சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! -1 (Post No.3286)

palanquin1

Written by S. NAGARAJAN

Date: 25 October 2016

Time uploaded in London: 5-51 AM

Post No.3286

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 

Contact :– swami_48@yahoo.com

 

 

 

திருக்குறள்  பெருமை

 

சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! -1

 

                      ச.நாகராஜன்  

 pallaku-2

நல்லனவற்றைச் சிவிகையில் வைத்து ஊர்வலமாக எடுத்துக் கொண்டு சென்று போற்றுவது நமது பழைய மரபு. அந்த வகையில் ஒவ்வொரு குறளுமே சிவிகைக் குறள் தான்! என்றாலும் சிவிகையைத் தன்னுள்ளே கொண்டுள்ள இந்தக் குறள் அறத்தின் மாண்பை சிறப்பாக எடுத்துக் கூறுவதால் இது அறக் குறள் ஆகிறது. அறம் வெல்லும். பாவம் தோற்கும். இது பாரதம் வாழ் அனைவரும் ஏற்றுக் கொண்ட அறக் கொள்கை.

குறளுக்கு வருவோம்.

 

 

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை                                 பொறுத்தானோ டூர்ந்தா னிடை    (குறள் 37)

 

அறத்தின் பயன் இது போன்றது என்பதை காட்சி அளவையால் உணர்க.. பல்லக்கைச் சுமப்பவனோடு அதில் ஏறிச் செல்பவனின் காட்சி அளவையால் அது அறியப்படும்.

 

பரிமேலழகரின் இந்தத் தெளிவுரை காலம் காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது.

 

(ஏப்ரல் 1968இல் வெளி வந்துள்ள திருக்குறள் உரைக் களஞ்சியம் நூலில்) வித்துவான் ஆர் கன்னியப்ப நாயக்கர் பரிமேலழகர் வழியே சென்று, இன்னும் தெளிவாக “அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா.சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னுளே உணரப்படும்.” என்று விளக்கம் தருகிறார்.

 

ஆனால் நாத்திகவாதிகளுக்கு இந்தக் குறளை வழக்கம் போலத் திரித்தால் தானே மனம் ஆறுதல் அடையும்! சமுதாயத்தைத் திசை திருப்ப முடியும்.

 

ஆகவே சென்ற நூற்றாண்டின் பிற்பாதியில் புதிய உரைகள் தோன்றலாயின.

 

பல்லக்கில் ஏறி பவனி வருபவனையும் அதைச் சுமந்து செல்பவனையும் பார்த்து அறத்தின் இயல்பு இது என்று விளம்ப வேண்டாம். பல்லக்கில் ஏறியவர் நல்வினை செய்தவர், அதைத் தூக்குபவர் தீவினை இயற்றியோர் என்று கூற வேண்டாம். இதைப் பார்த்து அறத்தின் இயல்பு இது என்று கூறுதல் வேண்டாம்.

 

இதுவே புதிய உரை.

pallaku4

ஆயிரக் கணக்கான சொற்களை இடம் பார்த்து ஆழ்ந்த பொருளுடன் தரும் வள்ளுவர் இப்படி ஒரு எடுத்துக்காட்டைக் காட்டி இதைப் பார்த்து அறத்தை எடை போடாதே என்று சொல்வாரா?

 

சரி, ஒரு குறளைத் தனியே பார்த்து இப்படிப் பொருள் சொல்லும் பகுத்தறிவுவாதிகள் குறளில் வரும் இரு வினை (குறள்

5),நல்வினை (குறள் 335), தீ வினை (குறள் 201,209,210, 319) போன்றவற்றிற்கு எப்படிப் பொருள் கொள்வார்கள்?

“தீவினை செய்தால் பிற்பகல் தாமே எப்படி வரும்? தீவினை ஏதாவது ஏஜன்ஸி ஒன்று வைத்திருக்கிறதா? பகுத்தறிவுக்கும் தர்க்கத்திற்கும் ஒத்ததாக இல்லையே!” என்றல்லவா பகுத்தறிவுச் செல்வங்கள் கூற வேண்டி வரும். அப்போது திருவள்ளுவரை அவர்கள் என்ன செய்வது? ஓரங்கட்டுவதா?

ஆகவே பகுத்தறிவு என்ற பெயரில் எவ்வளவு பசப்பினாலும் திருக்குறள் அவர்களின் ஏமாற்று  மொழிகளுக்கு அப்பாற்பட்டது. அனைத்துக் குறள்களையும் ஒருசேரப் படித்தவுடன் இயைபு நன்கு புரியும்.

 

சரி ஒரு பக்கம் சற்றே தெளிவாக இல்லாத் மயங்க வைக்கும் பரிமேலழகர் உரை! (காட்சி அளவையான் என்று அவர் முடித்து விடுகிறார்), இன்னொரு பக்கம் கார் எஜமானரையும் அதை ஓட்டுபவரையும் பார்த்து அறத்தின் பயன் இது என்று சொல்லாதே என்று சொல்லும் நாத்திகச் செல்வங்கள்…

 

எப்படி இந்தக் குறளின் பொருளைத் தெளிவாக விளங்கிக் கொள்வது?

 

இங்கு தான் நமக்குக் கைகொடுத்து உதவுகிறார் கவிராஜ பண்டித செகவீரபாண்டியனார்.

 

மதுரையில் வாழ்ந்த முதுபெரும் புலவர். தமிழை ஆய்ந்து கற்று உணர்ந்தவர். இவ்ரது திருக்குறட் குமரேச வெண்பா திருக்குறளை நன்கு விளக்குவதோடு அதற்கு எடுத்துக்காட்டாக முதல் இரு அடிகளில் ஒரு வர்லாறையும் முன் வைக்கும்.

அதில் அவர் இப்படிக் கூறுகிறார்:

 

 

உற்ற மணிச்சிவிகை யூர்ந்தாரேன் மூர்த்தியார்      கொற்றவனேன் தாழ்ந்தான் குமரேசா – பற்றும்           அறத்தா றிதுவென வேண்டா சிவிகை                      பொறுத்தானோ டூர்ந்தா னிடை

 

குமரேசா! அறம் புரிந்த மூர்த்தி நாயனார் சிவிகையூர்ந்து சென்றார். அதனைத் துறந்து நின்ற அரசன் ஏன் தாழ்ந்தான்? எனின், அறத்து ஆறு இது என வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை ஓர்ந்து உணர்ந்து கொள்ளலாம்.

 

செகவீரபாண்டியனாரின் உரையில் சில முக்கியக் குறிப்புகளை மட்டும் கீழே காணலாம்:

palanquin_psf

பல்லக்கில் அமர்ந்திருப்பவனும் அதனைச் சுமந்து செல்ப்வனும் ஆகிய இந்த இருவரிடையே புண்ணிய பாவங்களின் பலனை முறையே தெளிவாகத் தெரிந்து கொள்ளுக என்பதாம்.

சிவிகையை ஊர்ந்து செல்பவன் அறம் செய்தவன்; அதனைச் சுமந்து போகின்றவன் பாவம் செய்தவன் என்பதை யூகமா உணர்ந்து கொள்கின்றோம். ஒத்த பிறப்பினையுடைய மக்களுள் ஒருவன் சுகமாய் உயர்ந்திருப்பதையும், மற்று ஒருவன் இளிவாய்த் தாழ்ந்து நிற்பதையும் உலகில் பல இடங்களில் காண்கின்றோம். இதற்குக் காரணம் என்ன? முன்னவன் ஏதோ நல்ல புண்ணியம் செய்துள்ளான்; பின்னவன் அவ்வாறு செய்யாமல் அயர்ந்து நின்றுள்ளான் என இன்னவாறு  அனுமானமாய் நாம் துணிந்து  கொள்கின்றோம். நேரே  கண்ட காட்சியிலிருந்து யூகமாகக் கருதிக் கொள்வது உறுதியான விவேகமாய் வந்தது. அனுமானம், ஆகமம், அருந்தாபத்தி முதலிய பிரமாணங்கள் எல்லாம் காட்சியளவைக்கு இன்மா மாட்சி புரிகின்றன.

