சொன்னது எல்லாம் 100 % பலிக்கும் ஜோஸியர்! (Post No.5030)

WRITTEN by London Swaminathan 

 

Date: 20 May 2018

 

Time uploaded in London – 16-46 (British Summer Time)

 

Post No. 5030

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

ஒரு ஊரில் ஒரு மஹா தரித்திரன் இருந்தான்; எதைத் தொட்டாலும் விளங்கவில்லை. பிச்சை எடுத்துப் பிழைக்க வேண்டியதாயிற்று. ஒரு நாள் பிச்சை எடுக்கப் போன போது ஒரு வீட்டில் இருந்து மசாலா வாசனை அடித்து. கதவு மூடி இருந்த போதும் எச்சில் இலைக்காக திண்ணையில் காத்திருந்தான். அப்போது   ‘சொய்ங்’ என்று சப்தம் ஒலித்தது.

 

ஆஹா! மசாலா தயாரன பின்னர் தோசை ‘ரெடி’ ஆகிறது. கொஞ்சம் ‘வெயிட்’ பண்ணுவோம் என்று காத்து இருந்தான். மீண்டும் சொய்ங்ங்ங்’ சப்தம்; ஓஹோ இரண்டு தோசை ‘ரெடி’ என்று கணக்குப் போட்டான். இப்படி பத்து முறை சப்தம் கேட்கவே பத்து தோசை தயார்; ஒன்றிரண்டு கேட்டுப் பார்ப்போம் என்று கதவைத் தட்டினான்.

‘அம்மா, தாயே, வயிறு காயுது; ஏதேனும் கொஞ்சம் கஞ்சித் தண்ணி வாருங்களேன்’ என்றான் பய பக்தியோடு.

அந்த அம்மாளோ வழக்கம் போல ‘இல்லை’ பாட்டுப் பாடினாள்.

 

மசாலா தோசை

என்ன தாயே! இல்லை என்று சொல்லலாமா? பத்து தோசையில் ரெண்டு தோசையாவது போடலாமே! என்றான்.

அந்த அம்மாளுக்கு ஆயிரம் ‘வாட்’ ‘ஷாக்’ அடித்தது.

அடப் பாவி மகனே! இவன் பெரிய சாமியாரோ அல்லது ஜோஸியனோ கர்ரெக்டா சொல்லிப்புட்டானே ! பத்து தோசை என்று எண்ணி,  பய பக்தியோடு இரண்டு தோசைகளைப் பரிமாறி சூடான காப்பியும் கொடுத்து அனுப்பினாள்.

குழாய் அடிக்கு தண்ணீர் பிடிக்கப்போன போது 100 சதவிகிதம் பலன் சொல்லக்கூடிய ஜோஸியர் தன் வீட்டுக்கு வந்த செய்தியை ஒவ்வொரு வீட்டுப் பெண்மணியிடமும் சொல்லித் தீர்த்தாள்.

 

 

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்

அதிர்ஷ்ட தேவதை நமது பிச்சைக்கார ஜோஸியர் மீது கடைக் கண் பார்வையைச் செலுத்தவே கழுதை காணவில்லை என்று ஒரு வண்ணான் அந்த புதிய ஜோஸியர் வீட்டு வாசலில் நின்றான். அவருக்குப் பிழைக்கும் வழி புரிந்துவிட்டது.

“அன்பா! இன்று இரவு சக்கரம் போட்டு பூஜை செய்து கண்டு பிடிப்பேன் ; பொழுது விடிந்ததும் வா” என்றான்.

அன்றிரவு முழுதும் ஜோஸியர் கழுதையைத் தேடி ஓட இவர் அதிர்ஷ்டம்! கழுதை கிடைத்தும் விட்டது!

‘கழுதை கெட்டால் குட்டிச் சுவர்’ என்பது பழமொழி அல்லவா!

 

 

“பொழுது விடிந்தது யாம் செய்த தவத்தால் புன்மை யிருட்கணம் போயின யாவும்” என்று திருப்பள்ளி எழுச்சி பாடும் நேரத்தில் கழுதை தேடும் வண்ணானும் வந்தான்;

அன்பனே! தெருக்கோடி வீட்டின் குட்டிச் சுவர் அருகே போ; உன் கழுதை உனக்காக காத்திருக்கும் என்றான். என்ன அதிசயம்! கழுதையும் கிடைத்தது.

அந்த வண்ணான்,  தான் போகும் வாடிக்கையாளர் வீடுகளில் எல்லாம் மஹா ஜோஸியரின் புகழைப் பரப்பினான். அவன் அரண்மனைக்கும் வண்ணான். ராஜா காதிலும் செய்தி விழுந்தது.

மன்னாதி மன்னன்

ராஜாவுக்குக் கொஞ்சம் நாளாகப் புதுக் கவலை. அரண்மனை வைர நகைகளைக் காணோம்; அந்த நேரத்தில்  இந்த சகல நோய்களுக்கும் கைகண்ட மருந்து போல மஹா ஜோஸியர் தகவலும் வரவே சிறந்த காவலர்களை அழைத்து பறந்து போய் , சிறந்த ஜோஸியரை உடனே அழைத்து வருக என்று கட்டளை இட்டனன்.

 

 

ராஜா வீட்டு சேவகர்களைக் கண்டவுடன் கூஜா தூக்கும் போலி ஜோஸியருக்கு உதறல் எடுத்தது. சேவகர்களும் திருட்டைக் கண்டு பிடிக்க உங்களை ராஜா அழைத்தார் என்று சொல்லி குதிரையில் ஏற்றிக் கொண்டு சிட்டாய்ப் பறந்தனர். ஜோஸியர் பயத்தில் ‘திருடன், திருடன்’ என்று உளறத் துவங்கினார். இரண்டு சேவகர்களும் குதிரையை நிறுத்தி தண்ணீர் குடிப்பது போல அந்தப் பக்கம் போய் காதோடு காதாகப் பேசினர்.

“ஏய், ஜோஸியர் அய்யா. நம்மைத் திருடன் என்று கண்டுபிடித்து விட்டார். அவர் வழி எல்லாம் திருடன் திருடன் என்று நம்மைத் திட்டிக்கொண்டே வருகிறார். உண்மையிலேயே இவர் பெரிய ஜோஸியர்– ஆகையால் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு உண்மையை சொல்லி விடுவோம் என்று ஜோஸ்யர் காலில் விழுந்து செப்பினர்

“ஐயா, நாங்கள்தான் அரண்மனை நகைகளைத் திருடினோம்; நீங்களும் எங்களைத் திருடர்கள் என்று கண்டு பிடித்து விட்டீர்கள்– இன்றிரவே நகைகளை ஒப்படைக்கிறோம் ; எங்களை மட்டும் காட்டிக் கொடுத்து விடாதீர்கள்; ‘ப்ளீஸ்’” என்று கெஞ்சிக் கூத்தாடினர்.

 

அவரும், “அன்பர்களே! மன்னித்தேன், மறந்தேன். புறப்படுவோம்” என்றார்.

 

ராஜாவின் அரண்மனையில்

 

“ஓய் ஜோஸியரே! என்னமோ பெரிய ஜோஸியர் என்று சொல்லுகிறார்கள்– களவு போன நகைகளைக் கண்டு பிடியுங்கள் தவறினால் தக்க தண்டனை உண்டு; கண்டு பிடித்தாலோ நீர் தான் ஆஸ்தான ஜோஸீயர்” என்றார் மன்னன்.

ஜோசியருக்கு ஏற்கனவே நகை பற்றித் தெரிந்து விட்டதால்

“ராஜாதி ராஜனே! என் ஜோதிடம் பொய்யாகுமா? இன்றிரவே பூஜை போட்டு நாளையே  நகை கிடைக்க வழி வகை செய்வேன்” என்றார்.

 

சேவகத் திருடர்களும் இரவோடு இரவாக ஜோஸியரிடம் நகைகளைக் கொண்டு வந்தனர்.அவர் ஒரு குறிப்பிட்ட மரத்தடியில் அவைகளைப் புதைக்கச் சொன்னார்.

 

மறு நாள் காலையில் மன்னர் அவையில் அனைவரும் ஆர்வத்துடன் காதுகளைத் தீட்டிக் கொண்டு நிற்க ஜோஸியர், இந்த மரத்துக்கு அடியில் அந்த நகைகள் உள்ளன. அவை எல்லாம் குட்டிச் சாத்தான் செய்த வேலைகள் என்றார். அரசனும் சேவகர்களை அனுப்ப நகையும் கிடைத்தது.

 

கம்பளிப் பூச்சி

 

ஆனால் மந்திரிமார்களுக்கு ஒரு சம்ஸயம்; அதாவது சந்தேஹம்; இந்தப் பயலோ பூர்வீகத்தில் பிச்சைக்கரன் என்று நமது உளவாளிகள் சொல்லுகின்றனர். இவனுக்கு ஆஸ்தான ஜோதிடர் பட்டமா? இவன் வண்டவாளத்தை ரயில் தண்டவாளத்தில் விடுவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எல்லோரும் ஒன்று சேர்ந்தனர். அவர்களில் ஒரு அமைச்சர் ஒரு கம்பளிப் பூச்சியைக் கையில் வைத்து மூடிக்கொண்டு

“ஓய், ஜோஸியரே! நீவிர் மஹா பெரிய ஜோஸியர் என்றால் எங்கள் கையில் இருப்பது என்ன என்று விளம்புங்கள்?” என்றனர்.

 

அவருக்கு நடுக்கம் ஏற்பட்டது.

அடக்கடவுளே!

“அங்க தப்பி, இங்க தப்பிச்சுக் கொண்டு அகப்பட்டுக் கொண்டேனே கம்பளி முத்தன்” என்று சொல்லிக் கொண்டே தன் கம்பளிச் சால்வையை மேலே போட்டுக் கொண்டு ஓடுவதற்குத் தயாரானார். அவர் சொன்னது தன் கம்பளியை;

 

மந்திரிகள் நினைத்தார்கள்,

 

அட ஆண்டாவா! என்ன அற்புத மன சக்தி; இந்த மஹானுக்கு!! கையில் மூடி வைத்து இருந்த கம்பளிப் பூச்சியைக் கூட ஞான திருஷ்டியில் கண்டு வி ட்டாறே என்று ஜோஸியர் காலில் விழுந்து ஆஸீர்வாதம் பெற்றனர்.

