GNANAMAYAM 21 December 2025 BROADCAST PROGRAMME

Dr Jaiganesh

Dr Jaiganesh

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer – Mrs Jayathy Sundar Team

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

Alayam Arivom presented by Brahannayaki Sathyanarayanan from Bangalore

Topic- Vallam Temple

****

Talk by Prof S Suryanarayanan, Chennai

Topic-Muthuswamy Diksitar Kritis

***

SPECIAL EVENT-

Talk on Glory of Tamil

By Dr Jai Ganesh (Ilamaran)

Tamil Scholar, Author, Speaker on Radio and TV.

He has received several awards; authored five books

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 21 December 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —  திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — சொற்பொழிவு—

பிரஹந்நாயகி சத்தியநாராயணன்- பெங்களுர்

தலைப்பு –திரு வல்லம் தலம்

****

சொற்பொழிவு

பேராசிரியர் சூரியநாராயணன்

தொடர்  சொற்பொழிவு

தலைப்பு – முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

தலைப்பு – தலைநிமிரச் செய்த தமிழ்

சொற்பொழிவாளர்

முனைவர் பா ஜெய்கணேஷ்  (இளமாறன்)

முனைவர் பா. ஜெய்கணேஷ் (பா. இளமாறன்)  

இணைப்பேராசிரியர் , தமிழ்த்துறை, அறிவியல் மற்றும் கலையியல் புலம்

எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும்தொழில்நுட்பக்க கல்வி நிறுவனம்,

காட்டாங்குளத்தூர் , செங்கல்பட்டு மாவட்டம்

    மயிலம் தமிழ்க்கல்லூரியில் இளங்கலையும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பயின்றவர். பேராசிரியர் ய. மணிகண்டன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதிநல்கையோடு தமிழ் இலக்கண உரை வரலாறு: யாப்பியல் உரைகள் என்னும் தலைப்பில் ஆய்வினை நிகழ்த்தியுள்ளார்.

இலக்கணம், உரைகள், பதிப்புகள் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட இவர் 10 நூல்கள், முப்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். 

இவரின் நூல்கள்: தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு, இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம், தொல்காப்பியம்: அடைவு – ஆவணம் – வரலாறு, பதிப்பும் வாசிப்பும், தொல்காப்பியம் – பன்முகவாசிப்பு, முதலானவை ஆகும். 

இதழ்களின் ஆசிரியர் குழு: புதிய புத்தகம் பேசுது, மாற்றுவெளி, காட்சிப்பிழை ஆகியவற்றில் இருந்ததோடு தற்போது வல்லமை, சான்லாக்ஸ் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளார். 

விருதுகள்:

1.    நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் 2013 ஆம் ஆண்டில் சிறந்த ஆய்வாளர் விருது பெற்றமை.

எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் தமிழ்ப் பேராயம் சிறந்த இளம் ஆய்வாளர்க்கான விருதினை 1,50,000 பொற்கிழியுடன் 2014ஆம் ஆண்டு வழங்கியமை.

இளம் ஆய்வறிஞர் விருது, குடியரசுத் தலைவர் விருது (செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம் வழி) மே, 2015.

 தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர்

ழகரம் – தமிழ் விளையாட்டு நிகழ்ச்சி – பொதிகைத் தொலைக்காட்சி, சென்னை – 60 வாரங்கள்

தமிழோடு விளையாடு – தமிழ் விளையாட்டு நிகழ்ச்சி – பொதிகைத் தொலைக்காட்சி, சென்னை

வெளிநாட்டுப் பயணம்

 2016 ஆம்ஆண்டு அயலகத் தமிழாசிரியர் பட்டயப் படிப்பினை ஒருங்கிணைக்க சுவிட்சர்லாந்து பயணம்செய்தமை.

2019 ஆம் ஆண்டு உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேறக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்தமை.

—subham—

Tags-Gnanamayam Broadcast, 21-12- 2025, programme,

Hinduism through 500 Pictures in Tamil and English-34; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-34 (Post.15,298)

Written by London Swaminathan

Post No. 15,298

Date uploaded in London –  22 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ENGLISH VERSION POSTED YESTERDAY WITH MORE PICTURES.

லிங்கோத்பவர்

லிங்கம் என்றால் அடையாளம், குறி என்று பொருள்; இறைவன் உருவமற்றவன் என்பதைக் காண இந்த உருவத்தை ஆன்றோர்கள் பயன்படுத்தினர் ; அதற்குள் இருப்பது என்ன என்று அறியாதோர் கேட்டால் அப்போது அதற்குள் உருவமுள்ள மூர்த்தியாக சிவன் வெளிப்படுவார்

ஆக உள்ளானும் அவன்! இல்லானும் அவன்! – என்பதைக் காட்டுவதே லிங்கமும் லிங்கோத்பவரும்  ஆவர் . கோவில்களில் சிவன் சந்நிதி பிரகாரத்தில், ஒரு மாட த்தில் லிங்கோத்பவரைக் காணலாம் .

என்ன கதை?

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது ;நீ பெரியவனா, நான் பெரியவனா என்று மோதினர்; நடுவர் சிவபெருமானிடம் கேட்டு விடுவோம் என்று பட்டி மண்டப மேடையை கைலாயத்துக்கு நகர்த்தினார்கள் ; அவர் சொன்னார்;  இருவருக்கும் ஒரு டெஸ்ட்’ வைக்கிறேன். என்னுடைய முடியை ஒருவர் தேடுங்கள், கால் அடியை ஒருவர் தேடுங்கள். யார் முதலாக வந்து கண்டதை  ரிப்போர்ட் செய்கிறீர்களாளோ அவரே பெரியவர் என்றார். உடனே பிரம்மா அன்னவாஹனத்தில் பறந்தார் ; ஏற்கனவே வராஹ அவதாரம் எடுத்துப் பழக்கப்பட்ட விஷ்ணு வராஹமாக மாறி பூமியைத் தோண்டினார். அப்போது சிவன் இருந்ததோ ஜோதி வடிவத்தில்; ஆண்டுகள் பல உருண்டோடின. .எவரும் கோல்’ போட முடியவில்லை ஆட்டம் டிராவில் முடியுமோ என்று பக்தர்கள் அ ஞ்சினர் . அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஒரு தாழம் பூ கீழே விழுந்து கொண்டிருந்தது; ஏ பூவே எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார் பிரம்மா. நான் சிவன் முடியிலிருந்து நீண்ட காலத்துக்கு முன் விழத் துவங்கினேன் என்றது பூ;  எனக்கு ஒரு சின்ன உதவி செய்; சிவனிடம் அழைத்துச் செல்கிறேன்; நான் சிவன் முடியைத் தரிசித்ததாகச் சொல் என்று மன்றாடினார் ;தாழம்பூவும், இரக்கப்பட்டு  அப்படியே செய்தது.  இருவரும் திருட்டு முழி முழித்தவுடன் சிவனுக்கு உண்மை தெரிந்துவிட்டது. பிரம்மாவுக்கு தண்டனை கொடுத்தார் அவருக்கிருந்த ஐந்து தலைகளில் பொய் சொன்ன வாயுடைய தலையைக் கிள்ளி எறிந்தார் இனி உனக்கு பூலோகத்தில் பூஜை, அர்ச்சனை இல்லை போ என்றார்; தாழம் பூவையும் சபித்தார் எந்த பூஜையிலும் உனக்கு இடமில்லை போ என்றார்

(உண்மையில் இந்தக் கதையின் உட்கருத்து: நீயா நானா என்ற வாதத்துக்கு முடிவே இல்லை அது விதண்டாவாதம் என்பதும் பொய்ச் சாட்சி சொன்னால் தண்டனை உண்டு என்பதும் கதையின் கருத்து ; அதை விளக்குவதற்கு ஆன்றோர்கள் எட்டுக்கட்டிய கதை இது என்பதே என் அபிப்ராயம்).

