பழகத் தெரிய வேணும், பெண்ணே (ஆணே) பார்த்து நடக்க வேணும்! (Post No.2902)

HowtoWinFriendsandInfluencePeopleCover

Compiled by London swaminathan

 

Date: 17  June 2016

 

Post No. 2902

 

Time uploaded in London :– 8-35 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

grow rich

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? உங்கள் நண்பர்களை வெல்லுவது எப்படி? ( How to win friends and Influence People) என்றெல்லாம் நூற்றுக் கணக்கான புத்தகங்களை (Self-Improvement Series) விலைக்கு வாங்குகிறோம். இதையெல்லாம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்கிருதத்தில் ரத்தினச் சுருக்கமாக நமது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர். புகுந்த வீட்டுக்குப் போகும் (புக்காத்துக்கு= புகுந்த+ அகத்துக்கு) புதுமணப் பெண்ணுக்கு உலக மஹா கவிஞன் காளிதாசன் சொன்ன அறிவுரைகளை முன்னரே ஒரு கட்டுரையில் தந்தேன். அற்புதமான அறிவுரையை, நாலைந்து ஸ்லோகங்களில் வடித்துக் கொடுத்துவிட்டான். இப்பொழுது வேறு ஒரு கவிஞனின் பாடலைக் காண்போம்:–

 

கீழ்கண்ட அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம்– யார், யாரிடம் எப்படிப் பழக வேண்டும் என்று பொட்டில் அடித்தது போலச் சொல்கிறது:–

 

தாக்ஷிண்யம் ஸ்வஜனே, தயா பரிஜனே,சாட்யம் சதா துர்ஜனே, ப்ரீதி: சாது ஜனே, நயோ ந்ருப ஜனே, வித்வத் ஜனே சார்ஜவம்,

சௌர்யம் சத்ருஜனே, க்ஷமா குருஜனே,காந்தாஜனே த்ருஷ்டதா, யேசைவம் புருஷா: கலாசு குசலாஸ்தேப்வேவ லோகஸ்திதி:

 

தாக்ஷிண்யம் ஸ்வஜனே- நமக்கு நெருக்கமானவரிடத்தில் பரிவும்

தயா பரிஜனே – சுற்றத்தாரிடம் கருணையும்

சாட்யம் சதா துர்ஜனே – கெட்டவரிடத்தில்  ஒதுங்கிப்போ கும்போக்கையும்

ப்ரீதி: சஜ் ஜனே – நல்லோரிடத்தில் அன்பையும்

நயோ ந்ருப ஜனே- ஆள்வோரிடத்தில் (அரசாங்கம்) நாசூக்கையும்/ நைச்சியத்தையும்

வித்வத் ஜனே சார்ஜவம்- அறிஞர்களிடத்தில் நேர்மையையும் ( ச+ ஆர்ஜவம்)

சௌர்யம் சத்ருஜனே – விரோதிகளிடத்தில் சூரத்தனத்தையும் (வீரத்தையும்)

க்ஷமா குருஜனே- ஆசிரியர்/குருவிடத்தில் பொறுமையையும்

காந்தாஜனே த்ருஷ்டதா- மனைவி மற்றும் அவளுடைய வட்டத்தில் பற்றையும்

யேசைவம் புருஷா: – எந்த மனிதர்கள் கடைப்பிடித்து

கலாசு குசலாஸ்தேப்வேவ – இந்தக் கலையில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்களோ

லோகஸ்திதி: – அவர்கள் கையில்தான் உலகம் இருக்கிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலாதார் (குறள் 140)

Blog_Post_Books_5

–சுபம்–

 

 

 

கண்ணு! கண்ணு! ஏ கண்ணூ!! சுவையான துணுக்குகள்! (Post No 2899)

sentamil chintamanai 1

Compiled by London swaminathan

 

Date: 16 June 2016

 

Post No. 2899

 

Time uploaded in London :– 8-06 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

செந்தமிழ் சிந்தாமணி என்ற பழைய பத்திரிக்கையில் வந்த சுவையான விஷயங்கள்:–

 

வெள்ளை காகம் விலை இரண்டரை ரூபாய்!!

 

white crow (2)

கண்ணு! கண்ணு !! ஏ, கண்ணு!!!

 

kannu kannu (2)

 

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை!

 

poy thay (2)

–subham–

 

 

உத்தமன் யார்? மத்யமன் யார்? அதமன் யார்? (Post No.2894)

Logo Three people on podium

Written by London swaminathan

 

Date: 14 June 2016

 

Post No. 2894

 

Time uploaded in London :– 16-16

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

three figures

நல்லவன் யார்?

மீண்டும் மீண்டும் இடையூறு வரினும் எடுத்த காரியத்தை முடிப்பவனே (உத்தமன்) சிறந்தவன்.

