LONDON SWAMINATHAN’S JUNE RELEASE: FIVE BOOKS

Ref. 148  Books written by London Swaminathan in Tamil and English.

ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

(1) Is Brahmastra a Nuclear Weapon?

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

(3).Famous Trees of India

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,

KUMARIK KANDAM AND TOLKAPPIAM

(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

(7). Interesting  Anecdotes from the World of Music

(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES

(10).Animal Einsteins:  Amazing Intelligence of Creatures in Nature

(11) THE WONDER THAT IS HINDU TEMPLE

(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!

(13). Date of Mahabharata War & other Research Articles

(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints

(15). HINDU STORIES ABOUT MONKEYS,

DONKEYS AND ELEPHANTS

16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE

17. Mayan Civilization and Hindu Nagas

Asuras, Rishis and Gandharvas

18.Hindu Wonders in Muslim Countries

19.Hindu Influence in Mesopotamia and Iran

20. Hinduism in Sangam Tamil Literature

21.Interesting Titbits from Bhagavad Gita

22.Om in Rome; Manu Smriti in London Church

 23.Tamil Hindus 2000 Years Ago!  

24.Rewrite Indian History

25. Beautiful Hindu Women and

Wonderful Weddings

26.Woman is an Adjective, Man is a Noun2

27.Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!

28. 1000 Hindu Quotations for Speakers and Students

29. History is a Mystery in India

30.Thousand More Hindu Quotations for Speakers and Students

31. Controversial and interesting Laws in Manu Smriti

(First Part)

32. Controversial and interesting Laws in Manu Smriti

(Second Part)

33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned

34. Interesting Anecdotes for Partygoers  and Essay Writers

35.More Interesting Anecdotes for Partygoers

36.Third Book of Anecdotes for Students and Speakers

37. Brahmins in Tamil and Sanskrit Literature

38.Gandhiji’s Views on Controversial Matters

39.Guide to Hindu Homa (Havan) and Festivals

40.Guide to 108 Famous Temples in Maharashtra

41.Tamil Hindu Encyclopaedia

42.Strange Stories about Hindu Saints Temples and

 Historical Atrocities

43. Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand 

44.Medical Wonders in Hindu Scriptures

45.Hidden Secrets in Vishnu Sahasranama

46.My Research Notes on Viveka Chudamani

47.Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit

48.Country of Kangaroos and Koalas! Amazing Australia!! 

49. Dreams in Hindu Literature 

50.History: A Bundle of Facts and Fabrications

51.Tamil and Sanskrit Proverbs around the World

52.Hindu Beliefs in Shakesperean Plays

****

TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட நூல்கள்:

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

4.பெண்கள் வாழ்க –

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு

6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்

7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?

 8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!

11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!

12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி

13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்

14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!

கிரேக்க நாட்டில் இந்துமத  சடங்குகள், கதைகள்!!

17.சிங்கப்பூரில் சிவபெருமான் !

சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!

18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

19.தொல்காப்பிய அதிசயங்கள்

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்

22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!

24.மனைவி ஒரு மருந்து

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

28.பறவைகள் சகுனம் உண்மையா?

கடவுளுக்கு  வாகனம் எதற்காக?

29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்!  இறந்த பின்னர்

பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு

யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்

தரும் சுவையான செய்திகள்

33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்

34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்

35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை

திகைக்கவைக்கும் கவிதைகள் !

 36.முக்கிய கோவில்கள், சமாதிகளை

தரிசிக்க உதவும் கையேடு

37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!

38.சுவையான  யானை  பூனை கதைகள்,

உண்மைச் சம்பவங்கள்

39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்

40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர்,  சாணக்கியன் சொன்ன கதைகள்

41. மஹாபாரதப் போர் நடந்ததா?

42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்

43.அற்புத மூலிகைகள் பற்றி

வேதம் தரும் செய்திகள் (title)

44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்

பெண்கள்

45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்

46. பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் (title)

47.அதர்வண வேத பூமி சூக்தம்   

சொல்லும் வியப்பான செய்திகள்

48.வரலாற்றில் சில புதிர்கள்

தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?

ஏசு கிறிஸ்து  இந்தியா வந்தாரா?

49.லண்டன் பார்க்க வாறீங்களா !

சிட்னி பார்க்க வாறீங்களா? 

50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்

அரிய அறிவியல் செய்திகள்

52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

                     (கட்டுரைத் தொகுப்பு)

53.உபநிடதத் தென்றலும் வேத மழையும் 

54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?       

                  (கட்டுரைத் தொகுப்பு)

55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்

56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி

சொல்லும் அதிசயச் செய்திகள்

57.கட்டுரைக் கதம்பம்

(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title

58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்

59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)

60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )

61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

62.  தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்

64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’

(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title

65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக

அற்புத ஒற்றுமைகள்

66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்

67.மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி  என்ன சொல்கிறார்? 

68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்

600 கேள்வி–பதில்கள் !!

70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு

72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற  கோவில்கள்

73.இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)

74.Second part

75. மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!

76. ஆந்திரம், தெலுங்கானாவில்

புகழ்பெற்ற கோவில்கள் – முதல் பாகம் (book title)

77. தமிழில் ஹனுமான் சாலீஸா விளக்க உரை

78. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஞ்ஞான ரகசியங்கள்

79.அவ்வை ,பாரதி முதல் பாபா, மோடி வரை ! 38 ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

80.அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக் கட்டுரைகள் (Two Parts)

81.தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க

மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்     

82.தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

83.அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா

84.ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்

பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு

85.பஸ், ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள்

86.கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய  புதிய ஆராய்ச்சிக்  கட்டுரைகள்

87.விநாயகர் அகவலுக்கு புதிய ஆராய்ச்சி உரை

88.தமிழ், சம்ஸ்க்ருத மொழிகளை வளர்த்த

ஜெர்மானிய அறிஞர்கள்

89. நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள் 

90. வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்

நம் நாட்டுக் கதைகளும்!

91.சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை

92.இந்துமதத்தில்  விஞ்ஞானம் புதிய  செய்திகள்

*******************

வேறு பதிப்பகம் மூலம் :-

1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)

2.இதழியல்

xxx

***** 

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

****

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

 TAGS- LONDON SWAMINATHAN, BOOK LIST, 148 BOOKS, TAMIL, ENGLISH, JUNE RELEASE

DHARMA CHAKRAVARTI NARENDRA MODI

PM Modi honoured as ‘Dharma Chakravarti’ at centenary of Jain saint Vidyanand 

PM Modi said “I do not consider myself suitable for this. But it is our culture that whatever we receive from saints, we accept it as ‘prasad”. 

Prime Minister Narendra Modi on Saturday was conferred with the title of ‘Dharma Chakravarti’ at the centenary celebrations of Jain saint Acharya Shri 108 Vidyanand Ji Maharaj. 

The centenary celebrations mark the formal commencement of a year-long national tribute to the spiritual leader, being organised by the Union Culture Ministry.(PTI)

“On this occasion, you honoured me with the title of ‘Dharma Chakravarti’. I do not consider myself suitable for this. But it is our culture that whatever we receive from saints, we accept it as ‘prasad’. So, I humbly accept this ‘prasad’ and dedicate it to Maa Bharati,” PM Modi said during his speech.

The centenary celebrations mark the formal commencement of a year-long national tribute to the spiritual leader, being organised by the Union Culture Ministry in collaboration with the Bhagwan Mahaveer Ahimsa Bharti Trust, Delhi. Talking about how today’s date is special as Acharya Vidyanand Muniraj received his title on this very day in 1987, which represented a ‘pavitra dhaara’ connecting Jain culture to ideas of restraint and compassion.

“This day is also special because on 28th June 1987, Acharya Vidyanand Muniraj received the title of ‘Acharya’. It wasn’t just an honour but it was also a ‘pavitra dhaara’ connecting the Jain culture to ideas, restraint and compassion,” PM Modi said.

