புத்தரின் ரஹஸிய ஹிந்து வழிபாடு (Post No.5366)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date: 26 August 2018

 

Time uploaded in London – 21-11 (British Summer Time)

 

Post No. 5366

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

புத்தர் ஒரு ‘பக்கா’ ஹிந்து. அவர்  ஹிந்துவாகப் பிறந்து இந்துவாகவே வாழ்ந்தார் என்பது அவருடைய சிலைகளில் இருந்தும் பிறகாலத்தில் புத்த மதத்தினர் செய்த செயல்களில் இருந்தும் தெரிகின்றது..

புத்தர், இந்து மதத்தை எதிர்த்து புரட்சி செய்தார்- குறிப்பாக பிராஹ்மணர்களின் சடங்குகளை எதிர்த்து புரட்சி செய்தார் என்று வெள்ளைக் காரர்கள் எழுதிவைத்தனர். இதனால் ஒரு நன்மை விளைந்தது. எல்லா ‘திராவிடங்களும்’ புத்தர் மிகவும் நல்லவர் என்று தங்கள் வீட்டில் ஏசுநாதர் படத்துடன் புத்தர் படத்தையும் வைத்தனர். அது ஒன்றுதான் நன்மை.

 

நான் மதுரை வடக்கு மாசிவீதியில் (Madurai) ஒரு தி.மு.க டாக்டர் வீட்டுக்கு அருகில் வசித்தேன். அவர்தான் எங்கள் குடும்ப டாக்டர். அவர் வீட்டிலும் புத்தர் படம் அண்ணாதுரை படத்துக்கு அடுத்ததாக இருக்கும்.  பாவம் அவர்கள்  பாலி மொழியில்  உள்ள புத்த மத நூல்களைப் படித்ததும் இல்லை.   புத்த மதத்தினர் உலகெங்கும் என்ன செய்கிறார்கள் என்று அறிந்ததும் இல்லை.

Dharmachakra Mudra

Bhumisparsa Mudra

Varada Mudra

Dhyana Mudra

Abhaya Mudra

 

இந்தக் கட்டுரை எழுதக்   காரணமான புஸ்தகம் 100 ஆண்டுக்கு முன்னர்

ஒருவர் 160 படங்களுடன் வெளியிட்ட ஜாவா (போரோபுதூர், இந்தோநேஷியா)  பற்றிய புஸ்தகமாகும்.

 

அந்த ஜெர்மன் புஸ்தகத்தில்  புத்தரின் தியான  முத்திரைகள்   உள்ளன. அவை அனைத்தும்  இந்துக்கள் பின்பற்றிய தியான முத்திரைகள்.   பௌத்தர்கள்  அவைகளுக்கு ஏதேதோ விளக்கங்கள் சொல்லுவர்.  அதிலும் கூட அவர் பூமாதேவியை சாட்சிக்குக் கூப்பிடும் ‘பூமி ஸ்பர்ஸ’ முத்திரை உள்ளதாகச் சொல்லுவர். அவருக்கும் நம்மைப் போலவே அதர்வண வேதம் சொல்லும் பூமாதேவி மீது நம்பிக்கை இருந்ததை அவர்களும் ஒப்புக்கொள்ளுவர்.

 

புத்த மத நூல்கள் அனைத்திலும் இந்திரனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. இந்திரனும் வந்து புத்தரை வணங்கியதாகக் கதை சொல்லுவர். ஆகவே வேதங்கள் போற்றும் இந்திரனிலும் அவர்களுக்கு நம்பிக்கை உண்டு .

 

 

இதையெல்லாம் விட புத்த மத வேதமான ‘தம்ம பத’த்தில் ஒரு அத்தியாயம் முழுதும் பிராஹ்மணர்களைப் போற்றியுள்ளர் புத்தர். அவர்கள் கொலை செய்தாலும் அரசாட்சியை கவிழ்த்தாலும் நல்லவர்களே என்று அதிரடி அடிக்கிறார்.

 

பின்னர் அவர் எதை எதிர்த்தார? சடங்குகளை எதிர்த்தார். யாக யக்ஞங்களை செய்யாமலும் உயர்நிலையை அடையலாம் என்றார். அதையே உபநிஷத்துகளும் புத்தருக்கு முன்னமேயே சொல்லிவிட்டன. உண்மையில் புத்தர் போல உயர்நிலை எய்திய  ரிஷி முனிவர்கள், யாக யக்ஞத்தைச் செய்யாமல், நூற்றுக்கணக்கான வருடங்கள் தவம் செய்து அவர்கள் மீது பாம்புப் புற்று வளர்ந்த பல கதைகள் புராணத்தில் உள்ளன.

 

“எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும்; அவைகளை எல்லாம் நான் உங்களுக்குச் சொல்லப்போவதில்லை” என்று புத்தரே ஒரு சொற்பொழிவில் சொன்னதை தத்துவப் பேரறிஞர் ராதாகிருஷ்ணன் தம்மபத உரையில் சுட்டிக்காட்டுகிறார். இதன் பொருள் என்ன? நீங்கள் சடங்குகளை செய்துவிட்டு கெட்டவர்களாக இருப்பதைவிட ‘எட்டு நல்ல குண’ங்களைப் பின்பற்றினால் நிர்வாண நிலை அடைவது எளிது என்கிறார். நிர்வாணம் என்ற சொல்லும் உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டதே.

 

மஹாத்மா காந்தியும் சொல்கிறார்: கடவுளை மறுப்பவர்களை நாம் அறிவோம்; உண்மை என்பதை மறுப்பவர்கள் எவருமிலர் என்று.

 

ஆக ஒருவன் நல்ல குணத்துடன் வாழ்ந்தால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் பின்னர் இறைவன் பற்றிய சிந்தனை எழும் என்பது அவரும் அறிந்ததே.

 

இப்போதைய பௌத்தர்கள் புத்தர் சிலையை வைத்து வணங்குகின்றனர். அவரையே தியானம் செய்கின்றனர். அவரோ இப்படி சடங்குகள் வேண்டாம் என்று சொன்னார். அது சரி; புத்தர் எதைத் தியானம் செய்தார்? இவ்வளவு ‘தேஜஸ்’ முகத்தில் தோன்ற காயத்ரி மந்திரத்தை ஜபித்தாரோ? பல ஆண்டுக்காலம் பல பிராஹ்மணக் குருக்கள் முதலிய பெரியோரிடம் கற்றுவிட்டு பின்னர் போதி மரத்தடியிலும் பல ஆண்டுகள் இருந்தாரே. அவர் எதைத் தியானம் செய்தார்? அதைத்தான் அவர் சொல்லவில்லை!

 

இப்பொழுது முத்திரைகளுக்கு வருவோம். முத்திரை என்பது விரல்கள், கைகள் மூலம் காட்டும் சமிக்ஞை ஆகும். இது உடலின் சக்தியை வழிப்படுத்தும் முறை அல்லது அதை அதிகரிக்கும் முறை ஆகும். அதுமட்டுமல்ல அதில் அக்குபிர்ஷர் எனப்படும் உத்தியும் உளது; உடலில் சிலபகுதிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் அது ஞானம் பெறுவதற்கான நரம்புகளைச் சுண்டி விடும்.

 

முத்திரைகள் நாட்டியம் முதல், பூஜைகள் வரை பல இடங்களிலும் பயன்படுகின்றன. நாமும் கூட சாலைகளில் போலீஸ்காரகள் காட்டும் முத்திரைகள், காதுகேளாதோருக்கான முத்திரைகளைத் தினமும் காண்கிறோம். தியானத்தில் பயன்படுத்தும் முத்திரைகள் உயர்ந்த வகை முத்திரைகள். ரஹஸியப் பயன்பாடுள்ளவை.

 

பிராஹ்மணர்களும் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் முத்திரைகளைப் பயன்படுத்துவர். பதஞ்சலி யோக சாத்திரம் முதலியன முத்திரைகள் பற்றிப் பேசுகின்றன. இந்துக் கடவுளர் அபய முத்திரை அல்லது வரத முத்திரையுடன் காணப்படுவர். ஆக நம்மிடம் உள்ளவற்றை பௌத்தர்களும் ஏற்று அவைகளைப் பயன்படுத்தினர்.

 

 

‘முத்ரா விதானம்’ என்னும் ஸம்ஸ்க்ருத நூல் சுமார் 130 முத்திரைகளை வரை படத்துடன் காட்டுகிறது. இதை ராமகிருஷ்ண மடம் (மயிலாப்பூர், சென்னை) தமிழிலும் வெளியிட்டுள்ளது. அதன் மூன்று ஸ்லோகங்கள் முத்திரையின் பயன்பாட்டை (பூஜைகளில்) விளக்குகிறது. இதோ அவை:-

எல்லா தேவர்களையும் மகிழ்விப்பதாலும் பாவத் தொடர்பைப் போக்குவதாலும் (மோதனாத், த்ராவணாத்) முத்திரை என்று சொல்லப்படும். அது எல்லாக் காமங்களையும் அர்த்தங்களையும் (செல்வம்) தருவதாகும்

தந்திரங்களில் எல்லாம் கற்பிக்கப்பட்ட முத்திரைகளை இனி கூறுவோம். அவைகளைக் காட்டுவதால் மந்திர தேவதைகள் ப்ரீதி அடைவார்கள்

 

அர்ச்சனை, ஜபம், தியானம் முதலியவற்றிலும் காமிய கர்மங்களிலும், ஸ்நானம், ஆவாஹனம், சங்கப் பிரதிஷ்டை, ரக்ஷணம், நைவேத்யம் இன்னும் பிறவற்றிலும் அந்தந்தக் கல்பங்களில் கூறப்பட்ட முத்திரைகளை உரிய ஸ்தானங்களில், உரிய லக்ஷணங்களுடன் கண்டுகொள்ள வேண்டும்.

