
Written by S Nagarajan
Date: 13 JANUARY 2019
GMT Time uploaded in London – 6-50 am
Post No. 5926
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog





Written by S Nagarajan
Date: 13 JANUARY 2019
GMT Time uploaded in London – 6-50 am
Post No. 5926
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog




Posted by Tamil and Vedas on January 13, 2019
https://tamilandvedas.com/2019/01/13/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/

Compiled by London swaminathan
swami_48@yahoo.com
Date:12JANUARY 2019
GMT Time uploaded in London –6-39 am
Post No. 5921
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
I am publishing 45 pictures from a 119 year old book in Parts . The book is Siva Maha Purana, available at the British library in London. I will give brief description in English along with the pictures of Lord Siva.
சைவ புராணம் என்னும் சிவ மஹா புராணம் 1900-ம் ஆண்டு வெளியானது. இதில் சுமார் 45 படங்கள் உள்ளன. அவற்றை பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் இந்த புஸ்தகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளது
This is part 2
Picture 6 (above)
When Uma is doing Puja to Shiva, Manmatha, God of Love, is firing his five Flower arrows. When Manmatha does it one willget amorous feelings

Picture 7
Shiva in disguise, is testing Uma’s devotion to him. This is beautifully described in Kalidasa’s Kumara Sambhava. When she passed his test, he appeared in his usual form.

Picture 8
According to Siva’s wish, the Seven Seers (Sapta Rishis) went to the King Parvatharajan (King of Himayan Region) and asked him Uma’s hand to Siva. Loot at the Seven Great Rishis Atri,Brhu, Kutsa, Vasistha, Gautama,Kasyapa and Angirasa. Vasistha’s wife Arundhati, embodiment of Chastity, according to Sangam Tamil Literature, is also present.

Picture 9
All the Devas (divine personalities) were invited to the wedding of Uma with Shiva. Look at the picture of guests! The artist has taken enough pain to show Ganesh, Skanda, Indra and all with their symbols or Vahanas. Good imagination. Try to identify as many devas as you can.

Picture 10
Wedding scene of Shiva and Uma. Look at the traditional South Indian decorations of Plantain Trees (Banana) and the Kanya Dhanam (donating by pouring water) . Hindus originated in India and so they use water from birth to death in all the SUBHA and ASUBHA actions. They did not come from outside India is proved by their Mantas on the power of water in the Rig Veda, the oldest book in the world, dated 6000 BCE by BG Tilak and Herman Jacobi.
(subha and Asubha= auspicious and inauspicious)
to be continued with 35 more pictures
–subham–
Posted by Tamil and Vedas on January 12, 2019
https://tamilandvedas.com/2019/01/12/part-2-rare-pictures-from-siva-purana-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8/

Compiled by London swaminathan
swami_48@yahoo.com
Date: 10 JANUARY 2019
GMT Time uploaded in London – 19-49
Post No. 5913
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial
1930ஆம் ஆண்டில் சிறைச் சாலையில் தம்முடன் இருந்தவர்களுடன் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி பேசிய விஷயங்களை அவரே ஒரு கட்டுரைத் தொகுப்பில் வெளியிட்டுள்ளார். அந்தப் புஸ்தகத்தை 1944ம் ஆண்டில் காரைக்குடி புதுமைப் பதிப்பகம் அச்சிட்டுள்ளது. இதோ அந்த இணைப்பு:













–subham–
Posted by Tamil and Vedas on January 10, 2019
https://tamilandvedas.com/2019/01/10/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d/

Compiled by London swaminathan
swami_48@yahoo.com
Date: 9 JANUARY 2019
GMT Time uploaded in London –10–12 am
Post No. 5907
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்ற பெயருடன் ராஜாஜி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு காரைக்குடி புதுமைப் பதிப்பகத்தால் 1944-ம் ஆண்டு வெளியாகியது. அதில் யாகத்தில் உயிர்ப்பலி பற்றி மஹாபாரதம் கூறும் விஷயத்தை ராஜாஜி நமக்கு அளிக்கிறார். இதோ அந்த இணைப்பு:-







