மதுரை என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .
1. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் – பத்து மார்க்
2.
3.
5.
6.
7.
8.
9.
10.
விடைகள்
1.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் – 10 MARKS
2.தமிழ்ச் சங்கம்- பத்து மார்க்
3.வைகை நதி – பத்து மார்க்
4.சித்திரைத் திருவிழா
5.திருமலை நாயக்கர் மஹால்
6.மாரியம்மன் தெப்பக்குளம் அல்லது மங்கம்மாள் சத்திரம் அல்லது காந்தி மியூசியம்
7). 64 திருவிளையாடல்; திருவிளையாடல் புராணம் அல்லது மாணிக்க வாக்கர் அல்லது சமபநதர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உலகின் அதிசய இடங்கள்! கல்கிஆன்லைன் 18-4-25 இதழில் வெளியான கட்டுரை!
வெள்ளை மணல்குன்றுகள்! – நியூ மெக்ஸிகோவில் உள்ள பீங்கான் பாலைவனம்!
White Sands – Porcelain Desert Glazed with Dunes
ச. நாகராஜன்
வெள்ளை மணலில் ஒரு பாலைவனமா? அது என்ன அதிசயம்? அது எங்கே உள்ளது என்று கேட்போருக்கு நியூமெக்ஸிகோவைத் தான் சுட்டிக் காட்ட வேண்டும்!
உலகின் அதிசய வெள்ளை மணல் பாலைவனம் நியூ மெக்ஸிகோவின் தென்மேற்கே துலாரோஸா படுகையில் 275 சதுர மைல் பரப்பளவில் காட்சி அளிக்கிறது. சான் ஆண்ட்ரஸ் மலைத்தொடருக்கும் சாக்ரமாண்டோ மலைக்கும் இடையே உள்ள இந்த மணல் பகுதி பத்து கோடி வருடங்களுக்கு முன்னால் இயற்கையால் உருவாக்கப்பட்ட அதிசய இடங்களில் ஒன்றாகும்.
உலகின் மிகப் பெரிய வெள்ளை மணல் படுகையான இதில் தான் ஜிப்ஸம் எனப்படும் கால்சியம் சல்பேட் அதிகம் இருக்கிறது.
ஆயிரக்கணக்கான வருடங்களாக இதன் பயனை அறிந்த மனித குலம் இதைப் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி வருகிறது.
எகிப்திய பிரமிடில் உள்ள நிலவறைகளில் வெளிப்பூச்சாக இதை எகிப்தியர் பயன்படுத்தினர்.
பழைய காலத்தில் கிரேக்கர்கள் செலினைட் என்று அறியப்படும் ஜிப்ஸம் துகள்களினால் பளபளக்கும் ஜன்னல்களை அமைத்துத் தங்கள் வீடுகளில் பொருத்தினர்.
நமது காலத்திலோ இந்த ஜிப்ஸத்தை பிளாஸ்டர். வால்போர்ட், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர்.
இந்த மணல் பகுதியின் அருமையை அறிந்த அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் இதை தேசியச் சின்னமாக அறிவித்து இதைப் பராமரிக்கும் பணியையும் ஃபெடரல் அரசே செய்யும் என்று அறிவித்தார்.
சான் ஆண்ட்ரஸ் மலைத்தொடரும் சாக்ரமாண்டோ மலையும் முன்னொரு காலத்தில் பூமி பொங்கி எழ அதிலிருந்து வெளியான மலைகளாகும்.
காலப்போக்கில் ஏற்பட்ட தொடர் மழைகளால் மலைத்தொடரில் இருந்த ஜிப்ஸம் கரைந்து நீரோடு கலந்து ஒரு ஏரியாக உருவானது. அந்த ஏரிக்குப் பெயர் ல்யூசிரோ (Lucero). சான் ஆண்ட்ரஸ் மலையின் அடிவாரத்தில் உள்ள இந்த ஏரி செலினைட் துகள்கள் மேற்பரப்பில் இருக்க எப்போதும் பளபளப்பாகக் காட்சி தருகிறது.
