அரிய உயிரினம் காப்போம்

Written by S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 12 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  7-27 am

Post No. 6764

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

stranded whales
crocodiles killed by villagers, Indonesia

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை     www.allindiaradio.gov.in  தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து  நிகழ்நிலையில் கேட்கலாம்.   7-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட ஏழாம் உரை இங்கு தரப்படுகிறது.

அரிய உயிரின வகை வேறுபாட்டைக் காப்போம்!

ச.நாகராஜன்

இயற்கையின் ஒரு அற்புதமான அமைப்பே பயோ டைவர்ஸிடி (Bio diversity) எனப்படும் உயிரினவகை வேறுபாடாகும்.

ஆனால் அற்புதமான இந்த அமைப்பு மனிதர்களால் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டு வருவது வேதனைக்குரிய ஒன்றாகும்.

 மிக அதிகமாக உலகெங்கும் பெருகி வரும் ஜனத்தொகை, உலகப் பொருளாதாரம், மக்களின் நுகர்வு ஆகியவற்றால் கடந்த 50 ஆண்டுகளாக பூமியின் உயிர்க்கூறான அமைப்பு சிதைந்து வருகிறது.

ஒருபுறம் மக்களின் ஆயுட்காலம் பழைய காலத்தை விட அதிகமாகி இருக்கிறது என்பதும், மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்க்கை நிலை சிறப்பாக மேம்பட்டு வருகிறது என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்த போதிலும் இவை உயிரினவகை வேறுபாட்டுக்கு ஊறு செய்தே அடையப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

1970ஆம் ஆண்டிலிருந்தே உயிரின வகை வேறுபாடு கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதே விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் முடிவாகும். இதை அவர்கள் Great Acceleration – க்ரேட் ஆக்ஸிலரேஷன் – பெரும் முடுக்கம் என்று வர்ணிக்கின்றனர்.

பறவைகள், விலங்கினங்கள் மற்றும் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

விலங்குகள் இயற்கையாக உயிர் வாழும் இடம் குறைந்து கொண்டே வருவது, உயிரினங்களை வேட்டையாடுவது ஆகியவையே இந்த எண்ணிக்கை குறைபாட்டிற்கான பிரதான காரணங்களாகும்.

பூமியின் ஆரோக்கியமும் சமச்சீர்தன்மையும் இந்த பல்வேறு உயிரினங்களைச் சார்ந்தே இருக்கிறது என்பது ஒரு முக்கிய செய்தி.

750 கோடி ஜனத்தொகையைக் கொண்டுள்ள உலகம் 980 கோடி என்ற அளவில் ஜனத்தொகைப் பெருக்கத்தை 2050ஆம் ஆண்டு வாக்கில் எட்டி விடும் என்கிறது அறிவியல் ஆய்வு.

பூமியில் 30 விழுக்காட்டுப் பரப்பளவே காடுகள் உள்ளன. ஆனால் இந்தக் காடுகளிலேயே பூமியில் உயிர் வாழும் பல்வேறு உயிரினங்களில் 80 விழுக்காடு வாழ்கின்றன. பூமியின் ஜனத்தொகைப் பெருக்கத்தினால் 2000ஆம் ஆண்டு முதல் 2010க்குள் 40 சதவிகிதம் காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவை பல்வேறு வகை உயிரினங்களே!

ஆக தன்னுடன் சேர்ந்து வாழும் உயிரின வகைகளை அழிக்காமலும் அவை வசிக்கும் காடுகளை அழிக்காமலும் இருக்க வேண்டிய பெரும் பொறுப்பு மனித குலத்தைச் சார்ந்திருக்கிறது. இதைக் கருத்திக் கொண்டு பயோ டைவர்ஸிடி எனப்படும் உயிரின வகை வேறுபாட்டை இயற்கை அமைத்தபடியே அப்படியே காக்க உறுதி பூணுவோம். –subham–

ஒவ்வொருநாளும் சுற்றுப்புறச் சூழலைக் காப்போம்! (Post No.6760)

Written by  S. Nagarajan

swami_48@yahoo.com

 Date: 11 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  9-05 am

Post No. 6760

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை     www.allindiaradio.gov.in  தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து  நிகழ்நிலையில் கேட்கலாம்.   6-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட ஆறாம் உரை இங்கு தரப்படுகிறது.

ஒவ்வொருநாளும் சுற்றுப்புறச் சூழலைக் காப்போம்!

ச.நாகராஜன்  

சுற்றுப்புறச் சூழலை மாசின்றிக் காக்க வேண்டும் என்ற எண்ணம் பெருமளவில் வலுத்து வரும் இந்த நாளில் ஒவ்வொருநாளும் சூழலைக் காக்கும் அவசியம் ஏற்பட்டு விட்டதால் அதற்கான வழிமுறைகளைத் தன்னார்வலர்கள் கையாளுகின்றனர்.

திருமண விருந்துகள், அலுவலகங்களில் நடக்கும் பார்ட்டிகள் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் ப்ளேட்டுகளுக்குப் பதிலாக உலோகத் தட்டுகளைப் பயன்படுத்தவும் அவற்றைச் சுத்தம் செய்ய டிஷ் வாஷர் போன்றவற்றைப் பயன்படுத்தவும் தீவிர முனைப்பு ஏற்பட்டுள்ளது.

