ஜெய் ஜெய்பூர் – 1 (Post No.14,415)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,415

Date uploaded in London – –21 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-4-25 மாலைமலர் இதழில் பிரசுரமான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.

ஜெய் ஜெய்பூர் – 1 

ச. நாகராஜன்

இந்திய வீரத்தையும் பாரம்பரியத்தையும் அழகையும்கலைகளின் மேன்மையையும் பக்தியின் உச்சத்தையும் கண்டு உற்சாகம் பெற ஒரு இடத்தை இந்தியாவில் சொல்லுங்கள் என்றால் உடனே வரும் விடை ஜெய்பூர்.

கம்பீரமான இந்த ஊரில் உள்ள கவினுறு காட்சிகள் ஏராளம். முக்கியமானவற்றைப் பார்ப்போமா?

ஹவா மஹால்

ஜெய்பூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் ஹவா மஹால்.

தேனடையைப் போலக் காட்சி அளிக்கும் ஐந்து அடுக்கு அரண்மனையான இதை மஹாராஜ சவாய் ப்ரதாப் சிங் 1799ம் ஆண்டில் கட்டினார். சிவப்பு மற்றும் இளநீல கற்களைக் கொண்டு சிடி பாலஸ் அருகில் இது கட்டப்பட்டது.

பிரமிட் போல கட்டப்பட்ட இதில் ஜாரோகாஸ் என்று அழைக்கப்படும் 953 விசேஷமான ஜன்னல்கள் பார்ப்போரைக் கவரும் வடிவமைப்பில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஜன்னல்கள் வழியே குளிர்ந்த காற்று பாய்ந்து மஹாலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

அரண்மனையில் வாழும் மகளிர் சாதாரணமாக நகர வாழ்க்கையைப் பார்க்க முடியாமல் தனியே அரண்மனைக்குள்ளேயே இருப்பது வழக்கம்.  அவர்கள் இதிலிருந்து மீண்டு, நகரத்தைப் பார்க்க வழிவகை செய்யும் முக்கிய நோக்கத்துடன் இது அமைக்கப்பட்டது.

அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்ட 50 அடி உயரம் கொண்ட இந்த மஹால் 87 டிகிரி சாய்ந்திருக்கும். இங்கு மாடிப்படிகள் கிடையாது. அரண்மனை நாரீமணிகள் நளினமாக நடந்து செல்ல வசதியாக இதில் சரிவுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொல்லியல் கண்காட்சி ஒன்றும் உள்ளது. ராயல் டோர் என்னும் பிரதான வாயில் வழியே உள்ளே செல்ல வேண்டும்.. இதன் உச்சியிலிருந்து பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு

ஆம்பர் ஃபோர்ட்

அமர் நகரில் ஒன்றரை சதுர மைல் பரப்பில் அமைந்துள்ள கோட்டை இது. பவானி என்னும் அம்மனின் பெயரால் இக்கோட்டைக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. ராஜபுதன கட்டிடக் கலை அம்சங்களைக் காட்டும் இந்தக் கோட்டை மணல் கற்களாலும் சலவைக் கல்லாலும் கட்டப்பட்டதாகும்.

கோட்டையில் பல அரண்மனைகளும் ஒரு ஏரியும் உள்ளன.

ஜெய் மந்திர் எனப்படும் கண்ணாடி மாளிகை உட்பட பல மாளிகைகள் இங்கு உண்டு. இங்குள்ள ஒலி-ஒளி காட்சியை மறக்காமல் அனைவரும் பார்ப்பது வழக்கம்.

ஆம்பர் கோட்டையின் சுவர்களுக்கு மற்றும் பேசும் சக்தி இருந்தால் அவை ராஜபுதனத்து மன்னர்களின் காலத்தை வென்ற வீர சரித்திரங்களைக் கூறும் என்பது அறிஞர் வாக்கு.

ஜெய்கர் ஃபோர்ட்

ஜெய்பூரில் அமேர் பகுதியில் ஆரவல்லி மலைத் தொடரில் ஆம்பர் கோட்டைக்கு மேலே அமைந்துள்ள கோட்டை இது. இரண்டாம் சவாய் ஜெய்சிங் என்ற மன்னர் தனது வெற்றியைக் கொண்டாட 1310 அடி உயரமுள்ள மலையில் இந்தக் கோட்டையைக் கட்டினார். கோட்டையின் மேல் உள்ள ஜெய்வானா பீரங்கி உலகின் மிகப் பெரிய பீரங்கிகளில் ஒன்று. கோட்டையின் சுவர்கள் எதிரிகள் இடிக்க முடியாதபடி வலிமை வாய்ந்தவை. உள்ளே லலிதா கோவில் ஆரம் கோவில், ஆயுத சாலை மற்றும் அருங்காட்சியகம் உள்ளது. ஜெய்கர் கோட்டையையும் ஆம்பர் கோட்டையையும் பூமிக்கடியில் உள்ள ஒரு சுரங்கப் பாதை இணைக்கிறது.

ஒரு போதும் சரிந்து வீழாத கோட்டை இது;  இதன் வீர உணர்வு ஒருபோதும் குறைந்ததே இல்லை!

சிடி பாலஸ் (நகர அரண்மனை)

மகாராஜ சவாய் ஜெய்சிங் உருவாக்கிய இந்த அரண்மனை வாஸ்து சாஸ்திரப்படி உருவாக்கப்பட்டது. இங்கு முபாரக் மஹால், சந்திர மஹால், மகாராணியின் அரண்மனை ஆகியவற்றைப் பார்ப்பதோடு மகாராஜா சவாய் மான்சிங் அருங்காட்சியகத்தையும் பார்க்கலாம்.

ஜெய்பூரின் இதயம் துடிக்கும் இடம் இது தான்

என்கின்றனர் பயணிகள்!

ஜந்தர் மந்தர்

திறந்த வெளிக் கோளரங்கமான இதில் மிகப் பெரிய சூரிய கடிகாரம் உள்ளது. வானவியலில் ஆர்வமுள்ளோர் கோள்களைப் பற்றிய ஆய்விற்காக செய்யப்பட்ட பல இயந்திரங்களை இங்கு பார்க்கலாம். இது 1734ல் கட்டப்பட்டது.

