நாய் 6, காகம் 5, சேவல் 4 சொல்லிக் கொடுக்கும்! சாணக்கியனின் விநோத போதனை (Post 4560)

Written by London Swaminathan 

 

Date: 29 DECEMBER 2017 

 

Time uploaded in London- 7-15 am

 

 

Post No. 4560

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

உலக மஹா அறிவாளி,

உலகின் முதல் முழு நீளப் பொருளாதார புத்தகம் எழுதிய மேதாவி, அவிழ்த்த குடுமியை லட்சியம் நிறைவேறும் வரை  முடிய மாட்டேன் என்று  என்று வீர சபதம் செய்த பார்ப்பான்,

மகத சாம்ராஜ்யத்தை உருவாக்கியும் குடிசையில் வாழ்ந்த ஏழைப் ப்ராஹ்மணன்

சாணக்கியன் ஆவான்.

அவன்,  பர்த்ருஹரி, திருவள்ளுவன் போன்றோருக்கெல்லாம் முன்னதாக எழுதிய சாணக்கிய நீதியில் ஒரு புதிர் போடுகிறான். பின்னர் அவனே 6 ஸ்லோகங்களில் புதிரையும் விடுவித்து விடுகிறான்.

வாழ்க்கையில் வெற்றி பெற இந்த 20 குணங்களையும் ஒருவன் பின்பற்றினால் போதும் என்றும் சொல்கிறார்..

ஸிம்ஹாத் ஏகம் பகாத் ஏகம் சிக்ஷேச்சத்வாரி குக்குடாத்

வாயஸாத்பஞ்ச சிக்ஷேச்ச ஷட் சுனஸ்த்ரீணி கர்தபாத்

–சாணக்ய நீதி , அத்தியாயம் 6, ஸ்லோகம் 14

 

சிங்கத்திடம் இருந்தும் கொக்கிடமிருந்தும் ஒவ்வொரு குணத்தைக் கற்றுக்கொள்க;

சேவலிடமிருந்து நான்கு, காகத்திடமிருந்து ஐந்து, நாயிடமிருந்து ஆறு, கழுதையிடமிருந்து மூன்று குணங்களைக் கற்றுக் கொள்க.

 

இப்படிச் சொல்லிவிட்டு, சாணக்கியன் நிறுத்தி இருந்தால் ஆளாளுக்கு ஒவ்வொரு வியாக்கியானம் செய்திருப்பர். நல்ல வேளையாக அவரே பின் வரும் ஸ்லோகங்களில் விளக்கமும் சொல்லிவிடுகிறார்.

வாழ்க்கையில் வெற்றி பெற 20

குணங்கள்- சாணக்கியன் பட்டியல்

 

ஆனால் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி குணங்களைக் கற்பிப்பதில் இவர்தான் முதல்வர் என்று நினைக்க வேண்டாம். பாகவத புராணத்தில் 24 இயற்கைப் பொருட்களை, பிராணிகள், பறவைகளை குரு என்று தத்தாத்ரேயர் சொன்னதை முன்னரே கொடுத்துள்ளேன்.

 

விவேக சூடாமணியில் 13 இயற்கைப் பொருட்களை ஆசிரியராகப் பாடி இருப்பதையும் கொடுத்துவிட்டேன்.

 

வில்லியம் வோர்ட்ஸ்வர்த் (William Wordsworth) என்ற ஆங்கிலக் கவிஞன், புத்தகங்களைத் தூக்கி எறிந்து விட்டு இயற்கை அன்னையிடம் வாருங்கள்; எல்லா முனிவர்களையும் விட அதிகம் கற்றுக் கொடுப்பாள் என்று சொன்னதையும் எழுதிவிட்டேன்,

சாணக்யன் (370 BCE) சொல்லுவதைக் காண்போம்:-

 

ப்ரபூதம் கார்யமல்பம் வா யன்னரஹ கர்துமிச்சதி

ஸர்வாரம்பேண தத்கார்யம் சிம்ஹோதகம் ப்ரசக்ஷதே – 15

 

சிங்கத்திடம் கற்கும் முதல் பாடம்- சிறியதோ பெரியதோ, ஒரு காரியத்தைச் செய்து முடிக்க முழு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும்  காட்ட வேண்டும் – ஸ்லோகம் 15

 

இந்த்ரியாணி ச ஸம்யம்ய பகவத் பண்டிதோ நரஹ

தேசகாலபலம்ஞாத்வா ஸர்வகார்யாணி ஸாதயேத் –16

 

 

கொக்கு போல காத்திருந்து பெற வேண்டும்–தக்க இடம், தகுந்த காலம், தன்னுடைய சக்தி ஆகையவற்றைக் கொக்கிடம் கற்க.

ப்ரத்யுத்தானம்ச யுத்தம் ஸம்விபகம் ச பந்துஷு

ஸ்வயமாக்ரம்ய புக்தம் ச சிக்ஷேசத்வாரி குக்குடாத் –17

 

சேவலிடம் நான்கு குணங்களைக் கற்கவும்: அதி காலையில் எழுந்திருத்தல், தாக்குதலைச் சமாளிக்க ஆயத்த நிலையில் இருத்தல், கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்தல், போட்டிக்கிடையே தானே சேகரித்து உண்ணல்.

கூடம் ச மைதுனம் தார்ஷ்ட்யம்  காலே காலே ச சம்க்ரஹம்

அப்ரமத்தம விஸ்வாசம் பஞ்ச சிக்ஷேச்ச வாயஸாத்– 18

 

கீழ்கண்ட ஐந்து குணங்களை காகத்திடம் கற்கவும்: ரஹசியமாக புணர்தல், துடுக்குத்தனம்,  காலாகாலத்தில் சேகரித்து வைத்தல், கவனமாக/ உஷாராக இருத்தல், மற்றவர்களை எளிதில் நம்பாது திருத்தல்

பஹ்வாசீ ஸ்வல்பஸந்துஷ்டஹஸுனிதோ லகுசேதனஹ

ஸ்வாமிபக்தஸ்ச சூரஸ்ச ஷடேதே ஸ்வானதோ குணாஹா-19

 

பொருள்

நல்ல அளவு உணவு அருந்தல், கொஞ்சம் கிடைத்தாலும் திருப்தி அடைதல், நன்றாகத் தூங்கல் , சிறிய சப்தம் கேட்டாலும் விழித்தல், விசுவாசமாக இருத்தல், துணிச்சல் ஆகிய குணங்களை நாயிடம் இருந்து கற்க வேண்டும்

ஸுஸ்ராந்தோபி வஹேத் பாரம் சீதோஷ்ணம் ந ச பஸ்யதி

ச்ஸந்துஷ்டஸ்சரதே நித்யம் த்ரீணி சிக்ஷேச்ச கர்தபாத் – 20

 

மூன்று குணங்களைக் கழுதையிடம் கற்கவும்: என்ன களைப்பு இருந்தாலும் தொடர்ந்து வேலை செய்தல், குளிர், வெப்பம் பற்றிக் கவலைப்படாது இருத்தல், எப்போதும் திருப்தியுடன் காணப்படுதல்.

 

ய ஏதான் விம்சதி குணானாசரிஷ்யதி மானவஹ

கார்யா அவஸ்தாஸு ஸர்வாஸு அஜேயஹ ஸ பவிஷ்யதி –21

 

எல்லா விதமான பணிகளிலும் ஒருவன் இந்த 20 குணங்களையும் பின்பற்றினால், அவனை வேறு யாரும் வெல்ல முடியாது.

சாணக்கியன் இந்த ஒரு நீதி நூலில் மட்டுமே 330-க்கும் மேலான கவிதைகளைப் பொழிந்துள்ளான், வேறு பல நூல்களிலும், உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரத்திலும் ஆயிரத்துக்கும் மேலான பொன்மொழிகளை உதிர்த்துள்ளான்!

 

வாழ்க சாணக்கியன்!!! வளர்க அவர்தம் புகழ்!!!

 

சுபம்-

 

பத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்! (Post No.4559)

Date: 29  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-13 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4559

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

அதிசயப் புலவர் கவி காளமேகம் பற்றிய முந்தைய கட்டுரை எண் 4525 ; வெளியான தேதி 21-12-17- இதைப் படித்து விட்டுத் தொடரவும்.

 

      யம கண்டம் ஏறிப் பாடிய கவி காளமேகத்தின் அதிசயப் பாடல்கள்! –

குடத்திலே கங்கை அடங்கும்!!

 

ச.நாகராஜன்

 

 

6

பத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்!

 

அதிமதுரக் கவிராயர் தன் 64 தண்டிகைகாரர்களுடனும், இதர புலவர்களுடனும், பொது மக்களுடனும் தயாராக இருக்க திருமலைராயன் அரியாசனத்தில் அமர்ந்திருக்க அனாயாசமாக யமகண்டம் ஏறினார் கவி காளமேகம்.

அனைவரும் பதைபதைக்க அமர்ந்திருந்தனர்.

 

 

சமஸ்யா பூரணம் என்பதைப் பற்றி ஏற்கனவே இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையில் விளக்கியுள்ளார். மீண்டும் அதை இங்கு விவரிக்கவில்லை.

 

ஈற்றடியாக ஒரு புதிரைக் கொடுத்து அதை விடுவிக்கக் கூறுவது சிறந்த புலவருக்கான ஒரு பரீட்சை – இதுவே சமஸ்யா பூரணம்.

‘குண்டக்க மண்டக்க’ என்று இந்தக் காலத்தில் கூறுவது போல  எதிராளியை மடக்குவதற்காகவே எதையாவது கூறி அதை ஈற்றடியாக அமைத்து முதல் மூன்று அடியைப் பூர்த்தி செய்யச் சொல்வது ஒரு பழக்கமாக இருந்தது.

 

சமஸ்யா என்ற வார்த்தையே தமிழில் சமிசை ஆக ஆகி விட்டது.

 

முதலில் அதிமதுரக் கவிராயர் எழுந்தார்.

திருமால் அவதாரம் பத்தினையும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள் என்று கூறி விட்டுப் பெருமிதம் தொனிக்க அமர்ந்தார்.

பத்து பெரும் அவதாரங்களை நான்கு அடி கொண்ட வெண்பாவில் அடக்க முடியுமா?

 

ஆனால் கவி காளமேகமோ கலங்கவில்லை.

பத்து அவதாரத்திற்கு ஒரு வெண்பா வேண்டுமா என்ன? அரை வெண்பா போதுமே என்றார் அவர்.

கூட்டம் அயர்ந்து போனது.

பாடலைப் பாடினார் காளமேகம்:

மெச்சுபுகழ் வேங்கடவா! வெண்பாவிற் பாதியிலென்

இச்சையிலென் சென்ம மெடுக்கவா – மச்சாகூர்

மாகோலா சிங்காவா மாராமா ராமாரா

மாகோபா லாமாவா வாய்

 

கூட்டம் திகைத்தது. “மாகோலாசிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய்”! என்ன இது?

காளமேகமே விளக்கினார்:

 

மெச்சு புகழ் – தேவர் முனிவர் ஆகிய அனைவரும் மெச்சுகின்ற பெரும் கீர்த்தியை உடைய

வேங்கடவா – திருவேங்கடம் உடையானே!

வெண்பாவில் பாதியில் – ஒரு வெண்பாவில் பாதியில்

என் இச்சையில் – எனது விருப்பப்படி

உன் சென்மம் எடுக்க – உன் அவதாரம் பத்தையும் எடுத்துக் கூற

வா – வந்து அருள்வாயாக!

மச்சா – மச்சாவதாரத்தைச் செய்தவனே

கோலா – வராஹாவதாரத்தைச் செய்தவனே

கூர்மா – கூர்மாவதாரத்தைச் செய்தவவே

சிங்கா – நரசிங்கனே

வாமா – வாமனனே

ராமா – பரசுராமா!

ராமா – தசரத ராமா!

ராமா – பலராமா!

கோபாலா – கிருஷ்ணா

மா ஆவாய் – இனி கல்கி அவதாரம் செய்யப் போகின்றவனே!

மச்சம் – மீன்; கூர்மம் – ஆமை; கோலம் – பன்றி; வாமனம் – குறள்; மா- குதிரை (இந்த அவதாரம் இனி செய்யப் போகின்றபடியால் ஆவாய் என எதிர் காலத்தில் கூறினார்)

 

சபையோர் ஆரவாரம் செய்ய அதி மதுரம் தலை கவிழ்ந்தார்.

 

 

7

 

Ancient Zodiac of Egypt

 

ஒரே வெண்பாவில் 12 ராசிகளை அடக்குங்கள்!

 

இராசிகளின் பெயர்களை ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள்!

 

அடுத்தாற்போல ஒரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.

ஒரு வெண்பாவில் அனைத்து ராசிகளும் வரவேண்டும்.முறையும் தொகையும் இருக்க வேண்டும். ஆனால் எந்த அடைமொழியும் இருத்தல் கூடாது. பாடுங்கள் பார்ப்போம் என்றார்.

 

காளமேகம் சிரித்தார். பாடலைப் பகர்ந்தார்:

 

பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க

டகஞ்சிங்க கன்னி துலாம்விர்ச் – சிகந்த

நுசுமகரங் கும்பமீ னம்பன்னி ரண்டும்

வசையறு மிராசி வளம்

மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் (சிங்கம்), கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் , மீனம் ஆகியவை பன்னிரெண்டும் ராசி வளம்.

