising water as medicine and the take water in sips as well.
3-33-12
Here the poet concludes saying they have all crossed the river and it can roll swiftly onward.
Hindus believe that saints and seers like Visvamitra can control natural forces such as rivers, rain and wind, even ocean. In the Ramayana we read about Rama commanding the sea to obey. In the Bhagavata Purana we see river Yamuna parting away to give way to Vasudeva carrying Baby Krishna. In Adi Shankara’s life we see his command over flooded river. In Sangam Tamil literature Rama commands the birds in a banyan tree and then they shut their mouths. It happened when Rama was consulting Civil engineer Nala about building a bridge across the sea. So I would take these stanzas as water miracle performed by Visvamitra. Two rivers obeyed his commands and the additional message is to show respect and reverence to Rivers.
3-33-13
Griffith has added a foot note saying that it is in different metre and so a later addition. Stanzas with different metres occur in ancient Tamil and Sanskrit literature. Not only the differences in metre but also the repetitions. Here in 13th mantra we see the same message repeated.
Prof . Wilson following Sayana, gives a somewhat different version of the stanza:
Let your waves/rivers so flow that the pin of the yoke may be above their waters; leave the trace full, and may the two streams exempt from misfortune or defect and uncensured, exhibit no (present) increase.
I take it as a blessing to the rivers given by Visvamitra.
This hymn shows the environmental awareness among ancient Indians. ‘Humble us not mid men’ in the eighth stanza is the message Visvamitra gives to humanity through the rivers. Never treat rivers with contempt; never pollute them.
Confluence of Sutudri/Sutlej and the Vipas/Beas takes place near Amritsar in Punjab.
–subham–
tags- Visvamitra, Dialogue with rivers, Vipas, Sutudri, last part, RV 3-33
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
விசுவாமித்திர முனிவர் நதிகளுடன் உரையாடல்
ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்திலுள்ள 33-வது துதியின் 13 மந்திரங்களில் கடந்த இரண்டு நாட்களில் எட்டு மந்திரங்களில் கண்ட அற்புத விஷயங்களைப் பார்த்தோம். இதோ கடைசி 5 மந்திரங்களின் சாரம்:
3-33-9
விசுவாமித்திரர் நதிகளிடம் சொல்கிறார் :
சகோதரிகளான நதிகளே !
உங்களைப் போற்றிப் பாடும் என் துதியை அன்போடு செவி மடுப்பீர்களாகுக !
நான் தொலை தூரத்திலிருந்து வண்டியோடு வந்திருக்கிறேன். நீங்கள் தாழ்ந்து ஓடுங்கள் ; நான் உங்களைக் கடந்து செல்ல உதவுங்கள் ; நீங்கள் என் வண்டிச் சக்கரத்தின் அச்சுக்கும் கீழே இருக்குமாறு செல்லுங்கள் .
எனது வியாக்கியானம்
சோமம் என்னும் அற்புதக் குளிகையைப் பறிப்பதற்காக முனிவர் மேற்கிலுள்ள மலைகளை நோக்கிச் செல்கிறார் . இதை சாயனர், யாஸ்கர் போன்றோர் எழுதி இருப்பதை கிரிப்பித் Ralph T H Griffith என்பவர் மறைத்ததை நேற்று கண்டோம். இப்போது அந்த நதிகளை சகோதரிகளே! என்று விளிக்கிறார் . உலகில் நதிகளை இன்றுவரை தாயாகவும் சகோதரியாகவும் போற்றி வணங் கும் ஒரே சமுதாயம் இந்துதான். விசுவாமித்திரரே மூன்றாவது மந்திரத்தில் நதியைத் ‘தாய்’ என்று அழைக்கிறார் . நான் வண்டியில் வந்திருக்கிறேன் என்பது குறிப்பிடத் தக்கது. அந்தக் காலத்தில் தொலை தூரத்தைக் கடக்கும் அருமையான சாலை வசதிகள் இருந்தன . சக்கரத்தின் பயன்பாடு ரிக் வேதத்தில் இருப்பது போல உலகில் வேறு எந்த பழைய இலக்கியத்திலும் இல்லை . தேரின் உறுப்புகள், பகுதிகள் பற்றி 60 சொற்கள் வேத கால இலக்கியத்தில் உள்ளன.
வாழ்க்கை என்னும் வண்டி, சுகமாகப் பயணம் செய்ய வேண்டுமானால், இரண்டு சக்கரங்களும் வலுவாக, சம நிலையில் இருக்க வேண்டும். இந்த இரண்டு சக்கர உவமையும் அதை இணைக்கும் கட்டையையும் ரிக் வேதப் புலவர்கள் உவமையாகப் பயன்படுத்துகின்றனர். அதைத் திருவள்ளுவரும் சொல்கிறார். வள்ளுவர் பயன்படுத்தும் ‘அச்சு’ Axis என்பதே ரிக் வேத சம்ஸ்கிருதத் சொல்!
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து – திருக்குறள் 667
XXX
3-33-10
புலவனே !/ கவிஞனே
தேரோடும் வண்டியோடும் தொலைவிலிருந்து வந்திருக்கிறாய் என்று நீ சொன்னது எங்கள் காதில் விழுந்தது.நாங்கள் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டும் தாயைப் போலும், காதலைனக் கட்டித்தழுவும் இளம்பெண்னைப் போலவும் தாழ்ந்து பணிவோம்; உன்னை வணங் குவோம்
எனது வியாக்கியானம்:
என்ன அற்புதமான பணிவு; என்ன அற்புதமான உவமைகள்!
