Date: 14 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 13-36 Post No. 7095
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
அக்டோபர் 2. 151வது காந்தி ஜயந்தி.
(150வது ஜயந்தி ஆண்டு விழா!) இன்றையை மாலைமலர் (2-10-2019) இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
இது.
அண்ணலே! இன்னும் ஒரு முறை வருக!!
ச.நாகராஜன்
“வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து
நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை
தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத
தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா!
நீ வாழ்க, வாழ்க!!”
என்று மஹாகவி பாரதியார் போற்றிய
பெரும் மஹாத்மாவின் பிறந்த நாளில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்தி அவரது
வாழ்க்கையை பிரமிப்புடன் பார்க்கிறோம்.
ஒரே நாளில் அவர் மஹாத்மாவாக உருவாகி விடவில்லை. கத்தியை விடக் கூர்மையான
சத்தியத்தின் வழி நடந்து தன்னை இறுதி வரை சோதனை செய்து கொண்டே இருந்தார்; உயர்த்திக்
கொண்டே இருந்தார். அதனால் தான் அவர் மஹாத்மா ஆனார்.
சிறு சிறு விஷயங்களில் கூட அக்கறை
காட்டியவர் அவர்; அந்தக் கவனமே அவரை பிரம்மாண்டமான பிரச்சினைகளையும் அனாயாசமாகத் தீர்த்து
வைக்க உதவியது; அவர் ஒரு சொல் சொன்னால் நாடே அதைக் கேட்டது. உலகமே வியந்தது.
அவரது வாழ்க்கை முழுவதும் ஆயிரக்கணக்கான சம்பவங்கள்
அவரை அப்படியே உள்ளபடி படம் பிடித்துக் காட்டின என்றால் அது மிகையல்ல.
உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கவிருந்த
தருணம். சபர்மதி ஆசிரமத்தில் நேரம் தவறாமை என்பது நிச்சயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய
பழக்கமாக இருந்தது. பிரார்த்தனைக்கான மணி அடிக்கப்பட்டவுடன் பிரார்த்தனைக் கூடத்தின்
கதவுகள் மூடப்பட்டு விடும். யார் பிரார்த்தனைக்கு வரவில்லையோ அவர்கள் ‘வராதவர்’ பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவார்கள்.
ஒரு நாள் காந்திஜி பிரார்த்தனைக்கூடத்தில்
நுழையும் தருணத்தில் பிரார்த்தனைக்கான மணி அடித்தது. உடலின் பெரும்பகுதியும் ஒரு காலும்
பிரார்த்தனைக் கூடத்தில் இருக்க ஒரு கால் மட்டும் பிரார்த்தனைக் கூடத்தின் வெளியில்
இருந்தது.
கதவருகே இருந்த தொண்டர் அவரை உள்ளே வரவிட்டு கதவை மூடினார்.
பிரார்த்தனை முடியும் சமயத்தில்
காந்திஜி கூறினார் :” நான் இன்று சரியான நேரத்திற்கு
வராதவனாகி விட்டேன். எனது உடலின் பெரும்பகுதியும் ஒரு காலும் உள்ளே இருந்தாலும் இன்னொரு
கால் வெளியே தான் இருந்தது. ஆகவே கதவருகே இருந்த தொண்டர் என்னை உள்ளே வர அனுமதித்திருக்கக்
கூடாது. என்னையும் வெளியே தான் அனுப்பி இருக்க வேண்டும். என்றாலும் எனக்காக உங்களில்
பலரும் காத்திருப்பீர்கள் என்ற எண்ணத்தால் நெகிழ்ந்து போய் நான் வந்து விட்டேன். ஆனால்
இப்படிப்பட்ட சலுகை நோயாளி மற்றும் அவருடன் கூட வருபவருக்குத் தான் காண்பிக்கலாமே தவிர இதரர்களுக்கு காண்பிக்கப்பட
கூடாது; அப்படி ஒரு சலுகையை யாரும் எதிர்பார்க்கவும் கூடாது”.
காந்திஜியின் சுய சோதனை அனைவரையும்
வியக்க வைத்தது. அதில் தனக்குத் தானே அவர் வழங்கிக் கொண்ட தீர்ப்பு அனைவரையும் பிரமிக்க
வைத்தது.
அன்றிலிருந்து பிரார்த்தனை மூடப்பட்ட கதவுகளுடன் கூடிய பிரார்த்தனை கூடத்தில்
நடக்காமல் திறந்த வெளியில் நடக்க ஆரம்பித்தது. அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் பிரார்த்தனைக்கு
வரலாயினர்.
