கடலிடம் கற்போம்! (Post No4587)

Date: 6 JANUARY 2018

 

Time uploaded in London- 6-35 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4587

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாக்யா 5-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 46வது) கட்டுரை

கடலிடம் கற்போம்!

ச.நாகராஜன்

 

“அனைவரையும் ஒருங்கிணைக்கும் கடல் தான் நமக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை! இதுவரை எப்போதும் இல்லாதபடி, பழைய சொற்றொடரான ‘நாம் அனைவரும் ஒரே படகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்’ என்பது இப்போது பொருள் பொதிந்த ஒன்றாக ஆகி விட்டது!” – ஜாக்குவஸ் யூஸ் குஸ்டாவ், கடல் வள நிபுணர்

2017ஆம் ஆண்டு  முடிந்து விட்ட தருணம். உலகில் ஏராளமான நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. அவற்றினுள் கடலில் நடந்த  நல்லதும் கெட்டதுமான மாபெரும் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளனர்.

அவற்றுள் முதலிடத்தைப் பிடிப்பது வானிலை மாறுதல்களால் கடலில் ஏற்படும் சூறாவளிப் புயல் தான். அமெரிக்காவில் 2017, ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட ஹார்வி என்ற சூறாவளிப் புயல் 48 மணி நேரத்தில் பிரமிக்க வைக்கும் 60 அங்குல மழையைப் பெய்வித்தது. இந்தப் புயலால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் உத்தேச மதிப்பீடு சுமார் நூறு பில்லியன் டாலர் ஆகும்! (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி;  ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 64.). அடுத்து உடனடியாக கரிபியன் தீவுகளில் ஏற்பட்ட இர்மா என்ற சூறாவளிப் புயல் மணிக்கு 185 மைல் வேகத்தில் காற்றைத் தொடர்ந்து 37 மணி நேரம் வீசிக் கொண்டிருந்தது. பல தீவுகள் மூழ்கியே விட்டன.

இந்த ஒவ்வொரு புயலும் மனித குலத்திற்கு உணர்த்தும் செய்தி: பூமியை வெப்பமயமாக்கிக் கொண்டே போகாதீர்கள். இப்படியே போனால் பூமியில் பல நகரங்கள் முற்றிலுமாக அழிந்து விடும் என்பதைத் தான்!

அடுத்து வட அட்லாண்டிக்கில் ரைட் வேல் (Right Whale) எனப்படும் திமிங்கிலமும் வாக்விடா பார்பாய்ஸ்  (Vawuita porposes) என்ற அரிய வகை கடல் வாழ் உயிர்னமும் படாத பாடு படுகின்றன.  பிரம்மாண்டமான அது கொல்வதற்கு உகந்தது, லாபகரமானது என்பதாலும் கடற்கரைக்கு அருகில் இருப்பதாலும் அதன் பெயர் ரைட் வேல் என்பதாயிற்று. இந்த இனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது. நூறே நூறு பெண் திமிங்கிலங்கள் தான் இந்த இனத்தில் இப்போது இருக்கின்றன. இந்த வகை திமிங்கிலத்தை வமிச விருத்தி செய்ய நூறு பெண் திமிங்கிலங்கள் போதாது என்பது தான் வருத்தமூட்டும் செய்தி! வாக்விடா இனத்தில் இன்று இருப்பது வெறும் 30 மட்டுமே!

அடுத்து பவழப்பாறைகள் மிகவும் குறைந்து கொண்டே வருகின்றன. ‘சேஸிங் கோரல்’ என்ற டாகுமெண்டரி படம் இந்த அபாயத்தை உருக்கமாக விளக்குகிறது.  நச்சு வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை  மனித குலம் என்று குறைக்கிறதோ அன்று தான் பவழப் பாறைகளுக்கு நல்ல நாள். கடற்கரை பகுதிகளைக் காப்பதோடு ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆதரவாக உள்ள பவழப் பாறைகளின் அழிவு உண்மையிலேயே வருத்தமூட்டும் ஒரு செய்தியாகும்.

அடுத்து பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றிச் சொல்லவே  வேண்டாம்.. மரீனா பீச்சிலிருந்து உலகின் சகல கடற்கரைகளும் பிளாஸ்டிக் மயம். எவ்வளவு பிளாஸ்டிக் கழிவு உலகத்தில் இருக்கிறது என்பதை ஆராயப் போன விஞ்ஞானிகள் பயந்து நடுநடுங்கி விட்டனர்.அதாவது பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவு இருக்கிறதாம். (பூமியின் ஜனத்தொகை 760 கோடி).

போகிற போக்கில் நாம் உண்ணும் உணவில் கூட பிளாஸ்டிக் இருக்கும் அபாயம் ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்! கடல் வாழ் ஆயிஸ்டர்களைச் சாப்பிடுவோரும் கடல் உப்பை உணவில் சேர்க்கும் ஒவ்வொரு மனிதரும் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்ணும் அபாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பவழப் பாறைகளும் மீன்களும் கூட பிளாஸ்டிக்கைச் ‘சாப்பிட’ப் பழக்கப்பட்டு விட்டனவாம்! ‘பிளாஸ்டிக் டம்ளரையோ ஸ்டிராவையோ கையில் வைத்திருக்கும் போது நீங்கள் உலகத்திற்கு ஏற்படுத்தும் சேதத்தைத் தயவு செய்து ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.பிளாஸ்டிக்கை எந்த விதத்தில் இருந்தாலும் தவிருங்கள்’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

london swaminathan in Greece

கடற்கரைக் காற்று அபரிமிதமான ஆற்றலை உருவாக்க வல்லது. விண்ட் டர்பைன்களை ஒவ்வொரு நாடும் அமைக்க ஆரம்பித்து அளப்பரிய ஆற்றலை உருவாக்குகிறது. அமெரிக்கா, நார்வே ஆகிய நாடுக்ள் இதில் நல்ல முன்னேற்றதைக் கண்டு விட்டன.

2017இல் கடல் வாழ் உயிரினங்களை நன்கு ஆராய்ந்து பல உத்திகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக்டோபஸ் போன்ற உயிரினங்கள் ஒன்றைப் பிடித்தால் பிடித்தது தான். எப்படி அவ்வளவு அழுத்தமாக அது ஒன்றைப் பற்றிப் பிடிக்க முடிகிறது என்பதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதே உத்தியை ரொபாட்டுகளில் பயன்படுத்தி உள்ளனர். இதனால் கப்பலின் முகப்பில் பொருத்தப்படும் ரொபாட்டுகள்  தான் இருக்க வேண்டிய இடத்தை நன்கு பிடித்துக் கொள்ளும். அதே போல பெலிகன் இனத்தை ஆராய்ந்து கடலடி நீரில் ட்ரோன்கள் எப்படி வேகமாக நீந்திச் செல்ல முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டு  பிடித்துள்ளனர்.

கடல் வாழ் உயிரினத்தில் விசேஷ வகையான சன் ஃபிஷ் என்னும் மீன் ஒன்பது அடி நீளம் இருக்கும்,. அதன் எடையோ மலைக்க வைக்கும் இரண்டு டன். இந்த வருடம் நான்கு புது வித சன் ஃபிஷ் வகைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு மோலா டெக்டா (Mola Tecta) என்ற புதுப் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த 2017இல் பிரகாசமான ஆரஞ்சு நிற முகம் கொண்ட ஒரு புது சர்ஜன் மீனைக் கண்டு பிடித்துள்ளனர். நூறு ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்திய இந்தப் பகுதியில் விஞ்ஞானிகள் அடைந்த போனஸ் பரிசு இது!

கடல் செல்வம் உண்மையிலேயே மனித குலத்திற்கான பெரிய செல்வம். அதைப் பாழடித்து விடக் கூடாது என்ற விழிப்புணர்வையும், அதிலிருந்து கற்க வேண்டியவை ஏராளம் என்பதையும் உணர்த்திய ஆண்டாக 2017ஐ விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அது சரிதானே!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அடிவயிற்றில் ஆபரேஷன் செய்வது இன்று சர்வ சகஜமாகி விட்டது. ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இது மிகவும் அபாயகரமான ஒன்றாக டாக்டர்களால் கருதப்பட்டு வந்தது. அடிவயிற்று ஆபரேஷன் நிச்சயம் மரணத்தில் கொண்டு விடும் என்பதால் அதை யாரும் செய்வதில்லை.

சரியாக 200 வருடங்களுக்கு முன்னர் 1817இல் நடந்தது இது. அந்தக் காலத்தில் அமெரிக்காவில் 40000 அடிமைகள் இருந்தனர். க்ராபோர்டு (Crawford) என்ற ஒரு அடிமைப் பெண் கர்ப்பமாக இருப்பதாக நினைத்திருந்தாள். ஆனால் அது கர்ப்பப் பை கட்டி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மக்டவல் (McDowell) என்ற பிரபல டாக்டர் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் நிபுணராக இருந்தார். அவர் அந்தப் பெணமணியை நோக்கி, “இந்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். ஆனால் அது ஆபத்தான ஆபரேஷன். அதைச் செய்யாவிடிலோ மரணம் நிச்சயம் என்றார்.

க்ராபோர்டு அறுவைச் சிகிச்சை செய்து  கொள்ள சம்மதம் தெரிவித்தாள். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. ஆபரேஷன் செய்யும் நேரத்தில் பைபிளிலிருந்து பிரார்த்தனை தோத்திரங்களை அவள் ஜெபித்துக் கொண்டிருந்தாள்.

உலகின் முதல் அடிவயிற்று ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அந்தப் பெண்மணி அதற்குப் பின்னர் 32 வருடங்கள் வாழ்ந்து தன் 78வது வயதில் மரணம் அடைந்தாள்.

மக்டவலின் நினைவாக அவரது கல்லறையில் இந்தியானா ஹாஸ்பிடல் அசோசியேஷன் சார்பில் இது பொறிக்கப்பட்டது. சரியாக 200 வருடங்கள் முடிந்த நிலையில் இப்போது அவர் நினைவு போற்றப்படுகிறது.

 

****

 

கண்ணதாசனின் அதீத உளவியல் ஆற்றல்! -2 (Post No.4577)

MAHATMA GANDHI SHOT DEAD

Date: 3 JANUARY 2018

 

Time uploaded in London- 6-50 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4577

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

முதல் கட்டுரை எண் 4551 – 27-12-2017 அன்று வெளியாகியுள்ளது. அதைப் படித்து விட்டு இங்கு தொடரவும்.

 

 

கண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power) – அதீத உளவியல் ஆற்றல்! -2

 

 

ச.நாகராஜன்

6

சேலத்தில் கவிஞர் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள். அவர் ‘அமைச்சர்’ என்ற இதழின் நிர்வாகியான அருணாசலம் என்ற அருணனிடமும் (அருணாசலம் பின்னாளில் அருணோதயம் பதிப்பாளர் ஆனார்), கவிஞரின் எழுத்துக்களைத் தொலைபேசி வாயிலாகக் கேட்டு அவர் சொல்லச் சொல்ல எழுதி வந்தவருமான கற்பூரபாண்டியனிடமும் தான் கண்ட கனவைத் துயரத்துடன் விவரிக்கிறார்.

 

“28-1-1947 அன்று இரவு பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டேன். மகாத்மா காந்தியை யாரோ சுட்டு விடுகிறார்கள்’ என்றார் கவிஞர்.

“அந்த மனிதருக்கா அப்படி ஆகும்” என்று அவர் கூற்றை மறுத்து இருவரும் கேலி செய்கிறார்கள்.

ஆனால் 30-1-1947 இரவு 7 மணி செய்தியில் வானொலி மகாத்மா காந்திஜியை கோட்ஸே சுட்டுக் கொன்றதை அறிவித்த போது அனைவரும் விக்கித்துப் போயினர்.

 

7

மழை இல்லாத காலத்தில் எல்லாம் கவிஞர் மழை பொழிக என்று சொன்னவுடன் மழை பெய்தது.

1972இல் வரலாறு காணாத வறட்சியைத் தமிழகம் கண்டது. ஏரி, குளம், ஆறு அனைத்தும் வறண்டன.

மக்கள் தவிதவித்துப் போயினர்.

 

கம்பன் விழாவில் கலந்து கொள்ள பாண்டிச்சேரி சென்றார் கவிஞர். உடன் சென்றவர் அவர் உதவியாளர் இராம. கண்ணப்பன்.

 

பாண்டிச்சேரியிலும் மழை இல்லை.ஒரே வறட்சி.

விழாவின் இறுதி நாளன்று பேசிய கவிஞர் சொன்னார்:” நான் கண்னனை வணங்குவது உண்மை எனில் புதுச்சேரி எல்லையைக் கடக்கு முன் மழை பெய்ய வேண்டும். பரந்தாமன் இங்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவான்.”

அவர் வாக்கு பொய்க்கவில்லை.

வருணன் அதைக் கேட்டான். ஓடி வந்தான்.

பேச்சை முடித்து கவிஞர் திண்டிவனம் வந்து சேர்ந்த போது புதுச்சேரி மழையில் மிதப்பதாக்ச் செய்தி வந்தது!

இன்னும் இரு சம்பவங்கள்.

 

ஒன்று மதுரை அன்பர் ஒருவர் குமுதம் இதழுக்கு ஒரு கடிதம் எழுதி கவிஞர் மதுரையில் மழை. பெய்யப் பாட வேண்டும்” என்றார்.