“When we are celebrating his 100th birth anniversary today, it reminds us of that historic moment. On this occasion, I bow to the feet of Acharya Shri Munirajji. I pray that his blessings are with us always. People, these centenary celebrations are not just any normal event. It has the memory of a time period and the remembrance of an ascetic life. Today, to make this moment memorable, postal stamps have been made, for this too, I greet the people,” the Prime Minister added. 

‘India introduced non-violence to the world but…’: At Jain seer’s centenary celebrations, PM Modi takes jibe at Pakistan

Speaking at the centenary celebrations of Jain spiritual leader Acharya Vidyanand Ji Maharaj, PM Modi credited India’s saints, mahants and acharyas for the country’s ‘immortal philosophy’.

n a veiled warning to Pakistan, without naming the country, Prime Minister Narendra Modi said on Saturday that India had introduced the world to the power of non-violence, but would not allow anybody to meddle with it

****

India’s civilisational legacy rooted in immortal ideas, says PM Modi ‘Jo humein chhedega’ line from him draws loud cheers

NEW DELHI: Prime Minister Narendra Modi said on Saturday India is the most ancient living civilisation of the world due to the immortal ideas and philosophies of its saints and seers. Speaking at the centenary celebrations of Jain spiritual figure Acharya Vidyanand Maharaj Ji’s birth anniversary here, PM Modi paid rich tributes to his contribution in different fields and asserted that his ideas have inspired the government’s welfare schemes. Be it providing housing, drinking water or health insurance, the government is ensuring saturation coverage of its welfare measures so that no one is left behind, he said. PM Modi also referred to the preceding speech of a Jain seer, noting that he was apparently blessing Operation Sindoor. The prime minister’s mere mention of “Jo humein chhedega” brought massive cheers from the audience but he did not dwell any further on the issue. PM Modi asserted that India is a country where service and humanity is central to its ethos. “When for ages, efforts were being made to quell violence with violence, then India introduced to the world the power of ‘ahimsa’ (non-violence),” he said. “We have kept the sentiment of serving humanity supreme. Our ethos for serving is unconditional and beyond selfishness, and inspired by ‘parmarth’ (the Supreme Being),” the PM said. 

–SUBHAM—

Tags- Jain award, Modi, Dharma Chakravarti

சுடச்சுடச் செய்திகள் HOT NEWS பிரதமர் மோடிக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டம்

ஜைன துறவி வித்யானந்த் மகாராஜ் நூற்றாண்டு விழாவில்.. பிரதமர் மோடிக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டம்

ஜைன துறவி ஆச்சார்ய வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடிக்குதர்ம சக்கரவர்த்தி என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதை பிரசாதம் போல ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

ஜைன ஆன்மிகத் தலைவர்களில் ஒருவரும்சமூக சீர்திருத்தவாதியுமான ஆச்சார்ய வித்யானந்த் ஜி மகாராஜின் 100வது பிறந்தநாளைக் கௌரவிக்கும் ஒரு வருட கால விழா தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம்டெல்லியில் உள்ள பகவான் மகாவீர் அகிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. 

ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜ் ஏப்ரல் 221925 அன்று கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் கிராமத்தில் பிறந்தார். நவீன காலத்தின் தலைசிறந்த ஜைன அறிஞர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். இவர் 8,000-க்கும் மேற்பட்ட ஜைன ஆகம வசனங்களை மனப்பாடம் செய்தவர. 

ஜைன தர்ஷன்‘, ‘அனேகாந்த்வாத்‘, மற்றும் மோக்ஷமார்க் தர்ஷன்‘ உள்ளிட்ட ஜைன தத்துவம் மற்றும் நெறிமுறைகள் குறித்து 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். இவரது நூற்றாண்டு தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போதுதான் அவருக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்டது.

****

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்களின் துணைத் தலைவர் (VP) பிரகாஷ் ஷா. முகேஷ் அம்பானியின் மிக முக்கியமான நம்பிக்கைக்குரியவர். 75 கோடி வருட வருமானம். அனைத்து வசதிகளுடன் உயர்தர வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். தங்கள் சொத்துக்கள் அனைத்தை யும் துறந்துவிட்டு பிரகாஷ் ஷா அவர்களும் அவருடைய மனைவி நைன் ஷாவும் ஜைன மதத் துறவிகளாகிவிட்டனர். சுமார் 1000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தை யும் துறந்துவிட்டனர்.

பாம்பே ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல முக்கியமான திட்டங்களுக்கு செயல் வடிவம் தந்தவர்.

ஜைன மதத் துறவியாகிவிட்ட இருவரும் மிக சாதாரண வெள்ளையாடை உடுத்திக் கொண்டு, தங்கள் துறவு வாழ்க்கைக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட் களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு காலணிகள் இன்றி வெறும் கால்களுடன் நடந்தே செல்வர். ஜைன மதக் கோட்பாட்டின் படி பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்திடப் புறப்பட்டு விட்டனர்.

****

STORY OF TAMIL SAINT KANNAPPA WHO DID WORLD’S FIRST EYE TRANSPLANT OPERATION WITH HERBS; NOW THE TELUGU FILM IS WINNING.

ரூ.30 கோடிக்கும் மேல் வசூலித்த கண்ணப்பா படம்!

கண்ணப்பா திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு, கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் படத்தில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படம் வெளியான 3 நாட்களில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

xxxx

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 29-6-2025 (Post.14,707).

Written by London Swaminathan

Post No. 14,707

Date uploaded in London –  30 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும்  லதா யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த்  வணக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 29-ஆம்  தேதி 2025-ம் ஆண்டு .

முதலில் இந்தியச் செய்திகள்!

புரி ரத யாத்திரை துவங்கியது

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை ஜூன் 27  அன்று துவங்கியது புரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்புப் படையினா் 10,000 பேருடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மூன்று ரதங்களும் ஒன்பது நாட்களுக்குப்பின்னர் ஜகந்நாதர் கோவிலுக்குத் திரும்பும். ஜகந்நாதர் , பலபத்ரா, சுபத்ரா ஆகிய மூன்று தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் புதிய ரதங்களை செய்வது இந்த தேரோட் டத்தின் சிறப்பு.

சுமார் 15 லட்சம் மக்கள் இந்த தேர் விழாவில் கலந்து கொள்கிறார்கள் தேர்கள், மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ள  குண்டேச்சா கோவில் வரை இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் திரும்ப வரும்.

****  .

சபரிமலையில் நவக்கிரக பிரதிஷ்டை:ஜூலை 11ம் தேதி நடை திறப்பு


சபரிமலை சன்னிதானத்தில் புதிய நவக்கிரக கோயில் பிரதிஷ்டைக்காக ஜூலை 11- ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறம் உள்ள நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து புதிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பிரதிஷ்டை ஜூலை 13- ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சபரிமலை நடை 11-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சுத்திக்கிரியைகள் நடைபெறும். ஜூலை 12- ம் தேதி பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் நடைபெறும். 13 -அதிகாலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி ஆகிய சடங்குகளுக்கு பின்னர் காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை நடைபெறும்.அன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும்.அதன் பின் ஜூலை 16- மாலை ஆடி பூஜை களுக்காக நடை திறக்கப்படுகிறது. ஜூலை 11 முதல் 13- வரை சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன்முன்பதிவு நேற்று தொடங்கியது.

****

திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழில் நடக்கும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு விழாவில் அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறும் என அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்நத வியனரசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7ல் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த கூறி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். இதுவரை பதில் இல்லை. எனவே திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை, கருவறை, கோபுர விமான பூஜையில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் முன்னிலையில்  விசாரணைக்கு வந்த போது யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழ் மொழியில் நடைபெறும் எனக் கூறப்பட்டது.

இதனை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து, இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

****

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கினை மூன்றாவது நீதிபதி அமர்வுக்குக் கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது

.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு முன்பு மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி நிஷா பானு தீர்ப்பு அளித்த நிலையில், இந்த தீர்ப்பில் இருந்து முரண்படுவதாக மற்றொரு நீதிபதி ஸ்ரீமதி கூறினார்.

