Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 15-ஆம் தேதி ம் தேதி 2025-ம் ஆண்டு .
(Collected from popular Tamil dailies and edited for broadcast)
முதலில் இந்தியச் செய்திகள்!
புரி ரத யாத்திரை; ஸ்நான யாத்திரையில் லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்
இந்துக்களிடையே அதிகம் புகழ் பெற்ற புரி ரத யாத்திரை ஜூன் 27- ஆம் தேதி துவங்கி அடுத்த ஜூலை மாதம் ஐந்தாம் தேதி நிறைவு பெறும் .
புரி ரத யாத்திரை என்பது இந்தியாவின், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரை நகரத்தில் ஜெகன்நாதர் கோயிலில் குடி கொண்டுள்ள ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஆண்டு தோறும், தனித்தனியாக மூன்று இரதங்களில் ஏறி, புரி நகரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பதைக் குறிக்கும்..
முக்கிய தேர்கள் புறப்படுவதற்கு முன்னர் வரும் ஜேஷ்ட பௌர்ணமியன்று ஸ்நான யாத்திரை நடைபெறும். அதாவது கற்பக கிரகத்திலிருந்து மூன்று தெய்வங்களையும் கோவில் வளாகத்திலுள்ள மேடையில் வைத்து 108 புனித நீர் நிலைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்வார்கள் . இது ஜூன் 11- ஆம் தேதி நடந்தது.
ஸ்நான யாத்திரை நடந்த பின்னர் இரண்டு வாரங்களுக்கு சிலைகளை தனிமையில் வைப்பார்கள் யாரும் தரிசனம் செய்ய முடியாது பின்னர் வெளியே கொண்டு வாந்து ரதங்களில் வைப்பார்கள்
ஸ்னான யாத்திரையைக் காண்பதற்காக லட்சக் கணக்கணபக்த்ர்கள் புரி நகரத்தில் குவிந்தனர்.
*****
ராமர் கோயிலுக்கு படையெடுத்த பக்தர்கள்!
வைகாசி மாத பௌர்ணமியையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தில் உள்ள ராமர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
ஜூன் மாதத்தில் வரும் பௌர்ணமியை வடமாநிலத்தவர் ஜேஷ்ட பௌர்ணமி என அழைப்பார்கள். அந்த வகையில், ஜேஷ்ட பௌர்ணமியையொட்டி அயோத்தில் உள்ள ராமர் கோயிலில் அதிகாலை முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
ஜேஷ்ட பௌர்ணமி தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் அயோத்தி கோயிலுக்கு வந்து சென்றனர்.
*****
ராமர் பாதையில் மதுக்கடைகள்: பாரதீய ஜனதாக் கட்சி அரசுக்கு காங்கிராஸ் கட்சி கண்டனம்
அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் வழியான ராமர் பாதையில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி அளித்த உத்தர பிரதேச அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், வரலாற்று சிறப்புமிக்க பால ராமர் கோவில் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இதையடுத்து, அயோத்தியை உலகளாவிய ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அயோத்தி வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியர் ராமரின் வாழ்க்கை வரலாற்றை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், 13 கிலோமீட்டர் தொலைவுக்கு ராமர் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் அமைந்துள்ள ராம ஜென்மபூமியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ராமர் பாதையிலேயே மதுக்கடைகள் செயல்படுவதாக, உத்தர பிரதேச காங்., தலைவர் அஜய் ராய் குற்றம்சாட்டியுள்ளார்.
பணம் சம்பாதிப்பதற்காக அயோத்தியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இது அயோத்திக்கு ஒரு அவமானம் என்றும் கண்டனம் தெரிவித்தார்.
ராமரின் புனித நகரத்தில் மதுபானக் கடைகளை திறக்க அரசு எப்படி அனுமதித்தது? ராமர் பாதைக்கு அருகிலுள்ள மதுபானக் கடைகளுக்கு எப்போது உரிமங்கள் வழங்கப்பட்டன? இந்தக் கடைகள் அரசு அதிகாரிகளிடமிருந்து எவ்வாறு அனுமதி பெற்றன? உரிமங்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆம் எனில், எப்போது? என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் உ.பி., அரசுக்கு அஜய் ராய் எழுப்பி உள்ளார்.