அத்தோடு லிங்கம் என்பது ஆதி அந்தமற்ற உருவமில்லாத கடவுள் என்பதை விளக்கவும் அதையே பாமர மக்கள் உருவத்துடனும் வணங்கலாம் என்பதை விளக்கவும் எழுந்த கதை இது;

லிங்கோத்பவர் சில இடங்களில் மனித முகம் உடைய அன்னத்தையும் பன்றியையும் காட்டுகிறது. பெரும்பாலான இடங்களில் சிவ பெருமானின் பாதி உருவம் மட்டும் லிங்கத்துக்குள் காட்டப்பட்டு இருக்கிறது.

***

ஏகபாத மூர்த்தி

ஒற்றைக்காலில் சிவபெருமான் நிற்கும் வடிவம் இது ; ஏக பாதம் என்றால் ஒரே கால்

ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகள் ஒடுங்கி ஒரே உருவத்தோடு காட்சியளிப்பதை இம்மூர்த்தி விளக்குகிறது. ஏகபாதமூர்த்தி நான்கு கரங்களுடன், முக்கண் உடையவராய் ஒரு காலில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவர் இடுப்பின் வலப்பக்கம் பிரம்மாவும்,இடப்பக்கம் விஷ்ணுவும் தோன்றுகின்றனர்.  இவரது பின் வலக்கரம் சூலத்தையும் பின் இடக்கரம் மழுவையும் ஏந்தியுள்ளன. இவரது முன் வலக்கரம் அபயகரமாகவும் முன் இடக்கரம் வரதகரமாகவும் அமைந்திருக்கும். மணிகளாலான மாலையை அணிந்து, புலித்தோல் உடுத்து, கங்கையும் பிறையும் ஜடாமகுடமும் தரித்து இருப்பார் .

உலகம் அழியும் காலத்தில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும்,  சக்தியும் இந்த ஏகபாத மூர்த்தியிடம் ஐக்கியமாகிவிடுவார்கள். சிற்பசாஸ்திரத்தில் ஏகபாத மூர்த்தி பதினாறு கரங்களுடையவராகக் காட்டப்படுகிறார். அவரது இடக்கரங்களில் முறையே கட்வாங்கம், பாணம், சக்கரம், டமருகம், முத்கரம், வரதம், அட்சமாலை, சூலம் ஆகியனவும், வலக்கரங்களில் முறையே தனுசு, கண்ட்டம் (மணி), கபாலம், கெளமுதி (பிறை), தர்ஜனி (கண்ணாடி), கதை, பரசு, சத்தியாயுதம் ஆகியனவும் அமைந்துள்ளன ஒவ்வொரு சிவன் கோவிலிலும் பிரகார மாடத்தில் உள்ள இம்மூர்த்தி சில மாறுதல்களுடன் காணப்படுகிறார்.

***

ஊர்த்வ தாண்டவர்

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் நடனப் போட்டி நடக்கும் போது சுவாமி தமது காது குண்டலம் கீழே விழ அதை தனது வலது கால் விரல்களால் எடுத்து காதில் மாட்டுமாறு காலை மேலே தூக்கி நடனம் ஆடிநார். அதுவரை சிவனுக்குச் சரிசமம் ஆகிய தேவி, அம்பாள் காலைத்  தூக்கி ஆட முடியாமல் வெட்க்கித் தலை குனிந்தார்  சுவாமி ஆடலில் வெற்றி பெற்றார்.

***

காலாந்தக அல்லது கால சம்ஹார மூர்த்தி

யமனின் வேறு  பெயர்கள்- காலன், அந்தகன்

காலன் என்னும் யமனைக் காலால் உதைத்துத் தள்ளிய சிவனின் வடிவம் காலாந்தக அல்லது கால சம்ஹார மூர்த்தியாகும் . திருக்கடையூரில் இந்த வடிவத்தைக் காணலாம்.

மிருகண்டு மகரிஷிக்கு மார்க்கண்டேயன் எனும் மகனிருந்தான். அவனுக்கு 16  வயதுதான் முழு ஆயுள் என்று பிறப்பதற்கு முன்னரே ரிஷிக்குத் தெரியும்; அதன்படி, 16 வயது முடியும்போது,  எமதர்மன் அவன் உயிரை எடுக்க முற்பட்டார். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக்  காட்டி அனைத்துக் கொண்டிருந்த போது , எமதர்மன் பாசக்கயிற்றை வீசினார். பாசக் கயிறு சிவலிங்கத்தின் மீதும் வீழுந்தது. தன் மீதே பாசக் கயிற்றை வீசிய எமனைத் தன் காலால் உதைத்தார். அவன் கீழே விழுந்தான்.

–SUBHAM—

TAGS-Hinduism through 500 Pictures in Tamil and English-34; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-34,லிங்கோத்பவர், கால சம்ஹார மூர்த்தி, ஏகபாத மூர்த்தி

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 21  12 2025 (Post.15,297)

Written by London Swaminathan

Post No. 15,297

Date uploaded in London –  22 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்துவைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 21- ம் தேதி , 2025-ம் ஆண்டு.

***

முதலில் திருப்பரங்குன்றம் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் இன்று 5 வது நாளாக நடந்தது.

மனுதாரர்கள் ராம ரவிக்குமார், பரமசிவம், அரசு பாண்டி, கார்த்திகேயன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார், சுப்பையா ஆஜராகினர்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

****

திருப்பரங்குன்ற வழக்கு நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாத செயல்: அவமதிப்பு வழக்கில் தலைமை செயலருக்கு நீதிபதி கண்டிப்பு

”சட்டம் – ஒழுங்கு நிலைமையை காரணமாக கூறி, நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது ஏற்புடையதல்ல. அது முற்றிலும் மன்னிக்க முடியாத செயலாகும். அது, சட்டம் – ஒழுங்கு சீர்குலைய வழிவகுக்கும். அரசியலமைப்பு இயந்திரத்தை முடக்க இட்டுச் செல்லும்,” என, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறினார்.

மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்.’இந்த ஆண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை’ என, உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ‘கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என, ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்

இந்த அவமதிப்பு வழக்கை கடந்த 9 ம் தேதி மீண்டும் விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் ‘தலைமை செயலர், சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆகியோர் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தார்.

இதன்படி தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் முறையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் ஆஜராகினர். மதுரை போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் நேரில் ஆஜரானார்.

***

ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்

மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று  ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டில்  நடந்தது.

மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது, வக்பு வாரியம் தரப்பில் வாதிடுகையில் கூறப்பட்டதாவது:-

திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்றுவது தொடர்ச்சியான பழக்கவழக்கமாக இருந்தது இல்லை.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண்தான் என்றும் அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்றும் இதற்கு முன் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சமீப காலமாகத்தான் தீபத்தூண் என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகிறது. மலை உச்சியில் தர்கா இருப்பதால்தான் அது சிக்கந்தர் மலை என அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் தர்கா, காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. குதிரைச்சுனை அருகே பாதைகள் பிரிகின்றன. மலை உச்சியில் உள்ள தர்கா, அதை சுற்றியுள்ள அடக்கஸ்தலங்கள் நெல்லித்தோப்பு தர்காவுக்கு சொந்தமானது.

மலை உச்சியில் தர்கா அமைந்துள்ள ஒரே பாறையில் தர்கா குதிரைச்சுனையையொட்டி தூண் உள்ளது. நெல்லித்தோப்பு, பாதைகள், படிக்கட்டுகள் தர்கா நிலங்கள் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 1920ஆம் ஆண்டு உரிமையியல் கோர்ட்டு வழங்கிய உரிமையை தர்காவிற்கு உறுதி செய்ய வேண்டும். இந்த பிரச்னை முழுவதும் உரிமையியல் கோர்ட்டு மூலம் தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

******

இன்று  சர்வதேச தியான தினம்: 100 நாடுகளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி

சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு, இன்று டிசம்பர்  21ம் தேதி, 100 நாடுகளில் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.நம் நாட்டின் கோரிக்கையை ஏற்று, 2014ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா., சபை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, டிச., 21ம் தேதி, சர்வதேச தியான தினமாக அனுசரிக்கக் கோரி, இந்தியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஐ.நா., பொது சபையில் தீர்மானத்தை தாக்கல் செய்தன.