இதனால், மனுக்களை 3-வது நீதிபதி அமர்வுக்கு மாற்றத் தலைமை நீதிபதிக்கு இரண்டு நீதிபதிகளும் பரிந்துரை செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும் – நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பு விவரம்!

திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்குகளில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், அதில் நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, திருப்பரங்குன்றம் மலையை திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை அல்லது சமணர் குன்றம் என்று அழைக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் எந்த குவாரி நடவடிக்கையும் செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார். சாலை, குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டால் மலை சேதமடையும் என்பதால் அவை வழங்கப்படாது என கூறிய நீதிபதி, திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய தொல்லியல்துறையை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

****

முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி : இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்!

முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க எத்தனை இடையூறுகள், பிரச்சனைகள், விமர்சனங்கள் எழுந்த போதும் இந்து இயக்கத் தொண்டர்கள் இரவு பகல் பாராது உழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டரீதியான பிரச்சினைகளுக்கு இந்து வழக்கறிஞர்கள் சட்டரீதியாகப் போராடி தடைகள் நீங்கப் பாடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து சம்பிரதாயங்களைச் சேர்ந்த போற்றுதலுக்குரிய 380 துறவிகள் மாநாட்டில் எழுந்தருளி ஆசி வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நமது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு மனதார  நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பலவித சிரமங்களுக்கிடையிலும் உற்சாகமாகக் கலந்து கொண்டு சிறப்பித்த லட்சோப லட்சம் இந்து குடும்ப சொந்தங்களுக்கு அவர் நன்றி எனக் கூறியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், நாத்திகம் என்பது வேறு இந்து விரோதம் என்பது வேறு என்பதைத் தெள்ளத் தெளிவாக மாநாடு எடுத்துக்கூறிப் புரிய வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆறு தீர்மானங்களை மகாநாடு நிறைவேற்றியது

1) திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.

2) பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்.

3) குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.

4) தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.

5) தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து, இந்து விரோதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் ஓட்டு போடக்கூடாது.

6) சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.

முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தர்.

*****

கண்ணப்பா திரைப் படம்

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் ‘கண்ணப்பா’.

மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பான் இந்தியா அளவில் உருவாகியுள்ள இப்படம் ஜூன் 27 அன்று வெளியிடப்பட்டது

கண்ணப்பா படத்தை பார்த்து வியந்து பாராட்டிய ரஜினிகாந்த்!

‘கண்ணப்பா’ படத்தை ரஜினிகாந்துக்கு மோகன் பாபு, மஞ்சு விஷ்ணு திரையிட்டுக் காட்டியுள்ளனர். படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். படத்தையும், மஞ்சு விஷ்ணுவின் நடிப்பையும் அவர் பாராட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் பகிர்ந்த கருத்தை மஞ்சு விஷ்ணு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். “‘கண்ணப்பா’ படத்தை ரஜினிகாந்த் பார்த்தார். படத்தைப் பார்த்த பிறகு என்னை இறுக்கி அணைத்துக் கொண்டார்.

‘கன்னப்பா’ ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொன்னார். இந்த தருணத்துக்காக நான் கடந்த 22 வருஷமா காத்திருக்கேன். அந்தக் கனவு இப்போ நிறைவேறிடுச்சு. இன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா, பெருமையா இருக்கு” என்று மஞ்சு விஷ்ணு கூறியுள்ளார்.

****

கடைசியாக ஒரு சுவையான செய்தி

அருப்புக்கோட்டை விநாயகர் கோவிலுக்கு எந்திர யானை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் செல்வ விநாயகர் கோவில் மற்றும் வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நடிகை திரிஷா மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து ரூ.6 லட்சத்தில் எந்திர யானையை வழங்கி இருக்கிறார்கள். 3 மீட்டர் உயரமும், 800 கிலோ எடையிலும் நிஜயானை போன்று பிரமாண்டமாக இந்த எந்திர யானை உள்ளது. அதற்கு கஜா என பெயரிட்டு இருக்கிறார்கள்.

கேரளாவில் உருவாக்கப்பட்ட எந்திர யானைக்கு தந்தங்கள், கண்கள், காதுகள் அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.சக்கரங்கள் மூலம் வீதி உலா அழைத்துச்செல்ல முடியும். சுவாமி ஊர்வலத்துக்கும் பயன்படுத்த முடியும். இந்த எந்திர யானை காதுகள், தும்பிக்கை மற்றும் தலையையும்அசைக்கிறது. பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் செய்கிறது. இந்த எந்திர யானையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மேளதாளங்கள் முழங்க கோவிலில் நடைபெற்றது.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு

ஜூலை மாதம் 6–ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 

லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tag- tamil hindu news, 29 june 2025, gnanamayam, broadcast, ஞானமயம் , உலக இந்து செய்திமடல் .

ஆலயம் அறிவோம்!  த்ரயம்பகேஸ்வரர் ஆலயம் (Post No.14,706)

WRITTEN BY Chitra Nagarajan

Post No. 14, 706

Date uploaded in London –30 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

29-6-2025 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை!

ஆலயம் அறிவோம்!

வழங்குவது சித்ரா நாகராஜன்

ஸஹ்யாத்ரி சீர்ஷே விமலே வஸந்தம் கோதாவரீதீர பவித்ர தேசே |

யத் தர்சநாத் பாதகம் பாஸு நாசம் ப்ரயாதி தம் த்ரயம்பகமீசமீடே||

“கோதாவரி நதிக் கரையில், ஸஹ்ய பர்வதத்தின் சிகரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ த்ரயம்பகேஸ்வரரை பயங்கள் நீங்கி, நலன்கள் பெருக தினமும் தியானித்து ஆராதிக்கிறேன்.”

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது மஹராஷ்டிர மாநிலத்தில் சஹ்ய மலைச்சாரலில் கோதாவரி நதி தீரத்தில் த்ரயம்பகேஸ்வரர் எழுந்தருளியுள்ள ஜோதிர்லிங்க சிவ ஸ்தலமாகும். இது நாசிக் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களுள் ஒன்றான இத்திருத்தலத்தில் தான் கோதாவரி நதி ஆரம்பமாகிறது.

இங்கு மூன்று புண்ய நதிகளான கோதாவரி, சரஸ்வதி, குசாவர்த்த நதிகள் சங்கமம் ஆகின்றன என்பது ஐதீகம்.

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் உண்டு.

கௌதம முனிவர் இங்குள்ள பிரம்மகிரியில் தனது பத்தினி அகல்யாவுடன் வசித்து வந்தார். அவர் தனது தவத்தால் வருணனை வேண்ட ஒரு குழி தோன்றி அதிலிருந்து நிறைய தானியங்களும் உணவும் கிடைக்க ஆரம்பித்தது. அதிலிருந்து வந்த நீர் வளத்தால் அவரது ஆசிரமம் செழிக்கத் தொடங்கியது. இதைக் கண்டு பொறாமை கொண்ட மற்ற ரிஷிகள் ஒரு பசுவை அவர் ஆசிரமத்திற்குள் அனுப்பினர். அதை தனது தர்ப்பையால் கௌதமர் விரட்டியதுமே அந்த மாயப் பசு உயிர் துறந்தது. அதனால் அவருக்கு பசுவை வதை செய்த தோஷம் ஏற்பட்டதாக அனைத்து ரிஷிகளும் கூறினர். உடனே கங்கையை அங்கு வரச் செய்து தனது தோஷத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய கௌதமர் சிவபிரானை நோக்கித் தொழ ஆரம்பித்தார். கங்கை அங்கு கோதாவரியாக வந்து இறங்கினாள். இங்குள்ள மக்கள் கோதாவரியை கங்கா என்றே கூறுகின்றனர்.

