அயோக்கியன் யார்? (Post No.5204)

Written by London swaminathan

 

Date: 16 JULY 2018

 

Time uploaded in London – 8-41 am  (British Summer Time)

 

Post No. 5224

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அமெரிக்காவில் இரண்டு செனட்டர்களுக்கு (SENATE MEMBERS) இடையே கடும் விரோதம்; ஒருவர் பெயர் ஹென்றி க்ளே; மற்றொருவர் பெயர் ஜான் ராண்டால்ப் (HENRY CLAY AND JOHN RANDOLPH).

 

இருவரும் எலியும் பூனையும் போல; கீரியும் பாம்பும் போல! ஒருவரை ஒருவர் குதறி, கடித்துத் தின்ன தயாராக இருப்பர்; எங்கு சந்தித்தாலும் பேசுவதில்லை; முகத்தைத் திருப்பிக்கொள்வர்.

ஒரு நாள் ஓரிடத்தில் சாலைகளைச் செப்பனிடும் பணிகள் நடந்தன. ஒத்தையடிப் பாதை. ஒருவர்தான் சகதி படாமல் நடக்க முடியும்.

 

கடவுளின் சித்தம்; அன்று இருவரும் எதிர் எதிர் திசையில் வர நேரிட்டது. ராண்டால்ப் நினைத்தார்–அருமையான வாய்ப்பு, நழுவவிடக்கூடாது என்று கொக்கரித்தார்.

“நான் அயோக்கியர்களுக்கு வழிவிடுவத்தில்லை!” என்றார்

 

க்ளே மஹா புத்திசாலி! அப்படியா!

“நான் (அயோக்கியர்களுக்கு) வழி விடுவதுண்டு” என்று சொல்லி சகதியில் இறங்கி நின்றார்.

 

ராண்டால்ப் பேசவா முடியும்? திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான்!

XXXX

 

இசை ஞானி ப்ராஹ்ம்ஸ் செய்த குசும்பு!

 

ஜெர்மனியின் மாபெரும் இசை மேதைகளில் ஒருவர் ஜொஹன்னஸ் பிராம்ஸ் (1833-1897). இவரையும் பாக் (JOHAN BACH) என்பவரையும் பீதோவனையும் (BEETHOVEN) சேர்த்து மும்மூர்த்திகள் என்று அழைப்பர்; மூன்று பெயர்களிலும் முதல் ஆங்கில எழுத்து பி B என்பதால் மூன்று பெரிய பி (THREE BIG ‘B’s ) என்று சங்கீத உலகில் பிரஸித்தமானவர்கள்.

 

ஒரு நாள் ப்ராஹ்ம்ஸ் குசும்பு எல்லை மீறிப்போனது; அவர், பீதோவன் விஷயத்தில் மிகப்பெரிய அறிஞரான குஸ்டாவ் நாட்டிபாமுடன் (GUSTAV NOTTEBHOM) நடந்து சென்றார்; குஸ்டாவோ மஹா ஏழை; ரோட்டில் வண்டி தள்ளூவோனிடம் தள்ளிப்போன, ஆறிப்போன ரொட்டித் துண்டுகளை சீஸ் CHEESE SANDWICH உடன் வாங்கிச் சாப்பிடுவார்.

 

ஒரு நாள் வண்டிக்காரனை ப்ராஹ்ம்ஸ் அணுகி ‘இந்தா, நான் கொடுக்கும் பேப்பரில் இந்த ரொட்டித் துண்டைப் பொட்டலம் கட்டி அந்த குஸ்டாவிடம் விற்க வேண்டும்’ என்றார். பாவம் குஸ்டாவ்; வழக்கம்போல ரொட்டித் துண்டை வாங்கிப் பிரித்தார்: ஒரே வியப்பு; முகம் எல்லாம் சஹஸ்ர கோடி சூர்யப் பிரகாசம்! ஏனெனில் அது பீதோவனின் பாடல்; அவர் கையெழுத்தில்! யாருக்கும் தெரியாமல் ரொட்டித் துண்டை பெரும் பசியுள்ளவன் போல அவசரம் அவரசமாகக் கடித்து குதறிவிட்டு பிரம்மானந்தத்தில் திளைத்தார்.

பெரிய புதையலைக் கண்டுபிடித்தவன் சும்மா இருக்க முடியுமா? மெதுவாக ஸப்ஜெக்டுக்கு வந்தார்; ‘எனக்கு ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்து இருக்கிறது’. பீதோவன் எழுதிய பாடல் கிடைத்து இருக்கிறது! என்று சொல்லி சட்டைப் பைக்குள் இருந்த சீஸ் CHEESE கறை படிந்த காகிதத்தைப் பிரித்தார். அது ப்ராஹ்ம்ஸ், பீதோவன் போல எழுதிய பாடல்! அவர் பலர் முன்னிலையில் குட்டைப் போட்டு உடைத்தார். பாவம் குஸ்டாவ்!

 

பெரியவர்களுக்கும் குசும்பு உண்டு! நெருங்கிய நண்பன் இளிச்சவாயனாக இருந்தால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்!

 

பழமொழி- இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்.

 

XXX-சுபம்-XXXX

மந்திரிக்கழகு? தந்திரிக்கழகு? 2 கதைகள் (Post No.5180)

Compiled by London swaminathan

 

Date: 4 JULY 2018

 

Time uploaded in London –   7-45 am (British Summer Time)

 

Post No. 5180

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்

தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை

வெற்றி வேற்கை/ நறுந்தொகை (அதிவீரராம பாண்டியன்)

 

மந்திரிக்கு அழகு என்ன?

இனி நடக்கப்போவதை அறிந்து மன்னனுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அறிகொன்று அறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன் – குறள் 638

பொருள்-

அறிந்து கூறுவோர் இல்லாமல் மன்னன் தானே அறியும் ஆற்றல் அற்றவன்; அவன் மதிக்காவிட்டாலும் அமைச்சனின் கடமை– நன்மை தருவனவற்றை எடுத்துரைத்தலாம்.

 

மன்னன் மஹாபலி மிகவும் தயாள குணம் உடையவன். ஆயினும் அரக்கர் குலத்தவன். அவனுடைய ஆற்றல் பெருகினால் ஆபத்து விளையும் என்று கருதி, திருமால் குள்ளன் வடிவத்தில்– வாமனன் வடிவத்தில்- பிராமண கோலத்தில் யாசிக்கச் சென்றார். யாசகம் கேட்டு வந்தவன் சாதாரண பிராஹ்மணன் அல்ல என்பதை அசுர குருவான சுக்ராச்சார்யார் அறிவார்.

 

ஆகையால் மஹாபலி சக்ரவர்த்தியை எச்சரித்தார். இந்த ஆள் சாதாரணமானவர் அல்ல. அவன் கேட்பதை எல்லாம் தந்து விடாதே. உ னது ராஜ்யத்தில் ஒரு பகுதி மட்டும் கொடுத்து திருப்பி அன்னுப்பிவிடு என்றார். ஆனால் ‘விநாஸ காலே விபரீத புத்தி’ வரும் அல்லவா. விதி கெட்டுப்போனால் மதி கெட்டுப் போகும் அல்லவா?  மன்னன், மந்திரியின் சொல்லைக் காற்றில் பறக்கவிட்டான்.

ஐயரே, யாது வேண்டும் ? என்றான்

ஒன்றும் அதிகம் வேண்டாம்; மூன்று அடி மண் போதும் என்றான்.

அரசனோ சிரித்துக் கொண்டே எடுத்துக் கொள் என்றான்

வந்திருந்த வாமனனோ  ‘ஓங்கி உலகு அளந்த உத்தமனாக’ வடிவு எடுத்து பூமியை ஒரு காலடியாலாலும் ஆகாய த்தை ஒரு காலடியாலும் அளந்து விட்டு, அன்பனே, மூன்றாவது அடிக்கு எங்கே வைப்பது? என்று வினவ, மன்னனும் என் தலையில் வைக்க என்றான்.