இந்த துகள்களைக் கைகளால் தேய்த்தால் கூடப் போதும். அது அப்படியே உதிர்ந்து விடும். இப்படிப்பட்ட துகள்கள் 50 அடி உயரம் வரை உருவாகி வெண்மணல் குன்றுகளாகக் காட்சி அளிக்கின்றன.
ஆனால் காற்று இந்த குன்றுகளை அப்படியே இருக்க விடுவதில்லை.
இவற்றை நகர்த்திக் கொண்டே இருக்கின்றன. இந்தக் குன்றிலும் கூடத் தாவரங்கள் வளர்கின்றன! சுமார் நூறு வகையான தாவரங்கள் இங்கு காணக் கிடைக்கின்றன.
ஸ்பெயின் தேசத்தவரால் யுக்கா எலாடா என்று பெயரிடப்பட்ட ஒரு தாவரம் மிகவும் வலிமையானது. இதன் இலைகளை எடுத்து பூர்வ குடி இந்தியர்கள் கயிறுகளையும் கூடைகளையும் தயாரித்தனர்.
இந்தத் தாவரத்தில் மட்டுமே காணப்படும் ஒரு அந்துப்பூச்சி இதன் மலர்களில் தனது முட்டைகளை இடுகிறது. மலரோடு இது வளர்ந்து மலர் மலரும் போது இது வெளிப்படுகிறது.
இதுவும் ஒரு அதிசயம் தான்!
இங்கு மிருகங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
இந்தப் பகுதியை வணிக மயமாக்கி ஜிப்ஸத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் அமெரிக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கண்கள் எட்டிய தூரம் மட்டும் வெள்ளை வெளேரென மணல் குன்றுகள் காட்சி அளிக்கும் இடம் உலகில் இது ஒன்றே தான்!
Stamps posted today include YEAR 1997, YEAR 1998, STAMPS,
Pictures of 2500 Indian Stamps, PART 55,
MINT (NOT USED) STAMPS;
Four Lion Stamps, Four water birds, Gulzarilal Nanda, Jijabai, Assam News papers, Press Trust of India, Sanskrit College, Calcutta, Birth of Khala,National Defence Academy, Khajuraho, Maritime Heritage, Dindhu Darsan, Kumaraswamy Raja
–subham—
Tags– Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முருகன் என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .
1………….. பத்து மார்க்
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
விடைகள்
1.ஆறு முகம் – பத்து மார்க்
2.கையில் வேல் – 10
3.வள்ளி , தெய்வானை – 10
4.மயில் வாஹனம் -10
5.காவடி எடுத்தல், பால்குடம் -10
6. வைகாசி விசாகம் அல்லது சூர சம்ஹாரம் – 10
7.கந்த சஷ்டி விரதம் -10
8.கந்த சஷ்டிக் கவசம் அல்லது திருப்புகழ் (இதில் கந்தர் அத்தாதி, கந்தர் அனுபூதி எல்லாம் அடக்கம் ) -10
9.காளிதாசனின் குமார சம்பவம் (முருகன் பிறப்பு) அல்லது நக்கீரரின் திருமுருகாற்றுப்படை – 10
10. கீழேயுள்ள கோவில்களில் ஏதேனும் ஒன்று : 10
திருப்பரங்குன்றம், திருத்தணி திருச்செந்தூர், சுவாமி மலை, பழனி, பழமுதிர்ச்சோலை (ஒன்று சொன்னால் போதும்).
