வைச்ச பொருள் – 4 (Post No.5564)

WRITTEN BY S NAGARAJAN

Date: 20 October 2018

Time uploaded in London – 6-39 AM (British Summer Time)

Post No. 5564

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வைச்ச பொருள் – 4

ச.நாகராஜன்

9

வள்ளுவர் மெய்ப்பொருளைக் காணச் சொல்லி அறிவுறுத்திய குறளை மனதில் கொண்டு மிகப் பெரும் மகானான தாயுமானவர், உலக மகா கவியான பாரதியார், சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்த நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஆகியோர் “பொருள்” பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

பேரனந் தம்பேசி மறையனந் தஞ்சொலும்
பெரியமௌ னத்தின்வைப்பைப்
பேசரும் அனந்தபத ஞான ஆ னந்தமாம்
பெரியபொரு ளைப்பணிகுவாம்.

 

(ஊர் அனந்தம் எனத் தொடங்கும் பாடல்)

என்று கூறும் தாயுமானவர் உள்ளதிலேயே ‘பெரிய பொருளைப்’ பணிகுவாம் என்று கூறி அருளுகிறார்.

துரியநடு வூடிருந்த பெரியபொருள் யாததனைத் தொழுதல் செய்வாம்.         (அருமறையின் எனத் தொடங்கும் பாடல்) என்றும் கூறி பெரிய பொருள் கருத்தை வலியுறுத்துகிறார்.

பொருளாகக் கண்டபொரு ளெவைக்கும்முதற் பொருளாகிப போத மாகித்
தெருளாகிக் கருதுமன்பர் மிடிதீரப் பருகவந்த செழந்தே னாகி
அருளானோர்க் ககம்புறமென் றுன்னாத பூரணஆ னந்த மாகி
இருள்தீர விளங்குபொரு ளியாதந்தப் பொருளினையாம் இறைஞ்சி நிற்பாம்

பொருளுக்கெல்லாம் முதல் பொருளாக இருப்பதோடு இருள் தீர விளங்கும் பொருளினை இறைஞ்சி நிற்போம் என்று வேறு சொல்கிறார்.

 

அவரே, எங்கும் நிறைகின்ற பொருள் பற்றிப் பதினோரு பாடல்கள் பாடி அதன் இயல்பை நன்கு விளக்குகிறார். தெளிவான பாடல்கள் பதினொன்றும் இதோ:


அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய
ஆப்தர்மொழி யொன்றுகண்டால்
அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை
அறிந்தார்கள் அறியார்களார்
மௌனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம்
வாயாய்ப் பிதற்றுமவரார்
மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும்
வன்மையொ டிரக்கமெங்கே
புவனம் படைப்பதென் கர்த்தவிய மெவ்விடம்
பூதபே தங்களெவிடம்
பொய்மெயிதம் அகிதமேல் வருநன்மை தீமையொடு
பொறைபொறா மையுமெவ்விடம்
எவர்சிறிய ரெவர்பெரிய ரெவருறவ ரெவர்பகைஞர்
யாதுமுனை யன்றியுண்டோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.1.

அன்னே யனேயெனுஞ் சிலசமயம் நின்னையே
ஐயாஐயா என்னவே
அலறிடுஞ் சிலசமயம் அல்லாது பேய்போல
அலறியே யொன்றும் இலவாய்ப்
பின்னேதும் அறியாம லொன்றைவிட் டொன்றைப்
பிதற்றிடுஞ் சிலசமயமேல்
பேசரிய ஒளியென்றும் வெளியென்றும் நாதாதி
பிறவுமே நிலயமென்றுந்
தன்னே ரிலாததோ ரணுவென்றும் மூவிதத்
தன்மையாங் காலமென்றுஞ்
சாற்றிடுஞ் சிலசமயம் இவையாகி வேறதாய்ச்
சதாஞான ஆனந்தமாய்
என்னே யெனேகருணை விளையாட் டிருந்தவா
றெம்மனோர் புகலஎளிதோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.2.

வேதமுடன் ஆகம புராணமிதி காசமுதல்
வேறுமுள கலைகளெல்லாம்
மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே
விரிவா யெடுத்துரைக்கும்
ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை
உண்டுபணு ஞானமாகும்
ஊகம்அனு பவவசன மூன்றுக்கும் ஒவ்வுமீ
துலகவா திகள்சம்மதம்
ஆதலி னெனக்கினிச் சரியையா திகள்போதும்
யாதொன்று பாவிக்கநான்
அதுவாதலா லுன்னை நானென்று பாவிக்கின்
அத்துவித மார்க்கமுறலாம்
ஏதுபா வித்திடினும் அதுவாகி வந்தருள்செய்
எந்தைநீ குறையுமுண்டோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.3.

சொல்லான திற்சற்றும் வாராத பிள்ளையைத்
தொட்டில்வைத் தாட்டிஆட்டித்
தொடையினைக் கிள்ளல்போற் சங்கற்ப மொன்றில்
தொடுக்குந் தொடுத்தழிக்கும்
பொல்லாத வாதனை எனும்சப்த பூமியிடை
போந்துதலை சுற்றியாடும்
புருஷனி லடங்காத பூவைபோல் தானே
புறம்போந்து சஞ்சரிக்கும்
கல்லோ டிரும்புக்கு மிகவன்மை காட்டிடுங்
காணாது கேட்ட எல்லாங்
கண்டதாக காட்டியே அணுவாச் சுருக்கிடுங்
கபடநா டகசாலமோ
எல்லாமும் வலதிந்த மனமாயை ஏழையாம்
என்னா லடக்கவசமோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.4.

கண்ணார நீர்மல்கி யுள்ளநெக் குருகாத
கள்ளனே னானாலுமோ
கைகுவித் தாடியும் பாடியும் விடாமலே
கண்பனித் தாரைகாட்டி
அண்ணா பரஞ்சோதி யப்பா உனக்கடிமை
யானெனவு மேலெழுந்த
அன்பாகி நாடக நடித்ததோ குறைவில்லை
அகிலமுஞ் சிறிதறியுமேல்
தண்ணாரு நின்னதரு ளறியாத தல்லவே
சற்றேனும் இனிதிரங்கிச்
சாசுவத முத்திநிலை ஈதென் றுணர்த்தியே
சகநிலை தந்துவேறொன்
றெண்ணாம லுள்ளபடி சுகமா யிருக்கவே
ஏழையேற் கருள்செய்கண்டாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.5.

காகமா னதுகோடி கூடிநின் றாலுமொரு
கல்லின்முன் னெதிர்நிற்குமோ
கர்மமா னதுகோடி முன்னேசெய் தாலுநின்
கருணைப்ர வாகஅருளைத்
தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ
தமியனேற் கருள்தாகமோ
சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு வினையெலாஞ்
சங்கேத மாய்க்கூடியே
தேகமா னதைமிகவும் வாட்டுதே துன்பங்கள்
சேராமல் யோகமார்க்க
சித்தியோ வரவில்லை சகசநிட் டைக்கும்என்
சிந்தைக்கும் வெகுதூரம்நான்
ஏகமாய் நின்னோ டிருக்குநா ளெந்தநாள்
இந்நாளில் முற்றுறாதோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.6.

ஒருமைமன தாகியே அல்லலற நின்னருளில்
ஒருவன்நான் வந்திருக்கின்
உலகம் பொறாததோ மாயாவிசித்ரமென
ஓயுமோ இடமில்லையோ
அருளுடைய நின்னன்பர் சங்கைசெய் திடுவரோ
அலதுகிர்த் தியகர்த்தராய்
அகிலம் படைத்தெம்மை யாள்கின்ற பேர்சிலர்
அடாதென்பரோ அகன்ற
பெருமைபெறு பூரணங் குறையுமோ பூதங்கள்
பேய்க்கோல மாய்விதண்டை
பேசுமோ அலதுதான் பரிபாக காலம்
பிறக்கவிலை யோதொல்லையாம்
இருமைசெறி சடவினை எதிர்த்துவாய் பேசுமோ
ஏதுளவு சிறிதுபுகலாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.7.

நில்லாது தேகமெனும் நினைவுண்டு தேகநிலை
நின்றிடவும் மௌனியாகி
நேரே யுபாயமொன் றருளினை ஐயோஇதனை
நின்றனுட் டிக்க என்றால்
கல்லாத மனமோ வொடுங்கியுப ரதிபெறக்
காணவிலை யாகையாலே
கையேற் றுணும்புசிப் பொவ்வாதெந் நாளும்உன்
காட்சியிலிருந்து கொண்டு
வல்லாள ராய்இமய நியமாதி மேற்கொண்ட
மாதவர்க் கேவல்செய்து
மனதின் படிக்கெலாஞ் சித்திபெற லாஞானம்
வாய்க்குமொரு மனுவெனக்கிங்
கில்லாமை யொன்றினையும் இல்லாமை யாக்கவே
இப்போ திரங்குகண்டாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.8.

மரவுரி யுடுத்துமலை வனநெற் கொறித்துமுதிர்
வனசருகு வாயில்வந்தால்
வன்பசி தவிர்த்தும்அனல் வெயிலாதி மழையால்
வருந்தியு மூலஅனலைச்
சிரமள வெழுப்பியும் நீரினிடை மூழ்கியுந்
தேகநம தல்லவென்று
சிற்சுக அபேஷையாய் நின்னன்பர் யோகஞ்
செலுத்தினார் யாம்பாவியேம்
விரவும்அறு சுவையினோடு வேண்டுவ புசித்தரையில்
வேண்டுவ எலாமுடுத்து
மேடைமா ளிகையாதி வீட்டினிடை வைகியே
வேறொரு வருத்தமின்றி
இரவுபக லேழையர்கள் சையோக மாயினோம்
எப்படிப் பிழைப்பதுரையாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.9.

