தங்கத் தமிழாம் சங்கத் தமிழ் தெய்வத் தமிழே! (Post No.3278)

adi-perukku-sri-rangam

Written by S. NAGARAJAN

Date: 23 October 2016

Time uploaded in London: 5-50 AM

Post No.3278

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

By ச.நாகராஜன்

 

தமிழ் இன்றேல் தெய்வம் இல்லை; தெய்வம் இன்றேல் தமிழ் இல்லை. இரண்டும் இரண்டறப் பின்னிப் பிணைந்தவை என்பதை தமிழ் இலக்கியம் காட்டும்; தமிழ்ப் பண்பாடு காட்டும். தமிழ்ச் சமூகம் காட்டும்.

 

இதை உடைக்க நினைப்பவர் உடைபட்டுப் போவர்.

பிரம்மாண்டமான வரலாறைக் கொண்ட தமிழ் இலக்கியத்தில் தெய்வத்தைப் பிரித்தால் மிஞ்சுவது சவமே.

அதாவது சிவ இலக்கியம் சவ இலக்கியம் ஆகி விடும்!

சங்க இலக்கியம் மிகவும் பழமையானது.

1000-krishnas

அதில் தெய்வம் பற்றிய பாட்லகள் ஏராளம் உள்ளன. அனைத்தையும் தொகுத்து விளக்கினால் அது ஒரு கலைக் களஞ்சியமாக ஆகி விடும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்ட குறிப்புகள் கீழே உள்ளன.

விநாயகரிலிருந்து ஆரம்பிப்போம்

 

  • விநாயகர் :                                               ஒருகைமுகன் தம்பியே (திருமுருகாற்றுப்படையில் காணப்படும் வெண்பா 7)
  • சிவன் முதுமுதல்வன்  (புறம் 166)                           தொல்முது கடவுள் (மதுரைக் காஞ்சி 42)

பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்

கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்

தொல்புகழ் த்ந்தாரும் தாஅம்

(பரிபாடல் திரட்டு  1: 72-78)

  • உமை கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ (கலைத்தொகை கடவுள் வாழ்த்து 7)
  • திருமால் மறு பிறப்பறுக்கும் மாசில் சேவடி மாயோனே    (பரிபாடல் 3)

 

  • இலக்குமி அகனமர்ந்து செய்யாள் (குறள் 84)

அவ்வித்து செய்யவள்   (குறள் 167)

  • பிரம்மா- நான்முகன் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டி   (திருமுருகாற்றுப்படை 164-165)

 

  • முருகன் முருகமர் மாமலைப் பிர்ந்தெனப் பிரிமே (ஐங்குறுநூறு 308;4)                                               ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து (அக்நானூறு 149-16)
  • தெய்வயானை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் (திருமுருகாற்றுப்படை -6)
  • வள்ளி என்னுள் வருதியோ நல்நடை கொடிச்சி                     முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல நின் (நற்றிணை 82 3,4)
  • இராமன் கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை     வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை    (புறநானூறு 358 :18,19)

 

  • பலராமன், கண்ணன்

 

பால்நிற உருவின் பனைக்கொடியோனும்

நீல்நிற  உருவின் நேமியோனும் என்று

இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு

(புறநானூறு 58)   இப்படி ஏராளமான குறிப்புகளைச் சங்க இலக்கியத்த்தில் பரக்கக் காணலாம்.

adi-velli-muslims

இதை யார் படித்து விடப் போகிறார்கள் என்ற நோக்கில் தமிழர் பண்பாடு என்பது தெய்வத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பண்பாடு என்பது போலவும் தெய்வங்களைப் பற்றிப் பழைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடவில்லை என்றும் தன் சொந்த உள் நோக்கிற்காக வெள்ளையரின் வழியில் கடந்த அறுபது ஆண்டுகளாக நாத்திக பிரச்சாரம் நடைபெறுகிறது.

 

இவர்கள் தெய்வத்தை நம்பவில்லை என்றால் தமிழையும் நம்பக் கூடாது. தமிழை நம்பினால் அது சுட்டிக்காட்டும் தெய்வீகப் பண்பாட்டையும் மதித்துத் தழுவ வேண்டும்.

இல்லையேல் இவர்கள் அனைவரும் ‘ஜோம்பிகளாகத்’ தான் வாழ வேண்டும். ஜோம்பி என்பது கல்லறையில் புதைக்கப்பட்டு திடீரென்று இருளில் எழுந்து நடமாடும் சவம் என்ப்தை அனைவரும் அறிவர்.

 

தாங்கள் ஜோம்பிகளாக மாறியதோடு மொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் ஜோம்பிகளாக மாற்ற முயலும் இவர்களை என்ன்வென்று சொல்வது?

 

தமிழர்கள் விழிப்புணர்வுடன் சங்க இலக்கியத்தைத் தாமே ஊன்றிப் படிக்க வேண்டும். அது காட்டும் பண்பாட்டை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

 

குமரி முனையில் ஆரம்பித்து இமயமலை வரை  முடிந்த் இடம் எல்லாம் சென்று நமது பண்பாட்டை ஊன்றிக் கவனிப்பதுடன் தனது ஆன்மீக அனுபவங்களைச் சிலரிடமாவது சொல்லி நல்லனவற்றைப் பரப்ப வேண்டும்.

ahmedabad-visarjan

சங்க இலக்கியம் தங்க இலக்கியம் அது தெய்வ இலக்கியமே!

**********

 

நோய்களுக்கு பெரியாழ்வார் கட்டளை! Get Out!! (Post No.3276)

elephant-srirangam-dinm

Written by London Swaminathan

 

Date: 22 October 2016

 

Time uploaded in London: 6-19 AM

 

Post No.3276

 

Pictures are taken from Facebook and other sources; thanks. (Pictures are used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

desikar-bahavani2

நோய்களுக்கு, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் இடும் கட்டளை மிகவும் அதிகார தோரணையில் அமைந்திருக்கிறது.

 

‘நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்’ என்று அப்பர் பாடும் பாடலையும் ஞான சம்பந்தர் பாடிய ‘கோளறு திருப்பதிக’த்தையும் நினைவு கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

 

உற்ற உறுபிணி நோய்காள்!

உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்

பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்

பேணும் திருக்கோயில் கண்டீர்

அற்றம் உரைக்கின்றேன் இன்னம்

ஆழ்வினைகாள்! உமக்கு இங்கோர்

பற்றில்லை கண்டீர் நடமின்

பண்டன்று பட்டினம் காப்பே!

பெரியாழ்வார் திருமொழி பாடல் 447

 

பொருள்:-

என்னைத் தொடர்ந்து வருத்தும் நோய்களே! உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன்; கேளுங்கள். பசுக்களை மேய்த்த கண்ணபிரான் என் உடலைக் கோவிலாகக் கொண்டுவிட்டான். காணுங்கள். பிறவிக்கடலில் ஆழ்த்துகின்ற வினைகளே! இன்னும் உறுதியாகச் சொல்லுகிறேன் உங்களுக்கு இங்கு ஒரு வேலையும் கிடையாது. வெளியே போங்கள்.GET OUT! எம்பெருமானுடைய பட்டினமான இவ்வுயிர், அவனால் காக்கப்படுகிறது.

IMG_5160 (2).JPG

‘உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பே ஆலயம்’ – என்று திருமூலர் சொன்னதும் இங்கே நினைவுக்கு வருகிறது.

 

பண்டன்று, பட்டினம் காப்பே என்ற தலைப்பில் பெரியாழ்வார் பாடிய பத்து பாசுரங்களும் படிக்கப்படிக்கத் தெவிட்டாதது.

 

நெய்க்குடத்தைப் பற்றி ஏறும்

எறும்புகள் போல் நிரந்து எங்கும்

கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!

காலப் பெற உய்யப் போமின்

 

என்று பாசுரம் துவங்குகிறது.

 

அடுத்த பாடலில் எமனுடைய கணக்குப்பிள்ளைகளான சித்திரகுப்தனும் அவனது தூதர்களும் பாவ புண்ணியக் கணக்குப் புத்தகத்தையே கிழித்துப்போடுவிட்டு ஒளிந்துகொண்டனர் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்:-

சித்திரகுத்தன் எழுத்தால்

தென்புலக்கோன் பொறி ஒற்றி

வைத்த இலச்சினை மாற்றித்

தூதுவர் ஓடி ஒளித்தார்

 

–என்கிறார்.

butter-stealing-krish

அதைத் தொடர்ந்து வரும் பாடல்களில் அவர் பயன்படுத்தும் மாணிக்கப்பண்டாரம், வங்கக் கடல் வண்ணன், பீதகவாடைப் பிரானார் என்ற சொற்றொடர்கள் ரசித்துப் படிக்க வேண்டிய சொற்றொடர்கள்.

 

பெரியாழ்வார் சொல்லும் நோய்கள் ‘பிறவிப்பிணி’ என்னும் “புனரபி மரணம் புனரபி ஜனனம்! புனரபி ஜனனி ஜடரே சயனம்” — ஆகியதாகவும் இருக்கலாம். அல்லது அப்பரைப் பற்றிய குடல் நோய் போன்று உடலை வருத்தும் நோய்களாகவும் இருக்கலாம். அதனாலன்றோ அப்பர் பிரானார் “கூற்றாயினவாறு” என்று பாடத் துவங்கி 4000 பாடல்களுக்கு மேல் பாடித்தீர்த்தார்.

