லிப்ஸ்டிக்! ஸ்டிரா!! – கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்! (Post No.4020)

Written by S NAGARAJAN

 

Date: 21 June 2017

 

Time uploaded in London:-  5-44  am

 

 

Post No.4020

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

கம்ப சித்திரம்

 

இலங்கை மங்கையின் லிப்ஸ்டிக்! அயோத்தி மங்கையின் ஸ்டிரா!! – கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்!

 

ச.நாகராஜன்

 

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இராமாயணத்தில் ஏராளமான சுவையான செய்திகளைத் தந்துள்ளான்.

 

உற்றுக் கவனித்து ரசிப்போர் வியப்பது நிச்சயம்.

எடுத்துக்காட்டாக அவன் லிப்ஸ்டிக்கையும் ஸ்டிராவையும் குறிப்பிட்டிருப்பதைச் சொல்லலாம்.

 

இருபதாம் நூற்றாண்டில் நவ நாகரிக மங்கையர்  மேக் அப் செய்து கொள்ளூம் போது லிப் ஸ்டிக்கைப் பூசாமல் இருப்பது இல்லை.

 

இந்த உதட்டில் பூசும் அழகிய சாயம் பற்றி கம்பன் குறிப்பிடும் பாடல் இது:

 

 

குண்டலக் குழைமுகக் குங்கும கொங்கையார்

வண்டலைத் தெழுகுழற் கற்றைகால் வருடவே

விண்டலத் தகவிரைக் குமுதவாய் விரிதலால்

அண்டமுற் றுளதவூ ரழுதபே ரமலையே

     (அக்ககுமாரன் வதைப் படலம் பாடல் 42- வை.மு.கோ பதிப்பு)

 

 

இப்பாட்டின் பொருள் : குண்டலமென்ற காதணி அணிந்த செவி உடைய முகத்தையுடைய குங்குமக் குழம்பை அணிந்த மார்பகம் கொண்டவரான இராக்ஷஸ மகளிர்  வண்டுகளை அலையச் செய்து  மேல் எழுப்பப் பெற்ற கூந்தல் தொகுதி அவிழ்ந்து காலகளிலே விழுந்து புரண்டு கொண்டிருக்க நறுமணமுள்ள ஆம்பல் போன்ற செம்பஞ்சு ஊட்டிய வாய்களை திறந்து விரிவதனால் அந்த இலங்கையில் உள்ளார் அழுத பெரும் குரலோசை மேல் உலகம் வரை எட்டிற்று.

 

 

இலங்கை ராக்ஷஸ மகளிர் செம்பஞ்சுக் குழம்பை வாயில் அழகுக்காகப் பூசியதை கம்ப சித்திரம் காட்டுகிறது.

சிந்தாமணியிலும் கூட ‘அம்மலரடியுங்கையும் அணி கிளர் பவளவாயும் செம்மலர் நுதலு நாவும் திருந்தொளி யுகிரோடங்கே, விம்மிதப்பட்டு வீழ வலத்தகமெழுதியிட்டாள் என்று வருகிறது.

 

 

அலத்தகக் குமுதம் என்பது செங்குமுதம் ஆகும். அந்தக் காலத்திலேயே மகளிர் அனைவரும் செம்பஞ்சுக் குழம்பை வாயில் பூசிக் கொள்வது வழக்கம்  என்பது தெரிய வருகிறது.

அலத்தகம் என்பது தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது!

 

 Ms Lalita malar maniam of Kualalumpur enjoying tender coconut water with a straw.

 

ஆக லிப்ஸ்டிக்கை சுந்தர காண்டத்தில் கூறிய கம்பன். நாம் இன்று இளநீர் குடிக்கவும், குளிர் பானங்களைக் குடிக்கவும் பயன்படுத்தும் ஸ்டிரா பயன்பாட்டையும் பால காண்டத்தில் உண்டாட்டு படலத்தில் குறிப்பிடுகிறான்.

பாடலைப் பார்ப்போம்:

 

 

 

வான் துணை பிரிதலாற்றா வண்டினம் வச்சை மாக்கள்

ஏன்றமா நிதியம் வேட்ட விரவல ரென்ன வார்ப்பத்

தேன் தரு கமலச் செவ்வாய் திறந்தன ணுகர நாணி

ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால் ஒருத்தி உண்டாள்.

        (பாடல் 19)

 

 

தசரதனுடன் மிதிலை நோக்கிச் சென்றது அவனது சேனை.

அப்போது நடந்த நிகழ்ச்சிகளை வரிசையாகக் கூறுகிறான் கம்பன்.

 

பிரிய மாட்டாமல் ஆகாயம் வரை வண்டுகள்  மொய்த்துக் கொண்டிருக்கின்றன.கஞ்சனிடத்தில் இருக்கின்ற பெருஞ்செல்வத்தைக் கேட்க வந்துள்ள யாசகர்கள் போல அந்த வண்டுகள் ஆர்ப்பரிக்க சேனைக் கூட்டத்தில் சென்ற ஒருத்தி  தேனைச் சொரிகின்ற தாமரை மலர் போல உள்ள தனது செந்நிற வாயைத் திறந்து  மதுவைப் பருகுவதற்குக் கூசி, செங்கழுநீரின் உள் துளையுள்ள தண்டினால் கிண்ணத்தில் இருந்ததை உறிஞ்சிப் பருகலானாள்.

மதுவைப் பருக நாணிய அயோத்தி மங்கை செங்கழுநீரின் உள் துளை உள்ள தண்டை ஸ்டிராவாகப் பயன்படுத்தினாள். அந்தத் துளை வழியே மதுவை உண்டாள்.

 

 

ஆக லிப்ஸ்டிக்கும், லிப் மூலமாக உறிஞ்சிக் குடிக்கும் ஸ்டிராவும் கூட கம்ப சித்திரத்தில் இடம் பெற்று விட்டதை எண்ணி ரசிக்கலாம்; மகிழலாம்.

 

போகிற போக்கில் கம்பன் தரும் சின்னச் சின்ன தகவல்கள் இவை.

அந்தக் காலத்திலேயே லிப்ஸ்டிக்; அந்தக் காலத்திலேயே ஸ்டிரா!

அழகு தானே!

****

வேத காலம் கி.மு.4500 ஏன்? எப்படி? திலகர் விளக்கம் (Post No.4007)

Written by London Swaminathan
Date: 16 June 2017
Time uploaded in London- 15-49
Post No. 4007
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

பால கங்காதர திலகர் பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்; பத்திரிகையாளர்; சம்ஸ்கிருத அறிஞர்; எழுத்தாளர். அவர் 1856-ல் மஹாராஷ்டிர மாநிலத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்தார். 1920ல் பம்பாயில் உயிர்நீத்தார். அவர் எழுதிய கீதா ரஹஸ்யம் என்ற நூலும்  ஓரியன் அல்லது வேத காலம் குறித்த ஆராய்ச்சி என்ற (The Orion or Researches into the antiquity of the Vedas) நூலும் மிகவும் புகழ்பெற்ற நூல்கள். அவர் வேத இலக்கியத்தில் குறிப்பிடப்படும் நட்சத்திரங்களின் நிலைகளை ஆராய்ந்து அவை கி.மு.4500-ஐ ஒட்டி எழுதப் பட்டிருக்க வேண்டும் என்கிறார். பெரும்பாலான பாடல்கள் கி,மு 3500-க்கும் 2500-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப் பட்டிருக்க லாம் என்பது அவரது துணிபு.

அவர் ஏன் இந்த ஆராய்ச்சியில் இறங்கினார் என்பதை அவரே தனது வேத கால ஆராய்ச்சிப் புத்தகமான ஓரியனில் (அரையன் என்றும் சொல்லுவர்) சொல்கிறார்

ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தில் திருவாதிரை, மிருகசீர்ஷம் முதலிய நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நூலின் முகவுரையில் திலகர் சொல்லுவதாவது:–

 

 

1893 ஆம் ஆண்டில் அவர் எழுதுகிறார்:- நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பகவத் கீதை படித்துக் கொண்டிருந்தேன். அதில் “மாதங்களில் நான் மார்கழி” –  என்று கிருஷ்ணர் சொல்லுவதிலிருந்து வேத காலம் பற்றிய முக்கியமான தடயங்கள் கிடைக்கலாம் என்று எண்ணினேன். ஆதிகால காலண்டர் வேதங்களில் உள்ளது. அதுபற்றி லண்டன் மஹாநாட்டுக்கு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். அதுவோ கட்டுரை அளவுக்கு நிற்காமல் புத்தகம் அளவுக்கு விரிந்தது.

அங்கே சுருக்கத்தை மட்டும் அனுப்பிவிட்டு புத்தகத்தை சில  மாறுதல்கள், பிற்சேர்க்கைகளுடன் வெளியிடுகிறேன்.

கட்டுரையின் தலைப்பிலிருந்தே நான் எதைப் பற்றி ஆராய்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இப்போது கி.மு.2400க்கு முன் வேத காலத்தைத் தள்ளுவதற்கு ஒரு தயக்கம் காணப்படுகிறது. ஆனால் வேதங்களில் குறித்துள்ள விஷயங்கள் இதை கி.மு.4000-க்குப் பின்னர் என்று சொல்லமுடியாத தெளிவான குறிப்புகளாக உள்ளன.

சம இரவு நாள் எனப்படும் Vernal Equinox வெர்னல் எக்வினாக்ஸ் அப்பொழுது ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தில் இருந்தது. இது தொடர்பாக வேத கால இலக்கியத்தில் உள்ள கதைகள், பாடல்களைக் காட்டுகிறேன். அவைகளை அறிவுபூர்வமாக விளக்குகிறேன். இதன் மூலம் வேதங்களில் உள்ள கதைகளுக்கு விளக்கமும் கிடைக்கிறது. மேலும் ஈரான், கிரீஸ் ஆகிய நாடுகளில் உள்ள புராணக் கதைகளுடன் இது ஒத்து இருக்கிறது இது இறுதியான ஒரு முடிவு என்று சொல்ல முடியாது. ஆனால் நான் புராணக் கதைகளையோ, சொல் ஆராய்ச்சி அடிப்படை யிலோ  என் வாதங்களை எழுதவில்லை . ஆகையால் அக்கதைகளை தவறு என்று காட்டினாலும் வேதகால இலக்கியம் முழுதும் சிதறிக்கிடக்கும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட எனது  வாதங்களைப் பாதிக்காது.

 

என்னால் முடிந்த அளவுக்கு புரியாத வானியல் (Technical) பதங்களைத் தவிர்த்துள்ளேன். ஆயினும் காலக் கணக்கீடு பற்றிய இந்திய முறைகளை அறியாதோருக்கு, இது கொஞ்சம் கடினமாகவே இருக்கும். என்னுடைய வாதங்களை ஏற்று,  ஒருவேளை இரண்டாவது பதிப்பு தேவைப்பட்டால் அப்பொழுது இந்த விஷயங்களைக் கொஞ்சம் விளக்கி எழுதுவேன்.

