காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை!! (Post No.4590)

Date: 7 JANUARY 2018

 

Time uploaded in London- 5-47 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4590

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

மன்மத லீலை

 

காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை; அதன் உட்பிரிவோ 12288!! அதிசய மன்னனும், அவனை ஆராய்ந்த அறிஞரும்!!!

 

ச.நாகராஜன்

 

 

1

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பேயே மகாகவி பாரதியார் காதல் காதல் காதல்

காதல் போயின் காதல் போயின்

சாதல் சாதல் சாதல்

என்று அருமையாக காதலின் உச்சகட்ட நிலையை விளக்கி விட்டார்.

அந்தக் காலத்தில், காதலின் வேகமும் அழுத்தமும் இந்த நவீன யுகத்தில் இருக்கின்றார் போல இருந்ததா? தெரியவில்லை.

இருந்தாலும் அந்த நாளிலேயே அவர் இப்படி அழுத்தமாகச் சொல்லி விட்ட கவிதா வரிகள் சற்று அதிசயமாகவும் இருக்கிறது; ஆச்சரியமாகவும் இருக்கிறது!

2

சரி, காதல்மன்னர்களும், காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்களும், ரஸிகர்களும், காதலர்களும், காதலிகளும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல முடியுமா?

காதலில் எத்தனை விதம், சொல்லுங்கள், பார்ப்போம்!

பதில் தெரியாமல் முழித்தால் இந்து நாகரிகத்திற்குத் தான் வர வேண்டும்.

ஆண்-பெண் உறவின் அற்புத இரகசியத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசிய ஒரே மதம் இந்து மதம் தான்.

காதலில் மொத்தம் 64 விதம் உள்ளது.

எங்கே 64-ஐயும் சொல்லுங்கள் பார்ப்போம் என்கிறீர்களா?

இதோ தருகிறோம், பட்டியலை!

3

01) Abhilasa – அபிலாஷா

02) Akanksa – அகாங்சா

03) Apeksa – அபேக்ஷா

04) Utkantha – உத்கந்தா

05) Ipsa – இப்ஸா

06) Lipsa – லிப்ஸா

07) Iccha – இச்சா

08) Vancha – வாஞ்சா

09) Trsna -த்ருஷ்ணா

10) Lalasa – லாலஸா

11) Sprha -ஸ்ப்ருஹா

12) Laulya – லௌல்யா

13) Gardha – கர்தா

14) Sraddha – ச்ரத்தா

15) Ruci – ருசி

16) Dohada – தோஹதா

17) Asa – ஆசா

18) Asis – ஆசிஸ்

19) Asamsa – அசம்ஸா

20 Manoratha – மனோரதா

21) Astha – ஆஸ்தா

22) Abhinivesa – அபினிவேசா

23) Anubandha – அனுபந்தா

24) Agraha –  ஆக்ரஹா

25) Vimarsa – விமர்சா

26) Manisa – மநீசா

27) Abhipraya – அபிப்ராயா

28) Paksapata – பக்ஷபாதா

29) Lobha – லோப்ஹா

30) Asanga – ஆஸங்கா

31) Abisvanga – அபிஸ்வங்கா

32) Sakti – சக்தி

33) Moha – மோஹா

34) Akuta – அகூடா

35) Kuthuhala – குதூகலா

36) Vismaya – விஸ்மயா

37) Raga – ராகா
38) Vega – வேகா

39) Adhyavasaya -அத்யாவாஸ்யா

40) Vyavasaya – வ்யவசாயா

41) Kamana – காமனா

42) Vasana – வாஸனா

43) Smarana -ஸ்மரணா

44) Sankalpa – சங்கல்பா

45) Bhava – பாவா

46) Rasa (Hasa) – ரஸா (ஹாஸா)

47) Rati – ரதி

48) Priti – ப்ரீதி

49) Dakshinya – தாக்ஷிண்யா

50) Anugraha – அனுக்ரஹா

51) Vatsalya – வாத்ஸல்யா

52) Anukrosa – அனுக்ரோஸா

53) Visvasa – விஸ்வாஸா

54) Visramba – விஸ்ரம்பா

55) Vasikara – வசீகரா

56) Pranaya -ப்ரணயா

57) Prapti – ப்ராப்தி

58) Paryapti – பர்யாப்தி

59) Samapti – சமாப்தி

60) Abhimanapti – அபிமானாப்தி

61) Sneha – ஸ்னேஹா

62) Prema – ப்ரேமா

63) Ahlada – ஆஹ்லாதா

64) Nirvrti –  நிவ்ருத்தி

 

 

3

அடேயப்பா, இத்தனை விதமா?

இதற்குள் மலைத்தால் எப்படி?

இந்த 64 விதத்தில் அனுராகத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

 

 

நித்யானுராகா

நைமித்திகானுராகா

சமான்யானுராகா

விசேஷானுராகா

ப்ரகாசானுராகா

ப்ரச்சன்னானுராகா

அக்ருத்ரிமானுராகா

க்ருத்ரிமானுராகா

 

என இதில் எட்டு வகை உள்ளன. இவை காதலின் மஹார்தி எனச் சொல்லப்படுகிறது.

இவை ஒவ்வொன்றிலும் 24 வகை உண்டு.

ஆக அனுராக வகைகளில் மட்டும் எட்டு வகையில் உள்ள 24 உட்பிரிவு வகைகளையும் பெருக்கிப் பார்த்தால் வருவது 192. இந்த 192 ஐ 64-உடன் பெருக்கினால் வருவது 12288.

இவ்வளவு வகை உண்டு.

 

4

சரி, இதையெல்லாம் யார் சொல்கிறார்கள், எங்கே சொல்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே.

போஜ மஹாராஜன்,”ச்ருங்கார ப்ரகாசா” என்ற அலங்கார சாஸ்திர நூலைப் புனைந்துள்ளான்.

அதில் தான் ஒவ்வொன்றின் விளக்கத்துடனும் காதல் அதாவது  ச்ருங்காரம் மிக நுட்பமாக விளக்கப்படுகிறது!

 

 

5

இது இப்போது கிடைக்குமா? எப்படி இந்த தகவல்கள் கிடைக்கின்றன?

நல்ல கேள்வி.

பேரறிஞர் டாக்டர் வி. ராகவன் (நிஜமாகவே பேரறிஞர்!!!) சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகச் சிறந்த விற்பன்னர்.

உ.வே.சாமிநாதையர் வாழ்நாள் முழுதும் தமிழ்ச் சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைந்தது போல, டாக்டர் ராகவன் நாடு நாடாக அலந்தார். பல்வேறு பல்கலைக் கழகங்கள், நிறுவனங்கள், சம்ஸ்கிருத சுவடி இருக்கும் இடங்கள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை.

 

பல லட்சம் நூல்கள் அடங்கிய சம்ஸ்கிருத நூல்கள் பற்றி அறிந்து கொண்ட பின்னர் சம்ஸ்கிருத நூலுக்கான என்சைக்ளோபீடியாவைத் தயாரித்தார்.

அந்த மாபெரும் ஆராய்ச்சியாளர் தனது டாக்டரேட் டிகிரிக்காக ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நூல் தான் போஜனின், “ச்ருங்கார ப்ரகாசா”

 

1931 செப்டம்பர் மாதத்திலிருந்து 1934 செப்டம்பர் மாதம் வரை அவர் செய்த அற்புதமான ஆராய்ச்சியின் பெருமையைச் சொற்களால் அளக்க முடியாது; விளக்க முடியாது!

 

1940ஆம் ஆண்டு இது  தொகுதிகளாகவும், பகுதிகளாகவும் வந்தது. (Karnakatk Publishing House, Bombay – 1940)

இப்போது இதை விளக்க இன்னொரு ராகவன் தான் வேண்டும். அப்படி ஒரு நுட்பமான ஆராய்ச்சியை அவர் செய்து உலகுக்கு அளித்திருக்கிறார்.

 

 

 

6

அற்புதமான மன்னன் போஜ மஹாராஜன். அவன் தொடாத துறையே இல்லை.

அதில் ஒன்று தான் “ச்ருங்கார ப்ரகாசா”.

 

36 அத்தியாயங்கள் இந்த நூலின் கைப்பிரதி மட்டும் 1908 பக்கங்கள் – ஃபூல்ஸ்கேப் பேப்பரில்!.

 

இதைத் தயாரித்து ஆராய்ந்தார் டாக்டர் ராகவன்.

போஜ மஹாராஜன் 84 நூல்களை எழுதியுள்ளான்.

விமானம் கட்டுவதிலிருந்து சிருங்கார ப்ரகாஸா வரை உள்ள அவனது நூல்கள் பிரமிக்க வைப்பவை.

 

அந்த மாபெரும் அறிஞனின் அறிவை அளக்க யாரால் முடியும்?!

ஒரு சிறிது அறிந்தாலும் கூட அந்த அளவுக்கு நமது அறிவின் வலிமை கூடும் என்பதில் ஐயமில்லை.

நன்றி : டாக்டர் வி. ராகவன் அவர்களுக்கு!

****

 

 

வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்- பழமொழிக் கதை (Post No.4588)

வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்- பழமொழிக் கதை (Post No.4588)

 

 

Written by London Swaminathan 

 

Date: 6 JANUARY 2018

 

Time uploaded in London- 8-18 am

 

 

 

Post No. 4588

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் — என்ற தமிழ்ப் பழமொழியைப் பலரும் அறிவார்கள்; ஆனால் இதன் பின்னாலுள்ள சுவையான கதையை அறிந்தோர் சிலரே. இதோ கதை:-

 

அம்மாஞ்சி என்ற பிராஹ்மணன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி வல்லாள கண்டி மற்றும் அவனுடைய அம்மா, மற்றும் மாமியார் ஆகியோருடன் கூட்டுக் குடும்பம்.

 

வல்லாள கண்டியின் பெயரைக் கேட்டாலேயே அவள் எப்படிப்பட்டவள் என்பதைக் கண்டுகொள்ளலாம்;  சரியான சிடுமூஞ்சி; அடங்காப்பிடாரி.

 

வீட்டில் தினமும் ரணகளம்தான்;  த்வஜம் கட்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் மோதல்; சண்டை சச்சரவு அன் றாடக் காட்சிகள்! குறிப்பாகச் சொல்லப் போனால் அதிகம் பாதிக்கப்பட்டது அம்மாஞ்சி பிராஹ்மணனின் அம்மாதான்

 

அசட்டு அம்மாஞ்சியால் ஒன்றும் சமாளிக்க முடியவில்லை. அவனுடைய அம்மாவும் பார்த்தாள்; இனி வீட்டை விட்டு ஓடுவதே ஒரே வழி என்று சிந்தித்தாள்; செயல் பட்டாள்;

 

ஆந்தைகள் அலறும், நாய்கள் ஓலமிடும் நள்ளிரவில் வீட்டை விட்டு ஓடினாள்.

 

 

‘ஓடினாள், ஓடினாள், கிராமத்தின் எல்லைக்கே ஓடினாள்’

அங்கே ஒரு காளி கோவில். அதில் ஓய்வு எடுத்தாள்.

 

நள்ளிரவுக்குப் பின்னர் ‘’கிலிங் கிலிங்’’ என்ற சப்தம். கிழட்டு அம்மணி நிமிர்      ந்து பார்த்தாள். அங்கே ஸ்வரூப சுந்தரியாக காளி தேவி காட்சி தந்தாள்.

‘அம்மணி! ஏது வெகுதூரம் வந்துவிட்டீர்? என்ன சமாச்சாரம்?’ என்று வினவ, கிழட்டு அம்மணியும் செப்பினாள் தன் துயரக் கதைகளை.

 

காளி மொழிந்தாள்:

கவலைப் படாதே! ஒரு மாம்பழம் தருகிறேன்; அதைச் சாப்பிடு; ‘’பெரிய மாற்றம்’’ ஏற்படும் என்றாள்.

அவளும் கவலையை மறந்து விடிவு காலத்தை (பொழுது விடியும் காலத்தை) எதிர் பார்த்துக் காத்திருந்தாள்.

 

இதற்குள்  அம்மாஞ்சி வீட்டில் ஒரே களேபரம்;அம்மாவைக் காணாது அம்மாஞ்சி- அசட்டு அம்மாஞ்சி–துடியாய்த் துடித்தான்

 

இதென்னடா கலிகாலம்! ‘பெத்த மனசு கல்லு, பிள்ளை மனசு பித்து’ என்று பழமொழி மாறிவிட்டதே.