நாள் என் செய்யும் வினைதான் என்செய்யும் என்று அருணகிரிநாதர் பாடினார். அல்லல் என் செய்யும்? அருவினை என் செய்யும்? என்று அப்பர் பிரான் பாடினார். இவற்றையெல்லாம் பெரியாழ்வார் பாசுரங்களுடன் ஒப்பிடுவது இன்பம் பயக்கும்.

krishna-saffron-2

–சுபம்–

திராவிடர்களின் இரத்த பலி! படித்து பயந்துவிடாதீர்கள்!! (Post No.3267)

gourd-mask-1

Written by London Swaminathan

 

Date: 19 October 2016

 

Time uploaded in London: 8-44 AM

 

Post No.3267

 

Pictures are taken from Wikipedia and other sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

 

 

வெள்ளைக்காரர்கள் நரிகளுக்குப் பிறந்தவர்கள். திராவிடர்களைப் புகழ்வது போல நிறையவே திட்டிவைத்துள்ளார்கள் முதலில் போண்டா மூக்கு, முண்டக்கண்ணூ, சுருட்டை முடி, கருப்புத் தோல் உள்ளவர்கள் எல்லாம் திராவிடன் என்று எழுதினான். பின்னர் திராவிடர்கள் மத்தியதரை கடல் பகுதியிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று எழுதினான். பின்னர் பார்ப்பனர்களைத் தவிர மற்ற எல்லோரும் சூத்திரர்கள் என்று எழுதினான். அப்புறம் இந்த இந்தியாவில் பார்ப்பனர்களைத் தவிர உள்ளா எல்லா ஜாதிகள் பற்றியும் பிட்டுப் பிட்டு வைத்து, இவை எல்லாம் திராவிடர்கள் வழக்கம் என்று எழுதி வைத்தான். கள்ளர், மறவன், சாணார், குயவர், குறவன் பள்ளன், பறையன் இவர்கள் பற்றி எல்லாம் வெள்ளைக்காரன் எழுதியதைப் படித்தால், மனு தர்ம சாத்திரம் எழுதிய மனுவுக்கு மாலை போட்டு நீதான் ஐயா நல்லவன் என்று சொல்லிவிடுவார்கள்.

என் கருத்து: வெள்ளைக்காரன் எழுதிய எல்லாம் தப்பு. நிற்க.

 

 

கோண்ட் என்னும் திராவிடர்களின் இரத்த பலி — நரபலி – மனித யாகம் பற்றி ஆர்தர் மைல்ஸ் எழுதியதைக் காண்போம்:–

 

 

“கோண்ட் இன மக்கள் திராவிடர்கள்; இவர்கள் ஒரிஸ்ஸா, ஆந்திரம், வங்கம், மத்திய இந்தியாவில் வசிக்கின்றனர்.

இவர்கள் இரத்த பலி கேட்கும் ‘பாரி பெண்ணு, பேரா பெண்ணு’ ஆகிய , கடவுளருக்கு மனிதனைப் பலி கொடுப்பார்கள் ஆனால் அரசாங்கம் இதைத் தடை செய்துவிட்டதால் இப்பொழுது ஆடுகளையும், எருமைகளையும் பலி கொடுக்கிறார்கள். 1860 ஆம் ஆண்டு வரை மனித பலி நடந்து வந்தது. இந்த பலி கொடுக்கும் சடங்கிற்கு ‘மரியா’ என்று பெயர்.

kondh-implements

Meriah Post

மரியா சடங்கு

ஒரு ஆறு அடி உயர கம்பின் மேலே சிலுவை போல ஒரு குறுக்குச் சட்டம் இருக்கும். அதைத் தரையில் ஊன்றி வைத்து பலி கொடுக்கும் மனிதனின் முடியை மேலே கட்டித் தொங்க விடுவார்கள் அவனுக்குக் கீழேயே அவனைப் புதைக்க ஒரு குழியும் தோண்டி வைத்துவிடுவர். நாலு பேர் அந்த மனிதனின் இரண்டு கைகளை யும் காலகளையும் பிடித்துக் கொண்டு நிற்பர். நரபலி கொடுக்கும் பூசாரி நீண்ட உச்சாடனம் செய்வார். அதே நேரத்தில் அவனது முதுகிலிருந்து கத்தியால் வெட்டி சதையை எடுப்  பார். இந்த மரியா தூண்களில் ஒன்று சென்னை மியூசியத்தில் காட்சியில் உள்ளது.

 

மனிதனின் சதையைச் சாப்பிடும் கடவுள்— கோண்ட் இன மக்களுக்கு ஆயுதமும் வெற்றியும் வழங்குவார் என்பது அவர்களுடைய நம்பிக்கை. ராஜா மற்றும் ராஜாங்கத்திடமிருந்து தங்கள் ஜாதியைக் காப்பாற்றும் பிரார்த்தனை அவர்களுடைய பிரார்த்தனையில் முக்கிய இடம் வகிக்கிறது.

 

மனித பலி முடியும் போது பூசாரி பினவரும் வசனங்களைச் சொல்லுவார்:– துக்கப்படாதே. கடவுள் உன்னை உடனே சாப்பிட்டு விடுவார். உன்னுடைய பெற்றோர்களிடமிருந்து உன்னை விலைக்கு வாங்கினோம். உன்னை பலியிடுவதற்காகவே, தெரிந்தே உன்னை எங்களுக்கு விற்றார்கள். ஆகையால் எங்கள் கைகளில் பாவம் ஒட்டாது. ஆனால் உங்கள் பெற்றோர்களின் தலையில்தான் பாபம் விழும்’. இப்படிச் சொல்லி முடித்தவுடன் அந்த ஆளின் தலையையும் ஒரே வெட்டாக வெட்டி விடுவார். உடல் மட்டும் கீழே குழியில் விழும். தலை முடியுடன் கம்பததில் கட்டப்பட்டதால் அப்படியே தொங்கும். அதை மிருகங்கள் சாப்பிட்டு விடும். அந்த ஆளை வெட்டிய கத்தியை அந்தக் கம்பத்திலேயே குத்திவைப்பார். இதை தொடர்ந்து இன்னும் இருவரைப் பலி கொடுக்க இப்படிச் செய்வார். ஒவ்வொரு முறையும் மூன்று ஆட்களைப் பலி கொடுப்பர்.

 

இந்த நரபலியைக் காண பெரிய கூட்டம் காத்திருக்கும். அந்த ஆளின் முதுகுச் சதையை வெட்டியவுடன் எல்லோரும் நரபலி ஆளை நோக்கி ஓடிவருவர். இந்தச் சடங்கிற்காகவே கைகளில் விசேஷமாக அணிந்திருக்கும் வளையங்களால் அவன் தலையை உடைப்பர். அப்போதும் அவன் உயிர் போகாவிடில் ஒரு மூங்கில் கம்பை இரண்டாகப் பிளந்து அதற்கிடையில் அவன் தலையை நசுக்குவர் . பூசாரியானவர் ஆளுக்குக் கொஞ்சம் சதையை வெட்டிப் பிரசாதமாக கொடுப்பார். அந்த பொக்கிஷத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் எல்லோரும் அவரவர் நிலத்துக்கு ஓடிப்போய் ஒரு கம்பத்தில் அந்த சதைத் துண்டை தொங்க விடுவர். அந்த சதை தண்ணீருக்கு மேலே இருந்தால், அந்த நீர்ப்பாசனம் செய்யும் இடமெல்லாம் அதிக விளைச்சல் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர்.

 

இதற்குப் பின்னர் மிச்சம் இருக்கும் உடற்பகுதியை முறையாக அடக்கம் செய்வர்!

kondh-priestess

ஜெய்ப்பூர் மஹாராஜா இறந்தவுடன், புதிய பட்டம் ஆட்சிக்கு வந்தபோது 13 வயதுச் சிறுமியை துர்கா தேவிக்குப் பலி கொடுத்ததாக மரியா  சடங்கிற்கு ஆட்களைப் பிடித்துத் தரும் ஏஜண்டுகள் கூறுகின்றனர். மரியா சடங்கிற்கு ஆட்களைப் பிடித்துச் சென்றது, கடத்திச் சென்றது பற்றி நிறைய புகார்கள் வந்ததை வெள்ளைக்கார்கள் பதிவு செய்துவைத்துள்ளனர்.

 

ஜெய்ப்பூர் பகுதியில் பெண் குழந்தை பிறந்தால் கொன்றுவிடும் வழக்கமும் இருந்தது. ஆண்டு தோறும் 1500 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடுகின்றனர். கோண்ட் இன மக்கள் பெண் குழந்தைகளை விரும்புவதில்லை. நிறைய குடும்பங்களில் ஆண்கள் மட்டுமே இருப்பர். ஆன்மா மீண்டும் மீண்டும் ஒரே குடும்பத்திற்குதான் வரும் என்றும் பெண் சிசுக்களைக் கொன்றாலும் அவர்கள் ஆண்களாகத் திரும்பிவந்து பிறப்பர் என்றும் கருதுகின்றனர்.

 

பெண் சிசுக்களைக் கொல்லும் பணி ஏலத்துக்கு விடப்பட்டு, அதை விலைக்கு வாங்கிய வணிகர் ஆண்டுதோறும் ஜெய்ப்பூர் மன்னருக்கு 300 ரூபாய் (Year 1930s) கொடுத்ததாகவும் தெரிகிறது. அந்த ஏஜெண்ட் வயதான பெண்களை வைத்து சிசுக் கொலை செய்வாராம்.

 

கோண்ட் இனப் பீரிவுகள் பல உண்டு. சிலர் நரபலி கொடுப்பதிலை விலைகொடுத்து வாங்கிய ஆளைத்தான் நரபலி கொடுக்க வேண்டும்; அல்லது இறைவன் ஏற்க மாட்டார் என்றும் கொண்ட் இனத்தினர் கருதுவர். சில நேரங்களில் இளம் வயதிலேயே பலி கொடுக்க என்று ஒருவனை வாங்கிவிடுவர். அவனை எல்லா விஷயங்களையும் அனுபவிக்க வைப்பர். வயதாக ஆக அவனுக்குத் தெரியும் தான் நரபலிக்கான ஆள் என்று. அப்போதிருந்து அந்த ஆளின் மீது கண்காணிப்பு அதிகரிக்கும் அவனுக்கு குடி, அபினி முதலியவற்றைக் கொடுத்துக் கொடுத்து மயக்க நிலையில் ஆழ்த்திவிடுவர்.

 

பலி கொடுப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே மரியா விருந்து மரியா நடனம் எல்லாம் ஆரம்பமாகிவிடும். பலிக்கு முதல் நாளன்று அவனை உட்காரவைத்து “ஓ, தடா பெண்ணு, உனக்கு இவனைப் பலி கொடுக்கப் போகிறோம். எங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் விளைச்சலும் கிடைக்க வேண்டும்” என்று வேண்டுவர். இரண்டாம் நாளன்று அவன் மீது தைலம் பூசுவார்கள் அதை ஒவ்வொருவரும் தொட்டு தன் மீது தடவிக்கொள்வர் பின்னர் அந்த ஆளை அவ னைக் கட்டிய கம்பத்துடன் தூக்கிக் கொண்டு ஊர்வலம் செல்லுவர். பின்னர் பலி பீடத்துக்கு வந்த பின்னர் பூசாரி சதைக ளைக் கிழிக்கும் பணியைத் துவங்குவார். எல்லோரும், ஆளுக்குக் கொஞ்சம் சதை வாங்கியவுடன் திருவிழா முடியும். பின்னர் அங்கே ஒரு எருமை மாட்டை பலி இடுவர். பெண்கள் எல்லோரும் ஆண் உடை தரித்து நடனம் ஆடுவர்.