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எத்தனையோ அகஸ்தியர் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம்; ரிக் வேதத்தில் லோபாமுத்ரா என்ற மஹாராணியைக் கல்யாணம் கட்டிக்கொண்ட குட்டையான அகஸ்தியர் முதல் மருத்துவ நூல்கள் எழுதிய பிறகால அகஸ்தியர் வரை நாம் அறிவோம்; குள்ளமான அகஸ்தியர் சிலைகள் இந்தியாவில் மட்டுமின்றி தென் கிழக்காசிய நாடுகளிலும் இருப்பதால் இந்து சமய மு னிவர்களில் பெரும் புகழ் படைத்தவர் அகஸ்தியர் ஒருவரே என்பதையும் உறுதிபட சொல்லலாம் . காளிதாசனின் ரகுவம்சம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அகஸ்தியர்- பாண்டியர் தொடர்பினைக் கூறிவிட்டது. கடைசியாக நாம க்கு கவிதை எழுதிய பாரதியாரும் சிவபெருமான் தமிழ் மொழியை உண்டாக்கினார் அதற்கு அகஸ்தியர் என்ற பிராமணன் இலக்கணம் செய்து கொடுத்தான் என்று பாடிவிட்டார்.
ஆகையால் சிவபெருமான் எவ்வளவு பழமையானவரோ அவ்வளவு பழமையானது தமிழ் மொழி என்பதில் எள்ளவும் சந்தேகம் வர முடியாது!
ஆனால் தமிழ் வெறியை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ் ஆர்வத்தோடு அணுகினால் சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்னால் அகஸ்தியர் தமிழ் நாட்டிற்கு வந்தார் என்று சிவராஜ் பிள்ளை முதலியோர் எழுதிய ஆராய்ச்சி நூல்களை ஒப்புக்கொண்டு அங்கிருந்து காலத்தைக் கணக்கிடலாம். அகஸ்தியரை தமிழ்நாட்டிற்கு சிவ பெருமான் பதினெட்டு குடிகளுடன் அனுப்பியதற்கு முக்கிய காரணம் POPULATION PROBLEM பாபுலேஷன் பிராப்ளம் என்பதையும் நமக்கு இலக்கியங்கள் தெள்ளத் தெளிவாக எழுதியுள்ளன. அதுதான் உலகத்தின் முதல் ஜனத்தொகைப் பெருக்க பிரச்சினை என்பதும் முதல் திட்டமிட்ட குடிப் பெயர்வு (Southward migration of Hindus) என்பதும் எனது ஆராய்ச்சியில் கண்ட முடிவு. இதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய சங்க இலக்கிய உரையே சான்று.
அகத்தியம் என்ற இலக்கண நூல் நமக்கு கிடைக்காமற் போனது நமது துரதிருஷ்டமே.; நிற்க
****
கங்கா தேவி எழுதிய மதுரா விஜயம் என்ற சம்ஸ்க்ருத நூலினை எஸ் திருவேகடாசாரி அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்பாக (1957) வெளியிட்டார் . இதில் கங்கா தேவி எந்தளவுக்கு கற்றவர் பேரறிஞர் என்பது தெரிகிறது அவர் புகழும் மிகப்பெரிய புலவன் காளிதாசன் .
சம்ஸ்க்ருதத்தில் கவிதை வடிவில் மதுரா விஜயம் நூல் எழுதிய கங்கா தேவி, மதுரையில் முஸ்லீம் ஆட்சியை வேரறுத்து இந்து ஆட்சியை நிறுவிய மாபெரும் விஜய நகர படைத் தளபதி குமார கம்பண்ணனின் மனைவி . அவர் இல்லாவிடில் தமிழ் நாட்டில் இந்து மதம் அழிந்திருக்கும் அவரது காலம் 1365- 1370 CE
அதில் கங்கா தேவி அகஸ்தியர் பற்றிக்கூறுவதாவது
முதல் ஸ்லோகத்தில் பிள்ளையாருக்கு வணக்கம்;
இரண்டாவதில் பார்வதி பரமேஸ்வரனுக்கு வணக்கம்;
மூன்றாவதில் சரஸ்வதி தேவிக்கு நமஸ்காரம்;
நாலாவது ஸ்லோகத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் குலகுருவுக்கு வணக்கம் ;அவர் பெயர் க்ரியா சக்தி.