 

ஓடினான் ஓடினான் ஊரின் எல்லைக்கே ஓடினான். அங்கே பராசக்தி அமர்ந்திருந்தாள்- அதான் அவனுடைய கிழட்டு அம்மா!

 

‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே. அன் புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’,  என்று பாடி அவளை நமஸ்கரித்தான்.

வீட்டிற்குத் திரும்பி வருமாறு இறைஞ்சினான்.

அவளும் ‘நான் பெற்ற செல்வம்; நலமான செல்வம்’ என்று பாடி மாம்பழத்தைக் காட்டி சாப்பிடு என்றாள்.

அம்மா, அது அரிய பெரிய கனி; நீயே உண்ணு என்று சொல்லி அவளைத் தோளின் மீது போட்டுக்கொண்டான். அவளும் மாம்பழத்தைச் சாப்பிட்டாள்.

 

அம்மாஞ்சிக்கு கொஞ்சம் ஆச்சர்யம்; அம்மாவின் சொர சொர தோல் வழு வழு என்பது போல ஒரு உணர்வு; ஓஹோ! களைப்பின் மிகுதியால் வந்தது என்று எண்ணினான். மேலும் மேலும் குமரிப் பெண்ணின் கைகள் போட்ட உணர்வு தோன்,,,ரவே திரும்பி அம்மாவின் முகத்டைப் பார்த்தான; அவள் சொர்ண சுந்தரியாக மாறி ஸ்வர்ணம் போல ஜொலித்தாள்; வீட்டில் போய் இறக்கும் போது அவனுடைய கிழட்டு அம்மா  இளம் குமரி  ஆக மாறி இருந்தாள். அவனுக்கும் அவளுக்கும் மகிழ்ச்சி. எல்லாக் கதைகளையும் வல்லாள கண்டி கேட்டாள்; பொறாமைத் தீயில் சதித்திட்டம் தீட்டினாள்.

இரவு நேரத்தில் தனது அம்மாவை- அதாவது அசட்டு அம்மாஞ்சியின் மாமியாரை- வீட்டை வீட்டு ஓடும்படி துர் புத்திமதி சொன்னாள்; அவளும் இசைந்தாள் காளி கோவிலில் தஞ்சம் புகுந்தாள்; காளியும் தோன்றினள்; ஏன் அம்மா இங்கு வந்தாய் என்று கேட்க, அவளும் உரைத்தாள்– வீட்டில் துக்கம் தாளவில்லை என்று.

 

எதிர்பார்த்தது போலவே காளியும் மாம்பழம் தந்து உரைத்தாள்: இதைச் சாப்பிடு ‘’பெரிய மாற்றம்’’ வரும் என்று.

 

அந்தக் கள்ளியும் அவசரம் அவசரமாக மாம்பழத்தை உண்டாள். இதற்குள் வல்லாள கண்டி தனது அம்மாவைத் தேடிக் கண்டு பிடிக்கும்படி அம்மாஞ்சியை எஃகினாள். அவனும் விரைந்தான்.

மாமியாரைக் காளி கோவிலில் கண்டான்

கண்டேண் மாமியாரை! என்று ஆனந்தித்தான். தோளின் மீது சவாரியும் கொடுத்தான். அவள் தோல் சொர சொர என்று மாறிக்கொண்டு வந்து எடையும் கூடியது.

திரும்பிப் பார்த்தான்; சிரிப்பை அடக்க முடியவில்லை; மாமியார் அரைக் கழுதையாக மாறி இருந்தாள்; வீட்டிற்குள் ஓடிப் போய் அவளை தொப் என்று போட்டான்; அவள் முழுக் கழுதையாகக் காட்சி தந்தாள்

‘’கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்ணுக்கினியன கண்டேன்

ஊர் மக்கள் அனைவரும் வாரீர்

அரிய காட்சியைப்  பாரீர்’’ —

 

என்று ‘மனதுக்குள்’ பாடிக்கொண்டான்.

 

அம்மாஞ்சிக்கு சந்தோஷம்; அவன் அம்மாவுக்கும் சந்தோஷம்! ஆனால் மாமியாருக்கு துக்கம்; வல்லால கண்டிக்கு பெரும் துயரம்.

 

ஊர் முழுதும்– குறிப்பாக குழாய் அடியில் பெண்களிடையே ஒரே பேச்சு– வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்- என்று.

 

தமிழில் 20000–க்கும் மேலாகப் பழமொழிகள் உள; அவைகளில் சுமார் 2000 வரை எனது ‘பிளாக்’கில் சப்ஜெக்ட் வாரியாகக் – தலைப்பின் படி — கொடுத்துள்ளேன்; நிறைய பழமொழிக் கதைகளையும் தந்துள்ளேன்; ஆங்கிலத்திலும் வரைந்துள்ளேன்; கண்டு மகிழ்க- களிப்பு அடைக!!

 

-சுபம், சுபம் —

சகல வியாதிகளையும் போக்கும் சூரிய ஸ்துதிகள் (Post No.4583)

Date: 5 JANUARY 2018

 

Time uploaded in London- 5-41 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4583

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஞான ஆலயம் ஜனவரி 2018 இதழில் வெளியாகியுள்ள

மகர சங்கராந்தி சிறப்புக் கட்டுரை.

ஞான ஆலயம் வருட சந்தா ரூ300. சந்தா அனுப்ப வேண்டிய முகவரி :திருமதி மஞ்சுளா ரமேஷ், பழைய எண் 7, புதிய எண் 32, அருணாச்சலபுரம் இரண்டாவது தெரு, அடையாறு, சென்னை, 600020

 

குஷ்ட ரோகம், கண் வியாதிகள் உள்ளிட்ட சகல வியாதிகளையும் போக்கும் சூரிய ஸ்துதிகள்

 

ச.நாகராஜன்

1

உலகின் எல்லா நாகரிகங்களும் சூரியனைக் கண்டு பிரமித்து வியப்பவை. ஆனால் ஹிந்து நாகரிகமோ சூரியனின் அபார வல்லமையை ஆய்ந்து கண்டு பிடித்து அதை மனித குலத்தின் நன்மைக்காகப் பெறுவதற்குள்ள அனைத்து வழிகளையும் தந்திருக்கும் நாகரிகமாக அமைகிறது.

ஏராளமான சூரிய ஸ்துதிகள், சூரிய வழிபாட்டு முறைகள் ஹிந்து பாரம்பரியத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

2

ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்த்தனனின் சாம்ராஜ்யம் மிகப் பெரிதாக விளங்கியது. ஹர்ஷவர்த்தனனும் அவனது தந்தை ப்ரபாகரவர்த்தனனும் சூரிய தேவனை உபாசிப்பவர்கள்.

 

அவனது அரசவையில் மிகப் பெரும் கவிஞராக மயூர பட்டர் என்பவர் இருந்தார். அபாரமான சம்ஸ்கிருத சொல் வன்மை உடையவர் அவர். அவருக்கு அதிரூபலாவண்யம் கொண்ட பேரழகியாக ஒரு மகள் இருந்தாள்.

அவளது அழகு அனைவரையும் சொக்க வைக்கும் அழகு.

அப்படிப்பட்ட அழகைப் பார்த்த மயூர பட்டர் அதைத் தன் அழகிய சொற்களினால் வர்ணித்துக் கவிதை இயற்றினார்.

இந்தப் பாடல்களைக் கேட்ட மகள் பெரிதும் வருத்தமடைந்தாள். சொந்தப் பெண்ணின் அழகை எந்தத் தந்தையாவது வர்ணிப்பானா? இது முறையா என்று அவள் வெகுண்டாள்.

மிகுந்த ஒழுக்க சீலமும் ஞானமும் வாய்ந்த அவள் பெரும் தபஸ்வினியும் கூட.

தந்தையை நோக்கி, “இப்படி நீங்கள் தகாத ஒரு செயலைச் செய்ததற்காக என்னை வர்ணித்த அந்தக் கண்கள் பார்வையை இழக்கட்டும். உங்கள் உடலைக் கொடிய குஷ்டம் தாக்கட்டும்” என்று சாபம் கொடுத்தாள்.

பெரும் சக்தியைக் கொண்டிருந்த அவளது சாபம் உடனே பலித்து விட்டது.மயூர பட்டர் பார்வையை இழந்தார். அவரது உடலோ குஷ்ட ரோகத்தால் பீடிக்கப்பட்டு சோபையை இழந்தது.

மயூர பட்டர் துக்கத்தினால் அழ, அவரது நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட மகளும் தன் சாபம் அவருக்குச் செய்த கெடுதியைக் கண்டு நொந்து போனாள்.

பின்னர் மனத்தெளிவு பெற்று தந்தையிடம், “தந்தையே! கவலைப்பட வேண்டாம். அனைத்து ரோகங்களையும் போக்கி ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரும் சூரியனைக் குறித்து உங்கள் வாக் வன்மையால் நூறு செய்யுள்களைக் கொண்ட சூர்ய சதகம் ஒன்றை இயற்றி அவனை வழிபடுங்கள். வழி பிறக்கும்” என்றாள்.

மகளின் அமிர்தம் போன்ற வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த மயூர பட்டர் மனமுருக சூரியனை நோக்கி நூறு மந்திர சக்தி வாய்ந்த அபூர்வமான பாடல்களைப் பாடலானார்.

என்ன ஆச்சரியம்! பாடல்கள் முடிந்த போது அவர் மேனி குஷ்ட ரோகம் நீங்கிப் பளபளத்தது. கண் பார்வை தீர்க்கமாக வந்தது.

ஹர்ஷவர்த்தனன் உள்ளிட்ட அனைவரும் ஆச்சரியத்தால் பிரமித்தனர்.அவரையும் அவர் மகளையும் உலகமே போற்றியது.

 

SUN TEMPLE AT MODHERA IN GUJARAT

அந்த நூறு பாடல்களைக் கொண்ட சதகம் சூர்ய சதகம் என்றும் மயூர சதகம் என்றும் அனைவராலும் போற்றப்பட்டு இன்று வரை ஓதப்பட்டு வருகிறது.

குஷ்டரோகம், கண்பார்வை இல்லாமை உள்ளிட்ட ரோகங்களால் வருந்தும் யாரானாலும் சரி, அவர்கள் இந்த நூறு ஸ்லோகங்களையும் ஒதியோ அல்லது ஓதக் கேட்டோ சூரியனை பயபக்தியுடன் வழிபட்டால் அவர்கள் ரோகம் நீங்கி ஆரோக்கியம் பெறுர். இதை வரலாறு கூறும் ஏராளமான சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

சுமார் 12 பேரறிஞர்கள் இந்த சூர்ய சதகத்திற்கு விரிவுரை என்னும் பாஷ்யத்தைச் செய்திருப்பதிலிருந்தே இதன் மஹிமையைச் சுலபமாக அனைவரும் அறியலாம்.

சமீபகாலத்தில், காஞ்சி பரமாசார்யாள் இதை பிரபலப் படுத்தியது குறிப்பிடத் தகுந்தது.

இதை இன்று சுலபமாக நெட்டிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

3

முக்கோடி வாழ்நாளும் , முயன்றுடைய பெரிய தவமும், எக்கோடியாராலும் வெல்லப்படாய் என்ற வரத்தையும் பெற்ற இராவணனை எப்படி வதம் செய்வது என்று ராமன் சற்று திகைத்து நின்ற போது அவனுக்கு எதிரில் தோன்றிய அகஸ்திய மாமுனி ஆதித்ய ஹ்ருதயம் என்ற அற்புதமான சூரிய வழிபாட்டு மந்திரத்தைக் கற்பித்தார்.

இன்று வரை அனைவருக்கும் பலன் தரும்  மஹா மந்திரம் இது.

 

 

“இவனே பிரம்மா; இவனே விஷ்ணு; இவனே சிவன், ப்ரஜாபதி” (ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஸ்ச, சிவ ஸ்கந்த:ப்ராஜாபதி) என்ற அபூர்வமான ரகசியத்தை விண்டுரைத்த அகஸ்தியர் அவனை வழிபடும் பெயர்களை ஆதித்ய ஹ்ருதயத்தில் தந்துள்ளார்.

அதைச் சொல்லி விட்டு அகஸ்தியர், “இதோ, இந்தக் கணத்திலேயே ராவணனை வதம் செய்”  (அஸ்மின் க்ஷணே, மஹா பாஹோ, ராவணம் த்வம் வதிஷ்யஸி) என்று அருளினார்.

இந்த வார்த்தை அன்னை ஜானகிக்கு பொருள் பொதிந்த ஒன்றாக அமைந்திருப்பதை சுந்தர காண்டம் ஓதும் அனைவரும் உணர்வர்.

