இதயத்தை மெதுவாகக் ‘கொல்லும்’ 6 உணவுகள் (Post 2506)

salt-sugar

Written by S Nagarajan

 

Date: 4 February 2016

 

Post No. 2506

 

Time uploaded in London :–  8-08 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாதப் பத்திரிகை ஹெல்த்கேர் ஜனவரி 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

இதயத்தை மெதுவாகக் கொல்லும் 6 உணவுகள்

.நாகராஜன்

 

உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் இதயத்தை மெதுவாகச் செயலிழக்க வைத்து உங்களைக் கொல்லும் ஆறு உணவு வகைகளை நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனித இதயம் ஒரு விசித்திரமான அமைப்புடன் கூடிய அற்புத இயந்திரம். சரியானபடி   பொருத்தமான அளவில் ஊட்டச்சத்து இருந்தாலேயே போதும், அது நீடித்து இயங்கும்!

ஆனால் நாமோ இந்த உண்மையை அறியாமல் நினைத்ததை எல்லாம் சாப்பிட்டு நம்மை நாமே மெதுவாகக் கொன்று கொள்கிறோம்!

 

என்ன அநியாயம் இது!

 

அமெரிக்காவில் மட்டும் நான்கு இறப்புகளில் ஒன்று இதய நோயால் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை.

சரியான ஊட்டச்சத்துள்ள உணவை உண்ணாமல் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, நீடித்த வியாதிகளைக் கொண்டிருப்பது ஆக இந்த மூன்று காரணங்களே இறப்புக்கான காரணமாகப் பெரும்பாலும் அமைகிறது. இந்த மூன்று காரணங்களை நீக்கி விட்டாலே போதும் இதய நோய் வராமல், நீடித்த ஆயுளை நிச்சயம் கொள்ளலாம்!

 

 

சில உணவு வகைகள் நேரடித் தாக்குதலில் இதயத்தைப் பாதிக்கும். மேலும் சில உணவுகளோ உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி மெதுவாகக் கொல்ல ஆரம்பிக்கும். எடுத்துக்காட்டாக சர்க்கரை நேரடியாக இதயத்தைப் பாதிக்காது. ஆனால் அதிக அளவில் சர்க்கரையை உணவில் சேர்க்க ஆரம்பித்தால் அது உடல் பருமனைக் கூட்டி இதயத்தைப் பாதிக்கும்.

 

 

TRANS FATS

 

வெண்ணெய்க்குப் பதிலாக உபயோகிக்கலாம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட சில கொழுப்பு வகை உணவுப் பொருள்கள் நல்ல கொலஸ்ட்ராலான HDLஐக் குறைத்து கெட்ட கொலஸ்ட்ராலான LDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. கொழுப்புகளில் பல வகை உண்டு. ஆங்கிலத்தில் இவற்றை trans fats, saturated fats, polyunsaturated fats, unsaturated fats என்று குறிப்பிடுகின்றனர்.

 

உயிர் வாழ கொழுப்பு சத்து நிச்சயம் தேவை. ஆலிவ் ஆயில், கொழுப்புடைய மீன், பருப்பு வகைகள், தேங்காய் எண்ணெய் முதலானவை தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளவை. இவை மூளையையும் இதயத்தையும் நல்ல நிலையில் வைத்துக் கொள்ள இன்றியமையாதவை.

 

பாக்கேஜ்களில் வரும் பிஸ்கட், பாப்கர்ன், க்ரீம் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றை ஒதுக்கி விடுதல் நலம்.

 

 

REFINED GRAINS

 

மெஷினில் தீட்டப்பட்ட அரிசியில் ஊட்டச்சத்து இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்!

பதப்படுத்தப்பட்டு பாக்கட்டுகளில் விற்கப்படும் உணவு வகைகளை விட்டு விட்டு பாரம்பரிய முறையில் அன்றாடம் சமைத்துச் சாப்பிடுவது இதயத்தைச் சீராக வைக்கும் அருமையான வழிமுறையாகும்.

 

எந்த தானியத்தையும் அரைத்து விட்டால் அதை ஒரு வாரத்திற்குள் பயன்படுத்துவது நல்லது. இரண்டு வாரங்கள் என்பது உச்ச பட்ச எல்லை.

 

sugar

SUGAR

க்ளூகோஸ் உடலுக்குத் தேவை தான் என்றாலும், சர்க்கரை சாதாரண அளவில் எடுத்துக் கொள்ளும் போது இதயத்தைப் பாதிக்காது என்ற போதிலும் லாலிபாப் ஒன்றை எடுத்துக் கொண்டு இதர இனிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் உள்ள இனிப்பு ஜீரோ ஊட்டச்சத்து என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

 

 

ஷுகர் கேண்டி சாப்பிட்டால் சக்தி அதிகமாகும் என்று யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். அதே சக்தியை ஒரு பழத்துண்டு தந்து விடுகிறது. பழம் சீரான ஜீரணத்தையும் ஏற்படுத்துகிறது. லாலிபாப் போன்றவற்றில் உள்ள ரிஃபைண்ட் ஷுகர் (Refined sugar) அடிக்கடி அவற்றை உண்ணத் தூண்டும்; பக்க விளைவுகளை ஏற்படுத்தும். களைப்பையும், தலைவலியையும் ஏற்படுத்தும். ஆகவே செயற்கை சர்க்கரை வகைகளைப் பயன்படுத்தக் கூடாது.

கேன்களில் அடைக்கப்பட்ட பழ வகைகளை வாங்கும் போது அது பழச்சாறாக இருந்தால் அதில் விடமின் ‘சி’யும் அதிக கலோரிகளும் இருக்கும். ஆனால் அவை சிரப்பாக (Syrup) இருந்தால் அதில் ஊட்டச்சத்து இருக்காது.

 

 

FATTY MEATS

இறைச்சி உட்கொள்பவர் என்றால் அது உங்கள் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.கேன்களில் அடைக்கப்பட்ட சிக்கன் போன்றவற்றை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருப்பது இதயத்திற்கு நல்லது.

 

 

ENERGY DRINKS

 

சக்தியூட்டும் எனர்ஜி பானங்கள்

சக்தி தரும் பானங்கள் என்று விளம்பரங்களில் குறிப்பிடப்படும் பானங்களில் காபின், ஜின்செங், விடமின்பி’, சர்க்கரை போன்றவை இருந்தாலும் இவை அனைத்தும் உடனடியாக சக்தியை அதிகப்படுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் கூட, அது உங்கள் இரத்த அழுத்தத்தை பானம் அருந்தியதிலிருந்து இரண்டு மணி நேரம் வரை அதிகப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதயமும் இரத்த அழுத்தமும் சீராக ஒருவருக்கு இருக்கும் வரை இந்த பானங்கள் சரியாகத்தான் இருக்கும். ஆனால் அடிக்கடி இவற்றை குடிக்க ஆரம்பித்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்; இதயமும் பழுதாகும்!

 

salt

SALT

உப்பு

 

உப்பு இரத்த கனஅளவை உயர்த்தி நாளங்களில் நல்ல ஆரோக்கியமான முறையில் ஓட வைக்க உதவுகிறது. எளிமையாகச் சொல்வதென்றால் உப்பு தான் இரத்த ஓட்டத்தை சீராக இருக்க வைக்க உதவுகிறது. அதிக உப்பு உடலில் சேர்ந்தாலோ அல்லது உப்பை நீங்கள் சீரான முறையில் வைக்கவில்லை என்றாலோ இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏற்கனவே இரத்த அழுத்த பாதிப்பு உடையவர் என்றால் உடனடியாக உப்பின் அளவை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

 

உடலுக்கு உப்பு நிச்சயம் வேண்டும். உயிர்வாழ அந்த தாது அவசியமே. ஆனால் அதை ‘அதிகமாக’ எடுத்துக் கொள்ளக்  கூடாது!

