அயோக்கியர்கள் பாட புத்தகத்தைத் தயாரித்தால்?! (Post No7504)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7504

Date uploaded in London – 28 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

அயோக்கியர்கள் பாட புத்தகத்தைத் தயாரித்தால்?!

ச.நாகராஜன்

செகுலர் தேசத்தில் – அதாவது இந்தியா என்னும் பாரதத்தில் அயோக்கியர்கள் பாட புத்தகத்தைத் தயாரித்தால் என்ன ஆகும்?

ஹிந்துக்களை கயவர்கள் போலவும் அழுக்கு ஆசாமிகள் போலவும் சித்தரித்து கிறிஸ்தவர்களையும் முஸ்லீம்களையும் பரம யோக்கியர் போலவும் எல்லா நல்ல பழக்கங்களையும் உடையவர்கள் போலவும் சித்தரிக்கப்படும்.

சமீபத்தில்  இந்த சதித்திட்டம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சென்ட்ரல் போர்ட் ஆஃப் செகண்டரி எஜுகேஷன் (CBSE – Central Board of Secondary Education) தயாரித்து வழங்கும் கேஜி பாடபுத்தகத்தில் (KG Textbook) ஹிந்து தர்மத்தையும் ஹிந்துக்களையும்  மறைமுகமாக இழிவுபடுத்தும் பகுதிகள் உள்ளன.

எடுத்துக்காட்டுகள் :

ஒரு பிராமணர் அவமதிக்கப்படும் விதத்தில் ஒரு படம் இருக்கிறது. அதில் குழந்தைகள் பெயிண்ட் அடிக்க வேண்டும். இந்த பிராமணர் ஒரு வாழைப்பழத் தோலில் கால் வைத்து வழுக்கி விழும் சித்திரத்தில் குழந்தைகள் பெயிண்ட் அடிக்க வேண்டும்.

கவனிக்கவும். ஒரு கிறிஸ்தவ பாதிரியோ அல்லது மௌல்வியோ வழுக்கி விழவில்லை. ஒரு பிராமணர் வழுக்கி விழுகிறார்!!

 அடுத்து புதிர் பகுதி:

அதில் குழந்தைகளுக்கு தரப்படும் உதாரணங்கள் இவை:

ராஜா தினமும் குளிப்பதில்லை.

கரண் தினந்தோறும் பல் துலக்குவதில்லை.

கீதா அழுக்கான ஆடைகளை அணிகிறாள்.

ஹனிப் திறந்தவெளியில் விளையாடுகிறான்.

பால் வகுப்பறையில் நேராக உட்கார்கிறான்.

இப்படி ஏராளமான உதாரணங்கள்.

கீதா அழுக்கான உடை – ஆனால் ஹனிப் விளையாடுவதோ திறந்தவெளி!

ராஜா தினமும் குளிப்பதில்லை – ஆனால் பால் வகுப்பில் நேராக உட்கார்கிறான்.

இதை மிக்க இளம் வயதில் படிக்கும் குழந்தைகள் மனதில் ஹிந்துக்கள் அழுக்கானவர்கள், அவர்கள் எந்த நல்ல பழக்கத்தையும் கொண்டிருக்க மாட்டார்கள் என்ற விஷ விதை விதைக்கப்படுகிறது. கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு இப்படி ஒரு விஷ வித்து!

அதே சமயம்  கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் எல்லா விதத்திலும் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டிருப்பவர்கள்!

பிராமணன் வாழைப்பழத் தோல் தடுக்கி விழும் முட்டாள்; ஆனால் மௌல்வியும் பாதிரியும் பரம விழிப்புணர்ச்சி உள்ளவர்கள்.

என்னடா செக்குலரிஸம் இது.

ஹிந்து ராஷ்டிரம் வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் என இப்போது புரியும்!

இப்படி பகிரங்கமாக ஹிந்துக்களை மட்டும் இழிவு படுத்தும் ஒரு பாட புத்தகத்தைத் தயாரித்தது யார்? ஏன்?

நமது அரசியல்சட்டம் 28,29, 30இன் படி மைனாரிடிகளுக்கு அவர்களது வேத புத்தகத்தைச் சொல்லித் தர அனுமதிக்கிறது.

ஆனால் அதே சட்டம் இந்துக்கள் அதிகமாக உள்ள இந்த தேசத்தில் பகவத்கீதை உள்ளிட்ட ஹிந்து தர்ம புத்தகங்களைக் கற்பிக்க அனுமதிக்கவில்லை.

ஏன் இப்படி? செக்குலரிஸம் – இது தான் பதில்!

என்னடா இது செக்குலரிஸம்?!

ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும்.

