தமிழர் கண்ட விஞ்ஞானம்- மரபியல் GENETICS அறிவு (Post No.4315)

Written by London Swaminathan

 

Date:19 October 2017

 

Time uploaded in London- 11-06 am

 

 

Post No. 4315

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

‘தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’ – என்ற பழமொழி பற்றியும் அதற்கிணையான சம்ஸ்கிருத பழமொழியையும் ஏற்கனவே கொடுத்தேன் (அடிக்குறிப்பை காண்க)

 

தமிழர்களுக்கு மரபியல்  (GENETICS ஜெனெடிக்ஸ்) மீது ரொம்ப நம்பிக்கை என்றே தோன்றுகிறது. ஏனெனில் நாலடியாரும் பழமொழியும் கூட இதே கருத்தை உறுதி ப்படுத்துகின்றன.

‘மகனறிவு தந்தை அறிவு’ Nature Vs Nurture

ஒருவனுடைய அறிவுக்குக் காரணம் அவனுடைய தாய் தந்தையர் மூலம் வரும் மரபணுவா  (GENE) அல்லது அவன் வளர்க்கப்படும் சூழ்நிலையா என்று மேல் நாட்டு அறிவியல் இதழ்களில் (Science Journals) அடிக்கடி கட்டுரைகள் ( Nature Vs Nurture or Heredity or Environment) வரும். இரண்டுக்கும் ஆதரவான, எதிரான வாதங்கள் முன்வைக்கப்படுவதால் முடிவு எதுவும் சொல்ல முடியாது. ஆயினும் தமிழர்களுக்கு மரபணு  GENE) விஷயத்தில்தான் அதிகம் நம்பிக்கை என்று தோன்றுகிறது.

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான பழமொழியிலும் நாலடியாரிலும் இக்கருத்து வருவதால் அந்தக் காலத்தில் இப்பழமொழி  மிகப் பிரசித்தம் என்பது புலனாகும்.

 

செந்நெல்லா லாய செழுமு ளை மற்றுமச்

செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்

வயனிறையக் காய்க்கும் வளவயலூர!

மகனறிவு தந்தை அறிவு — நாலடியார்

 

பொருள்:-

அதிகமான செந்நெற் பயிர் வயல்கள் உடைய வயலூரா!

 

செந்நெற்களால் உண்டாகிய செழிப்பான முளைகள், பின்னர் அந்த செந்நெற் பயிர்களாகவே வளர்வது போல, ஒரு தந்தையினுடைய அறிவு போலவே மகனுடைதைய அறிவு அமையும்.

 

நெல்லின் முளையினால் அந்த நெல்லே விளைவது போல, தந்தையின் குணமே மைந்தனுக்கும் அமையும் என்பது கருத்து. இதே கருத்தை பழமொழி என்னும் நூலிலும் காண்போம். இது 1200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கருத்து.

 

இதே போல மகனைப் பார்த்தால், அவர்களுடைய தாய் தந்தையர் எப்பேற்பட்டவர் என்பதும் தெரியும். சில குழந்தைகள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும்  சண்டை போது பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளை நாலு பேர் முன்னால் சொல்லிவிடும்; மற்றவர்கள் இதைக் கண்டும் காணாதது போல முகத்தைத் திருப்பிக் கொள்வர். ஆனால் அவர்களுக்குத் தெரியும் இச்சொற்கள் அந்த வீட்டில் நடந்த காரசார வாக்குவாதத்தின் போது உதிர்ந்த முத்துக்கள் என்பது; ஒரு குழந்தை வளரக்கூடிய தெரு, பேட்டை ஆகியனவும் இதன் மூலம் தெரியும்

“மகனுரைக்கும் தந்தை நலத்தை” என்ற தொடராலும்,  “தாயைத் தண்ணீர் தடத்தில் பார்த்தால் பிள்ளையைப் பார்க்க வேண்டியதில்லை” என்ற பழமொழியாலும் இதை அறியலாம். “தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” என்பது எல்லோரும் அறிந்த பழமொழி.

(பிள்ளை என்பது மகன், மகள் இருவரையும் குறிக்கும் சொல்)

 

நோக்கி யறிகல்லாத் தம்முறுப்புக் கண்ணாடி

நோக்கி யறிப; அதுவே போல் — நோக்கி

முகமறிவார் முன்ன மறிய வதுவே

மகனறிவு தந்தை யறிவு — பழமொழி

 

பொருள்:-

தன்னுடைய கண்களால் பார்த்து அறிய முடியாத முகத்தை, கண்ணாடியில் பார்த்து அறிவர்; அதுபோல ஒருவர் முகத்தைப் பார்த்தே அவர்கள் கருத்தை அறியலாம். மகனுடைய அறிவு தந்தையின் அறிவைப் போன்றது போல.

 

அதாவது மகனைக் கொண்டு தந்தையின் அறிவையோ, அல்லது தந்தையைக்  மகன்   கொண்டு  மகன்  அறிவையோ அறிந்து விடலாம் என்பது தமிழர் கண்ட உண்மை. புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா? என்பதும் இதன் அடிப்படையிற் பிறந்ததே.

 

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் (குறள் 706)

 

தாயைப் போல | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/தாயைப்-போல/

 

வெள்ளை காகம் விலை இரண்டரை ரூபாய்!! white crow (2). கண்ணு! கண்ணு !! ஏ, கண்ணு!!! kannu kannu (2). தாயைப் போல பிள்ளைநூலைப் போல சேலை! poy thay …

 

–சுபம்–

 

 

 

சத்தியம் எங்கும் வியாபித்திருக்கிறது, மகனே! (Post No.4314)

Written by S.NAGARAJAN

 

 

Date:19 October 2017

 

Time uploaded in London- 6–51 am

 

 

Post No. 4314

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

உபநிடத சத்தியம்

நீரில் உப்பு போல சத்தியம் எங்கும் வியாபித்திருக்கிறது, மகனே!

 

ச.நாகராஜன்

1

உத்தாலகர் என்று ஒரு மஹரிஷி. அனைத்தையும் அறிந்தவர்.

அவருக்கு ஒரு புதல்வன். ஸ்வேதகேது என்று பெயர்.

ஆத்மா என்றால் என்ன என்பதையும் ஜகத்துக்கு காரணம் என்ன என்பதையும் அறிய விரும்பினான்.

அவனது விருப்பம் சிரத்தையுடைய ஒருவனது உண்மையான விருப்பம்.

தகுதியுள்ள பாத்திரம் தான் என்று நிச்சயித்தார் உத்தாலகர்

 

2

உத்தாலகர் புத்திரன் ஸ்வேதகேதுவை அழைத்தார்.

“இந்த நியக்ரோத (ஆல) மரத்தின் பழம் ஒன்றைக் கொண்டு வா” என்றார்.

புத்திரன், “இதோ கொண்டு வந்தேன்” என்று அதைக் கொண்டு வந்தான்.

தந்தை அதை உடை என்றார்.

இதோ உடைத்தேன் என்றான் புதல்வன்.

அதில் என்ன காணப்படுகிற்து என்று கேட்டார் தந்தை.

புத்திரன், “ஒரு சிறிய வித்து காணப்படுகிறது” என்றான்.

“அதை உடை” என்றார் தந்தை.

“இதோ உடைத்தேன்” என்றான் புதல்வன்.

“அதில் என்ன காணப்படுகிறது” என்று கேட்டார் தந்தை.

“அதில் ஒன்றுமில்லை” என்றான் புதல்வன்.

“எதில் உனக்கு ஒன்றும் காணப்படவில்லையோ, அதில் ஒரு பெரிய நியக்ரோத (ஆல) மரம் இருக்கின்றது. அன்புள்ள மகனே! அதைக் கவனிப்பாயாக. இவற்றிற்கெல்லாம் ஆத்மாவாகிய அணு சத்தியம். அது ஜகத்துக்கெல்லாம் ஆத்மா. நீ அதுவாக இருக்கிறாய், ஸ்வேதகேதுவே” என்றார் பிதா.

புத்திரன், “மறுபடியும் அதைக் கொஞ்சம் விரிவாக விளக்குங்கள்’ என்று தந்தையை வேண்டினான்.

3

தந்தை கொஞ்சம் உப்பை எடுத்து ஸ்வேதகேதுவின் கையில் கொடுத்தார்.

“இந்த உப்பை அந்த ஜலத்தில் கரைத்து விட்டு நாளைக் காலையில் என்னிடம் வா” என்றார் உத்தால்கர்.

மகனும்,”அப்படியே ஆகட்டும்” என்று கூறி விட்டு உப்பை குடுவையில் இருந்த ஜலத்தில் கரைத்தான்.

மறுநாள் காலை.

ஸ்வேதகேது உத்தால்கரிடம் வந்தான்.

தந்தை, “நீ நேற்று இரவு ஜலத்தில் கரைத்த உப்பை எடு” என்று பணித்தார்.