இது மஹாபாரதத்தில் நடந்த ‘ஒரு
கால் வெளியே, ஒரு கால் உள்ளே’ சம்பவத்தை நினைவு படுத்துகிறது.
இந்த சம்பவம் தமிழக தலங்களில்
ஒன்றான திருமழபாடியில் நடந்ததாகத் திருமழபாடி புராணம் விவரிக்கிறது.
சம்பவம் இது தான்:
பாரதப் போர் முடிந்தவுடன் தர்மபுத்திரர்
ராஜசூய யாகம் நடத்த விரும்பினார். அந்த யாகத்திற்கு (மனிதனும் மிருகமும் இணைந்த) புருஷாமிருகம்
வருகை தந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய அவர் பீமனைப் புருஷாமிருகத்தை அழைத்து
வரப் பணித்தார்.
மழபாடியில் புருஷாமிருகத்தைக் காணாத பீமன் கீலமலையில் புருஷாமிருகத்தைக் கண்டான். ஜெயித்து அழைத்து வருதலே
மரபாதலால், யுத்தத்திற்கு புருஷாமிருகத்தை அவன் அழைத்தான்.
பீமன் யுத்தம் செய்யவே விரும்புகிறான் என்பதை நன்கு அறிந்த மிருகம், “ நான் மழபாடியை நோக்கி ஓடுவேன். என்னைப் பிடிப்பதற்குத் துரத்தி வர வேண்டும். நான் மழபாடியின் எல்லையைத் தாண்டுவதற்குள் என்னைப் பிடித்து விட்டால் நீ என்னை வென்றவன் ஆவாய்” என்று சொல்லி விட்டு ஓடத் தொடங்கியது.
பீமனும் துரத்தினான். ஆனால் அவன் புருஷாமிருகத்தைப் பிடித்த போது பீமனின் ஒரு கால் மழபாடி எல்லையிலும் இன்னொரு கால் எல்லைக்கு அப்பாலும் இருந்தது.
பீமன் தான் வென்றதாகக் கூற புருஷாமிருகமோ அதை மறுத்தது. வழக்கைத் தீர்த்து வைக்க தர்மபுத்திரரே உகந்தவர் என்று இருவரும் கருதி தர்மரிடம் வந்தனர்.
அனைத்தையும் கேட்ட தர்மபுத்திரர்,” புறவெல்லையில் காலை வைத்த பீமனின் ஒருகாலை நீ வெட்டி எடுத்துக் கொள்ளலாம்” என்று புருஷாமிருகத்திடம் கூறித் தீர்ப்பை அளித்தார்.
தர்மரின் நடு நிலைமையைக் கண்டு வியந்த புருஷாமிருகம் பீமனை வெட்டாமல் விட்டது.அனைவரும் மகிழ்ந்தனர்.
காந்திஜியின் பிரார்த்தனைகூட சம்பவமும் அதையொட்டி
இருக்கிறதல்லவா! தன் ஒரு கால் வெளியே இருந்ததால் தன்னை உள்ளே அனுமதித்திருக்கக் கூடாது
என்று அவர் பேசிய பேச்சு தர்மபுத்திரரை நினைவு படுத்துகிறது.
இதே போல ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அவர் நடுவு நிலைமையுடன்
செயல் பட்டதை அவர் வாழ்நாள் நெடுக நடந்த நிகழ்வுகள் பலவும் சுட்டிக் காட்டும். அவரைப் பற்றி நம்மிடையே இன்று இருக்கும் The Collected Works of
Mahatma Gandhi – இன் நூறு தொகுதிகளில்
அவற்றை நாம் காணலாம்.
தனி மனித ஒழுக்கத்தையும் சுயநலமின்றித் தியாகம் செய்து
அனைவருடனும் பகிர்ந்து உண்ணும் சமூக வாழ்க்கையையும் அவர் வற்புறுத்தி வந்தார்.
சிறு குழந்தைகளுடன் பேசுவதில் அவருக்கு மிகுந்த உற்சாகம்.
தேசத்தின் பெரும் தலைவர்களும், நிபுணர்களும் ஒரு புறம் நின்று காத்துக் கிடக்க அவர்
குழந்தைகளுக்கு தாராளமாக முன்னுரிமை அளித்தார். குழந்தைகளும் இதை உணர்ந்து தாராளமாக
சலுகைகளை எடுத்துக் கொண்டன. பொறாமையுடனும், எரிச்சலுடனும், சில சமயம் சந்தோஷத்துடனும்
இந்தக் காட்சியைத் தலைவர்கள் பார்ப்பது சகஜமானது.