முத்தனைய மூரலும் பவளவா யின்சொலும்
முகத்திலகு பசுமஞ்சளும்
மூர்ச்சிக்க விரகசன் னதமேற்ற இருகும்ப
முலையின்மணி மாலைநால
வைத்தெமை மயக்கிஇரு கண்வலையை வீசியே
மாயா விலாசமோக
வாரிதியி லாழ்த்திடும் பாழான சிற்றிடை
மடந்தையர்கள் சிற்றின்பமோ
புத்தமிர்த போகம் புசித்துவிழி யிமையாத
பொன்னாட்டும் வந்ததென்றால்
போராட்ட மல்லவோ பேரின்ப முத்திஇப்
பூமியி லிருந்துகாண
எத்தனை விகாதம்வரும் என்றுசுகர் சென்றநெறி
இவ்வுலகம் அறியாததோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.10.

உன்னிலையும் என்னிலையும் ஒருநிலை யெனக்கிடந்
துளறிடும் அவத்தையாகி
உருவுதான் காட்டாத ஆணவமும் ஒளிகண்
டொளிக்கின்ற இருளென்னவே
தன்னிலைமை காட்டா தொருங்கஇரு வினையினால்
தாவுசுக துக்கவேலை
தட்டழிய முற்றுமில் லாமாயை யதனால்
தடித்தகில பேதமான
முன்னிலை யொழிந்திட அகண்டிதா காரமாய்
மூதறிவு மேலுதிப்ப
முன்பினொடு கீழ்மேல் நடுப்பாக்கம் என்னாமல்
முற்றுமா னந்தநிறைவே
என்னிலைமை யாய்நிற்க இயல்புகூ ரருள்வடிவம்
எந்நாளும் வாழிவாழி
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.11.

அற்புதமான இந்தப் பாடல்கள் மூலம் ‘ஏது பாவித்திடினும் அதுவாகி வந்தருள்செய் அற்புதப் பெரும் பொருளைப் பற்றி விளங்கிக் கொள்ள முடிகிறது.

                   10

மகாகவி பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் முதல் பாடலாக பிரம துதியைப் பாடுகிறார்.

ஓமெனப் பெரியோர் கள்-என்றும்
ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,
தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர்

தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்
நாமமும் உருவும் அற்றே-மனம்

நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,
ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும்

அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்

நின்றிடும் பிரமம்என் பார்;-அந்த

நிர்மலப் பொருளினை நினைதிடு வேன்;

என்று இப்படி பாஞ்சாலி சபதத்தின் முதல் பாடலான பிரம துதியில் பாரதியார் ‘ஆமெனும் பொருள் அனைத்தாய் என்றும் ‘அந்த நிர்மலப் பொருளினை நினைந்திடுவேன் என்றும் பாடுகிறார்.

ஆக அனைத்திலும் ஊடுருவி ‘ஆம் எனும் பொருள், ‘நிர்மலப் பொருள் இருக்கிறது.

அந்தப் பொருளினை நாம் அறிந்திட வேண்டாமா – இப்படிக் கேட்கிறார் பின்னால் வந்த நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை.

11

அவர் கேள்விகள் பல.

சூரியன் வருவது யாராலே ?

சூரியன் வருவது யாராலே ?

சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்

கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?

பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?

அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்

தரையில் முளைத்திடும் புல்ஏது ?
மண்ணில் போட்டது விதையன்று

மரஞ்செடி யாவது யாராலே ?
கண்ணில் தெரியாச் சிசுவைஎல்லாம்

கருவில் வளர்ப்பது யார்வேலை ?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்

ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ ?

எத்தனை மிருகம்எத்தனைமீன்!

எத்தனை ஊர்வன பறப்பனபார் !
எத்தனை பூச்சிகள் புழுவகைகள் !

எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!
எத்தனை நிறங்கள் உருவங்கள் !

எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும்தர ஒருகர்த்தன்

யாரோ எங்கோ இருப்பதுமெய்.

அல்லா வென்பார் சிலபேர்கள் ;

அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்

வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்

என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லா மிப்படிப் பலபேசும்

ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை

எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்

நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;

வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

“எல்லா மிப்படிப் பலபேசும் ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !
அந்தப் பொருளை நாம்நினைத்தே அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.” என்று முத்தாய்ப்பாகத் தன் கருத்தைக் கூறும் அவர்,
எந்தப் படியாய் எவர்அதனை எப்படித் தொழுதால் நமக்கென்ன ? என்கிறார்.


12

ஆக அப்பர் கூறிய “வைச்ச பொருளை இப்போது அறிய முடிகிறது. அவரே கோயில் எனப்படும் சிதம்பரத்தில் பாடிய இன்னொரு பாடலின் மூலம் நமக்கு ஒரு குறிப்பு (clue) கிடைக்கிறது.

வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய

அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற

பிச்சன் பிறப்புஇலி பேர் நந்தி உந்தியின்மேல் அசைத்த

கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே!

இப்போது வைச்ச பொருள் என்ன என்று விளங்குகிறது. அந்தப் ‘பொருள்’ என்ன?

–    அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்

***

வைச்ச பொருள்?! – 2 (Post No.5541)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 15 October 2018

 

Time uploaded in London – 6-33 AM (British Summer Time)

 

Post No. 5541

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

ஆய்வுக் கட்டுரைகளை காப்பி அடித்து தங்கள் பெயரில் போட்டுக் கொள்ள வேண்டாம். சிலர் கட்டுரைகள் வெளியான தளம், எழுதியவர் பெயர் இல்லாமல் நண்பர்களுக்கு அனுப்ப அவர்கள் தங்கள் பெயரில் அனுப்பி வெளியிடுகிறார்கள். எழுதியவர் பெயர், வெளியிட்ட இணையதளமான www.tamilandvedas.comஇன் பெயர் ஆகியவற்றையும் நண்பர்களுக்கு இணைத்து அனுப்புங்கள்.

வைச்ச பொருள்?! – 2

 

.நாகராஜன்

5

பொருள் என்பதைச் செல்வம் என்ற அர்த்தத்தில் வள்ளுவர் கையாளும் போது பல சிக்கல் நிறைந்த விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறார், வெவ்வேறு குறட்பாக்களில்.

அருள், பொருள் ஆகிய இரண்டு வார்த்தைகள் தமிழ் தந்த அரும் வார்த்தைகள். அருள் என்ற வார்த்தைக்கு ஈடு இணையான இன்னொரு வார்த்தை எந்த மொழியிலும் கிடையாது.

 

பால் பிரண்டன் உள்ளிட்ட மேலை நாட்டோர் வியந்து போற்றிய வார்த்தை இது. பொருள் என்பதும் அதே போன்ற அருமையான வார்த்தை.

 

இந்த இரண்டையும் சீர் தூக்கிப் பார்க்கும் வள்ளுவரின் பான்மை வியத்தற்குரியது.

 

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்  பொருட்செல்வம்

பூரியார் கண்ணு முள  – குறள் 241

 

மிகத் தெளிவாக அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் என்றும் பணத்தால் பெறப்படும் சகல சௌகரியங்களும் அற்பர்களிடத்தும் உள்ளன என்கிறார்.

 

ஆனால் அந்தப் பொருளைக் கொண்டே அருளைப் பெறலாம் என்பதும் அவர் முடிபு.

 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு – குறள் 757

அன்பானது பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செவிலித் தாயால் வளரும்.

பெற்ற பணத்தை நல்ல வழியில் செலவழித்தால் அருளை அடையலாம்.

 

பொருளற்றார் பூப்பர் ஒரு கால் அருளற்றார்

அற்றார் மற்றாதல் அரிது   – குறள் 248

பணம் இல்லாவிட்டாலும் கூட ஒருவேளை பின்னால் வரக் கூடும்; ஆனால் அருள் இல்லையெனிலோ ஒன்றுமே இல்லாதவர்கள் தாம் அவர்கள்; அவர்கள் வளத்தைப் பெறுதல் அரிது.

 

ஆனால் அந்த அருள் மறு உலகத்தில் செல்லுபடியாகும் ஒன்று; பொருள் இல்லையெனில் இவ்வுலக வாழ்க்கை இல்லை! அருள் அவ்வுலகிற்குத் தேவை;பொருள் இவ்வுலகத்திற்குத் தேவை!

 

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு   – குறள் 247

 

 

இந்தப் பொருள் இருந்தால் பொருளற்றவர் கூடப் போற்றப்படுவர். பொருளற்றவர் என்றால் இங்கு மதிக்கவே தகாதவர் என்று அர்த்தம்.

 

பொருளற்றவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்  – குறள் 751

அருமையான இந்தக் குறளில் பொருள் என்னும் வார்த்தை பல பரிமாணங்களைக் காட்டுகிறது.

 

உலகியல் ரீதியான பொருள் தான் – பணம் தான் – சிறப்புடைய பொருள். அதுவன்றி வேறு எதுவும் ஒரு பொருள் அல்ல. மதிக்கத் தகாதவரைக் கூட மதிக்கும்படி வைக்கும் ஒரு அற்புதம் செல்வமே.

 

காசே தான் கடவுளடா!

பொருள் என்னும் பொய்யாவிளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று    -குறள் 753

பொருள் மட்டும் இருந்தால் போதும். அதுவே நந்தா விளக்கு. நினைத்த தேசத்திற்கெல்லாம் சென்று வெல்வதோடு இருளை ஒழித்து விடும். இருள் என்பது இங்கு பகை உள்ளிட்ட பல அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது.

 

ஆகவே வள்ளுவரின் கட்டளை ‘செய்க பொருளை

எப்படியாவது பணத்தை சம்பாதித்துக் கொள். பகைவரின் கர்வத்தை அடக்க வல்ல  கூர்மையான வாள் அதை விட வேறில்லை.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரியது இல்     – குறள் 759

 

 

ஆனால் இந்தப் பொருளை நியாயமான வழியில் சம்பாதிக்க வேண்டும்.பிறரை அழவைத்துப் பெற்றால் நீ அழப்போவது நிச்சயம் (குறள் 659)

 

சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்றுகுறள் 660

சலத்தால்கெட்ட வழியால்வஞ்சனையால்பொருளைப் பெற்றால் அது நிலைக்காது; அது பச்சை மண்பாண்டத்தில் நீரை ஊற்றி வைப்பதற்குச் சமம்.

