கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி (Post No.7027)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 28 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – -7-37 AM

Post No. 7027

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

அக்டோபர் 2019 நற்சிந்தனை காலண்டர்

கர்ம வினை, செயல்பாடு பற்றி 31 பொன்மொழிகள்

பண்டிகை நாட்கள்-அக்.2- காந்தி ஜயந்தி; 7- சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை; 8-விஜயதசமி; 26-தந்வந்திரி ஜயந்தி27-தீபாவளி, லக்ஷ்மி-குபேர பூஜை; 28-ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்

பௌர்ணமி-13; அமாவாசை-27; ஏகாதசி விரதம்- 9,24

முஹூர்த்த தினங்கள்—24, 30

அக்டோபர் 1 செவ்வாய்க் கிழமை

ஸ்வார்ஜிதான்யேவ கர்மாணி ப்ரயான்ந்த்யேவ ஸஹாயதாம் – ராமாயண மஞ்சரி

உன் செயல்களே உனக்குத் துணை வரும்

XXX

அக்டோபர் 2 புதன் கிழமை

ஸ்வார்த்தமேவ ஸமீஹஸ்வ கிம் பரார்த்தஸ்ய சிந்தயா- கஹாவத் ரத்னாகர்

உன் வேலையைக் கவனி, மற்றவர்களைப் பற்றி என்ன பேச்சு?

XXX

அக்டோபர் 3 வியாழக் கிழமை

ஸ்வே ஸ்வே கர்மண்யபிரதஹ ஸம்சித்திம் லபதே நரஹ – பகவத் கீதை 18-45

அவரவர் கடமையில் ஈடுபடுவோர் பக்குவ நிலையை அடைவர்

XXX

அக்டோபர் 4 வெள்ளிக் கிழமை

ஸ்வயமக்ஷிணீபன்க்த்வாந்தோ பவஸி

உன் கண்களைக் குத்திக்கொண்டால் நீயே குருடாவாய்– கஹாவத் ரத்னாகர்

XXX

அக்டோபர் 5 சனிக் கிழமை

ஸ்னிக்தேஸ்வாசஜ்யாம் கர்ம யதுஷ்கரம் ஸ்யாத்

கடினமான வேலைகளை முயற்சியுடையோரிடம் தாருங்கள்- பிரதிக்ஞா யௌகந்தராயண

-XXX

அக்டோபர் 6 ஞாயிற்றுக் கிழமை

ஸுகம்ஹி ஸுக்ருதாத் துக்கம் துஷ்க்ருதாதேதி நான்யதஹ – கதா சரித் சாகரம்

நல்லன செய்தால் இன்பம்; தீயன செய்தால் துக்கம்

XXX

அக்டோபர் 7 திங்கட் கிழமை

ஸுகம் துக்கம் ஸ்வயம் புங்தே ந சான்யே ஸவஸ்ய கர்மணஹ – கஹாவத் ரத்னாகர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா (புறநானூறு)

XXX

அக்டோபர் 8 செவ்வாய்க் கிழமை

ஸ்வஹ கார்யமத்ய குர்வீத பூர்வாஹ்ணே சாபராஹ்ணிகம் – சம்ஸ்க்ருத பொன்மொழி

நாளைய வேலையை இன்றே செய்க; பிற்பகல் வேலையை முற்பகல் செய்க

-XXX

அக்டோபர் 9 புதன் கிழமை

விரமேதஸமாப்ய நாரப்தம்-சதாபதேச பிரபந்த

எடுத்த காரியத்தை தொடுத்து முடி

XXX

அக்டோபர் 10 வியாழக் கிழமை

வக்தும் ஸுகரம் துஷ்கரமத்யவஸிதும் – வேணி சம்ஹாரம்

சொல்லுதல் எளிது, செய்வது கடினம்

XXX

அக்டோபர் 11 வெள்ளிக் கிழமை

லோகபீடகரம் கர்ம ந கர்தவ்யம் விசக்ஷணே – வால்மீகி ராமாயணம்

நல்லோர் செய்கை எதுவும் உலகத்தைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