–subham–
Posted by Tamil and Vedas on January 9, 2019
https://tamilandvedas.com/2019/01/09/%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d/

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 December 2018
GMT Time uploaded in London – 8-25 am
Post No. 5836
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பாகவத புராணம் அபூர்வ படங்கள்- பகுதி 5
கடந்த நான்கு நாட்களில் வெளியான அபூர்வ படங்களையும் கண்டு களிக்கவும்.
PART FIVE OF BHAGAVATA PURANA PICTURES ; PLEASE SEE THE PICTURES POSTED IN THE PAST FOR DAYS. THESE ARE FROM A 100 YEAR OLD BOOK, available in the British library in London.







Jaya and Vijaya, gate keepers were cursed by saints Sanaka, Sanandana

Devas approach Vishnu to requesting him to control Hiranya kashipu.

Prahlada, son of Hiranyakashipu is a devotee of Vishnu. But his father was against Vishnu.

Lord Vishnu took the form of Lion Man (Man Lion= Nara Simha) and tore the body of the demon Hiranyakashipu

Lord Vishnu saved the elephant from a crocodile-Gajendra Moksha

Churning of Milky Ocean by Devas and Asuras

Lord Vishnu took the form of Beauty Mohini and distributed the Amrita (Ambrosia, Elixir) to Devas. When Rahu (snake dragon) tried to steal the Amrita, his head was cut off.

Little boy Vamana ask three measures of land from the King Mahabali

Tri Vikrama Avatar- Lord Vishnu became a huge figure from little Vamana and measured the world with three steps.

Picture of Matsya Avatar- Fish incarnation of Lord Vishnu.
–to be continued………………………………………..
Posted by Tamil and Vedas on December 28, 2018
https://tamilandvedas.com/2018/12/28/bhagavata-purana-rare-pictures-part-5-post-no-5836/
WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 24 December 2018
GMT Time uploaded in London – 11-36 am
Post No. 5825
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பாகவத புராணம், அபூர்வ படங்கள்- பகுதி 3
நேற்றும் முன் தினமும் வெளியிட்ட அபூர்வ படங்களையும் கண்டு களிக்கவும்.
PART THREE OF BHAGAVATA PURANA PICTURES ; PLEASE SEE THE PICTURES POSTED YESTERDAY AND DAY BEFORE YESTERDAY. THESE ARE FROM A 100 YEAR OLD BOOK.







Mahavishnu and the Brahma Rudras appear in front of Saint Atri

Daksha criticizing Rudra for insulting him in the Satrayaga

Sri Narayana appear in front of Druvan

Indra seized the Yaga Horse in the sacrifice conducted by Emperor Prathu.
–to be continued………………………………………..
Posted by Tamil and Vedas on December 25, 2018
https://tamilandvedas.com/2018/12/25/bhagavata-purana-rare-pictures-part-3-post-no-5825/

Written by S Nagarajan
Date: 24 DECEMBER 2018
GMT Time uploaded in London – 8-15 am
Post No. 5823
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ச.நாகராஜன்
உலகெங்கும் பரவி இருந்த சிவலிங்க வழிபாட்டை ஆதார பூர்வமாக நிரூபிக்கும் ஒரு கட்டுரையை பல்லவி தாகூர் எழுதியுள்ளார்.
பல்லவி தாகூர் எழுதியுள்ள அந்தக் கட்டுரை நமக்கு வியக்க வைக்கும் தகவல்களை அள்ளித் தருகிறது.
அதன் சில பகுதிகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

