மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்! (Post No.4659)

Date: 24 JANUARY 2018

 

Time uploaded in London- 6-06 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4659

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

மஹாபாரதம்

 

மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்!

 

ச.நாகராஜன்

1

உலகின் ஆகப் பெரும் இலக்கியமான மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள் மட்டும் சுமார் எட்டாயிரம் உள்ளன. ஒரு லட்சம் ஸ்லோகங்களில் 8000 என்றால் 8 % என்று ஆகிறது.

வியாஸர் மஹா கண்பதியை அணுகி தனக்கு இந்த இதிஹாஸத்தை எழுத உதவி புரிந்து அனுக்ரஹிக்குமாறு வேண்ட, அவரோ ‘எழுதுகிறேன், ஆனால் தங்கு தடையின்றி நிற்காமல் சொல்ல வேண்டும்’ என்று நிபந்தனை போடச் சற்றுத் திகைத்துப் போனார் வியாஸர். பதில் நிபந்தனையாக, ‘புரிந்து கொண்டு எழுத வேண்டும்’ என்று சொல்ல அதற்கு ஒத்துக் கொண்டார் விநாயகர். ஆகவே தான் எழுந்தன இந்த அற்புதமான புதிர் ஸ்லோகங்கள். ஆங்காங்கே முடிச்சுகளைப் போட, அதைப் புரிந்து கொள்ள விநாயகருக்குச் சற்று நேரம் ஆனது. அதற்குள் அடுத்த பல நூறு ஸ்லோகங்களை மனதிற்குள் கவனம் செய்து கொண்டார் வியாஸர்.

இந்த ஸ்லோகங்களுக்கு ‘ கூட ஸ்லோகங்கள்’ என்று பெயர்.

இவை அனைத்தையும் தொகுத்திருக்கும் புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆங்காங்கு பல காலமாக பல்வேறு விற்பன்னர்கள் நடத்திய உபந்யாசங்களில் இவை இடம் பெறும். கேட்போர்களின் மனதைக் கவரும். அவர்களையும் யோசிக்க வைக்கும்.

2

மஹாபாரத ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிஞர் சி.வி. வைத்யா 1905ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட புத்தகம் ‘தி மஹாபாரதா – எ கிரிடிஸிஸம்’ (‘The Mahabharata: A Criticism” – C.V.Vaidya). இதில் அவர் மஹாபாரதத்தின் முதல் பர்வங்களில் நிறைய புதிர் ஸ்லோகங்களும், பின்னால் உள்ள பர்வங்களில் குறைந்த அளவு புதிர் ஸ்லோகங்களும் உள்ளன என்று கூறுகிறார்.

ஆதி பர்வத்தில் 3; சபா பர்வத்தில் 2; வன பர்வத்தில் 3; விராட பர்வத்தில் 4; உத்யோக பர்வத்தில் 3; பீஷ்ம பர்வத்தில் 1; துரோண பர்வத்தில் 5; கர்ண பர்வத்தில் 3; சாந்தி பர்வத்தில் 2;அஸ்வமேத பர்வத்தில் 1; ஆக மொத்தம் 27  புதிர் ஸ்லோகங்களை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார். ஆனால் எட்டாயிரம் ஸ்லோகங்களையும் புரிந்து கொண்டு தொகுப்பார் இல்லையோ என்னவோ!

1915ஆம் ஆண்டு  மஹாபாரதத்தைச் சிறந்த முறையில் தமிழில் மொழிபெயர்த்து அளிக்கும் மகத்தான பணியில் இறங்கிய கும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் பாஷாபாரத துரந்தர, மஹாமஹோபாத்யாய, ஸ்ரீ ம.வீ. இராமானுஜாசாரியார் பல ஸ்லோகங்களுக்கு மஹாபாரத விற்பன்னர்களாலும் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாமல் போனதென்றும் அதற்கான சரியான அர்த்தத்தைக் கண்டுபிடித்து வெளியிட முயன்றதால் சில பர்வங்களை வெளியிடுவதில் கால தாமதம் ஆனதாகவும் தெரிவிக்கிறார்.

ஆக புதிர் ஸ்லோகங்கள் அனைத்தையும் ஒரு சேரப் படிக்க முடியாமலேயே உள்ளது.

 

3

விநாயகருக்கே சவாலாக அமைந்த தனது ஸ்லோகங்களைப் பற்றி வியாஸர் கூறும் போது, “அதன் கருத்தை நான் அறிவேன்; சுகன் அறிவான்; ஸஞ்சயன் அறிவானோ! மாட்டானோ!” என்று குறிப்பிடுகிறார்.

எடுத்துக் காட்டாக ஒரு புதிர் ஸ்லோகத்தை இங்கே காண்போம்:

நதீஸ லங்கேஅ ஸவநாரி கேது: நகாஹ்வ யோநாம நகாரி |

ஸுநு: ஏஷோங்க நாவேஷதா: கிரீடி:|

ஜித்வாவய; நேஷ்ய திசாத்ய காவ: ||

இதில் உள்ள முடிச்சை அவிழ்ப்பது கஷ்டமான ஒன்று.

சரியான இடத்தில் பதத்தைப் பிரித்து அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்!

அர்ஜுனன பேடியாக மாறி உத்தரனை தேரோட்டும் சாரதியாகக் கொள்ளும் விராட பர்வத்தில் கோக்ரஹண காலத்தில் வரும் ஸ்லோகம் இது.

துரோணர், பீஷ்மர், துரியோதனன் ஒரு சேர இருக்கின்றனர்.

பக்கத்தில் உள்ள துரியோதனன் அறியாத வண்ணம் பீஷ்மருக்கு, துரோணர், “ அவன், பசுக்களை மீட்க வந்த அர்ஜுனன்” என்பதைப் பூடகமாகத் தெரிவிக்கும் ஸ்லோகம் இது.

விநாயகர் கூடச் சற்று திகைத்து விட்டு அர்த்தம் கண்டுபிடிக்கும் படியாக அமைந்த ஸ்லோகமும் இது தான்;

பொதுவாக கவனித்தால் அர்த்தமே விளங்காது!

“ நதீ ஜலம் கேசவ நாரி கேது நநாஹ்வயோ நாம நகாரி ஸுநு:”

ஆற்றின் ஜலம், கேசவன், பெண், கொடி, கொடி மரத்தின் பெயர், மலையின், சத்ரு, பிள்ளை – என்ன இது? ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சொற்கள்!

இதில் என்ன அர்த்தம் இருக்க  முடியும்?

ஆனால் பதம் பிரிக்கும் போது நதீ ஜலம் என்று பிரிக்காமல் நதீஜ என்று கொண்டால் நதீஜ – நதியின் புத்திரனான பீஷ்மன்- அதாவது கங்கைக்குப் பிறந்த பீஷ்மன் என்று அர்த்தம் வரும்.

லங்கேசவந – இலங்கையில் உள்ள அசோக வனம்.

அரி சத்ரு  – அந்த அசோகவனத்திற்கு எதிரி ஆஞ்சநேயர்.

கேது – அவரைக் கொடியாக உடையவன்

நகாஹ் வய – அர்ஜுன என்ற மரத்தின் பெயரைப் பெற்றவன்

நகாரி ஸுநு: – மலைச் சத்ருவான இந்திரனின் குமாரனான அர்ஜுனன்

என்று இப்படிப் பிரித்து ஸ்லோகத்தின் சரியான பொருளை உணர வேண்டும்!

பெண் வேஷத்துடன் கிரீடம் தரித்த அர்ஜுனன் நம்மை ஜயித்து பசுக்களை ஓட்டிச் செல்வான் என்பது இதன் பொருள்.

4

 

சபா பர்வத்தில் வரும் ஒரு சொற்றொடர் இது: “மனஸாதாளம் பேரிம்”

மனஸா என்றால் 12;

தாளம் என்றால் ஒரு சிறிய இடைவெளி.

ஆக இதன் உண்மையான அர்த்தம் 12 வெளியை விட்டமாகக் கொண்ட ஒரு பேரிகை!( A Drum with 12 spans as diameter)

5

மஹா பாரதத்தை நூற்றுக் கணக்கான கோணங்களில் அலசி ஆராய்ந்து படித்து வியக்கலாம். அதில் ஒன்று தான் கூட ஸ்லோகம் – புதிர் கவிதைகள் – கண்டு படிப்பது! புத்திக்குச் சவாலாக அமையும் இந்த புதிர் ஸ்லோகங்கள் மஹாபாரத்தைப் படிக்க ஆவலைத் தூண்டுபவை மட்டும் அல்ல; விநாயகரையே மலைக்க வைத்த வியாஸரின் புத்தி கூர்மையைக் காட்டும் ஸ்லோகங்களும் ஆகும்!

இப்படி ஒரு புதிர் செய்யுள்களைக் கொண்டுள்ள இன்னொரு இலக்கியம் உலக மொழிகளில் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத் தகுந்தது!

படிப்போம்; வியப்போம்; புதிரை அவிழ்த்து மகிழ்வோம்.

***

 

கலியுக முடிவு பற்றி சாணக்கியன் (Post No.4639)

 

Written by London Swaminathan 

 

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London 7-27 am

 

 

 

Post No. 4639

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

சாணக்கியன் அதி மேதாவி; பொருளாதார நிபுணன்; ராஜ தந்திரி; ஏழைப் பிராஹ்மணன்; கொஞ்சம் அவலட்சணமான, அழகில்லாத பிராஹ்மணன். நீதி நூலில் வல்லவன்; ஆயினும் அவன் தனக்கு சம்பந்தமில்லாத சில விஷயங்களையும் பிரஸ்தாபிப்பது வேடிக்கையாக உளது.

 

அவன் சொல்லுவதைப் படியுங்கள்:

கலௌ தச ஸஹஸ்ரேஷு ஹரிஸ்த்யஜதி மேதினீம்

ததர்த்தே ஜாஹ்னவீதோயம் ததர்த்தே க்ராமதேவதா.

சாணக்கிய நீதி, அத்தியாயம்11, ஸ்லோகம் 4

 

பொருள்

“கலியுகத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னர் ஹரி, பூமியில் இருந்து புறப்பட்டு விடுவார். அதில் பாதி காலத்துக்குள் கங்கை நீர் போய்விடும். அதில் பாதியில் கிராம தேவதை போய் விடுவாள்”.

 

இது, வியாக்கியானம் செய்ய கொஞ்சம் கடினமான ஸ்லோகம்.

நம்முடைய பஞ்சாங்கக் கணக்குப்படி கலியுகத்தின் ஆண்டு 5000-ஐ எப்போதோ தாண்டிவிட்டது. கிருஷ்ணரும் அதற்கு முன்னரே வேடனின் வில்லடி பட்டு இறந்து விட்டார்.

 

மேலும் கங்கை நதி இன்னும் பிரவாஹம் எடுத்து ஓடுகிறது. கிராம தேவதை வழிபாடும் உளது.

