மே,2019 ஞான ஆலயம் இதழில் வெளியாகியுள்ள
இரண்டாவது கட்டுரை!
பாரதீய விஞ்ஞானத்தின் பன்முகப் பரிமாணங்கள்! – இங்கு இல்லாதது
எங்கும் இல்லை!
காதலை எழுதக் கற்றுக் கொடுக்கும் சாஸ்திரங்கள்!
ச.நாகராஜன்
புற ஆராய்ச்சிகளால் மேலை நாட்டினர்
கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் உள்ளுணர்வால் ரிஷிகளின் அகத்தில் தோன்றும் பாரதீய விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளுக்கும்
ஏராளமான வித்தியாசங்கள் உண்டு.
ஒரு கண்டுபிடிப்பை இன்னொரு கண்டுபிடிப்பு
நிராகரிப்பது மேலை நாட்டு விஞ்ஞானம். ஆனால் சத்தியத்தின் அடிப்படையில் நித்தியமாக என்றும்
உள்ள உண்மைகளைக் கண்டுபிடிப்பது பாரதீய விஞ்ஞானம்.
சுமார் நான்கு லட்சம் சம்ஸ்கிருத
சுவடிகளும் ஏராளமான தமிழ்ச் சுவடிகளும் திறக்கப்படாமல் அப்படியே உள்ளன.
ஆனால் ஆங்காங்கே மிக அரிதாக
ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தும் போது அவர்கள் தரும் அற்புதமான தகவல்களை அறிந்து வியக்கிறோம்.
எடுத்துக்காட்டாக இரண்டே இரண்டு
ஆய்வுகளை மற்றும் இங்கே குறிப்பிடலாம்.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார்
அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முனைவரான திருமதி கா.சத்தியபாமா தமிழ்ச்சுவடிகளை ஆராய்ந்து
மாயச்சதுரம் அமைக்கும் முறைகளைச் சுவடிகள் கூறுவதைக் கண்டு வியந்து அதை விளக்கியுள்ளார்.
சம்ஸ்கிருத நூலான பீஜ பல்லவா
என்பது கிருஷ்ண தைவக்ஞரால் இயற்றப்பட்டது. இது அல்ஜீப்ரா பற்றிய அழகான நூல். இதை ஆய்வு
செய்து டாக்டர் சீதா சுந்தர் ராம், “பீஜபல்லவா ஆஃப் க்ருஷ்ண தைவக்ஞா – அல்ஜீப்ரா இன் ஸிக்ஸ்டீந்த்
செஞ்சுரி இந்தியா – எ க்ரிடிகல் ஸ்டடி!”(Bijapallava of Krsna
Daivajna – Algebra In Sixteenth Century India – A Critical Study by Dr Sita
Sundar Ram) என்ற நூலை எழுதியுள்ளார்.
(287 பக்கம் உள்ள இந்த நூலை 2012ஆம் ஆண்டு ‘தி குப்புசாமி சாஸ்திரி
ரிஸர்ச் இன்ஸ்டிடியூட்’,மைலாப்பூர், சென்னை – 600004 வெளியிட்டுள்ளது. நூலின் விலை ரூ
400/).
எண்ணி எண்ணி வியக்கிறோம் – எப்படி பழைய காலத்திலேயே இப்படி அரிதான
விஷயங்களை பாரதீய விஞ்ஞானிகள் அல்லது ரிஷிகள் அல்லது அறிஞர்கள் எழுதியுள்ளனர் என்று!
(ஏற்கனவே இது பற்றிக் கட்டுரைகளை எழுதி விட்டதால் இவர்களைப் பற்றி இங்கு விவரிக்கவில்லை)
இந்த வகையில் நம் கவனத்தைக் கவர்பவர் மஹாஸ்ரீ அனெகல் சுப்பராய
சாஸ்திரி. இவரது வாழ்க்கை வரலாறு பிரமிப்பூட்டும் ஒன்று. இவரது அறிவோ நம்மைத் திகைக்க
வைக்கிறது.
