CARTOONS UPTO 8-7-2025 IN DECCAN CHRONICLE

CARTOONS UPTO 8-7-2025 IN DECCAN CHRONICLE 

POSTED BY LONDON SWAMINATHAN ON 8TH JULY 2025

ENJOY THE BEST CARTOONS FROM INDIAN NEWSPAPER.

—SUBHAM—

 TAGS– CARTOONS, 8-7-2025 ,DECCAN CHRONICLE 

DRAVIDIANS ATTACK CHANAKYA

POSTED BY LONDON SWAMINATHAN ON 8-7-2025;LIFTED  FROM THE COMMUNE MAGAZINE.

On 30 June 2025, during a casual exploration on social media, as I came across this interesting post – the DMK Youth Wing had posted a picture of Chanakya with the caption “#DidYouKnow? The ‘Arthashastra’ written by Chanakya states that those who criticize religious superstitions should be labeled as ‘atheists’ and ‘traitors’ and kept away from the public.”

The image said, “The ‘Arthashastra’ written by Chanakya states that ‘Kings should always keep the public stupid. For that, they should spread religious superstitions. Those who criticize this should be accused of being ‘atheists’ and ‘traitors’ and kept away from the public.”

I was prompted to see if Acharya Chanakya really had said such a thing.

As I had not come across such strong statements against atheism in any traditional text in Sanskrit, I dug into the Arthashastra again.

What Is Arthashastra?

Arthashastra is a comprehensive traditional text authored by Chanakya. It deals with the subject of the monarch, their assembly, the subjects, wealth, and governance of the kingdom. Chanakya clearly cites earlier authors or schools of thought making the Arthashastra an important example of the legacy of intellectual heritage of ancient India. The Arthashastra and its contents were referred to by later texts and developed in their own way. 

What Does The Text Actually Say?

Chanakya starts the text first describing the subjects that a monarch must be well acquainted with as part of the eternal discipline a Monarch must have – Anvikshiki (logical philosophy, metaphysics), Trayi (the three Vedas), Varta (agriculture, cattle breeding and trade), and Dandaniti (science of government). He mentions the differences in opinions too. Check out this table to understand it better.

A table with text on it

AI-generated content may be incorrect.Tabel 1: The accepted subjects for the monarch’s attention according to different schools of thought

Anvikshiki, according to Chanakya, comprises the subjects of Sankhya, Yoga, and Lokayata. The Sankhya philosophical tradition forms the philosophical basis of which the Yoga philosophical tradition is the practical implementation. However, Lokayata is the Nastika or the Charvaka philosophical tradition. This Lokayata tradition looked at only those which could be perceived by the sense organs as real and anything else as unreal. Direct perception is given importance. It also does not consider imperceptible concepts like God or Devas and processes such as accumulation and fructification of Punyakarmaphala (result of meritorious action) and Papa (result of unmeritorious action) as valid. Oftentimes, this tradition is called Atheism in English.

The Monarch learns Dharma (righteousness) and Adharma (non-righteousness) from Trayi, Artha (wealth) and Anartha (non-wealth) from Varta, and Naya (good governance) and Apanaya (bad governance) from Dandaniti (science of government). Thus, Chanakya’s stance is that only after learning all these four can a Monarch learn both Dharma and Artha properly so as to properly govern the kingdom.

In fact, Chanakya is all in praise of Anvikshiki because it keeps the mind steady and firm and bestows excellence of foresight, speech, and action. This is why the chapter right after introducing the contents of the Arthashastra is partly called “Anvikshikisthapana” (establishment of Anvikshiki) and the first word of this chapter is Anvikshiki.

Amongst the dozen or so existing commentaries to the Arthashastra, let us take just two.

In the Vaidikasiddhantasamrakshini, one of the commentaries to the Arthashastra, Anvikshiki, also called Hetuvidya (the science of causation, i.e. logic), helps to understand reality as it is, includes the proper analysis of means of valid knowledge, and comprises Nyaya, Vaisheshika, and Lokayata philosophical traditions.

The Jayamangalakrodapatra, another commentary to the Arthashastra, says that Anvikshiki helps in understanding oneself and also the wisdom associated with cause and effect. 

Now there is a question that arises about this subject of study that has been praised as a fundamental academic eligibility for a Monarch according to a key text on governance in Sanathana Dharma – Why is the association of Nastika/Charvaka/Atheism considered against Dharma or the society?

Perhaps it is our own ignorance about the Arthashastra and associated literature that has pushed us to this state of consuming secondary information to sow doubts and malice within our minds about our heritage! Perhaps Chanakya’s own name can be used to dissuade the ignorant people of his country from studying his work!

Abhinav Rajaputra is an Indology researcher, educator, and a traditional student practitioner of Yoga.

தி.வி. பு. உவமைகள், உருவகங்கள் -2 (Post No.14,740)

Picture shows dead Malaiyadwaja Pandya returning to earh in Space Shuttle.மலையத்வஜனை அழைத்த படலம், அவர் விண்ணுலகத்திலிருந்து ஸ்பேஸிஷட்டிலில் ஸ்  வந்து செல்லும் காட்சி 

Written by London Swaminathan

Post No. 14,740

Date uploaded in London –  8 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஏழுவகை பருவ மங்கையர்

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில்( தி.வி. பு.) பயன்படுத்தும் மேலும் சில உத்திகளைக் காண்போம்.

திருவண்ணாமலையில் மாணிக்கவாசகர் தங்கி இருந்தபோது, அழகான பேதை- பெதும்பை-மங்கை- மடந்தை- அரிவை- தெரிவை- பேரிளம் என்னும் ஏழுவகை பருவ மங்கையர்களெல்லாம் மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு பத்து தினங்களுக்கு முன்னே வீடுகள் தோறும் போய் அழைத்துக்   கொண்டு விடியற்காலத்திலே தீர்த்தத்தில் போய் ஸ்நானம் செய்வார்கள் . அவர்களைக்கண்ட மாணிக்கவாசகர்  திருவெம்பாவை பாடினார்.

****

சிவன் தலையில் மூன்றாம் பிறை நிலவு

தெள்ளிய மூன்றாம் பிறையைத் தரித்த சடாபாரத்தையுடைய  கடவுளானவர் அன்பில்லாதவர்களேயானாலும் தன்னைப் பாடினவர்களிடத்தில் இரக்கஞ்செய்வார் என்று நினைத்து எண்ணுதல் பெற,

நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க   — என்று — சிவபுராணம்– பாடினார் . இது மண்சுமந்த படலத்தில் வருகிறது .