வத்திகனில் உள்ள எட்ருஸ்கன் மியூஸியம்
கி.மு. 2 முதல் 7-ஆம் நூற்றாண்டு முடிய வட இத்தாலி எடுரியா என அழைக்கப்பட்டு வந்தது. இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட பல அகழ்வாராய்ச்சிகளில் பல “பீடமுள்ள கற்கள்” – அதாவது சிவலிங்கங்கள் – கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வத்திகனில் கூட ஒன்று கிடைத்துள்ளது.இன்னும் பல சிவலிங்கங்கள் வத்திகனில் உள்ள பிரம்மாண்டமான சுவர்கள் மற்றும் தூண்களுக்கு அடியில் புதையுண்டு இருக்கக் கூடும். (என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா)
5000 ஆண்டு பழமையான சிவலிங்கம் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
1940ஆம் ஆண்டு புதைபொருள் ஆராய்ச்சியாளர் எம்.எஸ். வாட்ஸ் 5000 ஆண்டு பழமையான மூன்று சிவலிங்கங்களைக் கண்டு பிடித்தார். (ஒரு அரிய பழைய போட்டோ ஹரப்பாவில் அகழ்வு நடக்கும் போது தோண்டி எடுக்கப்பட்டதைக் காண்பிக்கிறது.)
வியட்நாமில் சிவலிங்க வழிபாடு!
புராதன சிவலிங்கம் வியட்நாம் எங்கும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. துடிப்பான வேத நாகரிகத்தின் ஒரு வீடு வியட்நாம்! பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கங்கள் வியட்நாம் எங்கும் காணக் கிடைக்கின்றன.இது வேத நாகரிகம் உலகெங்கும் பரவி இருந்தது என்பதற்கான இன்னும் ஒரு ஆதாரமாகும்.

ஆப்பிரிக்காவில் சிவலிங்கம்
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கமானது 6000 ஆண்டுகளுக்கு முன்பேயே ஆப்பிரிக்கர்கள் சிவனை வழிபட்டதற்கான சான்று ஆகும். புதைபொருள் ஆய்வாளர்கள் தென் ஆப்பிரிக்காவில் சுட்வாரா என்ற குகையில் 6000 ஆண்டு பழமையான கருங்கல்லினால் ஆன சிவலிங்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இவ்வளவு ஆண்டுகள் அந்தச் சிவலிங்கம் எப்படி அப்படியே இருக்கிறது என்று பிரமித்தனர்.
நன்றி : ஆங்கில வார இதழ் ட்ரூத்- தொகுதி 86 – இதழ் 33 ;14-12-18
கட்டுரையின் ஆங்கில மூலத்தை இங்கே காணலாம்:

(Mysterious cases of Shivlings found across the world!, Pallavi Thakur, Jan 07, 2017).
Etruscan Museum at the Vatican:
Between the 2nd and 7th centuries BC, northern Italy was known as Etruria. During
excavations many such “meteoric stones mounted on carved pedestals” (Shiva
lingas) are discovered in Italy. Obviously, therefore, this one was dug up from the
Vatican itself. Many more must be lying buried in the Vatican’s massive walls and
numerous cellars. (Encyclopedia Britannica)
5,000 year old Shivalinga found at Harappa:In 1940, archaeologist M.S.
Vats discovered three Shiva Lingas at Harappa, dating more than 5,000 years old.
(A rare archival photo shows that ancient Shiva Linga as it was being excavated from the Harappa site.)
Ancient Shiva Lingas Found throughout Vietnam:
Vietnam was the home to a vibrant Vedic civilization. Throughout Vietnam many ancient Shiva Lingas have been found, dating back thousands of years. This is further proof of the vast extent of Vedic culture throughout the world.
Shivalinga in Africa: The discovery of a Shiva idol in South Africa is the proof that 6000 years ago Africans used to worship him.
Archeologists have found 6000 year old Shivalinga in a cave named Sudwara in South Africa and it is made of hard granite stone. The archeologists are amazed that how the Shivalinga survived there for so long.

