மரணமில்லாப் பெருவாழ்வு கண்ட மகான்! (Post No.4379)

Written by S.NAGARAJAN

 

 

Date: 9 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4379

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் தமிழ் மாத பத்திரிகையில் நவம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

வள்ளலார் காட்டும் ஆரோக்கிய நெறி

 

மரணமில்லாப் பெருவாழ்வு கண்ட மகான்!

 

ச.நாகராஜன்

1

இவ்வுல்கத்தில் ஆறறிவுள்ள உயிர் உடைத்தாகிய தேகத்தைப் பெற்ற வள்ளலார் தேகத்திற்கு இடையிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் ஆகிய அனைத்தையும் நிவர்த்தி செய்து கொண்டு அந்த் தேகத்தையே நித்திய தேகமாக்கத் திருவுள்ளம் கொண்டார்.

அனைவரும் வியக்கும் வண்ணம் தான் அறிவித்தபடியே ஒளி உடலாக மாறி, நித்திய தேகியாக இருக்கிறார்.

சரித்திரம் அறிவியல் பூர்வமாகக் கண்ட உண்மை இது.

அவர் மரணமில்லாப் பெருவாழ்வைச் சித்திக்கலாம் என்று சொல்லில் மட்டும் சொல்லாது அதைச் செய்து காட்டிய மாபெரும் மகான்.

பசிப் பிணி நீக்குதல் முதல் தர்மம் என்றார் அவர்.

இந்த தேகத்தைப் பிணியிலிருந்து விடுவித்து ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழப் பல அறிவுரைகளையும், குறிப்புகளையும் அவர் தந்துள்ளார்.

ஆன்மீகத்தோடு ஆரோக்கியத்தையும் நீண்ட வாழ் நாளையும் பெற விரும்புவோர் நாட வேண்டிய ஒரே சந்நிதானம் வள்ளலார் சந்நிதானம் தான்.

 

2

அவரது ஏராளமான சிறு சிறு குறிப்புகள் ஒவ்வொன்றும் நீண்ட வாழ்நாளையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்கான இரகசியங்கள்.

ஏராளமானோரை பல்வேறு வியாதிகளிலிருந்து அவர் குணப்படுத்தியுள்ளார்.

எடுத்துக்காட்டாக தொழுவூர் வேலாயுத முதலியார் கூறியுள்ள இரு நிகழ்ச்சிகளை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

கருங்குழியில் இருந்த பாலு ரெட்டியார் என்பவர் குஷ்ட நோயினால் துன்பமுற்றார். அவர் சுவாமிகளை அணுகவே வள்ளலார் திருநீறு கொடுத்து அதைத் தீர்த்தார்.

முத்து நாராயண ரெட்டியார் என்பவருக்கு கண் பார்வை பாதிக்கப்படவே அவரது கண் மறைவினையும் தீர்த்தருளினார்.

இது போல அவர் நோய் தீர்த்த சம்பவங்கள் ஏராளம்.

அனைவரும் அனுசரிக்க வேண்டிய எளிய குறிப்புகளை அவர் தொடர்ந்து வலியுறுத்திய வண்ணம் இருந்தார்.

 

சூரியோதயத்திற்கு முன்னர் எழுந்திருப்பதை அவர் வெகுவாக வலியுறுத்தினார்.

“புத்தி அதற்குப் பொருந்தும் தெளிவளிக்கும்

சுத்த நரம்பினறற் றூய்மையுறும் – பித்தொழியும்

தாலவழி வாதபித்தம் தத்தநிலை மன்னுமதி

காலை விழிப்பின் குணம்”

என்று பதார்த்த குண சிந்தாமணி காலை எழுந்திருப்பதன் பலன்களைக் கூறுகிறது.

புத்தி மனதுடன் பொருந்தும்.

தெளிவு உண்டாகும்.

நரம்புகள் எல்லாம் தூய்மை அடையும்.

பித்தம் ஒழியும். வாத பித்த சிலேத்துமங்கள் தம் தம் நிலையில் சேரும்.

இது அதிகாலை எழுந்திருப்பதன் பலன்.

பகல் உணவுக்குப் பின் சிறிது துயில் கொள்ள வேண்டும். இந்த உறக்கம் ஆழ்ந்த உறக்கமாக இருக்கக் கூடாது. சற்றுப் படுத்து எழுந்திருப்பதாக மட்டுமே அமைய வேண்டும்.

இரவு உணவுக்குப் பின்னர் சற்று உலாவ வேண்டும்.

சத பதம் என்று ஆயுர் வேதம் கூறும். உணவுக்குப் பின்னர் நூறு அடிகள் நட என்பது அறவுரை.

புலாலைப் புசிக்காதே – எந்நாளும்.

சன்மார்க்க உணவை எடுத்துக் கொள். (இதைப் பற்றி மிக விரிவாக அவர் எழுதியுள்ளார்)

இவையெல்லாம் அவரது அறிவுரைகள்.

 

3

சஞ்சீவி மூலிகைகளான கறுப்பு நாயுருவி, குளிர்ந்த கொள்ளி, தீப்பூடு, முத்துப் பூண்டு, கருங்காந்தள் ஆகிய ஐந்து மூலிகைகளின் குணங்களை அவர் வரையறுத்துக் கூறியுள்ளார்.

முத்துப்பூண்டை பறவைகளின் காதில் சிறுகச் சிறுக விட்டால் அவை உயிர் பிழைக்கும் என்பது அவரது அருளுரை.

இருமல், தேகமெலிவு,நீர்க்கோவை, சரீர திடம் ஆகியவற்றிற்கான மருத்துவக் குறிப்புகளை அவர் மிகத் தெளிவாகத் தந்துள்ளார்.

 

4

வள்ளலாரின் மிக அற்புதமான் ஒரு சித்தி அவர் ஏராளமான மூலிகைகளை அறிந்திருந்ததோடு அவற்றின் பயனைப் பற்றி உலகத்திற்கு தீர்க்கமாக அறிவித்தது தான்.

 

இந்த மூலிகைகளைப் பயன்படுத்தி அவர் ஏராளமானோரைக் குணப்படுத்தியதை அவர் வாழ்க்கை வரலாறு தெளிவாகக் கூறுகிறது.

485 மூலிகைகளின் பெயரைக் கூறி அதன் குணத்தை அவர் ஒரே வரியில் கூறி இருப்பது வியக்க வைக்கும் ஒரு மாபெரும் சாதனையாகும்.

எடுத்துக் காட்டாக ஒரு பத்து மூலிகைகளை மட்டும் இங்குக் குறிப்பிடலாம்.

மாகாளி – மயக்கம் போம்

நீர்விளா – பைத்தியம் போகும்

மாஞ்சரோணி – கண் புகைச்சல் தீரும்

தும்பை – ஜுரம் போகும். சில் விஷம் போகும்.

தாமரை – கண் குளிர்ச்சி

ஆலுக்கு – புழுக்கள் போகும்

அரசுக்கு – புத்தி வர்த்தினி

இச்சில் – குஷடம் போகும்

கீழாநெல்லி – காமாலை போகும்

திப்பிலி – தாது விருத்தி உண்டாகும்.

இப்படி 485 மூலிகைகளுக்கான குணத்தைப் படிக்கும் போது தன்வந்திரி நேரில் வந்து சொல்வது போல மருத்துவக் குறிப்புகளைக் கண்டு வியக்க முடிகிறது.