இதை ஏகமனதாக ஏற்ற ஐ.நா., சபை டிசம்பர் 21 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக தியான நாளாக அனுசரிக்கப்படும் என்று, கடந்த ஆண்டு அறிவித்தது. இதையொட்டி, 100 நாடுகளில் மொத்தம் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

உலகின் வெவ்வேறு பிரதேச நேரங்களின்படி, இந்த நிகழ்ச்சி, 33 மணி நேரமாக நடைபெறும். நியூசிலாந்து நேரப்படி காலை 8:00 மணிக்கு துவங்கி, அமெரிக்காவின் ஹவாய் தீவில் மாலை 5:00 மணிக்கு நிறைவடையும். ஒவ்வொரு நாட்டிலும், தலா, 20 நிமிடங்களுக்கு தியான நிகழ்ச்சி நடக்கும்.

***

திருப்பதி கோயிலுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான பிளேடுகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வெர்டிஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் ஸ்ரீதர் போடுபள்ளி ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சில்வர் மேக்ஸ் அரை பிளேடுகளை திருமலை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

இந்தப் பிளேடுகள் ஏழுமலையானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு மொட்டையடிக்க ஒரு ஆண்டிற்கு போதுமானதாகும். பிளேடுகள் திருமலையில் உள்ள அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் வழங்கப்பட்டது.அப்போது பேசிய தொழிலதிபர் ஸ்ரீதர் போடுபள்ளி, நுகர்வோரின் தேவைகளை மனதில் கொண்டு அரை பிளேடுகளை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நிறுவனம் தங்கள் நிறுவனம் என்று கூறினார்.

கல்யாணகட்டாவில் பக்தர்களின் தலைமுடியை சேகரிக்க இந்த அரை பிளேடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

****

சபரிமலை தங்கம் மாயமான விவகாரத்தில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு? 


கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில், சர்வதேச தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள எம்.எல்.ஏ.,வுமான ரமேஷ் சென்னிதலா, இதுகுறித்து விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிகாரிகள் அவரிடமும் சாட்சியத்தைப் பதிவு செய்துள்ளனர்.



கடிதத் தில் கூறப்பட்டுள்ளதாவது:

சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம் மாயமானது, வெறும் திருட்டு சம்பவம் அல்ல.முக்கிய ஹிந்து கோவில்களில் இருந்து விலைமதிப்பற்ற பழங்காலப் பொருட்கள், சிலைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து கடத்துவதற்கான பெரிய சதித்திட்டத்தை இது உள்ளடக்கியுள்ளது.இந்த விவகாரத்தில், இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் முக்கிய குற்றவாளிகள் அல்ல. திரைக்கு பின்னால் மிகப்பெரிய சதி கும்பல் உள்ளது.

இதில், சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளது. அந்த கும்பலின் நடமாட்டம் அறிந்த நபர் ஒருவர், இது தொடர்பான தகவல்களை என்னிடம் கூறினார். அவர் கூறியது அனைத்தும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள்-; நம்பகமானவையும் கூட.


இந்த விவகாரத்தில், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு தொடர்பிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தங்கம் மாயமான விவகாரத்தில், 500 கோடி ரூபாய் கைமாறி உள்ளது. கேரள தொழிலதிபர்கள் உட்பட பலருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதும் உறுதியாகியுள்ளது.


தங்கக்கவசம் கொள்ளையடிக்கப்பட்டதில், சர்வதேச தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பது குறித்த விபரங்களை அளிக்க தயாராக உள்ளேன். தேவைப்பட்டால், நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவும் தயாராக இருக்கிறேன். எனவே, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, திரைமறைவில் உள்ள சர்வதேச குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கடிதத் தில் கூறியுள்ளார்

****

சென்னை விமான நிலையம் அருகே ஹஜ் விடுதி அமைப்பதற்கு இந்து முன்னணி கண்டனம்

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பிற்பட்ட சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட அரசின் இடத்தை இஸ்லாமியர்களுக்கு வாரித்தருவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்; .இஸ்லாமிய குழுக்களால் நிர்வாகிக்கப்படும் ஹஜ் விடுதிகளில் தேச விரோத சதிகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கியமான இடத்தில் ஹஜ் விடுதி அமைப்பது, ஒட்டுமொத்த பாதுகாப்பையும் சீர்குலைத்து விடும் அபாயம் உள்ளதை உளவுத்துறை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹஜ் விடுதியால் தேசத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

***

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்

வேலூர் ஸ்ரீபுரத்​திற்குக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகைத் தந்தார்.  திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீபுரத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் காந்தி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், தங்​கக்​கோயி​லில் உள்ள ஸ்ரீநாராயணி அம்​மனை, குடியரசு தலைவர் தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, ஆயிரத்து 800 கிலோ எடைக் கொண்ட வெள்ளி விநாயகர், சொர்​ணலட்​சுமி, பெரு​மாள் ஆகிய கோயில்களில் குடியரசு தலைவர் வழிபாடு நடத்தினார்.

இதனை அடுத்து, மகாலட்சுமி மற்றும் வைபவ லட்சுமிக்குப் பூஜை செய்த திரௌபதி முர்மு, சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார்.

****

பெரிய சிவ லிங்கம் பீகாருக்கு புறப்பாடு

120 அடி உயரம்.. 200 டன் எடை.. ஒரே கிரானைட்கல்லில் உருவான சிவலிங்கம்..இரண்டாயிரம் கிலோமீட்டர் பயணத்தைக் துவக்கியுள்ளது

ஒரே கிரானைட் பாறையில் செதுக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட மிக உயரமான சிவலிங்கம் தற்போது தமிழ்நாட்டிலிருந்து பீகாருக்கு சென்று கொண்டிருக்கிறது. 33 அடி உயரமும் 210 டன் எடையும் கொண்ட இந்த சிவலிங்கம், மகாபலிபுரத்தில் திறமையான கைவினைஞர்களின் பல வருட உழைப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்டது.

இந்த பிரமாண்டமான சிவலிங்கத்தை பல மாநிலங்களை கடந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்ல 96 சக்கரங்கள் கொண்ட சிறப்பு ஹைட்ராலிக் டிரெய்லர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய சிவலிங்கம், பீஹார் மாநிலத்தின் கிழக்கு சாம்பரானில் விரைவில் திறக்கப்பட உள்ள விராட் ராமாயண் (Virat Ramayan Temple) கோவிலில் நிறுவப்படும், இந்த புதிய கோயில் திறக்கப்பட்டவுடன் இந்த சிவலிங்கம் அதன் முக்கிய வழிபாடாக இருக்கும். திட்டமிடப்பட்டுள்ள பாதை, போக்குவரத்து மற்றும் வானிலையைப் பொறுத்து சிவலிங்கத்தை எடுத்து செல்லும் பயணம் சுமார் 20 முதல் 25 நாட்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு  டிசம்பர் 28 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும், இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் . வணக்கம்.

—SUBHAM—-

Tags- Gnanamayam, Broadcast, News, 21 12  2025, Vaishnavi

மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள்! – 2 (Post No.15,296)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,296

Date uploaded in London –   22 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி… 

மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள்! – 2 

ச. நாகராஜன்

இங்கிலாந்தின் தேசீயக் கொடி செயிண்ட் ஜார்ஜின் சிலுவையை அடிப்படையாகக் கொண்டதாகும். கிறிஸ்தவத்திற்காக உயிரைத் துறந்த ஒரு ராணுவ செயிண்ட் இவர். சிலுவைப் போர்களுக்கு  ஊக்கமூட்டும் நபராகத் திகழ்ந்தவர் இவர். சின்ன ஒரு கற்பனை செய்து பார்ப்போம் – இந்தியாவின் தேசீயக் கொடியில் ஓம் என்ற எழுத்தைச் சேர்த்தால் என்ன ஆகும்? ஐநாவிலிருந்து உலகில் உள்ள அனைத்து “முற்போக்கு நாடுகளூம்” களத்தில் இறங்கி நம்மைத் திட்டும்.