ஐந்தாவது ஸ்லோகத்தில் வால்மீகி முனிவருக்கு வாழ்த்து.
ஆறாவது ஸ்லோகத்தில் வியாசருக்கு நமஸ்காரம்;
ஏழாவது ஸ்லோகத்தில் காளிதாசனுக்கு அடிமையாகாத புலவர் எவரேனும் உண்டா? இன்றும் கூட அவரது வழிகாட்டுதலில் அல்லவோ வாழ்கிறார்கள்! என்று புகழ்கிறார்
இந்த மஹாராணி மெத்தப் படித்தவர் என்பதற்கு இது ஒன்றே சான்று! ஆயிரம் ஸம்ஸ்க்ருதக் கவிஞர்கள் இருந்த திலும் கடலில் முத்து எடுப்பது போலப் புகழ்பெற்ற கவிஞர்களை கால வரிசைப்படி புகழ்ந்துள்ளார்!
அகஸ்தியர் என்ற கற்றறிந்த கவிஞனைக்கண்டு பொறாமைப்படாமல் யாராவது இருக்க முடியுமா ? அவர் 74 கவிதை (நூல்) களை எழுதியவர் ஆயிற் றே!
பின்னர் கங்காதர, விஸ்வநாத ஆகியோரைப் புகழ்ந்து விட்டு இலக்கியத் திறனாய்வு பற்றிப் பாடுகிறார்.
யார் இந்த 74 கவிதை நூல் அகஸ்தியர்? அவரை ஏன் கவி திக்கையாவுக்குப் பின்னாலும் கவி கங்காதரவுக்கு முன்னாலும் வைத்தார்? அவர் எழுதிய 74 கவிதைகளோ கவிதை நூல்களோ எங்கே ?
கால வரிசைப்படிப் பார்க்கையில் இவர் நாம் அறியாத வேறு ஒரு புதிய அகஸ்தியர் என்று தெரிகிறது
இதற்கு உரை எழுதியோர் வாரங்கல் பிரதாபருத்ரதேவரின் ஆஸ்தான கவிஞர் அகஸ்தியர் என்றும் கங்காதேவிக்கு சீனியர் என்றும் கூறுகின்றனர்
பிரதாபருத்ரன் என்ற மன்னர் பற்றி அவர் எழுதிய கவிதை நூலி லிருந்து இதை அறிய முடிகிறது; அவருக்கு வித்யாநாத என்ற பட்டமும் இருந்திருக்கலாம். அவர் எழுதிய 74 நூல்களில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன நமக்குக் கிடைத்தவை:
பால பாரத , கிருஷ்ண சரித, நள கிர்த்தி கெளமுதி, லட்சுமி ஸ்தோத்ர, சிவ ஸ்தவ, லலிதா சஹஸ்ரநாமம், மணீ பரீக்ஷ, சிவ சம்ஹிதா, சகலாதிகார.
இந்த அகஸ்தியர் சம்ஸ்க்ருத உரைநடையில் வல்லவர் என்றும் தெரிகிறது.
அகஸ்தியருடைய அண்ணண் மகன் கங்காதர மூன்று சம்ஸ்க்ருத நாடகங்களை எழுதியுள்ளார் அவை மஹாபாரத, சந்திர விலாச ராகவ அப்யுதயம். இவரை இரண்டாவது வியாசர் என்று கங்காதேவி புகழ்வதால் அந்த மஹாபாரத நாடகம் விரிவானதாகவும் மிகச் சிறந் ததாகயும் இருந்திருக்க வேண்டும்.
இப்படி ‘அநிர்வேதம்’ (மனம் தளராமை) என்ற சொல்லைக் கூறிக் கொண்டு உற்சாகம் அடைகிறான்; வெற்றி பெறுகிறான்.
கடவுளரின் குணத்தைக் கொண்ட அனுமனே வெற்றிக்கான வழியைக் காண்பிப்பவன்.