 

 

இதயத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகள்

 

சரி, சுருக்கமாகச் சொல்லுங்கள், எவற்றை விலக்க வேண்டும் என்று நீங்கள் கேட்டால் அதைச் சொல்வது எளிது. கீழே உள்ளவற்றை எப்போதாவது சாப்பிடுவது என்று வைத்துக் கொண்டால் ஒரு பயமும் இல்லை. அதை தினசரியோ அல்லது அடிக்கடி சாப்பிடும் ழக்கம் உண்டு என்றால் அவை இதயத்தை பாதிக்கும் எபன்ற உண்மையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

பீஸா

 

பேக் செய்யப்பட்ட கேக்குகள் (Baked Cakes)

கொழுப்புள்ள இறைச்சி வகைகள்

சிக்கன் ஸ்கின் (Chicken skin)

எண்ணெயில் வறுக்கப்பட உணவு வகைகள்

பாஸ்தா

ஐஸ்க்ரீம் மற்றும் இதர உறைநிலை frozen treats

சர்க்கரை உள்ள பானங்கள்

க்ரீம் சாஸ் வகைகள்

கெட்ச் அப்

assorted_ice_cream_cones

 

ஆரோக்கியமான உணவு வகைகள்

 

எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டுமா என்று எண்ணிக் கவலைப்பட வேண்டாம். ஆலிவ் ஆயில், வினிகர், எலுமிச்சை சாறு ஆகியவை நல்லவையே.

 

ஐஸ்கிரீமை சாப்பிடுவதற்கு பதில் ஒரு கோப்பை பழத்துண்டுகளைச் சாப்பிடலாம்.

I

இதயத்தைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் மேலே கூறியவற்றை மனதில் இருத்திக் கொண்டு உணவுப் பழக்கத்தைச் சற்று மாற்றிக் கொண்டாலே போதும். நீண்ட நாள் வாழலாம் – ஆரோக்கியத்துடன்

******

அறிவியல் சவால் – மில்லியன் டாலர் பரிசு! (Post No. 2491)

RANDI

Picture of James Randi

Written by S Nagarajan

 

Date: 30 January 2016

 

Post No. 2491

 

Time uploaded in London :–  11-04 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

8-1-2016 தேதியிட்ட பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

அறிவியல் சவால் –  மில்லியன் டாலர் பரிசு!

.நாகராஜன்

 

“பழைய கதை எல்லாம் இருக்கட்டும், இதோ விடுகிறேன் சவால், ஆவிகள் உலகத் தொடர்பு, பிறர் மனதை அறிவது போன்ற  அதீத உளவியல் ஆற்றல் போன்றவற்றை விஞ்ஞானத்திற்கு இணங்க சோதனைச் சாலை நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிரூபித்து விட்டால் மில்லியன் டாலர் பரிசு தருகிறோம்” என்று அறிவித்துள்ள ஒருவரின் ஆய்வு சுவாரசியமானது; அறிந்து கொள்ளப்பட வேண்டியது!

 

அவர் பெயர் ஜேம்ஸ் ரண்டி. கனடிய அமெரிக்கரான இவருக்கு இப்போது 87 வயதாகிறது. மரணத்திற்குப் பின் மனித வாழ்க்கை ஒன்று உண்டு என்று சோதனைச்சாலை நிபந்தனைகளுக்கு உட்பட்டு யாரேனும் நிரூபித்தால் அப்படி நிரூபித்தவருக்கு உடனடியாக பத்து லட்சம் டாலர் (சுமார் ஆறு கோடி ரூபாய்) தருகிறேன் என்று அறிவித்தார் இவர்.

 

 

இதை ஏற்றுப் பல பேர் முன் வந்தாலும் சோதனைச்சாலை நிபந்தனைகளுக்கு அவர்கள் உட்பட மறுத்து விட்டனர். மீறி சோதனைக்கு வந்தவர்களால் அவரது திருப்திக்கிணங்க ஆவி உலகம் இருப்பதை நிரூபிக்க முடியவில்லை.

பங்கேற்றவர்கள் ரண்டி ஒரு மோசடிப்பேர்வழி என்று கூற ரண்டி நியமித்த விஞ்ஞானிகளோ ஆவி உலகம் என்பதே ஒரு கேலிக் கூத்து என்று முழங்கினர்.

 

 

ரண்டி பிரபலமான ஒரு மாஜிக் நிபுணர். ஜேம்ஸ் ரண்டி எஜுகேஷனல் ட்ரஸ்ட் (James Randi Educational Trust) என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் மில்லியன் டாலர் பரிசுத் தொகைக்கான போட்டியை அறிவித்தார்.

 

சமீபத்தில் அவர் அறக்கட்டளைப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்று விட்டதால் இந்த போட்டி இனி கிடையாது என அறக்கட்டளை அறிவித்து விட்டப்து. அதாவது 2015 செப்டம்பர் முதல் தேதி முதல் இந்தத் தொகையில் சிறு சிறு பகுதிகள் அறக்கட்டளையின் நோக்கத்தில் செயல் படும் பல்வேறு அறிவு சார்ந்த நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் அதீத உளவியல் ஆற்றல் நிபுணர்கள் அனைவருமே மோசடிப் பேர்வழிகளா, இல்லை! இதை சோதனை செய்த விஞ்ஞானிகளே வியந்து ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

மனதில் ஒருவர் நினைத்த ஒரு குறிப்பிட்ட அந்தரங்க எண்ணத்தை மீடியம் ஒருவர் கூறியதே இதற்குக் காரணம்!

குறிப்பாக விஞ்ஞானிகளைக் கவர்ந்த அதீத உளவியல் ஆற்றல் நிபுணர்கள் இருவர்.

ஒருவர் பாட்ரிசியா புட் (Mrs Patriciia Putt) என்ற பெண்மணி. டி.வி, ஷோக்கள், பத்திரிகை கட்டுரைகள் என பிரபலமான இவர் சோதனையை ஏற்று முன் வந்தார்.

 

 

2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது சோதனை. 10 தன்னார்வத் தொண்டர்கள் சோதனை நாளன்று பெரிய கண்ணாடிகள், முகமூடிகள், தொளதொள ஆடை, வெள்ளை சாக்ஸ் அணிந்து சோதனை அறைக்குள் நுழைந்து அறையின் பின்னால் இருந்த சுவரைப் பார்த்து அமர்ந்தனர். பாட்ரிசியா இருபது நிமிடங்களுக்குப் பிறகு  அறைக்குள் நுழைந்தார். அவர்களுக்கு 12 அடி தள்ளி அமர்ந்தார். ஒவ்வொருவரும் தன் கையில் கொடுக்கப்ப்ட்ட ஒரு சிறிய குறிப்புரையைப் படித்தனர். அது ஆவி உலகத்தினருக்கு அங்கு அமர்ந்திருப்பவர்களை அறிமுகம் செய்து கொள்ள உதவும் என்று பாட்ரிசியா கூறி இருந்ததால் அந்த ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் பாட்ரிசியா அவர்களைப் பற்றிய தனது கணிப்புகளைக் குறிப்பாக எழுதினார்.

 

 

அது முடிந்தவுடன் அந்தப் பத்து பேரும் அறையிலிருந்து வெளியேறினர். உடைகளை மாற்றிக் கொண்டு திரும்பி வந்தனர். அவர்களின் ஒவ்வொருவரைப் பற்றியுமான பிரத்யேக கணிப்புகள் பத்தும் ஒவ்வொருவரிடமும் வழங்கப்பட்டன. அந்த பத்து பேரும் அதில் தன்னைப் பற்றியதான சரியான கணிப்புத் தாளை எடுத்துத் தர வேண்டும்.