சோடியம் வேப்பர் (Sodiyum Vapour Street Lights) தெரு விளக்குகளுக்குப் பதிலாக எல் இ டி (LED) பல்புகளைப் பொருத்த ஏராளமான மாநகராட்சிகள், கிராமங்கள் முன் வந்துள்ளன. இவற்றால் ஆற்றல் சேமிக்கப்படுகிறது. சூழலில் ஏற்படும் மாசும் குறைகிறது.

உடைந்த மொபைல் போன்கள், கணினி பாகங்கள் உள்ளிட்ட ஈ வேஸ்ட் (E Waste) எனப்படும் மின்னணு சாதனங்களின் கழிவைச் சேகரிக்க ஆங்காங்கே தனிச் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட கழிவுகளைப் பொதுவான கழிவுகளுடன் சேர்த்துப் போட்டு விடாமல் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போட வேண்டும் என்ற செய்தியும் பரவலாக அனைவருக்கும் தெரியப்படுத்தப் படுகிறது.

வீட்டு மாடிகளில் மாடித் தோட்டங்களை அமைக்கும் ஆர்வம் இப்போது மிகவும் அதிகமாகி வருகிறது. பால்கனிகளில் கூட வீட்டுக்குத் தேவையான கறிகாய்களைப் பயிரிட முடியும் என்பதை பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் ஏராளமானோர் நிரூபித்து வருகின்றனர். கனவுத் தோட்டம் என்று இதை வர்ணிக்கும் பெண்மணிகள் சமையலுக்குத் தேவையான கொத்தமல்லி,  புதினா உள்ளிட்டவற்றையும் சில கறிகாய்களையும் பயிரிட்டு மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர்.

சூரிய சக்தி சாதனங்கள் ஒவ்வொரு பெரிய கட்டிடத்தின் மேல் தளத்திலும் நிறுவப்படுகின்றன. கட்டிடங்களை உருவாக்கும் திட்டத்தின் போதே இதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுவதால் வழக்கமான மின் சாதனங்களின் பயன்பாடுகள் மெதுவாக நீக்கப்பட்டு வருகின்றன.

இப்படி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயலும் பூமியைக் காக்கும் செயலாக அமைவதால் ஒவ்வொருவரும் இந்தப் பணியில் தங்களையும் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளல் வேண்டும்!

****

பிளாஸ்டிக் பொருள்களின் நச்சுத் தன்மை!(Post No.6736)

 

written by S Nagarajan


swami_48@yahoo.com

 Date: 6 AUGUST 2019


British Summer Time uploaded in London –9-04  AM

Post No. 6736

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை     www.allindiaradio.gov.in  தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து  நிகழ்நிலையில் கேட்கலாம்.   5-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட ஐந்தாம் உரை இங்கு தரப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருள்களின் நச்சுத் தன்மை!

ச.நாகராஜன்

அங்கிங்கெனாதபடி எங்கும் இன்றைய வாழ்க்கையில் நம்முடன் கலந்து விட்ட பிளாஸ்டிக் பொருள்களின் நச்சுத்தன்மை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக ஆகி விட்டது.

தண்ணீரை ஏந்தி வரும் கேன்கள்,  உணவை பாக்கிங் செய்து வரும் சிறு பெட்டி, தானியங்களை பாக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும் பைகள், பழங்களை உள்ளடக்கி வரும் கூடை அல்லது பைகள், பிஸ்கட், சாக்லெட் ஆகியவற்றின் மேல் உறையாகப் பயன்படுத்தப்படும் அழகிய உறைகள் இவை அனைத்துமே பிளாஸ்டிக்கினால் ஆனவையே. இவை அனைத்தும் நச்சைக் கொண்டிருக்கின்றன. இவற்றை அதிகம் பயன்படுத்துவதால் நமது உடலில் 3 விழுக்காடு பிளாஸ்டிக் கலந்திருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு.

வண்ண பாட்டில்களில் இருக்கும் வண்ணங்கள் அடிடிவ்ஸ் (Additives) எனப்படும் கூட்டுப்பொருளைச் சேர்ப்பதால் உருவாக்கப்படுகிறது. இந்த கூட்டுப்பொருள்கள் அனைத்துமே நச்சுக் கலந்தவையே.

பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள நச்சுப்பொருள்கள் ஹார்மோன்களைத் தடை செய்கின்றன. தைராய்ட் ஹார்மோன் உடலின் மிக முக்கியமான ஹார்மோன் ஆகும். பிளாஸ்டிக்கின் நச்சு இதை வெகுவாக பாதிக்கிறது ; இதனால் தைராய்டின் சமச்சீர்தன்மை இழக்கப்படுகிறது.

BPA போன்ற கூட்டுப்பொருள்கள் சேர்க்கப்படாத பிளாஸ்டிக் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் அப்படிப்பட்ட பிளாஸ்டிக்கும் அபாயகரமானவையே என்பதில் சந்தேகமே இல்லை.

கர்ப்பிணிப் பெண்கள் நிச்சயமாக பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை அறவே நீக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக எவர்சில்வர் அல்லது கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு பிளாஸ்டிக்கினால் ஆன விளையாட்டு பொம்மைகளை வாங்குவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப் போகிறோமே என்று எண்ணி விலை மலிவான பிளாஸ்டிக் தட்டுகள், பாட்டில்காள், பைகள் ஆகியவற்றை வாங்குவதன் மூலம் ஆரோக்கிய சீர்கேட்டுக்கு நமக்கு நாமே வழி வகுக்கிறோம்.