பாரம்பரியமான பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்து மூன்றாம் உலக நாடுகளில் காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்தியவர்களை இன்றும் வணங்கும் இங்கிலாந்து இன்றும் கூட ராஜாக்களின் அரசியல் அமைப்பைத் தான் கொண்டிருக்கிறது! ராணி தான் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்.  அவரே சர்ச்சுக்கும் தலைவி! அதாவது சர்ச் தான் அந்த நாட்டின் முக்கிய முதுகெலும்பு!

இந்தியாவில் ஒரு அரச வம்சமும் இப்போது அரசினால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் இங்கிலாந்தில் 12 அரச பரம்பரைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தாம் உலகின் முக்கால் பாகத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. ஆனால் பிபிசி ஒலிபரப்பின் படி இந்தியா ஒரு எதேச்சாதிகார நாடு; இங்கிலாந்தோ ஜனநாயக நாடு!

தேசீய கீதங்களை எடுத்துக் கொள்வோம். இங்கிலாந்தின் தேசீய கீதத்தில் ராணி 11 தடவை குறிப்பிடப்படுகிறார். அவர்கள் படையெடுத்து அடிமையாக்க முயலும் நாடுகளை வெற்றி கொள்ள இறைவனின் அருள் கோரப்படுகிறது. அமெரிக்க தேசீய கீதம் அடிமைத்தனத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதை இன்னும் நீக்கியபாடில்லை. அதை இயற்றியவர் அடிமைகளை வைத்திருந்த ஒரு எஜமானர் தான்.  ஆனால் இந்திய தேசீய கீதமோ ஒரு மதத்தையும் ஒரு கடவுளையும் குறிப்பிடவில்லை; எவருக்கும் எதிரான கருத்து அதில் இல்லை.

அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு அடுத்தபடியாக ஜெர்மனி 2006ம் ஆண்டு கிறிஸ்தவத்தைக் கொண்ட ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியது. இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் சர்ச்சுகளுடன் ஒரு விசேஷ தொடர்பைக் கொண்டவையாகும். பிரான்ஸின் அரசியல் சட்டத்திலோ சர்ச்சையும் அரசையும் வேறுபடுத்தும் பகுதிகள் பல இடங்களில் இல்லை.

வட ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் அரசாங்கமே சர்ச்சுகளை நடத்துகின்றன; நிர்வகிக்கின்றன!

அராபிய நாடுகள் வெளிப்படையாகவே இஸ்லாமிய நாடுகள் தாம்!

ஐரோப்பாவோ கிறிஸ்தவத்தை மதசார்பின்மை என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு கடைப்பிடிக்கிறது. உலகளாவிய விதத்தில் ஒரு நல்ல பெயரை இது கொடுக்கும் அல்லவா! காகசீய கிறிஸ்தவ உணர்வைக் கொண்டுள்ள இதன் ஆழ்ந்த உணர்வை உக்ரேனியத்துடனான நட்பில் பார்க்க முடியும்.

 காலனிகளை அடிமைப்படுத்தும் இந்த கிறிஸ்தவ நாடுகள்

மூன்றாம் உலகநாடுகளை தங்கள் மதம், அடையாளம், பண்பாடு ஆகியவற்றை உதறக் கோருவது ஒரு இரட்டை வேடம் அல்லவா? உலகில் சமத்துவத்தைக் கோரும் இதன் வெளிவேஷம் வெளிப்படையாகத் தெரிகிறது.

இதை சுயமதிப்புள்ள எந்த நாடும் பொறுத்துக் கொண்டு அவற்றுடன் சேர முடியாதல்லவா!

–    முற்றும்

**

ஆதாரம், நன்றி கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழ்

TRUTH -VOLUME 90 – ISSUE NUMBER 13

(8-7-2022)

ஆலயம் அறிவோம்! திருவல்லம்! (Post No.15,295)


WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 15,295

Date uploaded in London – –  22 December 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லண்டனிலிருந்து 21-12-2025 அன்று ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!

ஆலயம் அறிவோம்

வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

தாயவன், உலகுக்குத் தன் ஒப்பு இலாத

தூயவன், தூ மதி சூடி எல்லாம்

ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும்

சேயவன், உறைவிடம் திருவல்லமே

                                                                                      – திருஞானசம்பந்தர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான திருவல்லம் திருத்தலமாகும். தமிழ்நாட்டில் வேலூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்திலும் இராணிப்பேட்டையிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலும் இத்தலம் உள்ளது.

இறைவன் : வல்ல நாதர், வில்வநாதேஸ்வரர்

இறைவி : வல்லாம்பிகை, ஜடகலாபாம்பாள் அல்லது தீக்காலி அம்பாள்

தல விருட்சம் : வில்வ மரம்

தீர்த்தம்: கௌரி தீர்த்தம், நீவா நதி

இத்தலத்திற்கு வில்வவனம், வில்வாரண்யம், தீக்காலி வல்லம் ஆகிய பெயர்களும் உண்டு.

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் பல உண்டு.

திருமாலாலும் பிரமனாலும் இங்கு சிவன் வலம் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டதால் இந்த ஊர் திருவலம் என்ற பெயரைப் பெற்றது/

விநாயகர் இங்கு சிவனை வலம் வந்து வழிபட்டதால் திருவலம் என்ற பெயரை இந்தத் தலம் பெற்றது என்றும் கூறுவர்..

ஒரு காலத்தில் வில்வமரங்கள் அடர்ந்த காடாக இது திகழ்ந்ததால் இதற்கு வில்வவனம் என்ற பெயர் உண்டு.

வில்வநாதேஸ்வரர் கோயில் கஞ்சனகிரி மலையை நோக்கியவாறு உள்ளது.

கஞ்சனகிரி மலையிலிருந்து திருவல்லத்திற்கு அபிஷேக தீர்த்தத்தைக் கொண்டு வரும் அர்ச்சகரை கஞ்சன் என்பவன் தொல்லை கொடுத்து வந்தான். இதனால் வெகுண்ட சிவபிரானின் வாகனமான நந்தி தேவர் கஞ்சனை எட்டு பாகங்களாகக் கிழித்தார். சிவபிரானிடம் இறவாமல் இருக்கும் வரம் பெற்றிருந்த கஞ்சன் அவ்விடம் விட்டு ஓடிவிட்டான். அவன் மீண்டும் வருகிறானா என்பதைக் கண்காணிக்க நந்தி தேவர் கோயிலின் வாயிலை நோக்கியவாறு இருக்கிறார்.

கஞ்சனின் எட்டு உடல் பாகங்கள் விழுந்த லாலாப்பேட்டை, சீகராஜபுரம், மாவேரி, வடகால், தென்கால், மணியம்பட்டு, குகைய நல்லூர், நரசிங்கபுரம், மருதம் பாக்கம் ஆகிய எட்டு ஊர்களில் சிவன் கோவில்கள் உள்ளன. கஞ்சனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபிரான் தைப்பொங்கல் கழிந்த மூன்றாம் நாள் இந்த எட்டுக் கோவில்களுக்கு எழுந்தருளி கஞ்சனுக்கு மோக்ஷம் அளிக்கும் நிகழ்ச்சி வருடம்தோறும் நடைபெறுகிறது.

கஞ்சனகிரி மலையில் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஜோதி ஒன்று பிரகாசமாகத் தோன்றுவதைக் கவனித்த பக்தர்கள் இப்போது கூட்டமாக அங்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

இங்குள்ள நதியை “நீ வா” என்று இறைவன் அழைத்ததால் அது நீ வா என்ற பெயரைப் பெற்றது; காலப்போக்கில் நிவா நதி என்று அழைக்கப்படலாயிற்று.

இத்தலத்தில் தான் விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றார்.

இங்குள்ள விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். இதை உணர்த்தும் விதத்தில் துதிக்கையில் மாங்கனியை வைத்துக் கொண்டு வடக்கு நோக்கி அவர் காட்சி அளிக்கிறார். தனது வாகனமான மூஞ்சூறு மீது அமர்ந்திருக்கிறார்.

