Date: 26 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 21-21
Post No. 7143
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Translate this page15 Nov 2015 – DIWALI AT NO.10 DOWNING STREET, LONDON (Post 2332) … Hindu festival Diwali in his house for the sixth year on 10th November 2015.
From CanadaFrom United NationsFrom U S A From Sri Lanka From MalaysiaFrom IndiaFrom SingaporeFrom SingaporeFrom GuyanaFrom AustraliaFrom FijiHAPPY DEEPA AVALI- subham
Pictures are taken from various
sources; beware of copyright rules; don’t use them without permission; this is
a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and
tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs
12,000.
இதுவரை 8 அத்தியாயங்களை முடித்து 9-ம் அத்தியாயத்தில் 120 ஸ்லோகம் வரை கண்டோம். மநு நீதி நூல் –44 ம் பகுதியில் மேலும் சில முக்கிய விஷயங்களை முதலில் புல்லட் (BULLET POINTS) பாயிண்டுகளில் தருகிறேன். பகுதி-4-10-2019ல் தேதி இந்த பிளாக்கில் பதிவிடப்பட்டது
இந்தப் பகுதியில்
சொல்லப்படும் விஷயங்கள் இப்போது பயனற்றவை. ஆராய்ச்சியளருக்கு மட்டும்
பயன்படக்கூடிய விஷயங்கள்தான். மநு சொல்லக்கூடிய 12 வகை புத்திரர்கள் பற்றிய
விதிகள் பின்பற்றப்பட்டனவா என்பதே சந்தேகம். ஏதோ ஒரு காலத்தில் இவை
எழுதப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் சில சுவையான
செய்திகளும் உள.
பிள்ளைக்கு
ஏன் `புத்`ரன் என்று பெயர்? ஏன் என்றால் அவன் `புத்` என்னும் நரகத்திலிருந்து
அவனது தந்தையை விடுவிக்கிறான். இதனால்தான் ஆண் குழந்தைகளுக்கு மதிப்பு அதிகம்- 9-138
ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் சம
அளவில் இருப்பது உலகில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீதியை நிலைநாட்ட உதவும். ஆனால்
கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்; பெண்கள் அளவுக்கு அதிகம் உள்ள சமுதாயத்தில் என்ன நிகழும்? ஒருவனுக்கு பல
பெண்கள் என்ற அவல நிலை ஏற்படும். பின்னர் திரைப்படங்களில் காணப்படும் நீலாம்பரிகள்
அதிகரிக்கும். கொலை, சதி முதலியன அதிகரிக்கும்.
மேலும் பழைய காலத்தில் ஆண் மட்டுமே
சம்பாதித்து பெரிய குடும்பங்களைப் பராமரித்தான். உலகம் முழுதும் முக்கியத்தொழில்
வேளாண்மையும் போர் புரிதலுமே. ஆகையால் நாட்டைக் காக்க வீர மகன்கள் தேவைப் பட்டது; வீரமாதா என்ற
கொள்கையினை வேதத்திலும் புறநானூற்றிலும் காண்கிறோம் ஆகையால் அப்போது ஆண்களே
விரும்பப்பட்டனர்.
போரில் சண்டையிட்டு இறந்தால்
சொர்க்கத்துக்கு நேரடி டிக்கெட் கிடைக்கும் என்று புறநானூறும், பகவத் கீதையும், குரானும் சொல்கிறது.
எந்த ஒரு நூலையும் மதிப்பிடுவதற்கு
முன்னர் அது எப்பொழுது எழுதப்பட்டது? அதை அப்படியே
பின்பற்றியதற்கு ஆதாரம் உளதா? மேலும் அதே காலத்தில் வேறு சமுதாயங்கள்
எப்படி இருந்தன? என்பதையெல்லாம் சீர் தூக்கிப் பார்க்க
வேண்டும்.
சந்திரனுக்கு ஏன் 27 மனைவிகள்?