XXX

அக்டோபர் 12 சனிக் கிழமை

யதா கர்ம ததா பலம்

தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்

XXX

அக்டோபர் 13 ஞாயிற்றுக் கிழமை

யத்யதாத்மவசம் கர்ம தத்தத்ஸேவேத யத்னதாஹ- மநு ஸ்ம்ருதி 4-159

உனது சக்திக்குட்பட்டதை செய்து வா

XXX

அக்டோபர் 14 திங்கட் கிழமை

யோகஹ கர்மஸு  கௌசலம் – பகவத் கீதை 2-50

யோக்ம் என்பது திறமையாகச் செயல்படுவதாகும் (சமபுத்தியுடன் செயல்படுவோரைப் புண்ணிய, பாவம் தொடராது)

-XXX

அக்டோபர் 15 செவ்வாய்க் கிழமை

யஹ காரயதி ஸ கரோத்யேவ – பழமொழி

உழைப்பவனே மற்றவர்களுக்கு ஊற்றுணர்ச்சி தருகிறான்

XXX

அக்டோபர் 16 புதன் கிழமை

மஹத்சு நீசேஷு ச கர்ம சோபதே- பஞ்ச தந்திரம்

ஒரு செயல் பெரிதா, சிறிதா எனபதை அந்த செயலே காட்டிவிடும்

XXX

அக்டோபர் 17 வியாழக் கிழமை

மனஸா சிந்திதம் கார்யம்  வாசா நைவ ப்ரகாசயேத்- சானக்ய நீதி 10-7

மனதில் தோன்றுவதை எல்லாம் வார்த்தையில் வடித்துக் கொட்டாதே

XXX

அக்டோபர் 18 வெள்ளிக் கிழமை

பஹ்வாரம்பே லகுக்ரியா – கஹாவத்ரத்னாகர்

சின்ன காரியத்துக்கு ஆடம்பரமான ஆரம்பம்!

Xxx

அக்டோபர் 19 சனிக் கிழமை

பத்ரக்ருத்ப்ராப்னுயாத்பத்ரம் அபத்ரஞ்சாப்யபத்ரக்ருத் – கதாசரித் சாகரம்

இனம் இனத்தோடு சேரும்(நல்லோர் நல்லோரை நாடுவர்; தீமை தீயதை நாடும்)

Xxx

அக்டோபர் 20 ஞாயிற்றுக் கிழமை

பத்ர அபத்ரம் வா க்ருதமாத்மனி கல்ப்யதே – கதா சரித் சாகரம்

நல்லதோ கெட்டதோ- செய்தது அவனுக்கே திரும்பிவரும்

Xxx

அக்டோபர் 21 திங்கட் கிழமை

ந குப்ஸிதம் கர்ம குர்வதி – சதோபதேச பிரபந்த

சான்றோர் ப ழிக்கும் வினையை செய்யற்க

xxx

அக்டோபர் 22 செவ்வாய்க் கிழமை

ந சிகீர்ஷத்துஷ்கரம் கர்ம– சதோபதேச பிரபந்த

செய்ய முடியாத செயலில் இறங்காதே

xxxx

அக்டோபர் 23 புதன் கிழமை

நிஜம் கர்ம ப்ரகுர்வாணைர்லஜ்யதே நஹி ஜந்துபிஹி- ப்ருஹத் கதா கோச

ஆண்மகன் அவனுக்கே உரித்தான செயல்களைச் செய்ய அஞ்சுவதில்லை (வினையே ஆடவர்க்கு உயிரே)

xxx

அக்டோபர் 24 வியாழக் கிழமை

முடிவும் இடையூறும்  முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல் – குறள் 676

செயலைத் துவங்கும் முன் அதன் முடிவு, இடையூறு, இறுதியில் கிடைக்கும் பலன் ஆகியவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்

Xxx

அக்டோபர் 25 வெள்ளிக் கிழமை

தூங்கற்க தூங்காது செய்யும் வினை – குறள் 672

ஒத்திப் போடாமல் உரியகாலத்தில் அதை அதைச் செய்யவேண்டும்

Xxx

அக்டோபர் 26 சனிக் கிழமை

— மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண் துஞ்சார் – கருமமே கண்ணாயினார் – நீதி நெறி விளக்கம்

