During his visit to Zagreb, Prime Minister Narendra Modi received a “special gift” from Croatian Prime Minister Andrej Plenković: a reprint of Vezdin’s Sanskrit Grammar. The gesture carries significant cultural significance, symbolising the centuries-old connection between India and Croatia.
Vezdin’s Sanskrit Grammar is the first printed Sanskrit grammar written in Latin. It was published in 1790 by Croatian scholar and missionary Filip Vezdin during his time in India.
Vezdin’s Sanskrit Grammar is the first printed Sanskrit grammar written in Latin in 1790 by Croatian scientist and missionary Filip Vezdin during his time spent in India.
Croatian Prime Minister Plenkovic took to social media to highlight the historical and symbolic importance of the gift given to PM Modi. “I presented to the Indian Prime Minister Narendra Modi a reprint of Vezdin’s Sanskrit Grammar – the first printed Sanskrit grammar, written in Latin in 1790 by Croatia scientist and missionary Filip Vezdin (1748-1806), based on the knowledge he gained while living in India from Kerala Brahmins and local manuscripts.”
He added that Vezdin was among the first European scholars to deeply engage with Indian languages and culture.
Responding to this, PM Modi posted on X, “Thank you, Prime Minister Plenković. This is indeed a remarkable symbol of the enduring intellectual and cultural bonds between India and Croatia! May these bonds get even stronger in the times to come.”
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவிளையாடல் புராணத்தில் (தி.வி.பு) குதிரை சாஸ்திரம்
உலகத்தில் முதல் முதலில் குதிரைகளைப் பழக்கி அவைகளைத் தேரில் பூட்டி பந்தயம் நடத்தியவர்கள் இந்துக்கள்; குதிரை யாகம், குதிரைப் பந்தயம் பற்றி உலகிலேயே அதிகக் குறிப்புகள் ரிக்வேதத்தில்தான் உள்ளன .
ரதத்தின் பகுதிகளுக்கு மட்டுமே அறுபது சொற்கள் வேதகால நூல்களில் இருக்கின்றன!
ரிக்வேதத்துக்கு கி.மு 2000 BCE என்று வில்சன் முதலானோர் தேதி குறித்தனர். சுமேரியாவிலும்,எகிப்திலும் இதற்குப் பின்னர்தான் குதிரையைக் காண முடிகிறது .
எல்லாவற்றுக்கும் மேலாக KIKKULI கிக்குலி என்பவர் ஹிட்டைட் மொழியில், கியூனிபார்ம் லிபியில், எழுதிய களிமண் பலகைக் கல்வெட்டில் குதிரையைப் பழக்க ஸம்ஸ்க்ருதச் சொற்களை பயன்படுத்தியதால் இந்துக்கள்தான் இதில் நிபுணர்கள் என்பதும் தெரிகிறது. ஆகவே கல்வெட்டில் கூட 3500 ஆண்டுகளுக்கு குதிரைக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் உள்ள தொடர்பு தெரிகிறது; மேலும் இந்தக் கல்வெட்டு கிடைத்த ‘துரக’ஸ்தானத்தில் ரிக்வேத தெய்வங்களின் பேரில் உடன்படிக்கை கையெழுத்திட்ட இன்னும் ஒரு கல்வெட்டும் கிடைத்துள்ளது; அவை மிட்டனி MITTANI CIVILIZATION நாகரிகத்தைச் சேர்ந்தவை. மன்னர்கள் பெயர்கள் எல்லாம் சம்ஸ்க்ருதத்தில் உள்ளன . மாக்ஸ்முல்லர் (1823-1900) செத்துப் போனபிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் அவரது ஆரிய திராவிடக் கொள்கைக்கும் ரிக் வேத தேதிக் கொள்கைக்கும் மரண அடி கொடுக்கிறது .
இப்போது அந்தக் கல்வெட்டுகள் பெர்லின் மியூசியத்தில் உள்ளன.
*****
குதிரைகளை இந்துக்கள் பழக்கிய இடம் ‘துரக’ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அதை இப்போது நாம் துருக்கிTURKEY என்று அழைக்கிறோம். அங்கிருந்து வந்தவர் துலுக்கர்கள். இதற்கு இஸ்லாமியர் என்ற பெயர் பிற்காலத்தில் வந்ததே. ஏனெனில் வராஹ மிஹிரர் 500 CE துரக TURAGA என்ற சொல்லுக்கு குதிரை என்ற பொருள் தந்துள்ளார்; அதற்குப் பின்னர்தான் இஸ்லாம் மதம் தோற்றுவிக்கப்பட்டது.