 

பத்து பேரில் ஐவர் சரியான கணிப்புகளைத் தந்து விட்டால் போதும்  மில்லியன் டாலர் பரிசு பாட்ரிசியாவுக்கு உண்டு. ஆனால் பத்து பேர்களும் தங்களுக்கு எழுதித் தரப்படாத ஒன்றையே எடுத்துத் தந்தனர். ஆகவே பாட்ரிசியா வெற்றி பெறவில்லை. ஆனால் இது பற்றி அவர் கவலைப்படவில்லை. மம்மி போல ஆடைகளை அணிந்து வந்தவர்களிடம் ஆவிகள் எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதே அவரது பதில்!

 

kim and patricia

Kim Whitton and Patricia Putt with science writer Simon Sing and others.

 

இதே போல இந்த சோதனைக்கு வந்த இன்னொரு  மீடியம் கிம் விட்டன் (Kim Whitton)  என்ற பிரபலமான பெண்மணி.

ஒரு தடுப்புத் திரைக்குப் பின்னால் ஒருவர் அமர கிம் அவரைப் பற்றிய தன் கணிப்பை எழுதினார். ஐந்து பேரைப் பற்றி அவர் சரியாக எழுதினாலே போதும், வெற்றி தான். இந்த சோதனையை வடிவமைத்தவர் புரபஸர் க்ரிஸ் ப்ரெஞ்ச் என்பவர். இவர் ஒரு அதீத உளவியல் பேராசிரியர். சோதனையில் கிம் வெற்றி பெறவில்லை. என்றாலும் அதிலிருந்த ஒருவர் தன் மனதில் இருந்ததை அப்படியே கிம் விளக்கி விட்டதாகவும் அந்த அந்தரங்கமான விஷயம் வேறு யாருக்கும் தெரியாது என்றும் கூறி பரவசப்பட்டார். பத்துக்கு எட்டு என்ற மதிப்பெண்களை அவர் பெற்றாலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. ஏனெனில் தற்செயல் ஒற்றுமையாகக் கூட அப்படி கூற வாய்ப்பு உண்டு என்ற அறிவியல் கோட்பாட்டின் படி அவர் நிராகரிக்கப்பட்டார்.

 

ஆனால் மீடியம்கள் இருவரும் இது பற்றிச் சற்றும் கவலைப்படவில்லை. சோதனைமுறைகள் தவறானவை மற்றும் கடுமையானவை என்று அவர்கள் கூறினர். இந்தச் சோதனையில் தோல்வி அடைந்ததால் பெண்மணிகளின் இருவரது மதிப்புக் குறைந்ததா? தொழில்வாழ்க்கை பாதிக்கப்பட்டதா? இல்லவே இல்லை. அவரது வாடிக்கையாளர்கள் சோதனையை மதிக்கவே இல்லை. தங்களுக்கு அனுபவபூர்வமாகத் தெரியும் ஆவி உலக வழிகாட்டுதலை யார் பொய் என்று சொன்னாலும் அவர்கள் ஏற்கத் தயாரில்லை.

 

ஆவி உலகத் தொடர்பாளர்களிடம், “சோதனை செய்கிறோம் வாருங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். இவர்களில் சிலர் பிரக்ஞை பற்றிய உண்மைகளை மீடியம்களை வைத்துக் கண்டுபிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகிறது.

 

ஆகவே அதீத உளவியல் ஆற்றல் உள்ளவர்களுக்குச் சமுதாயத்தில் ஒரு தனி இடம் இன்றும் கூடக் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அபல்லோ-8 விண்வெளிக்கலத்தில் சந்திரனைச் சுற்றி வந்த விண்வெளி வீரர் வில்லியம் அலிஸன் ஆண்டர்ஸ் (William Alision Anders) விண்வெளிப் பயணத்தால் பெரும் புகழ் பெற்றார். அவரைச் சுற்றி எப்போதும் கூட்டம். பத்திரிகையாளர்களும் புகைப்பட நிபுணர்களும் அவர் எங்கு போனாலும் பின் தொடர்ந்து சென்று கொண்டே  இருந்தனர். மனிதர் தளர்ந்து போனார். எப்படியாவது யார் கண்ணிலும் படாமல் தன் மனைவியுடன் ஓய்வு எடுக்க வேண்டும் என்று எண்ணிய அவர் அகாபல்கோ என்ற கடற்கரை ஸ்தலத்திற்குச் சென்றார். சில நாட்கள் கழிந்தன. தனது வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த அவரை நோக்கி ஒரு நபர் வந்தார்.

தயங்கியவாறே, “உள்ளே வரலாமா? போட்டோ எடுக்கலாமா?” என்று கேட்டார். “ஹூம்” என்ற ஆண்டர்ஸ்,” வரலாம், போட்டோ எடுக்கலாம்” என்றார்.

 

சந்தோஷத்துடன் உள்ளே வந்த போட்டோகிராபரிடம் முன்னால் இருந்த பெரும் கடலைக் காட்டி, “அழகிய காட்சி. எத்தனை போட்டோ வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

போட்டோகிராபருக்கு முகம் போன போக்கு!

 

–subham-

காற்றில் அசுத்தம்: 5-ஆவது ஆட்கொல்லி! (Post No. 2392)

The India Gate monument in New Delhi, India, enveloped by a blanket of smog

Radio Talk written by S NAGARAJAN

Date: 15 December 2015

 

Post No. 2392

 

Time uploaded in London :– 6-15 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 air pollution 4

  1. காற்று மாசு இந்தியாவில் ஐந்தாவது பெரும் ஆட்கொல்லி!

 

     சுற்றுப்புறச் சூழ்நிலை மாசினால் வெளிப்புறக் காற்றும் மாசு அடைந்து மனிதனின் உயிரைப் பறிக்கும் ஆட்கொல்லி ஆகிறது.

 

 

    உயர் இரத்த அழுத்தம், வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் மாசடைந்த காற்று, புகை பிடித்தல், ஊட்டச் சத்தில்லா உணவு ஆகிய நான்கு காரணங்களினால் இந்தியாவில் ஏராளமானோர் இறக்கின்றனர். இதை அடுத்து ஐந்தாவது காரணமாக வெளிப்புறத்தில் ஏற்படும் காற்று மாசினால் ஏராளமானோர் தங்கள் இன்னுயிரைப் பறி கொடுக்கின்றனர். க்ளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (Global burden of Disease) தனது அறிக்கையில் இவ்வாறு அறிவித்துள்ளது.

 

 

 

     ஆறுலட்சத்து இருபதினாயிரம் பேர் இப்படி காற்று மாசினால் தங்கள் ஆயுளைக் குறுக்கிக் கொண்டு இறக்கின்றனர் என்று தெரிவிக்கும் இந்த அறிக்கை இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து இந்தியாவில் இறப்பவரின் எண்ணிக்கை உலகில் இது போல காற்று மாசினால் இறப்பவர்களில் ஐந்தில் ஒரு பங்கினராக இருக்கின்றனர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையையும் அறிவிக்கிறது.

 

 

    காற்றிலே உள்ள மாசானது சுவாசக் கோளாறுகளையும் இதய சம்பந்தமான நோய்களையும் உருவாக்குகிறது. இதனால் குறுகிய ஆயுளுடன் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் காற்று மாசின் மோசமான விளைவுகளை அதிகமாகக் காண்கிறோம்.