எதிர்காலம் இறந்தகாலத்தைச் சந்திக்கும் அற்புத இடம் இதுவே என்கின்றனர் அறிஞர்கள்!

பாபு பஜார்

ராஜஸ்தான் என்றாலே கைவினைப் பொருள்களின் சிறப்பே ஞாபகத்திற்கு வரும். பிங்க் சிடி என்று ஜெய்பூருக்கு ஒரு பெயர் உண்டு. இளஞ்சிவப்பு வண்ணத்தில் அனைத்துக் கட்டிடங்களும் இங்கு கட்டப்பட்டிருப்பதால் இதற்கு பிங்க் சிடி என்ற பெயர் வந்தது. இங்கு கைவினைப் பொருள்கள் அனைத்தையும் குறைந்த விலையில் வாங்கலாம். ஒரு பை நிறைய பாபு பஜாரில் வாங்கும் பொருள்கள் ராஜஸ்தானைப் பற்றிய முழு விவரத்தையும் சொல்லும்!

 to be continued………………………

14 Pictures of 2500 Indian Stamps!- Part 14 (Post No.14,414)


Written by London Swaminathan

Post No. 14,414

Date uploaded in London –  20 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART  14

I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

PART 14, INDIAN STAMPS, INDIAN PAINTINGS,  HAND SYMBOLS, NAVY SHIP, FLAGS, BANGLADESH LIBERATION DAY, BETRAND RUSSEL, VIKRAM SARABHAI, VEMANA, GANDHI, KUMARAN ASAN, TIGER, HOCKEY, CRICKET, SHOOTING, ARVI SATELLITE, C V RAMAN, LAL BAHADUR SASTRI, RADHAKRISHNAN, TAJ MAHAL, V O CHIDAMBARAM PILLAI, T.PRAKASAM, DAL LAKE, DAM, NETAJI, BOSE, FAMILY PLANNING, REFUGEE RELIEF, AJANTA, TAGORE, TORCH

–SUBHAM—

TAGS– PART 14, INDIAN STAMPS, INDIAN PAINTINGS,  HAND SYMBOLS, NAVY SHIP, FLAGS, BANGLADESH LIBERATION DAY, BETRAND RUSSEL, VIKRAM SARABHAI, VEMANA, GANDHI, KUMARAN ASAN, TIGER, HOCKEY, CRICKET, SHOOTING, ARVI SATELLITE, C V RAMAN, LAL BAHADUR SASTRI, RADHAKRISHNAN, TAJ MAHAL, V O CHIDAMBARAM PILLAI, T.PRAKASAM, DAL LAKE, DAM, NETAJI, BOSE, FAMILY PLANNING, REFUGEE RELIEF, TAGORE, PARAMAHAMSA, HIMALAYAS

சரக சம்ஹிதை நூலில் 149 நோய்கள்- Part 4 (Post No.14,413)

Written by London Swaminathan

Post No. 14,413

Date uploaded in London –  20 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART FOUR 

நோய்களின் பட்டியல், அவை நூலில் காணப்படும் அத்தியாயம், ஸ்லோகங்களின் எண் முதலியன :–

தமிழ், சம்ஸ்க்ருத ஆங்கில சொற்கள்

PART FOUR

61.FISSURES OF THE SCALP 1-20-11 கேச பூமி ஸ்புடனம் – உச்சந்தலையில் வெடிப்புகீறல் உண்டாதல்

62.BALDNESS 1-5-30 கலித்வ- வழுக்கையாதல் 

63.LAMENESS 1-20-11 கஞ்சத்வ – முடமாதல்

64.IMPOTENCY OF THE MALE 6-30-154 க்ளைவ்ய  – ஆண்களிடம் மலட்டுத் தன்மை

65.LOCALISED THICKENING OF MUSCLE FIBRES 1-24-16 கோட – தோல் தடிமனாதல்

66.PARASITIC INFECTIONS – 19 TYPES- 1-19-9 கிருமி – தொற்று நோய்க் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் – 19 வகைகள் இருக்கின்றன;

67.DISORDER OF LACTATION- 11 TYPES- 6-30-237 க்ஷீரதோஷ – தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல்கள் —11 வகைகள் இருக்கின்றன;

68.HUNCH BACK CONDITION 1-20-11 குப்ஜத்வ – கூன் முதுகு

69.CHRONIC SKIN DISEASES  20 TYPES 6-7 குஷ்ட- இருபது வகை தோல் நோய்கள்  

70. FRONTAL HEADACHE 1-20-11 லலாட பேத- முன்பக்கத் தலைவலி

71.SUPPURATION AND SORES OF THE PENIS 6-30-168 லிங்கபாக – ஆண்குறியில் வீக்கம்புண்

72.CHRONIC ALCOHOLISM -SIX TYPES 6-24 குடி போதைக்கு அடிமை ஆதல் – ஆறுவகை உண்டு —மதத்யாய

73.DIABETES 2-4-44; 6-6-56 நீரிழிவு சர்க்கரை வியாதி

74.SOFTENING AND DEGENERATION OF MUSCULAR TISSUES 1-20-14 மாம்சக்லேத- சதையிலுள்ள திசுக்கள் பலவீனம் அடைதல்

75.PSYCHIC DISORDERS 1-7-52  மனோவிகார – மனா உளைச்சல் முதலியன 

76. POX 6-12-93 மசூரிக – அம்மை நோய்

77. URETHRITIS 1-20-14 சிறுநீரைக் கொண்டுவரும் குழாய்கள் வீங்குதல்எரிச்சல் -மேத்ரபாக

78.CHRONIC ABORTION- 4-8-30 ம்ரித கர்ப்ப – அடிக்கடி குழந்தை இறந்து பிறத்தல் அல்லது கர்ப்பம் சிதைதல் ;

ம்ருத்ம்ரித என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களிலிருந்து மரணம் மரித்தல் என்ற சொற்கள் வந்தன .

79. DUMBNESS 1-20-11 மூகத்வ – செவிட்டுத் தன்மை

80. ORAL DISEASES 6-26-19 வாயில் ஏற்படும் நோய்கள் – முகரோக

சஸ்ம்க்ருதத்துக்கு வாய்  இல்லை  தமிழுக்கு முகம் இல்லை என்று ஆன்றோர்கள் கிண்டலாகச் சொல்வதுண்டு. . ஏனெனில் சம்ஸ்க்ருதத்தில் முகம் என்றால் வாய்தமிழில் முகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையே இன்று வரை பயன்படுத்துகிறோம் யாரும் மூஞ்சி என்று சொல்வதில்லை.