 

SUN SCULPTURE IN BATH IN ENGLAND, UK

அசோக வனத்தில், கோர ராக்ஷஸிகள் அன்னையைச் சூழ்ந்திருக்க அவர்களில் ஒருத்தி, “என் வார்த்தையை அங்கீகரித்து நடக்காவிட்டால் இந்த க்ஷணத்தில் நாங்கள் எல்லோரும் உன்னைக் கொன்று தின்று விடுவோம் (அஸ்மின் முகூர்த்தே ஸர்வாஸ்த்வாம் பக்ஷயிஷ்யாமஹே வயம்) என்று பயமுறுத்தியதற்குப் பதிலடியாக வந்த மந்திர வார்த்தையாக அஸ்மின் க்ஷணே ராவணனை வதம் செய் என்ற அகஸ்தியர் வார்த்தை அமைவதை உணரலாம்.

கண் வியாதி, கண் பார்வைக் குறைவு உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் போக்கும் சூரிய மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம். எதிரிகளை ஒழிப்பது; பரம மங்களமானது; சர்வ மங்களத்தையும் அருள்வது; அனைத்துக் கவலையையும் ஓட்டுவது, ஆயுளைத் தருவது என்பதை ஆதித்ய ஹ்ருதயமே உறுதி செய்கிறது.

(ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாஸனம் I

ஜயாவஹம் ஜபேந் நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் II

ஸர்வ மங்கள மாங்கள்யம் ஸர்வபாப ப்ரணாஸனம் I

சிந்தாஸோக ப்ரஸமனம் ஆயுர்வர்த்தந முத்தமம் II ஸ்லோகம் 4, 5)

இதை இரண்டு தரமோ மூன்று முறையோ தினமும் பாராயணம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது.

வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் சொல்லப்படும் ஆதித்ய ஹ்ருதயம் பற்றி மேலே பார்த்தோம்.

இன்னொரு ஆதித்ய ஹ்ருதயம் (சற்று நீளமானது) ஸ்ரீ பவிஷ்யோத்தர புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக – கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கும் உரையாடலாக – அமைகிறது.)

சிவபிரானால் அருளப்பட்ட சூர்யாஷ்டகம், “ஆதி தேவ நமஸ்துப்யம்” என்று ஆரம்பிக்கும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்டது. சுலபமாக சில வினாடிகளில் அன்றாடம் அனைவரும் கூறும் அஷ்டகம் இது. பெரிய பலனைத் தர வல்லது.

இன்னொரு சூர்யாஷ்டகம் ஸ்ரீ பண்டித ரகுநாத சர்மாவினால் அருளப்பட்டுள்ளது. ப்ரபாதே என்று இது ஆரம்பிக்கும்.

சூரியனை கவசமாகக் கொள்ள விரும்புவோர் ஓதுவதற்கு உரிய சூர்ய கவசம் ஸ்ரீ சூர்ய உவாச என்று ஆரம்பிக்கும்.

ஸ்ரீப்ரஹ்ம யாமளத்தில் உள்ள இது ‘த்ரைலோக்ய மங்களம் நாம சூர்ய கவசம்’ என்று அழைக்கப்படுகிறது

 

4

வேதங்கள் சூரியனை ‘ரோக நாசகன்’ என்று புகழ்கின்றன. ரிக் வேதம் முதலாம் மண்டலத்தில் நாற்பதாம் சூக்தத்தில் சூரியனைப் பற்றிய அனைத்து இரகசியங்களையும் பற்றி அறியலாம். நண்பர்களின் நண்பனான சூரியனே என்று இது சூரியனை விளிக்கிறது. உனது சிவப்புக் கிரணங்களினால் எனது பீடைகள் தூர விலகுகின்றன என்று அது கூறுகிறது.

ரிஷிகள் சூரியனின் மகத்தான சக்தியை உணர்ந்தவர்கள்.  ஆகவே சூரியனுக்கு என ஒரு தனி உபநிஷத்தே உள்ளது. சூர்யோபநிஷத் என்னும் உபநிடதத்தில் சூரியனே ஞான விஞ்ஞான ஆனந்த ரூபன் என்று வர்ணிக்கப்படுகிறான்.

சூர்ய காயத்ரியின் மஹிமையோ எல்லையற்றது.

“ஓம் பாஸ்கராய வித்மஹே, திவாகராய தீமஹி, தன்னோ சூர்ய ப்ரசோதயாத்” என்பதே சூர்ய காயத்ரி.

(“ஒம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி, தன்னோ சூர்ய ப்ரசோதயாத்” என்றும் சூர்ய காயத்ரி சொல்லப்படுகிறது)

ஆரோக்கிய ப்ராப்தி, சக்தி, புகழ், தேஜஸ் உள்ளிட்ட சகல நலன்களையும் பெற சூர்ய சூக்தத்தை பாடம் செய்யுங்கள் என்பது ரிஷிகளின் அருளுரை. சூர்ய சூக்தம் 47 அபூர்வமான சக்தி வாய்ந்த மந்திரங்களைத் தன்னுள் கொண்டுள்ளது.

சூரிய மந்திரத்துடன் சூர்ய ஸ்தவராஜத்தின் ஐந்து பாடங்களையும் சிரத்தையுடன் ஒருவன் சொன்னால் எப்பேர்ப்பட்ட ரோகமும் போய் விடும் என்பது முனிவர்களின் அருள் வாக்கு.

சாந்தோக்ய உபநிஷத் (1-4-1&2) புத்ர ப்ராப்திக்கு சூரியனை வழிபடுமாறு அருளுரை பகர்கிறது.

மைத்ராயண்யுபநிஷத் சூரியனுக்கும் ஓம்காரத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது.

சூரிய ஜப விதிகளை வல்லார் வாய் கேட்டு, குரு மூலம் ஆசி பெற்று அனுஷ்டிப்பதே உசிதம்.

 

5

இன்னும் யாக்ஞவல்க்யர் அருளிய சூர்யகவச ஸ்தோத்திரமும், மஹாபாரதத்தில் வரும் சூரிய அஷ்டோத்தரமும் பக்தர்களுக்கு சூரியனின் அருளைப் பொழிவதற்காகவே உள்ளன.

யுதிஷ்டிரர் அருளியுள்ள சூர்ய ஸ்தோத்ரமும் மஹாபாரதத்தில்  உள்ளது.

ஆயிரம் நாமங்களால் ஆயிரமாயிரம் கிரணம் கொண்ட சூர்யனை வழிபடுவதற்கெனவே சூர்ய ஸஹஸ்ரநாமமும் பிரபலமாக உள்ளது.

எட்டாம் இடத்தில் தோஷத்துடன் சூரியன் ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்தால் எதிர்கால விபரீதங்களைத் தடுக்க சூரியனின் அருள் வேண்டி சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

அன்றாட ஆரோக்கியத்தை உறுதி செய்து நீண்ட ஆயுளைப் பெற விரும்புவோர் காலம் காலமாக செய்யப்பட்டு அனுபவத்தால் உண்மை என்று அறியப்படும் சூரிய நமஸ்காரத்தை உரிய மந்திரங்களுடன் தினமும் செய்து சூரியனை காலை நேரத்தில் வழிபடலாம்.

6

இன்னும் மந்திர மற்றும் தந்த்ர சாஸ்திரங்கள் அருளும் விவரங்கள் அபாரமானவை.

இந்த மந்திர,தந்திர பிரயோகங்களை நன்குணர்ந்த குருமார்கள் மூலமாகவே பெற வேண்டும் என்பதால் இங்கு குறிப்பிடவில்லை.

சூரியனுக்கு உரிய யந்திரமாக அமைவது கீழே தரப்பட்டுள்ள யந்திரம்:

 

6 7 2
1 5 9
8 3 4

சூரியனுக்கு உரிய நவக்ரஹ ஸ்துதி:

ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம் I

தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம் II

சூரியனுக்குரிய ஸ்தலம் : சூரியனார் கோவில் (மாயவரத்திலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)

இதர தலங்கள் : கோனார்க் உள்ளிட்ட ஏராளமான தலங்கள்

சூரியனின் மனைவி : உஷா ப்ரத்யக்ஷா

சூரியன் அதிபதியாக உள்ள ராசி : சிம்மம்

நவக்ரஹங்களுக்கு நடுவில் உள்ளவர்.

அதி தேவதை:அக்கினி

ப்ரத்யதி தேவதை: ருத்ரன்

நிறம்: சிவப்பு

தானியம் : கோதுமை

மலர் : செந்தாமரை, எருக்கு

வஸ்திரம்: சிவப்பு ஆடை

ரத்தினம் : மாணிக்கம்

சமித்து: முருக்கு

7

சூரியனை வழிபடுவதற்கான விசேஷ தினங்கள் ஏராளம் உள்ளன. மகர சங்கராந்தி (பொங்கல்) அன்று விசேஷமாக சூரிய நாராயண பூஜை செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு. பாரதமெங்கும் இதைக் கொண்டாடாமல் யாரும் இருப்பதில்லை.

சூரியன் பிறந்த தினமான ரத சப்தமி தை மாதம் அமாவாசை கழிந்த ஏழாம் நாளன்று வருகிறது. அன்று தெற்கு நோக்கிச் சென்ற சூரியன் தன் பயணத்தை முடித்துக் கொண்டு வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்குகிறான். அன்று சூரியனை வழிபடுவதன் மூலமாக நீடித்த ஆயுளையும் நல்ல உடல் நலத்தையும் பெறலாம். புதிய தொழில் துவங்க ரத சப்தமி நல்ல நாள். பெண்கள் இந்த நாளில் சூரியனை வழிபடுவதன் மூலமாகச் சிறப்பான மேல் நிலையை அடைவர்.

ரத சப்தமிக்கான ஒரு அருமையான நீண்ட கதை உண்டு,

அதில் ஒரு அந்தணன் ஒரு மரத்தடியில் தினமும் சூரியனின் 12 நாமங்களைச் சொல்லி வழிபட மரத்திலிருந்து ஒரு குரல் ஏதேனும் கேள் என்று தினமும் ஒலிக்க, அதை அவன் தன் மனைவியிடம் கூற, அவள் சிறிது அன்னமும் செல்வமும் அருளும் படி கேட்கச் சொல்ல, அதை அந்தணன் கூறி வழிபட,  வீ ட்டிற்குத் திரும்பி வந்தவன் வீடு முழுவதும் மலை போல அன்னமும், ஏராளமான செல்வமும் குவிந்து கிடப்பதைப் பார்த்துத் திகைக்க, பின்னர் அவனும் அவன் மனைவியும் அனைவருக்கும் அன்ன தானமும் செல்வ தானமும் தினமும் செய்து பெரும் புகழ் பெற்றனர் என்று வருகிறது.

சூரியனின் வழிபாடு ஹிந்து வாழ்க்கை முறையில் இரண்டறக் கலந்த ஒரு அன்றாட வழிபாடு.

சூரியனின் பெருமையில் இது வரை நாம் பார்த்தது எழு கடல் மணலில் ஒரு சிறு  மணல் துளியைத் தான்.

சகல சௌபாக்கியங்களையும் பெற பிரத்யக்ஷ தெய்வமாக – அன்றாடம் நாம் காணக் கூடிய தெய்வமாக – அறிவியலும் வியந்து ஆமோதிக்கும் பெரும் சக்தியாக – விளங்குவது சூரியனே.

அவனை வழிபட்டு உயர்வோம்; உய்வோம்!

****

 

‘அஜீர்ணே போஜனம் விஷம்’- உணவு பற்றி சாணக்கியன் எச்சரிக்கை (Post No.4572)

Written by London Swaminathan 

 

Date: 1 JANUARY 2018

 

Time uploaded in London- 6-59 AM

 

 

Post No. 4572

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

‘அஜீர்ணே போஜனம் விஷம்’- உணவு பற்றி சாணக்கியன் எச்சரிக்கை (Post No.4572)

சாணக்கியனின் நீதி சாஸ்திரம் ஒரு மருத்துவ நூலன்று; அப்படியும் கூட அவன் போகிற போக்கில் மூலிகைகள் பற்றியும் உணவு பற்றியும் பல அறிவுரைகளை வழங்குகிறான்.

 

 

ஒருவனுடைய உடலைப் பார்த்தாலேயே அவன் சாப்பிடும் உணவைக் கண்டுபிடித்து விடலாம் என்பார் சாணக்கியன்.

என்ன சரியான கணிப்பு!

