முட்டாள் பார்த்த கீதையின் மறு பக்கம்! (Post no.5845)

Written by S Nagarajan


Date: 28 DECEMBER 2018


GMT Time uploaded in London – 6-45 am


Post No. 5845

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நாட்டு நடப்பு – கீதை காட்டும் பாதை

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை! முட்டாள் பார்த்த கீதையின் மறு பக்கம்!

ச.நாகராஜன்

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

ஆற்றில் வெள்ளம் அடித்துக் கொண்டு போனாலும் நாய் நக்கித் தான் குடிக்கும்;

நாயாவது நல்ல தண்ணீரைச் சிறிதாவது வெள்ளத்திலிருந்து எடுத்து நக்கிப் பருகுகிறது!

ஆனால் கழுதை! அதற்கு என்ன தெரியும்? கற்பூர வாசனை தெரியாது; ‘காள் காள்’ என்று தான் கத்தும்.

அதே போலத் தான் முதல் பக்கமே பார்க்கத் தெரியாத முட்டாள் கீதையின் மறுபக்கம் பார்த்தானாம்!

சிரிப்புத் தான் வருகிறது. குருடனுக்கு முதல் பக்கமாக இருந்தால் என்ன, மறுபக்கமாக இருந்தால் என்ன, ஒன்றும் தெரியாது.

ஆனால் இந்த முட்டாளைக் குறை கூறி என்ன பிரயோஜனம்? இவன் வந்த வழி அப்படி!

இவனது தலைவன் உலகம் வணங்கும் லோக மாதா சீதா தேவியைப் பார்த்த பார்வை எப்படித் தெரியுமா?

மற்ற கோடானு கோடி பேர்கள் அன்னையின் பாதங்கள் இரண்டை மட்டும் பார்த்து வணங்குவோம்.

ஆனால் தலைவனோ கழுத்துக்குக் கீழேயும், இடுப்புக்குக் கீழேயும் பார்த்தான்.

கோணல் பார்வை! ராக்ஷஸ பிறப்பு! வம்ச தோஷம்!

அதே போல கீதையின் மறுபக்கத்தை இவன் பார்த்து விட்டானாம்!

சரி, போகட்டும் விடுங்கள். குருடன் ராஜமுழி முழித்தால் தான் நமக்கென்ன?

அவன் யார் என்கிறீர்களா? 1967க்குப் பின் தமிழக நூலகங்களில் படிக்குச் சரி பாதி அதாவது ஐம்பது சதவிகிதம் குப்பை நூல்கள் பெருகி உள்ளன அல்லவா,

அதில் ஒன்று தான் இந்தக் குருடன் பார்வையில் விளைந்த புத்தகம்.

அவனுக்கு என் மூலம் விளம்பரம் வேறு ஒரு கேடா?

நல்லதைப் பற்றிப் பேசுவோம்.

*



கீதையை நன்கு புரிந்து கொள்ள விரும்பினாள் ஒரு மஹாராணி.

எத்தனை ஸ்லோகங்கள் என்று கீதையில் பாண்டித்யமுள்ள ஒரு பண்டிதரை வரவழைத்துக் கேட்டாள்.

எழுநூறு ஸ்லோகங்கள் என்றார் அவர்.

தனாதிகாரியை வரவழைத்த மஹாராணி, “700

பொற்காசுகளைத் தயார் செய்யுங்கள். கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்தின் அர்த்தத்தையும் நம் பண்டிதர் சொல்லச் சொல்ல அவருக்கு ஒரு பொற்காசு தர வேண்டும். ஆக எழுநூறு ஸ்லோகங்களுக்கு எழுநூறு பொற்காசுகளைத் தயார் செய்யுங்கள்” என்றார்.

பண்டிதருக்கு மஹா ஆனந்தம். 700 பொற்காசுகளா?

வீடு சென்ற அவர் ஏராளமான நூல்களைப் படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.

மஹாராணிக்கு விளக்க வேண்டுமே!

மறுநாள் சபை ஆரம்பமானது.

700 பொற்காசுகள் குவியலாக இருக்க பண்டிதரின் கண்கள் அதை நோட்டம் விட்டன.

‘கடவுளே! மஹாராணிக்கு கீதையைப் புரிந்து கொள்ள அருள் செய்வாயாக! கண்ணபிரானே நீயே துணை.’

கம்பீரமாக முதல் ஸ்லோகத்தை ஆரம்பித்தார்.

‘தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே’

மஹாராணிக்குக் கண்களில் நீர் வழிந்தது.

“நிறுத்துங்கள்!” என்று பண்டிதரை நோக்கிக் கூவினாள்.

பண்டிதர் திடுக்கிட்டார்.

மஹாராணி மந்திரியை அழைத்துப் பல்லக்கைத் தயார் செய்யுங்கள், கிளம்பலாம் என்றார்.

‘அட 700 காசுகளும் போச்சே’ என்று பண்டிதர் வருந்தினார்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “ராணியாரே! இன்னும் ஆரம்பிக்கக் கூட இல்லையே” என்று இழுத்தார்.

“அட என்ன அற்புதமான விளக்கம்; நான் நன்கு புரிந்து கொண்டு விட்டேன், கீதா தாத்பர்யத்தை. இதோ, இந்தாருங்கள் 700 பொற்காசுகள்; ஒரு கணமும் இனி தாமதிக்க மாட்டேன்; இதோ நீங்கள் கூறியபடியே செய்யப் போகிறேன்.”