விசுவாமித்திரன், நதிகளை சகோதரி என்றான். நதிகள் உடனே தாய் போலவும் அன்புள்ள காதலி போலவும் பணிவோம் என்கின்றன. இந்த தாய் உவமை, மற்றும் தாயின் முந்தானையில் ஓடி ஒளியும் குழந்தையின் உவமை, காதலன்-காதலி கட்டித் தழுவும் உவமை, கணவன்- மனைவி இன்பம் துய்க்கும் செக்சி sexy உவமை ஆகி யன ரிக் வேதம் முழுதும் விரவிக் கிடக்கின்றன. இன்பமயமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் வேதகால இந்துக்கள். ‘உலகு இன்பக் கேணி என்று நல் பல் வேதம் உரைத்த’ –என்பது பாரதியாரின் வாக்கு. மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்; வைகலும் எண்ணில் யாதும் குறையிலை என்ற ஞான சம்பந்தரின் வாக்கினை வேத காலத்திற்குச் சூட்டலாம்.
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
XXX
3-33-11
விசுவாமித்திரனின் பதில்:
நதிகளே ! நீங்கள் என்னைக் கடக்கச் செய்தீர்கள்; அதுபோல பரத குல மக்களும், வீரர்களும் கடந்து செல்லுவார்கள் . பின்னர் இந்திரனால் நிரப்பப்படும் நீங்கள் பிரவாகம் எடுத்து ஓடுங்கள் ; முன் போலவே பெருகுக ; வந்தனத்துக்குரிய நான் உங்கள் நல்லதரவை நாடுகிறேன்
எனது வியாக்கியானம்
நதிகள் போன்ற இயற்கைக் சக்திகள் அனைத்தும் விசுவாமித்திரன் போன்ற தவ வலிமை உடையோருக்குக் கீழ்ப்படியும். ஆதி சங்கரர் கோதாவரி வெள்ளத்ததைக் கட்டுப்படுத்தினார் . வாசுதேவனுக்கு கிருஷ்ணன் என்னும் குழந்தையை எடுத்துச் செல்வதற்காக யமுனை நதி வழிவிட்டது . இதை பைபிள்கார்களும் காப்பி அடித்து மோசஸுக்கு செங்கடல் வழிவிட்டதாக எழுதிவைத்துள்ளனர். ஆகையால் இதை தண்ணீர் அற்புதங்களில் சேர்க்க Water Miracles வேண்டும். அப்படி அற்புத விஷயமாக இல்லாவிடில் இது ரிக் வேதத்தில் இடம்பெறாது..
வண்ணகத்துக்குரிய , வந்தனத்துக்குரிய என்ற சொற்கள் சாதாரண ஆள் இல்லை என்பதைக் காட்டுகிறது; இந்த சொற்களை நதிகளின் பால் ஏற்றினாலும் அவைகளை இந்துக்கள் வணங்கியதை அறிவோம்.
XXX
3-33-12
பரதர்கள் பசுக்களை நாடி நதிகளைக் கடந்து சென்றார்கள் . புலவனுக்கு நதியின் நல்லாதரவு கிடைத்தது . உங்கள் அலைகளோடு ஓடுங்கள் ;செல்வத்தைப் பொழியுங்கள்; உணவை அளியுங்கள் வளம்பெருக்குங்கள்; வேகமாக ஓடுங்கள் .
எனது வியாக்கியானம்
விசுவாமித்திரன் பல தேர்களுடனும் பெரும் படையுடனும் வந்திருப்பது தெரிகிறது. ‘பசுக்களை’ நாடி என்று சாயனர் உரையில் சேர்க்கிறார் ; பசு என்பதற்குப் பல பொருள் உண்டு. ஒரு வேளை இங்கே சோமம் என்னும் மூலிகையைக் குறிக்கலாம். ஏனெனில் சாயனரே ,நிறைய செல்வத்துடன் இரண்டு நதிகள் கூடும் இடத்திற்கு முனிவர் வந்ததாகச் சொல்கிறார்.
ராமாயண, புராணக் கதைகளின் பின்னணியில் பார்க்கும்போது அவர் கிழக்கிலுள்ள சரயூ (அயோத்தி மாநகரம்) நதி பகுதியில் இருந்து மேற்கு நோக்கிச் சென்றதாகவே பொருந்தும். காரணத்தையும் சாயனரே சொல்லிவிட்டார். சோம மூலிகையை பறிப்பதற்காக என்று.
XXX
3-3-13
நதிகளே , உங்களுடைய அலைகள் நுகத்தின் கயிற்றுக்குக் கீழே பாய்க ; கட்டுக்களைப் பற்றாதீர்கள்.. பாவமற்றவர்களும் , துன்பம் அளிக்காதவர்களும் , தடைப்படாதவர்களுமான இரு நதிகளும் — நாங்கள் கடந்து செல்லும் வரை — பெருகாமல் இருப்பார்களாகுக.