அவனுக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்தது. தானம் கொடுத்த பலன் ஒன்று; விஷ்ணுவின் காலடி பெற்ற புண்ணியம் இரண்டு.

 

மன்னன் மஹாபலி ஒன்றும் தவறிழைக்காதவன் என்பதால் நீ ஆண்டுதோறும் எனது நட்சத்திரமான ஓணம் அன்று இதே பூமிக்கு விஜயம் செய்து மக்களின் வாழ்த்துக்களைப் பெறு என்றான். அதுவே ஓணம் பண்டிகை ஆயிற்று.

 

தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை

 

தந்திரிக்கு– அதாவது சேனைத் தலை வனுக்கு– அழகு என்ன?

போரில் அஞ்சாது ஆண்மையோடு இருத்தல்.

 

மஹாபரதக் கதை எல்லோருக்கும் தெரியும். துரியோதணனுக்கு எவ்வளவோ நல்ல புத்திமதி சொல்லி நல்வழிப்படுத்த முயன்றார் பீஷ்மர். ஆனால் அவன் கேட்ட பாடில்லை. அது மட்டுமல்ல. மஹாபாரதப் போரில் அவரை படைத் தளபதியாக நியமித்தான்; கட்டாயம் அதர்மம் தோற்கும் என்பதை அறிந்தும் அஞ்சாது போரிட்டு மடிந்தார்; உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினையாது உப்பிட்டவரை உள்ளளவும் நினைந்து உயிர் நீத்தார் பீஷ்மர். போரில் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று சொன்ன கிருஷ்ணனையும் இரண்டாம் நாள் போரில் சக்ர ஆயுதம் ஏந்த வைத்தார். போரெனில் இது போர்; புண்ணி யத்திருப்போர் என்று போற்றும் வ கையில் செயல்பட்டார். இது போல் தமிழ் நாட்டில் சிறுத்தொண்டர் ஆற்றிய சேவையையும் சொல்லலாம்.

 

-SUBHAM-

ஐந்து ஐந்தாக உள்ள விஷயங்கள்! – 1 (Post No.5174)

Written by S NAGARAJAN

 

Date: 3 JULY 2018

 

Time uploaded in London –   5-49 AM (British Summer Time)

 

Post No. 5174

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சம்ஸ்கிருத செல்வம்

 

 

ஐந்து ஐந்தாக உள்ள விஷயங்கள்! – 1

 

ச.நாகராஜன்

 

சம்ஸ்கிருதத்தில் உள்ள லட்சக்கணக்கான பாடல்களில் உள்ள ஒரு சிறப்பு பல விஷயங்களை எளிதாக மனனம் செய்யுமளவு அவை அடுக்கடுக்காக சொல்லப்பட்டிருக்கும் ஸ்லோகங்கள் நிறைய இருப்பது தான்!

 

இப்படி இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து போன்ற எண்ணிக்கையில் உள்ளவற்றை வரிசையாக சொல்லப்பட்டிருக்கும் ஸ்லோகங்கள் தனியே தொகுக்கப்பட்டுள்ளன.

 

இங்கு ஐந்து ஐந்தாக உள்ள சில விஷயங்களைப் பார்க்கலாம்.

அக்ஷய நிதி 5

அழியாத செல்வங்கள் ஐந்து. அவை எவை?

சீலம் – ஒழுக்கம்

சௌர்யம் – வீரம்

அனாலஸ்யம் – சுறுசுறுப்பு

பாண்டித்யம் – சிறந்த மேதையாக இருக்கும் படிப்பு

மித்ர சங்க்ரஹம் – நல்ல நண்பர்களின் இணக்கம்

Conduct, Valour, Briskness, Scholarship, Association of friends -இந்த ஐந்தும் அழியாத செல்வங்கள். அக்ஷய நிதி.

 

 

சீலம் சௌர்யமனாலஸ்யம் பாண்டித்யம் மித்ரசங்க்ரஹம்|

அசோரஹரணீ யானி பஞ்சைதான்யக்ஷயோ நிதி||

– சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம்  158/243

துதிக்க வேண்டிய அக்னி 5

பிதா – தந்தை

மாதா – தாய்

அக்னி – தீ

ஆத்மா – ஆத்மா

குரு – ஆசான்

இந்த ஐவரும் வணங்கப்பட வேண்டியவர்கள்.

 

 

பஞ்சாக்னயோ மனுஷ்யேன பரிசார்யா: ப்ரயத்னத: |

பிதா மாதாக்னிராத்மா ச குருச்ச பரதர்ஷப: ||

  • விதுரநீதி 1 -179

மீமாஸத்தின் அங்கங்கள் (பிரிவுகள்)

விஷயா – பொருள்

விஷய – சந்தேகம்

பூர்வபக்ஷம் – முதல் நோக்கில் தெரிவது

உத்தரபக்ஷம் – பதில்

சித்தாந்தம் – முடிவு

Topic, Doubt,Prima Facie, Reply, Conclusion -ஆகிய இந்த ஐந்துமே மீமாஸ்த்தின் அங்கங்கள்

 

 

விஷயோவிஷயச்சைவ பூர்வபக்ஷச்தயோத்தரம் |

நிர்ணயச்சேதி பஞ்சாங்க: சாஸ்த்ரேதிகரணம் ஸ்ம்ருதம் ||

சர்வதர்ஷன் கௌமுதி

 

யாகம்

தேவா – கடவுள்

ஹவிர்த்ரவ்யம் – யாகத்தின் திரவியங்கள்

மந்த்ரம் – மந்திரம் (ரிக், யஜுர், சாமம்)

ரித்விக் – குருக்கள்

தக்ஷிணா – தக்ஷிணை

 

தேவானாம் த்ரவ்ய ஹவிஷாம்ருக்சாமயஜுஷாம் ததா|

ருக்த்விஜாம் தக்ஷிணானாம் ச சம்யோகே யக்ஞ உச்யதே ||

பஞ்சாங்கம் (காலண்டர்)

திதி – நாள்

வாரம் – வாரம்

நக்ஷத்ரம் – நக்ஷத்ரம்

யோகம் – இரு நக்ஷத்ரங்களின் கூட்டில் உள்ள காலம்

கரணம் – கரணம்

 

திதி வார நக்ஷத்ரம் யோக: கரணமேவ ச |

தத்பஞ்சாங்கமிதி  ப்ரோக்தம் ||

-சப்தகல்பத்ரும:

உணர்ச்சியை வெளிப்படுத்தும் உடல் அங்கங்கள்

சித்தம்  – மனம்

அக்ஷி    – கண்கள்

ப்ரு       – கண் இமைகள்

ஹஸ்தம் – கைகள்

பாதம்   – கால்கள்

Mind,Eyes,Eyebrows,Hand, Feet  ஆகிய இந்த ஐந்து உடல் பாகங்களும் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டுபவை.

 

சித்தாக்ஷிப்ரூஹஸ்தபாதைரங்கசேஷ்டாதி சாப்யத: |

பாத்ராத்யவஸ்தாகரணம் பஞ்சாங்கோபினயோ மத: || –

மாளவிகாக்னிமித்ரத்திற்கு காதயவேமா எழுதிய பாஷ்யம் 1.6/7

 

ஐந்து ஐந்தாக இப்படித் தொகுத்துக் கூறும் பாடல்கள் ஏராளம் உள்ளன. மேலும் சிலவற்றை அடுத்துப் பார்ப்போம்.