இளம் வயதில் சொல்லொணாத் துன்பம் அனுபவித்தவர் ஸ்ரீ
சாஸ்திரிகள். ஒரு விதமான தோல் பற்றிய நோய் அவரைத் தாக்கவே அவர் கடும் துன்பமடைந்தார்.
ஒவ்வொரு இடமாகத் தவழ்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு நாள் தாகம் அதிகரிக்கவே
நீர் அருந்த ஒரு குளத்திற்குச் சென்றவர் அதில் வீழ்ந்து விட்டார். அப்போது தான் ஒரு
அற்புதம் நிகழ்ந்தது. ஒரு குகையில் தான் இருப்பதை அவர் கண்டார். அங்கு ஒரு மகான் அவர்
மீது கருணை மிகக் கொண்டு அவரது நோயைத் தீர்த்து வைத்தார்.
அத்துடன் பல சாஸ்திரங்களை அவருக்கு உபதேசித்தார்.
அற்புதமான அந்த ஆற்றலைப் பெற்ற சாஸ்திரி அதை மக்களுக்கு விளக்க ஆரம்பித்தார். பரத்வாஜ
ரிஷி அருளிய விமான சாஸ்திரம், சோலார் எனர்ஜி எனப்படும் சூரிய கிரணங்களின் ஆற்றலை விளக்கும்
அம்சுபோதினி உள்ளிட்டவற்றை பெங்களூரில் உள்ள வெங்கடாசல சர்மாவிடம் கூற அவர் அதை எழுதிக்
கொண்டு ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். மஹாஸ்ரீ அனெகல்
சுப்பராய சாஸ்திரிகளைப் பற்றி பிரபல ஜோதிடர் திரு பி.வி.ராமனின் பாட்டனாரான. பி.சூரியநாராயண
ராவ் (1856-1937) அவருடனான தனது
சுவையான பிரமிக்க வைக்கும் அனுபவங்களை விரிவாக விளக்கியுள்ளார்.
ஸ்ரீ சுப்பராய சாஸ்திரிகள் விளக்கியுள்ள சாஸ்திரங்களைப்
பற்றிய ஒரு சிறு குறிப்பை மட்டும் இங்கே பார்ப்போம்:
அக்ஷரலக்ஷ சாஸ்திரம் : இதில் அகர முதலான எழுத்துக்கள்,
எண்கள், இலக்கணங்கள், மொழியின் வடிவம், அடையாளங்கள், குறியீடுகள் உள்ளிட்டவை – 14 லோகங்களிலும்
உள்ளவை -விளக்கப்பட்டுள்ளன.
லிகித சாஸ்திரம் : எல்லா ஸ்லோகங்களையும் எப்படி எழுதுவதென்று
விளக்கும் சாஸ்திரம் இது.
கணித சாஸ்திரம் : அனைத்து லோகங்களிலும் இன்று நிலவி
வரும் கணிதத்தின் பல்வேறு விஷயங்களைத் தரும் இந்த சாஸ்திரத்தில் 18 சாஸ்திரங்கள் உள்ளன.
ஜோதிட சாஸ்திரம் : 64 விதமான ஜோதிட மற்றும் வானவியல்
இரகசியங்களை விளக்கும் அபூர்வ சாஸ்திரம் இது.
நிருக்த சாஸ்திரம் : வேத வியாக்யானங்களை விளக்கும்
சாஸ்திரம் இது.
வைசேஷிக சாஸ்திரம் : இதில் ஏழு வகை சாஸ்திரங்கள் உள்ளன.
நியாய சாஸ்திரங்களும் இதில் அடக்கம்.
வேதாந்த சாஸ்திரம் : இதில் 132 வேதாந்த சித்தாந்தங்கள்
அடங்கியுள்ளன. பூர்வ பக்ஷம், வேதாந்தம் ஆகியவற்றை விமரிசித்து விவாதித்து முடிவான முடிவைத்
தருபவை இவை.
பட்ட சாஸ்திரம் : இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன.