எனது வியாக்கியானம்
கடைசி மந்திரம் வேறு சந்தத்தில் (meter) அமைந்துள்ளதால் இதை பிற்சேர்க்கை என்று கிரிப்பித் அடிக்குறிப்பு கூறுகிறது. இந்தப் பிரச்சனை தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்கள் நெடுகிலும் உண்டு. எங்காவது ஒரு யாப்பு இலக்கண வேறுபாடு இருந்தால் அதைச் சந்தேகிப்பதுண்டு. அப்படியே பார்த்தாலும் இந்த துதியின் / சூக்தத்தின் பொருள் மாறுபடாது .
மேலும், இந்தக் கடைசி மந்திரம் ‘கூறியது கூறல்’ என்ற இலக்கண குற்றத்துக்கு கீழே வருகிறது. அதாவது சொன்ன விஷயத்தையே மீண்டும் சொன்னதாகிறது.
ஹொரேஸ் Horace என்ற கவிஞரும் இப்படிச் சொல்லி இருப்பதாக அடிக்குறிப்பு கூறும்.
வில்ஸன் (Prof. Wilson) என்ற மொழிபெயர்ப்பாளர் சாயனரைப் பின்பற்றி பின் வருமாறு மொழி பெயர்க்கிறார்
“உங்களுடைய பிரவாகம் நுகத்துக்கும் கீழே பாயட்டும். இரண்டு நதிகளும் துரதிருஷ்டம், குற்றச் சாட்டுகள் மற்றும் குறைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கட்டும் . தற்போது அதிகம் பாயாமல் இருக்கட்டும்”.
இங்கே நதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்குவது போலும் வாசகங்கள் அமைந்திருக்கின்றன.
நதிகளைப் பற்றி இப்படி எவரும் பாடியதும் இல்லை. அவைகளை உயிருள்ள ஒரு ஜீவனாக மாற்றி எவரும் பேச வைத்ததும் இல்லை.
வாழ்க விசுவாமித்திர முனிவன் ! வளர்க புனித நதிகள்!!
–SUBHAM–
tags -அழியாத மா கவிதை -3, விசுவாமித்திர முனிவர், நதிகளுடன் உரையாடல்,
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆலயம் அறிவோம் INDEX
(2nd November 2020, to 20th September 2021)
by திருமதிப்ரஹன்நாயகி சத்யநாராயணன்
ஆலயம் அறிவோம் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆலயங்கள் பற்றிய குறிப்பேடு கீழே தரப்படுகிறது. http://www.tamilandvedas.comஇல் வெளியான கட்டுரை எண், தேதி, ஆலய விவரம் ஆகியவற்றைக் கீழே காணலாம்.
மேற்படி ஆலயங்களைத் தவிர செப்டம்பர், அக்டோபர் 2020 இல் பங்களூர் செய்தி மடலில் மைசூர் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயம், சிருங்கேரி, கொல்லூர் மூகாம்பிகை, கொக்கி சுப்ரமண்யர் ஆகிய ஆலயங்கள் பற்றியும் அறிந்தோம்.
ஆக இதுவரை யாத்திரையில் இடம் பெற்ற தலங்களின் எண்ணிக்கை மொத்தம் 51.
கிம் வா காவ்யரஸ: ஸ்வாது: கிம் வா ஸ்வாதீயஸீ சுதா ||
யாரை நாம் கேட்பது? சுவர்க்கத்தில் இருக்கும் தேவர்களையா அல்லது பூமியில் வாழ்கின்றவர்களையா? கவிதையின் ரஸம் அதிகமா அல்லது சுவர்க்கத்தில் உள்ள அமிர்தத்தின் சுவை அதிகமா – யாரைக் கேட்பது?
Whom shall we ask? The gods in the heaven, or us living on the earth: (whether) the taste of (good) poems is greater or whether nectar has a better taste (Translation by A.A.R)
*
க: கால: காநி மித்ராணி கோ தேஷ: கௌ வ்யயாகமௌ |
கஷ்சாஹம் கா ச மே சக்திர் திதி சிந்தயம் முஹுர்முஹு: ||
ஒரு மனிதனானவன் எப்போதும் கீழ்க்கண்டவற்றைப் பற்றித் திருப்பித் திருப்பி சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் : “இப்போது காலம் எப்படி?” :எப்படிப்பட்ட நண்பர்களை நான் கொண்டிருக்கிறேன்?” “இந்த இடம் என்ன?” “எனது வருமானம் எவ்வளவு, எனது செலவு எவ்வளவு?” “நான் யார்?”” எனது சக்தி என்ன?”
A man must ponder again and again on these : “What is the time?” “What friends (have I)?” “What is the place?” “What are my income and expenditure?” “Who am I. and what is my power?” (Translation by F.Edgerton)
யார் ஒருவன் மதிக்கபடுவான்? நல்லொழுக்கம் உடைய ஒருவனே மதிக்கப்படுவான். எவன் ஒருவன் தாழ்ந்தவன் என்று கூறப்படுவான்? எவன் ஒருவன் நல்லொழுக்கத்திலிருந்து நழுவி விட்டானோ அவனே! யாரால் இந்த உலகம் ஜெயிக்கப்படுகிறது? எந்த ஒருவனிடம் சத்தியமும் பொறுமையும் இருக்கிறதோ அவனாலேயே!
Who is honoured? The man of good conduct. Who is called a low person? He who swerved from good conduct. By whom is this world conquered? By him who is endowed with truth and patience.