உப்பு க்ரைந்து போனதால் எடுக்கப்பட முடிய்வில்லை. ஸ்வேதகேது அதைக் கூறவே, “சரி, நீரின் மேல் புறத்திலிருந்து கொஞ்ச்ம எடுத்து ஆசமனம் செய்” என்றார்.

புத்திரன் அப்படியே செய்தான்.

தந்தை, “அது எப்படி இருக்கிறது” என்று கேட்டார்.

“உப்பு கரிக்கிறது” – ஸ்வேதகேது

‘சரி, நடுவிலிருந்து ஜலத்தை எடுத்துக் கொண்டு ஆசமனம் செய்”

அப்படியே செய்தான் ஸ்வேதகேது.

“இப்போது எப்படி இருக்கிறது?”

“உப்பு கரிக்க்றது, தந்தையே”

“சரி, அடியிலிருந்து கொஞ்ச்ம் ஜலம் எடுத்து ஆசமனம் செய்”

அப்படியே செய்தான் ஸ்வேதகேது.

“இப்போது எப்படி இருக்கிறது?”

“உப்பு கரிக்கிறது, தந்தையே”

“ஓ, அதைக் கொட்டி விட்டு,, வாயை அலம்பி விட்டுப் பேசாமலிரு” என்றார் தந்தை.

அப்படியே செய்த ஸ்வேதகேத், “நான் நீரில் கலந்த உப்பு அப்படியே இருக்கிறது தந்தையே” என்றான்.

உத்தாலகர், “சத்தியமும் அப்படியே, குழந்தாய். நீ அதைக் காணாவிட்டாலும் கூட, அது இந்த தேகமெங்கும் வியாபித்திருக்கிறது. இதற்கெல்லாம் ஆத்மாவாகிய அணு சத்தியம். அது ஜெகத்துக்கெல்லாம் ஆத்மா. நீ அதுவாக இருக்கிறாய் ஸ்வேதகேதுவே” என்றார்.

ஸ்வேதகேதுவுக்கு இப்போது புரிந்தது.

4

தத் ஸத்யம், ஸ ஆத்மா, தத்வமஸி

ஸ்வேதகேதோ இதி

என்று முடிகிறது சாந்தோக்கிய உபநிஷத்தின் ஆறாவது அத்தியாயம் (12,13,14 கண்டங்களில்)

5

இலேசில் உணர முடியாத ம்ஹா சக்தி எங்கும் வியாபித்திருக்கிறது.

இதை உணர்ந்து கொள் என்கிறது சாந்தோக்கிய உபநிடதம்!

***

வீணான ஒரு ஆராய்ச்சி! வேனன் கதை!(Post No.4303)

Written by London Swaminathan

 

Date:15 October 2017

 

Time uploaded in London- 10-40 am

 

 

Post No. 4303

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேனன் என்ற புராண புருஷன் பற்றி ஒரு சுவையான கதை இருக்கிறது. அந்த வேனன் கதையைப் படிக்கும் போதெல்லாம் ‘வீண்’ என்ற சொல்லே இவன் பெயரில் இருந்துதான் வந்ததோ என்று எண்ணினேன்.

 

 

“ஏண்டா வீண் வம்பு பேசுகிறாய்? ஏண்டா இப்படி வீணாப் போற” என்றெல்லாம் கேட்டிருக்கிறோம்.

 

பழைய ஆனந்தவிகடன் தமிழ் அகராதியைப் பார்த்த போது,

வீண்= பயனின்மை

என்று ஒரே சொல்லில் முடித்துவிட்டனர்.

 

சங்க இலக்கிய சொற்களஞ்சியத்தைப் பார்த்தபோது, வீண் என்ற சொல்லோ, வீணை என்ற சொல்லோ இல்லை!

 

திருக்குறள் சொல்லடைவைப் பார்த்தபோதும் ‘வீண்’ என்ற சொல்லே இல்லை. இதை எல்லாம் பார்தவுடன் என் ஊகம் சரிதான் என்று தோன்றியது. மேலும் ‘வீண்’ பற்றி ஆராய்ச்சி செய்தேன். கழகப் பழமொழி அகரவரிசையில் ‘வீண்’ என்ற சொல்லில் பிறந்த சில பழமொழிகள் இருந்தன. அதில் வீண் என்ற பெயர்ச் சொல்லில் பிறந்த “வீணன் (வெட்டிப்பயல், துட்டன்)” என்ற சொல்லைக் கண்டேன்.

சரிதான்! நான் ஊகித்தது நூற்றுக்கு நூறு சரியே என்று சொல்லியது போல இருந்தது “வீணன்” என்ற சொல்.

 

அதாவது, வீண் என்ற சொல் திருவள்ளுவர் காலத்திலோ, அதற்கு முந்தைய சங்க காலத்திலோ  தமிழில் இல்லை! அந்தச் சொல்

தோன்றக் காரணமான வீணன்/ வேணன் என்னும் துட்டன் பற்றிய கதை சுவையான கதை.

 

அது என்ன கதை?

விஷ்ணு புராணத்தில் வேனன் என்னும் கதை வருகிறது. வேனன் என்ற மன்னன் மிகவும் கொடியவன்; துஷ்டன். ஹிரண்யகசிபு போல எல்லா சமயச் சடங்குகளுக்கும் தடை போட்டான். ரிஷி முனிவர்களுக்குக் கோபம் வந்தது; அவனைக் கொன்றுவிட்டனர். ஆனால் அது “வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கியது போல” ஆயிற்று. அரசன் இல்லாத நாட்டில் “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” என்ற காட்டு நீதி நிலவியது.

 

அதை சம்ஸ்கிருதத்தில் அ+ராஜகம்= அராஜகம்= அரசன் இல்லாத நிலை என்பர். இன்று கூட தமிழிலும் அராஜகம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்த சொல்; எதிர்க் கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சிக்கு எதிராகப் பிரயோகிக்கும் சொல்!

 

அராஜக நிலையை மாற்ற ரிஷி முனிவர்கள் மஹாநாடு கூட்டினர்; சரி வேனனின் இடது கையைக் கடைந்து ஒரு அரசனை உருவாக்குவோம் என்று முயன்றனர். ஒரு கோரமான கருப்பு பூதம் வந்தது; அடச் சீ! நீ போ!! என்று விரட்டி விட்டனர். பின்னர் வேனன் சடலத்தில் வலது கையைக் கடைந்தனர். பிருது என்ற அழகிய ஆண் மகன் வந்தான். அவனை அரசனாக நியமித்தனர். ஆனால் அராஜக நிலையால் யாரும் வேலைக்குப் போகவில்லை; விவசாயம் நடக்கவில்லை; உடனே பிருது பூமியை மிரட்டினான். அது பசு வடிவம் கொண்டு பிரம்ம லோகம் வரை சென்றது; விடவில்லை பிருது; பின்னர் அந்தப் பூமி சொன்னது:

“இதோ பார்; இந்துக்கள் பெண் கொலை, பிராமணக் கொலை இரண்டும் செய்ய மாட்டார்கள்; நானே பசுவாகப் பாலைப் பொழிகிறேன்” என்று பாலைப் பொழிந்தது. இந்தப் பூமி முழுதும் வளம் கொழித்தது; பயிர்கள் செழித்தன. அன்று முதல் பூமிக்குப் ‘பிருத்வீ’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

 

இந்தக் கதை அருமையான தத்துவம், சங்கேத மொழி (CODED LANGUAGE, SYMBOLIC) நிறைந்த சிம்பாலிக் கதை!

 

அதாவது ராஜா இல்லாவிடில் — நல்ல ஆட்சியாளர் இல்லாவிடில் — அ ராஜகம் தாண்டவம் ஆடும்; மக்கள் ஸ்டிரைக் செய்வர்; பயிர்கள் விளையாது; பஞ்சம் ஏற்படும் அவனே கடுமையான விதிகளைப் பின்பற்றி அராஜகப் பேர்வழிகளை ஒடுக்கி நல்லாட்சி செய்தால் பூமி பாலாய்ச் சொறியும்; அதாவது மக்கள் வேலை செய்வர்; பலன் கிடைக்கும். அருமையான சிம்பாலிக் ஸ்டோரி Symbolic Story!

 

இந்து மதத்தில் புராணங்களில் இப்படித்தான் அடையாள பூர்வ, சங்கேத மொழியில், மறை மொழியில் கதைகள் இருக்கும்; வேதங்களில், பிராமணங்கள் என்னும் நூலில் எல்லாக் கதைகளும் சங்கேத மொழிக் கதைகள்தாம்; அவைகளைப் புரிந்து கொள்ள முடியாத வெள்ளைத்தோல் வெளிநாட்டாரும், மார்கஸீய வாந்திகளும், ஆங்கிலம் மட்டுமே படித்த அரை வேக்காட்டு அறிவிலிகளும் இந்து மதத்தை எள்ளி நகை ஆடினர்.