*****
அமர்நாத் யாத்திரை.. பனி லிங்கத்திற்கு பிரதான பூஜை செய்த கவர்னர்
ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி துவங்கி வரும் ஆகஸ்ட் 9 வரை 38 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் குகையில் உருவான பனி லிங்கத்துக்கு இன்று பிரதான பூஜை செய்யப்பட்டது. சம்பிரதாயப்படி அமர்நாத் யாத்திரை தொடங்கியதை குறிக்கும் இந்த நிகழ்வில், ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா பங்கேற்று பூஜை செய்து பனி லிங்கத்தை வழிபட்டார்.
கவர்னர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பாபா அமர்நாத் (சிவபெருமான்) நம் அனைவருக்கும் அருள் மழையை பொழிவாராக” என கூறி உள்ளார்.
முன்னதாக, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அமர்நாத் யாத்திரைக்கான முதல் பூஜை தாவி ஆற்றங்கரையில் நடைபெற்றது.
*****
இனி தமிழ் நாட்டுச் செய்திகள்
மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு
ஜூன் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில்பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
முருக பக்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கோடு முருகன் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. பழனியை தொடர்ந்து தற்போது மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. ஜூன் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் பகல் 3 மணி துவங்கி, இரவு 8 மணி வரை மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள அம்மா திடலில் இந்த பிரம்மாண்ட ஆன்மிக மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டு திடலில் ஜூன் 10ம் தேதி முதல் அறுபடை முருகன் கோவில் கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு அறுபடை முருகனின் கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வேல், பக்தர்களின் தரிசனத்திற்காக கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். சிறப்பு அம்சமாக கந்த சஷ்டி கவசத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் ஒருமித்த குரலில் பாராயணம் செய்ய உள்ளனர். பிரபலமானவர்களின் ஆன்மிக உரைகள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் நாட்டிற்கே உரிய நாட்டுப்புற கலைகளில் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்தும் இடங்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் எங்கு இருந்தும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் வகையில் மாநாட்டு திடலை சுற்றிலுமே் எல்இடி L E D திரைகள் அமைக்கப்பட உள்ளன. மாநாட்டு வளாகத்தில் ஆன்மிக மற்றும் இந்து விழிப்புணர்வு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
முருக பக்தர்கள் மாநாடு இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கும், உரிமையைப் பெறுவதற்குமான மாநாடு என, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதுரை மாவட்டம் வண்டியூரில் அவர் அளித்த பேட்டியில்,
திருமாவளவன் மற்றும் திமுக தலைவர்கள் இந்துக்களைப் பற்றி இழிவாகப் பேசி வருகின்றனர் என்றும் திமுகவினர், தடுக்க தடுக்கத் தான் முருக பக்தர்கள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெறும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
முருக பக்தர்கள் மாநாடு நடக்கக்கூடாது என்பதற்காக, பொய் வழக்குகளைப் பதிவு செய்கின்றனர் என்று கூறியவர், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில், சில மாதங்களுக்கு முன்னர் ஆடு, கோழி உள்ளிட்டவற்றைப் பலியிட முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்துக் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து வரும் 22-ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப் போவதாக இந்து முன்னணி அறிவித்தது.
தற்போது நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் முகப்பு தோற்றம் கொண்ட மாதிரிகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதனை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மேற்பார்வையிட்டு ஆ அறுபடை வீடுகளில் இருந்து பக்தர்கள் கொண்டு வந்த ஆறு வேல்களும் மாநாட்டில் உள்ள ஆறுபடை வீடு அருட்காட்சியில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட உள்ளது.லோசனைகளை வழங்கினார்.