 

சம்பாதித்த பணம் குறையாமல் இருக்க ஒரு வழி உண்டு.

பிறனுடைய கைப்பொருளைக் கைப்பற்றாமல்கவராமல்வஞ்சனையால் அடையாமல் இருத்தல் வேண்டும்.

 

இப்படி வழி காட்டும் குறள் இது:-

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன் கைப்பொருள்  – குறள் 178

ஆனால் இப்படிப் பெரும் செல்வத்தை சம்பாதித்து என்ன பிரயோஜனம்? அதனை நன்கு அனுபவிக்க அல்லவா வேண்டும்?

 

அனுபவிக்காமல் செத்துப் போனால் அந்தச் செல்வத்தைக் கொண்டு செத்தபின் அவன் என்னதான் செய்யப் போகிறான்?

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்   – குறள் 1001

 

சேர்த்த பணத்தால்செல்வத்தால்எல்லாம் அடையலாம் என்று எண்ணி அதைச் சேர்த்து வைத்து யாருக்கும் கொடுக்காமல் செத்தொழிந்தால் அடுத்த பிறப்பு இழிந்த பிறப்பாகவே அமையும்.

 

பொருளானாம் எல்லாம் என்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு   – 1002

அப்பாடா!

தலை சுற்றும் அளவுக்குப் பொருளைப் பற்றிய பொருள் வாய்ந்த குறள்கள் இவை.

செல்வம் என்ற அர்த்தத்தில் எப்படிப் பொருளைச் சேர்க்க வேண்டும், அப்படிச் சேர்ப்பது எவ்வளவு முக்கியம், அதைக் காக்கும் வழி என்ன, அடுத்த பிறவி நல்லதாக அமைய வழி என்ன என்பன உள்ளிட்ட அற்புத உண்மைகளை அள்ளிக் கொட்டுகிறார் வள்ளுவப் பிரான்.

இதில் அப்பர் கூறிய வைச்ச பொருள் பற்றி நமக்குத் தெரியவில்லை.

 

அதற்கு இன்னும் பல குறட்பாக்களை ஆராய வேண்டும்.

ஆராய்வோம்!

                     –தொடரும்

 

 

***

 

 

 

 

செருப்பால் அடி — தமிழ்ப் பாடல் (Post No.5539)

written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 14 October 2018

 

Time uploaded in London – 10-31 am (British Summer Time)

 

Post No. 5539

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

தற்காலத்தில் சில சொற்களைப் பயன்படுத்த நாம் தயங்குகிறோம். உதாரணமாக மயிர், செருப்பு. ஆனால் அந்தக் காலத்தில் அப்படி இல்லை. மயிர் , செருப்பு முதலிய சொற்களைத் தேவைப்பட்ட இடத்தில் பயன்படுத்துவர்.

 

மேலும் வள்ளுவர் போன்றோர் அஹிம்ஸை முதலியவற்றில், தேவையில்லாமல் நம்ப மாட்டார்கள். ‘ஆடுற மாட்டை ஆடி கற; பாடுற மாட்டைப் பாடிக் கற’ என்பது அவர்களின் பாலிஸி. மரண தண்டனை இருந்தல்தான் சமூகம் சிறக்கும் என்பது அவர்கள் கூற்று. வள்ளுவரே மரணதண்டனைப் ப்ரியர். அது மட்டுமல்ல. கஞ்சப் பயல்களைக் கண்டால் ஓங்கி தாடையில் ஒரு குத்து விட்டு கையை  முறுக்கி காசு வாங்கு என்கிறார்.

 

முதலில் செருப்படிப் பாடலைப் பார்த்துவிட்டு குறளுக்குப் போவோம்.

பொருட்பாலை விரும்புவார்கள் காமப்

பாலிடை மூழ்கிப் புரள்வர் கீர்த்தி

அருட்பாலா மறப்பாலைக் கனவிலுமே

விரும்பார்கள் அறிவு ஒன்றில்லார்

குருபாலர் கடவுளர்பால் வேதியர்பால்

புரவலர்பால் கொடுக்கக் கோரார்

செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே

கோடி செம்பொன் சேவித்தீவார்

–விவேக சிந்தாமணி (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

பொருள்

செல்வத்தில் அதிக விருப்பம் கொள்பவர்கள் அருளாகிய செல்வத்தைத் தரும் தருமத்தைக் கனவிலும் விரும்பமாட்டார்கள் ஆசிரியருக்கும். கடவுளுக்கும், பிராஹ்மணர்களுக்கும், புரவலர்க்கும் ஒரு பொருளும் தர மாட்டார்கள். கோடி செம்பொன்னாக இருந்தாலும்   செருப்   பால் அடித்துப் பறிப்போருக்கே சலாம் போட்டுக் கொடுப்பார்கள்.

xxx

 

கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு!

 

தமிழ் வேதம் ஆகிய திருக்குறள் சொல்லும்:

 

அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

 

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

 

பரிதியார் உரை:  கொறடாலே அடிப்பவர்க்குக் கொடுப்பர்

காளிங்கர் உரை: கொடிறு போல இடுக்கிப் பிடித்து உடம்பை உடைக்கும் திறமையால் கூனிய கையினை உடையோர்.

 

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

 

மரண தண்டனைக்கு ஆதரவு

மரண தண்டணைக்கு ஆதரவு தருபவன் வள்ளுவன். அவன் தீவிர அஹிம்சாவாதி அல்ல. தீயோரை அழிப்பது பயிர்களின் களைகளை நீக்குவது போல என்று அழகான உவமை தருகிறான். இதோ அந்தக் குறள்:

 

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர் (550)

 

பொருள்: நாட்டில் உள்ள கொடியோரை மரண தண்டனை கொடுத்து அழிப்பது, பயிர்கள் நன்றாக வளர உழவர்கள் களை எடுப்பது போல் ஆகும்.

 

காதலர் இல்வழி மாலை கொலைகளத்து

ஏதிலர் போல வரும் – குறள் 1224

 

காதலர் இல்லாத மாலைப் பொழுது , கொலைக்களத்தில் மரணதண்டனையை  நிறைவேற்ற வரும்  ஆளைப் போல வருகிறது

பாரதியும் பாடுகிறான்

பாதகம் செய்பவரைக் கண்டால்—நாம்
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

 

‘’வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்

நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரர் ஆயினும்

வெம்மையோடொறுத்தல் வீரர் தம் செயலாம்’’.

 

வாழ்க வள்ளுவன்!! வளர்க வன்முறை!!!! (அயோக்கியர்களுக்கு எதிராக)

 

–subham–

 

 

வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது-கல்வி (Post No.5528)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 11 October 2018

 

Time uploaded in London –14-36 (British Summer Time)

 

Post No. 5528

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 
வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது-கல்வி (Post No.5528)

 

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து 16, 17, 18, 19, 20 எண்ணிட்ட ஸ்லோகங்களைத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்

 

हर्तुर्याति न गोचरं किम् अपि शं पुष्णाति यत्सर्वदा‌உप्य्
अर्थिभ्यः प्रतिपाद्यमानम् अनिशं प्राप्नोति वृद्धिं पराम् ।
कल्पान्तेष्वपि न प्रयाति निधनं विद्याख्यम् अन्तर्धनं
येषां तान्प्रति मानम् उज्झत नृपाः कस्तैः सह स्पर्धते ॥ 1.16 ॥

 

ஹர்துயாதி ந கோசரம் கிம் அபி சம் புஷ்ணாதியத் ஸர்வதாப்ய

அர்த்திப்யஹ   ப்ரதிபாதயமானம் ஐசம் ப்ராப்னோதி வ்ருத்திம் பராம்

கல்பாந்தேஷ்வ்பி ந ப்ரயாதி நிதனம் வித்யாக்யம் அந்தர் தனம்

யேஷாம் தான்ப்ரதி மானம் உஜ்ஜத் ந்ருபாஹா கஸ்தைஹை சஹ  ஸ்பர்ததே

 

திருடர்களால் காணமுடியாதது;

எப்போதும் பேரின்பம் நல்குவது;

கொடுத்தாலும் குறைவு படாமல் அதிகரிக்கும்;

யுகமுடிவிலும் அழியாதது எதுவோ அதுவே கல்வி.

மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.

அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்?

 

 

இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்

 

வெள்ளதால் /வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது

 

கொடுத்தாலும் நிறைவன்றிக்

குறைவுறாது

கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது

கல்வியென்னும்

உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் பொருள்தேடி

உழல்வதென்னே

 

XXXX

 

 

இன்னுமொரு பாடல்

अधिगतपरमार्थान्पण्डितान्मावमंस्थास्
तृणम् इव लघु लक्ष्मीर्नैव तान्संरुणद्धि ।
अभिनवमदलेखाश्यामगण्डस्थलानां
न भवति बिसतन्तुर्वारणं वारणानाम् ॥ 1.17 ॥

 

அதிகத பரமார்த்தான் பண்டிதான்மாவ மம்ஸ்தாஸ்

த்ருணம் இவ லகு லக்ஷ்மீர்நைவ தான் ஸம்ருணததி

அபிநவமதலேகா ஸ்யாமகண்டஸ்தலானாம்

ந பவதி பிஸந்துர் வாரணம் வாரணானாம்

எல்லோரிடமும் கருணை காட்டும் அறிவாளிகளை

அவமதிக்காதீர்கள். செல்வம் என்பது புல்லுக்குச் சமம். அது கற்றோருக்கு அணைபோட முடியாது; மத நீர்ச் செறிவால்

முகம் கருத்த யானைக ளை    தாமரை மலர்த் தண்டால் கட்டிப்போட யாரே வல்லார்?

