ஹிந்துக்களுக்கு தர்ம வாழ்வே வாழ்வு! (Post No.5493)

WRITTEN BY S NAGARAJAN

Date: 1 October 2018

 

Time uploaded in London – 7-15 AM (British Summer Time)

 

Post No. 5493

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

இது தான் இந்தியா தொடர்

ஹிந்துக்களுக்கு தர்ம வாழ்வே வாழ்வு!

ச.நாகராஜன்

1

அக்பரின் அரசவையில் அங்கம் வகித்த அப்துல் ஃபஸல் அய்ன் – இ- அக்பரி என்ற தனது நூலில், “ஹிந்துக்கள் தங்கள் மதத்தை நேசிக்கிறார்கள். அவர்கள் மற்ற எந்த ஒரு இனத்துடனும் சண்டையிடுவதில்லை. என்று எழுதியுள்ளார்.

(அதாவது தங்கள் தர்மத்தை ஒரு நாளும் விடாத அவர்கள் அடுத்தவர்களை மதம் மாற்ற முற்படுவதில்லை; சண்டை இடுவதில்லை; அவர்களை மதித்து வாழ்கின்றனர் என்று பொருள் கொள்ள வேண்டும்)

2

 

வருடம் 1942. அலஹாபாத் உயர் நீதி மன்றத்தில் உள்ள ஒரு வேலைக்காக ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. ஒரு மராத்திய இளைஞன் முதலாவதாகத் தேறினான். தலைமை நீதிபதி, டெபுடி ரெஜிஸ்ட்ராரை அழைத்து, இந்தப் பையன் சரியான உடை அணிந்து வந்தால் தான் அவனை வேலையில் சேர அனுமதிக்கப்படுவான். அவன் மொட்டை அடித்திருக்கிறான். காலிலோ ஷூவே அணியவில்லை.என்றார்.

டெபுடி ரெஜிஸ்ட்ரார் இதை அந்தப் பையனிடம் தெரிவித்ததோடு அவனை தலையில் ஒரு ஹேட்டும், காலில் ஷூக்களும் அணிந்து கொண்டு வரச் சொன்னார்.

அந்த இளைஞன் இதைக் கேட்டு விட்டு, “ எனது தந்தையார் சமீபத்தில் தான் இறந்தார். நான் ஒரு வருட காலம் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்து வருகிறேன். ஹிந்து சாஸ்திரங்கள் தலைமுடி வளர்ப்பதையோ அல்லது ஷூ அணிவதையோ இந்தக் கால கட்டத்தில் அனுமதிக்கவில்லை. நான் சாஸ்திரங்களை விட்டு விட முடியாது. ஆகவே இந்த வாய்ப்பையும் கூட நான் வேண்டாம் என்று மறுக்கிறேன். என்று பதில் கூறினான்.

டெபுடி ரெஜிஸ்ட்ரார் இதை தலைமை நீதிபதியிடம் தெரிவித்தார். தலைமை நீதிபதி அந்த இளைஞனின் சாஸ்திர பக்தியைத் தான் விரும்புவதாகவும் அவனை சில நாட்களுக்குள்ளாக வந்து சேரும்படியும் கூறினார்.

இதைக் கேட்ட அந்தப் பையன், சில நாட்கள் தன்னால் காத்திருக்க முடியாது என்றும், அன்று மாலையே லக்னௌ சென்று இன்னொரு தேர்வு எழுதப் போவதாகவும் கூறினான்.

தலைமை நீதிபதி தனது உத்தரவை உடனே மாற்றி, அவனை உடனே அந்தக் கணமே வேலையில் சேருமாறு கூறினார்.

 வேலையின் மீது கொண்ட சிரத்தையினால் அவனது எல்லாத் தடைகளும் அகன்றன.

 

3

ஏப்ரல் 1945. ஒரு பிரபல மருத்துவர் கூறிய சம்பவம் இது:

25 அல்லது 26 வயதிருக்கும் ஒரு மார்வாரி இளைஞன் காலரா நோயினால் பீடிக்கப்பட்டான். நோ மிகவும் தீவிரமடைந்தது. அவனது உடல் நடுங்கிச் சுருங்கத் தொடங்கியது. அவன் தான் இனி பிழைக்கப் போவதில்லை என்று பயந்தான்.

அவன் தனது பெற்றோரை அழைத்து, “ நான் பிழைக்கவில்லை எனில் வாய்மூலமாகச் சொல்லி நான் கடன் வாங்கியவர்களின் பெயரைக் குறித்துக் கொண்டு அதை அடைத்து விடுங்கள் என்று கூறினான். அன்று மாலையே அவன் நோய் தீர்ந்து பிழைத்துக் கொண்டான். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பது ஹிந்துவைப் பொறுத்த மட்டில் பெரிய பாவம். சட்டத்தின் படி கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் திவால் ஆனதாகச் சொல்லித் தப்பிக்க முடியும். ஆனால் அவன் அந்த சட்டத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆகவே தான் அவன் பிழைத்தான்.

மேலே கூறிய சம்பவங்கள் அன்றாடம் பாரத தேசத்தில் நடக்கும் ஆயிரக் கணக்கான சம்பவங்களில் சிலவே. இது தான் ஹிந்துக்களின் வாழ்க்கை முறை.

பொய் சொல்வது பாவம். வேலையில் சிரத்தையுடன் ஈடுபட வேண்டும். – இவையெல்லாம் ஹிந்துக்களின் இரத்தத்தில் ஊறிய தர்ம கோட்பாடுகள்.

அந்த புகழோங்கிய நாட்களை அன்றாட வாழ்வில் இன்றைய ஹிந்துக்கள் அடைய வேண்டும்.

 

4

இதன் ஆங்கில மூலத்தைக் கீழே பார்க்கலாம்:

Noble Righteous Hindus: Righteous Thinking

Devotion to Dharma

  1. Abul Fazl Courtier of Mughal Emperor AkbarAbul Fazl wrote in his chronicle Ain – E – Akbari — Hindus love their religion. They don’t  have conflict with any other race.
  2. 1942. Once a employment entrance test was conducted in Allahabad high court office. A Maratha youth stood first. The Chief Justice asked the Deputy Registrar, “If this guy appears in proper dress then only he will be permitted to join. The youth’s head was tonsured and feet were without shoes. Deputy Registrar informed him the same and asked to come wearing a hat and shoes.”

The youth replied, “My father has died recently. I am performing Kalasouch ritual for one year. Hindu Shastras ordains not to wear shoes or headgear in next one year. I cannot disregard the Shastras. I can sacrifice the  opportunity as well.”

Deputy Registrar in turn notified the Chief Justice. He replied that he liked the youth’s devotion and asked him to employ him within few days. The youth replied, “I cannot wait for few days. Today evening only I will go to Lucknow for appearing in another examination.”

