Einstein image in Coffee!
Written by London Swaminathan
Date: 12 JANUARY 2018
Time uploaded in London 6-32 AM
Post No. 4608
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
பிரான்ஸ் நாட்டின் கல்வி நிபுணர், நூல் ஆசிரியர் பாண்டநெல் (Fontenelle) என்பவர் ஆவார். அவருடைய முழுப் பெயர் பெர்னார்ட் லெ பொவியர் தெ பாண்டநெல் என்பதாகும். அவர் 1657 முதல் 1757 வரை வாழ்ந்தார்.
பாண்டநெல் மிகவும் காப்பி குடித்ததால் டாக்டர்களுக்கு மிகவும் கவலை. அவருக்கு 80 வயதானபோது டாக்டர்கள் அவரைச் சந்தித்தனர். அவருக்குப் புரியும் வகையில், மெதுவாக, அழகாக டாக்டர்கள் பேசினர்.
“அன்பரே, இந்தக் காப்பி இருக்கிறதே. அது ஒரு விஷம்– உமது உடலை மிகவும் பாதிக்கும்; விஷம் என்று சொன்னால் போதாது. அது ‘மெதுவாக’க் கொல்லும் விஷம்– என்றெல்லாம் விளக்கினர்.
அவர் இதைப் புரிந்து கொண்டாரா, இதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று அறிய டாக்டர்கள் அவருடைய முகத்தை உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அவர் மெதுவாக வாய் திறந்தார்– சரியாகச் சொன்னீர்கள்; மெதுவாகக் கொல்லும் விஷம் என்று; கொஞ்சம் தப்பு விட்டு விட்டீர்கள். அது மெதுவாகக் கொல்லும் விஷம் இல்லை; ‘மிக மிக மிக மெதுவாகக் கொல்லும்’ விஷம்! பாருங்கள்! தினமும் எவ்வளவு காப்பி குடிக்கிறேன்; 80 வயது வரை நன்றாக இருக்கிறேனே! என்றார்.
டாக்டர்களுக்கு உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது. ஈதென்னடா, செவிடன் காதில் சங்கு ஊதிய கதை ஆகி விட்டதே என்று எண்ணி வெளியேறினர்.
டாக்டர்கள் சொன்னது பிழை ஆகிவிட்டது. அதற்குப் பின்னரும் பாண்டநெல் 20 ஆண்டுகள் வாழ்ந்தார். நூறு வயதை நெருங்க ஒரு மாதம் இருக்கையில் உயிர் நீத்தார்.
காப்பி குடிப்போருக்கு எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி!
காப்பி குடியுங்கள்! நன்றாகக் காப்பி குடியுங்கள்! குடித்துக் கொண்டே 100 ஆண்டுக் காலம் வாழுங்கள்! நோய் நொடி இல்லாமல் வாழ்க!!
((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))
xxxx
நீண்ட காலம் வாழ சுருட்டு குடியுங்கள்!
பிரிட்டனில் பிரதமராக இருந்தவர் ஜோசப் சாம்பர்லைன் (Joseph Chamberlain): 70 வயதிலும் இளமை ததும்பும் எழில் மிகு தோற்றம்! அவர் மேனி அழகின் ரஹசியத்தை அறிய பலருக்கும் ஆசை. அவரை நெருங்கினர்; தைரியமாகக் கேட்டனர்.
“ஐயன் மீர்! உங்கள் மேனி அழகின் ரஹசியம் என்னவோ?”
இந்தக் கால நடிகைகளாக இருந்திருந்தால் அவர் என் மேனி அழகிற்கு நான் பாவிப்பது xyz – சோப்புதான் என்று சொல்லி இருப்பர்.
ஆனால் சாம்பர்லைனோ சற்றும் தயக்கம் இன்றி பதில் கொடுத்தார்.
இளமைத் துடிப்புடன் வாழ வேண்டுமா?
அதிகம் நடக்காதீர்கள்; எங்கெங்கெல்லாம் காரில் செல்ல முடியுமோ அங்கெல்லாம் காரிலேயே செல்லுங்கள் நடந்து தொலையாதீர்கள்!!!
சுருட்டு குடிக்கும் வழக்கம் இருந்தால் இரண்டு சுருட்டுகளில் எது சக்தி வாய்ந்ததோ, எது நீளமானதோ அதைக் குடியுங்கள்; அது மட்டுமல்ல அனாவசியமாக நடக்காதீர்கள்; எங்கெங்கெல்லாம் காரில் போக முடியுமோ அங்கெல்லாம் காரில் செல்லுங்கள்– என்றார்.
கேட்க வந்தவர்களுக்கு ஏனடா கேட்க வந்தோம் என்பது போல ஆயிற்று!
xxx
மாக்ஸிம் கார்க்கி
சோவியத் ரஷ்யாவின் புகழ் பெற்ற எழுத்தாளர் (Maxim Gorky) மாக்ஸிம் கார்க்கி. அவர் சோஷலிஸ அறிஞர். அவரை அமெரிக்காவுக்கு அழைத்த நண்பர்கள் அவரை (Coney Island) கோனி தீவிலுள்ள ஒரு கேளிக்கைப் பூங்காவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே வீர தீர சாஹசச் செயல்கள் நடந்தன. இவருக்கு எல்லாவற்றையும் நன்கு காட்டிவிட வேண்டும் என்று எண்ணி பாதாள அறை, நிலத்தின் மேலுள்ள மண்டபம் ஆகியவற்றுக்கு எல்லாம் அவரது நண்பர்கள் அழைத்துச் சென்றனர்.
அவர் பார்க்காத சர்கஸ் காட்சிகளே இல்லை; அந்தர் பல்டி, குட்டிக்கரணம், வேகப் பாய்ச்சல், மேலிருந்து கீழே குதித்தல் தாவுதல் எல்லா வற்றையும் நண்பர்கள் காட்டினர். கார்க்கியின் நண்பர்களுக்குப் பரம த்ருப்தி.
கார்க்கிக்கு????????
எல்லோரும் ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கியது. மாக்ஸிம் கார்க்கியிடம் அவருடைய நண்பர்கள் வினவினர்.
அன்புடையீர், எங்களுக்கு எல்லாம் இன்று உங்களுடன் இருந்தது மிகவும் பிடித்து இருந்தது; உங்களுக்கும் மகிழ்ச்சிதானே?
அவர் உடனே பதில் தராமல் சற்று நேரம் யோசித்தார்; பின்னர் சொன்னார்.
அட தோழர்களே; நீங்கள் எல்லோரும் எவ்வளவு துயரத்துடன் வாழ்கிறீர்கள்!!
((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))
— சுபம் —–
You must be logged in to post a comment.