விவேகானந்தர் சொன்னது போல விழிமின் எழுமின் என்பது தான் இன்றைய கோஷமாக ஆக வேண்டும்.

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மீது யாருக்கும் வெறுப்பு இல்லை – ஆனால் அதே சமயம் ஹிந்துக்களை மட்டும் இழிவு படுத்தி தங்கள் தீய நோக்கங்களை அடைய முயற்சிக்கும் தீய சக்திகளை அனுமதிக்கவும் ஹிந்துக்கள் தயாரில்லை!

இதற்குத் தீர்வாக பாரதத்தை தர்ம ராஷ்டிரம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோருவதில் என்ன தவறு?!

புரிந்து கொள்ள வேண்டும் – அனைவரும்!

****

tags – செக்குலரிஸம், பாட புத்தகம், விஷம்,அயோக்கியர்

மேலே உள்ள செய்திக்கு ஆதாரமான கட்டுரை Truth 25-10-2019 Volume 87 No 26 – இதழில் வெளியாகியுள்ளது.

நன்றி : Truth

ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

Cultural Denigration

It is reported from New Delhi under the caption, “Conspiracy to show Hindus as inferior and glorify minorities in CBSE’s textbook” as follows :

A lesson on degrading Hindus as inferior and  glorifying Muslims and Christians is included in the KG textbook of CBSE (Central Board of Secondary Education). A conspiracy of brainwashing Hindu children has been hatched, thus, creating misunderstanding in them about Hindu Dharma and Hindus. 

In this textbook, a denigrating image of Hindu Brahman has been printed, and the children have been asked to paint it. This Hindu Brahman is shown falling on the ground after slipping on a banana peel. This textbook

not contain any objectionable image of Christian clergy or Muslim moulvi. 

The textbook contains quizzes on a subject such as identifying good and bad habits. It includes examples such as ‘Raja does not bathe every day’. ‘Karan does not brush his teeth every day’, ‘Gita dresses in unhygienic clothes’, ‘Hanif plays in open-air’, ‘Paul sits straight in the classroom’, etc. In these examples, attempts have been made to convince children that Hindu boys and girls have bad habits; whereas, Muslims or Christians have good habits. 

Some devout Hindus said that such a book is creating hatred in the mind of Hindu culture, sanskars and traditions from childhood in a 

systematic manner. (Sanatan Prabhat 1-15 July 2019) 

  1. Such knave tactics to display Hindus in culturally poor show was pursued by the British before independence. Unfortunately the same trend to denigrate Hindus continues to be followed by the secular anti-Hindu institutions and bodies. Non Hindus must be pampered and Hindus humiliated and insulted. This is the so-called secular spirit, a Hindu is supposed to appreciate and inculcate amongst children. The Articles 28,29 and 30 of our constitution also permit teaching of scripture of minority segment in India in educational institutions, but prohibit study of Bhagavad Gita and other books on Hindu Dharma. Unless Bharat is established as a Dharma Rashtra such nefarious tactics to denigrate Hindu culture will continue to prevail.

Thanks : Truth

***********

சித்தூரின் வரலாறு : சந்தாவின் பீஷ்ம பிரதிக்ஞை! (Post No.7496

சித்தூரின் வரலாறு : சந்தாவின் பீஷ்ம பிரதிக்ஞை! (Post No.7496

WRITTEN BY S NAGARAJAN

Post No.7496

Date uploaded in London – 26 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

  சித்தூரின் வரலாறு : சந்தாவின் பீஷ்ம பிரதிக்ஞை!

ச.நாகராஜன்

சித்தூர் அபூர்வமான வீரர்களைக் கொண்டது. அதன் வரலாற்றில் ஒரு பொன்னேடு தான் சந்தாவின் பீஷ்ம பிரதிக்ஞையைப் பற்றித் தெரிவிக்கிறது.

சித்தூரை ஆண்ட ராணா லாக்கா இப்ராஹிம் லோடியை அடித்து வீழ்த்தித் துரத்தினான். இதனால் அவன் பெயரும் புகழும் எங்கும் பரவின.

அவனது மகன்களில் சந்தா மூத்தவன். பெரும் வீரன். அனைத்து நற்குணங்களின் இருப்பிடமாக அவன் திகழ்ந்தான்.

இதை அறிந்த ஜோத்பூரின் அரசன் தன் மகளை சந்தாவுக்கு மணம் முடிக்க் எண்ணினான்.

அந்தக் கால வழக்கப்படி ஒரு பிராமணரிடம் தேங்காய் உள்ளிட்ட மங்கலப் பொருள்களைத் தந்து மணம் பேசி முடிக்க அனுப்பினான் ஜோத்பூர் அரசன்.

சித்தூர் வந்த பிராமணன் அரசனிடம் தன் மன்னன் கூறியதைச் சொல்லி தேங்காயைச் சமர்ப்பித்தான்.