சிவபிரானும் இங்கு த்ரயம்பகராக எழுந்தருளி அருள் பாலிக்க ஆரம்பித்தார்.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் சிம்மராசியில் சஞ்சரிக்கும் போது இங்குள்ள கோடி தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் தீரும் என்பது ஐதீகம். இந்த கும்பமேளா உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு திரளுகின்றனர்.

சிவபிரான் இங்கு எழுந்தருளியுள்ளதைப் பற்றிய இன்னொரு புராண வரலாறும் உண்டு. சிவனின் மூலத்தைக் கண்டுபிடிக்க விரும்பிய பிரம்மாவும் விஷ்ணுவும் அவர் நெடிய தீப்பிழம்புத் தூணாகத் தோன்றவே அவர்களால் அடியையும் முடியையும் காண முடியவில்லை. பிரம்மா தான் முடியைக் கண்டதாகப் பொய் உரைத்தார். இதனால் அவருக்கு பூமியில் ஆலயமே இல்லாமல் போகட்டும் என்ற சாபத்திற்கு உள்ளானார்.

பதிலுக்கு பிரம்மா சிவனை பூமிக்கு அடியில் போகக் கடவது என்று சபிக்கவே அவர் இந்த பிரம்மகிரியில் பூமிக்குக் கீழே த்ரயம்பகேஸ்வரராக பிரம்மகிரியில் இருக்கலானார்.

இங்கு கங்காத்வாரம், பில்வம், கோடி, குசாவர்த்தம், கனகம், இந்திரம், விஸ்வநாத்,  வராஹம் உள்ளிட்ட பல தீர்த்தங்கள் கோயிலைச் சுற்றி உள்ளன.

குசாவர்த்தம் தீர்த்தம் இங்குள்ள தீர்த்தங்களிலெல்லாம் மிகுந்த புனிதம் வாய்ந்தது என்று கருதப்படுகிறது. இங்கு தான் கௌதம ரிஷி கங்கையை தனது தர்ப்பையால் சுற்றி கீழே வரவழைத்ததாக புராண வரலாறு கூறுகிறது. இந்தக் குளத்தை அப்பாஜி பார்னேகர் 18ம் நூற்றாண்டில் புதுப்பித்தார்

வராஹ தீர்த்தத்தில் வராஹ ரூபத்தில் விஷ்ணு தீர்த்தமாடியதாக வரலாறு கூறுகிறது.

கருங்கல்லால் அமைந்த ஆலயத்தில் கர்பக்ருஹத்தில் ஒரு குழி இருக்கிறது. அங்கு எப்போதும் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது.  நீரின் மேல் சிறிதளவு தெரியும்படி ஒரு சிவலிங்கம்  உள்ளது. அந்த லிங்கத்தின் முடியில் உள்ள ஒரு பிளவிலிருந்து இந்த நீர் சுரந்து கொண்டே இருக்கிறது.  இந்த லிங்கத்திற்கு மூன்று முகங்கள் உண்டு என்றும் பிரம்ம விஷ்ணு சிவன் ஆகிய மூவரை இந்த முகங்கள் குறிக்கின்றன என்றும் ஐதீகம் கூறுகிறது. 

எப்போதும் சிவலிங்கம் ஒரு வெள்ளிக் கவசத்தால் சார்த்தப்பட்டிருக்கிறது. உற்சவ காலங்களில் ஐந்து முகங்கள் கொண்ட தங்கக் கவசத்தால் அலங்கரிக்கப்படுகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெள்ளிக் கவசம் ஒரு பல்லக்கில் வைத்து குசாவர்த்த தீர்த்ததிற்கு கொண்டு சென்று அபிஷேகம் செய்யப்படுகிறது.  தங்கக் கவசமானது சிவராத்திரி தினங்களிலும் கார்த்திகை மாத பௌர்ணமி மற்றும் விசேஷ உற்சவ காலங்களிலும் அபிஷேகம் செய்யப்படுகிறது. 

இங்குள்ள நந்தி பிரம்மாண்டமானது. எப்போதும் சிவனையே பார்ப்பதாக அமைந்துள்ளது நந்தியின் பக்தியை விளக்குவதாக அமைகிறது.

சந்நிதிக்கு முன்னால் பெரிய ஆமை உருவம் அமைந்துள்ளது.

இங்கு ராமர் தனது வனவாசத்தின் போது சீதை லக்ஷ்மணருடன் தங்கியதாக புராண வரலாறு கூறுகிறது.

இந்தக் கோவிலை 18ம் நூற்றாண்டில் பாலாஜி பாஜி ராவ் புதிப்பித்தார்.

இந்த ஆலயத்தில் பக்தர்கள் கால சர்ப்பதோஷ நிவாரண பூஜை,  பித்ரு தோஷ பூஜை, ருத்ராபிஷேக பூஜை உள்ளிட்ட பல பூஜைகளைச் செய்ய கோவில் நிர்வாகம் வசதிகளைச் செய்துள்ளது.

.பிரம்மகிரியில் கோரக்நாதர் தவம் செய்த குகை உள்ளது. அங்கு அவரது திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

  காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் த்ரயம்பகேஸ்வரர்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

**

மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 6 (Post No.14,705)

image of Maha Rana Pratap

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,705

Date uploaded in London – –30 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 6 

ச. நாகராஜன் 

ஹிந்துத்வத்தை அழிப்பதற்கான திட்டமிட்ட வழிமுறை! 

மௌலானா அபுல்கலாம் ஆஜாதும் அவருக்குப் பின்னால் வந்தோரும் ஹிந்துத்வத்தை அழிக்கவும் இஸ்லாமிய கொடுமைகளை பாடபுத்தகத்திலிருந்து நீக்கவும் செய்தனர் அல்லவா, அவற்றில் இவற்றையும் சேர்க்க வேண்டும்:

 வரலாற்றுக்கு மறுப்பு 

முகலாயர்கள் மற்றும் சுல்தான்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கானோரைக் கொலை செய்தது, கட்டாய மதமாற்றம் செய்தது, ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்தது, இவற்றால், ஹிந்துக்கள் பட்ட துயரம் அனைத்தும் பாடபுத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டன. நடப்பு கால வரலாற்றுப் புத்தகங்களில் உள்ள, காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஔரங்கசீப் அழித்த சம்பவம் கூட ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் கவிதைகளை ஆதரித்தது பெரிதாக முன்னிறுத்தப்பட்டது. 

ஆக்கிரமிப்பாளர்களைப் புகழ்தல்

இந்தியாவை அழிக்க நினைத்த பாபர், அலாவுதீன் கில்ஜி உள்ளிட்ட ஆக்கிரமிப்பாளர்கள் கொடுங்கோலர்களாகக் காட்டப்படாமல் சமரச ஆட்சியாளர்களாகச் சித்தரிக்கப்பட்டனர்.  சரிதிரத்தில் மிக முக்கியமாக இடம் பெற வேண்டிய ஒன்றான அயோத்யா ராமர் கோவிலை பாபர் அழித்தது பாடதிட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் அவரது பாபர்நாமா இலக்கியச் சிறப்புக்காக போற்றப்பட்டது. 

ஹிந்து ஹீரோக்களை மறைத்தது

கிருஷ்ணதேவராயர், ராணா பிரதாப், சிவாஜி, லச்சித் போர்புகான் ஆகியோர் இஸ்லாமிய ஆட்சியை எதிர்த்த வீரர்களாவர்.முகலாய அரசர்களுக்குக் கொடுத்த  முக்கியத்துவத்தை இவர்களுக்குக் கொடுக்கவில்லை. இது வேண்டுமென்றே செய்யப்பட்டது. ஹிந்துக்கள் தங்கள் கடந்த காலத்தை பாதுகாக்க முயன்றதைச் சித்தரிக்காமல் தோல்வியான ஒன்றாகப் பார்க்கும்படியும் நினைக்கும்படியும் இது சித்தரிக்கப்பட்டது. 