 

 

xxx

 

இன்னுமொரு பாடல்

 

अम्भोजिनीवनविहारविलासम् एव
हंसस्य हन्ति नितरां कुपितो विधाता ।
न त्वस्य दुग्धजलभेदविधौ प्रसिद्धां
वैदग्धीकीर्तिम् अपहर्तुम् असौ समर्थः ॥ 1.18 ॥

 

அம்போஜினீவன விஹார விலாஸம் ஏவ

ஹம்ஸஸ்ய ஹந்தி நிதராம் குபிதோ விதாதா

 

ந த்வஸ்ய துக்தஜல பேதவிதௌ ப்ரசித்தாம்

வைதக்தீ கீர்த்திம் அபஹர்தும் அசௌ ஸமர்த்தஹ

பிரம்மாவுக்குக் கோபம் வந்தால் தாமரைத் தடாகத்தில் செல்லும் அன்னப் பறவைகளைத் தடுத்து மகிழ்ச்சியைக் கெடுக்கலாம். ஆனாலும் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் அபூர்வ சக்தியை விதியாலும் மாற்ற முடியாது.

 

XXX

केयूराणि न भूषयन्ति पुरुषं हारा न चन्द्रोज्ज्वला
न स्नानं न विलेपनं न कुसुमं नालङ्कृता मूर्धजाः ।
वाण्येका समलङ्करोति पुरुषं या संस्कृता धार्यते
क्षीयन्ते खलु भूषणानि सततं वाग्भूषणं भूषणम् ॥ 1.19 ॥

 

 

கேயூராணி ந பூஷயந்தி புருஷம் ஹாரா ந சந்த்ரோஜ்வலா

ந் ஸ்நானம்ந விலேபனம் நகுஸுமம் நாளங்ருதா மூர்த்தஜாஹா

வாண்யேகா சமலங் கரோதி புருஷம் யா ஸம்ஸ்க்ருதா தார்யதே

க்ஷீயந்தே கலு பூஷணானி ஸததம் வாக் பூஷணம் பூஷணம்

மனிதனுக்கு அழகூட்டுவது கங்கணமன்று;

நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.

நீர் முழுக்கோ, சந்தனப் பூச்சோ,பூக்களோ, சிகை அலங்காரமோ

ஒருவனுக்கு அழகு அல்ல; பண்பட்ட பேச்சே அழகு தரும்.

ஏனைய எல்லாம் வாடி வதங்கும், உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.

நல்ல பேச்சு உண்மையான அணிகலனாக நிற்கும்.

 

இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்

 

குஞ்சியகுங் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சளழகும் அழகல்ல- நெஞ்சத்து

நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையால்

கல்வியழகே அழகு- நாலடியார்

 

சிகை அலங்காரமோ, கரை போட்ட ஆடை அலங்காரமோ, மஞ்சள் முதலிய அலங்காரப் பூச்சுகளோ அழகல்ல. கல்வி கற்று நடு நிலையில் நிற்பதே அழகு.

 

இணரூழ்த்தும் நாறா மலரணையர் கற்றது

உணர விரித்துரையாதார் – குறள் 650

 

கற்ற விஷயங்களை மற்றவர்களுக்கு விளக்கமுடியாதவர்கள்

மலர்ந்தும் மணம் வீசாத மலர்களைப் போன்றவர்கள்.

 

சொல் அழகு

 

மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)

பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்றமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு

–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)

பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.

சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்

மண்மாண் புனை பாவை அற்று

–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)

XXXX

 

विद्या नाम नरस्य रूपम् अधिकं प्रच्छन्नगुप्तं धनं
विद्या भोगकरी यशःसुखकरी विद्या गुरूणां गुरुः ।
विद्या बन्धुजनो विदेशगमने विद्या परा देवता
विद्या राजसु पूज्यते न तु धनं विद्याविहीनः पशुः ॥ 1.20 ॥

 

வித்யா நாம நரஸ்ய ரூபமதிகம் ப்ரச்சன்னகுப்தம் தனம்

வித்யா போககரீ ய்ஸ்ஹ ஸுககரீவித்யா குரூணாம் க்ருஹு

வித்யாம் ப்ந்துஜனோ விதேச கமனே வித்யா பராதேவதா

வித்யா ராஜஸு பூஜ்யதேந து தனம் வித்யா விஹீனஹ பசுஹு

 

கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;

அவனுடைய ரஹஸிய செல்வம் அது;

வளமும், மகிழ்ச்சியும், புகழும் நல்குவது.

‘குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;

வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்;

கல்வியே உயர்ந்த கடவுள்.

மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லை; ஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு.

 

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்– குறள் 410

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

XXXX SUBHAM XXX

 

 

TAMIL WISDOM- AVVAIYAR’S KONDRAI VENTHAN IN ENGLISH AND TAMIL – PART 2 (Post No.5516)

Compiled by London Swaminathan

 
swami_48@yahoo.com
Date: 7 October 2018

 

Time uploaded in London –14-58 (British Summer Time)

 

Post No. 5516

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

TAMIL WISDOM- AVVAIYAR’S KONDRAI VENTHAN IN ENGLISH AND TAMIL – PART 2 (Post No.5516)

சகர வருக்கம் APHORISMS BEGINNING WITH LETTER ‘SA’

26.IT IS AN ORNAMENT THAT THERE BE NO CASE OF BARRENNESS IN THE FAMILY

  1. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை.

TIRUKKURAL 61

AMONG THE BLESSINGS ONE SHOULD HAVE THERE IS NOE SO GREAT AS HAVING SENSIBLE CHILDREN
XXX

27.THE REPORT THAT WE ARE NOBLE IS AN HONOUR TO OUR PARENTS

  1. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.

XXX

28.CONTROLLING ANGER IS THE BEAUTY OF PENANCE
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.

TIRUKKURAL 309

IF A MAN COULD CHECK THE FEELING OF ANGER IN HIS MIND, HE WOULD GET ALL THAT HE WISHES TO HAVE.

XXX

29.IF YOU SEEK TO LIVE COMFORTABLY, SEEK THE PLOUGH (IF YOU WANT WEALTH ATTEND TO AGRICULTURE)

  1. சீரைத் தேடின் ஏரைத் தேடு.

TIRUKKURAL 1032

AGRICULTURISTS ARE THE AXLE OF THE WORLD; FOR ON THEM REST THEY WHO DO NOT TILL

XXX

30.IT IS DESIRABLE THAT RELATIVES SHOULD LIVE NEAR EACH OTHER
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.

 

TIRUKKURAL 527

LOOK AT HE CROW WHICH SHARES ITS FOOD. ONLY WITH MEN OF SUCH VIRTUE DOES FORTUNE ABIDE

 

XXX

31.GAMBLING AND DISPUTING CAUSE TROUBLE
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.

TIRUKKURAL 931

DO NOT TAKE TO GAMBLING EVEN IF YOU WIN. WHAT CAN THE FISH GAIN BY SWALLOWING THE BAITED HOOK?

 

XXX

32.IF YOU CEASE TO PRACTISE RELIGIOUS AUSTERITIES YOU WILL BE UNDER THE POWER OF ILLUSION
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.

XXX

33.THOUGH YOU ARE IN A PRISON, SLEEP ONLY THREE HOURS

ANOTHER INTERPRETATION- WHEREVER YOU ARE SLEEP AT MIDNIGHT.

EVEN IF YOU ARE UNDER WATCH, SLEEP BY MIDNIGHT OT AT LEAST FOR THREE HOURS.

SEMAM- JAIL, PRISON

YAMAM- MIDNIGHT OR 3 HOURS
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.

XXX

34.IF YOU HAVE WEALTH GIVE ALMS AND THEN EAT
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.

TIRUKKURAL 84

GODDESS OF WEALTH, LAKSHMI, WILL BE PLEASED TO DWELL IN THE HOUSE OF THE MAN WHO ENTERTAINS HIS GUESTS CHEERFULLY

XXX

35.THE PURE MIND WILL ATTAIN THE RIGHT WAY
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.

TIRUKKURAL 294

IF A MAN COULD CONDUCT HIMSELF TRUE TO HIS OWN SELF HE WOULD BE IN THE HEART OF ALL IN THE WORLD

XXX

36.LAZY PEOPLE WILL WANDER IN DISTRESS
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

TIRUKKURAL 605

THESE FOUR ARE PLEASURE BOATS OF LOSS AND RUIN: PROCRASTINATION,FORGETFULNESS, IDLENESS AND DOZING

XXX

தகர வருக்கம் APHORISMS BEGINNING WITH ‘TA’

37.NO ADVICE IS GREATER THAN FATHER’S ADVICE

ANOTHER TRANSLATION- FATHER’S ADVICE IS GREATER THAN ANY OTHER MANTRA (HINDU HYMN/ SPELL)
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

TIRUKKURAL 67

THE DUTY OF A FATHER IS TO MAKE HIS SON THE BEST IN THE ASSEMBLY OF SCHOLARS

XXX

38.NO WORD IS LIKE THAT OF A MOTHER

ANOTHER TRANSLATION- THERE IS NO TEMPLE GREATER THAN MOTHER (MATHER IS MORE WORSHIPFUL THAN GOD)
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.

MATA PITA GURU DEIVAM- VEDIC SCRIPTURE

TIRUKKURAL 69

A MOTHER’S JOY IS MORE WHEN THE WORLD CALLS HER SON WISE THAN AT THE TIME OF HIS BIRTH

 

XXX

39.SEEK WEALTH THOUGH YOU HAVE TO GO OVER THE TOSSING SEA.

ANOTHER TRANSLATION- DONT HESITATE TO GO ABROAD, IF YOU CAN GET MONEY
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

TIRUKKURAL 616

EFFORT WILL PRODUCE WEALTH; IDLENESS WILL BRING POVERTY

XXX

40.IMPLACABLE ANGER WILL END IN FIGHT
40. தீராக் கோபம் போராய் முடியும்.

TIRUKKURAL 303

GREAT HARM MAY BE CAUSED BY ANGER. THEREFORE ONE SHOULD RESTRAIN ANGER TOWARDS ANYBODY.

XXX

41.THE WIFE WHO FEELS NO SYMPATHY FOR HER HUSBAND IS LIKE FIRE HIDDEN IN HIS CLOTHES
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.