Source : Truth weekly Volume 86 – issue 33 – 14-12-2018
tags– சிவலிங்க வழிபாடு
Posted by Tamil and Vedas on December 25, 2018
https://tamilandvedas.com/2018/12/25/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 21 December 2018
GMT Time uploaded in London – 13-32
Post No. 5809
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
!
நீதி சதகம்- பர்த்ருஹரி
பாடல் 44
யத்தாத்ரா நிஜபாலபட்டலிகிதம் ஸ்தோகம் மஹத்தா தனம்
தத்ப்ராப்னோதி மருஸ்தலேபி நிதராம் மேரௌ ச நாதோதிகம்
தத்திரோ பவ வித்தவத்சு க்ருபணாம் வித்திம் வெருதா மா க்ருதாஹா
கூபே பஸ்ய பயோநிதாவபி கடோ க்ருஹ்ணாதி துல்யம் ஜலம்- 44
“ஒருவனுடைய நெற்றியில் பிரம்மா எழுதிவைத்த அளவே அவனுக்கு செல்வம் கிடைக்கும். அவன் பாலைவனத்தில் வசித்தாலும் இது கிடைக்கும். மேரு மலையில் வசித்தாலும் இதைவிடக் கூடுதலாக எதுவும் கிடைக்காது. ஆகையால் பொறுமையுடன் இரு. பணக்காரர்களிடம் சென்று அடிபணிந்து முகத்துதி செய்யாதே. ஒரு குடத்தைக் கடலில் முக்கினாலும், கிணற்றில் முக்கினாலும் குடத்தின் அளவுக்கே தண்ணீர் கிடைக்கும்”.
தலைவிதிப்படியே செல்வம் கிட்டும் என்பதை விளக்க ஒரு கதை, இந்து சமய நூல்களில் உள்ளது:–
வித்யாரண்யர் என்பவர் தென்னாட்டில் துலுக்கர்களின் ஆட்சிக்கு சாவு மணி அடித்த பெரிய மஹான். அவர் இளம் வயதில் செல்வம் வேண்டி தவம் இருந்தார். இவரது தவத்தை மெச்சிய தேவி, அவர் முன் தோன்றி,
அன்பனே! உன் தவத்தை மெச்சுகிறோம் ஆனால் இந்த நற்பிறப்பில் உமக்கு செல்வம் கிடைக்க வழியில்லை. உமது தலைவிதி அப்படி.
ஆயினும் வேறு ஏதாவது ஒரு வரம் கேள்; அதைத் தருகிறேன் என்றாள்.
வித்யாரண்யர் யோசித்தார். தேவியயையே மடக்கி விடுவோம் என்று ஒரு கிடுக்கிப் பிடி போட்டார். நான் ஸந்யாஸம் வாங்கினால் அது அடுத்த பிறவிதானே. இப்போதே ஸந்யாஸி ஆகிறேன். அடுத்த பிறவிக்கான செல்வத்தைக் கொடு என்று கேட்டார்.
தேவியும் சிரித்துக் கொண்டே ‘டன்’ கணக்கில் அவர் முன் தங்கப் பாளங்களை வைத்துவிட்டு மறைந்து விட்டாள்
வித்யாரண்யரோ ஸத்யம் தவறாத மஹா யோகி. ஸந்யாஸம் எடுத்த அடுத்த நிமிடமே அவருக்குப் புரிந்தது; எதிலும் பற்று இருக்கக் கூடாது என்பது.
அடடா! தேவியிடம் ஏமாந்துவிட்டோமே. ஸந்யாசமும் செல்வமும் ‘சூடான ஐஸ்க்ரீம் என்பது போல ஆயிற்றே’ என்று உணர்ந்தார். அந்தக் காலத்தில் துலுக்கர்களின் அட்டஹாசம் பெருகிக்கொண்டே வந்தது; இந்து தர்மம் அழிபட்டு வந்தது. அவர் கண் முன்னால் இரண்டு ஆட்டு இடையர்கள் தென்பட்டனர். அவர்களிடம் பிரம்மாண்டமான செல்வத்தைக் கொடுத்து படை திரட்டச் சொன்னார். அவர்களும் உரிய பயிற்சி பெற்று மாபெரும் படை திரட்டி விஜய நகரப் பேரரசை நிறுவி தென்னாட்டில் புகுந்த துலுக்கப் படைகளை விரட்டி அடித்தார் கள்.
விதிப்படி செல்வம் கிட்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. பர்த்ருஹரி சொல்லுவது போல, பாலைவனத்தில் இருந்தாலும் செல்வம் கிட்டும் என்பதற்கிணங்க ஹரிஹரன், புக்கன் என்ற இருவருக்குச் செல்வம் போய் சேர்ந்து விஜய நகரப் பேரரசு உதயமானது.