Xxx

அக்டோபர் 27 ஞாயிற்றுக் கிழமை

செய்வன திருந்தச் செய் –  ஆத்திச்சூடி

Xxx

அக்டோபர் 28 திங்கட் கிழமை

தூக்கி வினை செய்–  ஆத்திச்சூடி

Xxx

அக்டோபர் 29 செவ்வாய்க் கிழமை

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம் – உலக நீதி

Xxx

அக்டோபர் 30 புதன் கிழமை

கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி – தமிழ் பழமொழி

முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு

ஆவின்பால் கன்றினாற் கொள்

(கன்றைக் காட்டி பால் கற

xxx

அக்டோபர் 31 வியாழக் கிழமை

நுண்ணிய கருமமும் எண்ணித் துணி – கொன்றைவேந்தன்

—subham —

subham

டாக்டர் வேலையை விட்டு, கவிதை எழுத வந்தவர்! (Post No.7003)

WRITTEN BY London Swaminaathan

swami_48@yahoo.com


 Date: 23 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 6-51 a m

Post No. 7003


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

வாழ்க்கை பற்றி கீட்ஸ் எழுதிய வரிகளை கண்ணதாசன் பாடலுடன் ஒப்பிடலாம்

John Keat’s Poem Sleep and Poetry

(Lines 85-95)

Stop and consider! life is but a day;
A fragile dew-drop on its perilous way
From a tree’s summit; a poor Indian’s sleep
While his boat hastens to the monstrous steep
Of Montmorenci. Why so sad a moan?
Life is the rose’s hope while yet unblown;
The reading of an ever-changing tale;
The light uplifting of a maiden’s veil;
A pigeon tumbling in clear summer air;
A laughing school-boy, without grief or care,
Riding the springy branches of an elm.

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ… ஒஹோஹோ…

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்

——போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

—போனால் போகட்டும் போடா

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகமாடும் கலைஞடா
—-போனால் போகட்டும் போடா

திரைப்படம்: பாலும் பழமும் (1961)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
xxxx

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

பருவமென்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே
பருவமென்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே

ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்

நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்

……………ஆசையே

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்

இளமை மீண்டும் வருமா மணம்  பெறுமா முதுமையே சுகமா

காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்

…………………..ஆசையே

சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ

சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ

வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு

காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்

…………………..ஆசையே

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்

–subham- lokas samasta sukino  bhavantu–

உரிச்சொல் நிகண்டு எனும் வெண்பா நூலை இயற்றியவர்! (Post No.7001)

WRITTEN BY S Nagarajan

swami_48@yahoo.com


 Date: 22 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 15-35

Post No. 7001


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

ச.நாகராஜன்

கொங்குமண்டல சதகம் 91ஆம் பாடலில் ஒரு அரிய செய்தியைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

அலைகடல் சூழு மவனியிற் செந்தமி ழாய்பவர்கள்

நலனுறத் தக்க வகையாக வுள்ள நனிமகிழ்ந்தே

இலகு முரிச்சொ னிகண்டுவெண் பாவி நிசைத்தகலை

வலவெழிற் காங்கேயன் வாழுமோ ரூர்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : தமிழிலக்கியம் கற்பவர்கள் எளிதில் பாடம் செய்யவும், தெரிந்து கொள்ளவும் உதவியாகும் படி உரிச்சொல் நிகண்டு என வெண்பாவினால் ஆன நூலைச் செய்து உதவிய காங்கேயன் என்பவன் வாழும் மோரூருங் கொங்கு மண்டலம் என்பதாகும்.

பலதலைதேர் காங்கேயன் பட்ட முடையான்

உலகறியச் சொன்ன வுரிச்சொல் – (உரிச்சொல் நிகண்டு)

என்றும்

முந்து காங்கேய னுரிச்சொல் – (ஆசிரிய நிகண்டு)

என்றும்

பெருத்த நூல்பலவுஞ் சுருக்கித் தமிழில்

உரிச்சொல் நிகண்டென உரைத்த காங்கேயன் –     

                (பாம்பணகவுண்டன் குறவஞ்சி)

என்றும் இப்படிப் பலபட நூல்கள் காங்கேயன் இயற்றிய உரிச்சொல் நிகண்டு பற்றிக் குறிப்பிடுகின்றன.

ஆனால் காங்கேயன் என்ற பட்டப்பெயரை உடைய இவர் யார் என்பது தெரியவில்லை.

கங்கைக் குலத்தவரான வேளாண்டலைவைருக்குக் காங்கேயன் என்ற பட்டப் பெயரிட்டு அரசர் அழைத்திருக்கின்றனர் போலும்.