XXX

42.THE WIFE SLANDER IN HER HUSBAND IS LIKE YAMA (GOD OF DEATH)
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.

TIRUKKURAL 59

HE WHO DOES NOT POSSES AN IDEAL WIFE, WHO VALUES THE REPUTATION OF CHARITY, CANNOT HOLD HIS HEAD UP AMONG HIS FRIENDS.

XXX

43.WHEN THE GOD IS ANGRY THE PENANCE IS FRUITLESS

(IF YOU MAKE GOD ANGRY BY YOUR BAD BEHAVIOUR,  EVEN GOD CANT HELP YOU)
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.

XXX

44.SQUANDERING WITHOUT GAINING WILL END IN RUIN
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.

 

XXX

45.IN THE MONTHS OF JANUARY AND FEBRUARY SLEEP IN A HUT MADE OF STRAW.

ANOTHER TRANSLATION- IN THE HOT MONTHS, SLEEP ON THE FLOOR.

VAIYAM- STRAW, HAY

VAIYAKAM- EARTH, GROUND,FLOOR

  1. தையும் மாசியும் வைய(க)த்து உறங்கு.

XXX

46.SWEETER IS FOOD OBTAINED BY PLOUGHING THAN BY SERVING
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.

TIRUKKURAL 1033

THEY ALONE LIVE WHO LIVE BY FARMING; THE EST HAVE TO FAWN ON THEM FOR FOOD AND ARE THEIR SLAVES

XXX

47.DISCLOSE NOT YOUR WEAKNESS EVEN TO YOUR FRIEND.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.

 

XXX SUBHAM XXX

 

பார்ப்பனன் மகன் வள்ளுவன் – அரங்கநாத முதலியார் தகவல் (Post No.5513)

Valluvar with Brahmin’s sacred thread;excavated at  Mylapore in Chennai

Compiled by London Swaminathan

 

 
swami_48@yahoo.com
Date: 6 October 2018

 

Time uploaded in London –20-23 (British Summer Time)

 

Post No. 5513

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

பார்ப்பனன் மகன் வள்ளுவன்  – அரங்கநாத முதலியார் தகவல் (Post No.5513)

 

வள்ளுவர் பற்றி சுமார் 200 ஆண்டுகளாக வழங்கி வரும் கதைகள் சுமார் 50 ஆண்டுகள் வரை எல்லாப் புஸ்தகங்களிலும் இடம்பெற்றன. அவற்றை எல்லோரும் அறிவது அவஸியம்.

 

1933ஆம் ஆண்டில் சென்னையில் ஆ.அரங்கநாத முதலியார் வள்ளுவர் குறளை ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1949-ல் வெளியானது. அவர் சொல்லுவதாவது:

 

திருக்குறளாசிரியராகிய தெய்வப் புலமைத் திருவள்ளுவர் பற்றிக் கர்ண பரம்பரையாக வழங்கும் சரித்திரங்கள் பலவுண்டு. அவற்றையும் , மற்றும் பல அறிஞர்கள்  ஆராய்சியில் கண்ட  செய்திகளையும் ஆதாரமாகக்கொண்டு வள்ளுவர் பிறப்பு முதலிய வரலாறுகள் ஈண்டு தொகுத்துக் கூறப்படும்.

 

பிறப்பு

இவர் பகவன் என்ற வேதியர்க்கும்  ஆதி என்பவளுக்கும் பிறந்தவரென்பதும், அவ் ஆதி என்பவள் நீச குலப் பெண் என்பதும், இவருடன் பிறந்தவர்- கபிலர், அதிகமான், ஔவை முதலிய அறுவரென்பதும் கர்ண பரம்பரையாக வழங்கிவரும் பழங்கதையாகும். இவ்வரலாற்றிற்கு கபிலர் அகவல் முதலியன ஆதாரமாம்.

 

ஆயினும்,எழுநூறு, எண்ணூறு  வருடங்களுக்கு முற்பட்ட ஞானாமிர்தமென்னும் சைவ சமய நூல் யாளி தத்தன் என்னும் பார்ப்பனனுக்குப் புலைச்சி யொருத்தியிடம் கபிலர் அதிகமான் அறுவருடன் இவர் பிறந்தவரென்று கூறும். இவ்வெழுவருடைய ஊர்,குலம் முதலியவற்றின் வரலாறுகள் பழைய நூல்களில் வேறாகக் காணப்படுவதலால், மேற்குறித்த கர்ணபரம்பரையின் உண்மை தெளியக் கூடவில்லை என்பது அறிஞர் கருத்து.

குலம்

இவர் பிறந்த குடி, வள்ளுவக்குலம் என்பது பலர் கொள்கை. வள்ளுவராவார் யானை மீது முரசறைந்து

அரசனாணை சாற்றுவோர் ஆவர். இவர்கள் மன்னருக்கு உள்படு கருமத்தலைவராக விளங்கியவரென்பதும், திருநாள், படையெடுப்பு நாள், மணநாள் என்ற இப்பெருநாட்கல்லது பிறநாட்கு அறையாத முரசுடையோரென்பதும் பழைய நூலால் வெளியாகின்றன (பெருங்கதை).இவர் தாழ்ந்த குடியினரென்று சிவ ஞான முனிவரும் குறிப்பிடுவர் (சோமேசமுது மொழிவெண்பா). இவர் நான்முகன் அவதாரமென்பது திருவள்ளுவ மாலை பாடல்கள் பலவற்றால் (4, 28) வெளியாவதால், பார்ப்பன மரபினர் இவர் என்பதும், அரசாங்கத்தில் மன்னரைச் சார்ந்தொழுகி இராஜகாரிய துரந்தரராய் விளங்கினவரென்பதும் ஒரு சிலர் கொள்கை. இக்கொள்கைப்படி வள்ளுவர் என்பது கருமாத்யக்ஷர் என்னும் பொருளுடைய வல்லபர் என்னும் வடமொழியின் சிதைவாகும்.

 

‘இராஜசேகரரான வள்ளுவரும் கூடிச் செய்த கச்சம்’ (SII VOL.No.775) பாண்டியன் ஸ்ரீவல்லுவன் (E P REPORT 46 0F 1907) என்னும் சாஸனத் தொடர்களில் வல்லபர் என்பது வல்லுவர், வள்ளுவர் என்று திரிந்து வரும் முறையையும், சேரன் படைத்தலைவனொருவனுக்கு நாஞ்சில் வள்ளுவன் என்ற பெயர் வழக்குள்ளதையும் இதற்கு ஆதாரமாகக் காட்டுவர் ( VIDE தமிழர் நேசன் VOL.10 P.6-10).

எவ்வாறாயினும் அரசாங்க விஷயங்களில் ஆழந்தவறிவும் அனுபவமும் பெற்றுத் தாம் பிறந்த குலத்துள் அரசர் யாவருமுச்சிமேற்கொண்டு போற்றர்க்குரிய உயர் குடியிலவதரித்தவர் நம்புலவர் பெருமான் என்பதிற் சிறிதும் ஐயமில்லை.

 

பெயர்

திருவள்ளுவர் என்னும் பிரசித்தமான பெயரேயன்றித் தேவர், முதற் பாவலர், பொய்யில் புலவர், தெய்வப் புலவர், செந்நாப்போதார், பெருநாவலர் என்னும் பல பெயர்களும் இவர்க்கு வழங்கி வந்தன வென்பது திருவள்ளுவ மாலை முதலியவற்றால் விளங்குகிறது.

மனைவியார்

திருவள்ளுவர்க்குக் கற்புடை மனைவியாக விளங்கிய மனைவியின் பெயர் வாசுகி என்று கூறுவர். இவள் பெயர் மாதாநுபங்கி என்பது திருவள்ளுவமாலைப் பாடலினின்றும் ஊகிக்கலாகும். மாதாநுபங்கி என்பது தாயை நிகராகக்கொண்டு நடக்கின்ற ஒழுங்கினள் என்னும் பொருளுடையதாம்.  (திருக்குறள், மு.இராகவையங்கார் பதிப்பு, முகவுரை பக்கம் 4-5 கீழ்க்குறிப்பு)

 

(இதைத் தொடர்ந்து வள்ளுவரின் ஊர், மதம், காலம், குறளின் அமைப்பு பற்றி அரங்கநாத முதலியார் விளக்குகிறார்).

 

என் கருத்து

வள்ளுவரின் முதல் குறளிலேயே ஆதி  பகவன் என்று தாய் தந்தை பெயரைக் குறிப்பிடுகிறார்.

ஜி.யூ. போப், பாப்ளி போன்றோரு வள்ளவரின் ஜாதி கீழ் ஜாதி என்று குறிப்பிடுகின்றனர்.

மனைவியின் பெயர் வாசுகி , மாதாநுபங்கி என்பன சம்ஸ்க்ருதப் பெயர்களே.

குறளின் பழைய சம்ஸ்க்ருத மொழி பெயர்ப்பில் அவர் பெயர் வல்லபாசார்யார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

-சுபம்-

TAMIL WISDOM- AVVAIYAR’S KONDRAI VENTHAN IN ENGLISH AND TAMIL – PART 1 (Post No.5511)

Compiled by London Swaminathan

 
swami_48@yahoo.com
Date: 6 October 2018

 

Time uploaded in London –13-31 (British Summer Time)

 

Post No. 5511

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

TAMIL WISDOM- AVVAIYAR’S KONDRAI VENTHAN IN ENGLISH AND TAMIL – PART 1 (Post No.5511)

 

(FOR THE PROFILE OF TAMIL POETESS AVVAIYAR, PLEASE SEE MY EARLIER POST ATHICHUDI OF AVVAIYAR IN ENGLISH AND TAMIL)

TAMIL VERSION IS TAKEN FROM PROJECT MADURAI OF M KALYANASUNDRAM.

PRAYER
கடவுள் வாழ்த்து 

 

LET US WORSHIP AND PRAISE CONTINUALLY THE FEET OF THE LORD WHO WEARS THE GARLAND OF FLOWERS FROM THE CASSIA (KONDRAI) TREE.