The Chief Justice altered his order and asked him to employ him right at that moment. All obstacles alleviated due to his devotion.

  1. April 1945. One famous physician has said– A Marwari youth of around 25-26 was diagnosed with Cholera. The disease reoccurred and got serious. His body started cramping. He feared that he would not survive.

He called his parents and said, “If I don’t survive, note down the name of debtors from whom I have taken debt verbally.” He got cured by evening after doing this. Not paying a loan is a sin to Hindu. Though there was a Law of Limitation by practising he could have shown himself as bankrupt. But he did not use that law, that’s why he escaped certain death.

Noble Righteous Hindus: Righteous Thinking

 

நன்றி : ஆங்கில வார இதழ் – Truth Volume 86  No 22 Friday The 14th September, 2018

***

கிருஷ்ண தியானம் ஏன்?- ஈ.எம்.பார்ஸ்டர்! (Post No.5490)

WRITTEN BY S NAGARAJAN

Date: 30 September 2018

 

Time uploaded in London – 7-58 AM (British Summer Time)

 

Post No. 5490

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

கிருஷ்ண தியானம் ஏன்? தியானத்தின் மகிமையை இந்தியாவில் உணர்ந்த எழுத்தாளர் ஈ.எம்.பார்ஸ்டர்!

ச.நாகராஜன்

 

1

பிரபல ஆங்கில நாவலாசிரியரான ஈ எம் ஃபார்ஸ்டர் (E.M.Forster பிறப்பு 1-1-1879 மறைவு 7-6-1970) இரு முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். 1914ஆம் ஆண்டு அவர் எகிப்து, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வந்தார். பின்னர் ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் மீண்டும் ஒரு முறை இந்தியா வந்தார். இந்த முறை அவர் தேவாஸ் மஹாராஜாவான மூன்றாம் துகோஜிராவின் அந்தரங்கச் செயலாளராகப் பணியாற்றினார். 1924இல் அவர் எழுதிய எ பாஸேஜ் டு இந்தியா (A Passage to India) என்ற நாவல் பெரும் புகழைப் பெற்றது. இந்த நாவலை எழுத அவர் ஒன்பது வருடங்கள் எடுத்துக் கொண்டார். 16 வெவ்வேறு வருடங்களில் அவர் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.

2

ஸ்ரீ சத்ய சாயி பாபா கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்தில் 12-8-1963 அன்று பிரசாந்தி நிலையத்தில் நிகழ்த்திய உரையில் அவரைப் பற்றிய சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் உரை அவரது சொற்களிலேயே கிழே தரப்படுகிறது:

ஸ்ரீ கிருஷ்ணருடைய உருவத்திலும் திருநாமத்திலும் சிந்தனையை நிறுத்திக் கொள்வது மனோவிருத்தியின் அலைகளை அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. .எம். ஃபார்ஸ்டர் என்ற எழுத்தாளர் இந்தியாவிற்கு வந்ததும் சிலகாலம் ராஜ்கோட்டிலுள்ள தாகூருடன் தங்கியிருந்தார். தாகூர் அவர்கள் ராதாஸ்வாமியின் திரு உருவத்தின் முன்பு தியானத்திலாழ்ந்திருப்பதை முதலில் பார்த்த போது அவர் ஆச்சரியப்பட்டார். என்னவென்றே, எதற்கென்றே அவருக்கு முதலில் புரியவில்லை. இட்டு நிரப்ப வேண்டும்படி தாகூருக்குக் குறைபாடு ஏதும் கிடையாது. பிரார்த்தனையால் அவர் பெறப் போவது யாதாக இருக்கக் கூடும்? ஒரு நாள் அவரே தாகூரையே வினவினார்கிருஷ்ணன் பிரேமை, சௌந்தரியம், ஆனந்தம் இவை வடிவெடுத்தது போன்றவன். எனவே அவனை தியானிக்கும் போது தமது உள்ளம் அன்பினாலும், அழகாலும், மகிழ்ச்சியாலும் நிரம்பி விடுவதை நான் உணர்கிறேன் என்று பதிலிறுத்தார் தாகூர்.

புலன்கள், அறிவு, உணர்ச்சிகள் இவை யாவும் புனிதமானதும், அழகு வாய்ந்ததுமான ஒன்றைப் பற்றிக் கொண்டு இருந்தால் அவை தூயதாகவும், கலக்கமற்றதாகவும் செய்யப்படுகின்றன. உடனே இந்த தியானத்தின் முதல் படியை முயன்று பார்க்க பார்ஸ்டரும் முயன்றார். முதலில் அது அவருக்கு சிரமமாக இருந்தாலும் அப்பொழுது அவருக்குண்டான மனச்சாந்தி அவருக்கு மிகவும் இன்பகரமான உணர்ச்சியை அளித்திருந்தமையால் மேலும் மேலும் தொடர்ந்து தியானத்தைப் பயில ஊக்கமுள்ளவரானார். தியானம் நல்லதாகவும், பயன் தருவதாகவும் அவர் கண்டு கொண்டார்.

3

 

ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் உரை ஆங்கிலத்தில் Sathya Sai Speaks மூன்றாம் தொகுதியில் தரப்பட்டுள்ளது.

Concentration on the Name and Form of Krishna tends to calm the waves of Vritti. When E.M.kForster came to India, he was for some time with Thakore of Rajkot and when he found the Thakore engaged in Dhyanam before the image of Radha- Syam, he wondered at first, what it was all for! The Thakore had no wants to fulfill; what could be pray for? One day he asked the Thakore, “Why?” . He replied that Krishna was for him the embodiment of Prema, Soundarya and Anandam, and so, when he meditated on the Form he was filled with Love, Beauty and Joy. The senses, intellect and emotions, all get purified and clarified by dwelling on the Pure  and the Splendid. Forster was induced to try the first steps and though he found it rather difficult at first, the thrill engendered by the strange calm egged him on to persist. He found Dhyanam good and useful.

4

ஸ்ரீ கிருஷ்ண தியானத்தின் பெருமையை ஸ்ரீ சத்ய சாயி பாபா விளக்கியதோடு கோபியரின் ப்ரேமையைப் பற்றி இந்த உரையில் விரிவாக விளக்கி அருளியுள்ளார்.

***

 

ஆதாரம் : Sathya Sai Speaks Volume 3 (The Love of Gopis)

தமிழ் மொழிபெயர்ப்பு அவதார மொழி அமுதம் பாகம் 3 இல் உள்ளபடி தரப்பட்டுள்ளது.