***

நாக்கு பெரிதா? மூக்கு பெரிதா? (Post No.5144)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 24 JUNE 2018

 

Time uploaded in London –  17-09 (British Summer Time)

 

Post No. 5144

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பெரியது கேட்கின் வரிவடி வேலோய்

பெரிது பெரிது மூக்கு பெரிது;

அதனினும் பெரிது நாக்கு;

நாக்கினும் பெரிது தவறான வாக்கு!

 

இது அவ்வையாரின் பாட்டைக் கிண்டல் செய்ய எழுந்த பாட்டு அல்ல.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுந்த பாட்டு.

 

ட்வைட் மாரோ(Mrs Dwight Morrow) என்பவர் புகழ்பெற்ற அமெரிக்கப் பெண்மணி. அவர் சீனியர் ஜே.பி.மார்கனை (Senior J P Morgan) தேநீர் விருந்துக்கு (Tea Party) அழைத்தார். அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பணக்காரர். அவருடைய பெரிய மூக்கு புகழ்பெற்ற மூக்கு. தை பற்றிப் பேசாதோர் (பரிகசிக்காதோர்) யாரும் இல்லை.ட்வைட் மாரோவுக்கு ஒரு கவலை. அவருடைய இரண்டு பெண்களையும் அறிமுகப்படுத்த வேண்டும். அதில் ஒருவள் ஆன் )Anne). புகழ்பெற்ற வாயாடி. மனதில் பட்டதை ஒளிக்காமல் சொல்லி விடுவாள். ஜே.பி.மார்கன் மூக்கைப் பார்த்தால் விமர்சனம் செய்யாமல் இருக்க மாட்டாள். எப்படியும் பகடி செய்து விடுவாள்.

 

ஆகவே இரண்டு மகள்களையும் அழைத்து பெரியோரிடம் மரியாதைக் காட்டுவது எப்படி என்று உபந்யாசம் செய்தாள்; ஆன் என்ற மகளுக்கு சிறப்பு சொற்பொழிவு ஆற்றி, மகளே அவர் மூக்கைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்; ஆனால் வெளியே மட்டும் வாய் திறந்து பேசிவிடாதே என்றாள்.

மகளும் அப்படியே செய்வேன் என்று தலை அசைத்தாள்.

ஜே.பி மார்கனும் வந்தார். பெண்களை அவசரம் அவசரமாக அறிமுகப் படுத்திவிட்டு உள்ளே செல்ல உத்தரவிட்டார்.

ஒரு அச்மபாவிதமும் நடக்க வில்லை.

ஆனால் ட்வைட் அம்மணியார் சதா சர்வகாலமும் மூக்கைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் வாய் தவறி,

 

மிஸ்டர் மார்கன், உங்களுக்கு தேநீரில் லெமன் வேண்டுமா அல்லது க்ரீம் வேண்டுமா என்று கேட்பதற்குப் பதிலாக

 

உங்கள் நோஸில் (Nose) லெமன் வேண்டுமா அல்லது க்ரீம் வேண்டுமா?

என்று கேட்டு விட்டார்.

நாக்கில் உள்ளது வாக்கில் வந்து விட்டது!!

 

xxxxxxx

ஏன் மனைவியைத் தள்ளி விட்டாய்?

 

நீதிபதி: அப்படியனால் நீ உன் மனைவியை இரண்டாவது மாடி ஜன்னல் வழியாகத் தள்ளிவிட்டது உண்மையா?

 

குற்றவாளி: ஆமாம் கனம் நீதிபதி அவர்களே!

 

நீதிபதி: ஏன் இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து தள்ளிவிட்டாய்?

என்ன காரணம்?

 

குற்றவாளி: நாங்கள் முதலில் கீழே (கிரவுண்ட் ப்ளோர் Ground Floor) குடியிருந்தோம்.

சமீபத்தில்தான் இரண்டாவது மாடிக்குக் குடிபுகுந்தோம்.

வீடு மாறியதே மறந்து விட்டது, ஐயா!!!

 

xxxxx

ஞாபக மறதிப் பேராசிரியர்கள்!

ஒரு பேராசிரியருக்கு அதி பயங்கர ஞாபக மறதி.

 

வீட்டுக்குள் விறு விறு என்று நுழைந்து கொண்டிருந்தார்.

 

மனைவி: பார்த்தீர்களா? நீங்கள் இறந்து போய்விட்டதாகப்

பத்திரிகையில் செய்தி போட்டிருக்கிறார்கள்.

 

அப்படியா, மறந்து விடாதே. எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி.

ஞாபகமாக ஒரு மலர் வளையத்துக்கு ‘ஆர்டர்’ கொடு.

 

நானும் நீயும் மறக்காமல் போக வேண்டும்

 

மனைவி தலையில்…………………

xxxxxxxxxxx

வேகமாகப் போ! ம்ம்… இன்னும் வேகம்!

ஒரு பேராசிரியருக்கு என்ன செய்கிறோம் என்பதையே மறந்து விடும் அளவுக்கு ஞாபக மறதி!! ஒரு ஊருக்கு சொற்பொழிவு ஆற்றச் சென்றார்.

சொற்பொழிவின் நேரம் மட்டும் ஞாபகம் இருந்தது.

ஆனால் வீட்டைவிட்டு தாமதமாகப் புறப்பட்டு அடுத்த ஊரில் போய் இறங்கி டாக்ஸியில் ஏறினார்.

 

ஏய், வண்டியை வேகமாக விடப்பா! கூட்டம் துவங்க பத்து நிமிடம்தான் இருக்கு!

 

அதுக்கென்ன ஸார், இதோ பாருங்கள் ! வண்டி சிட்டாய்ப் பறக்கும் என்று ஆக்ஸிலேட்டரை அமுக்கினான்.

 

ஏய், இன்னும் வேகமாகப் போ என்றார்.

அதற்கென்ன என்று சொல்லி 70 மைல் ஸ்பீடை 90 மைல் ஸ்பீட் ஆக்கினான்.

 

ஏய் நிறுத்து, நிறுத்து! எங்கே போகிறாய்?

இடம் தெரியுமா?

தெரியாதே ஸார்; நீங்கள் சொல்லுங்கள் என்றான் டாக்ஸி ட்ரைவர்!

அடக் கடவுளே! எனக்கு நேரம் மட்டுமே நினைவு இருக்கிறது- என்று சொல்லி டாக்ஸியில் இருந்து இறங்கினார்.

 

XXXXXX

 

கறார் பேர்வழி! கணக்கான பேர்வழி!

 

ஒரு சரக்குக் கப்பலின் கேப்டன்

 

மிகவும் கறாரான, கணக்கான பேர்வழி. அவருக்குக் கீழே வேலையில் இருந்தவன் குடித்துவிட்டு வேலைக்கு வந்தான். கேப்டனின் கடமை:– எல்லோர் பற்றியும் லாக் புஸ்தகத்தில் எழுத வேண்டும்

 

குடித்த ஆளின் பெயரை லாக் புஸ்தகத்தில் எழுதிவிட்டார். இதைப் பார்த்த அந்த ஆள் கேப்டனிடம் கெஞ்சாய்க் கெஞ்சினார். தயவு செய்து என் பெயரை அடித்து விடுங்கள்; நான் இனிமேல் தவறு செய்ய மாட்டேன்; உங்களுக்கே தெரியும் ;நான் இதுவரை இப்படி செய்ததில்லை என்று.

 

இப்படியெல்லாம் கெஞ்சியும் சமாதானம் சொல்லியும் கப்பலின் கேப்டன் மசியவில்லை.

 

“இதோ பார், நீ குடித்தது உண்மை; அதைத்தானே எழுதினேன். நான் உண்மையை  எப்படி மறைக்க முடியும்? போ!” என்று சொல்லி அனுப்பிவிட்டார். எப்போதும் சரியானதை எழுதுவதில் தவறே இல்லை என்றார்.