துரக என்றால் குதிரையின் வேகம், குதிரையின் பலம், எண் ஏழு என்ற பொருள்களும் உண்டு. இன்றும் நாம் ஹார்ஸ் பவர்HORSE POWER என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
****
மாணிக்கவாசகர் காலத்தில் அராபியர்கள் குதிரை ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டனர் அவைகளைக் கிழக்குக்கரை துறைமுகங்களில் இறக்கி வியாபாரம் செய்தனர் . அவைகளை விலைக்கு வாங்குவதற்கு பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அவரை பொற்காசு மூட்டையுடன் அனுப்பினான். போகும் வழியில் திருப்பெரும்துறையில் குருந்த மரத்துக்கு அடியில் உபதேசம் செய்துகொண்டிருந்த குருவினைப் பார்த்தவுடனே அவரது வாழ்க்கையே மாறியது. பின்னர் நடந்த நரி- பரி திருவிளையாடலை அப்பர் பெருமானும் பாடியதால் இவை எல்லாம் மகேந்திர பல்லவன் காலத்துக்கு 600 CE முன்னர் நடந்ததும் தெளிவாகிறது.
****
இனி தி வி பு வில் பரஞ்சோதி முனிவர் சொல்லும் குதிரைவகைகளைக் காண்போம்:–
நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை
உரகத வாரந் தோற்றா துயர்மறைப் பரிமேல் வந்தார்
மரகத நிறத்து நிம்ப மாலைதாழ் மார்பி னாற்குக்
குரகதங் கயிறு மாறிக் கொடுப்பவர் பொதுமை யாய*
துரகத விலக்க ணங்கள் சொல்லுவான் றொடங்கி னாரே.
பாம்பணியைக் காட்டாமல் மறைத்து, – உயர்ந்த
வேதக் குதிரைமேல் வந்த இறைவர்,
மரகதம் போன்ற நிறத்தினையுடைய வேப்ப
மலர்மாலை தொங்கும் மார்பினையுடைய பாண்டியனுக்கு
குதிரைகளைக் கயிறுமாறிக்
கொடுக்கலுறுவார், பொதுவாகிய குதிரை இலக்கணங்களை, சொல்லுவான்
பகைவரைச் சினக்கும் வேற்படையை யுடைய வேந்தனே, ஒப்பற்ற இந்த வேகமுடைய குதிரைகள் – போர் புரிதற்குரிய
சமையம் நேரின், மதிலுறுப்பையும் தாவிச்செல்லும்;
பார்வையும் நுழையாத பல கணிவாயிலிலும் நுழைந்து செல்லும்;
பார்த்த வெளிகளனைத்தையும் வழியாகக் கொண்டு செல்லும்;
மிகக் கொடியபசி வந்துற்றால், தின்னப்படாத வைக்கோல் முதலிய வற்றையுந் தின்னும்.
சிலேடை அர்த்தம்
ஓரி – நரி. ஞாயில் -சூட்டு என்னும் மதிலுறுப்பு. நரியாதற்கேற்ப, ஞாயிலும் என்பதற்கு நாயைக் காட்டிலும் என்னும் பொருளும், சாலவாயில் என்பதற்கு வலையின் துவாரம், மனையின் நீர் கழிவாயில் என்னும் பொருள்களும் கொள்ளுதலும் பொருந்தும்.
காடு கரை முதலிய வெல்லாம் வழியாகச் செல்லும் என்றும், பிணம் முதலியனவும் தின்னும் என்றும் நரிக் கேற்கப்பொருள் கொள்க.
(MY COMMENTS:- தான் கொண்டுவந்தவை நரிகள் என்பதை சிலேடை மூலம் சிவ பெருமான், அதாவது குதிரைச் சேவகன் வேடத்தில் வந்தவர், செல்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம் )
பொருவில்சீ ரிலக்கணப் புரவி யொன்றுதான்
ஒருவன திடைவதிந் துறையி னொல்லென
மருவுறுந் திருமகண் மல்லற் செல்வமும்
பெருகுறுங் கீர்த்திகள் பல்கும் பெற்றியால்.
ஒப்பில்லாத சிறந்த இலக்கணம் நிறைந்த ஒரு குதிரை
ஒருவனிடத்துத் தங்கி உறையுமாயின், திருமகள் விரைந்து வந்து
நாவினையுடையனவாய், நிலத்தில் வைக்குங் குளம்புகள் உயர்ந்தனவாய், நீண்டு தம்முளொத்த பற்களை யுடையனவாய்,
மார்பும் மிடறும் பரந்த பாம்பின் படம் போன்றனவாய குதிரைகள்,
–பாடலமெனப் பெயர் பெறும்.
இது பாடலம் என்னும் குதிரையின் இலக்கணம்
அகலிய நுதலின வாய்ந்த குஞ்சிபோல்
நிகரறு கொய்யுளை நிறமொன் றாயின
புகரறு கோணமூன் றாகிப் பொற்புறு
முகமுடை யனவய மொய்கொள் கோடகம்.
அகன்ற நெற்றியை யுடையனவாய்,
சிக்கறுத்த மயிர் போல (வாய்ந்து) ஒப்பற்ற புறமயிர்,
ஒரே நிறம் வாய்ந்தனவாய், குற்றமற்ற மூன்று கோணமுடைய தாய்,
அழகு பொருந்திய முகத்தை யுடைய குதிரைகள், வெற்றியும் வலியுமுடைய கோடகம் எனப்பெயர் பெறும்.. இது கோடகம் என்னும் குதிரையின் இலக்கணம் .