TO BE CONTINUED…………………………………………………

TAGS- சரக சம்ஹிதை நூல்,  149 நோய்கள்,  Part 4

தைவான் நாட்டுப் பழமொழிக் கதைகள் (Post.14,412)

Written by London Swaminathan

Post No. 14,412

Date uploaded in London –  20 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Written by London Swaminathan

Post No. 14,412

Date uploaded in London –  20 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கம்யூனிஸ்ட் சீனாவுக்கு அருகில் ஒரு தீவாக உள்ள நாடு REPUBLIC OF CHINA/ TAIWAN   தைவான் என்று அழைக்கப்படுகிறது ; அந்த நாடு சீனப் பழமொழிகள் சொல்லும் கதைகளை அடிக்கடி தபால்தலைகளாக வெளியிடுகிறது .

வீட்டையும் நேசி காகத்தையும் நேசி  love house and crow,”  என்பது சீனப் பழமொழி ; இதன் பொருள் ஒருவரை  விரும்பும்போது அவர்களிடத்தில் உள்ள குறைகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும் காதலன், காதலிகளுக்கு இது ஒரு முக்கிய பாடம் ; கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதை இது வலியுறுத்துகிறது ஆங்கிலத்தில் என்னையும் விரும்புஎன் நாயையும் விரும்பு என்று சொல்லுவார்கள் .

****

பச்சை கல்லுக்கு ஒளியூட்ட செங்கலை கொடுத்தானாம்offering bricks to elicit jade,”  என்பது ஒரு சீனப்பமொழி.

இது தங்கத்தைக் கொடுத்து பித்தளை வாங்குவதற்குச் சமம் ; இதன் பின்னால் ஒரு சீனக்கதை உளது ஒரு பிரபல கவிஞர் இன்னும் ஒரு பெரியவர் கோவிலுக்கு வருவதை அறிந்து இரண்டு வரி கவிதையை சுவற்றில் எழுதினாராம்; அவர் எதிர்ப்பார்த்தது மீதி இரண்டு வரிகள் தன்னுடையதையும் மிஞ்சுவதாக இருக்கும் என்று . ஆனால் அவ்ருக்குப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது; அந்தப் பெரியவர் எழுதியது சோடை போனது  அவர் பாரதி அல்லது காளிதாசனைப் போன்ற்வர் அல்ல. பாரதி சின்னப்பயல் என்று கவிதை எழுத்ச் சொன்ன காந்திமதி நாதனை பாரதி மட்டம் தட்டினார்; எப்படி? காந்தி மதி நாதனைப் பார் அதி (பாரதி) சின்னப்பயல் என்று!

அதேபோல  கோபித்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறிய  காளிதாசனைக் கண்டுபிடிக்க போஜ ராஜன் இரண்டு வரி கவிதை  எழுதி இதை பூர்த்தி செய்வோருக்குப் பரிசு என்றவுடன் காளிதாசன் அதை அற்புதமாகப் பூர்த்தி செய்தான்; உடனே காளிதாசன் இருக்குமிடத்தைப் போஜராஜன் கண்டு பிடித்தான் அப்படியெல்லாம் இல்லாமல் சொத்தைக் கவிதையை  எழுதியதால் செங்கலை வைத்து பச்சைக் கல்லுக்கு மெருகு ஊட்டியது போல என்ற சீனப் பழமொழி எழுந்தது !

When the Tang dynasty poet Chang Jian learned that Zhao Gu was going to the Lingyan Temple in Suzhou, he wrote on the temple wall: “At this old temple beside the Guanwa Palace / The clouds over the watery expanses are many, and the visitors few.” His expectation was that Zhao would add the final two lines to the poem. Zhao did indeed add: “Upon hearing of spring’s arrival, my melancholy doubles / Amid hundreds of blooms, a monk returns.” Later generations felt that Chang Jian had “offered bricks to elicit jade”—and the expression came to describe the act of offering clumsy lines of poetry or unpolished efforts in the hope of eliciting outstanding work from another person.

****

நான்கு தபால் தலைகளை வெளியிட்ட தைவான் நாடு, நாலாவது அஞ்சல் தலைக்கான சீனக்கதையையும் வெளியிட்டது ; உண்மையைப் போலவே  “true to life”என்பது அந்தப் பழமொழி.  ஒரு சிந்தனையாளர் நன்றாக உறங்கினார்; அப்போது அவர் பட்டுப்பூச்சி பறப்பது போலக் கனவு கண்டார்; விழித்து எழுந்தவுடன் அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. நான் பட்டுபூச்சியிலிருந்து வந்தவனா அல்லது  நான் நான்தானா  என்று; ஏனெனில் அவரது கனவு அவ்வளவு தத்ரூபமானது; ஆகையால் ஏதெனும் ஒன்று உணமையைப் போலவே தோன்றினால் இந்தப் பழமொழியை சீனர்கள் சொல்லுவார்கள்  .

****

கல்வி என்பது ஆசிரியருக்கும் மாணவருக்கும் பயன்தருகிறது “Education benefits both students and teachers,”

என்பது ஒரு சீனப் பழமொழி

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து ஒரு பாடலில் இதே கருத்து உள்ளது

हर्तुर्याति न गोचरं किम् अपि शं पुष्णाति यत्सर्वदा‌உप्य्

अर्थिभ्यः प्रतिपाद्यमानम् अनिशं प्राप्नोति वृद्धिं पराम् ।

कल्पान्तेष्वपि न प्रयाति निधनं विद्याख्यम् अन्तर्धनं

येषां तान्प्रति मानम् उज्झत नृपाः कस्तैः सह स्पर्धते ॥ 1.16 ॥

ஹர்துயாதி ந கோசரம் கிம் அபி சம் புஷ்ணாதியத் ஸர்வதாப்ய

அர்த்திப்யஹ   ப்ரதிபாதயமானம் ஐசம் ப்ராப்னோதி வ்ருத்திம் பராம்

கல்பாந்தேஷ்வ்பி ந ப்ரயாதி நிதனம் வித்யாக்யம் அந்தர் தனம்

யேஷாம் தான்ப்ரதி மானம் உஜ்ஜத் ந்ருபாஹா கஸ்தைஹை சஹ  ஸ்பர்ததே

திருடர்களால் காணமுடியாதது;

எப்போதும் பேரின்பம் நல்குவது;

கொடுத்தாலும் குறைவு படாமல் அதிகரிக்கும்;

யுகமுடிவிலும் அழியாதது எதுவோ அதுவே கல்வி.

மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.

அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்?

****

தமிழ்ப்பாடலிலும் இதே கருத்து உள்ளது

வெள்ளதால்  போகாது வெந்தணலால் வேகாது

வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது

கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது

கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது

கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்க

உலகெல்லாம் பொருள்தேடி உழல்வதென்னே

ஓம் சஹ நாவவது

சஹ நவ் புனக்து

சஹ வீர்யம் கரவாவஹை

தேஜஸ்வி நாவதீ-தமஸ்து

மா வித் விஷா வஹை

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

 ॐ सह नाववतु ।

सह नौ भुनक्तु ।

सह वीर्यं करवावहै ।

तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ।

ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

என்ற உபநிஷத் மந்த்ரத்தை குருகுலத்தில் ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து சொல்லுவார்கள் ; இதிலும் இருவர் முன்னேற்றமும் வலியுறுத்தப்படுகிறது

பொருள்

நான் கற்கும் விஷயத்தில் இருவரும் ஒன்றாக முன்னேறுவோமாக;

இருவரும் அதை விருப்பத்தோடு படிப்போமாக;

இருவரும் முழு ஈடுபாட்டுடன் முழு சக்தியுடன் கற்போமாக;

இதன் மூலம் இருவரும் ஒளிமிக்க அறிவினை அடைவோமாக ;

வெறுப்பு என்பதே தோன்றாமலிருக்கட்டும் ;

எங்கும் அமைதி, எதிலும் அமைதி, எல்லோரிடத்திலும் அமைதி நிலவட்டும்!

****

இது போல இந்தியாவும் பழமொழித் தபால்தலைகளை வெளியிடலாம். பெரும்பாலான  பழமொழிகள் தமிழ், இந்தி, சம்ஸ்க்ருதத்தில் ஒரே பொருளைத் தருகிறது.

பகவத் கீதை வரிகள், ராமாயண வரிகள், வந்தே மாதரம் வரிகளை இந்தியா தபால் தலைகளாக வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, அந்த நாட்டு ஜனாதிபதிகள் சொன்னதை- பொன்மொழிகளை — அஞ்சல்தலைகளாக வெளியிட்டுள்ளது; நாமும் ஆயிரக் கணக்கான சாது சந்யாசிகளின் பாடல் வரிகளை– பொன்மொழிகளை தபால் தலைகளாக வெளியிடலாமே! 

4. True to Life (NT$8): Chuangzi was a thinker of the Warring States era. He once dreamt that he was a butterfly, flitting hither and thither. He completely forgot he was a person. Yet when he awoke, he found that he was still Chuangzi. The vividness of the butterfly made Chuangzi remark upon how true to life his dream was. He wondered: Am I a person who has awoken from a dream that I was a butterfly, or a butterfly dreaming that I am a person? Chuangzi’s phrase is now commonly used to describe something that is extremely vivid and lifelike.

—subham—

Tags-தைவான், சீன , பழமொழிக்கதைகள் , தபால்தலைகள் 

சிலிர்க்க வைக்கும் ஶ்ரீ நகர் (Post No.14,411)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,411

Date uploaded in London – –20 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலை மலர் 29-3-25 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)

 சுற்றுலா இடங்கள்

சிலிர்க்க வைக்கும் ஶ்ரீ நகர் 

ச. நாகராஜன் 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கோடைக்காலத் தலைநகரமான ஶ்ரீ நகரைப் பற்றி அனைவரும் கூறும் பிரபலமான புகழ் மொழிகள் இரண்டு உண்டு.

“அட கடவுளே! இனி சொர்க்கம் என்று ஒன்று இல்லை; இது தான் சொர்க்கமே!”

“பண்பாடு,  இயற்கை அழகு, அமைதி ஆகிய அனைத்தும் கலந்த அற்புத இடம் ஶ்ரீ நகர் தான்!”

கிழக்கின் வெனிஸ் நகரம் (VENICE OF THE EAST ) என்று புகழப்படும் இதை அடைய ஜம்மு, மும்பை, டில்லி, சண்டிகர் உள்ளிட்ட இடங்களிலிருந்து விமான வசதி உண்டு. ரயில் மூலமாகவும் பஸ் மூலமாகவும் பல்வேறு இடங்களிலிருந்து இதை எளிதில் அடைய முடியும்!

அழகிய இமயமலை பின்னணியும் பிரம்மாண்டமான ஏரியும் அனைவரையும் இங்கு ஈர்க்கின்றன என்றால் அது மிகையல்ல!

இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.

என்றாலும் முக்கியமான இடங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்..

சங்கராசார்யர் கோவில்

ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிவாலயமானது ஶ்ரீ நகர் நகரத்திலிருந்து 1100 அடி உயரத்தில் சங்கராசார்யா மலை உச்சியில் உள்ளது.

பிரபல மன்னனான கல்ஹணர் காலத்திலிருந்து இது மிகவும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. இதை அவர் கோபாத்ரி என்று அழைத்தார். சிவராத்திரியன்று ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு திரள்வர்.

தால் ஏரி

மிகவும் அழகிய தால் ஏரி ஶ்ரீ நகரின் முக்கிய ஈர்ப்பு மையமாகும். மிதக்கும் தோட்டங்களுக்கும் படகு வீடுகளுக்கும் இது மிகவும் புகழ் பெற்றது. பின்னணியில் மாபெரும் இமயமலை இருக்க இதன் அழகில் சொக்கிப் போகாதவர் இருக்கவே முடியாது.