 

இதன் பின்னர் 11 தலைப்புகளில் முத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆக இவை அனைத்தும் நாம் கண்டு பிடித்து வளர்த்தவை என்பது தெளிவு:-

ஸ்ரீ குருவந்தன முத்திரைகள்

அர்கியஸ்தாபன முத்திரைகள்

அர்ச்சனையில் ஆவாஹனாதி முத்திரைகள்

நியாஸ முத்திரைகள்

ஸ்ரீவித்யா பத்து முத்திரைகள்

நிவேதன முத்திரைகள்

காயத்ரீ முத்திரைகள்

கணேச முத்திரைகள்

சிவ முத்திரைகள்

விஷ்ணு முத்திரைகள்

நானா முத்திரைகள்

முத்திரைகளின் அகராதி

 

 

இன்று உலகம் முழுதும் பௌத்தர்கள் பின்பற்றும் வழக்கங்களில் இருந்து புத்தர் மஹா தோல்வி அடைந்தது தெரிகிறது. யாகத்தில் உயிர்க் கொலை கூடாது என்று சொல்லிய மதத்தில் பன்றியும் பாம்பும் பல்லியும் தினசரி உணவாகிவிட்டன. நான் ஹாங்காங் புத்தர் கோவிலுக்குப் போனபோது எல்லோரும் பன்றிக்குட்டியை அழகிய பாலிதீன் பேப்பரில் சுற்றி பலகையில் வைத்து படையல் செய்ததைப் பார்த்தேன். இலங்கையிலோ பௌத்த பிஷுக்கள் சாலை ஓரத்தில் எவனாவது மான் ஒன்றை அடித்துக் கொன்று கொண்டுவரமாட்டானா என்று காத்து இருக்கிறார்கள்; புத்தர் கொல்லக்கூடாது என்று தானே சொன்னர்; யாரோ கொன்றதைச் சாப்பிட்டால் தவறு இல்லை என்பது பிக்குகளின் வாதம். இதனால்தான் திருவள்ளுவரும் கிண்டல் செய்தார். வாங்குபவன் இல்லாவிடில் மாமிசத்துக்காக கொல்பவனும் இருக்க மாட்டார்கள் என்பது வள்ளுவனின் வாக்கு.

 

புத்தம் சரணம் கச்சாமி!

 

–சுபம்–

மாக்ஸ்முல்லருக்கு ஸம்ஸ்க்ருதம் ‘புரியாது’ – (Post No.5361)

Direct Disciples of Sri Ramakrishna Paramahamsa. Swami Vievekananda, Swami Abhedanadda and others are in the picture.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date: 25 August 2018

 

Time uploaded in London – 8-13 AM (British Summer Time)

 

Post No. 5361

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

நான் ஏன் இந்து? அபேதாநந்தா- PART 2

மாக்ஸ்முல்லருக்கு ஸம்ஸ்க்ருதம் ‘புரியாது’ –  (Post No.5361)

 

ராமகிருஷ்ண வேதாந்த மடத்தின் ஸ்தாபகரான சுவாமி அபேதாநந்தா, எப்படி ராமக்ருஷ்ண பரமஹம்ஸரால் ஈர்க்கப்பட்டார் என்பதை நேற்று முதல் பகுதியில் கண்டோம். இதோ இரண்டாவது பகுதி:-

 

“பின்னர் நான் அக்காலத்திய பிரபலங்கள் எழுதிய வானவியல், உளவியல், இயற்பியல் புஸ்தகங்களைப் படித்தேன். சுவாமி விவேகாநந்தருடன் சேர்ந்து புத்த மத நூல்களையும் அத்வைத வேதாந்தத்தையும் கற்றேன். ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடமிருந்து த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றையும் அறிந்தேன்.

 

1886-ல் ராமகிருஷ்ணர் சமாதி அடைந்தவுடன் நான் சந்யாசம் எடுத்தேன். அப்போதுதான் அபேதாநந்தா என்ற பெயரைப் பெற்றேன். இந்து மதத்தின் ஆறு பிரிவுகள், உபநிஷத்துகள், பாணினியின் ஸம்ஸ்க்ருத இலக்கணம், வல்லபர், நிம்பகர் எழுதியவற்றையும் படிக்க நேரம் கிடைத்தது.

காலில் செருப்பு இல்லாமல் ஊர் ஊராகச் சுற்றினேன். மக்கள் இட்ட பிச்சை உணவை மட்டுமே சாப்பிட்டேன். வாழ்க்கையின் நிலையாமை, ஆத்மாவின் நிலைத்த தன்மை ஆகியன மனதில் நின்றதால் நிறைய கஷ்டங்களை வலிய ஏற்றேன். பல விரதங்களையும் நோன்புகளையும் அனுஷ்டித்தேன். கங்கை, யமுனை நதிகள் தோன்றுமிடம் வரை சென்று இமய மலைக் குகைகளில் மூன்று மாதம் வசித்தேன். கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் இருந்த அந்த இடத்தில் இருந்துகொண்டு தியானம் செய்தேன். இப்போதைய வாழ்வு ஒரு கனவு போன்றது என்று உணர்ந்து பத்து ஆண்டுகளுக்கு  பாரத நாட்டை வலம் வந்தேன்.

 

கேதார்நாத், பத்ரிநாத், த்வாரகா, புரி, ராமேஸ்வரம் முதலிய புண்ய ஸ்தலங்களுக்குச் சென்றேன். பெரிய மஹான்களான த்ரைலிங்க ஸ்வாமி, பாஸ்கராநந்தா ஆகியோரை வாரணாசியில் தரிசித்தேன். காஜிபூரில் பவஹரி பாபா தரிசனம் கிடைத்தது. பிருந்தாவனத்தில் வைஷ்ணவப் பெரியோர்களையும், ரிஷிகேஷில் வேதாந்த விற்பன்னர்களையும் பார்த்தேன். அந்தக் காலத்தில் வேதாந்த விஷயத்தில் கீர்த்திவாய்ந்த தனராஜ் கிரியிடம் ரிஷிகேஷில் வேதாந்தம் படித்தேன்.

 

1893-ல் சுவாமி விவேகாநந்தர் சிகாகோ சர்வமத பார்லிமெண்டில் பேசிய பின்னர் மூன்றாண்டுகளுக்கு மேலை நாடுகளில் புகழ்பெற்ற பிரசங்கங்களை நிகழ்த்தினார். லண்டனில் ராஜ யோகம், ஞான யோகம் பற்றி உரைகள் ஆற்றினார். 1896-ல் என்னையும் உதவிக்கு அழைத்தார். 1896-ஆகஸ்டில் கப்பலில் கலகத்தாவிலிருந்து லண்டனுக்குப் பயணமானேன். என்னுடைய முதல் லண்டன் சொற்பொழிவு கிறிஸ்தவ-பிரம்மஞான சபையில் நிகழ்ந்தது. என்னை லண்டனில் ஞான யோக, ராஜ யோக வகுப்புகளை எடுக்கச் சொல்லிவிட்டு சுவாமி விவேகாநந்தா 1897- இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

 

லண்டனில் நான் இருந்தபோது மாக்ஸ்முல்லரையும் 60 உபநிஷத்துகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்த பால் டாஸன் (MAX MULLER AND PAUL DEUSSEN) என்பவரையும் பார்க்க, விவேகாநந்தர் அழைத்துச் சென்றார். மாக்ஸ்முல்லருக்கு ஸம்ஸ்க்ருதம் பேசவும் தெரியாது; பேசினால் புரிந்து கொள்ளவும் முடியாது. ‘எனது நாக்கும் காதுகளும் ஸம்ஸ்க்ருத உச்சரிப்புகளுக்குப் பழக்கப்படவில்லை’ என்று அவரே ஒப்புக்கொண்டார். ஆகையால் அவரிடம் ஆங்கிலத்தில் பேசினேன்.  ராமகிருஷ்ண பரமஹம்ஸர் விஷயத்தில் அவர் மிகவும் அக்கறை காட்டினார். மாக்ஸ்முல்லர் சொன்னார், ” ராமகிருஷ்ணர் சுயமாக சிந்திப்பவர். ஏனெனில் அவர் பல்கலைக்கழகங்களில் வேதாந்தம் கற்கவில்லை; இதனால் அவரது உபதேசங்களும் புதுமையாகவும் பூர்வீக உண்மைகளாகவும் உள.” அவர் இப்படிச் சொன்னது என் மனதில் அவர் பற்றி ஒரு நல்ல எண்ணத்தை உண்டாக்கியது. இதற்குப் பின்னர் மாக்ஸ்முல்லர் ராமகிருஷ்ணரின் வாழ்வும் உபதேசங்களும்  (LIFE AND SAYINGS OF RAMAKRISHNA) என்ற ஆங்கில நூலை வெளியிட்டார்.

1897-ல், சுவாமி விவேகாநந்தர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கப்பலில் அட்லாண்டிக் கடலைக் கடந்து நியூயார்க் சென்றேன். அங்கு அவர் துவக்கி இருந்த வேதாந்தக் கழகத்தில் (VEDANTA SOCIETY) ஆறே மாதங்களில் வேதாந்தம் பற்றியும் பதஞ்சலியின் யோக சாஸ்திரம் பற்றியும் 90 சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். நல்ல கூட்டம் வந்தது. வேதாந்தக் கழகத்தின் தலைவர் என்ற அந்தஸ்தில் நாள்தோறும் கடோபநிஷத், பகவத் கீதை வகுப்புகளையும் எடுத்தேன்.

 

1898ல் பேராசிரியர் வில்லியம் ஜேம்ஸ், (PROFESSOR WILLIAM JAMES) அவரது இல்லத்தில் பரப்பிரம்ம ஐக்கியம் பற்றி (UNITY OF THE ULTIMATE REALITY) ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். நான்கு மணி நேரத்துக்கு விவாதம் நடந்தது. பேராசிரியர்கள் ராய்ஸ், லான்மேன், ஷேலர், கேம்பிரிட்க் டாக்டர் ஜேம்ஸ் (PROFESSORS ROYCE, LANMAN, SHALER AND DR JAMES OF CAMBRIDGE) ஆகியோர் எனது வாதத்தை (UNITY) ஆதரித்துப் பேசினர்.

 

அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோவில் விரிவான சுற்றுப் பயணம் செய்து,  ஜொராஸ்தர், டாவோ, ஷின்தோயிஸம், புத்தர், கிறிஸ்து, முகமதுநபி ஆகியோரின் போதனைகள் பற்றிப் பேசினேன். திபெத்தில் வழங்கும் லாமாயிஸம்  முதலிய எல்லாம் ‘உலகத்தை உய்விக்க வந்த மஹான்கள்’ (GREAT SAVIOURS OF THE WORLD LECTURES) என்ற தலைப்பில் இடம்பெற்றன.

 

1921ம் ஆண்டில் பஸிபிக் மஹா சமுத்திரத்தைக் கடந்து ஹவாய், ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மலேயா முதலிய நாடுகளில் சொற்பொழிவாற்றிவிட்டு கல்கத்தாவுக்குத் திரும்பினேன்.