 

5

கஸ்தூரி மஞ்சள், வேப்பம் பருப்பு, வெள்ளை மிளகு, கடுக்காய்த் தோல், நெல்லி வற்றல் ஆகிய ஐந்தும் சுலபமாகக் கிடைக்கக் கூடியவை. இவற்றை பஞ்ச கற்பம் என்கிறார் வள்ளலார். இவற்றைப் பாலில் காய்ச்சி நறுமணத்துடன் இறக்கித் தேய்த்துக் கொள்ளவும் என்பது அவரது அறிவுரை.

நித்திய கரும விதி என்று 21 அறிவுரைகளை அவர் தருகிறார். எதை உண்ண வேண்டும், எப்படி உண்ண வேண்டும், எப்போது தூங்க வேண்டும் என்றெல்லாம் நுணுக்கமாகக் கூறுவது அவரது தனித்துவம் மிக்க சித்தர் பாணி.

“ஆகாரம் அரை, நித்திரை அரைக்கால், மைதுனம் வீ சம், பயம் பூஜ்யம் ஆகப் பெறுதல்”- ஆகிய இவை ஆரோக்கிய வாழ்வுக்கு அவர் காட்டும் வழி.

மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுதலை மனிதனின் குறிக்கோளாகச் செய்வதற்கென அபூர்வமாக தமிழகத்தில் அவதரித்த சித்தர் வள்ளலார்.

அதன் முதற்படியாக நீடித்த ஆயுளை ஆரோக்கிய வாழ்வுடன் பெற அவரது அருளுடன் கூடிய அறிவுரைகளைப் பின்பற்றுதல் அன்பர்களின் கடமை.

 

6

வள்ளலாரின் அற்புதமான வாழ்க்கை வரலாற்றை அவரது அணுக்க சீடரும் சென்னை பிரஸிதென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராய்ப் பணியாற்றியவருமான தொழுவூர் வேலாயுத முதலியார் எழுதியுள்ளார்.

 

இந்த நூலுடன் ஊரன் அடிகளார் எழுதியுள்ள திரு அருட்பா உரை நடைப் பகுதி நூலையும் இராமலிங்க அடிகள் திருவரலாறு நூலையும் வாங்கிப் படித்தால் அரிய இரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர், 607303 தென்னார்க்காடு மாவட்டம் என்ற முகவரியில் நூலைப் பெறலாம்.

மேலே குறிப்பிட்ட மூன்று நூல்களும் முத்தான நூல்கள். ஆரோக்கிய அதிர்ஷ்டம் உள்ளவர்கள் அதை நிச்சயம் நாடுவர்.

 

***

 

 

உடையது விளம்பேல்! வல்லமை பேசேல்! (Post No.4374)

Written by London Swaminathan 

 

Date: 7 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-49 am

 

 

Post No. 4374

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தற்புகழ்ச்சி என்பது ஒரு நோயாகும்; நம்மில் பெரும்பாலோர்க்கு இந்த நோய் உண்டு; யாராவது ஒருவர் பேசா மடந்தையாக இருந்தாலோ, அல்லது உங்களைப் பாராமல் இருக்கும் பாராமுகமாக இருந்தாலோ, அவரிடம் போய், ‘அட இந்த சட்டை நன்றாக இருக்கிறதே, இந்தப் புடவை நன்றாக இருக்கிறதே! எங்கே வாங்கினீர்கள்?’ என்று கேளுங்கள்; அவர்கள் முகத்தில் ஆயிரம் செந்தாமரைகள் பூக்கும்; அவர்கள் பேச்சில் மதுரை மல்லிகை மணம் வீசும்; சுவிட்சைத் (switch) தட்டிவிட்டீர்கள்; இனி ஆஃF  (off) செய்ய மெடியாது. ‘அட! முன்னைவிட நீங்கள் இளஞர் ஆகி விட்டீர்களே; பத்து வயது குறைந்தது போல இருக்கிறீர்கள்’ என்று சொல்லுங்கள்; உங்களுக்கு திருநெல்வேலி லாலா கடை அல்வா வாங்கிக் கொடுப்பார். புகழ்ச்சிக்கு மயங்காதோர் உண்டோ?

 

 

இதெல்லாம் கூடத் தடவறில்லை; ஆனால் ஒருவர் தானாக முன்வந்து, தனது சாதனைகளைச் சொல்லுவது அறிவுடைமை அன்று; அது பேதைமையின் முற்றிய தோற்றம் ஆகும்.

 

இதனால்தான் அவ்வையாரும்

 

உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே)

வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில் அழகுபடப் பகர்ந்தார்.

வள்ளுவனும் சொன்னான்:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை (குறள் 439)

 

பொருள்: தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு.

மனு நீதி நவில்வது

 

மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-

 

“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162)

 

யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-16

 

 

கூரம் பாயினும் வீரியம் பேசேல்

–கொன்றை வேந்தன்

(கூர் அம்பாயினும் வீரியம் பேசக் கூடாது; அதாவது உன் கைகளில் கூரிய அம்பு இருந்து, எதிரி கைகளில் ஆயுதம் ஒன்றில்லாவிடினும் செருக்கு கொண்டு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று புகழ்ந்து கொள்ளாதே)

 

குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை

வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்

நயவாமை யன்றே நலம்

 

பொருள்:

தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்;  இன்பத்தை விரும்பாமல் இருபப்பதல்லவோ இன்பம்;  அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!

அவ்வையார் கதை

அவ்வையாரிடம் ஒரு சிறுவன் சென்றான்; ஒரு கையில் மண்ணை எடுத்துக் கொண்டான்;  பாட்டி என் கையில் எவ்வளவு மண் இருக்கிறது? என்று சொல் பார்ப்போம் என்றான்; அவ்வையார் பதில் சொல்ல முடியாமல், மனதில் மணல் துளிகளை எண்ணிக் கொண்டிருந்தார்;  விடை தெரியவில்லை. அட பாட்டி, இது கூடத் தெரியவில்லையா? என் கையில் இருப்பது ‘பிடி மண்’ என்றான். முருகப் பெருமானோ சுட்ட பழம் வேன்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு அவ்வைப் பாட்டியை திணறடித்தான்; கீழே விழுந்த நாவற் பழங்களை மணல் போக ஊதிக் கொடுத்தால் அது சுட்ட  பழம் என்று அறிவுறுத்தினான்.

 

இதனால்தான் அறநெறிச்சாரத்தில் முனைப்பாடியார் என்பாரும் சொன்னார்:–

 

பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா

அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்

கச்சாணி யன்னதோர் சொல்

பொருள்:

அலர்கதிர் ஞாயிற்றை — பரந்த கிரணங்களை உடைய சூரியனையும்

கைக்குடையும் காக்கும்— கையிலுள்ள சிறிய குடையும் மறைத்துவிடும்.

பலகற்றோம் யாமென்று- ஆதாலால் யாம் பல விஷயங்களைக் கற்றுவிட்டோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது.

 

பலகற்றார்க்

கச்சாணி யன்னதோர் சொல்–  பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்க்கும்  அச்சாணி போன்ற ஒரு சொல்

சில கற்றார் கண்ணும் உளவாம்-  சில நூல்களை மட்டுமே பயின்றோரிடத்தும் உண்டு.

TAGS:–அவ்வையார், மனுநீதி, தற்புகழ்ச்சி, உடையது, வியவற்க

சுபம், சுபம்—

கம்பனும் அப்பரும் செப்பியது ஒன்றே! (Post No.4369)

Written by London Swaminathan

 

Date: 5 NOVEMBER 2017

 

Time uploaded in London- 15-24

 

 

Post No. 4369

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இரணியனை வதம் செய்தவுடன் எதிரே நின்ற நரசிங்கப் பெருமான் சொன்னார்: உன் அப்பனையே கூரிய நகங்களால் கொன்ற பின்னரும் நிலைகுலையாமல் நின்றாய்; என் மீது கொண்ட பக்தி சிறிதும் குறைவில்லை; உன் பக்தியைக் கண்டு மெச்சுகிறேன் உனக்கு என்ன வேண்டும்? கேள்!