 

இது பற்றி விசாகப்பட்டிணம் கலெக்டர் ஆர்புத் நாட், கர்னல் கேம்ப் பெல் முதலியோரும் நிறைய குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். சில இடங்களில் யானை போன்ற உருவம் செய்து அதன் துதிக்கையில் நரபலி மனிதனைத் தொங்கவிடுவர். இந்த வழக்கத்துக்கு வெள்ளைக்காரர் ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும் 1902-ம் ஆண்டுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக நரபலி நடந்தது. சிலர் இதை பகிரங்கமாக ஆதரித்து நரபலி கொடுக்க அனுமதியும் கோரினர். ஆனால் அவை எல்லாம் நிராகரிக்கப்பட்டன.

dongria-kondh-tribe-membe-006

என் கருத்து:–

 

வெள்ளைக்காரர் சொல்லுவது போல நடந்திருக்கலாம். ஆனால் பண்பாடுமிக்க நகர நாகரீகம் நிலவியபோதே கானக மாக்கள் அவர்களுக்கே உரித்தான வாழ்க்கை முறையினைப் பின்பற்றியதை சம்ஸ்கிருத தமிழ் இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. ஆகையால் திராவிடர் என்று எல்லோருக்கும் முத்திரை குத்துவது சரியல்ல. தோலின் நிறமோ, ஒருவர் பேசும் மொழியோ மட்டும் — ஒரு இனத்தின் அடையாளங்கள் என்று சொல்லுவது தவறு.

 

–சுபம்–

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2 (Post No.3266)

1935-valluvar

Written by S. NAGARAJAN

Date: 19 October 2016

Time uploaded in London: 6-31 AM

Post No.3266

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

ஹிந்துக்களின் மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் வள்ளுவர், பிறப்பு ஏன் ஏற்படுகிறது, அதை எப்படி அறுப்பது என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்கிறார். மறுபிறப்புத் தத்துவம் பற்றிய இறுதிக் கட்டுரை இது. முந்தைய கட்டுரையைப் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்து விட்டு பின்னர் தொடரவும்.

 

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2

ச.நாகராஜன்

 

punul-valluvar

திருக்குறளில் திருவள்ளுவர் ஹிந்துக்களின் மறுபிறப்புத் தத்துவத்தை மட்டும் சுட்டிக் காட்டி நின்று விடவில்லை. பிறவிச் சுழல் ஏன் ஏற்படுகிறது, அதை எவ்வாறு போக்குவது என்பதையெல்லாம் விரிவாக விளக்குகிறார்.

ஒரு பெரிய மஹரிஷியின் போதனைகளாக அவை அமைந்துள்ளன.

 

 

தத்துவஞானிகள் பெரிய விளக்கவுரைகளில் பல நாட்கள் பேசுவதையெல்லாம் அவர் சூத்திர வடிவில் தந்து விடுகிறார்.

ஆகவே தான் உபநிடத, வேதத்திற்கு சரி நிகராக தமிழ் மறை போற்றப்பட்டு வருகிறது.

 

 

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி                   விழிப்பது போலும் பிறப்பு       (குறள் 339)

 

உறங்குவதும் விழிப்பதும் இயல்பாய் உயிருக்கு அமைவது போல சாக்காடும் பிறப்பும் மாறி மாறி வருகின்றன.

எவ்வளவு பிரம்மாண்டமான ஒரு தத்துவத்தை மிக சுலபமாக இரண்டே இரண்டு வரிகளில் தந்து விடுகிறார்!

 

பிறப்பு என்பது துன்பம்.  எதையாவது மனிதப் பிறவியில் வேண்டி நீ விரும்பினால் அது பிறவாமையாக அமைய வேண்டும்.. மற்ற எதையும் விரும்பும் அவாவை அறுத்து விட்டால் அது  தானே வரும். என்கிறார் அவர். குறளைப் பார்ப்போம்.

 

 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை  மற்றது

வேண்டாமை வேண்ட வரும்       (குறள் 362)

 

பிறவிச் சுழலிலிருந்து ஏன் விடுபட வேண்டும்?

அதற்கு பதிலையும் அழகாகத் தருகிறார் இப்படி!

 

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்                                                 இறைவனடி சேராதார்        (குறள் 10)

 

 

இரகசியம் புரிகிறது இப்போது. பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டால் தான் இறைவன் அடியைச் சேர  முடியும்.

இல்லையேல் இல்லை தான்!

 

 

பிறப்பை அறுப்பது எப்படி? அதற்கும் வழியைச் சொல்கிறார்.

முதலில் பிறப்பை வேண்டாதவனின் இயல்பை இப்படிக் கூறுகிறார்:

 

 

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை    (குறள் 345)

 

 valluvar-iyengar

பிறப்பறுத்தலை மேற்கொண்ட ஒருவனுக்கு அதற்கு க்ருவியாக இருக்கும் அவன் உடம்புமே மிகை தான்! அதற்கு மேல் உலகத் தொடர்பு எதற்காக?

 

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்    (குறள் 349)

 

 

ஒருவன் இருவகைப் பற்றையும் அறுத்து விட்ட உடனேயே அப்பற்று அவனது பிறப்பை அறுக்கும். அது அறாத போது பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.

 

பிறப்பு என்பது என்ன என்பதை வரையறுக்கும் குறளையும் வள்ளுவர் தந்து விடுகிறார்:

 

 

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்                     மருளான் ஆம் மாணாப் பிறப்பு     (குறள் 351) 

 

மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வால்  தான் இன்பம் இல்லாத பிறப்பு ஏற்படுகிறது.

 

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு    (குறள் 357)

 

உபதேசப் பொருளை ஒருவன் ந்னகு ஆராய்ந்து முதல் பொருளை உணருவானாயின், மீண்டும் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டாம்.

 

பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்

செம்பொருள் காண்பது அறிவு   (குறள் 358)

 

பிறப்பிற்கு காரணமாகிய பேதைமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருளைக் காண்பதே அறிவாகும்.

 

பிறப்பிற்குக் காரண்மாக எல்லா உயிருக்கும் அமைவது எது?

இரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார் வள்ளுவர்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பு என்னும் வித்து   (குறள் 361)

எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்தும் விடாமல் வருகின்ற பிறப்பிற்குக் காரணம் அவா என்று சொல்லுவர் நூலோர்

 valluvar-gold

முத்தான ஒன்பது குறள்கள்!

பிறப்பிற்குக் காரணம் அவா.

அது நீங்க செம்பொருள் காண்பது அறிவு.

 

அது நீங்க பெரியோரின் உபதேச நெறிகளை ஓர்ந்து உணர். அறி!

 

மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று நினைக்கும் மயக்கத்தினாலேயே பிறப்பு ஏற்படுகிறது.

இருவகைப் பற்றையும் அறுக்கும் ஒருவனுக்கு அந்தப் பற்றே பிறப்பை அறுத்து விடும்.

 

பிறப்பு வேண்டாதவனுக்கு உடம்பே மிகை தான்.

பிறவிப் பெருங்கடலைக் கடந்தவனே இறைவன் அடி சேர முடியும்.

 

இந்த உலகில் நீ  ஒரே ஒன்றை மட்டும் வேண்ட விரும்பினால் பிறவாமையை வேண்டு!

ஏனெனில் பிறப்பும் இறப்பும் தூங்குவதும் விழிப்பதும் போலத் தான்!

 

சிறந்த தத்துவஞானியான ம்ஹரிஷி வள்ளுவரின் பிறப்பறுக்கும் உபநிடத மொழிகளைத் தொகுத்துப் பார்க்கும் போது வியப்பும் பிரமிப்பும் மேலிடுகிறது.

 

இரகசியத்திற்கெல்லாம் மேலான இரகசியத்தை தெளிவாக எளிய பாக்களில் தருகிறார் வள்ளுவர்; அதை அமிழ்தினும் இனிய தமிழில் பெறுகிறோம் நாம்!

 

எவ்வளவு பாக்கியசாலிகள்!

 

ஹிந்துப் பண்பாட்டின் ஆணிவேரை இதை விட வேறு யாரால் இவ்வளவு சிறப்பாக சூத்திர வடிவில் தர முடியும்.

வாழ்க வள்ளுவர், வாழ்க தமிழ்!

****************

விஜய தசமி நாளில் வன்னி மரத்தை வழிபடுவது ஏன்?(Post No.3245)

vanni

Written by London Swaminathan

 

Date: 12 October 2016

 

Time uploaded in London: 8-49 AM

 

Post No.3245

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

1381580945_shami_tree

உலகிலேயே அற்புதமான மதம் இந்துமதம். உலகில் ஐந்து வல்லரசுகளுக்குப் பின்னர் முதலில் அணுகுண்டு வெடித்த வளரும் நாடு இந்தியாதான்! உலகில் ஐந்து வல்லரசுகளுக்குப் பின்னர் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதும் இந்தியாதான். உலகிலேயே அதிகமான கம்ப்யூட்டர் அலுவலர்களை அனுப்புவது இந்தியாதான். இப்படி அணுயுகத்திலும், விண்வெளி யுகத்திலும் முன்னனியில் நிற்கும் இந்தியா 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மரங்களுக்கும் மிருகங்களுக்கும் கொடுத்த மதிப்பையும் மரியாதையையும் இன்றும் கொடுக்கிறது!

 

ஒரு மூலையில் நாக பஞ்சமி என்ற பெயரில் பாம்பு வழிபாடு. மற்றொரு புறத்தில் தேள்கள் வழிபாடு. ராஜஸ்தானில் ஒரு கோவிலில் எலிகள் வழிபாடு. ஊர் தோறும் மர வழிபாடு. அருகம் புல்லுக்கும், தர்ப்பைப் புல்லுக்கும்—சந்யாசிகளுக்குத் தரும் மரியாதை!! துளசியும் வில்வமும் தினசரி பூஜையில்!!!