“வீண்” என்ற சொல்லைக் கொடுத்ததே வேனன் கதைதான்!!

வேனன்= வீணன்= வீண்

 

இதனால்தான் சங்க காலத்தில் இல்லாத இச் சொல், வள்ளுவர் பயன்படுத்தாத இச் சொல் பிற்காலத்தில் தமிழில் வந்தது என்பது எனது ஊகம்; புதிய சான்று– எதிர்ச் சன்றுகள் இல்லாதவரை- எனது ஊகம் சரியே!

 

அகத்தியர் விந்திய மலையை கர்வபங்கம் செய்தது, கடலைக் குடித்தது, பரசுராமன் கேரள பூமியைக் கடலில் இருந்து மீட்டது, பகீரதன் ஊசிமுனையில் தவம் செய்து கங்கையைக் கொண்டு வந்தது, காக்கை கவிழ்த்த கமண்டலம் மூலம் அகத்தியர் காவிரியை உருவாக்கியது — முதலியன எல்லாம் பிரமாண்டமான பொறியியல்- எஞ்ஜினீயரிங் அதிசயங்கள் (Engineering Marvels) , பிரம்மாஸ்திரம் என்பது அணு ஆயுதம்! ஒலி அலைகளையும் தண்ணீரையும் பயன்படுத்தி பிரம்மாண்டமான சக்தியை உருவாக்கலாம், மனோவேகத்தில் சென்று பல வெளி உலகங்களை அடையலாம்; ஐன்ஸ்டைனின் கொள்கையை மாற்றலாம் – என்று நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைகளையும் படிக்கவும்.

TAGS:— வேனன் கதை, வீண், விஷ்ணு புராணம், ஆராய்ச்சி

-சுபம்-

‘முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்’ (Post No.4297)

Written by London Swaminathan

 

Date:13 October 2017

 

Time uploaded in London- 7-37 am

 

 

Post No. 4297

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பட்டினத்தாரும் நம்மாழ்வாரும் பாடியது:

முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்

இரண்டு பெரிய பக்தர்கள், ஒரே கருத்தைச் சொல்லும்போது, அதை நம் மனதில் வைப்பது எளிதாகிறது; மேலும் ஒருவர் வைணவர்கள் போற்றும் நம்மாழ்வார், மற்றொருவர் சைவர்கள் போற்றும் பட்டினத்தார் என்பதைக் காணுகையில் நம் ஆர்வம் கொப்புளிக்கிறது.

 

இருவரும் என்ன சொல்கிறார்கள்?

நீ எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் இறுதியில் ஆண்டியும் அரசனும் சந்திக்கும் இடம் ஒன்றே.

 

நம் வாழ்வில் காணா சமரச இடம்

சுடுகாட்டிலோ, இடு காட்டிலோதான் நாம் அனைவரும் வித்தியாசமின்றி சந்திக்கிறோம்

ரம்பையின் காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல்:–

 

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

 

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு

தொல்லையின்றினே தூங்கிடும் வீடு

உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

 

 

ஆண்டி எங்கே அரசனும் எங்கே

அறிஞன் எங்கே அசடனும் எங்கே

ஆவி போன பின் கூடுவார் இங்கே

ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே

 

 

பட்டினத்தார் பாடல்

பாமர மக்களுக்குப் புரியும் வகையில் எழுதப்பட்டது திரைப்படப் பாடல். இலக்கிய நயம்பட எழுதப்பட்டது பக்திப் பாடல்; மேலும் பக்திப் பாடல்களைப் பாடுவோர் அதை அடிமனதில் தோன்றும் ஆன்மீகப் பேரூற்றில் இருந்து தருகையில் நாம் மிகவும் ரசிக்கிறோம்; பருகுகிறோம். ஆகையால் காலா காலத்துக்கும் அப்பாடல்கள் அழிவதில்லை. அதே கருத்து திரைப்பாடல்களில் வருகையில் அது அழிந்துவிடுகிறது. ஏனெனில் அவர்கள் காசு, பணத்துக்கு எழுதுகிறார்கள்.

 

இதோ பட்டினத்தார் பாடல்:–

 

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

 

 

பொருள் மிகவும் எளிது:

பெரிய  வைர, ரத்தின, தங்க கிரீடங்களை (மணி முடி) தாங்கி பாரையே ஆண்ட அரசர்களும் இறுதில் இறந்த பின்னர் எரிக்கப்பட்டு ஒரு கைப்பிடி சாம்பல் ஆகிவிடுவர். இதைப் பார்த்த பின்னரும், பலரும் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்க்காமல், மேலும் மேலுமாசைகளைப் பெருக்கி வாழ மக்கள் விரும்புகின்றனர். திருத் தில்லை அம்பலத்தில் ஆடும் இறைவனின் அடிகளை நாடும் நாட்டம் வரவில்லையே!

 

இது பட்டினத்தாரின் ஏக்கம்.

இதோ நம்மாழ்வார் பாசுரம்:

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ

இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்

பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்

கடிசேர் துழாய் முடிக்கண்ணன் கழல்கள் நினைமினோ

–திருவாய் மொழி, திவ்வியப் பிரபந்த பாடல் எண் 3009

 

பொருள்:-

 

பேரரசர்கள் ஒரு சமயம். மற்ற சிற்றரசர்களின் முடிகள் தங்கள் காலில் படும்படி (காலில் விழுந்து வணங்கும்போது) ஆட்சி புரிந்தனர். இடி போன்ற முரசங்கள் ஒலிக்கும்படி சபை வீற்றிருந்தனர். ஆனால் அவர்களே பின்னொரு நாளில் இவை அழியும்படி, போரில் தோற்று பொடியாக, துகளாக ஆனார்கள். ஆகவே மணம் பொருந்திய துளசி மாலையை அணிந்த கண்ணன் திருவடிகளை நினை மனமே; இப்போதே நினை மனமே.

 

ஆக நம்மாழ்வாரும் பட்டினத்தாரும் பேசும் பெரிய மன்னர்கள் தகுதி நமக்கு இல்லை. ஆனால் அவர்களுகே அந்தக் கதி என்றால் ஊர் பேர் தெரியாத நமக்கு எந்த கதியோ?

 

இறைவன் சந்நிதியில் மட்டுமே நாம் அனைவரும் சமம்.

 

–சுபம்–

போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294)

Written by London Swaminathan

 

Date:12 October 2017

 

Time uploaded in London- 11-26 AM

 

 

Post No. 4294

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Asaram Bapu, accused in several cases

 

அறநெறிச்சாரம் என்பது அருமையான கவிதை நூல்;

226 வெண்பாக்களைக் (வெண்பா= நான்கு அடிகள்) கொண்டது.

இதை இயற்றியவர் முனைப் பாடியார். இது 600, 700 ஆண்டுகளுக்கு முன்னர் சமண சமயத்தில் நம்பிக்கை உடையவரால் இயற்றப்பட்டத்து, அருகக் கடவுள் பற்றிய பாடல்களில் இருந்து தெரிகிறது.

 

நம் எல்லோருக்கும் எது நல்லது எது கெட்டது என்பது அனுபவ அறிவாலும் அப்பா, அம்மா, ஆசிரியர் சொற்களாலும் தெரியும். இருந்த போதிலும், போலீசும், ராணுவமும், கோர்ட்டுகளும், வக்கீல்களும் எதற்கு? ஏன் என்றால் பெரும்பாலோர் நல்லனவற்றைப் பின்பற்றுவதில்லை. இதனால் சிறைச் சாலைகள் நிரம்பி வழிகின்றன.

 

ஆகையால் நல்ல விஷயங்களை எத்தனை முறை படித்தாலும் நன்மையே; ‘எனைத்தானும் நல்லவை கேட்க’– என்பார் வள்ளுவப் பெருமான்; அடக் கடவுளே! கொஞ்சமாவது நல்லதைக் கேளுங்களென்பதே வள்ளுவன் வாக்கு.

 

கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி வேடம் போடும் ஆட்கள் பற்றி வள்ளுவன் மூன்று அருமையான விஷயங்களைச் சொல்கிறார்:-

 

  1. ஒருவன் பொய் ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கையில் அவன் உடலில் உள்ள பஞ்ச பூதங்களும் தமக்குள்ளேயே சிரித்துக் கொள்ளுமாம் ( kural 271)

 

  1. ஒரு பசு மாடு புலித்தோலைப் போர்த்திக் கொண்டு மேய்கிறதாம். அதாவது, தவ வலிமை அற்றவன், சந்யாசி வேடம் போற்று நடிக்கிறானாம். (273)

 

3.சந்யாசி போல வேடம் போட்டுவிட்டு, இரவு நேரத்தில் அல்லது ரகசிய இடத்தில் பாவம் செய்பவன், புதர் மறைவில் நின்று பறவைகளைப் பிடிக்கும் வேடனாம் (274).