தேங்காயைப் பெற்ற ராணா லாக்கா விளையாட்டாக சிரித்துக் கொண்டே, “ இதை இந்த முதியவனுக்குக் கொடுத்து பெண் கொடுப்பதாக அல்லவா நினைத்தேன். இப்படி ஒரு விளையாட்டு விளையாடலாமா?” என்று வேடிக்கையாகக் கேட்க அரசவையில் இருந்த அனைவரும் இந்த நகைச்சுவையைக் கேட்டுச் சிரித்தனர்.

இதைக் கேட்டுக் கொண்டே அரசவையில் நுழைந்த சந்தா, அரசவையினரை நோக்கி, “ சபையோரே! எனது தந்தையார் விளையாட்டாக இதைச் சொல்லி இருந்தாலும் அவர் சொன்னது சொன்னது தான். அந்தப் பெண்ணை நான் மணக்க மாட்டேன். அவளை என் தாயாராகவே பார்ப்பேன்” என்றான்.

அனைவரும் திடுக்கிட்டனர்.   

லாக்கா எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். சந்தா கேட்கவில்லை.

விளையாட்டு இப்போது வினையாகி விட்டது.

தேங்காயைத் திருப்பி அனுப்ப முடியாது. அது மிகத் தீவிர விளைவை உண்டாக்கி போரில் வேண்டுமானாலும் கொண்டு விடும்.

என்ன செய்வது?

நன்கு யோசித்த லாக்கா இறுதியாக ஒரு அஸ்திரத்தைத் தன் மகன் சந்தா மேல் பிரயோகிக்க நினைத்தான். “இதோ பார், மகனே! நீ மட்டும் அவளை மணக்கவில்லை எனில் உனக்கு இந்த ராஜ்யம் கிடைக்காது. ஜோத்பூர் அரசனான ராணாமல்லாவின் மகளை நான் மணந்தேன் எனில் அவளுக்குப் பிறக்கும் மகனே இந்த நாட்டை ஆள்வான்” என்றான்.

இப்படிக் கூறினால் சந்தா உடனே அவளை மணக்கச் சம்மதிப்பான் என்று எண்ணிய லாக்காவிற்கு இப்போது உரிய பதிலை சந்தா வீரத்தோடு கூறினான்: “தந்தையே! உங்கள் பாதத்தைத் தொட்டு வணங்கி இதைக் கூறுகிறேன். எனது புதிய தாய்க்குப் பிறக்கும் மகனே சித்தூரை ஆள்வான். நான் அவனுக்குக் காலம் முழுவதும் துணையாக இருந்து பணிவிடை புரிவேன். இது சத்தியம்” என்றான்.

அனைவரும் திடுக்கிட்டனர்; அவனது சபதம் கேட்டு பிரமித்தனர்.

ஐம்பது வயது லாக்காவிற்கும் ஜோத்பூர் ராணாமல்லாவின் 12 வயது மகளுக்கும் திருமணம் நடந்தது.

பின்னர் உரிய காலத்தில் அவள் ஒரு மகனைப் பெற்றாள்.

அவனுக்கு முகுலன் என்று பெயர் சூட்டப்பட்டது.

முகுலனுக்கு ஐந்து வயது ஆகும் போது கயாவை முஸ்லீம்கள் தாக்கினர்.

இதைக் கேட்ட சித்தூர் அரசன் அதைத் தடுக்கப் படையுடன் செல்ல விழைந்தான்.

மகனை அழைத்த அவன்; “சந்தா! இப்போது கயா நோக்கிச் செல்கிறேன். ஆனால் பெரும் படையை எதிர்த்துப் போரிட வேண்டியிருப்பதால் திரும்புவது சந்தேகம் தான். முகுலனுக்கு நீ என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டான்.

“தந்தையே! அவனே சித்தூர் அரசன்” என்று கூறிய சந்தா அவனுக்கு மகுடம் சூட்ட ஏற்பாடு செய்யலாம் என்றான்.

ஆனால் லாக்காவிற்கு இது சரியென்று படவில்லை. ஐந்து வயது சிறுவன் எப்படி ஒரு நாட்டை ஆள முடியும்?

ஆனால் சந்தா உறுதியாக இருந்து முகுலனுக்கு மகுடன் சூட்டினான்.

எதிர்பார்த்தபடி லாக்கா திரும்பி வரவில்லை; போரில் அவன் வீர மரணம் எய்தினான்.

முகுலனுக்கு உறுதுணையாக இருந்து சந்தா செய்த ஆட்சி அனைவராலும் பாராட்டப்பட்டது. அனைவரும் அவனைப் புகழ்ந்தனர்.