 

கவிஞரும் பாடினார்:

 

23 வரிகள் கொண்ட பாடல்.

அதில் முதல் ஆறு வரிகளையும் கடைசி ஆறு வரிகளையும் இங்கு தருகிறேன்:

ஞானம் தூங்கினால் நல்லறம் தூங்குமே

நலங்கள் தூங்கினால் நானிலம் தூங்குமே

கானம் தூங்கினால் கலைகளும் தூங்குமே

கலைகள் தூங்கினால் காவியம் ஏங்குமே

தானம் தூங்கினால் தவங்களும் தூங்குமே

தவங்கள் தூங்கினால் தருமமும் ஏங்குமே ….

 

வண்ணமாம் மின்னல்கள் வளரொளி நடனங்கள்

காணத் துடிக்கிறோம் கவின் மழை பொழிக நீ!

தேனின் துளிகளைத் தேசத்தில் ஊற்றுக.

சேரும் நதிகளில் திருப்புனல் காட்டுக

ஆனினம் உயிரினம் அனைத்தும் வாழவே

ஐய பெய்கவே, அம்மையே பெய்கவே!

 

ஏதோ வருணன் தனது உயிர் நண்பன் போலப் பாடலைப் பாடி விட்டார் கவிஞர்.

மழை பெய்யுமா? குமுதம் இதழைப் படித்த மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

பெயதது. கொட்டோ கொட்டு என்று மழை பெயதது.

வருணன் தன் உற்ற நண்பனைக் கைவிடவில்லை.

குமுதம் என்று மதுரையை அடைந்ததோ அன்றே மழை!

நண்பருக்கும் ஆச்சரியம், மக்களுக்கும் ஆச்சரியம்.

நன்றியை அனைவரும் தெரிவித்தனர்.

இதே போல சென்னையில் வானதி பதிப்பகத்தார் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி ஒரு விசேஷ கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

கவிஞரும் அதில் பங்கேற்றார்.

 

பனிரெண்டு அறுசீர் விருத்தச் செய்யுள்களை அங்கு அவர் பாடினார்.

 

வான் முட்டும் கோபுரங்கள்

வானுக்குச் செய்தி சொல்வீர்!

தேன்முட்டும் இதழாள் சக்தி

தேவியைத் துயிலெ ழுப்பீர்!

கான்முட்ட மழைபொழிந்து

காவிரி பெருகி ஓடி

மீன்முட்டும் வெள்ளக் காடாய்

வியன் நிலம் ஆவதாக!

என்று இறுதி விருத்தத்தை முடித்தார்.

கவியரங்கம் முடிந்தது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து கிளம்பினார் கவிஞர். தியாகராய நகர் வருவத்ற்குள் அடை மழை கொட்டியது.

இப்படிப் பல சம்பவங்கள்!!

 

இந்தச் சம்பவங்கள் கட்டுக் கதை அல்ல! அவரது உதவியாளராக இருந்த இராம கண்ணப்பன், “கண்ணதாசனின் அர்த்தமுள்ள அனுபவங்கள்” என்ற நூலில் இவற்றைத் தெரிவிக்கிறார்.

(புத்தக வெளியீடு: கங்கை புத்தக நிலையம், தி.நகர், சென்னை – 17 – முதல் பதிப்பு டிசம்பர் – 1991 – 181 பக்கங்கள்)

நமது நன்றி இராம கண்ணப்பனுக்கு உரித்தாகுக!

 

 

 

8

குமுதம் இதழில் வாரம் ஒரு கவிதையை எழுதி வந்தார் கவிஞர்.

ஒரு இதழில் கவிதை ஒன்று வெளியானது.

தாலாட்டுக் கவிதை அது.

கவிஞரின் அண்ணனான ஏ.ஏல்.சீனிவாசனுக்கு பேரக்குழந்தை பிறந்தது.கவிஞருக்கும் பேரன் தானே! பாடினார்:

 

 

அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும்

கண்ணை விழித்திந்த காசினியைப் பார்க்குங்கால்

என்ன துயர் வருமோ எங்கெங்கே அடி விழுமோ

மோதல் வருமோ முறைகெடுவார் துயர் வருமோ

இந்த வயதினிலே இப்பொழுதே தூங்குவதே

சுகமான தூக்கம், அவன் சுகமாகத் தூங்கட்டும்”

 

துரதிர்ஷ்டவசமாக ஒரே வாரத்தில் குழந்தை இறந்தது.

அப்படியே தூங்கட்டும்; அவனை எழுப்பாதீர் என்று எழுதியதில் அறம் வைத்துப் பாடி விட்டேனோ. சுகமாகத் தூங்கட்டும் என்று சொல்லிய போது ஒரே நீள் தூக்கமாகப் போயிற்றே!

 

 

கவிஞரின் மனம் சமாதானம் அடையவில்லைல். புலம்பினார்.

அவனை எழுப்பாதீர், அப்படியே உறங்கட்டும்

என்றே நான் எழுதியதன் ஈரம் உலரவில்லை

அறம்பாடி விட்டேனோ அறியேன் சிறுகுருவி

திறம்பாட முடியாமல் செத்த கதை பாடுகிறேன்”

 

கண்ணதாசனின் கதறலை அடுத்த இதழ் குமுதம் தாங்கி வந்தது. மக்களும் சேர்ந்து அழுதனர்; கவிஞனின் சொந்தத் துக்கத்தில் பங்கு கொண்டனர்.

 

 

9

கவிஞனின் வாக்குப் பொய்க்காது என்பது அவர் அடிக்கடி சொல்லும் ஒரு வரி.

அதை ஏனையோரும் ஏற்றனர்; அதன் நிரூபணத்தையும் அடிக்கடி பார்த்து வந்தனர்.

அவரது சக்தி அபூர்வமான ஒன்று. தமிழை அருவியெனக் கருத்து வெள்ளத்துடன் கொட்டியதில் மட்டும் விஞசவில்லை கண்ணதாசன்.

 

 

கண்ணனின் அருள் தாங்கி ஒரு அருள் சக்தியும் கொண்டு வாழ்ந்து வந்தார்.

சமீப காலத்தில் தமிழகம் கண்ட ஒரு “சக்தி” பெற்ற “கவிஞர்” அவர் என்பதுடன் இந்தத் தொடரை முடித்துக் கொள்வோம்.

***

எனது நன்றி : இராம கண்ணப்பன் அவர்களுக்கு – பல நல்ல விஷயங்களை அப்படியே காற்றோடு போக விடாமல் எழுத்திலே பதிவு செய்தமைக்காக!

 

(இந்த இரு கட்டுரைத் தொடர் முற்றும்)

 

 

ரொபாட்டின் கடிதம்! (Post No.4571)

Date: 1 JANUARY 2018

 

Time uploaded in London- 6-22 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4571

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

பாக்யா 29-12-17 இதழில் அறிவியல் துளிகள்  தொடரில் வெளியாகியுள்ள  ஏழாம் ஆண்டு 45வது கட்டுரை

 

நலம். நலம் அறிய ஆவல்! உங்கள் நண்பன் ரொபாட்டின் கடிதம்!

 

ச.நாகராஜன்

 

“எதிர்காலம் சீக்கிரமாக வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். ரொபாட் இல்லாத எதிர்காலத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை” – நோலான் புஷ்னெல்

 

அன்புடையீர், நலம். நலம் அறிய ஆவல்.

என்னை உங்கள் சேவைக்காகத் தகுதிச் சான்றிதழ் வழங்கி லாபரட்டரியிலிருந்து சுக பிரசவம் செய்து உலகில் அடி எடுத்து வைக்க அனுமதித்து விட்டார்கள் என்னைப் பெற்றெடுத்த விஞ்ஞானிகள்.

 

இனி உங்களின் கம்ப்யூட்டர் காலம் முடிந்தது; கைபேசியின் காலமும் முடிந்தது.

 

ரொபாட்டான என் காலம் ஆரம்பிக்கிறது.

 

கவலைப்படாதீர்கள். தொழிற்சாலைகளில் மாஸ் புரடக் ஷன் என்று சொல்கிறார்களே பெருமளவிலான உற்பத்தி – அதை நான் கண நேரத்தில் முடித்து விடுவேன்.

 

சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால் அருவறுப்பாக இருக்கிறதே என்று நீங்கள் அங்கு செல்ல மறுக்கும் தொல்லை இனி இல்லை;நான் எந்த அடைப்பையும் எடுத்து விடுவேன்.

 

அது போல வெல்டிங் பணியில் கண்கள் போய்விடுமோ என்ற பயமும் இனி தொழிலாளர்களுக்குத் தேவை இல்லை; அபாயகரமான வெல்டிங் பணியையும் முடிப்பேன். ஆழ்கடலில் பல ஆயிரம் அடி ஆழம் வரை சென்று பிரமிக்க வைக்கும் பணிகளையும் இனி நானே முடித்து விடுவேன். மூச்சுத் திணறும் மலை மீதும் ஏறுவேன்.

 

என்னை உருவாக்கும் பணி ஆரம்பித்த நாள் இன்று நேற்றல்ல; 1954இல் ஜார்ஜ் சி.டெவால் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதன் முதலாக எனது முன்னோரின் பணி ஆரம்பித்தது. அப்போது உருவான முதலாம் ரொபாட்டின் கை மட்டும் 4000 பவுண்டுகள் என்ற அளவில் கனத்தது. அப்போது அதன் விலை மலைக்க வைக்கும் தொகையான 25000 டாலர்கள்!

 

யுனிவர்ஸல் ஆடோமேஷன் என்பதைச் சுருக்கி யூனிமேஷன் என்று அப்போது பெயரிட்டார்கள் ரொபாட்டுகளின் பணிக்கு. இப்போது இன்னும் சுருக்கி யூனிமேட் என்று ஆக்கி விட்டார்கள், விஞ்ஞானிகள்!

 

இப்போது பெர்க்லியில் உள்ள ஆய்வாளர்கள் என்னைப் போன்ற ரொபாட்டுகள் எப்படி படித்து முன்னேறலாம் என்பதைக் கண்டு பிடித்து விட்டார்கள்.

 

இனி என்ன, தானே ஓட்டும் காருக்கு இந்த தொழில் நுட்பம் பெரிதும் உதவப் போகிறது.

சாலையில் எதிர்ப்படும் எந்த வித தடையையும் அல்லது வாகனத்தையும் கவனித்து கார்கள் தானாகவே இயங்கும் – ஒரு வித விபத்தும் இல்லாமல்!

 

இப்போது கலிபோர்னியாவில் தானே இயங்கும் கார் எங்களால் தான் இயங்குகிறது. 10 லட்சம் மைல்கள் சோதனை ஓட்டத்தை முடித்து விட்டோம். இனி உங்கள் பயன்பாட்டுக்கு நாங்கள் வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

 

நீங்கள் இதை மனமுவந்து வரவேற்பீர்கள் அல்லவா?

இந்த தொழில்நுட்பத்தின் பெயர் விஷுவல் ஃபோர்சைட் (Visual Foresight) எனப்படும்.

 

இதனால் என் போன்ற ரொபாட்டுகள் சில செயல்களைச் செய்து இயங்கும் போது எங்கள் காமராக்களின் மூலமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை நன்கு ஊகிக்க முடியும். அடுத்த சில விநாடிகளில் என்ன நிகழப் போகிறது என்பதைக் கணித்து விட்டால் போதுமே, அதற்குத் தக எங்கள் செயல்பாட்டை நாங்கள் மாற்றிக் கொள்வோம் இல்லையா?

இங்கு எங்களுக்கு மனிதர்களின் உதவியும் தேவை இல்லை; முந்தைய அறிவும் தேவை இல்லை. ஏனெனில் இந்த விஷுவல் இமாஜினேஷனை நாங்களே அடிப்படையிலிருந்து நன்கு கற்றுக் கொண்டு விட்டோம்.

 

முதலில் ஒரு மேஜையின் மீது வைக்கப்பட்ட பொருள்களுடன் விளையாட ஆரம்பித்தோம். நாளடைவில் இது மேம்பாடு அடைந்து உலகத்தையே எப்படிப் பார்ப்பது என்பதை நன்கு கற்றுக் கொண்டு விட்டோம்!

 

 

2017 டிசம்பர் 5ஆம் தேதி கலிபோர்னியாவில் லாங் பீச்சில் எங்களது டெமோ இடம் பெற்றதே, பார்த்தீர்களா?

 

டி என் ஏ மாடல் என்று சொல்கிறார்களே அதன் விரிவு டைனமிக் ந்யூரல் அட்வெக்‌ஷன் என்பதாகும். இதன் மூலம்  ரொபாட்டான எங்களின் கண்ட் ரோல் அமைப்புகள் சிக்கலான பல வித வேலைகளையும் செய்யும் திறன் கொண்டவை ஆகி விட்டன.

 

உதாரணமாகச் சொல்வது என்றால் ஒரு மேஜையின் மீது உள்ள பொருள்களை அது எந்த இடத்திற்குப் போக வேண்டுமோ அந்த இடத்திற்கு எங்களால் போகச் செய்ய முடியும்.