Premananda arrested

என்ன அற்புதமான உவமைகள்!

இது போல அறநெறிச்சாரம் நூலிலும் மனதில் பதிய வைக்கும் விதத்தில் பாக்கள் அமைந்துள்ளன. இதோ அந்தப் பாடல்கள்:

 

 

பாசண்டி (போலித் துறவி- புறச்சமயி) மூடம்

 

தோல் காவி சீரைத்துணிகீழ் விழவுடுத்தல்

கோல்காக் கரகம் குடை செருப்பு — வேலொடு

 

பல்லென்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்

நல்லவரால் நாட்டப்படும்

 

முனைப்பாடியாரின் அறநெறிச்சாரம்

 

பொருள்:-

தோல் காவி சீரைத் துணிகீழ் விழவுடுத்தல்= மான் தோல், கல்லாடை/காவிஉடை, மரவுரி இவைகளை கீழே புரளுமாறு அணிவதும்

 

கோல்காக் கரகம் குடை செருப்பு – வேலொடு பல்லென்பு தாங்குதல் = தண்டு, காவடி, கமண்டலம், குடை, செருப்பு, வேல், எலும்பு/கபாலம், புலிப் பல் ஆகிய இவற்றை அணிந்து கொள்ளுதலும்

 

பாசண்டி மூடமாய் நல்லவாரால் நாட்டப்படும் – போலி வேடதாரிகள் அல்லது புறச் சமயத்தைச் சார்ந்தோரது அறியாமை என்று பெரியோர்கள் சொல்லுவர்.

Gurmeet Ram Rahim

கழுதை மேல் உட்கார்ந்தவன் தலை மேல் மூட்டை!

 

ஆவரணமின்றி அடுவாளும் ஆனை தேர்

மாவரணமின்றி மலைவானும் — தாவில்

கழுதையி லண்டஞ் சுமந்தானும் போலப்

பழுதாகும் பாசண்டியார்க்கு

 

ஆவரணமின்றி அடுவாளும்= கேடயம் இல்லாமல் போரில் பகைவரைக் கொல்லும் வாளும்,

 

ஆனை தேர் மாவரணமின்றி மலைவானும் =  யானை, தேர், குதிரை, முதலிய படைகளும், அரணும் இல்லாமல் போர் செய்யும் வீரன் செயலும்

 

தாவில் கழுதையி லண்டஞ் சுமந்தானும் போலப்= கழுதையின் மேல் உட்கார்ந்துகொண்டு அவன் தலையில் சுமையைச் சுமப்பவன் செயலும் போல

 

பாசண்டியார்க்கு பழுதாகும் = போலித் துறவிகளுக்கு அவர்கொண்ட வேடமும் பயனற்றதாகும்

 

று

Amrita Chaitanya, accused in several cases

வேறு பொருள்:

கழுதை + இலண்டம் = கழுதை விட்டை

தா இல் கழுதை = கோவேறுக் கழுதை

 

நல்ல உவமை! இப்போதாவது இந்தச் செய்தி நம் மனதில் பதிந்தால் முனைப்பாடியார் சந்தோஷப்படுவார்.

 

–சுபம்–

 

வெடி வெடிக்க அனுமதிக்காவிட்டால், வீட்டுக்கும், பஸ்ஸுக்கும் தீ………..(Post No.4288)

வெடி வெடிக்க அனுமதிக்காவிட்டால், வீட்டுக்கும், பஸ்ஸுக்கும் தீ………..(Post No.4288)

 
Written by London Swaminathan

 

Date:10 October 2017

 

Time uploaded in London- 14-56

 

 

Post No. 4288

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

SCIENCE BEHIND DEEPAVALI- Part 1 | Tamil and Vedas

SCIENCE BEHIND DEEPAVALI- Part 1

3 Nov 2012 – Science behind Deepavali (swaminathan’s Talk delivered today 03/11/2012) Actual Diwali falls on 13-11-2012 Good Evening,Namsthe …

 

SCIENCE BEHIND DIWALI-2 : 175 SWEET ITEMS!! | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/science-behind-diwali-2-175-sweet-ite…

Translate this page

3 Nov 2012 – SCIENCE BEHIND DIWALI-2 : 175 SWEET ITEMS!! Picture from Wikipedia : Making Fire Crackers. This is Second Part of my speech: swami.

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி பற்றி இரண்டு நீண்ட கட்டுரை எழுதினேன். கட்டுரையில் விவரம் காண்க.

இளஞர்களை வெடி வெடிக்க அனுமதிக்காவிட்டால், வீட்டுக்கும் பஸ்ஸுக்கும் தீ வைப்பார்கள். ஏனெனில் நாம் எல்லோரும் பைரோமேனியாக் (PYROMANIAC) என்று விஞ்ஞான சஞ்சிகைகள் விளம்புகின்றன. இது பற்றி எனது கட்டுரையில் விளக்கியுள்ளேன். நாம் ஆதிகாலத்தில் குகைகளில் வசித்தோரின் வழி வந்தவர்கள். உணவு சமைக்கவும் இரவு நேரத்தில் வனவிலங்குகளை விரட்டவும், குளிர் காயவும் தீ மூட்டி பழக்கப்பட்டவர்கள். இது நமது மரபணுக்களில் (GENES) உள்ளதால்தான் நாம் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் சிறு வயதில் வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் நெருப்புப் பெட்டியுடன் விளையாடினோம். வெளியில் சொக்கப்பனை கொளுத்தினோம். ஆகையால் கோர்ட்டுகள் மூலமோ, அரசாங்க போலீஸ் மூலமோ இளைஞர்கள் வெடி வெடிப்பதை  — தீபாவளி பட்டாசு வெடிப்பதைத் — தடுத்தால் பந்த், ரகளை, கலாட்டாக்களின் போது வீட்டுக்குத் தீ வைப்பதும், பஸ், ரயில்களுக்குத் தீ வைப்பதும் அதிகரிக்கும்; குறிப்பாக ஆண்களுக்கு இந்த உணர்வு அதிகம்.

 

ஆகையால் தீபவளி வெடி வெடிக்கத் தடை வேண்டாம்.

ஆனால்……………………..

இந்துக்களிடையே சுய கட்டுப்பாடு (SELF CONTROL and SELF RESTRAINT) வேண்டும்; விஞ்ஞான அணுகு முறை (Scientific approach)  வேண்டும். அது என்ன?

அந்தக் காலத்தில் பரந்த நிலப் பரப்பில், சின்ன ஜனத்தொகை.

இப்பொழுதோ அடுக்கு மாடி வீடுகளில் 500 குடும்பங்கள்;

அருகே ஆஸ்பத்திரிகள்; அ லுவலகங்கள்.

வீட்டூக்குள் நோயாளிகள்1 வெடிகளுக்கு அஞ்சும் சிறு குழந்தைகள்!

இவ்வளவு பேரின் நலத்தையும் மனதில் கொண்டு இரவு 11 மணிக்கு மேல், காலை 5 மணிக்கு முன்னர் வெடிகளை வெடிப்பதில்லை என்று உறுதி பூண வேண்டும்.

இது போல கிராமப் பகுதிகளில், காட்டோரப் பகுதிகளில் பறவைகள், விலங்குகள் நலன்களை மனதிற் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் பல கிராமங்களில் பறவைகளின் நலனை மனதில் வைத்து தீபாவளியே கொண்டாடுவதில்லை- அதாவது வெடி வெடிபதில்லை. நல்ல உள்ளங்கள் !!

 

புறச்சூழல் கேடு வருமா?

தீபாவளியின் போது விஷப்புகை வெளியேறுவது உண்மையே; ஆனால் அதை விட கூடுதல் விஷப்புகை ஒவ்வோரு நிமிடமும் உலகெங்கும் புகைக்கப்படும் சிகரெட், பீடி, சுருட்டு மூல ம் வெளியாகிறது. இதனால் புகை பிடிக்காதவர்களுக்கும் புற்று நோய் (PASSIVE SMOKING IS MORE DANGEROUS)  வரும் என்று அறிவியல் நூல்கள் செப்பும்.

அமெரிக்காவும் மேலை நாடுகளும் விற்பனை செய்யும் ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் உலகில் எந்த ஒரு நேரத்திலும் 55 நாடுகளின் மோதல்களில் பயன்படுத்தப்படுகின்றன. மே ல் நாட்டுப் பத்திரிக்கைகளும் தார்மீக உணர்வு இல்லாத, அற நெறி அறியாத குருடர்களின் கைகளில்தான் இருக்கின்றன. இந்தியாவைப் (INDIAN MASS MEDIA) போலத்தான். பணம் ஒன்றே குறி.

 

உலகில் சண்டை சச்சரவுகள் இருப்பதையே விரும்புகின்றனர்.