 

நான் வானியல் தொடர்பான விஷயங்களையே எழுதினாலும் பெண்ட்லியின் (Bentley) புத்தகத்தைப் பார்த்தவர்களுக்கு இது வான சாத்திரம் கூட அல்ல, சுலபமான ஒரு கட்டுரை என்று புரியும்.

ரிக்வேத காலத்தை நான் மிகவும் பழைய காலத்துக்குத் தள்ளுகிறேனோ என்று சிலர் நினைக்கலாம். ஆனால் வரலாற்று அல்லது விஞ்ஞான ஆராய்ச்சிகளில் உண்மையைக் கண்டுபிடிப்பதே நோக்கம் ஆதலால் அத்தகைய அச்சங்கள் தேவையற்றது.

 

ஏற்கனவே கோல்ப்ரூக், பெண்ட்லி (Colebrook, Bentley and others) முதலியோர் போன வழியில்தான் நானும் போகிறேன். ஆயினும் நான் சொல்லும் சம்ஸ்கிருத விளக்கங்கள் சரியா இல்லையா என்பதை சம்ஸ்கிருத அறிஞர்கள் தீர்மானிக்கட்டும்.

 

இன்னொரு விஷயம், இந்தப் புத்தத்தில் சேர்க்கப்படவில்லை. ராமனின் ஜாதகம், மஹாபாரதப் போர்க்கால கிரஹ நிலைகள் ஆகியவற்றைக் கொண்டு சிலர் ராமாயணம், மஹாபாரதம் ஆகியன கி.மு.5000 அல்லது 6000 என்று கணித்து, வேதங்கள் அதற்கும் முந்தையவை என்று வாதிடுகின்றனர். அதே குறிப்புகளை வைத்து ராமரின் ஜனனம் கி.மு. 961 என்று பெண்ட்லி காட்டுவதால் இந்த வகையான கணக்குகளும் அறிக்கைகளும் எவ்வளவு லேசானவை என்பதை அறியலாம். இப்போது நம்மியையே உள்ள முரணான விஷயங்களைக் கொண்ட புராணங்கள் முந்தைய பழைய வடிவத்தில் நம் கைகளில் தவழாமல் இருக்கலாம். மேலும் மஹாபரத போரின்  போதான கிரஹ நிலைகள் குழப்பமாக உள்ளன. நல்ல அல்ல கெட்ட கிரஹ நிலைகளைக் காட்ட அவர்கள் இப்படிச் சொல்லி இருக்கலாம்.

 

பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்து காத்திருந்ததை வைத்து அவர் கிருத்திகை நட்சத்திர காலத்தில் (Krithika Period)  வாழ்ந்தது தெரிகிறது. ஆனால் இப்போது நம்மிடமுள்ள பாரதம் போர் முடிந்து நீண்ட காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்டதாகும்

 

இதற்குப் பின்னர் திலகர் மாக்ஸ்முல்லர் முதலியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இறுதியில் ஒரு சம்ஸ்கிருதப் பழமொழியைத் தருகிறார் “ஒரு தங்கம் தூயதா இல்லையா என்பதை நெருப்பில் புடமிட்டுப் பார்த்தால் தான் தெரியும்”. இந்த வாசத்துடன் என் ஆராய்ச்சிப் புத்தக த்தை உங்கள் கைகளில் தருகிறேன். என்னுடைய மற்ற பணிகளால் (சுதந்திரப் போராட்டம்) எதிர்காலத்தில் இந்த ஆராய்ச்சிக்கு இவ்வளவு நேரத்தை ஒதுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. ஆயினும் நியாயமான ஓரச் சார்பில்லாத ஒரு விவாதத்துக்கு என் ஆய்வுக்கட்டுரை வழி செய்தால் அதுவே எனக்கு திருப்தி தரும். நம்முடைய நாகரீகத்தின் மிகப் பழைய பதிவுகள் நம்முடைய புனித நூலகளில் உள்ளன. அவற்றின் பழமையை ஆராய இது துணை புரியட்டும்.

 

புனா, அக்டோபர் 1893  பி.ஜி. திலக்

 

–Subham–

 

 

விடமின் டி பற்றாக்குறை உள்ளவர்களா நீங்கள்? (Post No.4005)

Written by S NAGARAJAN

 

Date: 16 June 2017

 

Time uploaded in London:-  5-46  am

 

 

Post No.4005

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

விடமின் டி பற்றாக்குறை உள்ளவர்களா நீங்கள்? (Post No.4005)

 

ச.நாகராஜன்

 

திருநெல்வேலியிலிருந்து வெளி வரும் ஹெல்த்கேர் மாத இதழில் மே 2017 இதழில்வெளியாகியுள்ள கட்டுரை

 

 

விடமின் டி ஆரோக்கியமான எலும்பைக் கொள்ளவும் உறுதியான பற்கள் மற்றும் தசைகளைக் கொள்ளவும் இன்றியமையாதது.

 

 

குளிர்காலத்திலும் இலையுதிர் காலத்திலும் தினமும் இதை துணை உணவாக எடுத்துக் கொள்ளுதல் நலம் என்று முன்னர் ஆரோக்கியத்திற்கான வழியாக நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். ஆனால் இப்போதோ பல ஆய்வுகளின் மூலமாக இதை தினமுமே எடுத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

 

 

ஆனால் விடமின் டி அபரிமிதமாகக் கிடைக்கும் ஒரு ஆதாரம் சூரிய ஒளியே.

 

 

சூரிய ஒளி செலவில்லாதது. எப்பபொழுதும் கிடைப்பது. பக்க விளைவு இல்லாதது. இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் சூரிய ஒளிக்குப் பஞ்சமே இல்லை. இதைப் பயன்படுத்த முடியவில்லை என்றால் அதைப் போன்ற பிரமாண்டமான தவறு வேறெதுவும் இல்லை.

 

 

,மீன் வகைகள், செறிவூட்டப்பட்ட ப்ரெட் ஆகியவற்றிலும் விடமின் டி உள்ளது.

 

சுவாசக் குழாய் சம்பந்தமான கோளாறுகளை விடமின் டி உள்ள துணை உணவுகள் நீக்கி விடும்.

இதன் மூலம் ஏராளமான அகால மரணங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.

 

சுவாசக் கோளாறு என்பதில் வறண்ட தொண்டை, தொண்டைப் புண், ஜுரம், தும்மல் உள்ளிட்டவையும் அடங்கும்,நிமோனியா போன்ற அதி தீவிர நோய்களும் அடங்கும்.

 

 

டாக்டர் ஜகி ஹாஸன் ஸ்மித் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர். அவர் தனது ஆய்வு பேப்பரில் விடமின் டி தசைகளின் வலிமையைக் கூட்டுகிறது என்பதைத் தெரிவிக்கிறார். எலும்புகளில் கால்சியம் படிந்து விடுவதையும் விடமின் டி தடுத்து நிறுத்துகிறது. எலும்புகளில் கால்சியம் படிவதனாலேயே ரிக்கட் வியாதி (எலும்புகள் வளைவது) தடுத்து நிறுத்தப்படுகிறது. அத்துடன் Ostomalacia எனப்படும் எலும்புகள் மிருதுவாகும் தன்மையும் தடுத்து நிறுத்தப்படுகிறது.

 

ஆனால் விடமின் டி வெகுவாக பற்றாக்குறையாக இருந்த்தெனில் துணைஉணவுகள் தேவைப்படும்.

 

 

நீஙகள் அபாயகரமான பிரிவில் சேர்ந்தவராக இருப்பின் அதாவது தடித்த தோலைக் கொண்டவராகவோ, அல்லது கர்ப்பிணியாக்வோ அல்லது நான்கு வயதிற்கும் கீழான குழந்தையாகவோ இருப்பின் ஒரு நல்ல மருத்துவரின் ஆலோசனைப் படி நடத்தலே நலம்.

 

மற்றவர்கள் 10 மைக்ரோகிராம் அளவு விடமின் டி துணை உணவை எடுத்துக் கொள்ளலாம்.

 

ஆனால் துணை உணவு என்பது கடைசிபட்சமாகவே இருக்க வேண்டும். ஏனெனில் துணை உணவால் முதலில் பயன் அடைவது அதைத் தயாரிக்கும் கம்பெனிகளே. அவைகளுக்கு கொழுத்த லாபம் கிடைக்குமளவுக்கு உங்களுக்கு ஆதாயம் உண்டா என்றால் இல்லை என்ற பதிலே வரும்.

 

 

ஆகவே இயற்கை தரும் இன் மருந்தான சூரிய ஒளியை அதிகம் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

 

ஓளி மயமான வாழ்க்கைக்கு உதவுவது சூரியஒளியே!

**************************

 

மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி! (Post No.4002)

Written by S NAGARAJAN

 

Date: 15 June 2017

 

Time uploaded in London:-  6-01  am

 

 

Post No.4002

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா 26-5-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

நாஜிகளுக்கு பலியானோரின் மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி!

 

by ச.நாகராஜன்

 

 

கர்வம் என்பது ஒரு ஆயுதம் – 2003ஆம் ஆண்டு வெளியான ‘தி ரெய்ஸ் ஆஃப் ஈவில் என்ற படத்தில் ஹிட்லர் கூறுவது

 

 

ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் நடத்தப்பட்ட, ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான கொலைகளுக்கு ஒரு கணக்கே இல்லை,

இவற்றில் மிகவும் மோசமான கொலைகள் கருணைக் கொலை என்ற பெயரில் நடத்தப்பட்டவை தாம்!

 

உடல் ஊனம் அல்லது குறைபாடு ஹிட்லரைப் பொறுத்த மட்டில் ஒரு மருத்துவக் குறைபாடு அல்ல. அது இனத்தின் மரபணுவில் இருக்கும் ஒரு குறைபாடு என்று கருதப்பட்டது.

ஹிட்லர் “தனது ஆர்ய இனம்” என்பது உயரிய இனம் என்று கருதியதால் ஆயிரக்கணக்கான உடல் ஊனமுற்றோரைச் சிறை செய்து கருணக்கொலை செய்து அவற்றின் மூளைகளை ஆய்வு செய்யக் கட்டளையிட்டான். இந்த மூளைகள் இன்னும் இருக்கின்றன.

 

 

இவற்றை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தி இந்த மூளைக்குச் சொந்தக்காரர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

 

இந்த ஆயிரக்கணக்கான மூளைகள் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட சிலைடுகள் உள்ளிட்டவை அனைத்தும் மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடியில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிரது.