மநு வேறு ஒரு சுவையான செய்தியையும்
சொல்கிறார் (9-128)
இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் யார்
மூத்தவன்? ஏனெனில் மநுவின் வாதப்படி மூத்தவனுக்கே
அதிகம் சொத்துரிமை; ஏனெனில் அவன் தான் நீர்க்கடன் செலுத்தி
முன்னோர்களை நரகத்திலிருந்து விடுவிக்கிறான். இரட்டைக் குழந்தைகளில் யார்
இரண்டாவதாக தாயின் ஜனன உறுப்பிலிருந்து வெளி வருகிறதோ அந்தப்பிள்ளையே மூத்தவன். ஏனெனில் அதுதான்
முதலில் உருவான கரு. இவை யெல்லாம் உரைகாரர்களின்
வியாக்கியானம் (9-126)
9-126 ல் மநு சொல்லும் இந்திரன் துதி ஐதரேய
பிராஹ்மண (6-3) நூலில் வரும் சுப்ரஹ்மண்யா துதிகள் என்பதையும்
உரைகாரர்கள் சு ட்டிக்காட்டுவர்.
சரி, ஒருவருக்கு ஆண் குழந்தையே இல்லை;
அப்படியானால் அவருக்கு நரக வாசம்தானா? இல்லை.
அவருக்குப் பிறந்த பெண்களின் குழந்தைகள் நீர்க்கடன் செலுத்துவர் ( இறந்து
போன மூதாதையருக்கு).
பாருங்கள்; அந்தக்
காலத்தில் தட்சனுக்குப் பிறந்த 50 பெண்களை எப்படி மணம் செய்வித்தான்
என்று (9-129).
ஒருவனுக்குப் பிறக்கும் மகன், தந்தையைப் போன்றவன்.மகளோ மகனுக்கு
சமமானவள்; அப்பாடியிருக்கையில் அவளுக்கு
சொத்துரிமையை எப்படி மறுக்க முடியும்? 9-130
தட்சனின் கதை மஹாபாரஹத்திலும் உள்ளதை (1-70;
12-329-57) உரைகாரர்கள் எடுத்துரைப்பர்.
பின்னர் 12
வகை உறவினர்களில் எந்த ஆறு பேர் நீர்க்கடன் செலுத்தலாம், எந்த
ஆறு பேர் செலுத்த முடியாது என்றும் (9-158 முதல்) விளக்குகிறார்.
இவையெல்லாம் ஒரு பெரிய கூட்டுக்
குடும்பத்தில் பாகப் பிரிவினை சண்டை வரும்போது பயன்பட்டிருக்கலாம்.
பிராமணனுக்கு 4 மனைவி
ஒரு பிராஹ்மணனுக்கு 4 மனைவி இருந்தால் என்ன நிகழும்? 9-149
கல்யாணமாகாத பெண் தகப்பன் வீட்டில்
ரகசியமாகக் குழந்தை பிறந்தால் என்ன நிகழும்? (9-172) என்றெல்லாம்
மநு விவாதிக்கிறார். அபூர்வமாக இப்படியெல்லாம் நிகழக்கூடும் என்பதை யோசித்து
எழுதிய மநு மஹா ‘ஜீனியஸ்’தான். எதையும் அவர் மறைக்கவும் இ ல்லை; மறக்கவும்
இல்லை.
ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பாரத நாட்டில் ஒழுக்கமிக்க சமுதாயமே இருந்தது. இதை 2000 ஆண்டுகளாக வந்த வெளிநாட்டு யாத்ர்ரீகர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த நாட்டில் எதுவும் பத்திரத்தில் எழுதுவதில்லை இல்லை. வாய்ச்சொல் போதும் (சத்தியம்) ; அவ்வளவு நேர்மையானவர்கள் என்றும் எழுதி வைத்துள்ளனர். மேலும் பல விஷயங்களை ஸ்லோகங்களில் காண்க .
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000.
நான் எழுதிய `பாட்டில்
படத்தின் விலை 21 லட்சம் டாலர்` என்ற
கட்டுரை தினமணியில் உலகப் பலகணி -யின் கீழ் 1992-ம்
ஆண்டு ஜூன் 14ம் தேதி வெளியானது. அத்துடன் , `ரஷியாவை
அதிரவைத்த கொலை வழக்குகள்’ இமயமலையில் புற்று நோய்க்கு மருந்து` என்ற கட்டுரைகளும் வெளியாகின. அவைகளை நேற்று வெளியிட்டேன். இன்று
பாட்டில் பட ஏலக் கதை:–
Do you want latest Auction Story? (25th October 2019, Metro Newspaper)
A MUSEUM is attempting to buy a rare matchbox-sized book handwritten by Charlotte Brontë.