முகுலனின் அன்னைக்கு இப்போது ஒரு சந்தேகம் தோன்றியது.

இப்படி உறுதுணை என்று சொல்லி தானே அரசாட்சியை சந்தா கைப்பற்றி விடுவானோ?

அன்னையின் இந்த எண்ணத்தை ஒருவாறாக அறிந்த சந்தா மிகவும் வருத்தப்பட்டான்.

நேராக அவளிடம் சென்றான்: “அன்னையே! சித்தூரை விட்டு இன்றே நான் செல்கிறேன். இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்; உங்கள் சந்தேகத்தையும் போக்கி விடும். விடை தாருங்கள். ஆனால் என்றேனும் எனது உதவி தேவை எனில் செய்தி அனுப்புங்கள். உடனடியாக ஓடோடி வந்து உங்களுக்குத் தேவையானதைச் செய்வேன்” என்றான். சித்தூரை விட்டு அன்றே அவன் அகன்றான்.

சந்தா சென்றவுடன் முகுலனின் அன்னை தனது சகோதரனை ஜோத்பூரிலிருந்து வரவழைத்து அரசாட்சியில் தனக்கு உதவுமாறு வேண்டினாள். அவன் வந்தான்.

பின்னர் ராணா மல்லாவே இன்னும் பல அரசு அதிகாரிகளை சித்தூருக்கு அனுப்பினான். இப்போது சித்தூரின் மீது அவனுக்குப் பேராசை பிறந்தது. அதையும் தானே கைப்பற்றி ஆண்டால் என்ன?

இந்த எண்ணம் தோன்றியவுடன் தன் மகளுக்குப் பிறந்த முகுலனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டலானான்.

இதை அறிந்த முகுலனின் அன்னை – ராணா மல்லாவின் சொந்த மகள் -மிகவும் வேதனையுற்றாள்.

இப்போது என்ன செய்வது? அவளுக்குச் சந்தாவின் நினைவு வந்தது.

உடனடியாக அவனுக்குச் செய்தி அனுப்பி, “உடனே வந்து தன்னையும் முகுலனையும் சித்தூர் அரசையும் காப்பாற்றுமாறு” வேண்டினாள்.

செய்தியைப் பெற்றவுடன் சந்தா நேராகச் சித்தூர் விரைந்தான்.

ராணா மல்லாவை அடக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டான்.

ராணா மல்லாவையும் அவனுடன் சேர்ந்த அனைவரையும் கொன்றான். சித்தூர் ராணா மல்லாவிடமிருந்து விடுவிக்கப்பட்டது. ராணா மல்லாவின் மகன் போதாஜி சித்தூரை விட்டு ஓடி விட்டான்.

ராணா முகுலனுக்கு இறுதி வரை சந்தா உதவி செய்தான்.

சந்தாவின் சரிதம் சித்தூர் வரலாற்றில் பொன்னேடுகளால் பொறிக்கப்பட்ட சரிதம் ஆயிற்று.

***

ஆதாரம் : டிசம்பர் 2018 கல்யாண கல்பதரு ஆங்கில மாத இதழ்

நன்றி : Kalyana – Kalpataru

மாமிசம் சாப்பிட்ட பிராமணர்கள்- மநு தரும் ‘லிஸ்ட்’ (Post No.7489) மநு நீதி நூல் – பகுதி 47


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7489

Date uploaded in London – 24 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மானவ தர்ம சாஸ்திரம் எனப்படும் மநு நீதி நூலில் பத்தாம் அத்தியாயத்தில் 73 சுலோகங்களைச்  சென்ற கட்டுரையில் கண்டோம். இன்று 10-74 முதல் இறுதி வரை காண்போம். முதலில் சுவையான விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன்.

நாலு வர்ணத்தாருக்கும் உயிர்போகும் ஆபத்து நேரிடுமானால் அவர்கள் சொந்த தர்மங்களைக்        கைவிட்டு ஆபத்கால தர்மங்களைப் பின்பற்றலாம் என்பது மனுவின்  வாதம்.

10-75 சங்க இலக்கிய நூல்களும் அதைத் தொடர்ந்து வந்த திருக்குறள் முதலியனவும் பிராமணர்களை அறு தொழிலோர் என்று புகழும்; அந்த 6 தொழில்களை 10-75-ல் காணலாம்.

10-77 முதல் 10-80 மற்ற வர்ணத்தாரின் குலத் தொழில்கள்.