புத்தக வெளியீடு : பிரசாந்தி நிலையம், ஆந்திர பிரதேசம்

 

சக்கராயுதம் சீமாலிகன் தலையை அறுத்த கதை (Post No.5484)

written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 September 2018

 

Time uploaded in London – 8-51 am (British Summer Time)

 

Post No. 5484

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

சக்கராயுதம் சீமாலிகன் தலையை அறுத்த கதை (Post No.5484)

 

“சீமாலிகவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்

சாமாறவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்”

 

என்று பெரியாழ்வார் பாடியதற்கு வியாக்கியானக்காரர்கள் ஒரு கதையைச் சொல்லுவதை தமிழ் பேரறிஞர் மு. இராகவையங்கார் எடுத்துக் காட்டியுள்ளார். இது வட நாட்டு ஸம்ஸ்க்ருத நூல்களில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கதை இதுதான்:-

 

சீமாலிகன் என்பவன் ஒரு இடையன் . கண்ணனின் நண்பன். கண்ணன் சக்கர ஆயுதத்தைக் கொண்டு போகும் போதெல்லாம் ‘அண்ணலே, என்னிடம் கொடுங்கள் நான் கொண்டு வருகிறேன்’ என்று நச்சரிப்பான். கிருஷ்ண பரமாத்மா சொன்னார்,

 

‘வேண்டாமப்பா! உனக்கேன் ஏன் சிரமம். மேலும் அது உன் தலையை

அறுத்துவிடும்’ — என்று சொல்லிப் பார்த்தார். அவன் கேட்டபாடில்லை.

 

 

அண்ணலும் அவன் நச்சரிப்பு தாளாமல் சக்கர ஆயுதத்தை அவன் கையில் கொடுத்தார். அவன் தலை அறுந்தது.

 

வேண்டாத விஷயங்களுக்கு ஆசைப்படக் கூடாது என்பதும், பெரியோர் சொன்னால் அதைக் கேட்க வேண்டும் என்பதும் நீதி.

 

ஆயினும் கண்ணனின் சக்கர ஆயுதத்தால் கொல்லப்ப்ட்டவனுக்கு முக்தி உண்டு. அதுவும் கண்ணனுக்கு உதவுவதற்காகச் செய்த செயல்தானே!

அதிக உற்சாகம் ஆளைக் கொல்லும்!

curiosity killed the cat என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். இதை ஷேக்ஸ்பியர்

What, courage man! what though care killed a cat, thou hast mettle enough in thee to kill care

-Much Ado about Nothing.

என்று சொன்னார். அவருக்கும் முன்பாக பென் ஜான்ஸன் (Ben Johnson)

..Helter skelter, hang sorrow, care will kill a cat, up-tails all, and a pox on the hangman (Every Man in His Humour)

என்று எழுதி இருந்தார். அந்த நாடகத்தில் ஷேக்ஸ்பியர் நடித்தார்.

 

–subham–

கம்போடியாவில் மாளய பக்ஷம் (Post No.5482)

RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 September 2018

 

Time uploaded in London – 6-48 AM (British Summer Time)

 

Post No. 5482

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

இறந்துபோன முன்னோர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விழா அல்லது புனிதச் சடங்கு புரட்டாஸி மாதத்தில் பௌர்ணமியில் துவங்கி அமாவாஸை முடிய நடைபெறும். அந்த அமாவாஸையை, மஹாளய (மாளய) அமாவாசை என்றும் அதற்கு முந்தைய 15 நாட்களை (பக்ஷம்), மாளய பக்ஷம் என்றும் இந்துக்கள் அழைப்பர்.

 

இதை கம்போடிய பௌத்தர்களும் கொண்டாடுகிறார்கள். இதன் ஒற்றுமையைக் காண்போம்

 

  1. இந்துக்கள் மாளய பக்ஷம் நடத்தும் காலத்தில் (செப்டம்பர், அக்டோபர், புரட்டாசி மாதம்) கம்போடியர்களும் முன்னோர்களுக்கு கடன் செலுத்துவர்.

 

2.இந்துக்களைப் போலவே சோற்றுப் (RICE BALLS) பிண்டங்களை இறந்தோருக்கு அளிப்பர்.

 

3.இந்துக்களைப் போலவே 15 நாள் (பக்ஷம் FORTNIGHT) கொண்டாடுவர்.

 

4.இந்துக்கள் மந்திரம் சொல்லிச் செய்வர். கம்போடியாவில் புத்த பிஷுக்கள் பாலி மொழி (PALI SUTTAS) சுத்தங்களை (சூக்தம்) சொல்லுவர்.

 

  1. இந்துக்கள் மாளய பஷம் என்பர்; கம்போடிய பௌத்தர்கள் ‘சம் பென்’ PCHUM BEN என்பர்.

 

  1. இந்துக்கள், முன்னோர்களை ‘பித்ருக்கள்’ என்று மரியாதையுடன் அழைப்பர். கம்போடியாவில் பாமர மக்களை நம்ப வைப்பதற்காக இறந்தோரின் ‘ஆவிகள்/பேய்கள்’ என்பர்.

 

  1. இந்துக்கள், இறந்தோர்கள் யமலோகத்தில் இருப்பார்கள் என்று சொல்லுவது போல கம்போடியர்களும் யம தர்மனை நினைவு கூறுகின்றனர்.

 

 

  1. ஒரே வேற்றுமை- கம்போடியர்கள், இறந்தோர் நரகத்தின் வாயில் திறந்தவுடன் ஆவிகளாக வெளியே வருவதாகச் சொல்லுவர். ஆனால் இந்துக்கள், அவர்களுடைய முன்னோர்கள் பரம மங்களகரமான ஆசிகளை வழங்குவதற்காக மேலுலகத்திலிருந்து பூவுலகிற்கு வருவதாக நம்புகின்றனர்.

 

ஒரு அதிகாரியோ, அமைச்சரோ நம்முடைய ஊருக்கு வரும்போது நாம் எளிதில் சிரமம் இன்றி மனு கொடுப்பது போல, நம் முன்னோர்கள், பூவுலகிற்கு வருகையில் நாம் எளிதில் ஆஸிகள் பெறும் காலம் இது.

 

  1. மநு தர்ம சாஸ்திரம் முதல் தமிழ் வேதமான திருக்குறள் வரை ஏழு தலைமுறை (எழுமை) பற்றிப் பேசும். இந்துக்களைப் போலவே கம்போடியர்களும் ஏழு தலைமுறைக்கு படைப்பு படைப்பதாக நம்புகின்றனர்.

 

10.இந்துக்கள், வெப்ப மண்டல நாடான இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்ததால் எல்லாவற்றிலும் அரிசி (பிண்டம்), எள், தண்ணீரைப் பயன்படுத்துவர். கம்போடியர்கள் ஊதுவத்திகளையும் மெழுகு திரிகளையும் பயன்படுத்துகின்றனர்.