புதுவைக் காங்கேயன், ஆட்கொண்ட காங்கேயன் என்னும் பெயர் கள் வழங்கி வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

வேறொருவர் தான் இந்த உரிச்சொல் நிகண்டை இயற்றினார் எனக் கூறுவதுமுண்டு.

கொங்குமண்டல சதகத்துள்  54 மற்றும் 94 ஆகிய பாடல்கள் இம்மோரூர்க் காங்கேயர்களையே குறிப்பிடுகின்றன.

இவர்களுக்கு இம்முடி என்ற பட்டப்பெயர் இருக்கிறது.

காங்கேயர்களைப் பற்றிய சிறப்புக்களை கொங்குமண்டல சதகத்துள் கண்டு மகிழலாம்.

***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 20919 (Post No.6991)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com


 Date: 20 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 11-55 am

Post No. 6991

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

அடைப்புக் குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் த்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே

1. -(5)- கட்டபொம்மன் தம்பி

4. (4) வலமிருந்து இடம் செல்க-தடுமன் வந்தால் இதுவும் வரும்

6.(2) – செங்கல் செய்யும் இடம்

7.- ( 5)- கனியன் பூங்குன்றன் பாட்டின் முதல் வரி

10.- (2)-  க்கில் கூட்டலுக்கு எதிர்ப்பதம்

11. -(4) – கல்யாண வீட்டில் கேட்கும் மேள சப்தம்

கீழே

1. -(3) – ஊஞ்சல் என்பதன் சுருக்க வடிவம்

2. (4) – பேரிகை வாத்தியம்

3. – (4) கிர்நார் மலையின் மற்றொரு பெயர்

5.- (5) — சிறுவர்கள் ஆடுவது; ஒலிம்பிக்கிலும் உண்டு

6.- (2)- தர்மபுத்திரன் இதற்கு அடிமை

8.– (3)- அனுமானம்

9. –(2) – வீட்டு வாசலையும் முதல் கட்டு ஹாலையும் இணைக்கும் நடைபாதை

—- subham —

–subham–

சம்ஸ்க்ருதம் பற்றிய இரண்டு அரிய செய்திகள்! (Post No.6988)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com


 Date: 19 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 16-25

Post No. 6988

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

பாகிஸ்தானில் பிறந்தவர் பாணினி

உலகமே வியக்கும் வண்ணம் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதியவர் பகவான் பாணினி. இவர் எழுதிய சம்ஸ்க்ருத இலக்கண நூலைக் கண்டு உலகமே வியக்கிறது. காரணம் என்னவெனில் ரத்தினச் சுருக்கமான சூத்திரங்கள்! ஒரு எழுத்து கூட வீணாகப் பயன்படுத்தாத நூல். இதை எழுதிய பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் பிறந்தார். அவர் பிறந்த சாலாதுரா இப்போது பாகிஸ்தானில் ராவல்பிண்டிக்கு அருகில் இருக்கிறது 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அது இந்து பூமியாக இருந்தது. அவர் எழுதிய நூலின் பெயர் அஷ்டாத்யாயி (எட்டு அத்தியாயம்). அவருக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய காத்யாயனர் , பாணினி இலக்கண நூலுக்கு  ஒரு உரைநூல் எழுதினார். அதுவும் ரத்தினச் சுருக்கமான நூல்! அதை வ்யாகரண வார்த்திகா என்று அழைப்பர்.

அந்த உரைகாரர் தென்னாட்டைச் சேர்ந்தவர்.ஏதோ வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒற்றுமைப் படுத்தினான் என்று உளறுவோருக்கு இது செமை அடி கொடுக்கும். பாகிஸ்தான் பகுதியில் நூல் எழூதியவருக்கு தென்னாட்டுக் காரர் உரை. அதுவும் 2400 ஆண்டுகளுக்கு முன்னர்!.

இதைவிட அதிசயம்- இந்த இரு நூல்களுக்கும் மாபெரும் உரை கண்டார் பதஞ்சலி. அந்த நூலுக்குப் பெயர் மஹா பாஷ்யம். உலகிலேயே மிகப்பெரிய உரைநூல்! அவர் பிறந்தது பாட்னா (பீஹார்) என்றும் தென்னாடு என்றும் கருத்து உளது. அவர் வாழ்ந்ததோ 2200 ஆண்டுகளுக்கு முன்னர்.