 

உலகெலாம் காக்கும் ஒருவ்ன் ஒருவன்                    உலகெலாம் காலால் உழன்றும் – விலையுண்டாங்கு          ஆராது நல்கூரும் என்றால் அறம்பாவம்                 பாராதது என்னோஇப் பார்   (பாரதம்)

 

ஒருவன் தலைமையான அரசனாய் உலகம் முழுவதும் ஆளுகிறான்; ஒருவன் விலை அடிமையாய் உண்ண உணவும் இன்றி வருந்துகிறான். இந்த உயர்வு தாழ்வுகளை நேரே பார்த்திருந்தும் புண்ணிய பாவங்களின் பல்ன்களை உணர்ந்து கொள்ளாமல் விழி கண் குருடராய் மக்கள் இழிந்து உழலுகின்றார்களே! என்று பெருந்தேவனார் இங்ஙனம் பரிந்து இரங்கியிருக்கிறார்.

 

– அடுத்த பகுதியுடன் கட்டுரை முடியும்

 

 

பாத்திரம் அறிந்து தானம் செய்! (Post No.3282)

valluvar

Written  by London Swaminathan

 

Date: 24 October 2016

 

Time uploaded in London: 6-35 AM

 

Post No.3282

 

Pictures are taken from various sources; thanks. They are used for representational purpose. They may not have direct connection to the article below.

 

 

Contact swami_48@yahoo.com

 

 

தமிழில் ஒரு பழமொழி உண்டு. பாத்திரம் அறிந்து தானம் செய்.

பாத்திரம் என்றால் நாம் உடனே எவர் சில்வர் பாத்திரம், அலுமினிய பாத்திரம், தாமிரப் பாத்திரம் என்று உலோகத்தால் ஆன பொருளை நினைப்போம். இதன் உண்மைப் பொருள் அதுவல்ல.

 

பாத்திரம் அறிந்து தானம் செய் என்பது பகவத் கீதையில் உள்ளது.

 

தானம் செய்வதிலுள்ள மூன்று வகைகளை கிருஷ்ணன் விவரிக்கிறான்.

இது புறநானூற்றிலும், திருக்குறளிலும் உள்ளது.

 krishnan-barbeque

நல்ல தானம் (சாத்விகம்) எது?

தகுதியான இடத்தில், தகுதியான காலத்தில், தகுதியுள்ள ஆளுக்கு (பாத்ரம்) கொடுப்பதே உத்தம தானம்; உயர்ந்த தானம் (17-20)

 

தாதவ்யமிதி யத்தானம் தீயதே அனுபகாரிணே

தேசே காலே ச பாத்ரே ச தத்தானம் சாத்விகம் ஸ்ம்ருதம்

 

இந்த ஸ்லோகத்தில் இன்னொரு வரியையும் சேர்த்துள்ளார்

நமக்கு உதவி செய்யாத ஒருவருக்கு தானம் செய்ய வேண்டும்.

அதாவது ஏற்கனவே நமக்கு ஏதோஒரு வகையில் உதவி செய்தததால் அந்த நபருக்கு தானம் கொடுத்தால் அது தானம் இல்லை. அது நன்றிக் கடன் ஆகும்.

 

ராஜச தானம் எது?

 

 

யத் து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திஸ்ய வாபுன:

தீயதே ச பரிக்லிஷ்டம் தத் தானம் ராஜசம் ஸ்ம்ருதம் —17-20

 

பின்னொரு காலத்தில் இவன் உதவி செய்வான் என்று கருதியோ பயனைக் கருதியோ செய்யப்படும் தானமும், மனவருத்தத்துடன் செய்யப்படும் தானமும் ராஜசம் என்று கூறப்படும்.

 

 

கடைசியாக மூன்றாவது  வகை தானத்தைப் பற்றி கூறுவார் கிருஷ்ணன்:-

 

அதேசகாலே யத்தானம் அபாத்ரேப்யஸ்ச தீயதே

அசத்க்ருதம் அவக்ஞாதம் தத்தாதமச உதாஹ்ருதம் (17-22)

 

தகுதியற்ற இடத்திலும் காலத்திலும் தகுதியற்றவர்களுக்கும் (அபாத்ரம்)

மதிப்பின்றி, அவமானப்படுத்தும் வகையிலும் எது கொடுக்கப்படுகிறதோ அது தாமசம் என்று கூறப்படும்.

 

சிலர் அரசியல் கட்சிகளுக்கும் சிலர் பயங்கரவாத இயக்கங்களுக்கும் மிரட்டிப் பணம் பறிப்பர். குடி போதைக்கும் போதை மருந்துகளுக்கும் அடிமையானோர் பணம் கேட்பர். அவர்களுக்குக் கொடுப்பத எல்லாம் கொடை என்றாலும், கடைத்தரமான நன்கொடையாகும்.

 

இன்னும் சிலர் நல்ல காரியங்களுக்காக நன்கொடை வசூலிக்கப் போனால் நாக்கில் நரம்பின்றித்  தூற்றுவர். இன்னும் சிலர் “இன்று போய் நாளை வா” என்று தினமும் சொல்லி காலம் கடத்துவர். இறுதியில் நாமே போகாமல் இருப்போம். இவை எல்லாம் கடைத்தர தானம்.

வள்ளுவனும் அழகாகச் சொல்லுகிறான்:

வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்

குறியெதிர்ப்பை நீரதுரைத்து (குறள் 221)

 

வறுமையில் வாடுவோருக்குக் கொடுப்பதே தாஅனம். மற்ற தானங்கள் எல்லாம் பலனை எதிர் பார்த்துக் கொடுப்பதே ஆகும்.

cbe-peacocks-mayil

இப்பொழுது ஒருவருக்குக் கொடுத்தால் அது புண்ணியத்தைச் சேர்க்கும். அதுவே போகும் வழிக்குத் துணையாகும் என்று வேதம் சொல்லும். அதியே வள்ளுவனும் சொல்லுவான்:

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி (226)

 

பிறருடைய பசியைத் தீர்ப்பதே பெரிய தருமம்/அறம். அப்பொருள் பிற்காலத்தில் தனக்குச் சேர்த்து வைக்கும் இடமாகும்.

 

ஆனால் இப்படிச் செய்வது இரண்டாம் வகை தானம் (தாமசம்).

புறநானூற்றில் தானம்

 

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணின்கன் ஆய் அல்லன்;

என்று ஆய் அண்டிரனை முடமோசியார் பாராட்டுகிறார் (பூரம் 184)

 

அதாவது அடுத்த ஜன்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்பதற்காக ஆய் அண்டிரன் தானம் செய்யவில்லை. பிறருடைய வறுமையைக் கண்ட மாத்திரத்தில் இயல்பாகப் பொங்கி எழும் மனிதாபிமான அடிப்படையில் வாரி வழங்குவானாம்! இது முதல் வகைத் தானம். ஆய் அண்டிரன், பேகன், கர்ணன், பாரி வள்ளல் போன்றோர் சாத்வீக (உத்தம) தானம் செய்தோர் ஆவர்.