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் குழந்தைகளுக்கு நுண்ணறிவு குறையும்; சமூக உறவில் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் திறன் குழந்தைகளுக்குக் குறையும். எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலையும் ஏற்படும்.

இப்படிப்பட்ட அபாயங்களை மனதில் எண்ணி அனைவரும் நச்சை வெளிப்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவோம்.

நம் உடலையும் காப்போம்; நமது பூமியையும் காப்போம்!

***

பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்போம் (Post No.6731)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 5 AUGUST 2019


British Summer Time uploaded in London –8-48 AM

Post No. 6731

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை     www.allindiaradio.gov.in  தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து  நிகழ்நிலையில் கேட்கலாம்.   4-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட நான்காம் உரை இங்கு தரப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்ப்போம்!

ச.நாகராஜன்   

எதிர்கால சந்ததியினருக்கு இன்று வாழும் ஒவ்வொரு மனிதனும் செய்யும்  மகத்தான உதவி இந்த பூமியை அதன் இயற்கை வளத்தை மாசுபடுத்தாமல் வாழும்படியாக விட்டுச் செல்வது தான்.

பூமிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இன்று விளங்குவது பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தான்.

இதன் தீமையை ஒவ்வொருவரும் நன்கு அறிந்து விட்ட இன்றைய நாட்களில் இதன் பயன்பாட்டைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் அறிந்து கொள்வது இன்றியமையாதது ஆகும்.

நாம் அன்றாடம் வாங்கும் பல்வேறு பொருள்களையும் பாக்கிங் செய்ய பிளாஸ்டிக் பைகள் பெருமளவு பயன்படுத்தப் படுகின்றன. ஒவ்வொருவரும் பல்வேறு பொருள்களை சிறிய அளவில் வாங்க முயல்கையில் ஏராளமான பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக ஆகி  விடுகிறது.

ஆகவே கூடுமானவரையில் நண்பர்கள் குழுவாக இணைந்து மொத்தமாக பொருள்களை வாங்கித் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளலாம்.

இன்றைய நவநாகரிக உலகில் ரெடி மீல்ஸ் எனப்படும் தயாரிக்கப்பட்ட உணவை வாங்கி உண்ணும் பழக்கம் பெருகி வருகிறது. இந்த உணவு வகைகளைத் தனித்தனியே பாக்கிங் செய்ய பிளாஸ்டிக் அடிப்படையிலான பொருள்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே இதைத் தவிர்த்து இல்லங்களிலேயே உணவைத் தயாரிப்பது அல்லது தங்களது பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அவற்றில் உணவு வகைகளை வாங்குவது என்ற உறுதியை மனதில் ஏற்க வேண்டும். இதன் மூலம் ஆரோக்கிய மேம்பாடும், இயற்கைச் சூழல் மாசுபடுத்தப்படாமல் இருக்கும் நல்ல நிலையும் ஏற்படும்.

தேநீரைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பிளாஸ்டிக் அடிப்படையிலான பாலிபுரொபொலினை (Polypropylene) தேநீர் துகள்களைப் போடப் பயன்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க இப்படி பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாத நிறுவனங்களிடமிருந்து மட்டுமே தேநீர் வாங்குவது என்ற பழக்கத்தை மக்கள் ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் இப்படிப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அறவே ஒழிந்து விடும்.

ஆங்காங்கு பல்வேறு நிறுவனங்களில் பணி புரியும் அனைவரும் தங்கள் தங்கள் நிறுவனத்தின் தலைவரிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிக்கும் முயற்சியை எடுக்க வற்புறுத்தல் இன்றியமையாதது. தொழிலகத்தின் கொள்கையாக இப்படி பிளாஸ்டிக் பொருளின் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்தும் முயற்சியை மேற்கொள்வதன் மூலம் இயற்கைச் சூழல் பாதுகாக்கப்படும்.

***

பழையதிலிருந்து கற்போம்; உயர்வோம்! (Post No.6720)

WRITTEN by S Nagarajan


swami_48@yahoo.com

 Date: 3 AUGUST 2019


British Summer Time uploaded in London –8-40 am

Post No. 6720

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை     www.allindiaradio.gov.in  தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து    நிகழ்நிலையில் கேட்கலாம். 2-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட இரண்டாம் உரை இங்கு தரப்படுகிறது.

பழையதிலிருந்து கற்போம்; உயர்வோம்!

ஒரு அதிசயமான செய்தியை நமது பாரத தேசத்தின் அனைத்துக் கிராமங்களும் உணர்த்துகின்றன.

வடக்கே உத்தரகண்ட் மாநிலத்திலிருந்து தெற்கே தமிழ்நாடு வரை மக்கள் நீரின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து அவற்றைச் சேமிக்கும் உயரிய பணியை மேற்கொண்டிருந்தனர் என்பது தான் அந்த அரிய செய்தி.

உத்தரகண்ட் மாநிலத்தில் நீர்நிலை சேமிப்புக்கான பெயர் நௌலா (Naula) ஆகும்.

மலைப்பகுதியிலிருந்து மழை காலத்தில் ஓடி வரும் நீரை வீணாகாமல் சேமித்து வைக்கவே இந்த நௌலாக்களை அவர்கள் உருவாக்கினர்.

 சுமார் 64000 நௌலாக்கள் அங்கு உள்ளன என்பது பிரமிக்க வைக்கும் ஒரு செய்தி.