 

கூட்டம் ஆரவாரித்தது.

8

 

 

Tri Murtis

ஒரு வெண்பாவில் மும்மூர்த்திகளின் அனைத்து விவரமும் அடக்க முடியுமா?

 

இன்னொரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.

இன்னும் கஷ்டமான பொருளைத் தந்து அவரைப் பாட முடியாதபடி மடக்க வேண்டும் என்று எண்ணி ஏராளமான விஷயங்களைக் கூறி அதை ஒரு வெண்பாவில் அடக்க வேண்டும் என்றார்.

அவர் கூறியது:

மும்மூர்த்திகளின் பெயர், அவர்கள் தின்னும் கறி, உண்ணும் உணவு, ஏந்துகின்ற ஆயுதம், அணிகின்ற ஆபரணம், ஏறுகின்ற வாகனம், வசிக்கும் இடம் ஆகிய இவை அனைத்தும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாட முடியுமா என்றார்.

இவ்வளவு விஷயங்களை ஒரு நாலடிப் பாவில் அடக்க முடியுமா?

 

முடியும் என்றார் காளமேகம். பாடினார் இப்படி:

சிறுவ னளைபயறு செந்நெற் கடுகு

மறிதிகிரி தண்டு மணிநூல் – பொறியரவம்

வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்

கற்றாழம் பூவே கறி

 

அனைவரும் பிரமிக்க காளமேகம் பாடலை விளக்கினார்.

வேதன் அரன் மாலுக்கு – பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கு

கறி – கறி ஆவன

பயறு, சிறுவன், அளை – பயறு, பிள்ளை, வெண்ணெய் ஆகிய மூன்றும் தான்!

 

செந்நெல் கடுகு – நெல், விஷம், பூமி ஆகிய மூன்றுமே உணவாகும்.

தண்டு, மறி, திகிரி – தண்டம், மான், சக்கரம் ஆகிய மூன்றுமே ஆயுதங்களாகும்.

 

நூல், பொறி அரவம் ,மணி – உபவீதம், புள்ளியை உடைய பாம்பு, கௌஸ்துபம் மணி ஆகிய மூன்றுமே பூஷணம்

அன்னம், வெற்றேறு, புள் – அன்னம், வெள்ளிய இடபம், கருடன் ஆகிய இந்த மூன்றுமே வாகனங்களாகும்.

பூ, கல்தாழ், அம் – தாமரை மலர், கைலை மலை, ஆழ்ந்த பாற்கடல் ஆகிய இந்த மூன்றுமே வசிப்பிடமாகும்.

நான்கே வரிகள்.  அதில் அனைத்தையும் அடக்கிய காளமேகத்திற்கு யார் நிகர் ஆவார் என்று கூட்டம் ஆரவாரித்தது. சமஸ்யா (சமிசை) கேட்டவர் வெட்கம் அடைந்தார்.

ஆனால் அடுத்த தண்டிகைப் புலவர் எழுந்தார்.

 

 

9

Himalayas

ஈ ஏற மலை குலுங்கப் பாடுங்கள்!

 

ஈ ஏற மலை குலுங்கும்  என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.

எங்காவது ஈ ஏற மலை குலுங்குமா? இது என்ன இடக்கான அடியாக இருக்கிறதே என்று அனைவரும் நினைக்க, காளமேகம் கவி மழை பொழிந்தார்.

 

வாரணங்க ளெட்டு மதமேரு வுங்கடலும்

தாரணியு மெல்லாஞ் சலித்தனவால் – நாரணனைப்

பண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த

புண்வாயி லீமொய்த்த போது

 

பொருளைக் காளமேகமே விளக்கினார்.

நாரணனை – ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்த நாராயணனை

பண்வாய் இடைச்சி – இசை போலும் சொல் உடைய  யசோதை பிராட்டி

பரு மத்தினால் அடித்த – பருத்த மத்தினால் அடித்த போது உண்டாகிய

புண் வாயில் –  புண்ணின் இடத்தில்

ஈ மொய்த்த போது – ஈ ஒன்று மொய்த்த போது

வாரணங்கள் எட்டும் –  எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் எட்டும்

மாமேருவும் – மகா மேரு மலையும்

கடலும் – ஏழு கடல்களும்

தாரணியும் – உலகங்களும் ஆகிய எல்லாம்

சலித்தன – அசைந்தன!

 

(சலித்தனவால் என்பதில் ‘ஆல்’ அசை. எல்லா உலகங்களும் அவற்றில் உள்ள திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் உள்ளிட்ட அனைத்தும் இறைவனது திரு வயிற்றில் வைத்துக் காக்கப்படுபவை ஆதலால் கண்ணன் அசைந்த போது அவையும் கூடவே அசைந்தனவாம்!)

எப்படி ஒரு அற்புதமான கற்பனை!

அனைவரும் கை தட்டிப் பாராட்டினார்கள்!!

 

 

River Ganga Mata (Ganges)

10

இல்லாத ஒன்றைச் சொன்னால் தான் இவர் அடங்குவார் என்று நினைத்தார் தண்டிகைப் புலவர்களில் ஒருவர்.

ஆகவே வேண்டுமென்றே குடத்திலே கங்கை அடங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.

அனைவரும் சிரித்தனர். குடத்தில் எப்படி கங்கை அடங்கும்?

காளமேகம் சொல் ஜாலக்காரர். பாடினார் இப்படி:

 

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்

மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை

இடத்திலே வைத்த விறைவர் சடாம

குடத்திலே கங்கை அடங்கும்.

 

கூட்டம் எழுந்து நின்று ஆரவாரித்தது. இறைவனின் ஜடா மகுடத்திலே கங்கை அடங்கும். உண்மை தான்.

கங்கை – கங்கா நதியானது

விண்ணுக்கு அடங்காமல் – ஆகாயத்திற்கு அடங்காமல்

வெற்புக்கு அடங்காமல் – மலைகளில் அடங்காமல்

மண்ணுக்கு அடங்காமல் – பூமிக்கு அடங்காமல்

வந்தாலும் – பெருக்கெடுத்து ஓடி வந்தாலும்

பெண்ணை இடத்திலே வைத்த – உமா தேவியை இடப்பாகத்திலே வைத்திருக்கும்

இறைவர் ஜடா மகுடத்திலே – சிவபிரானின் ஜடை மகுடத்திலே

அடங்கும் – அடங்கும்.

 

Boats in River Ganges

**

 

இப்படி அற்புதமான பொருளாழமும், சிக்கலான கருத்துக்களை நேர் படுத்தியும் அமைக்கப்படும் பாடல்கள் கொண்ட மொழி தமிழ் மொழி!

அதன் பெருமையை ஒருவராலும் முழுவதுமாக உரைக்க முடியாது!

***

கறுப்பு மான், ஸரஸ்வதி நதி மர்மங்கள்! ஆயுர்வேத ரஹசியங்கள்! (4526)

Written by London Swaminathan 

 

Date: 21 DECEMBER 2017 

 

Time uploaded in London- 7-46 am

 

 

Post No. 4526

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

மநு நீதி நூல்-9 (Post No.4526)

கறுப்பு மான், ஸரஸ்வதி நதி மர்மங்கள்! ஆயுர்வேத ரஹசியங்கள்– 

  1. லாப நோக்கும் காம நோக்கும் இல்லாதவர்களுக்கே தர்மத்தின் உபதேசம். (மற்றவர்களுக்கு அல்ல). தர்மத்தை அறியவிரும்புவோருக்கு வேதமே பிரமாணம் (2-13)

 

133.வேதம், ஒன்றுக்கொன்று முரண்பட்ட விஷயங்களைச் சொல்லுமானால் இரண்டும் சரி என்று அறிக; ஏனெனில் அறிஞர்கள் அவ்விரண்டும் சரி என்று சொல்லுவர்.

134.ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். வேள்வியை சூரிய உதயத்துக்கு முன்னாலும், சூர்ய அஸ்தமனத்துக்குப் பின்னாலும், சூர்யனோ நட்சத்திரங்களோ இல்லாத காலத்திலும் செய்யலாம் என்று வேதங்கள் விளம்பும். இதில் முரண்பாடு ஏதுமில்லை. இவை அனைத்தும் தர்மமே.

  1. எந்த மனிதனுக்கு பிறப்பு (கர்ப்பாதானம் முதல்)

முதல் இறப்பு வரை வேதமுறைப்படியான சடங்குகள் விதிக்கப்பட்டிருக்கிறதோ அவனுக்கே- அந்த இரு பிறப்பாளனுக்கே – இந்த சாஸ்திரத்தை ஓதும் அதிகாரமுண்டு. மற்றவர்க்கில்லை.

 

136.சரஸ்வதி நதிக்கும், த்ருஷத்வதி நதிக்கும் இடைப்பட்ட பிரதேசம் கடவுளால் உருவாக்கப்பட்ட பிரம்மாவர்த்த தேசம் ஆகும்.

137.அந்த தேசத்தில் எப்போதும் பெரியோர் வசிப்பதால் பிராமணர் முதலிய வருணத்தாருக்கும் கலப்பு ஜாதியாருக்கும் ஆதிகாலத்திலிருந்தே ஆசார விதிகள் பாரம்பர்யமாக உள்ளன.

 

Geography in Manu Smrti

 

138.குரு, மத்ஸ்ய, பாஞ்சால, சூரசேன தேசங்கள் பிரம்மரிஷி தேசம் எனப்படும். இவை பிரம்மாவத்தத்துக்கு அடுத்த நிலையில் உள்ளன.

139.இந்த தேசங்களில் பிறந்த பிராமணர் இடத்தில் ஒவ்வொருவரும் தர்மத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்

 

140.இமய மலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் விநாசன த்துக்கு கிழக்கேயும், பிரயாகைகு மேற்கேயும் உள்ள இடம் மத்திய தேசம் எனப்படும் (2-21)

 

 

141.கிழக்கு சமுத்திரத்திலிருந்து மேற்கு சமுத்திரம் வரையுள்ள பிரதேசத்துக்கு சாதுக்கள் வசிக்கும் ஆர்யாவர்த்தம் என்று பெயர்.(2-22)

 

Antelope Black buck picture from Wikipedia.

Zoology in Manusmrti

142.கிருஷ்ணசாரம் (BLACKBUCK) என்னும் மான் இயற்கையில் எங்கு வசிக்கிறதோ அந்த பூமியே யாகம் செய்வதற்குரிய பூமியாகும். மற்றவிடம் அசுத்தமான மிலேச்ச தேசம் என்பப்படும் (2-23)

 

143.இருபிறப்பாளர்கள் (BRAHMIN, KSHTRIA, VAISYA) இந்தப் பிரதேசத்தில் வாழ எல்லா முயற்சிகளும் எடுக்கவேண்டும். சூத்திரர்கள் ஊழியத்துக்காக எந்த தேசத்திலும் வசிக்கலாம்.

144.இதுவரையில்  உலகத்தின் உற்பத்தியையும் தர்மத்திற்குக்  காரணமான புண்ய தலங்களையும் எடுத்துச் சொன்னேன். இனி வர்ணாஸ்ரம தர்மங்களைக் கேளுங்கள் (2-25)

145.இருபிறப்பாளர்கள் வேத சாஸ்திரங்களில் சொல்லப்படிருக்கிற கர்ப்பாதானம் முதலிய சடங்குகளை, இம்மை நலனுக்காகவும், மறுமையில் புண்ணியப் பிறப்பெடுக்கவும் உரிய சரீர சுத்திகளைச்செய்ய வேண்டும்.

 

146.கர்ப்பாதான  மந்திர ததாலும், சீமந்த ஹோமத்தாலும் (வளைகாப்பு),

ஜாதகர்மம் (பிறப்பு தொடர்பான சடங்கு)  நாமகரணம் (பெயர் சூட்டல்), அன்னப் ப்ராசனம் (உணவூட்டுதல்)  சௌளம் (முடி இறக்கல்), உபநயனம் (பூணூல் போடுதல்) முதலிய சடங்குகளால் இருபிறப்பாளர்கள் செய்த பாவங்கள் நீங்கும்; புணர்ச்சி செய்யக்கூடாத நாட்களில் புணர்ந்த தோஷமும், அன்னையின் கருப்பையில் வசித்த தோஷமும் நீக்கப்படும் (2-27)

 

 

147.வேதம் ஓதுவதாலும், மது மாமிசம் சாப்பிடாத   விரதத்தாலும், ஔபாசனம் மு தலிய ஹோமங்களாலும், தேவரிஷி பிதுர தர்ப்பணத்தினாலும் (நீத்தார் நினைவுச் சடங்குகள்), ஐம்பெரும் வேள்விகளாலும் (பஞ்ச மஹா யக்ஞம்) அக்னிஷ்டோம ஹோமங்களாலும் , புதல்வர்களைப்  ச பெறுவதாலும், சரீரமானது மோட்சத்திற்குரிய தாக்கப்படுகிறது.(2-28)

Ayurveda in Manu smrti

 

148.தொப்புள்கொடியை அறுப்பதற்கு முன்,ஆண் குழந்தைக்கு ஜாத கர்மம் என்னும் பிறப்பு தொடர்பான சடங்கு செய்யப்படும். அப்போது வேத மந்திர முழக்கத்தோடு குழந்தைக்கு தங்கத்தை இழைத்து தேனும் வெண்ணையும் கொடுக்க வேண்டும்.