 

ஒரு வேளை சாணக்கியன், மனிதனின் ஆண்டு என்பதல்லாமல் தேவர்களின் ஆண்டு பற்றிச் சொல்லி இருந்தால், அதற்குப் பல காலம் இருக்கிறது. ‘ஹரி’ என்பதை இறைவனின் வழிபாடு மறையும் காலமென்று எடுத்தாலும் இன்னும் ஹரி வழிபாடும்/இறை வழிபாடும் இருக்கிறது. ஆகவே பொருள் சொல்லக் கடினமான ஸ்லோகம் இது. கங்கையின் புனிதமும், தூய்மையும் வேண்டுமானால் கெட்டுவிட்டது என்று சொல்லலாம்.

 

 

பிராமணர்கள் பற்றி சாணக்கியன்

இன்னும் ஒரு சுவையான செய்தி பிராஹ்மணர் பற்றியதாகும். பிராஹ்மணர் பற்றி லக்ஷ்மியின் வாய்மொழி மூலம் சில கருத்துக்களை முன்வைக்கிறார்.

 

இதோ ஸ்லோகத்தின் பொருள்

 

விஷ்ணுவிடம் லக்ஷ்மி செப்பியது யாது எனின்,

“என் பிராண நாதா; நான் பிராஹ்மணர்கள் மீது வெறுப்பு கொண்டு, அவர்கள் வீட்டுக்குப் போகாமல் எப்போதும் தவிர்த்து வருகிறேன்.ஏன் தெரியுமா? ஒரு கோபக்கார பிராஹ்மணன் என் தந்தையையே குடித்துவிட்டான் (அகஸ்த்ய மஹரிஷி கடல் குடித்த கதை) இன்னொரு மஹரிஷி என் புருஷனை காலால் உதைத்தார்.(பிருகு முனிவர் விஷ்ணுவைக் காலால்

உதைத்த கதை). மேலும் பிராமணர்கள் சிறு வயதிலிருந்தே

வாய்க்குள் ஸரஸ்வதியை வைத்துப் போற்றுகின்றனர். இதற்கெல்லாம் மேலாக என் வீட்டைக் கலைத்து சிவ பூஜை செய்கின்றனர் (லக்ஷ்மியின் வீடு தாமரை)

சாணக்கிய நீதி, அத்தியாயம் 15 ஸ்லோகம் 16

 

இது நிந்தா ஸ்துதி வகையினது. அதாவது இகழ்வது போல இறக்கி பின்னர் புகழ்வது ஆகும்.

 

இதில் பல விஷயங்களை அவர் தெரிவிக்க விரும்புகிறார்:

1.பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது. அதாவது லக்ஷ்மி இருக்கும் இடத்தில் ஸரஸ்வதி இருக்க மாட்டாள். பிராஹ்மணர்களும் கல்வியில் வல்ல புலவர்களும் வறுமையில் வாடியதை நாம் அறிவோம். நமது தந்தையர் காலத்தில் வாழ்ந்த உலக மஹா கவி பாரதியார் வறுமையில் உழன்றதை நாம் அறிவோம் ஆகையால் சாணக்கியன் சொன்னது புகழுரையே. மேலும் பிராஹ்மணர்கள் தாமரை மலரைக் கொண்டு சிவ பூஜை செய்வதையும் இது விதந்தோதுகிறது.

டேய், கிருஷ்ணா! நீ அதிர்ஷ்டக்காரண்டா?

 

இன்னொரு ஸ்லோகத்திலும் நிந்தா ஸ்துதியைக் காண்கிறோம்.

 

“ஒரு சிறு குன்றை கையில் உயர்த்திப் பிடித்தாய். இதனால் உன் பெயர் கோ வர்த்தனன் என்றாயிற்று. இதனால் மேல் உலகிலும் பூமியிலும் உன் புகழுரையை பாடுகின்றனர். நான் என் மார்பின் மீது சாய்த்து வைத்து உன்னைக் கொஞ்சுகிறேன். என்னை யாராவது புகழ்ந்தார்களா? எல்லா உலகங்களையும் தாங்கி நிற்கும் கேசவா! நீயே சொல். இனி நான் என்ன சொல்ல இருக்கிறது சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது!

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 15, ஸ்லோகம் 16.

xxxx SUBHAM xxx

 

 

 

மஹாராஜா புக்குசாதியின் ஆசை! (Post No.4601)

((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்நீயே கவனித்துக்கொள்!))

 

 

 

Date: 10 JANUARY 2018

 

Time uploaded in London- 6-51 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4601

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

புத்த சரிதம்

 

மஹாராஜா புக்குசாதியின் ஆசை!

 

ச.நாகராஜன்

Buddha in Bangladesh; picture sent by Lalitha Malar Maniam

ராஜக்ருஹத்தின் மஹாராஜா பிம்பசாரனுக்கும், தக்ஷசீல மன்னனான மஹாராஜா புக்குசாதிக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது.

 

இரு நாடுகளுக்கும் இடையே நல்ல வர்த்தக உறவு ஆரம்பித்து, மேம்பட்டது.

 

பிம்பசாரன் அந்த நாட்டு வணிகர்கள் மூலமாக தன் நண்பனுக்கு பல பரிசுப் பொருள்களை அனுப்பினான். அந்தப் பரிசுப் பொருள்களுடன் கூடவே ஒரு கடிதமும் சென்றது.

கடிதம் தங்கத் தகட்டில் எழுதப்பட்டிருந்தது.

“அன்பு நண்பரே!, எனது நாட்டில் மூன்று ரத்தினங்கள் உள்ளன. புத்தம், தர்மம், சங்கம்!”

 

கடிதத்தின் வாசகத்தைப் படித்த புக்குசாதிக்கு அதைப் பற்றி அறிய ஆவல் மிகுந்தது.

 

புத்தரைப் பற்றியும் தர்மத்தைப் பற்றியும் சங்கத்தைப் பற்றியும் நன்கு அறிந்து கொண்டான்.

 

புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

புத்தரை மானசீகமாகச் சரணடைந்தான்!

 

Picture by Puvana Sarma

எப்படியாவது வாழ்நாளில் ஒரு முறையாவது புத்த தரிசனத்தை அடைய வேண்டுமென்று அடங்காத ஆவல் ஏற்பட்டது அவனுக்கு.

இளவரசன் சித்தார்த்தன் எப்படி ராஜ்யம், பட்டம் ஆகியவற்றைத் துறந்தானோ அதே வழியைக் கடைப்பிடிக்க எண்ணிய அவன், தன்  மகுடத்துடன் அனைத்தையும் துறந்தான். மஞ்சள் ஆடையை அணிந்தான்.

 

நேராக ராஜக்ருஹம் நோக்கிக் கிளம்பினான்.

அவனது உற்றாரும் சுற்றமும், மக்களும் அழுது புலம்பினர்.

ஆனால் புக்குசாதி தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவன் பின்னால் பலரும் கூடவே வரலாயினர்.

 

சில நாட்களில் 192 யோஜனை தூரத்தைக் கடந்து ராஜக்ருஹத்தை வந்து அடைந்தான்.

புத்தர் எங்கிருக்கிறார் என்று கேட்டான்.

அங்கிருந்த மக்களோ, புத்தர் 45 யோஜனை தூரத்தில் உள்ள சாவட்டி என்னும் இடத்தில் இருப்பதாகக் கூறினர்.

 

அன்றிரவே அந்த இடத்தை அடைவது சாத்தியமில்லை என்பதால் இரவைக் கழிக்க ஏதேனும் இடம் இருக்கிறதா என்று கேட்டான்.

ஒரு குயவனின் குடிசை இருப்பதாகத் தெரிய வந்தது.

குயவனின் அனுமதியைப் பெற்று அவன் அங்கு தங்கினான்.

 

அங்கோ சாவட்டியில் புத்தர் அன்றைய தினத்தில் தன் கருணையை அனுக்ரஹிக்க சத்பாத்திரமான ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார்.

 

தக்ஷசீல மன்னனான புக்குசாதி தன் அரசையும் சுக போகங்களையும் துறந்து தன்னப் பார்ப்பதற்காக நெடுந்தொலைவு கடந்து வந்துள்ளான் என்பதை அவர் அறிந்தார்.

மறு நாள் காலை அவன் ஒரு விபத்தில் இறக்கப் போவதையும் அவர் அறிந்தார்.

 

என்ன செய்வது? கருணை உள்ளம் ஒரு முடிவுக்கு வந்தது.

சாவட்டியிலிருந்து கிளம்பிய புத்தர் நேராக ராஜக்ருஹத்தை நோக்கி விரைந்து அதை அடைந்தார்.

 

புக்குசாதி தங்கியிருந்த குயவனின் குடிசையை அணுகினார்.

குயவனின் தான் அங்கு தங்க முடியுமா என்று  கேட்டார்.

குயவன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றான்.

குடிசைக்குள் நுழைந்த புத்தர் புழுதி நிறைந்த குடிசையின் தரையைப் பார்த்தார்.

Picture from Deccan Herald; Budhdha Gaya/Bodhgaya

அதே தரையில் தான் புக்குசாதி அமர்ந்திருந்தான்.

அவரும் அமர்ந்தார்.

 

இப்போது அந்த புழுதித் தரையில் இரண்டு பெரும் சாம்ராஜ்யங்களைத் துறந்த மன்னர்கள் அமரிந்திருந்தனர்.

சித்தார்த்தனாக இருந்து புத்தராக ஆனவர். இன்னொருவர் தக்ஷசீல மன்னன் புக்குசாதி.

 

இருவரும் நெடுதூரம் நடந்திருந்தனர். இருவருக்கும் களைப்பு;

இருவரும் பேச ஆரம்பித்தனர். அர்த்தமுள்ள உரையாடல் ஒன்று ஆரம்பித்தது.

 

புத்தர்: நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?

புக்குசாதி : நான் புக்குசாதி. தக்ஷசீல மன்னன்.

புத்தர்: மஞ்சள் ஆடை அணிந்திருக்கிறீர்கள்! யாரிடம் துறவறம் பெற்றீர்கள்? ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்?

 

புக்குசாதி: எனது நண்பர் மஹாராஜா பிம்பசாரன் ஒரு தங்கத் தகட்டில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் இந்த ராஜ்யத்தில் மூன்று ரத்தினங்கள் இருப்பதாகவும் அவை புத்தம், தம்மம், சங்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைக் கேட்டவுடன் என் ராஜ்யத்தை நான் துறந்தேன். ஒரு கடையிலிருந்து இந்த துவராடையை வாங்கி அணிந்தேன். புத்தரைத் தேடி இங்கு வந்தேன். அவரோ சாவட்டியில் இருப்பதாக அறிகிறேன். இரவு நேரமாகி விட்டது. ஆகவே இங்கு தங்கி இருக்கிறேன். நாளை காலை அவரைத் தரிசிப்பேன்.