மஹாராணி இப்படிச் சொன்னதைக் கேட்டவுடன் அவருக்குத் தலை சுற்றியது.

“நான் என்ன விளக்கினேன்?” அழாக் குறையாக அவர் கேட்டார்.

அது தான் அழகாகச் சொல்லி விட்டீர்களே; கீதா தாத்பர்யத்தை! தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே – அதை எப்படிப் பிரிக்க வேண்டும்? ‘க்ஷேத்ரே க்ஷேத்ரே தர்மம் குரு!’ என்று. க்ஷேத்ரே க்ஷேத்ரே -க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகச் சென்று அதாவது ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று- தர்மம் குரு – தர்மத்தைச் செய்- அதாவது தர்மத்தைச் செய்ய வேண்டும். அது தானே கீதை காட்டும் பாதை! கீதையின் போதனை! இதோ தர்மம் செய்யக் கிளம்பி விட்டேன்” என்றாள் ராணி.

பண்டிதர் தன் ஆயுளிலும் அறியாத ஒரு பெரிய உபதேசத்தை கால் ஸ்லோகத்தில் ராணி அறிந்து விட்டாரே என்று மகிழ்ந்தார்.

இத்தனை நாள் படித்தும் தமக்கு கீதா போதனை ஏறவில்லையே என்று வருந்தினார்.

‘மஹாராணியாரே! உங்களிடமிருந்து கீதா பாடம் கற்றுக் கொண்டேன். இந்தப் பொற்காசுகளை என் சார்பாக நீங்களே தர்மத்திற்குச் செலவிடுங்கள்; இதோ உலகைத் துறக்கிறேன். என் வழியில் போகிறேன்’  என்று சொல்லி விட்டுத் தவம் புரியச் சென்றார்;பின்னர் பெரும் மஹான் ஆனார்.

*

ஆக அந்த மஹாராணி எங்கே, இந்த முட்டாள் எங்கே!

கீதையின் மறுபக்கம் பார்க்க வேண்டாம்; முதல் பக்கத்தில் முதல் ஸ்லோகத்தின் கால் ஸ்லோகம் பார்த்தாலும் கூட நாடு முழுவதும் தர்மம் பெருகும்; தழைக்கும்!

கீதை காட்டும் பாதையை முழுவதுமாகப் படித்து அறிவோம்; உயர்வோம்!

***

சென்னை கோடம்பாக்கம் கல்லூரியில் சில வருடங்களுக்கு  முன்னர்  நடந்த ஆன்மீக மாநாட்டில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர் சொன்ன ராணியின் கதைக்கு இங்கு எனது நன்றியைப் பதிவு செய்கிறேன்.

tags –கீதையின் மறு பக்கம்

உலகெங்கும் சிவலிங்க வழிபாடு!-2 (Post No.5834)

Written by S Nagarajan

Date: 26 DECEMBER 2018


GMT Time uploaded in London – 6-57 am


Post No. 5834

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

உலகெங்கும் தொன்று தொட்டு இருந்து வரும் சிவலிங்க வழிபாடு!-2

ச.நாகராஜன்

பல்லவி தாகூர் எழுதியுள்ள  கட்டுரையின் சில பகுதிகளை முந்தைய கட்டுரையில் பார்த்தோம்.  வியக்க வைக்கும் தகவல்களை அள்ளித் தரும் இதர பகுதிகளை இப்போது பார்க்கலாம்:

சிவலிங்க வழிபாடும் சிவனை வழிபடுவதும் உலகெங்கும் பரவி இருந்த ஒன்று. இந்தியா மற்றும் லங்காவில் மட்டும் இருந்ததல்ல இது. ஐரோப்பிய நாடுகளுக்கு ரோமானியர்கள் இந்த வழிபாட்டை அறிமுகப்படுத்தினர். ‘ப்ரயாபாஸ்’ என்று அவர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர்.

பழைய கால மெஸபொடோமியாவில் , பாபிலோனில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சிவ லிங்கங்கள் கிடைத்துள்ளன.

மேலும்  ஹரப்பா- மொஹஞ்சதாரோவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் ஏராளமான சிவலிங்கங்கள் கிடைத்தன. இவை ஆரியக் குடியேற்றத்திற்கு முன்னதாகவே ஒரு உயரிய பண்பாடு இருந்ததை காட்டுகிறது. மெஸோ அமெரிக்காவில் மாயன்களின் நாகரிகமான மாயா நாகரிகத்தின் சொற்களின் உருவாக்கம் மற்றவற்றோடு ஒத்திருப்பது மிக பரந்த அளவில் இருக்கிறது.