எனது கருத்து: Geography in Manu

மேற்கூறிய ஸ்லோகங்களில் உள்ள சுவையான விஷயங்களை ஆராய்வோம் அல்லது சிந்திப்போம். ஸரஸ்வதி நதி குறித்து மனு சொல்லும் விஷயம் ஆராய்ச்சிக்குரியது. மநு இன்னும் ஒரு இடத்திலும் இந்த நதி பற்றிப் பேசுகிறார். 11-78-லும் ஒரு விஷயத்தைச் சொல்லுகிறார். பிரம்மஹத்தி- அதாவது பிராமணனைக் கொன்ற பாவம்- போவதற்காகச் சொல்லப்படும் ஒரு பரிஹாரம் சரஸ்வதி நதியின் முழு நீளத்தையும் நீரோட்டத்துக்கு எதிராக நடந்து கடக்க வேண்டும் என்பதாகும்.

 

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. மனுவின் காலத்தில் ஸரஸ்வதி நதி ஓடியதை அறிகிறோம். அதே நேரத்தில் விநாஸன் என்ற சொல்லுக்கு ஸரஸ்வதி நதி பூமியில் மறையும் இடம் என்று வியாக்யானம் எழுதுவோர் உரை எழுதுகின்றனர். ஸரஸ்வதி,  த்ருஷத்வதி என்று இந்த அத்தியாயத்தில் மநு குறிப்பிடுவன வேத கால நதிகள். ஆகவே மநு, சரஸ்வதி ஓடிய கி.மு.2000ஐ ஒட்டி இதை எழுதியிருக்கவேண்டும். ரிக்  வேதமோ மலையில் தோன்றி கடலில் மறையும் பிரம்மாண்ட நதி பற்றிப் பேசுகிறது. மஹாபாரதமோ மறையும் (விநாசன்) நதி பற்றிக் குறிப்பிடுகிறது. 11-ஆம் அத்தியாயத்தின் ஸ்லோகத்தில் ஸரஸ்வதி நதியை எதிர் நீச்சல் போட்டுக் கடக்க வேண்டும் என்று மநு சொல்லுவதால் அவர் ஸரஸ்வதி நதி காலத்தவர் என்பது தெளிவாகிறது. ஆகவே மநுவின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு அல்ல. கி.மு2000-க்கும் முன்னர் என்று அறியலாம். சதி (உடன்கட்டை ஏறும்  வழக்கம்) பற்றி எங்குமே குறிப்பிடாததும். விந்தியத்துக்கு அப்பாலுள்ள விஷயங்களைப் பே சாததாலும் தெற்கில் நாகரீகம் பரவியதற்கும் முன்னதாக வாழ்ந்தவர் என்று துணியலாம்.

இன்னும் இரண்டு சுவையான விஷயங்கள் (Medicine and Sociology in Manu):–

ஆயுர்வேதம்: சிறு வயதிலேயே குழந்தைக்குத் தங்கத்தில் இழைத்து — தங்கச் சத்துடன் வெண்ணை, தேன் கொடுக்கச் சொல்லுவது அக்கால மருத்துவ வளர்ச்சியைக் காட்டுகிறது.

 

மிலேச்ச என்ற சொல், ‘பண்பாடற்ற மக்கள்’ பிற இடங்களில் வசித்ததையும் காட்டுகின்றது. பிற்கால இலக்கியத்தில், இவை கிரேக்கர்களையும் ரோமானியர்களையும் குறித்தன. அதற்குப் பின்னர் இது அராபியர்களையும், துலுக்கர்களையும், கிறிஸ்தவர்களையும் குறித்தது. ஆகவே மநு காலத்தில் கிரேக்கர்கள்  அல்லது வேதத்தைப் பின்பற்றாத பிற ஜாதியினர்   பற்றிய அறிவு இருந்திருக்கலாம்.

 

பிராணி இயல் தகவல் (zoology in Manu)

 

எல்லாவற்றையும் விட சுவையான தகவல் கிருஷ்ண சாரம் (Blackbuck antelope) என்னும் மான் வகைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆகும்.

 

கிருஷ்ணசாரம் எனப்படும் மான் உலவும் இடம் எல்லாம் வேள்விக்குரிய பூமி என்று சொல்லப்படுகிறது. இது இந்தியாவின் தென் கோடி முனையில் இருந்து இப்போதுள்ள வங்க தேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய தேசங்களிலும் 1850 வரை இருந்தது வெள்ளைக்கார்கள் எழுதிய குறிப்புகளில் இருந்து தெரிகிறது. ஆக இந்திய பூமி முழுதும் புனித பூமி, வேள்விக்குரிய பூமி என்ற அரிய பெரிய உண்மையை மநு பறை சாற்றுகிறார். இதை சங்கத் தமிழ் இலக்கிய நூல்களும் உறுதிப்படுத்துகின்றன.

 

கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டம் செய்து வேள்வி இயற்றிய தையும், சோழ மன்னன் ராஜ சூய யாகம் செய்ததையும், முது குடுமிப் பெருவழுதியின் பாண்டிய நாடு முழுதும் வேள்வித் தூண்கள் பெருகி இருந்ததையும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கத் தமிழ் நூல்கள் பாடிப் பரவுகின்றன. ஆக கருப்பு மான் உலவிய புண்ய பூமி பாரதம்; அதிலும் குறிப்பாக புண்ணியப் பிரதேசம் சரஸ்வதி நதி தீரம், குருக்ஷேத்ரம், பாஞ்சாலம் எனலாம். காரணம் என்னவெனில் இங்கு தலைநகரை அமைத்துக் கொண்டு அவர்கள் ஆண்டனர். மேலும் வற்றாத ஜீவ நதிகள் அவை என்பதால் அபரிமித தான்ய விளைச்சலும் இருந்தது. நீர் இன்று அமையாது உலகு என்பது வள்ளுவன் வாசகம் அன்றோ!

TAGS:– மநுநீதி நூல், கறுப்பு மான், சரஸ்வதி, மர்மம்

 

to be continued………………………………

–SUBHAM–

 

கடலுக்குள் முனிவர்கள்? கம்பன் சொல்லும் அதிசய செய்தி புரியவில்லை (Post No.4497)

கடலுக்குள் முனிவர்கள்? கம்பன் சொல்லும் அதிசய செய்தி புரியவில்லை (Post No.4497)


Written by London Swaminathan 

 

Date: 15 DECEMBER 2017 

 

Time uploaded in London-  8-52 am

 

 

Post No. 4497

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்ப ராமாயண யுத்த காண்டத்தில் வருணனிடம் கடலில் வழிவிட வேண்டும் படலத்தில் கம்பன் சொல்லும் சில விஷயங்களுக்கு பொருள் விளங்கவில்லை. அதிசய விஷயங்கள் அவை. எப்போதும் நல்ல விளக்கம் தரும் வை மு கோபால கிருஷ்ணமாசாரியரும் கூட இதற்கு விளக்கம் சொல்லாமல் பொருள் மட்டும் தந்துவிட்டுப் போய்விடுகிறார்.

 

கடல் தெய்வமான வருணன் ராமனுக்கு வழி விடாததால் ராமன் கோபத்தில் அம்புகளைத் தொடுக்கிறான்.

ராமன் விட்ட தீ அம்புகள் கடல் நீரைக் குடிக்கத் தொடங்கின. அப்பொழுது கடலுக்குள் இருந்த முனிவர்கள் வெளியேறினர் என்று கம்பன் சொல்கிறான். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்திருந்த கதைகளை நாம் புராணங்களின் வாயிலாக அறிவோம். ஆனால் கடலுக்குள் இருந்து தவம் செய்யும் முனிவர்கள் பற்றிக் கம்பன் சொல்லுவது வியப்பாக இருக்கிறது. இது வால்மீகி ராமாயணத்தில் இல்லை.

 

இதோ அந்தப் பாடல்

மங்கலம் பொருந்திய தவத்து மாதவர்

கங்குலும் பகலும் அக்கடலுள் வைகுவார்

அங்கம் வெந்திலர் அவனடிகள் எண்ணலால்

பொங்கு வெங்கனல் எனும் புனலில் போயினார்

பொருள்

மங்கலம் பொருந்திய தவத்தை உடையவர்கள் அந்த கடலுக்குள் இரவும் பகலும் தங்கி இருப்பர். அவர்கள் அந்த பரந்தாமனின் திருவடிகளை என்றும் நி னைந்து உருகும் இயல்புடையவர். இதனால் ராமனின் அம்புகளால் கருகாமல், உடல் வெந்து போகாமல், துன்பம் இல்லாது நடந்து போயினர்

 

முனிவர்கள் வெப்பத்தால் பாதிக்கப்படாததில் அதிசயம் ஏதும் இல்லை. கடல் மீது நடந்ததில் அதிசயம் ஏதுமில்லை. இதெல்லாம் முனிவர்களுக்குக் கைவந்த கலைகள். ஆனால் கடலுக்குள் அல்லும் பகலும் தவம் செய்கின்றனர் என்பது புதிய செய்திதானே?

 

பாலைவனத் தீவு பற்றிய சுவையான செய்தி

 

வருணன் வராததால் கோபமுற்ற ராமன் பிரம்மாஸ்திரத்தை ஏவ மந்திரம் சொல்லி விடுகிறான். உடனே ஈரேழு புவனங்களும் அதிர்ந்தன. வருணன் பயந்து ஓடோடி வந்து அதை நிறுத்தச் சொல்லி வேண்டுகிறான். துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டை, ரவையை யாரும் நிறுத்தமுடியாது. இது போல இந்து மதத்திலும் சில விதிகள் உண்டு கடவுளேயானாலும் சொன்ன சாபத்தை ‘வாபஸ்’ வாங்க முடியாது. ஆனால் அதற்கு பரிகாரம், விமோசனம் சொல்லலாம். அது போல பிரமாஸ்திரத்தை மந்திரித்துவிட்டால் அதைப் பிரயோகித்தே ஆக வேண்டும்.

 

 

ராமனும் இதை வலியுறுத்தி, கடலுக்குப் பதிலாக வேறு ஒரு இலக்கு (Target) சொல். அங்கே இதை அனுப்பி விடுகிறேன் என்று சொல்கிறான். அவன் உரைத்ததைக் கேட்ட வருணன் மொழிந்தான்:

 

மன்னவ மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார்

அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார் அவுணர் ஆயோர்

தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார்

மன் உமிழ் கணையை வெய்யார் மேல் செல விடுதி என்றான்

 

பொருள்

மன்னவனே! மரு காந்தாரம் என்னும் ஒரு தீவில் வாழ்கின்ற அவுணர்கள் (demons) நூறு கோடி உள்ளனர். அவர்கள் தின்னத் தொடங்கினால் உலகம் அழிந்துவிடும் அவர்கள் அவ்வளவு கொடியவர்கள். எனக்கும் அவர்கள் தீமை செய்கின்றனர். ஒளிவீசும் உன் அம்பை அந்தக் கொடியவர்கள் மீது விடுவாயாக என்று வருணன் வேண்ட ராமனும் அவ்வாறே செய்தான். அதுவும் ஒரு நொடிப்பொழுதில் மருகாந்தாரம் என்னும் தீவிலுள்ள அரக்கர்களைச் சாம்பலாக் கிவிட்டு ராமனிடம் திரும்பி வந்தது.

 

முன்னொரு கட்டுரையில் ராமனின் அம்புகள், திருமாலின் சுதர்சன சக்கரம் ஆகியன ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வைத்திருக்கும் பூமராங் (boomerang) ஆயுதங்களின் முன்னோடி என்று விளக்கி இருக்கிறேன்.

 

அதுபோலவே பிரம்மாஸ்திரம் என்பது அணு ஆயுதம் (Nuclear weapon) என்றும் ஏழு ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை எழுதினேன். ஏனெனில் மஹாபாரதத்தில் இது கர்ப்பத்திலுள்ள கருவையும் அழிக்கவல்லது என்று எழுதி இருக்கிறது. இது அணு ஆயுத ரேடியேஷன்/ கதிரியக்கத்தால் (Nuclear Radiation) மட்டுமே நடக்கக்கூடியது.

 

கம்ப  ராமாயணத்தில் இந்த பிரம்மாஸ்திரம் அவுணர்களைச் சாம்பலாக்கியது என்று சொல்கிறார். அதில் அதிசயம் ஏதும் இல்லை. ஆனால் மரு காந்தாரம் என்னும் தீவு எங்குள்ளது? என்பதே ஆராய்ச்சிக்குரிய விஷயம். மரு என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குப் பாலைவனம் என்று போ பொருள்; ஆனால் மரு காந்தாரம் என்னும் பாலைவனத் தீவு எங்கே உள்ளது? என்று தெரியவில்லை. வால்மீகி ராமாயணத்தை ஆங்

கிலத்தில் மொழிபெயர்த்த ஹரிப் ப்ரசாத் சாஸ்திரி இதை ராஜஸ்தானிலுள்ள பாலைவனம் என்கிறார். அது பொருத்தமாகத் தோன்றவில்லை.