 

புத்தர்: அவரை இதற்கு முன்னர் பார்த்திருக்கிறீர்களா?

புக்குசாதி: இல்லை

புத்தர்: அவரைப் பார்த்தால் அவர் தான் புத்தர் என்பதை நீங்கள் உணர முடியுமா?

புக்குசாதி: முடியாது.

அவ்வளவு தான். உரையாடல் முடிந்தது.

 

Picture from Singapore; posted by Puvana Sarma

இருவரும் மௌனமாயினர்.

புலர்காலைப் பொழுது மலர்ந்தது.

புத்தர் புக்குசாதிக்கு உபதேசித்தார்.

அப்போது தான் புக்குசாதிக்குத் தெரிய வந்தது, முதல் நாள் இரவு தன்னுடன் உரையாடிய மகான் புத்தரே தான் என்று!

எல்லையற்ற ஆனந்தம் கொண்ட அவன், புத்தரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான் முந்திய  இரவு அவரை ‘ஆயுஷ்மத்’ என்று அழைத்தமைக்காக! ஆயுஷ்மத் என்றால் நண்பன் என்று பொருள்.

 

தனக்கு உரிய முறையில் சங்கத்தில் சேர்க்குமாறு அவன் வேண்டினான்.

புத்தரும்  கருணையுடன் அவ்னிடம், ஒரு துவராடையையும் ஒரு பிக்ஷா கலயத்தையும் கொண்டு வரப் பணித்தார்.

புக்குசாதி வெளியில் சென்று குப்பைக் குவியல் ஒன்றில் துவராடை ஒன்றைத் தேடலானான்.

 

 

அநத சமயத்தில் புத்தர் ஜேடவனம் என்ற மடாலயத்திற்குச் சென்றிருந்தார்.

 

குப்பைத் தொட்டியில் துவராடையையும் கலயத்தையும் அவன் எடுக்கும் போது காளை ஒன்று தன் இரு கொம்புகளால் அவனைக் கூர்மையாகக் குத்தியது.

 

அதே இடத்தில் உடனே அவன் மரணமடைந்தான்.

ஏற்கனவே புத்தரின் உபதேசத்தால் அனாகாமி என்ற உயரிய நிலையை அடைந்த அவன் திரும்பி வராத ஒரு உயரிய நிலையைப் பெற்றிருந்தான்.

 

அவிஹா ப்ரம்ம உலகத்திற்குச் சென்ற அவன் அர்ஹாந்த் என்ற அற்புதமான நிலையை அடைந்து விட்டான்.

 

நடந்ததை எல்லாம் கேட்ட மஹாராஜா பிம்பசாரன் புக்குசாதியின் உடலை எடுத்து தக்க மரியாதைகள் செய்து தகனம் செய்தான்.

அவனது அஸ்தியைச் சேர்த்து ஒரு நினைவிடத்தை அமைத்தான்.

 

புத்தரின் எல்லையற்ற கருணை எப்படி இறக்கப் போகும் விதியுடைய ஒருவ்னையும் சென்று சேரும் என்பதற்கு புக்குசாதியின் வாழ்க்கை நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

தன்னை அண்டி வந்த எவரையும் புத்தர் கைவிட்டதே இல்லை!

***

கோசம், ஆத்மா சித் ரூபன், விளக்கம்! (Post 4597)

Date: 9 JANUARY 2018

 

Time uploaded in London- 6-49 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4597

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 8

முந்தைய கட்டுரைகள்: முதல் கட்டுரை எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17

நான்காம் கட்டுரை எண்  4472  – வெளியான தேதி :    9-12-17

ஐந்தாம் கட்டுரை எண் 4511 – வெளியான தேதி : 18-12-17

ஆறாம் கட்டுரை எண் 4546 – வெளியான தேதி : 26-12-2017

ஏழாம் கட்டுரை எண் 4574 – வெளியான தேதி : 2-1-2018

 

கோசம், ஆத்மா சித் ரூபன், விளக்கம்!

ச.நாகராஜன்

 

 

 

இனி கோசம், ஆத்மா பற்றித் தெரிந்து கொள்வோம்

*

ஐயா, கோசம் என்றால் என்ன?

சொல்கிறேன்.

கத்திக்கு உறை இருப்பது போல,

மாம்பழத்திற்கு தோல் இருப்பது போல,

மனிதனை சட்டை மறைப்பது போல,

ஆத்மாவை, அன்னமய கோசம், பிராணமய கோசம்,  மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம். ஆனந்த மய கோசம் என்று ஐந்து கோசங்கள் மறைக்கிறது.

 

இந்த கோசங்களுக்கு ஆத்மா அன்னியன் என்பது எப்படி?

அக்கினியை அனுசரித்திருக்கும் புகைக்கு அந்த அக்கினியைத் தவிர வேறு இருப்பு இல்லை.

 

என்றாலும் கூட அந்தப் புகை அக்கினியை மறைக்கிறது.

அதே போல ஆத்மாவின் இருப்பையே இருப்பாகக் கொண்ட கோசங்கள் ஆத்மாவை மறைப்பதாக ஆரோபிக்கப்படுகின்றன.

ஆனால் மண்ணினிடத்தில் ஆரோபிக்கப்பட்ட ஒரு குடத்தினுடைய ரூபமும், பெயரும் பாதிக்கப்படும் போது  வாஸ்தவமாய் மண் மாத்திரம் எப்படி மிஞ்சுகிறதோ, அதே போல ஆத்மாவினிடத்தில் ஆரோபிக்கப்பட்ட  ஐந்து கோசங்களும் ஆத்ம ஞானத்தினால் பாதிக்கப்படுகிறது.

 

சச்சிதானந்த ஸ்வரூபமான ஆத்மா ஒருவனே மிஞ்சுகிறான்.

 

நல்லது, ஐயா, ஆத்மாவின் சச்சிதானந்த ரூபத்துவம் என்னும் ஸத் ரூபம், சித் ரூபம், ஆனந்த ரூபம்  ஆகியவற்றிற்கான லக்ஷணம் எது?

முக்காலத்திலும், ஒன்றினாலும் பாதிக்கப்படாமல் இருந்து கொண்டு ஒரே ரூபமாக இருப்பது தான் ஸத் லக்ஷணம்.

 

 

ஆத்மா சித் ரூபன் என்பதற்கு என்ன பிரமாணம்?

தனது இருப்பை வெளிக்காட்ட சூரியன் முதலான சாதனங்களை நாடாமல், தானே விளங்கிக் கொண்டும் தன்னிடத்தில் ஆரோபிக்கப்பட அனைத்து ஜட பதார்த்தங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டும் இருக்கின்றபடியால் சித் ரூபன் எனப்படுகிறான்.

 

 

இனி ஆனந்த ரூபத்துவம் எது?

நித்தியமாயும், நிருபாதிகமாயும், நிரசதியமாயும் இருக்கின்ற சுகம் எதுவோ அதுவே

ஆனந்த ரூபத்துவம்.

 

அதெப்படி ஐயா?

சுஷூப்தி ஆநந்தத்தில் சுக லக்ஷணம் இருப்பதனால் அந்த ஆனந்தமே “நான்” என்று அறிந்து கொள்ளத்தக்கது.

 

சுஷூப்தியில் துக்க நிவர்த்தி மட்டும் காணப்படுகிறதேயன்றி ஆனந்தத்துவத்தை அனுபவிப்பதைக் காணவில்லையே?

நல்ல தூக்கத்தில் இருந்த ஒரு மனிதன் எழுந்திருந்த பின்னர், “நான் சுகமாகத் தூங்கினேன்” என்று சொல்கிறான் இல்லையா, அப்படிச் சொல்வதால், ஆத்மாவுக்கு சுஷூப்தியில் சுகத்தின் இருப்பைச் சொல்கிறான்.

 

நிருபாதிக்கத்துவம் எது?

புஷ்பம், சந்தனம், பெண் ஆகியவை உபாதிகள்.இவற்றால் உண்டாகும் சுகம் ஔபாதிகம். சுஷூப்தியில் இந்த உபாதிகள் எதுவும் காணப்படுவதில்லை.

அப்படியிருந்தும் சுகமானது எல்லோராலும் அனுபவிக்கின்றபடியால் சுஷூப்தியில் நிருபாதிகத்வ ஆனந்தம் இருக்கிறது.

 

நிரதிசயத்துவமாவது எது?

மனுஷ்ய ஆனந்தம் முதல் ஹிரண்யகர்ப்ப ஆனந்தம் வரை பதினோரு ஆனந்தம் இருக்கிறது.

ஆகையால்  அவற்றிற்கு அதிசயத்துவம் உண்டு.

ஆனால் பிரம்மானந்தம் ஒன்றே எல்லையற்றதாயும், ஒப்புயர்வு அற்றதாயும் உள்ளபடியால் சுஷூப்தி ஆனந்தமாகிய பிரம்மானந்தமே நிரதிசயம் ஆகும்.

 

நித்தியத்துவமாவது எது?

ஜாக்ரத ஸ்வப்னங்களில் அநேக விஷயங்களில் அநேக ரூபமான  சுகத்தைத் தனித்தனியாக அனுபவிக்கலாம்.

ஆனால் சுஷூப்தி சுகம் மாத்திரம் ஒரே ரூபமுடையதாகவும் பூர்ணமாயும் இருக்கிறது.

 

சச்சிதானந்த ஸ்வரூபம் என்ற அனுபவம் எப்படி வரும்? அது எப்படிப்பட்டது?

வேதாந்த, சாஸ்திர தாத்பரிய நிச்சய ரூபமாகிய சிரவணத்தை (சிரவணம் = கேட்பது) குரு முகத்தால் கேட்டும்,

அதற்கு அனுசாரமாய் மனனமும்,

மனனனுக்கு அனுசாரமாய் நிதித்யாசனமும் செய்தால்,

பிறகு சச்சிதானனந்த பிரம்மமே “நான்” என்ற ஞானம் உண்டாகும்.

இதுவே பரோக்ஷ ஞானம்.

இந்த பரோக்ஷ ஞானத்தைப் பற்றிய காரியங்களைச் செய்யாதவனாகவும்,

 

 

நான் கர்த்தா என்றாதி அபிமானத்தை விட்டவனாகவும்,

பிரம்மமே நானாக இருக்கிறேன் என்ற அனுபவத்தையும், அது விஷயமான முயற்சியையும் கர்த்ருவத்தையும் விட்டவனாயும், சகலத்திலும் சுஷூப்தியில் இருப்பது போல பற்றற்ற சுபாவமாகிய தூஷணீம் அவஸ்தையில் நீரில் உப்பு கரைந்தால் எப்படியோ அப்படி பிரம்மத்தில் கலந்து போன அந்தக்கரணத்தை உடையவனாகியும், நிர்விசேஷ நிலையில் இருப்பவனுக்கு நிர்விசேஷ ஞானம் எதுவோ அது தானாகவே உண்டாகிறது.

