சிரிக்கவும் சிந்திக்கவும் முல்லா நஸ்ருத்தின் கதைகள்! (Post No.6966)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

 Date: 2 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London –6-32 am

Post No. 6966

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

முல்லா, “எனது தூக்கம் தொலைந்து விட்டது. அதைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்” என்றார்.

இப்படி நூற்றுக் கணக்கான முல்லா கதைகள் உள்ளன.

96 பிரபந்தம், 32 அறம், 64 கலை, 11 ஆடல், 10 ஆயுதம் பட்டியல் (Post No.6964)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 2 SEPTEMBER 2019


British Summer Time uploaded in London –5-40 am

Post No. 6964

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

1968ம் ஆண்டு சென்னை நகர உலகத் தமிழ் மாநாட்டுக் கண்காட்சிக்கு வெளியிடப்பட்ட கையேடு  அரிய தகவல்களை பட்டியலாக வெளியிட்டுள்ளது. இது பாதுகாத்துவைக்கப்படவேண்டிய குறிப்பு.

இவைகளைப் பற்றி ஏற்கனவே கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளதால் இங்கே விளக்கம் தரவில்லை.

96 பிரபந்தம், 32 அறம், 64 கலை, 11 ஆடல், 10 ஆயுதம் பட்டியல், அட்டநாகம், அட்ட போகம், அட்டபந்தனம் (அஷ்ட பந்தனம்), 16 வகைப் படைகள், பத்து விரல்கள், பல வகை மணிகள் ஆகியவை இதில் உள்ளன

subham

காவேரி கொண்டுவந்த அல்லாளன் இளையான்! (Post No.6961)

 Picture posted by Lalgudi Veda

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com

 Date: 1 SEPTEMBER 2019


British Summer Time uploaded in London – 7-33 am

Post No. 6961

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

நூறு கோண்= ஒரு அணு; தமிழ் ரகசியங்கள் (Post No.6959)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 31 AUGUST 2019
British Summer Time uploaded in London – 18-
22

Post No. 6959

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

சென்னையில் 1968-ம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ் மகாநாட்டின் போது ஒரு கையேடு (Guide for the Exhibition) வெளியிடப்பட்டது. அதில் தமிழர்களின் அளவை முறைகள் அனைத்தும் ஆதார பூர்வமாக தரப்பட்டுள்ளது. இன்று சில அளவை முறைகளைக் காண்போம்.

TAGS- அணு, கோண், துகள், அளவை முறைகள், தமிழர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் (Post No.6958)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 31 AUGUST 2019


British Summer Time uploaded in London – 13-53

Post No. 6958

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

தமிழ்நாட்டில் சங்க காலம் முதல் தற்காலம் வரை நடந்த போர்களை 1968ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டு கையேடு பட்டியலிட்டுள்ளது.இதோ விவரங்கள்:–

மூன்று பெண்மணிகளின் அன்புரைகள்! (Post No.6956)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

 Date: 31 AUGUST 2019


British Summer Time uploaded in London – 7-18 am

Post No. 6956

 Pictures are taken FROM VARIOUS SOURCES. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மாலைமலர் நாளேட்டில் ஆகஸ்ட் 2019 மூன்றாம் வாரம் வெளியாகியுள்ள கட்டுரை. வெவ்வேறு ஊர்களின் பதிப்புகளில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகியுள்ளது இந்தக் கட்டுரை.

உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க உலகின் தலை சிறந்த மூன்று பெண்மணிகளின் அன்புரைகள்!

ச.நாகராஜன்

வீட்டில் ஒரே சண்டை, சச்சரவு, மனக்கவலை, நிம்மதியே இல்லை, செலவு அதிகம் எனக் குறைப்பட்டுக் கொள்வோர் ஏராளம்.

இந்த நிலைக்கு உண்மையான காரணம் என்ன  என்பதை அவர்கள் யாரும் சரியாக உணர்வதே இல்லை. காரணத்தைக் கேட்டால் நூற்றுக்கணக்கான காரணங்களைச் சொல்வார்கள். ஆனால் உண்மைக் காரணம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுகின்றனர் உலகின் தலையாய சிறந்த பெண்மணிகள் மூவர்.

இவர்கள் கூறும் அன்புரைகளைச் சற்றுக் கேட்டு முயன்று பார்த்தால் உங்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்குமே!

    இவர்களின் கூற்றைக் கேட்டு சந்தோஷம் அடைந்து வருவதாக ஆயிரக்கணக்கானோர் உலகெங்குமுள்ள பிரபல பத்திரிகைகள் மற்றும் டி.வி.நிகழ்ச்சிகள் வாயிலாகக் கூறி வருவதும் ஊடகங்களில் தங்களின் நன்றியைப் பதிவு செய்து வருவதுமே இவர்களின் வழிமுறைகள் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று என்பதை நிரூபிக்கிறது.

    இவர்கள் யார், என்ன சொல்கிறார்கள் என்று சற்று பார்ப்போமே!

இரகசியத்தைக் கூறும் ரோண்டா பைர்ன்!