 

அரசனிடம் போய், அவருக்குக் கூடுதல் மான்யம் தருவதற்கு சிபாரிசும் செய்தனர்.

 

‘அதிர்ஷ்டம் இருந்தால் குதிரை தானாகவே கு………………….  அடியில் புகுந்து  தூக்கிக் கொண்டு போய் சவாரி செய்யும்!’ —என்பது தமிழ்ப் பழமொழி

 

–சுபம்-

சீதையைப் பார்த்து சிரித்த குரங்குகள்! (Post No.5028)

WRITTEN by London Swaminathan 

 

Date: 20 May 2018

 

Time uploaded in London – 9.46 am (British Summer Time)

 

Post No. 5028

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

சீதைக்கு ஒரு பிள்ளைதான்!! தாய்லாந்து ராமாயணம்-4

 

முதல் மூன்று பகுதிகளில் அனுமனுக்கு இரணடு மனைவிகள், ராவணனின் மகள்தான் சீதை, இலங்கையில் ஆட்சிக்கு எதிராகக் கலகம் , மயில் ராவணன் கதை முதலிய பல விநோதங்களைக் கண்டோம்.  இப்போது குசன் மட்டுமே சீதையின் மகன் என்ற கதையையும் சீதை வரைந்த ராவணனின் படம் குறித்தும் உள்ள சம்பவங்களை தாய்லாந்து ராமாயணமான  ராமகீயனில் (RAMAKIEN) இருந்து காண்போம்.

 

வால்மீகி ராமாயணத்தின்படி ராமனுக்கு லவன், குசன் என்ற இரட்டையர் பிறந்தனர் என்பதை நாம் அறிவோம்

 

சீதை, கர்ப்பவதியாக இருந்தபோது ராமன் காட்டுக்கு அனுப்பினான். அங்கே அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தப் பிள்ளை மீது வால்மீகி முனிவர் குஸ என்ற புனிதப் புல்லினால் புனித நீர் தெளித்ததால் அவனுக்குக் குஸன் என்று பெயரிட்டனர்.

குழந்தை பிறந்த செய்திக்குப் பின்னர்,  ராமன் புஸ்பக விமானத்தில் பறந்து வந்து ஜாத கர்மம் முதலிய சடங்குகளைச் செய்துவிட்டுப் புறப்பட்டும் போய்விட்டான். சீதையின் தந்தையான ஜனகன் முதலிய உறவினரும் வந்தனர்.

 

இவ்வாறு இருக்கையில் ஒரு நாள், சீதை காட்டில் பழங்களைச் சேகரிக்கச் சென்றாள். இயற்கை அழகைக் கண்டு ரஸித்தாள். வால்மீகி முனிவரிடம் ‘என் பிள்ளையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனாள்

ஒரு மரத்தில் ஒரு தாய்க் குரங்கு  ஐந்து குட்டிகளுடன் தாவித்தாவி சென்று கொண்டிருந்தது. சீதைக்கு ஒரே கவலை. உடனே தாய்க் குரங்கைப் பார்த்து சொன்னாள்:

“ஏ, குரங்கே! பார்த்துத் தாவு; குட்டிகள கீழே விழுந்துவிடப் போகின்றன. ஜாக்கிரதை!”

 

இதைக் கேட்டவுடன் அந்தக் குரங்கும் அருகாமையில் இருந்த குரங்கும் பலமாகச் சிரித்தன. “ஏம்மா தாயே! உன் கைக் குழந்தையை ஒரு கிழட்டு முனிவன் பாதுகாப்பில் விட்டு வந்திருக்கிறாய்; அவரோ கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்து இருக்கிறார். ‘ஊருக்குத் தாண்டி உபதேசம் உனக்கு இல்லை என்ற கதையாக இருக்கிறதே!’ என்று சொல்லிச் சிரித்தன.

 

இதைக் கேட்டவுடன் சீதைக்கு ‘ஷாக்’ அடித்தது போல இருந்தது. வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்த்க்கு ஓடினாள். அங்கு முனிவரும் இல்லை சிஷ்யர்களும் இல்லை; குழந்தை மட்டும் குடிலுக்குள் உறங்கிக் கொண்டு இருந்தது. சீதை, தனது குழந்தை குஸனுடன் காட்டுக்குள் வந்து இயற்கை அழகைக் கண்டு வியந்தாள்.

 

இதற்கிடையில் ஆஸ்ரமத்துக்குத் திரும்பிவந்த வால்மீகி குழந்தையைக் காணாது திகைத்தார்; பதை பதைதார். உடனே ஒரு கணமும் தாமதிக்காது ஒரு குழந்தையை மந்திர சக்தியால் உருவாக்கினார். சீதை திரும்பி வந்தவுடன், அவள் கையில் உணமைக் குழந்தை — அசல் குழந்தை —இருப்பதைப் பார்த்து தான் பதற்றத்தில் வேறு ஒரு குழந்தையை சிருஷ்டித்த கதைகளைச் சொன்னார்.

 

இரண்டாவது குழந்தையை சீதையின் கையில் கொடுத்து உன் மூத்த  பிள்ளைக்கு விளையாட ஒரு ஆண் வேண்டுமல்லவா; ஆகையால் இவனையும் உன் மகனாக வைத்துக் கொள்; இவனை கம்பளி நூல் மூலம் உருவாக்கினதால் இவனுக்கு ‘லவன்’ என்று பெயர் என நுவன்றார்.

அதைச் செவிமடுத்த சீதைக்குப் பேரானந்தம்!

இதே போல இந்தியாவிலுள்ள ஆனந்த ராமாயணத்திலும் சில சிறிய மாற்றங்களுடன் கதை உளது. ஆகவே ஆனந்த ராமாயணம்தான் தென் கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றது என்றும் சிலர் கதைப்பர்.

 

கதா ஸரித் சாகரம் என்ற நூலிலும் இக்கதை உளது ஆனால் அது முதல் பிள்ளை லவன் என்றும் இரண்டாம் பிள்ளைதான் குசன் என்றும் சொல்லும். வடக்கத்தியர்கள் குசன் லவன் என்று சொல்லுவர். நாமோ லவ குசன் என்போம்.

 

இலக்குவனால்  மூக்கு அறுபட்டுப் போன சூர்ப்பநகைக்கு ஒரு மகள் உண்டாம் ; அவள் பெயர் அதுல். அவளே மாறு வேடத்தில் ராமபிரான் அரணமனையில் வேலைக்கு அமர்ந்தாள் அவள்தான கூனி எனப்படும் மந்தரை. சீதையை பழிவாங்கத் திட்டம் தீட்டினாள். அது ராமனைப் பாதிக்கும் என்று திட்டம் போட்டாள்; அதன்படி ராமன் வரக்கூடிய தருணம் பார்த்து சீதையிடம் ஒரு படம் வரைச் சொன்னாள்:

“அம்மா, அம்மா எனக்கு ராவணன் என்னும் ராக்ஷஸன் எப்படி இருப்பான் என்று பார்க்க ஆசையம்மா! PLEASE ப்ளீஸ், படம் வரைந்து காட்டுங்களேன்” என்றாள். அவளும் வேடிக்கைக்குதானே இந்தக் கூனி கேட்கிறாள் என்று எண்ணி அவளைக் குஷிப்படுத்த படமும் வரைந்தாள் அந்த தருணத்தில் அண்ணலும் வந்தர்; படத்தைப் பார்த்து ஆத்திரமும் அடைந்தார். மாறு வேடக் கூனி அதுலும் (ADUL) நன்றாக சீதையை மாட்டிவிட்டாள்.

கோபம் கொண்ட ராமன், இலக்குவனை அழைத்து, இந்தப் பெண்ணைக்     காட்டுக்கு அழைத்துச் சென்று கொன்று விடு என்று காதோடு காதாக சொன்னான்.

 

அவன் அண்ணன் சொல்லைத் தட்ட முடியாமல் காட்டுக்கு அழைத்து வந்தான். ஆனால் கொல்வதற்கு மனம் வரவில்லை. அவளுக்கு வால்மீகி ஆஸ்ரமம் இருக்கும் இடத்தைக் காட்டிவிட்டு, ஒரு மானைக் கொன்று அதன் இதயத்தை எடுத்து ராமனிடம் காட்டி, இதோ பார் சீதையின் இருதயம் என்று காட்டினான். இதற்கு நீண்டகாலத்துக்குப் பின்னரே சீதை உயிருடன் இருந்தது ராமனுக்குத் தெரியவந்தது.

 

இதே கதை மலைஜாதி மக்களிடம் உண்டு; ராமாயணம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததால் 3000 வகை ந் ராமாயணங்களாவது இருக்கும் ; நான் லண்டனில் வாரம் தோறும் பிரிட்டிஷ் லைப்ரரிக்குப் போகையில் புதுப் புது ராமாயணமோ. அல்லது சம்பவங்களோ பார்க்கிறேன். ஜைன ராமாயணம், புத்த ராமாயணம், புற நானூற்றில் ராமாயணம், ஆழ்வார் பாடல்களில் ராமாயணம் என்று ஏராளமாக உள்ளன.

 

பண்டல்கண்டு பகுதி மலை ஜாதி மக்களிடையேயும் நாட்டுப் புறப் பாடல்களில் இந்த  ராமாயணக் கதை இடம்பெறுகிறது.