 

இது தான் அபரோக்ஷானுபவம்.

இந்த அனுபவம் எப்போது உண்டாகிறதோ அப்போது அவன் சுவானுப ரூபன்.

அப்போது தான் ஆனந்த ரூபன்.

அந்த ஆனந்த வைபவத்தை அவனேஅறிவானன்றி மற்றவர்கள் அறிய மாட்டார்கள்.

அந்த ஆனந்தத்தை அறிவிக்க எந்த வேத, வேதாந்த சாஸ்திரங்களினாலும் முடியாது.

மனோ வாக்குகளினாலும் முடியாது.

இப்படி வாக்கு, மனதுக்கு எட்டாத அகண்டானந்த பிரம்ம சுவரூபானுபவத்தில் இருக்கின்றபடியால் தன்னுடைய ஆனந்தத்தைத் தானே அனுபவிக்க சக்தியை உடையவனாகிறான்.

 

ஆத்மாவின் அகண்டார்த்தத்தைச் சொல்லுங்களேன்.

தேக பரிச்சேதம்,

கால பரிச்சேதம்,

வஸ்து பரிச்சேதம்

என்கின்ற மூன்று பரிச்சேதங்கள் அற்றதாகிய அபரிச்சின்னார்த்தம் தான் ஆத்மாவின் அகண்டார்த்தம்.

 

ஐயா, மிக்க நன்றி, நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். என்றாலும் பரிச்சேதம் என்று சொன்னீர்களே அது பற்றித் தெரிந்து கொள்ள ஆவல்.

கேட்கலாமா?

தாராளமாகக் கேளுங்கள். பதில் சொல்கிறேன்.

***

அடுத்த கட்டுரையுடன் இந்த அத்வைத ஸார விளக்கம் முடியும்.

 

பிராணன், மனம், புத்தி, சித் ரூபம், ஆனந்த ரூபம் விளக்கம்! (Post No.4574)

 

Date: 2 JANUARY 2018

 

Time uploaded in London- 5-23 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4574

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 7

 

பிராணன், மனம், புத்தி, சித் ரூபம், ஆனந்த  ரூபம்  விளக்கம்!

.நாகராஜன்

 

 

இனி பிராணன், மனம், புத்தி பற்றித் தெரிந்து கொள்வோம்

*

 

ஐயா, பல விஷயங்கள் பற்றிய விளக்கங்களை நன்கு சொல்லி விட்டீர்கள். நன்றி,

பிராணன் என்பது என்ன? அது எத்தனை வகைப்படும்?

நல்ல கேள்வி!

உச் ச்வாஸம் நிச் ச்வாஸம் முதலியவற்றின் வியாபாரங்களினால் சரீரத்தைத் தரிக்கின்ற சக்தியைக் கொடுப்பதுவே பிராணன் எனப்படும்.

அது, பிராணன், அபானன், விதானன், உதானன், சமானன் என இப்படி ஐந்து வகைப்படும்.

 

மனம் என்றால் எது?

விசாரணை ஸ்வரூபமான அந்தக்கரண விருத்தி தான் மனம்.

 

புத்தி என்றால் எது?

நிச்சய ஸ்வரூபமான அந்தக்கரண விருத்தி தான் புத்தி.

 

ஆத்மா சச்சிதானந்த ஸ்வரூபன் என்று சொன்னீர்கள் அல்லவா, அதன் பொருள் என்ன?

சத் என்றால் பாதிக்கப்படாதது.

 

சித் என்றால் சுயம் பிரகாசமானது (அதாவது தானே பிரகாசிப்பது)

ஆனந்தம் என்றால் சுவானுபவமே.

 

அப்படியா, நன்றி, ஐயா. சித்திற்கும் ஜடத்திற்கும் விலக்ஷணம் எவை?

சித் என்பது சூரியன் போன்ற அன்னிய பிரகாசத்தை வேண்டாமல் தன் இயற்கை பிரகாசத்தினாலேயே தானே பிரகாசிப்பது.

அப்படி பிரகாசித்துக் கொண்டும்,தன்னிடத்தில் ஆரோபிக்கப்பட்ட ஜடத்தையும்  பிரகாசிப்பதாயும் இருப்பது எதுவோ அது தான் சித்.

ஜட லக்ஷணமாவது,  இயற்கையாக பிரகாசம் அற்றதாகவும், இதர வஸ்துக்களை பிரகாசிக்க வைக்கும் சக்தி அற்றதாகவும் இருப்பது எதுவோ அது தான் ஜடம்.

 

ஆனந்தத்திற்கும் துக்கத்திற்கும் விலக்ஷணம் என்ன?

ஆனந்தம் எது என்றால், உபாதி அற்றதாகவும், நிரதிசயமாயும், நித்தியமாகவும் இருக்கின்ற அமிர்தம் போன்ற சுகமே ஆகும்.

இதற்கு எதிர்மறையாக எது இருக்கிறதோ அதுவே துக்கம்.

ஆத்மாவுக்கு அவஸ்தா த்ரயம் லக்ஷணம் எப்படி?

ஜாக்ரதம்,

ஸ்வப்னம்,

சுஷூப்தி என இப்படி மூன்று அவஸ்தைகள் ஆத்மாவுக்கு உண்டு.

 

இந்த மூன்று அவஸ்தைகளும் ஆத்மாவிற்கு எப்படி வந்தது?

ஆத்மாவிடம் சாக்ஷி லக்ஷணம் இருப்பதால் வந்தது.

 

சாக்ஷி லக்ஷணம் என்றால் என்ன?

ஒருவன் இன்னொருவனையும், அந்த இன்னொருவனின் அவஸ்தையின் வியாபாரங்களையும்  தான் விகாரம் அடையாமல் – வேறுபாடு அடையாமல் –  நோக்கபட்டது போலாம்.

ஜீவாத்மாவும் ஸ்தூல சரீரத்தின் அபிமானியாகி,  ஜாக்ரதா அவஸ்தையில் மூன்று வித கரணங்களின் வியாபாரத்துடன் கூடி, விசுவன் என்ற பெயரையும்,

சூஷ்ம சரீரத்தின் அபிமானியாகி,  ஸ்வப்னா அவஸ்தையில் மனோமயமான மூன்று வித கரணங்களுடைய வியாபாரத்தினால் தைஜஸன் என்ற பெயரையும்,

பிறகு காரண சரீரத்தின் அபிமானியாகி, சுஷூப்தி அவஸ்தையில்  மூன்று கரணங்களை அடக்கிக் கொண்டு பிராக்ஞன் என்ற பெயரையும் பெறுகிறான்.

இப்படி ஆத்மாவானவன், கூடஸ்தனாகவும், ஆகாயம் போல ஒட்டாதவனாகவும், மூன்று அவஸ்தைகளின் பிரதியக்  சைதன்யமாக இருப்பதுவே சாக்ஷி லக்ஷணம் ஆகும்.

 

அவஸ்தையை அனுபவிப்பனிடம் தான் சாக்ஷித்துவம் காணப்படுகிறது. அப்படி இருக்கும் போது, அவஸ்தா சாக்ஷித்துவம் அந்நியனிடம் இருப்பது போல அல்லவா காணப்படுகிறது! இது எப்படி?

இந்த அவஸ்தையை உடையவன், அந்தக் கரணத்தில் பிரதிபிம்பித்த சைதன்யபாசனே!

அவன் பொய்யானவன்.

அவன் ஜீவன் என்று சொல்லப்படுகிறான்.

ஜீவனோ விகாரி. ஆத்மாவோ நிர்விகாரி.

ஆகவே ஆத்மாவுக்கே சாக்ஷித்துவம் பொருந்தும். விளங்குகிறதா?

 

ஆத்மா நிர்விகாரி என்பது எப்படித் தெரியும்?

அந்தக்கரண பிரதிபிம்பத்தினால் அறியக்கூடும்.

 

இந்த அந்தக்கரணமும் இதன் பிரதிபிம்பமான ஜீவனும் ஆத்மாவை அறியாதோ?

அறியாது. ஏனெனில் அறியப்படுவதாகவும், த்ருஷ்யம் எனப்படுவதாகவும் அதாவது பார்க்கப்படுவதாகவும் உள்ள ஆத்மா த்ருக்ரூபன். அதாவது பார்க்கின்ற சுபாவமுடையவன்.

அது எப்படி ஐயா?

சொல்கிறேன், கவனமாகக் கேளுங்கள்.

காணப்படுகின்ற கடம் காண்பவனை அறியாது.

ஆனால் காண்பவனோ ஸ்வயம்பிரகாசமுடையவன் ஆதலால் தன்னைத் தான் அறிகிறான்.

ஆகவே காணப்படுகின்ற அகங்காரமும், அதன் அவஸ்தை, மற்றும் வியாபாரங்கள் ஆத்மாவைத் தொடமாட்டா.

இப்படி ஆத்மாவை எவன் ஒருவன் அவஸ்தா த்ரய சாக்ஷியாகக் காண்கிறானோ அவனே ஜீவன் முக்தன்!

 

ஐயா,நன்றி. கோசம், ஆத்மா சித் ரூபன் என்பதற்கு பிரமாணம் என்ன என்பன போன்ற கேள்விகள் மனதிலே தோன்றுகிறது. கேட்கலாமா?

 

நன்றாகக் கேளுங்கள், பதில் சொல்கிறேன்!

xxxx

முந்தைய கட்டுரைகள்: முதல் கட்டுரை எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 –வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17

நான்காம் கட்டுரை எண்  4472  – வெளியான தேதி :    9-12-17

ஐந்தாம் கட்டுரை எண் 4511 – வெளியான தேதி : 18-12-17

ஆறாம் கட்டுரை எண் 4546 – வெளியான தேதி : 26-12-2017

 

 

****

 

 

 

 

லக்ஷணா விருத்தி விளக்கம்! (Post No.4546)

Date: 26  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-04 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4546

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 6

முந்தைய கட்டுரைகள்: முதல் கட்டுரை எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17

நான்காம் கட்டுரை எண்  4472  – வெளியான தேதி :    9-12-17

ஐந்தாம் கட்டுரை எண் 4511 – வெளியான தேதி : 18-12-17

லக்ஷணா விருத்தி விளக்கம்!

ச.நாகராஜன்

 

மூன்று விருத்திகளில், முக்கிய விருத்தி, குணவிருத்தி ஆகியவை பற்றிப் பார்த்தோம். இனி லக்ஷணா விருத்தி பற்றிப் பார்ப்போம்.

*

லக்ஷணா விருத்தி என்றால் என்ன? அது எத்தனை வகை? உதாரணங்களுடன் விளக்குங்கள்.

ஜஹல் என்றால் விட்ட என்று பொருள்.