முட்டிய சமரிடை முகத்தில் வாளினால்
வெட்டினு மெதிர்ப்பதாய்க் குரங்கு வேங்கைதோல்
பட்டிமை நரியரி சரபம் பாய்முயல்
எட்டிய கதியின விவுளி யென்பவே.
நெருங்கிய போரின்கண், தம் முகத்தில் வாளினால்
வெட்டினாலும், எதிர்த்துப் போர் புரிவதாய், குரங்கும் புலியும் யானையும், வஞ்சகமுள்ள நரியும் சிங்கமும் சரபப்புள்ளும் பாய்கின்ற முயலுமாகிய இவற்றின், மிக்க கதியினையுடைய குதிரைகளை, இவுளி என்று கூறுவர். இவுளி என்னும் குதிரையின் இலக்கணம்.
உன்னம நீளமுண் டாகிச் சங்குவெண்
கன்னலின் வாலிய விலாழி காலவதாய்ப்
பின்னமா கியதனி வன்னம் பெற்றுமை
வன்னமு முடையது வன்னி யாவதே.
உயரமும் நீளமுமுடையதாய், சங்கும் வெள்ளைச்சருக்கரையும் போல,
வெண்மையாகிய வாய் நுரையைக் கக்குவதாய், ஒப்பற்ற பிங்கல நிறம் பெற்று, அதனோடு கருநிறமு முடைய குதிரை, வன்னி என்று சொல்லப்படுவதாகும். இது வன்னி என்னும் குதிரையின் இலக்கணம்.
திணிதரு கழுத்தினிற் சிறந்த தெய்வத
மணியுள தாகியெண் மங்க லத்ததாய்
அணிதரு பஞ்சகல் யாண முள்ளதாய்க்
குணிதரு நீரது குதிரை யாவதே.
திண்ணிய கழுத்தில், சிறந்த தெய்வ மணியுள்ளதாய், அட்டமங்கல முடையதாய், அழகிய பஞ்சகல்யாண முள்ளதாய், இங்ஙனம் வரையறுக்கப்பட்ட பெற்றியையுடைய பரி, குதிரை என்னும் பெயருடையதாகும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2025 ஜூன் 15 ஆம் தேதி அமெரிக்காவில் ராணுவ தின அணிவகுப்பு நடந்தது; வழக்கமான ஆயுதங்களுடன் இரண்டு இயந்திர / ரோபாட் நாய்களும் நடந்து வந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது . அணிவகுப்பு மரியாதையை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் -பும் அவர் மனைவி மெலானா ட்ரம்ப் -பும் ஏற்றனர்.
சென்ற ஆண்டு ட்ரம்ப் -ப்பை நோக்கி ஒருவர் சுட்டது முதல் அவர் பாதுகாப்புக்கு ரோபாட்/ இயந்திர நாயும் சேவையில் அமர்த்தப்பட்டது.
இதன் காரணமாக இப்போது பிரான்ஸ் தலை நகர் பாரீசில் நடக்கும் ரோபாட் கண்காட்சிக்கு மதிப்பு அதிகரித்துள்ளது.
****
புல்லட் பாயிண்டுகளில் ரோபாட் நாய் புராணம்:–
என்னை உதையுங்கள் என்ற போர்டுடன் ஒரு நாய் நிற்கிறது; அது இயந்திர நாய்தான்; ஆனாலும் எல்லோருக்கும் பயம்! பக்கத்தில் போனால், இரண்டு கால்களில் நின்று உங்களை வரவேற்கும்; கை கொடுக்கும்!
விலை £ 1600 பவுண்ட் முதல் £ 120000 பவுண்ட் வரை !
பயங்கரவாதத்தை ஒழிக்க இது பயன்படுகிறது; வெடி குண்டு இருப்பதாக தகவல் வந்தால் இது தைரியமாகச் சென்று செயலில் இறங்கும்; அப்படியே வெடித்தாலும் இறப்பது வெறும் மிஷின்தான்.
காப்பி கொண்டு வா என்றாலும் கொண்டு வரும்.
இன்னும் ஒரு கம்பெனி பட்லர் நாய்களை உருவாக்கி வருகிறது; இனி வேலைக்காரர்கள் திடீரென்று லீவு போட்டு உங்களை மிரட்ட முடியாது. இந்த பட்லர் நாய்கள் ஒயின், காப்பி, காலை உணவு கொண்டு வரும்; துணி துவைக்கும்; தரையை சுத்தப்படுத்தும்; ஏற்கனவே விமான நிலையங்களில் இவைகளை பார்த்திருப்பீர்கள்
இந்த பட்லர்/ வேலைக்கார ரோபாட்டுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் .
அப்பாடா; இனி வேலைக்காரிகள் லீவு போடுவது பற்றி கவலையே இல்லை என்று பெருமூச்சு விட்டுவிடவேண்டாம் .