    ‘தி சீக்ரட்’ (The Secret) – இரகசியம் – இந்தத் தலைப்பில் எழுதிய புத்தக வாயிலாகவும் திரைப்படம் வாயிலாகவும் உலகெங்கும் புகழ் பெற்றவர் ஆஸ்திரேலியப் பெண்மணியான ரோண்டா பைர்ன். (Rhonda Byrne)

   1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் பிறந்த இவருக்கு இப்போது இவருக்கு வயது 74. இவரின் இப்போதைய சொத்து மதிப்பு 10 கோடி டாலர்கள் (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் ரூ 70) ஆரம்பத்தில் டெலிவிஷன் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த இவர் சீக்ரட் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுப் பெரும் புகழ் பெற்றார். 50 மொழிகளில் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு பிரபல டைம் பத்திரிகை உலகின் சிந்தனைப் போக்கை மாற்ற வல்ல 100 பேருள் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘தி சீக்ரட்’ படமாகவும் வந்து உலகத்தினரைக் கவர்ந்தது. படமும் புத்தகமும் வெளி வந்தவுடனேயே ஈட்டிய தொகை சுமார் 2100 கோடி ரூபாய்!

    சரி, சீக்ரட் (இரகசியம்) என்ன சொல்கிறது?

  ஆழ்ந்து படித்து கடைப்பிடிக்கப்பட வேண்டிய சீக்ரட் வழிகளில் முக்கியமான சில மட்டும் இங்கு தரப்படுகிறது.

எண்ண சக்தி : உங்கள் எண்ணங்களுக்கு பிரம்மாண்டமான சக்தி உண்டு. நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகிறீர்கள். ஆகவே எதையும் ஆக்கபூர்வ சிந்தனையுடன் பாஸிடிவாக நினையுங்கள்.

    ஒரே ஒரு மகத்தான சக்தி மூலமாக மட்டுமே நாம் அனைவரும் உலகத்தில் இயங்குகிறோம்.

   இந்த இயக்கத்தில் கவர்ச்சி விதி (The Law of Attraction)  என்பது தான் இரகசியம்!

   உங்கள் மனதிலிருந்து எது வெளியே செல்கிறதோ அதைத் தான் நீங்கள் கவர்ந்து இழுக்கிறீர்கள். நாம் ஒரு காந்தம் போல, அவ்வளவு தான்!

    பொதுவாக மக்கள் எதை வேண்டாம் என்று நினைக்கிறார்களோ அதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள், ஆகவே அதுவே அவர்களை வந்து அடைகிறது. (சண்டை சச்சரவு என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது தான் வரும்; வளரும்)

எண்ணங்களைக் கவனமாகத் தேர்வு செய்யுங்கள்.

    சந்தோஷமான தருணங்களை நினைத்துக் கொண்டிருந்தால், இன்னும் சந்தோஷமான தருணங்கள் உங்களை வந்து அடையும்.

கோபம், பொறாமை, இயலாமை, வருத்தம், மனச்சோர்வு போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை உடனே போக்க வல்லவை எவை தெரியுமா?

   ஆக்கபூர்வமான சிந்தனை, சந்தோஷமான உங்கள் வாழ்க்கைத் தருணங்கள், உங்களுக்கு மிக மிகப் பிடித்த பாடல் – இவை போன்றவை தான்!

    இப்படி இவற்றை நினைக்க ஆரம்பித்தால், இதைத் தொடர்ந்து செய்தால் உங்கள் வாழ்க்கை சந்தோஷமானதாக மாறும்; நல்லவை நாடி வரும். ஏனெனில் நீங்கள் தான் அதைக் காந்தம் போலக் கவர்ந்து வரச் செய்கிறீர்கள்!

     நன்றியை மறக்காதீர்கள்.அனைவருடனும் பகிருங்கள்.

  பிரபஞ்சம் வேகமாகப் போகும் ஒன்று. நல்லவை வரும் போது இறுகப் பற்றிச் செயல் படுங்கள். வாய்ப்பை நழுவ விடாதீர்கள். மாறுங்கள். சந்தோஷத்தையும் முன்னேற்றதையும் கவர்ந்து இழுங்கள்.

மகிழ்ச்சிக்கான மாரி காண்டோவின் வழிமுறை!

அடுத்து ஆயிரக்கணக்கான இல்லங்களில் இன்று மகிழ்ச்சி பொங்கக் காரணமாக இருப்பவர் ஒரு ஜப்பானியப் பெண்மணி. அவர் பெயர்  மாரி காண்டோ (Marie Kondo) . ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவரைப் பற்றி, ‘எனது வாழ்க்கையை மாற்றியவர்’ என்று புகழ்ந்து பேசுவோர் ஏராளம்.

    1984, அக்டோபர் 9ஆம் தேதி பிறந்த இவருக்கு இப்போது வயது 35. இவரது சொத்து மதிப்பு 56 கோடி ரூபாய்கள்! இவர் எழுதியுள்ள புத்தகத்தின் பெயர் – ‘தி லைஃப் சேஞ்சிங் மாஜிக் ஆஃப் டைடியிங் அப்’ (‘The life Changing Magic of Tidying Up’).

லட்சக்கணக்கில் விற்பனையாகி வரும் இந்தப் புத்தகம் மகிழ்ச்சி அடைவதற்கான எளிய வழிமுறைகளைச் சொல்கிறது.