அயர்லாந்தில் புராதன சிவலிங்கம்: அயர்லாந்தில் உள்ள மீத் கவுண்டி என்னுமிடத்தில் தாரா மலையில் லிலா ஃபெய்ல் (விதியின் சிலை) என்ற ஒரு மர்மமான சிலை உள்ளது. கி.பி. 1632-1636 வாக்கில் பிரான்ஸிஸ் குருமார்களால் எழுதப்பட்டநான்கு குருமார்களின் சரித்திரச் சுவடிகளின் படி அமானுஷ்ய சக்தி கொண்ட ‘துதாதே தானான்’ என்ற மக்களால் இது அயர்லாந்திற்குக் கொண்டு வரப்பட்டது. சிலர் வெங்கலம் உருவாக்கும் சக்தியை அவர்கள் தாம் அயர்லாந்திற்குக் கொண்டு வந்தனர் என்கின்றனர். கிறிஸ்தவம் தோன்றுவதற்கு முன்னர் அவையே கார்லிக் அயர்லாந்தில் பிரதான தேவதைகளாக வழிபடப்பட்டன.

வரலாறு: தனு என்ற தேவதையின் குழந்தைகளான துதா தே தானான் அயர்லாந்தை கி.மு. 1897 முதல் 1700 வரை ஆண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.இவர்கள் கடல் வழியே கப்பலில் வந்தனர். கிறிஸ்தவ குருமார்கள் இந்த சிலையை வளத்திற்கு அடையாளமான பாகன் சிலை எனக் கருதினர்.இந்தச் சிலை எவ்வளவு முக்கியமானதாக இருந்தது எனில், கி.பி. 500 முடிய அயர்லாந்து மன்னர்கள் மகுடாபிஷேகத்தில் இது முக்கிய அங்கம் வகித்தது. ஐரோப்பிய பாரம்பரியத்தின் படி தனு தேவதையானது ஒரு நதி தேவதை. சில அயர்லாந்து நூல்களில் அந்த தேவதையின் தந்தை தக்தா ( நல்ல கடவுள்) என, ஒரு தந்தைக்குரிய உருவில் சொல்லப்படுகிறது.

வேதத் தொடர்பு : தக்ஷனின் பெண்ணான தனு என்பவள் வேத பாரம்பரியத்திலும் உண்டு. தனு காஸ்யப முனிவரின் மனைவி. நதிகளின் தேவதை. தனு என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ஓடும் நீர் என்று பொருள். தக்ஷனின் மகளான அவளது சகோதரி சதி தான் சிவனை மணந்தாள். வேதத்தை பின்பற்றுவோர், லியாஃபெல் என்பதை சிவலிங்கத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதுகின்றனர்.

நன்றி : ஆங்கில வார இதழ் ட்ரூத்- தொகுதி 86 – இதழ் 33 ;14-12-18

*

கட்டுரையின் ஆங்கில மூலத்தை இங்கே காணலாம்:

Worship of Lord Shiva and Shiva Lingam worship were prevalent all across

the globe. It was not confined to India and  Sri Lanka only. Lingam was referred to‘Prayapas’ by the Romans who introduced the

worship of Shiva Lingam to European countries.

Shiva Lingams were found in the archaeological findings in Babylon, ancient Mesopotamia. Further, the archaeological discoveries in

Harappa-Mohenjo-Daro yielded numerous Shiva Lingam statutes, which disclose the existence of a highly evolved culture long before the Aryan’s immigration. The etymological similarity of Maya with the Maayans of Meso

America are huge.

Ancient Shiva Linga in Ireland: In County Meath, Ireland, on the Hill of Tara sitsa mysterious stone known as the Lia Fáil (Stoneof Destiny). According to The Annals of theFour Masters, an ancient document written by Franciscan Monks between 1632-1636 AD,this stone was brought brought to Ireland by the TuathaDé Danann– supernaturally gifted people.

Some speculate it was they who brought the power to make bronze to Ireland. They were the main deities of pre-Christian Gaelic Ireland.

The legend: The Tuatha Dé Danann, thechildren of the goddess Danu, are said to have ruled Ireland from 1897 B.C. to 1700 B.C. having

arrived from the coast on ships. The Christian monks viewed the stone as a pagan stone idol symbolic of fertility. This stone was so important

that it was used for the coronation of all Irish Kings up until 500 AD. The goddess Danu in European tradition was a river goddess. In

some Irish texts her father is said to be Dagda (the good god), a father figure in Irish tradition.

Vedic connection:The Vedic tradition has a goddess Danu, the daughter of Daksha, wife of Kasyapa Muni, who was a goddess of the rivers. The word Danu in Sanskrit means ‘flowing water’. As the daughter of Daksha,

her sister Sati was married to Lord Shiva. To practitioners of Vedic tradition the Lia Fáil matches very closely to the Shiva Linga.

Source : Truth weekly Volume 86 – issue 33 – 14-12-2018

tags–  சிவலிங்க வழிபாடு!-2, linga worship, shivlinga

***

BHAGAVATA PURANA, RARE PICTURES -PART 4 (Post No.5830)

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 December 2018
GMT Time uploaded in London – 7-49 am
Post No. 5830


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

HERE IS PART FOUR OF RARE PICTURES FROM A 100 YEAR OLD BOOK IN THE BRITISH LIBRARY, LONDON.

PLEASE SEE THE LAST THREE PARTS IN MY BLOGS POSTED IN THE PAST THREE  DAYS.