2017, ஜூன் மாதம் துவங்கி மூன்று ஆண்டு காலம் 15 லட்சம் யூரோ (ஒரு யூரோ என்பது சுமார் 70 ரூபாய்) செலவில் இந்த பிரம்மாண்டமான ஆய்வு தொடங்க உள்ளது

இந்த மூளை ஆய்வுத் திட்டத்திற்கு அகிடன் டி 4 (Akiton T4)  என்று பெயர்.

 

தனது உயரிய இனத்தைச் “சுத்தமாக” வைத்துக் கொள்ள ஹிட்லர் 1933இல் தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் இந்த மூளை ஆராய்ச்சியை மேற்கொண்டான். மனம் மற்றும் உடல் ரீதியிலான குறைகள் இனத்தை அசுத்தப்படுத்தும் குறைகள் என்பது அவனது கருத்து.

 

1940இல் டி4 திட்டம் தொடங்கப்பட்டவுடன் ஆயிரக்கணக்கில் உடல் ஊனமுற்றோர் சிறை பிடிக்கப்பட்டு மரணக் கிடங்கு என்று சொல்லப்பட்ட ஓரிடத்தில் இருந்த கருணைக்கொலைக்கான ‘மருத்துவ தொழிற்சாலை மையங்க’ளுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு குழந்தைகளுக்கு மரண ஊசி போடப்பட்டது. பெரியவர்க்ள் கேஸ் சேம்பரில் விஷ வாயு செலுத்தி கொல்லப்பட்டனர்.

 

 

இப்படி கொல்லப்பட்டோர் சுமார் இரண்டு லட்சத்தி ஐம்பதியாயிரம் பேர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஐந்து சதவிகிதம் பேரின் மூளைகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன.

 

மூளைகள் அனைத்தும் பெர்லினில் உள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பப்பட்ட்ன. இந்த நிறுவனம் ஏராளமான விஞ்ஞானிகள் நோபல் ப்ரிசு பெற வழி வகுத்த ஒரு அருமையான நிறுவனம்.

 

 

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் இதை மாக்ஸ்பிளாங்க் சொஸைடி தன் வசம் எடுத்துக் கொண்டது. விஞ்ஞானிகள் தாஙகள் மேற்கொண்ட மூளை மற்றும் செல் ஆராய்ச்சிக்கு இங்கு வந்து பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த மூளைகளைப் பயன்படுத்தலாயினர்.

 

1980ஆம் ஆண்டு ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இன்னும் ஏராளமான மூளைகளைக் “கண்டுபிடித்தனர்”.

மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடி 1933 முதல் 1945 முடிய ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் கொல்லப்பட்டோரின் மூளைகளை மூனிச்சில் உள்ள ஒரு கல்லறையில் புதைத்து வைத்திருந்தது. இவை இப்போது எடுக்கப்பட்டு விட்டன.

 

எழுபது ஆண்டுகள் கழித்து செய்யப்பட இருக்கும் இந்த மூளை ஆராய்ச்சி மிக பிரம்மாண்டமானது.

 

இதில், கொல்லப்பட்டோரை அடையாளம் கண்டு பிடித்து அவர்கள் பெயருடன் உரிய விதத்தில் அந்த மூளைகளைப் புதைப்பதும் ஒரு பெரிய நினைவுச் சின்னத்தை எழுப்புவதும் இந்த ஆய்வின் முடிவில் செய்யப்படும்.

 

எதிர்காலத்தில் யாரும் இப்படிப்பட்ட ஈனத்தனமான செயல்களை விஞ்ஞானத்தின் பெயரால் செய்யக்கூடாது என்பதற்கும் வரலாற்றை முறைப்படுத்துவதற்குமான ஒரு ஆராய்ச்சியாக இது கருதப்படுகிறது.

 

உலகம் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் வந்து விட்டது!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

மர்யா ஸ்க்லோடோவ்ஸ்கா (Marya Sklodowska)  என்ற இயற் பெயருடைய பெண்மணி தான் பின்னால் நோப பரிசு பெற்று பிரபலமான விஞ்ஞானி மேடம் க்யூரி (1867-1934) ஆவார். இளமையில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் பின்னால் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்.

 

 

சிறிய வயதிலேயே ஒரு விஷயத்தில் மனதைக் குவித்து கவனம் செலுத்துவதில் அவரது திறமை அபாரமாய் இருந்தது. ஒரு நாள் அவர் படித்துக் கொண்டிருக்கும் போது அவரது சகோதரி அவரைச் சுற்றி நாற்காலிகளை வரிசையாகச் சுற்றி அடுக்கலானார் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் க்யூரி படித்துக் கொண்டிருந்தார்.

 

படித்து முடித்த பின்னர் அவர் ஒரு நாற்காலியைத் தொட அனைத்து நாற்காலிகளும் சரிந்து விழுந்தன. ‘என்ன முட்டாள்தனமான் காரியம் செய்திருக்கிறாய் என்பது தான் அவரது ஒரே கமெண்ட்..

 

மிகுந்த ஏழ்மையின் காரணமாகவே மிகுந்த தாமதத்துடன் 1891இல் அவர் சார்போன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். பாரிஸில் தான் தன் எதிர்காலக் கணவரான பால் அபெல்லை (Paul Appelll) அவர் சந்தித்தார். தனது பரிசாக அவர் இளம் பெண்மணியான கியூரிக்கு அவர் தந்தது எலக்ட்ரோ மாக்னெடிஸம் பற்றிய ஒரு கட்டுரை தான்!

 

க்யூரிக்கும் அவரது கணவருக்கும் விருதுகள் வந்து குவிந்தன. ஆனால் அவற்றை அவர்கள் பெரிதாக மதிக்கவே இல்லை. லண்டன் ராயல் சொஸைடியால் வழங்கப்ப்ட்ட டேவி மெடலை தங்களின் குட்டிப் பெண்ணான ஐரீனுக்கு அவர்கள் விளையாடுவதற்காகத் தந்தனர். (ஐரீன் பின்னால் தன் கணவருடன் இணைந்து ஒரு நோபல் பரிசைப் பெற்றவர்). அதை ஐரீன் பிக் கோல்ட் பென்னி – பெரிய தஙகத்தினால் ஆன பென்னி நாணயம்- என்று சொல்லி விளையாடிக் கொண்டிருப்பாராம்.

1903இல் நோபல் பரிசு பெற்றவுடன் ஏராளமான பேர்கள் அவர்களை விருந்துக்கு அழைத்தனர். ஒரு நாள் மாலை பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியின் அதிகார பூர்வ இல்லமான எல்ஸி அரண்மணையில் நடந்த ஒரு விருந்துக்கு அவர் அழைக்கப்பட்டார். அவரை விருந்துக்கு அழைத்தவர் க்யூரியிடம் கிரீஸ் தேசத்து அரசர் வந்திருக்கிறார். அவரைப் பார்க்க விருப்பமா என்று கேட்டார். “அவரைப் பார்த்து எனக்கு என்ன ஆகப் போகிறது” என்று கூறிய க்யூரி அரசரைச் சந்திக்க விரும்பவில்லை.

 

தனது விஞ்ஞான ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்தி உழைப்பால் உயர்ந்தார் எளிய குடும்பத்தில் பிறந்த இந்த மேதை.

****

 

 

‘பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு! (Post No.3999)

Written by S NAGARAJAN

 

Date: 14 June 2017

 

Time uploaded in London:-  6-13  am

 

 

Post No.3999

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா 9-6-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

அதிசய கண்டுபிடிப்பாளர் ; ‘பேடண்ட் கிங் யோஷிரோ நகாமட்சு!

ச.நாகராஜன்

 

      “கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்டில் அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர் என்று பதிவு செய்யப்பட்ட யோஷிரோ நகாமட்சு தாம்ஸ் ஆல்வா எடிஸனை விட மூன்று மடங்கு அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவராகத் திகழ்கிறார். – அறிவியல் தகவல்

     இன்றைய உலகில் மிக அதிகமான கண்டுபிடிப்புகளுக்கான பேடண்டுகளை எடுத்து பேடண்ட் கிங் என்று பெயர் பெற்றிருப்பவர் யோஷிரோ நகாமட்சு (Yoshiko Nakamatsu) என்னும் ஜப்பானியர் தான்! 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி பிறந்து இப்போது 89 வயதாகியுள்ள இவர் தான் ஃப்ளாப்பி டிஸ்கைக் கண்டுபிடித்தவர். தாமஸ் ஆல்வா எடிஸன் ஏராளமான கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்தது போல இவரும் லீஃப் ஸ்பிரிங்குகளுடன் கூடிய குதிக்கும் ஷூக்கள், காலை வெதுவெதுப்பாக்கி மூளையைக் குளிர வைத்து அதன் திறனை அதிகமாக்கும் நாற்காலி, செக்ஸ் திறனை அதிகமாக்கும் சிடி(CD), மூளைத் திறனைக் கூட்டும் சிகரட் போன்ற சாதனம், கண்ணாடி அணிந்திருப்பது போலவே தோன்றாமல் இருக்கும் படி கண் போன்ற அமைப்பில் உள்ள கண்ணாடி உள்ளிட்ட சுமார் 4000 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    6000 பேடண்டுகள் எடுப்பதும் 144 ஆண்டுகள் வாழ்வதுமே தன் லட்சியம் என்கிறார். பிரபலமான டோக்கியோ பல்கலைக்கழகத்தில் படித்து பொறியியல் பட்டம் பெற்றவர் இவர்.

   ‘தி இன்வென்ஷன்ஸ் ஆஃப் டாக்டர் நகாமட்ஸ் என்று ஒரு நகைச்சுவையுடன் கூடிய டாகுமெண்டரி படம்  இவரைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது!

    2013ஆம் ஆண்டு இவருக்குப் கான்ஸர் நோய் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சையை மேற்கொண்டு வந்த இவரிடம் டாக்டர்கள் இன்னும் 15 நாள் தான் வாழ முடியும் என்றும் டிசம்பர் 31, 2015இல் இறுதி வந்து சேரும் என்று கூறினர். ஆனால் அதைப் பொய்யாக்கி தனது சிகிச்சையிலும் தானே புதுவழிகளை மேற்கொண்டு இவர் இன்னும் வாழ்ந்து வருகிறார்.ஆலிவ் ஆயிலும் ஒய்னும் கலந்த கான்ஸரை எதிர்க்கும் தன்மை கொண்ட ஒரு கலவையைக் கண்டு பிடித்து தனது கான்ஸரைக் குணமாக்க அவர் முயன்று வருவது லேடஸ்ட் செய்தி!

   ஜப்பானிய டாக்ஷோக்களில் பிரபலமாகிய இவர் தனது கண்டுபிடிப்புகளை நகைச்சுவை உணர்வுடன் விவரிப்பார்.

