இராமாயணங்களின் பட்டியல்! (Post No7063)

RAMAYANA IN ONE STONE, ELLORA CAVES


 WRITTEN by S NAGARAJAN
swami_48@yahoo.com

Date: 6 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 10-55
Post No. 7063

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

த்விபத ராமாயணம் – தெலுங்கில் உள்ளது.

இந்த ராமாயணப் பட்டியலுக்கு முடிவே இல்லை.

தொகுப்பின் இன்னும் பெருகும்!

RAMAYANA SCENE IN THAILAND

மநு நீதி நூலில் சினிமாப் பாட்டு, பாரதியார் பாட்டு வரிகள்! (Post No.7053)

WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 4 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8–08 AM
Post No. 7053


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

பெண்களுக்கும் சொத்து உரிமை உண்டு; மநு நீதி நூல் – பகுதி 43

இதுவரை அத்தியாயங்களை முடித்து 9-ம் அத்தியாயத்தில் 54 ஸ்லோகம் வரை கண்டோம். மநு  நீதி நூல் –43 ம் பகுதியில் மேலும் சில முக்கிய விஷயங்களை முதலில் புல்லட் (BULLET POINTS) பாயிண்டுகளில் தருகிறேன். பகுதி-42 ஜூலை 19ம் தேதி இந்த பிளாக்கில் பதிவிடப்பட்டது

இதோ இன்று மநு நீதி நூல் – பகுதி 43

ஸ்லோகம் 9-54ல் சொல்கிறார்– வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் விதை எந்த நிலத்தில் தங்கி விளைகிறதொ அந்த நிலச் சொந்தக்காரருக்கே அந்த மரமோ செடியோ சொந்தம் ஆகும். அதே போல ஒரு பெண் யார் மூலமாகக் கர்ப்பம் அடைந்தாலும் அந்தக் குழந்தை அவளுக்கே சொந்தம். இதை மிருகங்களின் வாழ்க்கையில் கூடக் காண்கிறோம் (ஸ்லோகம் 9-56)

மஹாபாரதத்தில்  விசித்ரியவீர்யனுக்குக்கு   குழந்தைகள் பிறக்கவில்லை. அவன் இறந்த பின்னர் அம்பாஅம்பாலிகா மூலம் வேறு ஒரு ஆண்மகன் மூலம் குழந்தைகள் பெறப்பட்டன. செக்ஸ் திருப்திக்காக இல்லாதபடிவம்ச வ்ருத்திக்கு மட்டும் பயன்படும் இம்முறை மஹபாரத காலத்தில் இருந்தது. இதற்கு நியோகம் என்று பெயர். இது பற்றி மநு நீதி நூலில் எதிரும் புதிருமான கருத்துக்கள் உள்ளன. (இது இடைச் செருகல்களைக் INTERPOLATIONS IN MANU SMRTI காட்டுவதாக நான் நினைக்கிறேன்)

ஸ்லோகம் 9-58 முதல் நியோக முறை பற்றிப் பாடுகிறார். ஒரு பெண்ணோ ஆணோ குழந்தைகள் இல்லாதபோது மற்றொரு ஆண் மூலம் ஒரே ஒரு முறை மட்டும் குழந்தைக்காக முயற்சிக்கலாம். (தற்கால சட்டம் இதற்கு வழிவகை செய்யவில்லை)

9-64 முதல் முரண்பாடான கருத்துகள் உள. அதாவது மநுநியோக முறையையும்விதவை மறுமணத்தையும் எதிர்க்கிறார்.