*****

இவன்தான் வந்தி என்பவளுடைய கூலியாள் என்று காட்டிவிட  பாண்டியன் கண்டு கோபித்துத் தன் கையிலே பொற்பிரம்பு (Golden Stick) கொண்டு  அண்டங்களையும் அளவில்லாத உயிர்களையும்  தனக்குச் சரீரமாகக்கொண்ட கடவுள் முதுகிலே ஓங்கி அடித்தான்.

இந்த அண்டம் என்ற சொல்லுக்கு முட்டை மற்றும் கோளமான என்ற பொருள் உண்டு. திருவாசகத்திலும் அதற்கு முந்தைய நூல்களிலும் இந்தச் சொற்பிரயோகத்தைக் காணலாம் ; பூமி மட்டுமல்ல ; அண்ட சராசரங்கள் அனைத்தும் வட்ட வடிவமானவை என்று இந்துக்கள் முதல் முதலில்  கண்டுபிடித்ததை இது காட்டுகிறது..

****

கடற்கரையில் மீன்வியாபாரம் செய்யும் மீனவப் பெண்கள் பற்றி  வலை வீசின படலத்தில் பரஞ்சோதி எழுதுகிறார் ,

பின்னும் அந்த நுளைப் பெண்கள்  விலை கூறி விற்கிற கெண்டை மீனுக்கு நேராக அவர்கள் கண்களே பிறழ்ந்து  விலையுயர்த்தவும் , பேசுகிற வாய் வாசமும்  கூந்தலில் முடித்த தாழம்பூ வாசமும்  மீனின் நாற்றத்தை ஒழித்து நல்ல மணம் வீசவும்……….

****

நால்வகைக் சொற்கள் பற்றிய உரையில் தவறு

              நாமகள்

பழுதகன்ற நால்வகைச்சொல் மலரெடுத்துப்

     பத்திபடப் பரப்பித் திக்கு

முழுதகன்று மணந்துசுவை யொழுகியணி

     பெறமுக்கண் மூர்த்தி தாளில்

தொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கல்

     சூட்டவரிச் சுரும்புந் தேனுங்

கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத்தா

     ளடிமுடிமேற் கொண்டு வாழ்வாம்.

     (பொருள்- குற்றநீங்கியபெயர் –வினை –இடை –உரி என்னும் நான்கு

வகையை யுடைய சொற்களாகிய மலர்களை எடுத்து,  நிலல் பெற வைத்து,  எல்லாத்

திக்குகளினுஞ் சென்று, கமழ்ந்து, கூசை ஒழுகப்பெற்று,  அழகுபெற, அகன்ற

பெரிய அன்பாகிய நாரினால், பாமாலையாகச் செய்து, மூன்று கண்களையுடைய

இறைவனுடைய,  திருவடிகளில், வணங்கி, அணிவதற்கு,  கீற்றுக்களையுடைய,

ஆண்வண்டும் பெண்வண்டும்,  குடைதலினால், விரிந்த, வெண்மையான இதழ்களையுடைய தாமரைப்பூவை

இருக்கையாகவுடைய நாமகளின், திருவடிகளை,  சென்னியிற் சூடிவாழ்வாம்

Picture: பிரம்மா சரஸ்வதி வழிபடும் காட்சி 

நால்வகைச் சொற்கள் என்பதற்கு உரைகாரர்கள் பெயர்ச் சொல்வினைச்சொல், இடைச் சொல், உரிச்சொல் என்று உரை எழுதியுள்ளனர். இது தவறு என்று நான் கருதுகிறேன் ஏனெனில் தொல்காப்பியம் சொல்லும் நான் வகைச் சொற்கள் வேறு (அடியிற் காண்க).

உண்மையில் இது சம்ஸ்க்ருத நூல்களில் உள்ள நான்குவகைச் சொற்கள் ஆகும் . வாதாபி கணபதிம் பாடலில் முத்து சுவாமி தீட்சிதரும் இதைப்படியுள்ளார் பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்…….

அதாவது பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.

பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.

ஆகவே சரஸ்வதியைத் துதிக்கும்போது இதையே பரஞ்சோதி முனிவர் மனதிற் கொண்டிருக்க வேண்டும்

ஏனெனில் பிற இடங்களிலும் அவர் உபநிஷத் வாக்கியங்களை பயன்படுத்துகிறார்; நேதி நேதி – இது இல்லைஇது இல்லை என்ற பாடலை முன்னரே எழுதியுள்ளேன். ; ஏனெனில்,

நேதி நேதி – இது இல்லை, இது இல்லைஎன்பது உபநிஷத வாக்கியம்

இன்னும் ஒரு பாடலில் அநோ ராணீ யாம் மஹதோ மஹீயாம் என்ற உபநிஷத வசனத்தை

Picture- Lord Shiva carrying sand  to strenghen the banks of flooded River Vaigai in Madurai (மண் சுமந்த படலம்)

பெரியதினும் பெரியதுமாய்ச் சிறியதினுஞ் சிறியதுமாய்

அரியதினு மரியதுமா யெளியதினு மெளியதுமாய்க்

கரியதுமாய்க் காண்பானுங் காட்சியுமா யவைகடந்த

துரியமுமாய் நின்றாயென் சோதனைத்தோ நின்னியல்பே— கல்லானைக்கு  கரும்பருதித்ய படலம்

     Aṇor aṇīyān mahato mahīyān (Kaṭha Upaniṣad 1.2.20). என்பது கடோபநிஷத் வாக்கியம்.

****

வேங்கடசாமி நாட்டார் உரை

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனலுமாம்;

“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்

றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே”  என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும்..