*****
கோவில்களில் இறந்த தலைவர்களுக்கு கொண்டாட்டமா? பொன். மாணிக்கவேல் கண்டனம்
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன். மாணிக்கவேல் அளித்த பேட்டி: தமிழகத்தின் பிரதானமாக இருக்கும் ஆயிரக்கணக்கான ஹிந்து கோவில்களில், இறந்த அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்த நாள், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. மற்ற மதத்தினர், தங்கள் மதம் சார்ந்த ஆலயங்களில், இதுபோன்று கொண்டாட அனுமதிப்பதில்லை. குறிப்பிட்ட அந்நாளில், கோவில் வங்கி கணக்கிலிருந்து கோடிக்கணக்கான பணத்தை எடுத்து சிறப்பு பூஜை, மதிய விருந்து கொடுக்கின்றனர். இதனால், கோவில்கள் புனித தன்மை கெடுகிறது. கோவிலை கட்சி தலைமையிடமாக மாற்ற ஹிந்துக்கள் விடக்கூடாது.
தமிழகத்தில் உள்ள, ஆறு கோடி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து, ஒரே ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒரே கோவிலில் கூட வேண்டும். பின், பத்து நிமிடம், கோவில்களில் இறந்த அரசியல் தலைவர்கள் பிறந்த நாளை கொண்டாடக்கூடாது என, பிரார்த்தனை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக, அரசின் இந்த முயற்சியை கைவிட வலியுறுத்த வேண்டும்.இப்படி செய்வதற்கான நாள், நேரம் விரைவில் அறிவிக்கப்படும். இந்த விஷயத்தில், அனைத்து ஹிந்து அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, பொன். மாணிக்கவேல் கூறினார்.
******
கடைசியாக
லண்டனிலிருந்து ஒரு செய்தி.
லண்டனின் புறநகர்ப்பகுதியான SLOUGH ஸ்லவ் என்னும் இடத்திலுள்ள ஹிந்து மந்திரில் அடுத்த வாரம் லக்ஷ மோதக மஹா யக்ஞம் நடைபெறப்போகிறது வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில், அதாவது ஜூன் 20, 21, 22 தேதிகளில், மூன்று நாடகளுக்கு இந்த வைபவம் நடைபெறுகிறது.
மூன்று நாள் வைபவத்தில் மஹாகணபதி யக்ஞம், லக்ஷ மோதக ஹோமம், அஷ்டோத்தர சத பிராமண போஜனம், நவாவர்ண பூஜா, சண்டி ஹோமம் ஆகியன நடைபெறும் என்று யுனைடெட் கிங்டம் ஸ்ரீ சத்ய சண்டி மண்டலி அறிவித்துள்ளது; குருஜி ஸ்ரீ அவினாஷ் கணேசன் தலைமையில் நிறைய பக்தர்கள் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளில் பங்கு கொண்டுள்ளனர். காலை ஏழு மணி முதல் மாலை எட்டு மணி வரை இரண்டு நாட்களுக்கு நடைபெரும் நிகழ்ச்சி கள், ஞாயிற்றுக் கிழமை நண்பகலில் நிறைவடையும். பக்தர்களுக்கு பூஜை முடிவில் மஹா பிரசாதமும் வழங்கப்படும். இது நடைபெறும் ஸ்லவ் ஹிந்து மந்திர், கீல் ட்ரைவ் என்னும் சாலையில் உள்ளது.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு
ஜூன் மாதம் 22–ம் தேதி
லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags– ஞானமயம் , (15-6-2025), உலக இந்து செய்திமடல் ,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்பதி என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள்
1. – லட்டுப் பிரசாதம் பத்து மார்க்
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
விடைகள்
1.லட்டுப் பிரசாதம்
2.முடி காணிக்கை
3.மலைப்பாதை
4.எங்கு பார்த்தாலும் மொட்டைத் தலை அல்லது திருப்பதி அம்பட்டன் கதை (பண ஆசையில் எல்லோரிடமும் காசை வாங்கிவிட்டு கால் பகுதி சிறைப்பது; அதனால் ஓட முடியாது )
5.நீண்ட வரிசை, சில வினாடிகள் தரிசனம் , கூட்ட நெரிசல் காசு அதிகம் கொடுத்தால் சீக்கிரம் பார்க்கலாம் இவற்றில் ஒரு பெயர் சொன்னாலும் பத்து மார்க்.