11.கம்போடிய மாதமான போத்ர்பாத்ரில் (POTRBOTR) இதை அனுஷ்டிப்பதாகச் சொல்லுகிறார்கள். இது பாத்ரபத என்னும் ஸம்ஸ்க்ருத மாதப் பெயர். இதை தமிழர்கள் புரட்டாசி ஆக்கிவிட்டனர். கம்போடியர் போத்ர் போத்ர் ஆக்கிவிட்டனர்.

 

 

இந்தியாவில் பெரும்பாலோர்- காத்மாண்டு முதல் கண்டி வரை– ஏப்ரல் 14 புத்தாண்டு கொண்டாடுவது போல தென்கிழக்காசிய நாடுகள் அனைத்தும் கொண்டாடும். கம்போடியர்களுக்கு ஏப்ரல் 14ம் இந்த மாளய பக்ஷமும் தேசிய விடுமுறை. அவர்கள் வாழ்க்கையில் முக்கியமான பண்டிகை மாளய பக்ஷம். யாரும் புத்தமத கோவிலுக்குப் போகாமல் இருக்க மாட்டார்கள்.

 

இது போல இலங்கைப் பௌத்தர்களும் முன்னோர்களுக்கு படைப்பு படைக்கின்றனர். அவர்கள் எல்லோரும் இறந்துபோன முன்னோரை ‘பேய்’ என்று நினைக்கின்றனர். இந்துக்கள் மட்டும் இறந்தோரை தெய்வ நிலைக்கு உயர்த்தி நம்மை என்றும் ஆசிர்வதிக்கக் காத்திருப்பதாக நம்புகின்றனர்.

 

படங்கள் இன்றைய டெக்கான் க்ரானிக்கிள் DECCAN CHRONICLE பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டவை; நன்றி

 

–சுபம்–

அவ்வையாரின் ஆத்திச் சூடி பொன்மொழிகள் (Post No.5478)

COMPILED by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 September 2018

 

Time uploaded in London – 7-27 am (British Summer Time)

 

Post No. 5478

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

அக்டோபர் 2018 காலண்டர்

விளம்பி-புரட்டாசி/ஐப்பசி

அவ்வையாரின் ஆத்திச் சூடி பொன்மொழிகள்

பண்டிகை நாட்கள்:- அக்டோபர் 2 காந்தி ஜயந்தி ,  8 மஹாளய அமாவாசை,9  நவராத்ரி ஆரம்பம், 18 ஸரஸ்வதி பூஜை,  19 விஜய தஸமி/ துர்கா பூஜை

 

அமாவாஸை- அக்டோபர் 8; பௌர்ணமி- 24;

ஏகாதஸி விரத நாட்கள்-அக்டோபர்  5, 20; முஹூர்த்த நாட்கள்- அக்டோபர் 9, 28, 31

 

அக்டோபர் 1 திங்கட் கிழமை

அறம் செய விரும்பு

1.DESIRE TO DO VIRTUE / DESIRE TO DO CHARITY.

 

அக்டோபர் 2 செவ்வய்க் கிழமை

ஆறுவது சினம்

2.ANGER SHOULD BE SUBDUED.

 

அக்டோபர் 3 புதன் கிழமை

இயல்வது கரவேல்

3.DO NOT CONCEAL YOUR MEANS/ DO NOT REFUSE HELP WHERE IT IS PRACTICABLE.

 

அக்டோபர் 4 வியாழக் கிழமை

ஈவது விலக்கேல்

4.DO NOT PREVENT GIVING ALMS.

 

அக்டோபர் 5 வெள்ளிக் கிழமை

உடையது விளம்பேல்

5.DO NOT BOAST OF YOUR POSSESSIONS/ DO NOT SPEAK IN PRAISE OF YOUR GREATNESS.

 

அக்டோபர் 6 சனிக் கிழமை

ஊக்கமது கைவிடேல்

6.DO NOT LOSE YOUR COURAGE/ CEASE NOT TO PERSEVERE

 

அக்டோபர் 7 ஞாயிற்றுக் கிழமை

எண் எழுத்து இகழேல்

7.DO NOT DESPISE NUMBERS AND LETTERS/ DO NOT NEGLECT THE STUDY OF ARITHMETIC AND GRAMMAR

 

அக்டோபர் 8 திங்கட் கிழமை

ஏற்பது இகழ்ச்சி

8.BEGGING IS DISGRACEFUL

அக்டோபர் 9 செவ்வய்க் கிழமை

ஐயமிட்டு உண்

9.GIVE ALMS AND THEN EAT

 

அக்டோபர் 10 புதன் கிழமை

ஒப்புரவு ஒழுகு

10.CONDUCT YOURSELF CONSISTENTLY/ FOLLOW ESTABLISHED CUSTOMS

 

 

அக்டோபர் 11 வியாழக் கிழமை

ஓதுவது ஒழியேல்

11.CEASE NOT TO LEARN/ DO NOT NEGLECT THE STUDY OF THE VEDAS

 

அக்டோபர் 12 வெள்ளிக் கிழமை

ஔவியம் பேசேல்

12.DO NOT SPEAK ENVIOUSLY

 

அக்டோபர் 13 சனிக் கிழமை

கண்டு ஒன்று சொல்லேல்

13.DO NOT SAY ONE THING AFTER SEEING ANOTHER/ DO NOT SAY ONE THING TO A MAN’S FACE AND ANOTHER BEHIND HIS BACK

 

அக்டோபர் 14 ஞாயிற்றுக் கிழமை

ஙப் போல் வளை

14.BE UNITED TO YOUR RELATIVES LIKE THE LETTER OR BEND LIKE ‘NGA’

THERE ARE FOUR DIFFERENT READINGS FOR THIS SAYING.

LIKE THE SHAPE OF THE LETTER ’ ங ‘ SURROUND AND PROTECT YOUR RELATIVES.

DRAW UP YOUR FORCES ENCOMPASSING THE ENEMY IN THE FORM OF LETTER ‘ ங ‘

 

STAND LIKE THE LETTER ங ‘ ‘ AND FIGHT I.E. AS THE CONSONANT ‘ ங ‘ TAKES AN INTERMEDIATE POSITION IN WORDS TAKE A STAND BETWEEN THE VAN AND REAR OF YOUR ARMY AND FIGHT.

 

BUILD THE ENTRANCE OF THE FORT IN WINDINGS LIKE THE LETTER ங ‘ ‘

 

 

அக்டோபர் 15 திங்கட் கிழமை

சனி நீராடு

15.BATHE ON SATURDAY (WITH OIL)’ BATHE THE BODY IN SPRING WATER, FIRST BATHING THE DEFILED MIND IN TRUTH.