   தான் எப்ப்டி இவ்வளவு கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடிக்க முடிந்தது என்பதற்கு இவர் கூறும் காரணம் சற்று விசித்திரமானதுநீரில் மூழ்கி இருக்கும் போது மூச்சுத் திணறி ஆக்ஸிஜன் இல்லாமல் போகும் நிலையில் மூளையில் இவருக்கு ஐடியாக்கள் தோன்றுமாம். மூளை ஆக்ஸிஜன் இல்லாமல் அறவே செயல் இழந்து இறக்கும் நிலைக்கு வருவதற்கு அரை வினாடி முன்னால் அவருக்கு படைப்பாற்றல் திறன் கூடுமாம்.

   அத்துடன் அவரே வடிவமைத்துள்ள ஒரு அமைதி அறை என்ற காம் ரூமும் (Calm Room) அவருக்கு உதவுகிறதாம். இந்த பாத்ரூம் ஒரு ஆணி கூட அடிக்காமல் கட்டப்பட்டுள்ளது. அறை முழுவதும் 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டு வேயப்பட்டிருக்கிறது. இது ரேடியோ மற்றும் டெலிவிஷன் அலைகள் பாத்ரூமில் புகுவதைத் தடுத்து விடுமாம்.

  வீட்டில் ஒரு எலிவேடரை இவர் அமைத்திருக்கிறார். அது உயரத் தூக்கிச் செல்லும் லிப்ட் என்பதை இவர் மறுத்து, “அது செங்குத்தாக மேலே செல்லும் அறை; அதில் தான்  எனது சிந்தனை சிறப்பாக செயல்படுகிறது என்கிறார்.

 

   சிறந்த கண்டுபிடிப்பாளரான நகாமட்சுக்கு அரசியல் ஆர்வமும் ஆசையும் நிறைய உண்டு. கண்டுபிடிப்பின் ஒரு அங்கம் தான் அரசிய்ல் என்பது இவரது கருத்து.

     டோக்கியோவின் கவர்னருக்கான தேர்தலில் பலமுறை போட்டியிட்டிருக்கிறார், வெற்றி தான் கிடைக்கவில்லை. ஹாப்பினெஸ் ரியலைஸேஷன் பார்ட்டி என்ற சந்தோஷக் கட்சியின் சார்பில் ஜப்பானின் மேல் சபைக்காக இவர் போட்டியிட்டிருக்கிறார். ஆனால் அதிலும் வெற்றி பெறவில்லை.

      2005ஆம் ஆண்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கண்டுபிடிப்புகளுக்கு அளிக்கப்படும் இக்நோபல் பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது. எதற்காக இந்தப் பரிசு என்றால் சுமார் 34 ஆண்டுகள் தான் சாப்பிடுவதற்கு முன் தன் உணவை விடாமல் போட்டோ எடுத்ததற்காக! ஊட்டச்சத்து பற்றி அறிவதற்காக அவரால் எடுக்கப்பட்ட போட்டோக்களே இவை! இக்நோபல் பரிசை மகிழ்வுடன் ஏற்ற இவர் அந்த விழாவில் தனது மருத்துவ நிலை பற்றி ஒரு பாடலையும் பாடினார்!

  நியூயார்க் நகரில் 2016ஆம் ஆண்டு வாழ்நாள் தீர்க்கதரிசன விருது ஒன்றும் இவருக்கு அவரது 88வது பிறந்த நாளையொட்டி வழங்கப்பட்டது

இவரது கண்டுபிடிப்புகள் பிரபலமாகி அவற்றை உலகெங்கிலுமுள்ள மக்கள் இன்றும் வாங்கி வருகின்றனர்லவ் ஜெட் என்ற இவரது படைப்புக்கு சீனா உள்ளிட்ட நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. அந்தரங்க ஜனன உறுப்பில் பொருத்திக் கொள்ள வேண்டிய அதிசய படைப்பு இது. ‘ப்யான் ப்யான் பூட் என்ற இவரது இன்னொரு படைப்பையும் வெகுவாக உலகெங்கும் உள்ள விற்பனை நிறுவனங்கள் வாங்கி விற்கின்றன.

  இவரது படைப்புகள் அனைத்தும் இவரது நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

   ஜப்பானிய தொலைக்காட்சித் தொடர்களில் பிரபலமாகி இளைய தலைமுறையினருக்கு இவர் ஹீரோ என்றால் இன்னும் பல ஜப்பானியருக்கோ இவர் கடவுளே தான்! புதுக் கண்டுபிடிப்புகளுக்காக 41 முறை கிராண்ட்பிரிக்ஸ் விருதை   வென்றிருக்கும் இந்த புது படைப்புக் கடவுளின் புராணம் பெரியது, மகத்தானதும் கூட!.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படிப்பாலும் உழைப்பாலும் முன்னுக்கு வந்தவர். தனது இளமை நாட்களில் தன் குடும்பத்தின் வருமானத்திற்காக செய்தித்தாள்களை தினமும் விநியோகிப்பது அவரது வழக்கம்.

 

அவர் எதையும் வெளிப்படையாகப் பேசும் குணமும் கொண்ட்வர். 1979இல் நடந்த சம்பவம் இது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் அவர் திட்ட இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு சாடலைட்டை விண்வெளியில் அனுப்புவதற்கான தேதியும் நேரமும் குறிக்கப்பட்டது. ஆனால் சாடலைட் ஏவுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக  கம்ப்யூட்டர் ஏவுகணையைச் செலுத்துவதில் உள்ள ஒரு தவறைக் காட்டியது. ஆனால் அப்துல்கலாமோ அந்த எச்சரிக்கையை ஒதுக்கி விட்டு அதை விண்ணில் திட்டமிட்டபடி ஏவி விட்டார். இதைப்பற்றி நகைச்சுவையுடன் பின்னால் அவரே கூறியது: “மீடியாக்களுக்கு நான் மிகவும் பயந்தேன். அது விண்ணில் செல்வதற்கு பதிலாக வங்காள் விரிகுடாவில் விழுந்தது”

 

 

ஆனாலும் இஸ்ரோவின் தலைவரான சதீஷ் தவான் பத்திரிகையாளர் கூட்டத்தில், “இன்னும் ஒரு ஆண்டில் விண்ணில் சாடலைட்டைப் பறக்க் விட்டு வெற்றி பெறுவோம்” என்றார். அதன்படியே பின்னால் வெற்றி மேல் வெற்றி வந்து குவிந்தது.

மூளை ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வழிகள்! (Post No.3996)

Written by S NAGARAJAN

 

Date: 13 June 2017

 

Time uploaded in London:-  5-56  am

 

 

Post No.3996

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ஹெல்த்கேர் மாத இதழில் ஜூன் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

மூளை ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வழிகள்!

ச.நாகராஜன்

மனிதனின் செயல்பாட்டை நிர்ணயிக்க வல்ல முக்கியமான உறுப்பு மூளை. இதை ஆரோக்கியமாகவும் செயல்திறனுடனும் அதிக ஆற்றலுடனும் வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

நாளுக்கு நாள் முன்னேறி வரும் மூளையியல் ஆராய்ச்சிகள் பல உத்வேகமூட்டும் உதவிக் குறிப்புகளை நல்குகின்றன.

மூளை ஆரோக்கியத்திற்கென மையம் ஒன்றை நிறுவியவர் சான்ட்ரா பாண்ட் சாப்மேன். (Sandra Bond Chapman Ph.D.) டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இந்தப் பெண்மணி ‘மேக் யுவர் ப்ரெய்ன் ஸ்மார்டர் (Make Your Brain Smarter)  என்ற நூலை எழுதியுள்ளார். மூளை ஆற்றலை மேம்படுத்த  அவர் கூறும்         வழிகளில் முக்கிய,மான சிலவற்றைச் சுருக்கமாகக் கீழே காண்போம் :

அறிவியலின் வேகமான முன்னேற்றத்தால் ஒவ்வொரு மனிதனுடைய ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பழைய காலத்தை ஒப்பிடும்போது இது அதிகம். என்றாலும் கூட மூளை ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்பவர் மிகச் சிலரே. சிறிது ஆர்வம் இருந்தால் கூட போதும், ஒருவர் தன் மூளை ஆற்றலை வெகுவாக முன்னேற்றிக் கொள்ளலாம்.

புதிய் விஷயங்களில் ஆர்வம் காட்டுவது, மூளைக்கான பயிற்சிகளை மேற்கொள்வது, தனக்கென பிரத்யேகமான சில பொழுதுபோக்கு ஹாபிகளை தேர்ந்தெடுத்துக் கொள்வது போன்றவற்றால் மூளை ஆற்றல் மேம்படும்., நினைவாற்றலும் கூடும்.

போட்டி மிகுந்த இன்றைய நாட்களில் மூளையை கூர்மையாக வைத்துக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். சிறிது நேரம் வேலை பார்த்தாலேயே மூளை களைப்புற்று சோர்வை அடைவது இன்றைய நாட்களில் பலருடைய அனுபவமாக ஆகி விட்டது.. இதற்காக வெவ்வேறு சுற்றுலா தலங்களை நாடி புத்துணர்ச்சி பெறுவதும் வாடிக்கையாகி விட்டது.

ஆனால் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சியை அன்றாடம் எடுத்து வந்தால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாமே!

 

எனக்கு கூர்மையான மூளை இல்லையே என்று ஏங்குவோருக்கு ஆறுதலைத் தரும் ஆறு வழிகள் இதோ:-

  • பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதைத் தவிருங்கள்

இன்றைய அவசர யுகத்தில் பலரும் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்ய முயல்கின்றனர். மல்டி டாஸ்கிங் யுகம் இது என்று பெருமையாக வேறு சொல்லிக்  கொள்கின்றனர். மல்டி டாஸ்கிங் ஒருவரது மனோ ஆற்றலைக் குறைக்கிறது. மூளையைச் சீக்கிரம் சோர்வடையச் செய்கிறது. மன அழுத்தத்தை அதிகமாக்குகிறது. மாறாக ஒரே ஒரு காரியத்தை எடுத்துக் கொள்வது அதை செவ்வனே திற்ம்படச் செய்வது என்ற வழி முறையை மேற்கொண்டால் வேலையும் சிறப்பாக முடியும்; மூளையும் சோர்வடையாது.