இந்த பட்லர் ரோபாட்டும் சரியான சண்டிதான்! இருபது நிமிடம்தான் வேலை செய்யும் பின்னர் பிளக்கை மாட்டி ரீசார்ஜ் செய்யவேண்டும். நீங்களே சொல்லுங்கள்! பட்லர் வேண்டுமா? பட்லர் ரோபாட் வேண்டுமா?
–சுபம்–
TAGS– அமெரிக்க ஜனாதிபதி, அணிவகுப்பில், ரோபாட்,நாய்கள் , பட்லர், வேலைக்கார ரோபாட்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பத்திரிக்கை தேதி — 11-9-2023
சிலர் இந்தியத் தமிழைவிட இலங்கைத் தமிழ் சிறந்தது என்று சொல்லுவார்கள்; எனக்கு வெடிச் சிரிப்பு வரும். காரணம் இல்லாமல் இல்லை ; பொழுது போகாத நேரத்தில் எல்லாம் இந்திய, இலங்கை, மலேசிய தமிழ்ப் பத்திரிக்கைகளில் எவ்வளவு ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கிறது என்று ஹைலைட்டர் பேனா வைத்து வண்ணம் இடுவேன்.
ஏறத்தாழ ஒரே அளவுதான் இருக்கின்றன. அதில் தவறே இல்லை; உலகில் எந்த மொழியும் தனித்து வாழ முடியாது; ஏனெனில் நாம் வாழும் உலகு அப்படிப்பட்டது. விமான நிலையத்துக்குச் சென்று கடவைச் சீட்டு, பயணச் சீட்டு, வானூர்தி புறப்படும் நேரம், விமான/ வானூர்தி இருக்கை எண், இருக்கையில் கச்சை BELT அணியவேண்டும் என்று சொன்னால் சிரிப்பார்கள் .
மொழி என்பது தகவலைப் பரிமாறிக்கொள்ளத்தான். ஆனால் பிற மொழிக் கலப்புக்கும் ஒரு எல்லை உண்டு; மணிப்பிரவாளம் வேண்டாம்.
திருக்குறளில் அறு நூறு குறள் வரை ஸம்ஸ்க்ருதச் சொற்கள் உள்ளன; அதற்காகக் குப்பைத் தொட்டியில் போட முடியுமா ? சிலப்பதிகாரத்தில் ஹைலைட்டர் பேனா வைத்து ஸம்ஸ்க்ருதச் சொற்களை அடிக்கோடு இட்டால் புஸ்தம்காமே கலர் மாறிவிடும்! ;அதற்காகக் குப்பைத் தொட்டியில் போட முடியுமா ?
இலங்கை சென்றபோது வீரகேசரி வாங்கினேன்; அத்தோடு இலவச இணைப் பாக தினத்தந்தியும் கொடுத்தார்கள் ;
வெறும் தலைப்புகளில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களை மட்டும் அடிக்கோடு இட்டேன் அல்லது வட்டமிட்டேன் ; இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஸம்ஸ்க்ருதத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்; இத்துடன் உள்ள இணைப்புகளைக் காண்க ; பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் தவறே இல்லை; அளவோடு இருக்க வேண்டும் ; அவ்வளவுதான்!
தமிழ் மொழியில் வெளிவரும் எல்லாப் பத்திரிக்கைகளின் பெயர்களும் சம்ஸ்க்ருதச் சொற்களுடன் உள்ளன ; ஏன் மாற்றவில்லை?!
–சுபம்—
Tags- ஸம்ஸ்க்ருதம், அழிக்க முடியாது, நாளேடுகள், இந்தியத் தமிழ்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
12-5-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான சிறுகதை!!
மூவரில் சிறந்தவர் யார்?
ச. நாகராஜன்
தெனாலியில் உள்ள தெனாலிராமன் சிலை
கிருஷ்ணதேவராயர் அரசவையில் நாட்டிலேயே சிறந்த அறிஞர்கள் இருந்தனர்.
இதனால் அவருக்கு கர்வம் நிறையவே உண்டு.
ஒரு நாள் அரசவைக்கு ஒரு சிற்பி மூன்று சிலைகளுடன் வந்தார்.
அவர் கிருஷ்ணதேவராயரைப் பார்த்து, “நீங்கள் உங்கள் அரசவையில் தான் சிறந்த அறிஞர்கள் இருக்கிறார்கள் என்று பெருமைப் படுகிறீர்கள்.
இதோ நான் மூன்று சிலைகள் கொண்டு வந்துள்ளேன். இதில் சிறந்த சிலை எது என்று காரணத்துடன் சொல்ல வேண்டும்.
சொன்னால் அந்த அறிஞருக்கும் உங்களுக்கும் நான் அடிமை. அப்படி யாராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை எனில் அந்த அறிஞர் எனக்கு அடிமை. அத்துடன் இனிமேல் அறிஞர் நிறைந்த சபை என்ற கர்வத்தை நீங்கள் விட்டு விட வேண்டும்” என்றார்.