ஆக எங்கோ ஒருவர் எழுதிய இலக்கண நூலுக்கு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்தவர்கள் 2200 ஆண்டுகளுக்கு முன்னரே உரை கண்டனர் என்றால் ‘ஏக பாரதம்’ என்னும் கொள்கைக்கு மேலும் ஒரு சான்று தேவையா?

2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழி பாகிஸ்தான் உள்ள வடமேற்கு இந்தியா முதல் தென் குமரி வரை பரவி இருந்தது (கோவலன் ஸம்ஸ்க்ருதச் சுவடியைப் படித்து ஒரு பார்ப்பனிக்கு உதவிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது.)

பேரழகி தமயந்தியை மணக்கப் போட்டா போட்டி!

இன்னும் ஒரு அதிசயச் செய்தி இதோ! நள தமயந்தி கதையைக் கூறும் நூல் நைஷதீய சரித்ரம். அதை 1100 ஆண்டுகளுக்கு முன்னர் புலவர் ஸ்ரீஹர்ஷ எழுதினார். அதில் பத்தாவது காண்டத்தில் ஒரு அழகான பாடல் வருகிறது. தமயந்தியின் ஸ்வயம்வரத்தை அவரது தந்தை பீமன், தலைநகரான குண்டினபுரத்தில் ஏற்பாடு செய்து 56 தேச ராஜாக்களுக்கும் செய்தி அனுப்பி இருந்தார். மன்னர்கள் மட்டுமின்றி தேவலோக நாயகர்களான இந்திரன் மித்திரன் வருணன், வாயு, அக்னி, யமன் ஆகிய அனைவரும் பேரழகி தமயந்தியை மணக்க ஆசைப்பட்டு மாற்றுருவில் வந்தனர். அவர்களுக்கு மன்னர் பீமன் மாபெரும் வரவேற்பு அளித்தார்.

அப்போது எல்லா மன்னர்களும் ஒருமனதான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நாம் எல்லோரும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் பேச வேண்டும்; நம்முடைய வட்டார மொழியில் பேசினால், தமயந்தி நாம்  யார், எந்த தேசம் என்று கண்டு பிடித்துவிடுவாள். அவள் கவிதை எழுதும் அளவுக்குப் புலமை பெற்ற பெரிய அறிவாளி. ஆகையால் நாம் ஸம்க்ருதத்தில் பேசுவோம்.”

அக்காலத்தில் நாடு முழுதும் ஸம்ஸ்க்ருதம்தான் பொது மொழி என்பதை இது காட்டுகிறது. வட இமயம் முதல் தென் குமரி வரை ஸம்ஸ்க்ருதம் பரவி இருந்தது. மன்னர்கள் அதைப் பேசினர். ஸம்ஸ்க்ருதம் பேச்சு மொழி இல்லை என்று உளறிக்கொட்டிக் கிளறி மூடும் அறிவிலிகளுக்கு நெத்தியடி, சுத்தியடி, செமை அடி கொடுக்கிறார் புலவர் ஹர்ஷ. இதோ பத்தாம் காண்டம் 34ம் ஸ்லோகம்–

அந்யோன்ய பாஷாணாவபோத பிதே ஸம்ஸ்க்ருத்ரிமாபிர் வ்யவஹாரவஸ்து

திக்ப்யஹ சமதேஷு ந்ருபேஷு வாக்பிஹி சௌவர்க வர்கோ ந ஜனைர் அசிஹ்னி.

இந்த ஸ்லோகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்கூட 56 தேச மன்னர்களும் ஸம்ஸ்க்ருதத்தில் பேசியதைக் காட்டுகிறது.

இந்த இரண்டு அற்புதச் செய்திகளை நான் அடையாறு நூலக டைரக்டர் டாக்டர் ஆர். சங்கர நாராயணன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் படித்தேன்.

–subham–

லட்சம் புதிர்கள், விடுகதைகள்-Part 5 (Post No.6978)

Written   by  S NAGARAJAN

swami_48@yahoo.com

 Date: 5 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London –4-39 am

Post No. 6978


Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

புதிர்கள் : இப்பகுதியில் கட்டுரை எண்கள் 6575 -வெளியான தேதி 20-6-19 மற்றும் 6609 வெளியான தேதி  28-6-19; 6680 – வெளியான தேதி 26-7-19; 6755 – வெளியான தேதி 10-8-19 ஆகியவற்றைத் தொடர்ந்து ஐந்தாம் பகுதி இதோ:-

லட்சம் புதிர்கள், விடுகதைகள், மாயாஜால மாஜிக்குகள், புதிர்க் கணக்குகள்! – 5 (41 முதல் 60 முடிய)

ச.நாகராஜன்

சில புதிர்களை மாணவ, மாணவியர் கல்லூரி வளாகத்திலோ அல்லது பொது இடங்களிலோ கேட்கும் போது அதை ‘கடி ஜோக்’ என்றும் கூறுவதுண்டு. அதையும் இங்கு பார்த்து விடுவோமே!