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம் VOWELS OF TAMIL LANGUAGE

1.OUR MOTHER AND FATHER ARE THE FIRST KNOWN GODS/DIVINITIES
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

XXX

2.TO WORSHIP IN A TEMPLE IS EXTREMELY GOOD
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

XXX

3.THAT WHICH IS NOT DOMESTIC LIFE /FAMILY LIFE IS NOT PROPER VIRTUE
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.

XXX

4.WHAT MISERS HAVE HOARDED THE WICKED WILL TAKE

  1. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.

XXX

5.MODERATION IN FOOD IS AN ORNAMENT FOR WOMEN
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

XXX

6.HATRED TOWARDS PEOPLE OF THE TOWN WILL BRING COMPLETE RUIN
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

XXX

7.NUMBERS AND LETTERS (NUMERACY AND LITERACY) ARE TWO EYES
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.

XXX

8.CHILDREN WHO DO NOT REQUIRE TO BE DIRECTED (BY THEIR PARENTS) ARE LIKE AMBROSIA
8. ஏவா மக்கள் மூவா மருந்து.

XXX

9.THOUGH YOU ARE REDUCED TO BEGGARY, DO YOUR DUTY
9. ஐயம் புகினும் செய்வன செய்.

BHAGAVAD GITA:- YOUR RIGHT IS TO WORK ONLY, NEVER TO ITS FRUITS (BG 2-47)

BETTER IS ONE’S OWN  DUTY (BG 3-35)

XXX

10.RELY ON ONE MAN AND STAY IN ONE PLACE (DONT HAVE WAVERING MIND)
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.

TIRUKKURAL 510-TO TRUST A MAN WITHOUT A TEST AND SUSPECT A MAN AFTER HE HAS PASSED THE TEST WILL CAUSE ENDLESS MISERY

XXX

11.VIRTUOUS CONDUCT IN A BRAHMIN IS BETTER THAN THE RECITATION OF THE VEDAS
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.

TIRUKKURAL 134-IF A BRAHMIN FORGETS VEDAS HE MAY REACQUIRE IT. BUT IF HE LOSES HIS CHARACTER HE SLIPS DOWN IN HIS RANK OF BIRTH

XXX

12.ENVIOUS TALK BRINGS DESTRUCTION TO ONE’S WEALTH
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.

XXX

13.CAREFULLY ACQUIRE GRAIN AND MONEY
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.

TAMIL PROVERB- GO BEYOND THE SEAS TO GET WEALTH

XXX

ககர வருக்கம் 

14.IT IS CONSIDERED CHASTITY/ GOOD VIRTUE IN A WIFE NOT TO DISOBEY HER HUSBAND
14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.

TIRUKKURAL 54-

WHAT POSSESSION OF GREATER VIRTUE CAN ONE HAVE THAN A WIFE, IF SHE BE FIRM IN HER IN HER LOYALTY TO HER PARTNER IN LIFE?

TIRUKKURAL 55-

A WIFE WHO MAY NOT WORSHIP GOD BUT WAKES UP WITH WORSHIPFUL DEVOTION TO HER HUSBAND HAS THE POWER TO MAKE RAIN FALL AT HER BIDDING

 

XXX

15.THE PRESERVATION OF HER CHASTITY IS THE ORNAMENT OF A WOMAN
15. காவல்தானே பாவையர்க்கு அழகு.

TIRUKKURAL 57-

OF WHAT USE ARE PRISON WALLS TO PROTECT A WOMAN’S VIRTUE? THE WOMAN’S POSSESSION OF A FIRM MIND IS HER BEST POSSESSION.

XXX

16.RENOUNCE AT ONCE WHAT IS DIFFICULT TO GET
16. கிட்டாதாயின் வெட்டென மற.

XXX

17.SPEAK GENTLY EVEN TO INFERIORS
17. கீழோர் ஆயினும் தாழ உரை.

TIRUKKURAL 100

USING HARSH WORDS, WHEN PLEASING WORDS ARE AVAILABLE, ISS LIKE GREEN FRUITS WHILE THERE ARE RIPE ONES.

MANU 4-138

A MAN SHOULD TELL THE TRUTH AND SPEAK WITH KINDNESS; HE SHOULD NOT TELL TE TRUTH UNKINDLY NOR UTTER LIES OUT OF KINDNESS.

XXX

18.IF YOU ARE CENSORIOUS,YOU WILL GAIN NO FRIENDS (IF YOU FIND FAULT WITH EVERYONE AND EVERYTHING, YOU LOSE ALL YOUR FRIENDS AND RELATIVES)
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.

TIRUKKURAL 189

EVEN THE EARTH GROANS UNDER THE WEIGHT OF THE MAN WHO SLANDERS AT THEIR BACK.

TIRUKKURAL 190

IF A MAN CAN LOOK UPON OTHERS’ FAULTS AS HIS OWN WHAT EVIL CAN BEFALL HIM

 

XXX

19.THOUGH YOUR ARROW IS SHARP, DON’T BOAST OF YOUR VALOUR
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.

TIRUKKURAL 439

NEVER EXTOL YOURSELF IN ANY MOOD NOR DO ANY ACT THAT IS GOOD FOR NOTHING

XXX

20.IF YOUR FRIEND BEHAVE BADLY, IT IS YOUR DUTY TO ABANDON HIM
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.

TIRUKKURAL 815

IT IS BETTER TO LEAVE THAN HAVE THE FRIENDSHIP OF THE MEAN, LOW-MINDED PEOPLE THAT ARE USELESS AND UNHELPFUL

TIRUKKURAL 817

IT IS BETTER TEN FOLD TO HAVE OPEN ENEMIES THAN GIGGLING FRIENDS WHO BETRAY YOU.

XXX

  1. COURAGE IN ADVERSITY RECOVERS LOST PROPERTY
    21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.

TIRUKKURAL 622

WHEN ADVERSITY ADVANCES LIKE A FLOOD, IT VANISHES WITH A THOUGHT IN TH MIND OF THE MAN THAT IS WISE.

XXX

22.LEARNING IS BETTER THAN MONEY
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.

TIRUKKURAL 400

LEARNING IS THE LASTING JOYFUL WEALTH; ALL OTHER MATERIAL WEALTH ARE LOST IN TIME

XXX

23.ACQUAINTANCE WITH THE KING IS A GREAT HELP IN TIME OF TROUBLE
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.

XXX

24.SCANDAL IN THE EAR OF A SCANDAL MONGER IS WIND TO FIRE
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.

TIRUKKURAL 1076

THE MEAN ARE LIKE THE DRUM THAT IS BEATEN, FOR THEY HEAR SECRETS AND BETRAY THEM.

 

THE MEAN ARE LIKE THE DRUM

XXX

25.SPEAK OF FAULTS AND BE HATEFUL TO ALL
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

TIRUKKURAL  191

ONE WHO SPEAKS USELESS WORDS THAT OTHERS DISLIKE IS DESPISED BY ALL.

TO BE CONTINUED……..

XXX SUBHAM XXX

 

 

கம்பன் – சோழன் மோதல் கதைகள் (Post No.5505)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 4 October 2018

 

Time uploaded in London –8-55 am  (British Summer Time)

 

Post No. 5505

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

முட்டாள்தனத்துக்கு மருந்தே இல்லை; பர்த்ருஹரி, வள்ளுவர் உடன்பாடு (Post No.5505)

 

பர்த்ருஹரி எழுதிய 300 ஸம்ஸ்க்ருதப் பாடல்களில் 100 பாடல்கள் நீதி சதகத்தில் இருக்கின்றன. பாடல் 11, 12, 13, 14, 15 ஆகியவற்றின் பொருள் உணர்ந்து தெளிவு பெறுவோம்.

 

மூர்க்கன் என்றால் தமிழில் முரட்டுப் பயல், ரௌடி என்று நினைப்போம். ஆனால் ஸம்ஸ்க்ருதத்தில் மூர்க்கன் என்றால் முட்டாள் என்று பொருள்;  உண்மைதான்

 

மூர்க்கர்கள் முட்டாள்கள்;

முட்டாள்கள் மூர்க்கர்கள்.

 

பர்த்ருஹரி சொல்கிறார்—
शक्यो वारयितुं जलेन हुतभुक्च्छत्रेण सूर्यातपो
नागेन्द्रो निशिताग्कुशेन समदो दण्डेन गोगर्दभौ ।
व्याधिर्भेषजसङ्ग्रहैश्च विविधैर्मन्त्रप्रयोगैर्विषं
सर्वस्यौषधम् अस्ति शास्त्रविहितं मूर्खस्य नस्त्यौषधिम् ॥ 1.11 ॥

 

சக்யோ வாரயிதும் ஜலேன ஹுதபுக் ச்சத்ரேண சூர்யாதபோ

நாகேந்த்ரோ நிசிதாங்குசேனஸம்தா தண்டேன கோ கர்தபௌ

வ்யாதிர் பேஷஜ ஸங்க்ரஹைர்ஸ்ச விவிதைர் மந்த்ரப் ப்ரயோகைர் விஷம்

ஸர்வஸ்யௌஷதம் அஸ்தி சாஸ்த்ரவிஹிதம் மூர்க்கஸ்ய

நஸ்த்யௌஷதிம் 1-11

 

பொருள்

நெருப்பை நீரால் அணைக்கலாம்;

சூரிய ஒளியை குடையால் மறைக்கலாம்;

அங்குசத்தால் யானையை அடக்கலாம்;

மாடு, கழுதையை குச்சியால் அடக்கலாம்;

நோய்களை மருந்தால் தீர்க்கலாம்;

விஷக்கடிகளை மந்திரம் மூலம் நீக்கலாம்;

இவை எல்லாவற்ரையும் நூல்கள் செப்புகின்றன.

ஆனால் முட்டாள்தனத்துக்கு மருந்தே இல்லை.

2000 ஆண்டு பழமையான சங்கத் தமிழ் நூல் உரைப்பது என்ன?