 

தொந்தியும் தொப்பையுமாக இருந்தால் ஆசிய (Asian) நாட்டவர் என்று கண்டு பிடிக்கலாம். குறிப்பாக அவர்கள் சாப்பிடும் அரிசிச் சோறு அவர்களை இப்படி ஆக்கி விடுகிறது. இது போல ஒவ்வொரு நாட்டு உணவு வகைகளோ, குறிப்பாக நாம் அளவுக்கு அதிகமாக எதைச் சாப்பிடுகிறோமோ, அது நம் உடலில் எதிரொலிப்பதைப் பார்க்கலாம்.

முழு ஸ்லோகம்:-

ஒருவன் நடத்தையைப் பார், அவன் குடும்பத்தைச் சொல்லிவிடலாம்;

ஒருவனுடைய பேச்சைப் பார், அவன் ஊரையும் நாட்டையும் சொல்லி விடலாம்;

ஒருவனுடைய அங்க அடையாளங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பார், அவனுடைய அன்பை/ காதலைச் சொல்லிவிடலாம்;

ஒருவனுடைய உடலைப் பார், அவன் சாப்பிடும் உணவைச் சொல்லி விடலாம்.

ஆசாரஹ குலமாக்யாதி தேசமாக்யாதி பாஷணம்

சம்க்ரமஹ ஸ்னேஹமாக்யாதி வபுராக்யாதி போஜனம்

 

—–அத்தியாயம் 3, ஸ்லோகம் 2

xxx

 

தகிக்க வைக்கக் கூடிய விஷயங்கள் ஆறு

அருகில் நெருப்பு இல்லாவிட்டாலும் உடலை எரிக்கக்கூடிய, தகிக்க வைக்கக் கூடிய விஷயங்கள் ஆறு:

கெட்ட உணவு (வாய்க்கு ருசியான, ஆனால் உடம்புக்கு ஒவ்வாத உணவு ) சிற்றூரில் வசித்தல், கீழ்மட்டத்தில் உள்ளவனுக்கு சேவை செய்தல், எரிந்து விழக்கூடிய மனைவி, முட்டாளான மகன், விதவையான மகள்  – இந்த ஆறும் உடலை தகிக்க வைக்கும்.

குக்ராமவாஸஹ குலஹீனஸேவா குபோஜனம் க்ரோதமுகீ பார்யா

புத்ரஸ்ச மூர்க்கோ விதவா ச கன்யா வினாக்னினா ஷட் ப்ரதஹந்தி காயம்

—அத்தியாயம் 4, ஸ்லோகம் 8

 

xxxx

 

அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் !

இப்போதெல்லாம் கல்யாணத்துக்குப் போனால் சீக்கிய குருத்வாரா லங்கார் (Langar) போல 24 மணி நேரமும்  சாப்பாடு போடுகிறார்கள். அங்காவது  குறைவான அயிட்டம் (items )கள்தான்- வகைகள் தான் கிடைக்கும். கல்யாணத்திலேயோ, ஒரு குடும்பத்துடன் மற்றொரு குடும்பம் போட்டி போட்டுக்கொண்டு 30, 40 வகைகளை பரிமாறி அவர்களுடைய பணத்தையும் வீணடித்து நம்முடைய வயிற்றையும் பாழடைய வைக்கிறார்கள். நாமும் வேண்டாம் என்று சொல்வதில்லை; கிடைக்கக் கிடைக்க வயிற்றில் திணிக்கிறோம்; முன் சாப்பிட்ட உணவு இன்னும் செமிக்கவில்லை என்பதை அறிந்தும் உண்கிறோம். அவை எல்லாம் வயிற்றில் விஷமாகிப் போனது அடுத்த சில நாட்களில் நமக்குத் தெரிகிறது; புரிகிறது.

 

அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் ஆகும்;

பாராயணம் செய்யாத படிப்பு விஷம் ஆகும்;

சபையில்  நிற்பது ஒரு ஏழைக்கு விஷம் ஆகும்;

வயதான மனிதனுக்கு இளம் பெண் விஷம் ஆகும்.

 

 

விஷம் என்பதைப் பொருந்தாது, ஏற்காது என்று பொருள் கொள்ளலாம்.

அனப்யாஸே விஷம் சாஸ்த்ரம் அஜீர்ணே போஜனம் விஷம்

திவம் ஸபா தரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

xxxx

திருப்தி வேண்டும்

ஒருவன் தனக்குக் கிடைத்த உணவு, வாய்த்த மனைவி, சம்பாத்தித்த செல்வம் மூன்றிலும் திருப்தி அடைய வேண்டும். இதற்கு நேர் மாறாக எப்போதும் திருப்தி அடையக் கூடாத மூன்று விஷயங்களும் உண்டு:-படிப்பு, தானம் செய்தல், தவம்.

 

ஸந்தோஷ த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே

த்ரிஷு சைவ ந கர்தவ்யோ அத்யயனே தப தானயோஹோ

—அத்தியாயம் 7, ஸ்லோகம் 4

பிரிட்டனில் டெலிவிஷன் பார்ப்போர் எல்லோருக்கும் பால் மக்கென்னாவைத் (Paul McKenna)  தெரியும். பெரிய மனோ வஸிய நிபுணர். (Hypnotist);  நாலு பேரை மேடைக்கு அழைப்பார்; நீ மைக்கேல் ஜாக்ஸன், நீ மடொன்னா, நீ பீட்டில்ஸ்  பாடகர் என்று ஒவ்வொருவரிடமும் ஒன்றைச் சொல்லிவிட்டு கையைச் சொடுக்குவார். அவர்கள் அடுத்த நொடியில் அவர் யார் பெயரை சொன்னாரோ அது போலவே நடிப்பர்.

 

அவரே தமிழ் நாட்டில் இருந்தால் நாலு பேரில் ஒருவரை எம்.ஜி.ஆர், ஒருவரை சிவாஜி கணேசன், ஒருவரை ரஜினிகாந்த், இன்னும் ஒருவரை கமலஹாசன் என்று சொல்லிவிட்டு ஹிப்னாடிஸம் செய்த அடுத்த நொடியில் கேள்வி கேட்டால் அந்தந்த நடிகர் போலப் பேசுவார்.

அவர் உடல் இளைக்க ஒரு சில வழிமுறைகளைச் சொன்னார்; நினைவில் உள்ளதை மட்டும் தருகிறேன்:

எந்த ஒரு உணவுப் பண்டம் கிடைத்தாலும் அதை டெலிவிஷன் பார்த்துக் கொண்டோ, பாட்டுக் கேட்டுக் கொண்டோ, புஸ்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடாதீர்கள். உணவுப் பண்டத்தைப் பாராட்டி, சீராட்டி, கொஞ்சிக் குலவிப், போற்றிப் புகழ்ந்து  அணு அணுவாக ரஸித்து, ருஸித்து, அனுபவித்து உண்ணுங்கள்.

 

இறைவன் உங்களுக்கு அதைக் கொடுத்தானே என்று எண்ணி மகிழுங்கள்.

இதுவே வயிற்றின் பசியை ஆற்றிவிடும் என்று நம்பி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள்.

 

நாளடைவில் கொஞ்சமாகச் சாப்பிடுவீர்கள்; வயிறு நிறைந்த திருப்தியும் ஏற்பட்டுவிடும்.

 

நீங்களும் பின்பற்றிப் பாருங்கள்.

 

–சுபம்—

 

 

பத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்! (Post No.4559)

Date: 29  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-13 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4559

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

அதிசயப் புலவர் கவி காளமேகம் பற்றிய முந்தைய கட்டுரை எண் 4525 ; வெளியான தேதி 21-12-17- இதைப் படித்து விட்டுத் தொடரவும்.

 

      யம கண்டம் ஏறிப் பாடிய கவி காளமேகத்தின் அதிசயப் பாடல்கள்! –

குடத்திலே கங்கை அடங்கும்!!

 

ச.நாகராஜன்

 

 

6

பத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்!

 

அதிமதுரக் கவிராயர் தன் 64 தண்டிகைகாரர்களுடனும், இதர புலவர்களுடனும், பொது மக்களுடனும் தயாராக இருக்க திருமலைராயன் அரியாசனத்தில் அமர்ந்திருக்க அனாயாசமாக யமகண்டம் ஏறினார் கவி காளமேகம்.

அனைவரும் பதைபதைக்க அமர்ந்திருந்தனர்.

 

 

சமஸ்யா பூரணம் என்பதைப் பற்றி ஏற்கனவே இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையில் விளக்கியுள்ளார். மீண்டும் அதை இங்கு விவரிக்கவில்லை.

 

ஈற்றடியாக ஒரு புதிரைக் கொடுத்து அதை விடுவிக்கக் கூறுவது சிறந்த புலவருக்கான ஒரு பரீட்சை – இதுவே சமஸ்யா பூரணம்.

‘குண்டக்க மண்டக்க’ என்று இந்தக் காலத்தில் கூறுவது போல  எதிராளியை மடக்குவதற்காகவே எதையாவது கூறி அதை ஈற்றடியாக அமைத்து முதல் மூன்று அடியைப் பூர்த்தி செய்யச் சொல்வது ஒரு பழக்கமாக இருந்தது.

 

சமஸ்யா என்ற வார்த்தையே தமிழில் சமிசை ஆக ஆகி விட்டது.

 

முதலில் அதிமதுரக் கவிராயர் எழுந்தார்.

திருமால் அவதாரம் பத்தினையும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள் என்று கூறி விட்டுப் பெருமிதம் தொனிக்க அமர்ந்தார்.

பத்து பெரும் அவதாரங்களை நான்கு அடி கொண்ட வெண்பாவில் அடக்க முடியுமா?

 

ஆனால் கவி காளமேகமோ கலங்கவில்லை.

பத்து அவதாரத்திற்கு ஒரு வெண்பா வேண்டுமா என்ன? அரை வெண்பா போதுமே என்றார் அவர்.

கூட்டம் அயர்ந்து போனது.

பாடலைப் பாடினார் காளமேகம்:

மெச்சுபுகழ் வேங்கடவா! வெண்பாவிற் பாதியிலென்

இச்சையிலென் சென்ம மெடுக்கவா – மச்சாகூர்

மாகோலா சிங்காவா மாராமா ராமாரா

மாகோபா லாமாவா வாய்

 

கூட்டம் திகைத்தது. “மாகோலாசிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய்”! என்ன இது?

காளமேகமே விளக்கினார்:

 

மெச்சு புகழ் – தேவர் முனிவர் ஆகிய அனைவரும் மெச்சுகின்ற பெரும் கீர்த்தியை உடைய

வேங்கடவா – திருவேங்கடம் உடையானே!

வெண்பாவில் பாதியில் – ஒரு வெண்பாவில் பாதியில்

என் இச்சையில் – எனது விருப்பப்படி

உன் சென்மம் எடுக்க – உன் அவதாரம் பத்தையும் எடுத்துக் கூற

வா – வந்து அருள்வாயாக!

மச்சா – மச்சாவதாரத்தைச் செய்தவனே

கோலா – வராஹாவதாரத்தைச் செய்தவனே

கூர்மா – கூர்மாவதாரத்தைச் செய்தவவே

சிங்கா – நரசிங்கனே

வாமா – வாமனனே

ராமா – பரசுராமா!

ராமா – தசரத ராமா!

ராமா – பலராமா!

கோபாலா – கிருஷ்ணா

மா ஆவாய் – இனி கல்கி அவதாரம் செய்யப் போகின்றவனே!

மச்சம் – மீன்; கூர்மம் – ஆமை; கோலம் – பன்றி; வாமனம் – குறள்; மா- குதிரை (இந்த அவதாரம் இனி செய்யப் போகின்றபடியால் ஆவாய் என எதிர் காலத்தில் கூறினார்)

 

சபையோர் ஆரவாரம் செய்ய அதி மதுரம் தலை கவிழ்ந்தார்.

 

 

7

 

Ancient Zodiac of Egypt

 

ஒரே வெண்பாவில் 12 ராசிகளை அடக்குங்கள்!

 

இராசிகளின் பெயர்களை ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள்!

 

அடுத்தாற்போல ஒரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.

ஒரு வெண்பாவில் அனைத்து ராசிகளும் வரவேண்டும்.முறையும் தொகையும் இருக்க வேண்டும். ஆனால் எந்த அடைமொழியும் இருத்தல் கூடாது. பாடுங்கள் பார்ப்போம் என்றார்.

 

காளமேகம் சிரித்தார். பாடலைப் பகர்ந்தார்:

 

பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க

டகஞ்சிங்க கன்னி துலாம்விர்ச் – சிகந்த

நுசுமகரங் கும்பமீ னம்பன்னி ரண்டும்

வசையறு மிராசி வளம்

மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் (சிங்கம்), கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் , மீனம் ஆகியவை பன்னிரெண்டும் ராசி வளம்.