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தல்

ஹிந்து மதம் மற்றும் பண்பாடானது பிற்போக்கானது என்று கல்வித் துறை அமைப்பு சித்தரித்தது. அதனுடைய ஆழ்ந்த தத்துவங்களை ஒதுக்கி விட்டு ஜாதி, மூடநம்பிக்கை ஆகியவற்றைப் பெரிதாகக் காட்டியது.

இஸ்லாமியப் பண்பாட்டின் ஆக்கபூர்வமான சித்தரிப்புக்கு முன்னர் இது ஒரு தாழ்வு மனப்பான்மையை ஹிந்துக்களிடையே தோற்றுவித்தது.

 கல்வி அமைப்பைக் கட்டுக்குள் கொண்டு வருதல்

குறிப்பாக, மௌலானா அபுல் கலாம் ஆஜாத் NCERT , இந்திய பண்பாடு மற்றும் சரித்திர ஆய்வு ஆகிய நிறுவனங்களில் உள்ள ஹிந்து விரோதப் போக்கு கொண்டவர்களுடன் கூட்டாக இணைந்த வரலாற்று ஆசிரியர்கள் பணிபுரிந்த மத்திய பல்கலைக்கழகங்களையும் கல்வி நிறுவனங்களையும் ஒருங்கு கூட்டினார்.

பல தலைமுறை மாணவர்கள், தவறாகச் சித்தரிக்கப்பட்ட வரலாற்றை உள்வாங்கும்படி இந்த நிறுவனங்கள் பாடபுத்தகங்களைத் தயாரித்தன!

                       தொடரும்,

நன்றிஆதாரம் : ட்ரூத்கல்கத்தா வார இதழ்

TRUTH Vol 93 Issue No 6 Dated 23-5-2025

Pictures of 2500 Indian Stamps!- Part 62 (Post No.14,704)

Written by London Swaminathan

Post No. 14,704

Date uploaded in London –  29 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 62

Stamps posted today include  YEAR 2004, STAMPS,

Pictures of 2500 Indian Stamps,

MINT (NOT USED)  STAMPS;

FOUR  MEDICINAL PLANTS, GUGGULU, BRAHMI, ASWAGANDHA, INDIAN GOOSEBERRY, SAINT KABIR, HAFIZ, 150 YEARS OF POST, LALAN  FAKIR,  JANARDAN SWAMI, SL KIRLOSKAR, NARENDRA MOHAN, KAKAJI MAHARAJ, ALLAH JILAI BAI, MOHAMMED RAFI, V K RAJWADE, MADRAS MUSEUM, GRENADIERS BRIGADE, MAJOR SOMNATH SHARMA, YASHPAL, 

–subham—

Tags– 
Stamps posted today include YEAR 2004, STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 62 ,mint,

சம்பந்தரும்,அப்பரும் பொய் சொன்னார்களா? புறநானூற்றில் தி.வி.பு.! (Post No.14,703)

Written by London Swaminathan

Post No. 14,703

Date uploaded in London –  29 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ் அறிஞர்களுக்கு கண்டனம்! சம்பந்தரும் அப்பரும் பொய் சொன்னார்களா? புறநானூற்றில் தி.வி.பு.!

சம்பந்தரும் அப்பரும் பொய் சொன்னார்களா?

புறநானூற்றில் திருவிளையாடல் புராண (தி.வி.பு ) சம்பவங்கள் உள்ளன . சிலப்பதிகாரத்தில் உள்ளன ; இவை இரண்டாயிரம் ஆண்டுப் பழமையான நூல்கள் . வரகுணன் என்ற ஒரு பெயரை வைத்துக் கொண்டு மாணிக்கவாசகரைத் தமிழ் அறிஞர்கள் மட்டம் தட்டிவிட்டனர் ; அவரை சம்பந்தரும் அப்பரும் பாடியதைக் கண்டும் காணாதது போல இருந்துவிட்டனர் அது மட்டுமல்ல அவருக்கும் வர குணனுக்கும் பொய்யான காலத்தைக் கற்பித்து உலகம் போற்றும் அப்பரையும் ஞான சம்பந்தரையும் பொய்யர்கள் என்று காட்டிவிட்டனர் . இதோ சான்றுகள்:–

புறநானூற்றில்

மதுரை என்ற ஊர்ப்பெயருடன் உள்ள புலவரகள்தான் சங்க இலக்கியத்தில், குறிப்பாக புறநானூற்றில், அதிகம் ; மதுரையில் சங்கம் இருந்ததையும் அங்கே ஏழைப் பிராமணன் தருமிக்காக    சிவபெருமானே சங்கம் ஏறியதையும் அப்பர், பெயர் சொல்லிப் பாடிவிட்டார். சம்பந்தரும் மதுரைத் தொகைகழகம் என்ற சொற்களில் தமிழ்ச் சங்கத்தைக் குறித்துள்ளார்.

புறநானூற்றில் வெள்ளியம்பலம் உள்ளது ; ஆலவாய் உள்ளது ; அப்படியானால் இவை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது உறுதியாகிறது .

மதுரைப் பேராலவாயார் என்ற புலவர் புறநானூற்றில் 247, 262  ஆகிய இரண்டு பாடல்களை பாடியுள்ளார் திரு ஞான சம்பந்தரோ தேவாரப் பாடல்கள் முழுதும் ஆலவாய் என்ற சொல்லையே அதிகம் பயன்படுத்தியுள்ளார். மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டது என்று பரஞ்சோதி முனிவரும் மேலும் மூவரும் பாடியுள்ளனர். யார் அந்த மூவர்?

பரஞ்சோதிக்கும் முன்னால் தி. வி. பு. பாடிய பெரும்பற்றப் புலியூர் நம்பி மற்றும் சிவ லீலார்ணவம் இயற்றிய நீலகண்ட தீட்சிதர் மற்றும் ஹாலாஸ்ய மஹாத்ம்யம் எழுதியவர்.

நீலகண்ட தீட்சிதர் திருமலை நாயக்கரின் (1600 CE) மந்திரி; அதாவது பரஞ்சோதி காலத்துக்கும் முந்தி வாழ்ந்தவர்; அப்பரும் சம்பந்தரும் மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்தில் வாழ்ந்தவர்கள்; அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்பு.

புறநானூற்றில் வெள்ளியம்பலம்

புறநானூற்றின் 58- ஆவது பாடலின் அடிக்குறிப்பு அரிய செய்தியை நமக்குத் தருகிறது!

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்  பாடியது

இதிலிருந்து வெள்ளியம்பலத்தில் பாண்டியன் இறந்த செய்தி கிடைக்கிறது

மதுரையில் சிவன் கோவில் இருந்ததையும் அதைப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி  வலம் வந்ததையும் ஆறாவது பாடலில் காரிக்கிழார் பாடியுள்ளார். அந்தப் பாண்டிய மன்னன் நான்மறை அறிந்த வேத பண்டிதர்கள் ஆசீர் வாதம் செய்யும்போதும் கோவிலில் வணங்கும்போதும் மட்டும்தான் தலை வணங்குவான் என்று புறநானூறு கூறுகிறது ஆகவே 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக் கோவில் இருந்ததும் எங்கும் யாக சாலைகள் இருந்ததும் தெரிகிறது.

இதையெல்லாம் மெகஸ்தனிஸ், டாலமி, பிளினி ஆகியோர் எழுதிய குறிப்புகள் உறுதி செய்கின்றன.

சிலப்பதிகாரத்தில் வன்னியும் கிணறும் சாட்சிக்கு வந்த திருவிளையாடல் உள்ளது ; வேறு சில மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறது.

சுந்தர மூர்த்திநாயனார் பாடிய மதுரைத் தேவார ப் பாடல்கள் அழிந்து போயிருக்க வேண்டும். ஏனெனில் அவர் திருப்பரங்குன்றம் பற்றிப் பாடியது மட்டும் கிடைத்திருக்கிறது கல்லாடம், திருப்புகழ் பாடல்களிலும் சிவன் தி வி பு நிகழ்ச்சிகள் உள்ளன.