இவை நீரைத் தம்முள் சேமித்து வைத்துக் கொள்கின்றன. ஒரு குடும்பத்திற்கு சுமார் எட்டு மாத காலம் தேவையான நீரை இவை வழங்குகின்றன.

இந்த நௌலாக்களை நீர்க் கோவில் என்று அவர்கள் பக்தியுடன் குறிப்பிடுவதோடு இவற்றை இறைவனுக்கும் அர்ப்பணிக்கின்றனர்.

ஆனால் வருந்தத்தக்கச் செய்தி இவற்றில் பெரும்பாலானவை இன்று வறண்டு கிடக்கின்றன. ஆகவே இவற்றை புனருத்தாரணம் செய்யும் பணியைத் தன்னார்வத் தொண்டர்கள் இன்று அங்கு மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல ராஜஸ்தானில் ஒவ்வொரு வீட்டிலும் நீர்க்குழிகளை அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவற்றிற்கு டங்கா (Tanka) என்று பெயர்.

இந்த அமைப்புகள் நிலத்தடியில் உருவாக்கப்படுகின்றன. நீரானது பல்வேறு வடிகட்டிகளின் மூலமாக இந்த அமைப்புகளில் செலுத்தப்படுவதால் சுத்தமாக தண்ணீர் வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் கிடைக்க வழி ஏற்படுகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு பெரிய குளம் இருப்பதைக் காணலாம். ஆங்காங்கே ஏரிகள் அழகுற அமைக்கப்பட்டிருப்பதையும் இந்த நீர்நிலைகளை யாரும் அசுத்தப்படுத்தக் கூடாது என்று கிராம மக்கள் தமக்குத் தாமே சட்டம் இயற்றிக் கொண்டிருப்பதையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது.

இதே போக கேரளத்திலும் பல நூற்றாண்டுகளாக இயங்கி வரும் குட்டிக் கிணறுகள் உள்ளன.

அங்கு கேணிகளை மக்கள் இறைவன் கொடுத்த வரம் என்று கூறி அவற்றை நன்கு பராமரித்து வந்தனர்; வருகின்றனர்.

இந்தப் பழங்கால பழக்க வழக்கங்களை புதிய பார்வையோடு பார்த்து இன்றைய நவீன அறிவியல் நுட்பத்தையும் பயன்படுத்தி அவற்றைச் சுத்தப்படுத்தி, பராமரித்து வந்தால் நீரில்லாப் பற்றாக்குறை ஆங்காங்கே பெருமளவு தீர்ந்து விடும். அனைவரும் முயன்றால் முடியாதது ஒன்றில்லை!

***

உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 5 (Post No.6700)

WRITTEN by S NAGARAJAN

swami_48@yahoo.com

 Date: 30 JULY 2019


British Summer Time uploaded in London – 6-59 AM

Post No. 6700

 Pictures are taken by London swaminathan ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாக்யா மாதமிருமுறை வெளிவரும் இதழில் 1-7-19 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதினொன்றாம் கட்டுரை – அத்தியாயம் 427

உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 5

ச.நாகராஜன்

எஸ்கில் ரோனிங்ஸ்பேக்கன் – சிகரங்களுக்கு இடையில் நடப்பவர் (Eskil Ronningsbakken)

அஞ்சாநெஞ்சன் எஸ்கில் ரோனிங்ஸ்பேக்கன் நார்வேயைச் செர்ந்தவர். 1979, ஜூன் 24ஆம் தேதி பிறந்தவர். பெரும் மலைப் பள்ளத்தாக்குகளுக்கு இடையேயும் பிரம்மாண்டமான 3500 அடி உயரமுள்ள இரு சிகரங்களுக்கு இடையேயும் பாலன்ஸ் செய்து நடக்கும் இவரைக் கண்டால் உலகமே பிரமிக்கிறது. யோகா, தியானம் ஆகியவற்றை முறைப்படி பயிற்சி செய்து இந்த அபூர்வ சாதனையை அவர் நிகழ்த்தி வருகிறார்; சிறு வயதில் தொலைக்காட்சியில் இந்திய யோகி ஒருவர் இப்படி பாலன்ஸ் செய்யும் நிகழ்ச்சியைப் பார்த்த அவர் தானும் அது போல ஆக வேண்டும் என்று விரும்பினார். நார்வேயின் கிராமப்புறத்தில் உள்ள மரங்களின் மீதும் வீட்டுக் கூரைகளின் மீதும் ஏற ஆரம்பித்தார்; 12 வயதில் சர்கஸ் கம்பெனி ஒன்றில் சேர்ந்த அவர் பீட்டர் ஜாகோப் என்ற சர்கஸ் மாஸ்டரிடம் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். பின்னர் உலகம் முழுவதும் வலம் வந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்! இவரது சாகஸ செய்கைகளை உடனே யூ டியூபில் கண்டு மகிழலாம்.