 

கூட்டம் ஆரவாரித்தது.

8

 

 

Tri Murtis

ஒரு வெண்பாவில் மும்மூர்த்திகளின் அனைத்து விவரமும் அடக்க முடியுமா?

 

இன்னொரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.

இன்னும் கஷ்டமான பொருளைத் தந்து அவரைப் பாட முடியாதபடி மடக்க வேண்டும் என்று எண்ணி ஏராளமான விஷயங்களைக் கூறி அதை ஒரு வெண்பாவில் அடக்க வேண்டும் என்றார்.

அவர் கூறியது:

மும்மூர்த்திகளின் பெயர், அவர்கள் தின்னும் கறி, உண்ணும் உணவு, ஏந்துகின்ற ஆயுதம், அணிகின்ற ஆபரணம், ஏறுகின்ற வாகனம், வசிக்கும் இடம் ஆகிய இவை அனைத்தும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாட முடியுமா என்றார்.

இவ்வளவு விஷயங்களை ஒரு நாலடிப் பாவில் அடக்க முடியுமா?

 

முடியும் என்றார் காளமேகம். பாடினார் இப்படி:

சிறுவ னளைபயறு செந்நெற் கடுகு

மறிதிகிரி தண்டு மணிநூல் – பொறியரவம்

வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்

கற்றாழம் பூவே கறி

 

அனைவரும் பிரமிக்க காளமேகம் பாடலை விளக்கினார்.

வேதன் அரன் மாலுக்கு – பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கு

கறி – கறி ஆவன

பயறு, சிறுவன், அளை – பயறு, பிள்ளை, வெண்ணெய் ஆகிய மூன்றும் தான்!

 

செந்நெல் கடுகு – நெல், விஷம், பூமி ஆகிய மூன்றுமே உணவாகும்.

தண்டு, மறி, திகிரி – தண்டம், மான், சக்கரம் ஆகிய மூன்றுமே ஆயுதங்களாகும்.

 

நூல், பொறி அரவம் ,மணி – உபவீதம், புள்ளியை உடைய பாம்பு, கௌஸ்துபம் மணி ஆகிய மூன்றுமே பூஷணம்

அன்னம், வெற்றேறு, புள் – அன்னம், வெள்ளிய இடபம், கருடன் ஆகிய இந்த மூன்றுமே வாகனங்களாகும்.

பூ, கல்தாழ், அம் – தாமரை மலர், கைலை மலை, ஆழ்ந்த பாற்கடல் ஆகிய இந்த மூன்றுமே வசிப்பிடமாகும்.

நான்கே வரிகள்.  அதில் அனைத்தையும் அடக்கிய காளமேகத்திற்கு யார் நிகர் ஆவார் என்று கூட்டம் ஆரவாரித்தது. சமஸ்யா (சமிசை) கேட்டவர் வெட்கம் அடைந்தார்.

ஆனால் அடுத்த தண்டிகைப் புலவர் எழுந்தார்.

 

 

9

Himalayas

ஈ ஏற மலை குலுங்கப் பாடுங்கள்!

 

ஈ ஏற மலை குலுங்கும்  என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.

எங்காவது ஈ ஏற மலை குலுங்குமா? இது என்ன இடக்கான அடியாக இருக்கிறதே என்று அனைவரும் நினைக்க, காளமேகம் கவி மழை பொழிந்தார்.

 

வாரணங்க ளெட்டு மதமேரு வுங்கடலும்

தாரணியு மெல்லாஞ் சலித்தனவால் – நாரணனைப்

பண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த

புண்வாயி லீமொய்த்த போது

 

பொருளைக் காளமேகமே விளக்கினார்.

நாரணனை – ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்த நாராயணனை

பண்வாய் இடைச்சி – இசை போலும் சொல் உடைய  யசோதை பிராட்டி

பரு மத்தினால் அடித்த – பருத்த மத்தினால் அடித்த போது உண்டாகிய

புண் வாயில் –  புண்ணின் இடத்தில்

ஈ மொய்த்த போது – ஈ ஒன்று மொய்த்த போது

வாரணங்கள் எட்டும் –  எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் எட்டும்

மாமேருவும் – மகா மேரு மலையும்

கடலும் – ஏழு கடல்களும்

தாரணியும் – உலகங்களும் ஆகிய எல்லாம்

சலித்தன – அசைந்தன!

 

(சலித்தனவால் என்பதில் ‘ஆல்’ அசை. எல்லா உலகங்களும் அவற்றில் உள்ள திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் உள்ளிட்ட அனைத்தும் இறைவனது திரு வயிற்றில் வைத்துக் காக்கப்படுபவை ஆதலால் கண்ணன் அசைந்த போது அவையும் கூடவே அசைந்தனவாம்!)

எப்படி ஒரு அற்புதமான கற்பனை!

அனைவரும் கை தட்டிப் பாராட்டினார்கள்!!

 

 

River Ganga Mata (Ganges)

10

இல்லாத ஒன்றைச் சொன்னால் தான் இவர் அடங்குவார் என்று நினைத்தார் தண்டிகைப் புலவர்களில் ஒருவர்.

ஆகவே வேண்டுமென்றே குடத்திலே கங்கை அடங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.

அனைவரும் சிரித்தனர். குடத்தில் எப்படி கங்கை அடங்கும்?

காளமேகம் சொல் ஜாலக்காரர். பாடினார் இப்படி:

 

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்

மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை

இடத்திலே வைத்த விறைவர் சடாம

குடத்திலே கங்கை அடங்கும்.

 

கூட்டம் எழுந்து நின்று ஆரவாரித்தது. இறைவனின் ஜடா மகுடத்திலே கங்கை அடங்கும். உண்மை தான்.

கங்கை – கங்கா நதியானது

விண்ணுக்கு அடங்காமல் – ஆகாயத்திற்கு அடங்காமல்

வெற்புக்கு அடங்காமல் – மலைகளில் அடங்காமல்

மண்ணுக்கு அடங்காமல் – பூமிக்கு அடங்காமல்

வந்தாலும் – பெருக்கெடுத்து ஓடி வந்தாலும்

பெண்ணை இடத்திலே வைத்த – உமா தேவியை இடப்பாகத்திலே வைத்திருக்கும்

இறைவர் ஜடா மகுடத்திலே – சிவபிரானின் ஜடை மகுடத்திலே

அடங்கும் – அடங்கும்.

 

Boats in River Ganges

**

 

இப்படி அற்புதமான பொருளாழமும், சிக்கலான கருத்துக்களை நேர் படுத்தியும் அமைக்கப்படும் பாடல்கள் கொண்ட மொழி தமிழ் மொழி!

அதன் பெருமையை ஒருவராலும் முழுவதுமாக உரைக்க முடியாது!

***

யார், யார், யார் அவர் யாரோ? தமிழ் இலக்கிய க்விஸ்/QUIZ (Post No.4536)

Written by London Swaminathan 

 

Date: 23 DECEMBER 2017 

 

Time uploaded in London- 16-24

 

 

Post No. 4536

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

யார் சொன்னார்? எதில் சொன்னார்?

1.கோபத்திலே நாடியிலே அதிர்ச்சியுண்டாம்

அச்சத்தால் நாடியெல்லாம் அவிந்துபோகும்

கவலையால்  நாடியெல்லாம் தழலாய் வேகும்

2.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்

வேறொன்றறியேன் பராபரமே

3.கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக

4.ஆணெல்லாம் காதலை விட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ?

5.மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

 

6.சொல்லிலும் இலாபம் கொள்வர்

7.வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

8.என்று நீ அன்று நான் உன்னடிமை

  1. குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமரன்
  2. தன்னைச் சிவமென்றறிந்தவனே அறிந்தான்; தூயதாகிய

நெஞ்சுடையவர்க்குத்தாமே சிவமாய்த்தோன்றுமன்றே

11.வடமொழியைப் பாணிணிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியை, உல்கமெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்

  1. இம்மென்னுமுன்னே எழுநூறும் எண்ணூறும்

அம்மெனவே ஆயிரம் பாட்டாகாதோ

  1. கவலயற்றிருத்தலே முத்தி
  2. முத்தமிழடைவினை முற்படுகிரிதனில்

முற்பட எழுதிய முதல்வோனே

  1. பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்

திருப்பிலே யிருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை

16.எழுதாத மறையளித்த எழுத்தறியும் பெருமாள்

  1. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை

  1. பேசுவது மானம் இடைபேணுவது காமம்
  2. தேவர் குறளும் திருநான்மறைமுடிவும்

மூவர் தமிழும்  திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவாசகமென்றுணர்

  1. திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்

 

ANSWERS

1சுப்ரமண்ய பாரதி, 2. தாயுமானவர், 3. இராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்), 4. சுப்ரமண்ய பாரதி, 5. இராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்), 6. சிவஞான முனிவர் (காஞ்சிபுராணம்- வணிகர்), 7. திரிகூட ராசப்ப கவிராயர், திருக்குற்றாலக் குறவஞ்சி, 8.தாயுமானவர், 9.குமரகுருபர சுவாமிகள், 10.சிவப்பிரகாச சுவாமிகள், 11.பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம், 12.காளமேகப் புலவர், 13. சுப்ரமண்ய பாரதி,14.திருப்புகழ், அருணகிரி நாதர், 15.வரந்தருவார், வில்லிபாரதம், 16.சேக்கிழார், பெரியபுராணம், 17. மூதுரை, அவ்வையார், 18.கம்பன், கிட்கிந்தா காண்டம், 19. மூதுரை, அவ்வையார், 20. கந்த புராணம், கச்சியப்ப சிவாசாரியார்

 

–SUBHAM–

 

 

சங்கீத சாம்ராஜ்யம்: காசு கொடுத்து ரஸிகர் கூட்டம் சேர்த்த பாகவதர்! (Post No.4488)

 

சங்கீத சாம்ராஜ்யம்: காசு கொடுத்து ரஸிகர் கூட்டம் சேர்த்த பாகவதர்! (Post No.4488)

 

 

Written by London Swaminathan 

 

Date: 13 DECEMBER 2017 

 

Time uploaded in London-  8-51 am

 

 

Post No. 4488

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

புகழ்பெற்ற வயலின் வித்வான் ப்ரிட்ஸ் க்ரைச்ட்லர் (FRITZ KREISTLER) தனது நண்பருடன்  கடைத் தெருவில் நடந்து சென்றார். அங்கே ஒரு மீன் விற்கும் கடை இருந்தது. அதில் வரிசையாக காட் வகை (CODFISH) மீன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மீனும் வாயைப் பிளந்து கொண்டு இமைக்காத கண்களுடன் பார்த்துக்கொன்டிருந்தன.

திடீரென்று க்ரைட்ஸ்லர் தனது நண்பரின் கைகளைப் பிடித்தார். அடடா! நான் கச்சேரி வாசிக்கப் போக வேண்டும் என்பது நினைவுக்கு வந்துவிட்டது! என்றார்.

 

(அவரது ரசிகர்கள் வாயைப் பிளந்து கொண்டு, கண்கொட்டாமல் இசையை ரசிப்பராம்!)

XXXXX

 

மயக்கமா? தயக்கமா?

பிரான்ஸ் லிட்ஸ் (FRANZ LITSZ) என்ற புகழ் பெற்ற பியானோ வாத்தியக் கலைஞர் காசுகொடுத்து ரஸிகர்களை ‘செட் அப்’ பண்ணுவாராம். நல்ல அழகான பெண்களைக் கூட்டிவந்து, இந்தோ பாரு  உனக்கு 25 பிராங்க் (FRANKS) பணம் தருவேன். நான் இந்தப் பாட்டு வாசிக்கும்போது நீ மயக்கம் போட்டு விழுவதாக நடிக்க வேண்டும்; நான் உன்னைக் காப்பாற்றுவதாக நடிப்பேன். ஆனால் யாருக்கும் விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது. சரியா? — என்று சொல்லி அழைத்துவருவார்.

 

அவருக்கு மிகவும் புகழ் ஈட்டித் தந்த கிருதியை வாசிக்கும்போது, பணம் வாங்கிய பெண்மணி தடாலென்ற சப்தத்துடன் மயக்கம் போட்டு விழுவாள்; உடனே மேடையில் இருக்கும்  பிரான்ஸ், திடீரென்று தனது பியானோ ஆசனத்திலிருந்து கீழே குதிப்பார். அந்தப் பெண்மணியை அலாக்காகத் தூக்கிச் சென்று மேடைக்குப்பின் சென்றுவிட்டு வருவார்.