10-84 உழவுத் தொழில் , பிராமணர்களுக்கு லாயக்கானது இல்லை. ஏனெனில் உழவின் மூலம் உயிர்க் கொலை நடக்க  வாய்ப்பு இருக்கிறது (இது பிராமணர்களின் பரிபூரண அஹிம்சையைக் காட்டுகிறது; சங்க இலக்கியமும் பிராமணர் வீட்டு உணவு வகைகளில் சைவ உணவை மட்டுமே இயம்பும்.அவர்களுடைய  தெருக்கள்  கோழியும் நாயும் உள்ளே புக முடியாத தூய்மையுடையன  என்றும் 2000 ஆண்டுக்கு முன்னரே புகழ்கின்றது )

10-81 முதல் 10-85 வரை – ஆபத் கால தர்மம்

10-81 முதல் 10-93 வரை பிராமணர்கள் விற்கக்கூடாத பொருட்களின் பட்டியல்

10-94 பண்டமாற்று செய்யலாம்

10-96 பேராசையுடன் மற்றவர்க்குரிய தொழிலை செய்ய விழைவோரை நாடு கடத்து; சொத்துக்களைப்  பறிமுதல் செய்.

10-97 கீதையின் எதிரொலி

ச்ரேயான் ஸ்வதர்மோ விகுணஹ பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்

ஸ்வதர்மே நிதனம் ஸ்ரேயஹ  பரதர்மோ பயாவஹக -3-35

பொருள்

நன்கு அனுஷ்டிக்கக் கூடிய பிறருடைய தர்மத்தைக் காட்டிலும்  , தவறுகளுடன் கூடிய சொந்த தருமமே மேலானது. தன்னுடைய தர்மத்தில் சாவும் மேலானதே .

பிறனுடைய தர்மம் பயத்தைத் தரும். 3-35

xxxx

உவமைகள்

10-102 முதல் 10-104 வரை பிராமணர்கள் பற்றிய உவமைகள்

கங்கை நீர்,  தீ , ஆகாயம் போல தூய்மைமிக்கவர்கள்.

xxxx

இவற்றை எல்லாம் சொல்லும் மநு , அந்த ரிஷிகளை மகா தபஸ்விக்கள் என்றும் வருணிக்கிறார். அதற்கு முன்னர்  தூய்மையானவர்கள் கங்கைக்கும், அக்நிக்கும் ஆகாயத்துக்கும் சமமானவர்கள். அசுத்தப் பொருட்கள் அவர்களைத் தீண்டா  என்றும் சொல்கிறார்.

ஆனால் விஷமக்கார இந்து மத விரோதிகள் இதையெல்லாம் மறைத்துவிட்டு ‘காமா சோமா’ என்றும் ‘கன்னா பின்னா’ என்றும் எழுதி மகிழ்வர்!

Xxx

10-115, 10-116 ஆகிய இரண்டு ஸ்லோகங்களிலும் மநு மூன்று ஜாதியினரும் பசி வந்த காலத்தே, கஷ்ட காலத்தே பொருள் ஈட்டக்கூடிய 10+7 = 17 வழி முறைகளை விளம்புகிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

10-120 ல் மன்னன் எவ்வளவு வரி வாங்கலாம் என்று உரைக்கிறார்.

10-124 ல் சூத்திரர்களுக்குத் தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் பிராமணர்கள் தரவேண்டும் என்று கட்டளை இடுகிறார்.

10-127 ல் பஞ்ச காலத்தில் சூத்திரர்களும் வேதம் ஓதுதலைத் தவிர மற்ற உயர்ந்தோர் தொழிலையும் செய்யலாம் என்பார் .

10-129ல் சூத்திரர்கள் அளவுக்கு அதிகமாக பொருள் ஈட்டுவது ஆபத்தில் முடியும் என்பார். இதைப் படிப்போர் முந்தைய அத்தியாயத்தில் பிராமணர்கள் கொஞ்சமும்  பொருள் சேர்த்துவைக்கக்கூடாது என்று சொல்லியிருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இத்துடன் பத்தாவது அத்தியாயம் நிறைவு பெறுகிறது.

–subham—

வைர ஊசி முதல் ராக்கெட்டின் வைர ஜன்னல் வரை (Post No.7487)

 

 

 

Normal 0 false false false EN-GB X-NONE TA

 


/* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:””; mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt; mso-para-margin-top:0cm; mso-para-margin-right:0cm; mso-para-margin-bottom:8.0pt; mso-para-margin-left:0cm; line-height:107%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:”Calibri”,sans-serif; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi; mso-fareast-language:EN-US; mso-bidi-language:AR-SA;}


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7487

Date uploaded in London – 23 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a
non- commercial blog.