வலுவான குழந்தை வீரன் லையாம் ஹோக்ஸ்ட்ரா

ஒரு சிறுவனா இப்படிச் செய்வது என்று உலகை அதிசயிக்க வைத்த லையாம் ஹோக்ஸ்ட்ரா மிச்சிகனில் 2005இல் பிறந்தவன். ஐந்தே மாதக் குழந்தையாக இருந்த போது இரும்பில் ஒரு சிலுவையைப் போட்டுக் காண்பித்த இந்தக் குழந்தையின் செய்கை தாயை ஆச்சரியப்பட வைத்தது. பல்வேறு உடல் பிரச்சினைகளைச் சந்தித்த குழந்தையைத் தாய் தத்துக்குக் கொடுத்து விட்டார். லையாமைப் பரிசோதித்த டாக்டர்கள் ஒரு மிக அரிய நிலையான மசில் ஹைபர்ட்ரோபி (Muscle Hypertrophy) இருப்பதாகக் கண்டு பிடித்தனர். அதாவது குழந்தையாக இருக்கும் போதே உடல் திசுக்கள் அபாரமான உடல் வலிமையைத் தரும் நிலை இது. மூன்றே வயதில் லையாமின் உடல் திசுக்கள் 40 சதவிகிதம் வலிமை கொண்டதாக ஆகி கொழுப்பு மிகவும் குறைவாக இருந்த நிலையை எய்தினான். காமிக் புஸ்தகங்களில் வரும் சூப்பர்மேன் வேலையை நிஜமாகவே நேரடியாகச் செய்து காண்பிக்கவே உலகில் உள்ள அனைத்து தொலைக்காட்சி நிலையங்களும் லையாமின் வீட்டு வாசலில் அணி வகுத்து நின்றன! எந்த வித கனமான பொருளையும் ஒரு வினாடி நேரத்தில் தூக்கி நிறுத்தும் லையாமை உலகமே பார்த்து அதிசயித்தது! லையாமின் சாகஸங்களை நெட்டில் பார்க்கலாம். இரும்புக் கதவுகளை அனாயாசமாகத் திறப்பது, உடைப்பது, துப்பாக்கிக் குண்டைத் தடுத்து நிறுத்துவது .. அடேயப்பா நம்ப முடியாத இந்த செய்கைகளைக் கண்டு அயல்கிரக மனிதனைச் சித்தரிக்கும் திரைப்பட டைரக்டர்கள் கூட அரண்டு போய் மிரள்கின்றனர்! உலகில் சிறியதாக இருப்பவர்கள் கூட அரிய சாதனைகளைச் செய்ய முடியும் என்பதே லையாம் உலகிற்குத் தரும் செய்தி. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது!

சித்திரவதை செய்தாலும் வலி இல்லாத டிம் க்ரிட்லேண்ட்!

அமெரிக்காவைச் சேர்ந்த டிம் க்ரிட்லேண்ட் (Tim Cridland) எவ்வளவு சித்திரவதை செய்தாலும் வலி இல்லாத அல்லது வலியைப் பொறுத்துக் கொள்ளும் ஒரு அதிசயப் பிறவி. ஜமோரா தி டார்ச்சர் கிங் (Zamora the Torture King), – சித்திரவதை மன்னன் ஜமோரா – என்பது இவரது செல்லப் பெயர். நம் ஊரில் அலகு குத்திக் கொள்வது போல ஒரு கன்னத்திலிருந்து கூரிய ஊசியை விட்டு அதை இன்னொரு கன்னம் வழியே எடுக்கிறார் இவர்.  அதை விட இன்னும் ஒரு படி அதிகமாகப் போய், வாய் வழியே அலகு ஊசிகளைக் குத்தி அதைக் கழுத்தின் கீழ் வழியாக எடுப்பது இவருக்குக் கை வந்த கலை! கத்தியை முழுங்குவது, தீக் கங்குகளை உண்பது, மின் ஷாக்கை வாங்கிக் கொள்வது என்று இப்படி எத்தனை விதமான சித்திரவதை உண்டோ அத்தனையையும் செய்து கொண்டு வலியே தெரியாமல் இருப்பது எப்படி என்பதை இவர் உலகிற்குக் காட்டுகிறார். வலி தெரியாமல் இருக்க மனதை வெளிப்புறத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் இவர். ரிப்ளியின் பிலீவ் இட் ஆர் நாட் தொடர் இவர் சாகஸங்களைச் சித்தரித்துப் பாராட்டுகிறது!

108 வயதான சீக்கிய சூப்பர் மேன் பௌஜா சிங்!

1911ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி பிறந்த பௌஜா சிங் உலகின் மிக மூத்த சாதனையாளர்! பிரிட்டன் பிரஜா உரிமை பெற்ற இவர் தனது 100ஆம் வயதில் ஒண்டேரியா மாஸ்டர்ஸ் அசோஷியேஷன் நடத்திய ஒரு விசேஷ நிகழ்ச்சியில் எட்டு சாதனைகளை ஒரே நாளில் நிகழ்த்திப் பெரும் பாராட்டைப் பெற்றார். இஞ்சி கலந்த தேநீரை அருந்துவது, காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது, இரவில் சீக்கிரமே உறங்கச் செல்வது, கடவுள் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்பது ஆகியவையே தன் நீடித்த ஆயுளுக்குக் காரணம் என்கிறார் இவர். 2003ஆம் ஆண்டு நிகழ்ந்த லண்டன் மாரத்தானை ஆறு மணி நேரம் இரண்டு நிமிடங்களில் இவர் முடித்தார். இவரைப் பற்றி யூ டியூபில் காணலாம்.

அடுத்து இன்னும் சில அதிசய வல்லுநர்களைக் காண்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

விண்வெளியில் விண்கலத்தைத் தட்டும் சத்தம்!