6.உண்டியலில் காணிக்கை
7. கீழைத் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் அல்லது ஆகாச கங்கை அருவி/ சிவன் கோவில் – இவற்றில் ஒரு பெயர் சொன்னாலும் பத்து மார்க்
8. வெங்கடேஸ்வர சுப்ரபாதம் அல்லது அன்னமாச்சார்யா கீர்த்தனை அல்லது ஆழ்வார் பாசுரம் இவற்றில் ஒரு பெயர் சொன்னாலும் பத்து மார்க்
9.கோவிந்தா கோவிந்தா கோஷம் அல்லது ஏடுகொண்டலவாடா— இவற்றில் ஒரு பெயர் சொன்னாலும் பத்து மார்க்
10.ஏனைய பெயர்கள் – வெங்கடாசலபதி, பாலாஜி, வெங்கடேசன் ஏழுமலையான், மலையப்பன் – இவற்றில் ஒரு பெயர் சொன்னாலும் பத்து மார்க்
–subham—
Tags— திருப்பதி ,பத்து விஷயங்கள், சொல்லுங்கள் , நூறு மார்க்,
154 அடி உயரமுள்ள ராஜ கோபுரமும் கோவிலின் நுழைவுப் பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன கருட ஸ்தம்பமும் அனைவரையும் வியக்க வைப்பவை.
கோவிலைப் பற்றிய பழம் பெரும் வரலாறு ஒன்று உண்டு. இங்கு நான்கு வேதங்களைக் கற்ற வேத விற்பன்னர்கள் வாழ்ந்தமையால் இது ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும் செண்பக மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் செண்பகாரண்யா என்றும் ஶ்ரீ ராஜகோபாலன் குடி கொண்டிருப்பதால் ராஜமன்னார் என்றும்,மன்னர்கள் கோவில் கட்டியதால் மன்னார்குடி என்றும் அழைக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது.
கோவிலைப் பற்றிய புராண வரலாறு ஒன்றும் உண்டு. பெரும் முனிவரான வாஹி என்ற பெரிய முனிவருக்கு கோபிளர், கோபிரளயர் என இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்கள் துவாரகைக்குச் சென்று கண்ணபிரானை வழிபடச் சென்றனர். ஆனால் வழியிலே அவர்களைச் சந்தித்த நாரதர் கிருஷ்ணர் விண்ணுலகம் ஏகி விட்டதைத் தெரிவித்து, செண்பகாரண்யம் சென்று கிருஷ்ணரை வழிபடுமாறு கூறியருளினார். அதன்படி அவர்கள் இங்கு வந்து கிருஷ்ணரை வழிபடலாயினர். கிருஷ்ணரின் அனைத்து லீலைகளையும் அவர்கள் இங்கேயே கண்டு களித்தனர்.
இங்கு ராஜகோபால சுவாமி ஒரு பாலகனாக இடையன் கோலத்தில் காணப்படுகிறார். ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாகச் சுருட்டி வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை கொலுசு ஆகிய குழந்தை அணியும் அணிகலன்களையும் அணிந்திருக்கிறார்.
கூடவே ஒரு பசுவும் இரண்டு கன்றுகளும் அவர் அருகில் உள்ளன.
குவலயாபீடம் என்னும் யானையை கம்சன் ஏவி விடவே கிருஷ்ணர் யானையின் தந்தத்தை உடைத்து அதை அடக்கினார். இதைச் சுட்டிக்காட்டும் வகையில் இங்கு கிருஷ்ணரின் இடது கையில் தந்தம் உள்ளது.
கிருஷ்ணரின் பால்ய லீலைகளை நினைவூட்டும் கோவில் இது.
உற்சவரின் சிலை வெங்கலத்தினால் உருவாக்கப்பட்ட சிலையாகும்.