ஏரியின் தூய்மையான நீரில் மலையின் பிரதிபலிப்பைக் காணலாம். இங்கு ஷிகாரா ரைட் எனப்படும் பாரம்பரிய படகு சவாரியை மெற்கொள்ளாதவர் இல்லை. சுமார் 16 கிலோமீட்டர் நீளமுள்ள ஏரியில் அழகாகப் படகு சவாரி செய்தவாறு இயற்கையை அணுஅணுவாக ரசிக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. குறைந்தபட்சம் 45 நிமிடங்களை எடுக்கும் இந்த சவாரிக்கு கட்டணம் உண்டு. ஒரு நாளில் எந்த நேரத்திலும் இந்த சவாரியை மேற்கொள்ளலாம்.

ஷாலிமார் பாக்,  – முகல் கார்டன்

முகலாய மன்னனான ஜஹாங்கீர் தனது மனைவி நூர் ஜஹானுக்காக அமைத்த தோட்டம் முகல் கார்டன் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தோட்டங்கள், நீரூற்றுகள் மிக்க அழகுடன் காட்சி அளிக்கின்றன. பின்னால் உள்ள பிர்பஞ்சல் மலைத்தொடர் சரியான பின்னணியைத் தருகிறது. மலர்ந்து குலுங்கும் ஒளி வீசும் மலர்கள் மனதிற்கு இன்பத்தைத் தரும்.

நைகீன் ஏரி

நாகீன் ஏரி என்றும் அழைக்கப்படும் இந்த நைகீன் ஏரி பர்பத் மலையின் அடிவாரத்தில் வில்லோ மரங்களும் பாப்லர் மரங்களும் ஏரியைச் சூழ்ந்திருக்க பரந்திருக்கும் ஒரு ஏரியாகும்,  படகு வீடுகளும் ஷிகாரா படகுகளும் இங்கு உண்டு. இது தால் ஏரிக்கு அருகிலேயே உள்ளது. பரபரப்பில்லாமல் அமைதியாக இயற்கையை ரசிக்க விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் இது.

ஹரி பர்பத்

ஹரி பர்பத் என்றால் மைனா குன்று என்று பொருள். ஹிந்து, முஸ்லீம்,, சீக்கியர் ஆகியோர் வழிபடுவதற்காகன் அநேக வழிபாட்டு இடங்கள் இங்கு உள்ளன.

இந்தக் குன்றின் மீதுகுள்ள துர்ரானி கோட்டையை அக்பர் 1590ல் கட்ட ஆரம்பித்தார். ஆனால் திட்டம் முழுவதுமாக முடியவில்லை. இப்போது நாம் காணும் கோட்டையை 1808ல் ஷூஜா ஷா துரானி என்பவர் கட்டி முடித்தார். இந்தக் குன்றின் மேற்குப்புறத்தில் உள்ள ஷாரிகா தேவி ஶ்ரீ நகரின் காவல் தெய்வமாக இருக்கிறார் என்பது ஐதீகம்.

துலிப் கார்டன்

இந்திரா காந்தி நினவாக இது ‘இந்திரா காந்தி நினைவக துலிப் கார்டன்’

என்றும் அழைக்கப்படுகிறது. ஜபர்வான் குன்றில் அமைக்கப்பட்ட இந்தத் தோட்டத்தில் வண்ண வண்ண மலர்களை இமயமலை பின்னணியோடு பார்த்து மகிழலாம், இந்த மலர்ப் படுக்கை மையத்தில் ஓய்வாக நடந்து செல்வதே மனதுக்கு இதம் தரும்.

துலிப் என்பது ஒருவகை தண்டுக் கிழங்கு கொண்ட காட்சிப் பூக்களைக் கொண்ட ஒரு தாவரமாகும். இது லிலியாசே என்று அழைக்கப்படும் அல்லிக் குடும்பத்தைச் சேர்ந்தது. காணக் கண் கொள்ளாக் காட்சி தரும்

60 வகைக்கும் மேற்பட்ட 15 லட்சம் துலிப் இங்கு உள்ளன.

பாரி மஹால்

தால் ஏரிக்குத் தென்மேற்கே அமைந்துள்ள பாரி மஹால் பெரிய தோட்டமாகும்.   க்விண்டிலான் என்று பிரசித்தி பெற்றிருக்கும் இது ஆறு தளங்களைக் கொண்டுள்ளது.  இதன் நீளம் 400 அடி. அகலம் 205 அடி.  பாரி மஹால் என்றால் தேவதைகளின் இல்லம் என்று பொருள். இது ஷாஜஹானின் மூத்த மகனான தாரா ஷிகோவினால் தனது ஆசிரியர் முல்லா ஷா படாக்ஷியின் நினைவாகக் கட்டப்பட்டதாகும். பழைய காலத்தில் இது ஒரு புத்த மடாலயமாக விளங்கியது. தாரா வானவியலில் ஆர்வம் கொண்டவர். வானவியல் மற்றும் ஜோதிடம் கற்பிக்கும் மையமாக இது முன்பு திகழ்ந்தது.

லால் சௌக்

இது சந்தடி நிறைத்த ஒரு பிரபலமான சந்தையாகும். ஏராளமான கடைகளில் விதவிதமான பொருள்களை வாங்கலாம். இந்தப் பகுதியில் ஒரு சுற்று சுற்றினாலே காஷ்மீர் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்பதால் பல நாட்டினரும் இங்கு சுற்றி வருவதைப் பார்க்கலாம்.

இன்னும் ஜாமா மசூதி, மகிழ்ச்சியின் தோட்டம் எனப்படும் நிஷாத் பூங்கா உள்ளிட்ட ஏராளமான இடங்கள் ஶ்ரீ நகரில் பார்ப்பதற்கு உள்ளன.

நதிகள் கீதம் பாட, மலைகள் முணுமுணுக்க, காற்று சிலுசிலுக்க சிலிர்க்க வைக்கும் ஶ்ரீ நகர் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும்!

***

RAMASWAMI PAINTINGS AGAIN (Post No.14,410)

Written by London Swaminathan

Post No. 14,410

Date uploaded in London –  19 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Two years ago I posted here a lot of pictures of paintings from the famous Ramaswami temple at Kumbakonam. The idols in the Garbhagriha are as beautiful as the idols in Vaduvur and Mathuranthakam. Once you see them you would never forget the images or Lord Rama and his retinue

I made a very quick visit this time after having Darshan at Kumbeswarar Temple in March 2025. Though it was a very short visit, I couldn’t resist clicking with my Samsung Camera. This time I did not use my I pad.