இவை நியாய சாஸ்திரத்துடன் ஒத்திருப்பவை.
பிரபாகர சாஸ்திரம் : மூன்று பிரபாகர சித்தாந்தங்கள் விளக்கப்படும் இதில்
நியாய சாஸ்திரங்களும் உள்ளன.
நியாய சாஸ்திரம் : இதில் 84 சாஸ்திரங்கள் உள்ளன. கதாதரரின்
ஐந்து வேதங்கள், வைகானஸ தர்க்கத்தின் 42 வேதங்கள், கௌட தர்க்கத்தின் 60 வேதங்கள் இதில்
விளக்கப்படுகின்றன.
வியாகரண சாஸ்திரம் : ஒன்பது வகை இலக்கணங்கள் விளக்கப்படுகின்றன
இதில்.பாணிணீயம், மஹாவியாகரணம், ஐந்திரம்,சாந்திரம்,
சகதவாணம், ஸ்போட்டயாணம் முதலியவை பற்றி இதில் காணலாம்.
சப்த சாஸ்திரம் : ஒலியின் நுட்பம் பற்றிய விஞ்ஞானம்
இது. ஆறு சாஸ்திரங்கள் இதில் உள்ளன.
தர்க்க சாஸ்திரம் : தர்க்க விஞ்ஞானம். இதில் உள்ள
எட்டு சாஸ்திரங்கள் 84 (லாஜிக் எனப்படும்)
தர்க்க விவாதங்களை அலசி ஆராய்கின்றன.
மீமாம்ஸ சாஸ்திரம் : கர்மா எனப்படும் செயல் பற்றியது இது. அதாதோ தர்ம
ஜிக்ஞாஸா என ஆரம்பிக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதை இயற்றியவ்ர் ஜைமினி
ரிஷி. ஜைமினி மீமாம்ஸை தத்வ தர்ம பிரகரணம், தர்மாபேத அபேதம்,சேஷசேஷீ பாவம், ப்ரயோஜக,
ப்ரயோஜிக பாவம், கர்மா, அதிகாரி நிரூபணம்,சமன்யாதிதேசம், விசேபாதிதேசம், ஊஹா,பாதா,
தந்திரம், ப்ரஸங்கம் ஆகிய 12 விஷயங்களை விளக்குகிறது. இப்போது புழக்கத்தில் உள்ளது
இது தான்.
ஆனால் இது தவிர இன்னும் மூன்று சாஸ்திரங்கள் பிரமிக்க
வைக்கும் பல இரகசியங்களை விளக்குபவை.
சந்தஸ் சாஸ்திரம் : கவிதை பற்றியது இது. யதி, (அதாவது
எழுத்துக்கள் ஒத்திருக்க வேண்டும், இடையில் நிறுத்தங்கள் சரியானபடி அமைய வேண்டும்)
கனம் (அதாவது அளவுடனான சீர்கள் பற்றிய கவிதா இலக்கணம்) மற்றும் பல்வேறு வகை கவிதா வடிவங்கள்
பற்றியது இது. இதில் 12 சாஸ்திரங்கள் உள்ளன.
அலங்கார சாஸ்திரம் : அணிகள், மொழியின் அலங்காரங்கள்
பற்றியது.உவமான, உவமேயம் உள்ளிட்டவை இதில் விளக்கப்படுகின்றன. இதில் 9 சாஸ்திரங்கள்
உள்ளன.
சில்ப சாஸ்திரம் : -சிற்பம், கட்டிடக்கலை பற்றியது
இது. 32 சாஸ்திரங்கள் இதில் உள்ளன. 364 வகையான
சிற்பங்கள் இதில் விளக்கப்படுகின்றன.
சுப சாஸ்திரம் : உணவு வகைகளைச் சமைக்கும் சமையல் சாஸ்திரம்.
116 வகையான உணவு வகைகளை எப்படி சமைப்பது என்பதை இது விளக்குகிறது.