 

 

   உலகளாவிய அளவில் பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் பேர் காற்றில் உள்ள மாசினால் ஏற்படும் வியாதிகளால் இறக்கின்றனர். இரண்டாயிரமாவது ஆண்டில் 8 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை 300 சதவிகிதம் அதிகரித்து இப்போது 32 லட்சமாக ஆகி இருப்பது பெரும் கவலை அளிக்கும் விஷயம் என்று கூறும் விஞ்ஞானிகள் இதன் பொருள் என்னவெனில் நாம் மிகவும் அரிதான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்குரிய 740 லட்சம் மனித ஆண்டுகளை இழக்கிறோம் என்பது தான் என்கின்றனர்.

 

 air pollution

    ஆகவே காற்று மாசு பற்றிய விழிப்புணர்ச்சியை ஒவ்வொரு நகரிலும், கிராமத்திலும் ஏற்படுத்துவது நமது தலையாய கடமை ஆகிறது!

*************

 

 

பூமியின் வெப்பம் விநாடிக்கு விநாடி அதிகரிக்கிறது! (Post No. 2385)

atom bomb

Radio Talk written by S NAGARAJAN

Date: 13 Decemberember 2015

Post No. 2385

 

Time uploaded in London :– 6-12 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

  1. நான்கு அணுகுண்டுகள் வெளிப்படுத்தும் வெப்பம் அளவு பூமியின் வெப்பம் விநாடிக்கு விநாடி அதிகரிக்கிறது!

 

     சமீபத்தில் (2013ஆம் ஆண்டு ஜூன் மாதம்) ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பூமியின் வெப்பம் அதிகரிப்பதைப் பற்றி எச்சரித்து பிரபல விஞ்ஞானியான ஜான் குக் ஒரு பெரும் எச்சரிக்கையை விடுத்தார்.        

 

 

   க்வீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ள க்ளோபல் சேஞ்ச் இன்ஸ்டிடியூட்டில் (Global Change Institute) பணியாற்றும் இவர் தது உரையில் பூமியில் இப்போது விநாடிக்கு விநாடி அதிகமாகும் வெப்பத்தின் அளவானது ஹிரோஷிமாவில் வெடிக்கப்பட்ட அணுகுண்டானது வெளிப்படுத்திய வெப்ப அளவைப் போல நான்கு மடங்கிற்குச் சமம் என்று தெரிவித்தார்.அதாவது நான்கு அணுகுண்டுகளை ஒவ்வொரு விநாடியும் போட்டால் எவ்வளவு வெப்பம் உண்டாகுமோ அவ்வளவு வெப்பம் உருவாகிறது பூமியில்! இதற்குக் காரணம் மனிதன் க்ரீன்ஹவுஸ் வாயு எனப்படும் கார்பன் வாயுவை மிக அதிகமாக வெளிப்படுத்துவதே ஆகும்.

 

 

      பூமி அதிக வெப்பமாக ஆகிக் கொண்டே வருவதற்கான காரணங்களில் மனிதன் வெளிப்படுத்தும் கார்பனே முக்கியமானதும் முதலாவதுமான காரணமாக அமைகிறது. பூமியின் வெப்பத்திற்கு மனிதன் எவ்வளவு காரணமாக அமைகிறான் என்பதை ஆராயப் புகுந்த போது அனைத்து வெப்பத்திற்கும் அவனே காரணம் என்பது  தெரிய வருகிறது.

 

 

    கடந்த 20 ஆண்டுகளாக பூமி வெப்பமாதல் பற்றிய ஆராய்ச்சி நடத்தி வரும் விஞ்ஞானிகளில் 97 சதவிகிதம் பேர் இதை ஆமோதித்திருப்பதாக ஜான் குக் கூறினார்.’

 

 

     இப்படி அதிகமாக வெளிப்படுத்தப்படும் வெப்பத்தில் 90 சதவிகிதம்  பெருங்கடல்களைச் சென்று அடைகிறது. நிலம், பனிப் பரப்பு, மற்றும் மிருகங்களின் மீது ஏற்படும் விளைவுகள் ஆகிய அனைத்தையும் தெரிவிக்கும் இயற்கையான உஷ்ணமானி போல அமையும் கடல்கள் இந்த உஷ்ணநிலை உயர்வை நமக்கு அறிவிக்கின்றன.

 

 

    மனிதர்கள் அபாயமான இந்த விளைவை நன்கு உணர்ந்து கார்பன் அளவைக் கட்டுப் படுத்தும் முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.

 

 

    ஆகவே ஒவ்வொருவரும் கார்பனை வெளிப்படுத்தப் பெரிதும் காரணமாக  அமையும் வாகனங்களின் பயன்பாட்டை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய படிப்பினை ஆகும்.

 

******** 


ஆர்க்டிக் பனி உருகுகிறது! Post No. 2376

polarbear480x270

வட துருவக் கரடி, நீந்த முடியாமல் தவிக்கிறது; கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர், தண்ணீர்!!!

  1. ஆர்க்டிக் பனி உருகுகிறது!

 

 Radio Talk written by S NAGARAJAN

Date: 10 Decemberember 2015

Post No. 2376

 

Time uploaded in London :– 8-43 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஆர்க்டிக் பிரதேசத்தை ஆராய முதன் முதலாக முயன்றவர் நார்வேயைச் சேர்ந்த ப்ரிட்ஜாப் நான்ஸேன் (Fridrjof Nansen)  ஆவார். 1893ஆம் ஆண்டு பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து எப்படியேனும் அதை ஆராயக் கங்கணம் கட்டிக் கொண்ட அவர் அங்குள்ள பனி பிரதேசத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார். நீர்ப் பாதையே தென்படவில்லை. அவரது கப்பலைச் சுற்றி இருந்த பனிப் பாறைகள் தொடர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  இருந்ததால் தனது முயற்சியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

 

 

ஆனால் அதே ஆர்க்டிக் பிரதேசத்தை இன்று ஒப்பிட்டுப் பார்த்தால் சுலபமாக அதில் செல்லும்படியான நீர்ப் பாதை உருவாகியுள்ளது! பனிப்பாறைகள் உருகி வருவதே இதன் காரணம் ஆகும்.

 

pg-6-arctic-ice-pa

இன்னொரு ஆச்சரியமான விஷயம், அங்கு சமீபத்தில் ஆர்க்டிக்கை ஆராயப் போன விஞ்ஞானி ஒருவருக்கு தரையைத் தோண்டிக் காட்டிய அப்பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் ஒரு உருளைக்கிழங்கைக் காட்டினார். இது வியப்பூட்டும் விஷயம் ஆகி விட்டது, எதுவுமே விளைய முடியாத பனிப்பாறைகள் இருக்கும் பகுதியில் பனி உருகி நிலப்பகுதியும் நீர்ப்பகுதியும் அதிகரிப்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.

 

 

நான்ஸேனுக்குப் பின்னால் 1926ஆம் ஆண்டு ஆர்க்டிக் பிரதேசத்தை ஆராய முனைந்த ரோல்ட் அமுண்ஸென் (Roald Amundsen) ஆர்க்டிக்கை முதன்முதலாக அடைந்தார்.

 

 

2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாடலைட் படங்கள் ஆர்க்டிக் எப்படி மாறி விட்டது என்பதைக் காண்பித்தது. இப்போது விஞ்ஞானிகள் நடத்தும் ஆய்விலோ ஆர்க்டிக் பகுதியில் உஷ்ணமான கடல் நீர் பாய்ந்து இன்னும் பனியை உருக்கும் என்று தெரிய வருகிறது.