The Jane Eyre author wrote The Young Men’s Magazine aged 14 in 1830. The tiny tome contains three stories, and is one of five similar surviving volumes.
The Brontë Parsonage Museum is now asking for help to raise funds as the book goes under the hammer in Paris next month, set to sell for at least £650,000.
Actress Dame Judi Dench, president of the Brontë Society, is supporting the bid to ‘bring it back where it belongs’.
She said: ‘I have long been fascinated by the little books. These tiny manuscripts are like a magical doorway into the imaginary worlds they inhabited.’
Date: 23 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 5-48 AM Post No. 7127
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ஜோத்பூர் மன்னன் யஷ்வந்த் சிம்ஹாவுக்கு ஒரு செய்தி
வந்தது.
பெண் ஒட்டகங்களை மேய்த்துப் பாதுகாக்கும் காவலன்
விவசாயி ஒருவரின் மகன் ஒரு பெண் ஒட்டகத்தைக் கொன்று விட்டான் என்று செய்தி அனுப்பி
இருந்தான்.
மன்னன் உடனே தன் படைவீரர்களுக்கு அந்த விவசாயியைப்
பிடித்து வருமாறு கட்டளையிட்டான்.
ஆசகரனா என்ற அந்த விவசாயி அவனது பையனுடன் அவைக்குக்
கொண்டு வரப்பட்டான்.
மன்னன் கோபத்துடன் அவனை நோக்கி, “உன் பையன் ஒட்டகத்தைக்
கொன்றது உண்மையா?” என்று கேட்டான்.
விவசாயி தன் பையனைச் சுட்டிக் காட்டி, “இதோ இருக்கிறான்
என் பையன். அவன் தான் ஒட்டகத்தைக் கொன்றான்” என்றான்.
மன்னன் அந்தப் பையனை நோக்கி, “ஒட்டகத்தை நீ தான்
கொன்றாயா?” என்று கேட்டான்.
“ஆம், மன்னவா! நான் தான் கொன்றேன். வயல்வெளியைப்
பாதுகாத்துக் கொண்டிருந்தேன். அந்த ஒட்டகம் எனது வயலை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அதை மேய்ப்பவனிடம் அதை வயலுக்குள் விடாதே! என் சோளமெல்லாம் பாழாய்ப் போகும் என்று வேண்டிக்
கொண்டேன். ஆனால் அவன் கேட்கவில்லை. ஒட்டகம் உள்ளே வந்து சோளக்கதிர்களை நாசம் செய்ய
ஆரம்பித்தது. ஆகவே என் வயலைப் பாதுகாக்க ஒட்டகத்தைக் கொல்ல நேர்ந்தது” என்றான் அந்தச்
சிறு பையன்.
மன்னனுக்கு அந்தச் சிறு பையனால் எப்படி ஒரு பெரிய
ஒட்டகத்தைக் கொல்ல முடியும் என்று சந்தேகம் ஏற்பட்டது.
“எப்படி அந்த ஒட்டகத்தைக் கொன்றாய்” என்று கேட்டான்
மன்னன்.
சுற்றும் முற்றும் பார்த்த பையன் தூரத்தில் இருந்த
ஒரு ஒட்டகத்தைக் கண்டான்.
அதை அருகில் இழுத்து வந்து தன் வாளால் அதன் கழுத்தை
ஒரே வெட்டாக வெட்டினான்.
“இப்படித்தான் வெட்டினேன்” என்றான் அந்தப் பையன்.
மன்னனுக்கு வியப்பு மேலிட்டது.
அவனைத் தன் படையில் உடனடியாகச் சேர்த்துக் கொண்டான்.
அந்தப் பையன்
தான் உலகமே வியக்கும் வண்ணம் பின்னால் மாபெரும் வீரன் என்று புகழ் பெற்ற துர்காதாஸ்!
Date: 21 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 13-19 Post No. 7121
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Date: 21 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 8-13 am Post No. 7119
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மாலைமலர் 19-10-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 3
ச.நாகராஜன்
சங்க காலம் முதல் கண்ணதாசன் வரை
தலைவன் தலைவியிடம் உன்னை விட்டு ஒருநாளும் பிரியமாட்டேன் என்று சொல்லும் ஒரு காட்சி.