ஆகவே தொல்காப்பியர் சொன்னதை ஒப்புக்கொள்ளவேண்டும்; அல்லது சரஸ்வதி துதி

என்பதால் முத்துசுவாமி தீட்சிதர் பாடலில் உள்ளதை ஒப்புக்கொள்ளவேண்டும்

 *****

வேதக்கிளி

பல தலங்களில் திருஞானசம்பந்தர் கண்ட ஒரு காட்சி கிளிகளும் வேதங்களைச் சொல்லும் காட்சியாகும்

அக்கிரகார பிராமணர்கள் வீட்டில் கிளிகளை வளர்த்த செய்தி சம்ஸ்க்ருத நூல்களிலும் இருக்கிறது

மதுரைத் திருநகரப்படலத்தில் பரஞ்சோதியார் சொல்கிறார்:–

தீவினை யந்த ணாளர் சிறார்பயி றெய்வ வேத

நாவுரு வேற்றக் கேட்டுக் கிளிகளோ நவிலும் வேற்றுப்

பூவையும் பயின்று புத்தே ளுலகுறை புதுமந் தாரக்

காவுறை கிளிகட் கெல்லாங் கசடறப் பயிற்று மன்னோ.

பார்ப்பனரின் சிறுவர்கள்,  பயிலுதற்குரிய மறைகளை,

(தமது) நாவினால் உருப்போடுதலைக் கேட்டு,

(அவ்வில்லங்களிலுள்ள) கிளிகள் மட்டுமா  கூறாநிற்கும் (அன்று);

அயலிடங் களிலுள்ள நாகணவாய்ப் புட்களும் கற்று, தேவருலகத்தில்

கற்பகச் சோலையின் கிளிகளுக் கெல்லாம், குற்றம் நீங்கக் கற்பிக்கும் .

இது ஒரு நல்லகற்பனைச் சித்திரம் ; பிராமணச் சிறுவர்களிடம் கிளிகள் வேதம் கற்றன; அவைகளிடமிருந்து பூவைப் பறவைகள   கற்றன ; அவைகள் தேவலோகத்துக்குப் போய் அங்குள்ள கிளிகளுக்கு வேதம் கற்பித்தன !

 *****   

பாண்டியன் திருநகரம் கண்ட படலம், (Madurai City)

நாத்தீகம் பேசுவோர்

மறையவர் வீதி

ஆத்திக ருண்டென் றோது மறமுதற் பொருள்கள் நான்கும்

நாத்திகம் பேசும் வஞ்சர் நாவரி கருவி யாக

ஆத்தனா லுரைத்த வேத வளவுகண் டுள்ளந் தேறித் தீர்த்தராய்

முத்தீ வேட்குஞ் செல்வர்தம் மிருக்கை சொல்வாம்.

ஆத்திகர்கள்  உண்டு என்று சொல்லுகின்ற, அறம் தலிய நான்கு பொருள்களையும், நாத்திகம் பேசும் வஞ்சர்

இல்லையென்று கூறுகின்ற வஞ்சகரின்,  நாவினை அறுக்கின்ற வாளாக, இறைவன்  அருளிய மறையீன் முடிவை

உணர்ந்து,  மனந் தெளிந்து தூய்மையுடையராய்,  மூன்று தீ வேள்வியை முடிக்கும், மறையவரின்

வீதியின் பெருமையைச் சொல்வாம்.

     ஆத்திகர் – உண்டென்பார்; மறுபிறப்பும் இருவினைப்பயனும்

கடவுளும் உண்டென்பார், அறம் பொருள் இன்பம் வீடு என்னும்

நாற் பொருளும் உண்டென்பார், மற்றும் இத்தன்மைய மெய்ம்மைகள்

உண்டென்பார். நாத்திகர் – இல்லையென்பார்; 

–subham—

Tags- திருவிளையாடல் புராணம்,  உவமைகள், உருவகங்கள் , பகுதி 2 , நால் வகைச் சொற்கள், வேதம் சொல்லும் கிளிகள் , பெண்களின் 7 பருவங்கள் நாத்தீகம் பேசுவோர்

அறிஞர்கள் சொன்னார்கள்! அவ்வளவும் உண்மை!! (Post No.14,739)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,739

Date uploaded in London – 8 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கல்கிஆன்லைன் இதழில் 2-4-25 அன்று வெளியான கட்டுரை!

MOTIVATIONAL QUOTES

அறிஞர்கள் சொன்னார்கள்! அவ்வளவும் உண்மை!!

ச. நாகராஜன் 

மனிதர்களும் மலைகளும் சந்திக்கும் போது பெரிய காரியங்கள் நடக்கின்றன. இது தெருவில் அலைந்து திரிவதால் நடக்காது.

–    வில்லியம் ப்ளேக்

எதையும் செய்ய வேண்டும் என்று எண்ணும் ஒரு மனதிற்கு முடியாது என்பதே கிடையாது!

–    ஜான் ஹெய்வுட்

குணாதிசயமே விதி!

–    ஹெராக்லிடஸ்

ஒருமுனைப்படுதலே எனது லட்சியம். முதலில் நேர்மை, அடுத்தது உழைப்பு. பிறகு ஒருமுனைப்படுதல்!

–    ஆண்ட்ரூ கார்னீகி

எவனுக்குத் தன்னிடம் நம்பிக்கை இருக்கிறதோ, அவன் மற்றவர்களை வழி நடத்துவான்.

–    ஹொரேஸ்

வணிகம் என்பது யுத்தமும் விளையாட்டும் சேர்ந்ததாகும்!

–    ஆண்ட்ரே மௌரிஸ்

–     

குருடர்கள் சாம்ராஜ்யத்தில் ஒற்றைக்கண் மனிதனே ராஜா!

–    ஸ்பானிய பழமொழி

முக்கியமான விஷயம் என்னவெனில் கேள்வி கேட்பதை நிறுத்தக் கூடாது என்பது தான்!

–    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

–     

மனித இயற்கையில் உள்ளார்ந்து இருக்கும் ஒரு கொள்கை, தான் புகழப்படவேண்டும் என்பது தான்!

–    வில்லியம் ஜேம்ஸ்

உலகின் மிகப் பெரிய பாடம் என்னவெனில் சில சமயம்  முட்டாள்கள் கூடச் சரியாக இருக்கிறார்கள் என்பது தான்!

–    வின்ஸ்டன் சர்ச்சில்

ஆயிரம் மைல் தூரம் கொண்ட ஒரு பயணம் ஒரு சிறிய காலடியை எடுத்து வைப்பதில் ஆரம்பிக்கிறது,

–    சீனப் பழமொழி

எது புதியதோ அது அவசியமாகத் தேவைப்படுவதாயிருக்கும் என்பதுமில்லை, எது பழையதோ அது தூக்கிப் போடவேண்டியதாயிருக்கும் என்பதுமில்லை.