  1. இனிஷியல் உள்ள நாய் எது?
  2. பால் எப்போது வெட்கப்படும்?
  3. நேரு, படேல் சிலை பக்கம் போகின்ற காகம், காந்தி சிலையின் பக்கம் மட்டும் போகாதது ஏன்?
  4. படகு ஏன் ஆடுகிறது?
  5. இரண்டு இளைஞர்கள் தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் வாசலிலும் மற்றொருவர் தெருவிலும் நின்று படிக்கின்றனர். ஏன்?
  6. செவண்டீபைவ் காபீஸை 12 பேருக்கு எப்படிப் பகிர்ந்து கொடுப்பது?
  7. ஆப்போஸிட் எதிர்ச்சொல் என்ன?
  8. ஒருவர் பஸ்ஸுக்குள் ஏறுகிறார். பஸ்ஸில் இடமிருந்தும் உட்காராமல் நின்று விட்டு ஸ்டாப் வந்ததும் இறங்கிக் கொள்கிறார். ஏன்?
  9. குடிக்க முடியாத காபி எது?
  10. ஒரு ஆபீஸின் 5வது மாடியில் சந்தனம் பூசி இருக்கிறார்கள். ஏன்?
  11. ஒரு குடையில் 3 பேர் இடுக்கிக் கொண்டு போனார்கள். ஆனால் நனையவில்லை. ஏன்?
  12.  கடல் அருகில் கொசு போகாது. எதற்காக?
  13. காந்தியடிகள் தலைவரில்லை. ஏன்?
  14. நாய் போல இருக்கும் ஆனால் அதற்கு 3 கால் இருக்கும். அது என்ன?
  15. கையில் ஊசியை வைத்துக் குத்தினால் ரத்தம் வருகிறது. ஏன்?
  16. தண்ணீர் இல்லாத ஆறு எது?
  17.  What is always coming, but never arrives?
  18. What can be broken, but is never held?
  19. What is it that lives if it fed, and dies if you give it a drink?
  20. What would you use to describe a man who does not have all his fingers on one hand?

Answers : விடைகள்

  1. ஒநாய்
  2. அதற்கு ஆடையை எடுக்கும் போது!
  3. அவர் கையில் கம்பு வைத்திருக்கிறாரே!
  4. அது ‘தண்ணி’யில் இருப்பதால்
  5. ஒருவர் ‘எண்ட்ரன்ஸ்’ எக்ஸாமுக்குப் படிக்கிறார். இன்னொருவரோ ‘பப்ளிக்’ எக்ஸாமுக்குப் படிக்கிறார்!
  6. செவன் டீ யும் ஃபைவ் காபீ யும் இருக்கிறது. ஆகவே 7 பேருக்கு டீயும் 5 பேருக்குக் காப்பியும் கொடுத்து விடலாமே!
  7. ஆப்போ ‘ஸ்டாண்ட்’
  8. ‘நின்றபின் இறங்கவும்’ என்று பஸ்ஸில் எழுதி இருக்கிறார்களே, அதனால் தான்!
  9. ஜெராக்ஸ் காபி
  10. அது ‘மொட்டை’ மாடி!
  11. மழையே பெய்யவில்லை
  12. கடலில் ‘டார்டாய்ஸ்’ இருக்கு!
  13.  அவர் ‘சாந்தியை’ விரும்புகிறாரே
  14. நொண்டி நாய்
  15. யார் குத்தியது என்று பார்ப்பதற்காகத் தான் ரத்தம் வெளியே வருகிறது!
  16. 5க்கும் பின் வரும் 6
  17.  Tomorrow
  18.  A Promise
  19.  Fire
  20. Normal, because people usually have half their fingers on one hand.