சிலர், ஒரு வேலையைத் துவக்கியபின்னர், இடையூறு வந்தால் அதை விட்டு விடுவார்கள். இவர்கள் (மத்யமன்) இடைப்பட்ட நிலையிலுள்ளவர்கள்.

இடையூறு வரும் என்று பயந்துகொண்டு வேலையையே துவங்கமாட்டார்கள் கீழ்நிலையிலுள்ளவர்கள் (அதமன்).

 

ப்ராரப்யதே ந கலு விக்னபயேன நீசை:

ப்ராரப்யதே விக்னவிஹதா விரமந்தி மத்யமா:

விக்னைர் முஹுர்முஹுர் அபி ப்ரதிஹன்யமானா:

ப்ராரப்தம் உத்தமகுணா ந பரித்யஜந்தி

 

கருமமே கண்ணாயினார்

உத்தமர் யார் என்று நீதிவெண்பா கூறுகிறது:-

ஒரு வேலையைச் செய்யும்போது, உடலுக்கு வரும் கஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார். பசியைப்பற்றி கவலைப்படமாட்டார். வேலை முடியும் வரை தூங்க மாட்டார். யார் இடையூறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தார். காலம் வீணாகுமோ என்று கவலைப்படமாட்டார். யார் இகழ்வதையும் பொருட்படுத்தமாட்டார்.

 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்- செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங்கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

Snakes---Banded-Egyptian-Cobra

விஷப் பாம்பும், தீயோரும்

தாழ்ந்தோருக்கு செய்யும் (உபகாரம்) உதவியால் கெடுதலே (அபகாரம்) வரும். பாம்புக்கு பால் வார்த்தால் விஷம்தான் அதிகரிக்கும்.

உபகாரேண நீசானாம் அபஹாரோ ஹி ஜாயதே

பய: பானம் புஜங்கானாம் கேவலம் விஷவர்தனம்

–சுபம்–

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல! (Post No.2893)

blindfolded1

Article written by S.NAGARAJAN

 

Date: 14 June 2016

 

Post No. 2893

 

Time uploaded in London :–  6-56 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! – 4

 

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல!

 

ச.நாகராஜன்

 

யோக வாசிஷ்டம் என்னும் பெரிய நூலை படிக்கலாம் என்று அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க ஆரம்பிப்பது  கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கிறது என்று அன்பர்கள் சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்கத்தான் இருக்கிறது.

 

 

விஷயம் சூக்ஷ்மமான விஷயம். ஆர்வம் உள்ளவர்களுக்கே 32000 சுலோகங்களைப் படிப்பது என்பது எளிதான காரியமல்ல. அதுவும் ஆங்கிலத்தில் படிக்கும் போது முழு சாரத்தையும் கிரகிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுவது இயல்பே.

இதனால் அன்பர்கள் முதலில் “Quintessence of Yogavasishtha” என்ற புத்தகத்தை முதலில் படிக்கலாம். ருசி வந்து விடும்,

 

 

பின்னர் சம்ஸ்கிருதத்தின் அழகைக் காணவும் அதில் ஆழ்ந்த அர்த்தமுள்ள பல்வேறு விஷயங்களைப் படிக்கவும் ஒரு நல்ல நூல் உள்ளது.  தேர்ந்தெடுத்த சுமார் 2500 சுலோகங்கள் சம்ஸ்கிருதத்திலும் அதன் ஆங்கில மொழியாக்கமும் உள்ள புத்தகம் அது        


B.L. Atreya
தேர்ந்தெடுத்த ஸ்லோகங்களை Samvid  என்பவர்அழகுற ஆங்கிலத்தில்  மொழியாக்கம் செய்துள்ளார். இந்த நூலின் பெயர் ‘The Vision and the way of Vasistha’.  583 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் யோக வாசிஷ்டம் எதைச் சொல்ல வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு பிரமிக்கலாம் இதன் இன்றைய விலை ரூ 400/

 

 

அழகிய எளிய சம்ஸ்கிருதம் இந்த நூலில் அமைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்ட இரு ஸ்லோகங்களை இங்கு பார்க்கலாம். நூலின் பெருமையைக் கூறும் ஸ்லோகங்கள் இவை.

 

 

க்ரந்தேனானேன லோகோயமஸ்மாத் ஸம்சார சங்கடாத்

சமுத்தரிஷ்யதி க்ஷிப்ரம் போதேனேவாஷு ஸாகராத்

 

This mankind will cross over this peril of worldly existence speedily by this work, as (one crossed over) the ocean quickly by a boat.

.

யதிஹாஸ்தி ததன்யத்ர யத்ரேஹாஸ்தி ந தத் க்வசித்

இமம் சமஸ்தவிஞ்ஞான சாஸ்த்ர கோஷம் விதுர்புதா:

 

What is here (in this work), that is elsewhere.  What is not here that is nowhere. The wise consider this as the repository of all scriptures of Higher Knowldege.  (Translation by Samvid)

 

 

 

இந்த நூலைப் படித்த பின்னர் யோகவாசிஷ்டம் முழுவதையும் ப்டிப்பதில் கஷ்டம் இருக்காது.