1922ம் ஆண்டில் கால்நடையாக இமயமலையில் நடந்தேன்; காஷ்மீரிலிருந்து திபெத்துக்குச் சென்று லாமாயிஸம் (திபெத்திய பௌத்தம்) பற்றி அறிந்தேன். எனது இலக்கு லடக்கிலுள்ள லே என்னும் இடத்திலிருந்து 25 மைல் தொலைவில் இருந்த ஹெமிஸ் பௌத்த மடாலயம் (HEMIS MONASTERY, 25 MILES FROM LEH) ஆகும்.

 

1923ம் ஆண்டில் கல்கத்தவுக்குத் திரும்பினேன். ராமகிருஷ்ண வேதாந்த கழகத்தைத் துவங்கி இன்று வரை அதன் தலைவராக இருக்கிறேன் . டார்ஜிலிங் நகரில் வேதாந்த ஆஸ்ரமத்தைத் துவக்கினேன்.

 

என்னுடைய இந்த வாழ்க்கைச் சரிதம் எனது மதத்தில் நான் ஏன் ஆழ்ந்த பற்றுக் கொண்டேன் என்பதையும் அதற்குக் காரணமாக இருந்த   அம்சங்களையும் சக்திகளையும் விளங்கிக் கொள்ள வாசகர்களுக்கு உதவும்”.

 

1936 ஆம் ஆண்டில் வெளியான புஸ்தகத்தில் உள்ள கட்டுரை இது.

சுவாமி அபேதாநந்தா-

தோற்றம் -2-10-1866;

மறைவு- 8-9-1939

 

–சுபம்-

 

நான் ஏன் இந்து? அபேதாநந்தா பதில் (Post No.5359)

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 24 August 2018

 

Time uploaded in London – 21-28 (British Summer Time)

 

Post No. 5359

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

சுவாமி அபேதானநந்தா ராமகிருஷ்ண வேதாந்த மடத்தின் ஸ்தாபகராவார். அந்த மடத்தின் தலைமைப் பீடத்திலும் இருந்தார்.

 

இந்திய தத்துவப் பேராசிரியரும் பிற்காலத்தில் ஜனாதிபதியுமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தற்கால தத்துவ அறிஞர்களுக்கு மூன்று கேள்விகள் அனுப்பினார். அதற்கு மஹாத்மா காந்தி உள்பட பலரும் பதில் அளித்தனர். அபேதானநந்தா அளித்த பதிலின் சுவையான அம்சங்களை மட்டும் தருகிறேன்.

 

மூன்று கேள்விகள்

 

  1. உங்கள் மதம் என்ன?
  2. அதில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

சமுதாய வாழ்வில் அதன் தாக்கம் எப்படி இருந்தது?

 

 

இதற்கு அபேதாநந்தா அளித்த பதில்:–

 

நான் கல்கத்தாவில் 1866-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம்தேதி பிறந்தேன். பிறந்தபோது பெற்றோர்கள் சூட்டிய திரு நாமம் காளி பிரஸாத்.

என் அப்பா ரஸிக்லால் சந்திரா தத்துவ ஆர்வலர். ஆனால் அவர் கல்கத்தா ஓரியன்டல் செமினரியில் ஆங்கில ஆசிரியர்.

நான் முதலில் ஸம்ஸ்க்ருதப் பள்ளியிலும் பின்னர் வங்காளிப் பள்ளியிலும் பயின்றேன். 18 வயதில் படிப்பை முடித்தேன். சிறு வயதிலிருந்தே எதையும் ஏன் எப்படி என்று அறிவதில் ஆர்வம் உண்டு.

 

Standing: swami Vivekananda and others

Sitting: Swami Abedhananda and others

 

வில்ஸன் எழுதிய இந்திய சரித்திரம் என்ற புஸ்தகத்தைப் படித்தேன்; அவர் ஆதி சங்கரரின் தத்துவ அறிவைப் போற்றி எழுதி இருந்தார்; அதைப் படித்த போது உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்ச்சி. நானும் தத்துவ அறிஞராக மாறி அவர் எழுதியதை எல்லாம் படித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்பொழுது ஸெமினரியில் ‘வரையும் கலை’ (DRAWING AND PAINTING) யைப் பயின்று கொண்டிருந்தேன். இயற்கை ஓவியங்களை வரைவதும் வண்ணம் தீட்டுவதும் என் படிப்பு. திடீரென்று இதை விட்டுவிட்டு தத்துவ அறிஞர் ஆவோம் என்று வெளியேறி விட்டேன்.

 

முன்னரே பள்ளியில் ஸம்ஸ்க்ருதம் பயின்றதால் வீட்டில் ‘முக்தபோதம்’ என்ற இலக்கண நூலைப் பயின்று நல்ல ஸம்ஸ்க்ருத அறிவைப் பெற்றேன். இப்பொழுது ஸம்ஸ்க்ருதத்தில் கவிதைகள் எழுதும் அளவுக்கு ஆற்றல் வந்துவிட்டது.

 

அப்பாவின் நூலகத்துக்குள் நுழைந்த போது பகவத் கீதை புஸ்தகத்தைக் கண்டேன். அதைப் படிக்கத் துவங்கினேன். அதைப் பார்த்துவிட்ட என் அப்பா, புஸ்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு இது எல்லாம் பையன்களுகான விஷயம் அல்ல; இதைப் படித்தால் பைத்தியக்காரன் ஆகிவிடுவாய் என்று சொல்லிவிட்டார். அப்படிச் சொல்லியும் அதை என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை.

 

சிறு வயதிலிருந்தே சமயச் சொற்பொழிவுகளுக்குப் போவேன். இந்து மத உபந்யாஸம் மட்டும் என்றில்லாமல் ரெவரெண்ட் மக்டொனால்டு, ரெவரெண்ட் காளிசரன் பானர்ஜி ஆகியோர் ஆற்றிய கிறிஸ்தவ சொற்பொழிவுகளையும் செவி மடுத்தேன். பைபிளை எதிர்த்து நடத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டங்களுக்கும் போனேன். பிரம்ம சமாஜத்தின் பெரும் புள்ளிகளான கேசவ சந்திர சென், பிரதாப் சந்திர மசூம்தார் ஆகியோரின் பிரசங்கங்களைக் கேட்கும் பாக்கியமும் கிடைத்தது.

 

1883-ல் இந்து தத்துவ வித்தகர் பண்டிட் சேஷாதர் தர்க்க சூடாமணி இந்து தத்துவ இயலின் ஆறு பிரிவுகள் பற்றி உரையாற்றினார். வைசேஷிகம், சாங்க்யம் பற்றி உரையாற்றுகையில் கானடர், கபிலர் ஆகியோரின் கொள்கைகளை நவீன விஞ்ஞானக் கொள்கைகளுடனும் கிரேக்க ஞானிகளின் கொள்கைகளுடனும் ஒப்பிட்டார். பதஞ்சலியின் யோகம் பற்றிப் பேசுகையில் அவர் சொன்னதைக் கேட்டு இந்து உளவியலில் (HINDU PSYCHOLOGY) எனக்கு ஆர்வம் பிறந்தது.

 

இதையடுத்து கபிலரின் யோக சாஸ்திரத்தை காளிபர வேதாந்த வாகீஷிடம் கற்றேன். அவர் அதை விரிவான விளக்க உரையுடன் அ வங்காளி மொழியில் மொழிபெயர்த்த காலம் அது.

 

நானும் ஹட யோகம், ராஜ யோகம் ஆகியவற்றைப் பயிற்சி செய்து நிர்விகல்ப சமாதி அடைய முயன்றேன். சிவ சம்ஹிதையைப் படித்த போது அதிலுள்ள யோகப் பயிற்சிகளை முறையான யோகிகளின் வழிகாட்டுதலோடுதான் செய்ய வேண்டும் என்று எச்சரித்தனர். யாராவது குரு கிடைக்க மாட்டார்களா என்று தவித்தபோது என்னுடைய சக மாணவர் ஞானேஸ்வர் பட்டாசார்யா என்னை ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் செல்லும் படி சொன்னார்.

 

கல்கத்தாவிலிருந்து நாலு மைல் தொலைவில் தட்சிணேஸ்வரம் இருந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைச் சந்திக்க அங்கே சென்றேன். யோகத்தைக் கற்பிக்க முடியுமா என்று வினவியபோது அவர் உடனே ‘சரி’ என்று சொன்னார். நீ பூர்வ ஜன்மத்தில் பெரிய யோகியாக இருந்தாய். வா, வா, உனக்கு யோக முறைகளைச் சொல்லித் தருகிறேன் என்றார். எனக்கு பயிற்சி முறையை விளக்கிய பின்னர் என் நெஞ்சைத் தொட்டார். என்னுள்ளே உறைந்து கிடந்த குண்டலினி சக்தி மேலே கிளம்பி அற்புத அனுபவத்தைத் தந்தது. நான் அவருடைய பரம பக்தனாகவும் சீடனாகவும் மாறினேன். அவருக்கு இரண்டு ஆண்டுகள் பணிவிடை செய்த காலத்தில் அவருடைய மற்ற சீடர்களுடன் ,குறிப்பாக சுவாமி விவேகாநந்தருடன் தொடர்பு ஏற்பட்டது.

 

அவரோடு நல்ல பழக்கம் ஏற்பட்டதால் இந்திய ஐரோப்பிய தத்துவவியலின் பல அம்சங்கள் பற்றி விவாதிப்பேன்.

 

–தொடரும்

 

பெரியது கேட்கின்….. ஏனிட் பெரிது, அதனினும் பெரிது இலியட், அதனினும் பெரிது… (5344)

WRITTEN by London swaminathan

Date: 20 August 2018

 

Time uploaded in London – 20-23 (British Summer Time)

 

Post No. 5344

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

பெரியது கேட்கின்….. ஏனிட் பெரிது, அதனினும் பெரிது இலியட், அதனினும்  பெரிது… (5344)

 

இன்று அவ்வையாரிடம் யாராவது அவ்வையே இதிஹாசங்களில் எது பெரிதோ? என்று கேட்டால்,

ஐயனே உலகில் பழமையானதும் பெரிதுமான நூல் ரிக் வேதம்; அதில் 40,000 வரிகள் உள்ளன.

ஆனால் நீவீர் இதிஹாசம் பற்றிக் கேட்டதால் அது பற்றி மட்டும் செப்புவேன் கேளீர்:

Image of Virgil

பெரிது பெரிது வர்ஜிலின் ஏனிட் (Aeneid of Virgil) ,

அதனினும் பெரிது ஹோமரின் இலியட்

(Iliad of Homer)அதனினும் பெரிது வால்மீகியின் ராமாயணம்;

அதனினும் பெரிது வியாஸரின் மஹாபாரதம்

 

அதனினும் பெரிது எங்கும் இல்லை, இப்போதும் இல்லை!