அன்று முதல் இன்று வரை இது தான் உண்மை.
ஆகாய விமானத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்த ரைட் சகோதரர்களை எள்ளி நகையாடினார்கள் – பறவையைப் போல பறக்கும் எந்திரம் தயாரிக்கப்போகிறார்களாம், இவர்கள் என்று!
எடிஸனைக் கேலி செய்தார்கள் – மெஷினை வைத்து பேசப்போகிறானாம் இவன் என்று!
ஃபோர்டை எள்ளி நகையாடினார்கள் – சாலையிலே ஓடுமாம் இவனது கார் என்று.
அவர்கள் அனைவரும் ஜெயித்தார்கள் – உற்சாகத்தை மேற்கொண்டு!
இது முடியாது என்ற எண்ணத்தை விட்டுவிட்டு இது எப்படி முடியும் என்று எண்ண வைப்பது உற்சாகமே!
“ஒவ்வொரு பிரச்சினையும் அதற்கான தீர்வை அந்தப் பிரச்சினைக்குள்ளேயே வைத்திருக்கிறது.”
“Every Problem contains within itself the seeds of its own solution” –
இந்த 11 வார்த்தை சூத்திரத்தை உலகிற்கு அளித்தவன் ஸ்டான்லி ஆர்னால்ட் என்ற சிறுவன்.
13 வயதான அவன் க்ளீவ்லாந்திலேயே மிக மோசமாகத் தாவுபவன் (Jumber) என்ற பெயரைப் பள்ளியில் எடுத்தான். உடல்பயிற்சி நிலையத்திற்குச் சென்ற அவன் ஏன் முன்னால் தாவ வேண்டும், பின்னால் தாவிப் பார்த்தால் என்ன என்று நினைத்தான். அனைவரும் அவனது இந்த எண்ணத்தைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
ஆனால் அவன் முயன்று பின்னால் தாவிப் பார்த்தான். அனைவரும் தாவுவதற்கு நின்ற போது ஜிம்மில் இருந்த கோச் தாவலாம் என்ற போது அவன் பின்னால் தாவினான்.
என்ன ஆச்சரியம்! அவனது சாதனையை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவனைப் பாராட்டினார். புதிய ஒரு விளையாட்டு வழியைக் காட்டி உற்சாகத்தை அவன் உலகில் ஊட்டினான்.
பேக்வேர்ட் ப்ராட் ஜம்பரில் (BackwardBroad Jumber) உலகின் முதல் சாம்பியனாக அவன் ஆனான்.
மிகப்பெரும் நிறுவனமான ஸ்டான்லி ஆர்னால்ட் & அசோஸியேட்ஸ் – STANLEY ARNOLD & ASSOCIATES – நிறுவனத்தை நிறுவி உலகப் புகழ் பெற்றான்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கணபதி என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .
விடைகள்
1.யானை முகம் – பத்து மார்க்
2.வளைந்த துதிக்கை அல்லது ஐந்து கரம் – 10
3.மோதகம்/ கொழுக்கட்டை- 10
4.மூஷிக / மூஞ்சுறு வாஹனம் -10
5.மஞ்சள் / களிமண் பிள்ளையார் -10
6. எருக்க மாலை அல்லது அருகம் புல்- 10
7.பிள்ளையார்/ விநாயக/ கணேஷ் சதுர்த்தி -10
8.விநாயகர் அகவல் அல்லது மஹாபாரதம் எழுதினார் -10
9.விக்னங்களை/ தடைகளை உண்டாக்குபவனும் அவனே; நீக்குபவனும் அவனே; அதனால் விக்னேஸ்வரன்- 10
10.கணபதி ஹோமம் அல்லது கீழேயுள்ள கோவில்களில் ஏதேனும் ஒன்று : 10
வாதாபி கணபதி ,திருச்செங்காட்டங்குடி, பிள்ளையார்பட்டி, அஷ்ட விநாயகர் கோவில்கள், மும்பை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், மணக்குள விநாயகர் (புதுவை) பொல்லாப் பிள்ளையார், திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில், மதுரைக்கோவில் முக்குறுணி விநாயகர் (ஒன்று சொன்னால் போதும்).