தன்னைத் திருத்திக் கொள்வதில் தயங்காதவர் அவர். காந்திஜிக்கு
அவ்வளவாக ஹிந்தி மொழி வராது. தான் பேசும் ஹிந்தி சரியானபடி இல்லை என்பதை உணர்ந்த அவர்
ராஜஸ்தானைச் சேர்ந்த தனது தொண்டரான ராம் நாராயண் சௌத்ரியிடம் தான் பேசும் போது ஏற்படும்
பிழைகளை உடனுக்குடன் சொல்லித் திருத்த வேண்டும் என்றார். இதற்காக யார் வந்தாலும், எங்கே
போனாலும் அவர் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்றார். அத்துடன் மட்டுமன்றி தனது பிழை
ஹிந்தி இலக்கணத்தின் எந்த விதியின் படி பிழை என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்றார்.
நடந்து செல்லும் போது பெரிய தலைவர்கள் சற்றுத் தள்ளிச்
செல்ல காந்திஜியின் மிக அருகில் செல்வது அவருக்குத் தயக்கமாக இருந்தது. அதை விட சங்கடம்
அவரது தவறுகளை அனைவருக்கும் முன்பாக உரக்கச் சொல்ல வேண்டி இருந்தது தான். ‘அவமானமான’ இந்த வேலை அவருக்குப் பிடிக்கவே இல்லை. காந்திஜியின் தவறுகளை
அவ்வப்பொழுது உடனுக்குடன் சுட்டிக் காட்டி வந்தவருக்குச் சில சமயம் எந்த இலக்கண விதியின்
படி அது தவறு என்பது தெரியவில்லை; முழித்தார், விழித்தார். காந்திஜி நகைத்தார். ஒருவழியாக
அந்தப் பணியிலிருந்து அவர் ‘விடுதலை’ பெற்றார்.
பிரார்த்தனை கூட்டத்தில் ஒரு நாள் அன்று தான் பார்த்த கையெழுத்து
சிறந்தது என்று கூறி அதை
எழுதியவரைப் புகழ்ந்தார் அவர்.தன் கையெழுத்து சரியே இல்லை என்று ஆதங்கப்பட்ட அவர் அழகாக,
குண்டு குண்டாக இடம் விட்டு எழுதப்படும் கையெழுத்தல்லவா சிறந்தது என்றார்.
இப்படி ஆயிரக்கணக்கான விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எதிலும் நேர்த்தி, எப்பொழுதும் நேர்த்தி!
கொல்லத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவில் அவர் இப்படிக்
கூறினார்:
“ஹிந்து மதத்தின் எல்லா உபநிஷத்துக்களும் மற்ற எல்லா
வேத நூல்களும் எரிந்து சாம்பலாகி விடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது ஈசோபநிஷத்தின்
முதல் சுலோகம் மாத்திரம் ஹிந்துக்களின் மனத்தில் பதிந்திருந்தால் ஹிந்து மதம் எக்காலத்திலும்
அழிவின்றித் திகழும்.
சுலோகத்தின் சாரம் : இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றிலும்
சிருஷ்டிகர்த்தாவான இறைவன் வியாபித்துள்ளார். எனவே, எல்லாவற்றையும் தியாகம் செய்து
அவருக்கு அர்ப்பணம் செய்யுங்கள். பிறகு உங்களுக்குக் கிடைக்கும் ஒரு பங்கை மாத்திரம்
உபயோகப்படுத்திக் கொண்டு அனுபவியுங்கள். யாருடைய உடைமைகளுக்கும் ஒரு காலத்திலும் பேராசைப்
படாதீர்கள்.”
கொல்லத்தில் காந்திஜி நிகழ்த்திய இந்தச் சொற்பொழிவை
விரிவாக 30-1-1937 ஹரிஜன் இதழ் தாங்கி வந்தது.
யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, எனக்குள்
ஒரு குரல் கேட்கிறது. அதையே கடவுள் என நான் நம்புகிறேன். அந்தக் குரலின் வழி காட்டுதலில்
நான் இயங்குகிறேன் என்று வெளிப்படையாக அந்தக் ‘கடவுளின் புத்திரர்’ கூறினார்.