நன்னன் என்ற மன்னனின் அரண்மனைத் தோட்டத்தில் கீழே விழுந்த மாம்பழத்தை எடுத்த சிறுமிக்கு மரண தண்டனை விதித்தான் நன்னன். ஊரே கெஞ்சியது- மன்னித்து விடப்பா என்று. ஆயினும் அவன் இணங்க வில்லை. எடைக்கு எடை தங்கக் கட்டிகளைத் துலா பாரம் தருகிறோம் என்றனர். அப்போதும் கேட்கவில்லை முட்டாள் நன்னன்; மூர்க்கன் நன்னன்; உன்னை எங்கள் தலை முறை இனி பாடாது; உன் தலை முறையில் வருவோரையும் பாடோம் என்று சபதம் செய்தனர் தமிழ்ப் புலவர்கள்.

 

400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மொகலாய மன்னன் அவுரங்க சீப் முரடன், வெறியன். இசை, கலைகள் எதுவுமே பிடிக்காது. அக்பருக்கு நேர் மாறானவன்.

 

இதோ இன்னும் ஒரு பாடல்:

 

 

साहित्यसङ्गीतकलाविहीनः
साक्षात्पशुः पुच्छविषाणहीनः ।
तृणं न खादन्नपि जीवमानस्
तद्भागधेयं परमं पशूनाम् ॥ 1.12 ॥

இலக்கியத்தையும் இசையையும் விரும்பாதவன் மிருகம்தான்;

அவனுக்கு கொம்பும் வாலும் இல்லை;

புல்லைத் தின்னாவிட்டாலும் அவனுக்கும் மாட்டுக்கும்

வித்தியாசம் இல்லை

xxx

 

येषां न विद्या न तपो न दानं
ज्ञानं न शीलं न गुणो न धर्मः ।
ते मर्त्यलोके भुवि भारभूता
मनुष्यरूपेण मृगाश्चरन्ति ॥ 1.13 ॥

 

யேஷாம் ந வித்யா ந தபோ ந தானம்

ஞானம் ந சீலம் ந குணோ ந தர்மஹ

தே மர்த்யலோகே புவிபார பூதா

மனுஷ்ய ரூபேண ம்ருகாஸ் சரந்தி

தவமோ தானமோ இல்லாமல்

கல்வியோ ஞானமோ இல்லாமல்

குணமும் ஒழுக்கமும் இல்லாமல்

வாழ்பவர்களின் உருவம் வேண்டுமானால்

மனிதன் போல இருக்கலாம்;

ஆனால் அவர்கள் மனித ரூபத்தில் உலவும் மாடுகளே.

 

வள்ளுவனும் பர்த்ருஹரியும் ஒரே பார்வையுடையவர்கள்:-

 

 

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர் – குறள் 410

 

நல்ல நூல்களைக் கற்று விவேகம் அடைந்தோர் மக்கள்;

அவைகளைக் கல்லாதவர் விலங்குகள்.

 

உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாஸனை போஜ மன்னன் மதிக்காதபோது அவன் நாட்டைவிட்டு வெளியேறினான். பின்னர் போஜ மன்னன் சிரமப்பட்டு அவனைத் தேடிக் கண்டுபிடித்து நாட்டிற்கு அழைத்து வந்தான்.

கம்பன் பாடுகிறான்

கம்பனுக்கும் சோழ மன்னனுக்கும் நடந்த சண்டை சச்சரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

 

கம்பனின் மகனான அம்பிகாபதியை, சோழ மன்னன் கொன்றவுடன்

கம்பன் பாடினான்,

 

மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?

உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்? – என்னை

விரைந்து ஏற்றுக் கொள்ளாத வேந்து உண்டோ? சோழா

குரங்கு ஏற்றுக் கொள்ளாத கொம்பு.

 

இந்த உலகில் நீ ஒருவன்தான் மன்னனா?

உன் நாடு மட்டும்தான் வளமையான நாடு என்று எண்ணுகிறாயா?

உன்னை நம்பித்தான் நான் தமிழ் கற்றேனா?

என்னை ஏற்றுக் கொள்ளாத நாடு உண்டா?

குரங்கை ஏற்றுக் கொள்ளாத மரக்கிளை உண்டா? (இல்லை)

 

xxx

वरं पर्वतदुर्गेषु
भ्रान्तं वनचरैः सह
न मूर्खजनसम्पर्कः
सुरेन्द्रभवनेष्वपि ॥ 1.14 ॥

வரம் பர்வத துர்கேஷு

ப்ராந்தம் வனசரை ஸஹ

ந மூர்க்க ஜன ஸம்பர்க்கஹ

ஸுரேந்த்ர பவனேஸ்வபி

 

பொருள்

முட்டாள்களுடன் மன்னனின் அரண்மனையில் வாழ்வதைவிட

காடுகளில் குகைகளில் வன விலங்குகளுடன் வாழ்வதே மேல்.

 

 

கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற்

கடும்புலி வாழும் காடு நன்றே- வெற்றி வேற்கை

 

xxx

शास्त्रोपस्कृतशब्दसुन्दरगिरः शिष्यप्रदेयागमा
विख्याताः कवयो वसन्ति विषये यस्य प्रभोर्निर्धनाः ।

तज्जाड्यं वसुधादिपस्य कवयस्त्वर्थं विनापीश्वराः
कुत्स्याः स्युः कुपरीक्षका हि मणयो यैरर्घतः पातिताः ॥ 1.15 ॥

 

சாஸ்த்ரோபஸ்க்ருத சப்த ஸுந்தர கிரஹ சிஷ்யப்ரதேயாகமா

விக்யாதா ஹா கவயோ வசந்தி விஷயே யஸ்யப்ரபோநிர்தனாஹா

தஜ்ஜாட்யம் வஸுதாதிபஸ்ய கவயஸ்வர்தம் விநாபீஸ்வராஹா

குத்ஸ்யாஹா ஸ்யுஹு குபரீக்ஷகா ஹி மணயோ யைரர்கதஹ பதிதாஹா

 

 

பொருள்

சீடர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், புகழ்மிகு கற்றோரும் கவிஞர்களும் ஒரு நாட்டில் வறுமையில் வாடினால், ஏழ்மையில் உழன்றால்,

அந்த நாட்டு மன்னனே முட்டாள், உணர்ச்சியற்ற ஜடம்தான்;

பணமே இல்லாத போதும் கற்றோரும் அறிவாளிகளும் பெரியோரே, புகழுடையோரே. திறமையற்ற ஒருவன் ரத்தினக் கல்லுக்கு மட்டமாக விலையை மதிப்பிட்டால் அது ரத்தினத்தின்   பிழையன்று; பொற்கொல்லனின் பிழையே!

 

கம்பன் பாடுகிறான்

காதம் இருபத்து நான்கு ஒழியக் காசினியை

ஓதக் கடல் கொண்டு ஒளித்ததோ?– மேதினியில்

கொல்லிமலைத் தேன் சொரியும் கொற்றவா! நீ முனிந்தால்

இல்லையோ எங்கட்கு இடம்?

 

உலகத்தின் சுற்றளவு 25,000 மைல்; உன் சோழ நாடோ 240 மைல்தான் (காதம்= 10 மைல்); மற்ற நாடுகள் எல்லாம் சுனாமி யில் மூழ்கி விட்டது என்று நினைத்தாயா; சோழ நாட்டில் தேன் சொட்டும் கொல்லி மலையை ஆளும் அரசே (மூடா) ! நீ கோபப் பட்டால்  எனக்குப்  போவதற்கு இடமே இல்லையா?

 

ஆக கவிஞர்கள் யாருக்கும் அஞ்சாத தீரர்கள். ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்’ போன்றவர்கள்; மூடர்களையோ மூர்க்கர்களையோ ஏற்க மாட்டார்கள்.

 

வள்ளுவனும் பர்த்ருஹரியும் ஒரே பார்வையுடையவர்கள்:-

 

 

குறள் 834, 835

 

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்- 834

 

நூல்களைக் கற்றும், அதிலுள்ள விஷயங்களை அறிந்தும், அதைப் பிறருக்கு எடுத்துரைத்தும் தான் மட்டும் பின்பற்றாத  முட்டாள் போல வேறு முட்டாள் உலகில் இல்லை.

 

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான் புக்கழுந்தும் அளறு-835

 

ஏழு பிறவிகளில் செய்யும் தவறுகளைச் செய்தால் கிடைக்கும் நரகத்தை, முட்டாளானவன் ஒரு பிறவியிலேயே செய்ய வல்லவன்.

 

–சுபம்–

திருவள்ளுவர் மனைவி பெயர் என்ன? (Post No.5492)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 September 2018

 

Time uploaded in London – 16-54 (British Summer Time)

 

Post No. 5492

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

திருவள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் அவருடைய பதிவ்ரதா தர்மத்தினால் கிணற்று நீர்க்குவளை கூட அந்தரத்தில் நின்றது என்றும் பல கதைகளைப் படித்திருக்கிறோம். ஆனால் அவருடைய இயற்பெயர் வாசுகி  என்றும் சிறப்புப்பெயர் பெயர் மாதானுபங்கி என்றும் ஆதாரத்துடன் நிரூபிக்கிறார் தமிழ் பேரறிஞர் மு. இராகவையங்கார்.

ஏறத்தாழ ஐந்து, ஆறு நூற்றாண்டுகளில்  எல்லா பெண்கள் பெயரும் ஸம்ஸ்க்ருதத்திலேயே இருந்தன.

 

காரைக்கால் அம்மையாரின் பெயர்- புனிதவதி

அப்பர் பெருமானின் சஹோதரி பெயர்- திலகவதி

வள்ளுவர் மனைவியின் பெயர்- வாசுகி

 

இப்போழுது அவர் பெயர் வாசுகி ஒன்று மட்டும் அல்ல மாதானுபங்கி என்றும்  அறிகிறோம்.