–    ஹாரி ஜி. மெண்டல்ஸன்

சலுகைகளை எப்படி மறுப்பது என்பதைக் கற்றுக் கொள்; இது ஒரு மிகப் பெரிய பயனுள்ள கலை.

–    தாமஸ் ஃபுல்லர்

–     

அதிர்ஷ்டத்தை எவன் ஒருவன் ஈர்க்கிறானோ அவன் தயார் செய்தல் என்ற காந்தத்தைக் கூடவே கொண்டு செல்கிறான்.

–    வில்லியம் ஏ. வார்ட்

–     

சிறிய வாய்ப்புகளே பிரம்மாண்டமான வெற்றிகளுக்குப் பெரும்பாலும் காரணமாக அமைகிறது.

–    டெமாஸ்தனிஸ்

–    ***

Forty Thousand Proverb Treasure of Hindus!- Part 3 (Post.14,738)

Iyer and Iyengar did pioneering work in bringing out books 125 yeaers ago. Following book is Third Edition.

Written by London Swaminathan

Post No. 14,738

Date uploaded in London –  7 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Proverbs on Proverbs continued…..

Proverbs are so called because they are proved.

Proverbs bear age and he who would do well may view himself in them as in a looking glass- Italian

***

A proverb says what man thinks- Swedish

***

See the attachments….

Above proverbs are from Latin.

–Subham—

Tags- proverbs, forty thousand, treasure of Hindus

திராவிடங்களுக்கு ஒரு கேள்வி

OLD TAMIL BOOK, YEAR 2002

 POSTED BY LONDON SWAMINATHAN  ON 7-7-2025

சண கண மண — சரியென்றால் ………………………..

ஸ்டாலின் பெயரை சுடலை எனலாமா ?

ஏன் விக்கிபீடியா மாற்றவில்லை ?

திராவிடங்களுக்கு ஒரு கேள்வி

சண கண மண — சரியென்றால்

ஸ்டாலின் பெயரை சுடலை எனலாமா ?

 விக்கிபீடியா ஏன் மாற்றவில்லை ?

இதோ  விக்கிபீடியா  தேசீய கீதம்

சன கண மன அதிநாயக செய கே
பாரத பாக்கிய விதாதா.
பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல சலதி தரங்கா.
தவ சுப நாமே சாகே,
தவ சுப ஆசிச மாகே,
காகே தவ செய காதா.
சன கண மங்கள தாயக செயகே
பாரத பாக்கிய விதாதா.
செய கேசெய கேசெய கே,
செய செய செயசெய கே.

தேசீய கீதத்தைக் கேலி செய்தால் PARODY நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கூறுகிறதே ; அப்படியானால் சண கண மண என்று எழுதுவோர் மீது கவர்னர் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது ?

இது லண்டன் சுவாமிநாதன் கேள்வி .

என்னிடமுள்ள 2002ஆம் ஆண்டு பாட புஸ்தகத்தில் தேசீய கீதம் முறையாக எழுதப்பட்டுள்ளது.

–SUBHAM—

TAGS-

TAGS–திராவிடங்களுக்கு ,ஒரு கேள்வி,  தேசீய கீதம், சுடாலின் , விக்கிபீடியா, கேலி

LONDON SWAMINATHAN DISTRIBUTING PRIZES TO TAMIL STUDENTS

POSTED ON 7TH JULY 2025

I WAS GUEST OF HONOUR AT HENDON TAMIL SCHOOL IN LONDON ON 5TH JULY 2025 AND GAVE PRIZES TO CHILDREN AND TEENANGERS. I PRESENTED ALSO TEN OF MY BOOKS TO THE SCHOOL OUT OF 148 BOOKS WRITTEN BY ME.

MR SIVARAJA, CHAIRMN, THANKED ME SPECIALLY FOR SUPPORTING THE TAMIL SCHOOL FOR OVER TWENTY YEARS. IN THE LAST TWO DECADES THIS IS MY SECOND TIME SPEAKING AT THE ANNIVERSAY EVENTS.

HERE ARE SOME PICTURES,

–SUBHAM–

LONDON SWAMINATHAN, DISTRIBUTING PRIZES, TAMIL STUDENTS , HENDON TAMIL SCHOLL, GUEST OF HONOUR

தமிழ் மொழி பற்றி ஞான சம்பந்தர் போடும் புதிர் (Post No.14,737)

Written by London Swaminathan

Post No. 14,737

Date uploaded in London –  7 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

விளங்கும் பிறை சடைமேல் உடை விகிர்தன்வியலூரை, 

தளம் கொண்டது ஓர் புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்

துளங்குஇல் – தமிழ் பரவித்தொழும் அடியார் அவர்,என்றும் 

விளங்கும் புகழ் அதனோடு,உயர்விண்ணும் (ம்) உடையாரே.

பல பாடல்களில் அவர் தன்னைத் தமிழ் ஞான சம்பந்தன் என்றும் தமிழ் விரகன் ன்றும் அழைத்துக்கொள்கிறார்.

****

தமிழுக்கு எத்தனை பெயர்கள் ? என்று பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரை எழுதினேன். இப்பொழுது ஞானசம்பந்தரின்  முதல் திருமுறையை மீண்டும்  படிக்கத் துவங்கியபோது அவர் போடும் புதிர்களைக் கண்டேன் . நமது காலத்தில் தமிழையே மூச்சாகக்கொண்டு வாழ்ந்தவர் பாரதியார்; ஆனால் அவருக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஞானசம்பந்தருக்கும் தமிழே மூச்சு என்று சுந்தரமூர்த்தி நாயனார் சொன்னதை நாம் அறிவோம். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் என்று அவர் புகழ்ந்தார் .

புதிர்கள் என்ன ?

தேவார முதல் திருமுறையில் ஞானசம்பந்தர்  வண்டமிழ் , தேன் நேர் ஆர் தமிழ், இன்றமிழ் , ஞானத்தமிழ் , தமிழ் மாலை என்றெல்லாம் பல பதிகங்களில் சொல்லிவிட்டு கலை மலி தமிழ் , படமலி தமிழ்  என்று இரண்டு பதிகங்களில் சொல்கிறார்

இவற்றில் தமிழ் மாலை என்பதை ஆண்டாளும் முப்பதாவது திருப்பாவையில் செப்பியதை எல்லோரும் அறிவார்கள் .