அஜஹல் என்றால் விடாத என்று பொருள்.

ஜஹல் லக்ஷணை, அதாவது விட்ட லக்ஷணை, அஜஹல் லக்ஷனை, அதாவது விடாத லக்ஷணை ஜஹதஜஹல் லக்ஷணை, அதாவது விட்டும் விடாத லக்ஷணை என்று இப்படி லக்ஷணை மூன்று வகைப்படும்.

விளக்கமாகப் பார்ப்போம்.

விட்ட லக்ஷணை என்றால் என்ன என்று பார்ப்போம்.

சொன்ன வார்த்தை ஒன்றின் உண்மையான (வாஸ்தவமான) அர்த்தத்தை விட்டு விட்டு வேறு ஒரு அர்த்தத்தைக் கிரஹிப்பது விட்ட லக்ஷணையாகும்.

கங்கையில் கோஷம் (இடைச்சேரி) இருக்கிறது என்று சொன்னால்,கங்கையின் பிரவாகத்தோடு கூட கங்கையின் கரையில் இடைச்சேரி இருக்கிறது என்பதை கிரஹித்துக் கொள்ள வேண்டும்.

இனி விடாத லக்ஷணை என்றால் என்ன என்று பார்ப்போம்.

சிவப்புக் குதிரையும் வெள்ளைப் பசுவும் ஓடுகின்றன என்று சொல்லும் போது,

சிவப்பு ஓடுகிறது என்றால் சிவப்புக் குதிரை ஓடுகிறது என்று அர்த்ததைக் கிரஹித்துக் கொள்ள வேண்டும்.

இனி விட்டும் விடாத லக்ஷணை என்றால் என்ன என்று பார்ப்போம்.

அந்த, இந்த தேவதத்தன் என்றால், முன்னொரு நாள் காசியில்  பார்த்த தேவதத்தனே, இப்போது காஞ்சிபுரத்தில் கண்டேன் என்று சொல்வதாகும்.

அந்தக் கால தேசம், இந்தக் கால தேசத்தோடு சமப்படுத்துவது அசாத்தியம் என்று கிரஹிப்பதாகும்.

 

நல்லது, ‘தத்துவம்’ என்ற இரண்டு பதங்களில் வாச்சியார்த்தம் எது? லக்ஷியார்த்தம் எது?

சொல்கிறேன்.

  • மாயை, 2) மாயாபிரதிபிம்பன், 3) மாயைக்கு இருப்பிடமாகிய பிரம்மம் ஆகிய இந்த மூன்றும் சேர்ந்ததே ‘தத்’ பதத்திற்கு வாச்சியார்த்தம் ஆகும்.
  • பிரம்மம் மட்டும் ‘தத்’ பதத்திற்கு லக்ஷியார்த்தம் ஆகும்.

 

‘த்வம்’ பதத்திற்கு வாச்சியார்த்தம்  எது?

சொல்கிறேன்.

  • அவித்தை, 2) அவித்தியாபிரதிபிம்பன், 3) அவித்தைக்கு இருப்பிடமான சாக்ஷி சைதன்னியம் ஆகிய இம்மூன்றும் சேர்ந்ததே ‘த்வம்’ பதத்திற்கு வாச்சியார்த்தம் ஆகும்.
  • சாக்ஷி கூடஸ்த சைதன்னியம் மாத்திரம் ‘த்வம்’ பதத்திற்கு லக்ஷியார்த்தம் ஆகும்.இது ஜீவேஸ்வரர்களுக்கு விரோதமானபடியால், அவர்களுக்கு உள்ள விருத்தாம்சத்தைத் தள்ளி, அவிருத்தாம்சமான பிரம்ம சைதன்னியமும், கூடஸ்த சைதன்னியமும் ஒன்றானபடியினால் பிரம்மம், கூடஸ்தன் இவர்களை லக்ஷியார்த்தமாகச் செய்தது அகண்டார்த்தமாகிய ஐக்கியமே. அதாவது மாயை, அவித்தை இந்த உபாதியைத் தள்ளுவதால், சச்சிதானந்த ஸ்வபாவ ஆத்ம வஸ்து ஒன்றே மிஞ்சும்.

 

 

பரமாத்மா, முன் சொன்ன சரீர த்ரய லக்ஷணன் என்றும் அவஸ்தா த்ரய சாக்ஷி என்றும் , பஞ்ச கோச வியத்ரிக்தன் என்றும் ,சச்சிதானந்த ஸ்வரூபன் என்றும் ஆக இப்படி நான்கு வித லக்ஷணைத்தைச் சொல்லுவானேன்? இதற்கான விளக்கமும், விவரமும் என்ன?

சரீர த்ரய விலக்ஷணமும், பஞ்ச கோச வியத்ரிக் தத்துவமுமே அதத்வியா விருத்தி லக்ஷணம், அவஸ்தா த்ரய சாக்ஷித்வம், தடஸ்த லக்ஷணம் சச்சிதானந்த ஸ்வரூப லக்ஷணம்.

 

அதத்துவிய விருத்தி லக்ஷணம் என்றால் என்ன?

ஆகாயம் முதல் சரீரம் வரையில் காணப்படும் வஸ்துக்களை ‘இதல்ல’, ‘இதல்ல’ என்று தள்ளி விட்டு மிஞ்சிய வஸ்து எதுவோ அதுவே ஆத்மா.

 

ஆத்ம வஸ்து எது?

இந்த பிரபஞ்சத்திற்கு இருப்பிடமாக எது இருக்கிறதோ அதுவே!

 

ஸ்வரூப லக்ஷணம் எது?

தடஸ்த லக்ஷணம் சச்சிதானந்தம் பூரணம், நித்தியம் ஆத்ம வஸ்துவே

 

சரீர த்ரயம் எவை?

(த்ரயம் என்றால் மூன்று என்று பொருள்)

1)ஸ்தூல 2) சூக்ஷ்ம 3) காரணம் என்பவையே!

 

ஸ்தூல தேகம் எது?

எல்லோருக்கும் ப்ரத்யக்ஷமாயும் (காணப்படுகிறவராயும்), அவயவங்களோடு கூடியதாயும் இருப்பதே ஸ்தூல தேகம் ஆகும்.

 

சூக்ஷ்ம தேகம் எது?

பதினேழு அவயவங்கள் கூடியதே சூக்ஷ்ம தேகம் ஆகும்.

 

காரண தேகம் (சரீரம்) எது?

அஞ்ஞானமே!

 

சரீரம் என்றால் என்ன?

நசிக்கிற வஸ்துக்களே!

 

ஸ்தூல தேகம் தான் அன்னபனாதிகள் இல்லாவிட்டாலும், வியாதி முதலிய ஸமயாதிகளில் நசிக்கும்.

 

சூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் ஆகியவை எப்படி நசிக்கும்?

சூக்ஷ்ம தேகத்திற்கு இராக, த்வேஷாதி அந்தக்கரண விருத்தியினால் விரிதலும் அல்லது வளர்தலும், சுருங்குதலும் உண்டு.

இப்படி ஆவதே நசித்தல் ஆகும்.

காரண சரீரத்திற்கு ‘நான் ஜீவன்’ என்பதே விருத்தி.

நானே பிரம்மமாய் இருக்கிறேன் என்பது சுருங்கல். அதுவே நசித்தலாகும்.

 

சரீரம் என்பதற்கு இந்த விதமாகப் பொருள் செய்கிறீர்கள். சிலர் இதை தேகம் என்கிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

தஹிக்கப் படுவது எதுவோ, அதாவது எரிக்கப் படுவது எதுவோ அதுவே என்று சொல் இலக்கண அர்த்தமாகிறது.

 

சரி, ஸ்தூல தேகத்தை அக்னி எரிப்பதை நேரடியாகப் பார்க்க முடிகிறது. சூக்ஷ்ம, காரண தேகங்களை அக்னி எப்படி எரிக்கும்?

தாப த்ரயம் என்னும் எரிச்சலினால்!

 

தாப த்ரயம் என்றால் என்ன?

மூன்று வித தாபம், எரிச்சல், துன்பம் ஆகியவையே

 

அந்த மூன்றும் எவை? சற்று விவரமாகச் சொல்லுங்கள்.

அத்யாத்மிகம்,

ஆதி தெய்வீகம்,

ஆதி பௌதிகம்

ஆகிய இந்த மூன்றில்  அத்யாத்மிகம் என்பது ஜுரம், தலைவலி போன்றவை.

ஆதி தெய்வீகம் என்பது தெய்வச் செயலால் உண்டாகும் இடி, புயல் போன்றவை.

ஆதி பௌதிகம் புலி போன்றவற்றால் ஏற்படும் துன்பம் போன்றவையாகும்.

 

சூக்ஷ்ம தேகத்திற்கு  பதினேழு அவயவங்கள் உண்டு என்று சொன்னீர்கள்? அவை என்னென்ன?

காது, மெய், கண், நாக்கு, மூக்கு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்து.

சப்தம், ஸ்பரிஸம்,  ரூபம், ரசம், கந்தம் ஆகிய கர்மேந்திரியங்கள் ஐந்து.

புலன்கள் ஐந்து.

மனம், புத்தி ஆகிய இரண்டு.

ஆக இந்த அனைத்தும் சேர்ந்ததே பதினேழு அவயவங்களாகும். இதுவே சூக்ஷ்ம சரீரம்.

 

நன்றி, ஐயா, நன்றி! இனி, பிராணன், மனம்,புத்தி ஆகியவை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கேள்விகளைக் கேட்கலாமா?

தாராளமாக! கேளுங்கள் உங்கள் கேள்விகளை!!

 

***

ரிஷிகள் ‘க்விஸ்’, கேள்வி-பதில் (Post No.4518)

Written by London Swaminathan 

 

Date: 19 DECEMBER 2017 

 

Time uploaded in London-  21-49

 

 

Post No. 4518

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

உங்களுக்கு ரிஷிகள் பற்றித் தெரியுமா? இதோ இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்:-

 

1.வசிஷ்டர் வாயினால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கிய ரிஷி யார்?

 

2.குள்ளமான ரிஷி யார்?

 

3.கோபத்துக்குப் பெயர்பெற்ற ரிஷி யார்?

 

4.நாராயணா என்ற கோஷத்துடன் த்ரிலோக சஞ்சாரம் செய்பவர் யார்?

 

5.சப்த ரிஷிகள் யார், யார்?

 

6.காலில் கண்ணுடைய ரிஷி யார்?

 

7.கொம்புள்ள ரிஷி யார்?

 

 

8.காமதேனுவின் சொந்தக்கார ரிஷி யார்?

 

 

9.லோபாமுத்ராவின் கணவர் (ரிஷி) யார்?

 

10.கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு- என்ற மொழி எந்த ரிஷியினால் ஏற்பட்டது?