 

ஒரு நாள் ‘லாக் புஸ்தகம்’ வேலை இந்த பாதிக்கப்பட்ட ஆளுக்கு வந்தது. பழி வாங்க துடியாய்த் துடித்தவருக்கு அருமையான வாய்ப்பு இது. ஆனால் பொய்யும் எழுத முடியாது. எடுத்தார் பேனாவை! தொடுத்தார் சொற்களை!

 

“இன்று கேப்டன் மிகவும் நிதானமாக (நிதானத்தில்) இருந்தார்” என்று கொட்டை எழுத்தில் எழுதினார்.

உண்மைதானே (ஆனால் எப்படியும் பொருள் கொள்ள முடியும்)

 

–subham–

குடித்தால் கழுதை! (Post No.5120)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 17 JUNE 2018

 

Time uploaded in London –  9-21 am  (British Summer Time)

 

Post No. 5120

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஒரு குடிபோதை எதிர்ப்புக் கூட்டத்தில் மது விலக்கின் சிறப்புகளை ஒரு பேச்சாளர் அள்ளி வீசிக் கொண்டு இருந்தார். உங்களுக்குத் தெரியுமா? குடிக்கும் மதுபானத்தில் புழுப்பூச்சிகள் நெளிகின்றன; நாற்றம் வீசும்;

‘குடி- குடியைக் கெடுக்கும்;

மடியிலுள்ள பர்ஸைப் பிடிக்கும்’ என்றெல்லாம் சொன்னார்.

கடைசியில் எடுத்துக் காட்டுகளுடன் விளக்க முயன்றார் மதுபானத்  தீமைகளை!

 

“ஒரு கழுதைக்கு முன்னால்,

ஒரு வாளியில் மதுபானத்தையும் மற்றொரு வாளியில் தண்ணீரையும் வைத்தால், அது எதைக் குடிக்கும்?”

 

உடனே கூட்டத்திலிருந்து ஒருவர், கட்டைத் தொண்டையில், உரத்த குரலில் சொன்னார் :

“தண்ணீரைக் குடிக்கும்!”

 

‘ஏன்?’ என்று பேச்சாளர் உற்சாகத்துடன் கேட்டார்.

பதில்:–

‘ஏனென்றால் அது ஒரு  கழுதை! (Jack ass) ‘ஜாக் ஆஸ்’

 

ஆங்கிலத்தில் ‘ஜாக் ஆஸ்’ என்றால் கழுதை, முட்டாள் என இரு பொருள் உண்டு!

 

அனைவரும் கொல் என்று சிரித்தனர்.

 

xxx

 

முழு பாட்டில்…. அரை பாட்டில்…. கால் பாட்டில்… காலி பாட்டில்!!!

 

ஒரு ஏலக் கம்பெனி, அதன் பிரதிநிதியை ‘ஸ்டாக்’ எடுப்பதற்காக ஒரு வீட்டுக்கு அனுப்பியது; அந்த வீட்டிலுள்ள பொருட்களை ஏலம் விடுவதற்கு முன்னால் பட்டியல் (inventory) தயாரிக்கும் பொறுப்பு அவருடையது.

 

அவரும் வீட்டுக்குள் சென்றார்; உண்மை ஊழியராகப் பணியைத் தொடர்ந்தார்.

1.ஒரு பெரிய மேஜை

2.அழகான டைனிங் டேபிள்

3.தேக்கு மர நாற்காலிகள்

4.கருங்காலி மர ஸ்டூல்கள்

5.நல்ல இரும்பு பீரோ

6.விஸ்கி ‘முழு’ பாட்டில்

 

இன்னும் கொஞ்சம் வேலை செய்தார்;

விஸ்கி ‘அரை’ பாட்டில் என்று எழுதினார்

இன்னும் கொஞ்சம் நேரம் போனது;

விஸ்கி ‘கால்’ பாட்டில் என்று பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.

இன்னும் நேரம் ஆனது

விஸ்கி பாட்டில் – ‘காலி’ பாட்டில் ஒன்று

 

அடுத்தாகப் பட்டியல் எழுதினார்.

“அறையில் சுற்றிக் கொண்டிருக்கும் இரண்டு கம்பளங்கள்!!

 

(ஏன் இப்படி உலகமே என்னைச் சுற்றிக் கொண்டிருக்கிறது!!)

 

–சுபம்–

 

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில்…… (Post No.5117)

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில்…… (Post No.5117)


Written by LONDON SWAMINATHAN

 

Date: 16 JUNE 2018

 

Time uploaded in London –  12-49  (British Summer Time)

 

Post No. 5117

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அதிகச் சாப்பாடும் குடிபோதையும்

சி.ஆர்.டபிள்யு. நெவின்ஸன் (C R W Nevinson) என்பவர் புகழ்பெற்ற ஓவியர். அவர் ஒரு சுவையான சம்பவத்தைச் சொல்கிறார்:-

” சிஸ்லி ஹடில்டன்னும் (பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் Sisley Huddleston,) நானும் நெருங்கிய நண்பர்கள்; அவருக்கு பூதாஹார உடல்; ஆள் வாட்ட சாட்டமாய், ஆஜானுபா ஹுவாக இருப்பார். பாரிஸ் நகரில் நாங்கள் போகாத ஹோட்டல் அல்ல; குடிக்காத மதுபானக் கடை இல்லை; நல கூத்தடிப்போம்; சிரிப்போம்; பெண்களைக் கிண்டல் செய்வோம். ஒருமுறை நானும், க்ளைவ் பெல்லும் (Clive Bell)  சிஸ்லியுடன்  சென்று வயிறு புடைக்கச் சாப்பிட்டோம்; அரிசிச் சோறும் கோழிக்கறியும் உண்டோம். சிஸ்லிக்குப் பெரிய வயிறு என்பதால் கொஞ்சம் கூடுதலாகவே சாப்பிட்டுவிட்டார்.

 

ஒரு சிறிய டாக்ஸியில் ஏறிக்கொண்டு புலிவர் சாலியில் உள்ள செய்ன்ட் ஜெர்மைனுக்குச்( Boulevard street St Germain)

சென்றோம். அங்கு போய் வண்டி நின்றது. சிஸ்லியால் வெளியே வரமுடியவில்லை. அந்தக் கதவு, இந்தக் கதவு என்று எல்லாக் கதவுகளிலும் புகுந்து வெளியே வர முயன்றும் வர முடியவில்லை. வயிறு ஊதிவிட்டது! டாக்ஸி ட்ரைவருக்கும் எனக்கும் ஒரே சிரிப்பு. நன்றாக வயிறு குலுங்க சிரித்தோம்; இறுதியில் டாக்ஸி ட்ரைவரே மேல் கூரையைத் திறக்கவே அவர் பின்புறமாக இறங்கினார்.

 

செயின்ட் ஜெர்மைனுக்குள் போக விரைந்தோம். அங்குள்ள காவலர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினர். நாங்கள் அடித்த கூத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள் நாங்கள் குடிபோதையில் கூத்தடித்ததாக நினைத்தனர். க்ளைவ் பெல்லுக்கு ஒரே கடுப்பு; காரணம்? அவர் அங்கு புகழ்பெற்ற ஓவியர்  டெரய்னை (Derain) அங்கே சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார்

அவருக்கு ஆத்திரம் ஒரு பக்கம்; ஏமாற்றம் மறு பக்கம்; எரிமலை போலப் பொங்கினார்!
xxxx  xxxxxx

குண்டுப் பாடகியின் பண்பு

மேடம் ஷூமான் ஹைங்க் (Madame Shumann Heink) என்பவர் அமெரிக்கப் பாடகி. ஆள், உருவத்தில் உருட்டுக் கட்டை. நம்ம ஊர் நடிகைகள் போல உருண்டு திரண்டு தார் ட்ரம் (Tar Drum) அல்லது பீப்பாய் (Barrel) போல இருப்பார். ஒருமுறை அவரது மகன் படிக்கும் கல்வர் (Culver) ராணுவப் பள்ளிக்குச் சென்றார். அங்கே கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மகனுக்குத் தெரியாமல் திடீரென்று போய் நிற்க வேண்டும் என்று அந்த தாய்க்கு நல்ல ஆசை.