லண்டனில் ஆண்டுதோறும் நடக்கும் ஆயுத விற்பனைக் கண்காட்சியில் எந்த பயங்கரவாத இயக்கமும் ஆயுதம் வாங்கலாம். உலகில் 55 நாடுகளில் யுத்தம் நடப்பதை ஊக்குவிப்பது மேலை நாடுகள்!!

அமெரிக்காவில் தினமும் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தும் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் ஆயுத விற்பனையை நிறுத்த முன்வரவில்லை; ஏனெனில் அங்கே மக் டொனால்டு (Mac Donald) உணவகத்திலும் துப்பாக்கி வாங்கலாம்; இவர்கள்தான் உலகில் மிகப்பெரிய புறச்சூழல் கேட்டை விளைவிக்கிறார்கள். ஆயுத விற்பனையை நிறுத்தினால் 55 நாடுகளில் வெடி குண்டுகள் வெடிக்காது. POLLUTION/ புறச் சூழல் கேடு குறையும்.

நாம் பறக்கும் ஜெட் விமானங்கள் கக்கும் புகையும், அவை எழுப்பும் ஒலியும் அதி பயங்கர POLLUTION!

 

உலகில் கடலில் மிதக்கும் கப்பல்கள், குறிப்பாக எண்ணய்க் கப்பல்கள், கடல் முழுவதையும் சாக்கடையாக்கிவிட்டன. மீன்களை சாகடித்து விட்டன அல்லது மீன் சாப்பிடுவோரின் உடல்களை விஷமாக்கிவிட்டன. ஆக இந்த கேடுகளைப் பார்க்கையில் ஒரு நாள் தீபாவளியில் ஒரு கேடும் வாராது. இந்தக் கப்பல்களையும் விமானங்களையும் தயாரிப்போர் மேலை நாடுகள்; அதில் பயணம் செய்வோரோ, மத்தாப்பு வெடிகளுக்கு எதிராகக் கூச்சல் போடும் மேல் நிலை வர்கம்!

 

பட்டாசுத் தொழில் குடிசைத் தொழில்

 

சிவகாசி போன்ற இடங்களில் பட்டாசுத் தொழில் குடிசைத் தொழில்– அவர்கள் வயிற்றில் மண்ணை அடித்து விடாதீர்கள். யாராவது புறச்சுழல் கேடு பற்றிப் பேசினால் அதை பீடி, சிகரெட் குடிப்போரிடம் சொல்லச் சொல்லுங்கள்; புற சூழலையும் கெடுத்து சிகரெட் குடிக்காதவர்களுக்கும் புற்று நோயை (PAASIVE SMOKING IS MORE DANGEROUS THAN ACTIVE SMOKING) உண்டாக்கும் அந்தக் கம்பெனிகளையும் ஆட்களையும் விரட்டி அடியுங்கள். பட்டாசு உண்டாக்கும் புறச்சூழல் கேடு– ஒரு கொசு அளவே!

 

ஒலிக் கேடு (NOISE POLLUTION)

தீபாவளி வெடிகளின் வீரியத்தை, சக்தியை வெளி நாடுகள் தடுத்துவிட்டன. ஆகையால் சட்டப்படி அதிக ஒலி கேட்கும் வெடிகளை வாங்கவும் இயலாது; விற்கவும் முடியாது; இது போன்ற கட்டுப்படுகள் அவசியமே

 

நாமும் வெடி வெடிக்க என்று சில இடங்க ளை ஒதுக்கலாம்.

லண்டனில் 33 கவுன்சில்கள் உள்ளன. பெரும்பாலான கவுன்சில்கள் பொது இடங்களில் பிரம்மாண்டமான வாண வேடிக்கைகளை நடத்துகின்றனர். பல்லாயிரக் கணக்கான பவுன்களுக்கு பட்டாசு வாங்கி வெடிக்கின்றனர். இது தவிர வீடுகளில், தோட்டங்களில் தனி. எல்லா பேட்டைகளிலும் வெடிகள், மத்தாப்புகள் வாங்கலாம். பெரும்பாலானவை வானத்தில் சென்று வெடிக்கும் வெடிகள்.

 

அமெரிக்கர்களுக்கு பெற்றோல் PETROL விற்பவர்கள் எல்லாம் நல்லவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பயங்கர வாதிகள் என்று சொல்லி ஏதாவது ஒரு வகையில் அவர்களை வம்புக்கு இழுத்து அழித்து விடுவர். எ.கா (சதாம் ஹுசைன், கடாபி)

 

 

அரபு நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படவில்லையாம். அவர்கள் சத்தியசந்தர்களாம்; ஏனெனில் பெற்றொல் PETROL கொடுக்கிறார்கள். பிரிட்டனைப் பொறுத்தமட்டில் அவர்களிடம் வணிகம் செய்ய வேண்டும்;

 

ரிக்வேதம் இத்தகையவர்களை தஸ்யூக்கள் என்று திட்டுகிறது. காளிதாசன் , திருடர்களை “தஸ்யூக்கள்: என்று தனது நூலில் திட்டுகிறான். ரிக் வேதம் இவர்களை பாணிக்கள் என்றும் திட்டுகிறது.

பிற்காலத்தில் சங்கத் தமிழ் இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் இவர்களை மிலேச்சர்கள் என்று திட்டுகின்றன. பாரதியாரும் இப்படித் திட்டுகிறார். ஆரியனாக (பண்பாடு உடையவானாக) இரு என்கிறார்.

 

சீனா தனது ஆலைகள் மூலம் வெளியே தள்ளும் புகை, முஸ்லீம்கள் நடத்தும் தோல் தொழிற்சாலை  தள்ளும் கழிவு, ஆகியன மிக மிக மோசம்.

 

அரசியல் கட்சிகள் ஒலிபெருக்கிகளில் அலற வைக்கும் பாடல்கள்  நமது காதுகளைச் செவிடுபட வைக்கும். முஸ்லீம்கள் குறைவாக வசிக்கும் பகுதிகளில் மசூதிகளில் இருந்து அலறும் தொழுகைக் குரல் நம் காதுகளில் அழுகைக் குரலாக ஒலிக்கிறது. காலை ஐந்து மணிக்கு நம் தூக்கத்தைக் கெடுக்கிறது. இவை எல்லாம் என்ன ஒலிக்கேடுகள் (NOISE POLLUTION) இல்லையா?

 

நமது கோர்ட்டுகளை நாம் நம்புவதில் பயன் இல்லை. முஸ்லீம் மசூதிகளின் ஒலி பெருக்கிக்கு எதிராகவோ, சிகரெட், தோல் தொழிற்சாலைகளுக்கு எதிராகவோ வழக்குப் போட்டால அடுத்த நிமிடம் அதைத் தள்ளுபடி செய்வார்கள்.

 

பட்டாசு வாங்குங்கள்; எங்கள் லண்டனைப் போல கட்டு திட்டங்களுடன் வெடியுங்கள்; நமக்கு நாமே கட்டுப்                    பாடு வைத்துக் கொண்டால் நம்மவர்களிடம் இருந்து எதிர்ப்பு வாராது.

 

பட்டாசு வாழ்க; சிகரெட் பீடி ஒழிக!

 

TAGS:–தீபாவளி பட்டாசு, மத்தாப்பு, புறச்சூழல் கேடு, ஒலி, விஷப்புகை

 

–subham–

 

 

மஹாத்மாவின் மரணம்: நான்காவது குண்டு! (Post No.4287)

Written by S.NAGARAJAN

 

 

Date:10 October 2017

 

Time uploaded in London- 6-47 am

 

 

Post No. 4287

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நான்காவது குண்டு!

 

ச.நாகராஜன்

1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மாலை மஹாத்மா காந்திஜி கோட்ஸேயினால் சுடப்பட்டார்.

ஹே ராம் என்று ராம நாமத்தை உச்சரித்த அவரை மரணம் தழுவியது.

 

வரலாறு நமக்குத் தரும் இந்தச் செய்தியைத் “தட்டிக்” கேட்கிறார் நவீன அபிநவ் பாரத்தின் தலைவ்ரான டாக்டர் பங்கஜ் பட்னிஸ்.

கோர்ட்டின் வாசலைத் “தட்டி”  நீதி கேட்ட அவரை ஹை கோர்ட் நிராகரித்து விட்டது – அவரது கேஸை டிஸ்மிஸ் செய்து.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு 8-10-2017 அன்று அவர் அளித்த பேட்டியில் பல கேள்விகளை அவர் எழுப்புகிறார்.