 

தாங்க்ஸ் (Thanks), அவ்வை என்று சொல்லி விடைபெற்றால் பல உண்மைகள் புலப்படும்.

 

வர்ஜில் என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரோமானிய புலவர். அவர் எழுதிய காவியம் ஏனிட். அது லத்தீன் மொழியில் உள்ளது அதிலுள்ள வரிகள்- 9868

 

இதற்கு முன், கி.மு 800-ஐ ஒட்டி கிரேக்க மொழியில் ஹோமர் இரண்டு இதிஹாசங்களை இயற்றினார். அவற்றில் இலியட்டின் வரிகள் 15,693. இத்தோடு ஆடிஸி (Odyssey)  என்ற அவரது காவியத்தையும் சேர்த்தால் சுமார் 30,000 வரிகள்தான் வரும். அதற்கு முன் கிரேக்க மொழியில் எந்தப் படைப்பும் இல்லை. ஆனால் இலியட் காவியத்துக்கெல்லாம் முன் மாதிரியாக விளங்கிய வால்மீகி ராமாயணத்தில் 48,000 வரிகள். இதை விட மஹாபாரதம் பெரிது. 2,20,000 வரிகள். அதில் வியாஸர் சொல்லாத, பேசாத விஷயம் எதுவும் இல்லாததால், ‘வியாச்சோசிஷ்டம் ஜகத் ஸர்வம்’ (வியாஸரின் எச்சில்தான் உலகம் முழுதும்) என்பர்.

 

இந்துக்களின் கணக்குப்படி வால்மீகி ராமாயணமே முதல் காவியம். அதில் புத்த மதம் பற்றி ஒரு குறிப்பு இருப்பதாகச் சொல்லி அதை பின்னுக்குத் தள்ளுவர் வெளிநாட்டு ‘அறிஞர்கள்’.

 

மஹாபாரதத்தில் புத்த மதம், சமண மதம் பற்றிய குறிப்புகள் இல்லாமையால் அதை முன் வைப்பர். ஆனால் உண்மையில் எளிமையான காவியமான ராமாயணமே முதல் காவியம். இந்துக்கள் பயன்படுத்தும் ஸ்லோகம் என்பதே வால்மீகியின் சோகத்திலிருந்து வந்ததாக கதையும் உண்டு.

மஹா    பாரதத்துக்குப் பெருமை சேர்க்கும் இரண்டு விஷயங்கள்-

அதிலுள்ள பகவத் கீதை

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

 

ராமாயணத்தைப் பார்த்து, அல்லது அதைக் கேட்டு, கிரேக்க நாட்டுக்கு ஏற்ப ஹோமர் ஒரு இதிஹாசம் எழுதினார் என்று சில இலக்கிய விமரிசகர்கள் பகர்வர்:-

ட் ரோ ஜன் யுத்தம்= ராம ராவண யுத்தம்

ட் ராய் நகரம் = லங்கா

ஸ்பார்டா = அயோத்யா

மெனெலஸ் = ராமா

பாரிஸ்= ராவணா

ஹெக்டர் = இந்திரஜித் அல்லது விபீஷணன்

ஹெலன் = சீதா

அகமெம்னன்= சுக்ரீவா

பட் ரோ ஸியஸ்=  லக்ஷ்மணன்

நெஸ்டர்= ஜாம்பவான்

அகில்லிஸ் = அர்ஜுனா+,,,,,,,,மா+ லக்ஷ்மணா

என்று ஒப்பிடுவர்.

இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்டது என்று கருதுவோரும் ஒரு விஷயத்தை மறக்க மாட்டார்கள் லத்தீன், கிரேக்க மொழிகளில் காவியங்களோ இதிஹாசங்களோ தோன்றும் முன் இலக்கியம் கிடையாது. ஸம்ஸ்க்ருதத்திலோ இதிஹாஸத்துக்கும் முன்னதாக பிரம்மாண்ட வேத கால இலக்கியம் உண்டு.

ராமாயண, மஹாபாரத இதிஹஸங்களைப் புகழாத இந்தியவியல் (Indologists) அறிஞர் எவருமிலர்.

 

–சுபம்–

ரமண பக்தையைக் காத்த நாகம்! (Post No.5337)

Written by S Nagarajan

Date: 19 August 2018

 

Time uploaded in London – 6-17 AM  (British Summer Time)

 

Post No. 5337

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ரமண பக்தை மா பிரோஜா தலயார்கானைக் காத்த நாகம்!

 

ச.நாகராஜன்

 

பகவான் ப்ரியா மா பிரோஜா தலயார்கான் (Ma Firoza Taleyarkhan 1898-1984) மிக மிக செல்வச் செழிப்புடைய பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர்.

 

ரமணரை அடைக்கலம் புகுந்து திருவண்ணாமலையில் வாழ்ந்த அவரது சரித்திரம் மிக சுவையான ஒன்று.

ஏராளமான அனுபவங்களை அவர் தொகுத்து எழுதியுள்ளார். அதில் ஒன்று தான் அவரை நாகம் காத்து வந்ததை பகவான் சுட்டிக் காட்டிய சம்பவம்.

ஆண்டு 1945. ஒரு நாள் அலஹாபாத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தவரும் சிறந்த ரமண பக்தருமான டாக்டர் சையத்தின் மனைவியும் சூனா என்பவரும் திருமதி தலயார்கானின் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மெக்காவில் உள்ள கபாலாவை (Kharbala) பற்றி திருமதி சையத் விவரித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் தான் அவர் மெக்கா சென்று திரும்பியிருந்தார்.

 

திருமதி தலயார்கானின் எதிர்புறத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்கள் திடீரென்று அவரை விசித்திரமாகப் பார்த்தனர்.

 

திடீரென்று அவர்கள், “உங்களுக்குப் பின்னால் பாம்பு இருக்கிறது, ஜாக்கிரதை” என்று அவர்கள் கத்தினர். உண்மையில் அவருக்குப் பின்னால் ஒரு பாம்பு படம் விரித்துக் கொண்டு நின்றிருந்தது.

தலையை மெதுவாகத் திரும்பிப் பார்த்தார் அவர். பாம்பு அவரை தீண்டி இருக்கக் கூடும். ஆனால் அது மெதுவாக நாற்காலியிலிருந்து இறங்கி வெளியே ஊர்ந்து சென்றது. தோட்டக்காரரைக் கூப்பிட்ட திருமதி தலயார்கான் அந்தப் பாம்பைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார். பாம்பு பாம்பு என்ற சத்தத்தால் அந்த இடம் சற்று களேபரமானது.

திருமதி தலயார்கானுக்கு அண்டை வீட்டில் வசித்து வந்த ராஜகோபாலய்யங்கார் அப்போது தான்  ஆசிரமத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். ராஜகோபாலய்யங்கார் பகவானை அருகிலிருந்து கவனித்து வந்த பகவானின் அணுக்கத் தொண்டர்.

சத்தம் கேட்டு அவர் ஓடி வந்தார்.

திருமதி தலயார்கானைப் பார்க்க வந்திருந்த இரு பெண்மணிகளும் நடந்த விஷயத்தைப் பரபரப்புடன் ராஜகோபாலய்யங்காருக்கு விளக்கினர்.

அவர் திருமதி தலயார்கானை நோக்கி, “பாம்பை அடித்துக் கொன்று விட்டீர்களா?” என்று கேட்டார்.

அதைத் தன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று பதில் அளித்தார் அவர்.

 

அவர் உடனடியாக ஓடோடிச் சென்று பகவான் ரமணரிடம் நடந்த விஷயத்தை விவரித்தார்.

 

பகவானின் முதல் கேள்வி பாம்பை தலயார்கான் அடித்துக் கொன்று விட்டாரா என்பது பற்றித் தான்.

 

இல்லை என்ற பதில் வந்ததும் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் பகவான் ரமணர்.

 

“நல்லது” என்ற அவர், அந்த பாம்பு தான் அவரைப் பாதுகாத்து வரும் நாகம் என்றார்.

ஒரு நாள் காலை திருமதி தலயார்கான் படுக்கையிலிருந்து எழுந்த போது அவர் பிரார்த்தனை செய்யும் மேஜைக்கு அருகில் ஒரு பாம்பின் ஒரு பெரிய தோல் உரிக்கப்பட்டு கிடந்ததைக் கண்டார்.

அவர் தூங்கிக் கொண்டிருந்த போது திறந்திருக்கும் ஜன்னல் வழியாக உள்ளே அது வந்திருக்கக் கூடும்!

வெல்லூர் மாவட்ட நீதிபதியாக அப்போது இருந்த அனந்தநாராயணன் (பின்னால் மதராஸ் ஹை கோர்ட் நீதிபதியாக இருந்தவர்) இந்தச் சம்பவத்தைக் கேட்டு முதலில் இதை நம்பவில்லை.

 

ஆனால் அடுத்த நாள் காலை உணவருந்திய பின்னர் இருவரும்  வீட்டின் வாசலில் கைகளை அலம்பிக் கொண்டிருந்த போது அவரே அந்த நாகம் ஊர்ந்து செல்வதைப் பார்த்தார்.

முதலில் நம்பாதவர் இப்போது அதிசயப்பட்டு முழு விஷயத்தையும் நம்பினார்.

 

அந்த நாகத்தைப் பற்றிய உண்மையை பகவான் விளக்கியதால் அதைப் பற்றிய பயம் இல்லாமல் மா தலயார்கான் வாழ்ந்து வந்தார்.

 

இப்படிப் பல சம்பவங்கள் அவரது வாழ்க்கையில்  நிகழ்ந்துள்ளன. பகவானின் அருளுக்குப் பாத்திரமான அவர் தனது சுவையான அனுபவங்களை Sages, Saints and Arunachala Ramana என்ற நூலில் விவரித்துள்ளார்.

****

 

 

 

அதிசயம் அநேகமுற்ற பழனி மலையில் வசித்த போகர்! (Post No.5333)

Written by S Nagarajan

Date: 18 August 2018

 

Time uploaded in London – 7-19 AM  (British Summer Time)

 

Post No. 5333

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பழனியில் போகர் சமாதி

 

அதிசயம் அநேகமுற்ற பழனி மலையில் வசித்த போகர்!

 

ச.நாகராஜன்

ஆறுபடை வீடுகளில் மூன்றாவது வீடாக விளங்குவது பழனி.

திருப்புகழில் 95 பாடல்கள் பழனி மலையில் பாடப்பட்டுள்ளன.