9-65க்கு வியாக்கியானம் எழுதிய ஒருவர் ரிக்வேதம் 10-40-2ல் இம்முறை வருகிறது என்கிறார். 9-66ல் இவை எல்லாம் வேனன் என்ற கொடுங்கோல் மன்னன் காலத்தில் வந்த மிருக நீதிகள் என்று மநு பழிக்கிறார். வேனனை ரிஷிகள் கடைந்து — PARTHOGENIC METHODS — செயற்கை முறை கர்ப்பம்- திசுக்கள் மூலம் TISSUE CULTURE  ஆண் உடலில் இருந்து குழந்தை உருவாக்கும் அதி நவீன முறை  –CLONING TECHNIQUES — மூலம் பிருது உண்டாக்கப்பட்டான் என்று புராணங்கள் பகரும். இதனால்தான் பூமியை பிருதுவி என்று அழைக்கிறோம். அவன் உத்தமோத்தமன்ஸத்தியவான்)

(இங்கே என் கருத்துக்கு மேலும் ஒரு ஆதாரம் கிடைக்கிறது. வேனன்சுமுகன் போன்ற பழங்கால மன்னர்களை மட்டுமே மநு  குறிக்கிறார். ராமன் கிருஷ்ணன் பற்றிக் கதைப்பது இல்லை. இவர் மிகவும் பழங்காலத்தவர். பாபிலோனிய ஹமுராபிக்கும் முந்தையவர்- உலகின் முதல் சட்ட நிபுணர்- உலகின் முதல் சட்ட நூல் மனு ஸ்ம்ருதிதா ன் – என்ற எனது வாதம் மேலும் வலுப்பெறுகிறது. வேறு சில முக்கிய ஆதாரங்களை முன்னமே காட்டிவிட்டேன்)

9-74 ல் மிக முக்கியமான உளவியல் விஷயத்தைச் செப்புகிறார். ஒருவன் திரைகடல் ஓடித் திரவியம் தேட நீண்ட காலம் மனைவியைப் பிரிந்து சென்றால் அவளது வாழ்க்கைக்கு வழி செய்துவிட்டுப் போக வேண்டும் அல்லது அவள் வேறு ஒருவனுடன் ஓடிப்போய் விடுவாள் என்கிறார்.

தொல்காப்பியமும் கூடத் தமிழ்ப் பெண்கள் கடல் கடந்து வெளிநாடு போகக் கூடாது என்று தடை போடுகிறது (எனது பழைய கட்டுரையில் முழு விவரம் காண்க)

XXX

விவாகரத்து

9-77 மனைவி அடங்காப் பிடாரியாக – சினிமாவில் வரும் நீலாம்பரியாக இருந்தால்- அவளை ஓராண்டுக்குப் பின்னர் வெளியே தள்ளு என்கிறார்.

9-78 மனைவி குடிகாரியாகவோஊதாரியாகவோ இருந்தால் நகைகளைப் பிடுங்கி மாதம் தனியே வை என்கிறார். (ஆக அந்தக் காலத்திலும் வீட்டுக்குள் சூர்ப்பநகைகள்தாடகைகள் இருந்தனர் போலும்).

ஸ்லோகம் 9-80 முதல் சுவையான செய்திகள் உள. சோரம் போகும் பெண்களை விலக்கலாம்எட்டு ஆண்டுகளுக்கு மலடியாக உள்ளவளை விலக்கலாம். பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றால்அவளைப் புறக்கணித்து வேறு ஒருவருடன் வாழலாம் என்பன  9-85 வரை உள்ளன.

குடிகாரிக்கு தங்க குந்துமணி அபராதம் போடு என்ற வாசகம் அந்தக் காலத்தில் நாணய முறை இருந்ததைக் காட்டும் (9-84)

XXXX

கல்யாண வயது

கோவலன் 16, கண்ணகி 12 வயதானபோது கல்யாணம் கட்டியதாக தமிழ் காவியம் சிலப்பதிகாரம் செப்பும். தமிழ்ப் பெண்கள் பருவம் எய்திய உடனே ஓடிப்போன செய்திகளை சங்க காலப் பாடல்களில் காண்கிறோம். இதே போல மநுவும் மிக இளம் வயதில் கல்யாணம் செய்வது பற்றிப் பேசுகிறார்- ஸ்லோகம் 9-94

XXX

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

ஒரு சினிமா பாட்டு கேட்டு இருப்பீர்கள்அது மநு சொன்ன வாசகம்.