 

கல்லூரி வளாகத்துக்குச் சென்றார். மகன் விடுதி இருக்கும் இடம் பற்றி வினவினார். அவர்களும் இடத்தைக் கூறினர்.

 

அம்மையார் அங்கு சென்றபோதுதான் தெரிந்தது இன்னும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று.

 

ஒரு புறம் செங்கல்; மறுபுறம் மூங்கில் கம்புகள்; எங்கு பார்த்தாலும் இடித்தன. ஒருவாறாகச் சமாளித்துகொண்டு குறுகிய வழிக்குள் புக முயன்றார். திணறினார்.

ஒரு துடுக்கான மாணவன் இதைப் பார்த்து ஒரு காமெண்ட் (comment) அடித்தான்.

“ஓ மேடம்! பக்கவாட்டாக நுழையுங்கள்!”

அவருக்கு அதைக் கேட்டவுடன் ஒரே சிரிப்பு. பலமாகச் சிரித்துக்கொண்டே சொன்னார்:-

“அன்பு நண்பா; இந்தப் பூத உடலுக்கு பக்க வக்கவாட்டு என்பதே கிடையாதே! (வட்டவடிவ உடல்_)

 

இதைப் படித்தவுடன் எனக்குப் பழைய சினிமாப் பாடல் நினைவுக்கு வந்தது

“தங்கத்திலே ஒரு குறை யிருந்ததாலும் தரத்தினில் குறைவதுண்டோ

அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் பண்புகள் மறைவதுண்டோ!”

(பாட்டின் வரிகளைச் சிறிது மாற்றிப் பாடியிருக்கிறேன்)

 

xxxx

சில புதிர்க் கவிதைகள்! (Post No.5104)

Written by S NAGARAJAN

 

Date: 13 JUNE 2018

 

Time uploaded in London –  9-50 am  (British Summer Time)

 

Post No. 5104

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

சில புதிர்க் கவிதைகள்!

ச.நாகராஜன்

 

முந்தைய கட்டுரைகளில் சில சம்ஸ்கிருத புதிர் ஸ்லோகங்களைப் பார்த்தோம்.

ஆயிரக் கணக்கில் இவை உள்ளன.இங்கு இன்னும் சில புதிர்க் கவிதைகளைப் பார்ப்போம்.

1

பல கேள்விகள். ஆனால் அத்தனை கேள்விகளுக்கும் ஒரே வார்த்தையில் பதில் இருக்கும்.

அப்படிப்பட்ட புதிர் ஸ்லோகம் ஒன்றைப் பார்ப்போம்:

 

கிமிச்சதி நர: காஷ்யாம்   ந்ரூபானாம் கோ ரணே ஹித: |

கோ வந்த்ய: சர்வேதேவானாம்   தீயதாமேகமுத்தரம்  ||

 

காசியில் எதை அடைய மனிதர்கள் விரும்புகின்றனர்? (ம்ருத்யு : இறத்தல்)

போரில் எது அரசர்களுக்கு உகந்தது? (ஜய: வெற்றி)

தேவர்களில் எந்த கடவுள் மிகவும் உயர்ந்தது? (ம்ருத்யுஞ்ஜய: சிவன்)

ஒரே விடை இவை மூன்றிற்கும் தரலாம் ம்ருத்யுஞ்ஜய:

 

பஹிர்லாப வகையில் உள்ள புதிர் இது:

 

A riddle of Bahirlapa variety:

 

What do men desire in Kasi? (Metyum : Death)

What is beneficial to kings in a battle ? (Jayah: Victory)

Which God is supreme among the gods? (Mrtyunjayah: Siva)

One answer may be given for all the three – (Mrtyunjayah)

(Translation by S.Bhaskaran Nair)

2

கிமகரவமஹம் ஹரிர்மஹோக்ரம்

ஸ்வபுஜவலேத கவாம் ஹிதம் விதித்சு|

ப்ரியதமதவதேன பீயதே க:

பரிணதபிம்பபலோபம: ப்ரியாயா: ||

 

இதுவும் பஹிர்லாப வகையில் உள்ள புதிர் தான். புஷ்பிதாக்ரா என்ற சந்தத்தில் அமைந்த ஸ்லோகம் இது.

 

க்ருஷ்ணனாகிய  நான் பசுக்களைக் காக்க கோவர்த்தன மலையை எனது கைகளால் என்ன செய்தேன்? (அதர: நீ தூக்கி நிறுத்தினாய்)

எது காதலரின் வாயால் முத்தமிடப்பட்டது? (அதர: உதடு)

எனது காதலியின் எந்த அங்கம் வில்வப் பழம் போல உள்ளது? (அதர: உதடு)

 

A riddle of Bahirlapa variety. Puspitagra metre.

 

What did I, Krsna, do to the mountain (Govardhana) with the might of my arms for the welfare of the cows? (Adharah : You held it)

What is kissed by the mouth of the beloved? (Adharah: lip)

What is that of my beloved, which resembles a bimba-fruit? (Adharah: lip)

(Translation by A.A.Ramanathan)

 

3

கிம் ஸ்யாத் வர்ணசதுஷ்டயேன வனஜம்       வர்ணைஸ்த்ரிமிர்பூஷணம்

ஸ்யாதாத்யேன மஹி த்ரயேன து பலம் மத்யம் த்வயம் ப்ராணதம் |

வ்யஸ்தே கோத்ரதுரங்கதாசகுசுமான்யந்தே ச சம்ப்ரேஷணம்

யே ஜானந்தி விசக்ஷணா: க்ஷிதிதலே தேஷாமஹம் சேவக: ||

 

இதுவும் பஹிர்லாப வகையில் உள்ள புதிர் தான். சார்தூலவிக்ரிதிதா என்ற சந்தத்தில் அமைந்த ஸ்லோகம் இது.

இதன் பொருள்:

நான்கு எழுத்துக்களால் அமைந்த எந்த வார்த்தை தாமரையைக் குறிக்கிறது?(குவலயம்)

மூன்று எழுத்துக்களால் அது ஒரு ஆபரணத்தைக் குறிப்பிடுகிறது. (வலயம் : கையில் அணியும் வளையல்)

முதல் எழுத்து பூமியைக் குறிக்கும் : (கு)

மூன்று எழுத்துக்களை இணைத்தால் ஒரு பழத்தைக் குறிக்கும் : (குவல) (ஈச்சம்பழம்)

இரண்டு எழுத்துக்கள் வலிமையைக் குறிக்கும் : (பலம்)

தனியாகப் பார்த்தால் குடும்பம், குதிரை தின்னும் உணவு, பூ ஆகியவற்றையும் கடைசியில் பார்த்தால் அனுப்புவதையும் குறிக்கும்.

இதை அறிந்த புத்திசாலிகள் எவரோஅவருக்கு நான் சேவகன்.

 

A Riddle of Bakiralva variety.

Sardulavikridita metre.

 

What is the word with four letters which means a lotus? (Kuvalayam)

With three letterx it meanss an ornament. (Valayam)

The first means the earth (Ku)

Three letters together mean a fruit. (Kuvala) – The Jujube-fruit.

Two together have the meaning of strength. (Balam)

Separately it means family, horsefood and flower, and at the end it means sending.

Tose clever people who knew of this, of them I am a servant.

(The answer is the word Kuvalayam)

(Translation by A.A.Ramanathan)

 

இன்னும் பல புதிர்க் கவிதைகளை பின்னர் பார்ப்போம்.