 

 

பொதுவாக உலகில் அதிகமாகி வரும் உஷ்ணநிலை கடும் பனிப்பாறைகளையே உருக வைக்கிறது என்றால் அதன் பாதிப்பு எவ்வளவு கடுமையானது என்பதை நாம் சுலபமாக உணரலாம்.

 

 

இயற்கையின் சமச்சீர் தன்மையைக் காக்கும் ஆர்க்டிக் பனியை அப்படியே இருக்குமாறு காப்பது மனித குலத்தின் கையிலேயே உள்ளது. அதை எண்ணி செயல்படுவோமாக!

 

***

கணக்குப் போடும் நாய்! Post No. 2374

Meet the dog who can count

A bizarre video has emerged from China of a clever dog showing his ability to do maths. In the video, which was captured on Tuesday in Taiyuan, Shanxi Province, the dog’s owner and passersby say simple arithmetic problems to the dog and he taps the answer on a bell with his paw.

படத்தில் கணக்குப் போடும் சீன நாய்!

Written by ச.நாகராஜன்

Date: 9 December 2015

Post No. 2374

Time uploaded in London :– காலை 5-46

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

டிசம்பர் 4, 2015 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

மிருகங்களுக்கு அதீத உளவியல் ஆற்றல் உண்டா?      

.நாகராஜன்

 

 

“தங்களின் சொந்த அறிவைக் கொண்டு மிருகங்களின் அறிவைத் த்வறாகக் கணிக்கின்றனர் மனிதர்கள்” – ஹாலிவுட் மிருகப் பயிற்சியாளர் ரால்ஃப் ஹெய்ஃபர்

மிருகங்களுக்கு அதீத உளவியல் ஆற்றல் உண்டா?

இந்தக் கேள்விக்கு அனுபவ பூர்வமான பதில், உண்டு என்பது தான்! மனிதர்களைப் போலவே மிருகங்களுக்கும் இந்த அதீத உளவியல் ஆற்றல் உண்டு.

 

 

கணக்குப் போடும் நாய்:

கரிடா பார்டரிக்ஸ் என்ற பெண்மணி பாரிஸ் நகரைச் சேர்ந்தவர். 1927ஆம் ஆண்டு அவர் தனது நாய் கணக்குகளைப் போட்டுக் காண்பிக்கிறது என்று கூறி உலகையே அதிசயிக்க வைத்தார்.  தியோடர் பெஸ்டர்மேன் என்பவர் மேடம் கரிடா பார்டரிக்ஸ் தன்னிடம் தனது நாய் கணக்குப் போடுவதை நேருக்கு நேராகச் செய்து காண்பித்தார் என்று எழுதியிருக்கிறார். நாய் அந்தப் பெண்மணியின் கை அசைவுகளைப் பார்த்து கணக்குகளுக்கான விடைகளைச் சொல்கிறது என்று அவர் சந்தேகப்பட்டார். என்றாலும் எந்தக் கணக்கைக் கொடுத்தாலும் நாய் சரியான விடையையே தந்தது!

Enjoying School

Young cute dog in front of blackboard during a math class

 

ப்ளாக் பேர் (BLACK BEAR)  ;

கரும் கரடி என்று அழைக்கப்பட்ட ஒரு குதிரை செய்த  கணக்குகளைப் பார்த்து  யாரும் எந்த விதமான சந்தேகத்தையும் எழுப்ப முடியாமல் போனது! கண்ணுக்குத் தெரியாத சைகைகள், மறைமுகமாகச் சொல்லித் தருவது போன்ற அனைத்து சந்தேகங்களையும் ப்ளாக் பேர் விஷயத்தில் சொல்ல முடியாமல் போனது. அது எல்லாக் கணக்குகளையும் சரியாகப் போட்டதோடு ஒரு போர்டில் உள்ள ஆங்கில எழுத்துக்களைச் சரியாகக் காட்டி பல கேள்விகளுக்கு விடையை வேறு அளித்தது. 1931ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அனைவரையும் மலைக்க வைக்கும் ஒரு அதிசயத்தையும் அது செய்து காட்டியது. சீட்டுக் கட்டிலிருந்து ஒருவர் ஒரு கார்டை எடுத்துத் தன் கையில் ம்றைத்து வைத்துக் கொண்டதும் அவர் கையில் உள்ள கார்டு எது என்பதை அந்த குதிரை சொன்ன போது அனைவரும் திகைத்துப் போனார்கள்! கார்டின் பின் பக்கத்தை மட்டும் பார்த்து அது எப்படி கார்டு இன்னது தான் என்பதைச் சரியாகக் கூறியது என யாருக்கும் புரியவில்லை! சில சமயம் அது பதிலைக் கூற மறுத்தது. ஆனால் பொதுவாக கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறும் அதன் திறனைப் பார்த்து அனைவரும் அசந்து தான் போனார்கள்!

 

math dog

பிறந்த நாளைக் கூறிய ப்ளாக் பேர்!

ப்ளாக் பேருக்குப் பல வித பயிற்சிகளைத் தந்த பயிற்சியாளரின் பெயர்  பாரட்! ப்ளாக் பேரைப் பார்த்து சோதனை செய்யப் பலதரப்பட்டவர்களும் வந்து கொண்டே இருந்தனர். ஃப்ளெட்சர் என்ற பெண்மணிக்கு பிறந்த நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இதை அந்தப் பெண்மணியே நினைவு கூரவில்லை. ஆனால் பாரட் ப்ளாக் பேரிடம்  “ப்ளாக் பேர், ஒரு நல்ல விசேஷமான நாள் நெருங்குகிறது. அது என்னவென்று உன்னால் கூற முடியுமா?” என்று கேட்ட போது ப்ளாக் பேர், “பிறந்த நாள்” என்று சரியாகக் கூறியது.

 

 

இதைக் கேட்ட ஃப்ளெட்சர், “ஆம், அது உண்மை தான்” என்று கூறினார். “சரி, அது என்று வருகிறது என்று உன்னால் கூற முடியுமா” என்று அவர் கேட்டார். “வெள்ளிக்கிழமை அன்று” என்று ப்ளாக் பேர் பதில் கூறியது. “எந்த வெள்ளிக்கிழமை” என்று மேலும் ஃப்ளெட்சர் கேட்க, அது, “ஆகஸ்ட் 3ஆம் தேதி” என்று பதில் கூறியது!

 

 

குதிரைகளும் பேய்களும் :

சர் வில்லியம் பாரட் என்பவர் மிஸ் மாண்ட்கோமரி என்பவரைப் பற்றி தனது நூலில் குறிப்பிடும் அதிசய சம்பவம் பேயைப் பற்றித் தெரிவிக்கிறது. ஒரு நாள் குதிரைகள் பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது  சாலையில் பேய் ஒன்று அந்தரத்தில் மிதப்பதை மாண்ட்கோமரி கண்டார். பேயைக் கண்ட மாத்திரத்தில் குதிரைகள் நின்று அலறின.. தமது முன்னங்கால்களைத் தூக்கிக் கனைத்தன. குதிரைகளுக்குப் பேயை உணரும் சக்தி இருப்பதை அவர் உணர்ந்து அனைவரிடமும் இந்தச் சம்பவத்தைக் கூறினார்.

 

dog

1844இல் ஒரு அதிசயமான சம்பவம் நடந்தது. இதைப் பலரும் தங்கள் குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளனர். பால்டிக் தீவில் ஆஸல் என்ற இடத்தில் குதிரைகள் பல பயந்து போய் திடீரென்று அலறின. காரணம் பூமியில் புதைந்திருந்த ஒரு  சவப்பெட்டியிலிருந்து இடி போன்ற குரல் எழுந்ததினால் தான்!