கோவிலில் மூலவர் சந்நிதியில் வில்வநாதேஸ்வரர் கிழக்கு நோக்கி சதுரபீட ஆவுடையார் மீது ஸ்வயம்பு லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார். கர்பக்ருஹம் அகழியின் அமைப்பை உடையது.

மூல ஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களின் திருவுருவங்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள கோவில் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் உள்ளது. ஒரு முகப்பு வாயில் மற்றும் முன்மண்டபத்தைக் கொண்டுள்ளது.

உள்பிரகாரத்தில் உற்சவர் மண்டபமும் அருகில் காசி விஸ்வநாதர் சந்நிதியும் சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. அடுத்து அருணாசலேஸ்வரர் சந்நிதி அமைந்திள்ளது. இதையடுத்து பல சிவலிங்கங்கள் உள்ளன.

சுவாமி சந்நிதியின் வலது பக்கம் தொட்டி போன்ற அமைப்பில் ஜலகண்டேஸ்வரர் என்னும் பாதாளேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.

மழை வேண்டி இவருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.

ஆறுமுகர் சந்நிதியில் வள்ளி தெய்வானையும் மூலையில் அருணகிரிநாதர் சிலையும் உள்ளன.

வெளி பிரகாரத்தில் கிழக்கில் கொடிமரம் மற்றும் பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.

தக்ஷிணாமூர்த்தியின் சீடரான சனக முனிவரின் சமாதி வில்வநாதேஸ்வரருக்கு நேர் எதிரில் நந்திக்கு நடுவில் அமைந்துள்ளது. இங்கு வழிபாடு நடத்துவோருக்கு பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

சிவானந்த மௌன குரு ஸ்வாமிகள் என்னும் சித்தர் பலரின் நோய்களைத் தீர்த்து வந்த மகான் ஆவார். அவர் இங்குள்ள பலா மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து வந்தார். இவருக்கு இக்கோயிலின் அருகே தனி மடம் உள்ளது. 1988 ஜனவரி முதல் தேதியன்று இவர் சமாதி அடைந்தார். இவரது சமாதி இங்கு உள்ளது.

 இத்தலத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடி அருளியுள்ளார். அருணகிரிநாதர் இத்தலத்தின் சிறப்பை “நசையொடு தோலும்” என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில், “மாயன், திசைமுகனாரும், திசை புவி, வானும் திரிதர வாழும் சிவன் மூதூர்” என்று குறிப்பிட்டு அருளியுள்ளார். மாயனாகிய திருமாலும், நான்முகனும் பல திசைகளில் உள்ளவர்களும், உலகில் உள்ளவர்களும், வானுகலத்தில் உள்ளவர்களும், வலம் வந்து சூழ வாழ்கின்ற சிவபிரானின் பழைய ஊர் என்பது இதன் பொருளாகும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வில்வநாதேஸ்வரரும் வல்லாம்பிகை அம்மையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

நன்றி! வணக்கம்!!

Hinduism through 500 Pictures in Tamil and English-33; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-33 (Post No.15,294)

Written by London Swaminathan

Post No. 15,294

Date uploaded in London –  21 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சிவபெருமானுடைய வடிவங்களில் வேறு சில மூர்த்திகளையும் காண்போம் :லிங்கோத்பவர் ஏகபாத மூர்த்தி , ஊர்த்வ தாண்டவர், கால சம்ஹார மூர்த்தி

***

LINGODBHAVA

Lingodbhava is a familiar figure of Siva on the west wall of the central shrine of Siva temples in tamil Nadu. As his name implies, he is represented within a huge linga, the portion of the feet below the ankles being hidden in the linga. Brahma in the form of a swan is seen soaring up on the left side of Siva; while on the right side, Vishnu is delving below into the depths of the earth in the form of a boar.

The swan and the boar are in some pictures found to be half man and half animal.

On the east main gopura/ tower of the Chidambaram temple is an image of Lingodbhava surrounded by flames of fire.

Also these gods, i.e. Brahma and Vishnu stand on either side of Siva with folded hands.

The figure emanating from the middle of the linga has four hands and hold in its back arms the axe and the antelope and in the front hands, the Abhaya and Varada postures.

In Thanjavur inscriptions Lingodbhava is mentioned by the name Lingapuranadeva.

Story of Lingodbhava

A dispute arose between Brahma and Vishnu as to who is the greater of the two. Siva told them that whoever first saw the top or the bottom of his own fiery linga form and came back to report, he would be considered greater. Brahma soared on his swan to see the top of the Siva linga, while as a boar Vishnu dug down and down to see its bottom. Ages passed away and neither came to his goal.

At last Brahma saw one ketaki flower coming down; it had fallen from Siva’s head ages ago. Brahma suborned it to give false evidence and then came back  and uttered a lie that he had seen the top of the linga, citing the ketaki flower as its witness.  Sive knew the lie and cursed Brahma that he should thenceforward go without any worship in temples. Brahma had five heads at that time. Sive cut off the head that uttered a lie. The flower ketaki too, which abetted the crime, was excluded from the flowers dear to Siva.

***

EKAPADAMURTI

Images called Ekapadamurti or Ekapada Trimurti show gods Brahma and Vishnu , with folded hands and characteristic symbols,  are represented as proceeding out of the body of Siva at his waist as in the Tiruvotriyur sculpture or from behind his knee  as in the image of Tiruvanaikkaval;  they are either developments of Lingodbhava wherein the superiority of Siva over the two other members of the Hindu triad was established or an invention of the Hindu sculptor.

The Karanagama (kaarana aagama) mentions Ekapadamurti as one of the sportive forms of Siva and describes him as having one foot, three eyes and four arms in which are seen the tanka and deer and the Varada and Abhaya  postures..

On the right and left sides of Siva, almost touching his shoulders, are Brahma and Vishnu holding their symbolical weapons in two hands and worshipping Siva with the other two.

The single foot, which is the characteristic feature of these figures , is in the case of Tiruvanaikkaval image , placed on the back of the bull. in it are also seen the vehicle of bBahma, the swan, at the right bottom and at the corresponding left bottom , the standing Garuda vehicle of Vishnu and a sage, perhaps Narada.

Apparently Ekapadamurti has to be connected with Aja Ekapad, a name given in the Rig Veda to one of the Ekadasa Rudras

Tamil version follows

To be continued……………………..

Tags- Hinduism through 500 Pictures in Tamil and English-33; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-33, Lingodbhava, Ekapadamurti

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் திருவள்ளுவன்! (Post No.15,293)

Great Hindu Saint born in Tamil Nadu

Written by London Swaminathan

Post No. 15,293

Date uploaded in London –  21 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 வள்ளுவர் கண்டுபிடித்த சொல் ஆழ்வார், நாயன்மார்  பாடல்களில் !

பிறவிப்பிணி , பிறவிப் பெருங்கடல் என்ற சொற்கள் எல்லாம் ஸம்ஸ்க்ருத்திலிருந்து தமிழுக்கு வந்தவை; பவ சாகரம்,பவ ரோகம் என்பனவெல்லாம் கீதை, மஹாபாரதம் ஆதிசங்கரர் துதிகள், சங்கீத மும்மூர்த்தி கிருதிகள், கீர்த்தனைகளில் காணக்கிடக்கின்றன . ஆனால் பக்கா இந்துவான , சம்ஸ்க்ருத மன்னனான திருவள்ளுவன் கண்டுபிடித்த ஒரு சொல்லை நான் இதுவரை சம்ஸ்க்ருதத்தில் காணவில்லை ;உங்களில் எவரேனும் கண்டால் எனக்கு எழுத அன்புடன் வேண்டுகிறேன் . அது என்ன சொல்?