2003ஆம் ஆண்டு யாங் லிவி (Yang Liwei) என்னும் சீன விண்வெளி வீரர் ஷென்ஷோ 5 (Shenzhou 5) என்ற சீன விண்கலத்தில் விண்ணில் பறந்தார். ஷென்ஷோ கலங்களின்  தொடர் பயணங்களில் இதுவும் ஒன்று. அப்போது அக்டோபர் 16ஆம் தேதி அவர் ஒரு விசித்திரமான சத்தத்தைக் கேட்டார். விண்கலத்தின் கதவை யாரோ தட்டுவது போன்ற ஒரு சத்தம்! இரும்பு வாளியை ஒரு சுத்தியலால் தட்டுவது போன்ற பலமான சப்தத்தை அவரால் நன்கு கேட்க முடிந்தது.

விண்வெளி வெற்றிடத்தால் நிரம்பியது. அங்கு ஒலி அலைகள் ஊடுருவிச் செல்ல வேண்டுமெனில் ஒரு ஊடகம் வேண்டும். விண்வெளியில் நீரோ அல்லது காற்றோ ஊடகமாக இல்லை. அப்படியானால் எப்படிச் சத்தம் வருகிறது.

அவர் திகைத்தார். தனது இந்த அனுபவத்தைக் கீழே தரையில் இறங்கியவுடன் அவர் கூறிய போது அனைவரும் நகைத்தனர். அவர்  ஏதோ கதை கட்டுகிறார் என்று அனைவரும் கூறினர். ஆனால் அதிசயமான விஷயம் என்னவெனில் இதை அடுத்து விண்வெளிக்கு ஷென்ஷோ 5 மற்றும் 6 கலங்களில் சென்ற விண்வெளி வீரர்களும் இதே போன்ற சத்தத்தைக் கேட்டனர்!

அகண்டாகாரமான விண்வெளியில் விண்கலத்தின் கதவை யார் தட்டியது? இந்த மர்மம் இன்னும் விடுபட்ட பாடில்லை!

***

தமிழர் கண்டு பிடித்த அதிசய கணக்குப் பலகை! (Post No.6692)

WRITTEN by London  Swaminathan

swami_48@yahoo.com


Date: 28 JULY 2019


British Summer Time uploaded in London – 14-59

Post No. 6692

 Pictures are taken by London swaminathan ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

correction– read it as 398

Indiahhhh——RICHEST country in the world (Part 4) | Tamil and Vedas


https://tamilandvedas.com/…/indiahhhh-richest-country-in-the-worl…

1.      

14 Sep 2011 – Mohmed of Gazni invaded India 17 times just to plunder all the temples in North India. He came to know about the fabulous wealth of Hindu …

Indiahhhhhhh ———–the RICHEST country in the … – Tamil and Vedas


https://tamilandvedas.com/…/indiahhhhhhh-the-richest-country-in-t…

12 Sep 2011 – Knowing that India was the richest country in the world they all set an eye on India. But what about today’s India? Is still India a rich country?

Indiahhhhhhh ———–the RICHEST country in the … – Tamil and Vedas


https://tamilandvedas.com/…/indiahhhhhhh-the-richest-country-in-t…

1.      

12 Sep 2011 – Please note, this is the third part in a series on why India is the Richest country in the world. For the first part, click here. For the second part, …

Indiahhhhh—-RICHEST country – Part 6 | Tamil and Vedas


https://tamilandvedas.com/2011/09/18/indiahhhhh-richest-country-–-part-6/

1.      

18 Sep 2011 – By S Swaminathan Please note this is part of an ongoing series on Why India is the Richest Country in the World. See the links below for the …

Indiahhhhhhh———-RICHEST country in the world – Tamil and Vedas


https://tamilandvedas.com/…/indiahhhhhhh-richest-country-in-the-…

18 Sep 2011 – Indiahhhhhhh———-RICHEST country in the world (Part 5) … Now and then we read about the CBI raids in Ashrams run by holy men of India.

Mogul gold coins | Tamil and Vedas


https://tamilandvedas.com/tag/mogul-gold-coins/

1.      

India was the richest country in the ancient world. Until 1987 the largest gold coin was an Indian coin issued by the Mogul emperor Jahangir. Seventeenth …

June 29, 2012

ஆயிரம் கோடி ரூபாய் ரத்தின பூமி …

https://tamilandvedas.com/…/ஆயிரம்-கோடி-ரூபா…


Translate this page

4 May 2012 – இந்தியா விலை மதிக்க முடியாத செல்வச் செழிப்புள்ள நாடு. இன்றும் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடு. இது பற்றி …

கர்நாடக அதிசயங்கள்-1 | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/கர்நாடக-அதிசயங்கள்-…


Translate this page

27 Aug 2017 – உலகிலேயே பணக்கார நாடு இந்தியாஎன்ற தலைப்பில் ஐந்து அல்லது ஆறு கட்டுரைகளை எழுதியபோது இதற்கு ஆதாரமாக ஒரு …

வேதத்தில் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/வேதத்தில்/


Translate this page

புத்தர் வட இந்தியா முழுதும் பிரசாரம் செய்தார். ….. உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நாடு இந்தியா” — என்ற தலைப்பிட்ட ஐந்து ஆங்கிலக் …

ரிக் வேதத்தில் தங்க நகைகள், தங்கக் …

https://tamilandvedas.com/…/ரிக்-வேதத்தில்-தங்…


Translate this page

26 Sep 2017 – மெகஸ்தனிசும், ஸ்டிராபோவும் இந்தியாவின் தங்க வளத்தைப் … இன்றும் உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான் என்றும் ஐந்து …

