எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்? (Post No.3933)

Written by S NAGARAJAN

 

Date: 23 May 2017

 

Time uploaded in London:-  5-43 am

 

 

Post No.3933

 

 

Pictures are taken from different sources such as Wikipedia, Face book, google for non commercial use; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்?

ச.நாகராஜன்

 

 

108இன் மகிமை

பாரத நாட்டில் 108 என்ற எண்ணுக்கு தனிப் பெருமை இருக்கிறது. இறைத் துதிகள் எல்லாமே பொதுவாக அஷ்டோத்திரங்களாக அதாவது 108 துதிகளாக அமைந்திருக்கின்றன! உபநிடதங்களுள் முக்கியமானவையாக 108 உபநிடதங்களே குறிப்பிடப்படுகின்றன!

வைணவ திவ்ய தேசங்கள் – திருப்பதிகள் – 108 தான்! சக்தி பீடங்களாக இமயம் முதல் குமரி வரை 108 தலங்கள் தான்!

நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாட்டிய அமைப்புகள் 108.

 

 

புத்தமதம் போற்றும் 108

புத்த மதத்திலும் 108 என்ற எண்ணுக்கு அதிக மதிப்பும்  மகிமையும் தரப்படுகின்றன. ஜப்பானில் உள்ள ஜென் ஆலயங்களில் புத்தாண்டின் வரவை 108 முறை மணியை ஒலித்து வரவேற்கின்றனர்.

புத்த ஆலயங்களை அடைய 108 படிக்கட்டுகள் உள்ளன. இவை மூன்று முப்பத்தாறு படிக்கட்டுகள் கொண்டவையாக அமைக்கப்படுகின்றன! புத்தரின் இடது பக்கத்தில் 108 புனிதக் குறிகள் அல்லது லட்சணங்கள் இருப்பதாக புத்த மத நூல்கள் கூறுகின்றன.

 

 

புத்தரின் உபதேசங்கள் அடங்கிய நூல்களின் தொகுப்பு திபெத்தில் புத்த பிரிவினரால் 108 பாகங்களாகத் தொகுத்து (Kanjur  எனப்படுகிறது) அமைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் 108 என்ற எண் இறைவனைக் குறிக்கிறது. சீக்கிய மதத்தில் 108 மணிகள் அடங்கிய மாலையே உபயோகிக்கப்படுகிறது.

 

பௌத்தர்களும் இந்துக்களும் 108 மணிகள் அல்லது ருத்ராக்ஷங்கள் கோர்க்கப்பட்ட மாலைகளையே ஜபத்திற்குப் பயன்படுத்துகின்றனர். டாவோ புத்தமதப் பிரிவைச் சேர்ந்தவர்கள்

 

இந்த மாலையை சு-சு  (Su-Chu) என்று குறிப்பிடுவதோடு அதை மூன்று முப்பத்தாறு மணிகளாகக் கோர்த்து உபயோகிக்கின்றனர்.

ஜைன மதத்தில் ஐந்து விதமான புனித குண நலன்கள் முறையே 12, 8, 36,25,27 என்று குறிக்கப்பட்டு மொத்தம் 108 ஆகிறது.

 

இப்படி 108இன் உபயோகத்தை உரைக்கப் போனால் பெரும் நூலாக ஆகி விடும்! அப்படி இந்த எண்ணுக்கு என்ன மகிமை? ஏன் நூறாகவோ அல்லது வேறு ஒரு எண்ணாகவோ இவை அனைத்தும் இருக்கக்கூடாது?

 

நம் முன்னோர்கள் காரணத்தோடு தான் இந்த 108 என்ற அபூர்வ எண்ணை புனிதமான அனைத்துடனும் சம்பந்தப்படுத்தி இருக்கிறார்கள்!

 

வானவியல் காரணம்

சூரியனுடைய குறுக்களவு பூமியின் குறுக்களவைப் போல 108 மடங்கு உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளூடே சஞ்சரிக்கின்றன.பன்னிரெண்டை ஒன்பதால் பெருக்கி வருவது 108. ஆகவே இவற்றால் பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு 108 என்ற எண்ணால் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே பூரணத்துவத்தைக் குறிக்கும் எண்ணிக்கையா இந்து மதம் 108ஐக் குறிப்பிடுகிறது.

ஒரு நாளைக்கு நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை 21600. பகலில் 10800. இரவில் 10800. இதுவும் 108இன் மடங்கு தான்!

ஒரு நாள் என்பது 60 கதிகளைக் கொண்டது. ஒரு கதி என்பது 60 பலங்களைக் கொண்டது. ஒரு பலம் என்பது 60 விபலங்களைக் கொண்டது. ஆகவே ஒரு நாள் 21600 பகுதிகளையும் – பகல் இரவு 10800 பகுதிகளையும் -உடையதாக இருக்கிறது. ஆகவே இந்த 108 என்ற எண்ணிக்கை காலம் மற்றும் வெளியை ( Time and Space ) இயற்கையோடு இயைந்த லயத்தின் அடிப்படையில் இயங்க வழி வகுக்கிறது!

 

 

ஜீவனும் பரமனும்

ராமகிருஷ்ண ம்டத்தைச் சேர்ந்த சுவாமி ப்ரேமானந்தர் இன்னொரு அற்புதத் தொடர்பை  எடுத்துக் காட்டுகிறார்.

108 என்பது மந்திரங்களை உச்சரிக்க சரியான தெய்வீக எண்ணிக்கை என்பதை  வராஹ உபநிடதத்தை மேற்கோள் காட்டி அவர் விளக்குகிறார்.ஒவ்வொருவர் உடலும் அவரவர் விரலின் பருமனால் (கிடைமட்டமாக வைத்துப் பார்க்கும் போது) சரியாக 96 ம்டங்கு இருக்கிறது!

 

பரம்பொருள் என்னும் பரமாத்மன், ஒருவனின் நாபியிலிருந்து 12 விரல் அளவு மேலே இருக்கிறான். ஆக இந்த 96 மற்றும் 12 எண்களின் கூட்டுத்தொகையான 108 ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவதைக் குறிக்கிறது. அதாவது 96 விரல் அளவு உள்ள மனிதன் 12 பாகங்கள் உள்ள பரமாத்மாவுடன் சேர்வதை 108 முறைப்படுத்துகிறது.

 

ஆகவே ஆன்மீகப் பெரியோர்கள் இறைவனின் நாமத்தை 108 முறை சொல்லும் போது அது படிப்படியாக உயர்நிலை பெற்று பரமாத்மாவுடன் ஒன்று படுகிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்தனர்!

 

இதை இன்னொரு முறையாலும் பார்க்க முடியும். சூரிய மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. அதாவது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரபஞ்சம் என்னும் பரமாத்மாவுடன் ஜீவாத்மா ஒன்று படுவதை 108 குறிப்பிடுகிறது.

 

பாபாவின் விளக்கம்

ஸ்ரீ சத்ய சாயி பாபா 108 என்ற எண்ணிக்கை காரணம் இல்லாமல் அமைக்கப்படவில்லி என்று கூறி விட்டு அதற்கான காரணத்தை விளக்குகிறார்.

 

மனிதன் ஒரு மணிக்கு 900 முறை சுவாசிக்கிறான். அதாவது பகலில் 10800 முறை சுவாசிக்கிறான். ஒவ்வொரு சுவாசத்தின் போதும் ‘ஸோஹம்’ (நான் அவரே) என்று சொல்ல வேண்டும். ஆகவே 216 என்ற எண்ணும் அதில் பாதியான 108 என்ற எண்ணும் மிக முக்கியத்துவம் உடையதாக ஆகிறது. மேலும் அது பனிரெண்டின் ஒன்பது மடங்கு. பனிரெண்டு சூரியனைக் குறிக்கிறது. ஒன்பது பிரம்மத்தைக் குறிக்கிறது.

அதோடு மட்டுமல்ல. ஒன்பதை எதனுடன் பெருக்கினாலும் வரும் எண்ணின் கூட்டுத் தொகை) ஒன்பதாக்வே இருக்கிறது!

9 x 8 = 72;         7+2=9

9 x 7 = 63;          6+3= 9

இதே போல அனைத்தும் ஒன்பதாக ஆகிறது. கடவுளை எதனுடன் பெருக்கினாலும் (அதாவது இணைத்தாலும் ) அது கடவுளாகவே ஆகிறது!

ஆனால் மாயையின் எண் 8. இதோடு எதைப் பெருக்கினாலும் அது குறைகிறது.