அவற்றில் சில:.

வீட்டில் தேவையற்று இருக்கும் பொருள்களைத் தூக்கிப் போடுங்கள் என்பது தான் இவர் கூறும் அன்புரை.

வீட்டைத் தூய்மைப் படுத்த வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டு, வேண்டாத துணிகள், புத்தகங்கள்,இதர தேவையற்ற பொருள்கள் ஆகியவற்றை அகற்றுங்கள்;

அகற்றுவதற்கு முன்னர் அவை இது வரை உங்களுக்குத் தந்த நன்மைக்காக மனதார  நன்றி செலுத்துங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி உணர்வைத் தராத, தூண்டாத எதையும் இல்லத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். இதைச் செய்யும் போது தனியாக இருந்து, துணிகள், புத்தகங்கள், இதர பொருள்கள் என்ற வரிசைப்படி செய்ய வேண்டும்.

   அடுத்தவர்கள் இருந்தால் அதைப் போடாதே, இதை எறியாதே என்ற குறுக்கீடுகள் இருக்கும். ஒவ்வொரு இடமும் தூய்மையாகும் போது உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி மலர்கிறதா என்பதைக் கேட்டுப் பாருங்கள்; உணர்ந்து பாருங்கள். பதில் ஆம் என்றால் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி நுழைந்து விட்டது என்று பொருள்!

நீங்களே உங்களது மகிழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் க்ரெட்சன் ரூபின்!

   உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியை சுலபமாக நீங்களே உருவாக்கலாம் என்று சொல்லும் இன்னொரு பெண்மணி அமெரிக்காவைச் சேர்ந்த க்ரெட்சன் ரூபின் (Gretchen Rubin).  இவர் எழுதிய பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. இவரது The Four tendencies, Better than Before என்ற இரு புத்தகங்கள் மகிழ்ச்சிக்கான வழியைச் சொல்லும் புத்தகங்கள்.

    க்ரெட்சென் அமெரிக்காவில் மிஸௌரியில் உள்ள கான்ஸாஸ் நகரில் 1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி பிறந்தார். மற்றவர்களின் பழக்க வழக்கங்களையும் அவர்களின் வாழ்க்கைப் போக்கையும் கூர்ந்து ஆராய்ந்த க்ரெட்சன் மனிதர்களின் கவலைக்கும் மகிழ்ச்சிக்கும் அவர்களே காரணம் என்பதைக் கண்டு பிடித்தார். ஒருவரின் பழக்க வழக்கத்தை மாற்றினால் அவர் வாழ்க்கை அடியோடு மாறி மகிழ்ச்சிக்கு வித்தாக அமையும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லும் க்ரெட்சன் மனிதர்களை 1) திட்டமிட்டு உயர்பவர் (Upholder) 2) கேள்வி கேட்பவர் (Questioner) 3) சொன்னால் கேட்பவர் (Obliger) 4) புரட்சியாளர் (Rebel) என இப்படி நால் வகையாகப் பிரிக்கிறார்.

    நீங்கள் முதலில் எந்த டைப் (வகை) என்பதை இனம் காண வேண்டும். திட்டமிட்டு உயர்பவர்களுக்கு அடுத்தவர்களின் உந்துதல் தேவை.

    கேள்வி கேட்டு விடை கண்ட பின்னரே செயல்படுவோருக்கு தன்னைத் தானே மேற்பார்வையிடல் (Monitoring) தேவை. அடுத்தவரும் கூட இவரைச் சரி பார்த்துக் கொண்டே இருக்கலாம். முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிச்சயம்!     

   சொன்னால் கேட்பவர் எதிலிருந்தும் எப்படி தப்பிக்கலாம் எனப் பார்க்கும் சுபாவம் உடையவர். அதைக் கண்காணித்து அப்படித் தப்பித்தலைத் தவிர்த்து விட்டால் இவருக்கும் இவரைச் சார்ந்தவருக்கும் மகிழ்ச்சி பொங்க ஆரம்பிக்கும்.

    தன்னை மதிக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கும் புரட்சியாளருக்கோ காரண காரியத்துடன் எதையும் அலசி ஆராய்ந்து விளக்கினால் போதும், தங்களின் வேண்டாத பழக்கங்களை விட்டு விட்டு மகிழ்ச்சி முகத்தில் தவழ மாற ஆரம்பிப்பர்!

    நல்ல பழக்கவழக்கங்களை இனம் கண்டு அவற்றை வளர்க்க ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு அதன்படி நடக்கிறோமா என்பதை தினமும் மேற்பார்வை பார்த்து, வரும் வாய்ப்புகளைத் தவற விடாமல் பயன்படுத்தி, இதில் கவனத்தைச் சிதற வைப்பவை எவை என்பதை இனம் கண்டு அவற்றை ஒதுக்கி, ஏற்படும் முன்னேற்றங்களை அன்றாடம் ஒரு டயரியில் குறித்து பதிவு செய்து மகிழ்ச்சி பொங்க நீங்கள் வலம் வந்தால் உலகமே உங்களுடன் மகிழ்ச்சியுடன் குலுங்கும்.