உங்களுக்கு ஒரு பண்டிதன் வேண்டுமா அல்லது ஆயிரம் மூடர்கள் வேண்டுமா? ஒரு புத்திசாலி பண்டிதன் மிகவும் கஷ்டமான காலத்தில் உங்களுக்கு (அதைப் போக்கி) மிகுந்த சந்தோஷத்தைத் தருவான்.
Do you prefer one wise man or a thousand fools? For the wise man may confer great happiness when there are grave difficulties? (Translation by A.A.R)
***
கடினம் வா மதுரம் வா ப்ரஸ்துத வசனம் மனோஹாரி }
வாமே கர்தபனாதஷ் சித்தப்ரோத்யை ப்ரயாணேஷு ||
ஒரு பயணத்திற்காகப் புறப்படும் போது (வாழ்த்திப் புகழ்ந்து வழி அனுப்பப்படும் போது) புகழ் மொழிகளானவை இனிமையான குரலாக இருந்தாலும் சரி கடூரமாக குரலானாலும் சரி மனதிற்கு இனிமையாக இருக்கிறது. பயணத்தின் போது இடது பக்கமாக கழுதை கத்தினாலோ அதுவும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
When setting out on a journey, words of praise, whether in a harsh voice, or sweet tone, are pleasing to the mind : the braying of an ass on the left side when going on a journey is also pleasing to the mind. (Translation by A.A.R)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great
I GAVE THE FULL HYMN(RV.3-33) WITH 13 MANTRAS YESTERDAY.
Let us continue with my commentary from mantra 5
3-33-5
Mantra five exposes Max Muller gang and Marxist gang. These foreigners had a pre conceived notion that Aryans invaded India and drove out the native people to mountains or to the South. They, thus, justified their occupation of India. But Indian interpreters or Hindu scriptures never mentioned anything about coming from abroad. On the contrary Sumerians and Egyptians say that they came from far off hill region, probably India. Max Muller gang and Marxist gang translated the word ‘Aryan’ with a capital ‘A’ and ‘dasyu’ with a capital ‘D’ giving them racial colours. The correct translation would be Aryan= cultured, educated, civilized people. You don’t need to write ‘Aryan’ there. Dasyus are uncivilized or criminals. Kalidasa used dasyus for thieves. There is another word in the Rig Veda ‘Simyus’. Foreign idiots could not find the meaning!
All these are supported by Kanchi Paramacharya, Swami Vivekananda and the greatest modern Tamil poet Bharati.
Bharati described 700 year Muslim rule and 300 year Christian rule as unkindly 1000 year rule in his poem. Kanchi Shankaracharya said that ‘it is good that they translated our scriptures in European languages, but they did with a bad intention’.
Swami Vivekananda said in his lecture that ‘even if we threw all the mud from the bottom of the Indian ocean on foreign invaders, it wouldn’t be enough’ (punishment ). So I am not alone in criticising these foreign gangs.
Here is the proof from the fifth mantra:
5. Linger a little at my friendly bidding rest, Holy Ones, a moment in your journey.
With hymn sublime soliciting your favour Kusika’s son hath called unto the River.
6. Indra who wields the thunder dug our channels: he smote down Vrtra, him who stayed our currents.
Savitar, God, the lovely-handed, led us, and at his sending forth we flow expanded.
7. That hero deed of Indra must be lauded for ever that he rent Ahi in pieces.
He smote away the obstructors with his thunder, and eager for their course forth flowed the waters.
8. Never forget this word of thine, O singer, which future generations shall reecho.
In hymns, O bard, show us thy loving kindness. Humble us not mid men. To thee be honour!
In mantra five Ralph T H Griffith never mentioned ‘collecting Soma plant was the poet’s intention’. But he added a note that it shows Aryan expansion in the eastern part of India. The implied meaning is Poet Visvamitra going towards East India. But the same Griffith book of Rig Veda gives in small print another valuable information. It is like big companies fooling us with sub clauses in small print.
Here is what written in small print:-
5.Visvamitra speaks again. At my friendly bidding: according to the Scholiasts, Yaska and Sayana, the meaning of ‘me vacase somyaaya’ is to my speech importing the Soma; that is the object of my address is that I may cross over and gather Soma plant. The word Somya, consisting of , connected with, or inspired by Soma, appears to have here is more general meaning of lovely, pleasant or friendly .
Kusika’s son – Visvamitra
Max Muller and Griffith say that they follow Sayana; but in reality, they deviate a lot from Sayana and bluff their way through.
My commentary
The fact of the matter is Visvamitra wanted to go to mountains in the North West to collect soma. He can’t go Eastward and collect Soma, because Soma herbs never grew on Ganges plains in the East. So it shows westward movement of Vedic Hindus. I have more evidence to support my argument. We know that Visvamitra was the one who took Rama and Lakshmana to Bihar- Nepal border to get Sita for Rama. So the Hindu kingdom was spread over a vast area from Iran to Assam in India at that time.
There is more evidence in the Rig Veda itself. In one of the hymns King Sudas was connected with River Yamuna near Delhi . Foreign commentators were baffled with that hymn. Because they could not explain the connection between Sudas and River Yamuna.
All these show that even during pre Vedic period Hindus were living in the Ganges plains.