 

மனிதர்களாகிய நீங்களும் கூடத் தான் ஒரு வித ஆசிரியரும் இன்றி பல்லாயிரக் கணக்கான இடைவினைகளை மிகச் சுலபமாகச் செய்கிறீர்கள்.

உங்களைப் போலவே நாங்களும் இப்போது கற்றுக் கொண்டோம், அவ்வளவு தான்!

 

இனி நாங்கள் பல்வேறு துறைகளில் சாகஸ செயல்களைச் செய்து உங்களை மலைக்க வைக்கப் போகிறோம்.

 

ஆடிஸம் எனப்படும் மனநலம் குன்றிய குழந்தைகளை நன்கு கவனித்து அவர்களுக்கு எப்படிக் கற்றுக் கொடுத்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை அறிந்து அவர்களை மேம்படுத்தப் போகிறோம்

5000 டாலர் விலையில் எங்களை இப்போது வாங்க முடியும்.

அடுத்து எனர்ஜி எனப்படும் ஆற்றலைப் பற்றி இன்று பேசாதோரே கிடையாது

 

சோலார் எனர்ஜி எனப்படும் சூரிய சக்தியை உருவாக்க குறைந்த செலவில் இனி எங்களால் தான் முடியும். அலியான் என்ற கம்பெனி உருவாக்கியுள்ள என் சகோதர ரொபாட்டின் பெயர் ரோவர்.

 

சோலார் பேனல்களை கிடுகிடுவென்று இது அடுக்கி விடும். கடும் வெயிலிலும் இது அனாயாசமாக வேலை செய்யும். மனிதர்களாகிய உங்களால் தூக்க முடியாத பொருள்களை அனாயாசமாகத் தூக்கும்;  லீவ் போடாமல் இடைவிடாது பணி செய்யும். ஆகவே உற்பத்தி பெருகும். செலவும் குறையும்.

 

அடுத்து ஆபரேஷன்களைச் செய்ய டாக்டர்களுக்கு உதவ நாங்கள் தயாராகி விட்டோம்.

 

டக் (TUG) ரொபாட் என்று இங்கு எங்களுக்குப் பெயர். மருத்துவர்களுக்கு உதவியாக அவர்களின் தேவைக்கு ஏற்றபடி நாங்கள் உதவுவோம். ஆஸ்பத்திரிகளில் நூற்றுக் கணக்கான அறைகளில் உள்ள பெட் ஷீட்களை மாற்றுவது, கழிவுகளை அகற்றுவது, அறைகளைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட பிரம்மாண்டமான பொறுப்புகளை நாங்கள் செய்வதைக் கண்டு நோயாளிகளும் மருத்துவப் பணியாளர்களும் டாக்டர்களும் பிரமிக்கின்றனர். டாக்டர் ஒருவர் எலக்ட் ரானிக் ப்ரஸ்கிரிப்ஷனை எழுதியவுடன் அது எங்கள் பார்வைக்கு வரும். ஒடோடிச் சென்று சரியான் மருந்துகளை ஒரு நொடியில் தந்து விடுகிறோம்

 

ஆக இப்படிப் பல்வேறு வாழ்க்கை அம்சங்களிலும் உங்களுக்குச் சேவை செய்ய நாங்கள் தயார். இன்னும் எங்களுக்கு உணர்ச்சிகளைப் பற்றிச் சொல்லித் தருகிறார்கள். அதுவும் முழுமை பெற்று விட்டால் உங்களுடன் கொஞ்சிக் குலவுவோம். நீங்கள் அழுதால் நாங்களும் அழுவோம். நீங்கள் சிரித்தால் நாங்களும் சிரிப்போம். மொத்தத்தில் உங்களில் ஒருவராக நாங்கள் ஆகும் நாள் அதிக தூரத்தில் இல்லை!

 

ரொபாட் யுகம் ஆரம்பித்து விட்ட இந்தத் தருணத்தில் எங்களை வாழ்த்தி வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கடித்தத்தை முடிக்கிறேன்.

உங்கள் அன்பு ரொபாட்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

திமிங்கில ஆராய்ச்சியாளரான விஞ்ஞானி ஹான்ஸ் திவிச்சென் (Hans Thewissen) அலாஸ்காவில் உள்ள உட்கியாக்விக் (Utqiagvik) என்ற இடத்திற்கு ஆராய்ச்சிக்காகச் செல்வது வழக்கம். அமெரிக்காவில் திமிங்கிலத்தை வேட்டையாடுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. உட்கியாக்விக்கில் மட்டும் தான் திமிங்கிலத்தின் மூளையின் பகுதிகள் ஆய்வுக்காகச் சட்டபூர்வமாகப் பெறலாம்.

 

இங்குள்ள பூர்வீகப் பழங்குடியினர் திமிங்கிலத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். வசந்த காலம் மற்றும் இலையுதிர்காலத்தில் இவர்கள் திமிங்கில வேட்டைகளை நடத்துவது பழைய காலத்திலிருந்து வரும் ஒரு பழக்கம்.

 

திமிங்கிலத்தைப் பற்றிய நுட்பமான விஷயங்களை இவர்களிடமிருந்து அறிய திவிச்சென் முயன்றார். ஆனால் ஆரம்பத்தில் அவரை அண்டவே விடவில்லை பழங்குடியினர். பின்னர் மெதுவாக அவர்களின் நம்பிக்கையை அவர் சம்பாதித்தார்.

 

100 டன் எடையுள்ள திமிங்கிலத்தை வேட்டையாடுவது அவர்களுக்குச் சர்வ சாதாரணம். திமிங்கிலம் இறந்து விட்டால் அதன் பெரிய பகுதி காப்டனுக்குத் தரப்படும். நூற்றுக்கணக்கான பழங்குடியினர் ஆளுக்கு ஒரு பகுதியை எடுத்துக் கொண்ட பின்னர் கடைசியாக வெளியில் காத்திருக்கும் விஞ்ஞானி திவிச்சென்னுக்கு அழைப்பு விடப்படும். ஓடி வந்து அவர் தன் ஆய்வுக்கு வேண்டிய பகுதியை எடுத்துக் கொள்வார்.

 

சமீபத்தில் திமிங்கிலத்திற்கு முகரும் சக்தி உண்டு என்று பூர்வகுடியினரின் காப்டன் சொன்ன போது அதை திவிச்சென் நம்பவில்லை.

அவரது காம்ப் கூடாரத்திலிருந்து எழும் புகையால் அதை முகரும் திமிங்கிலங்கள் அந்தப் பக்கம் மனிதர்களின் ஆபத்து இருப்பதை அறிந்து அங்கு வருவதில்லை என்று சொன்ன காப்டன் அதை நிரூபித்தும் காட்டினார் திவிச்சென் உதவியுடன்.

 

கூடாரத்திலிருந்து புகை எழுந்தால் திமிங்கிலம் வராது. புகை இல்லை என்றால் சாதாரணமாக வரும்.

இந்த அபூர்வ விஷ்யத்தை உணர்ந்து கொண்டதில் விஞ்ஞானிக்கு ஏக மகிழ்ச்சி. முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை அங்கு சென்றவர் இப்போது அங்கேயே அடிக்கடி சென்று தங்க ஆரம்பித்து விட்டார். திமிங்கிலம் பற்றிய ஆராய்ச்சியும் முன்னேறி வருகிறது!

***

 

 

 

 

ஒரு கவிதை பிரபலமாவது எப்படி? (Post No.4542)

Date: 25  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-33 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4542

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

அறிவியல் துளிகள் ஏழாம் ஆண்டு 44வது கட்டுரை

ஜிமிக்கி கம்மலின் பிரபலம்! ….. ஒரு கவிதை பிரபலமாவது எப்படி?

ச.நாகராஜன்

 

“கவிதை என்பது சக்தி வாய்ந்த உணர்ச்சிகளின் தன்னியல்பான வெளிப்பாடு!” – வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்

இலக்கிய உலகில் சில கவிதைகள் மிகவும் பிரபலமாகி அனைவராலும் பாராட்டப்படுகின்றன. சில கவிதை நூல்களைப் படிக்க ஆளே இருப்பதில்லை.

பிரபலமான கவிஞர்கள் அப்படி என்ன ஒரு மாயப்பொடியைத் தம் கவிதைகளில் சேர்க்கிறார்கள்?

ஆராயக் களமிறங்கியிருக்கிறது அறிவியல். ஆம், சமீ பத்தில் நியூயார்க் பல்கலைக்கழகமும் மாக்ஸ் ப்ளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் எம்பிரிகல் அஸ்தடிக்ஸ் நிறுவனமும் சேர்ந்து ஒரு கவிதை எப்படி படிப்போரிடையே கலை நயத்துடன் மகிழ்ச்சியைத் தருகிறது என்று ஆராய ஒரு ஆய்வை நடத்தியது. 2017, நவம்பரில் ஆய்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.

இந்த ஆய்வில் 400 கவிதா ரஸிகர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் 111 ஹைகூக்களும் 16 சானெட்டுகளும் ( 14 வரியுள்ள ஆங்கிலக் கவிதை) கொடுக்கப்பட்டன.

இந்த கவிதைகளை வரிசைப் படுத்தித் தர அவர்களிடம் கீழ்க்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

 

  • இந்தக் கவிதையில் உள்ள கற்பனையின் தெளிவு எப்படி இருக்கிறது?
  • இந்தக் கவிதை உணர்ச்சி பூர்வமாக எப்படிப்பட்ட கிளர்ச்சியை அல்லது மன ஓய்வைத் தருகிறது?
  • இந்தக் கவிதையின் உள்ளடக்கம் உடன்மறையானதா அல்லது எதிர்மறையானதா? அதன் உணர்ச்சிப் பிணைப்பு எப்படி உள்ளது?
  • இந்தக் கவிதை கலைநயத்தில் எப்படிப்பட்ட ரசிப்பைத் தருகிறது?

ஆய்வின் முடிவில் அனைவரிடமும் சில பொதுவான ஒற்றுமைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

“தனிநபரின் ருசி மனிதருக்கு மனிதர் மாறுபடும் என்பது உண்மை. இப்படிப்பட்ட வேறுபாடுகள் இருப்பினும், ஒரு கவிதையை அனைவரும் ரசிக்க சில காரணிகள் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளன”, என்று ஆய்வுக் குழு தலைவர் அமி பெல்ஃபி (Amy Belfi) கூறுகிறார்.

இந்த ஆய்வின் முடிவு நடப்பு ‘சைக்காலஜி ஆஃப் அஸ்தடிக்ஸ், க்ரியேடிவிடி அண்ட் தி ஆர்ட்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளது.

ஒரு கவிதையில் அனைவரும் முதலில் எதிர்பார்ப்பது கற்பனா தெளிவு தான்.

அடுத்தது ஒரு சிறந்த கவிதை, உடன்மறையான உள்ளக் கிளர்ச்சியைத் தூண்ட வேண்டும்.

சந்தோஷமான உணர்வுகளைக் கிளப்பும் கவிதைகள் முதலிடத்தைப் பிடிக்கின்றன.

இந்த உரைகல்லில் பாரதியாரின் இரு பாடல்களைப் பார்த்தால் ஆய்வு உண்மை தான் என்று நம்மை நம்ப வைக்கும்.

மங்கியதோர் நிலவினிலே, கனவில் இது கண்டேன், வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை –பாரதியார்;

காற்று வெளியிடை கண்ணம்மா, உன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் – பாரதியார்

 

‘தி செகண்ட் கமிங்’ என்ற ஈட்ஸின் (Yeat’s “The Second Coming” )  கவிதை போல பிற கவிதைகள் யாரையும் கவரவில்லை.

ஹைகூவில் அனைவரையும் கவர்ந்த ஹைகூ : “மலர்கள் மலர்ந்து தீ போல பரவுகிறது.”

மிக மோசமான ஹைகூ என்று மதிப்பிடப்பட்ட ஹைகூ:

“குடித்து விட்ட பெண் வாந்தி எடுக்கிறாள்.”

மிகவும் மோசமான மதிப்பெண்களைப் பெறும் கவிதைகள் எதிர்மறை உணர்ச்சிகளை ஊட்டுவதாக உள்ளன. அதில் கற்பனைத் தெளிவும் இல்லை.

இந்த ஆய்வானது கவிதைகளுக்கென்றே எடுக்கப்பட்டது என்று கூறும் ஆய்வாளர்கள், ஆனால் இது பாடல்கள், கதைகள் மற்றும் ஸ்கிரிப்டுகளுக்கும் பொருந்தும் என்று கூறுகின்றனர். ஆய்வுக் களத்தை விரிவு படுத்தி இன்னும் ஆராயப் போகிறது ஆய்வுக் குழு.

இந்த ஆய்வு, பாடல்களுக்கும் பொருந்தும் என்று ஆய்வு முடிவு கூறும் போது தான், ஐந்து கோடி பேர் பார்த்து ரஸித்த ஜிமிக்கி கம்மல் எப்படி பிரபலமானது என்பது புரிகிறது!

பாருங்கள் ஆய்வின் முடிவை! கற்பனைத் தெளிவு வேண்டும்.

உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் உள்ளத்தில் ஏற்படுத்தி ஆடச் செய்ய வேண்டும்.