   உலகின் சிந்தனைப் போக்கை மாற்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை நிர்ணயிக்க வல்ல இந்த மூன்று பெண்மணிகளது ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த பொருள் கொண்டது என்பதால் அதை ஆழ்ந்து யோசித்து மனதில் ஏற்றி செயல்முறைப்படுத்த வேண்டும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

முயல்வோம்; வெற்றி நிச்சயம்! மகிழ்ச்சிக்கான அஸ்திவாரம் இட விழையும் அனைவருக்கும் (மாலைமலரின்) வாழ்த்துக்கள்!

***

‘மலரினும் மெல்லிது காமம்’; ‘கள்ளினும் காமம் இனிது’- திருக்குறள் (Post No.6955)

Compiled by London  Swaminathan

swami_48@yahoo.com

 Date: 31 AUGUST 2019


British Summer Time uploaded in London –
6-28 AM

Post No. 6955

 Pictures are taken FROM VARIOUS SOURCES. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

செப்டம்பர் 2019 நற்சிந்தனை காலண்டர்

அன்பு, நேசம் பாசம், கணவன் – மனைவி இடையேயுள்ள காதல் பற்றிய 30 தமிழ்- ஸம்ஸ்க்ருதப் பொன் மொழிகள் செப்டம்பர் காலண்டரில் இடம்பெறுகின்றன,

பண்டிகை நாட்கள் – செப்.2 – விநாயக சதுர்த்தி, 3 ரிஷி பஞ்சமி, 6 ராதாஷ்டமி, மஹாலக்ஷ்மி விரதம் ஆரம்பம், 11-ஓணம், பாரதியார் நினைவு தினம், 14- மஹாளயம் ஆரம்பம், 18-மஹாபரணி, 22-மத்யாஷ்டமி, மஹலக்ஷ்மி விரதம் நிறைவு, 28- மஹாளய அமாவாசை, 29- நவராத்ரி ஆரம்பம்.

பௌர்ணமி- 13,

அமாவாசை – 28,

ஏகாதசி விரத நாட்கள் – 9/10, 25

முகூர்த்த நாட்கள்- செப்டம்பர் 1,2,4,8,11,12,16

செப்டம்பர் 1 ஞாயிற்றுக் கிழமை

எல்லோரும் நேசிப்பது மாப்பிள்ளையைத்தான்!

ஸர்வஸ்ய வல்லபோ ஜாமாதா பவதி- ஸம்ஸ்க்ருத பழமொழி

Xxx

செப்டம்பர் 2 திங்கட்கிழமை

அன்புக்குரியவரை திடீரெனப் பிரிவது இடி விழுந்தது போன்றதல்லவா. யாரால் அதைத் தாங்க முடியும்?

ஸஹஸா ப்ரியவிச்சேதம் வஜ்ரபாதம் ஸஹேத் கஹ- ப்ருஹத் கதா மஞ்சரி

Xxx

செப்டம்பர் 3 செவ்வாய்க்கிழமை

செல்வச் செழிப்பின் நோக்கமே நெருங்கிய சொந்த, பந்தங்களை இணைப்பதே- ராமாயண மஞ்சரி 6-1-34

ப்ரிய சமாகமஹ  ஸாரஹ ஸத்யம்  விபவஸம்பதாம்

xxx

செப்டம்பர் 4 புதன்கிழமை

அன்பிற்குரியவர் இறந்துவிட்டால் உலகமே பாலைவனம் ஆகிவிடும்- உத்தமராம சரிதம் – ப்ர்யாநாசே க்ருத்ஸ்னம் கில ஜகத் அரண்யம் பவதி ப்ருஹத் கதா மஞ்சரி

xxx

செப்டம்பர் 5 வியாழக்கிழமை

உறுதியுள்ளம் உடையவரும் கூட  பிரிவால் வருந்துவர்.

ப்ரியப்ராம்சோ தீரைரபி  ந சஹ்யதே

Xxx

செப்டம்பர் 6 வெள்ளிக்கிழமை

மிருகங்களுக்குக் கூட அன்பு  உணர்ச்சியும் பிறவற்றைக் கவனிக்கும் குணமும் உண்டு –

விக்ஞாயந்தே பசுபிரபி ப்ரியாதராஹா – ஸ்ரீராமசரிதாப்திரத்னஹ

xxx

செப்டம்பர் 7 சனிக்கிழமை

அன்பிற்குரியவரின் முழு அன்பைப் பெறுவதற்குத்தானே இத்தனை ஊடலும்.

ப்ரியேஷு சௌபாக்யபலா ஹி சாருதா – குமர சம்பவம் 5-1

Xxx

செப்டம்பர் 8 ஞாயிற்றுக் கிழமை

கள்ளினும் காமம் இனிது – குறள் 1201

Xxx

செப்டம்பர் 9 திங்கட்கிழமை

காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று – குறள் 1255

Love is blind.

xxxx

செப்டம்பர் 10 செவ்வாய்க்கிழமை

காமக்கடல் மன்னும் உண்டே – குறள் 1164

(கடல் போலக் காமம் இருக்கிறது)