2)  தேவையான தூக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று. ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை அன்றாடம் ஒவ்வொருவருக்கும் உறக்கம் தேவை. தூங்கும் நேரத்தில் தான் மூளை உள்ளார்ந்த ஆழ்நிலை மட்டத்தில் தகவல்களை ஒருங்கு சேர்த்து இணைத்துக் கொள்கிறது. இரவில் வெகு நேரம் முழித்திருந்து தூக்கத்தை தியாகம் செய்தால் மூளை ஆற்றலையும் செயல் திறனையும் தியாகம் செய்ததற்குச் சமம்

  1. உடல்பயிற்சி தேவை

ஒரு நாளைக்கு 30 நிமிட திறந்த வெளி உடற்பயிற்சி செய்வது உத்தமம்..  வாரத்திற்கு கும்றைந்த பட்சம் நான்கு முறையாவது இந்த 30 நிமிடப் பயிற்சியை அவசியம் செய்தல் வேண்டும். இது நினைவாற்றலைக் கூட்டுகிறது. கவனக் குவிப்பை மேமபடுத்துகிறது. மனதை ஒருமைப்படுத்துகிறது. மூளையில் உள்ள் நினைவாற்றலுக்கான பகுதியில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது

  1. முக்கிய விஷயங்களைத் தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

நீங்கள் படித்தவற்றில் முக்கியமானவற்றின் சுருக்கத்தை தனியே தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கோர்ஸ் அல்லது கருத்தரங்கம் சென்றீர்களா, உங்களுக்குத் தேவையான முக்கியமானவற்றைத் தனியே எழுதுங்கள். நல்ல புத்தகம் படிக்கிறீர்களா, அதன் அடிப்படை செய்தியை தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். புதிய ஐடியாக்கள் அல்லது யோசனைகள் தனியே குறிப்பது, நல்ல கவிதை அல்லது மேற்கோள்களுக்கான தனி நோட்புக்கைப் பயன்படுத்துவது ஆகியவை மூளையின் நீண்ட கால நினைவாற்றலைக் கூட்ட வழி வகுக்கிறது. இது உலகளாவிய அளவில் உள்ள நல்ல கருத்துக்களை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளவும், அடிப்படை உண்மைகளைத் திரும்பத் திரும்ப பெற்றுக் கொள்வதற்கும் உதவி செய்கிறது.

5. முக்கிய விஷயங்களில் கூர்மையான கவனக் குவிப்பு தேவை

தேவையற்ற விஷயங்கள் மற்றும் தகவல்களைத் தூக்கி எறியுங்கள். தேவையற்றதை படிக்காமல், பார்க்காமல் இருப்பது மூளை செயல்பாட்டைத் திறம்படச் செய்வதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மூளை ஆரோக்கியம் வேண்டுவோர் ‘இன் டேக் இன்ஃபர்மேஷன்’ எனப்படும் உள் கிரகிக்கும் விஷயங்களில் எதை எடுத்துக் கொள்வது  என்பது பற்றிய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

  1. உத்வேகத்துடன் இருங்கள்

எப்போதும் உத்வேகமூட்டப்பட்டுக் கொண்டே இருக்கும் மூளை வேகமாகவும் மிக்க வலுவுடனும் மூளையில் நியூரல் கனெக்‌ஷன்களை – மூளைத் தொடர்புகளைக் கொள்ண்டதாகவும் ஆகிறது. உங்களுக்கு விருப்பமான விஷயங்களை இனம் காணுங்கள். அதில் அக்கறை செலுத்தி அதைப் பற்றி மேலும் மேலும் அறிந்து பரவ்சப்படுங்கள்.

 

ஆறு மனமே ஆறு, மூளையை மேம்படுத்தும் வழிகள் ஆறு!

இவற்றைக் கடைப்பிடித்தால் கூர்மையுடனும் ஸ்மார்ட்டாகவும் ஆகி விடலாம்!

****

 

 

 

“ஆற்றல் புரட்சி” செய்யும் 13 வயதுச் சிறுவன் (Post No.3993)

Written by S NAGARAJAN

 

Date: 12 June 2017

 

Time uploaded in London:-  6-59  am

 

 

Post No.3993

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாக்யாவில் வெளி வரும் அறிவியல் துளிகள் தொடரில் 19-5-2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

“ஆற்றல் புரட்சி செய்யும் 13 வயதுச் சிறுவன்

ச.நாகராஜன்

“ மின்சாரம், நீர், ஏன், இசை நிகழ்ச்சி கூடத்தான் – இவை எல்லாவற்றையுமே நாம் எளிதில் கிடைப்பவையாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்குக் கிடைத்த வரங்களை எண்ணிப் பாருங்கள் – டாமியன் மார்லே

 

    பதிமூன்றே வயதான ஒரு சிறுவன் உலகில் ஆற்றல் புரட்சியைச் செய்கிறான் என்றால் அது விழிகளை விரிய வைக்கும் ஆச்சரியச் செய்தி தானே

அதிசயம், ஆனால் உண்மை! அமெரிக்காவில் நெவேடா பகுதியைச் சேர்ந்த மாக்ஸ் லோகன் (Max Loughan)  என்ற சிறுவன் தான் பிறந்ததன் நோக்கமே உலகைபிரகாசப்படுத்தத் தான் என்று அடித்துச் சொல்கிறான்.

தந்தையின் பாய்லர் அறை தான் அவனது லாபரட்டரி. எப்போதும் ஒரு லாபரட்டரி கோட்டை அணிந்து வலம் வரும் இந்தச் சிறுவனுக்கு உத்வேகம் ஊட்டுவது ஐன்ஸ்டீனும் நிகோலா டெஸ்லாவும் தான்.

இன்றைய தேவை பவர் தான். இதை இலவசமாக எடுக்க முயன்றால் உலகின் சர்வ பிரச்சினைக்ளும் தீரும் என்று தீர்க்கமாகக் கூறும் லோகன் தனது இரட்டைபிறவியாகப் பிறந்த தம்பி ஜாக்கின் மீது வயர்களைச் சுற்றுகிறான்.

ஒரு காப்பி டின், கொஞ்சம் வயர்கள், இரண்டு காயில்கள், ஒரு ஸ்பூனை வைத்து அவன் உருவாக்கியது எலக்ட்ரோ மாக்னடிக் ஹார்வெஸ்டர்.

இந்தக் கருவியியை வைத்துக் கொண்டு வயர்களை வானத்தை நோக்கிக் காட்ட வானிலிருந்து ஹார்வெஸ்டர் மூலமாக ஆற்றலைப் பெறுகிறான். அதை .சி. மின்சாரத்திலிருந்து டி.சியாக மாற்ற தம்பியின் மீது சுற்றப்பட்ட வயரில் இணைக்கப்பட்ட எல்..டி.பல்புகள் பளிச்சென்று எரிகின்றன.

இந்தச் சிறிய கருவியை உருவாக்க ஆன செலவு வெறும் 14 டாலர்கள் தான். இதையே பெரிய அளவில் செய்தால் ஏராளமான மின்சக்தி கிடைக்கும்.

அதாவது படிம எரிபொருளான பெட்ரோல், டீஸல் போன்றவை இல்லாமல் விண்ணிலிருந்தே இலவசமாக ஆற்றலைப் பெற முடியும். படிம எரிபொருளைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டால் வாகனங்கள் கக்கும் புகை வளி மண்டலத்தை மாசு படுத்தாது. வளி மண்டலம் சுத்தமாக இருந்தால் உலகின் இன்றைய அபாயமானபூமி வெப்ப மயமாதல் என்பது நீங்கி விடும்.

ஆக, இலவசமாக ஆற்றலைப் பெகறுவது சாத்தியம் தான் என்பதை நிரூபித்துக் காட்டிய லோனை டி.விக்கள் மொய்க்கின்றன.

பிரபல விஞ்ஞானியான நிகோலா டெஸ்லா 75 ஆண்டுகளுக்கு முன் வகுத்த கருத்தின் அடிப்படையில் அவர் செய்ய விழைந்த இலவச ஆற்றலைப் பெறும் உத்திக்கான கருவியை இப்போது செய்யும் லோகனைப் பாராட்டாதவரே இல்லை.

 

எலக்ட்ரோ மாக்னடிக் ஹார்வெஸ்டர் என்னும் கருவி எங்குமுள்ள எலக்ட்ரோ மாக்னெடிக் ஆற்றலைத் தன்னுள் பிடித்து சேமித்து வைத்துக் கொண்டு தேவையான இடத்தில் மின் சக்தியை வழங்கும்.

அபல்லோ 13 என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் ஒரு பரபரப்பான காட்சி வரும். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவில் ஒரு அறை முழுவதும் நிரம்பியிருக்கும் அதி புத்திசாலிகள் முடங்கி விட்ட விண்கலத்தை எப்படி மீண்டும் இயக்கி அதில் இருக்கும் மூன்று விண்வெளி வீரர்களை எவ்வாறு மீட்பது  என்பதைப் பற்றி தீவிரமாக விவாதிப்பர். அதில் ஒருவர், “நண்பர்களே, இது அனைத்துமே ஆற்றலைப் பற்றியது தான்! (Hey Fellows, It is all about Powr) என்று முத்தாய்ப்பாகக் கூறுவார். இந்த திரைப்படத்தின் பொருள் பொதிந்த இந்தக் கூற்று பிரபலமாகி விட்டது.

 ஆமாம், ஆற்றல் மயம் உலகம். ஆற்றல் இல்லையேல் உலகமே இயங்காது.

உலகின் மிகப் பெரிய விஞ்ஞானியான நிகோலா டெஸ்லா (Nicola Tesla – பிறப்பு 10-7-1856 மறைவு 7-1-1943)வயர்களே இல்லாமல் மின்சக்தியை உலகெங்கும் வழங்குவது குறித்து ஆழ்ந்து சிந்தித்து ஒரு காயிலை 1891ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அது நிகோலா காய்ல் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் அவர் இந்த அரிய வயர்கள் இல்லாத மிவின்சக்தியைக் கண்டுபிடிக்கப் போகும் போது ஏற்பட்ட விபத்தினால் அதன் பயன்பாடு தடைப்பட்டது.

  அவரது டெஸ்லா காயிலை மேம்படுத்தி உருவாக்கிப் பயன்படுத்தும் முயற்சியில் உலகின் பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்கள் ஈடுபட்டிருக்கின்றன.

  இதில் வெற்றி பெற்றால் உலகின் வாழ்க்கை முறையே மாறிப் போகும்.  இந்த வகையில் 13 வயதுச் சிறுவன் லோகன் உத்வேகமூட்டும் ஒரு கருவியைக் கண்டுபிடித்துச் சாதித்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று தானே!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அனலாடிகல் ஜாமட்ரியின் தந்தை என்று கூறப்படும் பிரபல விஞ்ஞானியான ரெனே டெஸ்கார்டெஸ் (1596-1650) இளமையிலேயே மேதையாக விளங்கியவர். ஆனால் அவருக்கு காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் கிடையாது. தினமும் காலையில் 11 மணிக்கு முன்னதாக அவர் நிச்சயமாக எழுந்திருக்க மாட்டார். அவர் இராணுவத்தில் பணியாற்றியபோது கூட இந்தப் பழக்கத்தைக் கைவிடவில்லை. இராணுவத்தில் அவரது உயர் அதிகாரிகளோ அல்லது அவரது பள்ளியில் அவருக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களோ இதை மாற்ற முயற்சிக்கவில்லை. அவரது காலை பழக்கம் அப்படியே தொடர்ந்து வந்தது.