 

அவர் தந்த விவரங்களின் அடிப்படையிலான ஒரு சுருக்கம் இதோ:

  • காந்திஜி கோட்ஸேயின் குண்டுகளால் சுடப்பட்டு இறக்கவில்லை.
  • நான்கு குண்டுகள் சுடப்பட்டன. கோட்ஸே சுட்டது மூன்று குண்டுகளே.
  • நான்காவது குண்டு தான் அவர் மரணத்திற்குக் காரணம்.
  • இரண்டாம் உலகப் போரில் இயங்கிய பிரிட்டிஷாரின் சதிகார கவிழ்க்கும் பிரிவான ஃபோர்ஸ் 136 க்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்று ஆராய வேண்டும்.
  • ம்ஹாத்மாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.
  • சம்பவத்தை அருகில் இருந்து நேரில் பார்த்தவரான மனுபென் காந்தியை பிராஸிக்யூஷன் தரப்பு விசாரணையின் போது அழைக்கவே இல்லை.
  • ஜனவரி 30ஆம் தேதியன்று மதியம் மூன்று மணிக்கு அயல்நாட்டு சாது ஒருவர் மஹாத்மா கொலை செய்யப்பட்டது பற்றிய துண்டு பிரசுரத்தை விநியோகித்தார்.

(மஹாத்மாஜி மரணம் அடைந்ததோ மாலை 5.12க்கு!)

  • மஹாத்மா பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் செல்ல சம்மதம் தெரிவித்திருந்தார். அவர் மரணம அடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ஜின்னாவும் அவர் வருவதை ஏற்றுக் கொண்டார். இது பிரிட்டிஷாருக்குப் பிடிக்கவில்லை.
  • நான்காவது குண்டு யாரால் சுடப்பட்டது. பிரிட்டிஷாரின் சதி வேலையினால் தானா என்பதை ஆராய வேண்டும்.
  • கோட்ஸே சுட்ட மூன்று குண்டுகள் காந்திஜியின் உடலில் இருந்தன. துப்பாக்கியில் மொத்தம் ஏழு குண்டுகள்.

நான்கு குண்டுகள் துப்பாக்கியிலிருந்து கைப்பற்றப்பட்டன.

கணக்கு சரியாகி விட்டது. ஆதலால் நான்காவது குண்டைச் சுட்டவன் யார் என்பதை ஆராய வேண்டும்.

 

  • இது தவிர இந்த சதியின் அம்சமாக வேறு பல விஷயங்களும் அரங்கேற்றப்பட இருந்தது. ஆகவே விஜயலக்ஷ்மி பண்டிட், மற்றும் புனே கலெக்டரின் மனைவியான சரளா பாவே ஆகியோர் கூறியதைப் பற்றியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இப்படி வாதங்களை அடுக்குகிறார் பங்கஜ். ஆனால் அவரது கேஸ் தள்ளுபடியாகி விட்டது.

 

நமது கேள்வி: தேசத்தையே எழுப்பி, விழிப்புணர்ச்சி ஊட்டிய தேசத்தின் மாபெரும் மஹாத்மாவின் மரணம் குறித்து ஒரு அறிக்கை மூலம் பரபரப்பான வாதங்களுக்கு  முற்றுப்புள்ளியை நமது அரசு வைக்கலாமே என்பது தான்!

எதிர்காலத்திலும் வேறு யாரும் வேண்டுமென்றே பரபரப்பான செய்திகளை பரப்பாமல் இருக்கவும் இது துணை புரியுமே!

நான்காவது குண்டு புரளிக் குண்டா, பிரிட்டிஷ் குண்டா, தெரியவில்லை!

***

 

 

 

குரங்கு கையில் கொடுத்த பூ மாலை போல! (Post No.4285)

Written by London Swaminathan

 

Date:9 October 2017

 

Time uploaded in London- 7-14

 

Post No. 4285

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

எனது தபால் தலை ஆல்பத்தில் பறவைகளுக்கு பூக்களுக்கு, மிருகங்களுக்கு என்று பல தனித்தனி ஆல்பங்கள் வைத்திருக்கிறேன். அதில் குரங்குகள் படங்கள் உள்ள அஞ்சல் தலைகளைப் பார்த்   தவுடன் குரங்குப் பழமொழிகள் ஞாபகம் வந்தது. கூடவே கொஞ்சம் புத்தகத்தையும் பார்த்து எடுத்தேன். பழமொழிகள் பற்றி எனது பிளாக்கில்(BLOGS) 50-க்கும் மேலான கட்டுரைகள் உள. அத்துடன் இதுவும் சேரட்டுமே!

 

 

1.குரங்கானாலும் குலத்திலே கொள்ள வேண்டும்

2.குரங்கின் கை பூ மாலை

3.குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை

4.குரங்கின் கையில் சிக்கிய பாம்பு போல

 

5.குரங்கின் தலையில் கரகம் வைத்து காளி கும்பிட்டது போல

6.குரங்கின் பீயை மருந்துக்குக் கேட்டால் கொடுக்குமா? அடித்து வாங்க வேண்டுமா?

7.குரங்கின் வயிற்றிலே குஞ்சரம் பிறந்த்து போல

8.குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்

9.குரங்கு ஏறாத கொம்பு உண்டா?

 

10.குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால் என்ன கதி ஆகும்?

 

 

11.குரங்கு கையில் குட்டிக்குக் கள் வார்தாற்போல

12.குரங்கு கையில்பூமாலை அகப்பட்டது போல

13.குரங்குக்குப் புத்தி சொல்லி தூக்கணாங் குருவி கூடு இழந்தது (பஞ்ச தந்திரக் கதை)

 

14.குரங்குக்கும் தன் குட்டி பொன் குட்டி (காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு)

 

 

15.குரங்கு தன் குட்டியின் கையைக் கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.

 

16.குரங்குப்பிடி போல பிடிக்க வேண்டும்

17.குரங்குப் பிடியே பிடி

18.குரங்குப் பிணமும் குறவன் சுடுகாடும் கண்டது இல்லை

19.குரங்குப் புண் ஆறாது

20.குரங்குப்புண் பிரம்மாண்டம்

21.குரங்கு முகமெல்லாம் ஒரு முகம்

 

22.மரத்தில் அறைந்த முளையை மர்க்கடம் பிடுங்கினாற்போல

 

23.மந்தி மயிரை மருந்துக்குக் கேட்டால் மரத்துக்கு மரம் தாவும்

 

24.உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு- கம்பன்

25.மூஞ்சியைப் பாரு, முகரையைப் பாரு, குரங்கு மூஞ்சி!

26.குற்றாலத்துக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கு

27.அவன் தம்பி அங்கதன்

 

FROM SANSKRIT :–

28.மற்கட (குரங்கு வழி) நியாயம், மார்ஜர ( பூனை வழி) நியாயம்

குரங்கானது குட்டியைத் தூக்காது; குட்டிதான் பிடித்துக்கொள்ளும்; பூனையின் குட்டியை பூனையே வாயில் தூக்கிச் செல்லும்.

 

–SUBHAM–

 

தமிழர்களின் மணல் ஜோதிடம்; அப்பர் தரும் அதிசயத் தகவல் (Post No.4279)

Written by London Swaminathan

 

Date: 7 October 2017

 

Time uploaded in London- 11-50 am

 

Post No. 4279

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தேவாரம் என்பது சிவனின் புகழ்பாடும் கீதங்கள் மட்டும் அடங்கியது அல்ல. தமிழர்களின் பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் அடங்கிய என்சைக்ளோபீடியா/ கலைக் களஞ்சியம். பல அற்புத நிகழ்ச்சிகளும் வரலாற்று விஷயங்களும் அடங்கிய பாடல் தொகுப்பு. சங்க இலக்கியத்தில் பரணர் என்னும் பார்ப்பனப் புலவர் எப்படி எண்பதுக்கும் மேலான வரலாற்று நிகழ்ச்சிகளைப் பாடல் தோறும் வைக்கிறாரோ அப்படி அப்பர் என்னும் திரு நாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் நாம் ஏராளமான புதுப்புது தகவ ல்களை அறிகிறோம்.

பாட்டன், பூட்டி உறவு முறை பற்றி அப்பர் பாடியதை எழுதினேன். இதன் மூலம் உறவு முறைச் சொற்களை அறிந்தோம். மாணிக்கவாசகர் அப்பருக்கும், சம்பந்தருக்கும் முன்னர் வாழ்ந்தவர் என்பதை நரி-பரி பாடல் மூலம் அப்பர் நமக்கு அறிவித்தார். தர்மி என்ற பார்ப்பனசொனுக்கு சிவபெருமான் கவிதை எழுதித் தந்த திருவிளையாடலையும் அப்பர் கூறியமையால் அறிந்தோம்.  தமிழ் சங்கம் அவர் காலத்துக்கு முன் இருந்ததை அறிந்தோம். சோழ மன்னர்கள், அவருக்கு முந்தைய நாயன்மார்கள், சமணர்களின் ரஹசியங்கள் முதலியவற்றை நமக்குத் தெரிவிப்பதும் அப்பரே.

 

அவர் ஒரு நாயன்மார் மட்டுமல்ல; வரலாற்றுப் பேரறிஞர்.