 

இப்படி இருப்பதைப் பார்த்து முன்னர் மூட நம்பிக்கை என்று எழுதியவர்கள் எல்லாம், இப்பொழுது இந்துக்கள்தான் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்துகின்றனர்; இந்துக்கள்தான், புறச் சூழ்நிலையைப் பாதிக்காமல் பண்டிகை கொண்டாடுகின்றனர் என்று புகழத் துவங்கியுள்ளனர்.

 

வன்னி மர வழிபாடு மஹாபாரத காலத்திலிருந்து இருக்கிறது. அரச மர வழிபாடு புத்தருக்கும் முன்னாலேயே இருக்கிறது. அரச மரத்தின் பெயரில் பிப்பலாடன் முதலி ய ரிஷிகள் இருந்திருக்கின்றனர்.

 

12 ஆண்டு வனவாசமும் ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசமும் (மறைந்திருந்து வாழுதல்) விதிக்கப்பட்டதால் பாண்டவர்கள் ஐவரும் 13-ஆவது ஆண்டில் விராட தேசத்துக்குச் சென்றனர்.

 

ஒவ்வொருவரும் ஒரு மாறுவேடத்தில் விராடன் அரண்மனையில் வேலை யில் புகுந்தனர். அவர்கள் விராட தேசத்தில் மாறுவேடத்தில் இருப்பதை துர்யோதனன், உளவாளிகள் மூலம் கண்டுபித்தான் போலும். விராட தேசத்தில் பசுக்களை கவரும் ‘ஆநிறை கவர்த’லில் ஈடுபட்டான். இந்த வேத கால வழக்கம் புற நானூற்றிலும் உள்ளது அப்போது  அர்ஜுனன் சண்டைக்குப் புற[ப்பட்டான். ஆனால் அவன் விராடன் சபையில் அலி வேடம் போட்டுக்கொண்டு ஆடல் பாடல் சொல்லிக் கொடுத்ததால், முன்கூட்டியே,  தனக்கு சிவபெருமான் கொடுத்த ஆயுதங்களை வன்னி மரத்துக்கு அடியில் ஒளித்து வைத்திருந்தான். சண்டைக்குப் போவதற்கு முன்னர்  அவைகளைத் தோண்டி யெடுத்தான்.

 

துரியோதனனின் படைகளச் சிதறடித்து, ஆநிரைகளை (பசு மாடுகளை) மீட்டு பின்னர் வன்னி மர பூஜை செய்தான்  .

 

இந்த ஆண்டு மைசூர் தசரா விழாவில்கூட வன்னி மர பூஜை நடைபெற்றது. நாடு முழுதும் மன்னர்களும் க்ஷத்ரியர்களும் செய்யும் பூஜை இது. ஒரு வேளை அர்ஜுனனுக்கும் முன்னரே இந்த வழக்கம் இருந்ததால்தான் அர்ஜுனனும் இதைச் செய்தான் போலும். ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

vanni-2

விஜய தசமி நாளில் வன்னி மரத்தை வழிபடுவது ஏன்?(Post No.3245)

சமீ விருட்சம் எனப்படும் வன்னி மரத்தைப் பூஜை செய்கையில் சொல்லப்படும் ஸ்லோகங்கள்:-

 

(1).சமீ சமயமேபாபம், சமீ சத்ரு விநாசினீ, அர்ஜுனஸ்ய தனுர் தாரி, ராமஸ்ய ப்ரியதர்சினி

 

 

(2).சமீம் கமல பத்ராக்ஷீம், சமீம் கடக தரரிணீம், ஆரோஹது சமீம் லக்ஷ்மீம், ந்ருணாம் ஆயுஷ்யவர்தனீம்

 

(3).நமோ விஸ்வாச வ்ருக்ஷாய பார்த்த சஸ்த்ர தாரிணே, துவத்தஹ விரத பிரதீச்யாமி, ஸதா விஜயதாபவ.

 

(4).தர்மாத்மா சத்ய சந்தஸ்ச, ராமோதாசா திர்யதி, பௌருஷேசா பிரதி துவந்துவம், சரைநம் ஜஹிராவணீம்

 

(5).அமங்களாய சமனீம், துஷ்கிருதஸ்ய நாசினீம், துஸ் ஸ்வப்ன ஹாரிணீம் தன்னியாம், பிரபத்தியேஹம் சமீம் சுபாம்.

 

இந்த ஐந்து ஸ்லோகங்களையும் சொல்லி சமீம் மரத்தை/ வன்னி மரத்தை வழிபடுவது காலாகாலமாகப் பின்பற்றப்படுகிறது.

 

வாழ்க வன்னி மரம்! வளர்க சமீ மரம்!!

 

–Subham–

ஆர்.எஸ்.எஸ்: நான்யபந்தா வித்யதே! (Post No.3240)

1679-dr-k-b-hedgewar-india-stamp-1999

Written by S. NAGARAJAN

Date: 11 October 2016

Time uploaded in London: 5-56 AM

Post No.3240

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

ஹிந்துக்களின் வெற்றித் திருநாள் விஜயதசமி! ஆர்.எஸ்.எஸ். உதயமான தினம்! சிறப்புக் கட்டுரை

 

ஆர்.எஸ்.எஸ்: நான்யபந்தா வித்யதே!

By ச.நாகராஜன்

 

hedgewar

ஒரு முக்கியமான கால கட்டத்தில் ஹிந்துக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

 

ஹிந்து இனம் அடி வாங்கி வாங்கி உடம்பெல்லாம் இரத்தமயமான இனம்.இனி அடி வாங்க உடம்பில் இடமும் இல்லை. திராணியும் இல்லை!

 

ஹூண்ர்கள், முகலாயர்கள், கிறிஸ்தவர்கள் என்று இந்த ஹிந்துக்களை அடிக்காத இனமே இல்லை.

 

அடி வாங்குவதற்கென்றே பிறந்த “சபிக்கப்பட்ட இனமா” இது!

உலகின் தலைசிறந்த தத்துவங்களைத் தந்த ஹிந்துக்கள், எந்த மதமும் சம்மதம் என்று சொல்லும் ஹிந்துக்கள், சகல கலைகளிலும் முன்னோடிகளாக விளங்கிய ஹிந்துக்கள், வீரத்திலும் அறப் பண்பிலும் உலகிற்கே வழி காட்டிய ஹிந்துக்கள், தொன்று தொட்டு இன்று வரை எந்த இடம் என்று இல்லாமல் குக்கிராமங்களிலிருந்து பெரும் நகரங்கள் வரை ஆங்காங்கே ரிஷிகள்,  முனிவர்கள், மகான்கள், தபஸ்விகள், சித்தர்கள், ஞானிகள், கவிஞர்கள், வீரர்கள், பெரும் மேதைகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள் என அனைத்துத் துறைகளிலும் விற்பன்னர்களைத் தொடர்ந்து தோற்றுவித்த ஹிந்து இனத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள்.. இப்படி அடி வாங்குவது காலத்தின் கோலமா? ஹிந்து இனத்தில் உள்ள குறைகளா?

 

 

இதை ஆராய்ந்தார் ஒரு மஹரிஷி போன்ற மனிதர்.

ஆபத்துக்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.

ஜிஹாத் என்று சொல்லி தீவிரவாத முஸ்லீம்கள் அடி அடி என்று ஹிந்துக்களை அடிக்கும் கோரம் ஒரு புறம்..

 

இந்தியாவில் உங்களுக்கு நல்ல அறுவடை இருக்கிறது, அவர்கள்,  மதத்தை மாற்றுங்கள், ஹிந்துக்களை அழியுங்கள், கிறிஸ்தவர்களாக்குங்கள் என்று பகிரங்கமாக அறைகூவல் விடும் கிறிஸ்தவ மேலிடம் ஒரு புறம்..

 

மதம் ஒரு அபின் அதை ஒழி என்று உலக் கோஷம் இட்டு விட்டு ஹிந்துக்களிடம் மட்டும (இஸ்லாம், கிறிஸ்தவத்தை மறந்தும் அணுகாமல்) அதை பிரசாரம் செய்யும் தேசபக்தியற்ற கம்யூனிஸ்டுகள் ஒரு புறம்.

 

ஹிந்துக்கள் சின்னாபின்னமாக இதை விட வேறு என்ன வேண்டும்?

 

இல்லை இல்லை, இன்னும் ஒன்றும் மிச்சம் இருக்கிறது. மேல் சொன்னவர்களின் கூட்டாளிக்ளாக அவர்களுடன் இணைந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தங்களை மேம்படுத்திக் கொள்ள ஹிந்துக்களைப் பழிக்கும் திராவிட தீய் சக்திகள் உள்ளிட்ட சொந்த இனத்து துரோகிகள் இன்னும் ஒரு புறம்.

மேல் சொன்ன நால்வரில் நான்காம் படை மிக  மோசமானது,

இவர்களை எதிர்கொள்ள வேண்டுமே! ஹிந்து இனத்தின் குறைகள் யாவை?

 

இரண்டு!

  • ஒற்றுமையின்மை 2) சமூகப் பொறுப்பின்மை

அஹிம்சை, பொறுத்துப் போதல் என்ற ஹிந்து மதத்தின் அருங்குணங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு தங்களை அடிக்கும் போதெல்லாம், தங்கள் மதத்தைத் துணிந்து அழிக்கும் போதெல்லாம், ஏன் தங்கள் உயர் தெய்வமான ராம்ரைச் செருப்பால் அடிப்பது உள்ளிட்ட தீய செயல்களைச் செய்யும் போதெல்லாம் ‘கடவுள் பாத்துக்குவார்’ என்று சொல்லும் கையாலாகாததனம் அவர்களது சமூகப் பொறுப்பின்மையைக் காட்டுகிறது.

rss-chief

 

ஆங்காங்கே ஹிந்துக்களுக்கு இழைக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்க ஒரு ஒற்றுமையுள்ள இனமாக ஹிந்து இனம் ஒன்று சேர்ந்து பாடுபட்டதில்லை. சமூகப் பொறுப்பினமையோடு ஒற்றுமையும் இல்லை!

 

 

இந்த இரு குறைகளைக் கண்ட மஹரிஷி போன்ற மனிதர் ஆழ்ந்து சிந்தித்தார். ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.

கண்டுபிடித்த மஹரிஷியின் பெயர் டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவார்.