இதைக் கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர்.
சிலர் கோபத்துடன் அந்த சிற்பி மீது பாய்ந்தனர்.
ஆனால் கிருஷ்ணதேவராயரோ அவர்களைத் தடுத்தார்.
“கேவலம் மூன்று சிலைகளைக் கொண்டு வந்துள்ளார் இந்தச் சிற்பி. இதில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க முடியாதா, என்ன? இந்தக் கேள்வியை ஏற்றுக் கொண்டு நல்ல விடையைத் தருவோம்” என்றார் மன்னர்.
யார் வேண்டுமானாலும் சிலை அருகே வரலாம் என்றார் சிற்பி.
அறிஞர்கள் ஒவ்வொருவராக சிலை அருகே வந்து அதை நன்கு உற்றுப் பார்த்தனர். தூக்கிப் பார்த்தனர்.
ஒரே எடை. ஒரே அமைப்பு. ஒரே வர்ண அமைப்பு. எந்த வித வித்தியாசமும் எள்ளளவும் இல்லை.
அனைவரும் திகைத்தனர்.
அறிஞர்கள் பலருக்கும் தெனாலிராமன் மீது பொறாமை உண்டு.
இந்த சந்தர்ப்பத்தில் தெனாலிராமனை மட்டம் தட்டலாம் என்று எண்ணிய அவர்கள், “அரசே! தெனாலிராமன் தான் சிறந்த அறிஞன் என்று அடிக்கடி சொல்வீர்களே! தெனாலிராமனே இதற்கு பதில் கூறட்டும்” என்றனர்.
அவர்களின் உள்நோக்கத்தை மன்னர் புரிந்து கொண்டார்.
தெனாலிராமனைப் பார்த்தார். தெனாலிராமன் அவர் பார்வையில் இருந்த அர்த்தத்தை உணர்ந்து, “இதோ நான் பார்க்கிறேன் அரசே!” என்று சொல்லி விட்டு சிலைகளின் அருகே வந்தான்.
எல்லோரும் தெனாலிராமன் வசமாக மாட்டிக் கொண்டான் என்று நினைத்தனர்.
தெனாலிராமன் மூன்று சிலைகளையும் சற்று நேரம் ஆராய்ந்தான்.
எந்த வித வித்தியாசமும் தெரியாத நிலையில் கண்ணை மூடிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.
பிறகு கண்ணை விழித்துக் கொண்டு, “அரசே! எனக்கு இரண்டு அடி நீளமுள்ள பொடிக் கம்பி வேண்டும்” என்றான்.
சிலைக்கும் கம்பிக்கும் என்ன சம்பந்தம்? அனைவரும் சிரித்தனர்.
கம்பி வந்தது. அந்தக் கம்பியை முதல் சிலையின் காது வழியே செலுத்தினான் தெனாலிராமன்.
என்ன ஆச்சரியம். அது நேராகச் சென்று அடுத்த காதின் வழியே வந்தது.
அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
தெனாலிராமனின் முகம் மலர்ந்தது.
“இன்னொரு கம்பி வேண்டும் மன்னா!” என்றான் தெனாலிரானம்
அடுத்த கம்பி வந்தது. அதை அடுத்த சிலையின் காதில் நுழைத்தான் தெனாலிராமமன்.
அதன் முனை வாயின் வழியே வெளிவந்தது.
இன்னொரு கம்பி வேண்டும் என்று தெனாலிராமன் கேட்க மூன்றாவது கம்பி வந்தது.
அதை மூன்றாவது சிலையின் காதில் தெனாலிராமன் நுழைத்தான்.
அதன் முனை வெளியே வரவே இல்லை. சிலைக்குள் சென்று பதிந்து விட்டது.
“அரசே! இதோ இந்த மூன்றாவது சிலை தான் சிறந்தது. என்ன சிற்பியாரே? இதை ஒத்துக் கொள்கிறீர்களா?” என்றான் தெனாலிராமன்.
சிற்பியார், “ஆஹா! இவரே அறிஞர்! நான் தோற்றேன். அரசே!! உங்கள் நாடே அறிஞர்கள் நிறைந்த நாடு. இந்தச் சிலைகளை தெனாலிராமன் அவர்களுக்கே அளிக்கிறேன்.உங்களுக்கு நான் அடிமை. இதை கையொப்பம் இட்டுத் தருகிறேன். நீங்கள் விடை கொடுத்தால் மட்டுமே நான் இங்கிருந்து போவேன்” என்றார் சிற்பி.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
கிருஷ்ணதேவராயர், “ராமா! கொஞ்சம் விளக்கிச் சொல்லேன்” என்றார்.
“மன்னா! முதல் கம்பி அடுத்த காதின் வழியே வந்தது அல்லவா? இந்த மனிதன் ஒரு காது வழியே எதைக் கேட்டாலும் அதை அடுத்த காதின் வழியே விட்டு விடுவான். இவன் ஒரு முட்டாள்.