 

உடனே பிரஹலாதன், “என் அப்பா இருந்த அரியாசனத்தில் என்னையும் உடகார்த்தி வை என்று பதவியையோ, பெரும்புகழையோ, செல்வத்தையோ கேட்கவில்லை. நான் எலும்பற்ற உடல் கொண்ட புழுப் போன்ற உடல் எடுத்தாலும் உன்னை மறவாது இருக்க வரம் அருள்’ என்கிறான்.

 

என்ன ஆச்சர்யம்! இதுவே அப்பர் வாக்கில் கம்பனுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உள்ளது!

 

 

முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவில்லை

பின்பு பெறும் பேறும் உண்டோ பெறுகுவெனேல்

என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின்

அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான்

–இரணியன் வதைப் படலம், யுத்த காண்டம், கம்ப ராமாயணம்

 

பொருள்:-

 

உனது அருளால் நான் பெற்ற நன்மைகள் எல்லையற்றவை. இனியும் நான் பெறும் நன்மை யாதுளது? அப்படி இன்னும் நான் பெறக்கூடியது ஏதாவது ஒன்று உண்டென்றால், எலும்பு இல்லாத புழுவின் உடலை நான் பெற்றாலும் உன்னிடம் அன்பு செலுத்தும் பெறும் பேற்றை எனக்கு அருள வேண்டும் — என்று பிரஹலாதன் வேண்டுகிறான்.

இதை அப்பரின் தேவாரப் பாடலுடன் ஒப்பிடுவோம்:

 

 

புழுவாய்ப் பிறக்கினும்  புண்ணியா  வுன்னடி யென்மனத்தே

வழுவா திருக்க வரந்தரவேண்டும் இவ் வையகத்தே

தொழுவார்க் கிரங்கி  யிருந்தருள் செய்பாதிரிபுலியூர்ச்

செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே—

நாலாம் திருமுறை

 

பொருள்; இந்தப் பூவுலகில் வழிபடுவோர் எல்லோரிடத்திலும் இரக்கம் கொண்டு கருணை புரியும் செம்மேனி அம்மானே! கங்கை நதியை செஞ்சடையில் வைத்து, திருப்பதிரிப் புலியூரில் இருந்து கொண்டு அருள் புரியும் பெம்மானே! நான் புழுவாகப் பிறந்தாலும் உன்னை மறவாதிருக்க வரம் தா என்று அப்பர் பெருமான் இறைஞ்சுகிறார்.

 

–Subham–

ரிக் வேதத்தில் நகைச்சுவை நடிகன் (Post No.4366)

Written by London Swaminathan

 

Date: 4 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-48

 

 

Post No. 4366

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நாடகங்களில் விதூஷகன் என்று ஒரு கதாபாத்திரம் உண்டு. 2000 ஆண்டுகளுக்கு முன் நாடகங்கள் எழுதிய காளிதாசனின் படைப்புகளிலும் அதற்கு முன்னரும் பின்னரும் விதூஷகன் இல்லாத நாடகம் கிடையாது. இப்போது திரைப்படங்களில் வரும்  நகைச் சுவைக் காட்சிக்கு மூலமே சம்ஸ்கிருத நாடகங்கள்தான். எகிப்து, கிரேக்கம் போன்ற பழைய நாகரீகங்களிலும் கூத்து உண்டு. ந்தக் காலத்தில் நாடகம் என் றாலே சங்கீத அல்லது நாட்டிய நாடகம்தான். இதன் மூலம் வசனங்களை எளிதில் நினைவு வைத்துக் கொள்வதும் மக்களைக் கவர்ந்திழுப்பதும் எளிதாகும்.

ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் முதலியோர் ரிக் வேதத்துக்குக் கற்பித்த தேதிகளைக் கணக்கிற்கொண்டால் எகிப்திய நாடகங்களுக்கும் முன்னோடி நாம்தான்.

ரிக் வேதம் பாரத நாட்டின் கலைக்களஞ்சியம்; அதில் இல்லாத விஷயங்களே இல்லை. அண்மையில் பழைய மலர் ஒன்றைப் படித்தேன். அதில் ரிக் வேதத்தில் கோமாளி பற்றிய குறிப்பு கூட இருப்பதை ஒருவர் எழுதியுள்ளார். நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாடகத்தின் தோற்றம் பற்றிய கட்டுரையில் ரிக் வேதத்திலுள்ள உரையாடல்களில் நாடக மூலக்குறுகளைக் காணலாம்.

உலகின் மிகப் பழைய நூலான– கவிதைத் தொகுப்பான — ரிக் வேதத்தின்  உரையாடல்கள் பத்தாவது மண்டலத்தில் உள்ளன:–
RV 10-51: அக்னி- வருணன்
RV 10-10 யமன்  – யமி

RV 1-179 அகஸ்தியர்– லோபாமுத்ரை

RV 10-95 புரூருவஸ்- ஊர்வஸி

RV 10-86 இந்திரன் — வ்ருஷகபி

மேலும் பல உரையாடல்கள் RV 10-135; 10-124; 4-26; 10-108; 10-28 உள்ளன.

புருஷமேத யாகத்தில் 200 பேருக்கு மேலாக “நரபலி கொடுக்கும்” பட்டியலில் காரி என்பவர் சிரிப்புக் கடவுளான ஹாசனுக்கு பலியிடப்படுவதாக உள்ளது. உலகில் சிரிப்புக்கும் ஒரு கடவுள் வேத கலத்திலேயே இருந்திருக்கிறது; (வாஜசநேயி சம்ஹிதை, தைத்ரீய சம்ஹிதை;VS 30-6 and T S 3-41.)  நாடகத்தில் கோமாளி என்னும் கதாபத்திரம் இருந்தனர் என்றால் அவர்களுடைய கலை ரசனை, முன்னேற்றத்துக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?

 

வண்டி இழுக்கும் குதிரை லேஸான பாரத்தை விரும்பும்; அது போல நகைச்சுவையுண்டாக்கும் கோமாளிகள் நல்ல சிரிப்பை உண்டாக்கும் லேஸான சொற்களை விரும்புவர்; காதலன் காதலியை நாடுவது போல; தவளைகள் உணவுக்காக ஏங்குவது போல –ரிக் வேதம் 9-112-4

 

சிலர் ரிக் வேதப் பாடல்களை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்:–

சமயப் பாடல்கள்

தத்துவப் பாடல்கள்

சமயத் தொடர்பற்ற பொதுப் பாடல்கள்

 

சமயம் தொடர்பான துதிப் பாடல்கள்தான் இதில் அதிகம்; நான் யார்? எங்கிருந்து வந்தேன்? பிரபஞ்சத்தின் காரணம் என்ன? என்ற சில தத்துவப் பாடல்களும் உள்ளன.

 

சமயத் தொடர்பற்ற பாடல்கள் பல சுவையான விஷயங்க ளைச் சொல்லும்; இதில் திருமணப் பாடல்களும் ஈமக் கிரியை தொடர்பான பாடல்களும் அடக்கம்.