 

 

இது இத்தொடரில் வைரங்கள் பற்றிய ஒன்பதாவது கட்டுரை

வெளியான தேதி-
ஜனவரி
2000- பிப்ரவரி 2000

பத்திரிக்கையின் பெயர்- ஜெம்மாலஜியும் ஜோதிடமும்

 

கட்டுரைத் தலைப்பு –
வைர ஊசி முதல் ராக்கெட்டின் வைர ஜன்னல் வரை

 

Pictures    வைர ஊசிகள் , வைரக் கருவிகள் , வைர ட்ரில்கள்

வைர ஊசிகள் , வைரக் கருவிகள் , வைர ட்ரில்கள் 

அதிசயமடா அதிசயம்! 57 தலைமுறை அதிசயம்!! (Post No.7486)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7486

Date uploaded in London – 23 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Tags 57 , தலைமுறை, பிருஹத் ஆரண்யக, உபநிஷத்,வம்ச பரம்பரை

வைரங்களை மதிப்பிடுவது எப்படி? (Post No.7479)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7479

Date uploaded in London – 21 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இது இத்தொடரில் ஏழாவது கட்டுரை

வெளியான தேதி-  OCTOBER – NOVEMBER 1999

பத்திரிக்கையின் பெயர்- ஜெம்மாலஜியும் ஜோதிடமும்

கட்டுரைத் தலைப்பு – வைரங்களை மதிப்பிடுவது  எப்படி?

Tags  –  வைர மதிப்பு,  மதிப்பீடு

—subham–

வைரத்தை பிரிப்பது எப்படி? (Post N.7475)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7475

Date uploaded in London – 20 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இது இத்தொடரில் ஆறாவது கட்டுரை

வெளியான தேதி-  நவம்பர்  – டிசம்பர்  1999

பத்திரிக்கையின் பெயர்- ஜெம்மாலஜியும் ஜோதிடமும்

கட்டுரைத் தலைப்பு – வைரத்தை பிரிப்பது எப்படி?

Tags  – வைரங்கள், வகை, தரம், பிரிப்பது,

துயிலையிலே, பயிலையிலே, அயிலையிலே யார் துணை? (Post No. .7473)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7473

Date uploaded in London – 20 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

சொக்கநாதப் புலவர் பெரும் தமிழ்ப் புலவர். அவருக்கு ஒரு சிந்தனை! பல்வேறு நேரங்களிலும் துணையாகத் தமக்கு இருப்பது யார் என்று. யோசித்தார். விடையைக் கண்டு கொண்டார். புலவர் என்பதால் ஒரு பாடலிலே அதைச் சொல்லி விட்டார்.

அவருக்கு உற்ற துணையாக இருப்பவரே அனைவருக்கும் உற்ற துணையாக எப்போதும் இருப்பார்.

யார் அவர்? பாடலைப் பார்ப்போமா?

துயிலையி லேடர் துன்னையி லேதெவ்வர் குழையிலே

பயிலையி லேயிருட் பாதியி லேபசும் பாலனத்தை

அயிலையி லேவய தாகையி லேநமக் கார்துணைதான்

மயிலையி லேவளர் சிங்கார வேலா மயிலையிலே

பொருள் :

மயில் அயில் வளர் சிங்காரவேலர் மயிலையிலே – மயிலையும் கூர்மை வளர்கின்ற அழகிய வேலையும் கொண்டவரது திருமயிலையிலே

துயிலையிலே – தூங்கும் பொழுது

இடர் துன்னையிலே – துன்பம் மிகும் போது

தெவ்வர் குழையிலே – பகைவரை எதிர்கொள்ளும் போது

பயிலையிலே – சஞ்சரிக்கும் போது

இருள் பாதியிலே – பாதி இரவிலே

பசும் பால் அன்னத்தை அயிலையிலே – பசும்பாற் சோற்றை உண்ணும் போது

வயது ஆகையிலே – ஆயுள் முடியும் போது

நமக்கு ஆர் துணை – நமக்கு யார் துணை ஆவார்?

மயிலைச் சிங்காரவேலரே தான் துணை என்பதை சொக்கநாதப் புலவர் உணர்ந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.

நமக்கும் வேல் முருகன் தானே துணை!

அடுத்து அவரது இன்னொரு பாடல்:

போதா சிவகுரு நாதா கலவை புழுகொடுசவ்

வாதாந்த கொங்கைக் குறமாது வள்ளிக்கு வாய்த்திடுமின்

பாதா ருகற்செற்ற வேல்வித் தாலென் பகையையறுக்

காதா மனமிரங் காதா சிவகிரிக் காங்கேயனே

பொருள் :

போதா – ஞானத்தை உடையவனே

சிவகுருநாதா – சிவனுக்கு தேசிகோத்தமனே

கலவை புழுகொடு சவ்வாது ஆர்ந்த – கலவைச் சந்தனமும் புனுகு சவ்வாது பூசப்பட்ட

கொங்கை – மார்பகங்களை உடைய

குறமாது வள்ளிக்கு – குறப்பெண்ணாகிய வள்ளிக்கு

வாய்த்திடும் இன்பா – கிடைத்த சுகானுபவத்திற்குரியவனே

தாருகன் செற்ற வேல் விடுத்தால் – தாருகனைக் கொன்ற வேலாயுதத்தைப் பிரயோகித்தால்

என் பகையை அறுக்காதா – என் பிறவிக்கேதுவாகிய ஐம்புலப் பகையை அறுக்காதா

மனம் இரங்காதா – உனக்கு (என் மேல்) மனம் இரங்காதா

சிவகிரி காங்கேயனே – சிவகிரியில் எழுந்தருளியுள்ள காங்கேயனே!