பின்னால் தனது இந்தப் பழக்கத்தைப் பற்றி அவர் கூறுகையில் தனது எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் தத்துவ சிந்தனைகளும் காலையில் படுக்கையில் படுத்திருக்கும்போதே தோன்றின என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இந்த சந்தோஷகரமான காலைத் தூக்கம் 1649ஆம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்தது. ஸ்வீடனின் ராணியான கிறிஸ்டினா அவரைத் தனக்கு ஜாமட்ரி சொல்லித் தரும் பணியைத் தந்தார். ஆகவே அவர் ஸ்டாக்ஹோம் நகருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு ராணிக்கோ காலை ஐந்து மணிக்குத் தான் கணிதம் கற்க நேரம் இருந்தது. ஆகவே டெஸ்கார்டெஸ் காலையில் எழுந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

 

காலையில் எழுந்திருக்க வேண்டும் என்ற் அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவே இல்லை. அத்துடன் காலையில் இருளில் பனி படர்ந்த குளிர் காலத்தில் நடந்து ராணியின் அரண்மனைக்குத் தொடர்நது சென்று வந்ததால் அவருக்கு நிமோனியா ஜுரம் வந்தது. அதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக ஆனது.

காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் ஒரு சின்ன கெட்ட பழக்கம் ஒரு விஞ்ஞானிக்கு எமனாக அமைந்தது துரதிர்ஷ்டமே!

***

 

 

 

 

மஹாபாரதம் உண்மையே; ஆண்களுக்கும் குழந்தை பிறக்கும் (Post No.3934)

Pregnant Man Chris

Research article written by London Swaminathan

 

Date: 23 May 2017

 

Time uploaded in London: 10-53 am

 

Post No. 3934

 

Pictures are taken from various sources such as Face book, google and SUN and MIRROR newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

மஹாபரதத்தில் நிறைய விஞ்ஞான விந்தைச் செய்திகள் உள்ளன. காலப் பயணம் (Time Travel), சோதனைக் குழாய் குழந்தை, ஒட்டிப் பிறந்த சயாமிய இரட்டையர் (Siamese Twins) ஆபரேஷன், நமக்குத் தெரியாத அதிசயப் பறவைகள், அலிகளாகப் (Transgender) பிறந்தோர் ஆபரேசன் செய்து ‘செக்ஸ்’ மாறியது, யுக முடிவு, பிரம்மாஸ்திரம் என்னும் அணுஆயுத ஏவுகணை (Nuclear missile) – இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்; இவை பற்றி எல்லாம் நான் எழுதிய கட்டுரைகளை இந்த பிளாக்கில் படிக்கலாம்.

 

ஆண்கள் குழந்தை பெற முடியுமா? ஆமாம், பெற முடியும் என்று மஹாபாரதமும் விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது.

 

மேலை நாட்டுப் பத்திரிக்கைகளில் இது பற்றி நிறைய செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்ல. குழந்தை பிறப்பில் பெரிய புரட்சியே நடைபெறப் போகிறது. அதாவது இனிமேல் மலடி என்று எந்தப் பெண்ணும் இருக்க மாட்டாள்; ஏனெனில் எலிகளின் உடலில் செயற்கை கர்ப்பப் பைகளைப் பொருத்தி ஆராய்ந்ததில் அது இயற்கையான கருப்பை, என்ன என்ன ஹார்மோன்களைச் சுரந்து,  ‘வளரும் கரு’வைக் காப்பாற்றுமோ அத்தனையையும் இந்தச் செயற்கைக் கருப்பையும் செய்வதை அறிந்தனர். எதிர்காலத்தில் கருப்பை கோளாறுகளால் குழந்தை பெற முடியாதவர்கள் என்று எவரும் இரார். நிற்க.

 

மஹாபாரதத்தில் குறைந்தது இரண்டு கதைகளிலாவது ஆண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டது தெரிகிறது.

மாந்தாதா என்ற மன்னனை சோழர்களும்கூட தங்கள் முன்னோன் என்று சொல்லிக் கொள்வர்; அவருக்குத் தாய் கிடையாது. ஏனெனில் அவர் தந்தையிடமிருந்து பிறந்தார். பைபிளில் ஏவாள் என்ற பெண்மணியும்  ஆதாம் என்னும் ஆணிடமிருந்தே ‘பிறந்தாள்’. மாந்ததாவைப் பொருத்தமட்டில், அவர் யவநஸ்வா என்ற ஆணிடமிருந்து உருவானவர். யவநஸ்வாவின் மனைவியருக்காக ரிஷி முனிவர்கள் தயாரித்து வைத்திருந்த விஷேச திரவத்தை அவர் குடித்ததால் மாந்தாதா பிறந்தார் என்று இரண்டு பர்வங்களில் சொல்லப்பட்டுள்ளது. சூரிய குல மன்னர்களில் சிறப்பான ஆட்சிசெய்த மன்னர்களில் இவரும் ஒருவர்.

ஆண்களும் குழந்தை பெற்றதற்கு இது ஒரு சான்று.

 

இன்னொரு பர்வத்தில் பங்கஸ்வன என்ற மன்னனின் கதை சொல்லப்பட்டுள்ளது. இவன் ஆணாக இருந்து பல குழந்தைகளைப் பெற்றதாகவும் இதனால் கோபம் கொண்ட இந்திரன் அந்த மன்னனைப் பெண்ணாக மாற்றியதாகவும் அப்பொழுதும் அவன் பல குழந்தைகளைப் பெற்றதாகவும் 13- ஆவது பர்வத்தில் வருகிறது. ஆக அக்காலத்திலேயே இவைகளுக்கான உத்திகளை மருத்துவர்கள் கையாண்டனர். ஆனால் காலப் போக்கில் அவை மறைந்துவிட்டன.

Amy and Chris with their two children

பிரிட்டிஷ் பத்திரிக்கை செய்திகள்

 

ஆணோ பெண்ணோ இல்லாமல் அலியாகப் பிறந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு குணத்தை தூண்டிவிட்டு குழந்தை பெற வைக்கின்றனர். இதோ சில செய்திகள்:-

 

வெள்ளைக்கார கணக்குப்படி உலகில் குழந்தை பெற்ற முதல் ஆண் தாமஸ் பீட்டி எனபவராவார்.அவருக்கு மூன்று குழந்தைகள். பெண்ணாகப் பிறந்த அவர் காலப்போக்கில் ஹார்மோன் சிகிச்சையால் ஆணாக மாறினார். ஆயினும் இனப்பெருக்க உறுப்புகள் அப்படியே இருந்தன. ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிறந்தன. செயற்கை முறை யில் ஆணின் விந்துவை உடலில் செலுத்தி குழந்தை பெற்ற இவர் அமெரிக்காவின் அரிசோனா மாநில பீனிக்ஸ் நகரைச் சேர்ந்தவர். 46 வயதான இவருக்கு இப்படிக் குழந்தை பிறந்தது 2007 ஆம் ஆண்டில்.

 

ஆனால் மஹாபாரதத்திலோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி நடந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது

கனடாவைச் சேர்ந்த ட்ரெவர் மக்டொனால்டு ஆண்கள் டாய்லெட்டில் ஒளிந்து கொண்டு தன் குழந்தைக்கு பால் கொடுத்த செய்தியை வெளியிட்டுள்ளார். 31 வயதான இவர், இரவு நேரத்தில் பிரசவ வேதனையுடன் ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது தாடியுடன் வந்த ஆணுக்கு இரவு நேரத்தில் பிரவ வார்டில் என்ன வேலை என்று சொல்லி ஆஸ்பத்திரி காவற்காரர் உள்ளே விட மறுத்துவிட்டார்.

 

பிரிட்டனில் முதல் “ஆண் அன்னை” (Male Mother) 2011ல் குழந்தையை ஈன்றார். அதே ஆண்டில் யுவல் டாப்பர் என்ற ஆண் இஸ்ரேலில் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

Amy with her daughter

ஸ்பெயின் நாட்டில் ரூபன் என்ற ஆணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.

 

இந்த ஆண்டு பிரிட்டனில் இரண்டு ஆண்கள் கர்ப்பம் அடைந்ததை பத்திரிக்கைகள் ஏராளமான புகைப் படங்களுடன் செய்தியாக வெளியிட்டு அனைவரையும் மகிழ்வித்தன.

 

இதற்கு முன் கிறிஸ் டூபின் என்பவருக்கு பெண் குழந்தை பிறந்த கதை சுவையானது. இவர் ஆண். ஆனால் பிறப்பில் கிறிஸ்டீனா என்ற பெண். பிற்காலத்தில் ஆணாக மாறியபின்னர். அமி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார். ஆனால அமீக்கு கர்ப்பப் பை கோளாறு காரணமாக ஐந்து ஆண்டுகளாக  குழந்தை இல்லை. அந்த நேரத்தில் கிறிஸ் தனது கர்ப்பப்பை அப்படியே இருப்பதால் தான் குழந்தை பெற்றுத்தர தயார் என்றார். செயற்கை முறையில் பெண்ணின் கரு முட்டையை உள்ளே செலுத்தி 2014ல் குழந்தையும் பெற்றார். மனைவிக்கு ஒரே பொறாமையும் வருத்தமும். மீண்டும் முயன்றார். அவருக்கு 2016ல் ஆண் குழந்தை பிறந்தது. பத்திரிகைகளுக்கு ஒரே கொண்டாட்டம். செய்திகளையும் படங்களையும் அள்ளித் தெளித்தன. இதைப் பார்த்த பல (Transgenders) அலிகள் இப்பொழுது துள்ளிக் குதித்த வண்ணமாக இருக்கின்றனர். பிரிட்டனில் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் கல்யாணம் முடித்து கணவன்- மனைவி என்று அறிவிக்க சட்டம் வழி செய்துவிட்டதால் அவர்களுக்குக் கொண்டாட்டம். இனி மக்களுக்குத் தான் திண்டாட்டம்.

xxx

Pregnant Man Hayden Cross

பி பி சி தமிழோசை ஜோக்!

25 ஆண்டுகளுக்கு முன் நான் லண்டன் பி.பி.சி ஸ்டூடியோவில் (BBC World Service in London) தமிழோசையில் செய்தி வாசிக்க உட்கார்ந்தேன். ஸ்டூடியோ மிஷின்களை இயக்க கண்ணாடி அறையின் மறு புறம் வேறு ஒரு உருவம் உட்கார்ந்தது .