ஜிமிக்கி கம்மல் அவரவர்கள் மனோரஸனைக்கு ஏற்றபடி கற்பனா தெளிவைக் கொடுத்து உள்ளக் கிளர்ச்சியை உற்சாகத்தையும் ஏற்படுத்தி நாடு விட்டு நாடு, பட்டி தொட்டி எங்கணும் பரவி விட்டது. அவரவர்களுக்கு அவரவர் மனோபாவப்படி ஒரு ஜிமிக்கி கம்மல்!

மேலை நாட்டு ஆய்வுகள் ஒரு புறம் இருக்க நம் நாட்டுக் கவிஞர்கள் கவிதை பற்றிய இலக்கணத்தை எப்படி வரையறுத்திருக்கிறார்கள்?

மஹாகவி பாரதியார், “உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” என்கிறார். வாக்கின் ஒளி அற்புதங்களை உருவாக்கும் என்பது அவரது முடிவு,

அதன் பயனையும் அவர் தெளிவுற விளக்குகிறார்:-

“வெள்ளம் போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வார்!”

எப்படி ஒரு அற்புதமான வரையறுப்பு?

கவிச் சக்கரவர்த்தி கம்பனோ பெருகி வரும் கோதாவரியைக் கண்ணால் கண்ட மகிழ்ச்சியில் கவிதைக்கு இலக்கணம் வகுத்து விடுகிறான்.

‘புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து  புலத்திற்றாகி அவியகத்துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளவில்       சவியுறத் தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தாங்கிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்”

நல்ல ஒரு கவிஞனின் கவி புவியினுக்கு அணியாக இருக்கும்; ஆன்ற பொருளைத் தரும். தேவர் தம் உணவுக்கொத்த சுவைப் புலங்களில் படிந்ததாக இருக்கும். அகன்ற பிரவாகம் போலப் பெருக்கெடுத்து ஓடி இன்பம் தரும்.(கோதாவரியைப் போல).

கவிதை என்றால் என்ன என்பதை மிக எளிமையாக விளக்குகிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. ஆனால் அது ஆழ்ந்த பொருளைத் தரும் ஒன்று:

 

உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்                       உருவெடுப்பது கவிதை                                     தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை                தெரிந்துரைப்பது கவிதை.

இப்படி கவிதை பற்றிய வரையறுப்புகள் ஆயிரம் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கவிஞர் சொன்னதே! அனைத்தும் உண்மை! இதற்கு அப்பாலும் விளக்க முடியாமல் இருப்பதே நல்ல கவிதை!

அறிவியல் கவிதைக் களத்திற்குள் இறங்கியது என்றால் கவிதை மட்டும் சும்மாவா இருக்கும். அதுவும் அறிவியலுக்குள் இறங்கி விடும்; விளையாடும்!

அதையும் எதிர்காலத்தில் ரஸிக்கத் தானே போகிறோம்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1911ஆம் ஆண்டு ஸ்காட் மேற்கொண்ட சாகஸம் நிறைந்த தென் துருவப் பயணம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே பயணத்தில் இன்னும் மூன்று பேர் உயிரைப் பணயம் வைத்து தனியாக ஒரு குட்டிப் பயணம் மேற்கொண்டனர்.

1911 ஜூன் மாதம் ஸ்காட் குழுவினர் 25 பேர்கள் கேப் இவான்ஸ் என்ற இடத்தை அடைந்த போதிலும் நிஜமான தென் துருவக் கடைசிப் பயணம் அக்டோபரில் தான் ஆரமபிக்க முடிந்தது.

அவரது உதவியாளரான வில்ஸன் என்பவர் பவர்ஸ் என்பவரையும் செர்ரி கராட் என்பவரையும் அழைத்துக் கொண்டு பெங்குயின் முட்டைகளைச் சேகரிக்க ஜூன் 27ஆம் தேதியன்று ஒரு பயணம் மேற்கொண்டார்.

130 மைல் பயணம். கண்ணே தெரியாத அளவுக்கு கும்மிருட்டு. உறைய வைக்கும் குளிர். கற்பனைக்கும் அப்பாற்பட்ட மைனஸ் 75 டிகிரி பாரன்ஹீட்! என்றாலும் கூட உயிரியல் துவக்கத்தின் பரிணாமத்தை ஆராய பெங்குயின் முட்டைகள் உதவும் என்று வில்ஸன் நம்பினார்.

 

அவர்கள் கொண்டு சென்ற ஸ்லெட்ஜ் வண்டிகள் 400 பவுண்ட் எடையின் பாரத்தைத் தாங்க முடியாமல் நெளிந்தன. கடுமையான காற்று. கும்மிருட்டில் ஒவ்வொரு ஸ்லெட்ஜையும் அடுத்த கட்டத்திற்கு கடைத்தேற்ற வேண்டியதாகப் போயிற்று.

திடீரென ஒரு பனிப்புயல். அவர்களது கூடாரம் பறந்தே போனது. பிஸ்கட் தான் உணவு. ஸ்லீப்பிங் பேக்கில் தான் தூக்கம்.

19 நாட்கள் இப்படித் தவியாய்த் தவித்தனர். கடைசியில் பெங்குயின் காலனி என்று வர்ணிக்கப்படும் பெங்குயின் இருப்பிடத்தை அடைந்தனர்.

200 அடி உயர சிகரத்திலிருந்து பனிக் கடலோரம் இறங்கி முட்டைகளைச் சேகரித்து மீண்டும் மேலே ஏற வேண்டும்.

 

செர்ரி கராட் கண் தெரியாமல் சிகரத்தில் ஏற இரண்டு முட்டைகள் உடைந்து சிதறின. நல்ல வேளையாக இன்னும் மூன்று முட்டைகள் பத்திரமாக இருந்தன!

மறு நாள் தங்கள் கல் வீட்டை அவர்கள் செப்பனிட்டனர். இரு நாட்கள் கழித்து காற்று வீச்சு குறைந்தது. பவர்ஸ் இன்னும் ஒரு முறை பெங்குயின் காலனி போகலாமா என்றார், துணிச்சலுடன்.

ஆனால் வில்ஸனோ, “போதுமப்பா! போதும்! போகலாம் நம் காம்பை நோக்கி” என்றார்.

உலகின் மிகத் துணிச்சலான, அபாயகரமான, மோசமான பயணங்களுள் இதுவும் ஒன்று என்கிறது வரலாறு!

***

 

 

எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் உங்கள் மூளை! (Post No 4533)

Date: 23  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-50 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4533

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

திருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஹெல்த்கேர் இதழில் அக்டோபர் 2017இல் வெளியாகியுள்ள கட்டுரை

உங்களின் எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் உங்கள் மூளை!

 

மூலம் : ஹெலன் தாம்ஸன்

தமிழாக்கம் ச.நாகராஜன்

 

எதிர்காலம் பற்றிச் சொல்வதில் நமது மூளைகள் நம்மை விடச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்றே தோன்றுகிறது.

மூளையின் ஒரு பகுதியில் உள்ள இயக்கமானது நிதி திரட்டும் வெப்சைட் அந்தத்  திட்டமுயற்சிகளில் வெற்றி பெறுமா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்கிறது – நாம் வேறு விதமாக நிச்சயமாக நினைத்தாலும் கூட!

மூளை மூலம் எதிர்காலத்தைக் கணித்தல் என்ற இந்தக் கண்டுபிடிப்பு மனிதர்களின் மூளைகளை ஸ்கேனிங் செய்வதன் மூலம் ஓட்டுப் போடும் போது நிலைமைகளை மேம்படுத்தும் என்பதையும் நிதி ஆதாரச் சந்தைகளில் மாறுதல்களை கணித்துச் சொல்வதைச் சாத்தியமாக்கும் என்பதையும் உணர்த்துகிறது.

சந்தை நிகழ்வுகளைச் சரியாகச் சொல்ல முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ப்ரையான் (Braian knutson) க்னட்ஸன் மற்றும் அவரது குழுவினர் கிக்ஸ்டார்டர் (Kickstarter) இணையதளத்தில் உள்ள 36 திட்டங்களில் முதலீடு செய்வது பற்றி யோசிப்பார்களா என்று 30 பேர்களை ஒரு சாம்ப்ளிங் (Sampling) செய்து பார்த்தனர்.

ஒவ்வொரு திட்டத்தையும் பற்றிய விவரங்களையும் படங்களையும் இந்த ஆய்வில் பங்கு கொண்டோர் பார்க்கையில் மூளை ஸ்கேன் எடுக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் அந்தத் திட்டங்களில் அவர்கள் நிதியை முதலீடு செய்வார்களா என்று கேட்கப்பட்டது.

கிக்ஸ்டார்டர் திட்ட விளம்பரம் சில வாரங்களில் முடிந்த பின்னர் 18 திட்டங்களுக்கு நிதி உதவி கிடைத்தது. ஆய்வில் பங்கு கொண்டவர்களின் மூளை ஸ்கேன்களை குழுவினர் ஆய்ந்து பார்த்ததில் மூளையில் உள்ள ஒரு பகுதியான ந்யூக்ளியஸ் அகும்பென்ஸ் (Nuclear accumbens) என்ற பகுதி பின்னால் வெற்றியடைந்த திட்டங்களைப் பற்றி யோசிக்கையில் அவர்க்ள் கூறியதற்கு மாறானதாக அமைந்திருந்ததைக் கண்டு பிடித்தனர்.

தற்செயல் ஒற்றுமையாக அல்லாமல் துல்லியமாக 59.1 சதவிகிதம் சரியாக கிக்ஸ்டார்டர் திட்டங்களின் வெற்றியை முன்கூட்டியே சொல்ல முடியுமா  என்பதைக் கண்டுபிடிக்க  இந்த மூளை இயக்க வித்தியாசங்களின் அடிப்படையில் சரியாக் உணர்வதற்காக ஒரு அலாக்ரிதத்தை குழு அமைத்தது.

இதில் ஈடுப்பட்ட தன்னார்வத் தொண்டர்கள்  எண்ணி, வாயால் கூறியதற்கு மாறாக இருந்தது முடிவு!

ஒவ்வொரு திட்டம் பற்றியும் யோசிக்கையில் தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்கள் அந்தத் திட்டத்தை எவ்வள்வு தூரம் விரும்புகிறார்கள் என்பதையும் அந்தத் திட்டமானது குறிப்பிட்ட இலக்கை அடையுமா என்பதைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தார்கள் என்பது பற்றியும் கேட்கப்பட்டது.

ஆய்வு முடிவுகள் நிதி திரட்டலில் 52.9 சதவிகிதம் அவர்கள் மூளை கணித்தபடி துல்லியமாக இருந்ததை முன்கூட்டியே தெரிவித்திருந்தன.

 

க்னட்ஸனின் குழுவினர் இந்த முடிவுகளால் மிகவும் ஆச்சரியப்பட்டனர். இது சரிதானா என்பதை உறுதி செய்ய புதிய தன்னார்வத் தொண்டர்கள் மூலமாக புதிய கிக்ஸ்டார்டர் திட்டங்களைப் பற்றிய் ஆய்வு நடத்தினர். முடிவுகள் முன்பு போலவே அமைந்தன! (ஜர்னல் ஆஃப் நியூரோ ஸயின்ஸ்

 

“ இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது” என்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ந் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஸ்டீபன் போட் கூறினார். “ ஆனால் இதில் ஒரு வலுவான முரண்பாட்டை நான் உணர்கிறேன், எப்படி மூளையானது எது வெற்றி பெறும் என்பதை அந்த மனிதராலேயே அறிய முடியாத போது அறிய முடியும்?

 

முடிவுகளை எடுப்பதில் பல வித காரணங்களை நீங்கள் சீர்துக்கிப் பார்க்க வேண்டியிருப்பதனால் இப்படி இருக்கலாம். எடுத்துக்காட்டாக உங்களது நியூக்ளியஸ் அக்கும்பென்ஸின் இயக்கமானது – இது ஒரு ஊக்கப் பரிசுடன் இணைக்கப்பட்டிருக்கையில் – ஒரு சாக்லட் பிஸ்கட்டை வாங்குவதில் எதிர்பார்ப்பை அதிகப் படுத்தியிருக்கக் கூடும். ஆனால் மூளையின் இதர பகுதிகள் அதை சீர்தூக்கிப் பார்த்து நீங்கள் ஒரு டயட்டில் – உணவுத் திட்டத்தின் கீழ் – இருக்கிறீர்கள்  என்று சொல்லும். ஆகவே மூளைக்கும் அவர்கள் சொல்வதற்கும் முரண்பாடு இருக்கக்கூடும்.

 

நீங்கள் பிஸ்கட்டை வாங்காவிட்டாலும் கூட  மற்றவர்களிடம் உள்ள நியூக்ளியஸ் அக்கும்பென்ஸ் – உங்களை பிஸ்கட்டை வாங்குமாறு பின்னர் ஒரு சமயம் தூண்டக்கூடும். மூளையில் உள்ள முடிவெடுக்கும் செய்முறையை அக்கு அக்காக பிரித்தால், அப்போது ஒரு மனிதன் சராசரியாக என்ன செய்ய நினைப்பான் என்பதை உணர்த்தும் மூளை இயக்கத்தை அடையாளம் காண முடியும் என்கிறார் க்னட்ஸன்.