ஸ்லோகம் 9-95ல் சொல்கிறார்- கடவுள் கொடுத்த பரிசுதான் மனைவி. ஆகையால் குணமுள்ள பெண்களைப் போற்றிக் காப்பாற்றினால் இறைவன் அருள் மழை பொழிவான்.

(இதுவரை எவ்வளவோ நூல்கள் படித்து விட்டேன். மநு போல பெண்களுக்கு ஆதரவாகக் கதைத்தவர் எவரும் இலர். பெண்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால்அவர்களுக்குக் குழந்தையே இல்லாவிடினும்அவர் அனுமதியின்றி வெளியேற முடியாது என்கிறார். பெண்களை அழவிட்டால்குடும்பம் வேறோடு சாய்ந்து அழியும் என்கிறார். சகோதரிகளுக்கு சகோதரர்கள் ஆடை ஆபரணங்களை அளித்து க மகிழ்ச்சிக் டலில் மிதக்க விட வேண்டும் என்கிறார்.

இந்த ஒன்பதாம் அத்தியாயத்தில் பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்கிறார். இத்தனையும் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது.

XXX

 பாரதியார் சொன்ன மநு பாட்டு

பெண்களுக்கு மட்டும்தானா கற்பு? கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்கிறார் உலக மஹா கவி சுப்ரமண்ய பாரதியார். இது மநு 9-101ல் சொல்லும் வாசகம்.

சாகும் வரை இருவரிடத்திலும் கற்பின்மை வரக்கூடாது. இதுதான் ஆண்-பெண் உறவில் தலையாய கடமை- ஸ்லோகம் 9-101

XXX

ஸ்லோகம் 9-103- ஆண்-பெண் செக்ஸ் உறவு முறைகள் பற்றியும் குழந்தைகள் பெறாவிடில் அபூர்வமாகக் கையாள வேண்டிய விதிகளையும்  இதுவரை சொன்னேன்இனிமேல் பாகப் பிரிவினை பற்றிக் கதைப்பேன்

சொத்து உரிமை

9-104 மூத்த மகனுக்கே அதிக உரிமை

9-112 பாகப் பிரிவினை விகிதாசாரம்.

9-126 இரட்டையரில் யார் முதல்வர்?

9-127 ஆண் குழந்தையே இல்லாவிடில்மகளுக்கு சொத்து.

XXXX

தட்சனின் 10+13+ 27 + 50 மகள்கள்

9-129 தக்ஷப் பிரஜாபதி என்ன செய்தார்? அவருக்கு 50 பெண்கள்தான் பிறந்தனர். அவர் 10 பேரை தர்மருக்கும், 13 பேரை காஸ்யபருக்கும், 27 பேரை சந்திரனுக்கும் (27 நட்சத்திரங்கள்) கொடுத்தார்

9-130- ஒரு மகன் என்பவன் தந்தையைப் போன்றவன்மகள் என்பவளோ  அந்த மகனுக்குச் சமம் ஆனவள்இப்படி இருக்கையில் மகன் இடத்தை நிரப்ப வந்த பெண்ணின் சொத்தை வேறு யார் எடுக்க முடியும்?

10-131 அம்மாவின் முழுச் சொத்தும் மகளுக்கேஅவள் இறந்துவிட்டால் அது மகளின் மகனுக்கே!!


மற்ற விஷயங்களை ஒரிஜினல் ஸ்லாகங்களில் படியுங்கள்இதோ ஸ்லோகங்கள்:–

SLOKAS 66-69

78- 86


SLOKAS 87 – 90

ஸ்லோகம் 90, 91 – காதல் கல்யாணம் சரிதான்!

96– 105
106-110
111-115
115- 123

MISSING PAGES WILL BE POSTED LATER

TO BE CONTINUED….

தொண்டைமான் வரலாறு! (Post No.7049)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 3 OCTOBER 2019

British Summer Time uploaded in London – 12-50

Post No. 7049

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கொங்குமண்டல சதகம்

தொண்டைமான் வரலாறு!