இங்குள்ள எண்ணி மாளாத அதிசயங்களை எண்ணி வியந்து அருணகிரிநாதர் திருப்புகழில் ‘அதிசயம் அநேகமுற்ற பழனி மலை’ என்று பாடி பழனி மலையைச் சிறப்பிக்கிறார்.

பழனி மலைக்குள்ள ஒரு சிறப்புக்குரிய காரணம் இங்கு போகர் வசித்தார் என்பதாகும்.

கொங்குமண்டல சதகம் 36ஆம் பாடல் போகர் வசித்த  புண்ணிய பூமி என்று பழனியைக் கூறிச் சிறப்பிக்கிறது.

பாடல் வருமாறு:-

யோக வயித்தியஞ் சொல்ரச வாத மெலாக் கலையுந்

தேக நிலைபெறுங் காயகற் பங்களெண் சித்தியுஞ்சொல்

போக ருடன்புலிப் பாணி முதலிய புண்ணியரெலா

மாக முறவமர் வைகா நகர்கொங்கு மண்டலமே

 

இதன் பொருள் :- யோகம் வைத்தியம், ரசவாதம், நீண்ட ஆயுளைப் பெற வைக்கும் காயகல்பம், அட்டமாசித்தி ஆகியவற்றைக் கூறிய போகநாதர், புலிப்பாணி ஆகிய புண்ணியர்கள் வசித்துள்ள வைகாவூர் (பழனி) கொங்கு மண்டலத்தில் உள்ளதே.

பழனி கொங்கு மண்டலத்தில் உள்ள சிறந்த ஊர். இங்கு திருமாளிகைத் தேவர், கருவூர்ச் சித்தர், புலிப்பாணி போன்ற

புண்ணியர்களை மாணாக்கர்களாகக் கொண்ட பெரும் சித்தர் போகர்.

திருமாளிகைத் தேவர் சரிதத்தால் சைவ சமயப் பற்றுள்ளவராகவும் கருவூர்த் தேவர் நோக்கும் போது வாமாசாரமுடையவராகவும் இவர் கருதப்படுகிறார். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் (பெரிய கோயில்) அட்டபந்தன காலத்தில் இவர் அங்கு எழுந்தருளியிருந்தார். இதை

கொங்கு மண்டல சதகம் 34ஆம் பாடல் கூறுகிறது.

போகர் சீன தேசத்தவர் என்று கூறப்படும் வரலாறும் கூட உண்டு.

சீன தேசத்தவர் என்றாலும் கூட அவர் தமிழகத்தில் வாழ்ந்து இங்கேயே சமாதியில் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகிறது.

அவரது சமாதி பழனி முருகன் கோவிலில் உள்ளதை அனைவரும் அறிவர்.

பழனி ஆண்டவர் சந்நிதி முன்பு போகர் ஒடுக்க மடம் என்றும் மலையடிவாரத்தில் புலிப்பாணி  மடம் என்றும் இருக்கின்றன.

புலிப்பாணி பல திரட்டில் கீழ்க்கண்ட பாடல் வருகிறது:

தானான சிவகிரியிற் தண்டாயுதபாணி தாதாவைப் பூசித்தோர்

பிரமனிந்திரன்

தேனான போகருட னிவர்கள்மூவர் தெளிவாக முன்யுகத்தில்

மூவரப்பா

கோனான கலியுக யிருநூற்றைந்தில் கொற்றவனே புலிப்பாணி

பூசித்தேன்பார்

மானான அட்டசித்தி கோடாசத்தி மைந்தனே சித்தரிட நடனந்தானே.

பழனி மலை அதிசயங்களுள் சித்தர் பலர் இங்கு வாழ்ந்தனர் என்பதும் இன்னும் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் முக்கியமான அதிசயமாகும்.

***

ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 2 (Post No.5327)

Written by S Nagarajan

 

Date: 16 August 2018

 

Time uploaded in London – 6-09 AM  (British Summer Time)

 

Post No. 5327

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 2

 

ச.நாகராஜன்

 

4

கிறிஸ்தவ மதம் எப்படியெல்லாம் பரப்பப்பட்டது என்பதை முதலில் அறிய வேண்டும். அதே சமயம் ஹிந்து மதம் ஒருநாளும் ‘மதமாற்றும் முயற்சியில்’ எந்த நாளும் எந்த தேசத்திலும் எவராலும் செய்யப்படவில்லை என்பதையும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் இங்கா இனத்தினர் மீது திட்டமிட்ட பிரசாரம் ஒன்று 1524-25இல் மதமாற்றும் பாதிரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஃபிரான்ஸிஸ்கோ பிஜாரோ (Francisco Pizzaro) இதற்கென ஆன்மாக்களை அறுவடை செய்யவும் அதே சமயம் முடிந்த மட்டில் தங்கத்தையும் கூடச் சேர்த்து அறுவடை செய்யவும் புறப்பட்டார்.

இதில் ஒரு முக்கூட்டு அணி  ஒன்று சேர்ந்தது.

ஃபாதர் ஃபெர்னாண்டோ டி ல்யுக் (Father Fernando de-lugue) என்பவர் ஒரு ரோமன் கத்தோலிக்க பாதிரியார். இவர் பிஜாரோவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி அவரது பயணத்திற்கு ஆதரவு தருவேன் என்றும், வளைகுடாவிற்குத் தெற்கே பெரு சாம்ராஜ்யத்தில் உள்ள மாகாணங்களில் இடம் பார்த்து பிடித்து அவர்களை தமக்கென ஆக்குவது என்றும் ஜெயித்த இடங்களை பாதிக்குப் பாதியாக பங்கு போட்டுக் கொள்வது என்றும்  ஃபெர்னாண்டோ ஒப்பந்த உடன்படிக்கை செய்து கொண்டார். இதில் உதவ முன்வந்த இன்னொரு பாதிரியார் ஃபாதர் வெல்வர்ட் ((Father Velverde)  கிறிஸ்தவத்திற்கென ஆன்மாக்களை அறுவடை செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

திட்டப்படி தாங்கள் நுழைந்த இடங்களில் எல்லாம் கொள்ளையடித்தனர். பூர்வ குடியினர் அனைவரையும் கொன்று குவித்தனர். என்றாலும் கூட மிக எளிமையாகவும் அஹிம்சை வழியில் இருந்ததாலும், பரந்த மனதுடன் இருந்த இங்கா அரசு அவர்களை மன்னித்தது. தங்களது இனத்தின் மீது இங்கா அரசு மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது.

 

இங்கா சக்கரவர்த்தி அனுமதியின்றி அரசவையில் நுழைந்த போதிலும் கூட ‘அன்னியர்களை’ வரவேற்றார். அத்தோடு மட்டுமன்றி அவர்களுக்குச் சில பரிசுகளையும் அளித்தார்.

இங்கா சக்கரவர்த்தியிடம் பிஜாரோ தாங்கள் கடல் கடந்த ஒரு நாட்டிலிருந்து வ்ந்திருப்பதாகவும் இங்கா நாட்டின் எதிரிகளைச் சமாளிக்க உதவி புரிய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Holy Kailash is in China now!

 

1532ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி பிஜாரோவுக்கும் சக்கரவர்த்தி அடாஹுவால்பாவுக்கும் (Atahualpa) s இடையே ஒரு சந்திப்பு கஜமார்க்கா (Cajamarca) நகரில் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

ஸ்பெயினில் இருக்கக்கூடிய எந்த அரங்கத்தையும் விட மும்மடங்கு பெரிதான ஒரு அரங்கத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.

 

சக்கரவர்த்தி தனது சபையினருடன் நிராயுதபாணியாக அங்கு நுழைந்தார். ஆனால் பிஜாரோவோ ஆயுதம் தாங்கிய தனது வீரர்களை அங்கே சுற்றியிருந்த வீடுகளில் ஒளித்து வைத்திருந்தார்.

அரங்கத்திற்குள் நுழைந்த சக்கரவர்த்தி அங்கே யாரையும் காணாமல் வந்திருந்த அன்னியர்கள் எல்லாம் எங்கே என்று கேட்டார்.

 

அப்போது வெல்வெர்ட் பாதிரியார் ஒரு கையில் சிலுவையுடனும் இன்னொரு கையில் பைபிளுடனும் உள்ளே நுழைந்தார். வந்தவர் சக்கரவர்த்தியிடம் அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே தாங்கள் வந்துள்ளதாக அறிவித்தார்.

 

கிறிஸ்தவ மதக் கொள்கைகளை விவரித்த வெல்வெர்ட் சக்கரவர்த்தியை கிறிஸ்தவ மதத்திற்கு மாறி ஸ்பெயின் அரசருக்கு கீழ்ப்படிந்த அரசராக இருக்குமாறு கூறினார்.

அடாஹுவால்பா தான் எந்த அரசருக்கும் கீழ்ப்படிந்து இருக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

“உங்கள் மன்னர் பெரிய மன்னராக இருக்கலாம். இப்படி கடல் கடந்து உங்களை அனுப்பி இருப்பதால் அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அவரை எனது சகோதரராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். மத நம்பிக்கையைப் பொறுத்த வரை அதை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. உங்களது கிறிஸ்து அவரால் உருவாக்கப்பட்டவராலேயே சாகடிக்கப்பட்டார். ஆனால் எங்கள் கடவுளோ சொர்க்கத்தில் இருந்து கொண்டு குழந்தைகளாகிய எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்றார் அடாஹுவால்பா.

 

இதைக் கேட்டவுடன் வெல்வெர்ட், பிஜாரோ ஒளிந்திருந்த இடத்திற்குச் சென்று, “இந்த நாய்க்காக நாம் நமது சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

உடனே பிஜாரோ சமிக்ஞையைக் காட்ட ஒளிந்திருந்த வீரர்கள் அங்கு நிராயுதபாணியாக இருந்த அனைவரையும் கொன்று குவித்து, அடாஹுவால்பாவைச் சிறைக் கைதியாகப் பிடித்தனர்.

 

உடனே அடாஹுவால்பா அவரிடம் தன்னை விடுவித்தால் அவரது அறை முழுவதையும் தங்கக் கட்டிகளால் நிரப்புவதாகக் கூறினார்.

அப்படியே பிஜாரோ அறை முழுவதும் தங்கக் கட்டிகளால் நிரப்பப்பட்டது.

 

என்ற போதிலும் அடாஹுவால்பா விடுவிக்கப்படவில்லை.

மற்றவர்களுடன் இணைந்து கிறிஸ்தவ மிஷனரி  கிறிஸ்தவ மதத்தைத் தழுவாததன் காரணமாக அடாஹுவால்பாவை உயிருடன் எரிப்பது என்று கையெழுத்திட்டது.