. ஒலிபரப்புக்கு ரெட் லைட் RED LIGHT– சிவப்பு விளக்கு — வரும் வரை நான், சங்கர் அண்ணா,  ஆனந்தி சூர்யப்பிரகாசம் ஆகிய மூவரும் அரட்டை அடிப்பது வழக்கம். ஸ்டூடியோவின் அடுத்த பக்கம் உடகார்ந்த ஊழியர் ஆணா பெண்ணா என்று எங்களுக்குள் விவாதம். உடை மூலமோ, நடை மூலமோ, குரல் மூலமோ, பெயர் மூலமோ கண்டு பிடிக்க மூவரும் முயன்றோம்; பலனில்லை. எங்களுக்கு ஒரே ஏமாற்றம். வெட்கத்தை விட்டு, உலக இங்கித த்தை மறந்து அவரிடம் நீ ஆணா பெண்ணா என்று கேட்க மூவருக்கும் துணிச்சல் இல்லை. ஒலிபரப்பு முடிந்தவுடன் அவர் அறைக்குள் சென்று ஒரு நோட்டம் விட்டு ஒலிபரப்பு நாடாச் சுருளை (Recorded Tape) வாங்கிக்கொண்டு, எங்கள் அறைக்குத் திரும்பினோம். பிறகும் நீண்ட நேரத்துக்கு அந்த ஆண்-பெண் உருவத்தைப் பற்றி அடுத் த  அறை நேபாளி மொழி ஒலிபரப்பாளர்களுடன் விவாதித்தோம். ஒரே சிரிப்பு. சில அடல்ட்ஸ் ஒன்லி Adults Only ஜோக்குகள் வேறு! அவைகளை  இங்கே எழுத முடியாது!!!

 

===== subham======

எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்? (Post No.3933)

Written by S NAGARAJAN

 

Date: 23 May 2017

 

Time uploaded in London:-  5-43 am

 

 

Post No.3933

 

 

Pictures are taken from different sources such as Wikipedia, Face book, google for non commercial use; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்?

ச.நாகராஜன்

 

 

108இன் மகிமை

பாரத நாட்டில் 108 என்ற எண்ணுக்கு தனிப் பெருமை இருக்கிறது. இறைத் துதிகள் எல்லாமே பொதுவாக அஷ்டோத்திரங்களாக அதாவது 108 துதிகளாக அமைந்திருக்கின்றன! உபநிடதங்களுள் முக்கியமானவையாக 108 உபநிடதங்களே குறிப்பிடப்படுகின்றன!

வைணவ திவ்ய தேசங்கள் – திருப்பதிகள் – 108 தான்! சக்தி பீடங்களாக இமயம் முதல் குமரி வரை 108 தலங்கள் தான்!

நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாட்டிய அமைப்புகள் 108.

 

 

புத்தமதம் போற்றும் 108

புத்த மதத்திலும் 108 என்ற எண்ணுக்கு அதிக மதிப்பும்  மகிமையும் தரப்படுகின்றன. ஜப்பானில் உள்ள ஜென் ஆலயங்களில் புத்தாண்டின் வரவை 108 முறை மணியை ஒலித்து வரவேற்கின்றனர்.

புத்த ஆலயங்களை அடைய 108 படிக்கட்டுகள் உள்ளன. இவை மூன்று முப்பத்தாறு படிக்கட்டுகள் கொண்டவையாக அமைக்கப்படுகின்றன! புத்தரின் இடது பக்கத்தில் 108 புனிதக் குறிகள் அல்லது லட்சணங்கள் இருப்பதாக புத்த மத நூல்கள் கூறுகின்றன.

 

 

புத்தரின் உபதேசங்கள் அடங்கிய நூல்களின் தொகுப்பு திபெத்தில் புத்த பிரிவினரால் 108 பாகங்களாகத் தொகுத்து (Kanjur  எனப்படுகிறது) அமைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் 108 என்ற எண் இறைவனைக் குறிக்கிறது. சீக்கிய மதத்தில் 108 மணிகள் அடங்கிய மாலையே உபயோகிக்கப்படுகிறது.

 

பௌத்தர்களும் இந்துக்களும் 108 மணிகள் அல்லது ருத்ராக்ஷங்கள் கோர்க்கப்பட்ட மாலைகளையே ஜபத்திற்குப் பயன்படுத்துகின்றனர். டாவோ புத்தமதப் பிரிவைச் சேர்ந்தவர்கள்

 

இந்த மாலையை சு-சு  (Su-Chu) என்று குறிப்பிடுவதோடு அதை மூன்று முப்பத்தாறு மணிகளாகக் கோர்த்து உபயோகிக்கின்றனர்.

ஜைன மதத்தில் ஐந்து விதமான புனித குண நலன்கள் முறையே 12, 8, 36,25,27 என்று குறிக்கப்பட்டு மொத்தம் 108 ஆகிறது.

 

இப்படி 108இன் உபயோகத்தை உரைக்கப் போனால் பெரும் நூலாக ஆகி விடும்! அப்படி இந்த எண்ணுக்கு என்ன மகிமை? ஏன் நூறாகவோ அல்லது வேறு ஒரு எண்ணாகவோ இவை அனைத்தும் இருக்கக்கூடாது?

 

நம் முன்னோர்கள் காரணத்தோடு தான் இந்த 108 என்ற அபூர்வ எண்ணை புனிதமான அனைத்துடனும் சம்பந்தப்படுத்தி இருக்கிறார்கள்!

 

வானவியல் காரணம்

சூரியனுடைய குறுக்களவு பூமியின் குறுக்களவைப் போல 108 மடங்கு உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளூடே சஞ்சரிக்கின்றன.பன்னிரெண்டை ஒன்பதால் பெருக்கி வருவது 108. ஆகவே இவற்றால் பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு 108 என்ற எண்ணால் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே பூரணத்துவத்தைக் குறிக்கும் எண்ணிக்கையா இந்து மதம் 108ஐக் குறிப்பிடுகிறது.

ஒரு நாளைக்கு நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை 21600. பகலில் 10800. இரவில் 10800. இதுவும் 108இன் மடங்கு தான்!

ஒரு நாள் என்பது 60 கதிகளைக் கொண்டது. ஒரு கதி என்பது 60 பலங்களைக் கொண்டது. ஒரு பலம் என்பது 60 விபலங்களைக் கொண்டது. ஆகவே ஒரு நாள் 21600 பகுதிகளையும் – பகல் இரவு 10800 பகுதிகளையும் -உடையதாக இருக்கிறது. ஆகவே இந்த 108 என்ற எண்ணிக்கை காலம் மற்றும் வெளியை ( Time and Space ) இயற்கையோடு இயைந்த லயத்தின் அடிப்படையில் இயங்க வழி வகுக்கிறது!

 

 

ஜீவனும் பரமனும்

ராமகிருஷ்ண ம்டத்தைச் சேர்ந்த சுவாமி ப்ரேமானந்தர் இன்னொரு அற்புதத் தொடர்பை  எடுத்துக் காட்டுகிறார்.

108 என்பது மந்திரங்களை உச்சரிக்க சரியான தெய்வீக எண்ணிக்கை என்பதை  வராஹ உபநிடதத்தை மேற்கோள் காட்டி அவர் விளக்குகிறார்.ஒவ்வொருவர் உடலும் அவரவர் விரலின் பருமனால் (கிடைமட்டமாக வைத்துப் பார்க்கும் போது) சரியாக 96 ம்டங்கு இருக்கிறது!

 

பரம்பொருள் என்னும் பரமாத்மன், ஒருவனின் நாபியிலிருந்து 12 விரல் அளவு மேலே இருக்கிறான். ஆக இந்த 96 மற்றும் 12 எண்களின் கூட்டுத்தொகையான 108 ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவதைக் குறிக்கிறது. அதாவது 96 விரல் அளவு உள்ள மனிதன் 12 பாகங்கள் உள்ள பரமாத்மாவுடன் சேர்வதை 108 முறைப்படுத்துகிறது.

 

ஆகவே ஆன்மீகப் பெரியோர்கள் இறைவனின் நாமத்தை 108 முறை சொல்லும் போது அது படிப்படியாக உயர்நிலை பெற்று பரமாத்மாவுடன் ஒன்று படுகிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்தனர்!

 

இதை இன்னொரு முறையாலும் பார்க்க முடியும். சூரிய மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. அதாவது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரபஞ்சம் என்னும் பரமாத்மாவுடன் ஜீவாத்மா ஒன்று படுவதை 108 குறிப்பிடுகிறது.

 

பாபாவின் விளக்கம்

ஸ்ரீ சத்ய சாயி பாபா 108 என்ற எண்ணிக்கை காரணம் இல்லாமல் அமைக்கப்படவில்லி என்று கூறி விட்டு அதற்கான காரணத்தை விளக்குகிறார்.

 

மனிதன் ஒரு மணிக்கு 900 முறை சுவாசிக்கிறான். அதாவது பகலில் 10800 முறை சுவாசிக்கிறான். ஒவ்வொரு சுவாசத்தின் போதும் ‘ஸோஹம்’ (நான் அவரே) என்று சொல்ல வேண்டும். ஆகவே 216 என்ற எண்ணும் அதில் பாதியான 108 என்ற எண்ணும் மிக முக்கியத்துவம் உடையதாக ஆகிறது. மேலும் அது பனிரெண்டின் ஒன்பது மடங்கு. பனிரெண்டு சூரியனைக் குறிக்கிறது. ஒன்பது பிரம்மத்தைக் குறிக்கிறது.

அதோடு மட்டுமல்ல. ஒன்பதை எதனுடன் பெருக்கினாலும் வரும் எண்ணின் கூட்டுத் தொகை) ஒன்பதாக்வே இருக்கிறது!

9 x 8 = 72;         7+2=9

9 x 7 = 63;          6+3= 9

இதே போல அனைத்தும் ஒன்பதாக ஆகிறது. கடவுளை எதனுடன் பெருக்கினாலும் (அதாவது இணைத்தாலும் ) அது கடவுளாகவே ஆகிறது!

ஆனால் மாயையின் எண் 8. இதோடு எதைப் பெருக்கினாலும் அது குறைகிறது.

2 x 8 = 16; 1=6=7 (எட்டிலிருந்து ஒன்று குறைந்து ஏழாகிறது)

3 x 8 = 24; 2+4 = 6;

4 x 8 = 32;  3+2 = 5

 

இம்மாதிரி மதிப்பில் குறைந்து கொண்டே போவது தான்  மாயையின் சின்னம்!