–subham–

லட்சம் புதிர்கள், விடுகதைகள்(Post No.6680) – Part 3

WRITTEN  by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 26 JULY 2019


British Summer Time uploaded in London – 7-05 AM

Post No. 6680


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–

உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! –(Post No.6673)

WRITTEN  by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 24 JULY 2019


British Summer Time uploaded in London – 15-39

Post No. 6673


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ச.நாகராஜன்

அபூர்வ தற்காப்புக் கலை வீரர் – ப்ரூஸ் லீ

     உலகம் இதுவரை கண்டிராத அதிசய தற்காப்புக் கலை வீரர் ப்ரூஸ் லீ. சான்பிரான்ஸிஸ்கோவில் சைனாடவுன் பகுதியில் ஹாங்காங்கைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு 1940, நவம்பர் 27ஆம் தேதி பிறந்த ப்ரூஸ் லீ 32 ஆண்டுகளே வாழ்ந்து பல அதிசய சாதனைகளை நிகழ்த்தி 1973, ஜூலை 20ஆம் தேதி மறைந்தார்.

மின்னல் வேக சண்டை நிபுணர் மட்டுமல்ல, அவர் ஒரு நடிகர், டைரக்டர், சண்டைகளைக் கற்பிக்கும் பள்ளியை நிறுவியவர், ஒரு தத்துவ வித்தகர்.

   இளம் வயதிலேயே நடிக்க ஆரம்பித்த அவருக்கு சீனத் தற்காப்பு சண்டை உத்திகள் அனைத்தும் அத்துபடி.   ‘எண்டர் தி ட்ராகன்’ உள்ளிட்ட அவரது திரைப்படங்களை உலகிலுள்ள மக்கள் இன்றளவும் பார்த்து வருகின்றனர். நொடியில் நூற்றில் ஒரு பங்கில் அவரது கைகள், கால்கள், உடல் அங்கங்கள் அசையும், மிகக் கூர்மையான கண் பார்வை அவர் நினைத்ததைச் செய்து முடிக்கும்! ஒரு விரலை வைத்துக் கொண்டு அதன் மீது உடலை அவர் தூக்குவார்! கையில் சீன உணவு சாப்பிடும் இரு கழிகளை வைத்துக் கொண்டு பறந்து செல்லும் அரிசி மணியைப் பிடிப்பார். அவரது திறன்கள் சொல்லுக்கு அப்பாற்பட்டவை. மனிதன் என்ன நினைக்கிறானோ அதைச் செய்ய முடியும் என்பது அவரது நம்பிக்கை.  அவருக்கு உலகெங்கும் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. இரண்டரை மீட்டர் உயரமுள்ள வெங்கலச் சிலை அவர் நினைவாக 2005ஆம் ஆண்டு ஹாங்காங்கில் திறந்து வைக்கப்பட்டது. உலகம் போற்றும் அதிசய வீரரான இவரைப் போல இன்னொருவரை உலகம் காணுமா என்ற வியப்பு அனைவருக்கும் உண்டு!

எக்ஸ் ரே கண் கொண்ட நடாஷா டெம்கினா

    1987ஆம் ஆண்டு பிறந்த ரஷிய பெண்மணியான நடாஷா டெம்கினாவிற்கு (Natasha Demkina) ஒரு அபூர்வப் பார்வை உண்டு; ஆம், அவரது  கண்கள் எக்ஸ் ரே கண்கள். மற்றவர்களின் உடலின் உள்ளே இருப்பதை அவரால் சுலபமாகப் பார்க்க முடியும். அவரது பத்தாம் வயதிலிருந்தே இந்த அபூர்வ பார்வையை அவர் பயன்படுத்த ஆரம்பித்தார். டாக்டர்களால் என்ன வியாதி என்று நிர்ணயிக்க முடியாத சமயத்தில் அவசர உதவியாக அவர் அழைக்கப்பட்டு  என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவுவார். 2004இல் டிஸ்கவரி சேனலில் அவர் பல காட்சிகளில் தோன்றினார்; ஜப்பானிய தொலைக்காட்சியும் அவரை வரவேற்றது. உலகில் அடுத்தவரின் உள் உறுப்புகளைப் பார்க்கும் ஒரே பெண்மணி இன்று இவர் தான்!

தூங்காத மனிதர் தாய் காக்

   வியட்நாமைச் சேர்ந்த அதிசய மனிதர் தாய் காக் (Thai Ngoc).

1942ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் நாற்பத்தாறு ஆண்டுகள் தூங்கவே இல்லை. ஆனால் செயல் திறனில் இவரிடம் எந்தக் குறைபாடும் இல்லை. 50 கிலோ சாக்குகளை ஐந்து கிலோமீட்டர் தூக்கிச் செல்வாராம். இளமையிலிருந்தே தூங்குவதில்லை என்று கூறும் இவர் “நீரில்லாத செடி போல என் வாழ்வு இருக்கிறது” என்கிறார்.

ஒரே ஒரு நாள் தூக்கம் இல்லாவிட்டால் நாம் படும் பாடு என்ன என்பது நமக்கே நன்கு தெரியும். ஆக, தூங்காத இந்த மனிதர் உலகின் வியப்பூட்டும் மனிதர் வரிசையில் சேர்கிறார்.

கராத்தே வீரர் மாஸ் ஒயாமா

   உலகம் அறிந்த கராத்தே வீரர் மாஸ் ஒயாமா. (Mas Oyama).