 

கீழேயுள்ள இணைப்பில் விவரம் காண்க:–

 

 

 

 

 

 

 

–subham–

 

 

முட்டாள்கள் பற்றி வள்ளுவன், பர்த்ருஹரி- ஒரு குட்டிக் கதை (Post No.5453)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 21  September 2018

 

Time uploaded in London – 8-49 am (British Summer Time)

 

Post No. 5453

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

முட்டாள்கள் பற்றி வள்ளுவன், பர்த்ருஹரி- ஒரு குட்டிக் கதை (Post No.5453)

 

வள்ளுவன் 1330 அருங் குறள்களை யாத்தான்;பர்த்ருஹரி 300 பாக்களில் வரிக்கு வரி குறள் போலவே பேசுகிறார். பஞ்சதந்திரம் இயற்றிய பிராஹ்மணன் விஷ்ணுசர்மனோவெனில் கதைக்குள் பொன் மொழிகளைப் பொழிகிறார். நாம் எல்லோரும் பஞ்சதந்திரம் என்றால், ஏதோ மிட்டாய் சாக்லெட் சாப்பிடும் சின்னப் பயல்களுகான கதை என்று நினைப்போம். ஆனால் அதில் திருக்குறளையும் பர்த்ருஹரியையும் விடக் கூடுதல் அறிவுரை உளது. நிற்க.

 

பர்த்ருஹரியின் நீதி சதகத்தில் என்ன செப்பினார்?

 

प्रसह्य मणिम् उद्धरेन्मकरवक्त्रदंष्ट्रान्तरात्
समुद्रम् अपि सन्तरेत्प्रचलदूर्मिमालाकुलम् ।
भुजङ्गम् अपि कोपितं शिरसि पुष्पवद्धारयेत्
न तु प्रतिनिविष्टमू‌ऋखजनचित्तम् आराधयेथ् ॥ 1.4 ॥

 

ப்ரசஹ்ய மணிம் உத்தரேத் மகர வக்த்ர தம்ஷ்ட்ராந்தராத்

ஸமுத்ரமபி ஸந்தரேத் ப்ரசலதூர்மி மாலாகுலம்

புஜங்கம் அபி கோபிதம் சிரஸி புஷ்பவததாரயேத்

ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க்ருகஜனசித்தம் ஆராதயேத் -1-4

 

 

ஒரு முதலையின் வாயிலிருந்து ஒரு ரத்தினத்தை எடுத்துவிடலாம்,

ஒருவன் ஸமுத்திரத்தைக் கூட நீந்திக் கடந்துவிடலாம்,

ஒரு பூவை அணிவது போல ஒரு பாம்பைக்கூட தலையில் சூடலாம்,

ஆனால் பிடிவாதமான முட்டாளின் மனதை மாற்ற முடியாது 1-4

 

लभेत सिकतासु तैलम् अपि यत्नतः पीडयन्
पिबेच्च मृगतृष्णिकासु सलिलं पिपासार्दितः ।
क्वचिदपि पर्यटन्शशविषाणम् आसादयेत्
न तु प्रतिनिविष्टमूर्खचित्तम् आराधयेथ् ॥ 1.5 ॥

 

 

லபேத் ஸிகதாசு தைலம் அபி யத்னதஹ பீடயன்

பிபேஸ்ச ம்ருக த்ருஷ்ணிகாஸு ஸலிலம் பிபாஸார்திதஹ

க்வசிதபி பர்யதந் சசவிஷாணம் ஆஸாதயேத்

ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க்கசித்தம் ஆராதயேத் -1-5

 

 

மணலைக் கடைந்து எண்ணை எடுத்துவிடலாம்,

கானல் நீரிலிருந்து குடித்து தாகத்தைத் தீர்த்து விடலாம்

காட்டில் முயல் கொம்பைக் கூடக்கண்டு எடுத்து விடலாம்,

ஆனால் ஒரு முட்டாளின் மனதை மாற்ற முடியாது 1-5

 

 

 

व्यालं बालमृणालतन्तुभिरसौ रोद्धुं समुज्जृम्भते
छेत्तुं वज्रमणिं शिरीषकुसुमप्रान्तेन सन्नह्यति ।
माधुर्यं मधुबिन्दुना रचयितुं क्षारामुधेरीहते
नेतुं वाञ्छन्ति यः खलान्पथि सतां सूक्तैः सुधास्यन्दिभिः ॥ 1.6 ॥

 

 

வ்யாலம் பால ம்ருணால தந்து பிரஸௌ ரோததும் ஸமுஜ்ரும்பதே

சேதும் வஜ்ரமணிம் சிரீஷ குஸுமப்ராந்தேன ஸன்னஹயதி

மாதுர்யம் மதுபிந்துனா ரசயிதும்  க்ஷாராமுதேரீஹதே

நேதும் வாஞ்சயந்தி யஹ கலான்பதி ஸதாம் ஸூக்தைஹி

ஸுதாஸ்யந்திபிஹி 1-6

 

முட்டாளுக்கு வலியப் போய் நல்ல வார்த்தை சொல்லி மாற்றிவிட முயலுவோர்

தாமரை மலர்த் தண்டுகளால் ஒரு யானையைக் கட்டிப்போட நினைப்பவரே,

சீரிஷ/அனிச்ச மலரின் காம்பை வைத்து வைரத்தைத் துளை போட நினைப்பவரே

ஒரு சொட்டுத் தேன் துளி விட்டு கடலின் உப்புத்தன்மையை நீக்க விரும்புபவரே (ஆவர்)- 1-6

 

முட்டாள்கள் பற்றி வள்ளுவர் சுமார் 20 குறள்களில் கொட்டித் தீர்த்துவிட்டார்,

 

 

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கையொன்று உடைமை பெறின் (குறள் 838)

 

முட்டாள் கையில் ஒரு பொருள் கிடைத்து விட்டால் ஏற்கனவே பைத்தியம் பிடித்த ஒருவன் கள்ளையும் குடித்துவிட்டால் என்ன ஆகுமோ அப்படி ஆட்டம் போடுவான்.

 

குரங்கு கையில் பூமாலை, அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிப்பான்,

இஞ்சி தின்ன குரங்கு போல- பழமொழிகள் நம் நினைவுக்கு வரும்.

 

 

 

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன்று இல் (குறள் 839)

முட்டாளுடன் தொடர்பு கொள்வதும் இனிதே; ஏனெனில் அவன் பிரிந்து செல்லும்போது கொஞ்சமும் வருந்தமாட்டோம்.

 

போனான்டா சனியன் என்று கொண்டாடுவோம்

 

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய் – குறள் 848

 

சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் கற்க மாட்டான்; அவன் சாகும் வரைக்கும் நம்மைப் பிடித்த நோய் போன்றவன்

 

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தன்கண்டவாறு –  குறள் 849

 

முட்டாளுக்குக் கற்பிக்கப் போனவன் முட்டாள் ஆகிவிடுவான்; முட்டாளோ பிறர் சொல்லுவதைக் கேட்காமல் அறிவாளிபோலத் தோன்றுவான்.

 

அவன் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வாதிடுவான்.

இதற்கு பஞ்ச தந்திரம் எழுதிய விஷ்ணு ஸர்மா ஒரு நல்ல கதை சொல்லுவார்.

ஒரு காட்டில் குளிர்காலம் வந்தது; குரங்குகள் வாடைக் காற்றில் வாடின. மாலை நேரம் வந்தது; அப்பொழுது மின்மினிப் பூச்சிகள் ‘பளிச் பளிச்’ சென்று ஒளி உமிழ்ந்து பறந்தன. ஒரு குரங்குக்கு நல்ல யோஜனை பிறந்தது. ஒரு மின்மினிப் பூச்சியைப் பிடித்து, காய்ந்த இலை, சருகுகளுக்கு அடியில் வைத்து தீ எரிவதாகக் கற்பனை செய்து கொண்டு கை,கால்களைத் தடவி சூடு உண்டாக்கின. குளிரால் மிகவும் வாடிய ஒரு குண்டுக் குரங்கு வாயால் ஊதி மேலும் தீயை எழுப்ப முயன்றது. இதையெல்லாம் மரத்தின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்த தூக்கணங் குருவிக்கு ஒரே சிரிப்பு. இந்த முட்டாள் குரங்குகளுக்கு கொஞ்சம் நல்ல வார்த்தை சொல்லுவோம் என்று மரத்தின் மேலிருந்து சொன்னது:

 

ஓ, குரங்குகளே! அது தீப்பொறி அன்று; வெறும் பூச்சிதான்; அதனால் தீ உண்டாகாது- என்று.

 

குரங்குகளோ இதை செவிமடுக்கவில்லை. அது அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று.

 

 

குருவிக்கு வருத்தம்; கொஞ்சம் நன்றாகக் காதில் ஓதுவோம் என்று பறந்து வந்து ஒரு குரங்கின் காதில் முன் சொன்னதை ஓதியது. கோபம் அடைந்த அந்தக் குரங்கு குருவியைப் பிடித்து, ஒரு பாறையில் மோதிக் கொன்றது.

 

இது போலப் பஞ்சதந்திரக் கதைகளில் நிறைய கதைகள் முட்டாளின் சிறுமைதனைப் பேசும்.

விஷ்ணு ஸர்மா சொல்கிறார்,

பெரியதொரு மரத்தை வாளால் வெட்டமுடியாது;

பெரியதொரு பாறையை வாளால் பிளக்கமுடியாது;

குருவியின் புத்திமதி, வாழ்க்கையை எளிதானது

என்ற கொள்கையுடைய குரங்குகளுக்குப் பயன் தராது;

 

மேலும் ஒரு ஸ்லாகத்தில் சொல்கிறார்,

தகுதியற்றவனுக்குச் சொல்லும் புத்திமதி

வீட்டில் ஏற்றிய ஒளிமிக்க விளக்கை

குடத்திலிட்டு மூடி வைப்பதை ஒக்கும்

 

இவ்வாறு ஒவ்வொரு கதையின் துவக்கத்திலும் இடையிலும் முடிவிலும் விஷ்ணுஸர்மா பாடிக்கொண்டே கதை சொல்லுவார்.

 

–சுபம்–