I took the pictures on the wall and some sculptures. Since the paintings on the wall are in three rows, one must spend hours to take all the figures separately.

The temple must preserve the 500 year old paintings and publish them in a book which will be sold as hot cakes.

They have protected paintings of Anjaneya and Rama in a locked room. The temple must publish them. The department of archaeology can do this with the permission of the temple authorities.

—subham—

Tags- RAMASWAMI TEMPLE, PAINTINGS AGAIN, Kumbakonam

Pictures of 2500 Indian Stamps!- Part 13 (Post No.14,409)

 Pictures of 2500 Indian Stamps!- Part 13 (Post No.14,409)

Written by London Swaminathan

Post No. 14,409

Date uploaded in London –  19 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART  13

I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

The stamps posted here are MINT (not used); so  more valuable.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

PART 13, INDIAN STAMPS,

Kasturba, Dr Hafkine, Sarojini Devi, Raja Rammohun Roy, Maharana Pratap, Abraham Lincoln, Asutosh Mukerjee, Vidyapati, Lalarajpatrai, Mediaeval Sculpture, Chittaranjan Das, St Thomas, Nehru, Sri Aurobindo, Cyrus the Great, Unesco, Swami Virajanand, Dadasaheb Phalke, Dr Ambedkar, Abanindranath Bose, Kasi Vidyapith, Beethoven, Sant Namdeo, Maharsi Valmiki, Jamnalal Bajaj, Iswar Chandra Vidyasagar, V S Srinivasa Sastri, J N Mukerjee, UN Day

–SUBHAM—

TAGS– PART 13, INDIAN STAMPS, Kasturba, Dr Hafkine, Sarojini Devi, Raja Rammohun Roy, Maharana Pratap, Abraham Lincoln, Asutosh Mukerjee, Vidyapati, Lalarajpatrai, Mediaeval Sculpture, Chittaranjan Das, St Thomas, Nehru, Sri Aurobindo, Cyrus the Great, Unesco, Swami Virajanand, Dadasaheb Phalke, Dr Ambedkar, Abanindranath Bose, Kasi Vidyapith, Beethoven, Sant Namdeo, Maharsi Valmiki, Jamnalal Bajaj, Iswar Chandra Vidyasagar, V S Srinivasa Sastri, J N Mukerjee, UN Day

சரக சம்ஹிதை நூலில் 149 நோய்கள்- Part 3 (Post No.14,408)

Written by London Swaminathan

Post No. 14,408

Date uploaded in London –  19 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART THREE 

இதோ நோய்களின் பட்டியல், அவை நூலில் காணப்படும் அத்தியாயம், ஸ்லோகங்களின் எண் முதலியன :–

தமிழ்சம்ஸ்க்ருத ஆங்கில சொற்கள்

41.கர்ப்பிணிரோக – கர்ப்பிணிகளுக்கு வரும் நோய்கள் DISEASES OF PREGNANCY 4-8-26

42.க்ராபந்திதோஷ – நான்கு வகை வயிற்றுப்போக்கு DIARRHOEA 6-15-51

43.கிரந்தி – கால்வீக்கம் GLANDULAR SWELLING/VARICOCELE 6-12-81

44.க்ருத் பிராசி – கால் நரம்பு இழுத்துப் பிடித்தல்/ சியாட்டிகா SCIATICA 1-20-11

45.குத பிராம்ச – ஆசனவாய் தொங்குவது PROLAPSED ANUS 1-20-11

46.குத பாக- பெருங்குடலின் கடைசி பகுதி வீக்கம் PROCTITIS OF ANUS 1-20-14

47.குல்மா- மண்ணீரல் வீக்கம் – ஆறு வகை உண்டு HARDENING AND SWELLING OF THE SPLEEN  6-5-48

48.ஹ்ரித் த்ரவ – இருதயத்துடிப்பு அதிகரித்தல் TACHYCARDIA 1-20-11

49.ஹ்ரித் ரோக – இருதய நோய்கள் – ஐந்து வகை HEART DISEASE 1-17-6

50.ஹ்ரிம் மோஹ – சீரற்ற இருதயத்துடிப்பு CARDIAC IRREGULARITY OR HEART BLOCK 1-20-11

ஹ்ருத் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லிலிருந்து ஹார்ட் HEART என்ற ஆங்கிலச் சொல் வந்ததை அறிந்தால் இந்த நோய்களின் பெயர்களை எளிதில் புரிந்து கொள்ளலாம் . உலகம் முழுதும் ஸம்ஸ்க்ருதச் சொல்லையே பயன்படுத்துவதால் இந்துக்கள்தான் மருத்துவத்தின் தந்தை என்பதையும் அறியலாம் .

51.இக்ஷுவாளிகரசமேக -கிளைகோசூரியா என்பது சிறுநீரில் அதிக அளவு சர்க்கரை இருப்பதாகும். GLYCOSURIA 2-4-10

52.ஜலககர்தப- கிருமிகளால் சீழ்பிடித்து ஏற்படும் ஜுரம் FEVER DUE TO SUPPURATION 6-12-99 

53.ஜானுபேத – கால் வளைவு, சின்னி நாய்- BOW LEGS 1-20-11  

54.ஜானு விஸ்ப்லேஷ-  உள்நோக்கி வளைந்த கால்கள்- KNOCK KNEES 1-20-11   

55.ஜடராக்கினிவிகார – ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற உணர்வு – இதில் நான்கு வகைகளை சரகர் பட்டியல் இடுகிறார் MORBID APPETITE 3-6-12 

56.ஜ்வர – காய்ச்சல் – இதில் எட்டு வகைகளை சரகர் பட்டியல் இடுகிறார் FEVER 6-3

57.கக்ஷ – அக்கி- 3 HERPES 1-20-14

58.கண்டு – உடலில் ஏற்படும் அரிப்பு PRURITUS 6-29-17

59.கர்ண ரோக – காது நோய்கள் DISEASES OF THE EAR 6-26-127 

கர்ண என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு காது என்பது பொருள்; இதை கர்ணன் கதை மூலம் எல்லோரும் அறிவார்கள். காதில் கவச குண்டலங்களுடன் பிறந்தவன் அவன் . அதாவது குந்தி தேவி  அவனை குழந்தையாக ஆற்றில் ஒரு கூடையில்  மிதக்கவிட்டபோது காதில் குண்டலங்களைப் போட்டு அவனை அனுப்பினாள்; யார் குழந்தையை எடுத்தாலும் அவர்கள் அந்தக் குழந்தையை பராமரிக்க பணம் தேவை அல்லவா ? அவள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஏழைத் தேரோட்டியின் கையில் அந்தக் கூடை குழந்தையுடன் அகப்பட்டது .