வரகுணன் என்பவன் அப்பருக்கும் சம்பந்தருக்கும் மாணிக்கவாசகருக்கும்  முன்னால் வாழ்ந்தவன்; அதே போல பாணபத்ரனும்  முன்னால் வாழ் ந்தவன். வரகுணன் என்பது மன்னன் பெயரல்ல அது ஒரு பட்டம் என்பதால் குறைந்தது நான்கு வரகுணன்கள் இருந்தது தெரிகிறது ;மிகப்பழைய வரகுணன் தொடர்பான சம்பவங்களை அப்பர், சம்பந்தர் மாணிக்கவாசகர் பாடியுள்ளார்கள் . தி வி பு எழுதிய நால்வரில் நம்பி மட்டும்தான் இந்த வரகுணனை பின்னுக்கு வைத்துள்ளார்; ஏனையோர் வரகுணன் மிகவும் முன்னதாக வாழ்ந்ததாகக் காட்டியுள்ளனர்.

சம்பந்தர்- அப்பர் தேவாரம் உண்மை யானால் அவர்களுக்கும் முன்னால் வாழ்ந்தவர்களே பாணபத்ரன், வரகுணன் . மேலும் மாணிக்க வாசகர் கால மன்னன் அரிமார்த்தன பாண்டியன் என்று இரண்டு சம்ஸ்க்ருத தி. வி.பு. வும் பரஞ்சோதி தி. வி. பு. வும் கூறுகின்றன இதைத் தமிழ் அறிஞர்கள் அலட்சியம் செய்துவிட்டு வரகுணன் என்ற பட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு கட்டுக்கதைகளை எழுதி மாணிக்க வாசகர் காலத்தைப் பின்னுக்குத் தள்ளி அவரை அவமானப்படுத்தியுள்ளனர். இதோ சான்றுகள்:

ஞான சம்பந்தர் குறைந்தது பதினான்கு தி வி பு நிகழ்ச்சிகளைப் பாடி இருக்கிறார் நமக்குத் தேவையான நிகழ்ச்சிகள்–

நான் மாடக் கூடல் ஆனது

(இது சங்க நூலான கலித்தொகையில் இருப்பதால் இதை நாலாவது நூற்றாண்டுக்கு முன்னர் வைக்கிறார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை )

திருமுகம் கொடுத்தது

(திருமுகம் என்பது லெட்டர் ; பாணபத்ரன் என்ற புலவருக்கு சிவபெருமான் கொடுத்த ரெக்கமண்டேஷன் லெட்டர் ; அதாவது சிபாரிசுக் கடிதம் பற்றியது ; இதை அவர் சேர மன்னனுக்கு எடுத்துச் சென்றார் )

எல்லாம் வல்ல சித்தர் ஆனது

(இதற்கு தொல்பொருட் துறை சான்றும் கிடைத்துவிட்டது. மதுரை வைகை ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சித்தர் சிலையானது ஐந்து அல்லது ஆறாவது நூற்றாண்டுக்கு முந்தியது என்று தொல்பொருட் துறையினர் மதிப்பிட்டனர்; இப் போது இது மீனாட்சி கோவில் மியூஸியத்தில் உள்ளது ; சித்தர் சிலை வடிவில் போற்றப்படுவதற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளாவது ஆகியிருக்கும்)

திரு ஆலவாயானன் ஆனது

சங்க பலகையிட்டது

(திருஞான சமபந்தர் ஆலவாய் என்று பாடல் முழுதும் பாடியதால் அதற்கும் முன்னால் இது நிகழ்ந்திருக்க வேண்டும்; மேலும் புற நானூற்றில் இந்தப் பெயரில் புலவர் உள்ளார் )

பாண்டியன் சுரம் தீர்த்தது

சமணர்களைக் கழுவேற்றியது

இந்த இரண்டு சம்பவங்களை எல்லா தி. வி. பு. வும் மாணிக்க வாசகருக்கு மிகவும் பின்னால் வைக்கின்றன. அப்படியானால் மாணிக்க வாசகர் சம்பந்தருக்கு 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும் அதை அப்பரும் சத்தியம் செய்  கிறார்.

இதோ அப்பர் என்னும் திரு நாவுக்கரசர் தரும் சான்றுகள்!

இந்த எண்பது வயதுக்கிழவனார் ஆதி சங்கரர்  போல இந்தியாவை வலம் வந்தவர்; பேரறிஞர் ; மஹேந்திர பல்லவனால் கொடுமைப்படுத்தப்பட்டவர் பின்னர் அவனையே சைவ சமயத்துக்கு மாற்றியவர் ; இதோ அவரது தேவாரப்பாடல் செய்திகள் :

இவரும் 14 தி வி பு லீலைகளை பாடி இருக்கிறார் ; நம்முடைய ஆராய்ச்சிக்கு உதவும் நிகழச்சிகள்:

நான் மாடக் கூடல் ஆனது

எல்லாம் வல்ல சித்தர் ஆனது

தருமிக்குப் பொற்கிழி அளித்தது

picture of SAMBANDAR.

(சம்பந்தர் பாடல்களில் இது மிக முக்கியமானது. இதனால் மதுரையில் சிவ பெருமானே தமிழ்ச் சங்கத்துக்கு வந்து பிராமணப் புலவன் தருமிக்காக வாதாடி நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய பிரமணப்புலவன் நக்கீரனைத் தோற்கடித்தது தெரிகிறது; இது குறைந்தது அப்பருக்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்க வேண்டும் ; இதற்கெல்லாம் பின்னர் மாணிக்க வாசகரும், அதற்கெல்லாம் பின்னர் நின்ற சீர் நெடுமாறன் என்னும் கூன் பாண்டியனும் வருகின்றனர் )

நரி பரி யாக்கியது

மண் சுமந்தது

(ந்த இரண்டு தேவாரப்பாடல்களும் மாணிக்க வாசகர் காலம் பற்றிப் பொய்யுரை பரப்பிய தமிழ் அறிஞர்களுக்கு செமை அடி – தடியடி-மிதியடி- கொடுக்கிறது)

அப்பர் இப்படிப் பாடியிருந்தும் அவர் ஏதோ பொய் சொல்கிறார் என்று எண்ணி, வரகுணன் என்ற பட்டத்தை வைத்துக்கொண்டு மாணிக்க வாசகரை ஒன்பதாம் நூற்றாண்டுக்கு தள்ளிய அறிவிலிகளை இனி தமிழர்கள் நம்பக்கூடாது மேலும் தளவாய்புரச் செப்பேடுகள் வரகு ணனின் தமிழ்ப் பெயர்களைக்  கூறுவதால் இது பட்டம்;  இந்திரன், தலாய லாமா,  போப்பாண்டவர், சங்கராசாரியார் போன்று பலருக்கும் கொடுக்கப்படும் அடை மொழி என்பது தெரிகிறது.

அப்பர் பாடலையும், சம்பந்தர் பாடலையும் புறக்கணித்து விட்டு, அரிமர்த்தன பாண்டியன் என்று கூறும் மூன்று தி வி பு வையும் அலட்சியம் செய்துவிட்டு, வரகுணன் என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு சிலர் எழுதிய கட்டுரைகளைக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும் அல்லது சம்பந்தரும் அப்பரும் பரஞ்சோதியும் இரண்டு சம்ஸ்க்ருத தி வி பு எழுதியவர்களும் பொய்யர்கள் என்று அவர்கள் நிரூபிக்கவேண்டும் ; இது ஒரு சவால் ! சைவ ஆதீனங்கள் மகாநாடு கூட்டி சுந்தரர், வரகுணன் சேரமான் பெருமாள் காலங்களை மறுபரிசீலனை செய்வதோடு மாணிக்க வாசகர் காலத்தையும் உறுதி செய்யவேண்டும் .