சம்பந்தருக்கு சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மாணிக்கவாசகர் தண்ணார் தமிழ் (அளிக்கும் தென் பாண்டி நாட்டானே) என்று சொன்னார் .

சம்பந்தர் சொன்ன தேனுக்கு நிகரான தமிழ் என்றால் புரிகிறது; கலை மலி  தமிழ் என்று அவர் என் சொன்னார் ? ஏனெனில் தமிழ் மொழியில் ஆடல் பாடல் சோதிடக்கலைகள் பற்றி நிறைய இருப்பது அவருக்குத் தெரியும் ; அவருக்குப்பின்னர் வந்த வரத்தருவா ர் போன்றோர் ஆய கலைகள் அறுபத்து நான்கு  என்று சொன்னதால் நமக்கு 64 கலைகள் பற்றித் தமிழர்களும் அறிந்திருந்தது தெரிகிறது. இந்த 64 கலைகளை பெண்கள் படிக்க வேண்டிய சிலபஸில் காம சூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனர் சொல்லியிருக்கிறார் ; அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். கரிகாற் சோழன் அவைக்கள புலவர் மதுரைக்கு வந்து ராஜ சேகர பாண்டியனைப் பார்த்து எங்கள் கரிகாற்சோழனுக்கு 64 கலைகள் தெரியும்; உங்களுக்குத் பரதக் கலை தெரியுமா? என்று சவால் விட்டவுடன் அவர் இறைவனிடம்   மன்றாடி வெள்ளியம்பலத்தில் மன்றாடியவனை, கால் மாறி ஆட வைத்ததாக பரஞ்சோதியார் எழுதுகிறார் ஆகவே கலை மலி  தமிழ் என்பது பொருத்தமே.

தேவாரத்தில் முதல் திருமுறையில் சம்பந்தர் பயன்படுத்திய மேலும் சில சொற்கள்:-

பல ஓசைத் தமிழ் – வல்லோசை,மெல்லோசை,இடையோசை முதலிய வேறுபாடுகளை உடைய தமிழ்

குன்றாத் தமிழ்-  அருள் அல்லது மதிப்பு என்றும் குறையாத மொழி.

அது என்ன படமலி தமிழ் ?

இதற்குப் பொருள் எழுதியோர், பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் பேசுகின்றனர்

திருவிடைமருதூர் பதிகத்தில் வரும் படம் மலி தமிழ் என்பதற்கு தருமபுரம் வெளியிட்ட பதிப்பில் படம் மலி தமிழ்= படமெடுத்தாற்போலச் சிறந்த தமிழ் என்று இருக்கிறது .

இன்று நான் ஒரு மாணவனிடம் சொன்னால் சார், எந்த சினிமாப்படம் போல என்று சொல்லுங்கள் சார்? என்பான். ஒரு பெரியவரிடம் சொன்னால் , பாம்பு படம் எடுத்தாற்போல அ கானதா , ஐயா? என்று கேட்பார். .பத்திரிகையாரிடம் சொன்னால் இந்தப் படம் எந்தப் போட்டோவைப் போல? என்று கேட்பார்  ஒரு கவிஞரிடம் சொன்னால் சித்திரம் போல சொற்சித்திரங்கள் நிறைந்த மொழி தமிழ் என்பார். 

வர்த்தமானர் தேவாரப்பதிப்பில் இச்சொல்லுக்குப் பொருள் தரப்படவில்லை. சொல் ஓவியமாக’ என்று சைவம் இணையதளத்தில் உள்ளது .With wordy pictures என்று ஆங்கிலத்தில் உள்ளது. ‘ அதை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்

****

இசை மலி தமிழ் – இசை மலிந்தபாடல்கள் உள்ள மொழி

செந்தமிழ் – செம்மையான மொழி ; சிறந்த மொழி

வண்டமிழ் = வளமான சொற்களுடைய மொழி

ஒண்டமிழ் – ஒளி போல  பிரகாசமான

தண்டமிழ் – குளிர்ச்சி மிக்க

தனித்தமிழ் – ஒப்பற்ற ,உவமை சொல்ல முடியாத

தெய்வத்தமிழ், ஞானத்தமிழ் – அருட்கவிகள் உடைய பாக்கள் நிறைந்த

இன்றமிழ் – இனிய , என்றுமுள்ள தமிழ்

கன்னித்தமிழ் – என்றும் புதுமை ,இளமையோடு திகழும்

****

தமிழுக்கு எத்தனை பெயர்கள்?  My Old Article

எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:–1094 ; தேதி ஜூன் 9, 2014.

தமிழுக்குத்தான் எத்தனை பெயர்கள்?

தெய்வத் தமிழ், செந்தமிழ், முத்தமிழ், கன்னித் தமிழ், தென் தமிழ், தேன் தமிழ், பழந்தமிழ், ஞானத் தமிழ், திருநெறிய தமிழ், அமுதத் தமிழ், அருந்தமிழ், தண்டமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் இசைத் தமிழ், தன்னேரிலாத தமிழ், இயற்றமிழ், தீந்தமிழ், இருந்தமிழ், நாடகத் தமிழ், பசுந்தமிழ், கொழிதமிழ், பாற்றமிழ், சொற்றமிழ், பைந்தமிழ் – இப்படி எத்தனையோ பெயர்களை உடையது நம் தாய்த் தமிழ்.

ஆயினுமிவைகளில் இன்று பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தும் பாடல்கள் தெய்வத் தமிழ் பாடல்களே! ஆழ்வார்களும் நாயன் மார்களும், மாணிக்கவாசகர் போன்ற அடியார்களும் பாரதி போன்ற தெய்வீகக் கவிஞர்களும் பாடிய பாடல்களே காலத்தை வென்ற கவிதைகளாக மிளிர்கின்றன. திரைப்படப் பாடல்கள் எல்லாம் நேற்று முளைத்து இன்று மறையும் காளான்கள் போல மறைந்து விடு கின்றன. அவைகளில் பொருள் பொதிந்த தத்துவப் பாடல்கள் மட்டுமே காலத்தை எதிர்த்து நீச்சல் அடிக்கின்றன. அவைகளையும் சற்று ஆராய்ந்தால் அவை ஒரு தெய்வீகக் கவிஞரின் கருத்துகளை சிறிது எளிமைப் படுத்திய பாடல்கள் என்பது புரியும்!!