2 x 8 = 16; 1=6=7 (எட்டிலிருந்து ஒன்று குறைந்து ஏழாகிறது)

3 x 8 = 24; 2+4 = 6;

4 x 8 = 32;  3+2 = 5

 

இம்மாதிரி மதிப்பில் குறைந்து கொண்டே போவது தான்  மாயையின் சின்னம்!

தேவர்கள் அமிரதம் எடுக்க பாற்கடலைக் கடைந்த காலம் ஏறக்குறைய 10800 நாட்கள் தாம்! (10478 நாட்கள் 12 மணி 18 நிமிடம்)

 

ஸ்ரீ யந்திரத்தில் உள்ள மூன்று கோடுகள் வெட்டுவதால் ஏற்படும் புள்ளிகளின் எண்ணிக்கை 54. இவை ஒவ்வொன்றும் ஆண், பெண் – அல்லது சிவம் மற்றும் சக்தியைக் குறிப்பிடும் போது 108 (2 x 54  = 108) ஆகிறது. எல்லையற்ற சக்தியை, அருளைத் தருகிறது. உடலில் உள்ள சக்கரங்கள் 108. உடலிலே உள்ள வர்மப் புள்ளிகள் 108. இவற்றால் இறைவன் உணரப்படுகிறான்.                                                     27 நட்சத்திரங்கள் நான்கு திசைகளினால் பெருக்கப்பட்டால் வருவது 108 என்றும், வானத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்பதுத்தி வருவது 108 என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். இது பூரணத்துவத்தைக் குறிப்பிடுகிறது

 

.கணிதம் காட்டும் மெய்ப்பொருள்

கணித இயலில் 108 ஒரு அபூர்வ எண்!

ஒன்றின் ஒரு ம்டங்கும், இரண்டின் இரு மடங்கும், மூன்றின் மும்மடங்கும் சேர்ந்தால் வருவது 108 ( 1x1x2xx2x3x3x3 = 1 x4 x27 = 108)

இதில் ஒன்று ஒரு பரிமாண உன்மையையும், இரண்டின் மடங்கு இரு பரிமாண உண்மையையும் மூன்றின் மடங்கு முப்பரிமாண உண்மைகளையும் காட்டுகிறது. அனைத்தும் இணையும் போது வருவதே எல்லாமாகிய மெய்ப்பொருள் ஆகும்!

இப்படி 108இன் மகிமையை உபநிடங்களும் வான்வியல் உண்மைகளும், கணித இயலும் வியந்து போற்றுகின்றன!

 

 

உணர்வதே உய்வதற்கான வழி

‘கரையில் இருந்து ஆராய்ச்சி செய்தால் கடலின் ஆழம் தெரியுமா என்ன’ என்று கேட்டு ஸ்ரீ சத்ய் சாயி பாபா, ‘ஆழ்ந்து மூழ்கத் தயங்கினால் உங்களால் முத்துக்களைப் பெற முடியாது’ என்கிறார்.

 

 

ஆகவே 108ன் பெருமையை உணர்ந்தால் மட்டும் போதாது. 108 முறையிலான ஜபமாலை உபயோகம், திவ தேச தரிசனம், சக்தி பீட யாத்திரை உள்ளிட்ட அனைத்தையும் அவரவருக்கு உகந்த முறையில் கடைப்பிடித்து மெய்ப்பொருளை அவரவரே உணர்வது தான் ஏற்றம் பெற்று உய்வதற்கான வழி!

 

Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and Vedas

Hindu’s Magic Numbers 18, 108, 1008

26 Nov 2011 – In Hinduism numbers have a lot of significance. … But 108and 1008 are used for all the Gods in Ashtotharam (108) and Sahasranamam (1008) …

 

 

Mysterious Number 17 in the Vedas! (Post No.3916) | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/17/mysterious-number-17-in-the-veda…

 

 

4 days ago – Number symbolism is in the Vedas from the very beginning. This shows that the Vedic seers are very great intellectuals. They were the …

 

Mystery Number 7 | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/mystery-number-7/

“It may be incidentally pointed out that the number 7 which gives thenumber of time units in Misrajati appears to have fundamental importancein nature. In most …

 

MOST HATED NUMBERS 666 and 13 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/…/most-hated-numbers-666-and-1…

 

29 Jul 2012 – No 7 and No 3 are considered as holy numbers by several cultures, particularly, the Hindus. Vedic literature and Indus Valley Civilization have …

 

 

Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2 | Tamil and Vedas

Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2

3 Sep 2014 – Numbers in the Rig VedaRig Veda Mystery-2. Vedas 9. Research Paper written by London Swaminathan Post No. 1265; Dated 3rd …

 

Oldest Riddle in the World! Rig Veda Mystery –3 | Tamil and Vedas

Oldest Riddle in the World! Rig Veda Mystery –3

6 Oct 2014 – Rig Veda is the oldest religious book in the world. Even if we … 30)Numbers in the Rig VedaRig Veda Mystery – 2 –posted on 3rd Sep.2014

 

சந்திர எண் 1080-இன் மர்மம்! (Post No.3930) | Tamil and …

https://tamilandvedas.com/…/சந்திர-எண்-1080-இன்-ம…

சந்திர எண் 1080-இன் மர்மம்! (Post No.3930). Written by S NAGARAJAN. Date: 22 May 2017. Time uploaded in London:- 7-18 am. Post No.3930. Pictures are taken from different sources; thanks. contact: swami_48@yahoo.com.

 

 

–subham–

நட்சத்திர விளக்கத்தில் ராகுவும் கேதுவும் – விதி விளக்கம் – 5 (Post No.3918)

Written by S NAGARAJAN

 

Date: 18 May 2017

 

Time uploaded in London:-  5-53 am

 

 

Post No.3918

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஜோதிடமே துணையாகும்

மிட்டா முனிசாமி செட்டி (1897)யின் விதி விளக்கம் நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டு தரப்படுகிறது. நூலின் பகுதிகள் படிப்பதற்கு ஏதுவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

முதல் 4 அத்தியாயங்களைப் படித்து விட்டு இதைத் தொடரவும் 

1934ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டுள்ள் இந்த நூலை எனக்கு அனுப்பி உதவிய எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

நட்சத்திர விளக்கத்தில் ராகுவும் கேதுவும் – விதி விளக்கம் – 5

ச.நாகராஜன்

 

  1. ராகுவும் கேதுவும்

 

      சந்திரன் மற்ற கிரகங்களை விட பூமிக்கு வெகு அருகில் உள்ளது. ஆகவே முன்னோர்கள் விதி விளக்கத்திற்குச் சந்திரனை முக்கிய காரணமாக அங்கீகரித்திருக்கின்றனர். சந்திரன் பூமியைச் சுற்றி வரும் பாதையில் கும்ப மாதத்திலிருந்து கடக மாதம் வரை – அதாவது மாசியிலிருந்து ஆடி மாதம் வரை அருக்கன் வீதி அல்லது சூரியன் பாதைக்கு வடக்கிலோ அல்லது மேற்கிலோ சந்திரனின் வீதி இருக்கும்.

சிங்க மாதம் முதல் மகர மாத ஆரம்பம் வரை – அதாவது ஆவணி முதல் தை மாதம் வரை – சூரியன் பாதைக்குத் தெற்காக அல்லது கீழ்புறமாக சந்திர வீதி அமையும்.

ஆவணி முதல் தை வரை சந்திரனுக்கு வலிமை கிடையாது.

ஆகவே தான் ஆவணிக்குப் பிறகு ஹிந்துக்கள் சாதாரணமாக விவாகம் செய்வதில்லை.

 

மேலே கூறிய சூரியன் பாதையும் சந்திரன் பாதையும் சந்திக்கும் நிலைகள் இரண்டு. அவையாவன வடக்கு சந்திப்பு ஒன்று; மற்றொன்று தெற்கு சந்திப்பு.

வடக்கு சந்திப்புக்கு ராகு நிலை என்றும் தெற்கு சந்திப்புக் கேது நிலை என்றும் பெயர்கள் நம் முன்னோரால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ராகுவும், கேதுவும் கிரகங்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே தான் கிரகங்கள் ஒன்பதென்று ஏற்பட்டிருக்கின்றன.

பூமியானது மேற்கிலிருந்து கிழக்குப் பக்கமாக வானியல் சாஸ்திரப் படி சுழன்று வருவதினாலும் சூரியனைச் சுற்றி வருவதினாலும் மேற்காட்டிய சந்திப்புகளின் இடம் ராசிக்கு ராசி மாறிக் கொண்டே இருக்கிறது.