 

11.ரிக் வேதத்தின் 2,3,4,5,6,7 மண்டலங்களுக்குரிய ரிஷிகள் யார்?

 

12.அனசூயையின் கணவர் (ரிஷி) யார்?

 

13.அஹல்யாவின் கணவர் (ரிஷி) யார்?

 

  1. கடலைக் குடித்த ரிஷி யார்?

15.ஆஜ்மீர் என்ற நகரம் எந்த ரிஷியின் பெயரில் உள்ளது?

 

16.கடலில் தோன்றும் வடவைத் தீக்கு காரணமான ரிஷி யார்?

 

17.வியாசர் 4 வேதங்களையும் எந்த 4 ரிஷிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார்?

18.த்ரிமூர்த்திகளின் உருவம் உடைய ரிஷி யார்?

19.மருத்துவத்தின் தந்தை எனப்படும் ரிஷி யார்?

20.புற்றிலிருந்து தோன்றிய ரிஷி யார்?

 

xxxx

 

விடை:

1.விஸ்வாமித்ரர், 2.அகஸ்தியர், 3.துர்வாசர், 4.நாரதர் 5. சப்த ரிஷிகள்:அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரஸர் 6.ப்ருகு, 7.ரிஷ்ய ச்ருங்கர், 8.வசிஷ்டர், 9.அகஸ்தியர் 10.பரத்வாஜர் (மூன்று ஜன்மங்கள் வாழ்ந்து 3 வேதங்களைக் கற்றர். ஆயினும் அது கைமண் அளவே), 11. ரிக் வேத மண்டல ரிஷிகள்–இரண்டாம் மண்டலம்- க்ருத்சமடர்/ப்ருகு, மூன்றாம் மண்டலம்-  – விஸ்வாமித்ரர் , நான்காம் மண்டலம்- வாமதேவ கௌதம-  , ஐந்தாம் மண்டலம்-  -அத்ரி, ஆ றாம் மண்டலம்- – பரத்வாஜர் ஏழாம் மண்டலம்-  – வசிஷ்டர்: 12. அத்ரி மஹரிஷி. 13.அஹல்யாவின் கணவர் கௌதம ரிஷி 14.அகஸ்தியர் 15.அஜாமீடர் (கண்வ மஹரிஷியின் தந்தை), 16. ஔர்வ மஹரிஷி 17.நான்கு வேதங்களை வியாசரிடம் கற்ற ரிஷிகள்- வைஸம்பாயனர்(யஜூர்), ஜைமினி (சாமவேதம்), பைலர் (ரிக்), சுமந்து (அதர்வண), 18. தத்தாத்ரேய மகரிஷி 19.தன்வந்திரி மஹரிஷி, 20. வால்மீகி ரிஷி

 

–subham–

 

கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின்…………….(Post No.4515)

Date: 19  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-37 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4515

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அனுபவத்தின் மதிப்பு!

கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின் புலம்பலும், அப்பரின் அறைகூவலும்!

 

.நாகராஜன்

 

1

அனுபவத்தைப் போன்ற சிறந்த ஆசான் கிடையாது என்பது முதுமொழி.

நிறையப் படித்தவனை விட அனுபவத்தால் தன் அறிவைப் பகிர்ந்து கொள்பவனுக்கு சமுதாயத்தில் ஒரு தனி மதிப்பு உண்டு.

காஞ்சி பெரியவாள் கண்ணதாசனைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியதாக கவிஞரிடம் சொன்ன போது ஓடோடி வந்து அவரைத் தரிசித்தார்.

அவரிடம் பெரியவாள் பல விஷயங்களைப் பேசினார்.அப்போது அவர் கூறிய ஒரு முக்கிய விஷயம்: “என்னைப் போன்றவர்கள் ஒரு விஷயத்தைச் சொல்வதை விட உங்களைப் போன்றவர்கள் அனுபவத்துடன் அதைக் குழைத்துச் சொன்னால் அது பெரிதும் வரவேற்கப்பட்டு நலம் பயக்கும்” என்றார் பெரியவாள்.

கண்ணதாசனின் இந்தச் சந்திப்பு பற்றித் தனியே படித்தால் பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

கண்ணதாசன் தன் அனுபவத்தை அப்படியே உலக மக்களுடன் ‘சத்திய சோதனை’ வழியில் பகிர்ந்து கொண்டார்.

திராவிடப் பிசாசுகளின் கூட்டத்தில் தவறி விழுந்தவர் – பன்றிகளின் கூட்டத்தில் தவறி விழுந்த புள்ளி மான் போல விழுந்தவர் – பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மீண்டார்.

அர்த்தமுள்ள இந்து மதத்தைக் கண்டார்.

அவர் பிறந்த தேதி : 24-6-1927.

மறைந்த  தேதி : 17-10-1981

ஆக, அவர் வாழ்ந்த காலம் ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே!

இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர்!

திராவிடப் பிசாசுகளின் ‘சங்காத்தம்’ அவர் ஆயுளின் மீது ‘கை வைத்து விட்டது’.

1976ஆம் ஆண்டு ஜூன் மாத ‘கண்ணதாசன்’ இலக்கிய மாத இதழில் அவர் தனது ஐம்பதாம் ஆண்டை இப்படி வரவேற்கிறார்:

50

இறந்த நாள் அனைத்தும் எண்ணி

இனிவரும் நாளை எண்ண

பிறந்த நாள் காணு கின்றோம்

பிழை இலை: ஆயின் வாழ்வில்

சிறந்த நாள் கணக்குப் பார்த்துத்

தேர்ந்து கொண் டாடல் வேண்டும்

பறந்த நாள் இனிவ ராது

பாக்கி நாள் நன்னா ளாக!

 

50

ஐம்புலன் ரசித்த வாழ்வு

    அறம்மறம் நிறைந்த வாழ்வு

ஐம்பொறி துடித்த வாழ்வு

     ஆயிரம் படித்த வாழ்வு

ஐம்பதை நெருங்கும் போது

     அகம்புறம் கணக்குப் பார்த்து

பைம்புகழ் இனியும் காண

      பரமனே அருள்வா னாக!

50

ஆண்டுகள் ஐம்ப தாகும்

     ஆரம்பம் திருநா ளாகும்

ஆண்டுகள் அறுபதா னால்

      அந்தியில் நன்னா ளாகும்

ஈண்டுயான் ஐம்ப தாண்டை

      இனிதுற வரவேற் கின்றேன்

நீண்டநாள் வாழ ஆசை

   நிமலன் என் நினைக்கின் றானோ!

 

நீண்ட நாள் வாழ ஆசைப் பட்டார் கவிஞர்! ஆனால் நிமலனோ அவருக்கு இன்னும் ஒரு நான்கு ஆண்டுகள் மட்டுமே கொடுத்தான்!

பின்னாளில் அவர் மிகவும் வருந்திப் பாடினார் இப்படி:

சேராத கூட்டத்தில் என்னை மறந்து நான்

     சேர்ந்தேன் அந்த நாளே

செறிவான புத்தியை தவறான பாதையில்

      செலுத்தினேன் அந்த நாளே

பாராத பூமியைப் பார்க்கிறேன் இப்போது

     பார்த்தனைக் காத்த நாதா

பதிநினது கதை புகல உடல் நிலையை நீ கொஞ்சம்

      பார்த்தருள் கிருஷ்ண காந்தா!

கண்ணனை நினைந்து மனமுருகிப் பாடிய கவிஞரின் பாடலை அழியாமல் காக்கிறான் கிருஷ்ணகாந்தன். அவரது புகழுடல் நிற்கப் பொய்யுடல் போய் விட்டது கால வெள்ளத்தில்!

என் வாழ்வைப் பார்க்காதே; என் பாடலைப் பார்த்து அதன் படி நட என்பது அவரே கூறிய அன்புரை.

ஆக, வனவாசத்தில் அவர் பார்த்த பிசாசுகளை நாம் படித்துப் புரிந்து கொள்ளலாம். அவர் மனவாசத்தில் கண்ட சத்தியத்தில் அவர் வாழ்வு புனரமைக்கப்பட்டதையும் தெரிந்து கொள்ளலாம்.

அனுபவம் பேசியதால், அருந்தமிழில் அதைக் குழைத்துக் கொடுத்ததால் அதை நாம் படிக்க வேண்டியது இன்றியமையாததாகிறது.

ஆக கண்ணதாசனை முழுமையாகப் படித்தால் அனுபவத்தின் அடிப்படையிலான அற்புத உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம்; இனி,  காலத்தில் சற்றுப் பின்னோக்கிப் போனால் நம் முன் வருவது இன்னொரு அனுபவஸ்தர். அருணகிரிநாதர்!

2

வாழ்வின் முற்பகுதியில் பெண்களின் மையலில் மனதையும் உடலையும் இழந்தவர் அருணகிரிநாதர். ஆனால் அனுபவம் தந்த பாடத்தால் மனம் வருந்தி, திருந்தி வேலனின் அருளை வேண்டினார்.

சும்மா இரு சொல் அற என்றவுடன்அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலனே என மயங்கிப் பின் தெளிவு பெற்றார்.

முருகனின் புகழைப் புதிய தமிழ் நடையில், புத்தமுதமாகக் கொட்டினார்.

ஆனால் தன் அனுபவங்களை ஆங்காங்கே கொட்டத் தவறவில்லை.

வேசியரின் விளையாட்டுக்களைப் பிட்டுப் பிட்டு வைத்து விட்டார்.

குலமகளிரின் புகழையும் கொண்டாடிப் பாடினார்.

நமக்குக் கிடைத்திருக்கும் ஏறத்தாழ 1311 பாடல்களில் எங்கு தொட்டாலும் அவர் தன்னிரக்கப்பட்டு புலம்பும் புலம்பலைப் பார்க்கிறோம்:

கொள்ளை யாசைக் காரிகள் பாதக

     வல்ல மாயக் காரிகள் சூறைகள்

     கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள்   விழியாலே

கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்

      வெல்லும் மோகக் காரிகள் சூதுசொல்

      கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு மவர்போலே

உள்ள நோவைத் தேயுற வாடியர்

       அல்லை நேரொப் பாமன தோஷிகள்

       உள்வி ரோதக்காரிகள் மாயையி     லுழல்நாயேன்

உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு

       கையு நீபத் தார் முக மாறுமுன்

       உள்ள ஞானப் போதமு நீதர        வருவாயே

             (சிதம்பரத்தில் அருளிய பாடல் இது)

மதனச் சொற் காரக் காரிகள் பவளக் கொப்பாடச் சீறிகள்

    மருளப் பட்டாடைக் காரிகளழகாக

   மவுனச் சுட்டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக்காரிகள்

    வகைமுத்துச் சாரச் சூடிகள்               விலைமாதர்

குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்

     குசலைக்கொட் சூலைக் காலிகள்     மயல்மேலாய்க்

    கொளுவிக் கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை

     குமுதப் பொற் பாதச் சேவையி லருள்வாயே!