இதோ தமிழைப் போற்றும் சில பெரியோர்களின் பாடல்கள்:ஞானத் தமிழ்

கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய கடவுள்தன்னை

நல்லுரை ஞான சம்பந்தன் ஞானத்தமிழ் நன்குணரச்

சொல்லிடல் கேடவல்லோர் தொல்லை வானவர் தங்களொடும்

செலுவர் சீரருளாற்பெற லாஞ்சிவ லோகமதே

திரு ஞான சம்பந்தர் 1-117-12

பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்

துறவிஎனுந் தோற்றோணி கண்டீர் – நிறைஉலகில்

பொன்மாலை மார்பன்புனற் காழிச் சம்பந்தன்

தன்மாலை ஞானத் தமிழ்.

நம்பியாண்டார் நம்பி 11-11 ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்.

பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதி பாடல் ௨௧௮௨

திருநெறிய தமிழ்

அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கையலர்மேய

பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மானிவன்றன்னை

ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த

திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

முதல் திருமுறை

அருந்தமிழ்

அலைபுனல் ஆவடுதுறையமர்ந்த

இலைநுனை வேற்படை யெமிறையை

நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன

விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்

முதல் திருமுறை, சம்பந்தர்

கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது

அறியாது அருந்தமிழ்ப் பழித்தனன் அடியேன்

ஈண்டிய சிறப்பில் இணையடிக் கீழ் நின்று

வேண்டு மதுவினி வேண்டுவன விரைந்தே (பெருந்தேவபாணி)

செந்தமிழ்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ்கூறும் நல் உலகத்து

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

………….. ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோனே (பனம்பாரர் – பாயிரம்)

பிறந்த பிறவியிற் பேணியெஞ்செல்வன் கழலடைவான்

இறந்த பிறவியுண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்

திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்

நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங்கூடுவரே

முதல் திருமுறை, சம்பந்தர்

செந்தமிழ்த்திறம் வல்லிரோ?

அந்திவானமும் மேனியோ? – (சுந்தரர் தேவாரம்)

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை

முத்தமிழும் நான்மறையும் ஆனான் (அப்பர் தேவாரம்)தென் தமிழ்

தென் தமிழ் நன்னாட்டு தீது தீர் மதுரை

— சிலப்பதிகாரம்

வடதிசை மருங்கின் மன்னர்க்கெல்லாம்

தென் தமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி

மண்தலை ஏற்ற வரைக — சிலப்பதிகாரம்

தென் தமிழ் உரைத்தோன் (கம்பன்)

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்

குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்

கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்

–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்தண்டமிழ்

கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை (மணிமேகலை)

தள்ளாப் பொருள் இயல்பின்

தண் தமிழாய் வந்திலார்

கொள்ளார் இக்குன்று பயன் –(பரிபாடல் 9)

தண்டமிழ் நூற் புலவாணர்க்கோர் அம்மானே –(சுந்தரர்)

குழுவு நுண்தொளை வேயினும் குறிநரம்பு எறிவுற்று

எழுவு தண்தமிழ் யாழினும் இனிய சொற்கிளியே –(கம்ப இரா.அயோத்தி.சித்திர 28)

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை (மாணிக்கவாசகர், திருவாசகம்)

தன்னேர் இலாத தமிழ்

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ் — (தண்டி அலங்காரம்)பசுந்தமிழ்

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமொடு அமர்ந்து

பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை

மண்ணிடைச்சில இலக்கணவரம்பிலா மொழிபோல்

எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ – (திருவிளையாடல், நாடு.57)

முத்தமிழ்

எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்

முத்து முத்தமிழும் தந்து முற்றுமே –(கம்பன்)

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை

முத்தமிழும் நான்மறையும் ஆனான் (அப்பர் தேவாரம்)

அலகிறந்தனை தலை சிறந்தனை

அருள் சுரந்தனை இருள் துரந்தனை

உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை

ஒன்றும் ஆயினை பலவும் ஆயினை

( காசிக் கலம்பகம் )சொற்றமிழ்

மற்றுநீ வன்மை பேசி வந்தொண்டன் என்னும் நாமம்

பெற்றனை; நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க

அற்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார் — (பெரியபுராணம், சேக்கிழார்)

தமிழ்

தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென

வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ்

ஆனாப் பெருமை அகத்தியன்………………. (பன்னிருபடலம்)

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை

-யாபதியும்,கருணை மார்பின்

மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்

மேகலையும், சிலம்பார் இன்பப்

போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ

ளாமணியும் பொலியச் சூடி,

நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்

தாங்கு தமிழ் நீடு வாழ்க !

நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்

மொழியிருக்கச் சேக்கி ழாரின்

பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்

திரமிருக்கப் பகலே போன்று

ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்

குறளிருக்க, நமது நற்றாய்,

காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்

கனிபெருகக் கண்டி லோமோ !

-சுத்தானந்த பாரதியார்தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை (சிறுபாணாற்றுப்படை)

இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும் (பிங்கலந்தை)

இன் தமிழ் இயற்கை இன்பம் (சிந்தாமணி 2063)

தமிழ் தழிய சாயலவர் சிந்தாமணி சுர.32)

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே (திருமூலர் திருமந்திரம்)கடவுள் தந்த தமிழ்

வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி

நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்

தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)

சாறு சுவை எனக் கூற நின்று இட்ட

ஆரியம் தீந்தமிழ் என்மனார் அவையே

ஓரிருமகாரின் பேறுகண்டு அவற்றுள்

கன்னியந்தமிழின் செவ்வியைப் புணர்ந்தோய் (பொய்கையார்)தமிழால் வைதாரையும் வாழவைப்போன் (கந்தர் அலங்காரம்-22, அருணகிரிநாதர்)

பாரதியார், பாரதி தாசன் ஆகியோரின் பொன்மொழிகள் பாரதி பற்றிய கட்டுரைகளிலும், பாரதியுடன் 60 வினாடி பேட்டி, பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி ஆகிய கட்டுரைகளிலும் காண்க.