ச.நாகராஜன்

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தென்கரை நாட்டில் மூவனூர் என்று ஒரு ஊர் உள்ளது.அங்கு தொண்டைமான் என்ற விருது பெற்ற கீர்த்திமான் ஒருவர் வாழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது.

அவரை ‘வளர்கடாவைக் காதறுத்த பஹதூர் தொண்டைமான்’ என்று கூறிப் புகழ்ந்தும் தெரிய வருகிறது!

ஒரு சமயம் சங்ககிரி துர்க்கத்தில் நவாபைப் பார்க்கப் பலரும் காத்திருந்தனர்.

பல நாட்கள் கழிந்தன. நவாபைக் காணும் வழியே இல்லை.

அங்கு அரசகுமாரன் வளர்த்து வந்த அருமையான செம்மறிக் கடா ஒன்று இருந்தது.

அதைப் பிடித்து அதன் இரு காதுகளையும் அறுத்து விட்டான் காத்திருந்த ஒருவன்.

அவனைப் பிடித்து நவாபின் முன் நிறுத்தினர்.

நவாபிடம் அவன், “ஐயா! தங்களைப் பார்க்க பல நாட்கள் காத்திருந்தேன். ஆனால் காண முடியவில்லை. இப்படிச் செய்தாலாவது தங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கும்; குறைகளைச் சொல்லலாம் என்று இப்படிப்பட்ட செயலைச் செய்து விட்டேன்” என்றான்.

நவாப் அவனது தைரியமான யோசனையையும் செய்கையையும் கண்டு வியந்தார்.

‘வளர்கடாவைக் காதறுத்த பஹதூர் தொண்டைமான்’ என்று அவனைக் கூப்பிட்டார்.

அன்று முதல் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது. ஆனால் அவனது இயற்பெயர் யாருக்கும் தெரியவில்லை. அவனது சந்ததியார் மூலனூர் வட்டத்தில் இன்னும் இருக்கிறார்கள்.

இதே போல கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கீழ்ப்பூந்துறை நாட்டில் இருந்த உபநாடுகளில் ஒன்றான பருத்தியபள்ளி நாட்டில் ஒரு வாலிபன் தொண்டைமான் என்னும் அரசன் சேனையில் சேர்ந்தான். பகைவன் மேல் போரெடுத்துச் சென்றான். வெற்றியும் பெற்றான்.

அந்தத் தொண்டைமான் அரசன் அவனுக்குத் தன் பெயரையும் மாலையையும் விருதாக அளித்தான்.

அதனால் அன்று  முதல் அவன் தொண்டைமான் என்று அழைக்கப்பட்டான்.

மல்லசமுத்திரத்தில் ஸ்ரீ சோழீசர் ஆலயத்துக்கு உரியவர்களாக அவனது சந்ததியார் இருந்து வருகின்றனர். அவர்கள் நவாபிடம் பெரும் அதிகாரமும் செல்வாக்கும் பெற்றிருந்தனர்.

அவர்களுக்குரிய இடங்களுக்குப் போகும்போது ஒரு வெண்கலத் துடும்பு (ஒரு வகையான பறை) ஒருவன் இவர்கள் முன்னே அடித்துச் செல்வான். அது நவாப் கொடுத்தது என்று சொல்லப்படுகிறது.

தொண்டைமான் என்ற பெயரையும் அவர்கள் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கலியுகம் 4735 ஸ்ரீ முக வருடத்தில் வீழிய குலத்தவரான இவர்களின் மரபினர், மல்லைச் சோழீசர் வருக்கக் கோவை என்னும் பிரபந்தம் கேட்டுள்ளனர்.

இந்த வரலாற்றை கொங்குமண்டல சதகம் தனது 71ஆம் பாடலில் விரித்துரைக்கிறது.

பாடல் :

பண்டைய நாளிலொன் னார்பஞ்சு போலப் பறந்தகலத்

திண்டிநல் நாட்டிய காளையை நோக்கியச் செம்பியனுந்

தொண்டைமா னென்றுந் தனதுநற் பேருஞ் சிறப்புமிக

வண்டரை மீதினிற் பெற்றவ னுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : முன் நாளில் பகைவர்களைப் பஞ்சாகப் பறக்கும் படி வென்ற வீரனை நோக்கித் தனது மாலையையும் தொண்டைமான் என்னும் தனது பெயரையும் விருதாக செம்பியனால் கொடுக்கப் பெற்றவன் வாழ்கின்றதும் கொங்கு மண்டலம் என்பதாம்.