 

முதலில் அந்த இடத்தின் பெயர் த்ருமகுல்யம் என்றும் பின்னரே அதற்கு மரு காந்தாரம் என்று பெயர் ஏற்பட்டு மூவுலகிலும் பிரசித்தம் அடைந்தது என்றும் வால்மீகி ராமாயணம் செப்பும்.

 

வால்மீகி மேலும் சில வியப்பான செய்திகளைச் சொல்லுகிறார். ராமனின் பிரம்மாஸ்திரம் விழுந்தவுடன் பிரம்மாண்டமான சப்தம் எழுந்தது என்றும் பூமியிலிருந்து தண்ணீர் ஊற்றுக்கள் பீறிட்டெழுந்தன என்றும் உடனே அந்த இடத்துக்கு மருகாந்தாரம் என்னும் பெயரிட்டு இங்கு வாழ்வோருக்கு நோய் நொடிகள் தோன்றா; இந்த   இ டத்தில் பாலும் தேனும் ஓடும்; காய்கனிகள் பூத்துக் குலுங்கும் என்று ராமன் ஆசிர்வதித்ததாகவும் வால்மீகி இயம்புகிறார்.

 

பூகோள ரீதியில் இது இந்து மஹா சமுத்திரத்தில் ஒரு தீவாக இருக்க வேண்டும். ஏனெனில் ராமன் விட்ட பிரம்மாஸ்திரம் கிழக்கு திசையில் சென்றது. அந்தமான் தீவுகளின் எழில்மிக்க மணற்பாங்குடைய ஒரு தீவாக இது இருக்கலாம்.

 

மருகாந்தாரம், த்ரம குல்யம் போன்ற பெயர்கள் வேறு எங்காவது வருகிறதா என்றும் ஆராய்தல் அவசியம்.

 

TAGS:- பிரம்மாஸ்திரம், அணு ஆய்தம், மரு காந்தாரம், பாலைவனம்

சுபம்—

 

அற்புதங்கள் நீடிக்கும்! (Post No.4492)

Date: 14  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-37 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4492

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பேரருள் அற்புதம்

அற்புதங்கள் நீடிக்கும்! கல்யாண்குமாரும், காதர்பாஷவும் உயிர் பிழைத்த அதிசயம்!!

 

ச.நாகராஜன்

 

 

1

ஆண்டவனின் அற்புதங்களுக்கு எண்ணிக்கை என்பதே இல்லை. கால, தேச, வர்த்தமான, மதம்,ஜாதி, அந்தஸ்து,பால்,இனம்,வயது, தேசம் கடந்த அருள் மழை அவனுடையது!

 

காயத்ரி மகிமை பற்றிய எனது கட்டுரையில் கல்யாண்குமார் என்ற ஒரு இளைஞர் தேனருவி மலைக்கு சென்றவர் தவறி ஒரு ஆழ்ந்த பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதையும், அவரைத் தேடச் சென்றவர்கள் நம்பிக்கை இழந்து அந்த முயற்சியைக் கைவிட்டதையும், யதேச்சையாக அந்தப் பக்கம் சென்ற ஒருவர் உதவி கேட்கும் அபயக் குரலைக் கேட்டதையும்,பின்னர் உடனடி முயற்சி மேற்கொண்டு அவரை உயிருடன் மீட்டதையும் குறிப்பிட்டிருக்கிறேன். காயத்ரி மந்திரத்தில் மிகவும் பக்தி உள்ள அந்த இளைஞர் ஆழ் பள்ளத்தாக்கில் காயத்ரி ஜபம் செய்ததையும்,காயத்ரியே தன்னைக் காப்பாற்றினாள் என்று அவர் கூறியதையும் அந்தக் கட்டுரையில் படிக்கலாம்.

 

அதே போல அதிசயிக்கத் தக்க இன்னொரு அதே மாதிரியான  சம்பவத்தைப் படித்தவுடன் வியப்பு தான் மேலோங்கியது.

29-11-2017 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வந்த செய்தி அது!

 

 

 

2

ககனசுக்கி நீர்வீழ்ச்சிக்குச் சுற்றுலாவாகப் புறப்பட்டார் பெங்களூருவைச் சேர்ந்த காதர் பாஷா.

300 அடி ஆழமுள்ள ஆழ் பள்ளத்தாக்கில் தவறி விழுந்தார் அவர்.

சனிக்கிழமை மதியம் பள்ளத்தில் விழுந்தவருக்கு இடது கால் முறிந்தது, ஒரு கையில் காயம்.ஒரு வழியாக இழுத்தவாறே நடந்தாலும் முடியவில்லை.

ஞாயிறு போனது. திங்கள் மதியமும் வந்தது. யதேச்சையாக அந்தப் பக்கம் வந்த ஒருவரைப் பார்த்த காதர்பாஷா கூவினார். தனது சிவப்புச் சட்டையை வீசிக் காட்டினார்.

அல்லாவின் அருள்! அவர் மீட்கப்பட்டார்.

செய்தியின் முழு விவரம் இதோ;

 

டைம்ஸ் ஆஃப் பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆங்கில மூலம் இது:

Man trapped in gorge lived on water for 48 hours

TNN | Updated: Nov 29, 2017, 08:20 IST

 

1

 

 

MANDYA: Stuck in a 300 ft gorge with a broken leg and only the roaring Gaganachukki falls for company, Khader Pasha oscillated between hope and despair for 48 hours. His last act to save himself was to wave his red shirt to a tourist who happened to see him. When his rescuers found him, Pasha had fainted from the exertion.

 
Pasha, from Kadirenahalli in Bengaluru, had come to the falls on Saturday afternoon. Not content with merely watching the falls, he followed three people who were descending a gorge to get to the bottom, police said. He made it past the spray but suddenly, he stepped on a rock and fell. When he landed deep in the water, his left leg was broken and his left arm severely injured.

He dragged himself to a few stones nearby and stretched his legs. He then screamed for help but the roar of the falling water drowned his voice. Soon enough, the sun set and it was dark all around. A chill rose and Pasha, now in agony from the fractured leg, nearly froze. There was nothing to eat but plenty to drink. Pasha drank water and slept in snatches, fearing snakes and other creatures in the undergrowth. By morning, he felt, he might be able to draw the attention of tourists.
But all of Sunday too, he failed. He began to lose hope with every passing hour. On Monday noon, Pasha noticed a tourist looking his way, took off his red shirt and waved to the tourist and screamed for help .
***

 

 

3

அதிசயமான இந்தச் சம்பவம் அப்படியே தேனருவி நிகழ்ச்சியை நினைவூட்டுகிறது.

கல்யாண்குமாரை காயத்ரி தேவி காப்பாற்றினாள்.

காதர்பாஷாவை யார் காப்பாற்றியது?

அல்லாவின் அருளே! அவரது புண்ணியம் அவர் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது.

பெரும் சக்தி ஒன்று மதம், ஜாதி,இனம், தேசம் உள்ளிட்ட எல்லாத் தடைகளையும் கடந்து உலகினருக்கு அருள் பாலித்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு எடுத்துக் காட்டு!

 

 

 

4

இதைப் பற்றிச் சிந்திக்கும் போது ஹிந்து மதத்தின் அடிநாதமான ஒரே ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

ஏகம் ஏவ; அத்விதீயம் ப்ரஹ்ம!

உண்மை ஒன்றே; இரண்டு இல்லை.

ரிஷிகள் அல்லது அறிஞர்கள் அதைப் பலவாறாக அழைக்கின்றனர்.

ஏகம் ஸத்; விப்ரா: பஹுதா வதந்தி!

நாமக்கல் கவிஞர் அழகுறச் சொன்னார், சூரியன் வருவது யாராலே, சந்திரன் திரிவது எவராலே என்ற பாடலில்.

அதில் சில பகுதிகள்:

 

சூரியன் வருவது யாராலே சந்திரன் திரிவது எவராலே

காரிருள் வானில் மின்மினி போல கண்ணிற் படுவன அவை என்ன

 

அத்தனையும் தர ஒரு கருத்தன் யாரோ எங்கோ இருப்பது மெய்

அல்லா வென்பார் சில பேர்கள்;

அரன் அரி என்பார் சில பேர்கள்;

வல்லான் அவன் பர மண்டலத்தில்

வாழும் தந்தை யென்பார்கள்

சொல்லால் விளங்கா ‘நிர்வாணம்’

என்றும் சில பேர் சொல்வார்கள்;

எல்லாம் இப்படிப் பல பேசும்

ஏதோ ஒரு பொருள் இருக்கிறதே!

அந்தப் பொருளை நாம் நினைந்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்!

***

திமிங்கிலம், புறச்சூழல் பாதுகாப்பு பற்றி கம்பன் தரும் அறிவியல் செய்தி! (Post No.4484)

திமிங்கிலம், புறச்சூழல் பாதுகாப்பு பற்றி  கம்பன் தரும் அறிவியல் செய்தி! (Post No.4484)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 12 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-43 am

 

 

Post No. 4484

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

புறச் சூழல் பாதுகாப்பு பற்றி வருணன் வாயிலாகவும் ராமனின் வாய் மொழி மூலமும் கம்பன் சொல்லும் செய்திகள் சிந்திக்க வைப்பவை.

 

யுத்த காண்டத்தில், ‘வருணனை வழிவிட வேண்டிய படல’த்தில், இந்தச் செய்திகள் வருகின்றன.கடலில் திமிங்கிலங்கள் அடிக்கடி கரை ஒதுங்கி தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் பத்திரிக்கைகளில் வருகின்றன.இது பற்றிக் கம்பனும் பேசுகிறான்.

பூமிக்கடியிலிருந்து வரக்கூடிட்ய மின்காந்தலைகள் (magnetic waves) அல்லது பல நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வரும் சிக்னல்கள் SONAR SIGNALS (சமிக்ஞை ஒலிகளே) திமிங்கிலங்களை வழிதவறச் செய்வதாகவும் அல்லது அவைகளைக் குழப்புவதாகவும் இந்த திமிங்கிலத் தற்கொலைகளுக்கு (Mass Suicide of Whales) விளக்கம் தரப்படுகிறது. தமிழ் நாட்டின் கடல் ஓரங்களிலும் இது நிகழ்வதுண்டு என்பது அவனது பாடல்களில் இருந்து தெரிகிறது.

 

ராமன் விட்ட அம்புகள்,மலை போன்ற உடல் உடைய பெரிய மீன்களைக் கரையில் வந்து விழச் செய்ததாக ஒரு பாடலில் கூறுகிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவன் கம்ப ராமாயணத்தை இயற்றினான். ஆனால் உவமை கூறும் விஷயங்களும், இது போன்ற நிகழ்வுகளும் உண்மையில் நடந்தால்தான் எழுத முடியும்; அவ்வாறு எழுதுவதை பாமர மக்களும் ரசிக்க முடியும்.

கம்பன் தனது பாடல்களில் ஜேம்ஸ், மேரி என்ற சொற்களைப் பயன்படுத்தமுடியாது நியூயார்க்கில் உள்ள வானளாவிய கட்டிடங்களை உவமை சொல்ல முடியாது. அந்த காலத்தில் உள்ள விஷயங்களைத்தான் சொல்ல முடியும். அவ்வாறே அவன்,சம காலத்திய நிகழ்வுகளையும், உவமைகளையும் நம் முன் வைக்கிறான்.

 

முதலில் கடற்கரையில் திமிங்கிலம் ஒதுங்கிய செய்திகளைக் கண்போம்:

 

பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்

ஓரிடத்து உயிர்தரித்து ஒதுங்ககிற்றில

நீரிடைப் புகும் அதின் நெருப்பு நன்று எனாப்

பாரிடைக் குதித்தன  பதைக்கும் மெய்யன்

 

பொருள்:

பெரிய மலை போலப் பெருத்த மீன்களும், ஓரிடத்தில் உயிரைத் தாங்கி நிற்க முடியாமல் தீயில் வேகும் இந்தக் கடல் நீரைவிட நல்லதாகும் என்று தரையில் குதித்துத் துடிக்கும் உடலை உடையவை ஆகின.

 

இன்னொரு பாடலில் ராமனை சேது எனப்படும் பாலம் கட்டச் சொல்கிறான் வருணன்; கடலைக் குடித்து வற்றச் செய்வது காலம் பிடிக்கக்கூடிய செயல் என்றும் சக்தியை விரயம் செய்யும் செயல் என்றும் சொல்லிவிட்டு  அப்படிக் கடலை வற்றச் செய்தால் எவ்வளவு உயினங்கள் அழிந்து போகும் என்றும் நினைவிவு படுத்துகின்றான். ஆக, கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெரும் உணர்வும்  அக்காலத்தில் இருந்தது.

கல்லென வலித்து நிற்பின் கணக்கிலா உயிர்கள் எல்லாம்

ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகாவண்ணம்

எல்லை இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிந்தின் எந்தாய்

செல்லுதி சேது ஏன்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய்

 

பொருள்:

 

என் தந்தை போன்றவனே! வற்றாமல் நீர் இறுகிக்   கல்லைப் போல ஆனால் உயிரினங்கள் மாண்டுவிடும் ஆகையால் என் முதுகின் மீது சேது என்னும் அணையைக் கட்டி அதன் மீது செல்வாயாக. இதனால் நீண்ட காலம் நான் நிலைத்து நிற்பேன்.