இப்படி மாறுவதால் ஒரு குறிப்பிட்ட ராசியிலிருந்து மறுபடி அந்த ராசிக்கு ராகு வருவதற்கு சுமார் 18 வருடம் 7 மாதம் ஆகிறது.

  • சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் போதும்,
  • ஒவ்வொரு நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போதும்
  • அந்தந்த நட்சத்திரத்தின் இயற்கை அமைப்பின் இயல்பினாலும்
  • தற்கால நிலைமையினாலும்

மானிடரின் விதி விளக்கமாகிறது.

எந்த கிரகத்தின் அதிகாரம் நடக்கிறதென்று அறிந்து அந்தந்த நட்சத்திரங்களுக்கு  அந்த கிரகத்தின் திசை நடப்பு என்று அனுஷ்டானத்தில் வைத்துக் கொண்டு தற்கால விதியை விளக்கலாமென்று கொண்டு கீழ் வருமாறு திசையை நிர்ணயித்திருக்கின்றனர்:

 

அசுவதி  மகம்  மூலம்                      கேது 7 வருடம்

பரணி  பூரம் பூராடம்                    சுக்கிரன் 20 வருடம்

கார்த்திகை  உத்திரம் உத்திராடம்         சூரியன்  6 வருடம்

ரோகிணி  ஹஸ்தம் திருவோணம்        சந்திரன் 10 வருடம்

மிருகசீரிஷம் சித்திரை  அவிட்டம்       செவ்வாய் 7 வருடம்

திருவாதிரை ஸ்வாதி சதயம்              ராகு    18 வருடம்

புனர்பூசம் விசாகம் பூரட்டாதி              குரு    16 வருடம்

பூசம் அனுஷம் உத்திரட்டாதி               சனி   19 வருடம்

ஆயில்யம் கேட்டை ரேவதி               புதன்   17 வருடம்

                                              ————-

        மொத்த வருடங்கள்                     120

                                              ————-

மேலே காட்டிய திசை பலன் விதி விளக்கத்திற்கு மூலாதாரமாக அமைகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் சகல அனுஷ்டானத்திற்கும், அனுபவத்திற்கும் சரிவர வருவது சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தினால் ஏற்படும் திசை தான்.

ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்:

அதாவது, அசுவதியில் பிறந்தவனுக்கு கேது திசை. அந்த திசைக்கு 7 வருட அதிகாரம் உண்டென்றாலும், பிறந்த காலத்தில் அசுவதியில் அன்றைய ஆதி அந்த வியாபகம் முழுவதும் கேது திசை என்பதால், ஜனன கால மணி நேரத்தில் ஜெனன காலத்தில் சென்ற நாழிகை போக இனி செல்ல வேண்டிய இருப்பு நாழிகை வீதமாகக் கேது திசை பாக்கி இருக்கும்.

இவற்றுடன் திதி பற்றிய விதிகளையும் நன்கு அறிந்து கொண்ட பின்னரே பலன்களைச் சொல்ல வேண்டும்.

 

****

விஞ்ஞானிகள், கணித மேதைகள் ஜோக்குகள்! (Post No.3915)

Written by S NAGARAJAN

 

Date: 17 May 2017

 

Time uploaded in London:-  6-27 am

 

 

Post No.3915

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

நகைச்சுவை விருந்து

 

விஞ்ஞானிகள், கணித மேதைகள் பற்றிய ஜோக்குகள்!

 

ச.நாகராஜன்

 

 

ஆஹா! அக்கவுண்டண்ட்!

 

,டாக்டர்கள், விஞஞானிகள், அபாரமான கணித மேதைகள் ஆகியோரைப் பற்றி வெளி வந்துள்ள ஜோக்குகள் ஏராளம்.

அவற்றில் சில:

 

ஒரு டாக்டர், ஒரு எஞ்னியர் மற்றும் ஒரு அக்கவுண்டண்ட் ஆகியோர் உலகின் முஜிதல் தொழில் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிக் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

டாக்டர் ஆவேசத்துடன் கூறினார்: “ ஏவாள் ஆதாமின் விலா எலும்பிலிருந்தே படைக்கபட்டாள், தெரியுமா? அது ஒரு சர்ஜிகல் ஆபரேஷன் தானே! டாக்டர் தொழில் தான் முதல் தொழில்!

எஞ்சினியர் கோபத்துடன் அதை மறுத்துக் கூறினார்: “ஆதாமையும் ஏவாளையும் கடவுள் படைப்பதற்கு முன்னர் அவர் ஒழுங்கற்ற குழப்பமான நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு ஒழுங்கை நிலை நாட்டினார். குழப்பத்தை முடிவு கட்டி ஒழுங்கை நிலை நாட்டுவது ஒரு எஞ்சினியர் செய்யும் வேலை. ஆகவே எஞ்சினியரிங் தான் முதல் தொழில்”

மிக மெதுவாக அக்கவுண்டண்ட் கேட்டார்” “அது சரி, குழப்பத்தை உருவாக்கியது யார்? அது தானே எங்கள் வேலை!”

 

நாஸா விஞ்ஞானியின் குழந்தை

 

நாஸா விஞ்ஞானி ஒருவர் தன் குழந்தைக்கு விண்வெளி பற்றி அன்றாடம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் குழந்தையிடம், “ நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்?” என்று கேட்டார்.

நான் விண்வெளியில் பறக்கும் வீரனாக ஆக விரும்புகிறேன் என்றது குழந்தை.

விஞ்ஞானிக்கு ஒரே சந்தோஷம். “சரி, விண்வெளியில் எங்கு போகப் போகிறாய்?” என்று கேட்டார் அவர்.

“சந்திரனுக்கு மட்டும் போக மாட்டேன். ஏனெனில் அங்கு ஏற்கனவே சிலர் சென்று சாதனை படைத்து விட்டனர்” என்று தீர்க்கமாகக் கூறிய குழந்தை, “நான் சூரியனுக்குப் போகப் போகிறேன்” என்றது.

“ஐயோ! சூரியனுக்கு நீ போக முடியாதே! அது பயங்கர வெப்பத்துடன் இருக்குமே” என்றார் விஞ்ஞானி.

“அது பற்றி கவலைப்பட வேண்டாம். நான் ராத்திரியில் தான் போவதாக உத்தேசம்” என்று பதில் சொன்னது குழந்தை!

 

இயற்பியல் விஞ்ஞானியும் கணித மேதையும்

 

ஒரு இயற்பியல் விஞ்ஞானியும் ஒரு கணித மேதையும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

கணித மேதை எதையும் துல்லியமாக கணிதரீதியாக மட்டுமே அணுகுவார்.

விஞ்ஞானி மேதையிடம் சொன்னார்: “நண்பரே! காரின் சிக்னல் வேலை செய்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அது சரியாக வேலை செய்கிறதா பாருங்கள்” என்றார்.

விஞ்ஞானி சிக்னல் ஸ்விட்சைப் போட்டார்.

மேதை கூறினார்: “ ஆஹா! இப்போது அணைந்து விட்டது. இப்போது எரிகிறது. இப்போது அணைந்து விட்டது. மறுபடியும் எரிகிறது…”

விஞ்ஞானி தலையில் கையை வைத்துக் கொண்டார்!

***

நட்சத்திர விளக்கம் – விதி விளக்கம் – 4 (Post No.3903)

Written by S NAGARAJAN

 

Date: 13 May 2017

 

Time uploaded in London:-  5-54 am

 

 

Post No.3903

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

ஜோதிடமே துணையாகும்

மிட்டா முனிசாமி செட்டி (1897)யின் விதி விளக்கம் நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டு தரப்படுகிறது. நூலின் பகுதிகள் படிப்பதற்கு ஏதுவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

முதல் 3 அத்தியாயங்களைப் படித்து விட்டு இதைத் தொடரவும்

1934ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டுள்ள் இந்த நூலை எனக்கு அனுப்பி உதவிய எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

 

நட்சத்திர விளக்கம் – விதி விளக்கம் – 4

ச.நாகராஜன்

 

  1. இனி நட்சத்திரங்களைப் பற்றிச் சிறிது விரிவாகப் பார்ப்போம்.

 

சூரிய பகவான் பன்னிரண்டு ராசிகளில் சஞ்சரிப்பதனால் பன்னிரண்டு மாதங்கள் உருவாகின்றன.

இப்படி, சித்திரை மாதம் முதல் பங்குனி வரை சஞ்சரித்து உத்தராயணம், தக்ஷிணாயனம், ருதுக்கள், கோடைக்காலம், மழைக்காலம் முதலானவற்றை அவர் உருவாக்குகிறார்.