 

சூரியன்-  சந்திரன் திருமணம் தொடர்பான ஒரு துதி (10-85) சுவையான துதியாகும். கணவன்  – மனைவி இருவர் இடையே உள்ள உறவு சூரியன், சந்திரன் போல இருக்க வேண்டுமாம்:

 

காலையில் ஒன்றும் இரவில் ஒன்றும் வெளிச்சம் தருவது போல வேலைக ளைப் பகிர வேண்டும்

இரண்டும் பூமியில் உயிரினங்கள் தழைக்க உதவுகின்றன (உயிருடன் உள்ளவரின் ஆரோக்கியத்துக்கு சூரியன் உதவும்; தாவரங்கள் வளருவது சந்திரனால் என்பது இந்துக்களின் நம்பிக்கை

 

 

நான் இன்று உன் கையைப் பிடிக்கிறேன் (பாணிக் கிரஹணம்) (மணமகன் தனது வலது கையால், மணமகளின் வலது கையைப் பிடித்துக்கொண்டு சொல்லும் மந்திரம்); உன்னுடைய கைகளைப் பற்றுவதால் நல்லதிர்ஷ்டம் வாய்க்கட்டும்; நாம் இருவரும் முதிய வயது வரை ஒன்றாக வாழ்வோம். என் வீட்டின் ராணியாக இருக்க உன்னை அர்யமன், பக, சவித்ரு, புரந்த்ரி ஆகியோர் அனுப்பியுள்ளனர்.

 

இந்த மந்திரத்தின் (10-85-36) கடைசி மந்திரம் முத்தாய்ப்பு வைத்ததாக இருக்கிறது:

 

என் வீட்டில் ஆட்சி செய்

கணவனின் பெற்றோர்கள்

சஹோதரன், சஹோதரி மீதும்தான்

எல்லோரும் உனக்குட் பட்டவர்களே10-85-46

திருமண துதிகளைப் படிக்கையில் பெண்களை எவ்வளவு உயர்த்தி வைத்து இருக்கிறார்கள், எவ்வளவு புகழ்கிறார்கள் என்று அறியலாம்.

 

சுபம், சுபம்–

இது தான் இந்தியா – ஜெஃப்ரி ஃபர்னாலின் அனுபவக் கூற்று! (Post No.4358)

Written by S.NAGARAJAN

 

 

Date: 2 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-58 am

 

 

Post No. 4358

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அதிசய பூ

இது தான் இந்தியா – ஜெஃப்ரி ஃபர்னாலின் அனுபவக் கூற்று!

 

ச.நாகராஜன்

 

 
Jeffery Farnol

 

 

பிரபல ஆங்கில காதல் கதை மன்னரான ஜெஃப்ரி ஃபர்னால் சுவையான காதல் அட்வென்சர் கதைகளை எழுதி உலகைக் கவரந்தவர்.

 

இங்கிலாந்தில் 1878ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிறந்த ஃபர்னால் இயல்பாகவே கலை உள்ளம் படைத்தவர். அவருக்குச் சிறு வயது முதலே எழுதும் கலை இயல்பாக வந்தது.

 

 

சார்லஸ் டிக்கன்ஸ், ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன் ஆகியோரின் நாவல்களால் அவர் பெரிதும் கவரப்பட்டார்.

பல கவிதைகளையும் கதைகளையும் எழுத ஆரம்பித்தார். அவரது  தி ப்ராட் ஹைவே (The Broad Highway – 1910) என்ற நாவலை அமெரிக்காவில் பதிப்பகங்களுக்கு அனுப்பினார்.ஆனால் அவை அந்த நாவலை ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பின.

 

உடனடியாக தனது மாமியாருக்கு அதை அனுப்பினார். அவர் இங்கிலாந்தில் இருந்தார்.இங்கிலாந்தில் அது வெளியிடப்பட்டது. மறு ஆண்டு அமெரிக்கப் பதிப்பாளர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.

 

தொடர்ந்து பத்து வருட காலம் முதலிடத்தைப் பிடித்து அந்த நாவல் சாதனை படைத்தது.

 

 

தொடர்ந்து தி அமெச்சூர் ஜெண்டில்மேன் உள்ளிட்ட ஏராளமான ரொமான்ஸ் நாவல்களை அவர் எழுதினார்.

அவர் 1936ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். மர்மமான இந்த தேசத்தைப் பார்த்து வியந்தார். மறுபிறப்பில் அவருக்கு நம்பிக்கை உண்டு.

8-4-1936இல் தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகைக்கு அவர் பேட்டி கொடுத்தார்.

 

அதில் அவர் கூறியது:

 

“India has mystified me. It is more beautiful than I could imagine or dream of. I am charmed by the life of the country, specially the villages, I believe in the Law of Karma, but I do not believe that men can ever be born as animals. It is impertinent for any one visiting India for a few weeks, or even months, to write a book on the life or people of India. This mighty land goes far beyond the understanding of any mere sojourner.”

 

 

“இந்தியா என்னைத் திகைக்க வைத்தது. நான் கற்பனை செய்ததை விட, கனவு கண்டதை விட, அது மிக அழகானது. இந்த நாட்டில் உள்ள வாழ்க்கை முறையால் நான் கவரப்பட்டேன். குறிப்பாக கிராமங்களில் உள்ளோரின் வாழ்க்கை முறையால். எனக்கு கர்ம பலன் கொள்கையில் நம்பிக்கை உண்டு. ஆனால் மனிதன் ஒரு போதும் மிருகமாகப் பிறக்கமுடியாது என்று நம்புகிறேன். சில வாரங்களோ அல்லது, ஏன், சில மாதங்களோ கூட இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வருகை புரியும் ஒருவர் இங்குள்ள வாழ்க்கை முறை பற்றியோ அல்லது மக்களைப் பற்றியோ எழுதுவது என்பது பொருத்தமற்றது. தற்காலிகமாக ஊர் சுற்றிப் பார்க்க வரும் ஒருவரது புரிதலுக்கு மிக மிக அப்பாற்பட்டது இந்த பிரம்மாண்டமான தேசம்.”

 

 

‘புரிந்து கொள்ள முடியாத மர்ம தேசமாக இருப்பது இந்தியா’ என்பதை மிக அழகாகப் புரிந்து கொண்ட ஃபர்னால் மன மகிழ்ச்சியுடன் இந்தியாவைச் சுற்றிப் பார்த்தார். மக்களைப் புரிந்து கொண்டார். மறுபிறப்பில் தனக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இது போல ஏராளமான அயல் நாட்டவர் வியக்கும் வாழ்க்கை முறை இந்திய வாழ்க்கை  முறை என்பது குறிப்பிடத்தகுந்தது.

***

 

2 யானை மீது அமைக்கப்பட்ட மேடையில் கச்சேரி: ஸ்ரீ முத்தையா பாகவதர்! (Post No.4352)

Written by S.NAGARAJAN

 

 

Date: 31 October 2017

 

Time uploaded in London- 5-19 am

 

 

Post No. 4352

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

இசை இன்பம்

இரண்டு யானைகளின் மீது அமைக்கப்பட்ட மேடையில் கச்சேரி செய்த ஸ்ரீ முத்தையா பாகவதர்!

 

ச.நாகராஜன்

 

1

இந்தக்கட்டுரையின் ஆக்கத்திற்கு உதவியவர் எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன் அவர்கள். அவருக்கு எனது நன்றி. அவரது தந்தையார் திரு ராமசுப்ரமணியன் அவர்களின் பாட்டியும் (அப்பாவின் அம்மா), முத்தையா பாகவதரின் தாயாரும் ஸ்ரீ எஸ். ஜி. கிட்டப்பாவின் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள். ஆகவே திரு ராமசுப்பிரமணியனின் சித்தப்பா தான் ஸ்ரீ முத்தையா பாகவதர்.