 

இவ்வளவு பீடிகைக்குப் பின்னரும் இந்த அதிச்ய நூலைப் படிக்காமல் இருந்தால் அது பாக்கியக் குறைவே.

படிப்பவர்களுக்கு மற்றவர்களுக்குப் புரியாத பிரபஞ்ச இரகசியங்கள் புரியும்.

 

********

வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்! (Post No.2888)

Profit, loss and risk crossword on white background

Profit, loss and risk crossword on white background

Article written by S.NAGARAJAN

 

Date: 12 June 2016

 

Post No. 2888

 

Time uploaded in London :–  22-40

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்!

ச.நாகராஜன்

நாடு முழுவதும் சுற்றி வரும் கவிஞர் உலக வாழ்க்கையின் இயல்பைக் கண்டு வியக்கிறார்.

மனிதரில் தான் எத்தனை விதம்! வாழ்க்கையை தனக்குத் தானே எப்படியெல்லாம் அவர்கள் நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! வியப்பு மேலிடுகிறது அவருக்கு!

சிலர் அறியாமையால் வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்!

சிலரோ தங்களின் அலட்சியப் போக்கினால் நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! சிலரோ அதிகம் படித்து விட்ட கர்வத்தினால் வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! இன்னும் சிலரோ ஏற்கனவே வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொண்டவர்களுடன் சேர்ந்து அவர்களின் செல்வாக்கினால் தங்கள் வாழ்க்கையை  நஷ்டப்படுத்திக் கொ ள்கிறார்கள்!

என்னே உலகின் போக்கு!

Some are lost due to ignorance; some are due to negligence;

Some due to arrogance of wisdom; some due to influence of those who are lost already!

கேசிதஞானதோ நஷ்டா: கேசித் நஷ்டா: ப்ரமாதத:  I

கேசித் ஞானாவலேபேன  கேசித் நஷ்டைஸ்து நாஷிதா: II

சாணக்ய நீதி உள்ளிட்ட பல நூல்களில் இந்த அருமையான செய்யுள் இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிரறது.

அறியாமையைப் போக்கிக் கொள்.

எதிலும் அலட்சியமாக இருக்காதே.

படித்ததினால் அகம்பாவம் கொள்ளாதே.

ஏற்கனவே வாழ்க்கையை இழந்தவர்களுடன் சேராதே. நல்லவர்களுடன் பழகு!

வாழ வேண்டிய விதத்தை ஒரே ஸ்லோகத்தில் கவிஞர் அழகாகச் சொல்லி விடுகிறார் இல்லையா!

*****

கொம்புள்ள மாட்டுக்கு 5 முழம் போதும், தீயோருக்கு…………… (Post No.2881)

beauty bull

Article written by London swaminathan

 

Date: 9 June 2016

 

Post No. 2881

 

Time uploaded in London :– 8-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

நீதி வெண்பா என்ற அருமையான நூலில் 100 பாடல்கள் உள்ளன.விவேக சிந்தாமணி என்ற நூலைப் போலவே இதை எழுதிய ஆசிரியர் பெயரும் கிடைக்கவில்லை. அதில் ஒரு அருமையான பாட்டு:-

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
 
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா)

 

கொம்பு இருக்கும் மாடு முதலிய மிருகங்களுக்கு அருகில் போகாதீர்கள். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைக்கு பத்து முழ தூரத்தில் நின்றால் பாதுகாப்பாக இருப்பீர்கள். யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். திடீரென்று மதம் பிடித்து ஓடிவந்தால் அதை உங்களால் முந்தமுடியாது. ஆகையால் 1000 முழமாவது தள்ளி இருங்கள். ஆனால் தீயோரைக் கண்டால் – துஷ்டர்களைக் கண்டாலோ, கண் காணாத தூரத்துக்கு ஓடிப் போய்விடுங்கள். அப்படிப்பட்ட ஆள் வருகிறான் என்றால் அந்தப் பக்கமே போகாதீர்கள். அவர்களை போலீசாரும், நீதித் துறையும் கவனித்துக்கொள்ளும். இது நல்லதொரு புத்திமதி.