தேவர்கள் அமிரதம் எடுக்க பாற்கடலைக் கடைந்த காலம் ஏறக்குறைய 10800 நாட்கள் தாம்! (10478 நாட்கள் 12 மணி 18 நிமிடம்)

 

ஸ்ரீ யந்திரத்தில் உள்ள மூன்று கோடுகள் வெட்டுவதால் ஏற்படும் புள்ளிகளின் எண்ணிக்கை 54. இவை ஒவ்வொன்றும் ஆண், பெண் – அல்லது சிவம் மற்றும் சக்தியைக் குறிப்பிடும் போது 108 (2 x 54  = 108) ஆகிறது. எல்லையற்ற சக்தியை, அருளைத் தருகிறது. உடலில் உள்ள சக்கரங்கள் 108. உடலிலே உள்ள வர்மப் புள்ளிகள் 108. இவற்றால் இறைவன் உணரப்படுகிறான்.                                                     27 நட்சத்திரங்கள் நான்கு திசைகளினால் பெருக்கப்பட்டால் வருவது 108 என்றும், வானத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்பதுத்தி வருவது 108 என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். இது பூரணத்துவத்தைக் குறிப்பிடுகிறது

 

.கணிதம் காட்டும் மெய்ப்பொருள்

கணித இயலில் 108 ஒரு அபூர்வ எண்!

ஒன்றின் ஒரு ம்டங்கும், இரண்டின் இரு மடங்கும், மூன்றின் மும்மடங்கும் சேர்ந்தால் வருவது 108 ( 1x1x2xx2x3x3x3 = 1 x4 x27 = 108)

இதில் ஒன்று ஒரு பரிமாண உன்மையையும், இரண்டின் மடங்கு இரு பரிமாண உண்மையையும் மூன்றின் மடங்கு முப்பரிமாண உண்மைகளையும் காட்டுகிறது. அனைத்தும் இணையும் போது வருவதே எல்லாமாகிய மெய்ப்பொருள் ஆகும்!

இப்படி 108இன் மகிமையை உபநிடங்களும் வான்வியல் உண்மைகளும், கணித இயலும் வியந்து போற்றுகின்றன!

 

 

உணர்வதே உய்வதற்கான வழி

‘கரையில் இருந்து ஆராய்ச்சி செய்தால் கடலின் ஆழம் தெரியுமா என்ன’ என்று கேட்டு ஸ்ரீ சத்ய் சாயி பாபா, ‘ஆழ்ந்து மூழ்கத் தயங்கினால் உங்களால் முத்துக்களைப் பெற முடியாது’ என்கிறார்.

 

 

ஆகவே 108ன் பெருமையை உணர்ந்தால் மட்டும் போதாது. 108 முறையிலான ஜபமாலை உபயோகம், திவ தேச தரிசனம், சக்தி பீட யாத்திரை உள்ளிட்ட அனைத்தையும் அவரவருக்கு உகந்த முறையில் கடைப்பிடித்து மெய்ப்பொருளை அவரவரே உணர்வது தான் ஏற்றம் பெற்று உய்வதற்கான வழி!

 

Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2011/11/26/hindus-magic-numbers-18-108-1008/

26 Nov 2011 – In Hinduism numbers have a lot of significance. … But 108and 1008 are used for all the Gods in Ashtotharam (108) and Sahasranamam (1008) …

 

 

Mysterious Number 17 in the Vedas! (Post No.3916) | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/17/mysterious-number-17-in-the-veda…

 

 

4 days ago – Number symbolism is in the Vedas from the very beginning. This shows that the Vedic seers are very great intellectuals. They were the …

 

Mystery Number 7 | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/mystery-number-7/

“It may be incidentally pointed out that the number 7 which gives thenumber of time units in Misrajati appears to have fundamental importancein nature. In most …

 

MOST HATED NUMBERS 666 and 13 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/…/most-hated-numbers-666-and-1…

 

29 Jul 2012 – No 7 and No 3 are considered as holy numbers by several cultures, particularly, the Hindus. Vedic literature and Indus Valley Civilization have …

 

 

Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2014/09/03/numbers-in-the-rig-veda-rig-veda-mystery-2/

3 Sep 2014 – Numbers in the Rig VedaRig Veda Mystery-2. Vedas 9. Research Paper written by London Swaminathan Post No. 1265; Dated 3rd …

 

Oldest Riddle in the World! Rig Veda Mystery –3 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2014/10/06/oldest-riddle-in-the-world-rig-veda-mystery-3/

6 Oct 2014 – Rig Veda is the oldest religious book in the world. Even if we … 30)Numbers in the Rig VedaRig Veda Mystery – 2 –posted on 3rd Sep.2014

 

சந்திர எண் 1080-இன் மர்மம்! (Post No.3930) | Tamil and …

https://tamilandvedas.com/…/சந்திர-எண்-1080-இன்-ம…

சந்திர எண் 1080-இன் மர்மம்! (Post No.3930). Written by S NAGARAJAN. Date: 22 May 2017. Time uploaded in London:- 7-18 am. Post No.3930. Pictures are taken from different sources; thanks. contact: swami_48@yahoo.com.

 

 

–subham–

சந்திர எண் 1080-இன் மர்மம்! (Post No.3930)

Written by S NAGARAJAN

 

Date: 22 May 2017

 

Time uploaded in London:-  7-18 am

 

 

Post No.3930

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

எண் ரகசியம்

காபிரைட் உள்ள தொடர் இது. திரு எஸ்.சுவாமிநாதன் அனுமதி பெற்று www.tamilandvedas.com மற்றும் கட்டுரை ஆசிரியரின் பெயரோடு வெளியிடல் வேண்டும். மீறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

எண் ரகசியம் – 1

சந்திர எண் 1080-இன் மர்மம்!

 

ச.நாகராஜன்

 

எண்களில் உள்ளது பிரபஞ்ச ரகசியம் என்றால் ஆச்சரியமாக இல்லை?

 

எந்த எண்ணை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஒரு மர்மமான ரகசியம் இருக்கிறது.

 

இந்த இரகசியத்தை அறிந்தவர்கள் அதைப் பயன்படுத்தும் போது அவர்கள் வாழ்க்கை சிறக்கிறது.

 

நியூமராலஜி எனப்படும் எண் ஜோதிடத்தையும் தாண்டியது இந்த விஷயம்.

 

உலகின் பழம் பெரும் நாகரிகங்களான ஹிந்து நாகரிகம், பாபிலோனிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், அஸிரிய நாகரிகம் என்று இப்படி எதை எடுத்துக்  கொண்டாலும் அந்த நாகரிகத்தின் மூத்த குடிகள் இந்த எண் ரகசியத்தை அறிந்திருந்தார்கள்!

ஹிந்து வேதங்கள், புராணங்கள், மஹாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட ஹிந்து நூல்களில் எண்கள் பற்றிய ரகசியத்தை விரிவாகக் காணலாம்.

 

எண்களைப் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் அபூர்வ விஷயங்களை இவை தெரிவிக்கின்றன.

பைபிள், யூத மத நூல்கள்,புத்த மதம், ஜைன மதம் ஆகியவற்றில் உள்ள பழைய நூல்கள் எண்களின் மஹிமையை ஆங்காங்கே விளக்குகின்றன.

 

எடுத்துக்காட்டாக எண்கள் பற்றிய தொடரின் இந்த முதல் கட்டுரையில் சந்திர எண்ணைப் பற்றிப் பார்க்கலாம்.

1080 என்பது சந்திரனின் ஆரத்தில் உள்ள 1080 மைல்களைக் குறிக்கிறது. சுவர்க்கத்தின் வரைபடத்தில் சந்திரன் ஒரு முக்கியமான ‘புள்ளி.’

 

இது 108 என்ற எண்ணின் பத்து மடங்கு.

ஹிந்து மதத்திலும் புத்த மதத்திலும் 108 என்ற எண் அபாரமான பெருமை வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

 

எண் 108இன் மஹிமை என்ற இந்த கட்டுரை ஆசிரியரின் கட்டுரையை படித்தால் இதன் மஹிமையை விளங்கிக் கொள்ளலாம்.

 

 

10800 ரிக்குகள் உள்ளது ரிக் வேதம். இந்த ரிக் ஒவ்வொன்றிலும் 40 எழுத்துக்கள் அல்லது Syllables உள்ளன.

ஜொராட்ரிய fire-altar இல் உள்ள செங்கற்களின் எண்ணிக்கை 10800.

1080 என்ற எண்ணுக்கு ஒரு ரகசிய ஆற்றல் உண்டு.

ஆன்மீக ரீதியிலும் அதிமானுட ரீதியிலும் இது ஒரு சக்தி வாய்ந்த எண்.

 

இது யின் என்ற பெண்மை சக்தியைக் குறிக்கிறது.

அதாவது இயற்கையின் இரவு பக்கத்தைக் குறிக்கிறது.

கிறிஸ்துவ மதத்தில் 1080 பரிசுத்த ஆவியின் (Holy Spirit) எண்.

கற்பனா சக்தி, மறைபொருள் ஆற்றல், தீர்க்கதரிசனமாக எதையும் கூறுதல் இந்த எண்ணுக்குரிய விசேஷ அம்சங்கள்.

இது அமிர்தக் கடலான பாற்கடலைக் குறிக்கும் எண்.

ஞானத்தின் ஊற்றுக்கண்ணாக அமைவது இந்த எண்.

பூமாதேவியின் எண்ணும் இது தான்.

 

பிரபஞ்ச லயத்தைக் குறிக்க ஒரு எண் வேண்டுமா, அது இது தான்!                                            -தொடரும்

 

Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2011/11/26/hindus-magic-numbers-18-108-1008/

26 Nov 2011 – In Hinduism numbers have a lot of significance. … But 108and 1008 are used for all the Gods in Ashtotharam (108) and Sahasranamam (1008) …

 

 

Mysterious Number 17 in the Vedas! (Post No.3916) | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/17/mysterious-number-17-in-the-veda…

 

 

4 days ago – Number symbolism is in the Vedas from the very beginning. This shows that the Vedic seers are very great intellectuals. They were the …

 

Mystery Number 7 | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/mystery-number-7/

“It may be incidentally pointed out that the number 7 which gives thenumber of time units in Misrajati appears to have fundamental importancein nature. In most …

 

MOST HATED NUMBERS 666 and 13 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/…/most-hated-numbers-666-and-1…

 

29 Jul 2012 – No 7 and No 3 are considered as holy numbers by several cultures, particularly, the Hindus. Vedic literature and Indus Valley Civilization have …

 

 

Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2014/09/03/numbers-in-the-rig-veda-rig-veda-mystery-2/

3 Sep 2014 – Numbers in the Rig VedaRig Veda Mystery-2. Vedas 9. Research Paper written by London Swaminathan Post No. 1265; Dated 3rd …

 

Oldest Riddle in the World! Rig Veda Mystery –3 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2014/10/06/oldest-riddle-in-the-world-rig-veda-mystery-3/

6 Oct 2014 – Rig Veda is the oldest religious book in the world. Even if we … 30)Numbers in the Rig VedaRig Veda Mystery – 2 –posted on 3rd Sep.2014

 

–subham–