 

 

Picture of Sri Ramasubramaniam

21-10-2017 அக்டோபர் 21,22,23 ஆகிய தேதிகளில் அவர் தனது பழைய நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு வயது 97. தெளிவாக நுணுக்கமான விவரங்களை அவர் இடம், தேதி, பெயருடன் தெரிவித்தது ஒரு அபூர்வமான விஷயம். திரு சேஷாத்திரிநாதன் மிகவும் பத்திரமாக வைத்திருந்த ஆவணங்களைப் பார்த்ததோடு அவற்றை உடனடியாக போட்டோ எடுக்க விழைந்தேன். அந்த போட்டோக்களை திரு கார்த்திக் (சேஷாத்திரிநாதனின் புதல்வர்) நேர்த்தியாக எடுத்துத் தந்தார். அவருக்கும் நமது நன்றி.

 

 

2

 

ஸ்ரீ முத்தையா பாகவதர் (பிறப்பு : 15-11-1877 மறைவு : 30-6-1945)

20 ராகங்களை உருவாக்கியவர்.

 

1930ஆம் ஆண்டிலேயே மியூசிக் அகாடமியால் சங்கீத கலாவிதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர். ஹரிகதா நிகழ்த்துவதில் வல்லவர். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் ஹரிகதை செய்வதைக் கேட்பதற்காக மக்கள் திரள் திரளாகக் கூடுவது வழக்கம். பல வெளிநாடுகளுக்கும் அவர் கப்பலில் செல்வது வழக்கம். சிலோன், பினாங்கு, ரங்கூன் உள்ளிட்ட பல இடங்களில் அவரது நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

 

 

3

மைசூர் மஹாராஜா ஒரு நாள் ஒரு நாதஸ்வர வித்வான் மைசூரில் முத்தையா பாகவதர் இயற்றிய வள்ளி நாயகனே என்ற பாடலை வாசிக்கக் கேட்டார். அப்போது அந்த நாதஸ்வர வித்வான் பாகவதரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் மன்னரிடம் கூற உடனே பாகவதருக்கு மைசூர் வருமாறு மன்னர் அழைப்பு விடுத்தார் மைசூருக்குச் சென்ற பாகவதர் மன்னரின் அன்புக்குப் பாத்திரராய் விளங்கினார்.

அங்கேயே வசித்து வந்தார் அவர். அவர் மறைந்ததும் மைசூரில் தான்.

 

 

அவருக்கு உரிய மரியாதை தருவதற்காக உப்பரிகையில் வீற்று கதை கேட்கும் மன்னர் தனக்குச் சமமான உயரத்தில் அவர் ஆசனம் இருக்க வேண்டும் என்பதற்காக உயரமான பெரிய இரு யானைகளை நிறுத்தி அவற்றிற்கு இடையே மேடையை அமைத்து அதில் முத்தையா பாகவதர் அமர்ந்து நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்வது வழக்கம்.

அந்த அளவுக்கு அவர் மைசூர் ராஜாவின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்தார்.

 

 

அவரது நிகழ்ச்சியால் பெரிதும் கவரப்பட்ட மஹாராஜா அவருக்கு யானைக்குட்டி ஒன்றைப் பரிசாக அளித்தார். அதைத் தனது இல்லத்திற்கு கூட்டிச் சென்ற முத்தையா பாகவதரால் அது அடிக்கும் ‘லூட்டியைச் சமாளிக்க முடியவில்லை.

கூடக் கூட்டிச் செல்லும் போது தெரு வீதிகளில் அது ஓடுமாம். மக்கள் மகிழ்ச்சியோடு அந்தக் ‘கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழ்வராம்.

 

வீட்டிலோ தம்புரா உட்பட்ட அனைத்துமே யானையால் உடைபட்டது.

 

பொறுக்க முடியாத முத்தையா பாகவதர் மன்னரிடம் சென்று அந்த அன்புப் பரிசு அன்புத் தொல்லையாக இருப்பதைத் தெரிவித்து யானைக் குட்டியைத் திருப்பிக் கொடுத்தாராம்.

மைசூர் மன்னர் சாமுண்டீஸ்வரி கோவிலில் அவரே பூஜை செய்வது வழக்கம். சாமுண்டீஸ்வரி அம்மன் மீது பல கீர்த்தனைகளை முத்தையா பாகவதர் இயற்றியுள்ளார். மன்னர் பூஜை செய்யும் போது முத்தையா பாகவதர் அந்தப் பாடல்கள் உள்ளிட்ட பல பாடல்களையும் பாடுவது வழக்கம்.

 

திருவனந்தபுரம் அரண்மனையிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் வழக்கமாக வரும்.

முத்தையா பாகவதர் சங்கீத உலகிற்கும் ஹரிகதா ப்ரவசன கலைக்கும் ஆற்றிய தொண்டு போற்றுதற்குரியது. அவரைப் பற்றிய பல நூல்கள் இப்போது வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று.

 

 

4

முத்தையா பாகவதர் மதுரையில் ஒரு சங்கீத பாடசாலையை ஆரம்பித்தார். மதுரை மணி ஐயர் உள்ளிட்ட பிற்கால பிரபலங்கள் பலரும் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்களே.மதுரை பள்ளிக்கு சங்கர சேர்வை என்பவர் முதல்வராக இருந்தார். அவரது தம்பி முருக பூபதி பிரபலமான மிருதங்க வித்வான். அந்தப் பள்ளியில் தான் திரு டி.என்.சேஷகோபாலன் பயின்றார்.

முத்தையா பாகவதரின் தம்பி ஹரிஹர பாகவதர் அவருடைய ஹரிகதா காலக்ஷேபத்திற்குப் பின்பாட்டுப் பாடுவார். அவர் இறந்தவுடன் அவரது குமாரர் வைத்தியலிங்கம் (மூக்காண்டி என்பது அவரின் செல்லப் பெயர்) அவர்களை முத்தையா பாகவதர் தத்து எடுத்து வளர்த்தார். பாகவதர் இறந்தவுடன் அவரது அந்திமக் கிரியைகளை இவரே செய்தார். சித்தூர் இசைக் கல்லூரியை வைத்தியலிங்கம் நிர்வகித்து வந்தார்.

 

(எனது சம்பந்த்தியின் தந்தையார்) திரு ராமசுப்பிரமணியனின் தமக்கையாரின் கணவர் திரு கிருஷ்ணமூர்த்தி டோலக் வாத்தியத்தை வாசிப்பதில் பெரும் நிபுணர். டோலக் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தாய் மாமன் முத்தையா பாகவதர்.

 

அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் நிகழ்ச்சிகளுக்கு காசி ஐயர் ஹார்மோனியம் வாசிப்பார். டோலக்கை திரு கிருஷ்ணமூர்த்தி வாசிப்பார். அவரது இசை நிகழ்ச்சிகள் பற்றிய அனைத்து நோட்டீஸ்களும் கூட போட்டோ எடுக்கப்பட்டது. (இணைப்பு காண்க)

 

 

 

5

1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆனால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பெரிய அளவில் இசை நிகழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விட்டன.

 

விசேஷ துண்டு பிரசுரங்கள் கச்சேரிகளுக்கென வெளியிடப்பட்டன.(இணைப்பில் காண்க)

சங்கீதமும் ஹரிகதை உபந்யாசமும் தேசபக்தி எழுச்சிக்கும் விடுதலைக்கும் எப்படி வித்திட்டன என்பதை தனியே ஆராய வேண்டும். அவ்வளவு விஷயங்கள் அதில் உள்ளன.