Even Sayana’s commentary is not acceptable to traditionalists. They never quote Sayana in their lectures or they believe in his Vedic interpretation. They believed the magical sound effect of mantras, not the meaning of it. For instance, Soma plant or juice comes in hundreds of places. So all Vedic truths can be written in one A 4 sheet of paper. And Tamil Akam (sex and family life) literature is also the same . We have over 2000 poems on Akam theme. But they say the same thing about love and family life. But we saved them because the way 400 poets talk about it. So do Vedas; they are saved by our forefathers for their magical mantra effect; not for the history in it or the literal meaning in it.
Sayana lived 700 years ago, but the Vedas have been there for 6000 years according to German scholar Herman Jacobi and B G Tilak. So no wonder even Sayana struggled in many places. By the time of Yaska of 800 BCE, 600 words were not understood by him according to Aravinda Maharishi. In short, we should not depend on Sayana, leave alone the foreigners. They were anti Hindu and non believers. They never practised Vedic rituals. To study the structure of Empire State building in New York or Bhurj tower in Dubai I would believe the engineers who built them ; not the village brick layer in the remotest village in India. For Vedic interpretation, we have to go by people who practised them or who believed in them. ( I will write about Sudas- Yamuna link separately which baffled Max Muller- Marxists gangs.)
Xxx
3-33- 6
Stanza six repeat what is said about Vrtra throughout the Vedas. Vrtra stand for forces that prevent rain and Indra stands for rain and prosperity.
3-33-7
Ahi, snake like demon, is also spoken about throughout the Vedas which stands for drought. Here Indra is credited with digging channels for rivers.
3-33-8
This is a beautiful stanza or mantra with lot of meaning in it. Here Visvamitra predicts that the Vedas, particularly, this poem, will be there for generations to come. But he puts these words in the mouth of rivers. It has become true; I am writing about it today and you are all reading it. Not only that. Thousands of Vedic students across India are learning the Rig Veda.
There is one more message in it. The rivers request the humanity not to humble them, belittle them. That is the message we hear now from the environmentalists around the world Visvamitra puts this message through the mouth of rivers. What a fantastic prediction! What a fantastic message.
Rivers request us ‘show us kindness’ in the mantra 8.
Let us show respect to rivers. Let us not pollute the rivers. Let us re echo the mantra of Visvamitra. Generations to come will repeat his words.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அழியாத மா கவிதை -ரிக் வேதத்தில் அற்புதக் கவிதை! – பகுதி 2
நேற்று ரிக் வேத துதி 3-33 ல் உள்ள 13 மந்திரங்களில் நான்கு மந்திரங்களைக் கண்டோம். இதோ மீதி மந்திரங்களின் பொருள்:-
Ralph T H Griffith கிரிப்பித்தின் அயோக்கியத் தனத்தை ஐந்தாவது மந்திரம் அம்பலப்படுத்துகிறது.
மாக்ஸ்முல்லர் (Max Muller) கும்பலும் மார்க்சீய கும்பலும் ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, உள்நாட்டு மக்களை விரட்டிவிட்டனர் என்ற கொள்கையை நிலைநாட்டவும் ஆகையால் நாங்கள் பிரிட்டிஷ்காரர்கள் உங்களை விரட்டுவதில் நியாம் உண்டு என்று வாதாடவும், இந்துமத நூல்களை மொழிபெயர்த்தனர் ;
இதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அழகாக ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது’ போல சொல்லி கண்டித்துள்ளார். “அவர்கள் மொழிபெயர்த்ததால் நம் கிரந்தங்கள் உலகம் முழுதும் தெரிந்தது உண்மைதான். ஆனால் அவர்கள் நோக்கம் தவறானது” என்று காட்டியுள்ளார்.
மகாகவி பாரதி 700 ஆண்டு முஸ்லீம் ஆட்ச்சியையும் 300 ஆண்டு ஆங்கிலேய ஆட்சியையும் “ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி” என்று கண்டித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தரோ “இந்து மஹா சமுத்திரத்தின் அடியிலுள்ள அத்தனை சகதியையும் உங்கள் மீது வீசி எறிந்தாலும் நீங்கள் செய்த தீமைக்கு பதில் கொடுத்தாதாகாது” என்று வெள்ளையனைச் சாடியுள்ளார்.
XXX
3-33-5
நதிகளிடம் விசுவாமித்திரன் பேசுகிறான் :
“நான் சோம லதை என்னும் மூலிகையைப் பறிக்கச் செல்லுகிறேன் .
என் விருப்பத்துக்கு இணங்கி, ஓடாமல் ஒரு கணப்பொழுது
நில்லுங்கள் . குசிகனின் புதல்வனான நான் இந்த மகத்தான துதி
மூலம் உங்களுடைய நல்லாதரவை நாடுகிறேன்”.
எனது உரை/ வியாக்கியானம்
Griffith கிரிப்பித், Max Muller மாக்ஸ்முல்லர் போன்றோர் மஹா விஷமிகள் நேர்மையற்றவர்கள் mischievous and dishonest . சாயனர் பெயரை வேண்டும் போதெல்லாம் சேர்த்து விட்டு, மொழி பெயர்ப்பு என்று வருகையில் தன் மனம் போக்கில் மொழி பெயர்க்கின்றனர். அதற்கு இந்த ஐந்தாவது மந்திர ஆங்கில மொழி பெயர்ப்பு ஒரு சான்று..