 

 

இதைவிட ராமன் சொல்லும் காரணம் இன்னும் நன்றாக இருக்கிறது

நன்று இது புரிதும் அன்றே நளிர்கடல் பெருமை நம்மால்

இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம்

குன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதிர் என்று கூறிச்

சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளிச் சென்றான்

–யுத்த காண்டம், கம்பராமாயணம்

பொருள்:

இராமன், ‘வருணன் கூறும் இது நல்லது, இதையே செய்வோம்’ என்றான். மேலும் பெரிய ஆழம் உடைய கடலின் பெருமை என்னால் நீக்கப்பட்டால் மற்ற நான்கு பூதங்களான நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகியனவும் பெருமை நீங்கி எளிமைப் பட்டுவிடும். ஆகையால்  மலைப் பாறைகளை அடுக்கி பாலம் கட்டும் பணியை துவக்குங்கள் என்று சொல்லிவிட்டு தனது இருப்பிடத்துக்குச் சென்றான். இராமனின் அருளுடன் வருணனும் அவனது இருப்பிடத்திற்குச் சென்றான்.

பஞ்ச பூதங்களில் ஒன்றை நான் அவமானப்படுத்தினால், பின்னர் மற்ற நான்கு பூதங்களும் கெட்டுப்போக, பெருமை இழக்க நேரிடும் என்ற இராமனின் வாதம் பொருளுடைத்து; நாள் தோறும்கடலில் சேரும் குப்பைகள், அசுத்தங்கள் பற்றி நாளேடுகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள், குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஜிகினா பொட்டு முதலியன கடல் மீன்கள் வயிற்றில் சேர்ந்து அவைகளுக்குச் சொல்லொணாத் துயரம் தரும் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. நமது வீட்டு சாக்கடைகளில் தூக்கிப் போடும் சிறிய பிளாஸ்டிக் பொட்டுகளும் பாட்டரிகளும் கடல் வரை சென்று உலகைப் பாதிக்கின்றன; கடலை விஷமாக்குகின்றன.

 

நானே இன்று கடலை வற்றச் செய்து அவமானப் படுத்தினால், சிறுமைப் படுத்தினால், அது கெட்ட முன்னுதாரணமாகி மற்ற நான்கு பூதங்களையும் பாதிக்கும் எனும் ராமனின் வாதம் கம்பன் கால அறிவியல் கூற்று என்று கண்டு வியப்படைகிறோம்.

 

இதைத் தனித்துப் பார்க்காமல், முந்தைய பாட்டுகளில் கம்பன் சொன்ன கடலில் நடக்கும் சுறாமீன் சண்டைகள் (Shark Fights), திமிங்கிலங்களைத் தின்னும் திமிங்கிலங்கள் (Killer Whales) பற்றிய விஷயங்களையும் இணைத்துப் பார்த்தால் சோழர்கால கடல்  இயல் விஞ்ஞா ம் பற்றி அறிய முடியும்; Killer Whale கில்லர் வேல் என்று அழைக்கப்படும் திமிங்கிலங்கள் மற்ற சிறியவகை திமிங்கிலம், டால்பீன் (Dolphins), சுறாமீன்கள் ஆகியவற்றைக் கொல்லும் காட்சிகளை இன்று நாம் இயற்கை பற்றிய டெலிவிஷன் (T V Documentaries on Nature)  நிகழ்ச்சிகளில் காண முடிகிறது; இதைக் கம்பனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாட்டில் கூறுவதால் கடலோர மக்கள் சொல்லும்  அன்றாடக்கதைகளில் இவை இடம்பெற்றதை நாம் அறிகிறோம்.

இதற்கெல்லாம் கம்பனுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காளிதாசன் காவியத்திலேயே சான்று இருக்கிறது. அவன் திமிங்கிலங்கள் மூச்சு விடுகையில் தண்ணீர் ஊற்று போல மேலே பீய்ச்சி அடிப்பதையே குறிப்பிட்டுப் பாடுகிறான்.

 

கில்லர் வேல் எனப்படும் திமிங்கிலங்கள் பற்றிய பாடலுடன் கட்டுரையை முடிப்போம்:

 

நிமிர்ந்த செஞ்சரம் நிறத்தொறும்படுதலும் நெய்த்தோர்

உமிழ்ந்து உலந்தன மரங்கள் உலப்பு இல உருவத்

துமிந்த துண்டமும் பலபடத் துரந்தன தொடர்ந்து

திமிங்கிலங்களும் திமிங்கிலங்களும் சிதறி

பொருள்:

செஞ்சரமான அம்புகள் பட்டு சுறாமீன்கள் குருதி கக்கி இறந்தன. இராமன் தொடுத்த அம்புகள் தொடர்ந்து ஊடுருவியதால் திமிங்கிலங்களும் திமிங்கிலங்களும் பல துண்டுகளாகச் சிதறி விழுந்தன.

TAGS:– திமிங்கிலம், திமிங்கிலங்கள், கடல், புறச்சூழல், கரை ஒதுங்கல், கம்பன் அறிவியல்

 

–சுபம்–

ராமனிடம் வருணன் சொன்ன நொண்டிச் சாக்கு! கம்பன் நகைச் சுவை? (Post No.4480)

ராமனிடம் வருணன் சொன்ன நொண்டிச் சாக்கு! கம்பன் நகைச் சுவை? (Post No.4480)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 11 DECEMBER 2017 

 

Time uploaded in London-  12-28

 

 

Post No. 4480

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் ‘வருணனை வழிவேண்டு படல’த்தில் இரண்டு பாடல்களில் உள்ள நொண்டிச் சாக்குகள் நமக்கு நகைச் சுவையை ஏற்படுத்தும். வருணன் தாமதமாக வந்ததற்குச் சொல்லும் சாக்குகள் இவை. அதுவும் பிரம்மாஸ்திரத்தை ராமன் ஏவப் போகிறான் என்பதை அறிந்த பின்னர் சொன்ன சாக்குகள் இவை. கம்பன் இதை நகைச் சுவையாக சேர்த்தானா அல்லது உண்மைக் கதையாக சேர்த்தானா என்பது விவாதத்திற்குரியது.

 

இலங்கை செல்வதற்கு கடல் வழிவிட வேண்டும் என்று கடற்கரையில் நின்று கொண்டு ராமன் வேண்டுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கடல் தெய்வமான வருணன் வரவில்லை. ராமனுக்கு கோபம் வந்து விடுகிறது. பிரம்மாஸ்திரத்தை ஏவுவதற்கு ராமன் தயாராகிறான். உடனே வருணன் பயந்து கொண்டு ஓடி வந்து அவன் முன் தோன்றுகிறான்.

 

தாமதமாக வந்ததற்கு வருணன் சொல்லும் இரண்டு சாக்குகளும் விநோதமானவையே!

 

நீ எனை நினைந்த தன்மை நெடுங்கடல் முடிவில் நின்றேன்

ஆயினேன் அறிந்திலேன்   என்று அண்ணலுக்கயிர்ப்பு நீங்க

காய் எரிப் படலை சூழ்ந்த கருங்கடல் தரங்கத்தூடே

தீயிடை நடப்பான் போலச் செறிபுனற்கு இறைவன் சென்றான்.

 

பொருள்:

நீ என்னை அழைத்தது எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் கடலின் ஒரு கோடியில் நின்று கொண்டிருந்ததால் அறியவில்லை. இவ்வாறு சொல்லிக்கொண்டு தீ பரவியுள்ள கடலின் அலைகளுக்கு இடையே தீயின் மீது நடப்பவனைப் போல நடந்து வந்தான் வருணன்.

 

இது ஒரு நொண்டிச் சாக்கு ! கடலுக்கே தெய்வமானவன், மிகப் பெரிய கணைகளை ராமன் தொடுத்தபோது கூட அறிய வில்லை என்பது உண்மைச் சாக்காக இருக்க முடியாது. இன்னும் பல பாடல்களுக்குப் பின்னர் அவன் சொல்லும் ஒரு சாக்கைப் பார்த்தால் முதலில் சொன்ன பொய் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விடும்!

 

சுறாமீன் சண்டை!

பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற பண்பு

வார்த்தையின் அறிந்ததல்லால் தேவர்பால் வந்திலேன் நான்

தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரைக் கடலில் மீனின்

போர்த்தொழில் விலக்கப்போனேன் அறிந்திலேன் புகுந்தது ஒன்றும்

 

பொருள்:-

பூமியைவிடப் பொறுமை மிகுந்த உன் கற்பரசியான சீதைக்கு நேர்ந்துள்ள கஷ்டத்தை நின் சொல்லால் அறிந்தேன் அன்றி, தேவர்கள் மூலம் அறியவில்லை. தூயவனே! நெருங்கிய அலைகளையுடைய ஏழாம் கடலில் சுறாமீன்கள்   சண்டை நடந்து கொண்டிருந்தது. அதை விலக்கிவிடப் போயிருந்தேன். நின் கட்டளையை அறியாதவனாய் இயல்பாகவே இங்கு வந்தேன்!- என்று வருணன் உரைத்தான்.

 

இது கட்டாயம் நொண்டிச் சாக்குதான்.

சுறாமீன் சண்டயை விலக்கி, சமாதானம் செய்யப் போனதாக வருணன் கூறுவது விநோதமானதே.

 

–சுபம்–

 

மனு தர்மத்தில் விலங்கியல், தாவரவியல்; மனு நீதி நூல் -4 (Post No.4422)

Written by London Swaminathan 

 

Date: 22 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-03

 

 

Post No. 4422

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கீழேயுள்ள ஸ்லோகங்கள் குறித்த எனது கருத் து:—-

இந்த ஸ்லோகங்களில் மிகவும் முக்கியமானது 49-ஆவது ஸ்லோகம்; தாவரங்களுக்கு உள்ளறிவு உண்டு, அவைகள் சுக துக்கங்களை அனுபவிக்கின்றன என்ற பேருண்மையை, அறிவியல் கருவிகள் இல்லாத காலத்தே உலகிற்கு அறிவித்த மாபெரும் விஞ்ஞானி மனு!

மனுதர்ம நூல் ஒரு சட்டப் புத்தகம்; அதில் தாவரங்கள் பற்றிய இப்படியொரு விஷயம் இருப்பது வியக்கத்தக்கது!

 

அதற்கு முன்னர் தாவரங்களை, பூக்கும் தாவரம், பூக்காத தாவரம், கொடிகள், புல் வகைகள் என்றெல்லாம் பிரிக்கிறார். தாவரங்களை வகைப்படுத்துவது காலம்தோறும் மாறிவருகிறது. லின்னேயஸ் என்பவர் தாவரங்களை குடும்பங்களாகவும் உப குடும்பங்களாகவும் அதில் தனித்தனி பெயர் உடையனவாகவும் (Family, Genus, Species) பிரித்ததை உலகம் இப்போது பின்பற்றி வருகிறது. இவை எல்லாம் 300, 400 வருடங்களுக்குள் வந்தவை. அதற்கு முன்னரே மனு முதலானோர் தாவரம்,பி  ராணிகளை வகைப்படுத்த முயன்றதே அவர்களின் அறிவியல் அணுகுமுறைக்குச் சான்று பகர்வனவாக உள்ளன!

 

உயிருள்ளவைகளை  நான்கு வகையாக பிரிக்கிறார் மனு. விலங்கியல் தாவரவியலைப் பொருத்த பொதுவான பிரிவினை இது.

(1)ஸ்வேதஜ= வேர்வையிலிருந்து பிறந்தவை (ஸ்வெட் என்னும் ஆங்கிலச் சொல் ஸ்வேத என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்தது; இந்த இடத்தில் ஸ்வேத என்பதை ஆவி, நீராவி என்னும் பொருளுடைத்தாய் உரைகாரர்கள் கருதுவர்),

(2)அண்டஜ (முட்டையிலிருந்து   தோன்றுபவை),

(3)ஜராயுஜஹ= கர்ப்பப்பையில் தோன்றுபவை, (4)உத்பீஜ = பூமியிலுள்ள விதையிலிருந்து   மேல் நோக்கி எழும் மரம், செடி, கொடி வகையறா.

 

அந்தக் காலத்தில் இவைகளைப் பிரிக்க வேண்டும் என்று எண்ணி அதை வகைப் படுத்தியதே இவர்கள், கைபர் கணவாய் வழி வத நாடோடிகள் அல்ல, மாபெரும் அறிவு படைத்த உலகத்தின் முதல் அறிவுள்ள குடிமகன்கள் என்பதைக் காட்டும்.

 

இன்னும் 50 ஆண்டுகளில் நாம் படித்த விலங்கியல் தாவர இயல் நூல்களைக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு புதிய டி,என்.ஏ. பிரிவினை (D N A Classification; Genetic mapping) வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆக, காலம் தோறும் மாறும் விஞ்ஞானத்தை முதலில் துவக்கி வைத்தவர்கள் நாமே. அந்தக் கால மக்களுக்கு எப்படிப் புரிய வைக்க முடியுமோ அந்த மொழியில் எழுதப்பட்டது மானவ தர்ம சாஸ்திரம் எனப்படும் மனு நீதி நூல் என்பதை அறிக; உணர்க; தெளிவு பெறுக.