கோவிலை சுண்ணாம்புக் கலவை கொண்டு முதலாம் குலோத்துங்க சோழன் இதைப் புதுப்பித்தான். அவனது கல்வெட்டு ஒன்றும் இங்கு காணப்படுகிறது.
கோவிலில் மொத்தம் 16 கோபுரங்கள் உள்ளன. 18 விமானங்கள், 24 சந்நிதிகள், ஏழு பிரகாரங்கள், ஒன்பது நவ தீர்த்தங்கள் 2 மரத்தினால் ஆன தேர்கள் உள்ளிட்டவற்றைக் கொண்ட திருக்கோவிலாகும் இது.
கோவிலில் எழுந்தருளியுள்ள ராஜகோபால சுவாமியின் உயரம் 12 அடி ஆகும்.
இங்குள்ள குளம் 1158 அடி நீளமும் 837 அடி அகலமும் கொண்டுள்ளது. இது ஹரித்ராந்தி என்று அழைக்கப்படுகிறது. கோபியர்கள் மஞ்சளுடன் இங்கு குளித்ததால் நீர் மஞ்சள் நிறம் அடைந்ததால் ஹரித்ராந்தி என்று இது அழைக்கப்படுகிறது.
திருநாழி பிரகாரம், கருட பிரகாரம், செண்பக பிரகாரம், காசி பிரகாரம், நாச்சியார் பிரகாரம் உள்ளிட்ட பிரகாரங்களையும் வல்லாள மஹாராஜா மண்டபம், ஆயிரம் கால் மண்டபம், கருட வாகன மண்டபம், யானை மண்டபம், பலகணி மண்டபம், வெண்ணெய் தாழி மண்டபம், புன்னை வாகன மண்டபம் உள்ளிட்ட மண்டபங்களும் இங்கு அமைந்துள்ளன.
ராஜகோபால சுவாமியையே தன் குல தெய்வமாகக் கருதிய விஜயராகவ நாயக்கர் தன்னை மன்னாரு தாசன் என்றே அழைத்துக் கொண்டார். அவர் இயற்றிய தெலுங்கு மொழியில் இருந்த படைப்புகள் அனைத்தையும் அவர் ராஜகோபாலனுக்கே சமர்ப்பித்தார். அவர் இயற்றிய பல நாடகங்கள் இந்தக் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்திலேயே அரங்கேற்றப்பட்டது.
இங்கு ஓரிரவு தங்கினால் ஒரு கோடி ஆண்டு தவம் இருந்ததற்குச் சமம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆண்டின் 12 மாதங்களிலும் இங்கு உற்சவம் நடப்பது இந்தக் கோவிலின் சிறப்பாகும்.
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் செங்கமலத் தாயாரும் ஶ்ரீ ராஜகோபால சுவாமியும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு போன்ற மாமனிதர் ஒருவரைப் பார்க்கவே முடியாது என்ற ஆரம்பத்துடன் அவர் மிகவும் தாராள மனதுள்ளவர் என்று கூறி ஒரு பெரிய பட்டியலைத் தந்துள்ளார் அன்பர் ஒருவர் இணையதளத்தில்!
பாகிஸ்தானுக்கு மூன்று பெரிய நதிகளை அவர் தானமாக அளித்தார்.
7. 1964ம் ஆண்டு அமெரிக்கா ஒரு அணுஆயுத சாதனத்தைத் தர முன்வந்த போது அதை வேண்டாம் என்று மறுத்தார். ஒருவேளை சிறந்த அஹிம்சாவாதியாக அவர் திகழ்ந்ததனால் அப்படி மறுத்திருக்கலாம்!
8. தவறான நோக்குடைய கூட்டு சேராக் கொள்கைக்கான இயக்கத்திற்கு தலைமை வகித்தார்.
9. கோவாவின் மீது அக்கறை செலுத்தாமல் இருந்தார்.
10. தடையிலா சந்தை (ஃப்ரீ மார்கெட்) முதலாளித்துவத்தை எதிர்த்து சோஷியலிஸத்தை ஆதரித்தார்.
11. ஊழலைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
12. அதிகாரத்தை நெடுங்காலம் பற்றிக் கொண்டிருந்தார்.
13. பத்திரிகை சுதந்திரத்தைத் தடுத்ததோடு சுதந்திரமாக பேசும் பேச்சுரிமையையும் அடக்கினார்.
14. ஆரம்ப கல்வியை ஆதரித்து, ஊக்குவித்து, அதை அமுல்படுத்துவதில் தோல்வி அடைந்தார்.
15. 1957ல் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள அரசைக் கவிழ்த்தார்.
16. பாகிஸ்தானை உருவாக்கினார்.
17. சர்தார் படேலை பிரதம மந்திரி ஆவதற்கு அனுமதிக்கவில்லை.
18. பர்மாவிற்கு மணிபூரில் உள்ள காபோ பள்ளத்தாக்கை இலவசமாக அளித்தார்.
19. பர்மாவிற்கு மிகவும் முக்கியமான கோகோ தீவுகளை அளித்தார்.
20. க்வாதார் துறைமுகத்தை ஓமன் அளித்த போது அதை ஏற்க மறுத்தார்.
21. திபெத்தை கவிழ்த்து விட்டு, இந்தியாவின் நீர் ஆதாரத்திற்கும் வடக்கு எல்லைக்கும் சீனாவை நம்பி இருக்கும் நிலைக்கு இந்தியாவைத் தள்ளி விட்டார்.
22. நட்பு என்றும் நல்லெண்ணம் என்றும் கூறி ஒருதலைப்பட்சமான ஒரு ஒப்பந்தத்தைப் பாகிஸ்தானுடன் செய்தார். சிந்து நதியில் பாயும் நீர் கொள்ளளவில் மூன்று பங்கு நீரை பாகிஸ்தானுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து சிந்து நீர் ஒப்பந்தத்தைச் செய்தார். இதற்கு நன்றிக் கடனாக ஐந்தே வருடங்களில் பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுத்தது.
23. சோமநாத் ஆலயத்தை சர்தார் படேல் மீண்டும் புனரமைத்தபோது அதை எதிர்த்தார்.
24. பாதகனான ஹைதராபாத் நிஜாமிடமிருந்து ஹைதராபாத்தை விடுவிக்க சர்தார் படேல் செய்த முயற்சிக்கு தடைகளைச் செய்தார்.
இன்னும் பட்டியல் நீள்கிறது.
– தொடரும்
நன்றி : கொல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில பத்திரிகை TRUTH VOL 93 – ISSUE NO 8 (6-6-2025)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART TWO OF
Title INDIA
Author Mario Appelius
Pictures from Benares, Calcutta, Lahore, Kata, Tibet, Sikkim, Agra, Ahmedabad.
SINGAPORE BARBER,
Strange thing is he shows African Hippotamus I Ganesh Temple in Benares Temple, Musim men and women in Tibet. We have to verify through his Italian write ups Ascetics, Lamas are shown. He shows the picture of Indo- Cinese temple in Benares!
See the pictures:
Year MCMXXVIII (1928)
Part TWO
AND
PICTURES FROM
THE HISTORY OF ARYAN RULE IN INDIA
E B HAVELL
LONDON 1928
BUDDHA, SANCHI STUPA, BHARHUT STUPA, VILLAGE PLAN
FOLLOWING PICTURES ARE FROM ITALIAN BOOK
–Subham—
Tags- Mario appelius, 1928 book, India, Hippopotamus , BENARES, GANESH Temple, PART TWO, ARYAN RULE, EB HAVELL, TWO BOOKS, SARANATH, SANCHI, BHARHUT
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Ganga Devi has praised Agastya , the author of seventy four Poetic Compositions, in the first canto of Madura Vijayam. This Agastya is nothing to do with the Agastya rishi found in the Rig Veda. We know many Agastyas from Vedic days to a very late period. In Tamil we have astrology and medical books in his name ; there is even a devotional hymn அகத்தியர் அருளிய லலிதா நவரத்தின மாலை Lalitha Navaratnamala done by Agastya sung in the Tamil bhajans.