 

 

பேகன் என்னும் குறுநில மன்னனை பரணர் பாடிய பாடலிலும் (புறம் 141) இக்கருத்து எதிரொலிக்கிறது.

எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று என

மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர் வறுமை நோக்கின்று அவன் கை வண்மையே

 

மழை மேகத்தைக் கண்டு தோகை விரித்தாடிய மயில், குளிரால் நடுங்குகிறது என்று எண்ணி, மயிலுக்குக்குப் போர்வை அளித்தவன் பேகன்!

 

–subham–

 

 

தங்கத் தமிழாம் சங்கத் தமிழ் தெய்வத் தமிழே! (Post No.3278)

adi-perukku-sri-rangam

Written by S. NAGARAJAN

Date: 23 October 2016

Time uploaded in London: 5-50 AM

Post No.3278

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

By ச.நாகராஜன்

 

தமிழ் இன்றேல் தெய்வம் இல்லை; தெய்வம் இன்றேல் தமிழ் இல்லை. இரண்டும் இரண்டறப் பின்னிப் பிணைந்தவை என்பதை தமிழ் இலக்கியம் காட்டும்; தமிழ்ப் பண்பாடு காட்டும். தமிழ்ச் சமூகம் காட்டும்.

 

இதை உடைக்க நினைப்பவர் உடைபட்டுப் போவர்.

பிரம்மாண்டமான வரலாறைக் கொண்ட தமிழ் இலக்கியத்தில் தெய்வத்தைப் பிரித்தால் மிஞ்சுவது சவமே.

அதாவது சிவ இலக்கியம் சவ இலக்கியம் ஆகி விடும்!

சங்க இலக்கியம் மிகவும் பழமையானது.

1000-krishnas

அதில் தெய்வம் பற்றிய பாட்லகள் ஏராளம் உள்ளன. அனைத்தையும் தொகுத்து விளக்கினால் அது ஒரு கலைக் களஞ்சியமாக ஆகி விடும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்ட குறிப்புகள் கீழே உள்ளன.

விநாயகரிலிருந்து ஆரம்பிப்போம்

 

  • விநாயகர் :                                               ஒருகைமுகன் தம்பியே (திருமுருகாற்றுப்படையில் காணப்படும் வெண்பா 7)
  • சிவன் முதுமுதல்வன்  (புறம் 166)                           தொல்முது கடவுள் (மதுரைக் காஞ்சி 42)

பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்

கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்

தொல்புகழ் த்ந்தாரும் தாஅம்

(பரிபாடல் திரட்டு  1: 72-78)

  • உமை கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ (கலைத்தொகை கடவுள் வாழ்த்து 7)
  • திருமால் மறு பிறப்பறுக்கும் மாசில் சேவடி மாயோனே    (பரிபாடல் 3)

 

  • இலக்குமி அகனமர்ந்து செய்யாள் (குறள் 84)

அவ்வித்து செய்யவள்   (குறள் 167)

  • பிரம்மா- நான்முகன் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டி   (திருமுருகாற்றுப்படை 164-165)

 

  • முருகன் முருகமர் மாமலைப் பிர்ந்தெனப் பிரிமே (ஐங்குறுநூறு 308;4)                                               ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து (அக்நானூறு 149-16)
  • தெய்வயானை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் (திருமுருகாற்றுப்படை -6)
  • வள்ளி என்னுள் வருதியோ நல்நடை கொடிச்சி                     முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல நின் (நற்றிணை 82 3,4)
  • இராமன் கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை     வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை    (புறநானூறு 358 :18,19)

 

  • பலராமன், கண்ணன்

 

பால்நிற உருவின் பனைக்கொடியோனும்

நீல்நிற  உருவின் நேமியோனும் என்று

இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு

(புறநானூறு 58)   இப்படி ஏராளமான குறிப்புகளைச் சங்க இலக்கியத்த்தில் பரக்கக் காணலாம்.

adi-velli-muslims

இதை யார் படித்து விடப் போகிறார்கள் என்ற நோக்கில் தமிழர் பண்பாடு என்பது தெய்வத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பண்பாடு என்பது போலவும் தெய்வங்களைப் பற்றிப் பழைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடவில்லை என்றும் தன் சொந்த உள் நோக்கிற்காக வெள்ளையரின் வழியில் கடந்த அறுபது ஆண்டுகளாக நாத்திக பிரச்சாரம் நடைபெறுகிறது.

 

இவர்கள் தெய்வத்தை நம்பவில்லை என்றால் தமிழையும் நம்பக் கூடாது. தமிழை நம்பினால் அது சுட்டிக்காட்டும் தெய்வீகப் பண்பாட்டையும் மதித்துத் தழுவ வேண்டும்.

இல்லையேல் இவர்கள் அனைவரும் ‘ஜோம்பிகளாகத்’ தான் வாழ வேண்டும். ஜோம்பி என்பது கல்லறையில் புதைக்கப்பட்டு திடீரென்று இருளில் எழுந்து நடமாடும் சவம் என்ப்தை அனைவரும் அறிவர்.

 

தாங்கள் ஜோம்பிகளாக மாறியதோடு மொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் ஜோம்பிகளாக மாற்ற முயலும் இவர்களை என்ன்வென்று சொல்வது?

 

தமிழர்கள் விழிப்புணர்வுடன் சங்க இலக்கியத்தைத் தாமே ஊன்றிப் படிக்க வேண்டும். அது காட்டும் பண்பாட்டை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

 

குமரி முனையில் ஆரம்பித்து இமயமலை வரை  முடிந்த் இடம் எல்லாம் சென்று நமது பண்பாட்டை ஊன்றிக் கவனிப்பதுடன் தனது ஆன்மீக அனுபவங்களைச் சிலரிடமாவது சொல்லி நல்லனவற்றைப் பரப்ப வேண்டும்.

ahmedabad-visarjan

சங்க இலக்கியம் தங்க இலக்கியம் அது தெய்வ இலக்கியமே!

**********

 

தொல்காப்பியர் சொல்லும் அதிசயச் செய்தி- உவம உருபுகள் (Post No.3273)

img_9178

Written by London Swaminathan

 

Date: 21 October 2016

 

Time uploaded in London: 5-50 AM

 

Post No.3273

 

Pictures are taken from Wikipedia and other sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

 

 

நான் தொல்காப்பிய அதிசயங்கள் என்று எழுதிய இரண்டு கட்டுரைகளில் 17 அதிசயங்களை விளக்கினேன். இப்பொழுது இன்னொரு அதிசயத்தை விரிவாகக் காண்போம். இது தவிர தொல்காப்பியம் பற்றி பத்துக்கும் மேலான கட்டுரைகள் எழுதினேன். அவைகளையும் காண்க.

 

38 உவம உருபுகள் பட்டியலைத் தொல்காப்பியர் தருகிறார். ஆனால் இவைகளில் 14 உவம உருபுகள் சங்க இலக்கியத்தில் கூடக் காணப்படவில்லை. இதனால் நாம் அறிவது யாது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

 

முதலில் உவம உருபு என்றால் என்ன தெரியாதவர்களுக்கு அதை விளக்குகிறேன்:-

 

ராமனைப் போல பரதன் நல்லவன் (Rama is LIKE Bharata; Rama is as good as Bharata)

 

சீதையைப் போல (LIKE) சாவித்திரி ஒரு பத்தினிப் பெண்

 

என்பதில் போல (LIKE, As) என்பது உவம உருபாகும். உவம என்பது சம்ஸ்கிருதச் சொல். ஆனால் தொல்காப்பியர் இதை ஒரு இயலுக்குத் தலைப்பாகக் கொடுக்கவும் தயங்கவில்லை.

img_9179

 

நமக்குத் தெரிந்தது “போல” “நிகர்த்த” என்ற சில சொற்கள்தான். ஆனால் அவரோ 38 உருபுகளைப் பட்டியலிடுகிறார். அதில் 14 உருபுகளை 400-க்கும் மேலான புலவர்கள் எழுதிய சுமார் 2500 பாடல்களில் காணக்கூட இயலவில்லை.