A – பதிர்யா  – செவிட்டுத்தனமை DEAFNESS 6-26-128  

B – கர்ண ஸ்போட்டை- காதுக்குள் வீக்கம்/ புண் INFLAMMATORY SWELLING INSIDE THE EAR 6-29-127

C- கர்ண ச்ரவ –  காதுக்குள் சீழ் வடிதல் PUS DISCHARGE FROM THE EAR 6-26-127 

D – புதிஸ்ரவண- உட்காதில் வீக்கம் – இதில் எட்டு வகைகள் உள்ளன SUPPURATION OF THE INNER EAR  6-26-127

60.காச – நிற்காத இருமல் – இதில் ஐந்து வகைகள் உள்ளன CHRONIC COUGH 6-18

தொடரும்…………

Tags- சரக சம்ஹிதை நூல்,  149 நோய்கள், பட்டியல் -3

மாற்றி யோசித்தால்! (ள்) (ன்) (Post No.14,407)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,407

Date uploaded in London – –19 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

20-3-25 கல்கிஆன்இதழில் பிரசுரமான சிறுகதை!

மாற்றி யோசித்தால்! (ள்) (ன்)

ச. நாகராஜன்

ஹால் நிரம்பி வழிந்தது.

வானதி பேச ஆரம்பித்தாள்.

“பண்பாடு பற்றி ஒரு பண் பாடு என்று சொன்னவுடன் அந்தப் பண் பாட நான் பட்ட பாடு பெரும்பாடு” என்ற அவளது பேச்சின் ஆரம்பத்தை அனைவரும் ரசித்தனர்.

“பண்பாடு சீரழியும் விதத்தால் மனமே

சஞ்சலம் நீ படாதே தினமே

அறிவியலும் ஆன்மீகமும் இணையட்டும்

அறிஞரெல்லாம் அதைப் போற்றிப் புகழட்டும்”

என்று இனிய குரலில் பாட ஆரம்பித்தாள் வானதி.

வரிசையாக பண்பாடு சிறக்க பாஸிடிவான வழிகளை அவள் பாடவே கூட்டம் ஆரவாரித்தது.

இலக்கியப் பண்பாட்டுச் சங்கத்தின் தலைவரான மணிசங்கருக்கு ஒரே சந்தோஷம். இறுதியாக நன்றியுரை சொல்ல வந்தவர் இப்படி ஒரு சிறப்பான கூட்டத்தை நடத்துவதற்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்ட ‘ஏஐ க்ரேட்’ நிறுவனத்தின் நிறுவனர்  உமாகாந்தனுக்கு  நன்றி கூறி தம்பதி சகிதமாக வந்து பரிசு வழங்க மேடைக்கு வருமாறு அவரை அழைத்தார். அத்தோடு நிகழ்ச்சியில் பேச பலரையும் ஏற்பாடு செய்த தமிழ் இலக்கியச் செல்வர் மகாதேவனுக்கும் நன்றி கூறி அவரையும் மேடைக்கு அழைத்தார்.

பாஸிடிவ் சிந்தனையை வழங்கிய வானதிக்கு சிறப்புப் பரிசு அறிவிக்கப்பட்ட போது அனைவரும் ஆரவாரித்தனர்.

உமாகாந்தனின் மனைவி வானதியைக் கட்டிப் பிடித்துப் பாராட்டினார்.

“நீ ஒரு நாள் என் வீட்டுக்கு வாயேன்” என்ற அவரது அன்பு அழைப்பைக் கேட்டு வானதி திகைத்துப் போனாள்.

பில்லியரான அந்தப் பணக்காரக் குடும்பம் எங்கே, தான் எங்கே – அவள் மலைத்தாள்.

“இவள் என் பெண் தான்” என்றார் இலக்கியச் செல்வர் மகாதேவன்.

“அடடா. அப்ப நீங்களும் வாருங்களேன்” என்றார் உமா காந்தன்!

பெரிய தோட்டத்தின் நடுவில் அமைந்திருந்த பிரம்மாண்டமான பங்களாவைப் பார்த்து திகைத்தனர் வானதியின் பெற்றோரும், வானதியும்.

அன்போடு அவரை வரவேற்ற உமாகாந்தனும் அவர் மனைவியும் தங்கள் மகனான சங்கரை அறிமுகப்படுத்தி வைத்தனர்.

“உங்கள் பேச்சு பிரமாதம்! பாஸிடிவ் சஜெஷன் இஸ் க்ரேட்” என்றான் சங்கர்.

வானதி வெட்கத்தால் சிவந்தாள்.

சற்று நேர உரையாடலில் இரு குடும்பங்களும் நெருக்கமாகி விட்டன.

“சாப்பிடலாமா” என்று விருந்துக்கு அழைக்கப்பட்ட போது பெரிய டைனிங் டேபிளையும் அதில் பரப்பப்பட்டிருந்த வெள்ளி பேஸின்களையும் தட்டுக்களையும் விதவிதமான உணவு வகைகளையும் பார்த்து மலைத்தது வானதியின் குடும்பம்.

எப்படி வெள்ளி ஸ்பூன்களையும் போர்க்குகளையும் கையாள்வது என்று யோசித்தாள் வானதி.

“ஒரு முக்கிய விஷயம்! என் பையனுக்கு நல்ல பெண்ணாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சம்மதித்தால் வானதியை கல்யாணுக்குத் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறோம் என்றார் உமாகாந்தன்.

இதைக் கேட்ட மகாதேவன் திகைத்தார்.’இப்படி ஒரு பெரிய இடத்துச் சம்பந்தமா?

“ஓகே! முதலில் பையனும் பெண்ணும் பேசட்டும். அவர்கள் ஓகே என்றால் மீதியை நாம் பேசுவோம்” என்ற உமாகாந்தன், “கல்யாண்! நீ வேண்டுமானால் ஒரு சின்ன டிரைவுக்கு வானதியுடன் போய் விட்டு வாயேன்” என்றார்.