அடுத்த கம்பி இரண்டாவது சிலையின் வாயின் வழியே வந்தது அல்லவா? அவன் எதைக் கேட்டாலும் வாய் வழியே விட்டு விடுவான். அவன் ஒரு உளறுவாயன்.
மூன்றாவது சிலையில் கம்பி வரவே இல்லை. அது ஆழ்ந்து அவன் இதயத்தில் சென்று நின்று விட்டது இப்படிப்பட்டவர்கள் எதைக் கேட்டாலும் ஆழ்ந்து சிந்திப்பவர்கள். . சிந்தித்த பின்னரேயே இவர்கள் பேசுவார்கள். இவர்களே சிறந்த சிந்தனையாளர்கள்.முவரில் சிறந்தவர் இவரே!” என்று கூறி முடித்தான்.
அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். மன்னர் தெனாலிராமனுக்கு விசேஷ பரிசுகளை அளித்து கௌரவித்தார்! சிற்பியையும் விடுவித்தார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்க கால மலைபடு கடாம் முதல், காரைக்கால் அம்மையார், கம்பன், பரஞ்சோதி முனிவர் வரை சுமார் 1800 ஆண்டுகளுக்கு நமது தமிழ் நூல்களில் பாடப்பெற்ற இசைக்கருவிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது இன்பம் பயக்கும். இன்று நமக்குத் தெரிந்தவை மிகச்சிலவே ; அந்தக் காலத்திலோ இருபது, முப்பது கருவிகளைக் குறிப்பிடுகின்றனர் காளிதாசனும் சங்கப் புலவர்களும் காட்டில் கேட்ட இன்னிசையையும் பாடியுள்ளனர்; காடுகளில்ORCHESTRA ஆர்கெஸ்டரா போல ஒரே நேரத்தில் பல இசைக் கருவிகள் முழக்கம் கேட்டனவாம் !
****
திருவிளையாடல் புராணம் (தி.வி.பு.) வேங்கடசாமி நாட்டார் உரை
இந்தக் காலத்தில் உரைகள் மூலம்தான் இவை இசைக்கருவிகளின் பெயர்கள் என்றே தெரிகிறது; சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கூட பரஞ்சோதி முனிவர் இவைகளை பாடியுள்ளார் !
1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திரு க்கிறார்:
“ துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்
உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்
சச்சரி கொக்கரை தக்கை யோடு
தகுணிதம் துந்துபி டாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
அத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்பன் இடம்திரு வாலங் காடே”
இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.
சச்சரி,கொக்கரை,தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.
2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:
இசைக் கருவிகளை தமிழர்கள் தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).
3). இப்போது கிடைக்காமல் போன பல இசை நூல்களை உரைகாரர்கள் மேற்கோள் காட்டுவர். அவற்றின் பட்டியல் இதோ:
இறையனார் களவியல் உரை:– முதுநாரை, முது குருகு.
அடியார்க்கு நல்லார் உரை:– இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம்
அரும்பத உரை ஆசிரியர்: –பதினாறு படலம்
யாப்பருங்கல விருத்தி உரை: –வாய்ப்பியம், குலோத்துங்கன் இசை நூல்
4). சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரி யாழ், மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் ஆகிய பல வகை யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையன.
5.)மலைச் சாரல் பகுதியில் தினைப் பயிரைத் திண்ண ஒரு காட்டு யானை வந்தது.; அங்குள்ள குறத்தி அழகான குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். அதைக் கேட்டு மெய் மறந்து நின்ற யானை பயிரைச் சாப்பிட மறந்து போனதாம்:
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென
மறம்புகல் மழகளிறு உறங்கும் (அகம்.102)
6).பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேர்ப்பட்ட கல் நெஞ்சுடையோரும் பாலைப் பண்ணைக் கேட்டுக் கொலைத் தொழிலை மறந்தனராம்:
ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை (பொருந. 21-22)
7). புண் பட்ட போர் வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப் பண்ணையும், நரியை விரட்ட விளரிப் பண்ணையும் பாடியதாக புறநானூறு கூறுகிறது (பாடல் 281- 291)
8).தமிழ் மொழியை இசை, இயல், நாடகத் தமிழ் என்று பிரித்து முத்தமிழ் எனப் பெயரிட்டனர். யாழ், பறை, யாழ் பற்றிய நூல் ஆகியவற்றை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியர் காலத்தில் துவங்கிய தமிழ் இசை அருணகிரிநாதர் காலத்தில் சிறப்போடுத் திகழ்ந்தது. இதோ திருப்புகழில் இசை:
தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டியல் தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
தடிய ழனவுக மாருதச் சண்டச் சமரேறி………
என்று சிதம்பரத்தில் பாடியது ஆடல்வல்லானை மனதிற்கொண்டுதான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.