***

எல்லாப் பழியும் சமணன் தலையிலே! (Post No.5015)

Written by S NAGARAJAN

 

Date: 16 MAY 2018

 

Time uploaded in London –  7-04 AM   (British Summer Time)

 

Post No. 5015

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ச.நாகராஜன்

 

பகவான் ராமராக அவதரித்த போது இளமைப் பருவத்தில் கூனி மந்தரையைக் கேலி செய்ததாக வரலாறு உண்டு.

ஆனால் இது ராமாவதாரத்திற்கு உரியது அல்ல; இது போன்ற பால்ய லீலைகள் எல்லாம் கிருஷ்ணாவதாரத்திற்கு உரியவையே; ஆக அங்கே தான் இதைச் சொல்ல வேண்டும் என்று பலர் சொல்வதுண்டு.

 

 

இதை பகவத் விஷயம் என்ற நூல் “எல்லாப் பழியும் சமணன் தலையிலே” என்பது போல இருக்கிறது என்கிறது.

அதைப் பற்றிய கதை இது தான்:

 

ராஜா ஒருவனுக்கு ஒரு புகார் வந்தது ஒரு திருடனின் நண்பர்களிடமிருந்து.

 

திருடன் ஒரு பிராம்மணனின் வீட்டில் திருடச் செல்லும் போது சுவர் ஈரமாக இருந்ததால் இடிந்து ன் மேல் விழவே அவன் இறந்து விட்டான். ஆகவே திருடன் இறந்ததற்கு பிராம்மணன் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று திருடனின் நண்பர்கள் பிராம்மணன் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

 

இரண்டு கட்சிக்காரர்களும் ராஜா முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

ராஜா: ஓ! பிராம்மணரே! உங்கள் வீ ட்டின் ஈரச் சுவர் இடிந்ததால் தான் திருடன் இறந்தான். நஷ்ட ஈடைக் கொடுக்க வேண்டும். என்ன சொல்கிறீர்?

 

பிராம்மணன் : எனக்கு ஒன்று தெரியாது ராஜாவே! இந்தச் சுவரைக் கட்டிய வேலையாளைத் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

 

ராஜா வேலையாளை அழைத்து வரச் செய்து கேட்டான்: நீ தான் சுவரைக் கட்டினாய். ஆகவே நீ தான் நஷ்ட ஈடு தர வேண்டும்.

 

வேலையாள் : இல்லை ராஜாவே! தண்ணீர் ஊற்றியவன் நிறையத் தண்ணீர் ஊற்றி விட்டான்.

 

தண்ணீர் ஊற்றியவன் வந்து சொன்னான்: இல்லை ராஜாவே! பானை செய்தவன் பெரிதாகப் பானை செய்து விட்டான். அவனைத் தான் கேட்க வேண்டும்.

 

பானை செய்தவன் : இல்லை ராஜாவே! பானை செய்யும் போது நடனமாடும் பெண்மணி வழியில் சென்றாள். அவளைக் கவனித்ததால் எனது பானை பெரிதாக ஆகி விட்டது.

 

நடனப் பெண்மணி : அந்த வழியாகச் சென்றதற்குக் காரணம் வண்ணான் என் துணியைத் தராததால் தான்! அவனைக் கேட்பதற்காகத் தான் அந்த வழியாகச் செல்ல நேர்ந்தது.

 

வண்ணான் வந்தான் : நான் துணிகளைத் தோய்க்கப் போகையில் அங்கு சமணன் குளித்துக் கொண்டிருந்தான். அவன்

குளித்து விட்டு வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

 

சமணன் வந்தான். சமண சமயத்தின் விதிகளின் படி அவன் மௌனத்தைக் கடைப்பிடித்தான். ஒன்றும் சொல்லவில்லை.

 

ராஜா: எல்லாம் சமணனால் வந்தது. சமணன் தான் நஷ்ட ஈடு தர வேண்டும்.

சமணன் மௌன விரதத்தில் இருந்ததால் வாயைத் திறக்கவில்லை.

 

“ஆஹா சமணன் வாயையே திறக்கவில்லை. மௌனம் சம்மதத்திற்கு அடையாளம். அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டான். அவனைத் தூக்கில் போடு” என்று ராஜா தீர்ப்பை வழங்கினான்.

 

அது போலத் தான் கிருஷ்ணாவதாரமும். எல்லாப் பழியும் சமணன் தலையிலே என்பது போல எல்லா பால்ய லீலைகளும் கிருஷ்ணனின் வாசலுக்கு வந்து விடுகிறது.

இது தான் உண்மை.

இந்தக் கதை பகவத் விஷயத்தில் முதல் பகுதியில் 425ஆம் பக்கத்தில் இடம் பெறுகிறது.

 

அழகிய இந்த நூல் தெலுங்கு மொழியில் உள்ளது. பல பகவத் விஷயங்களை சுவாரசியமாகச் சொல்லும் இந்த நூல் படிக்கப் படிக்க வைணவ சம்பிரதாயத்தில் உள்ள அற்புதமான பல ஆன்மீக விஷயங்களின் நுணுக்கங்களை அள்ளித் தரும்.

 

குறிப்பு :- வட இந்தியாவில் 40000 சுலோகங்களுடன் கூடிய ஒரு ராமாயணத்தில் ராமரின் பால்ய லீலைகள் நிறையக் குறிப்பிடப்பட்டுள்ளதாம்!

***

ஸங்கீதப் பேய்; பிராமணப் பேய்! (Post No.4613)

Written by London Swaminathan 

 

Date: 13 JANUARY 2018

 

Time uploaded in London  6-54 AM

 

 

 

Post No. 4613

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

திராவிடப் பூர்வகாலக் கதைகள் என்ற புத்தகததை 1886 ஆம் ஆண்டில் நடேச சாஸ்திரி என்பவர் வெளியிட்டார். அதில் 49 கதைகளை வெளியிட்டார். தான் கேட்ட கதைகளை தனது நினைவிலுள்ளபடி எழுதுவதாக வெளியிட்டார். அதில் சில கதைகளை நானும் சிறுவயதில் எங்கள் வீட்டில் சமையல் வேலை செய்துவந்த சுப்புலெட்சுமி அம்மாள் என்பவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் கதைகளை எனது சொற்களில் சுருக்கமாக வடிப்பேன்.

 

 

ஒரு ஊரில் ஒரு ப்ராஹ்மணன் இருந்தான். அவன் மிகவும் வறியவன்; வறுமையின் சின்னம்; வயிறு காய்ந்தது. ஏதேதோ செய்து பார்த்தும் காசு பணம் கிடைக்கவில்லை. சரி, போ! நாம் பூர்வஜன்மத்தில் செய்த பாபம் போலும்; நம் கர்மத்தைக் காசிக்குச் சென்று தொலைப்போம் என்று புறப்பட்டான. கட்டுச் சோறு கட்டிக் கொண்டான்; வழி நடந்தான்.

 

பாதி தூரத்தில் களைப்பு வந்தது; கண்டான் ஒரு தோப்பை; கொண்டான் ஆனந்தம்! அருகில் குளம்; தென்றல் வீசியது. கால் கை கழுவி விட்டு உண்போம் என்று குளத்தில் இறங்கினான். ‘கால் கை கழுவாதே’ என்று ஒரு குரல். ஓஹோ, களைப்பால் வந்த அலுப்பு! என்று சொல்லிவிட்டு கால், கைகளை அலம்பிவிட்டு சாப்பிட அமர்ந்தான். மீண்டும் ஒரு குரல்; ‘சாப்பிடாதே’ என்று;

 

இது ஏதெடா சிவ பூஜையில் கரடி புகுந்த கதை என்று சொல்லிவிட்டுச் சாப்பிட்டான். பின்னர் காசிக்குப் புறப்பட்டான். ‘போகாதே’ என்று ஒரு சப்தம்; இப்போது அவனுக்குக் கோபம் வந்தது. ஏய், யார் நீ? எங்கிருந்து குரல் கொடுக்கிறாய்? என்று கேட்டான்.