–subham—

Tags – தமிழ், அறிஞர். கண்டனம், சம்பந்தர் அப்பர்,  பொய் சொன்னார்களா,  புறநானூற்றில் தி.வி.பு., வரகுணன், மாணிக்க வாசகர் காலம், திருவிளையாடல் புராணம்

குரு பற்றிய 31 பொன்மொழிகள்- ஜூலை 2025 காலண்டர் (Post No.14,702)

Written by London Swaminathan

Post No. 14,702

Date uploaded in London –  29 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பண்டிகை தினங்கள்:– ஜூலை 10-குரு பூர்ணிமா , 29-நாக பஞ்சமி 6-முஹர்ரம்; 2-ஆனி உத்திர தரிசனம்- 28-ஆடிப்பூரம்;

அமாவாசை-24; பெளர்ணமி-10; ஏகாதசி-6, 21; கார்த்திகை -20

முகூர்த்த தினங்கள்- ஜூலை 2, 7, 13, 14, 16.

****

குரு பற்றி திருமூலர், ஆதிசங்கரர், திருவள்ளுவர், பாரதியார் முதலிய பெரியோர்கள் சொன்ன பொன்மொழிகள்

ஜூலை 1 செவ்வாய்க் கிழமை

1.குரு; 2.குருவுக்கு குரு = பரம குரு; 3.பரம குருவின் குரு = பரமேஷ்டி குரு;  4.பரமேஷ்டி குருவின் குரு = பராபர குரு

****

ஜூலை 2 புதன் கிழமை

நாம் முயற்சி செய்யவும் வேண்டும், .குருவின் உதவியும் நமக்குக் கட்டாயம் தேவை—ரமணர்

****

ஜூலை 3 வியாழக் கிழமை

குருநாதரின் சந்நிதியில் வாசனைகள் வலுவிழக்கின்றன. மனம் நிச்சலமாகிறது. சமாதி வாய்க்கிறது. ஆகவே குருவின் சந்நிதியில் சீடன், உண்மை அறிவும் சரியான அனுபவமும் பெறுகிறான். அதில் அசையாது நிற்க மேலும் முயற்சி தேவை.– ரமணர்

****

ஜூலை 4 வெள்ளிக் கிழமை

நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு; .அவரிடத்து, சாந்தி, மன்னிக்கும் மனப்பாங்கு, பொறுமை போன்ற நல்ல குணங்கள் அமைந்திருக்க வேண்டும் .– ரமணர்

xxx

ஜூலை 5 சனிக் கிழமை

கனவில் சிங்கத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே யானை விழித்துக்கொள்ளும். . அது போல குருவின் அருட்பார்வை மூலம், சீடன் அறியாமை என்னும் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்கிறான் –. ரமணர்

****

ஜூலை 6 ஞாயிற்றுக் கிழமை

குரு,  ஆத்ம சாட்சாத்காரத்தைக் கொண்டு வருவதில்லை. மாறாக அதற்கான தடைகளை அகற்றுகிறார்.- ரமணர்

****

ஜூலை 7 திங்கட் கிழமை

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை– குறள் 891

மணக்குடவர் உரை:
பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின் அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும். இது முனிவரைப் போற்றா தொழியின் அது குற்றம் பயக்கு மென்றது.

****

ஜூலை 8 செவ்வாய்க் கிழமை

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.—900

பரிமேலழகர் உரை: மிக்க தவத்தினை உடையார் வெகுள்வராயின்;  அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையார் ஆயினும் அதுபற்றி உய்யமாட்டார். (சார்பு – அரண், படை, பொருள், நட்பு என இவை. அவை எல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும் ஆகலின், ‘உய்யார்’ என்றார். சீருடையது சீர் எனப்பட்டது).

****

ஜூலை 9 புதன் கிழமை

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.—898

மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

****

ஜூலை 10 வியாழக் கிழமை

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.—897

தகுதியால் சிறப்புற்ற பெரியார் ஒருவனை வெகுண்டால் அவனுக்குப் பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்?

****

ஜூலை 11 வெள்ளிக் கிழமை

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

****

ஜூலை 12 சனிக் கிழமை

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
மணக்குடவர் உரை:
தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க. தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புச் செய்க.

****

ஜூலை 13 ஞாயிற்றுக் கிழமை
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.–892
மணக்குடவர் உரை:
பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின் அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும். இது முனிவரைப் போற்றா தொழியின் அது குற்றம் பயக்கு மென்றது.

****

ஜூலை 14 திங்கட் கிழமை
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்–.899
மணக்குடவர் உரை:
உயர்ந்த கோட்பாட்டை யுடையார் வெகுள்வராயின், இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும். இது பொருட்கேடு வருமென்று கூறிற்று.

****

ஜூலை 15 செவ்வாய்க் கிழமை

ஞான குரு தேசிகனைப் போற்று கின்றேன்;

நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்

மோன குரு திருவருளாற் பிறப்பு மாறி

முற்றிலு நா மமர நிலை சூழ்ந்து விட்டோம்;-பாரதியார்

*****

ஜூலை 16 புதன் கிழமை

தேன்னைய பராசக்தி திறத்தைக் காட்டிச்

சித் தினியல் காட்டி மனத் தெளிவு தந்தான்.

வானகத்தை யிவ் வுலகிலிருந்து தீண்டும்

வகை யுணர்த்திக் காத்தபிரான் பதங்கள் போற்றி!-பாரதியார்

*****

ஜூலை 17 வியாழக் கிழமை

எப்போதுங் குரு சரண நினைவாய், நெஞ்சே!

எம்பெருமான் சிதம்பர தேசிகன் றாளெண்ணாய்.

முப் பாழுங் கடந்த பெரு வெளியைக் கண்டான்,

முக்தி யெனும் வானகத்தே பரிதியாவான்,-பாரதியார்

*****

ஜூலை 18 வெள்ளிக் கிழமை

காற்றுள்ள போதே நாம் தூற்றிக் கொள்வோம்;

கனமான குருவை யெதிர் கண்ட போதே

மாற்றான அஹந்தையினைத் துடைத்துக்கொள்வோம்;

மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;

கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;-பாரதியார்

*****

ஜூலை 19 சனிக் கிழமை

வாயினாற் சொல்லிடவு மடங்கா தப்பா;

வரிசையுட னெழுதிவைக்க வகையுமில்லை.

ஞாயிற்றைச் சங்கிலியா லளக்கலாமோ?

ஞான குரு புகழினை நாம் வகுக்கலாமோ?-பாரதியார்

*****

ஜூலை 20 ஞாயிற்றுக் கிழமை

‘குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,

பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?’ ஆதி சங்கரர்–குரு அஷ்டகம் (குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?’ என்ற வரிகள் முதல் எட்டு ஸ்லோகங்களின் கடைசி வரிகளாக பொதுவாக உள்ளன.)

****

ஜூலை 21 திங்கட் கிழமை

அழகான உடல், அழகான மனைவி, பார் புகழ்,

குறையாத செல்வம் எல்லாம் இருந்தும், 

குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,

பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

****

ஜூலை  22 செவ்வாய்க் கிழமை

மனைவி, செல்வம், புத்ரன், பேரன், வீடு, உறவினர்கள்,

புகழ் வாழ்ந்த குடும்பத்தில் பிறப்பு – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும்,குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,

பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

****

ஜூலை 23 புதன் கிழமை

வேதத்தின் ஆறு பகுதிகளிலும் பாண்டித்தியம்,

அனைத்து வேத இலக்கியம் முழுமையும் கரைகண்ட கல்வி,

உயர்ந்த இலக்கிய உரை நடை – கவிதை ஆகியவைகளைப் படைக்கும் திறன் – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும்– குருவின்

****

ஜூலை 24 வியாழக் கிழமை

அன்னிய நாடுகளில் புகழ், சொந்த நாட்டில் பெரும் செல்வம், நல்லொழுக்கத்தில் கீர்த்தி – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும்- குருவின்

****

ஜூலை 25 வெள்ளிக் கிழமை

பூமி முழுவதையும் ஆட்சி செய்யும் அரசர்களும் உனக்கு சேவை செய்ய உன் பாதங்களில் தவம் கிடந்தாலும்,- குருவின்

****

ஜூலை 26 சனிக் கிழமை

உன் கொடையின் காரணமாக உன் புகழ் திக்கெட்டும் பரவி,

இந்த உலகத்தில் எதையும் நீ அடையும் திறன் பெற்றிருந்தாலும்- குருவின் …………………

****

ஜூலை 27 ஞாயிற்றுக் கிழமை

சுக போகம், ராஜ்யம், மனைவி, குடும்பம், செல்வம் –

ஆகியவைகளில் உன் மனம் ஈடுபடாமல்

துறவற மனப்பான்மையில் மூழ்கினாலும்– குருவின்

****

ஜூலை  28 திங்கட் கிழமை

காட்டில் அல்லது வீட்டில் வசித்தாலும், உடலை வருத்திச் செயலில் ஈடுபட்டாலும் அல்லது பெரிய சிந்தனையில் மூழ்கினாலும்– குருவின் …………..