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இந்தக் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது
பாண்டியர் வரலாறு 2600 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்குகிறது என்பதை மஹாவம்ச க் குறிப்புகளிலிருந்து அறிகிறோம் என்றும் அதற்குப் பின்னர் கல்வெட்டுக் குறிப்புகள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே கிடைப்பதால் அந்த இடைப்பட்ட ஆயிரம் ஆண்டுகளில் ஆட்சிபுரிந்த குறைந்தது 50 அல்லது 60 அரசர்களைக் கண்டுபிடித்து கால வரிசைப்படுத்த வேண்டும் என்றும் கட்டுரையின் முதல் பகுதியில் கண்டோம்.
சம்பந்தரும் அப்பரும் தேவாரத்தில் மாணிக்கவாசகரின் லீலைகளைக் குறிப்பிட்ட பின்னரும் அதைக் கண்டுகொள்ளாமல் வரகுணன் என்ற ஒரே குறிப்பை மட்டும் வைத்து மாணிக்க வாசகரைப் பின்னுக்குத் தள்ளியது தவறு என்பதை இப்போது காண்போம் .
நரி பரி ஆன லீலை
மதுரைக் கோவிலுக்குச் சென்றோர் அனைவரும், கல்லில் ஆன வன்னி மரம், சிவலிங்கம், அருகில் ஒரு கிணறு இருப்பதை பிரகாரத்தில் கண்டிருப்பார்கள். வன்னி மரமும் கிணறும் சாட்சியாக வந்த ஸ்தல வரலாறு இது ; கண்ணகி ஏழு மாபெரும் பத்தினிகளைச் சொல்லும் சிலப்பதிகார வஞ்சினமாலைப் பகுதியில் இந்தக்கதை வருகிறது ; நல்ல அருமையான ஆராய்ச்சி உரை எழுதிய உ. வே சாமிநாத அய்யர் தஞ்சசைப் பிரதேசத்திலுள்ள (திருப்புறம்பியம் சாட்சிநாதர் , திருமருகல் ) ஓரிரு கோவில்களின் கதைகளில் இது இருப்பதாகச் சொல்லியுள்ளார் . ஆனால் சிலப்பதிகாரத்தை முதல் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வி ஆர் ராமசந்திர தீட்சிதர் , திருவிளையாடல் புராணத்திலும் (தி.வி.பு) இக்கதை இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார் ; சான்றுரைத்த திருவிளையாடல் என்பது கடைசி (64) திருவிளையாடல் ஆகும். சிலப்பதிகார காலம் இரண்டாம் நூற்றாண்டு என்றால் இந்த சம்பவம் அதற்கு முன்னால் நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா?
சம்பந்தர் தேவாரத்தில் வரும் திருவிளையாடல் நிகழ்ச்சிகளை ஏ.வி ஜெயச்சந்திரன் எழுதிய நூலில் பட்டியலிட்டுள்ளார் . அதில் ஆராய்ச்சிக்குரியவை நான்மாடக்கூடல், திரு ஆலவாய் ஆன படலங்கள் ஆகும். மிக முக்கியமானது திருமுகம் கொடுத்த குறிப்பு! சிவ பெருமான் பாணபத்திரருக்கு RECOOMENDATION LETTER ரெக்கமண்டேஷன் லெட்டர் கொடுத்து அனுப்பிய படலம் அது. உலகிலேயே இலக்கியத்தில் காணப்படும் முதல் சிபாரிசுக் கடிதம் இதுதான்; கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம் பெறவேண்டியது . இதை எல்லோரும் சேரமான் பெருமாள் காலம் என்ற பகுதியில் வைத்துப் பின்னுக்குத் தள்ளுகின்றனர் .