பிறப்பு  அறுத்தல்

அதாவது பிறப்பு- இறப்பு -பிறப்பு- இறப்பு -பிறப்பு- இறப்பு – என்று நாம் மீண்டும் மீண்டும் பிறந்து உழல்கிறோம்; இதை ஒரே வெட்டு வெட்டாக — அல்லது துண்டு துண்டாக- அறுக்க வேண்டும் என்கிறார் . இப்படி அறுத்தல்துண்டித்தல், வெட்டுதல் என்ற பொருளில் பிறவிப்பிணியை வள்ளுவர் ஒருவர்தான் அணுகியிருக்கிறார் .பிற்காலத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இதை மீண்டும் மீண்டும் பாடுகின்றனர். குறிப்பாக மாணிக்க வாசக ரின் திருவாசக சிவ புராணப் பாடலில்  மாயப்பிறப்பு அறுப்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்.

***

முதலில் வள்ளுவர் சொன்னதைக் காண்போம்.

துறவு அதிகாரம் திருக்குறள்

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை.-345

பொருள்

பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ

English Couplet 345:

To those who sev’rance seek from being’s varied strife,

Flesh is burthen sore; what then other bonds of life?.

Couplet Explanation:

What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).

***

பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் மற்று

நிலையாமை காணப்படும்.-349

பொருள்

இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமை காணப்படும்.

English Couplet 349:

When that which clings falls off, severed is being’s tie;
All else will then be seen as instability.


Couplet Explanation:

At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.

Tamil Hindu Tiru Valluvar in Mauritius.

***

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி நூலில் இந்தச்  சொல் காணப்படுகிறது . ஆயினும் வள்ளுவர், அதற்கும் முன்னால் திருக்குறளை எழுதினார் என்று நம்புகிறோம்.

***

1. சிவபுராணம்- மாணிக்கவாசகர்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

……………………………

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

என்று ஒரே பாட்டில் 4 முறை சொல்லிவிட்டார் மாணிக்கவாசகர்

***

திருஞான சம்பந்தர் பாடிய முதல் திருமுறையில் திருவாரூர் பதிகத்தில்

 1.91 திருஆரூர் – திருவிருக்குக்குறள்    

    சித்தந் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்    

    பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.    1.91.1

    பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை    

    மறவா தேத்துமின், துறவி யாகுமே.    1.91.2

    துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்    

    நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.    1.91.3

    உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்    

    கையி னால்தொழ, நையும் வினைதானே.    1.91.4

    பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்    

    கண்டு மலர் தூவ, விண்டு வினைபோமே.    1.91.5

    பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்    

    வாச மலர்தூவ, நேச மாகுமே.    1.91.6

இதில் வியத்தகு ஒற்றுமை, இதையும் குறள் வடிவிலேயே சம்பந்தர் பாடியிருப்பதாகும் ; அவர் திருக்குறளை நன்கு அறிந்திருக்க வேண்டும்..

துறவறம் என்ற பகுதியில் வள்ளுவர் பிறப்பு  அறுத்தல்

பற்றிப் பாடினார் சம்பந்தரும்  துறவி என்றும் சொல்கிறார் .

****

திருமழிசை ஆழ்வார் பாசுரம்

காணிலும்மு ருப்பொலார்செ
      விக்கினாத கீர்த்தியார்,
பேணிலும்வ ரந்தரமி
      டுக்கிலாத தேவரை,
ஆணமென்ற டைந்துவாழும்
      ஆதர்காள்.எம் மாதிபால்,
பேணிநும் பிறப்பெனும்பி
      
ணக்கறுக்க கிற்றிரே. (69)

****

திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள்

நைமிசாரண்யம்

வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே

பேணினேன், அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்  பிறவிநோயறுப்பான்,

ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை

நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.1

**

பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும்,

பேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம்,

வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்,

தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. (2) 1.8.9

****

பிறப்பு என்று சொல்லாவிடினும் பழவினையை அறுத்தாய் என்கிறார் திருநாவுக்கரசர்,

ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந்

  தேபடைத் தான்றலையைக்

காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று

  காமனைக் காலனையும்

பாய்ந்தறுத் தாய்பழ னத்தர

  சேயென் பழவினைநோய்

ஆய்ந்தறுத் தாயடி யேனைக்

  குறிக்கொண் டருளுவதே.  6

  – திருப்பழனம் அப்பர்- நாலாம் திருமுறை

VALLUVAR AND HIS WIFE VASUKI.

இது போல ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரிநாதரும் பாடி இருக்கிறார்கள். படித்தும் சிந்தித்தும் அவனருள் பெறுவோமாக!

–subham—

tags பிறப்பு அறுத்தல்,  மாயப் பிறப்பு அறுக்கும், திருவள்ளுவன், திருமழிசை ஆழ்வார், சம்பந்தர், மாணிக்கவாசகர், திருமங்கை ஆழ்வார்

மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள்! – 1 (Post No.15,292)

House of Lords in London

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,292

Date uploaded in London –   21 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள்! – 1 

ச. நாகராஜன் 

பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்களது வஞ்சகம், தந்திரம், பொய், புரட்டு உள்ளிட்ட அனைத்தையும் இந்தியர்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.

 ஆனால் அவர்களது வஞ்சக புரட்டு புத்திமதியும் போலியான வாதங்களும் இன்னும் நீங்கியபாடில்லை.

இது பற்றி சுப்ரீம் கோர்ட் அட்வகேட் திரு டாக்டர் ஹரிபன்ஷ் மிஸ்ரா

Dupliticy of the West – Did you Know? என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஒரு குறிப்பு நமது விழிப்புணர்வைத் தூண்டுகிறது.

அது அப்படியே கீழே தரப்படுகிறது. 

32 ஐரோப்பிய நாடுகள் அப்படியே வெவ்வேறு நிலைகளில் கிறிஸ்தவ மதத்தை அங்கீகரிக்கின்றன. ஒன்று அதிகாரபூர்வமான அரசின் மதமாக அரசியல்சட்டபூர்வமாகவோ அல்லது வடிகனுடனான ஒரு சமய உடன்பாட்டின்படியோ இந்த அங்கீகாரம் உள்ளது. வட்டிகனுடனான பல நாடுகளின் சமய உடன்பாடுகள் அல்லது ஒப்பந்தங்கள் சர்ச்சுகளை நிர்வகிக்கவும் சர்ச்சின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உள்ளவைகளாகும்.

இங்கிலாந்திற்கு அதிகாரபூர்வமான மதம் சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் கிறிஸ்தவ மதமே. அது ஏசு கிறிஸ்து ஒருவரே கடவுள் என்கிறது.

“இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஏன் இன்னும் கிறிஸ்தவ நாடாகவே இருக்கிறது?” என்று  “பரந்த மனமுடைய” ஒரு மேலை நாடும் இங்கிலாந்தைக் கேட்கவில்லை. ஆனால் நான்கு உலக மதங்களைக் கொண்டுள்ள போதிலும் இந்தியா மட்டும் காலனி ஆட்சியின் எச்சமான செகுலரிஸத்தை – மதச் சார்பின்மையைக் கொண்டிருக்க வேண்டுமாம்!

சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் பிஷப்புகளுக்காக யுனைடெட் கிங்டமின் பாரளுமன்றத்தின் 26 சீட்டுகள் ரிஸர்வ் செய்யப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டு முடிய சுமார் நானூறு ஆண்டுகாலம் அந்தப் பாராளுமன்றத்தில் ஒரு பெண் பிஷப் கூட இடம் பெற்றிருக்கவில்லை. நான்கு நூற்றாண்டுகளாக வெள்ளை கிறிஸ்தவ ஆண்கள் மட்டுமே பிரத்யேகமாக இடம் பெற்ற போது இங்கிலாந்தின் ஜனநாயகப் பண்பு பாதிக்கப்படவே இல்லை!!

 இந்தியாவில் சமயாசார்யர்களுக்கு இடங்கள் ரிஸர்வ் செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு கணம் யோசியுங்கள். மோடி அவர்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது அவர்களின் கண்களை உறுத்துகிறது – அவர்கள் நாட்டில் சர்ச்சின் 26 பிஷப்புகள் நேரடியாக ரிஸர்வ் செய்யப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டு, அவர்களின் தேசீய சட்டங்களை உருவாக்கும் போது!