9). வயலூரில் பாடிய திருப்புகழில் நீண்ட தாளத்துக்குப் பின்
பேரி திமிலை கரடிகை பதலை சலரிதவில்
தமர முரசுகள் குடமுழவொடு துடி
சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர
என்று பாடி இசைக் கருவிகளின் ஒலியை எழுப்புகிறார். இன்னும் பல பாடல்களில் இதே போல தாள ஒலிகளுக்குப் பின்னர் அருமையான பொருள் பொதிந்த வரிகளைச் சேர்த்திருக்கிறார்.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருணகிரி காலத்தில் நிலவிய வாத்தியச் சொற்கள் கூட இன்று வழக்கொழிந்துவிட்டன.
10) பரிபாடல்-12 வையை நதி பற்றிய பாடல்.
ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
என்ற வரிகளில் மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
11) கொங்கு நாட்டில் ஈரோடு—காங்கயம் பாதையில் அரச்சலூர் என்னும் இடத்தில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடுகின்றனர். இதை எழுதியவன் தேவன் சாத்தன் என்று மூன்றாம் கல்வெட்டில் பெயர் உள்ளது. இது ஒரு இசைக் கல்வெட்டு. முதல் இரண்டு கல்வெட்டுகளில் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் காணலாம். இதோ முதல் கல்வெட்டு:
த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த
முத்தமிழ் வாழ்க! தமிழ் இசை வெல்க!!
ஒரே பாட்டில் 22+5 தமிழ் இசைக் கருவிகள்: கம்பன் திறமை! (Post No.5223)
STONE MUSICAL PILLARS IN HINDU TEMPLES OF TAMIL NADU AND ANDHRA PRADESH.
கம்பன் பாட வந்தது இந்திரஜித்- இலக்குமணன் யுத்தம்; பாடல் வருவதோ யுத்த காண்டம், பிரம்மாஸ்திரப் படலம்! அங்கும் கம்பன் தன் தமிழ் கலைக் களஞ்சியத்தைக் காட்டத் தவறவில்லை. சான்ஸ் chance கிடைத்த போதெல்லாம் தமிழர்களின் கலாச்சாரத்தைக் காட்டுகிறான். ஒரே பாடலில் 22 இசைக் கருவிகளை அடுக்குகிறான்.
பம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர்ப் பணவம் தூரி
கம்பலி உறுமை தக்கை கரடிகை துடிவேய் கண்டை
அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே
பொருள்:-
கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, பெரிய பேரிகை, முழக்கும் பம்பை, மாலை அணிந்த முரசு, சங்கு, பாண்டில், போருக்குரிய பணவம், தூரியம், கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, உடுக்கை, புல்லாங்குழல், கணுவை, அம்பலி, கண்டை, ஊமை, சகடை என்னும் இசைக்கருவிகள் முழங்கின.
இந்தப் பாட்டில் 22 கருவிகளை அடுக்கி விட்டு, அடுத்த இரண்டு பாடல்களில் யானையின் மீதான பறை கீழே தொங்கவிடப்பட்ட மணி, ஊது கொம்பு, ஆகுளிப் பறை, பீலி என்னும் துளைக் கருவி, இவ்வாறு மொத்தம் 27 கருவிகளின் பெயர்களைச் சொல்லுகிறான்.
கம்பன் ராமாயணக் கதை மட்டும் சொல்லவில்லை. தமிழர் நாகரீகத்தையும் பாடல்களில் பாடிவிட்டான்.
****
தமிழ் இசைக் கருவிகள்
FROM INDONESIA
எகிப்து நாட்டு சிற்பங்கள், கிரேக்க நாட்டு சிற்பங்கள் ஆகியவற்றில் இசைக் கருவிகளைக் கண்டபோதிலும், அந்த தெய்வங்கள் மறைந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கும் முன் சாமவேதத்தில் தோன்றிய இசையை இந்துக் கடவுள் கைகளில் உள்ள இசைக் கருவிகள் இன்றும் இசைத்துக் கொண்டிருக்கின்றன. ஆயுத பூஜை அன்று அத்தனை இசைக் கருவிகளையும் இறைவன் முன்னிலையில் சந்தனம் குங்குமம் இட்டுப் பூப்போட்டு பூஜை செய்யும் வழக்கம் உலகில் வேறு எங்கும் இல்லை!!
சரஸ்வதி கையில் வீணை சிவன் கையில் உடுக்கை விஷ்ணு கையில் சங்கு கண்ணன் கையில் புல்லாங்குழல் நந்தி கையில் மிருதங்கம் தட்சிணாமூர்த்தி வீணை
நாரதர் கையில் வீணை
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பிருங்கி, தும்புரு….. என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
நடராஜர் ஆடும் போது யார் யார் என்ன வாத்தியங்கள் இசைத்தனர் என்பதை சில ஸ்லோகங்களில் படித்தால் தேவலோக ‘ஆர்க்கெஸ்ட்ரா’ பற்றி நன்கு விளங்கும்..