பாடலிபுத்திரம் வரை சென்று நாட்டை அறிந்தவர். கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் பாடுகிறார். அவர் பாட்டில் வரும் பூகோள விஷயங்களை தனி ஆராய்ச்சிக் கட் டுரையில் தருகிறேன். கங்கை நதி வங்காளத்தில் நுழைந்தவுடன் ஆயிரம் கிளைகளாகப் பிரியும் அற்புத விஷயத்தை ‘ஆயிரம் மாமுக கங்கை’ என்ற வரிகளில் நமக்குச் செப்புவார்

 

 

இன்றைய கட்டுரையில் அவர் சொல்லும் அதிசய சுழி- மணற் சுழி சோதிடம் பற்றிக் காண்போம்.

 

திருப்பழனம் என்னும் ஊரில் சிவனை ஏத்திப் பாடும் ஒரு பாடலில் அவர் புகல்வது யாதோ?

வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே யாயிடினும்

பஞ்சிற்கார் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்

அஞ்சிபோய்க் கலி மெலிய அழலோம்பும் அப்பூதி

குஞ்சிபூ வாய் நின்ற சேவடியாய் கோடியையே

 

-நாலாம் திருமுறை, அப்பர் தேவாரம்

பொருள்

ஈசன் என்னைக் கவர்ந்து ஆட்கொண்டு வளை கொண்ட நிலையில் ஏங்கவைத்து வாராமல் இருக்கிறார். ஆயினும் மென் சிறகுகளை உடைய அன்னப்பறவை பறந்தோடும் திருப்பழனத்தில் அவர் இருக்கிறார். அது மட்டுமா? கலியுகத்தின் கொடுமையைக் குறைப்பதற்காக

நாள் தோறும் யாக யக்ஞங்கள் செய்யும் அப்பூதி அடிகளின் தலைமுடி மீது வழங்கும் பூப்போல அவரது திருவடிகள் உள்ளன. கோடிழைத்துப் பார்ப்பேன்.

 

இந்தப் பாட்டில் இரண்டு முக்கியச் செய்திகள் உள.

அப்பூதி அடிகள் என்னும் பார்ப்பனர், திருநாவுக்கரசர் மீது பேரன்பு பூண்டவர். நாயன்மார்களில் ஒருவர். அவர் தினமும் ஹோமம் செய்வது எதற்காகத் தெரியுமா? தனக்காக அல்ல. கலியுகத்தினை அடக்கி ஒடுக்கி மெலியச் செய்வதற்காக. அவர் த லை  மீது ஈசன் எப்போதும் ஆசீர்வாதம் செய்து கொண்டே இருக்கிறான். ஆக ஒருவர் யாகம் செய்தால் கலியுகம் மாறும் என்ற செய்தியையும் அப்பூதி அடிகள் போன்றோர் செய்யும் யாகங்கள் சுயநலம் கருதி செய்யப்பட்டது அல்ல என்றும் அப்பர் அடித்துப் பேசுகிறார்.

 

நமக்கு வேண்டியது கோடியையே என்ற கடைசி சொல்லாகும். இது தமிழர்களின் விநோத சோதிடம். “காரியம் கைகூடுமா?” என்பதற்கும் பல பொருள்கள் உண்டு. இது பற்றி தமிழர்களின் கயிறு சோதிடம் என்ற கட்டுரையில் சொன்னேன்.

 

இப்போது கோடிழைத்தல் பற்றிப் பார்ப்போம்.

1.ஒரு பெண் தனது கணவன் அல்லது காதலன் விரைவில் தன்னிடம் வருவானா என்று பார்க்க இரண்டு கோடு இழைப்பாள் கண்ணை மூடிக்கொண்டு. இரண்டும் சேர்ந்தால் காரியம் கை கூடும் ஒரு வேளை இரண்டு கைகளால் கோடு போடுவர் போலும்!

  1. இதற்கு மற்றொரு விளக்கமும் உண்டு. ஒரு வட்டத்தை கண்களை மூடிக்கொண்டு வரைவர். அந்த வட்டம் இணைந்து வட்டமாக இருந்தால் அந்தக் காரியம் அல்லது நினைத்தது நிறைவேறும்; இதைச் சுழி இடுதல் என்றும் உரைப்பர்.

 

இதை அப்பரே பல பாடல்களில் சொல்கிறார்:—

பாடலாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்

கூடலாக்கிடும் குன்றின் மணற்கொடு

கோடல் பூத்தளலர் கோழம்பத்துள்மகிழ்ந்

தாடுங் கூத்தனுக்கன்பு  பட்டாளன்றே 5-64-4

 

நீடு நெஞ்சுள் நினைந்து கண்ணீர் மல்கும்

ஓடு மாலினோ டொண்கொடி மாதராள்

மாட நீள்மரு கற்பெருமான்வரில்

கூடுநீ என்று கூடலிழைக்குமே -5-88-8

 

இரண்டு பாடல்களும் அப்பரின் ஐந்தாம் திருமுறையில் உள்ளவை

 

இரண்டு பாடல்களில் வரும் “கூடலாக்கிடும் குன்றின் மணற்கொடு”, “கூடு நீ என்று கூடலிழைக்குமே” என்ற வரிகளின் பொருள் என்ன?

 

மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும் (பாடல் 186) உளது

 

ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து

ஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்து அகன்றார் வருக என்று

ஆழி திருத்திச் சுழிக்கணக்கு ஓதி நையாமல் ஐய

ஆழி திருத்தித் தாக்கிற்றி யோஉள்ளம் வள்ளலையே

— திருக்கோவையார் 186

ஆழி= வட்டம், சுழி

 

“கூடல் இழைத்தல் என்பது தலைமகள், இம்மணற்குன்றின் கண் நீத்து அகன்ற வள்ளலை உள்ளத்தை நெகிழ்த்து இவ்விடத்தே தரவல்லையோ எனக் கூடற்றெய்வத்தை வாழ்த்திக் கூடலிழைத்து வருந்தா நிற்றல்- திருக்கோவையார் உரை-186

 

கூடல் இழைப்பது எப்படி?

பெரியதொரு வட்டமாகக் கோடு கீறி, அதன் உள்ளே சிறு சுழிகளை அளவிடாது சுழித்து, அவற்றை இரட்டைப்பட எண்ணி, ஒற்றைபடாதுளதோ என்று நோக்கல்; மிஞ்சாதேல் தலைவன் வருவான் என்பது மரபு.

 

அதாவது வட்டம், முழு வட்டமாக இருக்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் குறைவட்டம், நிறை வட்டம் ஆகியவற்றை எண்ணி எது அதிகமாக இருக்கிறது என்று காண்டல்.

 

தலைவன் பிரிவாற்றாமையால் வருந்தும் காதலி அல்லது மனைவி இப்படிப் பார்ப்பது தமிழர் வழக்கம். இதை ஆண்டாளின் நாச்சியார் திருமொழிக்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளையும் விளக்குவார்:– கூடலாவது வட்டமாகக் கோட்டைக்கீறி அதுக்குள்ளே சுழிசுழியாகச் சுற்றும் சுழித்து, இவ்விரண்டு சுழியாகக் கூட்டினால் இரட்டைப்பட்டால் கூடுகை, ஒற்றைப்பட்டால் கூடாமை என்று சங்கேதம்”

 

இவ்வாறன்றிக் கண்ணை மூடிக்கொண்டு கீறிய கோடு, எழுவாய், இறுவாயிரண்டும் கூடியிருப்பின், வந்து கூடுவன், விலகின் வாரான் என்பதுமுண்டு.

பிற்காலத்தில் வந்த ‘கைலை பாதி காளத்திபாதி’, ‘நான்முகன் திருவந்தாதி’, ‘ஐந்திணை ஐம் பது’, சீவக சிந்தாமணி, ‘கலிங்கத்துப் பரணி’ முதலிய நூல்களில் இந்த வழக்கு குறிப்பிடப்படுகிறது.

 

இதுகாறும் படித்தவற்றில் இருந்து நாம் அறிவது யாதெனில், கூடல் இழைத்தல் சிற்சில மாறுபாடுகளுடன் வழங்கப்பட்டது.

 

மிகவும் சுலபமான வழி- கண்ணை மூடிக்கொண்டு பெரிய வட்டம் கீற வேண்டும்; இணைந்தால் காரியம் கைகூடும்

பெரிய வட்டத்துக்குள் பல சுழிகளைப் போடுதல் ; அவைகளில் நிறைவான வட்டங்கள் இரட்டைப் படை எண்ணில் வந்தால் காரியம் வெற்றி; காதலன் வருவான்.

 

மூன்றாவது முறை:- கண்களை மூடிக்கொண்டு இரு கோடுகளை இரண்டு கைகளாலும் வரைதல் அவை சேர்ந்தால், காரியம் நிறைவேறும்.