 

 

ஹரிகதா சக்கரவர்த்தி ஸ்ரீ முத்தையா பாகவதர் பற்றிய விஷயங்களை அறிந்த  மகிழ்ச்சியுடன் பெரியவர் திரு ராமசுப்பிரமணியன் அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

***

கம்பன் கவி இன்பம்:மேதையைக் கணித்தல் முடியுமா, என்ன? (Post no.4349)

Written by S.NAGARAJAN

 

 

Date: 30 October 2017

 

Time uploaded in London- 5-48 am

 

 

Post No. 4349

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 6)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

கொள்வன கொண்டு, குறைப்பன குறைத்து, சேர்ப்பன சேர்த்த மேதையைக் கணித்தல் முடியுமா, என்ன?!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

பாடல் 16

பூமி மாது புனையும் மஹாகவித்

தாம நாப்பண் தயங்கிச் சதிரொளி

ஏமம் வீசி எரிநடு நாயகம்

காம இன்பமும் கைப்பித்த கம்பனே

 

காம இன்பத்தையும் கசப்பென்று தள்ளிவிடத்தக்க இனிமையை ஊட்டும் கவி புனையும் கம்பன் என்னும் மஹாகவி , பூமி தேவி தன் மார்பில் அணிகின்ற மஹாகவிகளாம் இரத்தின வடத்தில் நடுவே நின்று, அழகிய ஒளியையும் இன்பத்தையும் எங்கும் வீசி மிளிர்கின்ற இரத்தினமாக இன்றும் பிரகாசிக்கின்றான்.

 

பாடல் 17

பாங்கில் வேந்தைப் பனிக்குடை பாலிக்கக்

தாங்கும் சக்கர வர்த்தித் தகையினர்;

தூங்குஞ் செந்தமிழ்த் தொல்கவி ராஜர்மேல்

ஓங்கும் கம்பன் ஒருகவி நீழலே

 

பாடல் 18

மான சமடு வந்த சரயு போல்

பாந சைப்புல வர்பல குன்றிடை

வான சைல மெனவளர் கம்பனுள்

ஞான வாவியிக் காவியம் நன்குமால்

 

பாடல் 19

(வேறு)

“வாங்கரும் பாதம் நான்கும் வகுத்தவான் மீகிதந்த

ஓங்கிடும் புகழ்நூற் பற்றி யுதவின னேனும் கம்பன்

வீங்கறி வுடைய ஞாலம் வேண்டிய வாறு காதை

ஆங்கங்கே திருத்தி யாண்டும் அழகுற அமைத்த திந்நூல்

 

பாடல் 20

முதலென வழிநூ லென்ன முடித்துளார் முறையிற் சென்றே

சதிருறா முதநூல் தானே தலைநின்று தயங்குமென்பர்;

மதத்திறன் மதிக்க லாதிம் மதம்விரித் துரைத்தார் தாமும்

எதிரிலா ராமகாதை யெதிர நாவெடுக்க லாரே.

 

பாடல் 21

நூலினை வகுத்துக் கூறும் நுண்ணறி வெனைத்தென் றாலும்

மேலினை வகுக்கு மாபோல் வினைக்கடை வியர்த்தமாமே;

ஞாலத்திற் புலவர் புந்தி நடைத்திறன் கணித்தல் சீவன்

மூலத்தைக் கணித்தல் போலும் முரட்டுற்ற முயற்சியம்மா!

 

பாடல் 22

பூதபென திகத்துட் கணிப் புதுமைபூத் தொளிராச் சத்தி

ஓதமோ ரளவைத் தாகி யொதுங்கலு மதற்கும் வேறாய்

மேதகு மனத்தி னூற்றம் விளைந்துமேக் குறலும் கால

பேதத்திற் பின்ன லாய பெரும்பரிணாம மன்றே

 

பரிணாமம் -இயற்கைத் தோற்றத்தினை விளக்கும் அபிவர்த்தன வாதக் கொள்கை ((Evolution)

 

பாடல் 23

ஆதலால் அறிஞ ரானோர் அளக்குறார் உளத்தி னாற்றல்

பூதலத் துயரின் போக்கைப் புனைபொறி புகுத்த நோக்கால்

மாதவத் துயர்ந்த முன்னோர் மாண்புள ரென்றும் பின்னோர்

மேதினி விளக்கு ஞானம் மேவல் போல் மேவினாரே

 

பாடல் 24

பண்பமை நூல்க ளெல்லாம் பண்டையர் போலப் பீடு

கொண்டன வென்னக் காட்சி கோடற்க இற்றை ஞான்றும்

எண்டயங் குறுநூல் செய்தாங் கிசைநட்டா ருளரே யாதற்

கண்டனம் ராம லிங்க கவியருட் பாவின் காட்டால்

 

பாடல் 25

ஆரிய மொழிக் கோர் ஆதி கவியெனும் அழிவில் சீர்த்தி

சேரிய முனிவன் றானே செப்பின னேனுந் தொன்னூல்

கூறிய அறிவில் ஞானக் கோளசைக் குனித்த கம்பன்

சீரிய கலைக்குச் சித்ர லைக்கவி சிறத்தல் செய்ய

 

பாடல் 26

குறைப்பன குறைத்து வேண்டிக் கொள்வன கொண்டு மாற்றம்

செறிப்பன செறித்துச் செப்ப னிட்டசே டகப் பொற் றட்டிற்

குறிப்ப்ன கோலத் துள்ள துகிலிகை கொண்டு யாணர்ப்

பொறிப்பன வாய பொன்சித் திரத்தின் வித்தார மம்ம!

 

***

வாங்க அரும் பாதம் வகுத்தவன் என்று வான்மீகியைக் கம்பன் புகழ்கிறான். ஒரு சுலோகத்தில் நான்கு பாதங்கள் உண்டு. அதில் ஒரு பாதத்தைக் கூட மாற்ற முடியாது; இடைச் செருகல் செய்ய முடியாது. அப்படி ஒரு சொல் மாலை வால்மீகி ராமாயணம்.

அதில் கம்பன் கொள்வன கொண்டான்; குறைப்பன குறைத்தான்; சேர்ப்பன சேர்த்தான். பொன் தட்டில் நமக்குத் தமிழில் ராமாயணத்தைத் தந்தான்.

பண்டைய நூல்கள் தான் நூல்கள் என்று எண்ண வேண்டாம். இந்த நாளிலும் கூட குறு நூல் செய்து இசை நட்டார் உளர்; அருட்பிரகாச வள்ளலார் எனப்படும் ராமலிங்கக் கவியின் அருட்பாவும் உண்டு, அல்லவா!

கம்பனை யாராலாவது கணிக்க முடியுமா, என்ன? புலவரின் புத்தி, நடைத்திறன் ஆகியவற்றைக் கணிக்கும் முயற்சியானது உயிர் எப்படித் தோன்றுகிறது என்ற மூலத்தினை ஆராய்ச்சி செய்வதற்கு ஒப்பாகுமல்லவா? அதை எப்படி யாராலும் கண்டுபிடிக்க முடியாதோ அது போல கம்பனின் அளவற்ற மேதா விலாசத்தையும் நடைத்திறனையும் யாராலும் கணிக்க முடியாது! அம்மம்மா!

என்று இப்படியெல்லாம் வியக்கிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.

கம்பனில் தோய்ந்த ரஸிகர் அல்லவா, அவர்.

இன்னும் மேற்கொண்டு உள்ள பாடல்களை அடுத்துப் பார்ப்போம்.