        (சீர்காழியில் அருளிய பாடல் இது)

இப்படித் தோட்ட தொட்ட இடம் எல்லாம் தனது பழைய வாழ்வை நினைத்து வருந்தி முருகனின் அருள் நிரந்தரம் வேண்டி உய்யவே அருள் தாராய் என அவர் பாடும் பாடல்களைப் பார்க்கிறோம்.

திருப்புகழ் தரும் செய்தியைத் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.

 

இனி, இதே போல வாழ்வின் முற்பகுதியில் சேரக் கூடாதோருடன் சேர்ந்து சீரழிந்து பின்னர் சிவபிரானின் அருளால் தெளிவு பெற்ற அப்பரைப் பார்ப்போம்.

3

 

சமணர் தம் கூட்டத்தில் சேர்ந்து தன் இளமைக் காலத்தை வீணாக்கியதை நினைத்து பல இடங்களில் நாவுக்கரசர் தம்மை நொந்து கொள்கிறார்.

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம்

மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்

சேல் உலாம் பழன வேலித் திருக் கொண்டீச்சுரத்து உளானே

என்று இப்படி, ‘குறிக்கோள் இலாது கெட்டேனே என்று மனம் வருந்திப் பாடுகிறார்.

பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர்தங்கள்

மொழிவழி ஓடி முடிவேன் முடியாமைக் காத்துக் கொண்டாய்

என்றும்,

 

மனை துறந்த வல் அமணர் தங்கள் பொய்யும்

  மாண்பு உரைக்கும் மனக் குண்டர் தங்கள் பொய்யும்

சினை பொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்

   மெய் என்று கருதாதே போத நெஞ்சே

என்றும் அமணர் தம் சேர்க்கை பற்றிப் பாடுகிறார் அப்பர்.

துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர்

  சொல் கேட்டு துவர் வாய்க் கொண்டு

என்னாகத் திரிதந்து ஈங்கு இருகை

   ஏற்றிட உண்ட ஏழையேன் நான்

பொன் ஆகத்து அடியேனைப் புகப்

    பெய்து பொருட்படுத்த ஆரூரரை

என் ஆகத்து இருத்தாதே ஏதன்

 போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே

என்று வருந்துகின்றவர்

சிவபெருமானின் அருளைப் பெற

வம்மின், வம்மின், பணிமின், பணிமின். தொழுமின், தொழுமின் என்று பல முறையும் பற்பல பாடல்களில் கூறுகிறார்.

தன் அனுபவத்தைக் கூறி நம்மை நல் வழிப்படுத்த அவர் பாடி அறைகூவல் விடுக்கும் பாங்கு நம்மை நெகிழ வைக்கிறது.

அப்பரின் அனுபவ வாக்கால், அதில் இருக்கும் சத்திய ஒளியால், அவர் அதில் குழைத்துத் தரும் சிவபக்தியால் சிவனின் அருளைப் பெற முயல்கிறோம்.

 

4

 

இங்கு நாம் பார்க்கும் மூவரிடமும் அனுபவம் பேசுகிறது. அதை உண்மையில் குழைத்துத் தரும் போது நாம் சற்று பிரமித்து உண்மையை உணரத் தலைப்படுகிறோம்.

கண்ணதாசன் திராவிட மாயையில் சிக்கிச் சீரழிந்தார். சீரழிக்கப்பட்டார்.

தமிழா, ஜாக்கிரதை மோசம் போய் விடுவாய்; அவர்களை கனவிலும் நினைக்காதே என்று நமக்கு விழிப்புணர்ச்சி ஊட்டுகிறார்.

அவர்களின் கள்ள விளையாட்டை எல்லாம் தனது கவிதையிலும், கட்டுரையிலும், கதையிலும் கூறி நம்மை எச்சரித்தார்.

கண்ணதாசனின் கதறல் அர்த்தமுள்ள கதறலாக மிளிர்ந்தது.

அருணகிரிநாதர் தன் அனுபவத்தைக் கூறி வேசையரைத் திட்டித் தன் இழிந்த வாழ்க்கையையும் சுட்டிக் காட்டி நம்மை எச்சரித்துக் காக்கிறார்.

அவரது புலம்பல் பொருள் பொதிந்த புலம்பல் ஆயிற்று.

அடுத்து அப்பர் பிரான் தன் வாழ்வின் முக்கியமான இளமைக் காலத்தில் கூடாதோருடன் சேர்ந்து கூத்தடித்தேனே என்று வருந்திக் கூறி, எழுமின், வம்மின், சிவனைத் தொழுமின் என்று அறைகூவல் விடுக்கும் போது அவரது சொல்லெல்லாம் பொருள் பொதிந்த அருள் சொல்லாக ஒளிர்கிறது.

அவரது அறைகூவல் அர்த்தமுள்ள சிவன்கூவலாக மிளிர்கிறது.

கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின் புலம்பலும், அப்பரின் அறைகூவலும் அனுபவத்தின் விளைவு.

அதைப் பற்றி, காஞ்சிப் பெரியவர் கூறியது சத்திய வாக்கு.

     சாதாரணமாக சாசுவத உண்மைகளை எவ்வளவு பெரியவர் கூறினாலும், அதற்கான மதிப்பை விட, அதை அனுபவப்பட்டோர் தம் அனுபவத்துடன் குழைத்துக் கொடுத்தால் அதன் மதிப்பே தனி தான்.

இது தான் உண்மை. அன்றும் என்றும்.

அப்பரின் காலமானாலும் சரி, அருணகிரிநாதரின் காலமானாலும் சரி, கவியரசு கண்ணதாசனின் காலமானாலும் சரி அதுவே உண்மை!

அவர்களின் அனுபவத்தால் நமது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம், இல்லையா!

****

 

 

 

 

 

மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீரா! மஹாராணியின் கேள்வி! (Post No.4506)

Date: 17  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-40 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4506

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீரா, பாண்டியரே! மஹாராணியின் கேள்வி!

 

ச.நாகராஜன்

 

1

மாமன்னன் வரதுங்க பாண்டியன் மஹா சிவ பக்தன். மஹாராணியும் சிறந்த சிவ பக்தை. இருவருமே தமிழில் அருமையாகக் கவிதை புனையும் ஆற்றல் படைத்தவர்கள். சிவ மணமும் தமிழ் மணமும் கமழ பாண்டிய தேசம் சுபிட்சமாக இருந்தது.

 

நாட்கள், மாதங்கள் ஆகி, மாதங்கள் வருடங்கள் ஆகி வருடங்கள் உருண்டோடின.

 

மன்னன் வாழ்நாளின் இறுதியை அடைந்தான்.

மரணப்படுக்கையில் வரதுங்க பாண்டியர் படுத்திருக்க, மஹாராணி அருகில் அமர்ந்திருந்தாள்.

மன்னன் முகத்தில் சிந்தனை ஓங்கியிருந்தது. யாரையோ அவன் நினைத்துக் கொண்டிருந்தான் போலும்!

 

மன்னனைப் பார்த்த மஹாராணி மெதுவாகக் கேட்டாள்: “மன்னரே, மரணத்தைக் கண்டு பயமாக இருக்கிறதா?”

பாண்டியன் சிரித்தான். “எனக்கா, மரணத்தைக் கண்டா, பயமா. ஹஹ்ஹஹ்ஹா”

 

மன்னனின் சிரிப்பைத் தொடர்ந்து பாடல் ஒன்று பிறந்தது. தமிழில் சிவம் கலந்த பாடல் அது.

 

2

பாண்டியனின் பாடலையும், மஹாராணியின் பாடலையும் கால வெள்ளம் அழித்து விடவில்லை. இன்றும் அவை நம் முன்னே இருக்கின்றன.

பாடல்களைப் பார்ப்போமா?

 

அஞ்சலென்ற கரதலமுங் கணபண கங்கணமும்

அரைகிசைந்த புலியுடையு மம்புவிச் செஞ்சடையும்

கஞ்சமலர்ச் சேவடியுங் கனைகழலுஞ் சிலம்பும்

கருணைபொழி திருமுகமுங் கண்களொரு மூன்றும்

நஞ்சையுண்ட மணிமிடரு முந்நூலு மார்பும்

நலந்திகழ்வெண் ணீற்றொளியு மறியானு மழுவும்

பஞ்சடிச்சிற் றிடையுமையா ளொப்பனைபா கமுமாய்ப்

பால்வண்ண ருளத்திருக்கப் பயமுண்டோ யெனக்கே!

 

 

பால் வண்ணர் என் உள்ளத்தில் முழுக் கோலத்துடன் இருக்கையில் பயமா, எனக்கா என்றான் பாண்டியன்.

பாடலின் முழுப் பொருள் :

 

அஞ்சல் என்ற கரதலமும் – அஞ்சாதே என்று அபயம் கொடுக்கும் கையும்

கணபண கங்கணமும் – வட்டமாகிய படங்களையுடைய பாம்பாகிய கங்கணமும்

அரைக்கு இசைந்த புலி உடையும் – இடுப்பிற்கேற்ற புலித்தோலால் ஆன ஆடையும்

அம்புவி செஞ்சடையும் – சந்திரனை அணிந்த சிவந்த சடையும்

கஞ்சமலர் சேவடியும் – தாமரை மலரைப் போன்ற சிவந்த திருவடியும்

கனைகழலும் சிலம்பும் – ஒலிக்கின்ற வீரக்கழலும் சிலம்பும்

கருணைபொழி திருமுகம் – அருள் மழையைப் பொழிகின்ற திருமுகமும்

 

கண்கள்  மூன்றும் – ஒப்பற்ற மூன்று கண்களும்

நஞ்சையுண்ட மணிமிடறும் – விஷத்தை உண்ட நீலமணி போலும் கழுத்தும்

முந்நூலும் மார்பும் – மூன்று இழைகளைக் கொண்ட பூணூலும் மார்பும்

 

நலம் திகழ் வெண்ணீற்று ஒளியும் – அழகு விளங்க நிற்கும் திருவெண்ணீற்றின் ஒளியும்

மறிமானும் – மான் கன்றும்

மழுவும் – மழு ஆயுதமும்

 

பஞ்சு அடி சிற்றிடை உமையாள் – பஞ்சு போன்ற பாதத்தையும் சிற்றிடையையும் கொண்ட உமாதேவி

ஒப்பனை பாகமும் ஆய்  – ஒப்பனையம்மை பாகமும் ஆகி

பால்வண்ணன் உள்ளத்து இருக்க – பால்வண்ண நாதர் எம்முளத்தில் இருக்கும் போது

எனக்குப் பயமும் உண்டோ – எனக்குப் பயமும் உண்டோ?