 

இதன் பொருள் என்ன?

 

நான் முன்பு எழுதிய பல கட்டுரைகளில் தொல் காப்பியம் என்பது தற்போதைய நிலையில் கிடைப்பது கி.பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததுதான் என்றும் அவரே 250-க்கும் மேலான இடங்களில் மற்றவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் (என்ப, மொழிப) என்றெல்லாம் எழுதி இருக்கிறார் என்றும் எழுதினேன்.

 

ஆக தொல் காப்பியர் தனக்கு முன்னால் இருந்த இலக்கிய, இலக்கண நூல்களில் இருந்ததைத் தொகுத்துத் தந்திருக்கிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

 

இதில் அதிசயம் என்ன இருக்கிறது?

 

சங்க இலக்கியத்திலேயே 14 உவம உருப்புகள்  மறைந்து, தொல்காப்பியர் சொல்லாத சில உவம உருபுகளும் வந்திருப்பதால் — பலர் கருதுவது போல தொல்காப்பியத்தை முதல் நூற்றாண்டை ஒட்டிய நூல் என்று கொண்டால் — அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னராவது தமிழ் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அதாவது கி.மு 500 வாக்கில் பல தமிழ் நூல்கள் இருந்திருக்க வேண்டும். அவை எல்லாம் காலப் போக்கில் மறைந்து விட்டதால் 14 உவம உருபுகள் பயனில்லாமற் போய்விட்டன அல்லது மறந்து போயினர்.

 

சிலர், இதைக் கொண்டு, அப்படியானால் தொல்காப்பியரும் காலத்தினால் முந்தையவராகத்தானே இருக்க வேண்டும் என்று வாதிடலாம். அப்படி வாதிட முடியாமைக்கான காரணங்களை தொல்காப்பியர் காலம் தவறு என்ற தலைப்பில் 3 கட்டுரைகளில் தந்து விட்டதால் அரைத்த மாவையே அரைக்கப் போவதில்லை.

 

தொல்காப்பியர் இன்னும் சில சுவையான செய்திகளைச் சொல்லுகிறார். அதாவது 38 உவம உருபுகளை நான்கு குழுக்களாகப் பிரித்து அவை சிற்சில இடங்களில் மட்டுமே பயன்படுதப்படும் என்கிறார். சங்க காலத்தில் அப்படிக் குறிப்பிட்ட வரையறைக்குள் உவம உருபுகள் பயன்படுத்தப் படவில்லை. ஆக சங்க இலக்கியத்துக்கு முன்னர் ஒரு பெரிய தொகுதி தமிழ் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அதில் தொல்காப்பியர் சொல்லும் இலக்கண விதிகள் பின்பற்றப்படிருக்க வேண்டும். இவை எல்லாம் தமிழ் அன்பர்களுக்கு இனிப்பான செய்தி.

 

இன்னொரு சுவையான விஷயம் அவர் சொல்லும் பல உவமை உருபுகளை நாம் இன்று வேறு பொருளில் பயன்படுத்துகிறோம். “ஏய்க்கும்: என்றால் ஏமாற்றும் என்று நாம் அர்த்தம் செய்வோம். ஆனால் இதற்குப் “போல” (Like) என்று அர்த்தம்! இதே போல காய்ப்ப, கடுப்ப, கள்ள, ஒடுங்க, நாட, வியப்ப, வென்ற, வெல்ல முதலிய பல சொற்கள் “போல” (like) என்ற உவம உருபு போல பயன்படுத்தப் படுகின்றன.

 

இந்த உவம உருபுகள் பட்டியலை டாக்டர் ரா. சீனிவாசன் எழுதிய சங்க இலக்கியத்தில் உவமைகள் என்ற ஆராய்ச்சி நூலில் கொடுத்துள்ளார். இதோ அந்தப் பட்டியல்:-

img_9177

“தொல்காப்பியர் உவம உருபுகளை வினை, பயன், மெய், உரு என நான்கு வகைகளாகப் பிரித்து 38 உவம உருபுகளும் எந்த வகை என்றும் கொடுத்துள்ளார். இந்த வரையறை சங்க காலத்தில் பின்பற்றப்படவில்லை.

 

சூத்திரம் 286-இல் 36 உவம உருபுகளையும், 287- இல் ஒன்றும் சூத்திரம் 291-இல் ஒன்றுமாக 38 உருபுகள் உள்ளன.

 

அகர வரிசையில் உவம உருபுகள்:

அன்ன, ஆங்க, இறப்ப, உறழ, என்ன, எள்ள, ஏய்ப்ப, ஒன்ற, ஒடுங்க, ஒப்ப, ஒட்ட, ஓட, கடுப்ப, கள்ள, காய்ப்ப, தகைய, நடுங்க, நந்த, நளிய, நாட, நிகர்ப்ப, நேர, நோக்க, புல்ல, புரைய, பொருவ, பொற்ப, போல, மதிப்ப, மருள, மறுப்ப, மான, மாற்ற, வியப்ப, விளைய, வீழ, வெல்ல, வென்ற

 

இவைகலைள தனித் தனியே கொடுத்தால் நாம் இன்று வேறு அர்த்தம் சொல்லுவோம். அத்தனைக்கும் “போல” (LIKE) என்றே பொருள்!

 

இந்தப் பட்டியலில்  சங்க இலக்கியத்தில் வழக்கொழிந்த 14 உவம உருபுகள்:–

இறப்ப, ஒன்ற, ஒடுங்க, ஓட, ஒட்ட, கள்ள, நடுங்க, நந்த, நாட புல்ல, மதிப்ப, மறுப்ப, வியப்ப

 

சங்க கலத்தில் தொல்காப்பியர் சொல்லாத 28 புதிய உவம உருபுகளும் வந்துவிட்டன! அவை:- அமர், அவிர், ஆக, இகலிய, இயல், ஈர், உரைக்கும், ஏக்குறும், ஏதம் ஏர், ஓடு, ஓங்கு, ஓர்க்கும், சால, சினை இய, சேர், செத்து, தேர், தோய், நவில, நான நாறு ,மலி, மயங்கு, மாய் முரணிய, வாய்ந்த வவ்வும்.

 

தமிழ் எவ்வளவு வளமான மொழி, எவ்வளவு பழமையான மொழி, என்பதற்கு இவை எல்லாம் சான்று பகரும். அதுமட்டுமல்ல. பழைய உவம உருபுகள் மறைந்து புதிய உருபுகள் தோன்ற எவ்வளவு கால இடைவெளி ஏற்பட்டிருக்கும் பாருங்கள்!

 

சில சுவையான எடுத்துக் காட்டுகள்

 

ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் – கலித்தொகை 20-11

வாயில் ஊறும் இதழ்நீர் அமிர்தம் போல இருக்கும்.

ஏய்க்கும்= போல

கார்மழை முழக்கிசை கடுக்கும் – அகம் 14

கார்காலத்து மழை, முழவு ஒலி எழுப்புவது போல ஒலிக்கும்

கடுக்கும் =போல

 

செத்த, இறப்ப என்றால் நாம் மரணம் என்று பொருள் கொள்ளுவோம். ஆனால் அந்தக் காலத்தில் இவை “போல” (LIKE) என்ற பொருளில் பயனடுத்தப்பட்டன!