 

உடனே ரஸிகர் அனைவரும் அடடா! என்ன வாசிப்பு! என்ன ரசனை; மயக்கமே போட்டுவிட்டாளே! என்று பேசிக்கொள்வர்.

 

ஒருமுறை இவரது கணக்கு, தப்புக் கணக்காகிவிட்டது; காசு வாங்கிய பெண் மயக்கம்போட்டு விழ மறந்து விட்டாள்! அதை எதிர்பார்த்துக் காத்திருந்த பிரான்ஸ், என்ன செய்வதென்று திகைத்து அவரே மயக்கம்போட்டு விழுந்துவிட்டார்!

XXXX

லண்டன் பெட்டிகோட் லேன் மார்க்கெட் (PETTICOAT LANE MARKET)

(இதைப் படித்தவுடன் எனக்கு எங்கள் லண்டனில் ஞாயிறு தோறும் நடக்கும் ஒரு ஏமாற்று வேலை நினைவுக்கு வருகிறது. லண்டனில் நுற்றாண்டுக் கணக்கில் நடக்கும் சாலை ஓரக் கடைகள் இன்றும் உண்டு. அவர்கள் ஞாயிறுதோறும் ரோட்டில் கடை விரிப்பர். இதில் மிகவும் புகழ்பெற்றது பெட்டிகோட் லேன் எனப்படும், லிவர்பூல் ஸ்ட்ரீட் (LIVERPOOL STREET) மர்க்கெட்டாகும். நான் வெளிநாடுகளில் இருந்து விருந்தினர் வருகையில் அவர்களை அழைத்துச் சென்று காட்டுவேன்; கூட வருபவரிடம் இந்த வேடிக்கை பற்றிச் சொல்லிவிட்டு ஒரு மூலையில் நின்று ஓரக் கண்களால் இதைப் பாருங்கள் என்பேன்.

 

அங்கே ஒருவன் திடீரென்று வந்து துண்டை விரிப்பான். நிறைய பெர்fயூம் பாட்டில்களை (PERFUME BOTTLES) வெளியே அடுக்கிவைப்பான். எல்லாம் பிரபல பிராண்ட் நேம்ஸ் (BRAND NAMES) உடைய சென்ட்கள். ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள்! போனால் வாராது; பொழுது விடிஞ்சா கிடைக்காது;  மூடப்பட்ட ஒரு கடையிலிருந்து வந்த  STOCK ஸ்டாக் இவை! இதோ இதைக் கடையில் வாங்கினால் 40 பவுன்; நான் தருகிறேன் 20 பவுனுக்கு; இதைப் பாருங்கள்!! இதைப் போய் கடையில் வாங்கினால் இதன் விலை 30 பவுன்; நான் உங்களுக்கு 15 பவுனுக்கு தருகிறேன் ; இதோ இதைப் பாருங்கள். நீங்கள் AIRPORT DUTY FREE SHOP ஏர்போர்ட் ட்யூட்டி ப்ரீ ஷாப்பில் வாங்குவதில் கால் பங்கு விலைக்குத் தருகிறேன்; போய்விடாதீர்கள்; இனித்தான் முக்கிய ரஹஸியத்தைச் சொல்லப் போகிறேன்; இன்று ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் SPECIAL DISCOUNT ONLY TODAY; அத்தனைக்கும் சேர்த்து 25 பவுன் கொடுங்கள் போதும் என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அங்கு கூடியிருக்கும் பெருங்க் கூட்டத்தில் இருந்து நாலு ஐந்து இளம் வெள்ளைக்கார அழகிகள் ஓ, வாவ்! எனக்கு இரண்டு வேண்டும் என்று 50 பவுன்களை எண்ணிக் கொடுப்பர்; அதற்குள் இன்னொரு பெண்மணி எனக்கும் வேண்டும் என்று காசு கொடுப்பாள்; மூன்றாவது அழகியோ அனைவரையும் விலக்கித் தள்ளிவிட்டு பிரமாதம் எனக்கும் என் நண்பிக்கும் வேண்டும் என்று காசு கொடுப்பாள்.

 

அந்த பெட்டிகோட் லேன் மார்க்கெட்டுக்கு வருவோர் பெரும்பாலும் லண்டனில் ஒரு சில நாட்களே தங்கும் டூரிஸ்டுகள்; அவர்களும் முண்டியடித்துக் கொண்டு முன்னால் போய் ஆளுக்கு ஒன்று வாங்குவர்.

 

ஏற்கனவே வாங்கிய பெண்கள் அனைவரும் ஒரு மூலையில் சென்று ஒளிந்து கொண்டு இருந்துவிட்டு திரும்பிவந்து அவனிடம் பெர்fயூம் பாட்டில்களைத் திருப்பிக் கொடுப்பர். அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் இதே காட்சி துவங்கும்; இவர்கள் கூலிக்கு மாரடிக்கும் அழகிகள்! ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருப்பர்!)

 

XXX

 

 

ஒரு பாகவதரின் சோகம்!

 

உலகப் புகழ்பெற்ற பியானோ கலைஞர் படெரெவ்ஸ்கி (PADEREWSKI) ஒரு நாள் கச்சேரி முடிந்தவுடன் ஸோகம்  ததும்பிய முகத்துடன், மேடைக்குப் பின்னால் போய் அமர்ந்தார். அவருடைய உதவியாளருக்கு மனக் கவலை.

ஐயன்மீர்! உடல்நலம் சரியில்லையா? ஏன் இப்படி முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று வினவினார்.

உடனே படெரெவ்ஸ்கி பதில் கொடுத்தார்?

எனது முக்கிய ரஸிகர்கள் இருவர் இன்று வரவில்லை; அதான் ஒரே கவலை.

அட, இந்த ஊரில் உங்களுக்கு நண்பர்கள் வேறு இருக்கிறார்களா? உங்களுடன் நான் அவர்களை என்றும் பார்த்ததே இல்லை யே என்றார் உதவியாளர்.

 

இது அமெரிக்காவின் தொலைதூர ஒரு ஊரில் நடந்தது.

ஆமாம் எனக்கு இங்கே ரஸிக நண்பர்கள் உண்டு; ஆனால் நானும் அவர்களைச் சந்தித்ததே இல்லையே என்றார்.

உதவியாளருக்கு ஒன்றும் விளங்கவில்லை. நீங்கள் சொல்லுவது ஒன்றும் புரியவில்லையே என்றார்.

உடனே படரெவ்ஸ்கி தொடர்ந்தார்:-

 

20 ஆண்டுக் காலமாக நான் இந்த ஊரில் வந்து வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் வசிக்கும்போது இரண்டாவது வரிசையில் அமர்ந்து நரைத்த தலை முடிய ஒரு  தம்பதியினர் என் வாசிப்பை ரஸிப்பர்; அவர்கள் ரஸிக்கும் விதத்தைப் பார்த்து நான் கூட வாசிப்பேன். அவர்கள் உண்மையான ரஸிகர்கள்; இன்று வரவில்லிலையே! ஏதேனும் எசகு பிஸகாக ஆகியிருக்குமோ என்று சொல்லிவிட்டு  பேசாமடந்தையாகிவிட்டார்

 

மேலும் உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.

 

(ஒரு பாகவதருக்கு ரஸிகர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது இதிலிருந்து புரியும்; நான் லண்டனில் நான்கு சங்கங்கள் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் பிரபல வித்துவான் டி.வி.கோபால கிருஷ்ணனின் (SRI T.V.G) இன்னிசையை ஏற்பாடு செய்திருந்தேன்; திடீரென்று ஏற்பாடு செய்ததால் ஒரு 75 பேருக்கும் குறைவாக ரஸிகர் இருந்தனர். கச்சேரி முடிந்தவுடன் எனக்கோ கவலை; கூட்டம் குறைந்ததற்கு ஏதேனும் சப்பைக்கட்டு காரணம், நொண்டிச் சாக்கு சொல்லுவோம் என்று அவரை மெதுவாக அணுகினேன்.

 

நான் பேசுவதற்கு முன் “எனக்கு இன்று ரொம்ப த்ருப்தி; இப்படிப்பட்ட ஆடியன்ஸுக்கு வாசிப்பதுதான் எனக்குப் பிடிக்கும்” என்றார். மேலும் தொடர்ந்து “இது போல அடிக்கடி ஏற்பாடு செய்யுங்கள்; எனக்கு பணம் முக்கியமில்லை; இப்படிப்பட்ட ரஸிகர்கள்தான் வேண்டும்” என்றார்.

 

எனக்கு வியப்பும் சந்தோஷமும் மேலிட்டாலும் இதன் பின்னனி நன்கு விளங்கியது.  லண்டனில் பல அரங்கேற்றங்கள், கச்சேரிகள் நடக்கும். அதில் வரும் பாதிக் கூட்டத்துக்கு சங்கீத ம் என்றால் அரைக் கிலோ என்ன விலை? என்று கேட்பர். அரங்கேற்றம் செய்யும் மாணவ மாணவியரும் மிலிட்டரி ட்றில் MILITARY DRILL போல அந்த ஆறு பாட்டை மட்டும் உருப்போட்டு வைத்திருப்பர்.

 

 

ஏனைய பாட்டுகளுக்கு பொருள் கேட்டாலோ, ‘ராகம் வராகம், தாளம் வேதாளம், க்ருதி ப்ரக்ருதி’ என்பர்; பெற்றோர்களோவெனில் 10,000 பவுண்ட் கடன் வாங்கி அரங்கேற்றம் நடத்திவிட்டு அதன் பொருள் விளங்காப் புதிராக — குதிராக – நிற்பர்.

 

ஆயினும் எனக்கு சந்தோஷமே; அந்த வீட்டுக் குழந்தைகள் காபரே, கூபரே என்று கிளப்புகளுக்கும் பாப் மியூஸிக் கச்சேரிகளுக்கும் போகாமல்,  ஏதோ இரண்டு தியாகராஜ கிருதிகளையும் புரந்தரதாஸர் கீர்த்தனைகளையும் பாடுகிறதே என்று மகிழ்வேன்.

 

‘ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை’ என்ற பழமொழி போல இங்கு யார் வேண்டுமானாலும் எந்த ஸ்கூல் வேண்டுமானாலும் நடத்தலாம். யோகா கற்பிக்கும் முக்கால் வாசிப்பேர் வெள்ளைக்காரர்கள்; ஒரு புத்தர் சிலையோ நடராஜர் சிலையோ வீட்டில் வைத்திருப்பர்!

அவர்களும் வாழ்க!

 

TAGS:- சங்கீத விநோதங்கள், ரஸிகர், காசு, படரெவ்ஸ்கி, மயக்கம் போட்ட, பாடகர் பாகவதர்

 

–SUBHAM–

ஹிந்து வரலாற்று அதிசயம்: 28வது வியாஸர்! (Post No.4469)

Date: 7 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-23 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4469

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஹிந்து வரலாற்று அதிசயம்

28வது வியாஸர்!

 

ச.நாகராஜன்

 

1

ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்று வேதத்தை நான்காகப் பகுத்தவர் வியாஸ்ர் என்பதை நாம் அறிகிறோம்.

வியாஸர் என்பது ஒரு பதவியின் பெயர்.

வேதத்தைப் பகுப்பவர் வியாஸர்.

கிருத யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம் ஆகிய மூன்று யுகங்களில் வேதம் ஒன்றாகவே இருக்கும்.

கலி யுகத்திலோ மனித ஆயுள் குறைவு. புத்தி சக்தி குறைவு. ஒன்றாக உள்ள வேதத்திலிருந்து ம்ந்திரம், பிரம்மாணம், சாமம் ஆகியவற்றைப் பிரித்தெடுக்க மனிதர்களுக்கு சக்தி இருக்காது.

ஆகவே பிரம்மாண்டமான புத்தி உடைய ஒருவர் (வியாஸோ விசால புத்தே) மனித குலத்திற்கு உதவி செய்வதர்காக இப்படி வேதங்களை எளிது படுத்தி வகைப் படுத்தித் தருகிறார்.

கலியுகத்தில் தர்மம் ஒற்றைக் காலில் நிற்கிறது.வேதோகிலோ தர்ம மூலம்.

தர்மத்தின் அடிப்படை வேதமே.

ஆகவே வேதத்தைப் பாதுகாத்தால் தர்மத்தைப் பாதுகாத்தவர்கள் ஆகிறோம்.

பாரத பூமிக்கு ஹிந்து ராஷட்ரம் என்று பெயர் சூட்ட வேண்டியது இயல்பான ஒன்று. ஆனால் இன்று இந்தியா என்கிறோம்.