அடாஹுவால்பா மிகப் பெரிய சக்கரவர்த்திக்கே உரித்தான பண்புடன் நடந்த அனைத்தையும் அமைதியாக ஏற்றுக் கொண்டார்.

 

சங்கிலியால் கட்டப்பட்டு சிதையில் அடாஹுவால்பா கிடத்தப்பட்டார்.

வெல்வெர்ட் பாதிரியார், கொள்ளையடிக்கப்பட்டதில் சம பங்கு கேட்டவர், இறுதி முயற்சியாக அடாஹுவால்பாவின் ஆன்மாவைக் கடைத்தேற்ற அவரை கிறிஸ்தவ மதம் தழுவுமாறு கேட்டார்.

 

மதம் மாறுமாறு மீண்டும் கேட்கப்பட்ட போது மன்னர் திடமாக அதை மறுத்து விட்டார்.

மதம் மாறினால் அவர் உயிருடன் எரிக்கப்பட மாட்டார் என்று வெல்வெர்ட் மீண்டும் கூறவே அந்த இக்கட்டான நிலையில் அடாஹுவால்பா மதம் மாற ஒப்புக் கொண்டார்.

 

கிறிஸ்தவ பாதிரிகள் சொன்ன வார்த்தையை மீறவில்லை.

அடாஹுவால்பா உயிருடன் எரிக்கப்படவில்லை. அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார்.

இது தான் முதல் அமெரிக்க கிறிஸ்தவரின் கதை.

  • சோகக்கதை!

வரலாறு முழுவதும் எடுத்துப் பார்த்தால் அடாஹுவால்பா பிஜாரோவுக்குக் கொடுத்த பிணைத் தொகை தான் மிகப் பெரியது என்பது கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்ட்ஸை எடுத்துப் பார்த்தால் தெரிய வரும்.

இந்தப் பிணைத் தொகையை இன்றைய பணமதிப்பில் மாற்றிப் பார்த்தால் அது 1700 லட்சம் டாலர் ஆகும்.

(இந்திய ரூபாய் மதிப்பில் 113900 லட்சம் ரூபாய் ஆகும்!)

இப்படித்தான் தென் அமெரிக்காவில் கிறிஸ்தவ மதம் பரவ ஆரம்பித்தது.

 

அற்புதமான தங்கச் சிலைகள் உருக்கப்பட்டன. அவற்றை கப்பலில் ஏற்றி ஸ்பெயினுக்கு அனுப்பினர். இங்கா நாடு முற்றிலுமாக காலியானது. செல்வத்தை இழந்தது.

இதைப் பார்த்த பிரிட்டிஷ் அரசு தனது கொள்ளைக்காரர்களை அனுப்பி கப்பலில் ஏற்றி வரப்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை கொள்ளையடிக்க முயற்சித்தது.

 

ஃபிரான்ஸில் ட்ரேக் (Francis Drake), ஹாகின்ஸ் (Hawkins) போன்றவர்கள் இதற்காக அனுப்பப்பட்டனர்.

இந்த கொள்ளைக்காரர்களைத் தான் இன்றைய பிரிட்டிஷ் பள்ளிக் குழந்தைகள் பெரும் ஹீரோவாக கொண்டாடுகின்றனர்.

 

அமெரிக்காவின் பூர்வ குடியினர் இன்று ஏழ்மையில் வாடுகின்றனர். 98 சதவிகிதம் நிலப்பரப்பு சில குடும்பங்களைச் சேர்ந்ததாக இன்று இருக்கிறது. இந்த நிலப் பிரபுக்கள் ஸ்பானிஷ் கொள்ளைக்காரர்களின் வமிசாவளியினர். மிகுந்த துயரமான நினைவுகளுடனும் ஏழ்மையுடனும் தங்கள் சொந்த மொழியைப் பேசிக் கொண்டு தங்கள் நம்பிக்கை வழியில் நடக்கிறார்கள் ஒரிஜினல் பூர்வ குடியினர்.

 

 

இவர்களுக்கு துயரத்திலிருந்து என்று விடுதலை கிடைக்கும் என்பது தெரியவில்லை!

காலம் அவர்களுக்குக் கை கொடுத்து அவர்களை உயர்த்துமா?

– தொடரும்

***

 

வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை! (Post No.5324)

Written  by London swaminathan

Date: 15 August 2018

 

Time uploaded in London –11-40 am (British Summer Time)

 

Post No. 5324

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை- நறுந்தொகை , அதிவீர ராம பாண்டியன்

 

அவந்தி தேசத்தில் அக்கிரஹரரத் தெருவில் ஒரு ஏழைப் பார்ப்பனன் இருந்தனன். அவன் பெயர் குசேலர் அல்லது சுதாமா. அவன் ஏழ்மையோடு வேறு ஒரு பிரச்சனையும் சேர்ந்து கொண்டது. அவனுக்கு 27 பிள்ளைகள்!! எப்போது பார்த்தாலும் அம்மா பசிக்குதே! அப்பா பசிக்குதே! என்ற பல்லவியுடன் சோக கீதம் ஒலித்துக் கொண்டே இருந்தது வீட்டீல்!

வறிஞர்=ஏழைகள்

குசேலனின் மனைவி அவரை நச்சரித்தாள்; கரப்பான் பூச்சி போல அவரை என்றும் மொய்த்தாள்; பிய்த்தாள்.

என்னங்க ஒரு காசுக்கும் வழி தேட மாட்டிங்கிறீங்க; உங்கள்(classmate )கிளாஸ்மேட், கிருஷ்ண பரமாத்மா துவாரகாவில் பெரிய ராஜா என்று தினமும் பீத்திக்கிறீங்க! சோத்துக்கு வழி இல்லையே: அவர் கிட்ட போய் கொஞ்சம் கடன் வாங்கிட்டு வரக்கூடாதா? அல்லது அவர்தான் பெரிய மனசு பண்ணி, சம்திங் (something) கொடுக்கக்கூடாதா?

‘செல்வத்தின் பயனே ஈதல்’ என்று பெரியவங்க சொல்லுவாங்க. அவரும் தருவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள்.

 

ஆனால் குசேல ஐயர்  மிகவும் மானம் மரியாதை உள்ளவர். என்ன இது? யாசகம் என்று கையேந்திப் போனால் அவமானம் இல்லையா? ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று பெரியோர் சொன்னதை அறியாயோ பெண் பிள்ளாய்? என்றார்.

அவள் சொன்னாள்; ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று சொன்ன கிழவி ‘ஐயமிட்டு உண்’ என்றும் சொல்லி இருக்கிறாளே. நான் கொஞ்சம் சோற்றுக்குத் தானே கெஞ்சுகிறேன் என்றாள்

 

வறுமையிலும் செம்மை தவறாத குசேலர் ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்னும் (principle) பிரின்ஸிபிள் உடையவர். ஆகையால் கந்தைத் துணிகளைக் கசக்கிக் கட்டிக் கொண்டார்; புறப்பட்டார்.

 

இந்தாங்க, கொஞ்சம் நில்லுங்க; பெரியவங்களைப் பார்க்கப் போனால் கையில் பழம் வெற்றிலை பாக்கு, ஸ்வீட் (sweet) எல்லாம் எடுத்துட்டு போகனும்; ஒன்னும் இல்லாட்டி வெறும் கையோடு போகாம ஒரு எலுமிச்சம் பழமாவது எடுத்துட்டு போகனும். நான் அடுத்தவீட்டு அம்மாளிடம் கடன் வாங்கிய அவல் கொஞ்சம் மிச்சம் இருக்கு. அதையாவது சாஸ்திரத்துக்குக் கொண்டு போய் கொடுங்களேன் என்றாள் மனைவி.

 

குசேலரோ நாணிக் கோணிக் குறுகி, இந்தக் கந்தல் ஆடையோடு போனால் காவல்காரன் என்ன அடிச்சு விரட்டுவான். இந்தக் கந்தல்ல அவலா? என்றார்.

இந்தாங்க! ‘சபரி’ங்கற கிழவி கடிச்சுக் கொடுத்த இலந்தைப் பழத்தைக்கூட ராமன் சாப்பிட்டதாக வால்மீகி எழுதி இருக்காராமே; அன்போடு கொடுத்தா, அது கோதுமை அல்வா கொடுப்பது போல என்றாள்.

அவரும் அரை மனதோடு அவலுடன் சென்றார். பழைய ஒரு சாலை மாணாக்கணாகிய கண்ணனைக் காணும் ஆவலுடன் – ஒரு கைப்பிடி அவலுடன் சென்றார்.

 

எதிர் பார்த்தது போலவே வாயிற் காரனும், ஏய் பிச்சைக்காரா, இது அரண்மனை, அக்கிரஹாரத்துல [ போய் பிச்சை கேளு என்று தடியை உயர்த்தினான்.

 

குசேலர் மிக தயக்கதோடு நானும் க்ருஷ்ணனும் ஒரே ஸ்கூகுல் (School) என்றும் ஒரே கிளாஸ் (class) என்றும் திரும்பத் திரும்ப சொன்னார். எல்லோரும் ‘கொல்’ என்று சிரித்தனர். அவர்களில் ஒரு நல்ல ஆத்மா ஐய்யோ பாவம், ஐயரை பார்த்தா பாவமா இருக்கு. இவர் சொல்றது பொய்யுன்னா நம்ம ராஜாவும் சிரிப்பார். அவருக்கும் ஒரு ஜோக் (joke) சொன்ன மாதிரி ஆச்சு என்று போய் ஆள் (address) அடரஸ், குலம், கோத்ரம் எல்லாம் சொன்னான்.

கண்ணனின் முகத்தில் ஆயிரம் செந்தாமரை உதித்தது போன்ற பொலிவு தோன்றியது குசேலன் என்ற பெயரைக் கேட்டவுடன். அங்க வஸ்திரம் காற்றில் பறக்க ஓடி வந்தான் அரண்மனை வாயிலுக்கு; கட்டி அணைத்தான் குசேலரை; அவரோ அன்பில் திக்கு முக்காடிப் போனார். “அண்ணி, எனக்கு என்ன கொடுத்து அனுப்பினாள்? வெறும் கையோடு அனுப்ப மாட்டாளே; வா, உள்ளே வா, ருக்மினி சத்ய பாமா எல்லாரையும் இன்ட் ர ட்யூஸ் (introduce) பண்ணுகிறேன். மனைவி, குழந்தைகளையும் அழைத்து வரக்கூடாதா? ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’ என்பார்களே? 16 பெற்றாயா? என்றெல்லாம் வினவினார். குசேலன் செப்ப முடியுமா 27 குழந்தைகள் என்று.