குப்தர் கால சிற்பம் ஒன்றில் அழகான யாழ் உள்ளது ; தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள இந்து, பெளத்த சிற்பங்களில் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு ஆடுவோரைக் காணலாம்
தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்த பாடல்களிலும் சங்கீதக் குறிப்புகள் ராகங்களின் பெயர்கள் உள்ளன ; நமது காலத்தில் பாரதியார் கூட தான் இயற்றிய ஒவ்வொரு பாடலுக்கும் இசை அமைத்துப் பாடியுள்ளார் .
கோவில்களில் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பண்ணை இசைக்கவேண்டும் என்று நடை முறையும் உள்ளது .
பதினெட்டு அடி நீள மலைப் பாம்பு இங்கிலாந்தில் லின்கன் ஸைர் வட்டாரத்தில் ஒரு சர்ச்சுக்கு வெளியே காணப்பட்டது . பாம்புகளை மீட்கும் ஏஜென்சிக்குப் பொது மக்கள் போன் செய்தவுடன் அவர்கள் வந்த போது மேலும் மூன்று மலைப்பாம்புகள் மீட்கப்பட்டன.
இவை தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் வகை ; விஷம் கிடையாது ஆனால் யானை முதல் மனிதர் வரை எவரையும் நசுக்கி எலும்புகளை நொறுக்கிக்கொல்லும் அசுர பலம் கொண்டவை.
சங்க இலக்கியத்தில் மலைப்பாம்பு கொன்ற யானை வருணனைகள் உள்ளன. இது பற்றி எனது கட்டுரைகள் இதே பிளாக்கில் உள்ளன
மேலை நாடுகளில் விஷ ஜந்துக்களை வளர்த்து வேண்டாதபோது தெருக்களில் விடும் அயோக்கியர்கள் அதிகம் . ஓநாய் போன்ற நாய்களும் மலைப்பாம்புகளும் மனிதர்களைக்கொல்லும் செய்திகள் மேலை நாடுகளில் அதிகம்.
நேற்றுவரை வளர்த்துக் கொஞ்சிய கோழிகளையும் ஆடுகளையும் மாடுகளையும் வெட்டிக்கொன்று சாப்பிடுபவோரை வள்ளுவரும் கண்டிக்கிறார் ; இதுகள் மேலை நாடுகளில் மிக மிக அதிகம் . நாய்களையும் பூனைகளையும் வளர்த்துவிட்டு அவைகளைக் கருணைக்கொலை செய்யும் ஈவு இரக்கமற்ற படு பாவிகள் மேலை நாடுகளில் அதிகம் .
BULLET POINTS
AN 18 FEET LONG PYTHON WAS FOUND LEFT IN ENGLAND IN BRITAIN.
IT FOUND WITH TWO OTHER PYTHONS.
14 FT, AND 11 FT.
ONE MORE WAS FOUNND AT A DISTANCE. THE 18 FT PYTHON WAS FOUND OUT SIDE A CHURCH. PUBLIC INFORMED ANIMAL WELFARE AGENCIES
THEY ARE RETICULATED PYTHONS FOUND IN SOUTH EAST ASIA.
IN WESTERN COUNTRIES BAD AND IRRESPONSIBLE PEOPLE RAISE VARIOUS DANGEROUS AND POISONOUS ANIMALS AND ABANDON THEM WHEN THEY DONT WANT THEM.
THEY KILL DOGS AND CATS ALSO WHICH WERE PETS UNTIL THE DAY BEFORE.
PYTHONS ARE NOT POISONOUS, BUT THEY SQUEEZE AND KILL HUMAN BEINGS AND ANIMALS AS AS BIG AS ELEPHANTS. IT IS REPORTED IN 2000 YEAR OLD SANGAM TAMIL LITERATURE.
—SUBHAM–
#TAGS- FOUR PYTHONS, RESCUED, LINCOLNSHIRE, ENGLAND, மலைப் பாம்பு
கடலுக்கடியில் பிரம்மாண்டமான கணவாய்கள் வசிக்கின்றன இவைகளை ஆங்கிலத்தில் ஸ்க்குவிட் என்று சொல்லுவார்கள் முதல் தடவையாக ஒரு குட்டி கணவாயைப் படம் பிடித்துள்ளனர்; இது கண்ணாடி போல இருக்கும் ; உடனினுள்ளே உள்ள உறுப்புகளைக் காணாலாம்; தென் அட்லான்டிக் கடலில் இதைக் கண்டுபிடித்தனர் இது 23 அடி நீளத்துக்கு வளரும்
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நத்தை இனம் ஒன்றுக்கு மாடர்ன் ஆர்ட் ஓவியர் பாப்லோ பிக்காஸோவின் பெயர் சூட்டப்பட்டது இதன் அங்க அமைப்பு, உறுப்புகள் பாலாவின் ஓவியம் போல சிக்கலால் இருப்பதால் இந்தப் பெயர் அவுசான் பிக்காஸோ என்பது புதிய நத்தை இனத்தின் பெயர் ஆகும்.
POSTED ON 19-6-25 BY LONDON SWAMINATHAN
தாய்லந்தின் தேசீய பூங்கவில் இது கண்டு பிடிக்கப்பட்டாது