—Subham—

Tags- தமிழுக்கு எத்தனை பெயர்கள் , தமிழ் மொழி , பெயர்கள், சம்பந்தர், புதிர், படமலி தமிழ் 

GNANAMAYAM 6TH JULY 2025 BROADCAST SUMMARY

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer -TIRUKKURAL

***

Vaishnavi Anand and Latha Yogesh from London presented World Hindu News in Tamil

****

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on – Pandikodumudi Temple

****

Talk by Mr. S Nagarajan from Bengaluru poke on

Topic- Tamil Saint Karaikal Ammaiyar

****

Book Review read by Mrs Gomathy Karthikeyan from Chennai.

*****

SPECIAL EVENT-

Talk by Mr T .R . Ramesh on Periya Puranam  in Tamil.

Topic – Thaduththu Atkonda Puranam .

He spoke about sri SUNDARAMURTHY NAYANAR

Mr T R Ramesh is the son of   Sekkizhar Adippodi Dr T N Ramachandran and  

PRESIDENT, HINDU TEMPLE WORSHIPPERS COMMITTEE.

****** 

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சிநிரல் ஞாயிற்றுக்கிழமை 8-6-2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

TR ramesh

Talk by Mr. S Nagarajan from Bengaluru

news

aalayam arivom

***

இறைவணக்கம் –

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா யோகேஷும்  வழங்கும் செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

சொற்பொழிவு

தலைப்பு- பாண்டிக்கொடுமுடி ஆலயம்

****

சொற்பொழிவு : எஸ் நாகராஜன்பெங்களூரு

தலைப்பு — காரைக்கால் அம்மையார்

****

நூல் விமர்சனம்- சென்னையிலுந்து திருமதி கோமதி கார்த்திகேயன்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு

திரு T R R ரமேஷ் S/o Sekkizhar Adippodi Dr T N Ramachandran 

PRESIDENT, HINDU TEMPLE WORSHIPPERS COMMITTEE 

தலைப்பு- பெரிய புராணம்/  தடுத்தாட்கொண்ட புராணம்

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham— 

Tags-Gnanamayam Broadcast, July 6, 2025, summary

ஞானமயம் வழங்கும் (6 July 2025) உலக இந்து செய்திமடல் (Post.14,736)

Written by London Swaminathan

Post No. 14,736

Date uploaded in London –  7 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

news

Collected from popular dailies and edited for broadcast)

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும்  லதா யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த்  வணக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை  ஆறாம் தேதி 2025-ம் ஆண்டு .

முதலில் இந்தியச் செய்திகள்!

சித்த ஆயுர் வேத  மருத்துவப் பல்கலைக் கழகம் ! ஜனாதிபதி முர்மு துவக்கிவைத்தார்

குடியரசுத்தலைவர் முர்மு, ஜூலை முதல் தேதியன்று  மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்தார்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகம் உள்ளது

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,  இந்த பல்கலைக்கழகம் நாட்டின் வளமான பண்டைய மரபுகளின் நவீன மையமாகும் என்று கூறினார். இந்தப் பல்கலைக்கழகம்  உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுமார் 100 ஆயுஷ் கல்லூரிகளும் இதன் சிறப்பால் பயனடைந்து வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பொது வாழ்வில் மக்களுக்கு சேவை செய்வதில் சுய தேவைகளை விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசுத் தலைவர் தனது சொந்த வாழ்க்கை குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார். 

ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அவரை வரவேற்றார்கள்.

சோன்பர்சாவில் உள்ள மகாயோகி கோரக்நாத் பல்கலைக்கழக ஆரோக்யதாம் வளாகத்தில் கல்விக் கட்டிடம், அரங்கம், பஞ்சகர்மா பிரிவுகள் உள்ளன பஞ்சகர்மா என்பது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சுத்திகரிப்பு மற்றும் புத்துணர்ச்சி சிகிச்சை முறையாகும்

****

ஜைன துறவி வித்யானந்த் மகாராஜ் நூற்றாண்டு விழாவில்..

பிரதமர் மோடிக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டம்

ஜைன துறவி ஆச்சார்ய வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு, தர்ம சக்கரவர்த்தி என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதை பிரசாதம் போல ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜைன ஆன்மிகத் தலைவர்களில் ஒருவரும், சமூக சீர்திருத்தவாதியுமான ஆச்சார்ய வித்யானந்த் ஜி மகாராஜின் 100வது பிறந்தநாளைக் கௌரவிக்கும் ஒரு வருட கால விழா தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், டெல்லியில் உள்ள பகவான் மகாவீர் அகிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜ் ஏப்ரல் 22, 1925 அன்று கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் கிராமத்தில் பிறந்தார். நவீன காலத்தின் தலைசிறந்த ஜைன அறிஞர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். இவர் 8,000-க்கும் மேற்பட்ட ஜைன ஆகம வசனங்களை மனப்பாடம் செய்தவர்.

‘ஜைன தர்ஷன்’, ‘அனேகாந்த்வாத்’, மற்றும் ‘மோக்ஷமார்க் தர்ஷன்’ உள்ளிட்ட ஜைன தத்துவம் மற்றும் நெறிமுறைகள் குறித்து 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். இவரது நூற்றாண்டு தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போதுதான் அவருக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்டது.

****

ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் இருவர் கைது

ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு, அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘பைப் குண்டு’ வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், மதுரையில் பால் வியாபாரி சுரேஷ், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பூசாரி முருகன், வேலுாரில் பா.ஜ., மருத்துவ பிரிவு செயலர் அரவிந்த் ரெட்டி, பா.ஜ., மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.

மேலும், மாநிலம் முழுதும் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இது, போலீசாரை அதிர்ச்சியடைச் செய்தது. இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., பிரிவின் எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்தனர்.

இது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த அல் – உம்மா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோர், ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத கும்பலின் தளபதியாக செயல்பட்டு வந்த, நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்; திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஆகியோர் தப்பிவிட்டனர்.

மொத்த கொலைகளுக்கும் மூளையாக செயல்பட்டது அபுபக்கர் சித்திக் தான். தொடர் விசாரணையில், தெரியவந்தது.

அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் பதுங்கி இருக்கும் தகவல், மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. அவர்கள், அத்தகவலை உறுதி செய்த பின், தமிழக போலீசாருக்கு தகவலை தெரியப்படுத்தினர். ஆந்திராவுக்கு சென்ற தமிழக காவல் துறையின் ஏ.டி.எஸ்., பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், இருவரையும்  கைது செய்தனர்.