சொக்கநாதர் காட்டிய வழியில் முருகனைத் துதிப்போம்; ஐம்புலப் பகையை அறுப்போம்!

tags – சொக்கநாதப் புலவர், சிவகிரி, துயிலையிலே

****

குழந்தை பிறக்காதது ஏன்? (Post No7472)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7472

Date uploaded in London – 19 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பிரிட்டனில் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் அவ்வப்போது மருத்துவப் பிரச்சினைகள் பற்றி பயனுள்ள கட்டுரைகள் வெளியாகும் .அத்தகைய ஒரு கட்டுரை குழந்தை பிறக்காமல் இருக்க  என்ன  காரணங்கள் என்பதை புல்லட் பாயிண்டுகளில் தருகிறது. குறிப்பாக ஆண்கள் பற்றிய விஷயம் இது.

குழந்தைக்காக ங்குவோர்  எல்லா கலாசாரங்களிலும் , மதங்களிலும், நாடுகளிலும் உள்ளனர். இயற்கையான காரணங்களை வீட நாமாக உண்டாக்கிக் கொள்ளும் செயற்கையான தடைகளும் உண்டு. அவைகளை நாம் தவிர்க்கலாம். மருந்து , சிகிச்சை என்று ஏதேனும் படித்தால் மருத்துவ நிபுணர்களைக் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்யாதீர்கள்.

1.வயது ஒரு காரணம். 70 வயதுக்குப் பின்னர்கூட குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரமுகர்கள் பற்றிப் பத்திரிகையில் படிக்கிறோம் . ஆனால் ஆண் விந்து உற்பத்தி 40 வயதுக்குப் பின்னர், 25 வயதுக்காரனை விட,  பாதியாகக் குறைந்துவிடுகிறது.

2.மதுபானம் அருந்துவர்களுக்கும், சராசரி மனிதனைவிட ஆண் விந்து உற்பத்தி குறைவே. அதிகம் குடிப்போருக்கு குழந்தை உற்பத்தி செய்யும் சக்தி மிகவும் குறைந்துவிடும்.

3.சிகரெட் குடிப்போருக்கும் , ஆண் உயிரணுக்களின் உற்பத்தி சரி பாதிதான்.

4.போதை மருந்துக்கு அடிமையானோரின் உயிர் அணு – விந்து – மிக வேகமாக நீந்துவதால் ,பெண்ணிடம் உற்பத்தியாகும் முட்டையை அடைவதற்குள் களைப்படைந்து விடுமாம் .

5.அதிக எடையுடையோர் பிள்ளை பெற்றுக்கொள்வதில் கஷ்டப்படுவார்கள். காரணம் என்னவென்றால் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் சமச் சீராக இருப்பதில்லை. உடல் பருத்தவர்கள் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் முதலில் எடையைக் குறைக்கவேண்டும்

6.புறச் சூழல் மாசுபடுவதும் குழந்தை பெரும் விகிதத்தைக் குறைத்துவிட்டது. பிரிட்டனில் மது, புகை பிடித்தல் , புறச் சூழல் கேடு ஆகியன காரணமாக முன்னர் இருந்ததைவிட விந்து  உற்பத்தி பாதியாகக் குறைந்துவிட்டது. 1950களி ல் ஆண்  விந்து உற்பத்தியை தற்கால ஆண்களுடன் ஒப்பிட்டதில் இது தெரியவந்தது.

7..இத்தாலியில் நடந்த ஆராய்ச்சியில் மாலை 5 மணி முதல் 5-30 வரை விந்து உற்பத்தி மிகவும் அதிகமாக இருந்தது 500 ஆண்களைச் சோதித்ததில் கண்டுபிடிக்கப்பட்டது .

8.அடுப்பங்கறையில் அதிக நேரம் செலவழிப்போரும்  , அதிக வெப்பம் வெளியிடும் எந்திரங்களின்  இடையே வேலை செய்வோரும், குழந்தை பெற்றுக்கொள்ள சிரமப்படுவார்கள்.  வெப்பத்தால் விந்து உற்பத்தி பாதிக்கப்படுவதே இதற்குக் காரணம் . ஜக்குஸி (Jacuzzi) ,வெப்ப ஊற்றில் குளிப்பவர்களுக்கும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு உண்டு.