“இந்த நிகழ்வின் அடிப்படையை நாம் புரிந்து கொள்ள ஆரம்பித்தால், அது மூளை அடிப்படையிலான கணிப்பின் மூலம்

பொதுமக்களின் நடத்தை எப்படி அமையும் என்பதை அறிய உதவுவதில் பெரிய அடியை எடுத்து வைப்பதாக அமையும். ஒருவேளை இன்னும் உடல் நலம் மற்றும் நிதி போன்ற மற்ற விஷயங்களில் முடிவுகளை அமுல்படுத்தவும் உதவும்” என்கிறார் போட்.

மூளையின் இதர பகுதிகளையும் கணக்கில் எடுத்துப் பார்ப்பது மூளை ஸ்கேனின் மூலம் எதிர்கால முன்னறிவிப்பை செய்வதை இன்னும் அதிக சக்தி வாய்ந்ததாக ஆக்கும்.

 

க்னட்ஸன் குழுவினர் மூளை முழுவதற்குமான இயக்கத்திற்கென அலாக்ரிதம் ஒன்றை உருவாக்கியதில் கிக்ஸ்டார்டர் திட்ட வெற்றி பற்றி  நடக்கவிருப்பதை முன்கூட்டியே கூறுவதில் 67 சதவிகித துல்லியத்துடன் அதைக் கூற முடிந்தது!

“மூளை மூலம் எதிர்காலத்தை முன்கூட்டியே கூறுதல் என்பது எப்படி மக்கள் ஒரு தேர்தலில் ஓட்டைப் போடுவார்கள் என்பதை மேம்படுத்தும் அல்லது யாருக்காக ஒரு திட்டத்தைச் சொல்லவிருக்கிறோம் என்பது தெளிவில்லாமல் இருக்கும் போது அதைத் தெளிவு படுத்த உதவும் “ என்கிறார் க்னட்ஸன்.

 

“பிரதிநிதித்வ சாம்பிள் (Representative sampling) மூலம் முன்கூட்டியே முடிவைச் சொல்ல முடியாத நிறைய விஷயங்கள் உள்ளன – ஓட்டுப் போடுவதை இதற்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். ஒருவேளை மூளை இயக்கமானது இதை அறிந்து கொள்ள உதவும்” என்று மேலும் கூறுகிறார் க்னட்ஸன்!

***

 

3 கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து! (Post No.4519)

Date: 20  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-54 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4519

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

15-12-17 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 43வது) கட்டுரை

மூன்று கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து!

ச.நாகராஜன்

அமெரிக்காவில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் போஸ்டன் நகரில் மிகவும் பிரபலமான நைட் கிளப்பாகத் திகழ்ந்தது கோகனட் க்ரோவ் என்னும் க்ளப்.

 

இதில் 1942ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி கோரமான தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இதன் காரணம் அதிகாரபூர்வமாக இன்று வரை யாருக்கும் தெரியாது. ஆனால் பல ஊகங்கள் இது பற்றி உண்டு. தப்பான வயரிங் தான் இதற்குக் காரணம் என்றும் ஒரு பல்பை மாற்றும் போது ஏற்பட்ட மின்கசிவினால் இந்த மாபெரும் தீ விபத்து ஏற்பட்டது என்றும் சிலர் கூறுவர்.

 

தீ விபத்து ஏற்பட்ட நாளில் அதிலிருந்த ஹாலில் அதில் இருக்கக் கூடிய நபர்களுக்கு மேல் மிகவும் அதிகமாகக் கூட்டம் இருந்தது. ஹாலின் பக்கவாட்டில் கதவுகள் இருந்த போதும் அவை வெளிப்புறத்தில் தாளிடப்பட்டிருந்தன. ஆகவே உள்ளிருப்போர் கதவுகளைத் திறக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

 

இன்னொரு காரணம் தீ பற்றிய் எச்சரிக்கை மணி ஒலித்தவுடன் அவசர வழி வழியாக அனைவரும் தப்ப முயன்றனர்.

 

ஆனால் கிளப்பில் இருந்த ஒரு முட்டாள் அவசர வழி கதவுகளைத் திறக்க முடியாதபடி அடைத்து விட்டான். அதன் காரணம் தீ என்ற சாக்கில் கிளப்பிற்குத் தர வேண்டிய பணத்தைத் தராமல் எல்லோரும் ஓடி விட்டால் என்ன செய்வது என்று அவன் முட்டாள்தனமாக எண்ணியதே காரணம்.

ஹாலில் இருந்தவர்களில் 492 பேர்கள் தீயினால் கருகி மாண்டனர். அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரும் தீ விபத்து இது தான்.

 

(28-11-2017 அன்று நடந்த) இதன் 75வது நினைவு தினத்தை ஒட்டி  இந்த ஹாலில் தீ விபத்தில் அகப்பட்டும் கூட அதிர்ஷ்டவசமாகத் தப்பி மீண்ட 91 வயதான மார்ஷல் கோல் என்பவர் இதைப் பற்றி நினைவு கூர்ந்து பேசுகையில், “கோரமான அந்த விபத்தில் பிழைத்து மீண்டதிலிருந்து எங்கு போனாலும் முதலில் வெளியேறும் வழிகள் எங்கு உள்ளன கதவுகள் சரியாக இருக்கிறதா என்பதை செக் செய்வதைத் தவறாமல் செய்வது எனக்கு ஒரு பழக்கமாகவே ஆகி விட்டது” என்றார்.

இந்தத் தீ விபத்தின் கோரமான இழப்பு ஒரு புறம் இருக்க, இதனால் மூன்று பெரிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்தது.

600 பேர்கள் இருக்கக் கூடிய ஹாலில் ஆயிரம் பேருக்கு மேல் அன்று குழுமி இருந்தவர்களில் பெரும்பாலோர் தம்பதிகளாக ஜோடி ஜோடியாக வந்திருந்தனர்.

திடீரென்று தீப்பொறிகள் தென்பட்டன. அது என்னவென்று உணருவதற்கு முன்னர் ஹாலே தீ ஜுவாலைகளால் பற்றி எரிய ஆரம்பித்தது.

 

492 பேர் இறந்ததோடு 150 பேர் தீக்காயத்தினால் பீடிக்கப்பட்டனர். போஸ்டன் சிடி ஹாஸ்பிடலில் தீ விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 300 பேர் அட்மிட் செய்யப்பட்டனர். மசாசுசெட்ஸ் ஜெனரல் ஹாஸ்பிடலுக்கு இன்னொரு நூறு பேர் எடுத்துச் செல்லப்பட்டனர்.

 

அங்கிருந்த பிளாஸ்டிக் சர்ஜன் ப்ராட்ஃபோர்ட் கானான் (Bradford Cannon) என்பவர் தீக்காயங்களுக்கு ஒரு நவீன சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தார். சாதாரணமாக தீக்காயங்களுக்கு டைகள் மற்றும் டேனிக் ஆசிட் ஆகியவையே உடனடி சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும். அதற்கு பதில் அவர் காஸ்  (gauze)-  உடன்  பெட்ரோலியம் ஜெல்லியை போரிக் ஆசிட் மீது தடவி அதைப் பயன்படுத்தினார். அவர்கள் தீயினால் வெந்திருந்த சதைப் பகுதிகளை அகற்றி தோலை ஒட்டும் புது முறையைக் கையாண்டார். கானான் இந்த சிகிச்சை முறையை பிலடெல்பியாவிலும் பின்னர் வேலி ஃபோர்ஜ் ஜெனரல் ஹாஸ்பிடலில் கையாண்டார்.

 

அது மட்டுமின்றி அந்த 500 பேர்களும் தவித்த தவிப்பு உளவியல் ரீதியாக அவர்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் கற்றுத் தந்தது. அந்த வழிமுறைகள் உலகெங்கும் இன்று தீ விபத்துக் காயம் ஏற்பட்டவரிடம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் இந்த நவீன சிகிச்சை முறையால் பிற்காலத்தில் நலம் அடைந்தனர்.

 

 

இதைத் தொடர்ந்து இரண்டாவது கண்டுபிடிப்பு உளவியல் ரீதியில் அமைந்தது.

இந்தப் பெரிய தீ விபத்தில் உயிர் பிழைத்தோரையும் , போரில் தீக்காயம் பட்ட இராணுவத்தினரையும் உளவியலாளர் எரிச் லிண்டிமான் (Erich Lindemann) முறையாக பேட்டி எடுத்து விவரங்களைச் சேகரித்தார். இப்படி ஒரு துயரமான சம்பவத்தில் அகப்பட்டோரின் துக்கம் எப்படி இருக்கும், அதற்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் ஆய்வு செய்தார்.

அப்போது தான் மணமுடித்திருந்த ஒரு இளம் வயதுப் பெண் தன் கணவனை அந்தத் தீவிபத்தில் இழந்திருந்தார். அந்தக் கணவன் அவளுடன் ஒரு சண்டையைப் போட்டு விட்டு அந்த கிளப்புக்குச் சென்றிருந்தான். இன்னொருவரோ தன் இளம் வயது மனைவியை அந்த விபத்தில் இழந்திருந்தார். அவளைக் காப்பாற்றுமுன்னர் அவர் மயக்கமடைந்து விழுந்து விட்டார்.

இப்படிப் பல துயரகரமான நிகழ்வுகளையும் அதையொட்டிய மனித உணர்வுகளையும் தொகுத்த லிண்டிமான் உளவியல் துறையில் துக்கம் அடைந்தோருக்கான உளவியல் சிகிச்சை முறையைக் கண்டார். அதற்கு இந்த தீ விபத்து தான் வழி வகுத்தது.

 

மூன்றாவது கண்டுபிடிப்பாக ஒரு  விபத்தில் காயம்பட்டோர்  அது நடந்து முடிந்தவுடன் எப்படி தீராத மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்பதை தீவிபத்தில் உயிர்பிழைத்தவர்களைச் சந்தித்து அலெக்ஸாண்ரா ஆட்லர் (Alexandra Adler) என்ற பெண்மணி ஒரு ஆய்வு நடத்தினார். இப்படிப்பட்ட ஒரு ஆய்வை முதலில் செய்த உளவியலாளர் இவர் தான். கோகனட் கிளப் தீ விபத்தை வைத்து இவர் செய்த இவரது உளவியல் ஆய்வு பெரிய மருத்துவ முன்னேற்றத்திற்கான ஆய்வுப் பேப்பர்களைக் கொண்டிருந்தது. 2001ஆம் ஆண்டில் டாக்டர் ஆட்லர் மறைந்தார். அவர் மறைவை ஒட்டிய இரங்கல் செய்தியில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் உல்ப்கேங் சாக்ஸன் என்ற நிபுணர், “490 பேருக்கு மேல் கொல்லப்பட்ட விபத்தில் அங்கிருந்து மீண்ட பலருக்கு மூளை நிரந்தரமாக சேதம் அடைந்திருந்தது. அவர்கள் அனைவரையும் சோதனை செய்த ஆட்லர் மன அழுத்தமும், கவலையும் எப்படி ஒரு விபத்தைத் தொடர்ந்து பலரையும் நிரந்தரமாக பாதிக்கிறது, அதை எப்படிப் போக்குவது என்பதையும் ஆராய்ந்தார். அதன் பலனாகவே இரண்டாம் உலகப் போரில் காயம்பட்டிருந்த பல வீரர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்க முடிந்தது” என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

 

 

இந்த மாபெரும் தீ விபத்து உலகினருக்குத் தரும் செய்தி என்ன?

ஜனசந்தடி அல்லது கூட்டம் அதிகமுள்ள ஒரு இடத்திற்குப் போகும் போது அங்கு எங்கெல்லாம் வெளியேறும் வழிகள் உள்ளன, எப்படி நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது ஆகியவற்றைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில், இது பெண்களையும், குழந்தைகளையும், முதியோரையும் தியேட்டர் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து செல்வோர் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்பதைச் சொல்ல தேவையே இல்லை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு உடை விஷயத்தில் எப்போதுமே அக்கறை இல்லை.

 

அவர் மனைவிக்கு இதில் பெரிதும் வருத்தம்.

நன்றாக உடை உடுத்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அடிக்கடி அவர் சொல்வார்.

 

“எதற்காக? என்னை எல்லோருக்கும் அங்கே நன்றாகத் தெரியும்” என்று சொல்லி மனைவியின் வாயை மூடி விடுவார் ஐன்ஸ்டீன்.

 

ஒரு சமயம் பெரிய மாநாட்டிற்கு மனைவியுடன் அவர் செல்ல வேண்டியிருந்தது.

 

வழக்கம் போல அவர் மனைவி, “நன்றாக உடை உடுத்திக் கொண்டு போக வேண்டும்” என்று ஆரம்பித்தார்.

வழக்கம் போல ஐன்ஸ்டீனும்,” எதற்காக? அங்கே எல்லோருக்கும் என்னைத் தெரியும்” என்றார்.

உடனே அவர் மனைவி, “ என்னை அங்கே யாருக்கும் தெரியாதே!” என்று பதில் சொன்னார்!

 

ஐன்ஸ்டீன் சிரித்தார். நல்ல ஆடைகளை அணிந்து கொண்டார்!

***

 

 

உலகின் முதல் விண்வெளி தேசம்! (Post No.4468)

Date: 8 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-26 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4468

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாக்யா 8-12-17 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 42வது) கட்டுரை

உலகின் முதல் விண்வெளி தேசம்!