 

சீதையை எல்லாப் பெண்களும் சேர்ந்து கிண்டல் செய்து, ‘உன்னை சிறை வைத்த ராக்ஷசன் எப்படி இருந்தான்?’ என்று கேட்கவே அவள் சாணத்தால் ராவணனின் படத்தை வரைந்ததாகாவும் , பாதி வரைகையில் ராமன் வந்து அதைப் பார்த்து கோபம் அடைந்து அவளைக் காட்டிற்கு அனுப்பியதாகவும் அந்த நாட்டுப் புறப்பாடலில் வரும். மலைஜாதி மக்களிடையே கூட ராமாயணம் இப்படிப் பரவி இருக்குமானல் அது பல்லாயிரக் கணக்கான ஆண்டு பழமை உடையது என்பதும் தெள்ளிதின் விளங்கும். உலகம் முழுதும் பரவிய பழங்கால காவியங்களில் ராமாயணம் முதலிடத்தைப் பெறுகிறது.

காலத்தால் அழியாத காவியம்  ராமாயணம்– மனித குலத்தின் எல்லா நற்குணங்களையும்  கதா பாத்திரங்களில் பிரதிபலிக்கும் சீரிய காவியம் ராமாயணம்.

வாழ்க ராமாயணம் ! வளர்க ராமன் புகழ்!!

–சுபம்–

 

 

 

 

 

நமது நூல்கள் தரும் நுட்பமான கருத்துக்கள்! (Post No.5027)

Written by S NAGARAJAN

 

Date: 20 MAY 2018

 

Time uploaded in London –  6-28 AM   (British Summer Time)

 

Post No. 5027

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஹெல்த்கேர் மாத பத்திரிகையில் மே 2018  இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆரோக்கிய ரகசியம்

நமது நூல்கள் தரும் நுட்பமான கருத்துக்கள்!

 

ச.நாகராஜன்

நமது ஆயுர்வேத நூல்களிலும், வைத்ய நூல்களிலும் இதர சுபாஷித நூல்களிலும் ஆரோக்கியம் பற்றிய ஏராளமான நுட்பமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது அடிப்படையான விஷயம். இதை முதலில் தெரிந்து கொண்டால் நமக்குத் தேவையான மருத்துவ உதவியைப் பெற்று நோய்களிலிருந்து மீளலாம்.

நோயே இல்லாத ஆரோக்கிய வாழ்வைப் பெறவும் இந்தக் கருத்துக்கள் இன்றியமையாதவை.

சில கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டு தரப்படுகின்றன.

1

நோய் வருவதற்கான நான்கு காரணங்கள்

ரோக நிமித்தம்

  • ஆகண்டுகா – Exogenous – வெளியிலிருந்து
  • வாதம்
  • பித்தம்
  • ஸ்லேஷ்மா

சரக சம்ஹிதை (சூத்ர 20-3)

 

2

நோயாளியின் நான்கு குணங்கள்

ரோகாதுரா குணா:

 

1) ஸ்மிருதி – நல்ல ஞாபக சக்தி (good memory)

2) நிர்தேசா – மருத்துவ அறிவுரையின் படி நடத்தல் (follwoing the prescription)

3) அபீருத்வா – பயமின்மை (fearlessness)

4) ஞானபாகா – தடையற்ற வெளிப்பாடுகள் (uninhibited expressions)

 

சரக சம்ஹிதை (சூத்ர 9-9)

 

3

நோயைப் போக்கத் தேவையான அம்சங்கள்

Aspects of therapeutics for the cure of disease

 

1)பிஷக் – வைத்தியர் (Physician0

2) த்ரவ்யாணி –  மருந்துகள் (Medicines)

3) உபஸ்தாதா – உடன் இருந்து உதவி செய்பவர் -Upasthata

4) ரோகி – வியாதியஸ்தர் – Rogi

சரக சம்ஹிதை (சூத்ர 9-3)

 

4

வைத்யருக்கான குணங்கள்

வைத்ய குணா:

 

1) மிகச் சிறந்த மருத்துவ அறிவு (ச்ருதே பர்யாவதாதத்வம்)

2) பரந்த மருத்துவ அனுபவம் (பஹுஷோ த்ருஷ்டகர்மதா)

3) திறமை (தாக்ஷ்யம்)

4) சுத்தம் (சௌசம்)

சரக சம்ஹிதை (சூத்ர 9-6)

 

5

அறுவை சிகிச்சை நிபுணருக்கான குணங்கள்

சஸ்த்ர வைத்ய குணா:

பயப்படாமை – சௌர்யம்

எளிதாகக் கையாளும் தன்மை – ஆசுக்ரியா

சஸ்த்ரதைக்ச்ன்யம் – மிகக் கூர்மையான கருவிகள்

வியர்வை இல்லாமல் இருத்தல், நடுங்காமல் இருத்தல் -அஸ்வேதவேபது

குழப்பமின்றி இருத்தல் – அஸம்மோஹ:

சுஸ்ருத சம்ஹிதா (சூத்ர 5-10)

 

6

நோயாளிகளிடம் வைத்யரின் அணுகுமுறை

வைத்ய வ்ருத்தி

 

நட்பு – (மைத்ரி)

தயை – (காருண்யா)

சந்தோஷம் – (ப்ரீதி)

இரக்கம் – (உபேக்ஷணம்)

சரக சம்ஹிதை (சூத்ர 9-26)

7

நோய் அறிதல்

வியவஹார தர்ஷணம் (Diagnosis)

 

கேட்டல்- (ஆகம)

உரையாடுதல் – (வியவஹாரா)

சிகிச்சை – (சிகித்ஸா)

முடுவெடுத்தல் – (நிர்ணயா)

நாரத ஸ்மிருதி (1-36)

 

8

நோய் அறிதல்

ரோக விஞ்ஞானம்

நோய் வருவதற்கான காரணம் – நிதானம்

முந்தைய நிலை – பூர்வரூபா

தோற்றம் – ரூபா

நோய்க்குத் தீர்வு – உபசாயா

முடிவு – சம்ப்ராப்தி

மாதவ நிதானம் (1-4)

 

9

 

வியாதிகளின் வகைகள்

வியாதி

 

தொற்று நோய் – (ஆகண்டவா)

உடல் சம்பந்தமானது – (சரீரா)

மனோ வியாதி – (மானஸா)

இயற்கையானது – (ஸ்வாபாவிகா)

சுஸ்ருத சம்ஹிதா (சூத்ர 1-23)

10

எலும்பு வகைகள்

அஸ்திவர்கா

 

தட்டை – (கபாலா)

பல் – (ருசகா)

குருத்தெலும்பு – (தருணா – cartilege)

வட்ட வடிவமானது – (வளயா)

நீளமானது – (நாளகா)

சுஸ்ருத சம்ஹிதா (சரீர 5-20)

11

மருந்துக் கஷாயங்கள்

கஷாயம்

 

அத்தி – (சமி)

அரசு – (அஸ்வத்தா)

ஆலமரம் – (ந்யாக்ரோதா)

புரசு – (பலாச)

 

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தர்க்கரீதியாக ஆராய்ந்து எது நல்லது, யார் வியாதியை நீக்கத் தகுதியானவர்கள் என்பன போன்றவற்றை ஆயிரக் கணக்கான செய்யுள்கள் தருகின்றன.

 

அனுபவத்தின் அடிப்படையில் சிறந்த வைத்தியர்கள் ஒவ்வொரு கிராமம்தோறும் இருந்து மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகப் பாடுபட்டனர். பாரம்பரிய வழியிலான அந்த ஆயுர்வேத மருத்துவம் பற்றி அறிவது நமது கடமை – நமது நலனுக்காகவே!

***

 

 

 

 

 

 

 

 

 

கண் திருஷ்டியும் அறிவியலும்! – 1(Post No.5024)

Written by S NAGARAJAN

 

Date: 19 MAY 2018

 

Time uploaded in London –  5-35 AM   (British Summer Time)

 

Post No. 5024

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

18-5-18 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பதினொன்றாம்) கட்டுரை

 

கண் திருஷ்டியும் அறிவியலும்! – 1

.நாகராஜன்

உலகில் கண் திருஷ்டிக்குப் பயப்படாதவர்கள் இல்லை.

நாடகம் முடிந்தாலும் சரி, பெரிய விழா முடிந்தாலும் சரி திருஷ்டி கழிப்பது வழக்கமாகி விட்டது.உடனடியாக திருஷ்டி கழித்துப் போட்டு விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்கள்.

சில பேருடைய பார்வை பட்டாலேயே போதும் திருஷ்டிக்கு உள்ளானவர் பல விதத்திலும் பாதிக்கப்படுவர், ஏன், சில சமயம் உயிருக்கே ஆபத்து ஏற்படுவதுண்டு!

தி ஈவில் ஐ –  எ கேஸ் புக் என்று ஆலன் டுண்டஸ் (The Evil Eye : A casebook – Alan Dundes) இது பற்றிப் பெரிய ஆராய்ச்சி நூலையே எழுதியுள்ளார்.

பார்த்த பார்வையில் புதுச் சட்டை கிழியும்; பால் புளித்துப் போகும், பார்த்த பார்வையில் பல நாட்களுக்குச் சாப்பிடவே பிடிக்காது. வாந்தி எடுக்கும் – இப்படி கெட்ட திருஷ்டியின் “மஹிமையை”ச் சொல்லிக் கொண்டே போகலாம்.

திருஷ்டி பற்றிக் கவலைப்படாத நாகரிகமே இல்லை; நாடே இல்லை; மக்களே இல்லை!

ஒவ்வொரு நாட்டிலும் இதற்குத் தனிப் பெயர் உண்டு.