அரக்கில் பதிந்த வைரத்தைப் போல உன்னை விட்டு ஒருநாளும் பிரிய மாட்டேன் என்கிறான் அவன்.
சங்க காலத்திற்கு முன்பிருந்தே இன்று பழனி என்று நாம் அழைக்கும் சங்க காலப் பொதினி நகரில் வைரத்தைப் பட்டை தீட்டும் தொழில் சிறப்பாக நடை பெற்று வந்தது. இங்கு பட்டை தீட்டும் நிபுணருக்கு காரோடன் என்று பெயர். ஒரு குச்சியின் முனையில் அரக்கை வைத்து, அந்த அரக்கின் நுனியில் வைரத்தை வைத்துப் பட்டை தீட்டுவது வழக்கம். ஆக
“சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரிந்திலம்” என்ற சங்க இலக்கியத்தின் வரி நமக்குக் காதலின் ஆழத்தை விளக்குகிறது.
‘அரக்குடன் ஒட்டிய பிரிக்க முடியாத வைரத்தைப் போல உன்னுடன் ஒட்டி பிரிய மாட்டேன்’ என்கிறான் காதலன், காதலியிடம்.
அகநானூற்றில் களிற்றியானையில் வரும் முதல் பாடலில் மலரும் காட்சி இது.
இன்னொரு காட்சியை சிறுபாணாற்றுப்படை சித்தரிக்கிறது. பாணன் பார்க்கும் காட்சி இது.
‘இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த’ என்ற வரி சங்க காலத்தில் வைரமானது அன்றாடத் தமிழரின் வாழ்க்கையில் எத்தகைய சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது என்பதைத் தெரிவிக்கிறது.
‘தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்’ – கவியரசு கண்ணதாசன் பாசமலருக்காக வரைந்த வைர வரி இது.
வளம் வாய்ந்த வைர நாடாக தமிழகம் விளங்கியதை இது போன்ற நூற்றுக் கணக்கான அழகிய பாடல்கள் சித்தரிக்கின்றன.
மஹாபாரதம், வால்மீகி ராமாயணம் போன்ற இதிஹாஸங்கள் வைரம் பற்றிய சுவையான தகவல்களைத் தருகின்றன.
வைரத்தின் ஒளிச் சிதறலால் இரவே இல்லையாம் அயோத்தியிலும் இலங்கையிலும்! வைரங்கள் பதிக்கப்பட்ட மதில்களும் மாளிகைகளும் ஒளி வீசுவதை எண்ணிப் பார்த்து பிரமிக்கிறோம். அனைவரும் அணிந்திருக்கும் வைரங்களின் ஒளியால் சூரிய ஒளி மங்கி விடுகிறதாம்!
இது போல இந்தியா முழுவதும் உள்ள இலக்கியங்கள் வைரத்தின் ஒரிஜினல் பூமியான இந்தியா பற்றி எத்தனை ஆயிரம் செய்திகளைத் தருகின்றன என்பதை எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்.
வைரத்தின் 12 குற்றங்கள்
வைரத்தின் குற்றங்களையும் குணங்களையும் தரும் தமிழ் நூல்களும் பல.
வைரத்தின் குற்றங்கள் 12.
சரைமலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை,கரி, விந்து, காகபாதம்,இருத்து, கோடியில்லன, கோடி முரிந்தன, தாரை மழுங்கல் ஆகிய பன்னிரெண்டும் குற்றங்கள். இவற்றில் மிக மோசமானவை 4.
காகபாதம் நாகம் கொல்லும். (காகபிந்து என்றால் கரும்புள்ளி என்று பொருள்)
விந்து பைத்தியம் பிடிக்க வைக்கும்.
மலம் பிரியாதது நிலந்தரு கிளை கெடும் (மலம், உறவினர் அனைவரையும் அழித்து விடும்)
கீற்று வரலினை ஏற்றவர் மாய்வர். (கீற்று உள்ள வைரத்தை அணிபவர் மரணம் அடைவர்)
ஐந்து நல்ல குணங்கள்
வைரத்தின் குணங்கள் 5.