ச.நாகராஜன்

“பூமியின் மீது அஸ்ட்ராய்டுகளால் ஏற்படும் தாக்குதல்களிலிருந்து   பூமியை அஸ்கார்டியா காப்பாற்றும்” – அஷுர்பெய்லி

உலகின் முதல் விண்வெளி தேசம் பிறந்து விட்டது. அதன் பெயர் அஸ்கார்டியா (Asgardia).

 

மூன்று லட்சம் பேர் அதன் குடிமக்களாக ஆக விரும்பி பதிவு செய்துள்ளனர். அந்த தேசத்திற்கு என்று தனி ஒரு அரசியல் சட்டம் உண்டு.

 

அது எப்போதும் விண்ணில் மிதக்கும் ஒரு தேசம்.

ஆம், கடந்த 12-11-2017 அன்று அது விண்ணில் ஏவப்பட்டது.

53 வயதே ஆன ரஷிய விஞ்ஞானியான ஐகார் அஷுர்பெய்லி என்பவர் சென்ற வருடம் இப்படி ஒரு தேசம் உருவாக்கப்படுவதை உலகத்தினருக்கு அறிவித்தார்.

அஸ்கார்டியா -1 என்ற விண்கலம் அவரது சொந்தச் செலவில் அமைக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.

 

 

 

 

அது சிக்னஸ் என்ற பெரிய விண்கலத்தில் எடுத்துச் செல்லப்பட்டு அதிலிருந்து விண்ணில் பறக்க விடப்பட்டது!

அஸ்கார்டியா கலத்தில் அதன் அரசியல் சட்டமும், தேசீய  சின்னமும் வைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பல்வேறு உலகநாடுகளைச் சேர்ந்த அஸ்கார்டியா குடிவாசிகளாக ஆக விரும்புவோரின் தனிப்பட்ட குறிப்புகளும் அதில் வைக்கப்பட்டுள்ளது. எத்தனையோ கலங்கள் விண்ணில் பறந்தாலும் ஒரு புதிய தேசமாக உலவும் கலம் இது ஒன்று தான்!

 

சிக்னஸ் கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பொருள்களை சப்ளை செய்து விட்டு அஸ்கார்டியாவை விண்ணில் மிதக்க விடும். பின்னர் அது பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு பக்கம் போய் பறக்க ஆரம்பிக்கும். அதன் பணி அவ்வளவு தான்!

 

இது ஏதோ சிறு பிள்ளைகளின் மாயாஜாலக் கதை மாதிரி இருக்கிறதே என்று பலரும் எண்ணலாம். ஆனால் இதை உருவாக்கிய ரஷிய விஞ்ஞானி வாஷிங்டனுக்கு விரைந்துள்ளார்.

அவர், அங்கு ஐக்கிய நாடுகள் சபையில் இந்த நாட்டைப் பற்றிக் கூறி அதனுடைய அங்கீகாரம் பெற்ற தேசமாக இதை ஆக்கப்போகிறார்.

 

அந்த தேசத்திற்கென பார்லிமெண்ட் தேர்தலும் உண்டு. அந்த தேசத்தின் குடிமக்களுக்கு அடையாளக் கார்டுகள் தரப்படும். பாஸ்போர்ட் கூடத் தயாராகி வருவதாக அஸ்கார்டியாவின் வணிகத்துறை பிரிவின் தலைமை அதிகாரியான லீனா டி வின்னி கூறுகிறார்.  இவை ஒவ்வொரு நாட்டிலும் அமைக்கப்படும் அஸ்கார்டியாவின் தூதரகம் மூலமாக அதன் குடிமக்களுக்கு விநியோகிக்கப்படும்.

பல்வேறு தேசங்களைச் சேர்ந்த 18000 பேர் இதன் குடிமக்களாக இப்போது ஆகியுள்ளனர்.

 

2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த தேசம் உருவாக்கப்பட்டது.

 

பழைய கால புராணத்திலிருந்து பெறப்பட்ட ஒரு நகரத்தின் பெயரை அஸ்கார்டியா அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் அனைவரும் அமைதி நிறைந்த ஒரு சமுதாயமாகத் திகழ்வர். அங்கிருந்து அவர்கள் பூமிக்கு ஏற்படும் ஆபத்துக்களைச் சமாளித்துப் போக்குவர்.

 

ஆனால் தற்போதைக்கு அஸ்கார்டியாவின் குடிமக்கள் அவரவர்களின் தேசத்தில் தான் வாழ்வார்கள்.

விண்ணில் பறக்கும் அஸ்கார்டியா சுமார் 18 மாதங்கள் தனது குடிமக்களின் விவரங்களைக் கொண்டு பறக்கும். பிறகு அதன் ஆயுள் காலம் முடிவுக்கு வரும். இப்படிப்பட்ட சிறிய விண்கலங்களின் ஆயுள் காலம் அவ்வளவு தான்.

இந்த தேசம் உருவாக்கப்படும் போது நான் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றி விட்டேன் என்று பெருமிதம் பொங்க விஞ்ஞானி ஐகார் அஷுர்பெய்லி கூறுகிறார்.

இந்த தேசத்தின் குடிமகனாக ஆக யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

அவர்களுக்கு 18 வயது ஆகி இருக்க வேண்டும். ஒரு ஈ-மெயில் முகவரி இருக்க வேண்டும். ஆணோ, பெண்ணோ, எந்த தேசமோ, எந்த இனமோ, அந்தஸ்தோ எதுவும் ஒரு தடையில்லை. ஏன், தண்டிக்கப்பட்ட பழைய கைதிகளாகக் கூட இருக்கலாம். ஆக அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

 

இப்போதைய அஸ்கார்டியாவின் ஜனத்தொகை 204 நாடுகளைச் சேர்ந்த 1,14,000 பேர்கள் என ஒரு தகவல் கூறுகிறது. அஸ்கார்டியாவின் அரசியல் சட்டத்தை ஒப்புக் கொண்டவர்கள் மட்டுமே அதனுடைய குடிமக்களாக ஆக முடியும்.

துருக்கியிலிருந்து மட்டும் அதிக பட்சமாக 16500 அஸ்கார்டியன்கள் இருக்கின்றனர்.

 

ஹாங்காங்கைச் சேர்ந்த ஜான் ஸ்பைரோ என்ற ஒரு விற்பனையாளர், “என்னைப்பற்றிய விவரங்களை இப்படி ஒரு சாடலைட்டில் அனுப்புவதைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்கிறார்.

 

“புத்தரின் சூத்ரங்களை மொழிபெயர்த்து அந்த புத்த மத நூல்களை விண்ணில் உள்ள சொர்க்கத்திற்கு அனுப்புவது எவ்வளவு பெரிய பெருமைக்குரிய விஷயம்” என்று அவர் வியக்கிறார்.

 

அஸ்கார்டியா தேசத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை, பூமிக்கு அருகில் சுற்றும்படியான – அதாவது நூறிலிருந்து இருநூறு மைல்களுக்குள் சுற்றும்படியான ஒரு ‘தேசத்தை’ அமைப்பது தான்!

 

இன்னும் எட்டு வருடங்களுக்குள் இது அமைக்கப்பட்டு விடும்!

யார் வேண்டுமானாலும் இதில் பங்கு கொள்ளலாம் என்கிறார் அஷுர்பெய்லி.

“நாம் பிறந்த நகரமோ, கிராமமோ நமது உண்மையான வீ டு இல்லை. உண்மையில் பூமி தான் நமது வீ டு. அதை நாம் காக்க வேண்டும். செவ்வாய்க்கு மனிதன் போவது என்பதெல்லாம் நடக்க முடியாத கற்பனைக் கதை போன்ற ஒன்று. ஆனால் நானோ நடக்க முடியும் நிஜத்தைக் கூறுகிறேன்” என்கிறார் அவர்.

Dr Igor Ashurbeyli Credit: From ashurbeyli.eu.com

அஷுர்பெய்லியின் தொழில்நுட்ப நிறுவனத்தில் சுமார் பத்தாயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். 2010இல் அவருக்கு ரஷிய அரசின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்திற்கான விருது வழங்கப்பட்டது.

 

 

மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் வியன்னாவில் ஏரோஸ்பேஸ் இண்டர்நேஷனல் ரிஸர்ச் செண்டர் என்ற ஒரு மையத்தை ஆரம்பித்தார்.

 

சுருக்கமாகச் சொல்வது என்றால் விண்வெளி அஷுர்பெய்லிக்கு புதிதான ஒன்று அல்ல. 2011இல் அனைத்து அரசு சார்ந்த நிறுவனங்களின் பதவிகளையும் ராஜிநாமா செய்து தன்னை எந்தக் கட்சியிலும் சேராத ஒரு நடுநிலையாளர் என்பதை முதலில் அவர் நிலை நாட்டிக் கொண்டார்.

 

 

ஹாங்காங்கில் 2017, ஜூன் மாதம் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அஸ்கார்டியா என்ற தேசம் அவர் இளமை முதல் கண்ட கனவு என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

 

இப்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது ஐ.நா. இந்த தேசத்தை அங்கீகரிக்குமா என்பதைத் தான்.

இதற்கு ஐ.நாவின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.

ஒரு நாடு என்பது நிலையான ஒரு ஜனத்தொகையைக் கொண்டிருக்க வேண்டும்; வரையறுக்கப்பட்ட பூகோள எல்லையைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு அரசைக் கொண்டிருக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் உறவை ஏற்படுத்தும் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஐ.நா.வின் நாடு பற்றிய வரையறுப்பாகும்.

 

பார்லிமெண்ட் தேர்தலை உடனடியாக நடத்தப் போவதாகக் கூறும் அஷுர்பெய்லி அதில் நின்று உறுப்பினராக விரும்புவோர் விண்ணப்பங்களை வரும் மார்ச் 29க்குள் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

இதர ஐ.நா.வின் எதிர்பார்ப்புகளை அவர் எப்படி பூர்த்தி செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

நீங்களும் விண் தேசத்தின் மாண்புமிகு குடிமகனாக ஆக வேண்டும் என விரும்பினால் உடனே விண்ணப்பிக்கலாம்; விண்வெளியின் முதல் தேசத்தில் – விண்வெளியில் மிதக்கும் ஒரே தேசத்தில் – குடிமகனாக ஆகலாம்.

வாழ்த்துக்கள்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

விண்வெளி விஞ்ஞானியன நீல் டீ க்ராஸ் டைஸன் (Neil deGrasse Tyson) அனைவரும் விரும்பும் ஒரு ஜாலியான ஜோக் அடிக்கும் விஞ்ஞானி. அவர் சுவைபட விளக்காத விஷயமே இல்லை. தொலைக்காட்சியிலும் நெட்டிலும் அவரது நிகழ்ச்சிகள் மற்றும் வீடியோக்களை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசிக்கின்றனர். அவரது மேற்கோள்கள் மிகப் பிரபலமானவை. அவரது ஜோக்குகளும் உலக மக்களால் பரவலாகப் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அவருக்கு ட்விட்டரில் மட்டும் 40 லட்சம் விசிறிகள் உள்ளனர்.

 

தன்னை  விஞ்ஞானி ஆக ஆவதற்கு ஊக்கமூட்டியவர் யார் என்பதை மிக்க நெகிழ்ச்சியுடன் அவர் கூறியுள்ளார்.

அவர் 17 வயது இளைஞனாக இருக்கும் போது நடந்தது அந்த சம்பவம்.

 

 

1996இல் மறைந்த பிரபல விஞ்ஞானி கார்ல் சகன் (Carl Sagan)

கார்னெல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது விஞ்ஞானியாக விரும்பிய டைஸனை ஒரு சனிக்கிழமை தன்னுடன் இருக்குமாறு அழைத்தார்.

 

டைஸனுக்குத் தனது லாபரட்டரி உள்ளிட்ட அனைத்து இடங்களையும் பொறுமையாகச் சுற்றிக் காண்பித்த கார்ல் சகன் ‘தி காஸ்மிக் கனெக்‌ஷன்’ என்ற தனது நூலில் முதல் பக்கம் கையிழுத்திட்டு, “எதிர்கால விண்வெளி வீரருக்கு” என்று எழுதிக் கொடுத்தார். இந்த ஒரு புத்தகம் அவருக்குப் பெரும் உத்வேகத்தை ஊட்டி அவர் வாழ்க்கையையே மாற்றி அவரைப் பெரிய விண்ணியல் விஞ்ஞானியாக மாற்றியது என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

 

 

இத்தோடு நிற்கவில்லை கார்ல் சகன். அவரை தனது காரில் அமர்த்தி பஸ் ஸ்டாண்ட் கொண்டு சென்று விட்டார்.பின்னர் டைஸனிடம்,”ஒருவேளை பஸ் கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். நேராக எனது வீட்டிற்கு வந்து விடு. ஒரு நாள் என் குடும்பத்தினருடன் தங்கலாம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியைத் திருப்பித் திருப்பிக் கூறி வியக்கிறார் டைஸன்.

ஹார்வர்டு சென்று படித்து பெரிய விஞ்ஞானி ஆகி விட்ட டைஸன், “கார்ல் சகன் எனக்குக் கற்றுக் கொடுத்த இந்தப் பாடத்தை நான் இன்றளவும் கடைப்பிடிக்கிறேன். படிப்பதற்கு யார் விருப்பம் தெரிவித்தாலும் அவரை கார்ல் சகன் போல உத்வேகம் ஊட்டி வருகிறேன்” என்கிறார்.