*****

ஜூலை  29 செவ்வாய்க் கிழமை

சந்நியாசியோ, ராஜாவோ, பிரம்மசாரியோ அல்லது கிருஹஸ்தனோ யாராக இருந்தாலும், குருவின் போதனைகளை மனத்தில் பதிய வைத்து, இந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவர். அவர்கள் பிரம்மத்தை உணர்ந்த பெரிய பரிசைப் பெற்ற பாக்கியவான்களாவர்.

****

ஜூலை 30 புதன் கிழமை

ஓம் குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர:

குருஸ்ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குரு என்பவர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு சமம் ஆனவர்

அந்த குருவை வணங்குகிறேன்.

****

ஜூலை 31 வியாழக் கிழமை

குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகிணாம்

நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம

குரு என்பவர் பிறவிப்பிணியை அகற்றும் டாக்டர்.; எல்லா கலைகளுக்கும் இருப்பிடமானவர் . அவர் தட்சிணாமூர்த்தி.

****

BONUS QUOTES ON GURU

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே–  திருமந்திரம் 139

****

பரிசன வேதி பரிசித்த தெல்லாம்

வரிசை தரும்பொன் வகையாகு மாபோற்

குருபரி சித்த குவலயம் எல்லாந்

திரிமலந் தீர்ந்து சிவகதி யாமே –  திருமந்திரம் 2054

பரிசனவேதி என்ற குளிகை (Philosopher’s stone)   பட்ட உலோகம் எல்லாம் பொன்னாகிவிடும். அது போல குருவானவர் இந்த உலகத்தில் யாரை தொட்டாலும் அவர்கள் மும்மலம் நீங்கி சிவனுடன் ஐக்கியமாவார்கள்.

xxxx

கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்

மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்

குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்

மறித்துப் பிறவியில் வந்து அணுகானே.  திருமந்திரம் 2051

****

ரசவாத (Alchemy) வேதியியலின்படி கருமை நிறத்து இரும்பானது பொன்னிறமான தங்கமாகிவிடும். ஆனால் தங்கமானது மீண்டும் இரும்பாக மாறாது. அதுபோல ஆன்மாவானது குருவின் அருளினால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில் இருந்தும் விடுவிக்கப் படும் அந்த ஆன்மாவுக்கு மறுபிறவி கிடையாது. ஆன்மாவின் மும்மலங்களையும் நீக்கக் கூடிய குரு இறைவனே ஆகும்.

****

ஸ்ரீ குரு கீதை (392 Slokas) …

எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு

குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை

****

குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை

குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை

குருவிற்கு சமமான உயர்வுமில்லை

சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டே இருக்கும்.

****

தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி

பூஜைக்கு மூலம் குருவின் பாதம்

மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்

முக்திக்கு மூலம் குருவின் கிருபை

– “ஸ்ரீ குரு கீதை”

—subham—

Tags- குரு, பொன்மொழிகள், ஜூலை 2025 காலண்டர் , குரு கீதை, ஆதி

மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 5 (Post No.14,701)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,701

Date uploaded in London – –29 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 5 

ச. நாகராஜன் 

பக்ருதீன் அலி அஹமது – தொடர்ந்தார் தொண்டை! 

பக்ருதீன் அலி அஹமது மிகக் குறுகிய காலமே பதவியில் இருந்தார்.  அவரும் ஹிந்து விரோதப் போக்கையும் இஸ்லாமிய ஆதரவுப் போக்கையும் தொடர்ந்து கடைப்பிடித்தார்.  ஔரங்கசீப்பின் ‘பர்மான்களிலேயே’ குறிப்பிடப்பட்டிருக்கும் ஹிந்துக் கோவில்களின் அழிவு பற்றி, எதிலும் சொல்லப்படவே இல்லை. கல்வித் திட்டம் இஸ்லாமியரின் “நல்லாட்சியை” மட்டும் தெரிவித்தது. திப்பு சுல்தான் செய்த கட்டாய மதமாற்றம் மற்றும் சீக்கியர்களை முகலாயர் கொடுமைப்படுத்தியது ஆகிய எதுவும் சொல்லப்படவில்லை. 

சையித் நூரல் ஹஸன் 

சையித் நூரல் ஹஸன், ஒரு வரலாற்று ஆசிரியர். இவர் 1971 முதல் 1977 முடிய கல்வித்துறை அமைச்சராக இருந்தார். ஆஜாதிற்குப் பிறகு படு மட்டமான ஆளாக இருந்த இவர் ஹிந்து விரோதப் போக்கைக் கல்வித் துறையில் ஆழ வேரூன்றினார். ஹஸனின் பதவிக்காலம் ஒரு திருப்பு  முனையாக அமைந்தது. மார்க்ஸீயவாதிகளான ரோமிலா தாபர் மற்றும் இர்ஃபான் ஹபீப் ஆகியோர் ஹிந்துப் பண்பாடு, நாகரிகம் மற்றும் மதத்தை இழிவு படுத்தும் வகையில் வரலாற்றைத் திருப்பி எழுத (அதாவது மாற்றி எழுத) பணிக்கப்பட்டார்கள்.  

ஹஸனது பதவிக் காலத்தில் NCERT பாடபுத்தகங்கள் மூலம் பழங்கால மற்றும் இடைக்கால இந்திய வரலாற்றில் போலியான மார்க்ஸிய  போராட்டங்கள் திணிக்கப்பட்டது. முகலாயரின் சாதனைகளை அது அழுத்தம் திருத்தமாக உரைத்தது. பாபருக்கு எதிராக ராஜபுத்திரர்கள் போர் செய்தது மற்றும் அஹோம் வம்சத்தார் ஔரங்கசீப்பை எதிர்த்தது ஆகியவை சேர்க்கப்படவில்லை.ஹிந்துக்களை அவமானப்படுத்தும் விஷயங்களை அது உறுதிப்படுத்தியது. எடுத்துக்காட்டாக மராத்திய சாம்ராஜ்யத்தில் முகலாயரின் ஆட்சி நீக்கப்பட்டதை அது குறைவாக மதிப்பிட்டதோடு பழித்தும் பேசப்பட்டதைக் கூறலாம். பாபரின் வெற்றிகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஹஸனின் உருது மொழி ஆதரவும் மைனாரிடி நிறுவனங்களின் ஆதரவும் இன்னும் அதிகமாக ஹிந்துக்களின் பண்பாட்டு அடையாளங்களை ஓரங்கட்டியது. கல்வித்துறையானது ஹிந்து பண்பாட்டை நீக்கி  “அராபியமயமாக” இந்தியாவை ஆக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.·                        தொடரும்,

நன்றிஆதாரம் : ட்ரூத்கல்கத்தா வார இதழ்

TRUTH Vol 93 Issue No 6 Dated 23-5-2025