ஆனால் சந்திரனோ சுமார் ஒரு மாதத்திற்குள் பன்னிரண்டு ராசிகளையும் சுற்றி வருகிறார்.

 

இப் பன்னிரண்டு ராசிகளிலும் 27 நட்சத்திரங்கள் உள்ளன.

ஆகையால் ஒரு ராசியில் இரண்டே கால் நள் சஞ்சரிக்கிறார் என்று ஆகிறது.

 

இப்படி இரண்டேகால் நாளுக்கு ஒரு முறை இடம் மாறுவ்தினாலேயே பஞ்சாங்கத்தில் இதர கிரகங்களின் நிலை ஒவ்வொரு  மாதமும் அது அது நிற்கும் வீட்டில் குறிப்பிடப்பட்டிருக்க சந்திரனின் நிலை மட்டும் குறிப்பிடப்படுவதில்லை.சந்திரனைப் போல் அடிக்கடி மாறாதிருப்பதனால் இதர கிரகங்களின் நிலைகள் குறிப்பிடப்படுகின்றன.

 

ஒரு தினத்தில் சந்திரன் எங்கு சஞ்சரிக்கிறான் என்று அவனுடைய நிலையை அறிய வேண்டுமெனில், அன்றைய தினத்து நட்சத்திரத்தைக் கொண்டு நிர்ணயிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக பஞ்சாங்கத்தில் வைகாசி மாதம் 27ஆம் தேதி விசாகம் 23-20 என்று குறிப்பிட்ப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதன் பொருள் என்ன?

 

 

அன்றைய தினம் உதயம் முதல் 23-20 நாழிகை வரையில் சந்திரன் துலா ராசியில், விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார் என்றும் 24ஆம் நாழிகையில் அனுஷ நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார் என்றும் அர்த்தம். (இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம்; ஒரு நாளைக்கு 60 நாழிகைகள் உண்டு என்பது பால பாடம்)

 

இப்படி சந்திரனின் கதியைத் தெரிந்து விதி விளக்கத்தின் உண்மையை அறிதல் வேண்டும்.

 

27 நட்சத்திரங்களின் பட்டியல் :

அசுவனி, பரணி, கார்த்திகை,

ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை

புனர்பூசம், பூசம், ஆயில்யம்

மகம், பூரம், உத்திரம்

ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி

விசாகம், அனுஷம், கேட்டை

மூலம், பூராடம், உத்திராடம்

திருவோணம், அவிட்டம், சதயம்

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

 

 

பன்னிரண்டு ராசிகளிலும் சந்திரன் வியாபிக்கும் நிலை கீழே உள்ள பட்டியலில் காணலாம். இது மனப்பாடமாய் இருத்தல் நலம்.

 

மேஷ ராசி :- அசுவனி (1), பரணி(1), கார்த்திகை ¼),

ரிஷப ராசி – கார்த்திகை ¾ ரோகிணி (1), மிருகசீரிஷம் ½,

மிதுன ராசி – மிருகசீரிஷம் ½ ,திருவாதிரை (1), புனர்பூசம் ¾.

க்டக ராசி – புனர்பூசம் ¼ , பூசம்(1), ஆயில்யம் (1)

சிம்ம ராசி – மகம் (1), பூரம் (1), உத்திரம் ¼

கன்னி ராசி – உத்திரம் ¾,  ஹஸ்தம்(1), சித்திரை ½,

துலா ராசி – சித்திரை ½, ஸ்வாதி(1), விசாகம் ¾ ,

விருச்சிக ராசி – விசாகம் ¼, அனுஷம் (1), கேட்டை (1)

தனுர் ராசி – மூலம் (1), பூராடம் (1), உத்திராடம் ¼

மகர ராசி – உத்திராடம் ¾,  திருவோணம் (1), அவிட்டம் ½

கும்ப ராசி – அவிட்டம் ½, சதயம் (1), பூரட்டாதி ¾,

மீன ராசி – பூரட்டாதி ¼, உத்திரட்டாதி (1), ரேவதி (1)

 

 

மேலே உள்ள பட்டியலைக் கவனிக்கையில், சில நட்சத்திரங்கள் கால் பாகத்தையும், சில நட்சத்திரங்கள், அரை பாகத்தையும், சில நட்சத்திரங்கள் முக்கால் பாகத்தையும் முன், பின் வரும் ராசிகளுக்குத் தந்து தங்களுடைய மொத்த வியாபகத்தை இரு ராசிகளிலும் கொண்டிருப்பதைக் காண்லாம்.

 

 

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இவை மூன்றும் கால் பாகத்தை ஒரு ராசிக்குத் தந்து முக்கால் பாகத்தை இன்னொரு ராசிக்கு தந்திருப்பதால் இந்த மூன்று நட்சத்திரங்களும் காலற்றன என்று வழங்கப்படுகிறது.

 

இதே போல மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவை அரை பாகம் ஒரு ராசிக்கும் மற்ற அரை பாகம் இன்னொரு ராசிக்கும் தந்து இரு ராசிகளிலும் வியாபிக்கின்றன. ஆகவே இந்த மூன்று நட்சத்திரங்களும் உடலற்றன என்று வழங்கப்படுகிறது.

 

 

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை முக்கால் பாகத்தை ஒரு ராசிக்கும் மீதி கால் பாகத்தை இன்னொரு ராசிக்கும் தந்து இரு ராசிகளிலும் வியாபிக்கின்றன. இவற்றிற்கு தலையற்றன என்று பெயர்.

 

இந்த மூன்று வித நட்சத்திரங்கள், நிஷேகத்திற்கும், மனை  முகூர்த்தத்திற்கும், யாத்திரைக்கும் கவனிக்கப்பட வேண்டியவை.

 

ஏனைய பதினெட்டு நட்சத்திரங்களில் நிற்கும் கிரகங்களுக்கு விசேஷ பலன் உண்டு. இவற்றை லக்னத்தைக் கொண்டு தீமை, நன்மை ஆகியவற்றைக் கூறலாம்.

 

ஒரு ஜாதகத்தைக் கவனித்துக் கால பலன் என்ன என்று காண்பதற்கு நம் முன்னோர்கள் நட்சத்திர ரீதியாக கிரக திசை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

 

ஜெனன காலத்தில் பஞ்சாங்கத்தில் காட்டி இருக்கும் நட்சத்திரத்தைக் கொண்டு ஒரு ஜாதகருக்கு பிறந்த காலம் தொட்டு ந்டக்க வேண்டிய திசையை வான சாஸ்திர முறைப்படி நம் முன்னோர் நிர்ணயித்துள்ளனர்.

ஆக, அசுவனி முதல் ஒன்பது நட்சத்திரத்திற்கும் ஒன்பது திசைகள் கிரம வரிசைப்படி ஏற்படுகின்றன.

ஒன்பது கிரகங்களில் ராகுவும் கேதுவும் நமது முறையில் உள்ளடங்குகிறது.      

                                                                          

                                          -தொடரும்                                                   குறிப்பு:- பழம் பெரும் பாடலான கீழ் வரும் பாடல் காலற்றன, தலையற்றன், உடலற்றன நட்ச்த்திரங்கள் செய்யக் கூடாதவற்றையும், அப்படிச் செய்தால் வரும் தீங்கையும் கூறுகிறது.

 

காலற்றன, உடலற்றன, தலையற்றன நாளில்

கோலக்குய ம்டவார்த் தமைக் கூடின் மலடாவார்

மாலுக் கொழு மனை மாளிகை கோலின் அது பாழாம்

ஞாலத்தவர் வழி போகினது நலமெய்திடர், அவமே!

 

தாம்பத்ய சுகம் கூடாது, மனை முகூர்த்தம என்று வீடு கட்ட ஆரம்பிக்கக் கூடாது, யாத்திரை போகக் கூடாது.

மீறிச் செய்தால் மலடாவர். வீடு பாழாகும், யாத்திரை போனவர் திரும்பி வர மாட்டார் – இதுவே இச்செய்யுளின் பொருள்.

தமிழ்த் தாய் வாழ்த்தில் வடமொழிச் சொற்கள் (Post No.3891)

Written by S NAGARAJAN

 

Date: 9 May 2017

 

Time uploaded in London:-  8-48 am

 

 

Post No.3891

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

தமிழ் இன்பம்

 

முக்கியக் குறிப்பு:

வைஷ்ணவ பரிபாஷை என்ற அழகிய நூலை எனக்கு அனுப்பி உதவியவர் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்ரிநாதன் அவர்கள்.