The poet Agastya mentioned by Ganga Devi was a poet in the court of Prataparudradeva of Warangal and an elder contemporary of Ganga Devi. It is guessed, not without sufficient reasons, he was under the patronage of Sangama and Bukka also. The Pratapa Rudrayaso- bhushana was among his noted works. Of the seventy-four works attributed to him a few are extant. These are Balabharata, Krishnacarita, Nalakirti kaumudi, Lakshmi Stotra ,Sivastava, Lalitasahasranamam ,
Manipariksha,Sivasamhita, and Sakaladikara .
Agastya seems to have distinguished himself as a writer of excellent prose. His nephew Gangadhara
was a dramatist and wrote at least three plays :
Mahabharata ,Candravilasa and Raghavabyudhayam .
Ganga devi greets him as the second Vyasa who made the Bharata story visually enjoyable .
****
What is in the Madura Vijayam?
Canto 1
This canto contains the following pieces of information:
1.Gives the names of contemporary luminaries.
2.Gives the information about the parentage of kumara Kampana—mentions Bukka and Harihara and describes the qualities of the head and heart of Bukka. Also mentions the name of Bukka’s queen Devayi. It may be noted that it is the only source giving information about the chief queen of Bukka.
3.Describes the city of Vijayanagar. Compare this with the descriptions of the city given by Paes, Nicolo Conti Abdur Razak and others who visited the city in the heyday of its prosperity. Pampa is mentioned as the branch of Vijayanagara.
Canto 2
The birth of Kampana and also of the other two sons of Bukka, Kampana and Sangama.
Canto 3
1.Gives an account of the early training of Kampana.
Mentions his marriage with Ganga Devi.
Canto 3
Contains very interesting and valuable historical information which can be analysed as follows:
Bukka’s analysis of the pollical situation in the Tamil country.
His exhortation to Kampana to destroy the chieftains in the tamil country and to establish himself at Kanci as its ruler.
After winning over the people of Tondaimandalam , Kampana has to march on his conquest of Madurai.
Canto 4
Preparations for the march on the Sambuvaraya territory.
The size of Vijayanagara army described.
The allies of Vijayanagara the Colas, the Keralas and the Pandyas .
The orderly march of the army.
Camping at Mulbagal. Then the move to Virincipuram.
The siege of Padaiveedu and the fight with the Sambuvarayas.
The defeat of the Sambuvarayas and the death of the Sambuvaraya king at the hands of Kampana.
Canto 5
Kampana establishes a just and prosperous rule in
Kanchipuram.
Cantos six and seven
Contain no historical information.
Canto 8
The condition of the Tamil country after Muslim occupation
The concluding canto
The final battle with the Muslims. The conquest of Madurai by Kampana after the defeat and the death of the sultan in the battle.
–subham—
Tags- Agastya, 74 poetic compositions, Madura Vijayam, Kumara Kampana, Conquest of Madurai , death of Sultan, Condition of Madurai
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பழனி என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள்
1.அறுபடை வீடுகளில் ஒன்று – பத்து மார்க்
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
விடைகள்
1.அறுபடை வீடுகளில் ஒன்று – பத்து மார்க்
2.பஞ்சாமிர்தம்
3.தண்டபாணி கோலம்
4.பழம் நீ அப்பா கதை- விநாயகர்- முருகன் உலக வலம் வரும் போட்டி
5.போகர் சமாதி அல்லது சித்தநாதன்/ வாசனை விபூதி
6.அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்
7.காவடி அல்லது ஆண்டுதோறும் பழனிக்கு வரும் பாதயாத்திரை
8.கே பி சுந்தராம்பாள் அல்லது பெங்களூர் ரமணி அம்மாள் பாடல்கள்
9. ROPE CAR அல்லது 670 படிகள் மலையேறவேண்டும்
10.பண்டாக்கள்/ பூஜாரிகள்
–subham—
Tags– பழனி ,பத்து விஷயங்கள், சொல்லுங்கள் , நூறு மார்க்,