இதற்கு இன்னுமொரு உதாரணம் அப்பர் தேவாரத்தில் வருகிறது .
சங்கத் தமிழ் நூல்களில் மிகப்பெரிய HISTORIAN ஹிஸ்டோரியன்- வரலாற்று ஆசிரியர் பரணர் ; எழுபதுக்கும் மேலான சம்பவங்களை நமக்கு அளிக்கிறார் அதே போல 12 திருமுறைகளில் மிகப்பெரிய ஹிஸ்டோரியன் அப்பர் பெருமான்; வடக்கே பாடலிபுத்திரம் வரை சென்று , காளிதாசன் போல, இந்தியாவையே அளந்தவர் . அவர் சொல்லும் தி.வி.பு பட்டியலில் முக்கியமானவை:
தருமிக்குப் பொற்கிழி அளித்தது ;
நரி, பரியானது;
மண் சுமந்தது (சிவ பெருமானே புட்டுக்கு மண் சுமந்த நிகழ்சசி இன்றும் மதுரையில் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு புட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
நரி -பரி, புட்டுக்கு மண் சுமந்தது– இரண்டும் மாணிக்க வாசகர் கதைகள். இவ்வளவு தெளிவான சான்று இருந்தும் வீம்பு பிடிக்கும் பிடிவாதப் பேர்வழிகள் மாணிக்கத்தைப் பின்னுக்குத் தள்ளுவது ஏனோ தெரியவில்லை.
கூன் பாண் டியன் சுரம் தீர்த்த படலம் படலம்
பாவை பாடிய வாயால் கோவை பாடிய மாணிக்கம், திருக்கோவையில் இரண்டு முறை வரகுணநைக் குறிப்பிடுகிறார்; நமக்குத் தெரிந்தவரை 17ஆவது நூற்ரா ண்டு வரை 3 வரகுணன்ங்கள் இருக்கிறார்கள் சிவ பக்தர்களுக்கு எல்லாம் இப்பட்டம் கிடைத்திருக்கிறது; ஆகையால் இவர்களுக்கு எல்லாம் மூத்த ஒரு சிவ பக்த வரகுணன் இருந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து. அப்பரும் சம்மந்தரும் பொய் சொல்ல மாட்டார்கள்! இப்போது சுந்தரர் -பாணபத்திரன்- சேரமான் பெருமாள் நாயனார் – சிபாரிசுக் கடித புதிரை விடுவிக்க வேண்டும் ஒன்று, திருமுகம் கொடுத்த தேவார பாடல் தவறாக ச ம் பந்தர் தேவாரத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது பாணர்- சேரமான் பெருமாள் நாயனாரை முன்னுக்குத் தள்ள வேண்டும் ; இதற்கு ஆதாரங்கள் தேவை.
இந்திய வரலாற்றில் ஒரு நிகழ்ச்சியைவைத்து இன்னொருவர் காலத்தைக் கணிக்கும் அவல நிலை இருக்கிறது; மாண்டசோர் கல்வெட்டு ஒன்றினை வைத்து காளிதாஸருக்கு 700 ஆண்டு காலம் கற்பித்த கதை போன்றது இது !
கல்லாடம் என்னும் நூலில் 31தி வி பு சம்பவங்கள் வருகின்றன
அதிலும் திருமுகம், நரி- பரி, மண் சுமந்தது வருகின்றன
Picture-மண் சுமந்தது
சங்க லத்திலிருந்து பல கல்லாடர் இருந்த சான்று உள்ளது; ஆகையால் இந்தக் கல்லாடர் காலத்ததையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
மாணிக்கவாசகருக்குப் பின்னர் 12 மன்னர்கள் இருந்ததைச் சொல்லி சம்பந்தர் கால கூன் பாண்டியனைக் குறிப்பிடுகிறார். ஆகவே குறைந்தது 200 ஆண்டு இடைவெளி; அதாவது மாணிக்க வாசகர் சம்பந்தருக்கு முந்தியவர்; மேலும் நின்ற சீர் நெடுமாறன் என்று போற்றப்படும் கூன் பாண்டியன் மட்டும் நெடுமாறன் அல்ல என்பது பெரியாழ்வார் குறிப்பிடும் நெடுமாறனால் தெரிகிறது. நம்மாழ்வார் வரகுணமங்கை என்ற ஊரைப்பாடுகிறார். அங்கோ சிவன் சம்பந்தமே இல்லை .