விதியே வலியது என்னும் வள்ளுவன் கருத்து
திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் மிகத் தீவிரமாக விதியின் வலிமையை விளக்குகிறார்.
கர்ம வினை என்பதுதான் இந்துமத்தின் சிறப்புக் கொள்கை. இந்து மதத்தைத் தொடர்ந்து பாரதத்தில் எழுந்த பிற மதங்களான சமணம், பவுத்தம்,
சீக்கியம் ஆகியனவும் கர்மவினைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளன.
இதோ விதியை வலியுறுத்தும் முக்கியக் குறள்கள்
வள்ளுவனும் விதியின் காரணமாகவே ஒருவனுக்கு செல்வம் கிடைக்கிறது என்னும் பர்த்ருஹரி கருத்தை ஆதரிக்கிறான்:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி- 371
பொருள்
ஒருவனுக்கு பணம் வரக்கூடிய தலைவிதி இருக்குமானால் அவனுக்கு முயற்சி தோன்றும்;அவன் தலைவிதி பணம் வரக்கூடாது என்றால் அவனை சோம்பல் ஆட்கொள்ளும்
பிரம்மாதான் நெற்றியில் எழுதுகிறான் என்பதை வள்ளுவனும் ஒப்புக்கொள்கிறான்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது- 377
கோடி கோடியாகப் பொருள் சேர்த்து இருந்தாலும் நம் விதியை வகுக்கும் இறைவன் எழுதியபடியே நடக்கும்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்- 380
தலை விதியை விட, வேறு வலி மையானது ஏதேனும் இருக்கிறதா?

statue of Brahma
அவ்வையார்
ஒரு குடத்தை எவ்வளவு தண்ணீரில் முக்கினாலும், குடத்தின் கொள் அளவுக்கே தண்ணீர் மிஞ்சும் உள்ளே தங்கும் என்பதை பர்த்ருஹரியிடமிருந்து அவ்வையாரும் எடுத்தாண்டுள்ளார்.
இதோ அந்தப் பாடல்
| ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி – தோழி நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம் விதியின் பயனே பயன்.18.Though you dip the measure deep in the deep sea water, it will not contain four measures. O Maid ! Though riches and husband are choice, the happiness of the couple hangs on fate or destiny.மூதுரைப் பாடல் இது. இதை எழுதிய அவ்வையார் சங்க கால அவ்வையார் அல்ல. பர்த்ருஹரிக்குப் பல நூறு நூற்றாண்டுகள் பிறப்பட்டவர். பர்த்ருஹரி சொன்ன பல கருத்துக்கள் அவருக்குப் பின்னர் தோன்றிய பதினென் கீழக்கணக்கு நூல்களிலும் உள. |
இன்னொரு சிறப்பு- பிரம்மாதான் ஒருவனுடைய தலையில் அல்லது நெற்றியில் எல்லாவற்றையும் எழுதிவைக்கிறான் என்பதாகும்.
எழுத்துமுறையைக் கண்டுபிடித்தது இந்தியாதான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. கல்வி, எழுத்து, படைப்பு, விதி ஆகியவற்றுக்குப் பிரம்மாவும், அவருடைய மனைவி ஸரஸ்வதியுமே அதிதேவதைகள் என்பது இமயம் முதல் குமரி வரையுள்ள நம்பிக்கை.
tags– வித்யாரண்யர் ,விதியே வலியது,நீதி சதகம், பர்த்ருஹரி
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
Posted by Tamil and Vedas on December 23, 2018
https://tamilandvedas.com/2018/12/23/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f/