 

உள்ளே போனவுடன் கந்தல் முடிச்சை அவிழ்த்தார்; கண்ணன் எடுத்தான் ஒரு பிடி அவலை; போட்டான் வாயில்;அடடா ஏமி ருசிரா! ராம நாமத்தைவிட ருசியாக இருக்கிறதே என்று சொல்லி எடுத்தான் இன்னும் ஒரு பிடியை.

ருக்மினி தடுத்தாள்! ஏழை வீட்டு அவலைத் தின்றால் காலரா வாந்தி பேதி வநது விடும் என்பதற்காக அல்ல. கண்ணன் முதல் பிடி சாப்பிட்டவுடனேயே அரண்மனையில் பாதி,  குசேலர் வீட்டுக்குப் போய்விட்டது. கடவுள அருளுடன் சாப்பிட்டால் அவருடைய செல்வம்- விபூதி-  மற்றவர்களுக்கும் கிடைக்கும். ருக்மினிக்குப் பயம்; இவர் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் செல்வம் எல்லாம் பறந்தோடிப் ஓய் விடுமோ என்று.

அன்பில் திளைத்த குசேலருக்கு வந்த காரியமே மறந்து போச்சு; பைஸா விஷயத்தை மறந்து விட்டு வெளியே நைஸா வந்தார். இவருடைய நட்பைத் தெரிவித்தாளே மனைவி மகிழ்ச்சி கொள்ளுவாள். அது வைர நெக்லஸ் வாங்கிப் போட்டது போல என்று குசேலர் நினைனத்தார். பாவம் பெண்ணின் ஸைகாலஜி (woman psychology) தெரியாதவர்!.

 

 

ஊருக்குத் திரும்பி அக்ரஹாரத்துக்குள்ள நுழைஞ்சா இவர் வீட்டக் காணல்ல; அடப் பாவி, இருந்த வீடும் போச்சே! இது என்ன ஆட்சி? யாரவது பட்டா போட்டு மாத்தி விட்டானோ என்று மலைப்பதற்குள் அப்பா! என்று 27 குழந்தைகளும் பட்டாடை உடுத்திய வண்ணம் கையில் பஞ்சுமிட்டாயுடன் ஓடி வந்தன.

‘மாயமோ மாயமோ என்று என்று பாடத் துவங்கும் முன் , ‘குறை ஒன்றும் இல்லை கோவிந்தா’ என்று குசேலர் மனைவி பாடிக்கொண்டே வந்தாள்.

கதையும் இனிதே முடிந்தது. யாசகம் கேட்கப்போன இடத்திலும் வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை தவறாத குசேலர் பிச்சை கேட்கவில்லை.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?என்று வியந்தார்.

 

-சுபம்–

 

நடுநிலை கடைப்பிடித்த நல்லவர்! (Post No.5322)

Sri Venkataraman Santanam and Srimati Rajalakshmi Santanam

Written by S Nagarajan

 

Date: 15 August 2018

 

Time uploaded in London – 6-15 AM  (British Summer Time)

 

Post No. 5322

 

Pictures shown here are taken from various sources saved by my brothers S Srinivasan, S Suryanarayanan, S.Meenakshisundaram and articles written by S Nagarajan (posted by S Swaminathan)

 

 

நல்லவருக்கு அஞ்சலி

நடுநிலை கடைப்பிடித்த நல்லவர்!

 

ச.நாகராஜன்

நடுநிலை நாளிதழ் என்று போட்டுக் கொண்டு ஒரு பக்கமாய் சார்ந்து எழுதுவது ஊடகங்களின் இன்றைய போக்காக மாறி விட்டது.

 

ஆனால் நடுநிலை நாளிதழான தினமணியின் மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய எனது தந்தையார் திரு வெ.சந்தானம் நடுநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.

அலுவலகப் பணியில் மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் அவர் கடைப்பிடித்த எள்ளளவும் பிசகாத, தராசு நுனி போன்ற நடுநிலை வியக்க வைக்கும் ஒன்றாகும்.

வீட்டிலும் சரி நாட்டிலும் சரி உரிய முறையில் உரிய விஷயத்தில் நடுநிலையுடன் நடக்கும் பாங்கு அவருக்கு இயல்பாகவே இருந்தது.

 

நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மனதில் நிழலாடினாலும் சில சம்பவங்களை இங்கு  குறிப்பிடுகிறேன்.

அரசியல் கட்சியில் எல்லா அணிகளையும் சம நோக்குடன் பார்ப்பார் அவர்.

 

 

With Swamiji Krishna of Aykkudi, near Tenkasi

காமராஜர் முதல் அமைச்சர்.

சுதந்திர தியாகிகளை அங்கீகரிக்க அவர்களுடன் சிறையில் கூட இருந்த ஒருவர் யாரேனும் அப்படி கூட இருந்ததைக் குறிப்பிட வேண்டுமென்ற விதி வந்தது.

 

இப்படி ஒருவரிடம் கடிதம் வாங்க வேண்டுமென்ற ஆசையோ அல்லது நினைவோ கூட இல்லாமல் இருந்தார் என் தந்தை.

ஆனால் பல தியாகிகளும் இதை ஏன் இன்னும் வாங்கவில்லை என்று கேட்ட வண்ணம் இருந்தனர்.

 

மதுரையில் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் மாநாடு தமுக்கம் மைதானதில் நடந்தது.  இரவு நேரம்.

 

தினமணி நிருபராக வெகு காலம் பணியாற்றியவரும் என் தந்தையின் பால் மிக்க மரியாதையும அன்பும் கொண்டவரான திரு திருமலை மைதானத்தில் ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த காமராஜரிடம் இந்தக் கடிதம் பற்றிக் குறிப்பிட்டார்.

 

இப்படி யார் வேண்டுமென்கிறார்கள் என்று கேட்டார் திரு காமராஜர். இது அரசால் கொண்டுவ்ரப்பட்ட ஆணை என்றவுடன் சிரித்தவாறே அந்த மைதானத்திலேயே அந்தக் கணமே ஒரு டைப்ரட்டரைக் கொண்டுவரச் சொல்லி அதில் ஒரே ஒரு வரி ஆங்கிலத்தில் அடிக்கச் சொன்னார்.

திரு வெ.சந்தானம் என்னுடன் சிறையில் இருந்தார் என்பதே அந்த ஒரு வரி.

என் தந்தை அந்தக் கணமே அரசின் கணக்கின் படி ‘சுதந்திரப் போர் தியாகி’ ஆனார்.

ராஜாஜிக்கு என் தந்தை பால் பரிவும அன்பும் உண்டு. கல்யாண ரிஸப்ஷனில் என் தந்தையும் தாயும் நாற்காலியில் அமர்ந்திருக்க அந்தப் பெரிய்வர் பின்னால் நிற்கும் காட்சியைக் காண்பிக்கும் அதிசய போட்டோ எங்கள் இல்லத்தில் இன்றும் இருக்கும் ஒரு பொக்கிஷம்.

 

முத்துராமலிங்கத் தேவரின் தேச பக்தியும் தெய்வ பக்தியும் நாடறிந்த விஷயம். அவரது கூட்டங்களுக்கு மதுரையில் என் தந்தையார் தலைமை வகிப்பதுண்டு. அவர் என் தந்தையிடன் கொண்டிருந்த பேரன்பும் மரியாதையும்  வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

 

அரசியலில் மட்டுமல்ல காஞ்சி பெரியவாள், சிருங்கேரி ஆசார்யாள் உரைகளை அவ்வப்பொழுது தினமணி ஏடு தாங்கி வரும்.

 

சிருங்கேரி ஆசார்யாளின் பக்தர்கள் எழுத்தை எண்ணிக் கொண்டு வருவார்கள். ஏன் காஞ்சி பெரியவருக்கு மட்டும் இரண்டு காலம் இருக்கிறது, ஏன் இத்தனை எழுத்துக்கள் சிருங்கேரி பெரியவரின் உரைக்கு குறைந்திருக்கிறது என்றெல்லாம் தீவிர பக்தியில் கேட்பார்கள்.

 

 

 

 

 

 

அவர்களுக்கு முக்கியத்திற்கு முதலிடம், விஷயத்தின் முக்கியம் போன்றவற்றை எடுத்துச் சொல்லி அவர்களின் மனத்தை மகிழ்விப்பார். நடுநிலையுடன் எதையும் அணுகும் மனப்பாங்கை நாளடைவில் அனைவரும் புரிந்து கொண்டு வெகுவாகப் பாராட்ட ஆரம்பித்தனர். இரு ஆசார்யர்களின் அனுக்ரஹமும் எங்கள் குடும்பத்திற்கு ஏராளம் உண்டு.

சிருங்கேரி ஆசார்யர் வீட்டிற்கே வந்து அனுக்ரஹம் புரிந்த நிகழ்ச்சி மிக சுவாரசியமான ஒன்று.

 

ஸ்ரீ சத்ய சாயிபாபா என் தந்தையார் மீது மிகுந்த அன்பு கொண்டு அனுக்ரஹம் புரிந்தார். ஆபஸ்ட்பரியில் நடந்த கூட்டத்தில் உரையாற்ற பிரத்யேகமாக அழைப்பு விடுத்தார்.

அரசியல், ஆன்மீகம் மட்டுமல்ல, அன்றாடப் பொழுது போக்குகளுக்கும் கூட அவர் உரிய இடத்தைத் தருவார்.

இசை நிகழ்ச்சிகள் தவறாமல் தினமணியில் இடம் பெறும். இசைக் கலைஞர்கள் வெகுவாக மதிக்கப்படுவர் தினமணியில்.

 

கிங்காங் மல்யுதத நிகழ்ச்சிக்கென மதுரை வந்தவர் என் தந்தையைப் பார்க்க நேரில் வந்தார். அவருக்கு ஒரு பிரம்பு நாற்காலி போட அதில் உட்கார ஆரம்பித்தவுடன் அந்த நாற்காலி முறிந்து போக உடனே ஸ்ட்ராங்கான கட்டிலில் சிரித்தவாறே அமர்ந்து உரையாட ஆரம்பித்தார்.

 

தினமணியில் சென்னை ஆபீஸில் ஸ்ட்ரைக். சென்னைப் பதிப்பு சித்தூரிலிருந்து சில காலம் வந்தது.

எழுத்தாளர்களின் கதை, கட்டுரை படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மதுரைக்கு வந்தது.

அந்தக் கால கட்டத்தில் ஏராளமான புது எழுத்தாளர்கள் அறிமுகமாயினர்.