ஆரியர்கள் கிழக்கு நோக்கி தம் சாம்ராஜ்யத்தைப் பர ப்புவதை இந்த துதி காட்டுவதாக கிரிப்பித் சேர்த்துள்ளார் . ஆனால் சாயனரும் அவருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த யாஸ்கரும் சோமம் என்னும் மூலிகையைப் பறிக்கச் செல்கிறேன் ;ஆகையால் அருள்கூர்ந்து வழிவிடுங்கள் என்பதாக அர்த்தம் கூறுகின்றனர். இதற்கான பதம் ‘சோமம்’ என்பது கவிதையிலும் உளது
சோம மூலிகை, இமய மலை போன்ற மலை உச்சசியில் கிடைக்கிறது. அது கங்கைச் சமவெளியில் விளையாது. ஆக விசுவாமித்திரர் மேற்கு நோக்கிச் சென்றாரே அன்றி கிரிப்பித், மாக்ஸ்முல்லர், மார்க்சீய கும்பல் பிதற்றுவது போல கிழக்கு நோக்கிச் செல்லவில்லை.
இதற்கு ரிக் வேதத்திலேயே ஆதாரம் உளது. யமுனை நதிக்கரையையும் விசுவாமித்திரர் கால மன்னர் சுதாஸையும் தொடர்பு படுத்தும் இன்னொரு துதி ரிக் வேதத்தில் வருகிறது. அந்த இடத்தில் இவர்கள் எங்களுக்கு இது எப்படி என்று விளங்கவில்லை யே!! என்று பேந்தப் பேந்த முழிக்கின்றனர் .
பிற்கால இலக்கியமான ராமாயணமும் விசுவாமித்திர வம்சத்தை நேபாள எல்லையில் (Nepal- Bihar Border) உள்ள மிதிலாபுரி வரை எடுத்துச் செல்கிறது. அதாவது கங்கை நதி பாய்ந்தோடும் பீஹாரில் அவர் ராம, லெட்சுமணரை அழைத்துச் சென்று மணம் புரிவிக்கிறார். இந்து சாம்ராஜ்யம் ஈரான் முதல் அஸ்ஸாம் வரை பரவியிருந்த காலம் அது.
(யமுனை நதி – சுதாஸ் பற்றிய கவிதையை தனியே ஒரு கட்டுரையில் தருவேன்).
கொன்றான். எங்களுக்கான வழிகளை வகுத்தான். நல்ல கைகளுள்ள
சவிதா எங்களுக்கான வழியில் எங்களைச் செலுத்தினான். நாங்கள்
இந்திரனின் கட்டளைக்குட்பட்டு ஓடுகிறோம்.
எனது வியாக்கியானம்
இந்திரன் என்பது மழை உண்டாக்கும் மேகம், காலநிலை; வறட்சி யை விருத்திரன் என்று உருவகிப்பர்.அத்தோடு சவிதா என்ற பெயர் இங்கே வருகிறது. அதை சாயனர், சவிதா என்பது இந்திரனைப் புகழும் அடைமொழி என்கிறார் . சாயனரும் ஒரே சொல்லுக்கு வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு பொருள் சொல்கிறார் . வேதங்கள் தோன்றி, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் வியாக்கியானம் செய்வதால் இந்தக் குழப்பம் இருப்பதில் வியப்பில்லை. மேலும் சாயனர் உரையை வேத விற்பன்னர்கள் போற்றுவதில்லை. அவர்கள் வேதத்தின் இலக்கிய, இலக்கண பொருளைப் பாராது அதை அப்படியே ஓதிக்கொண்டு இருந்தாலே பலன் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையால்தான் நமக்கு இன்றும் வேதங்கள் அக்ஷரம் மாறாமல் கிடைத்திருக்கின்றன!!!
ஏனெனில் வேதம் சொல்லுவதை காகிதத்தில் ஒரே ஒரு பக்கத்தில் கூட அடக்கிவிடலாம். இதை தமிழ் இலக்கியத்துடனும் ஒப்பிடலாம்.அகநானூறு, ஐங்குறு நூறு,கலித்தொகை, நற்றிணை, குறுந்தொகை முதலிய அகத்திணைப் பாடல்களில் வரும் கருத்துக்களை ஒரே பக்கத்தில் சுருக்கிவிடலாம் ஆனால் அவர்கள் அந்த ஒரே கருத்தைச் சொல்லும் அழகிற்காக சுமார் 2000 அகத்திணைப் பாடல்களை இன்றும் காத்து வருகிறோம். அது போலவே ரிக் வேதத்திலும் சோம பானம் பற்றி 1000 இடங்களில் வருகிறது. எனினும் மந்திர சக்திக்காக அவற்றை நமது முன்னோர்கள் நமக்காக பாதுகாத்து தந்திருக்கின்றனர். அதை அர்த்தம் மட்டும் பார்த்திருந்தால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒதுக்கி வைத்திருப்பார்கள். இன்று நமக்கு கிடைத்திரா. அர்த்தத்துக்கும் மேலே ஒரு ரஹஸ்யம் உளது. அதற்கான சாவி ஆதி சங்கரர், வேத வியாசர் போன்றோர் மீண்டும் அவதரிக்கையில் நமக்கு கிடைக்கும் .
XXXX
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் கதை
இதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஒரு அழகான கதை மூலம் விளக்குகிறார். ஒரு குருடன் விளக்கை ஏற்றிக் கொண்டு, கையில் வைத்துக் கொண்டு நடந்தானாம். எல்லோரும் அவனைக் கண்டு நகைத்தார்கள் . அவனிடம் விளக்கம் கேட்ட போது ‘உங்களுக்கு வெளிச்சம் தெரிய வேண்டுமல்லவா; என் மீது விழ மாட்டீர்களே’ – என்று .