                                  -தொடரும்

***

 

 

 

 

நான் மறை என்றால் என்ன பொருள்? (Post No.4343)

Written by London Swaminathan

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 7-32 AM

 

 

Post No. 4343

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

1.நான் மறை என்றால் நான்கு வேதங்கள்: ருக், யஜூர், சாமம், அதர்வணம்.

 

2.நான் மறை என்றால்  – சொல்ல வரும் விஷயங்களை நேரில் சொல்லாமல் மறை பொருளில் (SYMBOLIC LANGUAGE, CODED LANGUAGE, SECRET LANGUAGE) நவில்வது என்று பொருள்; மறை = மறைத்துச் சொல்லுதல்

 

3.நான் மறை என்றால் – உலகம் அறியாத- மறை பொருளை– இறைவனைப் பற்றிச் (OMNIPRESENT, OMNISCIENT, OMNIPOTENT FORCE) சொல்லும் நால் வேத மந்திரங்கள்.

 

4.நான் மறை என்றால்- இந்த மந்திரங்களை மூன்று ஜாதியினர் மட்டுமே — அந்தணர், அரசர், வணிகர்– ஆகிய மூன்று ஜாதியினர் மட்டுமே அறியலாம் பிறருக்கு அறிய முடியாதபடி– அதாவது மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்ற மிலேச்சர்களுக்குத் தெரிவிக்கக்கூடாததாக மறைத்து வைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பிராமணர்கள், வெள்ளைக்கார பறங்கித் தலையர்க்கு வேதம் கற்றுததர மறுத்தனர். பின்னர் பேரசைக்காரப் பார்ப்பனர்கள் சிலர் அவர்களுக்கு சம்ஸ்கிருதமும் வேதமும் கற்பித்தனர்.

5.நான் மறை என்றால் “நான்” என்னும் அஹம்காரம் “மறை”யும் பொருளைச் சொல்லும் உபநிஷதங்கள் அடங்கிய தொகுதி- அதாவது அதுவே வேதத்தின் அந்தம் (முடிபு, துணிவு)- வேதாந்தம்!

யான் எனது என்னும் செறுக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும் (குறள் 346)

யான்= அஹம்+காரம் (அஹம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் நான்)

 

எனது= மம+காரம் ( மம என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு “என்”னுடையது என்று பொருள்.

 

நான் மறைகளும் புரிந்துவிட்டதா?

 

–சுபம்-

சிவ பக்த ‘க்விஸ்’ QUIZ (கேள்வி-பதில்) (Post No.4340)

Written by London Swaminathan

 

Date: 27 October 2017

 

Time uploaded in London- 11-59 am

 

 

Post No. 4340

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நீங்கள் தீவிர சிவபக்தரா, இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு கேள்வி-பதில் (QUIZ) போட்டி. முதலில் கேள்விகளும் இறுதியில் பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடைக்கும் வெவ்வேறு மதிப்பெண்கள் இருப்பதைக் கவனிக்கவும். 80 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் நீங்கள் ‘

அதி தீவிர சிவ பக்தர், 60 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் (60 to 80) நீங்கள் தீவிர சிவ பக்தர், 40 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் (40-60) நீங்கள் சிவ பக்தர், 20 சதவிகிதத்துக்கு மேல் (20-40) மதிப்பெண்கள் பெற்றால் நீங்கள் பக்தர்!

1.அட்ட வீரட்டானத் தலங்கள் எவை? அங்கே

சிவபெருமான் செய்த லீலைகள் என்ன? —-16 மதிப்பெண்கள்

 

2.சப்தவிடங்கத் தலங்கள் எவை?

அங்குள்ள விடங்கரின் பெயர் என்ன?

அங்கு இறைவன் என்ன நடனம் ஆடினார்?- 21 மதிப்பெண்கள்

 

3.பஞ்ச பூதத் தலங்கள் எவை? –5 மதிப்பெண்கள்

 

4.தாண்டவ சிறப்புத் தலங்கள் எவை? அசபா.ஆனந்த, ஞான சுந்தர, ஊர்த்வ, பிரம தாண்டவ தலங்களைச் சொல்லவும்.– 5 மதிப்பெண்கள்

 

 

5.கீழ்கண்ட ஆலயங்களைச் சொல்லவும்: சபாபதி ஆலயம், தியாகேசர் ஆலயம், ஐங்கரனாலயம், குமரனாலயம், சண்டேசுரனாலயம், விடையினாலயம், வடுகனாலயம்.—7 மதிப்பெண்கள்

6.சப்த(7)ஸ்தான க்ஷேத்ரங்கள் எவை?- .—7 மதிப்பெண்கள்

 

7.பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் யார்? –25 மதிப்பெண்கள்

8.நால்வர் யார்? – 4 மதிப்பெண்கள்

 

9.கீழ்க்கண்ட 10 ஊர்களின் மறுபெயர் என்ன? 10 மதிப்பெண்கள்

திருவாலவாய், கொடுங்குன்றம், திருக்கானப்பேர், கோயில், புள்ளிருக்குவேலூர், குடமூக்குநாகைக்காரோணம், திருமறைக்காடு, கச்சி, திருமுதுகுன்றம்

 

 

ANSWERS

QUESTION 1- திருக்கண்டீயுர் – பிரமன் சிரம்/தலை கொய்தது

திருக்கோவலூர்- அந்தகாசுரனை சம்ஹரித்தது

திரு அதிகை – திரிபுரத்தை எரித்தது

திருப்பறியலூர்- தக்கன் சிரம் கொய்தது

திருவிற்குடி- சலந்தாசுரனை சம்ஹரித்தது

வழுவூர்- யானையைத் தோலுரித்தது

திருக்குறுக்கை- காமனை எரித்தது

திருக்கடவூர்- யமனை உதைத்து விரட்டியது

 

QUESTION 2– திருவாரூர் -வீதி விடங்கர்- அசபா நடனம்

திருநள்ளாறு- நகர விடங்கர்- உன்மத்த நடனம்

திருநாகைக்காரோணம்- சுந்தரவிடங்கர்- வீசி நடனம்

திருக்காறாயில்- ஆதி விடங்கர்– குக்குட நடனம்

திருக்கோளிலி- அவனிவிடங்கர்- பிருங்க நடனம்

திருவாய்மூர்- நீல விடங்கர் – கமல நடனம்

திருமறைக்காடு- புவனி விடங்கர் – ஹம்சபாத நடனம்

 

QUESTION 3-

1.திருவாரூர், காஞ்சீபுரம் – பிருதிவி (பூமி)

2.திருவானைக்கா – அப்பு (நீர்)

3.திருவண்ணாமலை- தேயு (தீ)

4.திருக்காலத்தி -வாயு (காற்று)

  1. சிதம்பரம் – ஆகாசம் (வெற்றிடம்)

 

QUESTION 4-

அசபா தாண்டவம்- திருவாரூர்,

ஆநந்த தாண்டவம் – தில்லைச் சித்திர கூடம், பேரூர்,

ஞான சுந்தர தாண்டவம் – மதுரை,

ஊர்த்துவ தாண்டவம் – திருப்புக் கொளியூர்

பிரம தாண்டவம்- திருமுருகன்பூண்டி – 5 மதிப்பெண்கள்

 

QUESTION 5-

சபாபதி ஆலயம்- சிதம்பரம்;

தியாகேசர் ஆலயம்- திருவாரூர்;

ஐங்கரனாலயம்-திருவலஞ்சுழி;

குமரனாலயம்-திருவேரகம்;

சண்டேசுரனாலயம்-சேய்ஞ்ஞலூர்;

விடையினாலயம்-திருவாவடுதுறை;

வடுகனாலயம்-சீர்காழி.