சுவாரசியமான அந்தப் பெயர் பட்டியலை அப்படியே கீழே காணலாம்:

ஜெர்மனியில் இதற்குப் பெயர் போஸ் ப்ளிக் (Bose Blick)

ஹாலந்தில் இதற்குப் பெயர் பூஸ் ப்ளிக   (boose Blick)

போலந்தில் இதற்குப் பெயர் டே ஒகோ   (Zte Oko)

இத்தாலியில் இதற்குப் பெயர் மால் ஓச்சியோ  (Mal Occhio)

சார்டினாவில் இதற்குப் பெயர் ஒகு மாலு   (Ogu Malu)

கோர்ஸிகாவில் இதற்குப் பெயர் இன்னோச்சியாடுரா   (Innochiatura)

ஸ்பெயினில் இதற்குப் பெயர் மால் டி ஓஜோ   (Mal De Ojo)

பிரான்ஸில் இதற்குப் பெயர் மௌவாயிஸ் செய்ல்  (Mauvais Ceil)

நார்வேயில் இதற்குப் பெயர் ஸ்கோயர் டுஞ்ஜ்   (Skjoertunge)

டென்மார்க்கில் இதற்குப் பெயர் ஆண்ட் ஓஜே (Ondt Oje)

இங்கிலாந்தில் இதற்குப் பெயர் ஈவில் ஐ (Evil Eye)

அயர்லாந்திலும் ஸ்காட்லாந்திலும் இதற்குப் பெயர் இல் ஐ   (Ill Eye)

சிரியாவில் இன்று வரை இதற்குப் பெயர் அயினா பிஷா   (Aina Bisha)

பெர்சியாவில் இதற்குப் பெயர் ஆகாஷா  (aghasha)

ஆர்மீனியாவில் இதற்குப் பெயர் படேரெக்   (Paterrak)

இந்தியாவில் இதற்குப் பெயர் கோர சக்ஷு (Goram cakshu)

இப்படி உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் கெட்ட திருஷ்டிக்குத் தனிப்  பெயர் உண்டு. அவ்வளவு நம்பிக்கை.

கிரேக்க, ரோமானிய, ஹிந்து நூல்களில் இந்த கண் திருஷ்டி பற்றி நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. பைபிளில் ப்ராவெர்ப் 23:6-இல் கெட்ட திருஷ்டி உடையவனிடம் ரொட்டியை வாங்கிச் சாப்பிடாதே; அவனது திருஷ்டி பட்ட உணவையும் விரும்பாதே என்று சொல்லப்பட்டிருக்கிறது.

குரானிலும் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் கண் திருஷ்டி சொல்லப்படுகிறது.

ஹிந்துக்கள் குடும்ப உறுப்பினர்கள் சாப்பிடுவதை வெளியார் யாரும் பார்ப்பதை விரும்புவதில்லை!

கோணல் கண், கண்களில் பல முடிச்சுகள் இருந்தால் அவரைக் கண்டு விலகுவது எல்லோருக்கும் சகஜமான பழக்கம். குறிப்பாக அபாயகரமான தொழில்களான சுரங்கப் பணி, கடலில் மீன் பிடிக்கச் செல்லுதல் போன்றவற்றில் ஈடுபடுவோர் திருஷ்டி பற்றி நன்கு கவனிப்பர்.குறிப்பாகப் பெண்மணிகள் தங்கள் வீட்டு ஆண்கள் வெளியே செல்லும் போதோ அல்லது ஒரு காரியத்தை நன்கு முடித்து விட்டு வந்தாலோ திருஷ்டி பற்றிக் கவனிப்பர். திருஷ்டி சுற்றிப் போடுவர்.

திருஷ்டியிலிருந்து எப்படித் தப்புவது? முதல் வழி அப்படிப்பட்ட ஆள்களைப் பார்க்கவே பார்க்காதே என்பது தான். அடுத்த வழி சில தாயத்துகளை அணிவது தான்.

அரைஞாண் கயிற்றில் ஆரம்பித்து மணிக்கட்டு, புஜத்தின் மேல் பகுதியில் கயிறு கட்டுதல், கழுத்தில் கயிறில் தாயத்தை அணிவது என்று பல ரகங்களில் திருஷ்டியிலிருந்து தன்னைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முயல்கின்றனர்.

லத்தீன் அமெரிக்காவில் கண் திருஷ்டிக்கு மால் டி ஓஜோ என்று பெயர். இதை நம்பாதவர்களே அங்கு இல்லை. ப்யூர்டோ ரிகோசில் பிறந்த குழந்தைகளுக்கு அஜாபச்சே (Azabache) என்ற அதிர்ஷ்டத்திற்கான தாயத்து தரப்படுகிறது.

திருஷ்டியை எதிர்கொள்ள சிறப்பான வண்ணம் நீலம் தான். இது  சுவர்க்கம் அல்லது இறைத்தன்மையைக் குறிக்கும். உள்ளிப்பூண்டை சில தேசத்தவர் பயன்படுத்துகின்றனர். உள்ளிப்பூண்டு என்று சொன்னாலேயே திருஷ்டி போய் விடுமாம்.

நமது ஊரில் மிளகாயைப் மரக்கால் படியில் வைத்து திருஷ்டி சுற்றிப் போடுவர். கடல் உப்பை (கல் உப்பு; உப்புப் பொடி அல்ல) வைத்து திருஷ்டி கழிப்பது அன்றாடப் பழக்கம். பூசணிக்காய் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

சிலருடைய வீடுகளில் எல்லையற்ற துன்பம் நேர்ந்தால் (திடீரென்று கல்லாக விழுதல் போன்றவை) உடனடியாக இந்த திருஷ்டியைப் போக்க அல்லது சாபத்தைப் போக்க மாந்திரீக வழிகளையும் நாடுவர்.

உலகில் தன்னை திருஷ்டியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளாத பிரபலங்களே இல்லை. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமா ஹனுமான் உருவத்தைத் தன்னுடன் எப்போதும் வைத்திருந்த செய்தியை நாம் அறிவோம். பேஷன் மாடலான கிம் கர்டாஷியான் கெட்ட திருஷ்டியைப் போக்கும் ப்ரேஸ்லெட், தலையணி போன்றவற்றை அணிந்து போஸ் கொடுப்பது வழக்கம். ஜிஜி ஹடிட் 2017இல் ‘ஐ லவ் ஷீ லைன்’ -ஐ திருஷ்டியிலிருந்து காத்துக் கொள்வதற்காக அறிமுகப்படுத்தினார்.

பிரபலங்கள் இதற்காகவே அறிமுகப் படுத்தும் கண் அணிகள், நெக்லேஸ், கீ-செய்ன் ஆகியவை சந்தையில் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன.

கிரேக்க நாகரிக இலக்கியத்தில் பொறாமையுடன் பார்க்கப்படும் பார்வை பொல்லாத பார்வை என்று குறிப்பிடப்படுகிறது. ‘பூரி நஜர்’ (தீய பார்வை) என்றும் இது பொதுவாகச் சொல்லப்படுகிறது. திருஷ்டி பற்றி இன்னும் கொஞ்சம் அலசுவோம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல இந்திய கணித மேதையான சீனிவாச ராமானுஜனால் உத்வேகம் பெற்ற கணித மேதை ஜப்பானியரான கென் ஓனோ.(Ken Ono). இவருக்கு வயது இப்போது 50.

இவரது தந்தையார் ஒரு கணித மேதை. தாயாரோ படித்து சாதித்தால் தான் உருப்படுவாய் என்று மகனைத் தூண்டிக் கொண்டே இருக்கும் ‘பெண் புலி’.

பிரபல விஞ்ஞானி ஓப்பன்ஹீமரின் அழைப்பின் பேரில் ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு வந்தார் கென் ஒனோவின் தந்தை.

ஒனோவிற்கு படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. தந்தை, தாயின் எதிர்பார்ப்புக்கு அவரால் 27 வருடங்கள் ஈடு கொடுக்க முடியவில்லை.

ஒருவழியாக கணிதத்தில் தேறி அமெரிக்காவில் ஒரு பேராசிரியராக ஆனார். அப்பொழுது தான் சீனிவாச ராமானுஜனைப் பற்றி அவர் தெரிந்து கொண்டார்.

ஆயிரக்கணக்கான சூத்திரங்களை ராமானுஜன் நோட்புக்குகளில் எழுதி வைத்திருந்தது அவரை பிரமிக்க வைத்தது. அவரைப் பற்றி நன்கு ஆராயலானார்.

அவரது சூத்திரங்களில் ஒன்றை ஒட்டித் தானும் அல்ஜிப்ரெய்க் நம்பர் தியரியில் ஒரு புதிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தார்.

சீனிவாச ராமானுஜனைப் புகழ்ந்து கொண்டே இருக்கும் ஒனோ அவரைப் பற்றிய திரைப்படமான ‘The Man Who Knew Infinity’ படத்திற்கும் கணித சம்பந்தமான ஆலோசகர் ஆனார். சீனிவாச ராமானுஜனுக்குத் தனது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் அவரைப் பற்றிய ஒரு நூலையும் அமிர் அஜல் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார். அந்த நூலின் பெயர் : My Search for Ramanujan: How I Learned to Count .

படிப்பே பிடிக்காத தானே ராமானுஜனால் உத்வேகம் பெற்று பெரிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்ததால், “ராமானுஜனைப் பற்றி அறியுங்கள்; அவரிடமிருந்து யார் வேண்டுமானாலும் உத்வேகம் பெற்று அவரைப் போல் ஆகலாம்” என்று கென் ஒனோ எல்லோருக்கும் இன்று அறிவுரை கூறி வருகிறார்.

நமது கும்பகோணத்தைச் சேர்ந்த கணித மேதைக்கு இப்போது கடைசியாக வந்துள்ள புகழாரம் கென் ஓனோவினுடையது என்பதில் நமக்குப் பெருமை தானே!

***

 

கடலுக்கு அடியில் ராவணன் உயிர்!! தாய்லாந்து ராமாயணம்-2 (Post No.5022)

கடலுக்கு அடியில் ராவணன் உயிர்!! தாய்லாந்து ராமாயணம்-2 (Post No.5022)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 18 May 2018

 

Time uploaded in London – 7-49 AM (British Summer Time)

 

Post No. 5022

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

தாய்லாந்து ராமாயணமான ராம்கீயனில் பல சுவையான, விநோதமான செய்திகள் இருப்பதை நேற்று முதல் பகுதியில் சொன்னேன். இதோ பல விசித்திர, அதிசய ராமாயணக் கதைகள்.

 

வால்மீகி ராமாயணம் காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தாய் மொழி ராமாயணம் அப்படிப் பிரிக்கப்படவில்லை.