picture from wikipedia
Written by S Nagarajan
Date: 18 November 2018
GMT Time uploaded in London –6-55 am
Post No. 5673
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தியாவிலிருந்து கி.பி. 527 ஆம் ஆண்டு வாக்கில் சீனா சென்ற போதிதர்மரைப் பற்றிய ஏராளமான கதைகள் உண்டு.
குங் பூ உள்ளிட்ட விஷேச சண்டைப் பயிற்சிகள், சில விசேஷ தியான முறைகள், தர்மத்தைக் கற்பிக்கும் முறைகள், அவற்றை உள்ளடக்கிச் சொல்லும் குறைந்த சொற்களுடைய கோயன் எனப்படும் செய்யுள்கள் ஆகியவை போதிதர்மருடன் தொடர்பு படுத்திச் சொல்லப்படுகின்றன.
ஷாலின் மடாலயம் சான் பிரிவின் தலைமையகம். ஐந்தாம் நூற்றாண்டில் இது மிகவும் பிரபலமான ஒரு தலமாகத் திகழ்ந்தது. இது ஹெனான் மாகாணத்தில் டெங்ஃபெங் என்ற பிரதேசத்தில் அமைந்த ஒரு ஆலயம்.
ஷாலின் போதித்த புத்த மதப் பிரிவின் தத்துவத்தைப் பின்பற்றுவாருக்கு இன்றும் இது தான் பிரதான மையமாக இலங்குகிறது.
2010ஆம் ஆண்டு இது யுனெஸ்கோ உலக கலாசார பாதுகாப்பு இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
ஷாலின் ஆலயம் சென்ற போதிதர்மர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒன்பது வருடங்கள் குகையின் சுவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஏழு வருடங்கள் தூங்கி விட்டதாகவும், உடனடியாக தன் கண் இமைகளை அறுத்துக் கொண்டு தூங்காமல் இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு.
பின்னர் அங்குள்ள பிக்குகளுக்கு குங்பூவையும் விசேஷ தியானமுறையையும் கற்பித்தார்.
எதையும் சுருக்கமாகச் சொல்லும் கோயன் எனப்படும் செய்யுளும் சான் புத்தமதப் பிரிவும் அவராலேயே துவக்கப்பட்டது.
சீன மன்னருடனான அவரது சந்திப்பும் பல விதமாகக் கூறப்படுகிறது.
அதே போல மர்மமும் புனிதமும் கொண்ட ஷாலின் ஆலயம் பற்றியும் அதில் போதிதர்மரின் வருகை பற்றியும் கூட விதவிதமான கதைகள் உண்டு.
இவற்றில் எது சரி, எது மிகைப்படுத்தப்பட்டது என்பதை அறிய முடியாது.
இதில் அடங்கியுள்ள உண்மைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
எது எப்படி இருந்த போதிலும் மிகப் பெரிய மாற்றத்தை புத்த தர்மத்திற்குத் தந்தவர் போதிதர்மர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அவரைப் பற்றிய சில சம்பவங்களைப் பார்ப்போம்:
வு சக்கரவர்த்தியை போதிதர்மர் சந்தித்தார். அப்போது நடந்த உரையாடல் இது:
வு : புத்த பிக்குகளை உருவாக்கவும் புத்த மடாலயங்களைக் கட்டவும், சூத்ரங்களை பிரதி எடுக்கவும், புத்தரின் சிலைகளை நிர்மாணிக்கவும் நான் எந்த அளவு புண்ணிய கர்மத்தைக் கொண்டுள்ளேன்?
போதிதர்மர் : ஒன்றுமில்லை! உலகியல் நோக்கில் செய்யப்படும் கர்மாக்கள் நல்ல கர்மாக்களைக் கொண்டு வந்து தரும். ஆனால் புண்ணியத்தைத் தராது.
வு: ஆக, எது பெரிய உண்மையின் அர்த்தம்?
போதி தர்மர்: பெரிய உண்மை என்று ஒன்று இல்லவே இல்லை. சூனியம் தான் இருக்கிறது.
வு: அப்படியானால், என் முன் நிற்பது யார்?
போதிதர்மர் : அது எனக்குத் தெரியாது, மன்னரே!
கோயன்களைக் கொண்டுள்ள, “Blue Cliff Record’இன் முதல் கோயன் இது தான்!