India Rampaging Elephant

இதே விஷயம் சம்ஸ்கிருதத்திலும் அழகாக உள்ளது:-

சகடம் பஞ்சஹஸ்தேஷு தசஹஸ்தேஷு வாஜினம்

கஜம் ஹஸ்த சஹஸ்ரேண துஷ்டம் தூரேண வர்ஜயேத்

வண்டிகள் (சகடம்) நின்றால் அதற்கு அருகில் நிற்காதீர்கள். அது திடீரென நகரக்கூடும். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைகள் (வாஜினம்) இருந்தால் முனால் பாய்ந்து கடிக்கவும் செய்யும்; பின் காலால் உதையவும் செய்யும்; ஆகையால் பத்து முழம் தள்ளி நில்லுங்கள். யானைக்கு (கஜம்) ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். துஷ்டர்களைக் கண்டாலோ வெகு தொலைவில் போய் விடுங்கள்.

 

அவ்வையாரோ இதற்கும் ஒரு படி மேலே போகிறார்; காந்திஜியின் குரங்கு பொம்மை இதிலிருந்து தோன்றியதே என்று முன்னரே ஒரு கட்டுரையில் சொன்னேன்:–

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம் – தீயார்

குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ

டிணங்கி யிருப்பதுவுந் தீதேவாக்குண்டாம், அவ்வையார்.

 

கெட்டவர்களைப் பார்ப்பது தீது; அவர் சொல் கேட்பதும் தீது; அவர்களுடன் சேருவது தீது (இதெல்லாம் முன்னர் சொன்ன விஷயங்களே. அவரைப் பற்றிப் பேசுவதும் தீதே. அதாவது பேஸ் புக்கிலும், ஈ மெயிலிலும், திண்ணைப் பேச்சிலும், நண்பர்களின் அரட்டைக் கச்சேரியிலும் அவர்களைப் பற்றிப் பேசாதே. ஏன்?

1.நேரம் வீண், 2.எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. யார் உங்களுக்கு குழி பறிப்பார்கள் என்பதும் தெரியாது என்று எச்சரிக்கிறார் அவ்வையார்.

3 snakes

இறுதியாக மேலும் ஒரு சம்ஸ்கிருதப் பாடல்:–

துர்ஜன: பரிஹர்தவ்யோ வித்யா அலங்க்ருதோ அபி சன்

மணினா பூஷித ஸர்ப: கிம் அசௌ ந பயங்கர:

படித்தவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தால், அவர்களை விட்டுவிடவேண்டும். நாகரத்தின மணி வைத்திருந்தாலும் பாம்பு என்பது பயங்கரமானது இல்லையா!

படித்தும் கெட்டவர்கள் = மாணிக்கம் தரித்த விஷப் பாம்பு

அழகான உவமை!

 

வாழ்க தமிழ்; வளர்க சம்ஸ்கிருதம்.

–சுபம்–

 

 

வெற்றிக்கு வழி! (Post No.2871)

Success-Motivate

Article written by S.NAGARAJAN

 

Date: 6 June 2016

 

Post No. 2871

 

Time uploaded in London :–  4-50 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

 

சமஸ்கிருதச் செல்வம்

 

வெற்றிக்கு வழி!

 

ச.நாகராஜன்BusinessFunnel

நான் யார்?

 

இப்போதுள்ள கால தேச (வர்த்தமானம்) என்ன?  நல்லவை அல்லது கெட்டவை எவை உள்ளன?

எனது எதிரிகள் யார்? எனது நண்பர்கள் யார்?

 

என்னிடம் உள்ள வலிமை எவ்வளவு?

 

பயனுள்ள திட்டம் நிறைவேற்றுவதற்கு உள்ள வழிகள் எவை?

எனக்கு காலம் எப்படி இருக்கிறது? (அதிர்ஷ்ட காலம் தானா?)

எனக்கு வளம் சேரும் தொடர்ச்சி எப்படி உள்ளது?

எனது சொற்கள் நிராகரிக்கப்பட்டால் எனது பதில் என்னவாக இருக்க வேண்டும்?

 

வெற்றியை விரும்பும் நல்ல மனிதர்கள் வெற்றி பெறும் வழியை உறுதியாக இப்படிச் சிந்திப்பார்களேயானால் அவர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள்!

 

 

Who am I?

What are the present time and place and what good or evil qualities in evidence?

Who are my enemies, and who are my allies?

What power have I?

 

What means of carrying out a useful plan?

What store of good fortune have I?

What continuance of prosperity?

And what should be my reply if my words are rejected?

Good men, who fix their minds thus steadfastly on success, are not disappointed.

( Translation by F.Edgerton)

 

ஒரு மானேஜ்மெண்ட் (மேலாண்மை) கோர்ஸில் கொடுக்கப்படும் அறிவுரை போல அல்லவா இருக்கிறது என்று நினைத்தால் அது சரியல்ல.

 

இது நமது பழைய கால பஞ்சதந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம்.

வெற்றி பெற எப்படி சிந்திக்க வேண்டும், எதை எதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கும் அறிவுரை.