 

உலகின் முதல் அரசன் அநோமதன்

முன்னொரு காலத்தில் சக்ரவாள மலையின் மீது ஹிரன்யாக்ஷன்

வசித்தான். அவன் தேவர்களைத் துன்புறுத்தவே அவர்கள் ஈஸ்வரனை அணுகி முறையிட்டனர். ஈஸ்வரன் சொற்படி நாராயணன் அந்த ஹிரன்யாக்ஷனை அழித்தார். அவர் திரும்பி வருகையில் பாற்கடலில் ஒரு அழகிய தாமரை மலரையும்     அதில் ஒரு குழந்தையையும் கண்டார். உடனே நாராயணன் அக் குழந்தையை எடுத்து ‘க்ரைலாஸம்’ சென்று, ஈஸ்வரனிடம் அக்குழந்தையை அளித்தார். அவர் அக்குழந்தைக்கு அநோமடன் என்று பெயரிட்டு  அவரை உலகின் முதல் அரசனாக்கி ஜம்பூத்வீபத்தில் உள்ள அயோத்தியில் ஆட்சி பீடத்தில் அமர்த்தினார். இறைவன் சொற்படி இந்திரன், அந்த அயோத்தி மாநகரை உருவாக்கினான்.

விபீஷணன் மகள் பெஞ்சகாய்- அனுமன் காதல் திருமணம்

 

ராவணன், பெஞ்சகாய் என்ற ராக்ஷஸியை அழைத்து நீ சீதை போல உரு எடுத்து, இறந்த சடலம் போல ஆற்றில் மிதந்து போ. ராமன் அதைப்

பார்த்து மயங்கி கதறட்டும் என்று கட்டளை இட்டான். அவளும் அப்படியே செல்லுகையில், ராமன் காலைக் குளியலுக்கு நதிக்கு வருகையில் அதைக் கண்டு துக்கம் அடை ந்தான்.

 

அனுமனும் லக்ஷ்மணனும் அடுத்து வந்தனர். லக்ஷ்மணனும் அந்த சீதையின் சடலத்தைக் கண்டு கதறினான். ஆனால் அனுமனோ இது போலியா அசலா என்று ஐயமுற்று அந்த சடலத்தை சிதைத் தீயில் வைத்தான். பெஞ்சகாய் கதறியவாறு வானத்தில் தாவிக் குதித்தாள். சுக்ரீவன் அவளை சாட்டையால் அடித்து நீ யார்? என்று வினவ, அவளும் உண்மையைச் சொன்னாள். அவள் விபீஷணனின் தங்கை என்பதை அறிந்து ராமன் அவளை மன்னித்து அருளினன்.

 

அனுமனை அழைத்து இவளை பத்திரமாக இலங்கை வரை கொண்டு போய் விடு என்றனன். அனுமனுக்கும் பெஞ்சகாய்க்கும் இடையே காதல் மலர்ந்தது; அதுவும் கனிந்தது. ‘அசுரபாத’ என்ற பிள்ளையும் பிறந்தது. இது அனுமனின் முதல் திருமணம்; முதல் பிள்ளை.

 

இந்தியாவில் ராமாயணத்தில் ஹனுமார் நித்திய பிரம்மாச்சாரி. தாய்லாந்து மக்கள், ராமாயணத்தில் அவர்களுடைய கலாச்சாரத்தைக் கலப்பதற்ககாக ஹனுமாரை காதல் மன்னன் ஆக்கிவிட்டனர். அவருக்கு மேலும் பல மனைவியர் உண்டு! கதை வளர்கிறது.

 

ராவணன் உயிர் எங்கே?

ராமன் எத்தனையோ அம்புகளை எய்தும் ராவணன் மாயவில்லை. அப்பொழுது விபீஷணனன் ஒரு உண்மையைச் சொன்னான்.

 

மனிதனின் உடல் வேறு; உயிர் வேறு; உயிர் வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்; அதை ஒருவர் அழிக்கும் வரை  ஒருவனுடைய உயிர் போகாது என்ற விஷயம் ராமகீயனின் பல இடங்களில் சொல்லப்படுகிறது.

 

ராவணனுடைய குரு  கோ புத்ரன்; அவனிடம்தான் ராவணனின் உயிர் இருக்கும் பேழை (கலசம்) பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விபீஷணன் சொன்னான். உடனே ராமன், அனுமனை அழைத்து “சென்று வா மகனே; வென்று வா” என்று அனுப்பினன்.

 

ஹனுமார், அங்கதனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கோபுத்ரன் ஆஸ்ரமத்துக்குச் சென்றான். “இதோ பார்,  எங்களுக்கு ராமனைப் பிடிக்கவில்லை. நாங்கள் ராவணன் தரப்புக்கு கட்சி மாற வந்துள்ளோம். எங்களை அவனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்து என்றான். வெளுத்தை எல்லாம் பால் எனும் நம்பும் கோபுத்ரன் அவ்விருவரையும் இலங்கை வாயில் வரை அழைத்துச் சென்றான்.

ஒருவேளை ராவணன் உயிரையும்   இதயத்தையும் வைத்திருக்கும் பேழையை ராமன் திருடக்கூடும் என்று ஹனுமன் எச்சரித்து இருந்ததால் கோபுத்ரன் அதையும் கையில் எடுத்துக்கொண்டே சென்றான். இலங்கை வாயிலை அடைந்தவுடன் திடீரென்று ஒரு விஷயம்  நினைவுக்கு வந்தது. வாயிலைக் கடந்தால் கிண்ணத்தில்/ பேழையில் உள்ள உயிர் ராவணனிடமே பறந்து போய்விடும் என்று!

 

ஹனுமார் சொன்னார்

“குறை ஒன்றுமில்லை கோபுத்ரா. அங்கதனிடம் அதைக் கொடுத்து வாயிலுக்கு வெளியே நிற்கச் சொல்லுவோம்” என்றான். அவருடைய சதித் திட்டம் பலித்தது. அங்கதன் வாயிலி நிற்க இருவரும் இலங்கைக்குள் நுழைந்தனர். திடீரென்று ஹனுமார் திரும்பிச் சென்றார். அங்கதனை எவரேனும் சந்தேகப்பட்டு கொன்று விடலாம் ஆகையால் பாதுகாப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றார். கோபுத்ரனும் அவரை நம்பினார்.

 

 

அங்கதனிடம் திரும்பிவந்த ஹனுமார், ராவணனின் உயிர் போல ஒரு போலி உயிரை ( இதயத்தை) உருவாக்கி பேழையில் வைத்துவிட்டு அசல் உயிரை அங்கதனிடம் கொடுத்து இதை கடலுக்கு அடியில் புதைத்து விடு என்றார். அங்கதனுமவ்வாறு செய்யவே ராவணனை ராமன் எளிதாக வீழ்த்த முடிந்தது.

சீதை யார்?

ராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த பெண்ணே சீதை என்றும் சிறு வயதிலேயே அவளைக் காட்டில் விட்டதாகவும், ‘தாய்’ மக்கள் நம்புகின்றனர். அந்தக் குழந்தையை ஜனகன் எடுத்து வளர்க்கவே அவள் பெரியவளாகித் திருமணம் முடித்து ராமனுடன் வாழ்கையில் ராவணன் அவளைத் தூக்கிவந்தான் என்றும் ‘தாய்’ மக்கள் கதை சொல்லுவர். அவளை ராவணன் தொட முயன்றபோது ராவணன் உடல் எரியவே அவளைத் தொடாமல் விட்டனன் என்பதும் கதை.

 

இப்படி ராமாயணத்தைத் தங்கள் கலாச்சார நம்பிக்கைக்கு ஏற்ப தாய் மக்கள் கதை கட்டிவிட்டனர்.

 

அடுத்த பகுதியில் மேலும் சில சுவையான ராமயண சம்பவங்களைக் காண்போம்.

 

தொடரும்……………..

 

— சுபம்—

‘சீதைக்கு ராமன் சித்தப்பா’! தாய்லாந்து ராமாயணம்-1 (Post No.5019)

WRITTEN by London Swaminathan 

 

Date: 17 May 2018

 

Time uploaded in London – 9-00 AM (British Summer Time)

 

Post No. 5019

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

விடிய விடிய ராமாயணம் கேட்டானாம்; என்னடா கதை? என்று கேட்டபொழுது சொன்னானாம் ‘சீதைக்கு ராமன் சித்தப்பா’ – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இது தாய்லாந்தைப் பொறுத்த மட்டில் மிக மிக உண்மை. ராமாயணத்தைத் தலை கீழாக மாற்றிவிட்டார்கள்.

கேட்கக் கேட்க வேடிக்கையாக இருக்கும்; ராமபக்தர்களுக்கோ அபச்சாரமாகத் தோன்றும்; நீண்ட கட்டுரை; ஆகையால் முதலில் சுவையான விஷயங்களை புல்லட் பாயிண்டுகளில் (in Bullet Points) தருகிறேன்.

1.சீதாதேவி, ராவணனின் மகள்; வேறு ஒரு இடத்தில் வளர்ந்ததால், தெரியாமல் தூக்கி வந்து விட்டார்.

 

2.அனுமனுக்கு குறைந்தது இரண்டு மனைவிகள்; இரண்டு மகன்கள்! அவர் குரங்கு மனம், குரங்கு புத்தி உடையவர். பிரம்மச்சாரி அல்ல.

 

3.ராமாயணத்தில் பலப்பல புதுக்கதைகள்; இந்தியாவில் அந்தப் பெயர்களையே கேள்விப்பட்டதில்லை; கம்பனும் வால்மீகியும் சொல்லாத கதைகள்.

4.ராமன் பெயர், சீதை பெயர், அனுமன் பெயர் தவிர மற்ற எல்லாப் பெயர்களும் கண்டபடி மாற்றம். ராமாயணம் படிக்காதவர்கள் பார்த்தால், இது ஏதோ வேறு ஒரு கதை என்று மலைப்பர்.

5.இந்தியாவில் உள்ள ராமாயணம் பற்றியோ அதை எழுதிய வால்மீகி பற்றியோ தெரியாது.

6.ராவணனையும் விடப் பெரிய ராக்ஷஸன் உண்டு. அவனுக்கு ஆயிரம் தலைகள்!