 

அவர் கண்டு பிடித்த வழி. ஒற்றுமையையும் ச்மூகப் பொறுப்பையும் கொண்ட ஒரு வலிமை வாய்ந்த ஹிந்து சமுதாயத்தை உருவாக்கி ஹிந்து ராஷ்ட்ரத்தை பாரதத்தில் நிர்மாணித்து ஹிந்து இனம் உலக அரங்கில் ஓங்கி உயர ஒரு சங்கத்தை அமைப்பது.

 

அவர் அமைத்த சங்கம் தான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்.

1925ஆம் ஆண்டு வெற்றித் திருநாளாலான விஜய தசமி அன்று சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்று கம்பீரமாக ஹிந்துக்களைத் த்லை நிமிரச் செய்கிறது.

ஹிந்து மதத்தை அழிக்க்வும் ஒழிக்கவும் நினைக்கும் ராக்ஷஸ சக்திகளை அழிக்க ஒவ்வொருவரும் ராமராக, கிருஷ்ணராக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்துவது ஆர்.எஸ்.எஸ்.

ஹிந்து மதம் என்றுமுள்ள  மதமாக உலக அரங்கில் மிளிர ஒரே வழி ஆர் எஸ் எஸ் தான்.

keshav-baliram-hedgewar-poster

உபநிடத வாக்கியத்தைக் கடன் வாங்கிச் சொல்வதென்றால்

நான்யபந்தா வித்யதே!                              (அன்ய பந்தா – வேறு வழி   ந வித்யதே –இல்லை)

அதை விட்டால் வேறு வழி இல்லை!!

 

******

மௌனத்தில் எத்தனை வகை?! (Post No.3237)

42285-wise-souls-speak-loudly-in-silence

Written by S. NAGARAJAN

Date: 10 October 2016

Time uploaded in London: 5-23 AM

Post No.3237

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

சரஸ்வதி பூஜை சிறப்புக் கட்டுரை 

மௌனத்தில் எத்தனை வகை?!

ச.நாகராஜன்

 

“ஒருவனுக்கு துரோகமிழைக்காத உண்மை நண்பன் மௌனமே                                                                                 

                                     – கன்ஃப்யூஷியஸ்

 ramana

 

வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருந்தால் அது தான் மௌனம்! இது சரியா? இந்த ஒரு நிலை தான் மௌனத்தின் ஒரே வகையா?

சீனாவில் மௌனத்தில் நூறு வகை உண்டு என்று வலியுறுத்தப்படுகிறது. ஜென் பிரிவு மௌனத்தின் அபாரமான வலிமையையும் அதன் ஆழத்தையும் பல விதமாக விளக்குகிறது.

உண்மையான மௌன நிலையில் ஒருவர் எவ்வளவு காலம் இருக்க முடியும்?

 

அறிவியல் ஆராயப் புகுந்தது. உண்மையான அறிவியல் ரீதியிலான மௌன நிலையில் ஒருவர் 15 நிமிடம் இருந்தாலே அதிகம் தான். அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது!

ஒரு செல் போன் ஒலிக்கும் போதோ அல்லது ஒரு டிஷ் வாஷர் அல்லது வாஷிங் மெஷின் இயக்கப் படும் போதோ அது எவ்வளவு ஓசையை எழுப்புகிறது?

 

மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் மற்றும் அமெரிக்க ராணுவப் பிரிவு இது போன்ற ஓசைகளின் அளவைக் கண்டு பிடிக்க சத்தமே இல்லாத ஒரு சேம்பரை – மௌன அறையை அமைப்பது வழக்கம்.

இதை அனெகோயிக் அறை என்று அழைப்பர். (unechoic ; un-echoic –எதிரொலி இல்லாத என்று பொருள்)

 rumi-on-silence

மின்னஸோட்டாவில் உள்ள மின்னபோலிஸில் ஆரிஃபீல்ட் லாபரட்டரிஸிலும் (orifield laboratories) இப்படி ஒரு அறை உண்டு. இந்த அறை, தங்கள் தயாரிப்புகளைச் சோதனை செய்ய கட்டண அடிப்படையில் தேவைப்பட்டோருக்கு தரப்படுவதும் உண்டு.

 

உண்மையில் ஒரு அமைதியான அறை என்பதன் விளக்கம் தான் என்ன? மின்னஸோட்டா பப்ளிக் ரேடியோ 30 டெசிபல் உள்ள அறையே அமைதியான அறை என்ற இலக்கணத்தை வகுக்கிறது. அமைதியான இரவு நேரத்தில் ஏர்கண்டிஷனரின் ஓசை, தாள்களைப் புரட்டும் ஓசை போன்றவை மெலிதாகக் கேட்கும். அது பொதுவாக அமைதியான அறை எனப்படும்.

 

ஆனால் அனெகோயிக் அறை மைனஸ் ஒன்பது டெசிபல் என்ற அளவு அமைதியாக இருக்கும். ஆம், சாதாரண மௌன நிலைக்கும் கீழாக எதிர்மறையில் ஒன்பது டெசிபல்! 

 

கின்னஸ் வோர்ல்ட் ரிகார்டின் படி உலகின் மிக மிக அமைதியான அறை இது ஒன்று தான்!

இந்த அறை விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த சத்தமும் இதனுள் புக முடியாது. சுவரிலிருந்து ஒரு மீட்டர் நீளம் ஊடுருவியிருக்கும் விசேஷ அமைப்புகள் எந்த எதிரொலியையும் சத்தத்தையும் உள் வாங்கி கிரகித்து விடும்.

 

இதன் சிறப்புத் தன்மையைப் பற்றி இந்த சோதனைச்சாலையின் தலைவர் ஸ்டீவ் ஆரிஃபீல்ட், “சாதாரணமாக ஒரு அமைதியான அறையில் உட்காரும் ஒருவர் ஒலியையும் அதன் பிரதிபலிப்புகளையும் கேட்கிறார். ஆனால் அனெகோயிக் அறையில் எந்த ஒரு சத்தமும் அதன் பிரதிபலிப்பும் இருக்காது.அங்கு ஜீரோ ரிஃபளக் ஷன் இருக்கும். நான் பேசும்போது நீங்கள் எனது குரலை உள்ளது உள்ளபடியே அப்படியே கேட்க முடியும். பேசும் போது நான் தலையைத் திருப்பினால் ஒலியும் தலை திருப்பிய திசையில் வளையும். என்கிறார்.

 

இப்படிப்பட்ட சைலன்ஸ் சேம்பரில் ஒருவர் உட்கார்ந்த போது அவர் இடி இடிப்பது போன்ற ஓசையையும் ஆறு பாய்வது அல்லது அருவி நீர் கொட்டுவது போன்ற ஒசையையும் கேட்டார். பத்து நிமிடங்களில் அவர் மண்டை வெடித்துச் சிதறி விடுவது போல இருந்தது. உடனே அறையை விட்டு வெளியே வந்து நடந்ததைச் சொன்னார்.

 silence-speaks-79426-500-550

ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள், “நீங்கள் கேட்டது இடைவிடாத இதயத் துடிப்பு தான். உங்கள் உடலில் உள்ள ரத்த ஓட்டமே உடலில் பாய்வது ஆறு பாய்வது போன்ற ஓசையை எழுப்புகிறது. அதைத் தான் நீங்கள் கேட்டீர்கள் என்றனர். உடலின் அற்புதமான ஓசை விந்தை இது!

 

மைனஸ் டெசிபல் நிலையில் இப்படித் தான் உடல் நிகழ்வில் ஏற்படும் சத்தத்தையே நம்மால் தாங்க முடியாமல் போய் விடும் நிலை ஏற்படுகிறது.

 

மாஸன் அண்ட் ப்ராடி (Mason and Brady) ஆய்வு என்பது பிரபலமான ஆய்வாகும். இந்த ஆய்வில் மௌன சேம்பரில் சிலரை இருட்டாக இருந்த நிலையில் 15 நிமிடம் இருக்க வைத்த போது அவர்கள் மாயத் தோற்றங்களைக் கண்டு அலறினர். அதிலிருந்து தெரிய வருவது ஒருவர் 15 நிமிடம் ஆழ்ந்த மௌனத்தைத் தாக்குப் பிடித்தால அதுவே அதிகம் என்பது தான்!

 

இனி உலகாயத ரீதியாக, மௌனம் என்பது வெற்றிக்கான வழி என்பது நிலை நிறுத்தப்பட்ட சித்தாந்தம்.

பல்வேறு ஆராய்ச்சிகள் பல மௌன நிலைகளைச் சுட்டிக் காட்டுகின்றன.

 

ஒரு விவாதத்தில் எதிராளியைக் கிறுக்குப் பிடிக்கும் நிலைக்குத் தள்ள வேண்டுமெனில் ஒரு சுலபமான வழி இருக்கிறது. சொல்லால் அவர் தாக்கும் போது எதிரிலிருப்பவர் ஒவ்வொரு முறையும் நான்கு விநாடிகள் பதிலளிக்கக் கூடாது. ஹாலந்தில் நடந்த ஒரு ஆய்வின் படி ஒரு மனித மூளை நான்கு விநாடிகள் ஒருவர் மௌனமாக இருந்தால் அவரது கூற்றை நிராகரிப்பதாகப் பதிவு செய்து  கொள்கிறது. எரிச்சல் கொப்பளிக்கும் எதிராளிக்கு.

 

பிரபல சிந்தனையாளரான தோரோ, “நான் இரவின் மௌனத்தைக் ‘கேட்க விரும்புகிறேன். ஏனெனில் அந்த மௌனம் பாஸிடிவ் ஆனது. கேட்க வேண்டிய ஒன்று என்கிறார்.

 

பகவான் ரமண மஹரிஷி மௌனமாக சும்மாவே இருக்கிறாரே என்று சிலர் கூறிய போது, “நான் மௌன நிலையில் சும்மா இருக்கிறேன் என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்? என்று கூறி நிறுத்தி விட்டார். மௌன நிலையில் இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி ஏராளமான அரும் செயல்களைச் செய்ய முடியும். இதை அரவிந்தரும் வலியுறுத்தியுள்ளார்.

 ramana-2

ரமண மஹரிஷியின் முன் ஏராளமான கேள்விகளைக் கேட்பதற்காக வந்த பிரபல ஆங்கில எழுத்தாளர் சாமர்செட் மாம் அவர் முன் அமர்ந்த போது கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் எழ, அதற்குப் பதிலும் தானாகவே வந்தது. நெடு நேரம் அமர்ந்திருந்த அவ்ரால் ஒரு கேள்வியையும் கேட்க முடியவில்லை. பதில் தான் உடனுக்குடன் வருகிறதே

 

ஆக மௌன நிலையில் பல ஆழ்நிலைகள் உண்டு.பால் குட்மேன் எழுதியநைன் கைண்ட்ஸ் ஆஃப் சைலன்ஸ் (Nine kinds of  silence) என்ற நூலில், அவர், ‘செழிப்பான மௌனம் ஆன்மாவிற்கான சிறந்த மேய்ச்சல் நிலம் என்கிறார்.