பகுத்தறிவும் இறை நம்பிக்கையையும் ஒப்பிட்ட அவர்
பகுத்தறிவைத் தாண்டியது இறை நம்பிக்கை. அதை பகுத்தறிவின் அளவுகோலால் ஒருபோதும் அளக்க
முடியாது என்றார்.
காந்திஜியைப் போற்றி எழுதப்பட்ட பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளும்
புத்தகங்களும் இன்று காணக் கிடைக்கின்றன. ஆனால் அவரைப் பற்றி உலகின் பெரும் விஞ்ஞானியான்
ஐன்ஸ்டீன் கூறியது குறிப்பிடத்தகுந்தது.
அவர் கூறினார் : “இப்படி ஒரு மனிதர் ரத்தம் சதையுடன் இந்த பூமியில்
நடமாடினார் என்பதை இனி வரும் தலைமுறையினர் அரிதாகவே நம்புவர்” (“Generations to come will scarce believe that such a
one as this ever in flesh and blood walked upon this earth.”)
ஈசோபநிடதம் முழுவதையும் தன் கைப்பட எழுதிய அவர் அது
கூறும் 125 வயது வரை வாழ விரும்பினார்; வெளிப்படையாகவும் அப்படிச் சொன்னார்.
வாழ்வை ஒரு தெய்வீக ஒளி என்று அவர் நம்பினார்; அதை
அப்படியே தன்னைச் சந்தித்த வில் டியூரண்ட் என்னும் அறிஞரிடமும் சொன்னார்.
ஏன் 125 வயது வாழ விரும்புகிறீர்கள் என்று ஒரு அமெரிக்க
பத்திரிகையாளர் அவரைக் கேட்ட போது, “தொண்டு செய்ய” என்று பதில் கூறி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.(ஹரிஜன்
6-10-1946 இதழ்)
ஆனால் 1947 ஜூனில் அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டார்.
“இன்று உருவாகி வரும் நான் காணும் இந்தியாவில் எனக்கு
இடமில்லை. எனவே 125 வயது வரையில் வாழும் நம்பிக்கையை
நான் கைவிட்டு விட்டேன். நான் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் இருக்கலாம்.” என்று அவர் கூறியதை 8-6-1947 ஹரிஜன் இதழில் காண
முடிகிறது.
அனைவரிடமும்
அன்பு, அனைவருக்கும் தொண்டு செய்தல் என்ற கொள்கையை வலியுறுத்திய அவர் அது கட்டுப்பாடுடன்
கூடிய தனி மனித ஒழுக்கத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றார். இந்தியா அந்த திசையில்
வழி நடக்கவில்லையோ என அவருக்கு ஐயம் ஏற்பட்டது போலும்!
அந்த ஐயத்தைப் போக்கி ஒளி மிகுந்த இந்தியாவை உருவாக்க
வேண்டிய பொறுப்பில் ஒவ்வொரு இந்தியரும் இன்று இருக்கிறோம்.
அவர் இறப்பதற்குச் சில தினங்கள் முன்பு மனு காந்தி
அவரை மஹாத்மாஜி என்று அழைக்கவே, உடனே அவர், “அப்படிக் கூறாதே! இறக்கும் போது என் வாயிலிருந்து
ராம நாமம் வந்தால் அப்போது, அப்போது மட்டுமே என்னை மஹாத்மா என்று அழை” என்றார்.
சுடப்பட்டு அவர் ஆவி பிரியும் போது அவர் ‘ஹே, ராம்,
ராம்’ என்று கூற அவர் இறைவனுடன் இணைந்தார்.
‘இப்போது அவரை மஹாத்மா என்று கூறலாமா!’ என்று விசும்பியவாறே கேட்டார் மனு காந்தி.
இன்று நம்மைச்
சூழ்ந்துள்ள பல பிரச்சினைகளைத் தீர்க்கும் விதமாக அவர் வழி காட்டியபடி தனி மனித ஒழுக்கத்தையும்
கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பதே நமக்கு உள்ள ஒரே வழி!
அண்ணலின் பிறந்த நாளில் அவர் வழி நடக்க உறுதி பூண்டு
நாம் வேண்டுவது இது தான் : “அண்ணலே! மீண்டும் இங்கு வந்து தோன்றுக! எங்களை வழி நடத்திச்
செல்க”
Pictures are taken from
various sources; beware of copyright rules; don’t use them without permission;
this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
வள்ளுவர் புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில் பொய் சொல்வதில்
தப்பில்லை என்கிறார்.