9.ட்யூனா மீன் , மகேரல் மீன்(Tuna and Mackerel)  வகைகளில் அதிக பாதரச விஷம் (Mercury poisoning) இருப்பதாலும் பாதிப்பு உண்டு.

10.ஈயத்துக்கும் (Lead) விந்து உற்பத்தியைப் பாதிக்கும் குணம் உண்டு .ஈய உபகணரங்களுடன் வேலை செய்வோர் கவனமாக இருக்கவேண்டும்.

11.மொபைல் போன் அதிர்வுகள், கிரணங்கள் பாதிக்குமா என்பதில் இருவேறு கருத்துக்கள் உள்ளதால் ஒன்றும் சொல்வதற்கில்லை .

12.வலி நிவாரணி (Pain Relief) மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்துவதும் பதிப்பை உண்டாக்கும்.

13.செயற்கை உரம் பயன்படுத்தாத இயற்கை உர தாவரங்கள் காய்கனிகளைச்  சாப்பிடுவோருக்கு குழந்தை பெறுவது எளிது.

14.மாதுளம் பழச் சாறு சாப்பிடுவோருக்கு ஜனன உறுப்புகளில் ரத்தம் பாய்வது அதிகரிக்கிறது என்பதும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டது. நாள்தோறும் ஒரு கோப்பை பழச் சாறு சாப்பிடலாம்.

15.ஆண்கள் உறுப்பை இறுக்கமாகப் பிடிக்கும் ஆடைகளை அணிய கூடாது.

16.ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ஆய்வில் வாரத்துக்கு மூன்று முறை படுக்கை அறைக்கு செல்வது நல்லது என்று காட்டியது. கிணற்றில் தண்ணீர் எடுக்க எடுக்க ஊறுவது போல விந்து உற்பத்தியும் நடைபெறும்.

17.பாலியல் நோய் (STD or VD) வந்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும். ஏனெனில் அதுவும் குழந்தை பிறப்பதைப் பாதிக்கும்.

18.வாகனங்களில் செல் வோர்  மூக்கில் அசுத்தக் காற்று உள்ளே செல்லாதபடி முகமூடி அணிவதும் நலம் பயக்கும்.

19.மன உளைசல், மனக்கவலை ஆகிய னவும் குழந்தை பெறுவதற்குத் தடையாக நிற்கிறது. ஆகையால் கவலை இல்லாத, மனா நிறைவுடன் வாழ்தல் குழந்தை பெற உதவும். எல்லாம் அவன் செயல் என்று விட்டுவிட்டு நிம்மதியாக வாழவேண்டும்.

20.அந்த விந்துவில் இரண்டு வகை; எக்ஸ் X விந்து என்ற வகை பெண் குழந்தைகளை உருவாக்கும். இவை வலுவானவை. நீண்ட காலம் உயிர்த்துடிப்புடன் இருக்கும். ஒய் Y வகை விந்து ஆன் குழந்தைகளை உருவாக்கும். இவை நீண்ட வால் உடையவை. வேகமாக நீந்த வல்லவை .

21.குழந்தை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. சிலர் குழந்தை பெற முயற்சிக்கும் முன்னர் கூட (Pre-Conception Test)  , சோதனை செய்து கொள்கின்றனர். பிரச்சனை உள்ள குடும்பங்களில் இப்படி முன்கூட்டி சோதனை செய்வது தாமதத்தைத் தவிர்க்க உதவும்.

22.இறுதியாக துத்தநாக (Zinc) உலோக உப்புக்கள் நிறைந்த உணவு விந்து உற்பத்தியை அதிகரிக்கிறது. இதுதான் காரணம் என்று தெரிந்தால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் நாள்தோறும் பத்து மில்லி கிராம் மாத்திரை எடுக்கலாம். டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் இதைச் செய்தல் அவசியம்.

Xxxx

லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து

எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே

Xxx subham xxx

வைரத்தின் குணங்கள் (POST No.7471)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7471

Date uploaded in London – 19 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இது இத்தொடரில் ஐந்தாவது கட்டுரை

வெளியான தேதி-  ஆகஸ்ட் – செப்டம்பர்  1999

பத்திரிக்கையின் பெயர்- ஜெம்மாலஜியும் ஜோதிடமும்

கட்டுரைத் தலைப்பு – வைரத்தின் குணங்கள்.

Actress Elizabeth Taylor wearing Burton-Taylor Diamond
subham

tags – வைரம் , குணங்கள்