 1923 ஜூலை 27ஆம் தேதி கொரியாவில் ஜிம்ஜி என்ற இடத்தில் பிறந்தார். 1994 ஏப்ரல் 26ஆம் தேதி மறைந்தார்.

குமைட் என்று சொல்லப்படும் ஒரு சண்டையில் 300 பேரை மூன்று நாட்கள் சண்டையிட்டுத் தோற்கடித்தார். இப்படி ஒரு அரிய சாதனையை நிகழ்த்தக் காரணம் மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை முறை தான் என்றார் அவர். ‘வாட் இஸ் கராத்தே’ என்று 1963இல் இவர் எழுதிய புத்தகம் உலகில் மிக அதிக விற்பனையான கராத்தே புத்தகம் என்ற புகழைப் பெற்றது.கராத்தேயில்  ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்து அதை அனைவருக்கும் இவர் கற்பித்து வந்தார்.

சிங்கங்களின் தோழர் கெவின் ரிச்சர்ட்ஸன்

     சிங்கத்தின் அருகில் சென்று அதை முத்தமிடும் மனித சிங்கம் கெவின் ரிச்சர்ட்ஸன்! (Kevin Richardson) சிங்கத்தின் வாயில் தன் கையை சாதாரணமாக விடுவார். ஏன், சிங்கங்களுடனேயே படுத்துத் தூங்குவார். சிங்கங்களைப் பழக்கும் சர்க்கஸ் வீரர்கள் உலகில் பலர் உண்டு. ஆனால் அவர் போல சிங்கங்களுடன் சகஜமாக யாராலும் இருக்க முடிவதில்லை; இருந்ததில்லை! தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க்கில் 1974 அக்டோபர் 8ஆம் தேதி பிறந்த கெவின், ஜூவாலஜி, மரைன் பயாலஜி படிப்பில் தேறினார். 1600 ஏக்கர் பரப்பளவுள்ள மிருகக்காட்சி சாலையில் பணி புரிய ஆரம்பித்தார். அங்கிருந்த சிங்கங்கள், சிறுத்தைகள் அவருடன் தோழமை கொண்டன. சில சமயம அவரை அவை பிராண்டும், கடிக்கும்; என்றாலும் அவர் அவைகளைக் கண்டு அஞ்சி ஓடவில்லை. நன்கு பழக ஆரம்பித்தார். உலகின் ஒரே ‘சிங்க மனிதர்’ (Lion Whisperer) என்ற பெயரையும் பெற்றார். இவர் எழுதிய புத்தகங்கள் வியக்க வைப்பவை; உலகில் அதிக பிரதிகள் விற்பனையானவை. காணொளிக் காட்சிகளாக ஏராளமான காட்சிகள் இவரைப் பற்றி உள்ளன. பார்ப்பவர்களை வியப்படையச் செய்யும் காட்சிகள் இவை!

அடுத்து இன்னும் சில அதிசய வல்லுநர்களைப் பார்ப்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி இல்யா இவானோவ் பைத்தியக்காரத்தனமான சோதனை ஒன்றை மேற்கொண்டார்.

1924ஆம் ஆண்டு போல்ஷ்விக் அரசாங்கம் ரஷியாவில் ஆட்சி நடத்தியபோது அவருக்கு நாட்டை விட்டு வெளியேறி உயர் ரக மனிதர்களை உருவாக்கும் முயற்சியைச் செய்ய அனுமதியை வழங்கியது. 1926ஆம் ஆண்டு கோடைகாலத்தில் பாரிஸுக்கு வந்தார். அங்கு நோவா என்ற பெயருடைய  ஒரு சிம்ப் குரங்கின் உடலில் ஒரு பெண்ணின் கருப்பையை ஒட்ட வைத்தார். அந்தக் குரங்கிடம் மனித விந்து செலுத்துவதன் மூலம் சூப்பர் மனிதனை உருவாக்க முயன்றார். அதே ஆண்டு நவம்பரில் ஆப்பிரிக்கா சென்ற அவர் அங்கேயும் இது போல குரங்குகளின் மீது விஷப்பரிட்சையைச் செய்ய ஆரம்பித்தார். ஆனால் ஒரு குரங்கும் கூடக் கருத்தரிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் தன் உத்தியை மாற்றிக் கொண்டார். இப்போது ஒர் பெண்மணியின் கருப்பையில் குரங்கின் விந்தைச் செலுத்திப் பார்க்க எண்ணினார். இதற்காகத் தாமாக முன் வரும் சோவியத் பெண்மணிகளை அவர் தேடினார். ஐந்து பெண்மணிகள் இந்தச் சோதனையை மேற்கொள்ள முன் வந்தனர். ஆனால் இந்தச் சோதனை நடப்பதற்கு முன்பாகவே ஸ்டாலின் ரஷியாவை ஆள்வதற்கு வரவே, ஒரு ஸ்டாலின் ஆதரவாளர் அவரை கழக்கஸ்தானுக்கு நாடு கடத்தி விட்டார். அங்கு சென்ற அவர் இரு வருடங்களுக்குள்ளாக உயிரிழந்தார்.

ஒரு அபாயகரமான பரிசோதனை நடைபெறாமலேயே நின்றது!

***

நத்தை மஹிமை (Post No.6628)

WRITTEN BY London swaminathan


swami_48@yahoo.com


Date: 14 JULY 2019


British Summer Time uploaded in London – 13-
50

Post No. 6628


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Xxx subham xxx