‘நம்பினார் கெடுவதில்லை ; இது நான்கு மறைத் தீர்ப்பு’ !
‘வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’ ! என்று .
XXXX
3-33-7
உடனே விசுவாமித்திரன் சொல்கிறான்
“அஹி என்ற அசுரனை இந்திரன் வெட்டிக் கொன்ற வீரச் செயல்
போற்றுதற்குரியது. அவன் தன்னுடைய வஜ்ராயுதத்தால் , தடை
எழுப்பியவர்களைத் துடைத்து ஒழித்தான் . இதனாலன்றோ
(உங்களைப் போன்ற) நதிகள் இன்று விருப்பம் போல பாய
முடிகின்றது.”
எனது வியாக்கியானம்
ஒருவரிடம் சலுகையை எதிர்பார்த்துச் செல்பவர் அந்த ஆளைப் புகழ்ந்து பேசுவது மனித இயல்பு. அவ்வண்ணமே விசுவாமித்திரனும் நதிகளைப் பாதுகாத்த இந்திரனைப் புகழும் வண்ணம் பேசுகிறான். அஹி என்ற பாம்பு பற்றியும் விருத்திரன் என்னும் அரக்கன பற்றியும் ரிக் வேதத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது. இது மழையைத் தடுக்கும் அம்சங்கள் என்பதைத் தள்ளிப்போன வெள்ளைக்காரனும் ஒத்துக்கொள்கிறான் !!!!!
xxx
3-33-8
நதிகள் பேசுகின்றன
ஏ புலவா ! நான் சொல்வதையும் நீ இதுவரை சொன்ன
சொற்களையும் மறந்து விடாதே ! இனி வரப்போகும்
சந்ததிகள், பரம்பரை பரம்பரையாக இதை போற்றப்
போகிறார்கள்; ஓ கவிஞனே ! உன்னுடைய பாடல்களில்
எங்கள் மீது அன்பைப் பொழிவாயாகுக. (மனிதர்களின்
நடுவே எவனும்) நதிகளை இகழ வேண்டாம்; உனக்கு
வணக்கம் .
எனது வியாக்கியானம்
இந்தத் துதியில் உள்ள 13 மந்திரங்களில் எனக்குப் பிடித்த மந்திரம் இதுதான். வருங்கால சந்ததியினர் ரிக் வேதத்தை முழங்குவார்கள் என்ற தீர்க்க தரிசனத்தை நதியின் வாய் வழியாக நமக்குப் புலவன் தெரிவிக்கிறான். தனது பேச்சு யுகம் தோறும் எதிரொலிக்கும் என்று புலவன் சொன்னால் அது அகந்தை ஆகிவிடும். ஆகையால் இதை நதிகள் சொல்லுவது போல சொல்கிறான். என்ன அற்புதம்!!! அந்த அழியாத மா கவிதையை இன்று நீங்களும் நானும் வியப்போடு படிக்கிறோம்.
அடுத்த விஷயம் – ‘நீரையும் சீராடு’– என்னும் தமிழ்ப் பழமொழி இதில் இருக்கிறது. நதிகளை இகழ வேண்டாம் என்று நதிகள் சொல்லுவது போல விசுவாமித்திரன் சொல்லும் செய்தி – நதி களைத் தாய் போலப் போற்றுங்கள்; அசுத்தம் செய்யாதீர்கள் என்பதாகும். அடுத்த மந்திரத்திலேயே நதிகளை சகோதரிகளே என்று அழைக்கிறான்.
அதை அடுத்த கட்டுரையில் காண்போம்
–தொடரும்tags – கிரிப்பித், முகத்திரை, அழியாத மா கவிதை -2, ரிக் வேதக் கவிதை, R TH Griffith
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 20-9-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை you tube யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்! – 3
ஒருமுறை பகவான் ரமணர் திருப்புகழ் ஸ்வாமி என்ற முருகபக்தரை கீழே போகுமாறு உத்தரவிட்டார். எதற்கு இப்படி ஒரு உத்தரவு என்று கலங்கிய அவர் மலையிலிருந்து கீழே வந்த போது அவரை சேஷாத்ரி ஸ்வாமிகள் சந்தித்து தன் அருளை அவர் மீது பொழிந்தார். “ திருப்புகழ் தான் உனது மந்திரம். அதை விடாதே” என்று கூறிய அவர் வள்ளிமலைக்குப் போகுமாறும் திருப்புகழ் சாமியிடம் கூறினார். அந்த முருக பக்தர் தான் வள்ளிமலை ஸ்வாமிகள் என்று உலகினரால் பின்னால் அறியப்பட்டவர். ஏராளமான பக்தர்களுக்கு அவர்களது எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னாலேயே தெரிவிப்பார் ஸ்வாமிகள். அந்த சம்பவங்கள் நடக்கும் போது அவர்கள் ஸ்வாமிகளின் ஞானதிருஷ்டியைப் பற்றிக் கூறி மகிழ்வர்.