இதிலிருந்து தெரிவது என்ன வென்றால், ஒரு வரகுணன் மட்டும் இல்லை; ஒரு நெடுமாறன் மட்டும் இல்லை, ஒரு சேரமான் மட்டும் இல்லை; இந்த திறந்த மனத்தோடு தி வி பு. வை அலசி ஆராய வேண்டும்.
கடைசியாக ஒரு விஷயம். பரஞ்சோதி முனிவர் எழுதிய தி.வி.பு.வில் மிகத்தெளிவாக மன்னர் வரிசை உள்ளது.
நல்ல வேளையாக 64 திருவிளையாடல்களை ஆயிரம் ஆண்டுக்கு முந்தையவை என்பதை எல்லா சான்றுகளும் காட்டுகின்றன கரிகாலன் பெயர் கூட தி.வி.பு.வில் வருகிறது.
சுந்தர பாண்டியன் என்ற பெயரில் நாலைந்து பேர் இருந்ததை பரஞ்சோதியே சொல்கிறார். ஆதி சங்கரர் சொல்லும் சுந்தர பாண்டியன் யார் ?
காக்கைபாடினியார் எழுதியது காக்கைபாடினீயம்; அகத்தியர் எழுதியது அகத்தியம் ; தொல்காப்பியர் எழுதியது தொல்காப்பியம்; பாணினி எழுதியது பாணினீயம்; சுந்தர பாண்டியன் எழுதியது சுந்தர பாண்டியம் ; சங்கரர் காலம் 732CE என்று வாதிடுவோர், அவருக்கு முந்தையா சுந்தர பாண்டியனைக் கண்டுபிடிக்க வேண்டும் அல்லவா ?
முன்னர் சொன்னபடி, கடுங்கோனுக்கு முன்னர் ஆண்ட ஐம்பது பாண்டியர்களைக் கண்டுபிடிக்க தி வி பு உதவும்.
மாணிக்கவாசகர் காலம் பற்றிய எனது பழைய கட்டுரைகளில் மேலும் பல தகவல்களைக் காணலாம்
*****
ஆதீனங்களுக்கு வேண்டுகோள்
திருமந்திர மகாநாடு, சைவ மகாநாடு கூட்டுவது போல தி வி பு மஹாநாட்டினைக் கூட்டி பல் துறை அறிஞர்களைக் கொண்டு ஆராயவேண்டும். ஏனெனில் தி. வி. பு. வில் பல சுனாமி அழிவுகள், தலைநகர் மாற்றங்கள் பாபுலேஷன் பிராப்ளம்/ மக்கட் தொகை பெருக்கம், 12ஆண்டு வறட்சி, பிராமணர் -செட்டியார் குடி பெயர்வு, இலங்கை முதல் இமயம் வரை ஜியாக்ரபி / புவியியல் ,பல நாடுகள், கத்திச் சண்டைப் போட்டி, சங்கீதப் போட்டி, வழக்காடுதல், சங்கப் புலவர் சண்டை என்று பல துறை விஷயங்கள் வருகின்றன.
விரைவில் மகாநாட்டில் சந்திப்போம்
–subham—
Tags பாண்டியர், வரலாற்றில், தீர்க்கப்படாத மர்மங்கள், புதிர்கள், PART 2, ஆதீனங்களுக்கு, வேண்டுகோள் ,மாணிக்கவாசகர் காலம், கல்லாடம்,முதல் சிபாரிசுக் கடிதம்,வரகுணன்