பாகவத புராணம், அபூர்வ படங்கள்- பகுதி 4

கடந்த மூன்று தினங்களில் எனது பிளாக்குகளில் வெளியான முதல் மூன்று பகுதிகளில்  உள்ள அற்புத படங்களையும் கண்டு களிக்கவும். 100 ஆண்டுக்கும் மேலான பழமையுடைய இந்தப் புஸ்தகம், லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியில் இருக்கிறது. முதல் ஒன்பது தொகுதிகளில் இருந்து படங்களைச் சேகரித்தேன். கடைசி மூன்று தொகுதிகள் கிடைத்தால் அவைகளையும் வெளியிடுகிறேன். மேலும் வரும்…

Agnidhran falls in love with Purvasiddhi

King Bharata saving a just born deer cub from the banks of a river.

when the messengers of God of Death tried to take the bad king Ajamilan to hell, Vishnu’s messengers released him, just because he said the holy name Narayana only once in his life. That too was his son’s name!

Daksha was angry with Inter galactic traveller Narada, just because he taught good things to his sons. Narada travels o different galaxies with his thought power.

Indra kills Vrttirasura (story from Rik Veda, featured in Bhagavatha)

To be continued………………………

BHAGAVATA PURANA- RARE PICTURES-2 (Post No.5820)

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 23 December 2018
GMT Time uploaded in London – 18-54
Post No. 5820


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Brahma is praising Vishnu on the many headed snake in the middle of the ocean.

 Varaha Avatar’s (incarnation’s) purpose is to recover the Vedas from the bottom of the ocean. Look at the flying objects drawn in 1915.

 picture of Vaikunda; Garuda/eagle is the vehicle of Vishnu

Varaha Avatar of Vishnu kills Hiranyakshan and  the Devas shower flowers from the heaven. Look at the flying objects.

Gate keepers of Vaikunda prevent the saints from entering and they were cursed. Vishnu is rushing to the spot.

–subham–

BHAGAVATA PURANA – RARE PICTURES PART 1 (Post No.5815)

Sukar is reciting the story of Sri Krishna to the seers of Naimisaranya Forest

FOLLOWING ARE THE PICTURES FROM A 100 YEAR OLD BOOK OF BHAGAVATA PURANA. THESE PICTURES COVER FIRST TWO BOOKS; BHAGAVATA HAS 12 BOOKS

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 December 2018
GMT Time uploaded in London – 18-49
Post No. 5815


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Heavenly beauty Ramba tries to distract Sukar, but failed

Sukar addressing the saints in the Naimisaranya Forest

Brahma is coming out from Maha Vishnu in Ocean of Milk

 When Sukar came the women in semi nude condition in the river never bothered; but when Vyasa came they hurriedly put their  clothes on. Sukar’s mind was as pure as a crystal

Narada meetsVyasa

Asvattama was arrested and brought to Draupadi by Arjuna

Yudhisthira listening to Bhishma

Parikshit was crowned by Yudhisthira

Parikshit threw a dead snake around the neck of Samika muni and was cursed by him to die within seven days.

Sukar comes to King Parikshit

to be continued……………..

Tags- Bhagavatha rahasya, rare pictures-1

–subham–

சரஸ்வதிக்கே சர்டிபிகேட்டா! (post No.5715)

Written by S Nagarajan

Date: 30 November 2018

GMT Time uploaded in London –6- 05 am
Post No. 5715

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

சங்கர விஜயம்

சரஸ்வதிக்கே சர்டிபிகேட்டா! காஞ்சி காமகோடி மடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்ததே!!

ச.நாகராஜன்

1

காஞ்சி காமகோடி மடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்ததே என்பதில் ஒரு சிறிதளவும் ஐயமில்லை.

இதனை ஒரு விவாதப் பொருளாக மாற்றி விவாதிப்பதில் சிலருக்கு ஆனந்தம். ஆனால், ‘Kanci Kamakodi Mutt : A Myth or Reality’ என்ற ஆய்வுப் புத்தகத்தைப் படித்தவர்க்கு நல்ல தெளிவு பிறக்கும். விவாதத்தில் ஒரு தெளிவும் வேண்டியது தானே! அப்போது தானே ஒரு முற்றுப்புள்ளியுடன் அது அடங்கும்!

இதை எழுதியவர் டாக்டர் டபிள்யூ. ஆர். அந்தார்கர் (Dr W.R.Antarkar). இந்தப் புத்தகம் வெளியான ஆண்டு 2001. பக்கங்கள் 168. இதை எனக்கு அனுப்பியவர் எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன். அவருக்கு எனது உளம் கலந்த

நன்றிகள்!

2

நூல் அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் பேருண்மை : காஞ்சி காமகோடி மடமானது ஆதி சங்கரராலேயே ஸ்தாபிக்கப்பட்டது. இது அவர் ஸ்தாபித்த ஐந்தாவது மடம். இதை ஸ்தாபித்தது மட்டுமன்றி அதன் முதல் பீடாதிபதியாகவும் அவரே இருந்து அருளினார்.

அத்வைத சித்தாந்தத்தை உலகிற்குச் சரியான முறையில் அருள அவர் நான்கு மடங்களை ஸ்தாபித்தார்; ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையிலும் அவை குறிக்கும் நான்கு மகா வாக்கியங்களைக் குறிக்கும் வகையிலும் பாரதத்தின் நான்கு திசைகளில் அவர் நான்கு மடங்களை ஸ்தாபித்தார்.

இது ஒரு நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அசைக்கமுடியாத பல்வேறு நூல்களின் அடிப்படையில் அவர் காஞ்சி மடத்தையும் ஸ்தாபித்தார் என்பதை இந்த நூலாசிரியர் விரித்துரைக்கிறார்.