 

மௌனத்தை நாம் ‘கேட்டால் அது நமது அனுபவங்களை ஆழமாக்கும் என்கிறார் கவிஞர் பில்லி காலின்ஸ். அவர் எழுதிய கவிதை நூலின் பெயர் ‘தி ஹண்ட்ரட் கைண்ட்ஸ் ஆஃப் சைலன்ஸ் (The hundred kinds of Silence : Billy Collins).  தனது தாயின் கல்லறைக்குச் சென்று இறந்த தனது தாயுடன் பேசி தான் புதிதாக அணிந்திருக்கும் கண்ணாடி எப்படி இருக்கிறது என்பது பற்றி அவரிடம் கேட்க முடிகிறது என்கிறார் அவர், தனது கவிதை வாயிலாக!

 

ஆக மௌனங்கள் நூறு வகை! ஒவ்வொன்றும் ஒரு வகை!

எல்லையற்ற முடிவிலா மோனம் உரைக்க ஒண்ணா அற்புதம். அறிவியலும் ஆன்மீகமும் உளவியலும் ஒன்று சேரும் இடம் மௌனமே!

 

******

 

 

 

மனம் மட்டுமே’ என்னும் தத்துவம்! (Post No. 3223)

buddha-1

Written by S. NAGARAJAN

Date: 6 October 2016

Time uploaded in London: 18-30

Post No.3223

Pictures are taken from various sources; thanks

 

 

.நாகராஜன்

 

 

 

புத்த போதனை

‘மனம் மட்டுமே என்னும் தத்துவம்!

 

ச.நாகராஜன்

 

மனித வாழ்க்கையில் மனம் என்னும் மர்மம் முக்கிய பங்கை வகிக்கிறது.

கண் முன்னால் நண்பர் ஒருவர் வந்து நிற்கிறார். மனம் எதையோ பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறது. அவர் தன் கைகளை கண்களின் முன்னால் ஆட்டி என்ன, என்னைத் தெரியவில்லையா என்று சத்தம் போடுகிறார். திடீரென கண் “பார்வையை அடைந்து, அட, நீயா, எப்ப வந்தே” என்று கேட்கிறோம். அவரோ, நான் வந்து ஐந்து நிமிடம் ஆயிற்று. என்கிறார்,

 

 

நல்ல பார்வையுள்ள கண்கள் தான், ஆனால் மனம் அத்துடன் சேராததால் ‘பார்க்கவில்லை’.

 

. மனம் சேர்ந்தவுடன் பார்வை வந்து விடுகிறது.

இனிய சங்கீதம் ஒலிக்கிறது. ஆனால் மனம் அதில் லயிக்கவில்லை. ஒரே கரகோஷம். திடுக்கிட்டு “விழித்த” நாம் பக்கத்திலிருந்தவரை, “என்ன, பாட்டு பாடினார்?” என்கிறோம். அடுத்தவர் நம்மை முறைக்கிறார். சங்கீத ரஸனை இல்லாத இந்த பைத்தியத்திற்குப் பக்கத்தில் நான் வந்து சேர்ந்தேனே, கிரகசாரம் என்று அவர் நொந்து கொள்கிறார். மனம் செவிப் புலனுடன் சேரவில்லை. சங்கீதம் கேட்கவில்லை.

 

சாப்பாடு பரிமாறப்படுகிறது. சாப்பிட்டு முடிந்து விட்டோம். “என்னடா, சாப்பிட்டே, அதாவது தெரியுமா?” தாயின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறோம். மனம் சாப்பாட்டில் லயிக்காத போது சுவை தெரியவில்லை, சாப்பிட்டது என்ன என்பது புரியவில்லை.

 

இதோ போல ஒவ்வொரு புலனின் செயலையும் கவனித்துப் பார்த்தால் மனமே சுவையைத் தருகிறது; பார்வையைத் தருகிறது; செவிப் புலனைக் கேட்க வைக்கிறது என்பதை அறிய முடிகிறது.

 

மஹாயான புத்த மதத்தில் மனம் மட்டுமே – மைண்ட் ஒன்லி –MIND ONLY –  என்று ஒரு தத்துவம் உண்டு

இப்போது பாகிஸ்தானில் உள்ள இடத்தில் – வடமேற்கு இந்தியாவில் பிறந்த சகோதரர்களான ஆஸங்கா மற்றும் வசுபந்து இந்தத் தத்துவத்தைப் பிரபலப் படுத்தியவர்கள்.

அவர்களின் தர்க்கம் எளிதானது.

 

 

எந்த ஒரு பொருளும் மனதாலேயே உருவாக்கப்படுகிறது பார்க்கின்ற அனைத்துமே மனதின் ப்ரொஜக் ஷன் தான்!

எந்த ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளுங்கள், அது பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்து மாறுபடுகிறது.

உதாரணமாக பாலை எடுத்துக் கொள்வோம், அது மனிதருக்கு அருமையான உணவாகத் தோன்றுகிறது. அதுவே தேவர்களுக்கு அமிர்தமாக் ஆகிறது. நரகத்திலிருப்பவருக்கோ அது கொதிக்கும் இரும்பாக இருக்கிறது. சாந்தி அடையாத ஆவிகளுக்கோ அது சீழ் அல்லது இரத்தமாக ஆகிறது.ஒரே பொருள், பல நிலைகளில் உள்ளவர்களின் மனதிற்குப் பலவிதமாக அது காட்சி தருகிறது.

ஒரு அழகிய பெண்ணை வாலிபன் ஒருவன் இன்பம் தரும் போகப் பொருளாகப் பார்க்கிறான். ஆனால் ஓநாய் ஒன்றுக்கோ அது மாமிசக் குவியலாக ஆகிறது.

 

 

 

அடுத்ததாக கனவு நிலையை எடுத்துக் கொள்வோம். புதிய உலகம் ஒன்றைக் காண்கிறோம். தெரிந்தவர், தெரியாதவருடன் புதுப் புது அனுபவங்கள். ஏற்படுகின்றன. புலன்களின் செயலின்மையை நமது கனவு நிலை காட்டுகிறது.

 

 

மூன்றாவதாக எந்த ஒரு பொருளுக்கும் தனியான ஒரு ‘இருக்கை’ – எக்ஸிஸ்டென்ஸ் – இல்லை. ஏனெனில் எந்த ஒரு பொருளும் முடிவற்ற அணுக்களால் ஆனவையே. அணுக்களின் சேர்க்கையே ஒரு மேஜையாக நாற்காலியாக ஆகிறது. ஒவ்வொரு அணுவும் ஆறு பாகங்களைக் கொண்டிருக்கிறது. மேல், கீழ், வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என இப்படி ஆறு பாகங்களைக் கொண்டு ஒன்றுடன் ஒன்று உரிய விதத்தில் இணைந்து ஒரு “பொருளாக” ஆகிறது.

 

இப்படி வாதங்களை முன் வைக்கிறார் வசுபந்து.

இதற்கு எதிரான வாதங்களைக் கூட ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து அலசி ஆராய்ந்து அவற்றிற்குத் தக்க மறுமொழி அளிக்கிறார்.

 

இதனால் கவரப்பட்டவர்கள் மனம் மட்டுமே தத்துவத்தைப் பெரிதும் விரும்புகின்றனர்.

ஆரம்பத்தில் சற்று சிரித்து ஒதுக்கப்பட்ட மனம் மட்டுமே தத்துவம் இப்போது அறிவியல் வளர்ந்திருக்கும் நிலையில் ஒரு புதிய அந்த்ஸ்தைப் பெறுகிறது.

இந்த தத்துவத்தின் அனைத்து நிலைப்பாடுகளையும் விஞ்ஞானம் ஆமோதிக்கிறது.

 

 

ஜான் லாக்கின் (John Locke) கொள்கை இந்த மனம் மட்டுமே தத்துவத்தைப் போலவே உள்ளது. நவீன அறிவியலில் அணுக்களைப் பற்றிய இப்போதைய கண்டுபிடிப்புகளும், கனவு பற்றிய ஆய்வுகளும் மனம் மட்டுமே கொள்கையை ஆச்சரியத்துடன் பார்த்து அதற்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.

நமது உபநிடதங்களில் அம்ருதபிந்தூபநிஷத் என்று ஒன்று உண்டு.

buddha-india

அதன் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது:

“மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ”:

இதன் பொருள் : மனம் மட்டுமே மனிதர்களின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம்”

 

இந்த உபநிடதம் மனதை அடக்க வேண்டிய வழியைக் கூறி பாலில் நெய் மறைந்திருப்பது போல ஒவ்வொரு உயிரிலும் விக்ஞானம் உறைகிறது. மனமெனும் மத்தினால் அதை இடைவிடாது கடைந்தெடுக்க வேண்டும் என்கிறது.

மனம் என்னும் மாயத்தை ஹிந்து  மதமும் புத்த மதமும் ஆராய்ந்து உரைக்கும் உண்மைகள் நவீன அறிவியலால் உரசப்பட்டு உண்மை என்று கூறப்படும் போது நமது மனம் ஆனந்தம் அடைகிறது, இல்லையா!

*******

பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு தொல்காப்பியமே காரணம்? (Post No.3210)

balinese_rite_of_suttee_in_houtman_1597_-1

Written by London Swaminathan

 

Date: 2 October 2016

 

Time uploaded in London: 7-07AM

 

Post No.3210

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

 

sati-3

புறநானூற்றில் ஒரு அழகான பாடல் வருகிறது; இது பாண்டிய மன்னன் இறந்தவுடன் அவனது மனைவி பூதப்பாண்டியன் தேவி, கணவனுடைய சிதைத்தீயில் பாய்ந்து உயிர்விட்ட சம்பவம் பற்றிய பாடலாகும். பார்ப்பனர்கள், அமைச்சர்கள் அனைவரும் தடுத்தும் “போங்கடா, போங்க! போக்கத்த பயல்களே” என்று சொல்லி அவள் தீயில் பாய்ந்தாள்.