****,

மோசஸ் உடைத்த தங்க விக்ரகம்! (Post No.7023)


WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 27 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 10-41 am

Post No. 7023

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

தசரதன் கடிதங்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › தசரதன்-கடித…

1.      

12 Oct 2014 – அமர்னா கடிதங்கள் ( தசரதன் எழுதிய 13 கடிதங்கள் ) 2.பொகஸ்கோய் கல்வெட்டு 3.மிட்டன்னிய நாகரீகம் 4.கிக்குலி எழுதிய குதிரைப் …



—subham–

கம்போடியக் கல்வெட்டுகளில் அழகிய கவிதைகள்- பகுதி 2 (Post No.7017)

Tamil at the bottom


WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 26 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 7-54 am

Post No. 7017

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

போருக்குத் தேவையான 16 மூலகங்கள் (Post No.7006)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 23 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 14-40

Post No. 7006


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

GUNS IN BENGALURU
GUNS IN CHENNAI

உரிச்சொல் நிகண்டு எனும் வெண்பா நூலை இயற்றியவர்! (Post No.7001)

WRITTEN BY S Nagarajan

swami_48@yahoo.com


 Date: 22 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 15-35

Post No. 7001


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

ச.நாகராஜன்

கொங்குமண்டல சதகம் 91ஆம் பாடலில் ஒரு அரிய செய்தியைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

அலைகடல் சூழு மவனியிற் செந்தமி ழாய்பவர்கள்

நலனுறத் தக்க வகையாக வுள்ள நனிமகிழ்ந்தே

இலகு முரிச்சொ னிகண்டுவெண் பாவி நிசைத்தகலை

வலவெழிற் காங்கேயன் வாழுமோ ரூர்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : தமிழிலக்கியம் கற்பவர்கள் எளிதில் பாடம் செய்யவும், தெரிந்து கொள்ளவும் உதவியாகும் படி உரிச்சொல் நிகண்டு என வெண்பாவினால் ஆன நூலைச் செய்து உதவிய காங்கேயன் என்பவன் வாழும் மோரூருங் கொங்கு மண்டலம் என்பதாகும்.

பலதலைதேர் காங்கேயன் பட்ட முடையான்

உலகறியச் சொன்ன வுரிச்சொல் – (உரிச்சொல் நிகண்டு)

என்றும்

முந்து காங்கேய னுரிச்சொல் – (ஆசிரிய நிகண்டு)

என்றும்

பெருத்த நூல்பலவுஞ் சுருக்கித் தமிழில்

உரிச்சொல் நிகண்டென உரைத்த காங்கேயன் –     

                (பாம்பணகவுண்டன் குறவஞ்சி)

என்றும் இப்படிப் பலபட நூல்கள் காங்கேயன் இயற்றிய உரிச்சொல் நிகண்டு பற்றிக் குறிப்பிடுகின்றன.

ஆனால் காங்கேயன் என்ற பட்டப்பெயரை உடைய இவர் யார் என்பது தெரியவில்லை.

கங்கைக் குலத்தவரான வேளாண்டலைவைருக்குக் காங்கேயன் என்ற பட்டப் பெயரிட்டு அரசர் அழைத்திருக்கின்றனர் போலும்.

புதுவைக் காங்கேயன், ஆட்கொண்ட காங்கேயன் என்னும் பெயர் கள் வழங்கி வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

வேறொருவர் தான் இந்த உரிச்சொல் நிகண்டை இயற்றினார் எனக் கூறுவதுமுண்டு.

கொங்குமண்டல சதகத்துள்  54 மற்றும் 94 ஆகிய பாடல்கள் இம்மோரூர்க் காங்கேயர்களையே குறிப்பிடுகின்றன.