 

வாழ்க தொல்காப்பியர்! வளர்க தமிழ்!!

 

–SUBHAM–

புத்த தரிசனம் (Post No.3263)

buddha-china

Written by S. NAGARAJAN


Date: 18 October 2016

Time uploaded in London: 6-24 AM

Post No.3263

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

வலை வாசம்!

பாக்யா 14-10-2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

புத்த தரிசனம்

 

By ச.நாகராஜன்

 

இணைய தளத்தில் ஆயிரக்கணக்கான ப்ளாக்குகள்! வலைகளில் பூக்கும் மலர்களின் வாசமே தனி தான்!

அறிவியல் ஆன்மீகம், உள்வியல், திரைப்படம், கவிதை, கதை, ஜோக் என எந்தப் பொருளிலும் அறிய வேண்டிய ஆர்வமூட்டும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

சாம்பிளுக்கு ஆன்மீகத்தில் ஒன்று ஜோக்கில் ஒன்று பார்ப்போம்:

 

புத்த தரிசனம்

 

முன்னொரு காலத்தில் சீனாவில் நடந்தது இது. யுங் ஃபு என்ற ஒரு இளைஞன் சிசுவான் என்ற இடத்தை நோக்கிப் பயணமானான். அவனது இலட்சியம் போதிசத்வர் வூஜியைத் தரிசிப்பது தான்!

வூஜி என்றால் எல்லையற்ற அல்லது அளவே இல்லாத என்று பொருள்.

 

செல்லும் வழியில் பிட்சு ஒருவரை அவன் பார்த்தான்.

“நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார் பிட்சு.

இளைஞன் போதிசத்வர் வூஜியைத் தரிசித்து அவரிடம் சிஷ்ய்னாகப் போவதாக பதிலிறுத்தான்.

“புத்தரைப் பார்ப்பது என்பது போதிசத்வர் வூஜியைப் பார்ப்பதற்கு இணையாகாது:”என்றார் துறவி.

 

 

இளைஞன் ஒத்துக் கொண்டான். ஆனால் புத்தரை எப்படிப் பார்க்க முடியும்.

அது இறுதியான ஞானம் அடையும் போதல்லவா முடியும்!

‘புத்தரை எங்கே பார்ப்பது?” என்று திகைப்புடன் வினவினான் இளைஞன்.

 

“ஒன்றும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறிய பிட்சு, “இப்போது புத்தர் உங்கள் வீட்டிலே தான் இருக்கிறார்!” என்றார்.

திகைத்துப் போன இளைஞன்.” அப்படியா! அவர் புத்தர் தான் என்பதை எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? அடையாளம் என்ன?” என்று கேட்டான்.

 

buddha-erkadu

“ஒன்றும் சிரமமில்லை. ஒரு போர்வையைத் தாறுமாறாகப் போர்த்திக் கொண்டு செருப்பை யார் மாற்றி அணிந்திருக்கிறாரோ அவர் தான் புத்தர். அடையாளம் காண்பது எளிது!” என்றார் பிட்சு.

மனம்  மகிழ்ந்த இளைஞன் அவரை அடி பணிந்து வணங்கி உட்னே தன் வீட்டிற்குத் திரும்பினான்.

 

ஒடோடி வந்த அவன் தன் வீட்டுக் கதவைத் தடதடவென்று தட்டி அம்மா என்று அழைத்தான்.

தன் பிள்ளையின் குரலைக் கேட்ட வயதான தாய் மனம்  மகிழ்ந்தாள். வயதான அவள் ஒரு பாயில் படுத்துக் கிடந்தாள். மனமோ நெடுந்தூரம் சென்றிருந்த தன் மகன் ந்ல்லபடியாக இருக்க வேண்டுமே: என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தது. அவன் நலத்தைப் பற்றியே ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்த அவள் தன் மகனின் குரலைக் கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தாள்.

 

 

போர்த்தியிருந்த போர்வையை அப்படியே மூடிக் கொண்டாள். விரைவாக ஓடோடி வந்த அவள் செருப்பைத் தாறுமாறாக மாற்றி அணிந்தாள். கதவைத் திறந்தாள்.

 

இளைஞன் தன் தாயைக் கண்டான். போர்வை தாறுமாறாக, செருப்புகள் மாறி இருக்க;… அவரே புத்தர்! பிட்சுவின் வாசகங்கள் நினைவிற்கு வந்தன.

 

தனது தாயின் முகத்தைப் பார்த்தான்.

எல்லையற்ற ஆனந்தம் பூத்திருக்கும் முகத்தைக் கண்டான். அங்கிருந்து பொழியும் அன்பை உணர்ந்தான்.

அந்த கணத்தில அவன் மனதில் அமைதி நிலவியது. ஆனந்தம் பொங்கியது. அவனுக்கு பரிபூரண ஞானம் ஏற்பட்டு விட்டது;

 

 

புத்த தரிசனமும் ஞானமும் அவனுக்குக் கிடைத்து விட்டது.

 

எனக்கும் அந்தத் தொழில் தான்!

 

இனி வலையில் ப(பி)டித்த ஒரு ஜோக் ..

 

ஒரு மூளையியல் நிபுணர் தன் காரை ரிப்பேருக்குக் கொடுத்திருந்தார்.

மெக்கானிக்கை அணுகிய அவர், “என்ன எல்லா வேலையும் முடிந்ததா? கியர் சரியாகி விட்டதா? சார்ஜ் எவ்வளவு?” என்று கேட்டார்.

 

“எல்லாம சரியாக இருக்கிறது” என்று உறுதிபடக் கூறிய மெக்கானிக், “சார்ஜ் அதிகமில்லை. எழுநூறு ரூபாய் தான்” என்றான்.

 

திகைத்துப் போன நியூரோ சர்ஜன், “ எழுநூறா! எனக்குக் கூட அவ்வளவு கிடைப்பதில்லையே!” என்றார்.

 

“டாக்டர், அதனால் தான் அந்தத் தொழிலிலிருந்து நான் இதற்கு மாறி விட்டேன்!” என்றான் முன்னாள் நியுரோ சர்ஜனான அந்த இந்நாள் மெக்கானிக்!

*******

 

இரண்டு கூழாங்கற்கள்! (Post No.3187)

pebbles

WRITTEN BY S.NAGARAJAN

Date: 25 September 2016

Time uploaded in London: 5-35 AM

Post No.3187

Pictures are taken from various sources; thanks.

 

 

உத்வேகமூட்டும் கதைத் தொடரில் இன்னும் ஒரு கதை!

 

இரண்டு கூழாங்கற்கள்!

ச.நாகராஜன்

 

 

பல ஆண்டுகளுக்கு முன்னால் இத்தாலியில் ஒரு சிறிய நகரில் நடந்த சம்பவம் இது.

 

ஒரு வியாபாரி லேவாதேவிக்காரர் ஒருவரிடம் பெரிய தொகை ஒன்றைத் தன் வணிகத்திற்காகக் கடன் வாங்கி இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது வியாபாரம் பெரும் நஷ்டமடைந்து வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் போனது. அவருக்கு அழகிய மகள் ஒருத்தி உண்டு. அவள் புத்திசாலியும் கூட.

 

 

கடன் கொடுத்த லேவாதேவிக்காரருக்கு வியாபாரியின் அழகிய மகளின் மீது ஒரு கண். எப்படியாவது அவளை  மனைவியாக அடைய அவர் திட்டம் தீட்டினார்.

வியாபாரியிடம் வந்தார்.