Credit & நன்றி

17 முதல் 20 முடிய : https://icebreakerideas.com/trick-questions/

***

கணிதம்- இந்துக்களின் மஹத்தான 3 கண்டுபிடிப்புகள்! (Post No.6976)

WRITTEN BY London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 4 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London –13-26 am

Post No. 6976

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

-subham–

வாழ்க பாரதம்! வெல்க பாரதம்! (Post No.6975)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com


 Date: 4 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London –7-11

Post No. 6975

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்திற்கு ச.நாகராஜன் அளித்த பேட்டி

வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!

ச.நாகராஜன்

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சுதந்திர தினத்தையொட்டி 14-8-2019 அன்று காலை 10 மணிக்கு ஒரு விசேஷ நிகழ்ச்சியை ஒலிபரப்பியது.

இந்தியா குறித்து பெருமிதம் கொள்ளக்கூடிய விஷயங்கள் யாவை என்று பேட்டி எடுத்தவர் கேட்க அதற்கு ச.நாகராஜன் அளித்த பதில் ஒலிபரப்பப்பட்டது.

அன்பர்களுடன் அந்த உரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் :

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான். 81.5 கோடி மக்கள் வாக்காளர்களாக இங்கு உள்ளனர்.

உலகின் அதி இளமையான நாடு இந்தியா தான். சுமார் 130 கோடி என்று உள்ள இன்றைய ஜனத்தொகையில் சுமார் 60 கோடி பேர்கள் 25 வயது முதல் 29 வயது வரை ஆன இளைஞர்களே. ஆக இளைஞர்கள் அதிகம் கொண்ட ஒரே நாடாக இந்தியா இலங்குகிறது.

இந்த இளமைத் துடிப்புடன் அறிவியலில் அது பாய்ச்சல் போட்டு முன்னேறுகிறது.

செவ்வாய் நோக்கிய பயணத்தில் தனது முதல் முயற்சியிலேயே அது வெற்றி பெற்றது குறிப்பிடத்தகுந்த ஒரு பெருமையான விஷயம்.

மங்கள்யான் -1 இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. ஆசியாவில் முதலாவதாக செவ்வாய்க்குக் கலம் அனுப்பிய நாடு; உலகில் நான்காவதாக அனுப்பிய நாடு என்ற பெருமை நம்மைச் சேர்கிறது.

5-11-2013 அன்று  செவ்வாயை நோக்கி நமது கலம் கிளம்பியது. சோவியத், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று நாடுகளுடன் சேர்ந்து விட்டது இந்தியா இந்த செவ்வாய் பயணத்தின் மூலமாக.

அடுத்து சந்திரயான் – 1 22, அக்டோபர் 2008இல் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. முதன் முதலாக சந்திரனில் நீர் இருக்கிறது என்ற செய்தியை இந்தக் கலத்தின் மூலமா 2009ஆம் ஆண்டு கண்ட நமது விஞ்ஞானிகள் அதை உலகிற்கு அறிவித்தனர்.

இதைச் சரிபார்க்கத் தனது கலத்தை ஏவிய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அது உண்மையே எனக் கண்டு வியந்து அதை உலகிற்கு அறிவித்தது.

சந்திரனுக்குக் கலம் அனுப்பியதன் மூலமாக அமெரிக்கா, சோவியத், சீனா ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியா சேர்ந்து விட்டது.

இப்போது சந்திரயான் – 2 விண்ணில் 22 ஜூலை 2019 அன்று ஏவப்பட்டுள்ளது. இதில் உள்ள விக்ரம் என்ற லேண்டர் (Lander)  செப்டம்பர் முதல் வாரத்தையொட்டி தரை இறங்கி அனைத்தையும் சரிபார்த்த பின்னர் ப்ரக்யான் என்ற நமது ரோவர் சந்திரப் பரப்பில் ஊர்ந்து செல்லும்; ஆய்வுகளை நடத்தும். இது பெருமைக்குரிய ஒரு பெரிய விஷயம்.

விண்ணில் பறக்கும் ஒரு விண்கலத்தை மீண்டும் தேவையெனில் தரையிறக்கும் ஸ்பேஸ் காப்ஸ்யூல் ரிகவரி எக்ஸ்பெரிமெண்டையும் (Space Capsule Recovery Experiment) இந்தியா செய்து வெற்றி பெற்றிருக்கிறது.

ஒரே ராக்கெட்டில் 104 சாடலைட்டுகளை விண்ணில் ஏவி இந்தியா சாதனை படைத்திருக்கிறது. பல நாடுகளும் தங்கள் சாடலைட்டுகளை விண்ணில் ஏவ இந்தியாவை நாடி வருகின்றன.