அவ்வப்பொழுது அவர் அனுப்பும் மின் நூல்கள் அற்புதமானவை; பொருள் பொதிந்தவை. அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

 

தமிழ்த் தாய் வாழ்த்தில் வடமொழிச் சொற்கள்

ச.நாகராஜன்

 

ஒரு கருத்தை நல்ல விதமாகச் சொல்வது ஒரு முறை. காழ்ப்புணர்ச்சியுடன் ன்றை மட்டம் தட்டித் தன்னை உயர்த்திக் கொள்வது இன்னொரு முறை.

 

தமிழ்த் தாயை வாழ்த்தி ஏராளமான புலவர்கள் பாக்களை இயற்றியுள்ளனர். வில்லிப்புத்துரார் முதல் சுத்தானந்த பாரதி, மஹாகாவி பாரதியார் வரை கவிஞர்கள் இயற்றியுள்ள பாடல்கள் காலத்தை வென்ற பாடல்கள்.

 

ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் மனோன்மணீயத்தை இய்ற்றிய பெ.சுந்தரம் பிள்ளை சம்ஸ்கிருதத்தை ஒரு படி தாழ்த்தி தமிழை அத்துடன் ஒப்பிட்டு இயற்றிய பாடலை இன்று நாம் அதிகார பூர்வமான தமிழ்த் தாய் வாழ்த்தாகக் கொண்டுள்ளோம். ஆனால் தவறான கருத்தைத் தரும் சொற்கள் நாம் அன்றாடம் வாழ்த்தும் பாடலில், நல்ல வேளையாக நீக்கப்பட்டுள்ள்ன..

 

அதைப் பார்ப்போம்:

சுந்தரம் பிள்ளையின் பாடல்:

“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்                                  சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

 

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!”

 

இதில் ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையாவுன் என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு பாடலின் சுருக்கத்தைத் தமிழக அரசு  மேற்கொண்டது.

சம்ஸ்கிருதம் உலகின் பல பல்கலைக் கழகங்களிலும் பாடமாக உள்ளது. மாத்தூர் என்ற் ஒரு கிராமத்தில் சம்ஸ்கிருதம் பேச்சு மொழியாக உள்ளது. அங்குள்ளோர் சம்ஸ்கிருதத்தையே அனைத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.  ஆக அது “உலக வழக்கு அழிந்து ஒழிந்த்” மொழி அல்ல.

 

இனித் தமிழ்த் தாய் வாழ்த்து முற்றிலுமாகத் தனித் தமிழ்ச் சொற்களினாலேயே இயற்றப்பட்டிருக்கிறதா என்றால், அதுவுமில்லை.

அதில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களை வைஷ்ணவ பரிபாஷை நூலில் எம்பார் கண்ணன் ரங்கராஜன் அவர்கள் பட்டியலிட்டுள்ளார்

பாடல் வரிகளையும்  அதில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களையும் கீழே காணலாம்.

நீராருங் க்டலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திக பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழழ்ணங்கே

தமி ழ ணங்கே

உன் சீரிளமைத் திறம்வியந்து

செயல் மறந்து வாழ்த்துதும!, வாழ்த்துதுமே!! வாழ்த்துதுமே!!!

பாடலில் உள்ள வடமொழிச் சொற்கள் தடித்து சிவப்பு வண்ணத்தில் காண்பிக்கப்பட்டுள்ளன.

நீர், வதனம், பரதக் கண்டம், கணம், தரித்த, திலக்ம், திலகம்,வாசனை, உலகு திசை ஆகிய வார்த்தைகள் சம்ஸ்கிருத வார்த்தைகள்.!!
சம்ஸ்கிருதச் சொற்கள் கலந்த தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலின் உள்ளேயே சம்ஸ்கிருதம் வாழ்கிறது, நன்றாகத் தான் உள்ளது.

 

 

இனி ஆத்திச்சூடியில் உள்ள் தமிழ்ச் சொற்களை எம்பார் ரங்கராஜன் பட்டியலிட்டுத் தருவதைக் கீழே காண்போம். (முதலில் குறிப்பிடப்படுவது ஆத்திச்சூடி எண்)

27  வஞ்சகம் பேசேல்

32  கடிவது மற

33 காப்பது விரதம்

36 குணமது கைவிடேல்

44சக்கர நெறி நில்

46 சித்திரம் பேசேல்

56 தானமது விரும்பு

61 தெய்வ மிகழேல்

62 தேசத்தோ டொத்துவாழ்

69. நீர்விளை யாடேல்

82.பூமி திருத்தியுண்                                              88 மனந் தடுமாறேல்

93 மூர்க்கரோ டிணங்கேல்

98. மோகத்தை முனி                                         100. வாதுமுற் கூறேல்                                     101.. வித்தை விரும்பு                                           103. உத்தமனாய் இரு

வஞ்சகம், கடி, விரதம், குணம், சக்கரம், சித்திரம், தானம், தெய்வம், தேசம், நீர், பூமி, மனம், மூர்க்கர், மோகம், வாது, வித்தை, உத்தமன் ஆகிய சொற்கள் சம்ஸ்கிருத சொற்கள்.

இப்படி தமிழ் இலக்கியத்தில் பொருள் நயம் கருதித் தக்க இடங்களில் காழ்ப்புணர்ச்சி இன்றி சம்ஸ்கிருதச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதை நன்கு காண முடிகிறது.

உலகப் பொதுமொழியாக இன்று திகழும் ஆங்கிலம் பல மொழிகளிலிருந்து ஏராளமான வார்த்தைகளை எடுத்துக் கொண்டே வளம் பெற்றிருக்கிறது என்பதை இங்கு நாம் நினைவு கூர வேண்டும்.

வாழ்க வடமொழி; வாழ்க தமிழ்!

 

Also read:–

தமிழ்த் தாய் வாழ்த்தை மாற்றுக! | Tamil and …

https://tamilandvedas.com/…/தமிழ்த்-தாய்-வாழ்…

Translate this page

13 Jul 2012 – by S Swaminathan தமிழ் நாட்டில் இப்பொழுது பயன்படுத்தப்படும் தமிழ்த் தாய் வாழ்த்து உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்குப் …

 

***

 

 

காஷ்மீரில் திராவிட மந்திரவாதி- உண்மைக் கதை (Post No.3871)

Written by London swaminathan

Date: 2 May 2017

Time uploaded in London: -6-46 AM

Post No. 3871

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

திராவிட மந்திரவாதி: ராஜ தரங்கிணி நூலில் அற்புதச்செய்தி

காஷ்மீரின் வரலாற்றை கல்ஹணர் என்ற புலவர் 3400-க்கும் மேலான சம்ஸ்கிருத பாக்கள் மூலமாக எழுதினார். அப்புத்தகத்தின் பெயர் ராஜதரங்கிணி. அதில் பல அதிசயமான விஷயங்களும் சுவையான செய்திகளும் உள. திராவிட என்ற சொல்லை அவர் இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார். இந்த நூல் சுமார் 1000 ஆண்டு பழமை உடைத்து.

 

திராவிட அதிசயங்களைக் காண்போம்:

ஜெயபீடன் (கி.பி.750)  என்ற  அரசன் காலத்தில் நடந்த நிகழ்ச்சி இது: உண்மைக் கதை:

 

ஜெயபீடன் கனவில் ஒரு நாள் ஒரு மஹாபுருஷர் தோன்றினார்; இரு கரங்களையும் கூப்பியவாறு அவர் சொன்னதாவது–

 

“ஓ, அரசனே! உன்னிடம் அடைக்கலம் வேண்டி நான் வந்துள்ளேன். நான் உனது அரசின் எல்கைக்கு உட்பட்ட ஏரியில் வசிக்கிறேன். நான் ஒரு நாகன்; என் பெயர் மஹாபத்மன்;  ஒரு திராவிட மந்திரவாதி, தனது மந்திர சக்தியைப் பிரயோகித்து என்னை ஏரியிலிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறான்; நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

 

என்னை நீ காப்பாற்றுவாயானால் காஷ்மீருக்குள் உள்ள ஒரு மலையில் தங்கம் கிடைக்கும்; அந்த மலையை உனக்குக் காட்டித் தருவேன் என்றான் மஹாபத்மன்.

 

இந்தக் கனவைக் கண்ட அரசன் காலையில் தூங்கி எழுந்தவுடன், முதல் வேலையாக இப்படி ஒரு மந்திரவாதி தனது எல்கைக்குள் இருக்கிறானா என்று கண்டறிய உளவாளிகளை ஏவினான்; அவர்கள் பல திக்குகளிலும் பறந்து சென்றனர். தொலை தூரத்திலுள்ள ஒரு திராவிட மந்திரவாதியைக் கண்டுபிடித்து அரசன் முன்னிலையில் நிறுத்தினர். அரசன் ஜெயபீடன் கேட்டான்:

 

“நீ மந்திரசக்தியால் ஒரு நாகனை அகற்ற முயற்சி செய்கிறாயாமே?”