 

“இனியும் கடன் தொகையைப் பெறாமல் இருக்க முடியாது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். ஒன்று கடன் தொகையைத் திருப்பித் தாருங்கள்.அல்லது உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுத்து விடுங்கள். அப்படித் திருமணம் செய்து  கொடுத்து விட்டால் கடன் தொகையைக் கேட்கவே  மாட்டேன். என்ன சொல்கிறீர்கள்?”

லேவாதேவிக்காரரின் இந்தப் பேச்சைக் கேட்டவுடன் வியாபாரியும் அவரது மகளும் திடுக்கிட்டனர்.

லேவாதேவிக்காரர் அவரது மகளின் அபிப்ராயத்தைத் தெரிந்து கொள்ள ஒரு வழியைச் சொன்னார்.

 

 

ஒரு பையில் கறுப்பு நிறக் கூழாங்கல் ஒன்றும் வெள்ளை நிறக் கூழாங்கல் ஒன்றும் போடப்படும்.அதில் கையை விட்டு ஏதேனும் ஒன்றை அவரது மகள் எடுக்க வேண்டும். கறுப்பு நிறக் கூழாங்கல் கையில் வந்தது என்றால் லேவாதேவிக்காரரின் மனைவியாக் அவள் ஆகி விடுவாள். கடன் தொகையும் தள்ளுபடியாகி விடும். வெள்ளை நிறக் கூழாங்கல்லை அவள் எடுத்தாலோ அவள் அவரை மணந்து  கொள்ள வேண்டாம். ஆனாலும் அப்போதும் வியாபாரியின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். ஆனால் அவள் எந்த ஒரு கல்லையும் எடுக்க மறுத்து விட்டால் அவளது தந்தையார் போலீஸ் வசம் ஒப்புவிக்கப் படுவார்.

 

 

அவர்கள் ஒரு கூழாங்கற்கள் நிறைந்த ஒரு நடைபாதை வழியே சென்று கொண்டிருந்தனர். திடீரென்று குனிந்த லேவாதேவிக்காரர் இரு கற்களை எடுத்தார்.

pebbles-2_aw_c

வியாபாரியின் மகளின் கூரிய கண்கள் அவர் கைகளைக் கவனித்தன. அவர் எடுத்தது இரண்டுமே கறுப்பு நிறக் கூழாங்கற்கள்.

 

அவரது சதித்திட்டத்தை மகள் நன்கு புரிந்து கொண்டாள்.

இப்போது என்ன செய்வது?

 

லேவாதேவிக்காரர் மகளை நோக்கிக் கூறினார்: “பைக்குள் இருக்கும் கற்களில் ஏதேனும் ஒன்றை எடு!”

மகள் பையில் கையை விட்டு ஒரு கல்லை எடுத்தாள்.

அதைத் திறந்து காண்பிக்கும் முன்னர் தானாக அது விழுவது போல நழுவ விட்டாள்.

 

அந்தக் கல் கூழாங்கற்களின் குவியலில் விழுந்தது.

“அடடா” என்று அலறிய அந்தப் பெண், “அதனால் என்ன, பரவாயில்லை. பைக்குள் இருக்கும் கல் எது என்று பார்த்து விட்டால் நான் எடுத்த கல்லின் நிறம் தெரிந்து விடுமே” என்றாள்.

 

உள்ளே இருந்தது கறுப்பு நிறக் கல். அப்படியானால் அவள் எடுத்தது வெள்ளை நிறக் கல்லாகத் தானே இருக்க வேண்டும்.

 

லேவாதேவிக்காரர் தலை குனிந்தவாறே அங்கிருந்து அகன்றார்.

 

சில சமயம் மாற்றி யோசிக்க வேண்டும். அதுவும் ஒரு கணத்தில் யோசித்து சரியாக முடிவை எடுக்க வேண்டும்.

உலகில் சாமர்த்தியமாக வாழும் வழி இது தான்!

 

********

ஐந்து அத்தியாயங்களில் ஒரு சுயசரிதை! (Post No.3176)

portia_nelson_0

WRITTEN BY S NAGARAJAN

Date: 22 September 2016

Time uploaded in London:5-41 AM

Post No.3176

Pictures are taken from various sources; thanks.

 

 

 

 

உத்வேகமூட்டும் கதைகளின் தொடர்

 

ஐந்து அத்தியாயங்களில் ஒரு சுயசரிதை!

ச.நாகராஜன் 

 

உத்வேகமூட்டும் கதைகளில் இரண்டைப் (ஒரு பெனிசிலின் கதை அத்தியாயத்தில்) பார்த்தோம். இதோ இன்னும் இரண்டு!

 

ஐந்து அத்தியாயங்களில் ஒரு சுய சரிதை என்ற இந்தச் சுயசரிதையை எழுதியவர் போர்ஷியா நெல்ஸன் (Portia Nelson)

கதை நல்ல ஒரு நீதியை நமக்குப் போதிக்கும்.

 

 

முதல் அத்தியாயம்

 

நான் தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.

அங்கு ஓரத்தில் ஒரு பள்ளம் இருந்தது. நல்ல ஆழமான பள்ளம்.

அதில் விழுந்தேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அது எனது தவறு தான்!

அதிலிருந்து மீள்வதற்கு நெடு நேரம் ஆனது.

 

 

இரண்டாம் அத்தியாயம்

 

நான் அதே தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.

அங்கு ஓரத்தில் ஒரு பள்ளம் இருந்தது.

அதைப் பார்க்காதது போல பாசாங்கு செய்தேன்.

அதில் மீண்டும் விழுந்தேன்.

அதே இடத்தில் விழுந்ததை என்னாலேயே நம்பமுடியவில்லை

ஆனால் அதில் எனது தவறு இல்லை.

அதிலிருந்து மீண்டு வருவதற்கு நெடு நேரம் ஆனது.

 

 

மூன்றாம் அத்தியாயம்

 

நான் அதே தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.

அங்கு ஓரத்தில் மிக ஆழமான ஒரு பள்ளம் இருந்தது.

அது அங்கு இருப்பதைப் பார்த்தேன்.

இருந்தபோதிலும் அதில் விழுந்தேன். அது ஒரு பழக்கம்,

என் கண்கள் திறந்தே தான் இருந்தன.

நான் எங்கு இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும்.

அது எனது தவறு தான்.

உடனடியாக் அதிலிருந்து மீண்டு விட்டேன்.

 

 

 

நான்காம் அத்தியாயம்

 

நான் அதே தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.

அங்கு ஓரத்தில் மிக ஆழமான ஒரு பள்ளம் இருந்தது.

அதைச் சுற்றிப் போய் விட்டேன்.

 

ஐந்தாம் அத்தியாயம்

நான் இன்னொரு தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.

எழுதியவர் போர்ஷியா நெல்ஸன்

 

eye

 

பணக்கார பிரபுவின் வியாதி!

 

பணக்கார பிரபு ஒருவர் இருந்தார். அவருக்குக் கண்ணில் வலி.

வலி தாங்க முடியவில்லை. பல டாக்டர்களிடம் கண்ணைக்  காண்பித்தார். வலி தீரவில்லை. ஏராளமான நிபுணர்களை அழைத்தார். வண்டி நிறைய மருந்துகள் வந்து சேர்ந்தன.

எதையும் விடவில்லை.ஆனால் கண்வலி போன பாடில்லை! இன்னும் அதிகமாக வலிக்க ஆரம்பித்தது.

ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

 

 

கடைசியில் ஒரு துறவி அவனிடம் வந்தார். அவரிடம் தன் நிலைமையைச் சொல்லி அழுதார் பிரபு.