 

இது தவிர கோவில் முதலியவற்றில் துவஜஸ்தம்பம் அருகில் பெரிய தாமரை மலர் போன்ற வட்டப் பூ வரையப்பட்டிருக்கும். அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைகளை வைப்பர். இதழ் போன்ற பகுதிகளில் நாம் வைக்கும் கைகள் நம்மை அறியாமலேயே நடுப்பகுதிக்கு, மொட்டு போன்ற பகுதிக்கு வந்து இணைந்தால் காரிய ம் கைகூடும்; இதை எனது நண்பர்கள் மதுரை மீனாட்சி கோவிலில் செய்வதைப் பார்த்து இருக்கிறேன்.

 

என் கருத்து:

இரண்டு கோடுகள் போடல், பெரிய வட்டம் ஒன்று மட்டும் வரைதல் ஆகியவற்றில் நம்மை அறியாமலேயே தவறு (மோசடி) செய்யமுடியும்; அதாவது பல முறை இப்படி வரைந்து பழகிவிட்டால் செய்ய முடியும். ஆனால் பெரிய வட்டத்துள் நிறைய சுழிகளைப் போட்டுவிட்டு வட்டத்துக்குள் உள்ள சுழிகளை மட்டும் கணக்கிட்டு, அதில் முழுச் சுழியாக இருப்பவை இரட்டைப் படை எண்ணில் இருந்தால் காதலன் வருவான் அல்லது நினைத்த காரியம் நிறைவேறும் என்பதே பொருத்தம்.

ஆய்வுக்கட்டுரைக்கு உதவிய நூல்கள்

1.நாலாம் திருமுறை- தருமபுர ஆதீனம்

2.நாலாம் திருமுறை- வர்த்தமானன் பதிப்பகம்

3.திருக்கோவையார்

 

More ASTROLOGY Articles in my blog

 

  1. ஜோதிடம்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/ஜோதிடம்

Posts about ஜோதிடம் written … ஒரு கயிறு அல்லது நூலை … go to tamilandvedas.com OR …

  1. வேதத்தில்ஜோதிடம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/வேதத்தில்…

Posts about வேதத்தில் ஜோதிடம் written by Tamil and Vedas

  1. நாடிஜோதிடம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/நாடி…

Posts about நாடி ஜோதிடம் written by Tamil and Vedas

 

 

Tamil Astrology: Rope Trick for Predictions! | Swami’s …

swamiindology.blogspot.com/2013/02/tamil-astrology-rope…

Today’s article is about a Rope Trick. It is not a magic like the famous Indian Rope Trick by the magicians. Actually it is a thread trick. What they do is they use …

 

Tamil Astrology: Rope Trick for Predictions! | Tamil and Vedas

tamilandvedas.com/2013/02/27/tamil-astrology…

Tamil Astrology: Rope Trick for Predictions! Tamils have novel ways of predicting your future. They listen to lizards and predict what is going to happen. They watch …

 

நேபாள ஜோதிடர்–புது பத்ததியை வகுத்த ஸ்ரீபதி | Tamil and Vedas

tamilandvedas.com/2012/12/20/நேபாள…

Tamil and Vedas A blog exploring themes in Tamil and vedic literature. நேபாள ஜோதிடர்–புது பத்ததியை …

 

ஜோதிட மேதைகள் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/ஜோதிட…

Posts about ஜோதிட மேதைகள் written by Tamil and Vedas

 

புத்திசாலி ஜோதிடர் | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about புத்திசாலி ஜோதிடர் written by Tamil and Vedas

 

திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்! (Post …

tamilandvedas.com/2016/08/05…

Written by london swaminathan Date: 5th August 2016 Post No. 3036 Time uploaded in London :– 7-52 AM ( Thanks for the Pictures) DON’T REBLOG IT AT LEAST FOR …

 

 

TAGS: கூடல் இழைத்தல், மணல் ஜோதிடம், தமிழர், அப்பர்

–SUBHAM–

 

கடனால் நடுக்குற்ற புலவர்! (Post No.4266)

Written by S.NAGARAJAN

 

 

Date: 3 October 2017

 

Time uploaded in London- 6-41 am

 

Post No. 4266

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழ் இன்பம்

 

கடனால் நடுக்குற்ற புலவர் போட்ட புதிருடன் கூடிய பாடல்!

 

ச.நாகராஜன்

 

இராமச்சந்திர கவிராயர் பெரும் புலவர். ஒரு முறை கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டார்.

 

அதை எப்படித் தீர்ப்பது?வேறு வழி? வள்ளல் ஒருவரைக் கண்டு தமிழ்ப் பாட்டால் வேண்டுகோள் விடுக்க வேண்டியது தான்!

அப்போது சீதாராமன் என்ற வள்ளல் தமிழின் பால் தீராக் காதல் கொண்டிருந்தார் ஆகவே தமிழ்ப் புலவர்கள் வேதனைப் படுவதைக் கண்டு அவர் சகிக்க மாட்டார்.

அவரிடம் வந்தார் நம் புலவர்.

 

கடன் என்று நேரடியாகச் சொல்லத் தயக்கம். ஆகவே, பாடினார் இப்படி ஒரு பாடல்.

 

அத்திரம்வே லாவலமி ராசி யொன்றிற்

கமைந்தபெயர் மூன்றினிடை யக்க ரத்தால்

மெத்தநடுக் குற்றுனைவந் தடைந்தே னிந்த

விதனமகற் றிடுமற்றை யெழுத்தோ ராறில்

பத்துடையா னைத்தடிந்து பெண்ணார் செய்து

பரிவினுகர் வோனிருதாள் பணிந்து போற்றும்

சித்தசனே தெளியசிங்கன் றவத்திற் றோன்றுஞ்

சீதாரா மப்ரபல தியாக வானே.

 

அத்திரம் – அஸ்திரம் அத்திரம் ஆனது. அதைத் தமிழில் பகழி என்பர்.

வேலாவலம் – கடல்

இராசி ஒன்றிற்கு அமைந்த  பெயர்  – கன்னி இராசி

மூன்றின் – இந்த மூன்று வார்த்தைகளின்

இடை அக்கரத்தால் – நடுவில் உள்ள எழுத்துக்களால்

மெத்த நடுக்குற்று – மிகவும் நடுக்கம் அடைந்து

உன்னை வந்து அடைந்தேன் – உன்னிடம் வந்து சேர்ந்தேன்.

பகழி, கடல், கன்னி ஆகிய மூன்று வார்த்தைகளில் உள்ள நடு எழுத்து க ட ன் – கடன் என்பதாகும்.

 

கடனால் மெத்த நடுக்கம் அடைந்தாராம் கவிஞர்.

ஆகவே உன்னை வந்து அடைந்தேன் என்கிறார்.

 

 

இந்த விதனம் அகற்றிடு – இந்த விசனத்தை – என் கவலையை நீக்கிடு.

 

மற்றை எழுத்து ஓர் ஆறில் – மற்றைய ஆறு எழுத்துக்களினால்

பத்து உடையானைத் தடிந்து – பத்துத் தலைகளை உடைய இராவணனைக் கொன்று

 

பெண் ஆக செய்து – பெண்ணுருவாக்கி

பரிவின் நுகர்வோன் – அன்போடு கொடுத்ததை வாங்கி உண்டவனாகிய திருமாலின்

இரு தாள் – இரண்டு பாதங்களை

 

பரந்து போற்றும் – வணங்கித் துதிக்கின்ற

சித்தசனே – அழகினால் மன்மதனை நிகர்த்தவனே

தெளிய சிங்கன் – தெள்ளிய சிங்கனது

தவத்தின் தோன்றும் – தவப் பேறினால் அவதரித்த

சீதாராம – சீதாராமன் என்னும் பெயருடைய

ப்ரபல தியாகவானே – பிரசித்தமான கொடையாளியே!

 

பகழி, கடல், கன்னி ஆகிய மூன்று வார்த்தைகளில் நடு எழுத்துக்களான க, ட, ன் ஆகிய மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டால் மீது வரும் ஆறு எழுத்துக்கள் பழி, கல், கனி ஆகும்.

 

 

இவற்றில் முதலில் இருக்கும் பழியினால் பத்துத் தலை உடைய இராவணனைக் கொன்று, இரண்டாவதாகிய் கல்லை அகலிகை என்னும் பெண்ணாக உருவாக்கி, மூன்றாவதாகிய கனியை சவரி சமர்ப்பிக்க அதை ஏற்று உண்டவனாகிய இராமனின் பாதங்களை வணங்கித் துதிக்கும் சீதாராமன் என்ற பெயரைக் கொண்ட கொடையாளியே, என் துன்பத்தைப் போக்கு!

என்ன சாமர்த்தியம்?

 

 

கவிஞர் போட்ட புதிர்க் கவிதையை அவிழ்த்து அதன் பொருளைக் கண்டு அவர் கடனைத் தீர்த்தார் சீதாராம வள்ளல்.

கவிஞருக்குக் கடன் தீர்ந்தது.

நமக்கோ நல்ல பாடல் ஒன்று கிடைத்தது.

வாழ்க தமிழ். வளர்க புலவர் கூட்டம்!

***