நரியைக் காப்பாற்ற ரஸ்ஸல் பொய் சொன்னார். ஆனால் அந்த
நன்மை பயக்கும் பொய்யைக் கூட சத்திய சோதனை செய்து வந்த காந்திஜி ஒத்துக் கொள்ளவில்லை.
*
காந்திஜி வழியில் இன்னொரு கதை உண்டு.
ஒரு முறை துர்வாஸ முனிவரிடம் ஒரு மான் அடைக்கலம்
புகுந்தது.தன்னைத் தேடிக் கொண்டு வேட்டைக்காரர்கள் வருவதாகவும் அவரிடம் அடைக்கலம் புகுவதாகவும்
கூறிச் சரணடைந்தது.
துர்வாஸ மஹரிஷி அதை தன் ஆசனத்தின் பின்னால் மறைத்து
வைத்தார்.
வேட்டைக்காரர்கள் வந்தனர். மானைப் பார்த்தீர்களா
என்று கேட்டனர்.
துர்வாஸ முனிவரின் கண்கள் சிவந்தன. கோபம் கொப்பளிப்பது
போல அவர் முகம் மாறியது.
‘என்ன கேட்டீர்கள்’ என்று அவர் உரக்க வேட்டைக்காரர்களை
நோக்கிக் கேட்டார்.
துர்வாஸ மஹரிஷியின் கோபம் நாடறிந்த ஒன்று.
எங்கே தவம் கலைந்த நேரத்தில் அதற்குத் தாம் தான்
காரணம் என்று சபிக்கப் போகிறாரோ என்று வேட்டைக்காரர்கள் பயந்தனர்.
அந்த இடத்தை விட்டு ஓடோடிச் சென்றனர்.
மான் பிழைத்தது; மஹரிஷியும் மகிழ்ந்தார்.
ஒரே விஷயம்.
பல விதமான கருத்துக்கள்.
வீரராகவ முதலியார், பர்ட்ரெண்ட் ரஸ்ஸல், மஹாத்மா
காந்திஜி, துர்வாஸ மஹரிஷி ஆகிய இவர்கள் கூறிய அனைத்தையும் பார்க்கும் போது சத்தியம்
என்பது கத்தி முனையை விடக் கூர்மையானது; அதை முதன்மையாகக் கொண்ட தர்மம் இன்னும் சூக்ஷ்மமானது
என்று தெரிகிறது.
யத் பாவம் தத் பவதி!
(இதிலும் கூட) உள்ளத்தின் உணர்விற்கேற்ப உண்மை அமைகிறது.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources;
beware of copyright rules; don’t use them without permission; this is a non-
commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and
tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs
11,000.
வாழ்க்கை பற்றி கீட்ஸ் எழுதிய வரிகளை கண்ணதாசன் பாடலுடன் ஒப்பிடலாம்
John Keat’s Poem Sleep and Poetry
(Lines 85-95)
Stop and consider! life is but a day;
A fragile dew-drop on its perilous way
From a tree’s summit; a poor Indian’s sleep
While his boat hastens to the monstrous steep
Of Montmorenci. Why so sad a moan?
Life is the rose’s hope while yet unblown;
The reading of an ever-changing tale;
The light uplifting of a maiden’s veil;
A pigeon tumbling in clear summer air;
A laughing school-boy, without grief or care,
Riding the springy branches of an elm.
போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா – இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா
ஒஹோஹோ… ஒஹோஹோ…
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த மண்ணில் நமக்கே இடமேது? வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும் ஜனனம் என்பது வரவாகும் – அதில் மரணம் என்பது செலவாகும்
——போனால் போகட்டும் போடா
இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை இல்லை என்றால் அவன் விடுவானா? உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா? கூக்குரலாலே கிடைக்காது – இது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
—போனால் போகட்டும் போடா
…
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா? இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா? நமக்கும் மேலே ஒருவனடா – அவன் நாலும் தெரிந்த தலைவனடா – தினம் நாடகமாடும் கலைஞடா —-போனால் போகட்டும் போடா
திரைப்படம்: பாலும் பழமும் (1961) பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் வரிகள் : கவிஞர் கண்ணதாசன் xxxx
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
பருவமென்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே பருவமென்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
Date: 2 SEPTEMBER 2019 British Summer Time uploaded in London –6-32 am
Post No. 6966
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000.
முல்லா, “எனது தூக்கம் தொலைந்து
விட்டது. அதைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்” என்றார்.
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Pictures are taken from various sources; this is a non-
commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and
tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.