இவர்களுக்கு இம்முடி என்ற பட்டப்பெயர் இருக்கிறது.

காங்கேயர்களைப் பற்றிய சிறப்புக்களை கொங்குமண்டல சதகத்துள் கண்டு மகிழலாம்.

***

கம்போடியக் கல்வெட்டுகளில் அழகிய கவிதைகள்- பகுதி 1 (Post No.7000)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com


 Date: 22 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 10-17 am

Post No. 7000


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

உலகில் ஸம்ஸ்க்ருத மொழி பரவிய அளவுக்கு வேறு எந்த மொழியும் பரவியதில்லை என்பதற்கு கல்வெட்டுகளே சான்று பகர்கின்றன. அலெக்ஸாண்டர் படையெடுப்பால் பரவிய கிரேக்க மொழியையும் விட சம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் அதிகம். ஏனெனில் துருக்கியில் உள்ள பொகைஸ்கான் களிமண் படிவக் கல்வெட்டுகள் முதல் வியட்நாம் கம்போடியா, இந்தோநேஷியா வரை சம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் உள்ளன. துருக்கி கல்வெட்டு முழுதும் சம்ஸ்க்ருதம் இல்லாவிடினும் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் வேத கால தெய்வங்களின் பெயரில் கைச்சாத்திட்ட களிமண் கல்வெட்டு உளது. கிக்குலி எழுதிய குதிரை சாஸ்திரம் ஸம்ஸ்க்ருத எண்களுடன் உள்ளது. ஆகையால் காலத்தால் முந்தியவை. அளவிலும் ஸம்ஸ்க்ருத்தைத் தோற்கடிக்க எந்தக் கல்வெட்டும் இல்லை. சம்பா எனப்படும் வியட்நாம், காம்போஜம் எனப்படும் கம்போடியா, சாவகம் எனப்படும் இந்தோநேஷியாவில் சுமார் 1000 ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் உள்ளன. உப்பு, புளி, எண்ணைக் கணக்கு எழுதிய சுமேரிய கல்வெட்டுகள் எண்ணிக்கையில் அதிகம் எனினும் அவை ஒரே இடத்தில் குவிந்துள்ளன. மேலும் இலக்கிய நயமற்றவை.

கல்வெட்டுகளில் உள்ள 800 ஸம்ஸ்க்ருத புலவர்களின் பெயர்கள் அடங்கிய புஸ்தகம் பற்றி சென்ற மாதம் எழுதினேன். இப்போது கம்போடியக் கல்வெட்டுகளில் இருந்து வடித்தெடுத்த அழகிய கவிதைகளைக் காண்போம். இவை சென்னை பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருதத் துறை ரீடர் சி.எஸ். சுந்தரம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்.

இவை வழக்கமாகக் கல்வெட்டுகள் தரும் தகவலுடன் வேறு பல புராண இதிஹாசக் கதைகளையும் உவமைகளையும் தருகின்றன. மேலும் சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கம்போடியாவில் ஸம்ஸ்க்ருதம் புழங்கியதையும் புலமை பரவியதையும் காட்டும். காம்போஜ கல்வெட்டுகள் என்ற பெயரில் ஆர்.சி.மஜூம்தார் எழுதிய நூலிலிருந்து  சுந்தரம் எடுத்தாண்டுள்ளார். ஆகையால் பக்க எண்கள் அந்தப் புஸ்தத்தைக் குறிக்கும். செம்மையான ஸம்ஸ்க்ருதத்தில் அமைந்த அற்புதக் கவிதைகள் அவை-

1.கம்போடிய மன்னர்களின் மேதாவிலாசம்

மன்னரின் மனதில் ஒரு பெட்டிக்குள் பொக்கிஷம் போல அறிவு பாதுகாக்கப்பட்டதாம். அதைக் காப்பாற்றும் பொருட்டு ஸரஸ்வதி தேவி வாயிலில் ( அம்மன்னரின் வாயில்) காத்து நிற்கிறாளாம். அதாவது மன்னர் கற்ற விஷயம் எல்லாம் தொலைந்து போகாமல் இருக்க சரஸ்வதி தேவி அருள் பாலிக்கிறாள்.