 

சம்ஸ்கிருத கவிதையைப் பார்ப்போம்:

 

கோஹம் கோ தேச காலோ சம விஷம குணா: கே த்விஷ: கே சஹாயா:

 

கா சக்தி: கோப்யுபாயோ ஹித காரண வித்யௌ கா ச மே தைவ சம்பத் I

 

சம்பத்தே: கோ அனுபந்த:  ப்ரதிஹதவசனஸ்யோத்தரம் கிம் ச  மே ஸ்யாத்

 

இத்யேவம் கார்யசித்தாவவஹிதமனஸோ நாவசீதந்தி சந்த  II:

வெற்றிக்கான அருமையான உத்திகளை வகுத்துத் தருவது பஞ்சதந்திரம். டேல் கார்னீகியின் சுய முன்னேற்றக் கருத்துக்கள் எல்லாம் பழைய ‘கள்’; ஆனால் புதிய மொந்தையில் தரப்பட்டது.

 

உலகமும் அதை ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்டது.

 

ஆனால் ஹிந்து சிந்தனைகள் காலத்தால் முற்பட்டவை; காலத்தை வென்றவை. என்றும் பொருந்துபவை!

******************

 

குருவும் கஞ்சனும் : ஒரு குட்டிக்கதை (Post No.2865)

dollars

Translated by London swaminathan

 

Date: 3 June 2016

 

Post No. 2865

 

Time uploaded in London :–  5-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

1830-Jewish-beggar

ஒரு ஊரில் ஒரு பரம கஞ்சன் இருந்தான். எச்சில் கையால் காகத்தை விரட்ட மாட்டான். தேநீரில் ஈ விழுந்தால்கூட அதைப் பிழிந்து விட்டு வெளியே எறிவான். ஆனால் நல்ல பணக்காரன். அப்பேற்பட்ட கஞ்சன் குருவிடம் வந்தான். இவனுக்கு ‘பசுமரத்தில் ஆணி பதிவது போல’ புத்தி புகட்ட வேண்டும் என்று அவர் நினைத்தார். இருந்த போதிலும் நேரடியாகச் சொல்லாமல் ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ கற்பிக்க எண்ணினார்.

 

அன்பரே! இங்கே வாருங்கள் என்று ஒரு ஜன்னலுக்கு அருகில் அழைத்துச் சென்றார். என்ன தெரிகிறது? என்று கேட்டார்.

கஞ்சன் சொன்னான்: ஜன்னல் கண்ணாடி.

குரு: அது சரி. அது வழியாக என்ன தெரிகிறது.

கஞ்சன்: மக்கள்; தெருவில் நடமாடும் மக்கள்.

பின்னர், அந்தக் கஞ்சனை குரு, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி அருகே அழைத்துச் சென்றார்.

இது என்ன?

கஞ்சன்:–முகம் பார்க்கும் கண்ணாடி.

இதில் என்ன தெரிகிறது?

கஞ்சன்:–நான் என்னைப் பார்க்கிறேன்.

ஜன்னலிலும் கண்ணாடிதான் இருந்தது. இங்கும் கண்ணாடிதான் இருக்கிறது. ஏன் இங்கே உங்கள் முகம் தெரிகிறது; அங்கே மக்கள் தெரிந்தது?

கஞ்சன்:– முகம் பார்க்கும் கண்ணாடியில் வெள்ளி (ரசம்) பூசியதால் என் முகம் தெரிந்தது. ஜன்னல் கண்ணாடி தூய பளிங்கு போன்றது.ஆகையால் மக்கள் தெரிந்தனர்.

உடனே குரு சொன்னார்: பார்த்தீர்களா. தூய கண்ணாடி இருந்தால் மக்கள் தெரிகின்றனர் (பொது நலம்). வெள்ளி இருந்தால் உங்களைத்தான் பார்க்க முடிந்தது (சுயநலம்). உங்களிடம் கொஞ்சம் வெள்ளி (பணம்) சேர்ந்துவிட்டால் மக்கள் மறைந்து உங்களை மட்டுமே பார்க்கிறீர்கள் என்றார்.

கஞ்சனுக்கும் கதையின் நீதி புரிந்தது!

 

Xxx

edison

ஐயய்யோ! அவ்வளவு பணம் வேண்டாம்!

தாமஸ் ஆல்வா எடிசன் பல கண்டுபிடிப்புகளைச் செய்தவர். ஒரு கண்டுபிடிப்பின் உரிமையைப் பெற வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி, அவருக்கு ஒரு லட்சம் டாலர் முன் தொகை கொடுக்க முன்வந்தது.

ஐயய்யோ! அவ்வளவு பணம் வேண்டாம்! உங்களிடமே அந்தத்தொகை இருக்கட்டும். பாதுகாப்பாகவாவது இருக்கும் என்று சொன்னார். அவர்கள் மிகவும் வலியுறுத்தவே, சரி, வருடத்துக்கு ஆறாயிரம் டாலர் வீதம் 17 ஆண்டுகளுக்குத் தாருங்கள் என்றார்.