பலகை எட்டு, கோணம் ஆறு, தாரை, சுத்தி, தராசம் என்பன குணங்கள்.
குற்றங்களையும் குணங்களையும் நிபுணர்கள் மட்டுமே அறிவர்.
சாமானியனுக்குப் புரியும் வகையில் சொன்னால் கோடு, கீறல், புள்ளி, பிளவு ஆகியவை வைரத்தில் இருக்கக் கூடாது.
அதிக ஒளி, வண்ண ஜாலங்கள், நல்ல பட்டைகளின் ஒளிப் பிரதிபலிப்பு ஆகியவை குணங்கள். வைரம் இல்லத்திற்கு வந்தவுடன் பல நல்ல விஷயங்கள் நடப்பது குணங்களின் உடனடிப் பயன்.
நல்ல பலன்கள்
நல்ல பலன்கள் என்பவை : அழகையும் ஆரோக்கியத்தையும் கூட்டும். அறிவு பிரகாசிக்கும். மனம் எப்போதும் அலை பாயாது அமைதியுடன் இருக்கும். எதிலும் அதிர்ஷ்டம் வரும். கலைகளில் ஈடுபாடும் வெற்றியும் உண்டாகும். செல்வம் சேரும். வளம் கூடும். சமுதாயத்தில் அந்தஸ்து கூடும். எதிரிகள் தோற்று ஓடுவர். செக்ஸ் உறவில் திருப்தி ஏற்படும். நல்ல நீடித்த திருமண வாழ்வு கைகூடும்.
கண்கள், தொண்டை, ஜனன உறுப்புகள், ஜீரண மண்டலம், சிறுநீரகக் கல் ஆகியவற்றில் ஏற்படும் வியாதிகள் நீங்கவும் வைரம் அணிதல் சிறந்தது. செய்வினை உள்ளிட்ட அதிமானுஷ்ய தீய சக்திகளால் பயம் ஏற்படாது.
கிரேக்க நாட்டின் பேரறிஞரான ப்ளினி வைரம் விஷத்தை முறிக்க வல்லது என்றும் சித்தபிரமையை நீக்க வல்லது என்றும் குறிப்பிடுகிறார். ஒயினிலோ அல்லது நீரிலோ வைரத்தை அமிழ்த்தி விட்டு அதை அருந்தினால் மூட்டு வலி, மஞ்சள் காமாலை, இரத்தக் கசிவு உள்ளிட்டவை நீங்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். கெட்ட கனவுகளைப் போக்கும், பிசாசுகளை அண்ட விடாது தீய கண் திருஷ்டியை வைரம் போக்கும் என்றும் அவர் விவரமாகக் குறிப்பிடுகிறா
ரஸ ஜல நிதி தரும் உண்மைகள்
ரஸ ஜல நிதி வைரத்தை மூன்று வகையாகப் பிரிக்கிறது.
1) ஆண் (Masculine) 2) பெண் (Feminine) 3) நியூட்ரல் (Neutral)
ஆண் வைரம் என்பது ஆறு அல்லது எட்டு முகம் கொண்டது. வானவில் போன்ற வர்ணஜாலங்களைக் காண்பிப்பது. கோடுகள், புள்ளிகள் அற்றது.
பெண் வைரம் என்பது உருளை வடிவமானது. ஆறு கோணம் கொண்டது. ஆண், பெண் இரண்டுமற்ற நியூட்ரல், மூன்று கோணம் கொண்டது.மெலிதானது. நீளமானது.
முதல் இரண்டு ரகங்களும் அணியக் கூடியவை. மூன்றாவது ரகம் விலக்கப்பட வேண்டிய ஒன்று.
வைர வடிவங்களும் ஜொலிக்கும் பட்டைகளும்
உயர் ரக வைரம் இலேசாக இருக்கும்.
அதன் ஒப்பற்ற குணங்களில் ஒன்று, அதை எக்ஸ் ரே ஒளியில் பார்த்தோமெனில் அது ஒளியைக் கக்கும். (Flourescence). ஆகவே வைரத்தை ஏனைய கற்களிலிருந்து இனம் பிரிக்க எக்ஸ் ரே பயன்படுத்தப்படுகிறது.