****

ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூஜாரிகள் தடுக்க வேண்டும் ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு

ராமேஸ்வரம்; ”கிராம கோயில் பூஜாரிகள் ஆன்மிக போதனைகள்மூலம் மதமாற்றத்தை தடுக்க வேண்டும்” என தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தெரிவித்தார்.

ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் ஜூன் 15ல் தமிழ்நாடு வி.எச்.பி., சார்பில் கிராமக் கோயில் பூஜாரிகளுக்கு பயிற்சி முகாம் துவங்கி தொடர்ந்து 15 நாட்கள் நடந்தது. நேற்று நிறைவு விழாவையொட்டி கோசுவாமி மடத்தில் உள்ள தத்தாத்ரேயர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பூஜாரிகள் பூணுால் அணிந்தனர். பயிற்சிக்குரிய சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.ஆர்.கோபால்ஜி பேசியதாவது:

மதசார்பற்ற நம்நாட்டில்அதுவும் தமிழகத்தில் ஹிந்து கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதுதான் நம் பலவீனம். இதனை மீட்க நாம் போராட வேண்டும். அக்காலத்தில் கோயிலுக்கு ஆன்மிக பெரியோர்கள் தானமாக கொடுத்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இன்று அரசியல்வாதிகள் கபளீகரம் செய்கின்றனர்.

ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலம் முதல் தற்போது வரை மதமாற்றம்நடக்கிறது. இது ஹிந்து சமூகத்திற்கு பேரழிவு ஆகும். எனவே கிராமங்களில் ஆன்மிக போதனைகள் மூலம் மக்களிடம் ஹிந்து மதத்தின் புனிதம், கடவுளின் வரலாற்று கதைகளை விளக்கி தெய்வ நம்பிக்கை ஏற்படுத்தி மத மாற்றத்தை தடுக்க வேண்டும். மதம் மாறியவர்களை தாய்மதமான இந்து மதத்திற்கு அழைத்து வரவேண்டும். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சென்னையில் உள்ள விசுவ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் ஏராளமானோர் தாய்மதம் திரும்புகின்றனர்.

கிராம கோவில் பூஜாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம்; ரூ.4 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதை, ரூ.5 ஆயிரமாக்க வேண்டும். இப்போது ஊக்கத்தொகையாக ரூ.1,500 கொடுப்பதாக அறிவித்துள்ளதை அதை செயல்படுத்தவேண்டும். இவ்வாறு ஆர்ஆர். கோபால்ஜி பேசினார்.

பயிற்சி முகாமில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் பூஜை, கும்பாபிஷேகம் ஆகம முறைப்படி நடக்க வேண்டும். அதை மீறி மொழி அரசியல் கூடாது. மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும்.

குழந்தை பிறப்பில் நாட்டின் சராசரி 1.9ஆக குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அது, 1.4ஆக குறைந்திருப்பது அபாய எச்சரிக்கை. இதனால், குடும்ப அமைப்பு சீரழியும்.

இந்து பெண்கள் குறைந்தது 3 குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வேண்டும்.

கோவில்களில் கட்டண தரிசன முறையை கைவிட வேண்டும். பென்ஷன் பெறும் கிராமக் கோவில் பூஜாரிகள் மறைவுக்கு பிறகு, அவர் மனைவிக்கு வழங்க வேண்டும்.

எல்லா கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இந்து கோவில் சொத்துக்களில் மாற்று மதத்தவருக்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்ய வேண்டும். கோவில் தொடர்புடைய பணிகளில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். மாற்று மதத்தினரை பணியமர்த்தக்கூடாது.

****

சுருக்கமான செய்திகள்

நாளை ஜூலை ஏழாம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை  ஜூலை 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை விடப்படும் .முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடு தான் திருச்செந்தூர். இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் விழா நாளை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருவார்கள் என்பதால்  பிஆர்டிசி சார்பில்  600 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

*****

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 20 லட்சம் ரூபாய், ஆயிரத்து 30 கிராம் தங்கம் மற்றும் 15 கிலோ 405 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கோயிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வசந்த மண்டபத்தில் சுமார் 8 மணிநேரம்  நடைபெற்றது.

****

ஜெர்மனியில் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு “புளூ டங்” விருது

ஜெர்மனியில் நடைபெற்ற Greator ‘கிரேட்டர் விழா 2025’ நிகழ்ச்சியில் சத்குருவிற்கு “புளூ டங்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நடைபெற்ற ‘கிரேட்டர் விழா 2025’ எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு “புளூ டங்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக கிரேட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ஜெர்மனியில் செயல்பட்டு “கிரேட்டர் (Greator)” எனும் நிறுவனம், உலகெங்கும் உள்ள இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.

****

இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சை கருத்து… வைகோவின் முன்னாள் உதவியாளர் கைது

சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்பு நாத்திக பிரசார கருத்துகளைப் பதிவிட்டுவந்த சமூக ஆர்வலரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் முதன்மை உதவியாளருமான அருணகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் அருணகிரி 60. இவரது தந்தை பழனிச்சாமி சங்கரன்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர்.. சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்பு நாத்திக பிரசாரத்தை தீவிரமாக செய்து வந்தார். இதனால், சங்கரன்கோவில் போலீசில் ராஜா என்பவர், இந்து கடவுள்களை அருணகிரி அவதூறு செய்து பதிவிட்டு வருவதாக புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் அருணகிரியிடம் ஏற்கனவே, போலீசார் விசாரணை நடத்தினர். அருணகிரியை ஜூலை 1-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.. அவர் மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டு திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..

****************

அமெரிக்காவில் கோவில் மீது தாக்குதல்

அமெரிக்காவில் உள்ள இஸ்கான் கோவில் மீது துப்பாக்கி சூடு – இந்தியா கண்டனம்

அமெரிக்காவின் உட்டா UTAH மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் மீது துப்பாக்கி சூடுசூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்கான் கோவிலின் உள்ளே பக்தர்கள் மற்றும் விருந்தினர்கள் இருக்கும்போது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. 20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் வரை கோவிலின் கட்டிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்கள்மீது பாய்ந்துள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவத்துக்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு  ஜூலை மாதம் 13 –ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags- Gnanamayam, World Hindu News, Tamil, 6th July 2025, Broadcast, Latha, Vaishnavi.