இதோ கவிதை:-

நயஸ்தம் ஞானதனம் யஸ்ய மனஹ கோசே ஸரஸ்வதீ

நித்யம் ரக்ஷிதுகாமேவ முகத்வாரே ஸ்திதா பவத் (P.63, v,23)

மன்னருக்குப் புகழ்மாலை

ஆதிபகவான் போல சாஸ்திரங்களிலும், சில்ப சாஸ்திரத்திலும், மொழி, லிபி, நாட்டியம், சங்கீதம், விஞ்ஞானம் ஆகியவற்றிலும் மன்னர் வல்லவராம்.

யஸ் ஸர்வசாஸ்த்ரேஷு சில்ப பாஷா லிபிஸ்வபி

ந்ருத்த கீதாதி விஞ்ஞானேஷ்வாதிகர்தேவ பண்டிதஹ (P.83, v.51)

XXX

மற்றொரு கவிதை சைவ சமயத்தில் மன்னருக்குள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது. இதை வருணிக்கும் அழகே தனி.

தேன் போல சைவ சாஸ்திரத்தைப் பருகுவார். அதை புத்தி என்னும் மத்தைக் கொண்டு கடைவார். அதுமட்டுமல்லாமல் அதை எல்லோருக்கும் பகிந்தளிப்பார்

சிவசாஸ்த்ராம்ருதம் பீத்வா புத்திமந்தரேண விமத்ய யஹ

ஸ்வயம் ஞானாம்ருதம் பீத்வா தமயா அன்யானபாயயத் (P.153, v.20)

–SUBHAM — லோகா சமஸ்தா சுகினோ பவந்து

மேவார் வீரன் ராணா சங்ராம் சிங் – || : சுவையான சம்பவங்கள் (Post No.6995)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com


 Date: 21 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 10-59 am

Post No. 6995

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

ச.நாகராஜன்

ராஜஸ்தானத்தின்  வரலாறு, வீரம் மிக்க சுவையான வரலாறுகளுள் ஒன்று.

 உயிரைத் துச்சமாக மதித்து முகலாயர்களுடனும் பிரிட்டிஷாருடனும் போரிட்ட ரஜபுத்திரர்களின் வீர வரலாறு இன்றைய கால கட்டத்தில் சரியானபடி தொகுக்கப்படவில்லை என்பது வருத்தமூட்டும் ஒரு விஷயம்.

மேவாரை ஆண்ட மன்னர்களுள் குறிப்பிடத்தகுந்த பெரும் வீரர் ராணா சங்ராம் சிங் -|| (24-3-1690 – 11-1-1734)

அமர் சிங்கைத் தொடர்ந்து ஆட்சி பீடம் ஏறிய சங்ராம் 1710 முதல் 1734 முடிய மேவாரை ஆண்டார். மேவார் தான் இழந்த பல பகுதிகளை இவர் ஆட்சிக் காலத்தில் தான் மீட்டது.

ராணா சங்ராம் சிறந்த வீரர். மேதை. பட்சபாதமின்றி நீதி வழங்கியவர். ஒழுக்கம் விதிகள் என்பதில் மிகவும் கண்டிப்பானவர்.

இவரது வாழ்க்கையில் ஏராளமான சுவையான நிகழ்ச்சிகள் உண்டு.

கொடாரியோவைச் சேர்ந்த அவரது சிறந்த தளகர்த்தர்களுள் ஒருவரான சோஹன் என்பவர் ஒருமுறை ராணாவை அணுகினார்.

அரசவைக்கு வரும் போது  அணிந்து வரும் உடையில் சில மடிப்புகளைச் சேர்க்க வேண்டும் என்று அவர் ராணாவிடம் விண்ணப்பித்தார்.

இதை மறுக்க முடியாத ராணா அதற்கு அங்கீகாரம் அளித்தார்.