 

அக்டோபர் 16 செவ்வய்க் கிழமை

ஞயம்பட உரை

16.SPEAK SO AS TO GIVE PLEASURE

 

அக்டோபர் 17 புதன் கிழமை

இடம்பட வீடு இடேல்

17.DO NOT BUILD TOO LARGE A HOUSE

 

அக்டோபர் 18 வியாழக் கிழமை

இணக்கம் அறிந்து இணங்கு

18.BE FRIENDLY ON EXPERIENCING FRIENDSHIP

 

அக்டோபர் 19 வெள்ளிக் கிழமை

தந்தை தாய் பேண்

19.PROTECT YOUR FATHER AND MOTHER

 

அக்டோபர் 20 சனிக் கிழமை

நன்றி மறவேல்

20.FORGET NOT A BENEFIT

 

அக்டோபர் 21 ஞாயிற்றுக் கிழமை

பருவத்தே பயிர் செய்

21.SOW IN DUE SEASON

அக்டோபர் 22 திங்கட் கிழமை

மன்று பறித்து உண்ணேல்

22.DO NOT LIVE BY LAND WRESTED FROM YOUR NEIGHBOUR/ DO NOT GAIN A LIVELIHOOD BY MEANS OF BRIBES TAKEN IN A COURT OF JUSTICE

 

அக்டோபர் 23 செவ்வய்க் கிழமை

இயல்பு அலாதன செயேல்

23.DO NO IMPROPER ACTION/ DO NOT WANDER ABOUT DELUDED BY THE SENSES

 

அக்டோபர் 24 புதன் கிழமை

அரவம் ஆட்டேல்

24.DO NOT PLAY WITH A SNAKE/  DO NOT SPEAK VAINLY

 

அக்டோபர் 25 வியாழக் கிழமை

இலவம் பஞ்சில் துயில்

25.SLEEP ON A MATTRESS OF SILK COTTON

அக்டோபர் 26 வெள்ளிக் கிழமை

வஞ்சகம் பேசேல்

26.DO NOT SPEAK DECEITFULLY

 

அக்டோபர் 27 சனிக் கிழமை

அழகு அலாதன செயேல்

27.DO NO DISGRACEFUL ACTION

 

அக்டோபர் 28 ஞாயிற்றுக் கிழமை

இளமையில் கல்

28.LEARN FROM CHILDHOOD

 

அக்டோபர் 29 திங்கட் கிழமை

காப்பது விரதம்

29.FORGET NOT YOUR DUTY (CHARITABLE ACTIONS ARE INTENDED)

 

அக்டோபர் 30 செவ்வய்க் கிழமை

அனந்தல் ஆடேல்

30.DO NOT SLEEP TOO LONG

அக்டோபர் 31 புதன் கிழமை

கடிவது மற

31.AVOID UNKIND WORDS

 

—SUBHAM–

கண்ண பிரான் பற்றிய அபூர்வ கதை!(Post No.5474)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 September 2018

 

Time uploaded in London – 7-38 am (British Summer Time)

 

Post No. 5474

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

கண்ண பிரான் பற்றிய அபூர்வ கதை!(Post No.5474)

 

கிருஷ்ணனைப் பற்றிய ஒரு அபூர்வ கதையை ஆழ்வார்கள் பாடியுள்ளனர். இந்தக் கதை வட இந்தியாவில் இல்லை, ஸம்ஸ்க்ருத நூல்களில் இல்லை என்று மு.இராகவையங்கார் கூறுகிறார். இது சுவையான கதை மட்டுமல்ல.

 

ஜடப் பொருட்களுக்கும் முக்தி உண்டு என்று தெரிகிறது. அல்லது ஒருவனின் எல்லையற்ற பக்தி எந்த அளவுக்குச் செல்லும் என்று காட்டுவதாகவும் கொள்ளலாம்.

 

தமிழில் புறநானூற்றில் உள்ள ராமாயணச் செய்திகள் கம்பனிலோ வால்மீகியிலோ இல்லை. ஆழ்வார்கள் பாடிய பல ராமாயண சம்பவங்கள் வேறு எந்த ராமாயணத்திலும் இல்லை. ஒரு வேளை கம்பன் சொல்லும் மூன்று ராமாயணங்களும் அவர்கள் பாடிய காலத்தில் கிடைத்திருக்கலாம்.

 

இதே போல பாகவதத்தில் இல்லாத கதைகளும் ஆழ்வார் பாடல்களில் இருப்பது ஆராய்ச்சிக்குரியது.

 

தமிழ் மொழி -தெய்வத் தமிழ், தமிழ்நாடு தெய்வ பூமி என்பதற்கு இவை எல்லாம் எடுத்துக்காட்டுகளாக நிற்கின்றன.

 

இதோ இணப்பிலுள்ள ததிபாண்டன் கதையைப் படியுங்கள்; வழங்கியவர் மு. ராகவ அய்யங்கார் என்னும் மிகப்பெரிய தமிழ் அறிஞர். காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள், தமிழ் தாத்தா உ.வே.சா.,  பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரம் பிள்ளை ஆகியோரால் பாராட்டப்பட்ட பெரியார் வழங்கிய கதை:-

 

 

வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 2 (Post No.5472)

Written by S NAGARAJAN

Date: 26 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-22 AM (British Summer Time)

 

Post No. 5472

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

வில்லிபாரதம்

வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல் – 1 என்னும் கட்டுரை ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. (கட்டுரை எண் 5394 – பதிவு தேதி 5-9-2018)

 

வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 2

 

ச.நாகராஜன்

 

 

   வீர சோழியம், தண்டியலங்காரம் ஆகிய நூல்களில் சொல்லணியில் முதலாவதாக இடம் பெறும் அணி  மடக்கணி.

 

ஒரே சொல்லே வெவ்வேறு பொருளில் ஒரு பாடலில் வருவது மடக்கணியாகும்.

 

  வில்லிப்புத்தூரார் மகாபாரதத்தில் பல்வேறு இடங்களில் இந்த அணியைச் சிறப்பாக இடம் பெறச் செய்து கவிதா ரஸிகர்களை மனம் மகிழச் செய்கிறார்.

 

மடக்கணி இடம் பெறும் ஒரு பாடல் சபா பருவத்தில் சூது போர்ச் சருக்கத்தில் இடம் பெறுகிறது. பாடல் எண் 64.

அது வருமாறு:-

 

 

மூத்த தாதைதன் னோலையு மிளையவன் மொழியுமொத் தமை நோக்கி,

வார்த்தை வேறுமற்  றொன்றையு முரைத்திலன் மனுநெறி வழுவாதோன்,

சேத்த நாகவெங் கொடியவன் கொடியவன் சிந்தையின் நிலைதோன்றக்,

கோத்த கோவைநன் றாயினுந் தகுவதோ குருகுலத் தனக்கென்றான்.