துறவி கூறினார்; “ஒன்றுமே இல்லை, இது. சுலபமாகக் குணம் ஆகி விடும். நீங்கள் சில காலம் பச்சையாக இருப்பதை மட்டுமே பார்க்க வேண்டும், அவ்வளவு தான். நான் வருகிறேன்.”

அவர் கிளம்பி விட்டார்.

 

சிகிச்சையோ விநோதமாக இருந்தது. ஆனால் எளிதாகப் பின்பற்றக் கூடியது தானே!

 

பிரபு ஏராளமான பெயிண்டர்களை உடனே வரவ்ழைத்தார். பார்க்கும் இட்மெல்லாம் பச்சை வண்ணத்தை அடிக்கப் பணித்தார்.

எங்கு நோக்கினும் பச்சை! ஒரே பச்சை.

 

 

பீப்பாய் பீப்பாயாக பச்சை வண்ணம் அவர் மாளிகையில் எப்போதும் இருக்க ஆரம்பித்தது. எதைப் பார்த்தாலும் அது பச்சையாக இருக்க வேண்டுமே!

 

சில நாட்கள் கழிந்தன. துறவி மீண்டும் பிரபுவைப் பார்க்க வந்தார். அவரைப் பார்த்த காவலாளிகள் ஓடோடிச் சென்று ஒரு பீப்பாய் பச்சை வண்ணத்தை எடுத்து வந்து அவர் மீது தெளித்தனர்.

ஏனெனில் அவர் காவி ஆடையை அணிந்திருந்தார். அவரைப் பச்சை ஆக்கி விட்டனர்.

 

துறவி சிரித்தார்.

 

“அடடா! பச்சையாக் எதையும் பிரபு பார்க்க வேண்டுமே என்பதற்கா இந்தப் பாடு. நீங்கள் இப்படி உலகத்தையே பச்சை ஆக்குவதற்குப் பதில் ஒரு பச்சைக் கண்ணாடியை வாங்கி பிரபு அணிவதற்குக் கொடுத்திருக்கலாமே! முழு உலகையும் பச்சை ஆக்குவது சாத்தியமா, என்ன!”

 

நாமும் நமது பார்வையை மாற்றிக் கொண்டால் உலகமும் அதன்படியே தோற்றமளிக்கும்!

 

உலகை மாற்ற முயல்வது முட்டாள் தனம்! முதலில் ந்மது பார்வையை ஒழுங்காக ஆக்கிக் கொள்வோம்!”

 

குட்டிக் கதைகள் தாம், ஆனால் போதிக்கும் நீதியோ!

 

 

************

 

 

 

பாட்டிற்கோ பாரதியே தான்! (Post No 3145)

statue-bharati

Written by S NAGARAJAN

Date: 11 September 2016

Time uploaded in London: 21-24

Post No.3145

Pictures are taken from various sources; thanks.

 

செப்டம்பர் 11 : பாரதி நாள்!

.நாகராஜன்

 

bharati-malar

வெந்துயரில் வீழ்ந்திருந்த பாரதத்தை வாழவைக்கத்

தந்துயரம் பாராத சான்றோருள்இந்தியமா

நாட்டிற்கோ காந்தியெனில் நாமெழவே கூவிட்ட

பாட்டிற்கோ பாரதியே தான்

 

செய்யுநலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்

உய்யுநலம் காட்டியவன் ஓர் கவிஞன்நெய்யுமொரு

கூட்டிற்கோ தேன்கூடு கொட்டுதமிழ்ச் சந்தமொழி

பாட்டிற்கோ பாரதியே தான்

 

வீட்டிற்கோ குலமகளிர் வீதிக்கோ நல்லோர்பள்ளி

காட்டிற்கோ உயிர்தருமொரு சஞ்ஜீவனிஇந்தியமா

நாட்டிற்கோ வேதரிஷிகள் கவிதையெனில் தமிழ்ப்

பாட்டிற்கோ பாரதியே தான்

வேறு

இந்தியர் தம் நெஞ்சினிலே தேசப்பற்றை ஊட்டினான்

வஞ்சக வெள்ளையரை நாட்டைவிட்டு ஓட்டினான்

தமிழர்க்குத் தமிழ் போற்றும் வழி காட்டினான்

புகழோங்கு பாரதத்தை நிலை நாட்டினான்

புதியதொரு பாதையைப் புவியினிலே காட்டினான்

புகழவோர் வார்த்தையிலை புகழுக்கே புகழ் ஊட்டினான்

புண்ணியன் சுப்பிரமணி பாரதியின் பெருமையினை

எண்ணியெண்ணி அவன்வழி நடப்போம் உயர்வோம்

********

 

 

 

தீப்போல தகிக்கும் ஐந்து விஷயங்கள் (Post No.3141)

copper-_copper

Written by London Swaminathan

 

Date: 10 September 2016

 

Time uploaded in London: 21-45

 

 

Post No.3141

 

Pictures are taken from various sources; thanks.

 

 

பார்யா வியோக: சுஜனா அபவாத:

ருணஸ்ய சேஷம் குஜனஸ்ய சேவா

தாரித்ரய காலே ப்ரியதர்சனம் ச

வினாக்னினா பஞ்ச தஹந்தி காயம்

 

பொருள்:–

தீ இல்லாமலே உடலை தகிக்க வைக்கும் ஐந்து விஷயங்கள்:–

மனைவியின் பிரிவு, நல்லவர்கள் செய்யும் தீய செயல், கடன் மிச்சம், கெட்டவர்களிடம் வேலை செய்தல், வறுமையில் வாடுகையில் விருந்தினர் வருகை ஆகிய ஐந்தும் உடலை தகிக்க வைக்கும் ஐந்து விஷயங்கள்.

 

Xxxx

cloth

பங்கிடக்கூடாதவை

வஸ்த்ரம் பாத்ரம் அலங்காரம் க்ருதான்னம் உதகம் ஸ்த்ரிய:

யோகக்ஷேமம் ப்ரசாரம் ச ந விபாஜ்யம் பஞ்சக்ஷதே மனு 9- 219

 

சொற்ப விலையுள்ள துணி

செம்பு (தான் பயன்படுத்தும் பாத்ரம்)

அலங்காரப் பொருட்கள் (தான் உபயோகிப்பவை)

சமைத்த உணவு (சாப்பிடுகையில்)

கிணறு (தன் வீட்டு)

வேலைக்காரிகள்

மந்திரி

புரோகிதன்

தெருக்குறடு

வழிநடை (ரேழி)

 

இவை அனைத்தும் ஒருவருடைய உபயோகத்தில் இருக்கையில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆரோக்கியத்துக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும்.

 

–Subham–

 

லண்டனில் புதிய இந்திய ஹோட்டல்!(Post No.3133)

london-hotel

Compiled by London swaminathan

 

Date: 8 September 2016

 

Time uploaded in London: 6-24 AM

 

 

Post No.3133

 

Pictures are taken from various sources; thanks.

 

 

லண்டனில் ஒரு பள்ளிக்கூடம் இருந்த இடத்தில் ஆடம்பர இந்திய ஹோட்டல் வருகிறது. ஒரு நாள் அறை வாடகை 350 பவுன் (35000 ரூபாய்)! இதில் 70 அறைகள் இருக்கும். வருவோருக்கு இந்து முறையில் நமஸ்தே கிடைக்கும்; ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவும் இருக்கும். யோகாவும் பயிற்றுவிக்கப்படும். ஹோட்டல் முழுதும் இந்தியப் பொருளாலேயே அலங்கரிக்கப்படும்.