இந்த நூலை ஓரியண்டல் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட், புனே பிரசுரித்துள்ளது. இதைப் பிரசுரித்ததற்கான காரணத்தைச் சொல்ல வருகையில், 1) இது பற்றிய முடிந்த முடிபான முடிவு என்று ஒன்று இல்லை என்பதால் புதிய ஆய்வுக்கான கள நோக்கைப் பாராட்ட வேண்டியதே 2) இதை சமர்ப்பிக்கும் அந்தார்கர் தான் எடுத்துக் கொண்டுள்ள ஆய்வுப் பொருளை சரியாக குறிக்கோளுடன் ஆய்ந்துள்ளார்; அதில் ஒரு வித பாரபட்ச நோக்கையும் கொண்டிருக்கவில்லை. இந்த ஆய்வுப் பார்வை அவருடையது மட்டுமே; இது இந்த நிறுவனத்தின் பார்வை அல்ல என்று இப்படி பண்டார்கர் ஓரியண்டல் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த கௌரவ செயலாளர் எம்.ஜி. தாத்பலே (M.G.Dhadphale) தெளிவு படுத்துகிறார்.

இந்த ஆய்வுப் பேப்பர் 1960ஆம் வருடம் புனே பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்று.

 

காஞ்சி காமகோடி மடம் பற்றி இரு நிலைப்பாடுகள் உண்டு.

முதலாவது : த்வாரகா, கேதார்நாத்,பூரி, சிருங்கேரி ஆகிய இடங்களில் மடங்களை நிறுவிய பின்னர் ஆதி சங்கரர் காஞ்சிபுரம் வந்தார். ஐந்தாவது மடமாக காஞ்சிகாமகோடி மடத்தை நிறுவி அதன் முதல் பீடாதிபதியாக அவரே அங்கம் வகித்தார். 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக அப்போதைய காஞ்சி மடத்தின் பீடாதிபதி மடத்தின் தலைமையிடத்தைத் தஞ்சாவூருக்கு மாற்றினார். பின்னர் கும்பகோணத்திற்கு மடம் மாற்றப்பட்டது.

இன்னொரு நிலைப்பாடு:  ஆதி சங்கரர் நான்கு மடங்களை மட்டுமே நிறுவினார். த்வாரகா, கேதார்நாத், பூரி, சிருங்கேரி ஆகிய இடங்களில் மட்டுமே அவர் ஆமாத்ய மடங்களை நிறுவினார்.

காஞ்சி மடம் என்று இப்போது சொல்லப்படும் மடமானது உண்மையில் கும்பகோண மடம் தான்; அது தஞ்சாவூரில் ஸ்தாபிக்கப்பட்டு பின்னர்கி.பி.1821ஆம் ஆண்டு வாக்கில் சரபோஜி மன்னரின் ஆதரவால் கும்பகோணத்திற்கு மாற்றப்பட்ட ஒன்று. இந்த மடம் உண்மையில் சிருங்கேரி மடத்தின் ஒரு கிளையே. இது தாமிர பட்டயங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 1839ஆம் ஆண்டு காஞ்சி கோவிலுடனான தொடர்பு மடத்திற்கு ஏற்படுத்தப்பட்டது. கோவிலின் தர்மகர்த்தா பொறுப்பை அது 1842ஆம் ஆண்டு பெற்றது.

1845ஆம் ஆண்டு ஜம்புகேஸ்வர தலத்தில் தாடங்க பிரதிஷ்டையை கும்பகோண மடம் செய்தது.

ஒரு தால பத்ரத்தின் படி (பனையோலை) மஹாதேவ சரஸ்வதி என்பவர் சிருங்கேரியிலிருந்து தஞ்சாவூருக்கு அனுப்பப்பட்டார். இவரே கும்பகோண மடத்தின் முதல் பீடாதிபதியாக இருந்திருக்கக்கூடும். அவர் சென்னைக்கருகில் சமாதியானார்; ஆனால் இதை நிரூபிக்க சான்றுகள் இல்லை.

கோவிந்த தீக்ஷிதர் என்பவர் தஞ்சாவூர் அரசரின் அமைச்சர். அவர் கும்பகோணத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார். அவர் சந்யாசத்திற்குப் பின்னர் சந்த்ரசேகர சரஸ்வதி என்று நாமகரணம் செய்யப்பட்டார். அவர் மிகுந்த செல்வாக்குள்ளவர். எனவே அவர் மூலம் கும்பகோண மடம் அரசரின் பேராதரவைப் பெற்றது.

மேற்கண்ட இரு நிலைகளைத் தவிர பல்வேறு நூல்கள் காஞ்சி மடத்தின் ஆசாரியர்கள் பலகாலம் தலைமையிடத்தை விட்டு பாரதத்தின் பல்வேறு இடங்களில் சஞ்சாரம் செய்து வந்தனர் என்றும் குறிப்பிடுகின்றன.

நூற்றுக் கணக்கான நூல்கள். நூற்றுக் கணக்கான ஆதாரங்கள்!