 

 

உண்மையில் டைஸனை, கார்ல் சகன் உருவாக்கிய விஞ்ஞானி என்றே கூறலாம்!

***

 

 

கிரஹணம் மூலம் ரிக் வேத காலம் நிர்ணயம் (Post No.4466)

Written by London Swaminathan 

 

Date: 7 DECEMBER 2017 

 

Time uploaded in London-  22-08

 

 

Post No. 4466

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக வேதத்துக்கு நிர்ணயித்த காலம் எல்லாம் தவறு என்பது எல்லோராலும் ஏற்கப்பட்டுவிட்டது. அவரது காலத்திலேயே அவர் சொன்ன கி.மு 1200 என்பதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் ‘ஜகா’ வாங்கினார். நான் சொன்னதெல்லாம், இதற்கு கீழாக வேதத்தின் காலத்தை யாரும் குறைக்கமுடியாது என்று சொன்னேனே தவிர இதுதான் முடிவு என்பதல்ல; வேதத்தின் காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இருக்கலாம் என்று சப்பைக்கட்டு கட்டி தப்பித்துக் கொண்டார்.

 

இப்பொழுது சரஸ்வதி நதிதீர ஆய்வு, விஞ்ஞான முறையில், வேதத்தின் காலத்தை நிர்ணயித்துவிட்டது. அதாவது கி.மு.2000க்கும் முன்னர்தான் இருக்க முடியும்; சிந்துவெளி நாகரீகத்துக்கு முந்தியோ அல்லது சமகாலத்தானதோ இருக்கலாம் என்று காட்டிவிட்டது.

 

ஆனால் இதற்கு முன்னரே ஹெர்மன் ஜாகோபி, பாலகங்காதர திலகர் ஆகியோர் வானசாஸ்திர முறைப்படி ஆராய்ந்து கி.மு 4000 அல்லது அதற்கு முன் என்று சொன்னார்கள்; பலருக்கும் புரியாத விஷயம் என்பதால் எதிர்ப்பும் இல்லாமல் ஆதரவும் இல்லாமல் அந்த வாதம் ஒரு புறம் ஒதுங்கிவிட்டது.

அண்மைக் காலத்தில் இந்த அணுகுமுறையை மேலும் சிலர் தீவிரமாக ஆராய்ந்து கிரஹணக் குறிப்புகளை மட்டும் வைத்து உலகிலேயே மிகப் பழைய நூலான ரிக் வேதத்துக்குக் காலம் நிர்ணயம் செய்துள்ளனர்.

 

உமாபாத சென் என்பவர் ரிக்வேத காலம் என்ற புத்தகத்தில் பல சுவையான செய்திகளைத் தருகிறார். ரிக் வேதத்தில் உள்ள சூரிய கிரஹணக் குறிப்புகளை யாரும் உதாசீனம் செய்யமுடியாது; ஏ.லுட்விக் (A.Ludwig) என்பவர் இந்த விஷயத்தை மிகவும் விரிவாக ஆராய்ந்து எழுதினார்.

 

பத்தாவது மண்டலத்தில் (10-138-4) சூரியன் கிரஹணத்தால் பீடிக்கப்பட்டது பற்றிப் பாடியுள்ளனர். சிலர் இதை சந்திர கிரஹணம் என்று தவறாக மொழி பெயர்த்துவிட்டனர். ஆனால் முழு துதியையும் படித்தால் சூரிய கிரஹணம் என்பது தெளியப்படும்.

 

லுட்விக் என்பவர் வேதத்தைக் குறை

கூறுவோரைக் கண்டித்துள்ளார். இதே போன்ற குறிப்புகள் பிற நாட்டு இலக்கியங்களில் வரும்போது கேள்வியே கேட்காமல் இருப்பவர்கள் ரிக் வேதம் என்று சொன்னவுடன் மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? என்பது அவரது கேள்வி.

 

நாலாவது மண்டலத்திலும் (4-28-2) ஒரு கிரஹணக் குறிப்பு வருகிறது. அங்கே இந்திரன், சோமனால் சூரியனை மறை

த்தார் என்று துதி பாடுகின்றனர் சோம என்ற சொல்லுக்கு வேதத்தில் இரண்டு பொருள் உண்டு: 1.நிலவு, 2.சோமரஸம்

இது நிலவைத்தான் குறிப்பிடுகிறது, சோம ரசத்தை அல்ல என்று பேராசிரியர் வில்லிபிராண்ட், வேதகால பழங்கதைகள் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

 

இந்திரன் இந்த கிரஹணத்துக்குக் காரணம் என்று அந்த மந்திரம் சொல்லுவது பலருக்கும் புதிராக இருந்தது. மேலும் ஸ்வர்வானு என்பதை மேகங்களென்று மொழி பெயர்த்தனர் ஆனால் சொல்பிறப்பியல் முறைப்படி ஆராய்ந்தால் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும்சந்திரன் எனப் பொருள்படும். விஷ்ணு புராண காலத்தில் ஸ்வர்பானு என்பதை ராகு என்ற கிரகமாக மாற்றிவிட்டட்னர். புராணங்கள் என்பது வேதக் கருத்துக்களைப் பாமரமக்கள் புரிந்து கொள்வதற்காக எழுதப்பட்ட கதைப் புத்தகமாகும்.

 

இந்திரன் கிரஹணத்தை உண்டாக்கியதாகவும் அத்ரி நாலாவது மந்திரத்தில் சூரியனைக் கண்டுபிடித்ததாகவும் வேதம் சொல்லும். இதன் பொருள் அவர் நாலு மந்திரம் உச்சரிக்கும் காலத்துக்கு சூரியன்  முழுஅளவு மறைந்திருந்தது என்பதாகும்.

 

இந்துக்களின் சரியான கிரஹணக் கணக்கீட்டு  முறைகளை  லுட்விக் பாராட்டுகிறார். சூரியனின் ஒளியைத்தான் சந்திரன் பிரதிபலிக்கிறான் என்பதை வேத கால ரிஷிகள் அறிவர். இது மிகவும் அதிசயமான விஷயம் என்கிறார்.

 

இந்திரனை கேட்டை நட்சத்திரத்துக்கு அதிப தி என்பர். இந்து இந்திரனுக்கும் கேட்டை நசத்திரத்தும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது.

ரிக்வேதத்தின் 10-138-3/4 மந்திரத்தில் சூரியனின் குதிரைகளை இந்திரன் அ விழ்த்துவிட்டான் என்பது சூரியனின் ஒளி குன்றி கிரஹணம் ஏற்பத்தட்டதாகும் என்று லுட்விக் சொல்கிறார்.

ஐந்தாவது மண்டல (5-40) சூர்ய கிரஹணத்தை விரிவாக்கக் காட்டுகிறது என்பார்.

 

வேத காலத்தில் நடந்த இரண்டு சூரிய கிரஹணங்களில் ஒன்று பூரண சூரிய கிரஹணம். இந்திய அட்ச ரேகையில் நடந்த கிரஹணம் சூரியன், கேட்டை (இந்திரன்) நட்சத்திரத்தின் அருகில் பகல் நேரத்தில் இருந்தபோது நடந்தது. இந்த மாதிரியான நட்சத்திர நிலை எப்போது இருந்தது என்று இந்திய வானாராய்ச்சிக் கூடத்துக்கு உமாபாத சென் எழுதிக் கேட்டபோது பதிலே வரவில்லை. ஆனால் வெளி நாட்டு ஆய்வுக் கூடங்கள், சரியான பதிலை அனுப்பின. அமெரிக்காவிலுள்ள ஸ்மித்சோனியன் வானாராய்ச்சிக்  கூடத்தைச் சேர்ந்த டாக்டர் ப்ரையன் மார்ஸ்டென், இப்படிப்பட்டதொரு நிலை கி.மு 2990ல் இருந்தது என்று எழுதினார்.ஆகவே முழு சூரிய கிரஹணத்தை கி.மு.3000 ஆண்டை ஒட்டியது என்றும், மற்ற பர்ஸ்வ கிரஹணம் பிந்தியது என்றும் தெரிகிறது.

 

சரஸ்வதி நதி தீர ஆராய்ச்சி, வானியல் ஆராய்ச்சி ஆகியன எல்லாம் விஞ்ஞான மு றைப்படி வேத காலத்தை கி.மு.2000க்கு முன்னர் வைக்க உதவுவதால் மாக்ஸ்முல்லர் சொன்ன தேதியை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.

TAGS:- சூரிய கிரஹணம், வேத காலம், ரிக் வேதம்

-SUBHAM–

வேத கால முனிவர்களின் ஆயுள்! (Post No.4464)

Written by London Swaminathan 

 

Date: 6 DECEMBER 2017 

 

Time uploaded in London-  11–04 am

 

 

Post No. 4464

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேத கால இலக்கியங்களில் இருந்து  முனிவர்களின் ஆயுள் பற்றி நாம் சில சுவையான விஷயங்களை அறிகிறோம்.

 

பொதுவாக மனிதனுக்கு வேதம் நிர்ணயித்த ஆண்டு நூறு வயது. இதை பிராமனர்களும் தினமும் சந்தியாவந்தனம் செய்யும்போது உறுதிப்படுத்துகின்றனர்.

பரத்வாஜர் வேதம் கற்ற கதையில் அவர் நீண்டகாலம், அதாவது நாலாவது முறை பிரம்மச்சாரியாக வாழ்ந்தார் என்று வருகிறது.

 

மநுவும் கிருத யுகத்தில் மனிதர்கள் 400 ஆண்டுக்காலமும், திரேதா யுகத்தில் 300 ஆண்டுக்காலமும், துவாபர யுகத்தில் 200 ஆண்டுக்கலமும், கலியுகத்தில் 100 ஆண்டுகளும் வாழ்வர் என்று இயம்புகிறார் (மநு- 1-83)

இவ்வாறு சொல்லும்போது இதை அதிகபட்சம் என்று கொள்ளவேண்டும். அப்போது வாழ்ந்த எல்லோரும் இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்ததாக எண்ணுவது தவறு என்பது எனது கருத்து.

பஸ்யேம சரதஸ்சதம்/ நூறாண்டுக் காலம் வாழ்க

 

பிராமணர்கள் தினமும் காலை, பகல், மாலை என்று மூன்று வேளைகளில் சந்தியாவந்தனம் செய்வர். அதில் மதிய நேரத்தில் அவர்கள் சொல்லும் மந்திரம் அற்புதமானது:-

 

பஸ்யேம சரதஸ் சதம்

ஜீவேம சரதஸ் சதம்

நந்தாம சரதஸ் சதம்

மோதாம சரதஸ் சதம்

பவாம சரதஸ் சதம்

ஸ்ருணவாம சரதஸ் சதம்

ப்ரப்ரவாம சரதஸ் சதம்

அஜீதாஸ்யாம சரதஸ் சதம்

 

பொருள்

 

சூரிய தேவனை நூறாண்டுக் காலம் காண்போமாக

(அவ்வாறே) நூறாண்டுக் காலம் வாழ்வோமாக

நூறாண்டுக் காலம் உற்றார் உறவினருன் கூடிக்குலவுவோமாக

நூறாண்டுக் காலம் மகிழ்வோமாக

நூறாண்டுக் காலம் புகழுடன் விளங்குவோமாக

நூறாண்டுக் காலம் இனியதைக் கேட்போமாக

நூறாண்டுக் காலம் இனியதைப் பேசுவோமாக

நூறாண்டுக் காலம் தீமைகளால் வெல்லப்படாமல் வாழ்வோமாக

Picture of Trailinga Swami of Varanasi

பெரியவர்களை வணங்கும்போது அவர்கள் ‘தீர்காயுஸ்மான் பவ:’ என்று ஆசீர்வதிப்பர். இதன் பொருள் ‘நீ நீண்ட ஆயுளுடன் இருப்பாயாக’; அப்படிச் சொல்லும்போதே நோய் நொடியில்லாமல் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வாயாக என்பதே அர்த்தம்.

 

வேத கால இந்துக்கள் எப்போது பார்த்தாலும் இதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

 

தீர்க தமஸ் என்ற முனிவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்ததாக ரிக்வேதமும் சாங்காயன ஆரண்யகமும் மொழியும்.

 

90 முதல் 100 வயது வரை உள்ள     காலத்தை அதர்வவேதமும் பஞ்சவிம்ச பிராம ணமும் தசமி என்ற சொல்லால் குறித்தன. ரிக்வேதம் இதை ‘தசம யுக’ என்று சொல்லிற்று.

நூறாண்டுக்காலம் வாழ்வோமாக என்பது ரிக் வேதத்திலேயே கணப்படுவதால் (1-89-9; 10-18-10) இவர்கள் ஆதிகாலத்திலேயே ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் ‘கறார்’ ஆன பேர்வழிகள் என்பதும் நாகரீகத்தின் உச்சகட்டத்தை எட்டியவர்கள் என்பதும் புலப்படும்.

தீர்கதமஸ் 100 ஆண்டு வாழ்ந்தார்

மஹீதாச ஐதரேயர் 116 ஆண்டு வாழ்ந்தார்.