ஸ்வாமிகளுக்கு சூக்ஷ்ம திருஷ்டியும் உண்டு. ஒரு நாள் திருவண்ணாமலையில் காலை ஆறு மணிக்கு வானத்தைப் பார்த்து ஸ்வாமிகள், “அதோ விட்டோபா ஸ்வாமிகள் போகிறார், ஆஹா, ஆஹா” என்றார். திருவண்ணாமலையிலிருந்து பத்து மைல் தொலைவில் இருந்த போளூரில் இருந்து வந்தார் விட்டோபா ஸ்வாமிகள். அன்று பின்னால் திருவண்ணாமலைக்கு வந்த தந்தி அவரது மறைவைத் தெரிவித்தது.
ஸ்வாமிகளுக்கு பல சித்திகள் உண்டு. அவற்றில் முக்கியமானது காய வியூஹம் என்பது. அதாவது ஒரே சமயத்தில் பல உடல்களுடன் பல இடங்களில் காட்சி தருவது. T.K. சுந்தரேச ஐயர், சாமா ராவ், வெங்கடராம ஐயர் உள்ளிட்ட பலர் ஒரு நாள் மாலை 4.45 என்று ஒரு நேரத்தைத் தீர்மானித்துக் கொண்டனர். அதே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்த அவர்கள் ஸ்வாமிகளைத் தரிசித்தனர்.
ஸ்வாமிகள் அம்பிகையின் உருவம் என பக்தர்கள் மதித்து அதை அப்படியே அனுபவத்திலும் கண்டனர். ஒரு முறை அம்பிகையின் தேர், தேரோட்ட தினத்தன்று நகரவே இல்லை. திடீரென்று அங்கு தோன்றிய ஸ்வாமிகள் தேர் சக்கரத்தை இரண்டு மூன்று இடங்களில் தொட்டு விட்டு கயிறைப் பிடித்தார். பக்தர்களும் கயிறைப் பிடித்து இழுக்கவே நகராத தேர் நகர்ந்தது. பக்தர்கள் தேவியே தன் தேரை ஓடச் செய்தாள் என்று கூறி மகிழ்ந்தனர்.
ஸ்வாமிகள் அவ்வப்பொழுது தகுதி வாய்ந்த பக்குவ நிலையில் உள்ள பக்தர்களுக்குத் தகுந்த உபதேசங்களைக் கூறி அருள்வது வழக்கம். ராம ராம மஹாபாஹோ என்று ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தில் வரும் இதைச் சொன்னால் ஒருவனுக்கு மோக்ஷம் கிட்டும் என்பது ஸ்வாமிகளின் அருள்வாக்கு. சுந்தர காண்டத்தைப் படித்தால் ஞானம் பெறலாம் என்பது அவர் அருள் வாக்கு. ராம நாமத்தை ஒருவன் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும், அருணாசல என்று சொல்லிக் கொண்டே இருந்தால் மோக்ஷம் கிட்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான உபதேச உரைகளை அவர் அருளியிருக்கிறார்.
இப்படி நாற்பது ஆண்டுகள் திருவண்ணாமலையிலேயே இருந்து ஆயிரக்கணக்கானோருக்கு அருள் பாலித்து வந்த ஸ்வாமிகள் தனது உடலை உகுக்க திருவுளம் கொண்டார். 1928ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஒரு நாள் ஸ்வாமிகள் சுப்பலக்ஷ்மியம்மாள் என்ற பக்தையிடம் தன் இறுதி வரப் போவதை சூசகமாகத் தெரிவித்தார். ஒரு நாள் ஜுரத்தால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 40 நாட்கள் எந்த வித ஆகாரமும் எடுக்காமல் இருந்தார். 4-1-1929 அன்று மார்கழி மாதம் 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று, ஸ்வாமிகள் பிறந்த போது கிரகங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலையில் இருந்த சமயம், ஸ்வாமிகள் விதேக கைவல்யம் அடைந்தார்; உடலை உகுத்தார். அவரது உடல் தக்க முறையில் சமாதியில் வைக்கப்படும் போது ரமண மஹரிஷி அந்த இடத்திற்கு வந்தார். அவர் சமாதி ரமணாசிரமம் இருக்கும் அதே செங்கம் சாலையில் ரமணாசிரமத்திற்கு மிக அருகில் உள்ளது.
பக்தர்கள் இன்றும் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்திற்கு வருகை புரிந்து அவர் அருளைப் பெற்று வருகின்றனர்.
ஸ்வாமிகளின் திவ்ய சரிதத்தை குழுமணி ஸ்ரீ நாராயண சாஸ்திரிகள் விரிவாக அழகுற எழுதியுள்ளார். இதன் ஆங்கில மொழியாக்கத்தை ஸ்ரீ S.A. சுப்ரமணியன் செய்துள்ளார். இது பாரதீய வித்யா பவன் வெளியீடாக வந்துள்ளது. இந்த சரிதத்தில் 314 பேர்கள் தங்கள் அனுபவங்களையும் ஸ்வாமிகள் பற்றிய தகவல்களையும் தந்துள்ளனர்.
திருவண்ணாமலை கண்ட மகான்களில் மிகவும் அபூர்வமான சித்தராக விளங்கிய ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் சரிதத்தை ஆங்கிலத்தில் படிக்க அந்த நூலை அன்பர்கள் இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
20 Jun 2014 — Ramana is known to all spiritual aspirants around the world. But Seshadri Swami is not known to many outside Tamil Nadu. His life was full of …