காஞ்சி மடத்தைப் பற்றி சங்கர விஜயம் நூலில் குறிப்பிடப்படவில்லை என்பதை மட்டுமே ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமெனில் ஆனந்தானந்தகிரி அவர்கள் எழுதிய சங்கர விஜயம் நூலில் சிருங்கேரி மடமே குறிப்பிடப்படவில்லை. அப்படி எனில் சிருங்கேரி மடத்தை ஆதி சங்கரர் ஸ்தாபிக்கவில்லை என்று அர்த்தம் கொள்ளக் கூடுமா என்ன? என்கிறார் இந்த ஆய்வாளர்,நூலாசிரியர்.

பகவத்பாதாப்யுதயா என்ற நூலில் காஞ்சி காமகோடி மடம் சொல்லப்பட்டுள்ளது. நான்கு மடங்களுடன் கூட ஆதி சங்கரர் ஐந்தாவது மடமாக காஞ்சி காமகோடி மடத்தையும் ஸ்தாபித்தார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.

இந்த நூலாசிரியர் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் பிரதமர் நரசிம்மராவ் ஆகியோரின் உதவியுடன் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஒரு அரிய நூலைப் பெற முயற்சி எடுத்த போதும் அவரது கடித்தைக் கூடப் பெற்றதாக அந்த பல்கலைக்கழகம் பதில் அளிக்கவில்லை. அந்த நூலும் பார்க்கப்படவில்லை. இந்த நூலில் தான் சர்மா என்பவர் கூறும் (காஞ்சி மடம் ஐந்தாவது மடம் இல்லை என்பதற்கான)  ஆதாரங்கள் உள்ளன.

ஆக தனது முயற்சியால் போலி வாதங்களை பொய் பிரச்சாரங்களையும் உதறி விட்டு விட்டு உண்மையான ஆதாரங்களை மட்டும் தன் ஆய்விற்கு எடுத்து அவற்றை விரித்துரைக்கிறார் நூலாசிரியர்.

இந்த உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கூறும் முடிவு:

நான்கு மடங்களுடன் கூட ஐந்தாவது மடமாக ஆதி சங்கரர் காஞ்சி காமகோடி மடத்தை ஸ்தாபித்தது மட்டுமன்றி அவரே அதன் முதல் பீடாதிபதியாக அக்ராசனம் வகித்து அருளினார்; அவர் மறைந்ததும் காஞ்சியிலேயே!

பல ஆதாரங்களை விளக்கும் இந்த நூலை  அன்பர்கள் படித்தால் இது பற்றிய தெளிவைப் பெறலாம்!

நூலைப் படித்தவுடன் நமக்குத் தோன்றுவது இது தான் :-

காஞ்சி காமகோடி பீடத்தில் ஏறும் அருளாளர்களுக்கு சரஸ்வதி என்ற பட்டப் பெயரும் சிருங்கேரி பீடத்தில் ஏறும் அருளாளர்களுக்கு பாரதி என்ற பட்டப்பெயரும் சூட்டப்படுவது மரபு என்பதை அனைவரும் அறிவோம்!

சரஸ்வதிக்கே சர்டிபிகேட்டா! காஞ்சி மடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்ததே தான்!!

Tags–சரஸ்வதி, காமகோடி மடம்,  காஞ்சி, ‘Kanci Kamakodi Mutt : A Myth or Reality’

****

நாலாவது கடவுள் ஹனுமான்! கம்பன் புகழாரம் (Post No.5702)

WRITTEN by London Swaminathan



swami_48@yahoo.com


Date: 26 November 2018


GMT Time uploaded in London –7-47 am

Post No. 5702


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Written for the Radha Madhav Kalyan Mahotsav Souvenir in London released on 25-11-2018

கம்ப ராமாயணத்தில் ஹனுமானை மிகவும் உயர்ந்த இடத்தில் வைக்கிறான் கம்பன். . ‘சொல்லின் செல்வன்’ என்ற சிறப்புப் பட்டத்தை, அடை மொழியை, ஹனுமானுக்கு ராமன் வழங்கியதைப் பலரும் அறிவர். யுத்த காண்டத்தில் ஓரிடத்தில் எதிரி கூட அனுமனைப் புகழும் ஒரு பாடலை நம் முன் வைக்கிறான் கவிச் சக்ரவர்த்தி கம்பன்.

எல்லோருக்கும் தெரிந்த கடவுள் திரிமூர்த்தி- அதாவது பிரம்மா, விஷ்ணு, சிவன். இவர்களுக்கு அடுத்தபடியாக யாராவது உளரா? அப்படியானால் அவர் யார்?

கம்பன் சொல்கிறான்:- உண்டு, அவன்தான் அனுமன்.

ஒருவரை நண்பர்கள் புகழ்ந்தால் நூற்றுக்கு 75 மதிப்பெண்கள் கொடுக்கலாம். ஒருவனை அவனுடைய எதிரியே புகழ்ந்தால்- நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்கலாம் அல்லவா?

ராவணன் தரப்பைச் சேர்ந்த மாலியவான் கூற்றாக கம்பன் சொல்லும் பாடல் இதோ:

 

முறைகெட வென்று வேண்டின் நினைந்ததே முடிப்பன் முன்னின்

குறைஇலை குணங்கட்கு என்னோ கோள்  இலா  வேதம் கூறும்

இறைவர்கள் மூவர் என்பது எண் இலார் எண்ணமேதான்

அறைகழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா.