Xxx

செப்டம்பர் 11 புதன்கிழமை

இன்பம் கடல் மற்றுக் காமம் – குறள் 1166

Xxx

செப்டம்பர் 12 வியாழக்கிழமை

காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் – குறள் 1167

Xxx

செப்டம்பர் 13 வெள்ளிக்கிழமை

செல்லாமல் உண்டேல் எனக்குரை- குறள் 1151

(பிரிந்துபோக மாட்டேன் என்றால் பேசு)

xxx

செப்டம்பர் 14 சனிக்கிழமை

அன்பிற்குரியவர் அளிக்கும் நீர்க்கடனை முன்னோர்களும் விரும்புவர் -ராமாயண மஞ்சரி

ப்ரியபாணிச்யுதம் வாரி வாஞ்சந்தி பிதரோ அதிகம்

Xxx

செப்டம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை

அன்புடையோர் கொடுக்கும் நற்செய்தி கூடுதல் இனிமையுடைத்து- அவிமாரக நாடகம்

ப்ரியநிவேத்யமானானி ப்ரியாணி ப்ரியதராணி பவந்தி

xxxx

செப்டம்பர் 16 திங்கட்கிழமை

காமம் மறையிறந்து மன்றுபடும் – குறள் 1138

(காமம் பலர் அறிய ஊர் மன்றத்தே வெளிப்படும்)

Xxx

செப்டம்பர் 17 செவ்வாய்க்கிழமை

கருமணியிற் பாவாய் நீ- குறள் 1123

xxx

செப்டம்பர் 18 புதன்கிழமை

பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி- குறள் 1121

Xxx

செப்டம்பர் 19 வியாழக்கிழமை

அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து

(நோயும் அவளே. நோய்க்கு மருந்தும் அவளே) குறள் 1102

xxxx

செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை

கண்டார் உயிருண்ணும் தோற்றம்- குறள் 1084

(இப்பெண்ணின் கண்கள் பார்த்தவர் உயிரை உண்டுவிடும்)

xxx

செப்டம்பர் 21 சனிக்கிழமை

அன்பிற்குரியவர் அன்பற்ற செயல்களைச்செய்தாலும் அவர் பிரியமானவரே- ஹிதோபதேசம் 2-133

அப்ரியாண்யபி  குர்வாணோ யஹ ப்ரியஹ ப்ரிய ஏவ சஹ.

xxx

செப்டம்பர் 22 ஞாயிற்றுக் கிழமை

மலரினும் மெல்லிது காமம் – குறள் 1289

Xxx

செப்டம்பர் 23 திங்கட்கிழமை

புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ- குறள் 1323

ஊடலில் கிடைக்கும் இன்பம் தேவலோகத்தில் உண்டா?

Xxx

செப்டம்பர் 24 செவ்வாய்க்கிழமை

நசைஇயார்  நல்கார் எனினும் அவர்மாட்டு

இசையும் இனிய செவிக்கு – குறள் 1199

அன்பு செய்யவிடினும் அவர்  பற்றிக்கூறப்படும் எல்லாம் என் காதுக்கு இசை போலத்தான்.

Love sees no faults

xxx

செப்டம்பர் 25 புதன்கிழமை

பிடிக்காதவர் செய்த நல்ல செயலும் வேம்பாய்க் கசக்கும்

அப்ரியேண க்ருதம் ப்ரியமபி த்வேஷ்யம் பவதி- பழமொழி

xxx

செப்டம்பர் 26 வியாழக்கிழமை

வேண்டாத பெண்டாட்டியின் (மருமகளின்) கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் பழமொழி

Faults are thick where love is thin

xxx

செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை

தனக்குப் பிரியமானவளைக் குணவதி என்றே மனிதர்கள் நம்புகிறார்கள் – சிசுபாலவதம்

தயிதம் ஜனஹ கலு குணீதி மன்யதே

xxx

செப்டம்பர் 28 சனிக்கிழமை

இந்த உலகில் மனிதர்கள் இரண்டு விஷயங்களை மிகவும் நேசிக்கிறார்கள்- பெண்களையும் நண்பர்களையும்

த்வயாமிதமதீவ லோகே ப்ரியம் நராணாம் ஸுஹ்ருச்ச வனிதா ச – மிருச்சகடிகம்

xxx

செப்டம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை

மூத்த பையனை தந்தை பாராட்டுவான்/நேசிப்பான்; இளைய பிள்ளையை தாய் பாராட்டுவாள்/நேசிப்பாள்

ப்ராயேணஹி ஜ்யேஷ்டாஹா பித்ருஷு வல்லபாஹா மாத்ரூணான் ச  கனீயாம்சஹ- பழமொழி

xxx

செப்டம்பர் 30 ஞாயிற்றுக் கிழமை

ஆசையுள்ள இடத்தில் பூசை நடக்கும்- பழமொழி

xxx subham xxx

கச்சேரியில் ‘டிங்கிள், டிங்கிள் லிட்டில் ஸ்டார்!’ ஆங்கிலேயர் வேதனை (Post No.6954)

Compiled by London  Swaminathan

swami_48@yahoo.com

 Date: 30 AUGUST 2019


British Summer Time uploaded in London – 15-49

Post No. 6954

 Pictures are taken FROM VARIOUS SOURCES. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நான் கற்றுக் கொண்ட ஒரு முக்கிய பாடம்- வட இந்திய ஹோட்டல்களில் மசாலா தோசை, இட்லி, வடை கேட்காதே; தென்னிந்திய ஹோட்டல்களில் பராட்டா, குருமா முதலியன கேட்காதே; இரண்டு இடங்களிலும் சைனீஸ் நூடில்ஸ் Chinese Noodles ஆர்டர் செய்யாதே.