 

இந்துக்கள் 130 ஆண்டுகள் கூட வாழ்ந்தனர் என்று ஒனெசிக்ரிடஸ் (Onesicritus) சொல்கிறார். இவர் அலெக்ஸாண்டருடன் வந்தவர். 2300 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய புத்தகத்தில் 130 ஆண்டுகள் வாழ்ந்த இந்துக்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்

 

புத்த ஜாதகக் கதைகளும் 120 ஆண்டுகள் வாழும் விருப்பத்தைக் குறிப்பிடும்.

 

நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி சங்கராசார்யார் 100 ஆண்டுகளும் திருக்கோவிலூர் ஞானானந்த சுவாமிகள் 150 ஆண்டுகளும் வாழ்ந்தனர்.

 

காசியில் வாழ்ந்த த்ரைலிங்க சுவாமிகள் (1607-1887) 280 ஆண்டுகளுக்கு உயிர்வாழ்ந்தார். இவரை ‘காசியின் நடமாடும் சிவபெருமான்’ என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் புகழ்வார்.

 

இதைக் காணும்போது உலகிலேயே அதிக காலம் வாழ்ந்த  ஒருவர் இந்துதான் என்று தோன்றுகிறது

ரிக்வேதம் (10-62-2), அதர்வ வேதம் (1-22-2) முதலிய  நூல்களில் ‘தீர்காயுத்வம்’ (நீண்ட ஆயுள்) என்பதைக் காணலாம்.

அதர்வ வேதத்தில் நீண்ட ஆயுளுக்கான மந்திரங்கள்  தனியாகவே உள்ளன.

யாரேனும் வேத வேள்விகளைச் செய்தால் அவர்களுக்கு,

‘சர்வம் ஆயுர் இதி’ என்ற பலனை பிராமண நூல்கள் திரும்பத் திரும்ப இயம்புகின்றன. இதன் பொருள் – ‘அவர்களுக்கு பூரண ஆயுள்’ என்பதாகும்.

 

Picture f Gnanananda of Tirukkovilur

 

நீண்ட ஆயுள் பற்றிய முந்தைய கட்டுரைகள்

நீரையும் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நீரையும்/

 

நூறாண்டுக் காலம் நாம் காண்போமாக; நூறாண்டுக் காலம்நாம் வாழ்வோமாக. (நூறாண்டுக் காலம் வாழ்க; நோய்நொடியிலாமல் வாழ்க). 13).பஹிஸ்ஸரதி நிஸ்வாஸே விஸ்வாச: க: ப்ரவர்ததே – மஹாபாரதம். வெளியே போன மூச்சு திரும்பிவரும் என்று எப்படி நம்புவது? (போன மூச்சு …

நூறு வயதானவர்களின் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/நூறு-வயதானவர்களி…

8 Sep 2016 – … மேலும் வேத மந்திரங்களில் நிறைய இடங்களில் “நூறாண்டுக் காலம் வாழ்க; நோய் நொடியில்லாமல் வாழ்க” என்ற பிரார்த்தனை வருகிறது. வேதங்களின்படி ஒருவனுடைய ஆயுள் நூறு வயதுதான். ஆயுர்வேத, சோதிட சாத்திரப்படி ஒருவனின் வயது 120 ஆகும். வாழ்க நூற்றாண்டு …

பிரம்ம | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பிரம்ம/

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com;. “பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த … கண்ணதாசனும் யஜூர்வேதத்திலுள்ள ‘பஸ்யேம சரதஸ் ஸதம், ஜீவேம சரதஸ் ஸதம்’ (நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க………..) மந்திரம் முதல் எவ்வளவோ சம்ஸ்கிருதப் …

நீண்ட ஆயுளுக்கு வேதப் பிரார்த்தனை …

https://tamilandvedas.com/…/நீண்ட-ஆயுளுக்கு-…

 

12 Sep 2017 – ரிக்வேதத்துக்குப் பின்னர் வந்த யஜுர் வேதத்தில்நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க, மகிழ்ச்சியுடன் வாழ்க என்று பெரிய மந்திரமே உள்ளது. (பஸ்யேம சரதஸ்சதம், ஜீவேம சரதஸ்சதம் சரதம், நந்தாம சரதஸ்சதம், மோதாம சரதஸ்சதம், ப்ரப்ரவாம சரதஸ்சதம்).

நீண்ட நாள் வாழும் பிராணி எது? யோகி …

https://tamilandvedas.com/…/நீண்ட-நாள்-வாழும…

 

பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற மந்திரத்தைச் சொல்லுகிறார்கள். கண்ணதாசன் இதை ஒரு சினிமாப் பாடலில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்: “ நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வாழ்க” என்று. நிமிடத்துக்கு 15 முறை சுவாசித்தால் …

போஜனப் பிரியன் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/போஜனப்-பிரியன்/

 

அதை சினிமா பாட்டிலும் நூறாண்டுக் காலம் வாழ்க! நோய் நொடியில்லாமல் வாழ்க! என்று மொழிபெயர்த்துள்ளனர். சூரியனைப் பாதுகாப்பாகப் பார்க்க பிராமணச் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே கற்றுத் தருவர். சூரியனை நோக்கிச் சொல்லப்படும் இந்த துதி: பஸ்யேம சரதஸ் சதம்: …

பிராமணர் தர்மம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பிராமணர்-தர்மம்/

 

… என்று சொல்லி எல்லோருக்கும் மஞ்சள் அட்சதை போட்டு மங்களம் பாடினர். (ஸ்வஸ்தி பிரஜாப்ய பரி பாலயந்தாம்………….). நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க என்ற சினிமாப் பாட்டு வேத மந்திரத்தின் மொழி பெயர்ப்பு என்பதை எல்லாம் முன்னரே காtடிவிட்டேன்.

வாழ்க அந்தணர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/வாழ்க-அந்தணர்/

 

14 Jan 2017 – இன்பமுடன் வாழ்க) என்று நாமும் பிரார்த்தனை செய்வோம். சைவ சமய நிகழ்ச்சிகள் அனைத்தும் “வாழ்கஅந்தணர் வானவர் ஆனினம்” (அந்தணர் முதலான எல்லாஜாதியினரும், பசு முதலான எல்லாப் பிராணிகளும்வாழ்க) … நூறாண்டுக் காலம் நோய் நொடியில்லாமல் வாழட்டும்).

பரத்வாஜர் வேதம் கற்ற கதை & தவற்றைத் …

https://tamilandvedas.com/…/பரத்வாஜர்-வேதம்-கற…

 

 

பரத்வாஜர் வேதம் கற்ற கதை & தவற்றைத் திருத்துவது எப்படி? கதை (Post No.4043). Compiled by London Swaminathan Date: 1 July 2017. Time uploaded in London-20-44. Post No. 4043. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. வேதகால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு: 1.சம்ஹிதை/துதிகள் 2

 

–SUBHAM–

 

 

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்துக்கள் போற்றும் துருவ நட்சத்திரம்! (Post No.4450)

Written by London Swaminathan 

 

Date: 1 DECEMBER 2017 

 

Time uploaded in London-  18-59

 

 

Post No. 4450

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஷேக்ஸ்பியர் நாடகத்தில்   இந்துக்கள் போற்றும்  துருவ நட்சத்திரம்! (Post No.4450)

துருவ நட்சத்திரம் என்பதை அறியாத இந்துக்கள் இருக்க முடியாது. திட உறுதிக்குப் பெயர் எடுத்தவன் துருவன். இந்துக்களின் நூல்களில் சிறுவர்களும் புகழ்பெறுவார்கள்— நசிகேதன், மார்கண்டேயன், துருவன் போன்ற சிறுவர்கள் அ ழியாத இடம் பெற்றவர்களில் சிலர். இந்த துருவ நட்சத்திரத்தை நாம் எப்படி உறுதியின் சின்னமாக, நிலைத்த தன்மையின் சின்னமாகக் கருதுகிறோமோ அது போல ஷேக்ஸ்பியரும் கருதுகிறார். அவர் பல நாடகங்களில் இந்து மதக் கருத்துக்களை எதிரொலிப்பதால் இந்துக் கதைகளை அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஒரு இடத்தில் நாகரத்னம் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால் தேரையின் த லையில் உள்ள ரத்தினம் என்பார். ஏதோ பராபரியாக நமது நம்பிக்கைகளை அறிந்திருப்பார் போலும். ஓரிடத்தில் காளிதாசனின் சகுந்தலையைப் போலவே மிராண்டா என்னும் அப்பாவிப் பெண்ணை அறிமுகப்படுத்துகிறார். இன்னொரு இடத்தில்  ஜூலியஸ்சீசர் வாய்மொழி மூலமாக துருவ நட்சத்திரத்தைப் புகழ்கிறார்.

 

துருவனின் கதை எல்லோரும் அறிந்த கதைதான்:- ஸ்வாயம்புவ மனுவுக்கு இரண்டு புத்திரர்கள் என்று விஷ்ணு புராணம் கதை சொல்கிறது. பிரியவிரதன், உத்தான பாதன் என்ற இரண்டு மகன்களில் உத்தான பாதனுக்கு இரண்டு மனைவியர். ஒருத்தியின் பெயர்  சுருசி; அகந்தையின் சின்னம்; மற்றொருத்தியின் பெயர் சுநீதி; அடக்கத்தின் உறைவிடம்!

 

சுருசியின் மகன் பெயர் உத்தமன்; சுநீதியின் மகன் பெயர் துருவன். எங்கேயாவது அடுத்த பட்டத்துக்கு துருவன் போட்டிக்கு வந்துவிடுவானோ, தன் மகன் உத்தமனை பதவிக்கட்டிலில் அமர விடாமல் தடுத்துவிடுவானோ என்று எண்ணி சின்ன வயதிலிருந்தே துருவனைப் படாதபாடு படுத்தினாள் சு-ருசி. பெயரிலுள்ள ருசி குணத்தில் இல்லை! சு-நீதி மிகவுமடக்கமானவள்  என்பதால் துருவனை ரிஷி முனிவர் கோஷ்டியில் சேர்த்துவிட்டாள். அவர்கள் பேரின்பத்துக்கு வழிகாட்டுவர் என்றும் சொன்னாள்.

 

துருவனும் தாய் சொல்லைத் தட்டாதே என்று ரிஷி முனிவர்களுடன் அமர்ந்து கடும் தவம் இயற்றினான். இந்திரனுக்கு அச்சம்! அட, நம்ம பதவிக்கு உயரத்தான் தவம் செய்கிறான் போலும் என்று தடுத்துப் பார்த்தான்; முடியவில்லை. துருவனோ நாராயணனே நமக்கே பறை தருவான் என்று தவம் செய்தது வீண்போகவில்லை.

நாராயணனே நேரில் தோன்றி அவனை அரசு பதவிக்கும் மேலான இடத்தில், துருவ நட்சத்திரமாக உயர்த்தினார் என்று விஷ்ணு புராணம் புகழும்.

துருவ நட்சத்திரம் பற்றி க்ருஹ்ய சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2000 ஆண்டுப் பழமையுடைய சங்கத் தமிழ் நூல்களில் பல  இடங்களில் அருந்ததி நட்சத்திரம் பற்றி விதந்தோதுகின்றனர். சப்த ரிஷி நட்சத்திரக் கூட்டத்தில் வசிஷ்ட நட்சத்திரத்தை ஒட்டியுள்ள அருந்ததியை திருமணமான தம்பதிகளுக்குக் காட்டுவதற்கு முதலில் துருவ நட்சத்திரத்தைக் காட்டி அதிலிருந்து அருந்ததி இருக்கும் இடத்தை உணர்த்துவர். ஆகவே 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அருந்ததி, சப்தரிஷி நட்சத்திரக் கூட்டம் ஆகியவற்றை தமிழர்களும் வட இந்தியர்களும் அறிவர்.

 

ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஸீஸர் கூறுகிறார்.
“But I am constant as the Northern Star, of whose true fixed and resting quality, there is no fellow in the firmament”– (Caesar)

 

நான் வட மீன் போல நிலையானவன்; அதனுடைய உறுதியும் நிலைத்த குணமும் உடையவன்; வானத்தில் வேறு எங்கும் காணமுடியாத அருங்குணம் அது- ஸீஸர்

 

ஷேக்ஸ்பியர் நாடகத்தில்  உள்ள இந்த வாசகம் நமது புராணத்திலும் இதிஹாசத்திலும் துருவன் பற்றி புகழப்படும் வாசகம்.

கிரேக்க புராணங்களில் சப்தரிஷி மண்டலத்திலுள்ள நட்சத்திரங்களைப் பெருங்கரடிக் கூட்டம் (Great Bear, Ursa Major) என்று சொல்வரேயன்றி நம்மைப் போல புனிதமோ திட உறுதி பற்றிய குணங்களோ கற்பிக்கப்படுவதில்லை. ஆகவே ஷேக்ஸ்பியர் இந்து நம்பிக்கைகளை அறிந்திருந்தார் என்று சொல்வது மிகையல்ல.

நிறைய திருக்குறள் கருத்துக்கள் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இருப்பதால் அவற்றையும் பின்னணியில் வைத்து எனது கருத்துக்களை நோக்க வேண்டும். ஆங்கிலத்தில் நாலைந்து கட்டுரைகளில் திருக்குறள்- ஷேக்ஸ்பியர் ஒப்பீடுகளை அளித்துவிட்டேன். விரைவில் தமிழிலும் தருவேன்.

 

சுபம்–