-மாயா சீதைப் படலம், யுத்த காண்டம்,

பொருள்

உலகப் படைப்பின் முறையே மாற வேண்டுமானாலும், அனுமன், தான் நினைத்ததை செய்து முடித்து விடுவான். அவனிடமுள்ள குணங்களுக்குக் குறைவில்லை. குற்றமற்ற வேதங்கள் சொல்லும் கடவுளர் மூவர்தான் என்பது ஆராயாதோரின் கருத்து ஆகும். ஒலிக்கும் வீரக் கழலை அணிந்த அனுமனோடு முதற் கடவுளர் நால்வர் ஆவர்.

இது அருமையானதொரு பாராட்டு. அனுமனின்றி ராமன் வெற்றி பெற்று இருக்க முடியாது. ஆகவே கம்பன் கூறுவது உண்மையே.

 

இதற்கு முன்னர், ராமனே அனுமனைப் புகழ்ந்த காட்சியையும் காணலாம்.:

ராமனையும் லட்சுமணனையும்  நேரில் பார்த்த அநுமன்

“வெல்கம் டு கிஷ்கிந்தா (Welcome to Kishkinda) ” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்

இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராம லெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..

உடனே அனுமன்,

யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன்நாமமும் அனுமன் என்பேன் ” என்று பதில் தருகிறான்.

உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம் ஆகும்!

 

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),

இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?

இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

TAGS–  நாலாவது கடவுள், ஹனுமான், கம்பன், அநுமன்

-சுபம்-

13 சாமியார்களைக் கண்டு பிடியுங்கள்! (Post No.5683)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 20 November 2018

GMT Time uploaded in London –15-52
Post No. 5683

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தியாவை ஆன்மீக உலகில் கொடிகட்டிப் பறக்கச் செய்த 13 சாது, சந்யாஸிக்களும், மஹான்களும், ஆழ்வார், நாயன்மார்களும் கட்டத்தில் மறைந்து இருக்கின்றனர்.

குறுக்காகவோ, நெடுக்காகவோ பார்த்தால் எழுத்துக்கள் இடம் மாறிய நிலையில் பெயர்கள் இருக்கும். முயன்றால் கண்ணுக்குத் தெரிவர்.

 

முடியாவிட்டால் கீழே விடைதனைப் பாருங்கள்.

விடை

சுவாமி விவேகாநந்தர், ராமகிருஷ்ண, நரசிம்ம மேதா,ஆதி சங்கரர், சுவாமி சிவாநந்தர், தாயுமானவர், ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆண்டாள், ஔவையார், ஆனந்தமயி

TAGS– 13 சாமியார், கண்டு பிடி

–SUBHAM–

 

பிள்ளையார் பாட்டைக் கண்டுபிடியுங்கள்! (Post No.5677)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 19 November 2018

GMT Time uploaded in London –8-21 am
Post No. 5677

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் மூதாட்டி அவ்வையார் எழுதிய பிள்ளையார் பாட்டு இந்தக் கட்டத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதைக் கண்டு பிடித்து தினமும் படித்தால் நிறைய பணம் கிடைக்குமாம். லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டு என்று அவ்வையாரே பாடலில் சொல்கிறார்.

ம் டா ண் மா ன் நு
சா ர் வா ர் யா
னி நோ க் கு கை ங்
மே கு க் ரா க் கா
ரு ல் னம் ள் பி து
தி பா ம் ம் ப்
பூ க் கொ ண் டு து பு
ப் பா ல் ர்

 

 

விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:–

வாக்கு உண்டாம்; நல்ல மனம் உண்டாம்; மாமலராள்

நோக்கு உண்டாம்; மேனி நுடங்காது; — பூக்கொண்டு

துப்பு ஆர் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு

TAGS–அவ்வையார், பிள்ளையார் பாட்டு,  

வாக்கு உண்டாம்

  —   சுபம் —

 

திருக்குறளில் ஸ்ரீ தேவி, மூதேவி (Post No.5671)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 November 2018

GMT Time uploaded in London –17.24
Post No. 5671

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Jyeshta picture, posted by Lalgudi Veda

திருவள்ளுவர் தீவிர இந்து. ஆரம்பத்திலேயே பகவான் பெயருடன் குறளை ஆரம்பிக்கிறார். அது மட்டுமல்ல; அவர் காலத்திலேயே வாழ்ந்த ஒரு புலவர் அவரைத் திருவள்ளுவ மாலையில் பாராட்டுகையில், நல்லவேளையாக இதைப் பாடினீர்களே; இவ்வளவு காலமாக வேதம் போன்ற ஒரு ஸம்ஸ்க்ருத நூல் தமிழில் இல்லையே என்று கவலைப் பட்டேன். நீர் தமிழ் வேதத்தைப்பாடி அந்தக் குறையை நிவர்த்தி செய்துவிட்டீர்’ என்று பாராட்டுகிறார். அவர் கொடுத்த பெயர்தான் தமிழ் வேதம்= தமிழ் மறை.