வைரத்தில் 58 வெட்டுகள் இருக்கும். பட்டை தீட்டத் தீட்ட வைரம் ஜொலிக்கும். (படத்தில் 58 வெட்டுகளைக் காணலாம். மேல் பகுதியில் 33ம் கீழ்ப் பகுதியில் 25ம் இருப்பது வழக்கம்)
ஹாலந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரம் தான் உலகிலேயே மிகப் பெரிய பட்டை தீட்டும் இடம் ஆகும்.
வைரத்தினாலும் எண்ணெயினாலும் பூசப்பட்ட சுழலும் உலோக பிளேடு ஒன்றைக் கொண்டு வைரத்தை அறுப்பார்கள். இப்படி அறுக்க இரண்டு நாட்கள் ஆகும்.
வைரத்தின் முகங்களுக்குப் பல பெயர்கள் உண்டு.
Table,Star,Templet,Lozene,Quotin,Cross, Skew,Skilt என இப்படிப் பல பெயர்கள்!
வடிவங்களும் கூட இதயம் (Heart), பியர் (piar), ஓவல் (Oval), எமரால்ட் ( Emerald) என இப்படிப் பல பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.
பேரமில்லாத வைர வியாபாரம்!
வைர வியாபாரத்தின் உலகத் தலைமையகம் டீ பீர்ஸ் நிறுவனம் தான். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டீ பீர்ஸ் கன்ஸாலிடேடட் மைன்ஸ் என்ற நிறுவனம் வைரங்களை லண்டனிலுள்ள மத்திய விற்பனை நிலையம் எனப்படும் Central Selling Organisation- CSO-க்கு அனுப்புகிறது.
சூரிய ஒளி நன்கு விழுகின்ற வடக்கு திசையை நோக்கி அமர்ந்து இங்குள்ள 600 தொழிலாளிகள் – அனைவரும் வைர நிபுணர்கள் – 5000 விதமாக வைரத்தைத் தரம் பிரிக்கிறார்கள்.
நகைகளுக்கு உகந்தது அல்ல எனப்படும் வைரங்கள் தொழிலகம் உள்ளிட்ட இதரப் பயன்பாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிபுணர்கள் இயந்திரங்களைக் கையாளுவதில்லை. கைத்திறனையும் தங்கள் நிபுணத்துவத்தையும் கொண்டு தான் வைரத்தைப் பிரிக்கிறார்கள்.
வைரம் வாங்குவதில் பேரம் என்பதே கிடையாது. சொன்ன விலை சொன்னது தான்!
ஆண்டுக்கு பத்து முறை மட்டுமே லண்டன், சுவிட்சர்லாந்து, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் வைர விற்பனை நடைபெறும். சுமார் முன்னூறு வியாபாரிகள் உலகெங்குமிலிருந்து வந்து வைரங்களை வாங்குகிறார்கள்.
வாங்க வருவோர் தங்கள் தேவை என்ன என்பதை முதலில் சொல்ல வேண்டும். பின்னர் வைரங்கள் சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில் தரப்படும். அதை வியாபாரிகள் பார்வையிடுவர். பின்னர் வாங்குவர். வாங்கும் போது மொத்த அட்டைப் பெட்டியையும் வாங்க வேண்டும். பிடிக்கவில்லையெனில் அப்படியே திருப்பிக் கொடுத்து விடலாம்.
ஒரு வைரத்தை வாங்கும்போது நம் பார்க்க வேண்டிய இன்னும் ஒரு C உள்ளது. அது தான் Certificate. விற்பவர் தானே கொடுத்துக் கொள்ளும் லாபரட்டரி சர்டிபிகேட் அல்லது விற்கும் நிறுவனத்தின் சர்டிபிகேட் அல்ல இங்கு குறிப்பிடப்படுவது. GIA (ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்கா) போன்ற அதிகாரபூர்வ நிறுவனங்களின் சர்டிபிகேட் உள்ளதா என்பதையே பார்க்க வேண்டும்.
சுக்ரனுக்குரியது வைரம்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்ரனுக்குரியது வைரம். சுக்ரன் லக்னாதிபதியாக இருந்தாலும் சுக்ரன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தாலும் வைரத்தை அணிவது அமோகப் பலனைத் தரும், ஆயுளையும் நீட்டிக்கும்.