சின்னச் சின்ன ஆசை!!

Xxxx

பணக்காரர்களுக்கு அதிக மூளையா?

ஒரு மனிதனுக்கு நிறைய பணம் சேர்ந்துவிட்டால் அவனுக்கு மூளை ஜாஸ்தி/ அதிகம் என்று மக்கள் நினைக்கின்றனர். நான் ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் என்று சிகாகோ நகர கோடீஸ்வரரான ஜூலியஸ் ரோசன் பால்ட் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்.

 

ஒருவர் 14 என்ற எண் மூலம் மில்லியன் (பத்து லட்சம்) டாலர் வென்றார். எல்லோரும் அவரிடம் போய், பல கோடி எண்கள் இருக்கையில், எப்படி 14 என்று சொன்னீர்கள்? என்றார்.

ஓ, அதுவா? ஒரு நாள் ஒரு கனவு கண்டேன். அதில் ஒரு பெரிய 9 எண் தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து எண் 6 தோன்றியது. இரண்டையும் கூட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான்!!!! என்றார்.

Xxx

lincoln dollar

ஜனாதிபதி சொன்ன குட்டிக் கதை!

ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சில அரசாங்க அதிகாரிகள் அவரிடம் சென்றனர். நீங்கள் சில துறைகளுக்கு மட்டும் நிதி அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். எங்களுக்கும் பணம், பட்ஜெட் அதிகாரங்களைக் கொடுங்களேன் என்றனர்.

உடனே லிங்கன் ஒரு கதை சொன்னார்:

“இல்லினாய்ஸ் என்னுமிடத்தில் ஒருவர் ஒரு வீடு வைத்திருந்தார். நீங்கள் அவரைப் போலவே இருக்கிறீர்கள். அவருடைய வீடு தீ விபத்தில் எரிந்து சாம்பலாயிற்று. அந்தக் காலத்தில் ஊரில் யாருக்காவது இப்படி நஷ்டம் வந்தால், ஊர் மக்கள் எல்லோரும் பணம் கொஞ்சம் போட்டு, அவருக்கு உதவி செய்யும் நல்ல வழக்கம் இருந்தது. இந்த ஆளுடைய அதிர்ஷ்டம்! எல்லோரும் கொடுத்த பணம் அதிகமாக இருந்ததால் அவருக்கு முன்னைவிட சொகுசான வாழ்க்கை கிடைத்தது.

கொஞ்ச நாள் கழித்து அவருக்கு உதவி செய்யும் நோககத்துடன் ஒருவர் தானியம் கொண்டு வந்து கொடுத்தார்.

அவர் சொன்னார்: “சீ, சீ! நான் தானியம் எல்லாம் பெற்றுக் கொள்ளும் ஆசாமி அல்ல. பணமாகக் கொண்டு வாருங்கள்!”

(பணத்தை ஒரு முறை கொடுத்துப் பழக்கிவிட்டால், பிறகு பண போதை தலைக்கேறிவிடும்! பணம் ஒரு பேய்!!)

xxxசுபம்xxx

 

எனது மூன்றாவது மனைவி!(Post No.2858)

are-three-wives-better1

Article written by S.NAGARAJAN

 

Date: 1 June 2016

 

Post No. 2858

 

Time uploaded in London :–  6-17 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

எனது மூன்றாவது மனைவி!

ச.நாகராஜன்

 

எனக்கு மூன்று மனைவிகள். மற்ற இரண்டு மனைவிகளும் என்னை விட்டாலும் விடுவார்கள், மூன்றாவது மனைவி என்னை ஒருபோதும் விட்டுப் பிரியவே மாட்டாள்!

கவிஞரின் இந்தச் சொற்களைக் கேட்டதும் மனம் திடுக்கிடுகிறதல்லவா?

 

 

ஒரு மனைவியை வைத்துக் கொண்டே சம்சார சாகரத்தில் படும் பாடு போதாதா, மூன்று மனைவிகளா. அடடா..

மனம் பரிதாபப்பட அந்த மூன்று மனைவிகள் யார் என்ற கேள்வியும் உடன் எழுகிறது.

 

 

கவிஞர் உடனே பதிலைச் சொல்கிறார். அதைக்  கேட்டு நமக்குச் சிரிப்பு தான் வருகிறது.

ஏனெனில் நம் ஒவ்வொருவருக்குமே இந்த மூன்று மனைவிகள் உண்டு.

 

அதிலும் இந்த மூன்றாவது மனைவி என்றுமே பிரியாதவள்.

99.9 சதவிகிதம் பேர்களை விட்டு அவள் பிரியவே மாட்டாள் என்பது உண்மை!

சரி விஷயத்திற்கு வருவோம்!

 

 

“பசி

தாகம்

ஆசை

ஆகிய இவர்களே எனது மூன்று மனைவிகள்!