செகுலரிஸ்டுகளுக்குப் பயந்தோ அல்லது பணிந்தோ!

ஹிந்து ராஷட்ரம் என்று சொல்ல வேண்டாமென்றால் தர்ம ராஷ்ட்ரம் என்று சொல்லலாம். தர்ம ராஷ்ட்ரம் என்றால் வேத ராஷ்ட்ரம் என்று பொருள்.

வேதம் உடையதிந்த நாடு என்றார் பாரதியார்.

அது தான் நமக்குப் பெருமை!

அது ஒன்றே தான் நமக்கு அடிப்படைப் பெருமை.

இதர நாடுகளுக்கு இல்லாத அஸ்திவாரம் நம்மிடம் தான் இருக்கிறது.

இதை யுகம் யுகமாகக் காப்பாற்றுவதற்கென்றே வேத வியாஸர் அவதரிக்கிறார்.

இப்போது 28வது கலியுகம் நடக்கிறது.

இதற்கு முன் நடந்த 27 சதுர்யுகங்களிலும் 27 வியாஸர்கள் இருந்திருக்கின்றனர்.

அருள் புரிந்திருக்கின்றனர்.

 

2

28 வேத வியாஸர்களின் பட்டியல் இதோ:

 

ஸ்வாயம்புவ மனு (த்வாபரத்தில் அவதரித்தார்.) அவரே முதல் வியாஸர்.

ப்ரஜாபதி இரண்டாவது வியாஸர்

உசநஸ் மூன்றாவது வியாஸர்

பிருஹஸ்பதி நான்காவது வியாஸர்

சூரியன் ஐந்தாவது வியாஸர்

ம்ருத்யு ஆறாவது வியாஸர்.

இந்திரன் ஏழாவது வியாஸர்.

வஸிஷ்டர் எட்டாவது வியாஸர்

ஸாரஸ்வதர் ஒன்பதாவது வியாஸர்

திரிதாமா பத்தாவது வியாஸர்

திரிவிருஷர் பதினொன்றாவது வியாஸர்

பரத்வாஜர் பன்னிரெண்டாவது வியாஸர்

அந்தரிக்ஷர் பதிமூன்றாவது வியாஸர்

தர்மர் பதிநான்காவது வியாஸர்

த்ரய்யாருணி பதினைன்ந்தாவது வியாஸர்

தனஞ்சயர் பதிறாவது வியாஸர்

மேதாதிதி பதினேழாவது வியாஸர்

விரதி பதினெட்டாவது வியாஸர்

அத்ரி பத்தொன்பாவது வியாஸர்

கௌதமர் இருபதாவது வியாஸர்

ஹர்யாத்மா இருபத்தொன்றாவது வியாஸர்

வாஜச்ரவஸ் இருபத்தியிரண்டாவது வியாஸர்

ஸோம ஆமுஷ்யாயணர் இருபத்திமூன்றாவது வியாஸர்

த்ரிணபந்து இருபத்திநான்காவது வியாஸர்

பார்க்கவர் இருபத்திஐந்தாவது வியாஸர்

சக்தி இருபத்தியாறாவது வியாஸர்

ஜாதுகர்ண்யர் இருபத்தியேழாவது வியாஸர்

இப்போதுள்ள கலியுகத்தில் இருபத்தெட்டாவது வியாஸராக நாராயணனே அம்சாவதரமாக அவதரித்துள்ளார்.

வேத வியாஸரின் மஹிமை பற்றி மஹாபாரதத்தில் காணலாம்.

அடுத்த வியாஸராக – இருபத்தொன்பதாவது சதுர்யுகத்தில் த்வாபர யுகத்தில் – வரப்போவது அஸ்வத்தாமா.

 

3

ஹிந்துக்களுக்கு வரலாறு பற்றி ஒன்றும் தெரியாது. வரலாறுத் தொகுப்பையே நாம் தான் கற்றுத் தந்திருக்கிறோம் என்று பல மேலை நாட்டு அறிஞர்கள் பெருமிதமாகக் கூறுவது வழக்கம்.அதை அப்படியே எழுதியுள்ளனர்.

ஆனால் 28 சதுர் யுக சரிதத்தையும் விளக்கியுள்ள ஒரே மதம் ஹிந்து மதம் தான்.

வேறு எந்த ஒரு மதமும், நாகரிகமும் இப்படி ஒரு காலக் கணக்கைத் துல்லியமாகத் தந்ததில்லை.

ஆகவே தான் காஸ்மாஸ் தொலைக்காட்சித் தொடர் தயாரித்த பிரபல விஞ்ஞானி கார்ல் சகன் உலக மதங்களையெல்லாம், உலக நாகரிகங்களையெல்லாம் முற்றிலுமாக ஆராய்ந்து விட்டு பிரபஞ்ச தோற்றத்தை அறிவியல் ரீதியிலாகக் கணக்கிட்டுச் சொல்லும் அதே கால அளவை ஹிந்து மதம் ஒன்று மட்டுமே தருகிறது என்று கூறி தன் தொடரின் முதல் காட்சியில் சிதம்பரம் நடராஜரைக் காட்டினார்.

அத்துடன் அவர் சிதம்பரத்திற்கு வருகை புரிந்து நடராஜரைத் தரிசித்தார்.

ஆக பிரபஞ்ச வரலாறையே தந்துள்ள ஹிந்து மதம், முகலாய, பிரிட்டிஷ் ஆதிக்கத்தினால் தன் இயல்புத் தன்மையில் ஒரு பங்கைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தது உண்மை.

பழைய இயல்பான நிலைக்குத் திரும்ப நாம் ஓவொருவரும் முயற்சி எடுத்தால் பொற்காலம் தோன்றும்.

 

4

நண்பர் ஒருவர் என்னைச் சந்தித்த போது “ஒரே குழப்பமாக இருக்கிறது” என்றார்.

“என்ன விஷயம்”, என்றேன்.

“நம் மதத்தை எடுத்துக் கொண்டால் பல விவரங்கள் குழப்பமாக உள்ளன. இதோ பாருங்கள், சப்த  ரிஷிகள் என்று இரண்டு பட்டியல் உள்ளன. இதில் எது உண்மை?” என்று அவர் கேட்டார்.

அதை வாங்கிப் பார்த்த நான், “இரண்டுமே உண்மை” என்றேன்.

“என்ன, இன்னும் அதிகமாகக் குழப்புகிறீர்கள்?” என்றார் அவர்.

“ஒரு குழப்பமும் இல்லை. பல லட்சம் ஆண்டுகள் சரித்திரத்தைக் கொண்டுள்ளோம் நாம். சப்தரிஷி பட்டியலைப் பார்க்கும் போது இது எந்த சதுர்யுகத்திற்கானது, எந்த மன்வந்தரத்திற்கானது என்று கேட்டால் விடை சுலபமாக வந்து விடும்.

27 மன்வந்தரம் கடந்தவர்கள் நாம். ஆக இந்த இரண்டு பட்டியலுமே உண்மை. வெவ்வேறு மன்வந்தரத்திற்கு உரிய சப்த ரிஷிகள் இவர்கள்” என்றேன்.

“அடடா, இது எனக்குத் தெரியாமல் போயிற்றே! இதைச் சொல்வதற்கு ஆள் இல்லையே” என்றார் அவர்.

 

5

புராண, இதிஹாஸம் மிகவும் பரந்தது. சுலபமாக அதைக் கற்றுக் கரை சேர முடியாது.

ஆகவே தான் சமீப காலம் வரை மண்டபங்களிலும் கோவில்களிலும் பிரவசனகர்த்தாக்கள், இதிலேயே ஊறி அனைத்தையும் அறிந்த நிபுணர்கள் – பல்வேறு விஷயங்களை மால நேரத்தில் கூறுவார்கள்.

ஆனால் இந்தக் காலத்தில்..

நாமே குழுவை அமைத்து இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

படித்தும் தெரிந்து கொள்ளலாம் – தமிழ் அண்ட் வேதாஸ் டாட் காம் (www.tamilandvedas.com) கட்டுரைகளைப் படிக்கலாம்; பயன் அடையலாம்.

****

 

 

 

 

யமகவந்தாதியின் பட்டியல்! (Post No.4439)

Written by S.NAGARAJAN

 

 

Date: 28 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-36 am

 

 

 

Post No. 4439

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இலக்கிய இன்பம்

யமகம் பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரைகளைப் படிக்க வேண்டுகிறேன். அதில் யமகம் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

யமகவந்தாதியின் பட்டியல்!

ச.நாகராஜன்

1

தமிழின் ஏராளமான சிறப்புகளில் ஒன்று மடக்கு அல்லது யமக அணியாகும்.

நூற்றுக் கணக்கான யமகப் பாடல்களைத் தமிழ் இலக்கியம் கொண்டுள்ளது.

இது சாதாரண விஷயமல்ல.

ஆழ்ந்த பொருள் தரும் அகன்ற சொல் வளம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இதைக் கொண்டுள்ள தமிழ் மொழி உண்மையிலேயே உலகின் அதிச்ய மொழி.

சம்ஸ்கிருதத்திலும் ஏராளமான யமகப் பாடல்கள் உள்ளன.தெலுங்கிலும் உண்டு.

 

 

2

2014ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி. இடம் : சென்னை.

சிற்றிலக்கியத்தில் மடக்கணி என்ற அருமையான ஒரு நூலைக் கண்டேன்.படித்தேன்.

முனைவர் பா. முனியமுத்து அவர்களின் ஆய்வு நூல் இது.

அவருக்கு உவமைப் பித்தன் என்ற புனைப்பெயரும் உண்டு.

நூலைப் படித்த மகிழ்ச்சியில் எனது இயல்பான வழக்கத்தையொட்டி அவரைப் பாராட்ட விழைந்தேன். தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவரைத் தொடர்பு கொண்டேன்.

“முனியமுத்து அவர்கள் இருக்கிறாரா?”

ஒரு பெண்மணி பதில் அளித்தார்: “இல்லீங்க”

“எப்ப வருவார்?”

“என்ன விஷயங்க?”

“அவரது அருமையான் நூலான ‘சிற்றிலக்கியத்தில் மடக்கணி’ என்ற நூலைப் படித்தேன். அவரைப் பாராட்டுவதற்காகத் தான் இந்த போன். அவர் எப்ப வருவார்?”

“ஓ. ரொம்ப சந்தோஷங்க. அவர் இப்ப இல்லீங்க. இப்படி யாராவது பாராட்ட மாட்டார்களா என்று அவர் ரொம்ப எதிர்பார்த்திருந்தாருங்க.”

ஒரு சின்ன மௌனம்.

அந்த அம்மையார் முதலில் சொன்ன ‘இல்லீங்க’ என்பதற்கும் இரண்டாவது தரம் சொன்ன ”இப்ப இல்லீங்க” என்பதற்கும் பெரிய வேறுபாடு இருந்தது.

என் மனம் கனத்தது. சோகம் இழையோட, “அவரைப் பாராட்டத் தான் இந்த போன்” என்று சொன்னேன்.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க”

போன் உரையாடல் முடிந்தது.

சற்று நேரம் ஒன்றுமே ஒடவில்லை. அந்தப் புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழுக்கு அரிய சேவை செய்த நல்ல மனிதர்.

முனியமுத்து அவர்களின் புகழ் வாழ்க!

 

 

3

தனது ஆய்வு நூலில் அவர், மடக்கு (யமக) அந்தாதி இலக்கியங்களின் பட்டியலை மிகுந்த சிரமத்தின் பேரில் தொகுத்துத் தந்துள்ளார். அதில் நூல்கள் இயற்றப்பட்ட காலமும் இருக்கிறது.

அந்தப் பட்டியல் அப்படியே கீழே தரப்பட்டிருக்கிறது. பிராக்கட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண் எந்த நூற்றாண்டில் நூல் இயற்றப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

அகர வரிசைப் பட்டியலில் இறுதியில் உள்ள இரண்டு நூல்கள் எனது ஆய்வின் விளைவாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

முனியமுத்து போன்றோரின் ஆய்வைத் தமிழ் உலகம் நல்ல முறையில் அங்கீகரிக்கவில்லையே என்ற ஏக்கம் அனைவருக்கும் வரவேண்டும். இனியேனும் நல்லோரை இனம் கண்டு உரிய முறையில் அவர்கள் வாழ்கின்ற காலத்திலேயே பாராட்டுவோம்.