ஒரு பிரம்ம ராக்ஷஸன் அவன் முன் குதித்தான்; தன் பூர்வ ஜன்மக் கதைதனை உரைத்தான்.

 

 

பிரம்ம ராக்ஷஸ் என்றால் ‘ப்ராஹ்மணப் பேய்’ என்று பொருள்; தவறு செய்யும் ப்ராஹ்மணர்கள் அகால மரணம் அடைந்தால் பேய்—பிரம்ம ராக்ஷஸன் ஆகிவிடுவர்.

 

“நான் பூர்வ ஜன்மத்தில் நல்ல ஸங்கீத ஞானம் உள்ளவன்– என் இசை ஞானத்தை எவருக்கும் சொல்லிக் கொடுக்காமல் ஒளித்தேன்; மறைத்தேன்; ஆகையால்தான் இந்த கதி என்று சொல்லிவிட்டு எனக்கு ஒரு உபகாரம் செய்யேன் என்றது.

 

இந்த காட்டுக்கு வெளியே உள்ள ஒரு கோவிலில் ஒரு நாகஸ்வர வித்வான் இருக்கிறான். அவன் காலை, மதியம், மாலையில் அபஸ்வரத்துடன் வாசிக்கும் நாகஸ்வர இசை என் காதுகளில் ஈயத்தைப் பாய்ச்சியது போல இருக்கிறது; ஆகையால் என்னை இந்த நாகஸ்வர த்வனி கேட்காத தூரத்தில் கொண்டு போய் விடு; அது எனக்கு நீ செய்யும் பெரிய உதவி ஆகும் என்று பேய் சொன்னது.

 

அந்தப் ப்ராஹ்மணப் பேய் மீது கருணை கொண்ட இந்த ஏழைப் ப்ராஹ்மணன், அதற்கென்ன பேஷாய் உதவி செய்கிறேன். நீ எனக்கு எனக்கு என்ன பிரத்யுபகாரம் (பதில் உதவி) செய்வாய் என்று கேட்டான்.

 

 

 

அது சொன்னது: நீ காசிக்குப் போ. உன் கர்மத்தைத் தொலைத்துவிட்டு வா; அதற்குள் நான் மைசூர் மஹாராஜவின் மகளைப் போய் பிடித்துக் கொள்கிறேன் யார் வந்து பேய் ஓட்டினாலும் நான் அகல மாட்டேன். நீ வந்தவுடன் ஓடி விடுகிறேன்; மைசூர் மஹாராஜா உனக்கு பரிசு மழை பொழிவார் என்றது.

 

அந்தப் ப்ராஹ்மணனும் நல்ல ஐடியா  (IDEA) என்றான். ஆனால் ஒரு கண்டிஷன் (CONDITION) என்றது பிராஹ்மணப் பேய்.

அது என்ன நிபந்தனையோ என்று ப்ராஹ்மணன் வினவ, பேய் சொன்னது; நீ ஒரு முறை என்னை இப்படி விரட்டலாம் இரண்டாவது முறை எங்காவது என்னை விரட்ட வந்தால் உன் கதி ‘சகதி’ என்று எச்சரித்தது.

பிராஹ்மணன் காசிக்குச் சென்றுவிட்டுத் திரும்பினான். மைசூருக்கு வந்தான்; ஒரு கிழவி வீட்டில் தங்கினான்.

((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால்இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.

பாட்டி ஊரில் என்ன விசேஷம்? என்ன பார்க்கலாம்? என்றான்.

கிழவி சொன்னாள்: மகனே மஹாராஜாவின் மகளுக்குப் பேய் பிடித்துவிட்டது. அது பொல்லாத பிசாசு! யார் வந்தாலும் விரட்ட முடியவில்லை யாராவது விரட்டினால் பெரும்  தொகை கிடைக்கும் என்று மன்னன் அறிவித்துள்ளான் என்றாள்.

 

ப்ராஹ்மணன் மறு நாளைக்கு அரண்மனைக்குச் சென்று மஹாராஜாவிடம் பேய் ஓட்ட வந்ததாச் சொன்னான். முதலில் மன்னனுக்கு நம்பிக்கை இல்லை. பின்னர் முயன்று பார்ப்போமே என்று ப்ராஹ்மணனை  மகள் இருக்கும் அறைக்குள் அனுப்பினான்.

அவன் உள்ளே நுழைந்தவுடன், பிரம்ம ராக்ஷசஸ், அவனை அடையாளம் கண்டு ‘குட் பை’  (GOOD BYE) சொல்லிவிட்டுப் போனது போகும்போதே அது போட்ட ‘கண்டிஷனையும்’ நினைவுபடுத்தியது. இதற்கு மேல் என்னைத் தொடர்ந்து வந்தால் உன் கதி அதோகதி என்று சொல்லிவிட்டுப் போனது.

 

ப்ராஹ்மணன் பேய் ஓட்டிய செய்தி, மன்னனுக்குக் கிடைத்தது; அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி; ப்ராஹ்மணனுக்கு ஏராளமான பரிசு; நிலபுலன்கள் கிடைத்தன.

 

சுகமாக ஊருக்குத் திரும்பி வாழ்ந்து வந்தான்; கல்யாணம் முடித்து குழந்தை குட்டிகளுடன் காலம் உருண்டோடியது.

 

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் (சனைச் சரன்) விடாது என்பது பழமொழியல்லவா?

 

மைசூர் மஹாராஜாவிடம் இருந்து ஓடிய பேய் – ப்ரஹ்மராக்ஷஸ் – திருவனந் தபுரம் மஹாராஜாவின் மகளைப் போய் பீடித்தது. அவன் பெரிய பெரிய மலையாள மாந்த்ரீகர்களை எல்லாம் அழைத்துப் பேயை ஓட்ட முயன்றான்; பலிக்க வில்லை. அவனது ஒற்றர்கள் மூலம் மைசுர் மஹா ராஜா மகள் விஷயத்தை அறிந்து அந்த மந்திரவாதியைத் தமக்கும் அனுப்பிவைக்குமாறு ஓலை அனுப்பினான்.

 

திருவநந்தபுரம் மஹா ராஜா மீது  கருணை கொண்ட மைசூர் மன்னன், ‘நான் பெற்ற இன்பம் வையகமும் பெறுகவே’ என்று ப்ராஹ்மணனுக்குச் செய்தி அனுப்பினான். உடனே திருவனந்தபுரம் சென்று உதவக் கட்டளை இட்டான்.

 

ப்ராஹ்மணனுக்கு உதறல் எடுத்தது; இரண்டாம் தடவை அதே ப்ரஹ்மராக்ஷஸைச்  சந்தித்தால் தன் கதை முடிந்துவிடும் என்று தெரியும். இருந்தாலும் மன்னர் உத்தரவு என்பதால் திருவனந்தபுரத்துக்கு ஏகினான். பல்வேறு சாக்குப் போக்குகள்; நாள் நட்சத்திரங்களைச் சொல்லி பேய் ஓட்டுவதை ஆனமட்டிலும் தாமதித்தான்.

இந்தச் சாக்குப் போக்குகள் நீண்ட காலம் தாக்குப் பிடிக்கவில்லை. தனது சொத்து சுகங்களைப் பகிர்ந்து விட்டு சாகத் தயாராக அரனண்மனைக்குள் சென்றான்; மஹாராஜவின் மகளைப் பார்த்தான். அவளைப் பிடித்த பிரம்ம ராக்ஷஸும் ப்ராஹ்மனனைப் பார்த்தது. ஆத்திரம் கொண்டது; பெரிய உலக்கையைத் தூங்கிக் கொண்டு அவனை அடிக்க ஓடிவந்தது.