மாலினி சாஸ்திரம் : இரகசியமாக காதல் சங்கேதங்களை விளக்கும்
சாஸ்திரம் இது. மலர்களில் எழுதுவது எப்படி, மாலைகள், பூங்கொத்துகள் வாயிலாக காதல் செய்திகளைப்
பரிமாறுவது எப்படி என்பதை இது விளக்குகிறது. இதில் எழுதுவதற்கு விசேஷ தொழில்நுட்பம்
தேவை. இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன.
ஜரிஹர சாஸ்திரம் : போர்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்
தயாரிக்கப்படும் அனைத்து உலோகங்கள் பற்றியது இது. வெடிமருந்துகள், துப்பாக்கி குண்டுகள்,பீரங்கிகள்,
வில் அம்புகள் உள்ளிட்ட போர் சாதனங்களை விளக்கும் இதில் ஒன்பது சாஸ்திரங்கள் உள்ளன.
நூறாயிரம் விதமாக சுடும் போர்முறைகள் இதில் விளக்கப்படுகின்றன.
பிரளய சாஸ்திரம்: இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன. பிரபஞ்சத்தில்
இருக்கும் ஓவ்வொரு உயிரினத்தின் ஆயுள் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை இது விளக்குகிறது.
எப்படி உருமாற்றம் ஏற்படுகிறது, எப்படி இறுதி பிரளயம் ஏற்படுகிறது என்பதையும் இது விளக்குகிறது.
கால சாஸ்திரம் : பொருள்கள் அனைத்தும் எந்தக் காலத்தில்
உருவாகின்றன, எப்போது அழிக்கப்படுகின்றன என்பது பற்றிய கால சாஸ்திரம் இது. அறுவடைகள்,
விதைப்பது எப்படி, வளர்ப்பது எப்படி என்பது பற்றியும் கால சாஸ்திரம் விளக்குகிறது.
மாயா வாத சாஸ்திரம் : 20 வகை மாஜிக் கலைகளை விளக்கும்
சாஸ்திரம் இது. மாயமாக மறைவது, திருப்பி வருவது உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் வித்தைகள்
இதில் விளக்கப்படுகின்றன.
இது தவிர மருத்துவ சாஸ்திரம் உள்ளிட்ட ஏராளமான சாஸ்திரங்களின்
உள்ளார்ந்த இரகசியங்கள் பாரதீய விஞ்ஞானத்தில் உள்ளன.
அனைத்தையும் விளக்க ஒரு தனி நூலே தேவை.
இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் அணுகுண்டு
உள்ளிட்ட ஆயுதங்களை நவீன விஞ்ஞானிகள் உருவாக்கியது பாரத தேசத்தின் புராதன நூல்களை வைத்தே
தான் என்பதும் நியூமரலாஜி நிபுணரான சீரோ தஞ்சாவூரில் தான் இதைக் கற்றார் என்பதும் நவீன
கால புத்தகங்கள் ஆதாரங்களுடன் விளக்க ஆரம்பித்துள்ளன என்பது தான்.
பண்டைய பாரதத்தின் மேன்மையை ஆராய்ந்து பல ஆய்வாளர்கள்
இப்போது அதை வெளி உலகிற்கு கொண்டு வருவது ஒரு நல்ல சகுனம்!
மதம்
மாறிய காந்திஜி மகனுக்கு மௌல்வி பட்டம்! அன்னை கஸ்தூரிபாய் கதறல் (Post
No.6392)
காந்திஜியின் மகன் ஹீராலால் மதம் மாறி
செய்த அட்டூழியங்கள் கஸ்தூரி பாயின் உடல் நலத்தை வெகுவாக பாதித்தது. சிறிது
காலத்துக்குள் சிறையிலேயே அன்னை கஸ்தூரிபா மரணம் அடைந்தார். அதற்கு முன் மகனுக்கு
கண்ணீர் சிந்த கடிதம் எழுதினார். முஸ்லீமாக மதம் மாறி காந்திஜியைப் பரிகாசம்
செய்தார். இதையும் கஸ்தூரிபா கடித்தத்தில் சொல்லத் தவறவில்லை. அவருக்கு மௌல்வி
பட்டம் கொடுக்கவந்த முஸ்லீம்களிடம் அடே பாவிகளா, இது
உங்களுக்கே அடுக்குமா? என்று கேட்கிறார். அப்பன் பெயரை
கெடுத்துவிட்டாயே என்று மகன் மீது கோபம் கொண்டு அங்கலாய்க்கிறார்.