என்ன ஒரு நேர்மையான வாதம் அவர்களுடையது?! செகுலரிஸம் என்ற சுமை இந்தியர்களுக்கு மட்டும் தானோ, என்னவோ!

 யுகே பாராளுமன்றத்தில் 92 சீட்டுகள் பரம்பரை அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. ஆமாம், பிறப்பின் அடிப்படையில் தான்! இந்த பரம்பரை சீட்டுகளின் பெயர் “Peers” என்பதாகும். இது யுகேயின் அரச பரம்பரையினருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டதாகும். இந்திய ஜனநாயகத்திலோ ஒரு வார்டு கவுன்சிலர் சீட் கூட பிறப்பின் அடிப்படையில் சீட்டைப் பெற முடியாது. என்றாலும் கூட யுகே தான் முற்போக்கானது. இந்தியா பிற்போக்கானது!

–    தொடரும்

**

ஆதாரம், நன்றி கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழ்

TRUTH -VOLUME 90 – ISSUE NUMBER 13

(8-7-2022)

Purananuru (Tamil Sangam Book) wonders -3 (Post No.15,291)

London Swaminathan in Stone Henge in England; Ancient Tamils also made Stone circles and Stone piles for the departed people.

Written by London Swaminathan

Post No. 15,291

Date uploaded in London –  20 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Ancient Tamil Encyclopaedia -43; One Thousand Interesting Facts -Part 43

***

Item 271

In Puram verse 3 there are seven interesting points:

1.Name of the poet and the king இரும்பிடர்த்தலையார், பெரும்பெயர் வழுதி

The name of the poet has two meaning: 1.Used in the poem as an epithet to the elephant;2.Commentators point out another person with the same name who is the uncle of Karikal Choza, a BCE period king; either way it shows this king is an ancient one, rightly placed in the Puram in the very beginning.

The name of the king is more interesting; in Sanskrit it is Maa Keerti (Mahaa Kirti= Great Fame). That king is listed in one of the early Tamil Academies/Tamil Sangams.

***

272

2.White Umbrella (used from Kalidasa)

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை

This is used by the commentators for the word Ongal  Venkudai in Tamil. White Umbrella, as a symbol of Emperors, is used in the earlier Sanskrit literature like Kalidasa and other works. Raghuvamsa of Kalidasa says white umbrella shining like moon (3-16)

***

273

3,Gowriyar கவுரியர் மருக

This is very interesting because it shows the connection between the Pandavas and the Pandyas. Another title used for Pandyas is Panchavar (Number Five). Both these words show they belong to the same Chandra Vamsa of the Kuru Kula (both Pandavas and Kauravas); later stories like Arjuna marrying Alli/ Chitrangada/ of Pandya country are also shown as proofs.

***

274

4.Nemi/Wheel

It is a Sanskrit word and Sanskrit expression. Kings are said to rule the whole country under ONE WHEEL (nemi). Kala Nemi, Sudar Nemi are in Vishnu Sahasranama, Divya Prabandham etc.

***

275

5.Yama மருந்தில் கூற்றத்து

There is no remedy for death; literally there is no medicine for death; Alvars also sing “Oh Vishnu, I cant say STOP when Yama comes”.

***

276

6.Earthquake நிலம் பெயரினும் நின்சொற்பெயரல்

Tamils knew about the earthquakes that rocked North India very often. The effect of earthquakes in Indian history and geography has not been well researched. Earthquakes changed the course of the rivers and the history. Here the poet used it as a simile.

***

277

From Khasi Hill Tribes, India

From Europe

7.Stone mound / cist/Menhir பதுக்கை

This type of stone monuments is seen around the world. Stone Circles (most famous Stone Henge in England), Stone mounds, Menhirs, Cists etc are seen throughout India. From the very ancient period men have shown some respect and reverence to the departed souls.

***

Puranānūru 3, Poet Irumpidarthalaiyār sang to Pandiyan Karunkai Olvāl Perumpeyar Vazhuthi,


Your towering white umbrellain the shape of the lovely full moon  (RAGHUVAMSA 3-16),

O heir to KAVURIYAR with unlimited generosity, who ruled
the wheel of law NEMI with kind hearts!  Husband to a woman of
faultless purity, whose ornaments are lovely!  O Vazhuthi of
great fame
 MAHA KEERTI with a gleaming sword in your strong hand!
You do not tire at the difficult work of YAMA for whom
there is no medicine, as you ride the huge neck of your elephant (IRUMPIDAR THALAI)
that is fierce to approach, who batters fortress gates of
enemies with his tusks as weapons, who has a massive trunk,
a spotted forehead with gold ornaments, fragrant liquid of
musth, and on each flank, dangling bells tied to ropes.

The earth might move, but may your words be immovable (EARTHQUAKES),
O king with a broad chest smeared with sandal paste and
feet adorned with golden anklets!

You have the ability to remove the poverty of those who come
desiring you, through difficult forked paths with unnam trees,
passing through the wasteland with long paths without cities
and water, where harsh-eyed marksmen with unfailing arrows
cover their eyes with bent hands and shoot, killing travellers
who then lie under fresh piles of stones (STONE CIRCLES, MENHIRS, CISTS) where kites with
perfect wings and curved beaks sit and yearn.  You are capable
of knowing what those in need want, by just looking at their faces.

(English Translation by Vaidehi Herbert, with my additions in Capital letters)

***

In Tamil

கவுரியர் யார் ?

பாண்டியர்களுக்கு கவுரியர் பஞ்சவர் , மீனவர், தென்னவர் முதலிய பல அடைமொழிகள் உள்ளன கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அவர்களை பஞ்ச பாண்டவர் போல சந்திர வம்சத்து அரசர்களாகவே குறிப்பிடுகின்றன . கவுரியர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் சில இடங்களில் வந்துள்ளன இது குரு குலத்தை– அதாவது கெளரவ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பொருளில் வருகிறது. மகாபாரதமும் சில இடங்களில் அர்ஜுனன் பாண்டியர் தொடர்பினைப் பேசுகிறது சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இது குரு வம்சத்தினர் என்பதைக் குறிக்கும். மகாபாரத போரில் பாண்டியன் ஒருவனை அஸ்வத்தாமன் கொன்றதை பி டி சீனிவாச அய்யங்கார் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்; அர்ஜுனன்- அல்லி ராணி நாட்டுப்புறப் பாடல் கதைகளும் இதை மெய்ப்பிக்கின்றன 

****

புறநானூறு 3பாடியவர்: இரும்பிடர்த்தலையார்பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதிதிணை: பாடாண்துறை: செவியறிவுறூஉ  வாழ்த்தியல்
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகைக் கவுரியர் மருக!  5
செயிர் தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன்னோடைப் புகர் அணி நுதல்
துன்னருந்திறல் கமழ் கடாஅத்து,
எயிறு படையாக எயிற் கதவு இடாஅக்
கயிறு பிணிக் கொண்ட கவிழ் மணி மருங்கில்,  10
பெருங்கை யானை இரும் பிடர்த் தலையிருந்து,
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள் வாள் பெரும் பெயர் வழுதி!
நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்,
பொலங்கழல் கால் புலர் சாந்தின்  15
விலங்கு அகன்ற வியன் மார்ப!
ஊர் இல்ல உயவு அரிய
நீர் இல்ல நீள் இடைய,
பார்வல் இருக்கைக் கவி கண் நோக்கின்,
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர், 20
அம்பு விட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்,
திருந்து சிறை வளைவாய்ப் பருந்து இருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை,
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்  25
இன்மை தீர்த்தல் வன்மையானே.