இதை விவரமாக ராபர்ட் டேல் ஓவன் என்பவர் தான் எழுதிய நூலான ‘ஃபுட்பால்ஸ் ஆன் தி பவுண்டரி ஆஃப் அனதர் வோர்ல்ட்’ (FOOTFALLS ON THE BOUNDARY OF ANOTHER WORLD) என்ற நூலில் எழுதியுள்ளார்.

மிகவும் ஆய்வு செய்த பின்னர் மிகச் சரியாகக் குறிப்புகளிலும் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஏராளமான சம்பவங்கள் மிருகங்களுக்கும் அதீத உளவியல் ஆற்றல் உண்டு என்பதை நிரூபிக்கின்றன!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

அமெரிக்காவைச் சேர்ந்த  பெர்ட் ரீஸ் என்பவர் பிரபலமான மீடியம். அவரைச் சோதனை செய்ய பல விஞ்ஞானிகள் முன் வந்தனர். அவர்களில் ஒருவர் பிரபல விஞ்ஞானி எடிஸன். அவர் கஷ்டமான அறிவியல் கேள்வியை ரீஸிடம் கேட்டார். ரீஸ் தொலைவில் இன்னொரு அறையில் இருந்தார். எடிஸன் தன் அறையில் ஒரு பேப்பரில் ஒரு கேள்வியை எழுதினார் இப்படி:

 

”ஆல்கலைன் எலக்ட்ரிக் பேட்டரிக்கு நிக்கல் ஹைட் ராக்ஸைடு பேட்டரியை விடச் சிற்ந்தது ஏதாவது இருக்கிறதா?” இன்னொரு அறையில் இருந்த ரீஸ் உடனே பதில் எழுதினார் இப்படி:”இல்லை. ஆல்கலைன் எலக்ட்ரிக் பேட்டரிக்கு நிக்கல் ஹைட் ராக்ஸைடு பேட்டரியை விடச் சிற்ந்தது வேறு எதுவும் இல்லை!” எடிஸன் அசந்து போனார்.

 

பரோன்  ஷ்ரெங்க் நோட்ஸிங் என்பவர் ஐந்து கேள்விகளைத் தனித் தனி பேப்பர்களில் எழுதினார் : 1) எனது அம்மாவின் பெயர் என்ன? 2) நீங்கள் ஜெர்மனிக்கு எப்போது போவீ ர்கள்? 3)நான் எழுதிய புத்தகம் வெற்றி பெறுமா? 4) எனது மூத்த மகனின் பெயர் என்ன? ஐந்தாவது கேள்வி அந்தரங்க விஷயம் பற்றிய ஒரு கேள்வி. ஐந்து பேப்பர்களையும் குலுக்கிப் போட்டு ரீஸிடம் தந்தார் பரோன். எந்தச் சீட்டில் என்ன கேள்வி இருக்கிறதென்று யாருக்கும் தெரியாத நிலையில் ரீஸ் அவற்றை ஒவ்வொன்றாகத் தொட்டு சரியான விடைகளை உடனே சொன்னார். பரோன் மிகவும் வியப்படைந்தார்.

 

ஆவி உலகம் பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பலரும் ஆவி உலகம் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்!

*************

 

ஆவிகள் மூலம் அற்புத இசை! Post No. 2371

pepito2

 

Written  by S NAGARAJAN

Date: 8 December 2015

Post No. 2371

 

Time uploaded in London :– 5-35 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

அறிவியல் துளிகள் தொடரில் நவம்பர் 27,2015 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளியானது.

ஆவிகள் மூலம் அற்புத இசை வழங்கிய இசை மீடியம்கள்!

 

.நாகராஜன்

இருபதாம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் ஆவி உலக ஆராய்ச்சி உச்ச கட்டத்தை அடைந்தது.விஞ்ஞானிகள் கூப்பிட்ட இடங்களில் எல்லாம் சென்று மீடியம் என்று அழைக்கப்படும் ஆவி உலகத்துடன் தொடர்பு கொள்வோரை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

 

பல மீடியம்கள் மோசடிப் பேர்வழிகள் என்பதை அவர்கள் நிரூபித்தனர். பல கேஸ்களில் நடந்த நிகழ்வுகளுக்கு விஞ்ஞான ரீதியாக பதில் சொல்ல முடியாமல் அவர்கள் திகைத்தனர்;

இந்த மீடியம்களில் இசைத்துறை விற்பன்னர்களாக இருந்த சில ஆவிகள் அனைவரையும் பிரமிக்க வைத்தன.

 

 

உணர்வுடன் தன் இயல்பில் இருக்கும் போது அவர்களால் பாட முடியவில்லை. ஆனால் ஆவி உலகத் தொடர்பால் ஆவிகளுடன் தொடர்பு கிடைத்த போது பிரமிக்க வைக்கும் இசை மேதைகளாக அந்த நிலையில்  மட்டும் அவர்கள் மாறினர்!

1900 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி இது. பெபிடோ அரியோலா (Pepito Ariola) என்ற ஸ்பெய்ன் தேசத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுவன் இண்டர்நேஷனல் சைக்கிகல் காங்கிரஸில் பேராசிரியர் ரிச்சட் (Professor Richet) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டான். அவர் பாரிஸில் பிஸியோலோஜி துறையில் பேராசிரியராக இருந்தார்.

குழந்தை ஒரு வருடத்திற்கு முன்பாகவே அதாவது இரண்டரை வயதில் பியானோவை இசைக்க ஆரம்பித்தது. தன் பிஞ்சு விரல்களால் எப்படியோ பியானோவில் உயர்ந்த ரக இசையைத் தந்தது. பியானோவை இசைக்கும் போது மட்டும் அதன் விரல்கள் வளர்ந்தது போல இருந்தது. இல்லாவிட்டால் எப்படி அந்தக் குட்டி விரல்கள் அப்படிப்பட்ட இசையை அள்ளித் தர முடியும்! ஒவ்வொன்றும் மணி மணியான இசைப் பாடல்!

 

நமது திருஞானசம்பந்தர் மூன்று வயதில் தோடுடைய செவியன் எனப் பாட ஆரம்பித்து பல்லாயிரம் பாடல்களைத் திருநெறிய தமிழாகத் தந்ததை இங்கு நினைவு கூரலாம்.

 

ப்ளைண்ட் டாம் என்னும் நான்கு வயதுக் குழந்தை சவுத் ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒரு நீக்ரோ குழந்தை. அந்தக் குழந்தையை முட்டாள் என்றே சொல்லி விடலாம்; ஒன்றுமே அதற்குத் தெரியாது. ஆனால் பியானோவில் வெள்ளை மற்றும் கறுப்பு ‘கீ’களை இரண்டு கைகளாலும் அமுக்கி இசையைத் தர ஆரம்பித்து விட்டால் அது தேவ கானமாக இருக்கும், தனது ஐந்தாம் வயதில், அவன் ‘ரெய்ன் ஸ்டார்ம்’ (Rainstorm) என்ற இசையைக் ‘கம்போஸ்’ செய்து பியானாவோல் இசைக்க ஆரம்பித்தான். இதை மழையும் காற்றும் இடியும் தன்னிடம் சொன்னதாக அவன் கூறினான்.

 

ஒரே சமயத்தில் இரண்டு டியூன்களை அவனால் பியானோவில் இசைக்க முடிந்தது. ஒரு கையால் ஒரு டியூனும் இன்னொரு கையால் இன்னொரு டியூனையும் அவன் இசைத்துக் காட்டி வாயால் இன்னொரு பாடலைப் பாடி அனைவரையும் அசத்தினான். அரங்கத்தில் குழுமி இருந்தோரில் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க அதற்கேற்றபடி டியூனை அவன் வாசித்துக் காட்டினான்.