செய்தால் நீண்ட நேரம் சென்று அந்தப் ‘பொருள்கள்’ வரும்;அது அதுவாக இராது.

இதே போல ஹிந்துஸ்தானிக்காரர்

தெலுங்கு, கன்னடக்காரர்கள், கர்நாடக சங்கீத- குறிப்பாக- தமிழ்ப் பாட்களைப் பாடும்போது உச்சரிப்புப் பிழைகள் வருவதை நான் லண்டலிலேயே கேட்டிருக்கிறேன்—“கெட்டும் இருக்கிறேன்”.

தமிழ்ப் பாடகர்களின் இந்தி, மராட்டி உச்சரிப்பும் இப்படித்தான்.

லண்டனில் ஆடல், பாடல் கற்றுக்கொண்ட  ஒரு பெண், — ஆசிரியர் சொன்னதை ஆங்கிலத்தில் எழுதும் போது,  பாரோ (baaro) கிருஷ்ணையா என்பதை கடன்வாங்கு (BORROW பார்ரோ) கிருஷ்ணையா என்று எழுதி படித்துக் கொண்டிருந்ததை என் நண்பர் பார்த்துவிட்டார். பாவம் அந்தப் பெண் நாட்டியம் ஆடினால் “கடன் வாங்கு கிருஷ்ணையா” என்றல்லவோ அபிநயம் பிடிப்பாள்! ஆகப் பொருள் தெரியவிட்டால்,அர்த்தம், அனர்த்தம் ஆகிவிடும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் மதுரையில் R S S விழா ஒன்றில் ‘அப்னி தரத்தி, அப்னா அம்பர் அப்னா ஹிந்துஸ்தான், அப்னா ஹிந்துஸ்தான்’  என்ற இந்தி மொழி   தேசபக்தப் பாடலைப் பாடி முடித்தேன். விழா முடிந்தவுடன் “பாட்டுப் பாடி கொன்னுட்டீங்களே” என்றார் ஒருவர். அது பாராட்டு இல்லை, பாட்டை நான் கொலை செய்ததை அவர் அப்படிச் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளக்கூட எனக்கு சிறிது நேரம் பிடித்தது (சரியான ட்யூப்ப் லைட்டு நான்!)

xxx

75 ஆண்டுக்கு முந்திய அருமையான தமிழிசை மாநாட்டு மலர் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. அதில் சிலர் ‘கைபர் கணவாய்’ போன்ற சுடுமொழிகளையும் இன்னும் சிலர் தமிழ் இலக்கியம் 15,000 ஆண்டுப் பழமையுடையது என்ற உளறல் மொழிகளையும் உதிர்த்து இருந்த போதிலும் பல அருமையான கட்டுரைகளும்,நூற்றுக் கணக்கான அரிய பாடகர் படங்களும் அதிலிருந்து கிடைத்தன.

அதில் 1943-ம் ஆண்டில் ராவ் பகதூர் சம்பந்த முதலியார் பேசிய பேச்சு பொருள் பொதிந்தது .அவர் பல சுவையான சம்பங்களைச் சொல்லி, அதன் கருத்துக்களை விளக்குகிறார்.

கச்சேரிக்கு வந்த ஆங்கிலேயரை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு பாடகி, TWINKLE, TWINKLE LITTLE STAR ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலை ‘கன்னா பின்னா’ என்று பாடி ஆங்கிலேயரை வேதனைப் படுத்தியதையும் இன்னும் சிலர் தேவாரம், தெலுங்கு கிருதிகளைத் தாறுமாறாகப் பாடி அவைகளைக் ‘கொலை செய்ததையும்’  சுவைபட எழுதி இருக்கிறார்.

சில சுவையான சம்பவங்கள் இதோ:–

—subham–

ஆண்டவன் அருள் பெற அன்ன தானம்! (Post No.6952)

Written by S Nagarajan


swami_48@yahoo.com

 Date: 30 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 6-29 am

Post No. 6952

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

மாலைமலர் 14-8-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

ஆண்டவன் அருள் பெற அன்ன தானம்!

ச.நாகராஜன்

தானங்களில் சிறந்தது என்ன தானம்?

அன்ன தானம் தான்!

ஏன்?

ஏனெனில் மற்ற எல்லா தானங்களையும் பெறும் போது இன்னும் கொஞ்சம் பெற மாட்டோமா என்று தோன்றும். ஆனால் அன்னத்தை உண்ட ஒருவன் மட்டுமே திருப்தி அடைந்து போதும் போதும் என்கிறான்.