4

இதோ பட்டியல்:

மடக்கு (யமக) அந்தாதி இலக்கியங்கள் – அகர வரிசை

1) அழகர் யமகவந்தாதி –

2) இரத்தினகிரியமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள் – (19)

3) கடம்பர் யமகவந்தாதி – பேரம்பலப் புலவர் – (19)

4) கணபதி யமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள் – (19)

5) கந்தர் யமகவந்தாதி – அருணகிரிநாதர் – (15)

6) கல்வளை யமகவந்தாதி – சின்னத்தம்பிப் புலவர் – (19)

7) கூடல் திருவிளையாடல் யமகவந்தாதி -சுப்பையா-(19)

8) சித்திர யமகவந்தாதி – தொழுவூர் வேலாயுத முதலியார் – (19)

9) சிவகிரி யமகவந்தாதி -பழநி மாம்பழக் கவிச்சிங்க நாவலர்-(19)

10) தன்னை யமகவந்தாதி – கார்த்திகேயப் புலவர்- (19)

11) தன்னை யமகவந்தாதி – திரிகூட ராசப்பக் கவிராயர்- (19)

12) தன்னை யமகவந்தாதி  முருகேசையர்-(19)

13) திரிச்சிராமலை யமகவந்தாதி -மீனாட்சிசுந்தரம் பிள்ளை -(19)

14) திருக்கடவூர் யமகவந்தாதி – தலைமலை கண்ட தேவர்-(19)

 

15) திருக்குருகூர் யமகவந்தாதி – வேலாமூர் கிருட்டிணமாச்சாரியார்-(20)

16) திருக்குற்றால யமகவந்தாதி -திரிகூட ராசப்பக் கவிராயர்-(18)

17) திருக்கோட்டற்றுப் பதிற்றுப் பத்து யமகவந்தாதி – செய்குத்தம்பி பாவலர் – (20)

18) திருச்சிற்றம்பல யமகவந்தாதி -சபாபதிப் பிள்ளை நாவலர்(19)

19) திருச்செங்காட்டங்குடி யமகவந்தாதி – நல்லூர்த்தியாகன்

20) திருச்செந்தில் யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

21) திருச்செந்தில் யமகவந்தாதி -சிவச்சம்பு புலவர்(இலங்கை)(19)

22) திருச்செந்தில் யமகவந்தாதி – இராமசாமி ஐயர்-(19)

23) திருச்செந்தூர் கரித்துறை யமகவந்தாதி – அருணாசலப் பிள்ளை-(19)

 

24) திருத்தணிகை யமகவந்தாதி – சொக்கலிங்க தேசிகர்-(19)

25) திருத்தில்லை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

26) திருப்புடை மருதீசர் யமகவந்தாதி – தலைமலை கண்ட தேவர்-(19)

27) திருநெல்வேலி யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

28) திருப்போரூர் யமகவந்தாதி – புரசை சபாபதி முதலியார்-(19)

29) திருப்பெருந்துறை ஆத்மநாதர் யமகவந்தாதி – மிதிலைப்பட்டி சிற்றம்பலக் கவிராயர் – (17)

30) திருமீதினத்துப் பதிற்றுப்பத்து யமகவந்தாதி – அ.கா.பிச்சை இபுராகீம் புலவர்-(19)

31) திருமதீனத்து யமகவந்தாதி – (19)

32) திருமயிலை யமகவந்தாதி – தாண்டவராயக் கவிராயர்

33) திருமயிலை யமகவந்தாதி – நெல்லையப்பக் கவிராச பண்டிதர்

34) திருவரங்கத்து யமகவந்தாதி-பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் (17)

 

35) திருவல்லிக்கேணி யமகவந்தாதி –

36) திருவல்லிக்கேணி யமகவந்தாதி- தண்டபாணி அடிகளார்-(19)

37) திருவாமாத்தூர் யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

38) திருவாலவாய் யமகவந்தாதி – சொக்கலிங்கச் செட்டியார்-(20)

39) திருவானைக்கா யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

40) திருவானைக்கா யமகவந்தாதி – சிங்காரவடிவேல் வ்ண்ணியமுண்டார்

41) திருவேகம்பர் யமகவந்தாதி – சிவஞான முனிவர்

42) திருவேரகம் யமகவந்தாதி – வேலையர் (20)

43) திருவேரக யமகவந்தாதி – சிவச்சம்புப் புலவர்-(19)

44) திருவேரக யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

45) தில்லைகற்பக வினாயகர் யமகவந்தாதி – சிதம்பரம் செட்டியார்-(19)

46) தில்லை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

 

47) துறைசை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

48) நகுலேசர் யமகவந்தாதி -அப்துல் காதர் நயினார் அலீம் -(19)

49) நெல்லை யமகவந்தாதி –

50) பட்டீச்சுர யமகவந்தாதி – அப்பாப்பிள்ளை-(19)

51) பத்மநாபப்பெருமாள் யமகவந்தாதி-தண்டபாணி அடிகளார்-(19)

52) பழநி யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

53) பழநி யமகவந்தாதி – பாலசுப்பிரமணியன்

54) புலியூர் யமகவந்தாதி – மயில்வாகனப் புலவர்-(18)

55) புலியூர் யமகவந்தாதி – கணபதி ஐயர், இலங்கை

56) புல்லை யமகவந்தாதி – ரா.இராகவையங்கார்-(20)

57) மதுரை யமகவந்தாதி – இராமநாதன் செட்டியார் அ. வயினாகரம் – (19-20)

58) மதுரை யமகவந்தாதி – சொக்கநாதக் கவிராயர்-(17)

59) மதுரை யமகவந்தாதி – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

60) மதுரை  யமகவந்தாதி – ஆறுமுகம் பிள்ளை-(19)

 

61) மருதாசலக் கடவுள் யமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள்-(19)

62) மருதூர் யமகவந்தாதி – தலைமலைக் கண்ட தேவர்-(19)

63) மாவை யமகவந்தாதி -பொன்னம்பலம் பிள்ளை,இலங்கை(19)

64) யமகவந்தாதி – மழலை சுப்பிரமணிய பாரதியார்-(19)

65) திருச்செந்தில் நீரோட்டக யமகவந்தாதி – சிவப்பிரகாச சுவாமிகள்

66) திருவாவடுதுறை யமகவந்தாதி -மீனாட்சிசுந்தரம் பிள்ளை(19)

 

5

எத்தனை அற்புதமான பாடல்களை தமிழ் கொண்டிருக்கிறது என்று எண்ணி எண்ணிப் பெருமைப்படலாம்.

இந்தப் பட்டியலில் அபிராமி அந்தாதி, கைலை பாதி, காளத்தி பாதி அந்தாதி போன்ற அந்தாதி நூல்கள் சேர்க்கப்படவில்லை.

யமக அந்தாதி இல்லாத அந்த அந்தாதி நூல்களுக்கு ஒரு தனிப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதைத் தயாரித்துக்  கொண்டிருக்கிறேன்.

***

பெண் சிரித்தாள்! படை எடுத்தான் பாண்டியன்!! (Post No.4404)

Written by London Swaminathan 

 

Date: 17 NOVEMBER 2017

 

Time uploaded in London- 17-43

 

 

Post No. 4404

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பெண்கள் சிரித்தால் போர் மூளும் என்பது மஹா பாரத காலத்திலும் உண்மை; 500 ஆண்டுகளுக்கும் முன்னரும் உண்மை!

மயன் கட்டிய மாளிகையில்,  சலவைக் கல் தரை, கண்ணாடி போல, பளபளத்தது. அதைத் தண்ணீர் என்று நினைத்த துரியோதனன், தன் பட்டாடை  நனைந்து விடப் போகிறதே என்று தூக்க, அதை மேலே மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த திரவுபதி அம்மாள் நகைக்க, துரியோதணனுக்குக் கோபம் வர, தீராப் பகை ஏற்பட்டு போராய் முடிந்ததை நாம் மஹாபாரதத்தில் படித்துள்ளோம்.

 

 

இதே போல 500 ஆண்டுகளுக்கு முன்பு, தென்னாட்டிலும் நடந்தது. ஆனால் மாபாரதப் போர் போல அழிவு ஏற்படுத்தாமல் ஒரு நூல் உதிக்கக் காரணமாய் அமைந்தது!

பாண்டியர் பரம்பரையில் வரதுங்க பாண்டியன்,  அதி வீரராம பாண்டியன் என்று இரு சஹோதரர்கள் இருந்தனர். மூத்தவனான வரதுங்கன் தன் மனைவியுடன், தவம் மேற்கொண்டு சிவனடியார்களுக்குத் தொண்டு புரிந்தான். அவன் திருக்கருவை நல்லூரில் வசித்தபோது, இளையவனான அதிவீரராம பாண்டியன், தென்காசியில் இருந்துகொண்டு அரசோச்சி வந்தான். அவன் சைவ புராணங்களின் சாரமான பிரம்மோத்தர காண்டம் என்னும் அரிய நூலை மொழி பெயர்த்தான். திருக்கருவை நல்லூரில் வீற்றிருக்கும் சிவ பெருமான் மீது வெண்பா அந்தாதி,  கலித்துறை அந்தாதி ஆகியன பாடி சிவநேசச் செல்வனாய் வாழ்ந்து வந்தான்.

 

அவன் நள சரிதத்தையும் கவிதை வடிவில் யாத்தனன். பாதி நூல் வரைந்த காலையில், அதனை வரதுங்கனிடம் காட்டினன். இதென்ன அரனைத் துதிக்காமல் அரசன் துதி பாடுகிறாயே (அரன்= சிவன்; அரசன்= நள மஹாராஜா) என்று வருத்தப்பட்டனன். அண்ணன் இப்படிச் சொன்னதால், உப்பு சப்பில்லாமல் அதை ஒருவாறு பாடி முடித்தான். அதனால் அதன் பின்பகுதி சுவையற்றதாயிற்று.

 

அத்தோடு நில்லாமல், அதைத் தமையன் மனைவியிடம் போய்க் காட்டினான். அண்ணியாவது பாராட்டுவாளோ என்ற ஒரு நப்பாசை. அவளோ  கற்றுணர்ந்த பேரரசி; தமிழரசி; புன் சிரிப்புடன் அதைத் திருப்பிக் கொடுத்தாள். எதற்காக்ச் சிரிக்கிறீர்கள்? உங்கள் அபிப்ராயம் என்ன? என்று கேட்டான் அதிவீரராமன்.

 

அவள் சொன்னாள்: “வேட்டை நாய், வேட்டைக்குப் போகும்போது, வேகமாகச் செல்லும்; வேட்டை முடிந்து திரும்பும்போது ஏங்கி இளைத்து வருமன்றோ! அது போலத் தான் உமது காவியம்” என்று சொல்லி சிரித்தாள்.

இது அவன் செவியில் நாராசம் பாய்ச்சியது போல இருந்தது; கோபத்துடன் வெளியே சென்றான். நால்வகைப் படைகளைத் திரட்டிக்கொண்டு படை எடுத்து வந்தான். அண்ணனுக்குத் தூதும் அனுப்பினான். அந்த தூதன் கொண்டுவந்த செய்தியைப் பார்த்த வரதுங்கன்  , “நீ மார்த்தாண்டன் மைந்தனையும், விபீஷணனையும் பஞ்சவரிற் பார்த்தனையும் எண்ணாமல், பரத-ராகவருடைய அன்பை எண்ணுவாயாக” என்ற கருத்துப் பட ஒரு வெண்பாப் பாடலை எழுதி அனுப்பினன்.

அதைப் பார்த்தவுடன், சினம் தணிந்து, வெட்கம் மேலிட, அண்ணன் காலில் விழுந்து, வணங்கி, என் வாழ்வுக்கு வழிகாட்டுவாயாக என்று வேண்டினான் அதி வீர ராம பாண்டியன்.

உடனே அண்ணனான வரதுங்கன், “தம்பி, காசி காண்டத்தைத் தமிழில் மொழி பெயர்; உன் குற்றம் எல்லாம் மறையும்” என்றான். அதற்குப் பின்னர் அண்ணியார் காலடியிலும் விழுந்து வணங்கி ஆசி பெற்று சம்ஸ்கிருதத்தில் உள்ள காசிக் காண்டத்தைத் தமிழில் வடித்தான். நறுந்தொகை என்னும் நீதி நூலையும் இயற்றினான். அதன் மூலம் அவன் புகழ் தமிழ் கூறும் நல்லுலம் முழுதும் பரவிற்று. அதற்குப் பின்னர் கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதியும் பாடினன். முப்பது பாடலடங்கிய அம்பிகை மாலை, இலிங்க புராண தமிழ் மொழி பெயர்ப்பு என்று மேலும் பல நூல்களும் அவருடைய எழுதுகோல் மூலம் தமிழர்களுக்குக் கிடைத்தது.

–Subham—