அடுத்து உலகின் பொறியியல் வல்லுநர்களில் அதிகமான பேரை உருவாக்குவது இந்தியாவே என்பது ஒரு மகிழ்ச்சி தரும் விஷயம்.

அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் இவர்கள் முன்னணியில் நிற்கின்றனர்.

இதற்குச் சான்றாக மல்டி நேஷனல் கம்பெனிகளையும் அதி நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் தலை சிறந்த கம்பெனிகளையும் வழி நடத்தும் தலைமைப் பொறுப்பில் இந்தியர்களே இருக்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டலாம்.

Microsoft, Google,Pepsico,AdobeSystem, Mastercard உள்ளிட்ட பல நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்க்ள் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கின்றனர்.

இந்தியா உலகின் மூன்றாவது பலம் பொருந்திய இராணுவத்தைக் கொண்டுள்ளது. ஆனால் எந்த ஒரு நாட்டையும் அது தோன்றிய காலத்திலிருந்து தாக்கியதில்லை, ஆக்கிரமித்ததில்லை என்பது மனதில் கொள்ள வேண்டிய ஒரு பெரிய விஷயம்.

தற்காப்புக்கென இருக்கும் நமது ராணுவத்தை ஐ.நாவின் அமைதி காக்கும் படையிலும் நமது நாடு ஈடுபடுத்தியுள்ளது.

அதிக துருப்புகளை ஐ.நாவின் பணிக்கென அனுப்பிய இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இலங்குகிறது.

தகவல் தொடர்பில் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இதை நிரூபிப்பது நமது இன்ஸாட் அமைப்பு. (Insat System).

உலகின் அறிவியல் முன்னேற்றத்திற்கு நமது விஞ்ஞானிகள் பெரிதும் காரணமாக அமைந்திருக்கின்றனர்.

சர் சி.வி.இராமன், ஜெகதீஷ் சந்திர போஸ், சத்யேந்திரநாத் போஸ், சீனிவாச இராமானுஜன், எஸ்.சந்திரசேகர், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உள்ளிட்டவர்களின் பங்களிப்பு அறிவியல் வளர்ச்சியில் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

இந்தியாவின் கும்பமேளா திருவிழா உலகின் ஒரு அதிசயம்.  குறிப்பிட்ட நாட்களில் தாமாகவே ஒருங்கு சேர்ந்து வழிபட்டு அமைதியாகத் தாமாகவே கலைந்து செல்லும் பெரும் மக்கள் திரளை இது போல உலகில் வேறெங்கும் காண முடியாது.

இது மட்டுமல்ல, பொழுது போக்குத் துறையில் உலகில் மிக அதிகமாக திரைப்படங்களைத் தயாரித்து வழங்குவது இந்தியாவே.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட நாடு வெகு விரைவில் வல்லரசாகத் திகழப்பொவது மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் நல்லரசாகவும் திகழப்போகிறது.

இதில் வாழ்வது பெருமைக்குரிய ஒரு விஷயம். வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!!

நன்றி, வணக்கம்.

***

–subham–

தமிழா புரட்சி செய்! ஒரு கவிதை (Post No.6973)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 3 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London –19-02

Post No. 6973

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

தமிழா புரட்சி செய் என்ற கவிதை சுத்தானந்த பாரதியார் எழுதியது. 1944ம் ஆண்டு செட்டி நாடு பத்திரிக்கையின் தமிழிசை மலரில் வந்தது. 1958ம் ஆண்டு மலாயா பத்திரிக்கை (நவரசம்) யில் நசிம்மராவ் எழுதிய துப்பாதே, குடிக்காதே கவிதைகளும் திருலோக சீதாராம் எழுதிய எழுத்தாளன் கவிதையும் வெளியானது .கவிதைகள் அருகி வரும் இக்காலத்தில் ஒன்றிரண்டு சாம்பிள் வெளியிட்டால் எதிர்கால ஆராய்ச்சியாளருக்கு உதவலாம்.

illicit liquor is destroyed in Patna

அறிவியல் வியக்கும் கண் திருஷ்டி! (Post No.6971)

Written by S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 3 SEPTEMBER 2019


British Summer Time uploaded in London – 6-08 AM

Post No. 6971

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

subham