போதிதர்மரின் பதிலால் வு மன்னர் திருப்தியுறவில்லை. போதிதர்மர் இதன் மூலம் என்ன போதித்தார் என்பது அவருக்குப் புரியவும் இல்லை.
போதிதர்மரோ யாங்ட்ஸே நதியைத் தாண்டி வடக்கே சென்று விட்டார்.
picture from wikipedia
பின்னால் போதிதர்மர் மறைந்து விட்ட செய்தியைக் கேட்டதும் அவரை விட்டு விட்டோமே என்று பெரிதும் வருந்திய வு கீழ்க்கண்ட கவிதையை இயற்றிப் புலம்பினார்:
அந்தோ! அவரைப் ‘பார்க்காமல்’ பார்த்தேன்!
அவரைச் ‘சந்திக்காமல்’ சந்தித்தேன்!!
அவரிடம் போதனை பெறாமல் போதனை பெற்றேன்!!!
இப்போது இதோ வருந்துகிறேன்!!!!
போதி தர்மரைப் பற்றிய ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. அதில் ஒன்று கிளி பற்றிய சம்பவம்.
அந்தக் கிளி கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது.
அது தெருவில் சென்று கொண்டிருந்த போதி தர்மரைப் பார்த்தது.
அவரைப் பார்த்து கிளி கேட்டது:
மேற்கிலிருந்து மனம் வருகிறது,
மேற்கிலிருந்து மனம் வருகிறது,
தயவுசெய்து எனக்கு ஒரு வழியை போதித்தருளுங்கள்,
இந்தக் கூண்டிலிருந்து தப்பிக்க!
எந்த மக்களுக்காக போதி தர்மர் வந்தாரோ அவர்கள் அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆகவே, இந்தக் கிளியையாவது உய்வு பெறச் செய்வோம் என்று எண்ணிய போதி தர்மர் இப்படி பதில் கூறினார்:
கூண்டிலிருந்து விடுதலை பெற,
கூண்டிலிருந்து விடுதலை பெற,
உன் இரு கால்களையும் நேராக வை,
இரு கண்களையும் இறுக்கி மூடு!
கூண்டிலிருந்து நீ தப்பிக்க இதுவே வழி!!
புத்திசாலி கிளி இதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டது.
அது இறந்தது போல கூண்டில் படுத்தது! இரு கால்களையும் முடக்கி நேராக வைத்தாது. கண்களை இறுக்க மூடியது.
கூண்டில் அடைத்து வைத்திருந்த கிளியின் சொந்தக்காரர் கிளியைப் பார்த்துத் திடுக்கிட்டார்.
கிளி இறந்து விட்டதோ?
கூண்டைத் திறந்தார்.கிளியைக் கையில் தூக்கி வைத்தார். அதன் மூச்சு கூட வரவில்லை. ஆனால் உடல் வெப்பம் குறையவில்லை. அவர் கையை உயரத் தூக்கினார் ஒரு கணம். அதே கணத்தில் கிளி கால்களைப் பரப்பி, கண்களைத் திறந்து மேலே பறந்தது!
விடுதலை பெற்றது!!
இந்தக் கோயன் இன்றும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதன் உண்மைப் பொருள் என்ன?
கிளி என்பது பிரக்ஞை.
கூண்டு என்பது உடல்.
இறுக்க மூடு. கால்களை ஒடுக்கு என்பது புலன்களின் எல்லைக்குட்பட்ட கட்டுப்பாட்டிலிருந்து உன்னை விடுவித்துக் கொள். உடலுக்கு அப்பாற்பட்டு உன்னை விடுவித்துக் கொண்டு உயரே பற! என்ற அர்த்தத்தைத் தருகிறது.
இது போன்ற உபதேசங்களை ஆங்காங்கே அருளிச் சொல்லியவாறே போதிதர்மர் சென்றார்.
இப்படி ஏராளமான அதிசய சம்பவங்களை உள்ளடக்கிய போதி தர்மரின் வாழ்க்கை தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!
Tags– போதிதர்மர்,ஷாலின் ஆலயம்
***
Posted by Tamil and Vedas on November 20, 2018
https://tamilandvedas.com/2018/11/20/%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0/