நிச்சயமாக இல்லை

Picture posted by Lalgudi Veda

இதைக் கேட்டு மனம் உருகிய பாண்டிமாதேவி பாடினாள் இப்படி:

யாக்கையெனும்  புழுக்குரம்பை யணைந்தனையாப் பொருளை

அருளொளியைப் பராபரத்துக் கப்புறவா மறிவை

நீக்கமற மயிர்முனைக்கு மிடமறவெங் கெங்கும்

நிறைந்து நின்ற முழுமுதலை நினவிலெழுஞ் சுடரைப்

பாக்கியங்கள் செய்தனந்தத் தவக்குறைகண் முடிக்கும்

பழவடியார் தமக்குதவும் பசுந்துணர்க்கற் பகத்தை

வாக்குமன விகற்பாத்தா லளவுபடா வொன்றை

மாசற்ற வெறுவெளியை மனவெளியி லடைப்பாம்

 

 

இதன் பொருள் ;

ஆக்கை என்னும் புழுக்குரம்பை அணைந்து அணையா பொருளை – உடம்பென்கிற புழுக்கூட்டைச் சேர்ந்தும் சேராத பரம்பொருளை

 

அருள் ஒளியை – அருள் பிரகாசத்தை

பராபரத்துக்கு அப்புறம் ஆம் அறிவை –  பரம், அபரம் என்பவைகளுக்கு அப்பாற்பட்ட அறிவை (பரம் – ஆதி; அபரம் – அந்தம்)

நீக்கம் அற –  நீங்குதலின்றி

மயிர் முனைக்கும் இடம் அற – மயிர் முனையை ஊன்றுதற்கும் இடமில்லாமல்

 

எங்கெங்கும் நிறைந்து நின்ற முழுமுதலை –  எவ்விடத்தும் நிறைந்து நிற்கின்ற முதற்பொருளை

நினைவில் எழும் சுடரை – நினைப்பில் உண்டாகின்ற ஒளியை

பாக்கியங்கள் செய்து – அதிர்ஷ்டங்களைச் செய்து

அநந்தம் தவக்குறைகள் முடிக்கும் – அளவற்ற தவக்குறைகளை நிறையச் செய்கின்ற

பழ அடியார் தமக்கு உதவும் – பழ அடியார்க்கு வேண்டும் பொருளைக் கொடுக்கின்ற

 

பசுதுணர் கற்பகத்தை – பசுமையாகிய பூங்கொத்துகளை உடைய கற்பக விருட்சத்தை

வாக்குமன விகற்பத்தால் – வாக்கு மனங்களின் வேறுபாட்டால்

அளவுபடா ஒன்றை – அளவிடப்படாத ஒரு பொருளை

மாசு அற்ற வெறுவெளியை – களங்கமற்ற வெட்ட வெளியை

மனவெளியில் அடைப்பாம் – மனமாகிய ஆகாயத்தில் அடைத்து வைப்போம்

Picture posted by Lalgudi Veda

மஹாராணி, “பாண்டியரே! ஆம்! எங்கும் நிறைகின்ற பொருளை நம் மனதில் எப்போதும் வைத்திருப்போம்!” என்று நெஞ்சுருகச் சொன்னாள்.

 

வரதுங்க பாண்டியர் சிவபதத்தைச் சேர்ந்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?!

 

3

 

மன்னரானாலும் சரி, மஹாராணியானாலும் சரி, யோகியானாலும் சரி, சாமானிய மனிதன் என்றாலும் சரி, பண்டைய நாட்களில் தம் தம் வாழ்வை நெறியுடன் நடத்தி மனமகிழ்ச்சியுடன் அனைவரும் வாழ்ந்தனர்.

உரிய காலம் முடியும் போது சிவ சிவ என்றோ அல்லது ராம ராம என்றோ தமக்குப் பிடித்த இறைவனின் நாமத்தைக் கூறி அமைதியாக உயிரை விட்டனர்.

 

வரலாறை எடுத்துப் பார்க்கும் போது தமிழகத்தின் பெரிய மனிதர்களின் இறுதிக் கணங்களில், அவர்கள் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பின்,  திருவாசகத்தை ஓதச் செய்து கேட்பது மரபாக, பழக்கமாகவே இருந்திருக்கிறது.

அற்புதமான ஒரு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை அறியும் போது உளம் நெகிழ்கிறது, இல்லையா!

 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

****

அற்புதங்கள் நீடிக்கும்! (Post No.4492)

Date: 14  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-37 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4492

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பேரருள் அற்புதம்

அற்புதங்கள் நீடிக்கும்! கல்யாண்குமாரும், காதர்பாஷவும் உயிர் பிழைத்த அதிசயம்!!

 

ச.நாகராஜன்

 

 

1

ஆண்டவனின் அற்புதங்களுக்கு எண்ணிக்கை என்பதே இல்லை. கால, தேச, வர்த்தமான, மதம்,ஜாதி, அந்தஸ்து,பால்,இனம்,வயது, தேசம் கடந்த அருள் மழை அவனுடையது!

 

காயத்ரி மகிமை பற்றிய எனது கட்டுரையில் கல்யாண்குமார் என்ற ஒரு இளைஞர் தேனருவி மலைக்கு சென்றவர் தவறி ஒரு ஆழ்ந்த பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதையும், அவரைத் தேடச் சென்றவர்கள் நம்பிக்கை இழந்து அந்த முயற்சியைக் கைவிட்டதையும், யதேச்சையாக அந்தப் பக்கம் சென்ற ஒருவர் உதவி கேட்கும் அபயக் குரலைக் கேட்டதையும்,பின்னர் உடனடி முயற்சி மேற்கொண்டு அவரை உயிருடன் மீட்டதையும் குறிப்பிட்டிருக்கிறேன். காயத்ரி மந்திரத்தில் மிகவும் பக்தி உள்ள அந்த இளைஞர் ஆழ் பள்ளத்தாக்கில் காயத்ரி ஜபம் செய்ததையும்,காயத்ரியே தன்னைக் காப்பாற்றினாள் என்று அவர் கூறியதையும் அந்தக் கட்டுரையில் படிக்கலாம்.

 

அதே போல அதிசயிக்கத் தக்க இன்னொரு அதே மாதிரியான  சம்பவத்தைப் படித்தவுடன் வியப்பு தான் மேலோங்கியது.

29-11-2017 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வந்த செய்தி அது!

 

 

 

2

ககனசுக்கி நீர்வீழ்ச்சிக்குச் சுற்றுலாவாகப் புறப்பட்டார் பெங்களூருவைச் சேர்ந்த காதர் பாஷா.

300 அடி ஆழமுள்ள ஆழ் பள்ளத்தாக்கில் தவறி விழுந்தார் அவர்.

சனிக்கிழமை மதியம் பள்ளத்தில் விழுந்தவருக்கு இடது கால் முறிந்தது, ஒரு கையில் காயம்.ஒரு வழியாக இழுத்தவாறே நடந்தாலும் முடியவில்லை.

ஞாயிறு போனது. திங்கள் மதியமும் வந்தது. யதேச்சையாக அந்தப் பக்கம் வந்த ஒருவரைப் பார்த்த காதர்பாஷா கூவினார். தனது சிவப்புச் சட்டையை வீசிக் காட்டினார்.

அல்லாவின் அருள்! அவர் மீட்கப்பட்டார்.

செய்தியின் முழு விவரம் இதோ;

 

டைம்ஸ் ஆஃப் பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆங்கில மூலம் இது:

Man trapped in gorge lived on water for 48 hours

TNN | Updated: Nov 29, 2017, 08:20 IST

 

1

 

 

MANDYA: Stuck in a 300 ft gorge with a broken leg and only the roaring Gaganachukki falls for company, Khader Pasha oscillated between hope and despair for 48 hours. His last act to save himself was to wave his red shirt to a tourist who happened to see him. When his rescuers found him, Pasha had fainted from the exertion.

 
Pasha, from Kadirenahalli in Bengaluru, had come to the falls on Saturday afternoon. Not content with merely watching the falls, he followed three people who were descending a gorge to get to the bottom, police said. He made it past the spray but suddenly, he stepped on a rock and fell. When he landed deep in the water, his left leg was broken and his left arm severely injured.

He dragged himself to a few stones nearby and stretched his legs. He then screamed for help but the roar of the falling water drowned his voice. Soon enough, the sun set and it was dark all around. A chill rose and Pasha, now in agony from the fractured leg, nearly froze. There was nothing to eat but plenty to drink. Pasha drank water and slept in snatches, fearing snakes and other creatures in the undergrowth. By morning, he felt, he might be able to draw the attention of tourists.
But all of Sunday too, he failed. He began to lose hope with every passing hour. On Monday noon, Pasha noticed a tourist looking his way, took off his red shirt and waved to the tourist and screamed for help .
***

 

 

3

அதிசயமான இந்தச் சம்பவம் அப்படியே தேனருவி நிகழ்ச்சியை நினைவூட்டுகிறது.

கல்யாண்குமாரை காயத்ரி தேவி காப்பாற்றினாள்.

காதர்பாஷாவை யார் காப்பாற்றியது?

அல்லாவின் அருளே! அவரது புண்ணியம் அவர் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது.

பெரும் சக்தி ஒன்று மதம், ஜாதி,இனம், தேசம் உள்ளிட்ட எல்லாத் தடைகளையும் கடந்து உலகினருக்கு அருள் பாலித்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு எடுத்துக் காட்டு!

 

 

 

4

இதைப் பற்றிச் சிந்திக்கும் போது ஹிந்து மதத்தின் அடிநாதமான ஒரே ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

ஏகம் ஏவ; அத்விதீயம் ப்ரஹ்ம!

உண்மை ஒன்றே; இரண்டு இல்லை.

ரிஷிகள் அல்லது அறிஞர்கள் அதைப் பலவாறாக அழைக்கின்றனர்.

ஏகம் ஸத்; விப்ரா: பஹுதா வதந்தி!

நாமக்கல் கவிஞர் அழகுறச் சொன்னார், சூரியன் வருவது யாராலே, சந்திரன் திரிவது எவராலே என்ற பாடலில்.

அதில் சில பகுதிகள்:

 

சூரியன் வருவது யாராலே சந்திரன் திரிவது எவராலே

காரிருள் வானில் மின்மினி போல கண்ணிற் படுவன அவை என்ன

 

அத்தனையும் தர ஒரு கருத்தன் யாரோ எங்கோ இருப்பது மெய்

அல்லா வென்பார் சில பேர்கள்;

அரன் அரி என்பார் சில பேர்கள்;

வல்லான் அவன் பர மண்டலத்தில்

வாழும் தந்தை யென்பார்கள்

சொல்லால் விளங்கா ‘நிர்வாணம்’

என்றும் சில பேர் சொல்வார்கள்;

எல்லாம் இப்படிப் பல பேசும்

ஏதோ ஒரு பொருள் இருக்கிறதே!

அந்தப் பொருளை நாம் நினைந்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்!

***