  திருவள்ளுவர் மகத்தான இரகசியத்தை ஒரு குறளில் விளக்கி விடுகிறார்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322)

இன்று ‘பயோடைவர்ஸிடி எனப்படும் பல்லுயிர் மாண்பைக் காப்போம்; இல்லையேல் உலகம் அழிவு படும்’ என எச்சரிக்கும் அறிவியல் விஞ்ஞானிகளின் கருத்தை, அறிஞர்கள் தொகுத்த எல்லா அறங்களிலும் நூல்களிலும் பிறர்க்குக் கொடுத்து வாழுதலே தலை சிறந்ததாக அமைகிறது என்று கூறி பூமி நிலைத்திருப்பதற்கான இரகசியத்தை திருவள்ளுவர் பழைய காலத்திலேயே வெளியிட்டிருக்கும் பாங்கு பிரமிக்க வைக்கும் ஒன்று.

     கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஒரு பெரும் புலவனும் கூட. அவனும் வள்ளுவர் கருத்தை ஒட்டி பூமி நிலைத்து சிறப்புப் பெறக் காரணங்களை அடுக்கி ஒரு பாடலைப் பாடுகிறான்.

புறநானூற்றில் 182ஆம் பாடலாக அது அமைகிறது.

“உண்டால் அம்ம இவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே” என்று பாடலின் முதல் அடிகளிலேயே இந்திரனின் அமிர்தம் என்றாலும் கூடத் தனியாக உண்ண மாட்டார்கள் என்ற காரணத்தை முதலாகச் சொல்லி அப்படிப்பட்ட தமக்கென வாழாச் சான்றோர்கள் இருப்பதனால் அல்லவா பூமி தனது சிறப்பைப் பெற்று நிலை பெறுகிறது என்று வியந்து கூறுகிறான்.

 ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது தான் தமிழனின் தலையாய தத்துவமாக அமைகிறது. அதாவது தமிழனின் தலையாய தத்துவம் அன்ன தானம் செய்பவன் உயிரைக் காத்தவனாகிறான் என்பதே!

 மணிமேகலை அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரம் மூலம் அன்ன தானமிட்டு பசிப்பிணியைப் போக்குவதை ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலைக் காப்பியம் சிறப்புறச் சொல்கிறது.

பெரும் இரகசியங்களை உலகுக்கு அருளிய திருமூலர், திருமந்திரத்தில் “ஆர்க்கும் இடுமின்; அவர் இவர் என்னன்மின்”

என்கிறார்.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.
என்றும் அவர் கூறி அருள்கிறார். உண்ணும் போது ஒரு கைப்பிடி கொடுப்பதோடு வாயில்லாத ஜீவன்களுக்கும் கூட ஒரு வாய்ப்பிடி கொடு என்கிறார் அவர்.

திருமூலரின் அற்புத அருளுரை இன்னொன்றும் உண்டு. அது படமாடும் கோயில் பகவனையும் நடமாடும் கோயில் நம்பனையும் பற்றியது!

படமாடும் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் அது நடமாடும் கோயில் நம்பற்கு ஆகா;

ஆம் கோவிலில் இறைவனுக்குப் படைப்பவை அவனுக்கு மட்டுமே போய்ச் சேரும்; அது பசியால் வாடும் நடமாடும் கோவிலாக இலங்கும் ஏழைக்குச் சென்று சேராது.

ஆனால், நடமாடும் கோயில் நம்பற்கு ஒன்று ஈயில் அது படமாடும் கோவில் பகவற்கும் ஆகும். ஏழைக்கு ஒன்று இடும் போது அது இறைவனுக்கும் சேர்வதால், இரட்டைப் பயனால் இரட்டைப் பலனைத் தருகிறது! இது திருமூலர் அருளும் இரகசிய அருளுரை!

தர்மர் கிருஷ்ணனை நோக்கி, ‘தானங்களில் சிறந்த தானத்தைப் பற்றி சொல்லி அருள்க’, என்று கேட்ட போது கண்ணபிரான் மிக விரிவாக அன்ன தானப் பலனைப் பற்றிக் கூறுகிறார்.

அன்னதானத்தை விட மேலானதொரு தானம் உண்டானதும் இல்லை; இனி உண்டாகப் போவதும் இல்லை என்பது அவரது முடிவான தீர்மானம்.

கிருஷ்ணர் அன்னதானம் ஏன் சிறப்பானது என்பதை இப்படிக் காரணத்துடன் விளக்குகிறார்:-

“ஏனெனில் தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் என்னும் எல்லாருடைய எக்காலங்களிலுமுள்ள எல்லாக் காரியமும் அன்னத்தில் நிலை பெற்றிருக்கின்றன. ஜீவன் அன்னமயமாகக் கருதப் படுகிறான். தாவரங்களும் ஜங்கமங்களும் அன்னதால் உண்டாகின்றன. தர்மமும், அர்த்தமும், காமமும் அன்னத்தால் உண்டாகின்றன. ஆகையால் அன்னதானத்தை விடச் சிறந்த தானம் மேலுலகிலும் இல்லை” என்கிறார் கிருஷ்ணர்.

(விரிவான விளக்கம் முழுவதையும் ஆஸ்வமேதிக பர்வம் நூற்றோராவது அத்தியாயத்தில் படிக்கலாம்).

அண்மைக் காலத்தில், தமிழகத்தில் வடலூரில் வாழ்ந்து உலகத்தையே அதிசயிக்க வைத்த, அற்புதமான மகான் வள்ளலார் ஆவார். அன்ன தானத்தின் சிறப்பை நன்கு விளக்கிய தமிழ்ச் சித்தர் அவரே!