புறநானூறு பாடல் 246:–
பல் சான்றீரே! பல் சான்றீரே!
செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!


–பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது

பொருள்: ‘’கணவனுடன் நீயும் போ என்று சொல்லாமல் பொல்லாத செயல் புரியும் பெரியோர்களே! கணவன் இல்லாத பெண்கள் வெள்ளரிக்காய் விதை போல, நெய் இல்லாத சோறு, எள்ளுத் துவையல், புளி கூட்டி சமைத்த வேள இலை ஆகியவற்றை உண்ண வேண்டும். பாய் இல்லாமல் வெறும் கல் தரையில் படுக்க வேண்டும். அது போன்ற பெண் என்று என்னை நினைத்து விட்டீர்களா? நான் அப்படிப்பட்டவள் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் மரணப் படுக்கை கஷ்டமாக இருக்கலாம். என் கணவன் இறந்துவிட்டான். அந்த சிதைத் தீயே எனக்கு தாமரைக்குளம் போல குளிர்ச்சிதரும். இதைப் புரிந்துகொள்ளுங்கள்.’’

ஒரு மஹாராணி பாடிய பாடல் இது. கணவனின் சிதைத் தீ, தாமரைக் குளம் போல குளிர்ச்சி பொருந்தியது என்று பாடுகிறாள். அப்பர் பெருமானை மஹேந்திர பல்லவன் சுண்ணாம்புக் காளவாயில் போட்ட போது அவர் ‘’மாசில் வீணையும்’’ பாடல் பாடியது நினைவுக்கு வருகிறது!

 

இதற்குத் தொல்காப்பிய சூத்திரமே காரணம் என்று தோன்றுகிறது. தொல்காப்பியர் என்பவர் த்ருண தூமாக்கினி என்ற பெயர் கொண்ட பார்ப்பான் என்று மதுரை பரத்வாஜ கோத்திரப் பார்ப்பான் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் கூறுவார். தொல்காப்பியர் சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கததை தமிழ் வழக்கமாக காட்டியுள்ளார்.

Sati : wife mounting funeral pyre of husband

 

காதலி இழந்த தபுதார நிலையும்

காதலன் இழந்த தாபத நிலையும்

நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்

சொல்லிடைஇட்ட பாலை நிலையும்

 தொல்காப்பியம், சூத்திரம் –1025

 

 

பூதப் பாண்டியன் பெருந்தேவி போலவே போல, ஆய் அண்டிரன் மனைவியரும் தீப்பாய்ந்தனர்.

இந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை “சதி” (sati) என்பர்.

((Reference:-சங்கத் தமிழ் நூல்களில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்)–கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்–கட்டுரை எண்:–1108; தேதி 15 ஜூன் 2014.))

 

கர்நாடகத்தில் இப்படி உடன்கட்டை ஏறிய கற்புக்கரசிகளின் கைச் சின்னங்கள் இன்னும் இருக்கின்றன.

sati3

பாண்டியன் நெடுஞ்செழியன், கோவலனைக் கொன்றது தப்பு என்று தெரிந்தவுடன், மாரடைப்பால் – Heart Attack ஹார்ட் அட்டாக்கால் — இறந்தார். உடனே அவன் அருகில் இருந்த அவன் மனைவியும் ஹார்ட் அட்டாக்கால் இறந்தாள் என்பதை சிலப்பதிகாரம் மூலம் அறிவோம்.

 

உலகப் பேரழகி சித்தூர் ராணி பத்மினி மீது எப்படியாவது கை வைக்க வேண்டும் என்று படை எடுத்துவந்த அலாவுதீன் கில்ஜியின் கண்,,,,,,,,ல் மண்ணைத்தூவி விட்டு சித்தூர் ராணி பத்மினி, தனது நூற்றுக் கணக்கான ழியருடன் தீப்பாய்ந்து வரலாறு படைத்தாள் ரஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள். தன் மானத்துக்கும் கற்புக்கும் மதிப்பு கொடுத்த கற்புக்கரசிகள்!

 

ஆனால் உடன் கட்டை ஏறுவது COMPULSORY கம்பல்ஸரி/ கட்டாயம் அல்ல. தசரதன் இறந்தவுடன் அவன் மனைவியர் நால்வரும் உயிருடன் இருந்ததை வால்மீகி ராமாயணம் மூலம் அறிவோம். அதே போல பாண்,,,,, மஹாராஜன் இறந்தும் குந்தி உயிர் வாழ்ந்ததை மஹா பாரதம் மூலம் அறிவோம்.

 

 

மதத்தைப் பரப்ப வந்தவர்களும், நாடுபிடிக்க வந்தவர்களும் அந்தக் காலத்தில் எழுதிய புத்தகத்தில், —- எல்லா இந்தியப் பெண்களையும் கணவன் சிதைத்தீயில் தள்ளுவது போலப் படம் போட்டு — புத்தகங்களை எழுதினர்! ஆனால் அவர்கள் பிரசாரம் எல்லாம் விழலுக்கு இரை த்த நீர் போல ஆகிவிட்டது.

வேதங்களில் வரும் இந்திரனையும் வருணனையும் தமிழர்கள் தெய்வங்களாகத் தொல்காப்பியர் குறித்ததும், பலராமனின் பனைக்கொடியைப் பற்றி அவர் சூத்திரம் சொல்லுவதும், மனு தர்ம சாத்திரத்திலுள்ள எட்டு வகைத் திருமணத்தை தொல்காப்பியம் விதந்துதுரைப்பதும், கார்த்திகைத் திருவிழாவை அவர் குறிப்பால் உணர்த்துவதும், பாரதம் ஒன்றே என்ற கொளகையுடையோருக்கு வியப்பளிக்காது. ஆனால் அவர் “சதி” என்னுமுடன்கட்டை ஏறும் வழக்கத்தையும் (இறந்த கணவனுடன் சிதைத்தீயில் எரிவதும்) தமிழர் வழக்கமாகக் கூறுவது பலருக்கும் தெரியாது.

 

திராவிட “அறிஞர்கள்”, இது பற்றி மவுனம் சாதிப்பதும் ஒருவர் இதை ‘இடைச் செருகல்’ என்பதும் மற்றொருவர் 30, 40 பக்கம் எழுதி சப்பைக் கட்டு கட்டுவதும் தொல்காப்பியத்தை நன்கு படித்தவர்கள் அறிந்ததே. சிலர் இது “ஆரிய வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுந்தது” என்பதைக் காட்டுவதாகச் சொல்லுவதும் “கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை பார்” என்ற பழமொழியை நினைவுபடுத்தும்.

 

இன்னும் பலர் உலகப் புகழ் பெற்ற, தமிழில் அதிகமாக உரைகளை எழுதிக் குவித்த மதுரை நகர பாரத்துவாஜ கோத்ரப் பார்ப்பனன் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியன் எழுதிய உரை எல்லாம் சரிதான், ஆனால் அவர் தொல்காப்பியனை “த்ருணதூமாக்கினி” என்னும் ரிஷி என்று சொல்லுவது மட்டும் ‘பொய்’ என்று பிதற்றுவதெல்லாம் நல்ல நகைச்சுவையாக அமையும். நிற்க.

sati2

சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம், சுயம்வரம் என்னும் கணவனைத் தேடும் பெண்களின் சுதந்திரம், அஸ்வமேத யக்ஞம, ராஜ சூய யக்ஞம் மற்றும் பார்ப்பனர் அன்றாடம் செய்யும் சந்தியாவந்தனம், தென்பக்கத்தில் யமன் உள்ளான் என்ற நம்பிக்கை இவை எல்லாம் இமயம் முதல் குமரி வரை உளதே! ஏனடா இவை எல்லாம் ஆரியரின் சொந்த பூமி என்று நீங்கள் கூறும் மத்திய ஆசியாவிலோ, ஐரோப்பாவிலோ இல்லை என்று வெள்ளைத் தோல் “அறிஞ ர்களை” கேள்வி கேட்டால் முழி பிதுங்க பேதைகளாக நிற்பர். உண்மையில் இந்துக்கள் உலகம்     எங்கும் சென்று நாகரீகத்தை நிலை நாட்டியது ரிக் வேதத்திலேயே உளது “ச்ருன்வந்தோ விஸ்வம் ஆர்யம்= உலகம் முழுதும் சென்று பண்பாட்டைப் பரப்புக” என்ற வாக்கியம் வேதத்தில் உள்ளது. உலக மக்கள் அனனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்— மாதா பூமி, புத்ரோஹம்— (பூமி நமது அன்னை, நாம் அதன் புதல்வர்; யாதும் ஊரே யாவரும் கேளிர்) என்பது அதர்வண வேதத்தில் உள்ளது.

 

ஆக உலகம் முழுதும் நாம் மொழிகளையும் கலாசாரத்தையும் பரப்பினோம் என்பதை ஒப்புக்கொண்டால் ஏன் சில வழக்கங்களை மட்டும் அவர்கள் எடுத்துக் கொண்டனர், ஏன் தமிழ்ச் சொற்களும் சம்ஸ்கிருதச் சொற்களும் உலக மொழிகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன என்பது விளங்கும்.

 

வாழ்க தமிழ் மொழி! வளர்க தொல்காப்பியன் புகழ்!!

 

இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 1 (Post No. 3201)

bengali-3

Research article written by London Swaminathan

 

Date: 29 September 2016

 

Time uploaded in London: 17-40

 

Post No.3201

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

வேதத்தில் சிகை அலங்காரம்!

 

வேத காலத்தில் முடி,  தலை மயிர், சிகை அலங்காரம் பற்றி ஏராளமான இடங்களில் பல வகையான வேறுபட்ட சொற்கள் பயிலப்படுவதால் அவர்கள் நகர நாகரீகத்தின் உச்ச நிலையை அடைந்தது தெளிவாகிறது; பல அரைவேக்காடு திராவிடங்களும் மார்காசீயங்களும்,அசட்டுப் பிச்சுகளும் தத்துப் பித்து என்று உளறி அவர்களை “நாடோடி” என்று எழுதியுள்ளன!! நீரளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு.