7.ராமாயணம் என்பது தாய்லாந்தில் நடந்தது!

ஏன் இத்தனை கோளாறுகள்?

 

தாய்லாந்து மக்களின் வாழ்வில், கலையில், பண்பாட்டில், வரலாற்றில் ராமாயணம் இரண்டறக் கலந்துவிட்டது. ஆகையால் அது வெளி நாட்டில் நடந்ததாகச் சொன்னால் மக்கள் மனம் ஏற்காது. மேலும் தாய்லாந்தின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப ராமாயணம் திரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ‘’தாய்’’ மக்கள் அது இங்கேதான் நடந்தது என்று நம்புகின்றனர் என்று தாய்லாந்து மொழி ராமாயணமான ‘ராம்கியன்’ அறிஞர் மனீக் (மாணிக்க) ஜும்சாய் கூறுகிறார்.

உண்மை என்ன?

 

தாய்லாந்தில் இருந்த தாய்லாந்து மொழி ராமாயணத்தின் பெயர் ராம்கீயன் ( ராம க்யான அல்லது ராம கீர்த்தி).இது 200 ஆண்டுகளுக்கு முன்னர் தீ விபத்தில் அழிந்து விட்டது. பின்னர் முதலாவது ராமா, இரண்டாவது ராமா என்ற மன்னர்களும் தக்ஷின் என்ற கவிஞர் முதலியோரும் புதிய ராமாயணத்தை யாத்தனர். அதில் பல கற்பனைகளைச் சிறகடித்துப் பறக்கவிட்டனர். மக்களுக்கு ரசனையாக தாய்லாந்து மக்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளைப் புகுத்தினர். ஆனால் ராமனையோ சீதையையோ பழிக்க வில்லை போற்றித் துதி பாடினர்.

 

 

இதைத் தமிழ்நாட்டிலுள்ள கோயில் தல புராணங்களுக்கு ஒப்பிடலாம். நமக்குத் தெரிந்த புராணக்  கதைகளை, இதிஹாசக் கதைகளை உள்ளூரில் நடந்ததாகக் கூறி அந்த ஊர் சாமியின் புகழை ஏத்தி விடுகிறோம்.

 

மேலும் வேத காலத்தில் இதிஹாச காலத்தில் வாழ்ந்த ரிஷி முனிவர்களை அங்கு வந்து சாப விமோசனம் பெற்றதாகக் கூறுகிறோம். ஆனால் உண்மையில் கடவுளையோ அந்த சாது சந்யாசிகளையோ பழிக்காமல் அவர்கள் புகழை அதிகப்படுத்த முயற்சிக்கிறோம்.

 

மேலும் பல உள்ளூர்க் கதைகளையும் நம்பிக்கைகளையும் பழையதுடன் கலந்து சுவைபடக்  கூறுகிறோம். நேற்று தோன்றிய முஸ்லீம், கிறிஸ்தர்களைக் கூட இணத்து சில புதிய கதைகளை உண்டாக்குகிறோம்; உண்மையில் அவர்கள் அண்மைக்  காலத்தில் வாழ்ந்த பக்தர்கள். அவ்வளவுதான்.

 

இப்படி நமது நாட்டிலேயே நடக்குமானால் சில ஆயிரம் மைல்கள் தள்ளியுள்ள தாய்லாந்தில் கதைப்போக்கு மாறுவதில் வியப்பொன்றுமில்லை. அது மட்டுமல்ல அங்கு இப்பொழுது மூன்று      வேறு வேறு பாட பேதங்கள் உள்ளன. கோவில் சிலைகளில் வேறு புதிய கதைகள்!

சிலைகள், ஓவியங்கள் முதலியன அவரவர் கற்பனைக்கேற்ப புனையப்பட்டுள்ளன.

இதோ தாறுமாறாக திரிக்கப்பட்ட ராமாயண கதாபாத்திரஙகள்:-

குச்சி= கூனி மந்தரை (குப்ஜ/கூன் முதுகு;ஸம்ஸ்க்ருதம்)

ஸ்வாஹா= அஞ்சனா

கல்லாசனா= அஹல்யா (கல் என்ற தமிழ் சொல்)

காகனாசுரா= தாடகா

கூகன்= வேடன் குகன்

மங்குட்= லவன் (ராமன் புதல்வன்)

வஜ்ம்ருகா = வால்மீகி

சத்ருட் = சத்ருக்னன்

க்ருட்= கருடன்

லக்= லக்ஷ்மணன்/ இலக்குவன்

லாஸ்டியன்= புலஸ்த்ய

பிபெக்= விபீஷணன்

 

நங் மோண்டோ= மண்டோதரி

தத்சகன்= தச கண்டன்/ ராவணன்

பாலி= வாலி

சுக்ரீப்= சுக்ரீவன்

நங் சீடா = சீதா தேவி

ப்ரம் ராம் = ராமன்

கும்பகன் = கும்ப கர்ணன்

இந்ததரசிட்= இந்திரஜித்

புதிய பெயர்கள்

 

பெஞ்சகாய்= வஞ்சகி???

மைராப் = மயில் ராவணன்??

மாலிவக்க ப்ரஹ்மா= பிரம்மா

சுவண்ணமச்சா= ஸ்வர்ண மத்ஸ்ய= தங்க மீன்

மச்சானு= மத்ஸ்யன் (மீனன்)

மஹாபால் = மஹீபாலன்??? (மன்னன்)

தேபாஸுரா = தேவாசுர (தேவர்கள்+ அஸுரர்கள்

உன்ராஜ் = ஊன ராஜன் ( நொண்டி ராஜா?)

 

இனி அனுமனின் இரண்டு மனைவி, மயில் ராவணன் , மாண்டோதரி மகள் சீதை முதலிய கதைகளைக் காண்போம்.

 

தொடரும்…………………………….

 

–சுபம்–

ஒசை இன்பம் கொண்ட டாஃபோடில்ஸ்-1 (Post No.5018)

Written by S NAGARAJAN

 

Date: 17 MAY 2018

 

Time uploaded in London –  8-20 AM   (British Summer Time)

 

Post No. 5018

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஒசை இன்பம் கொண்ட வோர்ட்ஸ்வொர்த்தின் டாஃபோடில்ஸ் -1

 

.நாகராஜன்

 

1

ஆசை தரும் கோடி அதிசயங்கள்  கண்டதிலே

ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ (குயில் பாட்டு – 194)

என்றான் மகாகவி பாரதி.

 

 

ஒசை நுட்பமானது. அதை உணர்பவர்களே நல்ல கலா ரஸிகர்கள். கவிதையை ரஸிக்க வல்லவர்கள்.

கவிஞர்கள் இந்த ஓசை நுட்பத்தில் கரை கண்டவர்கள்.

அவர்கள் மனமும் சிந்தனையும் சொற்களின் வாயிலாக உயர் கருத்துக்களை அள்ளித் தெளிக்கும் போது ஓசை நுட்பத்திற்கு உயரிய இடம் கொடுத்து படிப்போரை ஈர்த்து தன்னுடன் லயப்படுத்துவர்.

 

ஒரு சொல்லை இன்னொரு சொல்லால் மாற்றிப் போட முடியாதபடி கவிதை தருபவனே உண்மைக் கவிஞன். ஒரே அர்த்தம் தரும் பல சொற்கள் உண்டு. ஆனால் கவிஞன் அவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே தனது சொல்லைத் தேர்ந்தெடுக்கிறான்.

 

கோவில் மணியோசை தன்னைக் கேட்டதாரோ (கிழக்கே போகும் ரயில் 1978 வெளியீடு; இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன்)

 

என்ற பாட்டில் ஓசைக்குப் பதிலாக நாதம் என்ற சொல்லைப் போட்டு

கோவில் மணிநாதம் தன்னைக் கேட்டதாலே

என்று சொல்லிப் பாருங்கள். ரஸனை இடிக்கும்.

தேவன் கோவில் மணியோசை – இதுவும் திரைப்படப் பாடல் தான். (படம் மணியோசை-1962 வெளியீடு)

 

தேவன் கோவில் மணி நாதம் – கேட்கவே சரியில்லை.

சரி, நாதமென்னும் கோவிலிலே

ஞானவிளக்கேற்றி வைத்தேன்

ஏற்றி வைத்த விளக்கினிலே ….

(படம் : மன்மத லீலை; இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன்)

 

இதுவும் திரைப்படப் பாடல் தான்.

 

ஓசை என்னும் கோவிலிலே ஞான விளக்கு ஏற்றி வைத்தேன் ?!

 

ரஸனை இடிக்கிறது.

இந்தப் பாடலில் நாதம், நாதம் தான்; ஓசை, ஒசை தான்!

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அதனால் தான் கம்பன் வால்மீகியின் ராமாயணத்தைப் புகழும் போது

 

‘வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் என்று கூறி வால்மீகி முனிவரின் பாதம் ஒன்றைக் கூட மாற்ற முடியாது என்று புகழ்ந்து கூறினான். ( ஒரு சுலோகத்திற்கு நான்கு பாதம் உண்டு. விருத்தச் செய்யுளிலில் நான்கு அடிகள் இருப்பது போல!)

 

ஆக இந்த ஓசை இன்பம் தமிழுக்கு மட்டும் அல்ல; ஆங்கிலத்திலும் இதர எல்லா மொழிகளிலும் கூட உண்டு.

ஆங்கிலக் கவிஞர்களும் இதில் வல்லவர்கள்.

எடுத்துக் காட்டாக வோர்ட்ஸ்வொர்த் எழுதிய அற்புதக் கவிதையான டாஃபோடில்ஸ் கவிதையைப் பார்ப்போம்.

இந்தக் கவிதை கீழே தரப் படுகிறது.

 

 

இதை எனது பழைய கால சேதுபதி ஹை ஸ்கூல் உபாத்தியாயர் திரு எம்.எஸ்.ஆர் என்பவர் செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற ராகத்தில் அழகுறப் பாடுவார்.

அதில் சொக்கிப் போன எங்களுக்கு பாடல் அப்படியே மனப் பாடம் ஆகி விட்டது!