திருக்குறளில் இந்திரன் என்னும் வேத கால தமிழ்க் கடவுளின் பெயர் வருவதை எல்லோரும் அறிவர். இந்திரனையும் வருணனையும் தமிழ்க் கடவுள் என்று தொல்காப்பியம் செப்பும். இன்னும் ஒரு குறளில் வேந்தன் என்றும் இந்திரனைக் குறிப்பிடுகிறார். அடி அளந்தான் என்று வாமன/ த்ரிவிக்ரம அவதாரத்தை ஒரு குறளில் பாடுகிறார். பல் மாயக் கள்வன் என்று கண்ண பிரானை மறைமுகமாக ஒரு குறளில் பாடிப் பரவுகிறார்.

JYESHTA DEVI POSTED BY  LALGUDI VEDA

தேவ லோகம் (புத்தேள் உலகு), தேவர்கள் (அமரர்), அமிழ்தம் (அம்ருத), ஏழுபிறப்பு (எழுமை), அணங்கு (அப்ஸரஸ் அழகிகள்), வேள்வி (யாகம்), பிராமணாள் (அறு தொழிலோர், பார்ப்பான்,அந்தணர்), யமன் (கூற்றுவன்) ,பிரம்மா (உலகு இயற்றினான்),மஹா லக்ஷ்மி (திரு)— பற்றி அதிகாரத்துக்கு அதிகாரம் பாடிப் போற்றுகிறரர்; பிரம்மா, கூற்றுவன் (யம தர்மன்), தேவர் போன்றோரை சில இடங்களில் கோபத்தில் ஏசுகிறார்.

திருக்குறளைப் படிக்கையில் இவர் ‘பக்கா ஹிந்துத்வா’ பேர்வழி என்பது தெரிகிறது. ஏனெனில் அதர்மம் செய்வோருக்கு மரணதண் டனை கொடுப்பது பற்றி இரண்டு குறள்களில் ஆதரவு தெரிவிக்கிறார். கருமிகள் கையை முறுக்கி முகவாய்க் கட்டையில் ஒரு குத்து விட்டு பணம் பறி என்கிறார். இது எல்லாம் பலருக்கும் தெரிந்த விஷயமே. முதல் குறளை ஸம்ஸ்க்ருதத்தில் துவக்கி கடைசி குறளை  ஸம்ஸ்க்ருதத்தில் முடித்து தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்றே என்றும் காட்டினார். ஒரு அதிகாரம் கூட   ஸம்ஸ்க்ருதச் சொல் இல்லாமல் பாடக்கூடாது என்ற பாலிஸியையும் கடைப் பிடித்தார்.

மநு தர்ம நூல், காம சாஸ்திரம், பகவத் கீதை ஆகியவற்றை அழகியகு றள்களில் வடித்துக் கொடுக்கிறார். கடந்த நூற்றாண்டில் இவ்வளவற்றையும் பலரும் பதின்மர் உறை கொண்டு பறை சாற்றிவிட்டனர்.

ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஸ்ரீதேவியைப் பாடிய– திருமகளைப் பாடிய — திருவள்ளுவர் மூதேவியையும் பாடி இருக்கிறார் என்பதாகும்.

இதோ  திருமகள் பற்றிப் பாடிய குறள்கள்

179, 519, 617, 920

அறனறிந்துவெஃகா அறுவுடையார்ச் சேரும்

திறன் அறிந்தாங்கே திரு-179

பிறர் பொருளை மனதிலும் நாடாதவன் வீட்டுக்கு லக்ஷ்மீ தானாகவே போவாள்

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு – 519

உண்மையாக உழைப்பவனை , ஒருவன் தப்பாக எடை போட்டால்,லக்ஷ்மீ (செல்வம்) அவனை விட்டுப் போய்விடுவாள்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திரு நீக்கப்பட்டார் தொடர்பு – 920

விலைமாதர், கள், சூதாட்டம்-இவை மூன்றும் திருமகளால் கைவிடப்பட்டாரின் அடையாளங்கள்..

இங்கு ஒரு இயல்பான சந்தேகம் எழும்; ‘திரு’ என்பதை எல்லாம் செல்வம் என்று பொருள் கொண்டால் லக்ஷ்மி என்ற இந்துக் கடவுள் மறைந்து போவாளே! என்று.

இந்துக்கள் மட்டுமே நம்பும் ‘முகடி’ என்னும் மூதேவியை (ஜேஷ்டா தேவி) அவர் மேலும் இரண்டு குறள்களில் வைத்துப் பாடியதும் பதின்மரின் உறையும் திரு என்பது லக்ஷ்மியையும், முகடி என்பது மூதேவியையுமே குறிக்கும் என்பதைத் தெளிவாக்கும்.

இதோ முகடிக் குறள்கள்

617, 936

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையினாள்- 617

சோம்பல் உள்ளவனிடத்தில் மூதேவியும், சுறுச்சுறுப்பானவர் இடத்தில் தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மியும் வாழ்வதாக சான்றோர்கள் பகர்வர்.

அகடரார் அல்லல் உழப்பர் சூதென்னும்

முகடியால் மூடப்பட்டார் -936

சூதாட்டம் என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், சோற்றுக்கே வழியின்றித் தவிப்பர்

இப்படி மூதேவியையும் திருமகளையும் ஒப்பிட்டுப் பாடுவதால் திருவள்ளுவன் தெய்வீக ஹிந்து என்பதும் தெளிவுபடும்.

Tags– ஸ்ரீ தேவி, மூதேவி, திருவள்ளுவர்

–சுபம்–