ஆரிய மாயை- திராவிட மாயை

 

கீழேயுள்ள ஸ்லோகங்களில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. ஆரிய- திராவிட என்னும் பிரிவினை சங்கத் தமிழ் நூல்களி லோ, சமுத்திரம் போலக் கரை காண முடி யாத அளவுப் பெருகிக் கிடக்கும் சம்ஸ்கிருத நூல்களிலோ எங்கும் இல்லை; ஆனால் மதத்தைப் பரப்பி நாடு பிடிக்க வந்த பிரித்தாளும் சூழ்ச்சியினர் பரப்பிய திராவிடர்- ஆரியர் என்ற புதிய இனப்பாகுபாட்டை நாம் பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் கற்பித்து வருகிறோம். ஆனால் மனுவோ புற நானூற்றிலும், புராண இதிஹாசஙகளிலும் உள்ள பிரிவை சொல்கிறார். நாகர், கந்தர்வர், யக்ஷர், தேவர், மானுடர் இராக்ஷசர், அசுரர் என்று. இப்படி 18 வகையாகப் பிரித்த பிரிவே நம் இலக்கியத்தில் உள்ளன. அதை விட முக்கியமான உண்மை அசுரர்களும், ராக்ஷஸர்களும், மானுடரும் தேவரும் ஒரே மனுக்குலத்தில் உதித்தவர்கள் என்பதை மனுவே சொல்லும் ஸ்லோகங்களை இங்கே கொடுத்துள்ளேன்.

 

வெளி நாட்டு  “அறிஞர்கள்” (???) ம றைத்து வரும் விஷயம் இது. அவர்களே நம்மை திராவிடர்- ஆரியர் என்று பிரித்ததற்கு தமிழில், சம்ஸ்கிருதத்தில் ஆதாரமே இல்லை.

 

ஜாதிகள் உண்டு அடி பாப்பா!

ஜாதிகள் உண்டு என்பதை ரிக்வேதத்தில் உள்ள புருஷசூக்தம் (10-90) தெளிவாகச் சொல்லுகிறது; ஆனால் அவை பகவத் கீதை சொல்லுவது போல குணத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டவை. ஆதிகாலத்தில் அப்படித்தான் இருந்தது. நாலு வகைச் சாதிகளை 4000 வகைச் சாதிகளாகப் பிரித்ததும் நாம்தான். புராண,  இதிஹாசங்களில் வேதத்தில் ஆதாரம் இல்லை. அறிவு உடைய எல்லோரும் பிராம ணர். நாட்டைக் காப்போர் எல்லோரும் க்ஷத்ரியர்; வணிகம் செய்வோர் எல்லோரும் வைஸ்யர்; உடலுழைப்பு செய்வோர் அனைவரும் சூத்திரர். இந்த தொழில் முறைப் பாகுபாட்டை பல்லாயிரம் ஜாதிகளாகப் பிரித்தது நாம்தான்.

 

அதிலும் “இந்தியாவில் இரு வகை மக்களே உண்டு ஒன்று பிராமணர்; மற்றொன்று சூத்திரர்; அவர்களில் பிராமணர் எல்லோரும் ஆரியர்; மற்ற எல்லோரும் சூத்திரர்” என்று பிரித்தது வெளி நாட்டு பிரித்தாளும் சூழ்ச்சியினர்; அவர்களுக்குத் துணை போனவர்கள் நம்மூர் அரசியல்வாதிகள்; மார்கஸீய வாதிகள்!

 

சுருங்கச் சொன்னால், மக்கள் இனம் ஒன்று- வசுதைவ குடும்பகம்- யாதும் ஊர், யாவரும் கேளிர் – என்பதை மனு தர்மத்தின் முதல் அத்தியாயத்திலேயே காண்கிறோம்.

 

கால்டுவெல்களையும் மாக்ஸ்முல்லர்களையும் படிப்பதற்கு முன்னால் மனுவைப் படித்து, ‘கொள்ளுன எது?, தள்ளுவன எது?’ என்பதை நாமே கற்கலாம்; காட்டலாம்.

மாநிலத்துக்கு மாநிலம் வேறு வேறு சட்டம்; நாட்டுக்கு நாடு வேறு சட்டம் உள்ள விநோத உலகத்தில் மனுவை மட்டும் கோபிப்பதில் பொருள் இல்லை.

முதல் அத்தியாயம்

 

ஸ்லோகம் 31

உலகம் வளர்ச்சி அடைவதற்காக தன்னுடைய முகத்திலிருந்து பிராமணனையும், தோளிலிருந்து க்ஷத்ரியனையும், தொடையிலிருந்து வைஸ்யனையும், காலிலிருந்து சூத்திரனையும் உண்டு பண்ணினார்.

 

  1. அந்த பிரம்மாவானவர் தனது உடலை இரண்டு துண்டமாக்கி, ஒன்றை ஆணாகவும், ஒன்றைப் பெண்ணாகவும் உண்டாக்கினார். அந்த ஆண் பெண் சேர்க்கையாலே விராட புருஷனை படைத்தார்.

 

33.அந்த விராட புருஷன் தவம் செய்து, இந்த உலகத்தைச் சிறப்பாக படைப்பதற்காக யார் ஒருவனை உருவாக்கினாரோ அவர்தான் நான் (மனு)

 

34.நானும் அனேக உயிரினங்களைத் தோற்றுவிப்பதற்காக, செயற்கரிய தவம் செய்து, பிராணிகளைப் படைக்கும் வல்லமை படைத்த பத்து மகரிஷிகளைப் படைத்தேன். அவர்கள் பிரஜாபதிகள் ஆவர்.

  1. அந்த ரிஷிகளின் பெயர்கள்:- மரீசி, அத்ரி, அங்கீரஸ், புலஸ்தியர், புலகன், கிரது, பிரசேதஸ், வசிஷ்டன், பிருகு, நாரதன்

 

36.மிகுந்த ஒளிபடைத்த இந்தப் பிரஜாபதிகள் ஏழு மனுக்களையும், தேவர்களையும், சுவர்க்காதி லோகங்களையும், காந்தர்வர்களையும், தவ சீலம் உடைய மஹா முனிவர்களையும் உண்டாக்கினார்கள்

 

37.இந்தப் பிரஜாபதிகள் யக்ஷர்கள், வாசுகி முதலிய நாகர்கள்,  ரத்தவெறி கொண்ட காட்டுமிராண்டிகள், சர்ப்பங்கள், கருடன், இராக்ஷசர்கள்,  பைசாசர், அப்சரஸ்கள், அசுரர்கள், பறவைகள், பித்ருக்கள்

 

38.மின்னல், இடி, மேகம், இந்திர தனுசு எனப்படும் வானவில், தூமகேது (வால் நடசத்திரம்), பூகம்பம் (நில அதிர்ச்சி) முதலான இயற்கைச் சீற்றங்கள்

39.கின்னரர், வானரர் , மீன்கள், பலவகைப் பட்சிகள், பசுக்கள், மிருகங்கள்,  மனிதர்கள், இரண்டு பக்கத்தில் பற்களுள்ள புலி முதலிய விலங்குகள்.

 

40.புழு, உலண்டுப்பூச்சி, விளக்கணைப் பூச்சி (விட்டில்), எட்டுக்கால் பூச்சி (சிலந்தி) ஈ, முகடு,  கொசு, பலவகையான மரங்கள்

  1. இவை அனைத்தையும் பிரஜாபதிகள், என்னுடைய கட்டளைப்படி, தவம் செய்து, பிராணிகளின் தொழிலுக்கு ஏற்ப, தாவர, ஜங்கமத்தை (அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள்) உருவாக்கினர்.

42அடுத்ததாக பிராணிகளின் உற்பத்தி வரிசையும் அவற்றின் செய்கைகளையும் சொல்கிறேன்

43.பசுக்கள், மிருகங்கள், இரு புறம் பற்களை உடைய புலி முதலிய விலங்குகள், இராக்கதர் (ராக்ஷஸர்), பைசாசர் (பிசாசு), மனிதர்கள் ஆகியோர்  சராயு என்னும் கர்ப்பப் பையில் உண்டாகி   கர்ப்பப் பையுடன் பிறக்கின்றனர்.

44.பலவித பறவைகளும், நீரில் வாழும் முதலை, ஆமை, மீன், கரையில் வசிக்கும் ஓணான் ஆகியனவும் முட்டையில் இருந்து பிறக்கின்றன

 

45.கொசு, சிலந்தி, ஈ, மோட்டுப் பூச்சிகள் இவை புழுக்கதால், வேர்வையால் உண்டாகின்றன. இவைகளைப் போன்ற புழு, எறும்பு முதலியன உஷ்ணத்தால் உண்டாகின்றன.

 

  1. மரங்கள் விதைகளால், கிளைகளால் பூமியைப் பிளந்து மேல் நோக்கி வளர்கின்றன. இந்த மரங்களில் இருந்து வேறுபட்ட புடலை முதலிய கொடி, நெல் முதலிய பயிர்களும் பலன் கொடுத்தவுடன் அழிந்து போகின்றன.
  2. பூவாமல் காய்க்கும் அத்தி முதலிய மரங்களுக்கு வனஸ்பதி என்று பெயர். பூக்கும் மற்றுப் பூத்துக் காய்க்கும் மரங்கள் என மரங்கள் இரண்டு வகைப்படும்.

(பூவாது காய்ப்பன வனஸ்பதி= காட்டு ராஜாக்கள்; பூத்துக் காய்ப்பன = சாதரண மரங்கள்)

 

48.சில செடிகள் கொத்துக் கொத்தாயும் சில செடிகள் தூறாகவும் உண்டாகின்றன. புற்கள், கோரைகள், கொடிகள் இவைகள் விதைகளாலும் கொடிகளாலும் உண்டாகின்றன.

49.பாபகர்மத்துக்குக் காரணமாகிய பலவகை உருவம் படைத்த, தமோ குணத்தினால் சூழப்பட்ட இந்த தாவர ஜாதிகளுக்கு உள்ளறிவும் சுக துக்கங்களும் உண்டு.

50.பிரம்ம உற்பத்தி முதல், மரங்களின் உற்பத்தி வரை கோரமான சம்சார சாகரத்தின் உற்பத்தி சொல்லப்பட்டது.

 

  1. But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet.
  2. Dividing his own body, the Lord became half male and half female; with that (female) he produced Virag.
  3. But know me, O most holy among the twice-born, to be the creator of this whole (world), whom that male, Virag, himself produced, having performed austerities.
  4. Then I, desiring to produce created beings, performed very difficult austerities, and (thereby) called into existence ten great sages, lords of created beings,
  5. Mariki, Atri, Angiras, Pulastya, Pulaha, Kratu, Praketas, Vasishtha, Bhrigu, and Narada.
  6. They created seven other Manus possessing great brilliancy, gods and classes of gods and great sages of measureless power,
  7. Yakshas (the servants of Kubera, the demons called) Rakshasas and Pisakas, Gandharvas (or musicians of the gods), Apsarases (the dancers of the gods), Asuras, (the snake-deities called) Nagas and Sarpas, (the bird-deities called) Suparnas and the several classes of the manes,
  8. Lightnings, thunderbolts and clouds, imperfect (rohita) and perfect rainbows, falling meteors, supernatural noises, comets, and heavenly lights of many kinds,

39 (Horse-faced) Kinnaras, monkeys, fishes, birds of many kinds, cattle, deer, men, and carnivorous beasts with two rows of teeth,

  1. Small and large worms and beetles, moths, lice, flies, bugs, all stinging and biting insects and the several kinds of immovable things.
  2. Thus was this whole (creation), both the immovable and the movable, produced by those high-minded ones by means of austerities and at my command, (each being) according to (the results of) its actions.
  3. But whatever act is stated (to belong) to (each of) those creatures here below, that I will truly declare to you, as well as their order in respect to birth.
  4. Cattle, deer, carnivorous beasts with two rows of teeth, Rakshasas, Pisakas, and men are born from the womb.
  5. From eggs are born birds, snakes, crocodiles, fishes, tortoises, as well as similar terrestrial and aquatic (animals).
  6. From hot moisture spring stinging and biting insects, lice, flies, bugs, and all other (creatures) of that kind which are produced by heat.
  7. All plants, propagated by seed or by slips, grow from shoots; annual plants (are those) which, bearing many flowers and fruits, perish after the ripening of their fruit;
  8. (Those trees) which bear fruit without flowers are called vanaspati (lords of the forest); but those which bear both flowers and fruit are called vriksha.
  9. But the various plants with many stalks, growing from one or several roots, the different kinds of grasses, the climbing plants and the creepers spring all from seed or from slips.
  10. These (plants) which are surrounded by multiform Darkness, the result of their acts (in former existences), possess internal consciousness and experience pleasure and pain.
  11. The (various) conditions in this always terrible and constantly changing circle of births and deaths to which created beings are subject, are stated to begin with (that of) Brahman, and to end with (that of) these (just mentioned immovable creatures).