 

“ஆமாம் அது உண்மைதான்; எனது மந்திர சக்தியால் நான் எவரையும் கவர்ந்திழுக்க முடியும்” என்றான்.

 

அரசன் சொன்னான்: “அது எப்படி முடியும். காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு ஏரியும் ஆழமும் அகலமும் உள்ளது. நீ சொல்லுவது உண்மைதானா?”

 

மந்திதிரவாதி செப்பினான்:

அரசனே! என்னுடன்  ஊலூர் (Uloor/ Wular) ஏரிக்கு வாருங்கள்; நானே காட்டுகிறேன்.

 

அரசனும் மந்திரவாதியும், பரிவாரங்கள் சூழ ஸ்ரீநகர் அருகிலுள்ள ஊலூர் (இப்பொழுது இந்த அழகிய ஏரியின் பெயர் ஊலார் Wular) ஏரிக்குப் போனார்கள். மந்திரவாதி பல மந்திரங்களை உச்சாடனம் செய்தான். அம்புகளை ஏரியின் நால் திசைகளிலும் எய்தான்; சிறிது நேரத்தில் ஏரி வறண்டது. ஏரிக்கு நடுவில், சகதியில் ஒரு பாம்பு (நாகன்) சில சிறு பாம்புகள் புடை சூழ நெளிந்து கொண்டு இருந்தது.

மந்திரவாதி சொன்னான்: “பார் இப்பொழுது; சூ! மந்திரக் காளி என்று சொல்லி அவனை என் கைக்குள் கொண்டு வருகிறேன்”.

 

இதைக் கேட்ட அரசன் கோபத்துடன் அப்படிச் செய்யாதே என்று கட்டளையிட்டான். மந்திரவாதியும் அரசனின் கட்டளைக்கு அடிபணிந்து அப்படியே ஆகட்டும் என்று சொல்லி மந்திர உச்சாடனங்களை திரும்பப் பெற வேறு சில மந்திரங்களைச் சொன்னான். என்ன அதிசயம்!

 

 

ஏரி முழுதும்  மீண்டும் நிரம்பியது. அரசன், அந்த மந்திரவாதிக்கு நிறைய சன்மானங்களைக் கொடுத்து நீ போகலாம் என்றான் அரசன்.

 

மாதங்கள் உருண்டோடின. அரசனுக்கு, மஹாபத்மன் தங்க மலையைக் காட்டவில்லை. கனவிலேயே அந்த நாகனிடம், நா ன் தான் உன்னைக் காப்பாற்றி விட்டேனே; எனக்கு ஏன் இன்னும் தங்க மலையைக் காட்டவில்லை? என்று கேட்டான்.

அரசே! என்னை நீ காப்பாற்றவில்லை. என்னுடைய சந்ததியினர் முன்னே என்னைச் சக்தியற்றவனாகக் காட்டி அவமானம்தான் செய்தாய்; போகட்டும்; உனக்கு தங்கம் கிடையாது; ஆனால் தாமிரம் விளையும் ஓரிடத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி அந்த இடத்துக்குப் போகும் வழிகளை மஹாபத்மன் பகர்ந்தான்.

 

 

அவன் வாய்மொழியில் கே ட்டவாறு அரசனும் தாமிர மலையை நாடிச் சென்று நாட்டிற்குத் தேவையான கனிவளத்தைத் தோண்டி எடுத்தான்; தன் பெயர் பொறித்த கோடிக் கணக்கான தாமிர நாணயங்களை வெளியிட்டான்.

 

 

கல்ஹணர் தனது ராஜதரங்கிணியில் நாலாவது அத்தியாயத்தில் சொன்ன கதை இது.

 

இன்னொரு அத்தியாயத்தில் காஷ்மீரில் சிந்து சமவெளி பிராமணர்களுடன் திராவிட பிராமணர்கள் தங்கி இருந்ததைப் போகிற போக்கில் பாடுகிறான்.

 

கால்டுவெல், மாக்ஸ்முல்லர் போன்றோர் ஆரிய, திராவிட என்ற சொற்களுக்கு இனவெறி அர்த்தம் (அனர்த்தம்) கற்பிப்பதற்கு முன்னால் சம்ஸ்கிருத , தமிழ் இலக்கியங்களில் அப்படி அர்த்தமே இல்லை. ஆரிய என்றால் பண்பாடு உடைய, மாண்புமிகு என்ற பொருளும், வடக்கில் இமய மலையில் வாழும் முனிவர்கள் என்ற பொருளும் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. சம்ஸ்கிருதத்தில் திராவிட என்பது தென் திசையிலுள்ள தேசம் என்ற பொருளில் மட்டுமே பிரயோகிக்கப்பட்டுள்ளது. திராவிடர்கள் யார் என்ற எனது கட்டுரையில் மேல் விவரம் அறிக.

 

My old articles on Kalhana’s Rajatarangini and Kashmir

 

திராவிடர்கள் யார்? | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/திராவிடர்கள்-யார்/

 

17 Jul 2013 – பிராமணர்கள் திராவிடர்களே !! திராவிடர்கள் யார்? தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன!!

 

கல்ஹணர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கல்ஹணர்/

ராஜதரங்கிணி என்றால் என்ன? காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் நூல் ராஜதரங்கிணி — இதை கல்ஹணர் என்ற காஷ்மீரி பிராமணர் எழுதினார் …

 

 

 

ராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி 1

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1470; தேதி 9 டிசம்பர், 2014.

 

100 யானைகளை மலையிலிருந்து உருட்டிவிட்ட ஹூண மன்னன்!

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1475; தேதி 11 டிசம்பர், 2014.

 

கஜினி முகமது நாணயத்தில் சம்ஸ்கிருதம்!

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1582; தேதி 17 ஜனவரி 2015

 

அழகான காஷ்மீரி பெண்கள் பெயர்கள் !

ஆய்வுக் கட்டுரை எண் 1586; தேதி 18 ஜனவரி 2015

ராமாயணம் படித்தால் சாபம் தீரும்! ராமாயண அதிசயங்கள்! (Post No.3753)Date: 24 March 2017

 

 

Ramayana cures Curses! Rajatarangini Episode! (Post No.3754);  24 March 2017

 

Kaliyuga Calculation: Kalhana’s Blunder! Post No: 1574:  14th January 2015

 

Nehru on Rajatarangini; Article No.1465; Dated 7th December 2014.

 

Kashmiri King who attacked Tamil Nadu and Sri Lanka; Article No.1468; Dated 8th December 2014.

 

106 Kings of Hindu Kashmir!; Post No: 1577: Dated 15th January 2015

 

Beautiful Names of Ancient Kashmiri Women!; Article No 1583; Dated 17th January 2015.

 

Sanskrit in Mahmud of Ghazni Coins!; Article No 1579; Dated 16th January 2015

 

–SUBHAM—1.

‘பாரதிதாசன் பாடலுக்கு இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு!’ (Post No.3865)

Written by London swaminathan

Date: 30 APRIL 2017

Time uploaded in London:-6-51  am

Post No. 3865

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று “துன்பம் நேர்கையில்…………..” என்ற பாடல். இது திரைப்படத்திலும் இடம் பெற்றுள்ளது. இதற்கு இசை அமைத்தவர் திக்கெட்டும் தமிழ் இசை மணம் கமழ வைத்த M M தண்டபாணி தேசிகர் ஆவார். இதற்கு இசை அமைக்க அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆயிற்றாம். இது அவரே சொன்ன செய்தி. இதற்கு மிகவும் பொருத்தமான ராகம் ‘தேஷ்’ என்னும் ராகம்தான் என்கிறார் தேசிகர்.

 

ஒரு பாட்டின் பொருளுக்கேற்ற ராகத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம் என்கிறார். யார் ஒருவர் பாட்டு எழுதினாரோ, அவருக்கு சங்கீத ஞானம் இருந்தால் அவரே அந்த பாட்டுக்கு ராகமும் போட்டுவிடுவார். பாரதி பாடல்களுக்கு அவரே அமைத்த ராகங்களை பழைய பதிப்புகளில் காணலாம்.