 

 

பாடலின் பொருள் :- மனு நெறி வழுவாதோன் – மனு தர்மம் சிறிதும் வழுவாத தர்மபுத்திரன்

மூத்த தாதை தன் ஓலையும் இளையவன் மொழியும் ஒத்துமை நோக்கி – பெரிய தந்தையான திருதராஷ்டிரன் அனுப்பிய பத்திரிகையும் சிறிய தந்தையான விதுரன் சொன்ன வார்த்தையும் ஒத்திருப்பதைக் கண்டு

வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன் – நியாயத்துக்கு மாறான வேறொரு வார்த்தையையும் சொல்லாதவனாகி,

சேத்த நாக வெம் கொடியவன் – கோபத்தினால் கண் சிவந்த சர்ப்பத்தின் வடிவம் பொறித்த பயங்கரமான கொடியை உடையவனாகிய துரியோதனன்

கொடியவன் சிந்தையின் நிலை  தோன்ற – மிகக்  கொடிய மனத்தின் இயல்பு விளங்கும் வகையில் தனது சிந்தைக்கு ஏற்றபடி

 

கோத்த – தொடர்ச்சியாக ஆலோசித்த

கோவை – ஆலோசனைத் தொடர்

நன்று ஆயினும் – அவனுக்கு நல்லதாக இருப்பினும்

குருகுலம் தனக்குத் தருவதோ என்றான் – குருகுலத்தின் பெருமைக்குத் தகுமோ என்றான்.

வஞ்சனையாக சூதாட வருமாறு அழைக்கின்றான் துரியோதனன். அது துரியோதனனுக்கு நலம் பயக்கும். ஆனால் குடிப்பெருமைக்கு இழுக்கல்லவா ஏற்படுத்தும் என்பது தருமனின் கூற்று.

 

 

இப்பாடலில் நாக வெங்கொடியவன், கொடியவன் என்ற வரியில் கொடியவன் என்ற சொல் இரு பொருள்களில் வருவதால் இது மடக்கணியாகும்.

 

சீற்றமுடைய பாம்பின் கொடியைக் கொண்டவன், உண்மையில் இயல்பாலும் மனத்தாலும் கொடியவன் அல்லவா?

 

Picture posted by Lalgudi Veda

இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உள்ளது. கருத்துடையடைகொளியணி என்ற சிறப்பான ஒரு அணியும் இந்தப் பாடலில் உள்ளது.

 

இந்தச் செய்யுளில் தருமன் மனு நெறி வழுவாதோன் என குறிப்பிடப் படுகிறான். அதாவது எந்த நிலையிலும் தகுதி இல்லாத சொற்களை சொல்லாது தக்க மொழியையே பேசுபவன் தர்மன். ஆனால் அதற்கு நேர்மாறாக – நாக வெம் கொடியவன் – விஷப் பாம்பை கொடியிலே கொண்டு உள்ளத்திலும் தீக்குணங்களைக் கொண்டவன் துரியோதனன். எப்போதும் நல்லோர்க்குத் தீமை விளைவிப்பவன். தீயதையே சொல்வான்; தீயதையே செய்வான்.

 

ஆக இந்த இரண்டு கருத்துக்களையும் இந்தச் செய்யுள் கொண்டிருப்பதால் இது கருத்துடையடைகொளியணி எனப்படும் அணியைக் கொண்டுள்ளது.

வில்லிப்புத்தூரார் இடத்திற்கு ஏற்றபடி சொற்களையும் அணிகளையும் கையாளும் திறன் கொண்டவர் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சான்று.

***

குறிப்பு : பாடலின் உரை வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் இயற்றியதைப் பின்பற்றியதாகும்.

தமிழில் அலங்காரம் என்ற கட்டுரையில் 25 வது அணியாக இடம் பெறுவது கருத்துடையடைகொளணி. இந்தக் கட்டுரை எண் 5455. வெளியான தேதி 22-9-2018

***

 

ஹர் பிலாஸ் சர்தா – ஹிந்து நாகரிக மேன்மையை எழுதியவர்! (Post No.5466)

Written by S NAGARAJAN

Date: 25 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-17 AM (British Summer Time)

 

Post No. 5466

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

ஹர் பிலாஸ் சர்தா – ஹிந்து நாகரிக மேன்மையை எழுதியவர்!

 

ச.நாகராஜன்

 

ஹிந்து நாகரிகத்தின் மேன்மையை எழுதிய சிறந்த ஹிந்து ஹர் பிலாஸ் சர்தா.(Har Bilas Sarda)   ‘ Hindu Superiority’ – ஹிந்து சுபீரியாரிடி என்ற அவரது புத்தகம் ஹிந்துக்கள் அனைத்துக் கலைகளிலும் விஞ்ஞானத்திலும் மேம்பட்டிருந்த நிலையை ஆதாரங்களுடன் விளக்குகிறது.

 

ஹர் பிலாஸ் சர்தா ஆஜ்மீரில் பிறந்தார். (பிறப்பு : 3-6-1867 மறைவு : 20-1-1955). ஆசிரியராகவும், நீதிபதியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அவர் குழந்தை திருமணத் தடைச் சட்டத்தால் பெரிதும் அறியப்பட்டார். திவான் பகதூர் பட்டத்தையும் ஆங்கிலேய ஆட்சியில் பெற்றார்.

அவரது தந்தையான ஹர் நாராயண் சர்தா ஒரு வேதாந்தி. ஆஜ்மீர் அரசுக் கல்லூரியில் நூலகராக அவர் வேலை பார்த்து வந்தார்.

 

சர்தா பி.ஏ. பட்டத்தையும் பின்னர் பெர்சிய மொழி மற்றும் தத்துவத்திலும் தேர்ச்சி பெற்றார்,

இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு 18881இல் அலகாபாத்தில் நடந்த போது அங்கு சென்று அதில் கலந்து கொண்டார். பின்னர் பல காங்கிரஸ் மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.

ஆஜ்மீர் மெர்வாரா மாகாணத்தில் 1892இல் அவர் நீதித்துறையில் சேர்ந்தார். 1894இல் ஆஜ்மீர் முனிசிபல் கமிஷனராக ஆனார். படிப்படியாக நீதித் துறையில் உயர்ந்த அவர் 1923இல் அடிஷனல் டிஸ்ட்ரிக்ட் மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக ஆனார். ஆஜ்மீர் அசெம்பிளி உறுப்பினராக ஆன பெருமையும் அவருக்கு உண்டு.