 

பிரான்ஸை சேர்ந்த மீடியம் ஒருவரின் பெயர் ஜார்ஜ் ஆல்பர்ட்.. இவருக்கும் இசைத்துறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் ஆவி உலகில் இருக்கும் அற்புதமான இசை மேதைகளால் பியானோவை வாசிப்பதாகக் கூறி பியானோவை வாசித்துக் காட்டினார். 1906ஆம் ஆண்டு பாரிஸில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஜெனரல் சைக்கோலொஜிக்யூ’ என்ற நிறுவனம் இவரை ஆராய முன் வந்தது.

 

 

அவர் சுய உணர்வுடன் தன் திறமை மூலமாக பியானோவை வாசிக்க இயலாதபடி பல சோதனைகள் நடத்தப்பட்டன. ஆய்வை நடத்தியவர்கள் மொஜார்ட் சொனாடாவை இசைக்கும் படி வேண்டினர். அவர் கண்களைக் கட்டினர். இரண்டு கிராமபோன்கள் ஒரே சமயத்தில் இசைக்க, அதிலிருந்து டியூபுகள் அவர் காதில் செருகப்பட்டன. அவரோ மொஜார்ட் இசையை கச்சிதமாக அப்படியே வாசித்து அவர்களை பிரமிக்க வைத்தார்.

 

இன்னொரு சோதனையில் அவரிடம் தரப்பட்ட ஒரு பெரிய தத்துவ நூலை அவர் மெதுவாகப் படித்துக் கொண்டே பியானோவை இசைத்துக் கொண்டிருந்தார்! அவரிடம் வந்த ஆவி உலக இசை மேதைகள் : பீத்தோவன், பெர்லியாஸ், மெண்டெல்ஷான், மொஜார்ட், சோபின், ஷுமன், லிஸ்ஜ்ட், வேக்னர் உள்ளிட்ட பல இசை மேதைகள்!

 

அவரது சுய கல்பனைகள் அனைவரையும் பிரமிக்க வைத்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்ஸ்டிடியூட்டால் ரிகார்ட் செய்யப்பட்ட அவரது இசை தொலைந்து போய் விட்டது. 1920ஆம் ஆண்டு பாரிஸில் லா மெடிமின்டே ஸ்ப்ரிட் என்ற இடத்தில் ஒரு நிகழ்வில் தனது ஆவி உலகத்துடனான தொடர்பையும் எப்படி இசைமேதைகள் தன்னுள் ‘பிரவேசித்து’ இசை நிகழ்ச்சிகளை நடத்தினர் என்பதையும் விரிவாக விளக்கிக் கூறினார்.

 

1903 ஆம் ஆண்டு டீ பாயொன் என்ற பிரான்ஸ் தேசத்து இசை மீடியத்தை லண்டனில் கவுண்ட் ஹாம்மன் என்பவர் அறிமுகப்படுத்தினார். அவர் விக்டோரியா காலத்து சிறப்பு இசையான சர்டோ உள்ளிட்ட இசையை அவர் பிரமாதமாக வழங்கினார். தான் என்ன இசைத்தோம் என்பது அவருக்குத் தெரியவே தெரியாது. அவரது விரல்கள் விளையாடும்! ஒரு தரம் இசைத்ததை மறு தரம் அவரால் இசைக்க முடியாது!

 

இப்படிப் பலரும் ஆவிகளின் உதவியால் ‘இசை மேதைகளாக’ மாறியதைத் துல்லியமாக ஆய்வேடுகள் விளக்குகின்றன. சிலரைப் பொய் என்று விஞ்ஞானிகள் நிரூபித்த போதும் மேலே கூறப்பட்ட பல இசை மீடியம்களை விஞ்ஞானிகள் வியப்புடன் தான் பார்க்க முடிந்தது!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

விண்வெளியில் பறந்த விண்வெளி வீரர்களின் மீது பல விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. 1992இல் கெல்லி மற்றும் கனஸ் ஆகியோரால் நடத்தப்பட்ட ஆய்வில் 54 விண்வெளி வீரர்கள் பங்கு கொண்டனர். இவர்கள் அனைவருமே விண்வெளியில் பறந்தது பரவசமான ஒரு அனுபவம் என்று கூறினர். விண்வெளியில் பறந்த அனுபவம் தகவல் தொடர்பில் மிகப் பெரும் முன்னேற்றத்தைத் தங்கள் வாழ்க்கையில் தந்ததாகவும் அவர்கள் கூறினர். 2004ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நான்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணத்தால் தாங்கள் சிறந்த ஆன்மீகவாதிகளாக ஆகி விட்டதாகத் தெரிவித்தனர். அத்தோடு நாடு மொழி என்ற குறுகிய எல்லையை விட்டு உலகளாவிய அளவில் எதையும் நோக்கும் பிரபஞ்ச பார்வை தங்களுக்கு வந்து விட்டதாகக் கூறினர்.

 

இன்னொரு ஆய்வு உளவியல் மற்றும் நடத்தை ரீதியாக நடத்தப்பட்டது. இதில் நடத்தையில் 34 விதமான மாற்றங்கள் விண்வெளி வீரர்களிடம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மனச் சோர்வு, விரக்தி, ஞாபக மறதி,  உள்ளிட்ட எதிர்மறை விளைவுகள் இந்த 34 மாற்றங்களில் அடங்கும். இவர்கள் அனைவருக்குமே பொதுவாக இருந்த ஒரு மாற்றம் அட்ஜஸ்ட்மெண்ட் டிஸ்ஆர்டர் என்பதாகும். நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டதால் நேரம், நாள், பேச்சு, நினைவு உள்ளிட்ட ஏராளமான விஷயங்களில் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்வது பெரிய காரியமாகி விட்டது என்பது இவர்களின் அனுபவம்!

 

 

ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தீர்க்கமான ஆய்வை நடத்திய பின்னரே விண்வெளியில் இன்றைய வெற்றியை விஞ்ஞானம் கண்டுள்ளது!

**************

 

ஓஸோன் உறை பாதுகாப்பின் அவசியம்(Post No: 2365)

ozone1

Radio Talk written by S NAGARAJAN

Date: 27 November 2015

Post No. 2365

 

Time uploaded in London :– 6-37 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ozone2

ஓஸோன் உறை என்பது வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் உள்ள ட்ரோபோஸ்பியர் (Troposphere) என்று அழைக்கப்படும் முக்கிய பகுதியாகும். இதில் மாசு ஏற்பட்டால் தீவிரமான சுவாச சம்பந்தமான கோளாறுகள் மனிதர்களுக்கு ஏற்படும். விவசாய அறுவடைகள் பாதிக்கப்படும்,கட்டுமான வேலைகளும் பாதிக்கப்படும்.

 

 

இந்த ஒஸோன் உறையை ஐரோப்பிய விஞ்ஞானிகள் தங்கள் நாட்டைப் பொறுத்த வரையில் ஆராய முடிவு செய்து ஆராய ஆரம்பித்தனர். ஒஸோன் உறையைப் பாழ்படுத்துவது வாகனங்கள் வெளியேற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடும் கார்பன் டை ஆக்ஸைடுமே  என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். தொடர் இரசாயன மாறுதல்கள் மூலம் இந்த நச்சுப்புகை ஓஸோனைத் துளைக்கிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

 

 

கடந்த 15 ஆண்டுகளாக லண்டன் மாநகரில் சேகரிக்கப்பட்டிருந்த தரவுகளிலிருந்து தங்கள் ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு இந்த மாசானது ஐரோப்பியப் பகுதியில் ஏற்படும் மாறுதல்களை மட்டுமே சார்ந்ததாக இல்லை; உலகளாவிய அளவில் ஏற்படும் மாறுதல்களும் இப்பகுதியை பாதிக்கின்றன என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

 

 

இதிலிருந்து நாம் அறிவது உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் மாசு அந்தப் பகுதியை மட்டும் சார்ந்ததாக இல்லை. அது உலகின் ஏனைய பகுதிகளையும் பாதிக்கிறது என்பது தான்.