 –subham–

Tags- Purananuru, wonders, part 3, Tamil Encyclopaedia, Part 43, Stone piles, circles, Stone Henge

ஆண்டாளைத் தோற்கடித்த சம்பந்தர்!  தாவர இயலில் முதல் பரிசு யாருக்கு? (Post.15,290)

Written by London Swaminathan

Post No. 15,290

Date uploaded in London –  20 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் ஒரு TEEN AGE GIRL டீன் ஏஜ் கேர்ள் ; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் ஒரு TEEN AGE BOY டீன் ஏஜ் பாய்; இருவரும் இளம் வயதில் ஜோதியில் கலந்து இறைவனுடன் ஐக்கியமானார்கள்; நூறு கோடியில் ஒருவர்தான் ஸ்பான்டேனியஸ் கம்பஸன்SPONTANEOUS COMBUSTION    என்ற அற்புதம் மூலம் தன்னைத்தானே ஜோதியாக மாற்றிக்கொள்ள முடியும் . சம்பந்தர் தன்னுடன் இருந்தவர்களையும் சிவன் அடிக்கு அழைத்துச் சென்றார் இப்படி தானாக ஜோதியாகும் சம்பவங்கள் (SPONTANEOUS COMBUSTION  )  உலகில் அமெரிக்கா முதலிய நாடுகளில் ஒரு சில மட்டும் பதிவாகியுள்ளன. நிற்க சொல்ல வந்த விஷயம் BOTANY பாட்டனி என்னும் தாவரவியல் விஷயம்.

ஆண்டாளும் சம்பந்தரும் திருவில்லிபுத்தூரிலும் சீர்காழியிலும் எந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போனார்கள் என்ற செய்தி அவர்கள் வரலாற்றில் இல்லை . அவர்கள் இருவரும் தாவரவியல் என்னும் பாட்டனிBOTANY பாடத்தில் நல்ல மார்க் எடுத்திருக்க வேண்டும்! அதிலும் முதல் பரிசினை சம்பந்தர் தட்டிக்கொண்டு போய்விட்டார்!

ஆண்டாள் பாடிய  நாச்சியார் திருமொழியில் 143 பாடல்களில்  சுமார் 27  தாவரங்களைக் குறிப்பிட்டுள்ளார் . ஆனால் சம்பந்தரோ ஒரே பதிகத்தில் , ஒரே ஊரில், பத்துப்பாடல்களில் முப்பது தாவரங்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார் இதைப்  படித்தவுடன் சங்க காலத்தில் சாதனைபுரிந்த பிராமணப்புலவன் கபிலன்தான் நினைவுக்கு வருகிறார் அவர் ஒரே பாடலில் — குறிஞ்சிப்பாட்டு — ஒரே மூச்சில் தொடர்ச்சியாக 99  தாவரங்களைப்  பாடி விட்டார்!  இது, தமிழ் மொழி உலகுக்கு கொடுத்த ஒரு அதிசயம்!

ஆண்டாள் குறிப்பிட்ட 27 தாவரங்கள் இதோ :

ஊமத்தை, முருக்கம், கரும்பு, முல்லை, மருதம் காயாம் பூ, காக்கணம் பூ, காரகில், சந்தனம், தாமரை , நெல் (அரிசி.அவல்), ஆலம், குருந்தம், துளசி, கடம்பம், புன்னை, குருக்கத்தி, ஞாலல் , கோவை, செருந்தி, செண்பகம், மா, எருக்கு, களாப்பழம், கோங்கு, கொன்றை,காந்தள்

இவை தவிர அவரை ,துவரை என்ற சொற்கள் இருந்தாலும் அவை அவர்+ ஐ என்ற பொருளிலும் துவரை= துவாரகாபுரி என்ற பொருளிலுமே கையாளப்பட்டுள்ளன.

****

சம்பந்தரின் தாவர அறிவு

வேங்கை, குங்கும, செருந்தி, செண்பகம், ஆனைக்கொம்பு, ஆரம், மாதவி, சுரபுன்னை, விளா, மூங்கில்,  பாக்கு, ஈச்சம், இளமருது, இலவங்கம், ஊமத்தம், சந்தனம், காரகில், முல்லை, மல்லிகை, மெளவல், மா, வாழை, குருந்தம், கோங்கு, குரவம், பாதிரி –26

ஐங்கணை -தாமரை, கருங்குவளை, அசோகு, மா, முல்லை  +5

இவ்வளவு மரம் செடி கொடிகளை ஒரே ஊரில் பாடியதற்கு என்ன கரணம்? அங்கு இருந்தது நந்தவனமா? அல்லது பொட்டானிக்கல் கார் டனா? என்று எண்ண வேண்டியுள்ளது! 

திருமாந்துறை பதிகம்

செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும், செருந்தி,

செண்பகம், ஆனைக்

கொம்பும், ஆரமும், மாதவி, சுரபுனை, குருந்து, அலர்

பரந்து உந்தி,

அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை

உறைகின்ற

எம்பிரான், இமையோர் தொழு, பைங்கழல் ஏத்துதல்

செய்வோமே.

1

விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து

உந்தி,

அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான்,

அத்

துளவ மால்மகன் ஐங்கணைக் காமனைச் சுட விழித்தவன்,

நெற்றி

அளக வாள்நுதல் அரிவை தன் பங்கனை அன்றி, மற்று

அறியோமே.

2

கோடு தேன் சொரி குன்று இடைப் பூகமும் கூந்தலின்

குலை வாரி

ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்,

வாடினார் தலையில் பலி கொள்பவன், வானவர் மகிழ்ந்து

ஏத்தும்

கேடு இலாமணியைத் தொழல் அல்லது, கெழுமுதல்

அறியோமே.

3

இலவம், ஞாழலும், ஈஞ்சொடு, சுரபுன்னை, இளமருது,

இலவங்கம்,

கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன்;

அலை கொள் வார்புனல், அம்புலி, மத்தமும், ஆடு அரவு

உடன் வைத்த

மலையை; வானவர் கொழுந்தினை; அல்லது வணங்குதல்

அறியோமே.

4

கோங்கு, செண்பகம், குருந்தொடு, பாதிரி, குரவு, இடை

மலர் உந்தி,

ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை,

பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி(ம்) மலர்

சேர்த்தி,

தாங்குவார் அவர், நாமங்கள் நாவினில் தலைப்படும்

தவத்தோரே.

5

பெருகு சந்தனம், கார் அகில், பீலியும், பெரு மரம்,

நிமிர்ந்து உந்தி,

பொருது காவிரி வடகரை மாந்துறைப் புளிதன்

எம்பெருமானை

பரிவினால் இருந்து, இரவியும் மதியமும் பார் மன்னர்

பணிந்து ஏத்த,

மருதவானவர் வழிபடும் மலர் அடி வணங்குதல்

செய்வோமே.

6

நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள்மலர் அவை

வாரி

இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை,

அன்று அங்கு

அறவன் ஆகிய கூற்றினைச் சாடிய அந்தணன்,

வரைவில்லால்

நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன், நிரை கழல்

பணிவோமே.

7

மந்தம் ஆர் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள்,

மாணிக்கம்

உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை;

நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு

விரலானை;

சிந்தியா மனத்தார் அவர் சேர்வது தீ நெறி அதுதானே.

8

நீலமாமணி நித்திலத்தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி

ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை

மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலர் அடி இணை

நாளும்

கோலம் ஏத்தி நின்று ஆடுமின்! பாடுமின்! கூற்றுவன்

நலியானே.

9

நின்று உணும் சமண், தேரரும், நிலை இலர்; நெடுங்கழை,

நறவு, ஏலம்,

நன்று மாங்கனி, கதலியின் பலங்களும், நாணலின் நுரை

வாரி,

ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை, ஒரு காலம்

அன்றி, உள் அழிந்து எழும் பரிசு அழகிது; அது அவர்க்கு

இடம் ஆமே.

10

வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை,

சிரபுரம்பதி உடையவன் கவுணியன், செழுமறை நிறை

நாவன்,

அர எனும் பணி வல்லவன், ஞானசம்பந்தன் அன்பு உறு

மாலை

பரவிடும் தொழில் வல்லவர், அல்லலும் பாவமும் இலர்

தாமே.

–Subham—

Tags- தாவர இயல், முதல் பரிசு, யாருக்கு?, ஆண்டாள், தாவரங்கள் சம்பந்தர், திருமாந்துறை பதிகம், botany