Kanchi Paramacharya in Madurai Dinamani office.

 

யார் எழுதினார்கள் என்று பார்க்காமல் எழுத்து எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பார் என் தந்தை.

ஜியாவுடீன் என்ற இஸ்லாமிய இளைஞர் ஃபாரஸ்ட் ரேஞ்சராகப் பணியாற்றி வந்தார். அழகுற கதைகள் எழுதுவார். அவர் எழுத்து பிரசுரிக்கப்ப்ட்டவுடன் அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. பொங்கிய மகிழ்ச்சியுடன் ஓடோடி வந்து தந்தையிடன் தன் வியப்பையும் அன்பையும் ம்கிழ்ச்சியையும் தெரிவித்தார்.இதே போல அலுவலகம் ஒன்றில் கணக்குப் பிரிவில் பணியாற்றிய சங்கர ராம் என்பவர் புனைபெயரில் நல்ல எழுத்தாளரானார். சேதுபதி பள்ளியில் கணக்குப் பிரிவில் பணியாற்றிய திரு ராமகிருஷ்ணன் அற்புதக் கவிஞர் ஆனார்.

 

நா.பார்த்தசாரதி அவருடன் கூடவே வரும் பட்டாபிராமன் ஆகியோரின் படைப்புகள் வெளி வரலாயின.

சாலமன் பாப்பையா உள்ளிட்ட பட்டிமன்றப் பேச்சாளர்கள் எங்கள் இல்லத்தில் அமர்ந்து தினமணி பட்டிமன்றம் தலைப்பு குறித்து விவாதிப்பர். தினமணி பட்டிமன்றம் என்பது பட்டிமன்றத்திற்கான ‘ஸ்டாண்டர்ட்’ ஆனது!

Kanchi Shankaracharya Sri Jayendra Swamikal with Dinamani Team

இப்படி இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பட்டி மன்றப் பேச்சாளர்கள், தலைவர்கள், ஆன்மீகவாதிகள் உள்ளிட்ட அனைவருமே இறுதி வரை தந்தையின் பால் நேசத்தையும் பாசத்தையும் கொட்டினர்.

 

ஒரு பெரியவருடன் கூடப் பழகும் போது நாளுக்கு நாள் அது மெருகேறி வளர்பிறை போல வளர்ந்து கொண்டே போகும் என்பதை பற்பல ஆண்டுகள் பழகிய அனைவரும் அனுபவத்தில் கண்டு மகிழ்ந்தனர்.

 

அவரின் நினவைப் போற்றும் நாள் ஆகஸ்ட் 15.

சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர், 1998ஆம் ஆண்டு., ஆகஸ்ட் 15ஆம் தேதி.

மதுரை எல்லிஸ் நகரில் கொடி ஏற்றியாகி விட்டதா என்று கேட்ட பின் தன் இன்னுயிரை விண்ணுலகம் நோக்கி ஏக விட்டார்.

 

அவரை நினைத்து அஞ்சலி செய்வதில் ஒரு தனி அர்த்தம் இருக்கத்தானே செய்யும்?!

 

ARTICLES ON SANTANAM POSTED EARLIER:-

  1. திருவெ.சந்தானம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/திரு-வெ…

Posts about திரு வெ.சந்தானம் written by Tamil and Vedas

  1. வெ.சந்தானம்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/வெ…

Posts about வெ.சந்தானம் written by Tamil and Vedas

–subham—

***

மநுவின் 4 கேள்விகளும் 4 அதிசயப் பிரார்த்தனைகளும்! (Post No. 5317)

மநு நீதி நூல்- Part 25

 


WRITTEN by London swaminathan

Date: 13 August 2018

 

Time uploaded in London –15-40 (British Summer Time)

 

Post No. 5317

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மநு நீதி நூல்- Part 25

 

 

ஸ்லோகம் 240 முதல் 286 (மூன்றாம் அத்தியாயம் முடிவு) வரை பார்ப்போம்.

 

முன்னதாக ஸ்லோகம் 203-ல் சொன்ன விஷயத்தை நினைவு கூறுதல் சாலப் பொருத்தம் ஆகும்; கடவுள்களுக்குச் செய்யும் கிரியைகளைவிட, இறந்து போன முன்னோர்களுக்குச் செய்யும் கிரியைகளே முக்கியமானவை. முதலில் கடவுளுக்குக் கொடுத்துவிட்டு பின்னர் பிதுர் காரியங்களை செய்வது ஏன் தெரியுமா? தேவ கார்யங்கள், பிதுர் கார்யங்களுக்கு வலிமை சேர்க்கின்றன!

ஸ்லோகம் 3-241 முதல் யார் ஸ்ரார்த்த்தம் சாப்பிடுவதை பார்க்கக்கூடாது என்கிறார் மநு.

 

3-251- நீங்கள் நன்றாக சாப்பிட்டீர்களா என்று கேட்டுவிட்டுக் கை கழுவ வாய் கொப்பளிக்க தண்ணீர் தரவேண்டும்.

 

3-254- நான்கு கேள்விகள் கேட்கச் சொல்லுகிறார்

1.ஸ்வரிதம்- நீங்கள் நன்றாகச் சாப்பிட்டீர்களா? (ஏகாக ஸ்ரார்த்தத்தில்)

2.சுஸ்ருதம்= நன்கு சமைக்கப்பட்டிருந்ததா? (கோஷ்டி ஸ்ரார்த்தத்தில்)

3.ஸம்பன்னம்= எல்லாம் சரியாக இருந்ததா? (நாந்தீ ஸ்ரார்த்தத்தில்)

4.ருசிதம்= அமோகமாக இருந்ததா? (தேவ ஸ்ரார்த்தத்தில்)

 

3-255-ல் தர்ப்பையால் ஆசனம் போடுவது, சாணத்தால் வீட்டை மெழுகுவது முதலியன பற்றிச் சொல்கிறார்

 

நான்கு பிரார்த்தனைகள்

3-257-ல் திவசப் பிராமணர்களை தென் முகமாக நோக்கி 4 பிரார்த்தனை செய்யச் சொல்கிறார் மநு:

 

1.“சுவாமிகளே! என் குலத்தில் கொடைத் தன்மையுடைவர்கள் அதிகரிக்க வேண்டும்.

2.வேதமானது ஓதுவதாலும், ஓதுவிப்பதாலும் யக்ஞம் செய்வதாலும் வளரக்கடவது.

 

3.புத்திர, பௌத்திரர் (மகன், பேரன்) என்று குலம் வளரக் கடவது; பெரியோர்களிடத்தும் வேதாந்த விசாரத்திலும் அன்பு குறையாமல் பெருகட்டும்

 

4.மற்றவர்களுக்குக் கொடுப்பதாற்காக எங்களிடம் செல்வம் சேரக் கடவது.

 

உலகில் கொடை, தான தருமம் பற்றிப் பேசும் நூல்கள் தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் மட்டுமே உண்டு; ஏனையோர் இது நடந்தவிடத்து அதைப் போகிற போக்கில் புகழ்வர். ஆனால் இந்து மதத்தில் மட்டுமே அதை ஒரு புண்ணிய காரியம் என்றும், புண்ணியம் இல்லாவிடினும் மற்றவர்கள் நன்றாக வாழ்வதற்காக இதைச் செய்யவேண்டும் என்றும் அறத்தின் ஒரு பகுதியாக சொல்லுவர். திருக்குறளிலும், ரிக் வேதத்திலும் இதைக் காணலாம். விருந்தோம்பல் என்பது பற்றிப் பேசாத ஸம்ஸ்க்ருத, தமிழ் நூல்கள் கிடையாது. இதனால்தான் ஆரிய- திராவிட பிரிவினை வாதம் தவிடு பொடியாகிறது. பாரதத்தில் மட்டுமே வளர்ந்த மண்ணின் மைந்தர்கள் உருவாக்கீய கொள்கை இது! ‘செல்வத்தின் பயனே ஈதல்’, ‘அறத்தான் வருவதே இன்பம்’, ‘ஆய் அறநிலை வணிகன் அல்லன்’ என்றெல்லாம் தமிழ் இலக்கியம் விதந்து ஓதும். ‘தனக்கு மட்டுமே சமைப்பவன் பாவி’ என்று கீதையும் வேதமும் சொல்கிறது.

 

மாமிஸ உணவு

ஸ்லோகம் 267 முதல் எந்தெந்த மாமிஸ உணவு திவசத்துக்கு, ஸ்ரார்த்தத்துக்கு உகந்தது என்று பேசுகிறது. மூன்று வருணத்தாரும் ஸ்ரார்த்தம் செய்ததால் இப்படி மாமிஸ உணவு பற்றி மநு குறிப்பிடுகிறார். சங்க இலக்கியம் மிகத் தெளிவாக மாமிஸமற்ற பிராஹ்மணர் உணவைப் போற்றுகிறது அது மட்டுமல்ல நாயும் கோழியும் புகாத அந்தணர் தெரு (அக்ரஹாரம்) பற்றியும் சங்க இலக்கிய நூல்கள் பாடுகின்றன.

 

ஸ்லோகம் 273 முதல் மாளய பக்ஷ ஸ்ரார்த்தம் பற்றிக் காண்கிறோம்

ஸ்லோகம் 275-ல் நம்பிக்கையுடன், பக்தி சிரத்தையுடன் கொடுக்கும் உணவு முன்னோர்களுக்கு என்றன்றும் ஏற்புடைத்தே என்கிறார்.

 

 

ஸ்லோகம் 284ல் வஸு, ருத்ர, ஆதித்ய என்ற மூன்று தலை முறையினருக்குச் செய்வது பற்றிச் சொல்கிறார்; வஸு- இறந்து போன தந்தை, ருத்ர- தாத்தா, ஆதித்ய= கொள்ளுத் தாத்தா.

 

அமிர்தம் என்பது என்ன?

 

285- ஒவ்வொரு மனிதனும் விகஸத்தையும் அமிர்தத்தையும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்; விகஸம் என்பது- ஸ்ரார்த்த உணவின் மிகுதி; அமிர்தம் என்பது- யக்ஞ உணவின் மீதி

 

286: முடிவுரை

இதுவரை பஞ்ச மஹா யக்ஞம், சிரார்த்தம் பற்றிச் சொன்னேன்; இனிமேல் பிராஹ்மணர்கள் முதலியோர் வாழ்க்கை நடத்துவது பற்றிச் சொல்லப் போகிறேன்.

 

 

 

 

TO BE CONTINUED IN FOURTH CHAPTER……

 

XXX SUBHAM XXXX