ஒரு தாயின் உருக்கமான கடிதத்தை ஒவ்வொருவரும்
படிக்க வேண்டும். பிற்காலத்தில் காந்திஜியிடம் அவரது மகன்களின் தீய வாழ்க்கை
பற்றிக் கேட்ட போது நான் பூர்வ ஜன்மத்தில் செய்த பாவத்தை மூட்டை கட்டிக்கொண்டு
வந்துவிட்டேன் என்றார்.
மஹாகவி
பாரதியாரின் கவிதைகளில் 803 உவமைகள் இடம் பெற்றுள்ளதாக நூலாசிரியர் சிவ.மாதவன் தெரிவிக்கிறார்.
இதில் 533 உவமைகள் உவம உருபு பெற்றுள்ளன. 270 உவமைகளில் உவம
உருபு தொக்கி வந்துள்ளது.
உருபு தொக்கி நிற்கும் உவமை :-
இதற்கு எடுத்துக்காட்டாக,
‘மதுரத் தேமொழி மங்கையர்’
‘நண்ணுமுக வடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்’
‘கோலக் குயிலோசை – உனது
குரலினிமையடீ’
என்பனவற்றைச் சுட்டிக் காட்டலாம்.
எடுத்துக்காட்டு உவமையுடன் வினாவை இணைத்து பாரதி பாடிய பாடலின்
ஒரு பகுதி இது:
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்
மின்மினி கொள்வாரோ?
கண்ணிலு மினிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?
இல்பொருளுவமைக்கு ஒரு எடுத்துக் காட்டு இதோ:
குன்று குதிப்பதுபோல் – துரியோதனன்
கொட்டிக் குதித்தாடுவான்.
இல்லாத ஒன்றை உவமையாக்கை உரைப்பது இல் பொருள் உவமை. மலை குதிப்பது
போல துரியோதனன் குதித்து ஆடுவான் என்பது அருமையான
இல்பொருளுவமை.
பாரதியாரின்
பாடல்களில் உருவக அணியும் ஏராளமாக உள்ளது.
21 வகை
உருவகங்களில் பாரதியாரின் பாடல்களில் ஐந்து வகை உருவகங்களைக் காண முடிகிறது.
ஆகிய
என்ற சொல் இல்லாமல் வரும் தொகை உருவகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ:
‘தொல்லைதரும்
அகப்பேய்’
‘காமப்பிசாசைக்
– குதிக்
கால்கொண்டடித்து
விழுத்திடலாகும்’
‘நல்ல
னெந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன்’
இம்மூன்றிலும்
அகப்பேய், காமப்பிசாசு, துயர்க்கடல் என்பன தொகை உருவகங்களாகும்.
இன்னும்
வஞ்சப்புகழ்ச்சி அணி, பெருமை அணி, ஐயவணி, உடனிகழ்ச்சியணி, முரணனி, பொருள்முரண், தன்மேம்பாட்டுரையணி,
சுவையணி ஆகிய அணிகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டப்படும் பாரதியாரின் கவிதைகளைப் பார்த்தால்
பாரதியாரை ஒரு புதிய பரிமாணத்தில் பார்த்து ஆஹா என்று வியக்க முடிகிறது.
பாரதியாரின்
சொல்லாட்சி தனித்துவம் வாய்ந்த ஒன்று. உள்ளம், விழி, நிலவு, அமுதூற்று, வீசி, அடா,
அடீ போன்ற சொற்களைப் பாரதியார் நயம்படக் கையாண்டிருப்பது வியப்பூட்டும் ஒன்று.