தண்டபாணி தேசிகர் சொல்கிறார்:

“இந்த பாட்டுக்கு சரியான ராகத்தைக் கண்டுபிடித்து இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு. இதற்கு தேஷ் ராகம்தான் பொருத்தம். பாருங்கள்! நான் இதையே அடானா ராகத்தில் பாடுகிறேன் (தேசிகர் பாடியும் காட்டுகிறார்). இப்படி அடானா ராகத்தில் பாடினால், வருத்தமுற்ற பெண் ‘அம்மா, அப்பா’ என்று அழுதுகொண்டு ஓடிப் போய்விடும். பொருளுக்கேற்ற ராகம் இருக்க வேண்டும். இதை வள்ளுவர் அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்தார்:-

 

பண் என்னாம் பாடற்கு

பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண் என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண் — குறள் 573

 

பொருள்:-

பாடலின் பொருளோடு இயைந்து வராத பண்ணால் (ராகத்தால்) என்ன பயன்?  அதைப்போல கண்ணோட்டத்துடன் (இரக்கம், அருள்) பொருந்தாத கண்ணால் என்ன பயனுண்டாகும் ?”

 

இதிலிருந்து வள்ளுவனுக்குள்ள சங்கீத ஞானமும் புலப்படும்

 

இதோ பாரதிதாசனின் முழுப்பாடல்:–

 

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? — எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? — நல்
லன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்கமாட் டாயா? — கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா?     …… துன்பம்…

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க — எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க — நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? — கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா?   — துன்பம்…

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது — யாம்
அறிகி லாத போது — தமிழ்
இறைவ னாரின்திருக் குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? — நீ
இயம்பிக் காட்டமாட் டாயா?       —துன்பம்…

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் — தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் — நல்
திறமை காட்டிஉனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? — தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா?   துன்பம்…

——-பாவேந்தர் பாரதிதாசன் (Poem is taken from Project Madurai website)

xxx

 

 

திரு எம் எம் தண்டபாணி தேசிகரின் வெண்கல குரலில் அவர் இயற்றிய பிரபல பாடலை தேஷ் ராகத்தில் கேளுங்கள் இங்கே

https://www.4shared.com/…/o…/Thunbam_nergaiyil_Desh_MMD.html

 

–Subahm–

இறைவா எனக்கொரு வரம் அருள்வாய்! (Post No.3864)

Written by S NAGARAJAN

 

Date:30 April 2017

 

Time uploaded in London:-  6-25 am

 

 

Post No.3864

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

இறைவா எனக்கொரு வரம் அருள்வாய்!

 

by ச.நாகராஜன்

 

இறைவா, எனக்கொரு வரம் அருள்வாய்.

மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்றந்தப் பேதை சொன்னான்

இந்த வசை எனக்கு எய்திடலாமோ என்று

பாரதி பாடிய நிலை இன்று இன்னும் மோசமாயிற்றே

இதை மாற்றிட ஒரு வரம் அருள்வாய்

திராவிடப் பிசாசுகள் கூத்தும் கும்மாளமும் போட்டுத்

தமிழின் பெயரால் தம் பெயர்களை

சந்து முனை தொட்டு நகர்,கிராமம் என

எங்கும் தங்க வைக்கும் தாங்கா நிலையை அழித்திடு

தமிழின் பெயரால் பேராசான் பதவி முதல் அனைத்தையும்

விலை கொடுத்து வாங்கும் வீணர்களை ஒழித்திடு

 

கல்வி நிலையத் துணைவேந்தர் முதல் கடை நிலை பியூன்

வரை லஞ்சம் வாங்கும் லஞ்ச நிலையங்களை அழி;    அவர்களை ஒழி!

 

 

திராவிட மாயைகள் எழுதிய பொய் பித்தலாட்ட புத்தகங்களை

நூலகத்திலிருந்து எடுத்து எரி; நல்ல புத்தகங்களை லஞ்சமின்றி

வாங்கி அடுக்கவும் படிக்கவும் வழி வகை செய்

மருத்துவ நிலையங்கள் மாய நிலையங்களாக்கிக் கொள்ளையடிக்கும் கொள்ளையரைக்

கொள்ளை நோயில் போக்கி  நல் நிலையை உருவாக்கு

லாயர் என்ற பெயரில் ரவுடிகளாக உலா வரும்

அவல நிக்குலையை நீக்கு

நீதி நிலையங்களை அறம் வளர்க்கும் ஆலயமாக்கு

 

கோவில் உண்டியல்களை உடைக்கும் வீணர்களை உடை

கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும் அநியாயக்காரர்களை அழி

நற்பணி என்ற பெய்ரில் துர்ப் பிணி பரப்பும் தோழர்களை தூர்த்திடு

 

நாத்திகம் பேசி நர்த்தனம் ஆடிடும் நயவஞ்சகர்களை நாசமாக்கு

கன்னியரைத் தாய்க்குலத்தை ஏமாற்றும் எத்தரை அழி

பொய்யாக் காவிரியைப் பொய்த்துப் போகச் செய்த

மெய் காக்கும் வையையை வறளச் செய்த

தங்கம் நிகர் தாமிரபரணியைத் தரைக்கும் கீழே தாழ்த்திய

மணல் கொள்ளை மாபியாக்களை மண்ணாக்கு

 

தமிழ் இலக்கியம் என்ற பெயரில் தம் இலக்கியத்தைச்

செய்யும் தறுதலைகளை மூளை செயலிழக்கச் செய்

தேசீய நீரோட்டத்தில் தமிழகத்தை இணையச் செய்

தம் வீடகத்தை வளர்க்கும் பொய் ஊடகத்தை ஒழி

நாளிதழ் என்ற பெயரில் நாச இதழ் நடத்துவதை ஒடி

அனைத்து அக்கிரமங்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருக்கும்

அக்கிரம அரசியல்வாதிகளை அழி; ஒழி!

 

 

பூமித் தாய் பிளந்து அவர்களை உள் வாங்க வேண்டாம்;

ஏனெனில் பூமித் தாய் தீட்டுப்பட்டு மாசு படுவாள்

வானில் வாயுவால் பறக்க வைத்து எங்கோ போக விடு

எங்களை ஒழுக்கத்தின் உயரத்தில் ஏற்றி விடு

 

 

நல்ல தமிழர்களை வளமுறச் செய்; நலம் பெறச் செய்!

வள்ளலார், பாரதியார் உள்ளிட்ட தமிழினக் காவலர் தமை

எள்ளளவுப் பொழுதும் மறக்காத நிலை தனை உருவாக்கு

அறிவியலில் சிறக்க அழியா நிலை அடைய ஆதரவளி

எனக்கு ஒரே ஒரு வரம் அருள்வாய் இறைவா!

இங்கு சொன்னதெலாம் இமைப்பொழுதில் நடக்கவொரு

அற்புதத் தமிழ்த் தலைவனை அருள்; உன்

பொற்பதம் போற்றுவேன்

 

 

தீய பந்தம் போக்க வந்த சம்பந்தன் போல

என்னப்பன் என்று மேலோர் சொல்லும் அப்பர் போல

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற

மந்திரச் சொற்களைச் சொன்ன மறத்தமிழன் போல

உத்வேகமூட்டும் ஒருஎழுச்சி மிக்க

தலைவனைத் தமிழைக் காப்பாற்றத் தா

இந்த நல் வரம் – ஒரு வரம் மட்டும் ஈந்திடு

என் இறைவா; தங்கத் தமிழ் நாட்டைக் காத்தருள்வாய்!

இனிய இந்த ஒரு வரம் மட்டும் போதும்

இனி எனக்கு வேறு எது வேணும்?

***

பணம் பற்றிய தமிழ்ப் பொன் மொழிகள் (Post No.3862)

மே மாத 2017 காலண்டர்

ஹேவிளம்பி சித்திரை- வைகாசி 2017

 

Written by London swaminathan

Date: 29 APRIL 2017

Time uploaded in London:- 8-12 am

Post No. 3862

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

 

Festival/ Holidays: மே 1- மே தினம், மே 10- சித்திரா பௌர்ணமி, புத்த பூர்ணிமா

 

ஏகாதசி— 6, 21

பௌர்ணமி- 10

அமாவாசை-  25

சுபமுகூர்த்த தினங்கள்-  7, 12, 17, 18, 29

 

மே 1 திங்கட் கிழமை

பணம் பத்தும் செய்யும்

 

மே 2 செவ்வாய்க்கிழமை

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை – குறள் 247

 

மே 3 புதன்கிழமை

பணக்கரன் பின்னால் பத்துப் பேர், பைத்தியக்காரன் பின்னால் பத்துப் பேர்

 

மே 4 வியாழக்கிழமை

பணமும் பத்தாயிருக்க வேணும், பெண்ணும் முத்தாயிருக்க வேணும் ,முறையிலேயும் அத்தை மகளாய் இருக்கவேணும்

 

மே 5 வெள்ளிக்கிழமை

பணத்தைப் பார்க்கிறதா, பழமையைப் பார்க்கிறதா?