கருட புராணம் ரஸ ஜல நிதி ஆகிய நூல்களில் வரும் ஒரு எச்சரிக்கைக் குறிப்பையும் அறிந்து கொள்வது அவசியம்.
மணமாகி குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வைரத்தை அணிதல் கூடாது என்பதே அந்தக் குறிப்பு. குழந்தைப் பேற்றை அடைந்தவுடன் அணியலாம்.
நகைகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட வைரங்களைத் தவிர இதர ரகங்கள் தொழிலகத்தில் பல்வேறு பயன்பாட்டுகளுக்காகவும், பல சாதனங்களின் தயாரிப்பிற்கும் உதவுகின்றன.
கண்ணிற்கான காண்டாக்ட் லென்ஸில் வைரம், விண்ணில் பறக்கும் விண்கல ஜன்னலில் வைரம் என ஆயிரக் கணக்கில் வைரங்களைப் பற்றிய சுவையான செய்திகள் உண்டு.
எம்.எஸ்., பத்மினி, எலிஸபத் டெய்லர், மர்லின் மன்ரோ
பாரத் ரத்னா இசையரசி எம்.எஸ்.ஸின் கச்சேரிக்குச் சென்றவர்கள், குறிப்பாகப் பெண்மணிகள், அவரது இசையை வானளாவப் புகழ்வதோடு மட்டுமல்லாமல் அவரது டால் அடிக்கும் வைர மூக்குத்தி பற்றியும் பேசாமல் இருக்க மாட்டார்கள்.
தில்லானா மோகனாம்பாளில் பத்மினியின் ஜொலிக்கும் முக்குத்தியும் நகைகளும் நாட்டியப் பேரொளியின் நடனம் பேசப்பட்ட அளவு பெரிதும் பேசப்பட்டவை.
இன்னும் எலிஸபத் டெய்லரின் வைர மோதிரம், க்ரேஸ் கெல்லியின் வைர நகை ஆகியவை உலகினரின் உள்ளத்தைக் கவர்ந்ததில் வியப்பே இல்லை.
எலிஸபத் டெய்லர், “பெரிய பெண்மணிகளுக்கு பெரிய வைரங்கள் தேவை” (Big girls need big Diamonds) என்று ஒரு போடு போட்டார்.
பிரபல அமெரிக்க டி.வி.சீரியல் பிரபலமான நிகோல் ரிச்சி, “உண்மையான நண்பர்கள் வைரங்களைப் போல – பிரகாசமானவர்கள்.அழகானவர்கள்.மிக்க மதிப்புடையவர்கள், எப்போதும் ஸ்டைலை மாற்றிக் கொண்டே இருப்பவர்கள் என்று சொன்ன பொன்மொழி வைர மொழியாக மதிக்கப்படுகிறது.
உலகை மயக்கிய பேரழகி மர்லின் மன்ரோ 1953ஆம் ஆண்டு,’ஒரு பெண்மணியின் உண்மைத் தோழி வைரமே’ என்று பிரகடனம் செய்தார்.
நாரீமணிகளின் உண்மைத் தோழி வைரங்கள் தானே?
எப்போதும் நிலைத்து நிற்பது வைரம் மட்டுமே!
இதற்கான ஆங்கில வாசகங்களான், ‘Diamond’s are girl’s best friend’, A Diamond is For Ever’ என்ற விளம்பர வாசகங்களை பற்பல கோடி ரூபாய்களைச் செலவழித்து டீ பீர்ஸ் நிறுவனம் உலகத்தில் மறக்க முடியாதபடி நிலை நிறுத்தி விட்டது.
Date: 19 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-39
Post No. 7113
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average
hits per day for both the blogs 12,000.
Date: 19 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 8-50 am Post No. 7112
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
broken Murug/ SKANDAMURUGA/ SKANDA WITH HEAD IN 1903DANANAG MUSEUM IN VIETNAM
Date: 15 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 16-31 Post No. 7098
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Date: 11 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 8-57 am Post No. 7084
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
PICTURE BY LALGUDI VEDA
GAJA BRUSHTA SANCTUM SANCTORUM (LOOKS LIKE BACKSIDE OF AN ELEPHANT), PICTURE BY LALGUDI VEDA.