 

இதோ வேதங்களில் உள்ள சிகை அலங்காரச் சொற்கள்

 

ஓபாச:–

ரிக் வேதம், அதர்வண வேதத்தில் பயிலப்படும் இச் சொல்லுக்கு பொருள் விளங்கவில்லை; ஒருவேளை பின்னல் என்று பொருள்படலாம்; சீனீவாலீ என்னும் பெண் தெய்வத்துக்கு ‘ஸ்வௌபாச’ என்ற சொல் இருக்கிறது; இது வேதகாலத்தில் பயன்படுத்தப்பட்ட பொய் முடி, சௌரி என்று ஒரு வெளிநாட்டுக்காரர் எழுதியுள்ளார். இதை இந்திரனுக்குப் பயன்படுத்துகையில் கிரீடம் என்று பொருள் கொள்ளுவர்.

 

எனது கருத்து:

இது கொண்டை, ஆண்டாள் கொண்டை போல சிகை அலங்காரமாக இருக்கலாம். தமிழில் முடி என்றால் மயிர் என்றும் கிரீடம் என்றும் பொருள்படுவது போல; இந்திரனுக்குச் சொல்லும்போது கிரீடம்; சீனீவாலீ என்னும் தேவதைக்குச் சொல்லும் போது முடி/கொண்டை

 

கபர்தா (ரிக் வேதம் 10-114-3)

 

கபர்தா என்பது சடை, பின்னல் என்று பொருள்படும். வேதத்தில் பெண் ‘நான்கு சடை’யுடன் (சதுஸ் கபர்தா) இருப்பதாகவும் சினீவாலி (சு கபர்தா) என்ற கடவுள் நல்ல (அழகிய) சடையுடன் இருப்பதாகவும் வருகிறது. ஆண் கடவுளரில் ருத்ரனும் பூசனும் கபர்தீன் என வருணிக்கப்படுகின்றனர்.

 

வசிஷ்டர்கள், வலது பக்க குடுமியுடனும் மற்றவர்கள் (புலஸ்தி) நேரான சடையுடனும் இருந்ததாகக் குறிப்பு உளது.

 

எனது கருத்து

சினீவாலீ என்ற தேவதைக்கு பல முடி அலங்காரங்கள் கூறப்படுவதால் வேத கால நாகரீகம் நகர நாகரீகம் என்பது உறுதியாகிற து. நாடோடி மக்கள் இப்படிப் பல சில சிகை அலங்காரங்கள் செய்வதுமில்லை. அதை வேதம் போலக் கவிதை வடிவில் பாடுவதும் இல்லை. பாடியதைப் பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாத்ததும் இல்லை. ஆக வேத கால மக்களை நாடோடிகள் என்று சொன்னவரின் அறிவை எண்ணி எண்ணி சிரிக்கலாம். நல்ல நகைச் சுவை!

 

இதில் இன்னும் சுவையான செய்திகளும் வருகின்றன. சங்கத் தமிழ் இலக்கியங்களில் தமிழ்ப் பெண்கள் ‘ஐம்பால் கூந்தல்’ அணிந்ததாக வருகிறது. இதற்கு ஐந்து வகையான கொண்டைகள் என்று விளக்கமும் உண்டு. ஆனால் இராக்கிய மலைகளில் வாழும் பழங்கால இந்து மக்களான யாசிதிகள் (Yazidis of Iraq) பற்றி நான் ஏற்கனவே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன் அவர்கள் அக்னியையும் மயிலையும் வழிபடுவர். வேதத்தில் கூறப்பட்டுள்ளது போல நாற்பால் கூந்தலையும் தமிழ்ல் கூறப்பட்டுள்ளது போல ஐம்பால் கூந்தலையும் அணிவர்.

yazidis

Yazidis of Iraq ( Vedic and Tamil Hair Style)

சிதம்பரம் தீட்சிதர்கள், கேரள நம்பூதிரிப் பிராமணர்கள், முன் குடுமிச் சோழியர்கள் ஆகியோர் குடுமி அணியும் வழக்கத்தை இத்தோடு ஒப்பிடுகையில் பொருள் இன்னும் நன்றாக விளங்கும். வேதத்தில் கூறப்படும் ‘பாணி’ (Style) இன்று வரை நாட்டின், குறிப்பாக தென்னாட்டின்,  பல பகுதிகளில் இருப்பது சிறப்புடைத்து.

 

குரீர

ரிக் வேதத்திலுள்ள திருமண மந்திரங்களில் (10-85-8) இச் சொல் மணமகளின் சிகை அலங்கார அணிகலணாகப் பேசப்படுகிறது அதர்வ வேதத்திலும் (6-138-3) அதே பொருள்.

 

யஜூர் வேதத்தில் சினீவாலீ என்னும் தேவதைக்கு அடைமொழியாக வருகையில் அவள் சு-கபர்தா, சு-குரீர, ஸ்- ஓபாச என்று போற்றப்படுகிறதால் நல்ல அழகிய அணி அணிந்தவளே என்பது பொருள்.

 

கெல்ட்னர் என்பார் இதை கொம்பு என்று மொழி பெயர்ப்பார்.

 

என் கருத்து

திருமணத்தில் மணப் பெண்கள் கிரீடம் போல , மகுடம் போல தலையில் அணிகளை அணியும் வழக்கம் இன்றும் வட நாட்டில் உண்டு. இப்படிப்பட்ட உயரிய நாகரீகம், வேத காலத்தில் இருந்ததை இரண்டு பழைய வேதங்களில் இருந்து அறிய முடிகிறது. இதை அறியாத மண்டுகள், வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று சொல்லி இன்று ‘ஜோக்கர்’கள் என்று நம்மிடையே பட்டம் பெறுகின்றனர்.

 

எல்லா கலாசாரங்களிலும் — ஆதிவாசிகளும் கூட –தலையில் ஏதேனும் அணிந்திருப்பது உண்மையே. ஆனால் பல்வேறு விதமான அணிகளை, ஆபரணங்களை சினீவாலீ அணிவதாகப் பாடுவதும் அதை பல்லாயிரம் வருடம் போற்றி இன்றும் துதி பாடுவதும் உலகின் உன்னத நாகரீகம் வேத கால நாகரீகம் என்பதை வெள்ளிடை மலையென விளக்கும். மார்க்சீய அரை வேக்காடுகளும் திராவிட அரை வேக்காடுகளும் இனிமேலாவது அறிவு பெறுவார்களாக.

 

கும்ப

அதர்வ வேதத்தில் குரீர, ஒபாசவுடன் , கும்ப என்பதும் பெண்களின் தலையில் வைக்கப்படும் ஆபரணமாக சொல்லப்படுகிறது.கெல்ட்னர் இவைகளைக் கொம்பு என்று மொழி பெயர்த்தாலும் கீத், மக்டொனெல் (Keith and Macdonell)  ஆகிய இருவரும் ஏற்கவில்லை. இந்திய பாரம்பர்யமானது இவைககளை ஆபரணங்களாகவே கருதுகின்றன.

 

bengali-wedding-dress-4

அமரகோசத்தில்

உலகின் முதல் நிகண்டான அமரகோசத்தில் முடி, சிகை அலங்காரம் பற்றிய ஸ்லோகங்கள்/பாடல்கள்:-

 

1.சிகுர: குந்தலோ வால: கச: கேச:  சிரோருஹ:

தத் வ்ருந்தே கைசிகம் கைஸ்யம் அலகாஸ்சூர்ண குந்தலா:

 

சிகுரஹ– முடித்துவைக்கப்படுவது முடி

குந்தலHஅ- நீண்டு இருப்பதால் கூந்தல்

சிரோருஹ:-சிரஸில்/தலையில் முளைப்பதால்

கேஸஹ- தலைக்கு க என்று பெயர்; க-வில் முளைப்பதால் அது கேசம்

வாலஹ – பூக்களால்அ லங்கரிக்கபடுவதால் வால:

கைசிகம், கைஸ்யம் — கேசங்களின் கூட்டம் (கட்டோடு குழல் )

அலம் – அலங்கரிக்கப்படுவது

வாரி – வாரப்படுவதால் (Eg. தலையை வாறு)

கசஹ- கட்டப்படுவதால் (உ.தாரணம்: கச்சை)

கைசிகம், கைஸ்யம்- கேசங்களின் கூட்டம் (கட்டுக் குடுமி)

 

2.தே லலாடே ப்ரமரகா: காகபக்ஷ: சிகண்டக:

கபரீ கேசவேசோ அத தம்மில்ல: சம்யதா: கசா:

ப்ரமரகாஹா- நெற்றியில் (லலாடத்தில்) விழும் வண்டுகள்; பெண்களின் முடி நெற்றியில் விழுவது வண்டுகள் மொய்ப்பது போல உள்ளதால்;

காக பக்ஷ:- காக்கை சிறகு அடித்துப் பறப்பது போல இருப்பதால்; வால்மீகி ராமாயணத்தில் ராம லெட்சுமனர்களின் முடி இப்படி இருந்ததாக வால்மீகி வருணிக்கிறார்.

 

சிகண்டஹ- வகிடு எடுத்து வாருவதால்;

கபரி- தலையில் வாருவதால் இப்பெயர்;

கேசவேசோ – கட்டிவைக்கப்பட்ட முடி;

தம்மிலாஹா – நடுத் தலையில் கொண்டை; புத்தர் தலையில்; சீக்கியச் சிறுவர்கள் தலையில் இவ்வாறு முடியை நடுவில் குவிப்பர்.

 

3.சிகா சூடா கேசபாசீ வ்ரதிநஸ்து ஜடா சடா

வேணிப்ரவேணீ சீர்ஷன்யசிரஸ்யௌ விசதே கசே

 

சிகா- தலை முழுவதும் ‘பரவி’ இருப்பதால்;

சூடா – காற்றில் அசைவதால்; சூடப்படுவதால் (சந்திர சூடன், பூச்ச் சூடி)

 

கேசபாசி- தலையைக் காப்பதால்

 

ஜடா- பின்னப் படுவதால் (ஜடாவர்மன் சுந்த்ர பாண்டியன், சடைய வர்மன்)

 

வேணி- அழுக்கில்லாமல் பிரகாசிப்பதால்

ப்ரவேணீ – மேற்கூறிய பொருளே; இதுவுமது.

 

சீர்ஷன்ய: – தலையிலுள்ளது

 

To be continued…………………………………………….

 

–Subham–