31 to 50

ं१।३१अ/ लोकानां तु विवृद्ध्यर्थं मुखबाहूरुपादतः ।

ं१।३१च्/ ब्राह्मणं क्षत्रियं वैश्यं शूद्रं च निरवर्तयत् ॥ 31॥

 

ं१।३२अ/ द्विधा कृत्वाऽत्मनो देहमर्धेन पुरुषोऽभवत् ।

ं१।३२च्/ अर्धेन नारी तस्यां स विराजमसृजत् प्रभुः ॥ 32॥

 

ं१।३३अ/ तपस्तप्त्वाऽसृजद् यं तु स स्वयं पुरुषो विराट् ।

ं१।३३च्/ तं मां वित्तास्य सर्वस्य स्रष्टारं द्विजसत्तमाः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।३४अ/ अहं प्रजाः सिसृक्षुस्तु तपस्तप्त्वा सुदुश्चरम् ।

ं१।३४च्/ पतीन् प्रजानामसृजं महर्षीनादितो दश ॥Bछ्.Sछ्॥

 

ं१।३५अ/ मरीचिमत्र्यङ्गिरसौ पुलस्त्यं पुलहं क्रतुम् ।

ं१।३५च्/ प्रचेतसं वसिष्ठं च भृगुं नारदमेव च ॥ Bछ्.Sछ्॥

 

ं१।३६अ/ एते मनूंस्तु सप्तान् यानसृजन् भूरितेजसः ।

ं१।३६च्/ देवान् देवनिकायांश्च महर्षींश्चामितोजसः ॥ 36॥

ं१।३७अ/ यक्षरक्षः पिशाचांश्च गन्धर्वाप्सरसोऽसुरान् ।

ं१।३७च्/ नागान् सर्पान् सुपर्णांश्च पितॄणांश्च पृथग्गणम् ॥ Bछ्.Sछ्॥ %[ं।

 

ं१।३८अ/ विद्युतोऽशनिमेघांश्च रोहितैन्द्रधनूंषि च ।

ं१।३८च्/ उल्कानिर्घातकेतूंश्च ज्योतींष्युच्चावचानि च ॥ Bछ्.Sछ्॥

 

ं१।३९अ/ किन्नरान् वानरान् मत्स्यान् विविधांश्च विहङ्गमान् ।

ं१।३९च्/ पशून् मृगान् मनुष्यांश्च व्यालांश्चोभयतोदतः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४०अ/ कृमिकीटपतङ्गांश्च यूकामक्षिकमत्कुणम् ।

ं१।४०च्/ सर्वं च दंशमशकं स्थावरं च पृथग्विधम् ॥ 40॥

 

ं१।४१अ/ एवमेतैरिदं सर्वं मन्नियोगान् महात्मभिः ।

ं१।४१च्/ यथाकर्म तपोयोगात् सृष्टं स्थावरजङ्गमम् ॥ Bछ्.Sछ्॥

ं१।४२अ/ येषां तु यादृशं कर्म भूतानामिह कीर्तितम् ।

ं१।४२च्/ तत् तथा वोऽभिधास्यामि क्रमयोगं च जन्मनि ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४३अ/ पशवश्च मृगाश्चैव व्यालाश्चोभयतोदतः ।

ं१।४३च्/ रक्षांसि च पिशाचाश्च मनुष्याश्च जरायुजाः ॥ Bछ्.Sछ्॥ %[ंंअनुषाश्च ]

ं१।४४अ/ अण्डजाः पक्षिणः सर्पा नक्रा मत्स्याश्च कच्छपाः ।

ं१।४४च्/ यानि चैवं।प्रकाराणि स्थलजान्यौदकानि च ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४५अ/ स्वेदजं दंशमशकं यूकामक्षिकमत्कुणम् ।

ं१।४५च्/ ऊष्मणश्चोपजायन्ते यच्चान्यत् किं चिदीदृशम् ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४६अ/ उद्भिज्जाः स्थावराः सर्वे बीजकाण्डप्ररोहिणः ।

ं१।४६च्/ ओषध्यः फलपाकान्ता बहुपुष्पफलोपगाः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४७अ/ अपुष्पाः फलवन्तो ये ते वनस्पतयः स्मृताः ।

ं१।४७च्/ पुष्पिणः फलिनश्चैव वृक्षास्तूभयतः स्मृताः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४८अ/ गुच्छगुल्मं तु विविधं तथैव तृणजातयः ।

ं१।४८च्/ बीजकाण्डरुहाण्येव प्रताना वल्ल्य एव च ॥ Bछ्.Sछ्॥

 

 

तमसा बहुरूपेण वेष्टिताः कर्महेतुना ।

अन्तस्संज्ञा भवन्त्येते सुखदुःखसमन्विताः ॥ 49॥

 

एतदन्तास्तु गतयो ब्रह्माद्याः समुदाहृताः ।

घोरेऽस्मिन् भूतसंसारे नित्यं सततयायिनि ॥ 50॥

 

 

Tags: மனுநீதி நூல் -4, பிராணிகள் தாவரங்கள் பிரிவு, தாவரவியல்,விலங்கியல் அறிவு, திராவிடர், ஆரியர் பிரிவினை

 

–Subham–

 

 

மொழிக் கொள்கைகளை தோற்கடிக்கும் நாடு! அற்புதத்தீவு நியூகினி! (Post No.4390)

 

மொழிக் கொள்கைகளை தோற்கடிக்கும் நாடு! அற்புதத்தீவு நியூகினி! (Post No.4390)

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 12 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-01

 

 

Post No. 4390

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நியூகினி என்னும் தீவு உலகின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்று. இது ஒரு தனி நாடு. ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோநேஷியாவுக்கும் இடையே, பசிபிக் மஹா சமுத்திரத்தில் உள்ளது. இங்கு சுமார் 750 மொழிகள் பேசப்படுகின்றன. இது ஏன் என்பதை, மொமழி ஆராய்ச்சியாளர்களாலும் விளக்க முடியவில்லை. சம்ஸ்கிருதம், தமிழ் என்னும் இரண்டு பழைய மொழிகளை உடைய பாரதத்துக்கு இது பல செய்திகளை அளிக்கும்.

 

தமிழ் என்னும் மொழி ஏன் உடைந்து போய் மலையாளம், கன்னடம், தெலுங்கு என்ற மொழிகளாக உருவாயின? சம்ஸ்கிருதம் என்னும் மொழி உடைந்து குஜராத்தி, மராத்தி, இந்தி என்று ஏன் பல மொழிகள் உருவாயின? பலமொழிகளைப் பேசியோர் வந்து குடியேறினரா? அல்லது பிற மொழிக் கலப்பால் இப்படி உருவாயிற்றா? அப்படிப் பல மொழி கலந்தால் அது ஒரு புறம் தெலுங்காகவும் இன்னொரு புறம் கன்னடமாகவும் மற்றொரு புறம் மலையாளமாகவும் இன்னும் துளு என்றெல்லாம் ஏன் பிரிந்தன? இப்படி ஒருமொழி உடைய எவ்வளவு காலம் பிடிக்கும்? — இவ்வறெல்லாம் கேள்விகள் கேட்டால் எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினாலும் அவைகளை எல்லாம் ‘பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போக்கடிக்கும்’ சில எடுத்துக் காட்டுகளும் கிடைக்கும்!

 

 

நான் நீண்ட காலமாக முன்வைத்துவரும் கொள்கை: உலகில் தமிழும் சம்ஸ்கிருதமும் மிகப் பழைய மொழிகள். ஒரே மூலத்திலிருந்து வளர்ந்த மொழிகள்; வேறு எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைவிட இவ்விரு மொழிகளுக்கு இடையே தான் ஒற்றுமை அதிகம். சந்தி இலக்கணமும் வேற்றுமை உருபுகளும் இரண்டு மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமையைக் காட்டும் முக்கிய அம்சங்கள். மேலும் தமிழில் உள்ள ஆயிரக்கணக்கான ஆங்கிலச் சொற்களுக்கு விளக்கம் காண ஒரே வழி– தமிழ் -சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள்தான் உலகிலுள்ள பெரும்பாலான சொற்களுக்கு வேர் என்று ஒப்புக் கொள்வதாகும். அது எனது கொள்கை.

 

பழைய மொழிகளில் உள்ள பெரும்பாலான சொற்களை இவ்விரு மொழிகளில் காட்டலாம். ஆகவே தமிழ் ஒரு தனி மொழி- அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதெல்லாம் பிதற்றல்; உண்மை என்ன என்றால் பாரத மண்ணில் வாழ்ந்த மக்கள் வடக்கு, தெற்கு எனப் பிரிந்து நீண்ட நெடுங்காலம் வாழ்ந்ததால் இரண்டும் தனித் தனி — ஆனால் சஹோதர மொழிகள் ஆயின. இந்த விஷயங்களைப் பல முறை எழுதி ஆதாரங்களும் கொடுத்துள்ளேன். தமிழ் மொழியில் ஆயிரக் கணக்கான ஆங்கிலச் சொற்கள் உள்ளன. இவைகளை எல்லாம் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பச் சொற்கள் என்று வெளிநாட்டினர் கூறுவர்; அது தவறு; பாரத நாட்டின் மூல மொழியிலிருந்து ஆங்கு குடியேறிய புராதன இந்தியர்கள் பரப்பிய சொற்கள் அவை. ஆகையால் அவைகளைத் தமிழ் சொற்களாகவும் கருதலாம் என்றேன்

நியுகினி மொழிகளின் வரலாறு எனது கொள்கைகளுக்குத் துணையாக வருகிறது.

 

 

முதலில் நியூகினி பற்றிய புள்ளி விவரங்களைக் காண்போம்:

 

நியூகினியில் 750-க்கும் மேலான மொழிகள் பேசப்படுகின்றன. அவை ஆஸ்திரேலியப் பழங்குடி மொழிகளுடன் தொடர்பு அற்றவை. இவர்களுடன் தொடர்பில்லாத மொழி பேசும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் 250 வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். இந்த மக்களின் முன்னோர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன் குடியேறியவர்கள்; ஒருவர் பேசும் மொழி மற்றவர்களுக்குத் தெரியாது; புரியாது!

 

வெளி நாட்டினர் படை எடுத்ததில்லை; வணிகத் தொடர்பும் பிற நாட்டினருடன் இல்லை; எல்லோரும் மேலனேசியக் (Melanesia; Mela= mala= black) கருப்பர்கள்; ஏன் 750 மொழிகள்? இவைகளைப் பார்க்கும்போது ஆரிய-திராவிட மொழிக் கொள்கைகள் அடிபட்டுப் போகும்; அதா வது ஒருவர் வந்து குடியேறியதால் பல மொழிகள் உருவாயின என்பது தவறு. யாருமே வராத நியூகினி காட்டுக்குள் 750 மொழிகள்; ஆஸ்திரேலியப் பழங்குடி இடையே மேலும் 250    மொழிகள்!

இதில் இன்னும் ஒரு விந்தை என்ன வென்றால் அந்த மொழிகளுக்குள், சில கொஞ்சமும் மற்ற மொழிகளுடன் தொடர்பிலாத- தனிப்பெரும் மொழியாக நிற்கிறது. ஸ்பெயின் நாட்டிலுள்ள பாஸ்க் (Basque) மொழி போல! இதுவும் மொழியியல் வல்லுநர்களுக்குப் புரியாத புதிராக இருக்கிறது. அலை அலையாக மக்கள் குடி ஏறியிருந்தாலும் அவர்கள் வெவ்வேறு இடத்திலிருந்தா வந்தார்கள்? ஆக மொழிகள் உருவாக வெளி அம்சங்கள் தேவை இல்லை என்றே தோன்றுகிறது.

 

 

இன்னும் ஒரு பெரிய விந்தை பாபுவா நியூகினி (Papua New Guinea)  மொழிகள் தமிழ் சம்ஸ்கிருதம் முதலிய இந்திய மொழிகளைப் போல எழுவாய்- செயப்படுபொருள் – வினைச் சொற்கள் (subject, object, verb= SOV) வரிசையில் அமைந்துள்ளன. ஆனால் சற்றுத் தொலைவில் உள்ள ஆஸ்திரேலிய மொழிகள் எஸ். வி. ஓ (Subject, Verb, Object) வரிசையில் உள்ளன. அதாவது ஆங்கிலம் போல.

நான் இட்லி சாப்பிட்டேன் என்பது இந்திய மொழிகளின் வாக்கிய அமைப்பு; நான் சாப்பிட்டேன் இட்லி என்பது ஆங்கில மொழி அமைப்பு; ரஷியன் போன்ற மொழிகளில் எதை எங்கு வேண்டுமானாலும் போடலாம்: இட்லி நான் சாப்பிட்டேன்; சாப்பிட்டேன் நான் இட்லி;  நான் சாப்பிட்டேன் இட்லி.

 

 

மேற்கு பாபுவாவின் வளைகுடா மாகணத்தில் (Gulf Province of West Papua) ஆயிரம் பேர் மட்டுமே பேசும் போரோம் (Porome) மொழி மலையாளம் போல மூக்கொலி (nasal sound) அதிகம் உடையது; ஆனால் உலகிலுள்ள எந்த மொழிக்கும் தொ டர்புடையதல்ல; இது

மொழியியலாளருக்கு சவால் விடும் மர்ம மொழி; பாஸ்க் (Basque)  மொழி போல!

கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக சில மொழிகளைக் கற்று எளியதொரு அகராதியைத் தொகுத்தனர். இதனால் சில் புதிய சொற்கள் தோன்றின.

ஒவ் வொரு மொழி பேசுவோரும் சில ஆயிரம் மட்டுமே இருந்ததால் கல்யாணத்துக்கு மற்ற  மொழிக்குடும்பத்தை நாட வேண்டி இருந்தது. இதனால் ஒரே குடும்பத்தில் மூன்று நான்கு மொழி பேசும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பேரன் எனப் பெருகினர். இதனால் கலப்பின (Pidgin) மொழிகள் உருவாயின. ஆயினும் ஆதியில் எப்படி 750 வெவ்வேறு மொழி பேசுவோர் இங்கு வந்தனர்  என்பது  மொழியியல் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிடுகின்றன.

 

உலக ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம் உடைய பபுவா நியுகினி உலக மொழிகளில் ஆறில் ஒரு பங்கு மொழிகளை உடைத்தாயிருப்பது அதிசயமே.

  

இந்தியர்களைப் போலவே நெருங்கிய உறவினர்களின் பெயர்களையோ, இறந்தோரின் பெயரையோ சொல்ல மாட்டார்கள். பழங்காலத்தில் கணவர் பெயரைச் சொல்ல மாட்டாத தமிழ்ப் பெண்கள், ‘அவர்’ ‘வீட்டுக்காரர்’ ‘ஆத்துக்காரர்’, ‘இந்த ஊர் கோவிலில் உள்ளவரின் பெயர்’ என்றெல்லாம் சுற்றி வளைத்து கணவர் பெயரைச் சொல்லியது ;போல அங்கும் புதுப்புது சொற்களை உருவாக்கும் தேவை ஏற்பட்டது.

 

வேடிக்கை என்னவென்றால் மிக அ திகம் பேர் பேசுவது எங்கா ENGA மொழி; அதை சுமார் இரண்டு லட்சம் பேர் பேசுகின்றனர். அவர்களோவெனில் நாட்டின் நடுப்பகுதியில் யாரும் அணுகமுடியாத மலைப்பகுதியில் வசிப்பவர்கள்!

 

டான் லேகாக் (Late Don Laycock) என்பவர் வாழ்நாள் முழுதும் இந்தத் தீவின் மொழிகளை ஆராய்ந்தார்; அவர் சொல்கிறார்: இந்தத் தீவில் எப்படி இவ்வளவு மொழிகள் வந்தன? என்று கேட்காதீர்கள். உலகில் பெரிய நாடுகளில் ஏன் ஒரு சில மொழிகள் மட்டுமே உள்ளன? என்று கேள்வியை மாற்றிப்

போடுங்கள்; விடை கிடைத்துவிடும். ஏனேனில் அங்கெல்லாம் நாடு முழுவதையும் ஒரு குடைக் கீழ் ஆண்ட மன்னர் இருந்தனர்; ஒரே எழுத்து முறை இருந்தது; நீண்ட கால இலக்கியம் இருந்தது; போக்குவரத்து வசதிகள்– அதன் மூலம் வணிகத் தொடர்புகள் இருந்தன; இவை எதுவும் பபுவா நியூகினி நாட்டில் இல்லாததால் பல மொழிகள் உலா வந்தன என்பார்.

 

எது எவ்வாறாயினும் உலகில் இவ்வள வு மொழிகள் வேறு எங்கும் இல்லை; அதுவும்கூட ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத மொழிகள்!

750 மொழிகளை ஒரு சில தலைப்புகளில் சேர்த்து வகைப் படுத்தினாலும் மொழிகளில் உள்ள இலக்கண வேறுபாடுகள் பெரிய புதிர்களாக விளங்குகின்றன.

 

இந்தத் தீவின் மொழிகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன. காலனியாதிக்க காலத்திலேயே பிரிட்டன், ஜெர்மனி, ஹாலந்து ஆகியன பல பகுதிகளைப் பிடித்து ஆண்டன. ன்னர் ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் கீழ் வந்தது; ஒரு பகுதி – இரியன் ஜயா- என்பது இந்தோநேசியாவின் ஆட்சிக்குட்ப்பட்டது. சுசுவாமி என்னும் மொழி பேசுவோர் 50 பேர் மட்டுமே இருந்தனர். இன்னும் சில மொழிகளை 500 பேர் மட்டுமே பேசினர். ஆங்கிலக் கல்வி முதலியவற்றால் 750 மொழிகளில் பெரும்பாலானவை அழிந்து வருகின்றன அல்லது அழிந்துவிட்டன என்றே சொல்லலாம்.

 

மொத்தத்தில் மொழிக் கொள்கையாளர் சொன்ன பல விதிகளைப் பொய் என்று காட்டுகிறது பபுவா நியூகினி நாடு.

TAGS:– நியூகினி, மொழிகள் கொள்கை

வேதத்தில் மரங்களின் கதை (Post No.4372)

Written by London Swaminathan 

 

Date: 6 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-36

 

 

Post No. 4372

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Sacred Tree in Varanasi/ Benares

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நியக்ரோத, உதும்பர, அஸ்வத்த என்று மூன்று மரங்களின் பெயர்கள் விஷ்ணுவின் அம்சமாக வழிபடப்படுகின்றன. மஹாபாரதத்தில் உள்ளதும், ஸ்ஹஸ்ரநாமங்களில் பழையதுமான ஒரு துதியில் மூன்று மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மர வழிபாடு வேத காலத்திலேயே உண்டு. மேலும் இந்துக்கள் ஐரோப்பாவில் குடியேறி அவர்கள் பண்பாட்டைப் பரப்பியபோது விட்டு வந்த மிச்ச சொச்சங்களை இன்றும் ஐரோப்பாவில் காணலாம். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஹாலிவுட் (ஹோலி உட் = புனித மரம்) ஹோலிஓக் (புனித ஓக் மரம்) இப்படி நூற்றுக் கணக்கான இடப் பெயர்கள் உண்டு.

 

 

2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓவிட் (Ovid) என்னும் ரோமானியப் புலவர் மரங்களுக்கு காணிக்கை செலுத்துவது, நூல் கட்டுவது, கந்தைத் துணிகள் சாத்துவது பற்றிப் பாடியுள்ளார். இந்துக்கள் இயற்கையின் எல்லா றை அம்சங்களையும் வணங்கினர். மற்ற நாடுகளில் பழைய மர வழிபாடு இலக்கியத்திலும் மியூஸியங்களிலும் மட்டும் உள்ளது. ஆனால் இந்தியாவிலோ இமயம் முதல் குமரி வரை இன்றும் மர வழிபாடு இருக்கிறது.

 

தமிழ் நாட்டின் கோவில்களில் தல விருட்சங்கள் இருப்பது போல வட இந்தியாவில் புனித க்ஷேத்ரம் முழுவதும் புனித மரங்கள் இருக்கின்றன. வேத காலத்தில் பிப்பலாடன் (அரச மரம்) என்ற பெயரில் ரிஷி முனிவர்கள் வாழ்ந்தனர். பிராமணர்கள் அரச மரக் குச்சி (ஸமித்து) இல்லாமலோ தர்ப்பைப் புல் இல்லாமலோ வாழ முடியாது– அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் குஸ ( தர்ப்பை) புல், அரச, பலாச மரங்கள் இணைந்து பிணைந்துள்ளன. ராமனின் புதல்வர்கள் இருவரில் ஒருவர் பெயருக்குக் காரணமே தர்ப்பைப் புல் (குஸ) தான்.

ஓரிரு வேதக் கதைகளைக் காண்போம்

 

பூமி, பிரஜாபதி ஆகியோரின் முடி (மயிர்) தான் தாவரங்கள் என்று சதபத பிராமணம் கூறும்; அதாவது ஒரு காலத்தில் தாவரங்களே இல்லாத பூமியில் தாவரங்கள் வளர்ந்ததை கதை போலச் சொல்லும் பகுதி இது.

 

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு- என்ற முது மொழியின்படி பூமியில் உள்ள தாவரங்கள்= மனிதனின் உடலிலுள்ள முடி

பூமியிலுள்ள ஆறுகள்= மனிதனின் உடலிலுள்ள ரத்தக் குழாய்கள்

 

–இவ்வாறு பல விளக்கங்கள் உண்டு.

 

கதை போலச் சொல்லுவதால் அதன் பின்னுள்ள மறை  பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

முக்கியமான விஷயம் என்ன வென்றால் தர்ப்பை (குஸ), தூர்வா (அருகம் புல்) உதும்பர, அஸ்வத்த, வட/ஆலம் மரங்கள் பற்றிய குறிப்புகள் வேத காலம் முதற்கொண்டே இருக்கின்றன என்பதே.

Kadamba Tree in Chir Ghat near Yamuna River

காட்டிலுள்ள தாவரங்களையும் மரத்திலுள்ள பழங்களையும் சாப்பிடலாம் என்று பிராமண நூல்கள் சொல்லும்.

 

பிதகோரஸ் என்ற கிரேக்க தத்துவ அறிஞர், அவரை (Beans) விதைகளை சாப்பிடக்கூடாது என்று தடுத்ததாகச் சொல்லுவர். இந்துக்களும் இப்படிப் பல தாவரங்களைத் தவிர்த்தனர். ரோமன் கத்தோலிக்க மதத்தினரும் , விரத காலத்தில் சில வகை உணவுகளை உண்ண மாட்டார்கள்.

 

உதும்பர என்பது அத்தி வகைத் தாவரம். இதில் செய்யப்பட்ட நாற் காலி அல்லது ஆசனத்தின் மீதமர்ந்து குளிப்பது பற்றி பல குறிப்புகள் பிராமண நூல்களில் உள.

 

உதும்பர மரம் பறிய கதை ஒன்று:–

 

தேவர்களும் அசுரர்களும் பிரம்மாவிடம் தோன்றினர். அவர்கள் அக்னியை முன் நிறுத்தி, அசுரர்களிடம் சென்றனர். அவர்கள் அக்னியை வெட்டி வீழ்த்தவே அது பூமியில் ‘க்ரிமுக’ மரம் ஆனது இதனால்தான் அது செந்நிற,,,,,தில் உளது.

 

பிரஜாபதி, முதல் யாகம் செய்தபோது அங்கிருந்து ‘வின்கங்கட’ மரம் வந்தது. அதன் மூலம் அவர் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டார்.

 

தேவர்களும் அசுரர்களும் பிரஜாபதியிடம் தோன்றினர். அவர்கள் ஒன்றாகச் செய ல்பட்ட காலத்தில் உதும்பர மரம் தவிர ஏனைய மரங்கள் எல்லாம் அசுரர் தரப்பில் நின்றன. ஆனால் தேவர்கள் வெற்றி பெற்றவுடன் எல்லா மரங்களும் தேவர் வசம் வந்தன. தோற்றுப்போன மரங்கள் எல்லாம் உதும்பர மரத்தில்  நுழைந்து கொண்டன. இதனால்தான் உதும்பர மரம் பால் வடியும் மரமாகவும் ஏராளமான பழங்கள் உடைய (அத்திப் பழம்) தாகவும் உளது.

Picture from Lalgudi Veda

இப்படிப்  பல கதைகள் சதபத, ஐதரேய பிராமனங்களில் இருக்கின்றன. அந்தக் காலத்திலேயே மரங்கள் பற்றி அக்கறை செலுத்தியதும், அதில் ஒரே இனத்தைச் சேர்ந்த (பைகஸ்  FICUS குடும்பம்) மூன்று மரங்களை விஷ்ணு சஹஸ்ரநாமம் வேதம் முதலியன குறிப்பிடுவதும் தாவர இயல் அறிவைக் காட்டும்.

 

மறை பொருள் உடைய கதைகள் என்பதால் இதன் மூலம் வேறு ஏதேனும் சொல்ல முற்பட்டனரா என்பதும் ஆராய்ச்சிக்குரியது.

 

எல்லாவற்றையும் விட முக்கியமானது—

தேவர்களும் அசுரர்களும் பிரஜாபதி என்னும் பிரம்மாவிடம் தோன்றியதாக கி.மு 1000 ஆண்டைச் சேர்ந்த பிராமண நூல்கள் கூறுவதாகும். இவைகளை  மறைத்துவிட்டு ஒரு தரப்பை பழங்குடியினர் அல்லது திராவிடர் என்று சித்தரிப்பது பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்ல வெளிநாட்டினரின் சதியாகும். சூத்திரர்களையும் கடவுளின் ஒரு பகுதி என்று ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் சொல்லும். தேவர்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள் ஆகியோர் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும் வேதம் சொல்லும்— ஆனால் இவைகளை மறைத்து அவர்களை ஆதிப் பழங்குடி போல சித்தரிப்பது விஷமிகளின் வேலை. ஆக தாவரவியல் தவிர மானுடவியலும் சமூகவியலும் இந்த நூல்களில் காணக்கிடக்கின்றன என்ப தை அறிக.

 

—சுபம்—-