 

 

மே 6 சனிக்கிழமை

துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கி, சட்டி எட்டுத் துட்டுக்கு விற்றாலும், வட்டிக்கு ஈடல்ல

 

மே 7 ஞாயிற்றுக்கிழமை

பணமிருக்க வேணும், இல்லாவிட்டால் பத்து சனமிருக்கவேணும்

 

மே 8 திங்கட் கிழமை

முதலிலார்க்கு ஊதியம் இல்லை  – குறள் 449

 

மே 9 செவ்வாய்க்கிழமை

பணம் பார்த்துப் பண்டங் கொள், குணம் பார்த்துப் பெண் கொள்

 

மே 10 புதன்கிழமை

பணம் இருந்தால் பாட்சா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி

 

 

மே 11 வியாழக்கிழமை

காசேதான் கடவுளடா; பணம் இல்லாதவன் பிணம்

 

மே 12 வெள்ளிக்கிழமை

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்

 

மே 13 சனிக்கிழமை

பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறது

 

மே 14 ஞாயிற்றுக்கிழமை

பணம் என்ன பாடாணம் சுகுணம் ஒன்றே போதும்

 

மே 15 திங்கட் கிழமை

காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன ?

 

மே 16 செவ்வாய்க்கிழமை

காசு இல்லாதவனை வேசியும் துப்பமாட்டார்கள்

 

மே 17 புதன்கிழமை

காசுக்கு ஒரு புடவை விற்றாலும், நாயின் சூத்து அம்மணம்

 

மே 18 வியாழக்கிழமை

காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கன் (கம்மாளன்)குஞ்சு ஆகாது

 

மே 19 வெள்ளிக்கிழமை

துட்டுக்கு ஒரு குட்டி விற்றாலும், துலுக்கக்குட்டி மட்டும் ஆகாது

 

மே 20 சனிக்கிழமை

காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்களும் ஆத்தாளும் கூட வருவார்கள்

 

 

மே 21 ஞாயிற்றுக்கிழமை

கால் காசுக்கு குதிரையும் வேணும் கொள்ளும் தின்னக் கூடாது, சிட்டாவும் பறக்கனும்

 

மே 22 திங்கட் கிழமை

காசுக்கு இரண்டும் பிசுக்குக்கு (பீசுக்கு) ஒன்றும்

 

மே 23 செவ்வாய்க்கிழமை

துட்டுக்கு இரண்டு, துக்காணிக்கு மூன்று

 

மே 24 புதன்கிழமை

சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கால் பணம்

 

மே 25 வியாழக்கிழமை

செட்டி போன இடமெல்லாம் வட்டம் காற்பணம்

 

 

மே 26 வெள்ளிக்கிழமை

துட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ , திட்டு வந்து விழுந்ததோ?

 

மே 27 சனிக்கிழமை

காசுக்கு லோபி கழுதையினிடத்திற் போனால் போல

 

மே 28 ஞாயிற்றுக்கிழமை

பணக்கார அவிசாரி பந்தியிலே, அதில்லாத அவிசாரி சந்தியிலே

 

மே 29 திங்கட் கிழமை

செட்டி பணத்தைக் குறைத்தான், சேணியன் நூலைக் குறைத்தான்

 

மே 30 செவ்வாய்க்கிழமை

பணமிருந்தால் பத்தும் வந்து சேரும்

 

 

மே 31 புதன்கிழமை

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே- கா.மு.செரீப் (திரைப்படப் பாடல்)

 

xxxx

பணம் குலமாகும் ,பசி கறியாகும்

xxxxx

 

செட்டி வீட்டில் பணம் இருக்கிறது ஆலமரத்தில் பேய் இருக்கிறது.

 

–Subahm–

 

 

பூவைக் கிள்ளுவதற்குப் பதில் உன் தோலைக் கிள்ளேன்! (Post No.3836)

Written by S NAGARAJAN

 

Date:21 April 2017

 

Time uploaded in London:-  6-29 am

 

 

Post No.3836

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ரமண சாரல்

பூவைக் கிள்ளுவதற்குப் பதில் உன் தோலைக்        கிள்ளேன்!

 

by ச.நாகராஜன்

 

எல்லையற்ற கருணையுடன் உலக மக்களை உய்விக்க வந்த பெரும் அவதாரம் பகவான் ரமண மஹரிஷியின் அவதாரம்.

அந்த அவதாரத்தின் பெருமையை ஏராளமான சம்பவங்கள் விளக்குகின்றன. ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமான ஒரு உண்மையை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

 

குடிபாடி வெங்கடாசலம் என்ற அணுக்க பக்தர் வரைந்துள்ள குறிப்புகளில்  இரு சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.

 

 

வெங்கடாசலம் அவர்களை சலம் (1894-1979) என்றே அழைப்பர். தெலுங்கு மொழியில் சிறந்த எழுத்தாளர் அவர்.

1932இல் முதன் முதலில் அவர் பகவானை தரிசிக்க வந்த் போது அவர் ஒரு தீவிர சமூக சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். அவர் பார்த்த வேலை – இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ். 1950இல் அருணாசலத்தையே தன் வாழ்விடமாகக் கொண்டு இறுதி வரை அங்கேயே இருந்தார். அவர் ரமண பக்தர்கள் 19 பேர்களின் நினைவலைகளைத் தொகுத்து தெலுங்கு மொழியில் ‘பகவான் ஸ்ம்ரிதுலு’ என்ற அழகிய நூலை வெளியிட்டார். அதில் அவரது புத்திரியின் அனுபவங்களும் கூட உள்ளன.

 

 

எச்சம்மாவின் பூஜை

 

பகவானின் அணுக்க பக்தையான எச்சம்மா ஒரு முறை அவரிடம் வந்து மிகுந்த பெருமிதத்துடன் தான் ஒரு லட்சம் இலைகளை வைத்து பூஜை செய்ததாகத் தெரிவித்தார். உடனே பகவான், “ இலைகளைச் செடியிலிருந்து கிள்ளுவதற்குப் பதிலாக உன் தோலை ஒரு லட்சம் தடவைக் கிள்ளி அந்த மாதிரி பூஜை செய்யக் கூடாதா நீ?” என்று கேட்டார். சம்பிரதாய முறையிலான பூஜைக்கு அவர் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்றாலும் தனது பக்தர்கள் இப்படிச் செயல்படும் போது உடனே அவர் அதை ஆதரிக்காமல் இப்படிக் கூறுவார்.

 

 

நமஸ்காரமும் பகவானின் சிரிப்பும்

 

ஒரு முறை சலம் அவர்களின் நண்பர் ஒருவர் ஆசிரமத்திற்கு வந்தார். அவருக்கு சாமியார்கள் மீது நம்பிக்கையே கிடையாது. ஆகவே முதலிலேயே பகவானை நமஸ்கரிப்பதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டு வந்திருந்தார். அனவைரும் நமஸ்காரம் செய்த போதும அவர் செய்யவில்லை. ஆசிரமத்தைச் சுற்றி வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

 

அது கோடைக்காலமாதலால் மாலை நேரத்தில் பகவான் அமரும் நாற்காலி ஹாலின் வெளியில் போடப்பட்டது. பக்தர்கள் சுற்றி அமர பகவான் அந்த நாற்காலியில் அமர்ந்தார். அப்போது அந்தப் பக்கம் வந்த நண்பர் தன்னை மீறிய சக்தி ஒன்றினால் பகவான் முன்னே வந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். உடனே பகவான் உரக்கச் சிரித்தார். அங்கிருந்த யாவருக்கும் அவர் ஏன் அப்படி திடீரென்று சிரித்தார் என்பது விளங்கவில்லை. ஆனால் சலத்திற்கு மட்டும் அதன் காரணம் என்ன என்று புரிந்தது.

 

 

இப்படி பகவான் பலரையும் தன் அருள் எல்லைக்குள் வரச் செய்து கருணை மழை பொழிந்த சம்பவங்கள் பல உண்டு!

பகவானின் ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் இறைத்தனமை நிரம்பி இருந்ததை அவருடன் நெருங்கி இருந்த ஆன்மீக சாதகர்கள் பலரும் அறிவர்.

***