 

QUESTION 6-

திருவையாறு, திருப்பழனம், திருச் சோற்றுத்துறை , திருவேதிகுடி,

திருக்கண்டியூர்,திருப்பூந்துருத்தி, திருநெய் த்தானம்.

 

QUESTION 7-

1,2,3 திருமுறை- திருஞான சம்பந்தர்

4,5,6 – திருநாவுக்கரசர்/ அப்பர்

7- சுந்தரர்

8- மாணிக்கவாசகர்

9-திருமாளிகைத்தேவர், சேந்தனார், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தநம்பி,, சேதிராயர்

10-திருமூலர்

11- காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாடர், கபிலர், பரணர், இளம் பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி.

12- சேக்கிழார்

 

QUESTION 8-

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர்

 

QUESTION -9

திருவாலவாய்- மதுரை

கொடுங்குன்றம்- பிரான்மலை

திருக்கானப்பேர்- காளையார்கோயில்

கோயில்- சிதம்பரம், தில்லை

புள்ளிருக்குவேலூர்- வைதீஸ்வரன் கோயில்

குடமூக்கு- கும்பகோணம்

நாகைக்காரோணம்– நாகப்பட்டிணம்

திருமறைக்காடு–வேதாரண்யம்

கச்சி– காஞ்சீபுரம்

திருமுதுகுன்றம்- விருத்தாசலம்

–SUBHAM–

 

கொள்ள மாளா இன்பம்: நம்மாழ்வார் அனுபவம் (Post No.4331)

Picture posted by Lalgudi Veda

Written by London Swaminathan

 

Date: 24 October 2017

 

Time uploaded in London- 10-23 am

 

 

Post No. 4331

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Facebook பேஸ்புக்கில் பல நண்பர்கள் உணவுப் பண்டங்களின் படங்களைப் போடுகிறார்கள்; நாக்கில் உமிழ்நீர் சுரக்கிறது; டெலிவிஷனில் சமையல் கலை பற்றிய நிகழ்ச்சிகளைப் பார்த்தவுடன் பசி எடுக்கிறது. மணப்பாறை முறுக்கு. கல்கத்தா ரசகுல்லா, திருநெல்வேலி லாலாகடை அல்வா, டில்லி பூசணிக்காய் அல்வா, மானாமதுரை ரயில்வே உணவக சாம்பார் சாதம் (அந்தக் காலத்தில்), அழகர்கோவில் அடை — இவற்றைப் பற்றி எல்லாம் படித்தாலேயே சாப்பிட வேண்டும் போல  இருக்கிறது. இவை எல்லாம் உண்மையிலேயே உங்கள் சாப்பாட்டு மேஜை மீது வந்து விட்டால்  எப்படி இருக்கும். அதுதான் கொள்ளமாளா இன்பம்.

 

இறைவன் கொடுக்கும் இன்பத்தை அளக்க முடியாது என்பது பக்தர்கள் கண்ட உண்மை. மேலும் சில பொருள்கள் தரும் இன்பம் திகட்டிவிடும். நாமே போதும் போதும் என்று சொல்லி விடுவோம். ஆனால் கடவுள் அளிக்கும் இன்பம் இந்த இரண்டு விதிகளுக்கும் அப்பாற்பட்டது. அவர் கொடுத்துக் கொண்டே இருப்பார். நாம் அதைப் பெற்றுக்கொண்டே இருப்போம். போதும் என்று சொல்லவும் மாட்டோம்.ஆனால் நம்மிடம் அதை வாங்கிக் கொள்ள கூடையோ, பாத்திரமோ இராது.

ஒரு ஊரில் நிறைய தக்காளி விளைந்தது. காலையில் ஒரு விலை; மாலையில் அதைவிடக் குறைந்த விலை; சூரியன் அஸ்தமிக்கும் நேரம்; வியாபாரியிடம் இன்னும் அதிகம் தக்காளி இருந்தது. எல்லோரும் வாருங்கள்; இனி இலவசம்; எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றான்; ஆனால் நம்மிடம் கூடையோ, பைகளோ இல்லை; என்ன கொடுமை. கொடுக்க ஆள் இருக்கிறது; கொள்ள ஆள் இல்லை ஏனெனில் பை இல்லை.

 

இன்னொரு ஊரில் நெல் அறுவடை நடந்தது; நிலச் சுவான்தாரிடம் இருந்த குதிர்கள், பரண்கள் எல்லா வற்றிலும் நிரப்பியது போக மீதி இருந்தது; அடுத்த சில நாட்களில் புயல் மழை வரும் என்று வானொலிகள் அலறின; நிலச்சுவான்தாரும் மனம் உவந்து மீதி நெல்லை எவர் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் அங்கே இருந்த விவசாயத் தொழிலாளிகளிடம், சிறு கூடை மட்டுமே இருந்தது. என்ன செய்வார்கள் முடிந்தமட்டும் எடுத்துக்கொண்டனர்.

 

நம்மாழ்வாரின் நிலையும் அதுவே; இறைவா எனக்கு நித்திய ஆனந்தம் தா; பேரானந்தம் தா என்றார்; அதற்கென்ன பக்தா எடுத்துக்கொள் என்று திருமாலும் அருள் மழை பொழிந்தார்; ஆனால் அதை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அவரிடம் பாத்திரமோ, கூடையோ இல்லை. இதை மற்ற அடியார்களுக்கு எப்படிச் சொல்வது. பாடினார் இப்படி:

 

கொள்ள மாளா இன்பவெள்ளம் கோது இல தந்திடும்

வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ! என்று என்று

நள் இராவும் நன்பகலும் நான் இருந்து, ஓலம் இட்டால்

கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே

 

-திருவாய் மொழி (திவ்வியப் பிரபந்தம்)

 

பொருள்:-

 

பூவுலகை அளந்த வாமனனே! குற்றம் இல்லாத, அனுபவிக்க அனுபவிக்கக் குறைவுபடாத ஆனந்தக் கடலைக் கொடுக்கின்ற வள்ளலே! என்றென்று நள்ளிரவிலும் நன்பகலிலும் நான் அழைத்தால், கள்ள மாயனே! என் கண்கள் காணும்படீ நடந்து வந்து அருள் புரியவேண்டும்.

 

இன்பம் தருகிறாய், உண்மைதான்; இவை எல்லாம் மனதளவில் (Mental pleasure) திருப்தி தருகிறது; உன்னை நேரில் காணவும்(Physical pleasure) அருள்புரி.

பக்தர்கள் எல்லோரும் இறைவனைக் காணும் முன்னரே இவ்வளவு இன்பமழையில் நனைந்தனர். பின்னர் அப்படித் தரும் கொடையாளியை, வள்ளலைக் காணவேண்டும் என்று ஆர்வம்; ஆகையால் பாடிப் பரவசம் அடைகின்றனர்.

 

‘நாமார்க்கும் குடி அல்லோம்’ என்று பாடும் அப்பரும் ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்கிறார்.

 

‘பால் நினைந்தூட்டும் சாலப் பைரிந்து அருளும்’ சிவன் ‘உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்ததாக’ மாணிக்க வாசகரும் பாடுகிறார்.

இதை எல்லாம் படிக்கும்போதே நமக்கும் இன்பம் வருகிறது; வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கிறது; துன்பங்கள் எல்லாம் பறக்கின்றன;மறக்கின்றன. பாஸிட்டிவ் எண்ணங்கள் உதிக்கின்றன.

 

–SUBHAM–