நான் உயிரோடு இருக்கும் வரை இவர்கள்  யாரிடமும் போக மாட்டார்கள்.

 

இந்த மூன்று பேரில் வேறு யார் என்னை விட்டுப் போனாலும் எனது மூன்றாவது மனைவி என்னை விட்டு ஒருபொழுதும் நீங்கவே மாட்டாள்!”

 

 

பாரவியின் அற்புதக் கவிதை இது. கிராதார்ஜுனீயம் என்ற காவியத்தில் வருவது இது!

 

முதலில் எஸ்.பி. நாயரின் ஆங்கில மொழியாக்கத்தைப் படித்து விட்டுப் பின்னர் சம்ஸ்கிருத கவிதையைப் பார்ப்போம்.

 

Hunger, thirst and desire are my three wives who never go to anybody else, as long as I live; among them desire is the most faithful one that never quits me ( S.B.Nair)

 

ஷுத்தூடாஷா: குடும்பின்யோ மயி ஜீவதி நான்யகா: I

தாஸாமாஷா மஹாசாத்வி கதாசினி மாம் ந முஞ்சதி  II

 

சார்தூலவிக்ரீதிதா சந்தத்தில் அமைந்துள்ள இதை விரும்பாவதர்களே இருக்க முடியாது.

 

 

கவிதையைப் படித்தவர்கள் அனைவரும் பாரவியின் கட்சியில் சேர்ந்து விடுவார்களோ!

 

–Subham–

 

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே (Post No. 2844)

தருமி1

ஜூன் 2016 காலண்டர் (துர்முகி வைகாசி/ஆனி)

 

Compiled by london swaminathan

Date: 27 May ,2016

 

Post No. 2844

 

Time uploaded in London :–  10-06 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

“இனியவை நாற்பது” நூலிலிருந்து  – முக்கிய 30 இனிமையான பொன்மொழிகள்

 

முகூர்த்த நாட்கள்:- 8, 9, 16, 23, 26

அமாவாசை:- 5

பௌர்ணமி:- 20

ஏகாதசி:- 1,16

 

 

சிவ சிவ

 

ஜூன் 1 புதன் கிழமை

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே (முக்கண் உடைய சிவபெருமானின் பாதகமலங்களை இடையறாது சிந்தித்தல் இனிமையானது)

 

ஜூன் 2 வியாழக் கிழமை

பிச்சைபுக்கு ஆயினும் கற்றல் மிக இனிதே (வங்கியில் கடன் வாங்கியாவது படி)

 

ஜூன் 3 வெள்ளிக் கிழமை

உடையான் வழக்கு இனிது ( செல்வம் உடையவர்கள், அதை வறியவர்க்கு அளித்தல் இனிது)

 

ஜூன் 4 சனிக் கிழமை

ஏர் உடையான் வேளாண்மை தான் இனிது

 

ஜூன் 5 ஞாயிற்றுக் கிழமை.

ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே (வெஜிட்டேரியன்ஸ் – வாழ்க)

 

 hare krishna food 2

ஜூன் 6 திங்கட் கிழமை

கோல்கோடி மாராயம் செய்யாமை முன் இனிது (நடுவு நிலைமை தவறி பாராட்டி பரிசு வழங்காதிருத்தல் இனிது)

 

ஜூன் 7 செவ்வாய்க் கிழமை

பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே (சான்றோரின் நல்ல மொழிகளைக் கேட்பது இனிது)

 

ஜூன் 8 புதன் கிழமை

அந்தணர் ஒத்து உடைமை ஆற்ற மிக இனிதே (அந்தணர்கள், வேதங்களை மறவாது ஓதுதல் இனிது)

ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே (வேதம் ஓதும் பார்ப்பனர்க்கு பசுவையும் தங்கக் காசுகளையும் தானம் செய்; உன் குலம் செழிக்கும்; ஊர் தழைக்கும்)

 

ஜூன் 9 வியாழக் கிழமை

ஊரும் கலிமா உரன் உடைமை முன் இனிதே (நீ செல்லும் குதிரை வலிமை உள்ளதாக இருக்க வேண்டும்; அதாவது காரில் செல்லும் முன் அதில் பெட்ரோல், டயரில் காற்று முதலியவற்றை சரி பார்)

 

ஜூன் 10 வெள்ளிக் கிழமை

அங்கண் விசும்பில் அகல்நிலாக்  காண்பு இனிதே (ஆயிரம் பிறை காண்; அதாவது 100 ஆண்டு வாழ்)

 நிலவு, சந்திரன், மூன்

ஜூன் 11 சனிக் கிழமை

கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே ( கடன் வாங்கிச் சாப்பிடாமல் வாழ்வது இனிது)

 

ஜூன் 12 ஞாயிற்றுக் கிழமை.

குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே ( பழைய உரைகாரர் எழுதியதை விட்டுவிட்டு, நூல்களுக்கு குதர்க்கமான பொருள் காணாமை இனிது)

 

ஜூன் 13 திங்கட் கிழமை

கிளைஞர் மாட்டு அச்சு இனிமை கேட்டல் இனிதே ( சுற்றத்தார் சுகமாக இருக்கிறார்கள் என்ற செய்தி இனிமையானது)

 

ஜூன் 14 செவ்வாய்க் கிழமை

தானே மடிந்திராத் தாளாண்மை முன் இனிதே (தன் கையே தனக்குதவி; சோம்பேறித் தனமில்லாமல், மற்றவர்களை ஏவாமல், அவரவர் காரியத்தை அவரவர் செய்தல் இனிது)

 

ஜூன் 15 புதன் கிழமை

குழவி தளர் நடை காண்டல் இனிதே;அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே (குழவி=குழந்தை)

குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே (குழந்தைகள் நோயில்லாமல் வாழ வகை செய்ய வேண்டும்; அதுவே இனிது)

குழந்தை சுட்டி

ஜூன் 16 வியாழக் கிழமை

பிறன் மனை பின் நோக்காப் பீடு இனிது (அயலான் மனைவியை காம எண்ணத்துடன் திரும்பிக்கூட பார்க்காமை இனிது)

 

ஜூன் 17 வெள்ளிக் கிழமை

கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே ( நன்கு படித்தவர் அறையில் அமர்ந்து நல்ல விஷயங்களை விவாதி; அப்பொழுது நீ படித்த விஷயங்களைச் சொல்லி, மகிழவைப்பது இனிது)

 

ஜூன் 18 சனிக் கிழமை

நட்டார்க்கு நல்ல செயல் இனிது (நண்பர்களுக்கு நல்ல உதவி செய்)

 

ஜூன் 19 ஞாயிற்றுக் கிழமை.

தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே ( தந்திர நூல்களைக் கற்ற தவ முனிவர்கள் பெருமையைப் பேசுவது, காண்பது இனிது)

 

ஜூன் 20 திங்கட் கிழமை

சலவரைச் சாரா விடுதல் இனிதே (வஞ்சகருடன் சேராமல் இருப்பது இனிது)

 

தருமி2

ஜூன் 21 செவ்வாய்க் கிழமை

புலவர்தம் வாய்மொழி  போற்றல் இனிதே (கற்றறிந்தோரின் சொற்களைக் கேட்டு அதன்படி நடத்தல் இனிது)

 

ஜூன் 22 புதன் கிழமை

பிறன் கைப்பொருள் வௌவான் வாழ்தல் இனிதே (மற்றவர்களுடைய பொருளைத் திருடாமல் வாழ்வது இனிது)

 

ஜூன் 23 வியாழக் கிழமை

ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே ( வேண்டியவர்க்கு சலுகை காட்டாத நடு நிலை இனிது)

 

ஜூன் 24 வெள்ளிக் கிழமை

 

காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிதே (மரத்தை வளர்; சோலைகளை உருவாக்கு; குளங்களை உருவாக்கு; கோவில்களில் இவையிருந்தால் அதைப் பாதுகார்)

 சுசீந்திரம் கோவில்குளம்

 

ஜூன் 25 சனிக் கிழமை

எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே (இரவு நேரத்தில் துணையில்லாமல் செல்லாதே)

 

ஜூன் 26 ஞாயிற்றுக் கிழமை.

நச்சித்தன் சென்றார் நசைகொல்லா மாண்பு இனிதே ( உன்னிடம் ஒரு பொருளை நாடி வந்தவரின் விருப்பத்தை நிறைவேற்றல் இனிது)

 

ஜூன் 27 திங்கட் கிழமை

ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே ( ஒரு காரியத்தைச் செய்ய இயலாதவனிடம் போய், இதைச் செய், இதைச் செய் என்று நச்சரித்து, உன் சக்தியை எல்லாம் வீணடிக்காமல் இருப்பது இனிது)

 

ஜூன் 28 செவ்வாய்க் கிழமை

உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே (உயர்ந்த குறிக்கோளை முன் வை; ஊக்கத்துடன் அதை அடை; உத்திஷ்ட, ஜாக்ரத, ப்ராப்யவான் நிபோதத)

 

ஜூன் 29 புதன் கிழமை

மன்றம் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே ( பொது மன்றத்தில் ஏறிப் பொய் சாட்சி சொல்லாதே; அ ந்தப் பாவம் உன்னை சும்மா விடாது)

 

ஜூன் 30 வியாழக் கிழமை

பத்துக் கொடுத்தும் பதி இருந்து வாழ்வது இனிதே ( பத்துப் பொருட்களைக் கொடுத்தாவது, சொந்த ஊரில் சுற்றத்தாருடன் வாழ்வதே இனிது).

 

school village

-சுபம்-