 

இந்திய வந்தனோபசாரத்தை — விருந்தோம்பலை — மக்களுக்குக் காட்டுவது முக்கிய நோக்கமாகும். இது சவுத் பேங்கில் (South Bank)  டவர் பிரிட்ஜ் (Tower Bridge) அருகே இருக்கிறது. ‘நான்’ , ரொட்டி, இந்திய தேநீர், சமோசா முதலியவற்றுடன் பல்வேறு வகை இந்திய உணவு பரிமாறப்படும். இது லலித் ஹோட்டல் குரூப்பைச் சேர்ந்தது. ஹோட்டலின் விலை ஐந்து கோடி பவுன் (500 கோடி ரூபாய்).லலித் சூரியின் மனைவி டாக்டர் ஜ்யோத்ஸ்னா சூரி இதன் மானேஜிங் டைரக்டர்.

 

கட்டிடத்தின் விலை 15 மில்லியன் பவுன்கள். அதற்குப்பின்னர் அதை ஹோட்டலாக மாற்ற 30 மில்லியன் செலவு!

 

லண்டனுக்குப் போனால் ஜாக்கிரதை!

chinese-airlines

லண்டனில் இந்தியர்கள், பாகிஸ்தானியர், கறுப்பர்கள் வசிக்கும் பகுதிகளுக்குப் போகாதீர்கள்; உங்கள் பாதுகாப்புக்காக இதைச் சொல்லுகிறோம் — என்று சீன விமான நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இது இனவெறி விளம்பரம் என்று லண்டனில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது

 

ஏர் சைனா Air China விமானத்தில் போடப்படும் பத்திரிக்கையில் In flight magazine இந்தக் கட்டுரை வெளியாகி இருக்கிறது. பெண்கள் தனியாக போகக்கூடாது யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எழுதியுள்ளனர்.

 

இது இனச் சிறுபானமையினருக்கு மட்டும் எதிரானதல்ல. லண்டனுக்கே எதிரான அறிவிப்பு என்று எம்.பி.க்களும் பொது மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

குளவிக்கூடு: ரயில சர்வீஸ் ரத்து!

 

அதிகாலை எழுந்து அவசரம் அவசரமாக ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடி  வந்தால் ஒரு விநோத அறிவிப்பு?

 

“நார்பிடன் Norbiton  வழியாக லண்டன்  வா ட்டர்லூ London Waterloo ஸ்டேஷனுக்குச் செல்லும் காலை 5-51 ரயில் சர்வீஸ் ரத்து என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம். ரயில் பெட்டிகளில் இரவோடு இரவாக குளவிகள் கூடு கட்டி இருந்தன என்பதே இதற்குக் காரணம்!”

wasp

இதைக் கேட்ட அதிகாலை பயணிகளுக்கு ஒரே கோபம். குளவி கூடு கட்டினால் அதை விலக்கிவிட்டு ரயிலைக் கொண்டுவரக்கூடாதா? அல்லது குளவிகள் உள்ளே போகாமல் கதவுகளை மூடி வைத்திருக்கக்கூடாதா? என்று மக்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர்.

 

கோடை காலம் வந்துவிட்டால் ரயில்கள்  மெதுவாக வேறு ஓடும்! ரயில் பாதை வெப்பத்தால் விரரிவடைவதால் வேகக் கட்டுப்பாடு அமலுக்கு வரும். குளிர் காலம் வந்துவிட்டாலோ,  பனி  பெய்து ரயிலகள் ரத்தாகும். ஒரு நாள் லண்டன் யுனிவர்சிட்டியில் தமிழ் பாடம் நடத்திவிட்டு, ” பையன்களே  , பெண்களே! வெளியே பனி பெய்வதை ஜன்னல் வழியாகப் பாருங்கள். எல்லோரும் தாமதமின்றி வீடு போய்ச் சேருங்கள் என்று சொல்லிவிட்டு ஓடி வந்து ரயிலில் ஏறினேன். ‘இந்தப் பக்கம் ரயில்கள்’ போகாது’ ‘அந்தப் பக்கம் ரயில்கள் போகாது’ என்று அறிவிப்பு வந்துகொண்டே இருந்தன. பல லைன் Lineகளுக்கு மாறி மாறி பாதி தூரம் வந்தேன். “மிக பயங்கரமாக பனி பெய்வதால் எல்லா பஸ்களும் எல்லா ரயில்களும் ரத்து; ரயிலை விட்டு இறங்குங்கள்” என்று ஒரு ஸ்டேஷனி ல் அறிவித்தார்கள். இரவு முழுவதும் கெண்டகி ப்ரைடு சிக்கன் Kentucky Fried Chicken  கடையில் ஒரு மூலையில் குந்தி இருந்தேன். நானோ வெ ஜிட்டேரியன் Vegetarian . காப்பிகூட வாங்கப் பிடிக்கவில்லை. அதிகாலையில் பக்கத்தில் வசித்த ஒருவரை அழைத்தேன். அவரும் எனக்கும் காரை ஓட்ட பயமாக இருக்கிரது உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் என் கார் உங்கள் ஸ்டேஷன் வரை வரும் என்று சொல்லி வந்தார். தப்பித்தேன் பிழைத்தேன் என்று காரில் ஏறிச் சென்றேன் அடுத்த சில மணி நேரத்தில் பஸ்கள் ஓடத் துவங்கின. அதிகாலையில் வீடு வந்து சேர்ந்தேன். உண்மையில் ஒருவருடைய முட்டாள்தனமான முடிவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பஸ்கள் ஓடக்கூடிய அளவுக்குதான் பனி பெய்திருந்தது.

ஆகையால் குளவி மட்டுமில்லை; கொசுவுக்குக் கூட லண்டன் போக்குவரத்து நின்றாலும் நிற்கும்!

 xxx

லண்டன் திருடன் பலே திருடன்!

 

சில நாட்களுக்கு முன் லண்டனில் கற்பழிப்புகள் அதிகரிக்கின்றன. மிகவும் பாதுகாப்பாற்ற நகரம் லண்டன் என்று பத்திரிக்கைகள் கொட்டை எழுத்தில் செய்திகள் போட்டன. இன்று மாலையில் உலகம் முழுதும் சுற்றிய ஒருவரின்  மோட்டார் சைக்கிள் லண்டனில் தொலைந்து போயிற்று.

 

லண்டன் கென்சிங்டனைச் Kensington  சேர்ந்த எலி கூரி Eli Coory  படத் தயாரிப்பாளர்.  அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டுவதற்காக மூன்றாண்டுகளாக மோட்டார் சைக்கிளில் உலக வலம் வருகிறார். அவர் சொன்னார்: “அலாஸ்காவில் கரடிகளுக்குப் பயப்படாமல் அதன் நடுவே ஓட்டி வந்தேன். சிலி நாட்டில் எரிமலை பொங்கும் போதும் மலைக் கணவாய்களைக் கடக்கையில் காட்டு நாய்கள் விரட்டும் போதும் ஓட்டி வந்தேன்.  உலகில் பாதுகாப்பற்ற இடங்கள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் இடையூறின்றி ஓட்டி வந்தேன். இளம் வயது புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்ட இதைச் செய்தேன். இறுதியில் லண்டனில் ஓட்டல் வாசலில் நிறுத்தியிருந்த வண்டியை யாரோ களவாடிவிட்டார்கள்”.

 

(அவருடைய பைக்கின் விலை 18,000 பவுன்கள்).

 

“இதயமில்லாத் திருடர்கள் இப்படிச் செய்துவிட்டார்களே. அதுவும் உலகப் புகழ் பெற்ற லண்டனில் இப்படித் திருட்டு நடந்தது மிகவும் வெட்கக்கேடு” என்றார்.

 

–subam–