மன்னரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை எண்ணி மனம் மிக மகிழ்ந்த சோஹன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பினார்.

அவர் சென்ற பிறகு ராணா தன் அமைச்சரிடம் சோஹனின் கட்டுப்பாட்டில் இருந்த இரு கிராமங்களின் சேமிப்பைத் தனிக் கணக்காக வைக்கச் சொன்னார்.

இதை அறிந்த சோஹன் திகைத்தார். நேரடியாக ராணாவை அணுகினார். ‘எதற்காக தனது இரு கிராமங்களின் சேமிப்பைத் தனியாக வைக்க வேண்டும், நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா’ என்று அவர் நேரடியாகவே கேட்டார்.

“ஒரு தவறும் நீங்கள் இழைக்கவில்லை” என்று உடனே ராணா பதிலிறுத்தார்.

“ஆனால்” என்று தொடர்ந்த அவர், “அந்த இரு கிராமங்களின் வரும்படி அதிக மடிப்பை ஆடைகளுக்கு வைக்கும் செலவிற்குச் சரியாக ஈடு கட்டும். எனக்கு வரும் வரும்படியில் ஒவ்வொரு சிறு காசும் முறைப்படி செலவழிக்கப்படுவதால் அதில் மிச்சம் இல்லை. ஆகவே தான் தங்களின் விருப்பப்படி செய்யப்படும் கூடுதல் மடிப்புகளுக்கு உங்கள் பணத்தைப் பயன்படுத்தும் படி ஆணையிட்டேன்” என்றார்.

உடனே சோஹன் தனது வேண்டுகோளைத் திரும்பப் பெற்றார். பழையபடி இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ராணாவும் அதற்கு இணங்கினார்.

யார் மனதும் புண்படாதபடி சாதுர்யமாக நடப்பவர் ராணா என்பதை இது உறுதிப்படுத்தியது.

ஒரு முறை ஒரு முக்கிய காரணத்திற்காகவோ அல்லது நினைவு தவறியோ தனது விதி ஒன்றை அவர் மீறி கிராமம் ஒன்றைத் தனது ஆளுகையிலிருந்து விடுவித்து விட்டார்.

அரண்மனையில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் உரித்தான நிதி அதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.

சமையல் அறை, உடைகள், அந்தப்புரம் என பகுதி பகுதியாக செலவினம் முறையாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

வழக்கப்படி உணவருந்த வந்த மன்னருக்கு அனைத்து உணவு வகைகளும் வைக்கப்பட்டது. ஆனால் சுவையான சர்க்கரை கலந்த தயிரை மட்டும் காணோம்.

உடனடியாக சமையலறை மேற்பார்வையாளரை அழைத்தார் ராணா.

“என்ன ஆயிற்று, சர்க்கரைக்கு?” என்று கேட்டார்.

“மன்னரே,  சர்க்கரைக்கான கிராமத்தை நீங்கள் விடுவித்து விட்டதாக அமைச்சர் தெரிவித்தார். சர்க்கரை இல்லை” என்றார் அவர்.

ராணா எதுவும் பேசவில்லை. அந்த சர்க்கரை வகை உணவு இல்லாமலேயே தன் உணவை முடித்துக் கொண்டார்.

தனது ஆணையைத் தானே மதிக்காமல் இருக்க முடியுமா, என்ன!

இப்படி இன்னும் பல சுவையான சம்பவங்கள் இவரைப் பற்றி வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

***

ஆதாரம் : Tod’s Annal of Mewar – The Annals of Rajasthan

James Tod (1782-1835) was a Political Agent to the Western Rajpoot states.

இவர் தொகுத்த தொகுப்பு நூல் C.H.Payne என்பவரால் சு ருக்கப்பட்டு 2008இல் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியிட்ட நிறுவனம் Beyond Books, Jodhpur.

நன்றி : C.H.Payne & Beyond Books, Jodhpur

நாட்டின் பெயர் பாரதம் என்று எப்படி வந்தது? புதிய விளக்கம் (Post No.6992)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com


 Date: 20 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 15-35

Post No. 6992

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

subham