ஆர்ய சமாஜத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்ட அவர் அதன் நிறுவனரான தயானந்த சரஸ்வதி மீது இளமையிலிருந்தே பக்தி கொண்டிருந்தார். 1888இல் ஆஜ்மீர் பிரிவின் தலைவராகவும் ஆனார். தயானந்த சரஸ்வதி தனது மறைவிற்குப் பின்னர் ஆர்ய சமாஜத்தை நடத்திச் செல்ல 23 உறுப்பினர்களைக் கொண்ட பரோபகாரிணி சபை ஒன்றை நிறுவ ஏற்பாடு செய்து அதைத் தன் உயிலில் எழுதி வைத்தார். அதன்படி அதில் நியமிக்கப்பட சர்தா படிப்படியாக உயர்ந்து ஆர்ய சமாஜத்தின் செயலாளராக ஆனார். இன்று இந்தியாவெங்கும் பல ஊர்களில் பிரபலமடைந்திருப்பது டிஏவி (DAV School) பள்ளித் தொடர். ஆஜ்மீரில் டிஏவி பள்ளியை நிறுவ அவர் பெரிதும் காரணகர்த்தராக இருந்தார்.

சமூக சீர்திருத்தங்களில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த அவர் 1929ஆண்டு நிறைவேற்றப்பட்ட குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

சர்தா சட்டம் என்ற பெயரால் பிரபலமான அது சாரதா சட்டம் என்று பெயர் மருவி இன்றும் அப்படியே அழைக்கப்படுகிறது.

ஹிந்து சுபீரியாரிடி, ஆஜ்மீர் வரலாறு, மஹாராணா கும்பா,மஹாராணா சங்கா,மஹாராஜா ஹமிர் ஆகிய அவரது புத்தகங்கள் ஹிந்து மேன்மையை உணர்த்தும் புத்தகங்களாக அமைந்தன.

ஹிந்து சுபீரியாரிடி என்ற அவரது நூல் மிகுந்த ஆராய்ச்சியின் பேரில் எழுதப்பட்ட புத்தகம்.

1906 நவம்பரில் இதன் முதல் பதிப்பு வெளியானது. பின்னர் பல பதிப்புகளைக் கண்டு இன்றும் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது. இதை இலவசமாக இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

415 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் பல பகுதிகளைக் கொண்டது.

Antiquity, Government, Social System, Character, chivalry, Patriotism, Valour, Position of Women, Foreign Relations ஆகியவற்றை முதல் பகுதி விவரிக்கிறது.

அடுத்த பகுதி  Hindu Colonization of the World பற்றியது. Egypt and Ethiopia, Persia, Turkistan and Northern Asia, Scandinavia, Eastern Asia, China and Japan, America ஆகிய அத்தியாயங்களில் வியக்க வைக்கும் பல உண்மைகளை நாம் காணலாம்.

அடுத்த பகுதி Literature பற்றியது. Sanskrit Language, Art of Writing, Vedic Literature, Poetry, Epic Poetry, Drama, Lyric Poetry, Ethico- Didactic Poetry ஆகிய அத்தியாயங்களில் ஹிந்துக்களின் இலக்கிய மேன்மை விளக்கப்பட்டுள்ளது.

அடுத்த பகுதி Philosophy பற்றியது. Nyaya, Vaisheshik, Sankya, Yoga, Mimasa ஆகிய அத்தியாயங்கள் கொண்ட இந்தப் பகுதி ஹிந்துக்களின் உயர் தத்துவ நிலையைச் சுட்டிக்காட்டுகிறது.

அடுத்த பகுதி Science. Medicine, Mathematics – Arithmetic, Geometry, Algebra, Astronomy, Military Science, Music, Other Sciences ஆகிய அத்தியாயங்கள் ஹிந்துக்களின் உயர் விஞ்ஞான அறிவைத் தெள்ளத் தெளிவாக விளக்குபவை.

அடுத்த பகுதி Arts.   Architecture and Sculpture, Painting,  Weaving, Steel and Iron Manufactures, Other Arts ஆகிய அத்தியாயங்களில் ஹிந்துக்களின் பல்கலை அறிவைப் பார்க்கலாம்.

அடுத்த பகுதியான Commerce and Wealth  ஹிந்துக்களின் Commerce , Wealth பற்றி விளக்கும் பகுதியாக அமைகிறது. இதில் இந்தியா எப்படி உலகின் மிகப் பணக்கார நாடாக இலங்கியது என்பது விளக்கப்படுகிறது.

நூலின் இறுதி அத்தியாயமாக அமைவது Religion.

ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறது. நூலை முடித்து விட்ட போது ஹிந்து வானளவு உயர்ந்து நிற்கிறான்.

ஆயிரக்கணக்கான அழகிய கருத்துக்களை ஆதாரபூர்வமாக இந்தப் புத்தகம் விளக்குவதால் ஒவ்வொரு ஹிந்துவும் இதைப் படிக்க வேண்டியது  இன்றியமையாததாக ஆகிறது.

***

 

 

 

மாளய பக்ஷம் ஆரம்பம் (Post No.5465)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 24 September 2018

 

Time uploaded in London – 18-29 (British Summer Time)

 

Post No. 5465

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

இந்த 2018 ஆம் ஆண்டில் நாளது செப்டம்பர் 25 முதல் மஹாளய பக்ஷம் (மாளய பட்சம் )ஆரம்பமாகிறது. அதாவது புரட்டாசி மாதம் கிருஷ்ண பக்ஷ பிரதமை முதல் அமாவாஸை  வரையுள்ள 15 நாட்கள். இந்த ஆண்டு அக்டோபர 8-ம் தேதி மஹாளய அமாவாஸை வருகிறது. அது வரை பிரஹ்மணர்கள் வெங்காயம், பூண்டு முதலிய சில காய்கறிகளைத் தவிர்த் து தினமும் தர்ப்பணம் செய்வர். சிலர் அவர்களின்  தந்தை இறந்த திதி அன்று செய்வர். இந்தக் காலத்தில் இறந்த நமது முன்னோர்கள், நம்மிடமிருந்து படைப்பு பெறவும் நமக்கும் நமது சந்ததியினருக்கும் நல்லாசி வழங்கவும் காத்திருப்பராம் எல்லோருக்கும் மாளய அமாவாஸை மிக முக்கியமானது.

 

100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பிரபஞ்ச உற்பத்தி என்ற நூலில் கண்ட இரண்டு பக்க விஷயங்களை இத்துடன் இணைத்துள்ளேன். படித்துப் பயன் பெறுக.

 

–subham–

தேவையும், பேராசையும்! (Post No.5462)

Written by S NAGARAJAN

Date: 24 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-50 AM (British Summer Time)

 

Post No. 5462

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ச.நாகராஜன்

 

1997ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த காட்வின் சமரரத்னே (தோற்றம் : 6-9-1932 மறைவு 22-3-2000) ஹாங்காங்கில் ஒரு தொடர் சொற்பொழிவை நிகழ்த்தினார். 6-10-1997இலிருந்து 11-10-1997 முடிய ஆறு நாட்கள் நடந்த சொற்பொழிவைத் தொடர்ந்து ஏழாவது நாள் முடிவுரை நிகழ்த்தப்பட்டது. முடிவுரையில் அவர் தேவை பற்றியும் பேராசை பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.