 

 

ஆகவே ஒஸோனை பொருத்தவரையில் எல்லா நாடுகளும் கூடி மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை ஏற்படுத்தி அவற்றை தீவிரமாக அமுல்படுத்த வேண்டும் என்ற முடிவை அவர்கள் அறிவித்துள்ளனர்.

 

 

ஓஸோன் பாதிப்பு ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் சற்றுக் குறைந்திருந்தது; ஆனால் இப்போது அது மீண்டும் அதிகரித்துள்ளது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ozone.3

 

ஓஸோன் பாதிப்பு என்பது உலகப் பிரச்சினையாக இருப்பதால் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் அதில் பொறுப்பு உண்டு அதைத் தவிர்க்கவும் தடுக்கவும் எல்லா விதமான நடவடிக்கைகளையும் ஒவ்வொருவரும் எடுத்தல் இன்றியமையாதது!

 

***

காற்றில் மாசை ஏற்படுத்துவது வாகன நச்சுப் புகையே! ( Post No. 2362 )

smoke1

Radio Talk written by S NAGARAJAN

Date: 26 November 2015

Post No. 2362

 

Time uploaded in London :– 6-26 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

emissions-smoke

பெரு நகரங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேம்பட்ட அளவில் காற்றை மாசுபடுத்துவது வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகையே! சென்ற பத்தாண்டுகளில் உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் டீஸல் வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகையை சுவாசிப்பவர்கள் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாவதைச் சுட்டிக் காட்டுகின்றன. இதனால் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.

 

 

டீஸல் எரிபொருளைப் பயன்படுத்தி  இயக்கப்படும் லாரிகள் வெளியேற்றும் புகை நச்சுப்புகை என்று 1998ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட்து. 2012ஆம் ஆண்டு  ஜூன் மாதம் உலக சுகாதார நிறுவனம் (WORLD HEALTH ORGANISATION) டீஸல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது (Carcinogenic) என்று அறிவித்துள்ளது.Particulate Matter எனப்படும் துகள்மப் பொருளையும் நைட்ரஜன் ஆக்ஸைடையும் அதிக அளவில் டீஸல் வாகனங்கள் வெளியேற்றுகின்றன. பெட்ரோலால் இயக்கப்படும் வாகனங்களோ கார்பன் மானாக்ஸைடையும் ஹைட்ரோகார்பன்களையும் வெளியேற்றி காற்றை மாசுபடுத்துகின்றன.

 

 

வாகனங்களில் மாசைக் கட்டுப்படுத்தும் அதி நவீன எஞ்சின்களைப் பொருத்துவது, வாகனங்களைச் சரியான முறையில் பராமரிப்பது, அவ்வப்பொழுது வாகனங்களைச் சோதனைக்குட்படுத்தி நச்சுப்புகை கட்டுப்பாட்டிற்கான சான்றிதழை புதுப்பிப்பது போன்ற வழிகளை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

 

 

இது ஒருபுறமிருக்க மாசு என்றாலேயே வெளிப்புறத்தில் ஏற்படும் மாசைப் பற்றியே நாம் பொதுவாக நினைக்கிறோம். ஆனால் வீட்டிற்குள் ஏற்படுத்தப்படும் காற்று மாசைப் பற்றி யாரும் நினைப்பதில்லை. கிராமங்களையே அதிகமாகக் கொண்டுள்ள நம் நாட்டில் அன்றாட சமையலுக்காக வீடுகளில் விறகுகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு தொடர் இருமலும் நுரையீரலில் புற்று வியாதியும் நியுமோனியாவும் வர அதிக வாய்ப்புள்ளது. ஆகவே இவற்றைப் பயன்படுத்துவோர் எல் பி ஜி போன்ற மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும்.

 

 

இது இன்றைய நாட்களில் அவசியத் தேவை அவசரத் தேவையும் கூட!

 

***

 

 

 

ஒளியீரி (LED) விளக்குகளுக்கு மாறுவோம்! Post No. 2359

LED 1

Radio Talk written by S NAGARAJAN

Date: 25 November 2015

Post No. 2359

 

Time uploaded in London :– 6-00 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

LED – LIGHT EMITTING DIODE- எல்.ஈ.டி அல்லது லைட் எமிட்டிங் டையோட் என்று அழைக்கப்படும் ஒளியீரி அல்லது ஒளியுமிழ் இரு முனைய விளக்குகள் நீண்ட காலம் உழைக்கும் வல்லமை பெற்றவை. அன்றாடம் நாம் வழக்கமாக உபயோகிக்கும் incandescent bulb எனப்படும் வெப்பத்தால் ஒளி விடும் கனலொளிர் விளக்குகளை ஒப்பிடும் போது காம்பாக்ட் ப்ளோரெஸெண்ட் விளக்குகள் 35000 மணி நேரங்கள் அதிக பட்சமாகவும் 10000 மணி நேரம் குறைந்தபட்சமாகவும் வடிவமைப்புக்குத் தக்கபடி ஒளிர்கின்றன. இது சம்பிரதாயமான பல்புகள் அதிகமாக எரியும் 2000 மணி நேரம் அல்லது குறைந்தபட்சமாக எரியும் 750 மணி நேரத்துடன் ஒப்பிடும் போது பல மடங்கு அதிகம் என்பது தெளிவாகப் புலப்படும்.

 

 

சாமான்யனுக்கான எளிமையான விளக்கமாக இதைக் கூற வேண்டுமெனில் ஒளியுமிழ் இரு முனைய விளக்குகள் அதாவது உரிய வடிவமைப்புடன் கூடிய எல்.ஈ.டி விளக்குகளை ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் ஒருவர் பயன்படுத்தினால் அதை இருபது வருடங்களுக்குப் பின்னால் மாற்றினால்  போதும். ஒரு ஒளியுமிழ் இரு முனைய விளக்கானது காலப் போக்கில் அதன் பிரகாசத்தை இழக்கிறது. அதன் ஆரம்பகால பிரகாசத்தில் 70 விழுக்காடு குறைந்து விட்ட நிலையில் அதை மாற்றினால் மட்டுமே போதும். இதனால் பராமரிப்புச் செலவும் குறையும்.

 

 

சம்பிரதாயமான பல்புகளை ஒப்பிடும் போது இந்த ஒளியுமிழ்  இரு முனைய விளக்கானது 80 முதல் 90 விழுக்காடு ஆற்றல் திறனை உடையது. சம்பிரதாயமான பல்புகள் 20 விழுக்காடு ஆற்றல் திறனையே உடையது.

 

 

அத்தோடு ஒரு சிறிய ஒளியுமிழ் இரு முனைய விளக்கு 25 கனலொளிர் விளக்கை ஈடு செய்வதால் மாசில்லா சூழ்நிலை ஏற்படுத்துகிறது. அனைத்து இல்லங்களிலும் தொழிலகங்களிலும் இந்த விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டால் பூமி எவ்வளவு பசுமையாக ஆகி விடும்! சிந்திப்போம் செயல்படுவோம். ஒளியீரி விளக்குகளுக்கு உடனடியாக மாறுவோம்!

 

***