“வேண்டாம், வேண்டாம். மாடியே இருக்கிறது; அது போதும்” என்றான் கல்யாண்.

மேல்மாடிக்குச் சென்ற கல்யாண் வானதியைப் பார்த்து, “ ஐ லைக் யூ.

யுவர் பாசிடிவ் அப்ரோச் இஸ் ரியலி குட். இந்த மேரேஜ் ப்ரபோஸலுக்கு சம்மதமா?” என்றான்.

“எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாங்கள் நடுத்தர வர்க்கத்தினர். உங்கள் குடும்பமோ பில்லியனர் குடும்பம், எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்.” என்றாள் வானதி.

“ஓகே! நாளைக்கு ஆகாஷ் ரெஸ்டாரண்டில் சாயங்காலம் மீட் பண்ணுவோம். நீங்கள் முடிவைச் சொல்லலாம் என்றான் கல்யாண்.

பெற்றோர்கள் மறுநாள் மாலை வரை காத்திருக்கச் சம்மதித்தனர்.

காஷ் ரெஸ்டாரண்ட் நகரின் பிரம்மாண்டமான ரெஸ்டாரண்ட். பல ஏசி ஹால்கள் உண்டு.

அதில் சரியாக மாலை ஐந்து மணிக்கு வந்தாள் வானதி. கல்யாண் காத்திருந்தான்.

“என்ன ஆர்டர் பண்ணலாம்?” கேட்டான் கல்யாண்.

பாஸந்தி, தோசை, காபி. லைட் டிபன் போதும் என்றாள் வானதி.

“என்ன முடிவு?”கல்யாண் ஆவலுடன் கேட்டான்.

வானதி மெதுவாகப் பேசினாள்: ”என்ன சொல்வது என்று தெரியவில்லை. பணக்காரக் குடும்பத்திற்கு நான் ஒத்துவருவேனா என்ற குழப்பம் இருக்கிறது” .

இதை அவள் சொல்லும் போதே எதிரிலிருந்த ஹாலிலிருந்து லவுட் ஸ்பீக்கரில் பெரிய குரல் ஒன்று ஒலித்தது.

“என்ன அங்கே நடக்கிறது? என்று வெயிட்டரிடம் கேட்டான் கல்யாண்.

“பல கம்ப்யூட்டர் கம்பெனிகளில் உள்ள டெக்னிகல் ஸ்டாபுக்கு மீட்டிங் சார்” என்றார் வெயிட்டர்.

எதிர் ஹாலிலிருந்து ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது.

“ஆகவே நீங்கள் மாற்றி யோசிக்க வேண்டும். எதிரெதிர் சிந்தனைகளை ஒதுக்காதீர்கள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. பாஸிடிவாக மாற்றி யோசிப்பவரை உங்களுடன் இணைத்துக் கொண்டால் வாழ்வே செழிக்கும்”

இதைக் கேட்ட வானதியின் முகம் மலர்ந்தது. கல்யாண்,”ஆஹா! அருமையான யோசனை ஆல்டர்னேடிவ் திங்கிங்” என்று பேச்சைப் பாராட்டினான்.

“நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு சம்மதம். மாற்றி யோசித்தேன். கணப்பொழுதில் இப்படி முடிவெடுத்து விட்டேன். எப்போதும் ஏன் ஒருதலைப்பட்சமாக பயந்து கொண்டு சிந்தனை செய்ய வேண்டும். நடுத்தரக் குடும்பம் பணக்காரக் குடும்பத்தை இன்னும் செழிப்பாக ஆக்கக் கூடாதா என்ன?” என்றாள் வானதி.

 “சூப்பர்! நானும் ஆல்டர்நேடிவ் திங்கிங் செய்து முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு நல்ல மாதிரியாக யோசனை கூறி எனக்கு ஆதரவு தந்து கம்பெனியையும் முன்னேற்ற ஒரு நல்ல பாஸிடிவ் திங்கர் லைஃப் பார்ட்னராகத் தேவை. எனக்கும் சம்மதம். இதோ அப்பாவுக்கும் அம்மாவுக்கும் செய்தியைச் சொல்லி விடுகிறேன்” என்றான் கல்யாண்.

“வானதி போனை எடுத்து, “நான் வீட்டிற்கு சற்று நேரத்தில் வந்து விடுவேன்” என்று சொன்ன போது, “அதற்கு அவசியமே இல்லை” என்று அடுத்த ஹாலிலிருந்து சொல்லிக் கொண்டே முன்னால் வந்தது வானதியின் குடும்பம். அதைத் தொடர்ந்து பின்னால் கல்யாண் குடும்பமும் வந்தது.

‘அட, நீங்கள் வீட்டில் அல்லவா இருப்பீர்கள் என்று நினைத்தேன்’ என்ற கல்யாணுக்கு பதிலாக அவனது பெற்றோர் ஹாஹா என்று சிரித்து “நாங்கள் இங்கே தான் காத்திருந்தோம்” என்றனர்.

“ஆல்டர்நேடிவ் திங்கிங்” என்று ஒரே சமயத்தில் அனைவரும் ஒரு மனதாகச் சொல்ல ஹாலே சிரிப்பில் மிதந்தது!

**

Pictures of 2500 Indian Stamps!- Part 12 (Post.14,406)

Written by London Swaminathan

Post No. 14,406

Date uploaded in London –  18 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART  12

I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

The stamps posted here are MINT (not used); so  more valuable.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

ANDREWS, MAHATMA GANDHI, RAJA RAVI VARMA, LIC, ANNADURAI, VASWANI, 

SANT RAVIDAS, LENIN,  V D SAVARKAR, SHER SHAH SURI, RAMANA MAHARISHI, MAN ON MOON 

1969 STAMPS

–SUBHAM—

PART 12, INDIAN STAMPS, ANDREWS, MAHATMA GANDHI, RAJA RAVI VARMA, LIC, ANNADURAI, VASWANI, SANT RAVIDAS, LENIN,  V D SAVARKAR, SHER SHAH SURI, RAMANA MAHARISHI, MAN ON MOON , YEAR 1969