 

 

முதலில் காட்வினைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.

காட்வின் இலங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். நூலகராக கெகல்லே பொது நூலகத்தில் 1956ஆம் ஆண்டு சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கினார். புத்தமதத்தில் ஆர்வம் ஏற்படவே அதைப் பற்றி நிறையப் படிக்கலானார்.

 

 

மறுபிறப்பு பற்றி ஆய்வு நடத்திய புகழ் பெற்ற விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் இலங்கைக்கு வந்த போது அவருக்கு ஏராளமான உதவிகளைச் செய்ததோடு அவருக்கு மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அதீத உளவியல் பற்றி அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

 

 

புத்த தியான முறையில் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படவே, பல நாடுகளிலிருந்தும் அவருக்கு தியான பயிற்சிகள் நடத்துவதற்காக அழைப்புகள் வந்தன. அதையேற்றுப் பல நாடுகளுக்கும் அவர் சென்றார்.

கல்மிஷம் இல்லாத எளிய சாதாரண வாழ்க்கையை மேற்கொண்ட அவரைப் பார்த்தால் பெரிய அபிப்ராயம் ஒன்றும் தோன்றாது. ஆனால் அவரைச் சந்தித்துப் பழகிய சில நிமிடங்களிலேயே அவர் சற்று வித்தியாசமான மனிதர் என்று தோன்றி விடும்.

 

 

அவரது சொற்பொழிவில் ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகளும், உவமைகளும், குட்டிக் கதைகளும் இடம் பெறும்.

தன்னைக் கேலி செய்யும் சம்பவங்களைக் கூட ஒளிக்காமல் அவர் பயிற்சியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். அதில்  ஒரு சம்பவம் இது:

 

 

மேலை நாட்டில் நடந்த பயிற்சி முகாம் ஒன்றில் நிறைவு நாளன்று ஒரு பெண்மணி அந்த பயிற்சி முகாமில் அவர் கற்றதையெல்லாம் ஏற்கனவே அவரது நாயிடமிருந்து கற்று விட்டதாக கூறினார்.

 

 

இதைக் கேட்ட காட்வினுக்கு ஆவல் உந்தியது. “அப்படியா! அந்த நாய் பற்றி இன்னும் கொஞ்சம் விவரியுங்களேன்!” என்றார்.

அந்தப் பெண்மணி கூறினார்: “ நீங்கள் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ வேண்டும் என்று சொல்கிறீர்கள். என் நாய் எப்போதும் நிகழ்காலத்தில் தான் வாழ்கிறது! நீங்கள் எப்போதும் நன்றி உடையவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்; என் நாய் எப்போதுமே நன்றியுடன் இருக்கிறது! “ இதைத் தொடர்ந்து அந்தப் பெண்மணி அவளுடைய நாயின் நடத்தையை இன்னும் விவரமாகக் கூறிக் கொண்டே போனாள்.

 

 

கடைசியில் அவள் நிறுத்தியவுடன் காட்வின் அவளை நோக்கி, “உங்கள் நாய்க்கும் எனக்கும் வித்தியாசமே இல்லையா?” என்று கேட்டார்.

 

அதற்கு அந்தப் பெண்மணி, “ஏன் இல்லை? நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். என் நாய் பேசவே பேசாது” என்றாள்.

இப்படி காட்வின் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வெளிப்படையாக நகைச்சுவையுடன் சுவைபடக் கூறினார்.

2

இனி அவர் தேவை பற்றியும் பேராசை பற்றியும் தனது உரையாடலில் கூறியதைப் பார்ப்போம்.

 

அவர் இலங்கையில் நடத்தி வந்த தியான மையத்தில் ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவத்தைப் பற்றி அவர் விவரிக்க ஆரம்பித்தார்.

 

அவரது நண்பர் ஒருவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அவர் ஒரு நாள் கோவில் ஒன்றிற்குச் சென்றார். கோவிலின் வாயிலில் பிச்சைக்காரர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். தனக்கு முன்னால் ஒரு சின்னத் துண்டை அவர் விரித்திருந்தார். அதில் பிச்சைக் காசு போடுவோர் போட்டுக் கொண்டிருந்தனர். அவர் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நண்பர் அவரது முகத்தில் இருந்த அமைதியையும் அவர் கண்களை மூடி அமர்ந்திருந்த பாங்கையும் பார்த்து ஒரு ஓரமாக நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

திடீரென்று அந்த பிச்சைக்காரர் கண்களை விழித்துக் கொண்டு எழுந்தார். துண்டிலிருந்து சில காசுகளை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை தரையில் விட்டெறிந்தார்.அருகிலிருந்த ஒரு கடைக்குச் சென்று சாப்பிடுவதற்கு ஏதோ ஒன்றையும் குடிப்பதற்கு ஒரு பானத்தையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து எங்கேயோ நடந்து சென்றார்.

 

தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு பிச்சைக்காரராக இருந்த போதிலும் மீதியை அங்கேயே விட்டு விட்ட அந்தச் சம்பவம் நண்பர் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்ப்டுத்தியது.

 

உடனடியாக அவர் மனதில் ஒரு கவிதை தோன்றியது “

 

He who knows his need

And yet without greed

Whatever be his creed

He is a saint indeed.

 

இது தான் அந்தக் கவிதை!

 

எவனுக்குத் தன் தேவை தெரியுமோ

தெரிந்திருந்தும் பேராசைப் படவில்லையோ

அவன் எந்த சமய நம்பிக்கை கொண்டவனாகத் தான் இருக்கட்டுமே

உண்மையில் அவனே ஒரு மகான்!

 

இதை எழுதி சமையலறையில் அவர் மாட்டி வைத்தார்.

இதை காட்வின் கூறி விட்டு, “ நீங்கள் உங்கள் பணத்தை எறிய வேண்டும் என்று நான் கூறவில்லை. தேவைக்கு உரியதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். திருப்தியுடன் வாழுங்கள். இந்த ஆன்மீக குணம் தம்மத்தில் (புத்தமத தர்மத்தில்) அதிகமாக வலியுறுத்தப்படுகிறது. பாலி மொழியில் அருமையான ஒரு வார்த்தையால் இந்தக் குணம் விவரிக்கப்படுகிறது. அந்த வார்த்தை சந்துத்தி (Santutthi).

 

திருப்தி என்பது ஒரு பெரிய செல்வம்” என்று  முடித்தார்.

***