ஒரு பாடல்
முழுதும் குறியீடாக அமையின் அது முழுநிலைக் குறியீடு எனப்படும். இந்த வகையில் பாரதியாரின்
அக்கினிக்குஞ்சு மற்றும் விடுதலை ஆகிய இருபாடல்கள் முழுநிலைக் குறியீடு அமைந்த பாடல்களாக
உள்ளன.
பாரதியாரின்
அற்புதமான கவிதைகளில் உவமைகள் உணர்த்தும் செய்திகள் பல.
ஒவ்வொரு
சொல்லையும் அவர் கையாண்ட விதத்தின் அழகே அழகு.
தீ –
படரும் செந்தீப் பாய்ந்திடுமோர் விழியுடையாள் (பராசக்தியின் கண்களைப் பற்றிப் பாடுகையில்
இப்படிக் கூறுகிறார்)
மின்னல்
: திரௌபதியின் கண் வீசும் ஒளி – மின்செய்கதிர்
நிலவு
: பொங்கிவரும் புது நிலவு, நிலவூறித் ததும்பும் விழி
சிங்கம்
– நரி தந்திடு ஊனுணாச் சிங்கமே என வாழ்தல் சிறப்பு
உலோகம்
(பொன்) – பொன் போல் குரலும்
பொன்னை நிகர்த்த குரலும்
பொன்னங்குழலின்
புதிய ஒலி தனிலே
மேலே
தரும் செய்திகளோடு, இப்படியே மரம், பயிர், புல், கரும்பு, விழல்,மலர்,குன்றம், உணவுப்
பொருள்கள் ஆகியவற்றிற்கான கவிதைகளை சிவ.மாதவன் அழகுற எடுத்துக் காட்டுகிறார்.
இன்னும்
தேச விடுதலை, பெண் விடுதலை, ஆன்ம விடுதலை பற்றிய பாடல்களில் பாரதியாரின் பலவிதமான உவமைகளைக்
கண்டு களிப்படையலாம்.
தன் நூலில்
எடுத்தாண்ட பிற நூல்களின் குறிப்பாக சுமார் 610 குறிப்புகளை இந்த நூலாசிரியர் தருவதன்
மூலமே அவரது ஆராய்ச்சியின் ஆழம் தெரிய வருகிறது.
துணை
நூற்பட்டியலில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களின் பெயர்களையும், முப்பதுக்கும்
மேற்பட ஆங்கில நூல்கள் மற்றும் கட்டுரைகளின் பட்டியலையும் காண்கிறோம்.
இத்துடன்
அருமையான ஆறு இணைப்புகள் நூலின் இறுதியில் உள்ளன:
வடமொழி
அணியிலக்கண நூல்கள்
தமிழ்
அணியிலக்கண நூல்கள்
பாரதியார்
கவிதைகளில் உவமை அகராதி
பாரதியார்
கவிதைகளில் இடம் பெற்றுள்ள உவம உருபுகள்
பாரதியார்
கவிதைகளில் உருவக அகராதி
பாரதியின்
சில புதுமைச் சொற் சேர்க்கைகள்
மேலே கண்டவற்றுள் 3,4,5,6 ஆகிய பகுதிகளை நன்கு
ஆய்ந்து ஓர்ந்து உணர்ந்தால் நம் கண் முன்னே புதிய பாரதியார் தோன்றுவார்.
இந்த புதிய பாரதியாரை நம் கண் முன்னே காண வைக்கும்
சிறப்பான ஆராய்ச்சி நூலாக இந்த நூல் திகழ்கிறது.
மீண்டும் நமது பாராட்டுதல்களை சிவ.மாதவனுக்கு
அளிக்கிறோம்.
இந்த நூல் பாரதி ஆர்வலர்களுக்கு ஒரு இன்றியமையாத
நூல் என்பதை மீண்டும் கூறி இதை வாங்குமாறு பரிந்துரை செய்கிறோம்.