 

இதற்குள் பிராஹ்மனனின் அத்புத மூளை வேலை செய்தது. அந்தப் பேய் அருகில் வந்தவுடன் திருப்ம்பி ஓடுகிறாயா? அல்லது அபஸ்வர நாகஸ்வர வித்வானை உள்ளே வரச் சொல்லவா? இதோ அரண்மனை வாயிலின் அந்தப் பக்கத்தில் கோவில் நாகஸ்வர வித்வான் உன்னைப் பார்க்க காத்திருக்கிறான் என்று கத்தினான்.

 

இதை கேட்டவுடன் அந்த ஸங்கீதப் பேய் — ப்ராஹ்ம ராக்ஷஸ் — ஓட்டம் பிடித்தது.

 

தவறான ஸங்கீத ஒலிக்குப் பேயும் பயப்படும்!!!!!!!!!!!!!!!

((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால்இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக்கு கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்நீயே கவனித்துக்கொள்!))

–SUBHAM–

காப்பிகுடித்தால் 100 ஆண்டுகள் வாழலாம்! (Post No.4608)

Einstein image in Coffee!

 

Written by London Swaminathan 

 

Date: 12 JANUARY 2018

 

Time uploaded in London  6-32 AM

 

 

 

Post No. 4608

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

பிரான்ஸ் நாட்டின் கல்வி நிபுணர், நூல் ஆசிரியர் பாண்டநெல் (Fontenelle) என்பவர் ஆவார். அவருடைய முழுப் பெயர் பெர்னார்ட் லெ பொவியர் தெ பாண்டநெல் என்பதாகும். அவர் 1657 முதல் 1757 வரை வாழ்ந்தார்.

 

பாண்டநெல் மிகவும் காப்பி குடித்ததால் டாக்டர்களுக்கு மிகவும் கவலை. அவருக்கு 80 வயதானபோது டாக்டர்கள் அவரைச் சந்தித்தனர். அவருக்குப் புரியும்  வகையில், மெதுவாக, அழகாக டாக்டர்கள் பேசினர்.

 

“அன்பரே, இந்தக் காப்பி இருக்கிறதே. அது ஒரு விஷம்– உமது உடலை மிகவும் பாதிக்கும்; விஷம் என்று சொன்னால் போதாது. அது ‘மெதுவாக’க் கொல்லும் விஷம்– என்றெல்லாம் விளக்கினர்.

 

அவர் இதைப் புரிந்து கொண்டாரா, இதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று அறிய டாக்டர்கள் அவருடைய முகத்தை உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 

அவர் மெதுவாக வாய் திறந்தார்– சரியாகச் சொன்னீர்கள்; மெதுவாகக் கொல்லும் விஷம் என்று; கொஞ்சம் தப்பு விட்டு விட்டீர்கள். அது மெதுவாகக் கொல்லும் விஷம் இல்லை; ‘மிக மிக மிக மெதுவாகக் கொல்லும்’ விஷம்! பாருங்கள்! தினமும் எவ்வளவு காப்பி குடிக்கிறேன்;  80 வயது வரை நன்றாக இருக்கிறேனே! என்றார்.

டாக்டர்களுக்கு உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது. ஈதென்னடா, செவிடன் காதில் சங்கு ஊதிய கதை ஆகி விட்டதே என்று எண்ணி வெளியேறினர்.

 

டாக்டர்கள் சொன்னது பிழை ஆகிவிட்டது. அதற்குப் பின்னரும் பாண்டநெல் 20 ஆண்டுகள் வாழ்ந்தார். நூறு வயதை நெருங்க ஒரு மாதம் இருக்கையில் உயிர் நீத்தார்.

 

காப்பி குடிப்போருக்கு எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி!

 

காப்பி  குடியுங்கள்! நன்றாகக் காப்பி குடியுங்கள்! குடித்துக் கொண்டே 100 ஆண்டுக் காலம் வாழுங்கள்! நோய் நொடி இல்லாமல் வாழ்க!!

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

xxxx

நீண்ட காலம் வாழ சுருட்டு குடியுங்கள்!

 

பிரிட்டனில் பிரதமராக இருந்தவர் ஜோசப் சாம்பர்லைன் (Joseph Chamberlain): 70 வயதிலும் இளமை ததும்பும் எழில் மிகு தோற்றம்! அவர் மேனி அழகின் ரஹசியத்தை அறிய பலருக்கும் ஆசை. அவரை நெருங்கினர்; தைரியமாகக் கேட்டனர்.

 

“ஐயன் மீர்! உங்கள் மேனி அழகின் ரஹசியம் என்னவோ?”

 

இந்தக் கால நடிகைகளாக இருந்திருந்தால் அவர் என் மேனி அழகிற்கு நான் பாவிப்பது  xyz –  சோப்புதான் என்று சொல்லி இருப்பர்.

 

ஆனால் சாம்பர்லைனோ சற்றும் தயக்கம் இன்றி பதில் கொடுத்தார்.

 

இளமைத் துடிப்புடன் வாழ வேண்டுமா?

 

அதிகம் நடக்காதீர்கள்; எங்கெங்கெல்லாம்  காரில் செல்ல முடியுமோ அங்கெல்லாம் காரிலேயே செல்லுங்கள் நடந்து தொலையாதீர்கள்!!!

சுருட்டு குடிக்கும் வழக்கம் இருந்தால் இரண்டு சுருட்டுகளில் எது சக்தி வாய்ந்ததோ, எது நீளமானதோ அதைக் குடியுங்கள்; அது மட்டுமல்ல அனாவசியமாக நடக்காதீர்கள்; எங்கெங்கெல்லாம் காரில் போக முடியுமோ அங்கெல்லாம் காரில் செல்லுங்கள்– என்றார்.

கேட்க வந்தவர்களுக்கு ஏனடா கேட்க வந்தோம் என்பது போல ஆயிற்று!

 

xxx

மாக்ஸிம் கார்க்கி

சோவியத் ரஷ்யாவின் புகழ் பெற்ற  எழுத்தாளர் (Maxim Gorky) மாக்ஸிம் கார்க்கி. அவர் சோஷலிஸ அறிஞர். அவரை அமெரிக்காவுக்கு அழைத்த நண்பர்கள் அவரை (Coney Island) கோனி தீவிலுள்ள ஒரு கேளிக்கைப் பூங்காவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே வீர தீர சாஹசச் செயல்கள் நடந்தன. இவருக்கு எல்லாவற்றையும் நன்கு காட்டிவிட வேண்டும் என்று எண்ணி பாதாள அறை, நிலத்தின் மேலுள்ள மண்டபம் ஆகியவற்றுக்கு எல்லாம் அவரது நண்பர்கள் அழைத்துச் சென்றனர்.

 

 

அவர் பார்க்காத சர்கஸ் காட்சிகளே இல்லை; அந்தர் பல்டி, குட்டிக்கரணம், வேகப் பாய்ச்சல், மேலிருந்து கீழே குதித்தல் தாவுதல் எல்லா வற்றையும் நண்பர்கள் காட்டினர். கார்க்கியின் நண்பர்களுக்குப் பரம த்ருப்தி.

கார்க்கிக்கு????????

 

எல்லோரும் ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கியது. மாக்ஸிம் கார்க்கியிடம் அவருடைய நண்பர்கள் வினவினர்.

அன்புடையீர், எங்களுக்கு எல்லாம் இன்று உங்களுடன் இருந்தது மிகவும் பிடித்து இருந்தது; உங்களுக்கும் மகிழ்ச்சிதானே?

 

அவர் உடனே பதில் தராமல் சற்று நேரம் யோசித்தார்; பின்னர் சொன்னார்.

 

அட தோழர்களே; நீங்கள் எல்லோரும் எவ்வளவு துயரத்துடன் வாழ்கிறீர்கள்!!

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

சுபம் —–