இரு கொள்கைகளை மனிதப் பிறப்பின் தலையாய கொள்கைகளாக அவர் மனித குலத்தின் முன் வைத்தார் 1) கொல்லாமை 2) அன்ன தானம்.

“ஜீவ காருண்யத்துடன் பசித்தவருக்கு அன்னம் படை; இதில் கால நேரம் பார்க்க வேண்டாம்” என்றார் அவர்.

கொல்லாமை அறத்தைக் கடைப்பிடிக்காதோருக்கு அவரது சன்மார்க்கத்தில் இடமில்லை. இப்படிச் சட்டம் வகுத்த அவர், ஆயின் அவர்கள் கூடப் பசிப்பிணியால் வருந்தினால் அன்னம் ஏற்கத் தடையில்லை என்று அருளினார்.

பசியோடு இருப்பவரைப் பார்த்தால் “பழங்கஞ்சியாயினும் வழங்கவும் நினையீர்” என்பது அவரது அருளுரை!

தருமச்சாலை 23-5-1867 அன்று பிரபவ வருடம் வைகாசி மாதம் 11ஆம் நாள் தொடங்கப் பெற்றது; அற்றார் அழி பசி தீர்க்கும் ஜீவகாருண்ய ஒழுக்கப் பேரறம் அன்று தொடங்கப் பெற்றது.  அன்று ஆயிரம் பேருக்கு மேல் அன்னம் பாலிக்கப்பட்டது. இன்று வரை அப்பணி இடையறாது தொடர்ந்து நடந்து வருகிறது.

அடிகள் செயலாற்ற நினைத்த முழு வீச்சு அளவில் தமிழகம் அவரைக் கடைப்பிடிக்காத சூழ்நிலையில் “கடைவிரித்தோம் கொள்வாரில்லை” என்று கூறிய அந்த அற்புத அவதாரம் தனது அறையில் நுழைந்தது; 30-1-1874 அன்று தைத்திங்கள் 19ஆம் நாளில் அவர் இறைவனோடு இரண்டறக் கலந்தார். உடலுடன் அவர் மறைந்தது சமீப காலத்தில் அறிவியல் கண்டு வியக்கும் பேரதிசயமாகும்.

தமிழ் அறநூல்கள் கூறும் 32 அறங்களில் அனைவருக்கும் உணவு தருவதும் பசுவுக்கு வாயுறை வழங்குவதும் வலியுறுத்தப்படுகிறது.

உலகில் பசிப்பிணியைப் போக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஐ.நாவின் ஃபுட் அண்ட் அக்ரிகல்சுரல் ஆர்கனைசேஷன் (உணவு மற்றும் விவசாய நிறுவனம்) உலகில் இப்போது 100 நூறு கோடி பேர் பசியால் தவிக்கின்றனர் என்று கூறுகிறது. இந்த நிலையைப் போக்க தாராள உதவியைக் கோருகிறது.

ஒரு குழந்தையின் முதல் ஆயிரம் நாட்களில் அதற்கான சரியான உணவு தரப்படவேண்டும் என அறிவியல் ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.

ஆகவே இந்த நிலையைக் கருத்தில் கொண்டு தமிழர் தம் தலையாய அறமான அன்னதானத்தை அனைவரும் சிரமேற்கொண்டு செய்ய வேண்டுவது இன்றைய கால கட்டத்தில் முக்கியமான ஒன்றாக அமைகிறது.

ஒவ்வொருவர் இல்லத்திலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதும் இதர குடும்ப விழாக்களின் போதும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தோ அல்லது குறைத்தோ ஆங்காங்கே அன்னதானத்தை மேற்கொண்டு தேவையானோருக்குப் பசிப்பிணியைத் தீர்க்க முன்வரலாம்.

தமிழ் மங்கையர் தர்ம உணர்வில் தலை சிறந்தவர்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு இல்லத்தரசியும் ஆடம்பரத்தைக் குறைத்து அன்னம் வழங்கும் அன்ன லெட்சுமியாக – அன்னபூரணியாக மாறி மற்றவர்களுக்கு வழி காட்டினால் வள்ளலார் ஆசி பெற்ற அற்புத பூமி மலரும், இல்லையா!

***,

–subham–

பாம்பும் வசம்பும் (Post No.6949)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 29 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 9-20 AM

Post No. 6949

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

பழைய பத்திரிக்கைகளில் பாம்புக்கடிக்கு சில மருந்துகள் சொல்லப்படுகின்றன. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது தமிழ்ப் பழமொழி. வசம்பைக் கண்டால் பாம்பும் நடுங்கும் என்பது பத்திரிக்கை மொழி; எந்த அளவுக்கு உண்மை என்பது பாம்புப் பிடாரர்களுக்கே தெரியும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

நஞ்சு முறிப்பான், வசம்பு பற்றிய செய்திகளுடன் கொஞ்சம் மருத்துவ துணுக்குகளும் இதோ:-

TAMIL TABLE- WEIGHTS, KUNDUMANI, VARAHAN

tags- பாம்பு விஷம், வசம்பு, நஞ்சு முறிச்சான், மண் ட் ரேக், மாசக்காய், குங்குமப்பூ