 

 

ஓசை இன்பம் அப்படிப்பட்டது இந்தப் பாடலில்.

பாடலைக் கீழே முதலில் பார்ப்பொம். பிறகு ஓசை இன்பத்திற்கு வோர்ட்ஸ்வொர்த் என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம்.

 

2

I Wandered Lonely as a Cloud 

 

BY WILLIAM WORDSWORTH

 

I wandered lonely as a cloud

That floats on high o’er vales and hills,

When all at once I saw a crowd,

A host, of golden daffodils;

Beside the lake, beneath the trees,

Fluttering and dancing in the breeze. (வரிகள் 1 முதல் 6)

 

Continuous as the stars that shine

And twinkle on the milky way,

They stretched in never-ending line

Along the margin of a bay:

Ten thousand saw I at a glance,

Tossing their heads in sprightly dance. (வரிகள் 7 முதல் 12)

 

The waves beside them danced; but they

Out-did the sparkling waves in glee:

A poet could not but be gay,

In such a jocund company:

I gazed—and gazed—but little thought

What wealth the show to me had brought: (வரிகள் 13 முதல் 18)

 

For oft, when on my couch I lie

In vacant or in pensive mood,

They flash upon that inward eye

Which is the bliss of solitude;

And then my heart with pleasure fills,

And dances with the daffodils.  (வரிகள் 19 முதல் 24)

***

சதி – சதியா, சரியா? (Post No.5012)

Written by S NAGARAJAN

 

Date: 15 MAY 2018

 

Time uploaded in London –  5-58 AM   (British Summer Time)

 

Post No. 5012

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சதி  – சதியா, சரியா?

 

ச.நாகராஜன்

1

சமீபத்தில் வந்த நீதி மன்றத் தீர்ப்பு வயதுக்கு வந்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை என்று கூறுகிறது.

மணமாகாமல் சேர்ந்து வாழலாம்; பின்னர் பிரியலாம்!

கண்டதும் காமம்; தினவு தீர்ந்ததும் பிரிவு!

நினைத்தாலே சற்று திகைப்பாக இருக்கிறது. இது எதில் கொண்டு போய் விடுமோ என்று!

நீதிமன்றத் தீர்ப்பை விமரிக்கக் கூடாது. மூச்!

2

 

கணவன் இறந்தவுடன் உயிர் வாழ விரும்பாமல் உடன்கட்டை ஏறி சதியாக விரும்பியோர் நமது சரித்திரத்தில் ஏராளம் பேர் உண்டு.

இதைத் தீய பழக்கம் என்று ஆங்கில அரசு தடை செய்தது.

சதி ஒரு பெரிய சதி. தேவையற்றோர் அதைப் பயன்படுத்தி கணவன் இறந்து விட்டால் அனைத்து விதவைகளையும் – கொலை செய்கிறார்கள் என்பது அவர்களின் வாதம். இப்படிச் செய்யப்பட்டால் அது கொலை தான்! ஆனால் அப்படி நடக்கவில்லை!

உண்மையில் கணவன் இறந்த பின்னர் கைம்மை நோன்பு என்பதையே பெண்களில் பெரும்பாலானோர் அனுஷ்டித்து வந்தனர்.

இதைத் தமிழில் சங்க இலக்கியம் பல பாடல்களில் விரிவாகக் கூறுகிறது.

உடன்கட்டை ஏறுதலைப் பற்றி ஒரு பாடலும் கைம்மை நோன்பைப் பற்றிப் பல பாடல்களும் தெரிவிக்கின்றன.

இதே போல பாரதத்தின் இதர மொழி இலக்கியங்களும் விரிவாகக் கைம்மை நோன்பைப் பற்றி விவரிக்கின்றன.

ஆகவே சதி என்பது ஒரு சதி இல்லை.

“பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட

யானோ அரசன்? யானே கள்வன்

மன்பதைக் காக்கும் தென்புலம் காவல்

என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்”

என்று வருந்தி உரைத்து, பாண்டியன் உயரமான சிம்மாசனத்திலிருந்து விழுந்து உயிர் துறந்ததை சிலப்பதிகாரம் விளக்குகிறது. உடனடியாக பாண்டிமாதேவியும் அந்தக் கணமே

உயிர் துறந்ததை

“கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று

இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி”

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

தலையாய கற்பு என்று இது போற்றப்படுகிறது.

 

 

3

சங்க இலக்கியத்தில் அகநானூறு காதலைப் பற்றி மிக அருமையாக விளக்குகிறது.

செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்பதால் இரு மனம் ஒன்றி சாகும் வரை சேர்ந்து வாழ்வதே உண்மைக் காதல் என்பதை அறிகிறோம்.

1923ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அகநானூறு (மூலமும் பழைய உரையும் ) என்ற நூலை ஆராய்ந்து அதைச் சரிவர பிரசுரிக்க உதவி செய்து அதற்கு முன்னுரையும் வழங்கியவர் ஸேது சமஸ்தான வித்வானான ரா.இராகவையங்கார் ஆவார்.

அவர் அந்த நூலில் தனது முன்னுரையில் கூறுவதில் ஒரு பகுதி இது:

“இந்நூலில் கூறப்படும் அகத்திணையொழுக்கம் நினைந்தவுடன் மணந்து சினந்தவுடன் தணவும் இக்காலத்துச் சிலர் வதுவை போலாது எப்படியானுந் தணப்பரியதோர் கூட்டம் என்பது

“யாக்கைக், குயிரிடத் தன்ன நட்பி னவ்வுயிர்

வாழ்தலன்ன காதல்

சாத லன்ன பிரிவரி யோனே” (பாடல் 334)

எனவும்,

“பிரிவின் றியைந்த துவரா நட்பி

னிருதலைப் புள்ளி னோருயி ரம்மே” (பாடல் 12)

எனவும் வருமிடங்கள் நோக்கி உய்த்துணர்ந்து கொள்ளலாம்.”

 

முன்னுரையில் இன்னொரு பகுதி இது:

“இன்னும் ஆண் பெண் இருவரும் இல்வாழ்க்கை நடாத்தற்கண் ஒத்த பண்பு இன்றியமையாதென்பது இந்நூலுள்,

“அன்பு மடனுஞ் சாயலு மியல்பு

மென்பு நெகிழ்க்குங் கிளவிய பிறவு

மொன்றுபடு கொள்கையோ டோராங்கு முயங்கி” (பாடல் 225)

என வருதலால் அறியப்படும். ஈண்டு அன்பு என்பது ஒருவரை ஒருவர் இன்றியமையாமை. மடன் என்பது ஒருவர் குற்றம் ஒருவர் தெரியாமை. சாயல் என்பது மென்மைத் தன்மை. இயல்பு என்பது ஒருவரை ஒருவர் ஒளித்தொழுகாமை. என்பு நெகிழ்க்குங் கிளவி என்பது உடலின் வலிதாகிய என்பையும் நெகிழ்விக்கும் ஆர்வ மொழி. இவையும் பிறவும் இருவர்க்கும் ஒரு தன்மைப்பட்ட கொள்கையுடன் இருவரும் ஒருவராகவே சேர்ந்திருத்தலைக் கூறுதலான் பண்டைக் காலத்து இல்வாழ்க்கை இயல்பு ஒருவாறு தெரியப்படும்.”

 

அருமையான மேற்கண்ட உரையால் பண்டைக் காலத்தில் தமிழகத்தில் காதல் எப்படி உணரப்பட்டது, இல்லறம் எப்படி நடத்தப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

உடல் மட்டும் இரண்டு; உயிர் ஒன்று என்ற நிலையில் ஒரு உடல் போய் விட்ட நிலையில் இன்னொரு உடலும் தன் விருப்பத்தால் போக அனுமதிப்பதே சதி.

இது கொச்சைப்படுத்தப் பட வேண்டிய ஒரு விஷயமல்ல.

ஆங்கிலேயரின் கல்யாண ஒழுக்கம், “நினைந்தவுடன் மணந்து சினந்தவுடன் தணவும் இக்காலத்துக்” கல்யாண ஒழுக்கம்! இது காதல் அல்ல; கீழ்த்தரக் காமம். இதன் படி ஒருவனுக்குப் பல பெண்களும் ஒருத்திக்குப் பல கணவன்களும் இருக்கலாம்! இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் வளர்ப்பு சூழ்நிலைக்கு ஏற்ப இருக்கும்.

ஆக சதி பற்றிய ஆங்கிலேயரின் நோக்கு கோணல் நோக்கு!

4

ஒருவன் கொலை செய்கிறான். அவனை விசாரித்த நீதிபதி அவன் கொலை செய்தது உறுதி என்பதை அறிந்து கொண்ட பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறார்.

அவனும் ஒரு உயிரைப் பறித்தான்.

நீதிபதியும் ஒரு உயிரைப் பறிக்கிறார்.

செயல் ஒன்று தான்.

ஆனால் கொலைகாரனைப் பழிக்கிறோம்; நீதிபதியைப் புகழ்கிறோம்.

போர் நடக்கிறது. நமது படைவீரன் ஒருவன் எதிரியால் கொலை செய்யப்பட்டு விட்டான்.

அவனுக்கு உரிய மரியாதை தரப்படுகிறது. நாடே துக்கத்தில் பங்கு கொள்கிறது.

அதே சமயம் நமது வீரர்கள் எதிரிகளைக் கொல்கின்றனர். உயிர் பறிக்கும் அந்தச் செயலை போற்றிக் கொண்டாடுகிறோம். எதிரிகளை வெட்டி வீழ்த்தியவர்களை வீராதி வீரர்கள் என்று கொண்டாடுகிறோம்.

செயல் ஒன்று தான் என்றாலும் நோக்கத்தின் அடிப்படையில் ஒரு செயலை இனம் காண்கிறோம்.

சதியில் ஒரு உயிர் போகிறது என்றாலும் நோக்கத்தின் அடிப்படையில் அது  ஹிந்து சரித்திரத்தில் புகழிடம் பெற்றது.