WRITTEN BY S NAGARAJAN
Date: 13 November 2018
Time uploaded in London – 5-21 AM (GMT)
Post No. 5657
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
நவம்பர் 13, 2018 ஸ்கந்த ஷஷ்டி
தகைமாதொடு வருவன்!
ச.நாகராஜன்
நெஞ்சேயினி செஞ்சேவடி
நிலையாமெனப் பணிய
அஞ்சேலென அருள்நோக்குடன்
நெடுவேலொடு குமரன்
தஞ்சேவலங் கொடியோடொரு
ஜகமேவிய மயிலில்
தஞ்சேயிடைத் துயரோடிட
தகைமாதொடு வருவன்!
(தம் சேவல் அம் கொடியோடு ஒரு ஜகம் மேவிய மயிலில்
தம் சேயிடைத் துயர் ஓடிட தகை மாதொடு வருவன்)
குறிப்பு : – 7-11-1967 அன்று இயற்றியது.
***

சூழும் துன்பத் தளைபோக்கி
சுழலும் மனதைச் சீராக்கி
வாழும் படிக்கு வைத்திடுமோர்
வடிவேல் முருகன் பாதமவை
தாழுஞ் சென்னி தன்னோடும்
தளரா பக்தி யதனோடும்
பாழும் கலியை மறந்திட்டுப்
பணிவாய் நாளும் வணங்கிடுவோம்!
***

வாடி வதங்குதடி நெஞ்சம்!
ஏடி! கதிர்வேலன் என்னை யினியின்று
நாடி வருவானோ நல்வரம்தான் தருவானோ
வாடி வதங்குதடி நெஞ்சம்
சேடி! உளமெல்லாம் தேர்ந்திட்ட வேலனின்னும்
நாடி வரக்காணேன் உளங்குளிர வருவானோ
வாடி வதங்குதடி மஞ்சம்!
பாடி மகிழ்ந்ததையும் பக்கென்று மறந்தானோ
ஆடி யதுமறந்தான் அத்திறம்நீ கேட்டுவுடன்
வாடி, வதங்குதடி நெஞ்சம்!
****
அழகுமயில் மீதேறி மோகனமாய்
அழகுக்கும் அழகன் வந்தான்
அழகுமயில் அலங்காரம் அதிசயித்து
அழகுக்கும் அழகெ தென்றேன்
அழகுநகை சிந்தியபின் அழகனவன்
அழகுக்கும் அழகு கோடி
அழகு சிந்து புவனமென்றான்
–SUBHAM–
Posted by Tamil and Vedas on November 13, 2018
https://tamilandvedas.com/2018/11/13/%e0%ae%a4%e0%ae%95%e0%af%88%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-post-no-5657/