அலாவுதீன் கில்ஜியின் அந்தப்புர அழகியாகத் திகழ்வதை விட -அளப்பரிய செல்வத்துடன் ஆசைநாயகியாகத் வாழ்வதை விட -தீக்குளித்து உயிர் தியாகம் செய்வதே மேல் என்று முடிவெடுத்த சித்தூர் ராணி பத்மினி மங்கையரில் மாண்புமிக்க திலகம் அல்லவா?

பாரத நாட்டில் உள்ள ஆண்களும் பெண்களும் அந்தக் கற்புக்கரசியைக் கொண்டாடுவது சரி தானே!

அந்த மங்கையர் திலகத்தை கொச்சைப்படுத்தும் ஒரு திரைப்படத்தைக் கண்டிப்பது சரி தானே!

5

சதியைப் பற்றி அலசி ஆராய்ந்து, ஆங்கில வார இதழான Truth தனது 20-4-2018 (தொகுதி 86 இதழ் 1) இதழில், சில கேள்விகளை முன் வைக்கிறது.

அதை அப்படியே ஆங்கிலத்தில் இங்கு தருகிறோம்:

“If Sati is savage, barbaric and inhuman what about war? Is it not infinitely more so? Why not the whole army, with its generals and officers incarcerated for an attempt  of  suicide? Why are not expeditions for climbing the Himalayas and for Poles penalized? What about abortion, medical and non medical? What about wholesale and universal slaughter to fill the belly? Is it savage or human? What is hunger-strike? What is fast unto death? What is the  onslaughts through Satyagraha? What is birth – control? What is family – planning, a fine euphemy for diabolical foeticide? Is it because these are sinner’s paradise and Sati is not?”

 

இந்தக் கேள்விகளுக்கு ஹிந்து மதப் பழக்கங்களை மட்டும் எள்ளி நகையாடி எதிர்க்கும் பகுத்தறிவுச் செல்வங்கள் பதில் சொல்வார்களா?

“திராவிடத் தம்பிகள்” தவறான கொள்கைகளுக்காகவும் தங்களின் முக்கியத்துவம் குன்றி விடக் கூடாது என்பதற்காகவும் அவ்வப்பொழுது போராட்டங்கள் நடத்தி அப்பாவிகளைத் தூண்டி விட்டு உணர்ச்சி வசப்பட வைத்து தீக்குளிக்க வைத்து, அவர்களைத் தியாகிகளாகச் சித்தரிக்கும் கேவலத்தையும் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும்!

சிந்தித்தால் ஒன்றுபட்டு இருக்கும் பாரத சமுதாயத்தைப் பல பிளவுகளாக்கி அதைச் சிதைப்பதே இவர்களின் தீய நோக்கம் என்பது தெரிய வரும்!

இந்தத் தீய நோக்கம் நிறைவேறாது என்பதைக் காலம் உணர்த்தும்.

 

***

 

 

 

 

குறள் கதை-காலகாசார்யா தங்கை கடத்தல்! (Post No.5010)

குறள் கதை-காலகாசார்யா தங்கை கடத்தல்! (Post No.5010)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 14 May 2018

 

Time uploaded in London – 11-14 am (British Summer Time)

 

Post No. 5010

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலு ளெல்லாம்  தலை (குறள் 891)

பொருள்

தாம் எடுத்த காரியத்தை எண்ணியவாறே முடிக்க வல்லாரை இகழாமல் இருப்பது, தம்மைக் காத்துக் கொள்ளும் செயல்களில் மிகவும் முக்கியமானதாகும்.

 

 

விக்ரமாதித்தன் தொடர்பாக சமண மத நூல்களில் ஒரு கதை உண்டு. அவனைப் பற்றிய பல கதைகளில் ஒன்று இது. ஆனால் எல்லாக் கதைகளும் காலப்போக்கில் ஒரே விக்ரமாதித்தன்  தலையில் கட்டிவிடப்பட்டது. விக்ரமாதித்தின் என்றால் ‘வீரத்தில் சூரியன்’ என்று பொருள். வீரத்தில் சூரியனைப் போல ஒளி உள்ளவன், தஹிப்பவன், புகழ் பெற்றவன் என்று பல பொருள் உள்ளதால் ஆதித்தன் (சூரியன்) என்ற பெயர் பல மன்னர்களின் பெயரில்  — சோழ மன்னர்கள் – உள்பட சேர்க்கப்படும்.

 

வேதாளமும் விக்ரமாத்தித்தனும் என்ற கதையில் வரும் மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன். அவனைப் பற்றிய ஒரு சுவையான கதை இதோ:

 

உஜ்ஜைனியை தலைநகராகக் கொண்டு கர்த்தபில்லா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்பொழுது உஜ்ஜையினி நகரில் இருந்த மடத்தில் காலகாசார்யா என்ற சமண மதத் துறவி தலைவராக இருந்தார். அவருக்கு ஸரஸ்வதி என்ற பெயருள்ள அழகான ஸஹோதரி இருந்தாள். அவளை மடத்திலிருந்து மன்னன் கர்த்தபில்லா கடத்திச்  சென்றான். உடனே காலகாசார்யாவுக்கு கோபம் வந்தது.

 

பொதுவாக சமணர்கள் வன்முறையில் இறங்கமாட்டார்கள். ஆகவே அவர் முறையாக மன்னனைச் சந்தித்து சகோதரியை விட்டுவிடும் படி இறைஞ்சினார். ஆனால் மன்னனோ, ராவணன், சீதையை விடுதலை செய்வதற்கு மறுத்தது போலவே ஸரஸ்வதியை விடுதலை செய்யவும் மறுத்தான். அத்தோடு காலகாசார்யாவை இகழ்ந்தான். அவமானப்படுத்தினான்.

 

 

காலகாசார்யா, அருகிலுள்ள சக மன்னன் ஒருவனை அணுகி உதவி கேட்டார். அவனிடமோ குறைவான படைகளே இருந்தன. காலகாசார்யா சொன்னார்: நானே பயிற்சி கொடுத்து, நானே தளபதி பதவி ஏற்று படை நடத்துவேன் என்று. அவ்வாறே செய்தார். கர்த்தபில்லாவை வென்று ஸஹோதரியை மீட்டார். அந்த மன்னனையும் மன்னித்தார். மன்னன் காட்டில் சென்று வசித்தான்.  அவனை ஒரு புலி அடித்துக் கொன்றுவிட்டது. அவனது மகனே விக்ரமாதித்யன். அவன் பெரியவன் ஆனவுடன், பக்கத்து தேசத்தில் படை திரட்டி உஜ்ஜைனி மீது படை எடுத்தான். அவன் வெற்றி பெற்ற வருடத்தில் இருந்து விக்ரம சகாப்தம் என்ற புது ஆண்டுத் தொடக்கம் ஏற்பட்டது.

 

இந்தக் கதைகள் எல்லாம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதப் பட்டன. இது தொடர்பான குட்டி ஓவியங்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வரையப்பட்டன. ஆக, எது உண்மை, எவ்வளவு தூரம் உண்மை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.

 

பெரியாரைப் பகைத்தால் ஆட்சிகள் முறியும் என்பது கர்த்தபில்லாவின் கதையில் தெரிகிறது.

காலகாசார்யா கதையைக் கூறும் ஓவியங்கள் பல மியூசியங்களில் உள்ளன. அமெரிக்காவில் ப்ரூக்ளின் மியூசியத்திலும் பல குட்டி ஓவியங்கள் இருக்கின்றன.

 

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

வேந்தனும் வேந்து கெடும் (899)

 

உயர்ந்த கொளகைகளை உடைய பெரியார்கள் கோபம் அடைந்தால், பெரிய வேந்தர்களும் ஆட்சியை இழந்து கெட்டுப்போவர்.

 

–சுபம்–

 

தமிழா விடை தா! செப்புடா, செப்பு! Quiz (Post No.5009)

தமிழா விடை தா! செப்புடா, செப்பு! Quiz (Post No.5009)

Compiled by London Swaminathan 

 

Date: 14 May 2018

 

Time uploaded in London – 6-37 am (British Summer Time)

 

Post No. 5009

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கீழேயுள்ள புகழ் மிகு, அருள் மிகு, கவின் மிகு, திரு மிகு சொற்றொடர்களை நுவன்றோர் யாவர் என்று செப்புக!

 

1.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

xxxx

 

2.உள்ளம் பெருங்கோயில்

ஊன் உடம்பு ஆலயம்

xxxx

 

3.ஆயநான் மறையனும் நீயே ஆதல்
அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்
நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்

 

xxx

4.தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயிர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ்சுளுக்கும் ஒருதலை நோயும்

xxxx

 

5.தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகலகலா வல்லியே.

xxx


6.மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே

xxxx

7.நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீடு இயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்

 

xxx

8.ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமுமம்

அரச குமரரும், பரத குமரரும்

xxx

9.திருமாலொடு நான்முகனும்

தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்

xxxx

10.அன்பின் வழியது உயிர்நிலை

xxx

11.தமிழ்நாடெங்கும் தடபுடல்! அமளி!

பணமே எங்கணும் பறக்குது விரைவில்

குவியுது பணங்கள்! மலைபோற் குவியுது!

xxx

12.புகழும் நல் ஒருவன் என்கோ?

பொருவில் சீர்ப் பூமி என்கோ?

திகழும் தண் பரவை என்கோ?

தீ என்கோ? வாயு என்கோ?

நிகழும் ஆகாசம் என்கோ?

நீள் சுடர் இரண்டும் என்கோ?

 

xxxx

ANSWERS

1.பாரதி, பாரதியார் பாடல்கள், 2.திருமூலர் எழுதிய திருமந்திரம், 3. மாணிக்கவாசகர், திருவாசகம், 4.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 5.குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை, 6.பட்டினத்தார் பாடல், 7. கம்பன், கம்ப ராமாயணம், 8.இளங்கோ, சிலப்பதிகாரம், 9.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 10.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 11.பாரதிதாசன் பாடல்கள், 12.நம்மாழ்வார் திருவாய்மொழி

 

–SUBHAM–